உயிர் பிரிந்த பின்னும் சுவாசித்திருப்பேன் உன் நினைவில்!உதிர்ந்த பின்னும் மணம் வீசும் உதிரிப்பூக்களைப் போல ! கனவென்று தெரிந்த பின்னும் கலையாதிருக்க வேண்டினேன்! காற்றில் வரைந்த ஓவியத்தைகண்களில் சுமந்து நின்றேன்! ஓவியம் உயிராகி வருமென காத்திருந்தேன்... காத்திருத்தலே தொழிலாய்ப் போனது !