Saturday, February 16, 2013

விஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை!


(ஹி...ஹி விஷேஷரூபம் இது)

விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமிதமாக லோகநாயகர் சொன்னப்பொழுது ரொம்ப மிகையாக விதந்தோம்புகிறாரோ என நினைத்தேன், ஆனால் அத்தகைய புரிதல் கொண்டவர்களால் மட்டுமே படத்தினை சரியாக  என்ன மாதிரியான படமென(genre) புரிந்துக்கொள்ள முடியும் என்பது படம் பார்க்கும் போது தான் தெரிந்தது, பலரும் பலவகையான விமர்சனங்களை வைத்துவிட்டார்கள்,ஆனால் அவர்கள் யாருக்கும் லோகநாயகர் வரையறுத்த முன் தகுதிகள் இல்லையென நினைக்கிறேன்,யாருமே இதுவரையில் சரியாக இது என்ன வகையான படம் என்றே சொல்லாமல் , மேம்போக்கா ஆக்‌ஷன் திரில்லர், ஸ்பை மூவி என எழுதி ஆங்காங்கே,ஆப்கான்,அமெரிக்கா,RAW,FBI, என துப்பிவிட்டு சென்றுள்ளார்கள்.

உண்மையில் விஷ்வரூபம் ,அமெரிக்க ராம்போ, பிரிட்டீஷ் ஜேம்ஸ் பான்ட் டைப் உளவாளிப்படங்களை ஸ்பூஃப்(Spoof) செய்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப்படமாகும்,ஆனால் சரியான முறையில் ஸ்பூஃபிங் காட்சிகளை சித்தரிக்கத்தவறிவிட்டார், இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் "ஹாட் ஷாட்ஸ், ஜானி இங்க்லீஷ் " போன்ற உலகத்தர ஸ்பூஃப் படமாக வந்திருக்கும் :-))

படமாக்கலின் போது இயக்குனர் லோகநாயகருக்கு ஸ்பூஃபிங் டைப்பில் எடுப்பதா, இல்லை சீரியஸான ஆக்‌ஷன் திரில்லர் வகையில் எடுப்பதா என மனக்குழப்பம் இருந்திருக்கும் போல ,படம் நெடுக அக்குழப்பம் பலக்காட்சிகளில் தெரிகிறது.

ஒரு காட்சியினை சீரியசாக எடுத்துவிட்டு அடுத்தக்காட்சியினை ஸ்பூஃப் செய்துள்ளார்,சில கிரேஸித்தனமான கிச்சு கிச்சு மூட்டும் வசனங்கள் ஆங்காங்கே தூவியுள்ளார் அவ்வளவே. இதனால் படம் பார்ப்பவர்கள் ஸ்பூஃப் அல்லது சீரியஸ் ஆக்‌ஷன் படமா என வகைப்பிரிக்க தெரியாமல் ,திரைப்படத்துடன் ஒன்றவியலாமல் போய்விட்டது.ஒரு நடிகராக தனது பணியினை சிறப்பாக செய்துள்ளார் ,ஆனால் ஒரு படைப்பாளியாக ,கதை, திரைக்கதை,இயக்கம்,வசனம் என கோட்டை விட்டுவிட்டார் எனலாம்.

இரண்டுங்கெட்டான் வகையில் படம் இருப்பதால் நாமும் நடுவாந்திரமாக படத்தினை அலசுவோம், யாரும் ஸ்பூஃப் படத்தில் ஏன் லாஜிக் பார்க்கிறாய் என்றெல்லாம் கேட்கப்படாது :-))

ஏன் எனில் படம் பார்க்கும் பாமர ரசிகனைப்பார்த்து உனக்கு உலக அரசியல் தெரியுமா, பொது அறிவு இருக்கான்னு ஒரு படைப்பாளி கேள்விக்குள்ளாக்கும் போது ,என்னைப்போல எந்த ஒரு பாமர ரசிகனும்,திருப்பி அதெல்லாம் கேள்விக்கேட்டவருக்கும் இருக்கான்னு உரசிப்பார்க்கவே செய்வான்!

படம் பார்க்கும் போது ஒரு கேள்வி என்னுள் எழுந்ததை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை, இந்திய அரசு ஸ்தாபனமான RAW(Research and Analysis Wing)இன் உளவாளியான நாயகன் அமெரிக்காவிற்கு உதவ ஆஃப்கான் போகிறார், தலிபான்களை அழிக்க உதவுகிறார்,சரி போகட்டும் ஏதோ நேசக்கரம் நீட்டுதல் எனலாம்,அப்புறம் அதன் தொடர்ச்சியாக நியுயார்க்கில் வைக்க இருக்கும் டர்ட்டிபாமை எடுக்க அமெரிக்க அரசுக்கோ, அதன் உளவு நிறுவனங்களுக்கோ தெரியாமல் ஏன் முயல வேண்டும்,இன்ன மாதிரி திட்டம்னு சொன்னா அவங்க பார்த்துக்க மாட்டாங்களா, அதைவிட்டுவிட்டு இந்திய அரசு பணத்தின் செலவில் ரா ஏஜண்ட் ராப்பகலா மாங்கு மாங்கு என நியுயார்க்கில் உழைக்க வேண்டிய அளவுக்கு  ராவுக்கு  அமெரிக்க விசுவாசம் இருக்குமா?

ரா என்பது இந்தியாவுக்காக வேலை செய்யும் அரசு உளவு நிறுவனமா இல்லை ,அமெரிக்காவிற்காக வேலை செய்யும் BPO Type உளவு நிறுவனமா?

(அமெரிக்க விஸ்வாசரூபம்)

ஹாலிவுட் ஹீரோக்கள் கூட அவங்க நாட்டு தேசப்பற்றினை விளக்கும் படத்தில் நடிக்கும் போது தான் பின்னணியில் அமெரிக்க கொடியுடன் போஸ்டர் போட்டுக்குவாங்க,லோகநாயகர்  இந்திய அரசின் உளவாளியாக நடிக்கும் போது அமெரிக்க கொடிப்பின்னணியுடன் போஸ்டர் டிசைன் செய்ய என்ன தேவையோ?அப்போத்தான் கதை அமெரிக்காவில் நடக்குதுனு மக்களுக்கு புரியும் என்றால்,பாதிக்கதை ஆப்கானில் நடக்குது,எனவே ஆப்கான் கொடிப்பின்னணியிலும் ஒரு போஸ்டர் டிசைன் செய்திருக்க வேண்டாமோ :-))

அமெரிக்கர்களுக்கு பிடிச்சமாதிரி ஸ்டோரி போர்ட்,போர்ட்ஃபோலியோ ஆல்பம் தயார் செய்யணும் என ஆசைப்பட்டால் இப்படித்தான்  அமெரிக்க கொடிப்போட்டு,ரா வை அமெரிக்காவிற்கு வேலை செய்ய வைத்து ஆக வேண்டும் :-))

லோகநாயகருக்கு ஹாலிவுட் ஆசை பெருக்கெடுத்துவிட்டதால், ஒரு படத்தினை 95 கோடியில்??!! எடுத்து அமெரிக்காவுக்கு  ஒரே அடியாக  சமர்ப்பணம் என சொல்லிட்டாரோனு நினைக்க தோன்றுகிறது.

ஸ்டார்ட் மியுஜிக்.....

இவன் யார் என்று தெரிகிறதா,

ஹாலிவுட் ஆசை புரிகிறதா,

தடைகளை தாண்டியே ஹாலிவுட் செல்வான் :-))

ஓஹ்ஹஹ.. ஹோ...ஹோஹோ,,,ஓ....

OPIUM WAR:

விஷ்வரூபம் திரைப்படம் தனது கதைக்களமாக  ஆஃப்கான், "தலிபான் தீவிரவாதம்-அமெரிக்கா" என எடுத்துக்கொண்டாலும் ,அதன் உண்மையான அரசியலையோ,பின் புலத்தையொ சற்றும் தொட்டுக்கூட பார்க்கவில்லை, வெறுமனே தலிபான் பயங்கரவாதம் அதை தடுத்து உலகப்போலீஸ் அமெரிக்காவையே காப்பாற்றும் இந்திய சூப்பர் ஹீரோவை!!??ப்பற்றிய படமாக அமைந்துள்ளது எனலாம்.

இந்த அண்டர் கவர் ஏஜண்ட்/போலீஸ் கதை எல்லாம் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் காலம் தொட்ட பழமையான கதையாகும், ஒவ்வொரு ஹீரோவும் ஏதேனும் அண்டர் கவர் ஆபரேஷன் படத்தில் ஒரு முறையாவது நடித்திருப்பார்கள், முன்னர் லோகநாயகரே காக்கி சட்டை, விக்ரம் படங்களில் இதே வேலையை செய்துள்ளார், இன்னும் சொல்லப்போனால் விக்ரம் படத்தில் சலாமியாவில் செய்த சாகசத்தை ஆப்கன் - அமெரிக்கா கூட தொட்டுக்கொள்ள ஊறுகாயாக தலிபான் என திருப்பி சுட்ட தோசை தான் விஷ்வரூபம் :-))

ஆப்கனில் நடக்கும் ஆயுத போரட்டங்களின் உண்மையான பின்னணி என்னவெனப்பார்ப்போம்.

பொதுவாக அறியப்படுவது என்னவெனில் ஆஃப்கனை சோவியத் ஆக்ரமித்து இருந்தது ,அவர்களை விரட்ட அமெரிக்கா முஜாகிதின்களை வளர்த்து சண்டையிட்டது, சோவியத் வெளியேறிய பின் அமெரிக்கா, ஆஃப்கானை கைக்குள் வைத்துக்கொண்டதால் இன்றும் ஆயுதப்போராட்டம் தொடர்கிறது என்பதாகும்.

மேம்போக்காக இச்சம்பவங்கள் சரி என்றாலும் இதன் அடிப்படைக்காரணம் வேறு ஒன்றாகும்,

சரி சோவியத் வெளியேறிய பின் அமெரிக்காவிற்கு ஆஃப்கானில் என்ன வேலை? அங்கே இருக்க என்னக் காரணம்?

வளைகுடா நாடுகள் போன்று எண்ணெய் வளமும் இல்லையே ,பின் ஏன்?

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து செல்லும் வழித்தடத்தில் உள்ளது என்பார்கள்?

அது உண்மையா என்றால் இல்லை, ஏன் எனில் அமெரிக்காவிற்கு எண்ணெயோ,எரிவாயுவோ ஆப்கான் வழியாக கொண்டு செல்ல முடியாது, தேவையும் இல்லை.

ஆஃப்கான் வழியாக கொண்டு செல்லப்படும் எரிவாயு ,எண்ணெய் என்பது இரானில் இருந்து வருவது மட்டுமே,இரான் அமெரிக்காவிற்கு விற்க விரும்புவதும் இல்லை அப்படியே செய்ய வேண்டுமானாலும் பெர்சியான் வளைகுடா மூலமே நிகழும் பின்னர் எப்படி ஆஃப்கான் எண்ணெய் எடுத்து செல்ல முக்கியம் என அமெரிக்கா கருத வேண்டும்?

ஆஃப்கான் வழியாக இரானின் எரிவாயு/எண்ணெய் எடுத்து செல்லப்பட வேண்டும் எனில் அது சோவியத்,சீனா,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சாத்தியம் ஆகும். ஆக மற்ற நாடுகளுக்காக பில்லியன் கணக்கில் டாலர்களை செலவு செய்து சண்டைப்போட அமெரிக்கா ஒன்றும் கேணையல்ல :-))

இன்னும் சொல்லப்போனால் சோவியத்,சீனா எல்லாம் அமெரிக்காவின் நட்பு வட்டமேயில்லை,இந்தியாவோ கழுவும் மீனில் நழுவும் மீன், நெருக்கம் எனப்பார்த்தாலும் சோவியத் பக்கமே,மேலும் இரானுடன் எண்ணெய் வர்த்தகம் இந்தியா செய்யக்கூடாது என அமெரிக்க அன்பாக மிரட்டுவதும் வழக்கம், ஏன் எனில்  இரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்துவிட்டு ,அணு தொழில்நுட்பம் இந்தியா அளித்துவிடும் என்ற அச்சமேயாகும்.

எனவே  ஆஃப்கானில் தலிபான்கள் இருந்தாலே இரானின் எண்ணெய் வர்த்தக வழி தடைப்படும் என்ற நிலையில், அமெரிக்கா எண்ணெய் வர்த்தக வழிக்காக பெரும் சண்டையிடுகிறது என்பதில் வலுவான காரணங்களேயில்லை.உண்மையில் அங்கிருந்து கொண்டு இரானின் எண்ணெய் வளம் வியாபாரம் ஆகாமால் தடுக்கும் வேலையை தான் அமெரிக்கா செய்கிறது.

பின் ஏன் என்றால் ,போதைப்பொருள் வருமானமாகும், எண்ணெய்ப்பணம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிய வருமானம் அளிக்கக்கூடியது ஓபியம் மூலம் வரும் வருமானம்.

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்,

1950 களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய போதை உற்பத்தி மையம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான, வியட்நாம், பர்மா,தாய்லாந்து,லாவோஸ் ஆகியனவாகும், இப்பிரதேசத்தினை கோல்டன் டிரையாங்கில் என்பார்கள். வியட்நாம்,லாவோசில் அமெரிக்கா போர்ப்புரிய ஒருக்காரணமே இப்போதை மருந்து வியாபாரப்பணம் என சொல்கிறார்கள்.

CIA பின்னிருந்து போதை மாபியாக்களை கட்டுப்படுத்தியது, உலகம் முழுக்க எவ்வளவு போதை மருந்து சப்ளை ஆக வேண்டும் என்பதையே நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியது என பல போர் மற்றும் போதைமருந்து ஆய்வு எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

இதனை லேசாக டான்களைப்பற்றிய எனது பழையப்பதிவில் சொல்லியிருப்பேன். CIA தனது சொந்தக்கட்டுப்பாட்டில் கார்கோ விமான சேவையையே நடத்தி ,போதைப்பொருளை கோல்டன் டிரையாங்கிளில் இருந்து கொண்டு சென்றது என்றால் ,போதைமருந்து வியாபாரத்தின் வருமான அளவை ,முக்கியத்துவத்தினை புரிந்துக்கொள்ளலாம்.

இப்போ ஆஃப்கான் எப்படி போதை வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது எனப்பார்ப்போம், கோல்டன் டிரையாங்கிலை அமெரிக்கா கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சோவியத் யூனியன் கேஜிபி மூலம் கோல்டன் கிரெசெண்ட் எனப்படும் இரான்,ஆப்கான்,பாகிஸ்தான் பகுதிகளை கையகப்படுத்தி, போதை மருந்து வியாபாரத்தினை கட்டுக்குள் வைத்திருந்தது.

Hezb-i-Islami என்ற முஜாகிதின் இயக்கதின் தலைவர் "Gulbuddin Hekmatyar" மூலம் சோவியத் தனது செயல்ப்பாடுகளை செய்து வந்தது,எனவே அவர்களை ரெட் ஆர்மி என்பார்கள். ஆப்கானின் முக்கியமான ஓப்பியம் விளைச்சல் பகுதியான Helmand Valley ரெட் ஆர்மியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

என்ன கொடுமைய்யா இது பெரிய பெரிய நாடுகள் எல்லாம் போதை மருந்துக்கா அரசியல் செய்தன என நினைக்கலாம், ஆனால் உண்மை இது தான், அப்பெரிய நாடுகளின் உளவுத்துறைகளுக்கு பல்வேறு ராணுவ நடவடிக்கைகள்,இன்ன பிற அரசியல் வேலைகள் செய்ய ஆயுதம்,பணம் தேவை எனவே இத்தகைய வேலைகளை செய்துவந்துள்ளன. உளவுத்துறைகள் மட்டுமே செய்துவிட முடியுமா, அந்நாட்டு தலைவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாங்களா எனக்கேட்டால் ,அதெல்லாம் சர்வதேச ரகசியம் :-))ஏதோ ஒரு அரசியல், ஆனால் 1950களில் கோல்டன் கிரெசெண்ட் சோவியத் கட்டுப்பாட்டுப்பகுதி, கோல்டன் டிரையாங்கில் அமெரிக்க கட்டுப்பாட்டுப்பகுதி எனப்புரிந்துக்கொண்டால் போதும்.

கோல்டன் டிரையாங்கில் பகுதியில் அமெரிக்காவிற்கு பலப்பிரச்சினைகள் மண்டையிடிக்கொடுத்த நிலையில் மாற்று இடம் தேடிய சூழலில் வியட்நாம் சண்டைக்கு பிறகு கோல்டன் டிரையாங்கிளில் அமெரிக்க கட்டுப்பாடு பெரிதும் தளர்ந்தப்போன சூழலில் ,அவர்கள் கண்ணை உறுத்தியது தான் சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த ஆஃப்கனை உள்ளடக்கிய கோல்டன் கிரசென்ட் பகுதி, நாம இந்த அல்லோகல்ல படுகிறோம் பங்காளி சோவியத் சத்தம் போடாமல் ஜமாய்க்கிறானே என்ற கடுப்பில் ஆஃப்கானில் அரசியலை துவங்கியது.

1960 -70 காலக்கட்டத்தில் ஆஃப்கன் முஜாகிதினில் தனக்கு என ஒரு பிரிவினை உருவாக்கிக்கொண்டு சோவியத்தினை எதிர்க்க வைத்தது. Mullah Nasim Akhundzada என்பவர் தலைமையில் ஹெமாண்ட் வேலி குழு என ஒன்று உருவாகி ரெட் ஆர்மியை விரட்டியடித்தது. அப்போ போராளியாக உருவாக்கப்பட்டவர் தான் முகமது ஓமர் , சோவியத் சிதைவுண்டப்பின் தானே வெளியேறிவிடவே, ஷேக் நஜிமுல்லா தலைமையில் ஒரு அரசை உருவாக்கி அமர்த்தியது அமெரிக்கா.

இடைப்பட்டக்காலத்தில் ஓமர் குண்டடிப்பட்டு ,பாகிஸ்தான் எல்லையில் சிகிச்சைப்பெற்று ,பின்னர் அங்கேயுள்ள மதாரசாவில் மார்க்கக்கல்வி பயின்று அங்கேயே மார்க்கப்பணியில் ஈடுபட்டார், அதனால் தான் முல்லா என அழைக்கப்பட்டார்.

அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் ஆட்சிப்புரிந்த ஷேக் நஜிமுல்லா ஷா, மக்களை சரியாக கவனிக்கவில்லை, ஊழல் பெருகி,பொருளாதாரம் சரிந்து அன்றாட வாழ்வு பெரும் சிக்கலாகிய சூழலில் ,மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப்போராட துவங்கினர் , அட இவனுங்க எதாவது செய்வானுங்கன்னு பார்த்தால் இன்னும் மோசமாக்கிட்டாங்களேனு முல்லாவாகிவிட்ட ஓமர் மீண்டும் ஆஃப்கானுக்கு வந்து சுமார் 60 நபர்களுடன் தலிபான் என்ற அமைப்பை உருவாக்குகினார். தலிபான் என்றால் பஷ்தூனில் "மாணவன்" என்று பெயர்.

பின்னர்ப்படிப்படியாக போராடி ,ஷேக் நஜிமுல்லாவை தொறத்திவிட்டு ,முல்லா முகமது ஓமர் ஆட்சியையே பிடித்து விடுகிறார், ஆனால் அதிபர் என சொல்லாமல் "ஸ்பிரிச்சுவல் ஹெட்" ஆக  Commander of the Faithful of the Islamic Emirate of Afghanistan என ஆட்சியும் செய்தார்.

அக்காலத்தில் பாகிஸ்தான்,ஈரான்,சவுதி,ஐக்கிய அரபிய எமிரேட்ஸ், இன்னும் சில நாடுகள், முல்லா முகமது ஓமரை  ஒரு அதிபராக அங்கிகரித்தன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி.814 நேபாளில் இருந்து காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது ஆப்கானில் அதிபராக இருந்தது முல்லா ஓமர் தான்.அப்போது பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை ஆப்கானுக்கு அனுப்பி பேச்சுவார்த்தைக்கு தாலிபன்களை மீடியேட்டராகக்கொண்டு நடத்திய பேரத்திற்கு பின் இந்திய சிறையில் இருந்த Maulana Masood Azhar, Sheikh Omar and Mushtaq Zargar என்ற மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்த பின்னர் விமானம் மற்றும் பயணிகள் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தின் போது ரூபின் கத்யால் என்ற இந்தியப்பயணி விமானக்கடத்தல்கார்களால் குத்திக்கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

ஒசாம பின்லேடனுக்கே ஆஃப்கானில் அடைக்கலம் கொடுத்து, அல்கைதா மற்றும் தலிபான்கள் பெரிய அளவில் போராட பின் புலமே முல்லா ஓமர் தான், அவர் தான் ஆப்கானில் கிங்க்,ஓசாமா அல்ல அதனால் தான் ஓசாமா பிடிபட்ட பின்னரும் முல்லா ஓமரால் இன்னும் தப்பிப்பிழைக்க முடிகிறது.ஆனால் திரைப்படத்தில் ஓசாமாவின் ஒரு அல்லக்கை ரேஞ்சில் ஓமரைக் காட்டியிருப்பார்கள்.

அமெரிக்க நேட்டோ கூட்டுப்படையினர் தலிபான்களை தலைமறைவாக தொறத்தும் முன் வரையில் ஓபியம் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை தலிபான்கள் கையில் வைத்திருந்தார்கள், 10 சதவீத விற்பனை வரி செலுத்திவிட்டு யார் வேண்டுமானாலும் ஓபியம் பயிரிடலாம், பின்னர் அவை அறுவடை செய்யப்பட்டு , எல்லைக்கடந்து கொண்டு செல்வது, வியாபாரம் எல்லாம் தலிபான்கள் மூலம் நடக்கும்.

இப்பணம் கொண்டே ஆயுதங்கள் வாங்கப்பட்டு போரிட்டார்கள். ஆஃப்கானில் மட்டும் சுமார் 2-3 பில்லியன் டாலர் மதிப்பில் ஓபியம் உற்பத்தியாகும்,ஆனால் அதன் சர்வதேச மதிப்பு சுமார் 180 பில்லியன் டாலர்கள். வழக்கம் போல உற்பத்தி செய்பவனுக்கு மிக குறைவான லாபமே.

ஓபியம்:
Papaver somniferum எனப்படும் பாப்பி (கசகசா செடி)செடியின் முதிராத காயின் மீது சில வெட்டுக்களை கீறிவிட்டால் வடியும் பால் போன்ற திரவத்தினை lachryma papaveris- பாப்பியின் கண்ணீர் என்பார்கள்,இதனை உலரவைத்தால் கிடைப்பது பழுப்பு நிற ஓபியம் ஆகும்.

இம்முறையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 4-5 கிலோ ஓப்பியம் மட்டுமே கிடைக்கும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஓபியம் மிக தரமானது.

இதன் பின்னர் பாப்பி பாட், தண்டு என அனைத்தையும் அமிலத்தில் கறைத்தும் ஓபியம் உற்பத்தி செய்யப்படும், இதனை பல முறை சுத்திகரித்தால் மட்டுமே சுமார் 50%  வீரியமுள்ள தூய ஓப்பியம் கிடைக்கும், பலரும் பல வகையில் ஓப்பியம் தயாரிப்பதாலும், பல வகை தரத்தில் ஓபியம் கிடைக்கும், ஆனால் சந்தையில் நுகர்வோருக்கு பெரும்பாலும் கலப்பட ஓபியம் தான் கிடைக்கும்,அதில் சுமார் 10% ஓபியம் மற்றதெல்லாம் தாவரக்கழிவு, விலங்குகளின் சாணியாகும் :-))

இன்றைய தேதியில் ஆஃப்கானில் இருந்து உலகத்தேவைக்கான அளவில் 80-90% ஓபீயம் கிடைக்கிறது என ஐக்கியநாடுகளின் போதை மருந்து மற்றும் குற்றவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.


(ஓபியம் பயணிக்கும் பாதை)

ஓப்பியம் என்பது பல மார்பைன் வகை போதைப்பொருள் மற்றும் மருந்து தயாரிக்க மூலப்பொருளாகும், அதன் வடிவம், தூய்மை அதிகரிக்க அதிகரிக்க விலை மிக உயரும்.

ஒரு கிலோ ஓப்பியத்தில் இருந்து 10 % ஹெராயின் உற்பத்தி செய்யலாம், 10%= 100 கிராம், ஒரு கிலோ ஓப்பியத்தின் விலையே சுமார் 1000-1500 டாலர்களே

ஆனால் ஒரு கிராம் 50% தூய  ஹெராயின் விலை சுமார் 150 டாலர்கள்,

அப்படி எனில் 100 கிராம் ஹெராயின் விலை 150,000 டாலர்கள்,ஒரு கிலோ ஒப்பியத்தின் மதிப்பை விட 100 மடங்கு கூடுதலாகிவிடுகிறது.எனவே பெட்ரோலிய, ஆயுத வியாபாரங்களுக்கு அடுத்து அதிக லாபம் தரக்கூடிய ஒரு வியாபாரம் ,அதுவும் மிக குறைவான விலைக்கு வாங்கி ,சர்வதேச சந்தையில் 100 மடங்கு விலையில் விற்கலாம்.

அமெரிக்க நேட்டோ படைகள் பெருமளவு ஆஃப்கானை கைப்பற்றிய பின்னரும் எப்படி இவ்வளவு உற்பத்தியாக முடியும் என்றால்  மேற்சொன்னக்காரணமே, அமெரிக்காவின் ஆசையே அதானே அப்புறம் உற்பத்தியாகாமல் என்ன செய்யும்?

(நேட்டோ டாங்க் ஓபியம் வயலில் ரோந்து செல்கிறது)

அமெரிக்கா ஆஃப்கானில் நுழைந்தவுடன் ஓப்பியம் பயிரிட்டவர்களை அழைத்து உங்கள் ஓபியம் பயிரை அழிக்க மாட்டோம், இன்னும் நிறைய பயிரிடுங்கள், நாங்கள் பாதுகாப்புக்கொடுக்கிறோம் என சொல்லியிருக்கிறது.மேலும் அடிக்கடி வானொலி மூலம் ஓப்பியம் பயிரிடுங்கள் வளமாக வாழுங்கள் என வயலும் வாழ்வும் நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்கள் :-))

தலிபான்கள் கையில் இருந்த ஓபியம் வியாபாரம் இப்பொழுது அமெரிக்க ஆதரவுடன் நடக்கிறது, இதனால் 2001 இல் இருந்ததை விட 5 மடங்கு அதிக ஓபியம் ஆப்கானில் உற்பத்தியாகின்றதாம்,இதனையும் சொல்வது ஐக்கியநாடுகளின் அறிக்கை :-))

அமெரிக்க நுழைவுக்கு பின்னர் ஓபியம் உற்பத்தி அதிகம் ஆகி இருப்பதை வைத்து தான் சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் பின்னணியில்லாமல் இது சாத்தியமில்லை என ஆய்வு செய்து எழுதியுள்ளன.

இப்பொழுது தலிபான்கள் அமெரிக்க ஆதரவு ஓபியம் வியாபாரத்திற்கு பத்வா விதித்து அழிக்கிறார்கள், அவர்களுக்கு வரிக்கட்டும் ஓப்பியம் விவசாயிகளை காப்பாற்றுகிறார்கள் அதே போல அமெரிக்கா செய்கிறது. இப்படித்தான் அங்கு சண்டை முடிவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

//"Respected people of Helmand. The soldiers of ISAF and the Afghan national army do not destroy poppy fields," it said. "They know that many people of Afghanistan have no choice but to grow poppy. ISAF and the Afghan national army do not want to stop people from earning their livelihoods."

The message was drafted by British officers and carried on two local stations in Afghanistan's largest province. It infuriated senior Afghan officials - including the president, Hamid Karzai - who demanded an explanation. The Afghan government has been under intense western pressure to rein in the burgeoning drugs trade. Opium cultivation soared 59% last year, earning local traffickers £1.2bn. The spike was concentrated in Helmand.//

link:

http://www.guardian.co.uk/world/2007/apr/27/afghanistan.declanwalsh


2001 இல் தலிபான்கள் விரட்டப்பட்டு ,ஹமீத் கர்சாய் தலைமையில் ஒரு அரசினை நேட்டோ படைகள் மூலம் அமெரிக்கா நிறுவியது, அப்பொழுது 2001 இல் தலிபான்கள் முந்தைய காலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் 4500 டன்கள் ஓப்பியம் நேட்டோ படைகள் வசம் சிக்கியது,பெயருக்கு கொஞ்சம் அழித்துவிட்டு பெரும்பகுதியை நேட்டோ ராணுவம் அமுக்கிவிட்டது என புலனாய்வுப்பத்திரிக்கைள் தெரிவிக்கின்றன. எனவே மேற்கொண்டு ஓப்பியம் விளைந்தால் நேட்டோ ராணுவமே பலனடையும் என தலிபான்கள் 2001ஆம் ஆண்டில் ஓப்பியத்துக்கு தடை விதித்ததால் ஓப்பியம் உற்பத்தி வெகுவாக ஆப்கானில் குறைந்தது.

படம்:

ஆனால் அதன் பின்னர் ஆண்டு தோறும் ஓப்பியம் உற்பத்தி அதிகரிக்கவே செய்தது, காரணம் அமெரிக்க நேட்டோ படை பல குழுக்களை உருவாக்கி ஓப்பியம் பயிரிட ஊக்குவித்ததே.ஒரு பக்கம் அமெரிக்க ராணுவம் போதைப்பொருட்களுக்கு எதிராக போராடி வருவதாக செய்திகள் பரப்பி வந்தாலும் , உற்பத்தி என்னமோ குறையவேயில்லை என்பதை நியுயார்க் டைம்ஸ் மோப்பம் பிடித்து போதைமருந்து வியாபாரத்தின் பின்னால் ஹமித் ஹர்சாயின் சகோதரர் "அஹ்மத் வாலி ஹர்சாய்" மற்றும் அவருக்கு பின்னால் CIA உள்ளதாகவும் கட்டுரை வெளியிட்டது.

செய்தி:

//KABUL, Afghanistan — Ahmed Wali Karzai, the brother of the Afghan president and a suspected player in the country’s booming illegal opium trade, gets regular payments from the Central Intelligence Agency, and has for much of the past eight years, according to current and former American officials.//

http://www.nytimes.com/2009/10/28/world/asia/28intel.html?_r=2&

ஆப்கானில் இருந்து சரக்கு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வெளியில் கொண்டு சேர்க்க வேண்டிய வேலை அஹ்மத் ஹர்சாயுடையது இதற்காக சிஐஏ சம்பளமும் அவருக்கு கொடுத்துள்ளது ,என நியுயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

படத்திலும் தவ்பீக் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் எளிய விவசாயின் அன்பளிப்பு என ஓபியம் கொடுக்கும், ஆப்கானில் விவசாயம் என்றால் ஓபியம் பயிரிடுதலே,மேலும் ஓபிய வியாபாரி தான் பணம் கொடுக்கிறார் என ஓமர் பேசும் காட்சியும் உண்டு,ஆனால் கொஞ்சம் மிகையாக அல்லா கொடுக்கிறது தான் இந்த தவ்பீக் கொடுப்பது என ஒரு வசனம் வேறு பேசுவார், என்ன கொடுமை சார் இது ,இப்படி சொல்வது போதை பொருள் விற்பது அல்லாவின் ஆசியுடன் செய்வதாக ஆகாதா? மேலும் அல்லாவுக்கு இணை வைத்து தவ்பீக்கை உயர்வாக சொல்வது போலவும் இருக்கே :-))தவ்பீக் விருந்து கொடுக்கும் வீட்டுக்கு செல்லும் வழியில் சில் அவுட்டில் ரோஜா தோட்டம் போல காட்டியிருப்பது ஓபியம் வயல்களே, ஓப்பியம் செடி தொலைவில் இருந்து பார்க்க ரோஜா போலவே இருக்கும். ஓபியம் வயலை தெளிவாக படம் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் ரோஜா தோட்டத்தினை சில் அவுட்டில் காட்டியிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆப்கானில் அமைதியற்ற சூழல் நிலவ உண்மையான காரணம் என்னவென இப்பொழுது புரிந்திருக்கும், இவ்வுண்மையை பற்றி திரைப்படம் சிறிதும் பேசாமல் ,ஆஃப்கானில் ஓபிய வியாபாரத்தினை தலிபான்கள் மட்டுமே செய்வதாக காட்டியிருப்பார்.

# லோகநாயகர் அறிமுகக்காட்சியில் கதக் ஆடுவதை அனேகம் பேர் சிலாகித்து என்ன நளினம் என விதந்தொம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஒரு திரைப்பட நடனமாக எளிமையாக ஆடுவதாக நடித்திருக்கிறார் என்று மட்டுமே சொல்லலாம், அதுவும் நாட்டியம் சொல்லித்தரும் குருவும் கேமராப்பார்த்து அபிநயம் பிடிப்பார், பின்னால் ஆடுபவர்களும் கேமிராவை நோக்கி தான் ஆடுவார்கள், அப்படினா குரு என்ன அபிநயம் காட்டினார்னு மாணவிகள் எப்படி முதுகைப்பார்த்து  கற்றுக்கொள்வார்கள்?.

ரொம்ப சினிமாத்தனமான கேமிராக்கோணம் அது, வழக்கமா ஹீரோ ஆடியன்ஸ் பார்த்து "மெசேஜ் சொல்ல",.பஞ்ச் டயலாக் சொல்ல பயன்ப்படுத்தும் கேமிராக்கோணம் இது. இப்படிக்காட்டினால் தான் ஆடும் அழகான பொண்ணுங்க முகமும்,ஹீரோ முகமும் ஆடியன்ஸ் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்,ஆனால் உலகத்தரமான படத்தில இப்படிலாம் ஆர்ட்டிபிசியலா மசாலப்படங்களை போலவே கேமிராக்கோணங்களை வைக்கலாமா :-))

இதை விட இன்னொன்று என்னனா, நாயகர் ஒரு அபிநயம் முடிச்சு சிருங்கார பாவம் காட்டிட்டு இருப்பார், பின்னணி நாட்டியத்தாரகைகள் பூ எடுத்து போட்டு ,ஒரு சுத்து சுத்தி வேற என்னமோ ஆடிட்டு இருப்பாங்க , குரு ஆடுறாப்போல ஆட வேணாமோ :-))

# ஒரு பிரைவேட் டிடெக்டிக் பின்னாடி வர்ரான்னு தெரியுது,ஆனால் அதே வேர்ஹவுஸ் வரைக்கும் ஏன் போகனும் ,அம்மாம் பெரிய ஒளவாளிக்கு தெரிய வேண்டாமோ, அதை விட காமெடி, மாமா பின்னடியே தடியன் வரான்  என்ன செய்யன்னு அப்பாவியாக்கேட்பார், முட்டாள் ஓடுனு வேற இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பார் சேகர் கபூர், இம்புட்டு தத்தியாவா ரா ஏஜண்ட் இருப்பார், அப்பாவி வேடம் தான் போட்டு இருக்காரே ஒழிய கதைப்படி உண்மையில் அப்பாவியில்லை தானே ,ஒரு வேளை பாத்திரத்தோட ஒன்றிப்போய் விஷ்வநாத்தாக இருக்கும் போது முழுக்க தத்தியா இருக்கணும்னு நினைச்சுட்டாரா?

# நிருபமா(பூஜா)வின் ஆண் நண்பன் தீபக்குடன் வந்து நாயகரை விசாரணை செய்யும் காட்சியில் , ஃபரூக் என்பவருக்கு அழைப்பு விடுத்து அவர்கள் வரும் வரையில் ரா ஏஜண்ட் தேமே என இருப்பது ஏனோ?  இடைப்பட்டக்காலத்தில் ஏதேனும் செய்து தப்பியிருக்கலாம்.

ஃபரூக் குழுவினர் வந்தால் ஏதேனும் உண்மைக்கண்டுப்பிடிக்கலாம் என சும்மா இருந்தார் என்றால், அவர்கள் இருப்பிடம் எல்லாம் முன்னரே தெரியும் எனவே அங்கேயே போய் முன்னரே பிடித்து விசாரித்து இருக்கலாமே?

ஒரு வேளை வந்த குழு ,கண்டதும் சுட்டுக்கதையை முடித்து இருந்தால் என்னாவது? நமக்கு தெரியும் இது தமிழ்ப்படம், ஹீரோவை அப்படிலாம் பொட்டுனு கொன்றுட மாட்டாங்கன்னு ஆனால் உண்மையான சம்பவம் எனில் ,தீவிரவாத குழுவிடம் மாட்டினால் ,கதம்,கதம் தானே :-))

தமிழ் சினிமாவில் என்றில்லை உலக அளவில் எல்லா ஆக்‌ஷன் படங்களிலும் ,மற்றவர்களை பொட்டுனு போட்டு தள்ளும் வில்லன் ஹீரோவை மட்டும் கொல்லாமல் கட்டி வைத்து தனது சொந்தக்கதை,எதிர்கால திட்டம் என விலாவாரியாக  உலகத்து கதையை எல்லாம் பேசிட்டு, அப்பவும் கொல்லாமல் , 24 மணிநேரத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் வெடிக்கிறமாதிரி ஒரு சின்ன வெடிக்குண்டை,அதுவும் நல்லா டைம் தெரியிறாப்போல டைமருடன் செட் செய்து காலுக்கு அடியில் வச்சுட்டு ,கையை,காலை கட்டிப்போட்டுவிட்டு ,குட் பை சொல்லிட்டு போவது தான் வழக்கமாக இருக்கிறது :-))

அப்படிக்கட்டிப்போடும் போது தனியாக்கட்டிப்போடவே மாட்டாங்க கூட ஒரு பொண்ணையும் சேர்த்து கட்டிப்போடுவாங்க, போற வரைக்கும் பேச்சுத்தொணைக்கு போல :-))

ஹீரோ  வழக்கம் போல குண்டு வெடிக்க ஒக்கே ஒக்க செகண்ட் இருக்கும் போது ,குண்டை செயலிழக்க செய்து தப்பிச்சென்று, டேக் ஆஃப் ஆகும் விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ தாவிப்பிடிச்சு சண்டைப்போட்டு வில்லனை கொன்றொழிப்பார் :-))

அதைப்போலவே இப்படத்திலும் கட்டிப்போட்டு அடிச்சப்பிறகு ,ஹீரோ நமாஸ் செய்யணும் எனக்கேட்டதும் ,பண்பான மார்க்கப்பந்துவான வில்லன் கட்டவிழ்க்க ,அப்புறம் என்ன ஹீரோ விஸ்வரூபம் எடுப்பதை தவிர வேறென்ன செய்வார் :-))

ஆனாலும் சண்டைக்காட்சி கிரிஸ்ப்பா, யாரு அடிச்சாலும்,சுட்டாலும் ஹீரோ மேல படாத போல நன்றாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வில்லன் ஜேம்சை சுடும் முன்னர் உன் கடைசி ஆசை என்னனு அன்பா கேட்பார், ஜேம்ஸ் ஒரு தம் அடிச்சுக்கிறேன் என சொன்னதும் பெர்மிஷன் கிராண்டட் ஆகும், ஜேம்ஸ் "எம்.ஐ.6" கொடுத்த ஸ்பெஷல் ஃபில்டர் சிகரட்டை பத்த வச்சு ஒரு பஃப் இழுத்துட்டு வில்லன் குருப் மேல சிகரெட்டை போட்டதும் வெடிச்சிறும்,அப்புறம் என்ன ஜேம்ஸ் பாண்ட் எஸ்கேப் தான் :-))

கொல்வதற்கு முன் ஹீரோவின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைக்கும் மெல்லிதயம் படைத்த நல்ல வில்லன்கள் இருக்கும் வரையில் ஹீரோவை யாராலும் ஒன்னியும் பண்ணிக்க முடியாது என்பது உலகப்பட நியதி :-))

#
படத்தில் ஆப்கானியர்களை கூட ஒழுங்காக சித்தரிக்கவில்லை,ஆப்கானியர்கள் அரேபியர்கள் அல்லர், அவர்கள் பஷ்தூன் இனக்குழுவினர்,அவர்களின் கலாச்சாரமே வேறு அனைவரும் ,தாடியுடன், மீசையும் வளர்ப்பார்கள்,ஆனால் படத்தில் அனைவரும் மீசையை மழித்துவிட்டு தாடியுடன் ,அரேபிய வகாபியப் பாணியில் இருப்பார்கள்.ஓசாம பின் லேடன், முல்லா முகமது ஓமர் ஆகியோரின் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும் ,தாடி ,மீசை தான் அவர்கள் கலாச்சாரம் என்பது.


இரானில் பதின்மர் ஷியா குழு வகையினர் ,அவர்களும் மீசை,தாடியுடன் தான் இருப்பார்கள், இன்னும் சொல்லப்போனால் அரசுப்பணி புரிய மீசை அவசியம் அங்கே.

 ஓமர் தமிழ்நாட்டில் இருந்தேன் என சொல்வதே அவர் தமிழ்ப்பேசுவதை ஜஸ்டிபை செய்ய என்றார்கள்,ஆனால் அவர் கூட இருக்கும் சலிம் என்ற பாத்திரமும் தமிழ் பேசும், போதாதற்கு அமெரிக்காவில் இருக்கும் ஜிகாதிகளும் தமிழ் பேசுறாங்க, ஃபாரூக் என்பவர் ஒப்பன்மவனேனு எல்லாம் லோக்கல் ஸ்லாங்கில் பேசி சிரிக்க வைக்கிறார் :-))

# ஒரு போஸ்டரைக்காட்டி இவரு பெரிய ஜிகாதி ,5,00,000 பரிசுனு ஒரு டயலாக் சொன்னதும்,தலிபான்கள் முதல்மரியாதை கொடுத்து நாயகரை குழுவில் சேர்த்துக்கொள்கிறார்கள், இதற்கு மண்டையில மூளை என்ற வஸ்துவே இல்லாதவர்கள் என  தலிபான்களை சொல்லி இருக்கலாம் ;-))

தலிபான் மற்றும் அல்கயிதாவில் ஊடுருவலை செய்ய  முடியமால் ஆனானப்பட்ட சிஐஏ வே முழிக்க காரணமே அவர்களின் செயல்படும் முறையே, எந்த ஒருவருக்கும் ஒரு நிலைக்கு மேல் அடுத்த நிலையில் யார்,என்ன செய்கிறார்கள் என்றே தெரியாது, முல்லா ஓமர், ஓசாமவின் புகைப்படங்கள் என காட்டப்படுவதே பல காலத்திற்கு முன்னர் எடுத்தவை ,தற்போது முல்லா ஓமர் எப்படி இருப்பார் என தெரியாது, இந்த படமே அவருதான்னும் தெரியாது என சிஐஏ அதிகாரிகளே குழம்பிப்போய் கிடக்கிறார்கள்,அந்த அளவுக்கு ரகசியமான, பாதுகாப்பாக இயங்கக்கூடிய குழு தலிபான்கள்.

ஜிகாதியாக செயல்ப்படும் நபர் ஒரு தனிநபரேயல்ல, அவர் ஏதேனும் ஒரு ஜிகாதி குழுவில் இருந்தேயாக வேண்டும்,எனவே ஒரு ஜிகாதிப்பற்றி குழுவில் இருப்பவருக்கு நன்கு தெரியும், அக்குழுக்களைப்பற்றி தலிபான்,அல்கயிதா போன்றோர்க்கு நன்கு தெரியும்,எனவே ஒரு ஜிகாதியைப்பற்றி எக்குழுவை சேர்ந்தவர் என்பதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

அப்படி இருக்கும் போது ஒரு தனி நபர் ரா தேடும் புகழ்ப்பெற்ற ஜிகாதியாக தனியே உருவாவது இஸ்லாமிய ஜிகாதி செயல்பாட்டில் இல்லை, அப்படியே யாரேனும் எந்த ஜிகாதிக்குழுவுக்கும் அறிமுகமே இல்லாமல் ,தன்னம் தனியே உருவாகி இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்து தங்களுடன் இணைத்து இருப்பார்கள், இப்படி ரா நோட்டீஸ் போட்டப்பிறகு தான் ஆள் யார்னே தெரிகிறது என்றால் நம்பவே மாட்டார்கள்.

அப்படியே திடீர் என முளைத்த ஒரு ஜிகாதி வந்தாலும் கண்காணிப்பில் தான் வைத்திருப்பார்கள்,ஆனால் வந்ததும் என்னமோ "National security guards commando Training" எடுத்து வந்த சிறப்பு அதிகாரிப்போல கூப்பிட்டு எல்லாருக்கும் பயிற்சிக்கொடுக்க வைக்க மாட்டாங்க,அதை விட எல்லா திட்டம் பற்றியும் புதுசா வந்த ஆளுக்கிட்டே எப்படி ஒப்புதல் வாக்குமூலம் போல சொல்லுவாங்க, தலிபான்களின் முக்கிய தலைவருக்கு தவக்களை அளவுக்கு கூட மூளை வேலை செய்யாது என்பது போல படத்தில் காட்டியிருப்பார்.

ஷியாவோ,சன்னியோ,அகமதியாவோ அவர்கள்  இருக்கும் ஊர் ஜமாத்தில் இணைந்திருப்பார்கள், அங்கே குடும்ப விவரமும் இருக்கும், அப்படி செய்யவில்லை என்றால் ,இறந்த பின் புதைக்க இடம் கொடுக்க மாட்டார்கள்,மேலும் திருமணத்தையும் ஜமாத்தில் பதிவு செய்ய முடியாது.
இஸ்லாமிய சமுதாயத்தில் ஜாமாத் முறையில் உள்ள சிறப்பு என்னவென்றால் ஒருவர் எந்த ஊருனு சொன்னாப்போதும் ,அவரோட ஜாமத்தை தொடர்பு கொண்டால் போதும் மொத்த ஜாதகமும் வெளியில் வந்துவிடும்.

அரபி,உருது என எதுவுமே தெரியாத ஒருவர் ,விஸாம் அகமத் காஷ்மீரி, சயீத் காஷ்மீரி பையன் என சொன்னவுடன் உண்மையான தாலிபான்களா இருந்தா வாயப்பொளந்துக்கிட்டு ஒத்துக்க மாட்டாங்க, எந்த ஊரு ஜமாத்துனு கேட்டு மொத்த விவரமும் தெரிஞ்சுக்கிட்டு, உளவாளி இல்லைனு உறுதிப்படுத்திப்படுத்தாமல் கிட்டே சேர்க்கவே மாட்டாங்க, உளவாளினு தெரிஞ்சா  வெட்டி ஊறுகாய் போட்டிட மாட்டாங்க.இது போன்று ஜிகாதி அமைப்புகள் மிக நெருக்கமாக பின்னப்பட்ட வலையாக செயல்ப்படுவதால் தான் சிஐஏ போன்ற உளவு நிறுவனங்களால்,ஊடுருவி தகவல்களையே அறிய முடியமால் சிரமப்படுகின்றன.

#இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதும் ஆப்கானில் நடந்ததை சொன்னேன் ,எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு எனவே தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்க்க தேவையில்லை என்றார், அவர் சொல்வது உண்மை எனில் உயிருடன் இருக்கும் முல்லா ஓமர் கதாப்பாத்திரத்தை எப்படி வில்லனாக சித்தரித்தார்? இந்திய சென்சார் போர்டு விதிப்படி உயிருடன் இருப்பவரைப்பற்றி படம் எடுக்க வேண்டும் எனில் அவரிடம் இருந்து தடையில்லை என சான்று பெற வேண்டும்.

நாயகன் படம் எடுத்த போது, அப்பொழுது உயிருடன் இருந்த வரதா பாயின் கதை என சொன்னதால் சென்சார் போர்டு சான்றளிக்க மறுத்த சம்பவத்தினை ,சமீபத்தில் கூட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் நினைவு கூர்ந்தார்.
செய்தி:

//After the completion of shooting Kamal Haasan and Mani Ratnam had a press meet, where they made a statement that the movie was based on Varadaraja Mudaliar’s life. After this, the censor board at Chennai refused to permit the release of the movie, since it was based on a living person. I appealed to the revising committee at Bombay. They said that they would permit us to release the film if I got a letter stating that it was not based on Varadaraja Mudaliar’s life. I asked Kamal Haasan to help me. He simply refused, stating that he was busy shooting another movie. Hence, with great difficulty, I contacted Mathiolli Shanmugam, a writer and good friend of mine, and through him met Varadaraja Mudaliar, who gave us a letter. Only then did the Censor appellate board at Bombay permit us to release the film. To call the movie his “baby” and not be bothered about its release is a reflection on Kamal Haasan’s ‘sincerity’.//

அதனடிப்படையில் பார்த்தால் சென்சார் போர்ட் இப்படத்திற்கும் சான்றளிக்க மறுத்திருக்க வேண்டும், இதன் அடிப்படையில் தான் அரசு வழக்கறிஞர் உயர் நீதி மன்றத்தில் சென்சார் சான்று அளித்ததில் முறைகேடு என வாதிட்டு இருக்க வேண்டும்,ஆனால் மக்களோ சிரித்தார்கள்.

ஒரு வேளை வெளிநாடாகிய ஆப்கனில் ஒருவர் உயிருடன் இருந்தால் என்ன என சென்சார் போர்ட் நினைத்திருக்கலாம், அல்லது முல்லா ஓமருக்காக யாரும் வழக்குப்போட போவதில்லை என நினைத்திருக்கலாம்.

# வேர்ஹவுசில் இருந்து தப்பி வெளியில் ஓடிவரும் பூஜாவுக்கு என ஒரு கார் சாவியுடன் ,திறந்தே காத்து நிற்கிறது ,ஒரு வேளை  உதவி மனப்பான்மையுள்ள தீவிரவாதிகள் போல :-))

#வேர்ஹவுஸ் சண்டைக்காட்சிக்கு பின்னர் ,வீட்டுக்கு வந்து தையல் போட்டு,முடிவெட்டிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே எப்படி FBI சரியாக வர முடிந்தது,அக்காட்சிக்கு பின்னரே ஓமர் FBI யில் சொல்லலாம் என போன் செய்வதாகவும் காட்சி வருகிறது.

#அதனை தொடர்ந்து வரும் கார் சேசிங் காட்சியின் போது ஓமர் பக்கவாட்டில் ,நாயகர் குழுவினை விரட்டி வருகிறார், மிக முக்கிய புள்ளியான ஓமரே கண் முன்னே வரும் போது அவரை மடக்கி பிடிக்க நினைக்க வேண்டாமா?

பின்னால் FBI  வருகிறது எனலாம், ஆனால் கடைசியில் FBI  இடம் மாட்டிக்கொண்டு ,நான் ஆனானப்பட்ட ரா ஏஜண்ட் என இந்திய பிரதமரையே பேச வச்சு சொல்லும் வேலையை ,ஓமரைப்பிடித்துக்கொடுத்துவிட்டு ,சொல்லி இருக்கலாம், டர்ட்டி பாம் டென்ஷனே இல்லாமல் படம் அங்கேயே முடிந்து இருக்கும்,நமக்கும் தலைவலி மிச்சம் :-))

அல்லது FBI  விரட்டிக்கொண்டு இருக்கும் போதே ஓமர் குழுவினரை விரட்டி ஒரு டபுள் சேஸ் ஆக வைத்து செம ஆக்‌ஷன் சீனாக காட்டியிருக்கலாம்.

அது என்னமோ தெரியலை பரபரப்பான நகரத்தில் சேசிங் நடக்குது ஒரு இடத்தில் கூட டிராபிக் சிக்னல் இல்லை, ரெட் விழலை, ரோட்டில் டிராபிக் நெரிசல் இல்லை, ஃப்ரியா சொய்ங்க்...சொய்ங்க்னு கார் ஓட்டிக்கிட்டுப்போறாங்க :-))


டர்ட்டி பாம்:

# கிளைமாக்சில் சீசியம் டர்ட்டி பாம் என தெரிந்த பின்னும் FBI  சும்மா நாலுப்பேரோட போய் ரவுண்ட் அப் செய்கிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில்., அணு வெடிப்பொருள்,கதிர்வீச்சு சம்பந்தமான புலனாய்வு மற்றும் பாதுகாப்புக்கு என அமெரிக்காவில் தனியே
Department of Energy, Office of Intelligence and Counterintelligence என ஒருத்துறை உள்ளது.அதே போல 16 வகையான புலனாய்வு அமைப்புகள் அமெரிக்காவில் உள்ளன, அங்கே  FBI என்பது நம்ம ஊரு சிபிஐ போல கொஞ்சம் டம்மியான அமைப்பே ஆனால் கடைசி வரை  FBI தவிற வேறு யாரும் எட்டிப்பார்க்காதது போல காட்டியிருப்பார்கள்.

சீசியம்-132 என்பது அறை வெப்ப நிலையில் திரவமாக இருக்கக்கூடிய ஒரு உலோகம், இதன் ஐசோடோப்பான சீசியம்-137 க்கு தான் கதிரியக்க தன்மை உண்டு.

மேலும் அணுநிறை எண் -137, அணு எண்-55 உள்ள சீசியம் ஐசோடோப் ஒரு அணுப்பிளவை உபப்பொருள், அதற்கு அயனியாக்கும் காமா கதிர்வீச்சினை வெளியிடும் தன்மை உண்டே ஒழிய ,நியுட்ரானை வெளியிடும் தன்மையில்லை, அதனால் அணுப்பிளவை வினையினை தொடர்ந்து செய்ய முடியாது,அதாவது சீசியம்-137 கொண்டு அணுகுண்டு செய்ய முடியாது.அதற்கு செயின் ரியாக்‌ஷன் செய்யக்கூடிய யுரேனியம்,புளுட்டோனியம் போன்ற அணுப்பொருட்கள் தேவை.

யுரேனியத்தில் பல ஐசோடோப்புகள் உண்டு, யு-238 என்பது பொதுவாக கிடைக்கக்கூடியது அதற்கு அணுப்பிளவு ,கதிரியக்கம் இல்லை, ஆனால் யு-235 என்ற ஐசோடோப்புக்கு உண்டு, இது 0.75%  அளவே இயற்கையில் உள்ளது, எனவே யு-238 ஐ என்ரிச் செய்து 3-4% யு-235 கொண்டதாக மாற்றியே அணு உலைகள்,மற்றும் அணுகுண்டுகளில் பயன்ப்படுத்துகிறார்கள்.அவ்வாறு அணுப்பிளவை நடக்கும் போது மட்டுமே சீசியம் -137 உருவாகும், இயற்கையில் ,அவ்வுலோகம் பூமியில் இல்லை. நியுக்ளியார் வெடிப்பின் போது ஏற்படும் Fall out இல் சீசியம் 137 இருக்கும், இதன் அரை ஆயுட்காலம் 30 ஆண்டுகள் ,அது வரையில் அணுகுண்டு வெடித்த இடத்தில் கதிர்வீச்சு இருக்கும்.மேலும் அணு உலைகளில் பயன்ப்படுத்திய யு-235 அணு எரிப்பொருள் ராட்களில் இருந்து சீசியம்- 137  பிரித்தெடுக்கப்பட்டு ,புற்று நோய்க்கான ரேடியோ தெரபி மற்றும் ஸ்கேனிங் போன்றவற்றிற்கு பயன்ப்படுகிறது.

டர்ட்டி பாம் எனப்படும் சீசியம் -137 கொண்ட பாம் அணுகுண்டு அல்ல,  ஒரு சாதாரண வெடிப்பு பொருள்களான ஆர்.டிஎக்ஸ்,சி-4,டி.என்.டி  என ஏதேனும் ஒன்றினை கொண்ட ஒரு வெடி குண்டே, அதனுடன் சீசியம் குளோரைடு உப்பினை தூளாக இணைத்து தயாரிக்கப்படும் வெடிகுண்டாகும், வெடிப்பொருள் வெடிக்கும் போது காற்றில் சீசியம்-137 துகள்கள் பரவி கதிரியக்கத்தினை உண்டாக்கும். அதன் மூலமே மனிதர்களுக்கு தீங்கு உருவாகும்.

எனவே டர்ட்டி பாம் இருக்கு என தெரிந்தது அந்த இடத்துக்கு FBI  செல்லும் போது கூட "பாம் ஸ்குவாடினை' அழைத்து செல்லாமல் தேமே எனப்போவது போலக்காட்டியிருப்பது FBI  ஐ உள்ளூர் டி-1 போலிஸ் ஸ்டேஷன் போலீஸ் அளவுக்கு காமெடியாக காட்டுகிறது.

நியுக்ளியர் ஆன்காலஜி:

# இதில் இன்னொரு காமெடி நியுக்ளியர் ஆன்காலாஜியில் டாக்டர் பட்டம் பெற்ற நாயகி FBI  அதிகாரியிடம் சீசியம் டர்ட்டி பாம் பற்றி தெரியும் என சொல்ல இரண்டாம் வாய்ப்பாடு சொல்வது போல அணு எண்,நிறை எண்,மெல்டிங் பாயிண்ட் என எல்லாம் சொல்வார், உடனே உங்களுக்கு நிறைய தெரியுது என FBI  ஆபிசர் பம்முவார், ஆனால் நாயகி மூச்சுவிடாமல் சொல்லுவது கதிரியக்கமற்ற சீசியம் 132 பற்றி ,அணு எண் 55, நிறை எண்-132.09 என சொல்வார் ,கொஞ்சம் டயலாக்கையும் கவனிங்க மக்களே :-))

நியுக்ளியர் ஆன்காலஜி படிக்க அடிப்படையில் மருத்துவம் படித்திருக்க வேண்டும், ஆன்காலஜி நர்ஸ் ஆக இருக்க நர்சிங் பட்டம் படித்திருக்க வேண்டும், விலங்குகளுக்கான ஆன்காலஜி படிப்பும் உள்ளது அதற்கு கால்நடை மருத்துவம் படித்திருக்க வேண்டும்.
(வெரி "ஷார்ப்" ஆன்காலஜிஸ்ட்)


ஆனால் படத்தில் நியுக்ளியர் ஆன்காலஜியில் தான் டாக்டர் அவருக்கு  மருத்துவம் தெரியாது என ,காயத்துக்கு தையல் போடும் காட்சியில் லோகநாயகர் சொல்கிறார் :-))

நியுக்ளியர் பிசிக்ஸ் போன்றவை தான் ஆய்வு மருத்துவப்படிப்பு,ஆன்காலஜிக்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும்.

//You will need a degree in medicine and obtain a license.  In addition, you will likely need to undergo residency training in oncology and a license to practice oncology.  Depending on where you live, you may first need to complete a Bachelor's degree before going into medical school to obtain the degree in medicine.  Students in certain countries may enter medical school directly from high school. //
link:
http://admissionsuccess.com/Types/medicalspecialties/oncologist.htm

நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்கிறேன்,யாரேனும் மருத்துவர்கள் சரியா எனக்கூறவும். இணையத்திலும் நான் சொன்னது போலவேயுள்ளது.


# ஆஃப்கானில் ஓப்பியம் வியாபாரியின் 'ஓப்பியத்தில்' டிராக்கர் டிவைசை மறைத்து வைக்கிறார், அந்த ஓப்பியம் வியாபாரி அதனை யாருக்கேனும் ஓப்பியம் என வழக்கம் போல அன்பளிப்பாகவோ,அல்லது விற்றோ இருந்தால் என்ன செய்ய? மேலும் அந்த ஓப்பிய வியாபாரி ஓசாமாவை பார்க்க கண்டிப்பாக வருவார் என என்ன நிச்சயம்,அல்லது வரும் போது ஓப்பிய பார்சலை மூட்டைக்கட்டிக்கொண்டு வருவான் எனவும் சொல்ல முடியாதே? அப்படி இருக்கும் போது ஓப்பியத்தில் வைத்து வியாபாரியின் பையில் வைப்பது நேட்டோ படைக்கு இடம் அறிய உதவுகிறது  என காட்டுவது ரொம்ப கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது.

மேலும் இப்பொழுது உள்ள நவீன மின்னணு தொழில்நுட்பத்திற்கு "பழைய கால டிரான்ஸ்ஸிஸ்டர் ரேடியோ" அளவுக்கா டிராக்கர் டிவைஸ் செய்வாங்க, அதுவும் ரெட் "led light" வேற கண்ணை சிமிட்டிக்கிட்டு இருக்கும்:-))

சின்னதா ஒரு பாரசிட்டமால் டேப்லெட் அளவுக்கெல்லாம் டிராக்கர் டிவைஸ் உள்ளதாக பழைய படங்களிளேயே காட்டியாச்சு, இவ்வளவு ஏன் சமீபத்தில் வந்த துப்பாக்கிப்படத்தில் விஜய் ஒரு டிராக்கர் டிவைசை உடம்புக்குள் இஞ்செக்ட் செய்வதாக தமிழ்ப்படத்திலேயே காட்டியாச்சு :-))

அமெரிக்காவை விட அட்வான்ஸ் டெக்னாலஜியை  இந்திய ராணுவ நுண்ணறிவு துறை பயன்ப்படுத்துகிறது என இக்காட்சியின் மூலம் லோகநாயகர் காட்டியதாக நாம் பெருமைப்படலாம் :-))

# ஆஃப்கானில் ரா ஏஜண்ட் வேலை செய்யும் போது அமெரிக்க நேட்டோ படைகளுடன் ஒரு கூட்டு வேலை என்பதாக காட்டிவிட்டு, நியுயார்க்கில் அமெரிக்க அரசுடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் தனியே ஏன் ரா வேலை செய்ய வேண்டும்? இங்கும் ஜாயிண்ட் ஆபரேஷன் என்றல்லவா காட்டியிருக்க வேண்டும்.

அப்படி தனித்தே ஒரு நாட்டின் உளவு அமைப்பு இன்னொரு நாட்டில் ஒரு வேலை செய்தால்  ,அது அந்த நாட்டை காக்க என சொன்னாலும் அதுவும் உளவு வேலையே,அப்படி எல்லாம் ரகசியமாக உளவு வேலை செய்தால் அதுக்கே ஆப்படிப்பாங்க,அந்தளவுக்கு ரகசியமாக உளவு வேலை செய்து அமெரிக்காவை காப்பாற்ற வேண்டிய அவசியம் இந்திய அரசு நிறுவனமான ராவுக்கு ஏன்? மேலும் கொஞ்சம் தவறி ரா ஏஜண்ட் கொல்லப்பட்டோ அல்லது சரியாக கண்டுப்பிடிக்காமல் போய் குண்டு வெடித்திருந்தால் ,பின்னர் நடக்கும் புலன் விசாரணையின் போது ரா தான் அந்த வேலையை செய்தது என்ற பழியோ அல்லது ரா ஏஜண்ட் டபுள் ஏஜண்டாகிட்டார்னோ கதை மாறிவிடும். சொதப்பலாக எடுக்கப்பட்ட தாண்டவம் படத்திலேயே இதை காட்டியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தாண்டவம் படத்தின் கதைக்கும் விஷ்வரூபம் படத்தின் கதைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தாண்டவத்தில் விக்ரம் இஸ்லாமிய ஜிகாதியாக ஊடுருவி ஒரு ஆபரேஷன் செய்வதாக ஆரம்பத்தில் லேசாக காட்டியிருப்பதை, இங்கே தலிபான் குழுவில் ஊடுருவுவதாக் விலாவாரியாக காட்டியிருக்கிறார்கள், தாண்டவத்தில் குண்டு வெடித்த பின் பழி வாங்குவார், இதில் குண்டு வெடிப்பை தடுப்பார், இரண்டுமே ரா ஏஜண்ட் கதை என ஏகப்பட்ட ஒற்றுமைகள்.

# வேர்ஹவுசில் ஒரு குண்டு, அப்பார்ட்மென்டில் ஒரு குண்டு என வெடித்த பின்னும் FBI எந்த வித தீவிரமும் காட்டாமல் சாவகாசமாக செயல்படுகிறது,  நடுவில் காமெடியான விசாரணைகள் வேறு!. ஓமர் சாவகாசமாக பிரைவேட் ஜெட் பிடிச்சு , போன் செய்து வெடிக்க வைக்கப்பார்ப்பார் :-))

ஆனால் இயல்பில் உடனே தேசமே ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு ,தீவிரமாகிவிடுவார்கள்.

# நைஜீரியன் ,பேரு அப்பாசி, பணம் பரிமாறப்பட்டிருக்கு அப்போ அவன் தான் ஜிகாதி, டர்ட்டி பார்ம் வெடிக்க வைக்க போறான்னு ரொம்ப தீவிரமான நிலையிலும் "wild guess" செய்துக்கொண்டா இருப்பார்கள்,நாயகி அப்போ சந்தேகம் கேட்பதாக காட்டி சமாளித்தாலும், அப்படி செய்வது புலனாய்வு அமைப்புகளின் சரியான செயல்பாடா? பட்டியலில் இருப்பவர்கள் அத்தனைப்பேரையும் அள்ளிக்கிட்டு வந்து விசாரிக்க வேண்டாமா?

அப்பாசியை "மார்க்" செய்த பின்னரும் அவனை அப்படியே போக விட்டு அவன் செய்வதை எல்லாம் வேடிக்கையா பார்ப்பார்கள்,பார்த்தவுடன் கோழி அமுக்குவதை போல அமுக்கி விசாரிக்க வேண்டாமா? ஒரு வேளை வீட்டுக்குள் போனதும் பாம்மை வெடிக்க செய்திருந்தால் என்ன செய்வார்களோ?

மேலும் மிக முக்கியமான "மாஸ்டர் மைண்ட்" ஓமர் நியூயார்க்கில் இருப்பதை FBI க்கு சொல்லி அலர்ட் செய்திருந்தால் யாரும் தப்பிவிடாமல் கண்காணிக்க இயலும்,ஆனால் அப்படி செய்யாமல் இவர்கள் பாட்டுக்கு அப்பாசியை தேடிக்கொன்டு போய்விடுவார்கள்,உண்மையில் அப்பாசி ஜிகாதி இல்லை எனில் ஓமர் வெடிக்க வைத்துவிட்டு கிளம்பிவிட மாட்டாரா?

இரட்டைக்கோபுர வெடிப்புக்கு பின், ஓசாமா பின் லேடன் வேட்டைக்கு பின் ,ஓமர் ஜாலியாக நியுயார்க் வீதிகளில் SUV ல  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து  சுத்திட்டு ,டர்ட்டி பாம் செட் செய்துவிட்டு ,பிரைவேட் ஜெட் புடிச்சு தப்பிக்கிறார், ஆனால் எந்த பதட்டமும் இல்லாமல் அமெரிக்க அரசு இயந்திரம் செயல்படுகிறது,இப்படிலாமா அசட்டையாக அமெரிக்க உளவுத்துறை செயல்படும், ஆனாலும் ரொம்ப ஓவரா FBI  ஐ ஸ்பூஃப் செய்திருக்கார் லோகநாயகர் :-))


# ஃபாரடே ஷீல்ட்:மைக்ரோ வேவ் ஓவன் என்பது ஒரு இன்வெர்ட் ஃபேரடே கேஜ் வகையாகும், மைக்ரொ வேவ் ஓவனில் இருந்து கதிர்வீச்சு வெளியில் வராமல் தடுக்கவல்லது, ஆனால் உள்ளே செல்வதை 100% தடுக்காது.

மேலும் ஓவன் மூடி இருக்கும் போது தான் ஃபேரடே ஷீல்ட் ஆக செயல்பட முடியும், முழுவதும் மூடிய நிலையிலேயே 100% கதிர்வீச்சை தடுப்பதில்லை என்பதால், பேஸ் மேக்கர் போன்ற கருவிகள் பொருத்தியவர்கள், மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் போது அருகில் செல்லக்கூடாது என அறிவுறுத்தல் உண்டு.பொதுவாக மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் பொழுது ஒரு மீட்டர் தூரம் தள்ளியே இருப்பது உடல் நலத்திற்கு நல்லது என்கிறார்கள்.


அப்படி இருக்கும் போது மைக்ரோ வேவ் ஓவன் மூடியை திறந்த நிலையில் ,டர்ட்டி பாமின் மீது கவிழ்த்துவிட்டு ,அது செல்போன் சிக்னலை தடுக்கிறது ,ஜீனியஸ் என்பதெல்லாம் காதுல பூக்கூடையை வைக்கும் வேலை :-))

நீங்களும் செய்யலாம் ஃபேரடே ஷீல்ட்:

செல்போனை ,அலுமினியம் ஃபாயில் கொண்டு நன்கு சுற்றி வைத்துவிட்டாலே போதும் ,சிக்னல் கிடைக்காது. அலுமினியம் ஃபாயில் எலெக்ட்ரோ மேக்னடிக் சிக்னல்கள் ஊடுருவ அனுமதிக்காது,எதிரொளித்து திருப்பிவிடும்!

ஏற்கனவே சொன்னது போல டர்ட்டி பாம் என்பது அணுகுண்டு அல்ல, அதில் உள்ள வழக்கமான வெடிப்பொருளை வெடிக்காமல் செயலிழக்க செய்ய பாம் ஸ்குவாடாலேயே முடியும் ,என்பதால் FBI  பாம்ஸ்குவாடினை அழைத்து சென்றிருந்தாலே போதும்.

ஆனால் படத்திலோ FBI  என்பது தெண்ட தீவட்டிகளின் கூடாரம் என்பதாக காட்டியிருப்பார்கள் ,அமெரிக்காவில் ரிலீசான படத்தை உண்மையான FBI  காரன் மட்டும்  பார்த்தான் ஃப்ளைட் புடிச்சு வந்து லோகநாயகரை என்க்கவுண்டர் செய்தாலும் செய்யக்கூடும் :-))

# தாலிபான்,FBI.CIA.Raw,டர்ட்டிபாம், சீசியம்,ஆன்காலஜி, என சீரியசாக சொல்லவேண்டிய சப்ஜெக்டினை காமெடியாக தப்பும் ,தவறுமாக சித்தரித்து படம் எடுத்திருப்பதே ஸ்பூஃப் செய்யத்தான் என்பதை  புரிந்துக்கொள்ள உலக அரசியல்,பொது அறிவு தேவை என்பதால் தான் லோகநாயகர் அப்படி சொன்னார் என்பது இப்பொழுது புரிந்து இருக்குமே :-))

# படத்தில் பாராட்ட ஒன்றுமேயில்லையா என நினைக்கலாம், ஆப்கான்,அமெரிக்கா என கொஞ்சம் மாறுப்பட்ட களத்தில் கதையினை காட்டியிருப்பது, ஹாலிவுட்  வார் ஆக்‌ஷன் படங்களை பார்த்தவர்களுக்கு ரொம்ப பழகி இருந்தாலும் மற்றவர்களுக்கு புதுசா தெரிய வாய்ப்புண்டு.

ஹெலிகாப்டர், டாங்க்,துப்பாக்கி ,ராகெட் லாஞ்சர் என காட்டி ஏகப்பட்ட பட்டாசு வெடிக்க நிறைய செலவு செய்திருக்கிறார், அரங்க அமைப்புக்கே நிறைய செலவு செய்து ஓரளவு தத்ரூபமாக காட்டியுள்ளார்.

பல ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் தனி ,தனி ஷாட்களாக எடுத்து இணைத்துள்ளார் ,ஏரியல் வியுவில் காட்டினால் செட் போட்டிருப்பது தெரிந்துவிடும் என தவிர்த்து முடிந்த வரையில் செட்டினை அறிய முடியாமல் ,செட்,பின்னணி லேன்ட் ஸ்கேப், ஹெலிகாப்டர் என தனி லேயர்களை கொண்டு கம்போஸிட்டிங் செய்து இயல்பாக காட்ட முயற்சித்து இருப்பது.

ஆப்கான் காட்சிகள்,லேண்ட் ஸ்கேப் என ஜோர்டான்,பெட்ரா ஆகியப்பகுதிகளில் கொஞ்சமே கொஞ்சம் எடுத்து இணைத்துவிட்டு , முழுக்க அப்பகுதி என நம்ப வைத்தது.

சேகர் கபூர் தவிர அனைவருக்கும் ஒட்டு தாடி வாங்கிக்கொடுத்து, ஓரளவுக்கு இயல்பாக காட்டியிருப்பது, ஒட்டுத்தாடி பசையின் பிடுங்களுக்கும் நடுவில் அனைவரும் இயல்பாக நடித்திருப்பது என சொல்லலாம்.

#இந்த படத்துக்கு இரண்டாம் பாகம் வரும்னு வேற மிறட்டுறார்,சோதனை மேல் சோதனை :-))

இப்போது  மார்க்கப்பந்துக்கள் உபயத்தால் கல்லாக்கட்டிட்டார், அடுத்தப்பாகத்தினை கண்டுக்காம விட்டாலே காணாமல் போயிடும்,செய்வார்களா?
-------------------------------


பிற்சேர்க்கை:

IMDB RATING:

படம் வருமுன்னர் டிடிஎச், பின்னர் மார்க்கப்பந்துக்கள் எதிர்ப்பு,தடை என்ற வகையில் விளம்பரம் அள்ளியது போல இப்பொழுது திடீர் என IMDB RATING வைத்து விளம்பரம் கிளப்ப சில விசிலடிச்சான் குஞ்சுகள் திட்டம் போடுவதாக தெரிகிறது, இந்த IMDB RATING பின்னால் உள்ள சூட்சமத்தினைப்பார்ப்போம்.

# IMDB  இணைய தளத்தில் ,ஒரு மெயில் ஐடி கொடுத்து யார் வேண்டுமானாலும் ஒரு பயனர் கணக்கு துவக்கிக்கொண்டு ,பிடிச்ச படத்துக்கு ஓட்டு குத்தலாம்.

# ஒரு மெயில் ஐடி- ஒரு அக்கவுண்ட்- ஒரு ஓட்டு என IMDB வகுத்துள்ளது, எனவே நிறைய மெயில் ஐடி உருவாக்கி,நிறைய கணக்கு துவக்கி ,நிறைய ஓட்டினை யார் வேண்டுமானாலும் போட முடியும்.

# இதனால் படம் வந்ததும் ,நிறைய ஓட்டுக்கள் விழுந்து எளிதில் முதலிடம் வரும் வாய்ப்புள்ளது.

# சில நாட்களுக்கு பின்னர் புதிய வாக்குகள் வரவில்லை எனில் ,ஆரம்பத்தில் இருந்த ரேட்டிங் குறைய ஆரம்பிக்கும்.

உ.ம்: ஆரம்பத்தில் சுமார் 10,000 வாக்குகளுடன், IMDB RATING -9.5 பெற்று ஒரு படம் முதலிடத்தில் இருக்கலாம்,ஆனால் தொடர்ந்து புதிய வாக்குகள் விழவில்லை எனில் ,ரேட்டிங் 9.5 இல் இருந்து சரிந்து 2,3 எனக்கூட முடியும்.

காரணம் IMDB RATING அமைப்பில்  weighed average ஓட்டிங் என்ற முறையை பயன்ப்படுத்துகிறார்கள்.

#  weighed average ஓட்டு என்பது எப்படி எனில் நீண்ட கால ,மற்றும் ரெகுலர் ஓட்டர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் அனைத்து வாக்குகளும் சமமாக கணக்கிடப்பட்டு ரேட்டிங்க் காட்டுவார்கள், சில நாட்களுக்கு பின்னர்  weighed average ஓட்டுக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய ரேட்டிங்கினை அறிவிப்பார்கள். இதன் மூலம் ஒருப்படம் வெளிவந்ததும் ஆர்வக்கோளாறில் பல கணக்குகள் துவங்கி ஓட்டுப்போட்டவர்களின் ஓட்டுக்களின் மதிப்பு குறைக்கப்படும்.

மேலும் தொடர்ந்து ஓட்டுக்கள் விழுந்துக்கொண்டிருந்தால் மட்டுமே , ரேட்டிங்க் தக்க வைக்கும் வகையில் IMDB RATING இயங்குகிறது.

# ஆல் டைம் பெஸ்ட் மூவிக்களுக்கு இம்முறையுடன், IMDB இணையதள நிர்வாகிகளிடமும் வாக்குகள் பெறப்படும்,அதன் அடிப்படையில் வெயிட்டட் ஆவரேஜ் கணக்கிட்டு ரேட்டிங் கொடுக்கிறார்கள்.

#IMDB RATING முறையில் அனைத்து வாக்குகளும் சம மதிப்பில் இல்லை,எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை வெளியிட மாட்டோம் என IMDB நிர்வாகம் அறிவித்துள்ளது.

எந்திரன் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டதால் அதன் ரேட்டிங்க் தற்சமயம் குறைவாகவே இருக்கும், தற்போது வெளியான படமென்பதால் விஷ்வரூபத்தின் ரேட்டிங் உயர்வாக இருக்கும், இன்னும் சில நாட்கள் போனதும் ,வெயிட்டட் ஆவெரேஜ் முறையில் ரேட்டிங் குறைந்து விடும் :-))

IMDB RATING செயல்படும் முறைப்பற்றி IMDB இணைய தளத்தில் விளக்கங்கள் உள்ளது.

இங்கு காணலாம்:

http://www.imdb.com/help/show_leaf?votestopfaq
---------------------


பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.larouchepub.com/other/1995/2241_golden_crescent.html

http://www.unodc.org/unodc/en/drug-trafficking/index.html

http://www.un.org/apps/news/story.asp?NewsID=39186

http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/heroin/etc/history.html,

விக்கி,கூகிள்,IMDB. இணைய தளங்கள்,நன்றி!
------------------------------

119 comments:

Anonymous said...

ஃபிரேம் பை ஃபிரேம் அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். லோகு வவ்வாலை சயன்ஸ்-ஜியோ பொலிடிகல் கன்சல்டன்டாக வைத்துக் கொண்டால் அடுத்த பாகத்தில் கொஞ்சம் ஓட்டைகள் குறையும் ;-)

இப்ப என் சந்தேகங்கள்-
1. ஓபியம் பாப்பியும் அண்ணாச்சி கடைக் கசகசாவும் ஒன்றா, வேறுவேறா?

2. அது ஏன் குழந்தைகள் 'ஷேம் ஷேம் பாப்பி ஷேம்' என்று பாடுகின்றன? (பப்பி எனப் பலர் பாடுவது தவறான உச்சரிப்பு என்றுதான் உங்களுக்குத் தெரியுமே!)கசகசாவுக்கும் மானம் போவதற்கும் என்ன சம்பந்தம்?!

மற்றபடி ப்ளஸ் பாயிண்டுகளில் சில இடங்களில் வரும் நகைச்சுவை (இன்ட்டென்டட்!)வசனங்களையும் சொல்லலாம். 'அதானே, எங்காத்து அழுக்கு டேப்பை உங்காத்துக் கிச்சன் கத்தரியால வெட்டுனா ஒத்துக்குவேளா?!' - அசல் சதி லீலாவதி, பஞ்சதந்திரம் டைப் டயலாக்!

சரவணன்

Anonymous said...

இரண்டாவது பாகம் வர்ற வரை அவரை விரட்டறதா முடிவு பண்ணியாச்சா வவ்வால்ஜி...-:)

ஒரு குப்பை கொலிவூட் படத்திற்கு நீங்கள் இவ்வளவு மெனெக்கெடல் தேவையா...???

When all is said and done...he is laughing all the way to the bank...

If he is really smart,he won' do the second part...Anonymous said...

வவ்வால்ஜி...

உங்களுக்கு ஐந்து தலைப்புகள் தர்றேன்...ஆராய்ச்சி பண்ண...

1.ஜெ ~ பத்திலிருந்து பத்தாயிரம் கோடி வரை...வரலாறு காணாத வரலாறு.

2.இணையம் வளர்க்கும் தமிழ் (கூகுள்ள தமிழ்னு தேடினா பலான படமா வர்றதால அதுல இறங்கிர்ர்ர்ர்ராதீங்க)

3.ரஜினியும் தமிழர்களும்...

4.ராமதாஸ் முட்டாளா இல்லை பெரியாருக்கே வாத்தியாரா?

5.தமிழன் கண்டுபிடித்த அறிவியல் சாதனங்கள் ~ (Engg கல்லூரிகள் கணக்கில் சேராது)

வவ்வால் said...

சரவணன்,

நன்றி!

லோகநாயகருக்கு ஆலோசனை சொல்ல என்ன தகுதினா "மண்டையில முடி மட்டும் தான் இருக்கணும் ,மூளை இருக்கக்கூடாது" :-))

கள்- தேங்காய்

அதே போல ஓப்பியம் கசகசா- பாப்பி செடியில் உள்ள இளம் காயில் வடியும் பால்.

கசகசா என்பது ஓப்பியம் செடியின் விதை ,அதில் ஓப்பியம் அளவு கம்மியாக இருக்கும்.

ஓபியம் என்பது மார்பைன் என்ற அல்கலாய்ட் அதன் சதவீதம் பொருத்தே போதை,கசகசாவில் மார்பைன் அளவு மிக குறைவு எனவே போதை வராது.

பாப்பி செடியின் "pod" stem ,இல் மார்பைன் உண்டு ,எனவே அதனை அமிலம் வைத்து கறைத்து ஆவியாக்கி ஓபியம் எடுப்பார்கள்,பதிவில் சுருக்கமாக சொல்லி இருக்கிறேனே.

வீட்டில் இருக்கும் கசகசாவில் சுமார் கால்கிலோ அளவுக்கு தண்னீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்தால் லேசா மப்பு வரும்,இதனை பாப்பி டீ என்பார்கள்.பாப்பி பாட் ஒன்றினை போட்டு டீ செய்தால் இன்னும் கிக் ஆக இருக்கும் :-))

ஆனால் இதெல்லாம் அனுபவம் இல்லாமல் செய்யக்கூடாது,சமயத்தில் மார்பைன் அளவுக்கூட இருந்தால் ஓவர் டோஸ் ஆகிவிடும்.

# பாப்பி ஷேம் என சொல்லக்காரணம், முதல் உலகப்போரில் இறந்த வீரர்கள் உடலை சரியாக எடுக்காமல் அங்கேயே போட்டுவிட்டார்கள்,அல்லது அந்ததந்த இடத்திலேயே புதைத்துவிட்டார்கள்,மக்கிய அவர்கள் உடலின் மீது சிவப்பு பாப்பி முளைத்தது அதன் நினைவாக போர்க்கால மருத்துவர் "சிவப்பு பாப்பியை வைத்து கவிதை எழுதினார்,,எனவே இன்றும் இங்கிலாந்து ராணுவத்தினர் ரெட் பாப்பி பூவை போர் நினைவு பொருளாக வைத்துள்ளார்கள்.முன்னால் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்ட பாப்பி அப்பீல் என இயக்கமும் உண்டு.

போர் எதிர்ப்பாளர்கள் ஷேம் ..ஷேம் பாப்பி ஷேம் என போருக்கு எதிராக முழக்கமிட சொல்வார்கள்.

இங்கிலாந்தில் இருந்து நம்ம ஊருக்கு பப்பி ஷேம் ஆக வந்துவிட்டது என நினைக்கிறேன்.

ஸ்காட்லாந்தினரை பாப்பிஸ் என நிக் நேம் வைத்தும் சொல்வார்களாம், ஒரு வேளை அவங்களை கிண்டல் செய்யவோ என்னமோ?

வேறு ஏதேனும் காரணம் இருந்தாலும் சொல்லலாம்.

#//சில இடங்களில் வரும் நகைச்சுவை (இன்ட்டென்டட்!)வசனங்களையும் சொல்லலாம்.//

அதனாலே தானே ஸ்பூஃப் காமெடி படம்னு சொல்லி இருக்கேன்.

-----------

ரெவரி,

வாங்க,நன்றி!

ஹி...ஹி ஒரு மொக்கைப்படத்துக்கு இந்த வேலை எல்லாம் செய்திருக்க வேண்டாம் தான்,ஆனால் சில அல்லக்கைகள் ஆஹா ,உலகத்தரத்தில தமிழில் ஒரு படம்னு இல்லாத கதை எல்லாம் சொன்னதால், மக்கள் அதனை நம்பிடக்கூடாதுனு உண்மைக்கன்டறியும் பதிவாக இதனை செய்தேன்.

# திட்டம் போட்டே தானே இதெல்லாம் செய்திருக்கார், பின்ன சிரிக்காம இருப்பாரா லோகம் ,ஆனால் இன்னொரு பாகம் வரும் எதிர்ப்பு சொன்னா நாட்டை விட்டுப்போய்டுவேன்னு இன்னும் சொல்லிக்கிட்டு இருக்காரே ,என்ன செய்ய?

# புதுசா எடுக்க தேவையில்லை, ஏற்கனவே நிறைய ஷூட் செய்தது இருக்கு,அதையும் பிச்சுப்போட்டு ,வெட்டி ஒட்டி வெளியிடுவார்,அதையும் வாய பொளந்துக்கிட்டு பார்க்க ஒரு கும்பல் இருக்குல்ல :-))
---------

ரெவரி ,ஆய்வு செய்ய தலைப்பு சொல்லுறேன்னு, சங்கூத பார்க்கிறிங்களே, முதல் தலைப்பை நான் தொட்டாலே வெடிச்சிறும் போல இருக்கே, இப்படி என்னை உசுப்பிவிட்டு ஒழிக்க சதி செய்யுறிங்களே,நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் ...அவ்வ்வ் :-((

Riyas said...

வவ்வால், எவ்வளவு பெரிய பதிவு!!

என்னா டீட்டெய்லிங்..உங்களால மட்டும்தான் முடியும் இப்படி குட்!!

சஞ்சய் said...

வவ்வால்,

…உங்க ரெவியூ கூட 2 அல்லது மூன்று பார்ட்டா வெளியிடணும். உலகநாயகன் ஏற்கனவே எடுத்த நாலுமனிநேரப் படத்தைத் தான் இரண்டு பார்ட்டா வெளியிடுகிறார். முதல் பார்ட்டிலேயே முதலீட்டை எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். நல்ல விளம்பரம் (மார்க்கபந்துக்களால்) கிடைத்து இந்தியா முழுக்க சுமாராக போயிருக்கிறது. இரண்டாவது பார்ட்டில் வருவது லாபமாகவே இருக்கும்.

…//திட்டம் போட்டே தானே இதெல்லாம் செய்திருக்கார், பின்ன சிரிக்காம இருப்பாரா லோகம் ,ஆனால் இன்னொரு பாகம் வரும் எதிர்ப்பு சொன்னா நாட்டை விட்டுப்போய்டுவேன்னு இன்னும் சொல்லிக்கிட்டு இருக்காரே ,என்ன செய்ய?//

…எந்தப் பிரச்சனை என்றாலும் நீட்டிமுழக்கி பேசும் உ.நா , இந்த விஷயத்துக்கு மட்டும் ஜெயலலிதாவை எதிர்த்து பேசமுடியாமல் தமிழ்நாட்டின் மீது பழியைப் போட்டுவிட்டது.

…படம் பார்க்கத் துவங்கியபின் எப்போது முடியும் என்றிருந்தது. மனதில் நிற்கும்படியாக காட்சிகள் இல்லை.தொழிற்நுட்பங்களை வைத்து யாராவது உலகத்தரம் என கூறலாம். ஒரு காலத்தில் வெறும் தரமான ஒலி, ஒளிப்பதிவு வைத்துக்கொண்டு கண்டென்ட் இல்லாமல் படம் எடுத்து மணிரத்னம் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார். தற்போது எல்லோரும் அப்படித்தான் படம் எடுக்கிறார்கள். ஆனால் இனி இவர்கள் பருப்பு வேகாது. நம் மக்களுக்கு ஆங்கிலப் பிரச்சனையால் வெளிநாட்டுப்படங்கள் பார்க்காமல் இருந்தார்கள். தற்போது வரும் பல தமிழ் படங்களில் ஆங்கில வசனங்களே 70% உள்ளன. வெளிநாட்டுப்படம் போல உள்ள இதைப் பார்ப்பதற்கு, வெளிநாட்டுப்படத்தையே பார்த்துவிடுவார்கள்.

*** said...
This comment has been removed by the author.
சார்வாகன் said...

சகோ வவ்வால்,
கலக்கல் பதிவு,

படம் மொக்கை என்றாலும் நுட்பமாக கவனித்து விமர்சித்தமைக்கு நன்றி.மார்க்க பந்துக்களின் (எதிர்) ஆதரவினால் மட்டுமே ஓடியது. இல்லாவிட்டால் படம் புரியாமலே இவ்வளவு பேர் பார்க்க மாட்டார்கள்!!.

அமெரிக்கா முழுதும் லாஜிக் சொதப்பல், ஆஃப்கான் முழுதும் டாகுமென்டரி முடியலை!!
**
ஆஃப்கன் ஆக்கிரமிப்பின் காரணம் சரக்கா!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பலரும் எண்ணெய்க் குழாய் போடுரான், நிறைய தாமிரக் கனிமம் இருக்குன்னு ஏகப்பட்ட புரளி. அதுதானே இராணுவ செலவு+ இலாபம் இல்லாமல் அமெரிக்காகாரன் எதுவும் செய்ய மாட்டானே என நம் மனதில் ஒரு கேள்வி இருந்தது . அது தீர்ந்தது.

சரி இப்படி சரக்கு தயார் பண்ணி விக்கிறார்கள், அதையும் அதிகம் மேலை நாட்டினர்தானே அடித்து பாதிப்புக்கு உள்ளாகிறார்.சரக்கு விலை அதிகம் என்பதால் கீழை நாடுகளில் விற்க முடியாது!!!

அமெரிக்கா தனக்குதானே குழி வெட்டுகிறதா?
**

எண்ணெய், ஆயுத வியாபாரம்,விநியோகம் பற்றி விரிவாக ஒரு பதிவு இட வேண்டுகோள்.
நன்றி!!!

? said...

ஏனுங்க தசாவதாரத்தில் லாஜிக்கையும் சையன்ஸையும் லோகம் கொலையாக் கொன்ன பின்னாடியும், நம்மூர் விசிலடிச்சான் குஞ்சுகள் ஹாலிவுட்னு கதறுனதை நம்பி படம் பார்த்து நொந்தா மாதிரி இருக்குது. இப்படி ஒவ்வொரு பதிவரும் எழுதறதை பார்த்தால் படத்தில் லாஜிக்கே இல்லாதது மாதிரி தோணுது. இந்த லட்சணத்துல ஹாலிவுட்டுக்கு போறன்னு கலரு கலர ரீலு விட்டுகிட்டு இருக்கார் லோகம் இதை நம்பி சிலபேர் துள்ளிக்கிட்டு திரியுறாங்க. இப்படி ஏற்கனவே பீலாவுட்டவர் தமிழ்நாட்டின் நெ 1 மசாலா மன்னனான சங்கர். அந்தாளு படத்திலும் துளியும் லாஜிக் இருக்காது. கமல் கடைசியா நடிச்ச ஒழுங்கான படம் அன்பே சிவம். ஆனா அதுவும் சுட்ட சவம் என்பதுதான் சோகம்!


//நியுக்ளியர் ஆன்காலஜி படிக்க அடிப்படையில் மருத்துவம் படித்திருக்க வேண்டும், ஆன்காலஜி நர்ஸ் ஆக இருக்க நர்சிங் பட்டம் படித்திருக்க வேண்டும், விலங்குகளுக்கான ஆன்காலஜி படிப்பும் உள்ளது அதற்கு கால்நடை மருத்துவம் படித்திருக்க வேண்டும்.
ஆனால் படத்தில் நியுக்ளியர் ஆன்காலஜியில் தான் டாக்டர் மருத்துவம் தெரியாது என ,காயத்துக்கு தையல் போடும் காட்சியில் லோகநாயகர் சொல்கிறார் :-))
நியுக்ளியர் பிசிக்ஸ் போன்றவை தான் ஆய்வு மருத்துவப்படிப்பு,ஆன்காலஜிக்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும்.
நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்கிறேன்,யாரேனும் மருத்துவர்கள் சரியா எனக்கூறவும். //

டாக்குடர் விஜய் மாதிரி பெரிய டாக்குடர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும் இல்லை என்னை மாதிரி எழுதப்படிக்க தெரியாத ஆசாமிகளும் டிரை பண்ணலாம என தெரியலவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்ததை சொல்லி வைக்கிறேன்.

நியுக்ளியர் ஆன்காலஜியில் மருத்துவம் செய்ய அதாவது கதிரிக்க புற்றுநோய் மருத்துவம் செய்ய நிச்சயம் மருத்துவ படிப்பு தேவை. ஆனால் கதிரியக்க புற்றுநோய் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற மருத்துவ படிப்பு தேவை இல்லை. ஆனால் நீங்க சொன்னது போலவே மருத்துவ படிப்பு படித்தவரை மட்டுமே நியூக்ளியர் ஆன்காலஜிஸ்ட் என்பார்கள்.மருத்துவ பட்டம் பெற்றவரும் பிஎச்டி படித்தவரும் அநேகமாக ஒரு லேப்பில்தான் ஆணி புடுங்குவார்கள்.

நியுக்ளியர் பிசிக்ஸ்-கதிரியக்க இயற்பியல் இது மருத்துவ துறை இல்லை.

? said...

//ஆஃப்கன் ஆக்கிரமிப்பின் காரணம் சரக்கா!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அமெரிக்கா தனக்குதானே குழி வெட்டுகிறதா?//


சகோ, ஆப்கானில் 60% மேற்பட்ட விவசாயிகள் ஓபியத்தை பயிரிடுவதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள். ஓபிய விவசாயத்தை அழித்தால் இந்த விவசாயி கும்பல் தாலிபான்களை ஆதரிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதினால் ஓபிய விவசாய வயல்களை காப்பாற்றுவதாக ஐநாவிடம் அமெரிக்கா தெரிவிக்கிறது. ஆனால் அங்கு உற்பத்தி ஆகும் ஓபியத்தின் பெரும்பகுதியினை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து எங்க நாட்டை அமெரிக்கா பாழடிக்கிறது என ரஷ்ய என கோல்டு வார் ரக குற்றசாட்டினை ரஷ்யர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அமெரிக்கா அங்கு குந்தியிருக்க மிக முக்கியமான காரணம் என்னவெனில் அமெரிக்க புவியிலர் ஆப்கானில் பல கனிம வளமுள்ள பகுதிகளை கண்டறிந்துள்ளார்கள். இரும்பு, செம்பு கோபால்ட் தங்கம் மற்றும் பல அரிய தனிமங்கள் கிடைக்கும் என நம்புகிறார்கள். குறிப்பாக எலக்ரானிக்ஸ் மற்றும் பாட்டரிகளில் பயன்படும் லித்திய சுரங்கங்கள் அதிக அளவில் தோண்டப்பட வாய்ப்புகள் உள்ளது என அமெரிக்கா கருதியுள்ளது. அவர்கள் வார்த்தையில்.. ஆப்கானை 'Saudi Arabia of lithium' என பென்டகன் வர்ணிக்கிறதாம். எட்டாம் நூற்றாண்டு புத்தகத்தில் அல்லா தோண்டும் டெக்னாலஜி பற்றி ஏதும் கூறாதது அமெரிக்கர்களுக்கு வசதியாகி விட்டது. முமின்களின் தேசங்களில் பூமிகடியில் என்ன இருந்தாலும் அமெரிக்கன் தனக்கே சொந்தமென்கிறான்!

Anonymous said...

விரிவான பதில்களுக்கு நன்றி! பாப்பி அப்பீல், ஸ்காட்களை பாப்பி என அழைப்பது எனப் பல சுவாரசியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஒரு விஷயம் கவனிங்க வாத்யாரே! பதிவின் தலைப்பில் ஒற்றுப் பிழை! உங்கள் பதிவில் போய் ஒற்றுப் பிழையோடு தலைப்பு இருக்கலாமா?!!

சரவணன்

வவ்வால் said...

ரியாஸ்,

வாங்க,நன்றி!
ஏதோ நம்மால் ஆன பொதுச்சேவை!
----------------------
சஞ்சய்,

நன்றி!

ஏற்கனவே எடுத்ததை வைத்தே இன்னொரு முறை கல்லாக்கட்டப்பார்க்கிறார்,இரண்டாம் பாகம் எடுபடாது.

#அம்மையாருக்கு எதிரா வாயத்தொறந்தா வாயிலேயே குத்து விழும்ல :-))

# தொழில்நுட்ப ஜல்லிக்கூட ஒழுங்கா அடிப்பதில்லை,ஆனால் என்ன பீலாவிட்டாலும் நம்மி ஏமாற விசிலடிச்சான் குஞ்சுகள் உள்ள வறையில் என்னக்கவலை?
-----------------
சகோ.சார்வாகன்,

நன்றி!

டாக்குமெண்டரி என்றால் உள்ளதை உள்ளப்படி சொல்ல வேண்டாமா?

சரக்கு தான் முக்கியக்காரணம், உளவு அமைப்புகள் பல நாட்டிலும் ,புரட்சி,போராளிகள் அமைப்பு எனத்தூண்டி விட,பணம்,ஆயுதம் தேவை,அதை எல்லாம் போதைப்பணம் மூலம் செய்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்க இளைஞர்கள்,மேலை நாட்டு இளைஞர்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள்,ஆனால் இது அரசே மதுபான வியாபரம் செய்வது போல,எப்படி இருந்தாலும் யாரோ ஒருத்தன் கடத்தி விக்கப்போறான்,அதை நாமே செய்து காசு எடுக்கலாம் என்ற சித்தாந்தம்.மேலும் மற்ற நாடுகள் பணம் சம்பாதிக்க கூடாது என்பதும் ஒருக்காரணம்.இதில் உளவுத்துறை,அரசியல்வாதிகள் என அனைவருக்கும் லாபத்தில் பங்கும் கிடைக்கும்.

ஆயுதம்,எண்ணெய்ப்பற்றி நிறைய இருக்கு,கடல் அது,இப்போ ஓரளவு தான் தெரியும்,இன்னும் நிறைய வாசிக்க இருக்கு,பின்னர் பதிவாக்குவோம்.
-----------------
நந்தவனம்,

நன்றி!

ஹி...ஹி ரிஸ்க் எடுக்கிறது நமக்கு ரஸ்க் சாப்பிடுறாப்போல,மொக்கைனு தெரிஞ்சேத்தான் பார்த்தேன் :-))

நம்ம ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க,செவப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் ,உலகத்தரம்னு சொன்னா நம்பிடுவாங்க :-))

ஆன்காலஜி படிப்பு பற்றியும் அதான் சொல்லி இருக்கிறேன்,உறுதிப்படுத்தியமைக்கு நன்றி!

# நீங்க சொன்னது போல தாதுக்களும் இருக்கலாம் ,ஆனால் 10 ஆண்டுகளா முகாம் போட்டும் இன்னும் ஒருகிலோ கூட தாதுக்கள் எடுக்கலை.அதெல்லாம் ஒரு ஜெனியுன் ரீசன் இருக்குன்னு காட்ட சொல்வது. இப்போதைக்கு கையில காசு வாயில ஹெராயின் என சூடா வியாபாரம் பார்க்கிறாங்க. ஓபியம் உற்பத்தி பத்தி பார் சார்ட் போட்டுள்ளேனே பார்க்கலையா?

இனிமே வருங்காலத்தில் மினரல்ஸ் வெட்டி எடுக்கலாம்,எடுக்காமலும் போகலாம்,எல்லாம் அரசியல் நிலவரம் பொறுத்தே.
--------------------
சரவணன்,

நன்றி!

ஆன- ஆகு- ஆகிய என்ற பதத்தில் பயன்ப்படுத்தினால் ஒற்று மிகும்.

விளங்காத ரூபம் ஆகியக்கதை என்ற பொருளில் ஆனக்கதைனு எழுதியுள்ளேன்!

குற்றியலுகரம்/யகரம் பின் க,ச,த,ப வந்தால் ஒற்று மிகும்(விதி சரியான்னு இப்போ டவுட்டு அவ்வ்வ்)

என்ன தலைவரே விளக்கம் சரியா சொல்லிட்டனா?
அடடா இப்படி எல்லாம் நம்ம பதிவையே குறு குறுன்னு படிச்சா என்னாவது என் நிலை ?...அவ்வ்வ்!

உண்மைத்தமிழன் said...

என்ன மனுஷன்யா நீரு..?

இந்தப் படத்தோ இவ்ளோ சீரியஸா எடுத்துக்கிட்டு இத்தனை மெனக்கெட்டு பதிவு எழுதியிருக்கீரு..?

அதான் லோகநாயகரே சொல்லிட்டாருல்ல.. இதுவொரு உண்மைச சம்பவங்களின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதைன்னு..!

பேரு மட்டும்தான் உண்மை.. மீதியெல்லாம் டூப்புதானாம்.. அப்புறம் இதுல போய் நாம என்னத்த லாஜிக் பார்க்குறது.. விவரம் தேடுறது..?

காரிகன் said...

வவ்வாலலிடமிருந்து வழக்கம்போல ஒரு அதிரடியான அனாயசமான பதிவு. இந்த படத்தை பார்க்கும் வரையில் இதை பற்றி பேசக்கூடாது என்று இருந்தேன். நேற்றுதான் விஸ்வரூபம் பார்த்தேன். பார்த்ததும் உடலெங்கும் மின்சார அலைகள் அடித்தது. அடடா என்ன ஒரு அருமையான படம் என்று மனது துடித்தது. கமலஹாசன் இந்த படம் புரிய கொஞ்சம் உலக அறிவு வேண்டும் என்று ஒரு பேட்டியில் "தன்னடக்கத்தோடு" சொல்லி இருந்தது ஞாபகம் வந்தது.உண்மையில் உலக அறிவு உள்ளவர்கள் இந்த படத்தை ரசிக்கவோ அல்லது சிலாகிக்கவோ ஒரு தலை முடி (வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை)அளவுக்கு கூட விஷயம் இல்லை.
குழப்பமான திரைக்கதை என்று சொல்வதே அபத்தம் என்று தோன்றுகிறது.வேண்டுமென்றால் அரைவேக்காட்டுத்தனமான என்று சொல்லலாம். ஒரு மிகபெரிய நகரையே குண்டு வைத்து அழிக்க திட்டமிடும் தீவிரவாதி கும்பல் கதையை இதை விட கேலித்தனமாகாவும் முட்டாள்தனமாகாவும் சொல்ல தமிழில் வேறு யாருமே கிடையாது கமலை தவிர. இதற்காகவா இத்தனை உணர்சிகள் பொங்கின? எனக்கு படம் பார்த்ததும் இஸ்லாமியர்கள் மீது அவ்வளவு கோபம் வந்தது. இந்த முஸ்லிம்கள் கொஞ்சம் அமைதியாக இருந்திருந்தால் இந்த படம் வந்த சுவடே தெரியாமல் இன்னொரு ஆளவந்தான் ஹே ராம் நிலைமைக்கு போயிருக்கும். இந்த மட்டித்தனமான படத்துக்கு ஊட்டச்சத்து கொடுத்து இதை ஒரு உலக மகா காவியம் அளவுக்கு மக்களை நினைக்க வைத்து விட்டார்களே என்று இஸ்லாமியர்கள் மீது எனக்கு பயங்கர ஆத்திரம்.
நீங்கள் சொன்னது போலவே தாலிபன்கள் அல் குவைதா பற்றி கமல் அதிகம் சிரமம்படாமல் சி என் என் பிபிசி போன்ற மேற்கத்திய ஊடகங்கள் காட்டிய செய்திகளையும் எக்குத்தப்பான தொழில்நுட்பத்தையும் வைத்து சிறுவர்களுக்கு பூச்சாண்டி காட்டுவது போல இதோ பார் நான் என்ன செய்கிறேன் என்று அகில உலக களத்தில் குதித்து இருக்கிறார். படத்தில் அவர் செய்யும் சேஷ்டைகளும் அதிவீரபாண்டிய சாகசங்களும் பல ஆங்கில படங்கள் பார்த்தவர்களுக்கு ஏதோ டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படம் பார்ப்பது போல இருப்பதை அவர் பாவம் உணரவில்லை போலும்.
மிக சீரியசாக இருக்கவேண்டிய தீவிரவாதிகள் சென்னை தமிழில் கமலை சீண்டுவதும் நடு நடுவே அவாரின் மனைவி பிராமணாள் பாஷையில் ஏதோ பிக்னிக் மனநிலையில் வசனம் பேசுவதும் உலக மகா காமெடி. (இதில் எப் பி ஐ ஆபிசரே எந்த கடவுள் என்று சம்பந்தம் இல்லாமல் கேட்கிறார்) இது என் படம் என்று உணர்ந்த கமல் வழக்கம் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் (அதாவது நியுகிளியர் குண்டை தேடி நடந்து கொண்டிருக்கும்போது)தன் பிராண்ட் நாத்திகத்தை அவிழ்த்து விடுகிறார்.ஓமர் படம் முழுவதும் முக்கால்வாசி தமிழிலேயே பேசுகிறார். இதை கமல் எப்படி சீரியஸாக இது ஒரு திர்ல்லெர் வகையை சேர்ந்தது என்று டீவீகளுக்கு சொன்னார் என்று மண்டை காய்கிறது. அவர்க்கு தெரிந்தது அவ்வளவுதான். வெறும் பத்திரிகை செய்திகளை வைத்துகொண்டு இப்படி ஜல்லியடிப்பது உலகநாயகனுக்கு கை வந்த கலைதான். ஆளவந்தான் படத்தை பார்த்துவிட்டுத்தான் டாரண்டினோ கில் பில் லையே எடுத்தார் என்று சொன்னவர்தானே இவர். ரகுமான் ஆஸ்கார் வாங்கியதும் இளையாராஜா, கமல் இருவருக்கும் நிலை கொள்ளவில்லை என்று தெரிகிறது. முன்னவர் எனக்கு மக்கள் விருதே பெரிது என்று யோகி போல (வேறு வழி ) பேச, கமலோ விட்டேனா பார் என்று அமெரிக்க அரிதாரம் பூசி ருத்திர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறார். ஒரு படத்தில் கவுண்டமணி ஸ்பூனில் சாப்பிட முடியாமல் தவிக்கும் ஒரு தமிழனை பார்த்து சொல்வார்;"தெரிஞ்சத செய்யுங்கடா". இதுவே கமலுக்கும் பொருந்தும்.

சஞ்சய் said...

//ஆளவந்தான் படத்தை பார்த்துவிட்டுத்தான் டாரண்டினோ கில் பில் லையே எடுத்தார் என்று சொன்னவர்தானே இவர்.//

ஆளவந்தான் படத்தில் வரும் அந்த கார்டூன் காட்சியைப் பார்த்து இன்பையர் ஆனதாக டாரண்டினோவே சொன்னார் என ஒரு வட இந்திய பத்திரிகை நிருபர் கூறி இருந்தார்.

காரிகன் said...

"ஆளவந்தான் படத்தில் வரும் அந்த கார்டூன் காட்சியைப் பார்த்து இன்பையர் ஆனதாக டாரண்டினோவே சொன்னார் என ஒரு வட இந்திய பத்திரிகை நிருபர் கூறி இருந்தார்."
என்று கமல் கூறி இருந்தார். பொதுவாக பேய் கதை சொல்பவர்களை நீங்கள் அந்த பேய்களை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் என்னோட சித்தப்பாவோட தம்பி மச்சானோட மூணாவது பெரியப்பா பார்த்திருக்கார் என்று ஊடு கட்டுவார்கள். அதை போலதான் இது.

Anonymous said...

எனக்கு இலக்கண விதிகள் பள்ளியில் படித்து மறந்த்தோடு சரி! ஒற்று மிகும்-மிகா இடங்களை ஒலியமைதி(!)யைக் கொண்டே தீர்மானிக்கிறேன்... அப்படிப் பார்க்கும்போது எனக்கென்னவோ 'ஆன கதை', 'ஆகிய கதை', 'பயன் படுத்தினால்' என்ற பதங்களுக்கு ஒற்று கூடாது என்றே தோன்றுகிறது!! எதற்கும் இலக்கண விதிகளை ரெஃபர் பண்ணிப் பார்க்கிறேன். நன்றி!

சரவணன்

Amudhavan said...

விஸ்வரூபம் பிரச்சினை பெரிதாவதற்கு முன்பிருந்தே அடிப்படை சிக்கல் என்ன என்பதுபற்றி மிகத்தெளிவாக எழுதிவந்தவர் நீங்கள் என்பதனால் படம் வெளிவந்தபிறகு என்ன எழுதப்போகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். அதற்காக ஒரு புத்தகம் போடும் அளவுக்கா எழுதுவார்கள்!
ஆனாலும் எத்தனை விதமான தகவல்களுடன் வந்திருக்கிறீர்கள்.
அடுத்த படம் சில லீட் பகுதிகள் மட்டும் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அவர் தயாராயிருக்கிறாரோ இல்லையோ நீங்கள் தயாராயிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

சார்வாகன் said...

சகோ நந்தவனம்
தகவல்களுக்கு நன்றி!!
//முமின்களின் தேசங்களில் பூமிகடியில் என்ன இருந்தாலும் அமெரிக்கன் தனக்கே சொந்தமென்கிறான்!//

இது சரிதானே சகோ.

1. குரான் உலக முழுமைக்கும் பொது அனைவரும் ஆதமின் மக்கள் உலகில் உள்ள அனைத்துமே அனைவருக்கும் பொதுதானே!!

2. அப்ப்டியென்றால் காஃபிர்கள் அதிகப் பங்கு எடுப்பது ஏன் என மார்க்கப் புரிதல் இல்லாமல் சில சகோகள் கேட்கலாம்.

பாருங்கள் காஃபிர்களுக்கு அவ்வுல‌கம்[ கிளுகிளு சுவனம்] இல்லை.இவ்வுலக்ம் மட்டுமே. ஆகவே இவ்வுலகின் சொத்துக்கள் அனைத்துமே காஃபிர்களுக்கு மட்டுமே!!


42:20. எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.

சுவனம் மூமின்களுக்கு . இதுவே சரியான பங்கீடு ஆகும்!!
பங்கு பிரிப்பது எப்படி?

9:58. (நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.


ஆகவே காஃபிர்களுக்கு அதிக பங்கு நியாயமே!!

நன்றி!!

வவ்வால் said...

அண்ணாச்சி,

வாங்க,நன்றி!

நீண்டக்காலத்திற்கு பின் நம்ம பக்கம் எட்டிப்பார்க்கிறிங்க :-))

இரத்தமும் சதையுமான ,கொஞ்சுண்டு மூளை வேலை செய்யும் மனிதன் ;-))

அண்ணாச்சி ,இந்த நியாயத்தை நீங்களே கேளுங்க,

என்ப்படத்தை புரிந்து கொள்ள உலக அரசியல் அறிவும்,பொது அறிவும் தேவைனு லோகநாயகர் சொன்னது எதுக்கு?

எனக்கு கொஞ்சம் உலக அரசியல்,பொது அறிவுலாம் இருக்கேனு நினைச்சு படத்தை பார்த்தால், லோகநாயகர் சொன்னது எதுவுமேயில்லையே :-))

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான கற்பனை தான் படம் ,ஆனால் அதுக்குனு லாஜிக் இல்லாமல் எடுக்கலாமா,இல்லை ஒரு தலைப்பட்சமா கதையை காட்டலாமா?
மத்தது எல்லாம் விடுங்க,
நியுயார்க்கில் எஃப்பிஐக்கே தெரியாமல் ரா வேலை செய்து ,அமெரிக்காவை ஏன் காப்பாற்ற வேண்டும்?

அவங்க கிட்டே இன்னாரை சந்தேகப்படுகிறோம்னு சொல்லி இருந்தா, தீபக் அலுவலகம்,அவரோட தொடர்பு வச்சுள்ள வேர்ஹவுஸ் ஃபாருக்,அப்படியே ஓமர் வரைக்கும் டெலிபோன் ஒட்டுக்கேட்பு, உளவு என செய்து சீசியம் வெடிக்குண்டு தயாரிக்கும் முன்னரே கண்டுப்பிடிச்சிருக்க மாட்டாங்களா?

கற்பனைக்கதையாக இருந்தாலும் கொஞ்சம் லாஜிக் இருக்க வேண்டாமா?

இது போன்ற கேள்விகள் படம் முழுக்க இருக்கு,அப்படிலாம் கேள்வி எழாதவாறு கதை,திரைக்கதை அமைக்கப்பட்ட படங்களே உலகத்தரமான படம் எனலாம், உள்ளூர் மசாலா இயக்குனர் பேரரசு அளவுக்கு கூட கதை ,திரைக்கதை இல்லை உலகப்படம்னு சொன்னால் எப்பூடி?

பலப்பேர் நேட்டோ படைத்தாக்குதலால் சாக காரணமா இருக்கும் உளவாளி நாயகன், ஒரு ஓப்பியம் வியாபாரி அநியாமாக செத்துட்டான் ,அல்லா மன்னிக்க மாட்டார்னு ஃபீல் செய்வதெல்லாம் ரொம்ப செயற்கையாக இல்லையா?

வார் லார்ட்ஸ் எனப்படும் ஆயுதக்குழுக்களையும், ஓப்பியம் விவசாயத்தையும் அமெரிக்கா ஆதரிப்பதாக ஒரு காட்சியேனும் வைத்திருக்கலாமே , எந்த ஒரு படைப்பும் அதன் மண்ணின் சூழலுக்கு தேவையா எனவும் பார்க்கணும், முற்றிலும் அன்னியமான கதையைக்களத்தினை ,அரைகுறையாக எடுப்பதால் என்ன பயன்?

ஒன்று நேர்மையான உலக அரசியலைப்பேசி இருக்க வேண்டும் இல்லையா முழுமையான கலைப்படைப்பாக உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் இரண்டுமே செய்யாமல் ,கொஞ்சம் துப்பாக்கி,கொஞ்சம் ரத்தம், கிரேசி டைப் வசனங்கள் என ரெண்டுங்கெட்டான் படமா இருக்கே!

இந்த படத்துக்கு டொக்டர் விஜயின் துப்பாக்கி 100 மடங்கு மேல் :-))
------------------------

காரிகன்,

நன்றி!

நீங்க சொன்னதே தான் ,படம் சரியான ஆஃப்பாயில் அதுவும் கூமுட்டையில் போட்டது :-))

கெக்கேபிக்கேனு சீரியசான சூழலிலும் வசனங்கள்,ஆஃப்கான் போனதும், ஓமர் என்னமோ டூரிஸ்ட் கைட் போல எல்லாம் காட்டி விளக்குறது, புதுசா வந்தவரை நீ என்ட தளபதி ரேஞ்சில் கொண்டாடுவது என்ன கத்துக்குட்டி தனமான படமாக்கல் :-))

மார்க்கப்பந்துக்களுக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறார் லோகநாயகர், நன்றி சொல்ல அண்டா அண்டாவ பிரியாணி செஞ்சிப்போடணும் :-))
----------

சஞ்சய்,

ஆளவந்தான் படம்ம் பார்த்து இன்ஸ்பையர் ஆனதென்று சொன்னது எந்த அளவுக்கு உண்மை என தெரியாது ,ஆனால் ஆளவந்தானில் வந்த காட்சியே ஜப்பானிய மங்கா சீரிசிஸ் படத்தில் இருந்து சுட்டது.
----------------
சரவணன்,

எனக்கும் ஒற்று எழுத்து எங்கே போடுவது எனக்குழப்பம் தான், சொல்லிப்பார்த்து ஒலி ஓசைக்கு ஏற்ப போட்டுக்கொள்வது. இல்லைனா தெரிஞ்ச விதிகளை ஒப்பிட்டுக்கொள்வது.

நாவினு ஒரு தளத்தில் , சொற்களை இட்டு சரிப்பார்க்கலாம், அதில் நான் சொன்னது போல ஆன என்பது ஆகு,ஆகிய எனப்பயன் படுத்தினால் ஒற்றுமிகும் என இருக்கு, இன்னும் சில இடங்களில் ஒற்று தேவையில்லை எனவும் காட்டுது.

என்ன பொருளில் பயன்படுத்திகிறோம் என்பதை பொறுத்து ,ஆனக்கதை, ஆன கதை என எழுதலாம்.

http://tamilpoint.blogspot.in/p/naavi.html
-----------------------

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

//விஸ்வரூபம் பிரச்சினை பெரிதாவதற்கு முன்பிருந்தே அடிப்படை சிக்கல் என்ன என்பதுபற்றி மிகத்தெளிவாக எழுதிவந்தவர் நீங்கள் என்பதனால் படம் வெளிவந்தபிறகு என்ன எழுதப்போகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். அதற்காக ஒரு புத்தகம் போடும் அளவுக்கா எழுதுவார்கள்!//

ஆரம்பத்தில இருந்தே பதிவுகளை கவனிச்சிட்டு வரிங்களா,நன்றி!

பிரச்சினைகளை அதன் உண்மையின் அடிப்படையில் அனுகியதால் ,நடக்க வாய்ப்பிருப்பதையே சொன்னேன்.

இந்தப்பதிவிலேயே நிறைய சொல்ல முடியலை, ஆஃப்கான்,சோவியத், அமெரிக்கா வரலாற்றை படிச்சா தலை சுத்தும், ஒரு நேரம் இவங்க சரி, இன்னொரு நேரம் அவங்க சரினு தோன்ற வைக்கும், அப்படித்தான் எழுதி வச்சு இருக்காங்க :-))

ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக அமெரிக்க மண்ணில் பெரிய போர் என்பதேயில்லை(பியர்ல் ஹார்பர் தவிர) ஆனால் அமெரிக்க ராணுவம் தான் உலகமெங்கும் வேலை செய்துக்கிட்டு இருக்கு. வல்லரசாக காட்டிக்கொள்ள அமெரிக்க மக்களையும்,உலக மக்களையுமே அமெரிக்க அரசியல்வாதிகள் பகடைக்காய்கள் ஆக்கிக்கொண்டுள்ளனர்.

இதனால் பயனடைவது ஆயுத வியாபாரிகள்,எண்ணெய் நிறுவனங்கள், பெரும் நிறுவனங்கள்,பங்கு சந்தை தரகர்கள் மட்டுமே.

# கொஞ்சம் லீட் மட்டும் எடுத்து வைத்திருக்கலாம், ஆனால் புதுசா கதையை மாத்துவாரா இதே புளிச்சதோசை மாவில் ஆணியன் ஊத்தாப்பம் போடுவாரானு தெரியலை, ஆனால் வந்தால் பார்க்கமலா போயிடப்போறோம், பார்ப்போம் :-))
--------------

சார்வாகன்,

மார்க்க குருவாகவே ஆகிட்டிங்க போல, எல்லாத்துக்கும் ஒரு ஹதித் எடுத்துப்போடுறிங்களே, இனிமே உலமா சார்வாகன்னு தான் சொல்லணும் போல :-))

காபீர்களுக்கு அதிக பங்கு கொடுத்தாலும் ,வெள்ளைத்தோலும் ,ஆங்கிலமும் பேசும் காபிராக இருக்கணும்னு அரேபிய கொள்கையாச்சே :-))

Anonymous said...

என்ன இருந்தாலும் அமெரிக்கா போதை வியாபாரம் அளவுக்கு இறங்குமான்னு நம்ப முடியலை! என் பொதுப்புத்தி சார்ந்த புரிதல், அமெரிக்கா எதை வேணாலும் ஒத்துக்கும், ஆனா சரக்கு விக்கிறதை மட்டும் பொறுத்துக்காதுங்கிறதுதான்! உலக போதை வஸ்து வியாபாரிகளின் முதுகை முறிக்கும் என்பதுதான்! ஆனாலும் ஆப்கானிஸ்தானைப் பெருமளவுக்குக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிறகும் ஓபியம் பயிர் பண்றதை ஒன்னும் செய்யலைங்கிறது உண்மைதான். ஆனாலும் சோவியத் சரிவுக்கு அப்புறம் அமெரிக்கா இந்த குட்டிநாடுகளில் புரட்சிக் குழுக்களை வளர்த்துவிடுவது மாதிரியான டர்ட்டி பாலிடிக்ஸை கொஞ்சம் கைவிட்டுவிட்டதுதானே, கொஞ்சம் திருந்தியிருக்கும்னுதான் தோணுது! 'வி ஆர் ப்ரௌட் ஆஃப் யூ சாஷா... அன்ட் எஸ், யூ ஆர் கோயிங் டு ஸ்கூல் டுமாரோ!' என்று வெற்றி விழாவில் பேசுகிற, ரெண்டு சின்னப் பொண்ணுகளுக்குத் தகப்பனான ஒபாமா அதெல்லாம் அனுமதிப்பாரான்னு என் மிடில் கிளாஸ் பொதுப்புத்தி எதிர்ப்புக் காட்டுது தல!

சரவணன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வவ்வால் சார் மிகப் பெரிய பதிவு ஏராளமான தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்.நான் கொஞ்சம் ஸ்லோ லேர்னர். இன்னும் இரண்டு தடவை படிக்கணும்.

ராஜ நடராஜன் said...

திருஷ்டி பொட்டு வைக்க நான் தான் வரணும் போல:)

வவ்வால் said...

சரவணன்,

நாட்டுக்கு சேவை செய்ய என்றே அவதரித்து இருக்கும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே நம்புகிறவர் என்றால்,நீங்கள் சொன்னது சரியே :-))

இங்கே பல சுட்டிகள் போட்டுள்ளேன் அவற்றில் இருப்பதும்,இன்னும் சில நூல்களில் பேசப்பட்டவற்ரையே நான் சொல்லி இருக்கிறேன், எதுவும் எனது கண்டுப்பிடிப்பல்ல, தமிழுக்கு அவற்றை கொண்டு வந்தது மட்டுமே என் வேலை.

10 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான்களை விரட்டிய அமெரிக்க படைகள் கைவசம் இருக்கும் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்னரை விட ஓபியம் அதிகம் உற்பத்தி ஆக காரணம் என்ன?

பார் சார்ட் ஒன்றினையும் போட்டுள்ளேன், ஐக்கியநாடுகள் சபையும் ,யார்க்காரணம் என சொல்லாமல் 2001க்கு பிறகு ஓபியம் உற்பத்தி பல மடங்கு ஆப்கானில் அதிகமாகிவிட்டது என சொல்லி இருக்கிறது!

அப்படி எனில் ஆப்கானில் நேட்டொ படைகளின் கட்டுப்பாடு இல்லை அல்லது நேட்டோ படைகளின் ஆதரவுடன் ஓப்பியம் விளைகிறது, இரண்டில் ஒன்று மட்டுமே சரி :-))
---------------
முரளி சார்,

நன்றி!

என்ன ஒரு தன்னடக்கம், நிறைய தட்டச்சு செய்ய சோம்பல் காரணமாக விட்டுவீட்டேன், அதுக்கே பெருசா இருக்குனா எப்பூடி?

பொறுமையா படிங்க, எல்லாம் இணையத்தில் இருப்பதே,தமிழாக்கம் மட்டுமே அடியேன்!
------------------

ராச நட,

வாரும் ,நன்றி!

சாந்துப்பொட்டு சந்தனப்பொட்டு ... எடுத்து வச்சிக்கவா ... :-))

என்னடா காமெடியே இல்லாமல் வறட்சியா போகுதேனு நினைச்சேன் ,வந்துட்டேள் ,வாரும் வாரும் ,இனிமே தான் காமெடி சூப்பரா போகும் :-))

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு உலக ஞானம் இருக்குதுன்னு லோகநாயகருக்கு காட்ட வேண்டியா இந்த பதிவு:)

இனிப்பு தடவி கொடுத்த பேதி மருந்துக்கே தமிழகத்தில் இவ்வளவு ரகளைன்னா உண்மைகளை அப்படியே சொன்னா படம் சென்சார் போர்டைக்கூட தாண்டி வந்திருக்காது.படத்தில் நிறைய ஓட்டைகள் இல்லாமலில்லை.பந்துக்கள் கண்டுக்காமல் விட்டிருந்தால் எங்கே ஆரோ சவுண்டுன்னு மட்டுமே படம் பார்த்தவர்கள் தேடியிருப்பார்கள்.

ஒற்றை வரியில் படம் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் பற்றி பேசுகிறது.பெண்களுக்கான அடக்கு முறையையும்,கல்வியறிவை தலிபான்கள் வெறுப்பதையும்,கலாச்சார கேளிக்கைகளை மறுப்பதைப் பற்றி பேசுகிறது.

முந்தைய பரதநாட்டிய கதை நகர்த்தல்,பிந்தைய அமெரிக்க ரீல்களைத் தவிர்த்து இடைப்பட்ட ஆப்கானிஸ்தான் காட்சிகளின் உண்மைகள் இன்னும் உறங்கிக் கிடக்கின்றன.படத்தின் அரேபிய வசனங்கள் முக்கியமாக நாசர் உச்சரிக்கும் விதமும் சொற்பிரயோகங்களும் உண்மையானவை.அரேபிய வசன கலப்பு ஏதோ ஒரு விதத்தில் அரேபியர்களை பாதிக்கவும் கூடும்.

டாகுமென்டரியாக உங்களுக்குப் படம் வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தானிய பயிற்சி முகாம்களுக்கான காட்சிகள் ரா விடமோ அல்லது உயிரையும் பணயம் வைத்து சுதந்திரமாக டாகுமெண்டரி தயாரிக்கும் மேற்கத்தியவர்களிடமும்,டாகுமென்டரிகளுக்கான சிறந்த பட பரிசுகளை தட்டிச்சென்ற படங்களை நோக்கி செல்லவேண்டும்.

ஆப்கானிஸ்தானியர்கள் பஷ்தூன்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பஷ்தூன்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.ஆனல் வட ஆப்கானிஸ்தான்காரர்கள் பஷ்தூன் இனத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்பவர்களோடு கணபர் கால்வாய் வழியாக வந்த அரேபிய இனக்கலப்புக்கும் முன்பு ஆர்ய,இஸ்ரேலிய வம்சாவழி கொண்டவர்கள்.

தற்போதைய ஆப்கான் வரலாற்றை 1959களிலிருந்து முகமது ஜாகிர் ஷாவின் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஐஸ்னோவர் பின் 1960ல் குருசேவ் வருகையும் அதன்பின் பிரஷ்னேவ் காலத்து ஆப்கான் ஆக்கிரமிப்பும் கம்யூனிசத்திற்கு எதிரான அமெரிக்க பண,ஆயுத உதவி என பாகிஸ்தான் ஜியா உல் ஹக் மூலமாக ஆப்கானிலிருந்து இடம் பெயர்ந்து ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் கேம்புகளில் தலிபான்கள் உருவாகுவதில் துவங்குகிறது.

ரஷ்யாவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் அமெரிக்க பண ஆயுத உதவியோடு சவுதி அரேபியாவின் பண,முஜாஹிதீன்கள் ஆட்களாக அரேபியர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.இப்படி ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட அரேபிய குழுக்களில் ஒசாமா பின் லேடனும் ஒருவர்ன்னு கதை சொல்லணும்:)

ஒபியம் வளர்க்கிறதையெல்லாம் நல்ல வடிவா கதைச்சிட்டு அகமத் ஷா மசூத் பற்றியும் அமெரிக்க இரட்டைக் கோபுரம் வெடிக்கறதுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அகமத் ஷாவை கொன்றது ஒரு முக்கிய நிகழ்வு என்பது பற்றியெல்லாம் உலக ஞானம் மறந்துடுச்சு:)

சோவியத் தோல்விக்குப் பின் குழு குழுவாய் உள் சண்டைகள் ஒற்றைக்கண் ஒமரின் தலிபான்களின் ஆட்சிக்கு வந்ததுதான் ஆப்கானிஸ்தானின் இப்போதைய ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலைக்கு காரணம் எனலாம்.பேர்ல் ஹார்பரும் கூட அமெரிக்க காலனித்துவத்தின் அமெரிக்க வல்லமையை ஆட்டிப்படைத்த ஒன்று.ஆனால் அமெரிக்க மண்ணில் அமெரிக்க கேபிடலிசத்துக்கு விடப்பட்ட சவால் இரட்டைக் கோபுர தகர்ப்பு.

சி.என்.என்,பி.பி,சி.அல்ஜசிராவுக்கும் அப்பால் PBS தொடுப்பெல்லாம் கொடுக்குறீங்க. இன்னும் கொஞ்சம் காலை அகல விட்டால் விஸ்வரூபத்துக்கான உண்மைக் கதை தெரியும்.நான் சொன்னால் புளிக்குதும்பீங்க!எதுக்கு வம்பு:)

ஒவ்வொரு நாட்டின் மண்ணின் கலாச்சாரங்களை ஒட்டியே மதமும் கூட.இதனைத்தான் மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சி நேரலையில் சொன்னார்.பாரதிராஜா தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்.இல்லாத ஊருக்கு இழுப்பைப் பூ சர்க்கரையாக கமல் வித்தியாசமாக முயற்சி செய்யப்பார்க்கிறார்.ஆனால் மனுஷ்யபுத்திரனை,பாரதிராஜாவை,கமல் மீதான தனிப்பட்ட தாக்குதல் மதவாதங்களையெல்லாம் பின் தள்ளி விஸ்வரூபம் மட்டுமே இங்கே விமர்சனப்பொருள்.

கட்டப்பஞ்சாயத்து செய்யறதுதான் நல்லது என ரஜனி சொல்வது யதார்த்தமான வழி முறையாக இருக்கலாம்.தமிழக ஆட்சி பீடமே கட்டப்பஞ்சாயத்து மாதிரிதான் நடந்து கொண்டது.இதில் கமல் தனது பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றம் தவிர்த்து சமரசம் செய்து கொண்டார்.இன்னும் சொல்லப்போனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் ஆட்சி பீடம்,மத எதிர்ப்பாளர்கள்,கமல் என பிரச்சினை முடிவுக்கு வந்தால் போதுமென்றே நினைத்தார்கள் என்பது சமரச கால கட்டத்தில் உணரமுடிந்தது.இது வரை தமிழகத்தை அரசியல்,திரையுலகம் என இரண்டு நிலையிலிருந்து மத எதிர்ப்பு என இஸ்லாமிய,இந்து அமைப்புக்கள் குரல் எழுப்புவது ஒரு மோசமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்.

இன்றைக்கு பொட்டி தட்டும் வசதியிருப்பதால் ஆங்கிலப் படங்களே அலசப்படும் போது விஸ்வரூபத்தின் ஓட்டைகளையும் விமர்சிப்பது ஆரோக்கியமான ஒன்றா அல்லது வித்தியாசமாக முயற்சி செய்பவனின் காலை இழுத்து விடும் தமிழ் நண்டுக்கதையா என்று இரு விதத்தில் விவாதிக்க முடியும்.ராஜ நடராஜன் said...

காமெடியா?உங்க விஸ்வரூப பதிவுக்கு வில்லனே நாந்தான்:)

இருக்குறதுக பின்னூட்டம் போடறதைத்தான் பார்க்கிறேனே!அவுக அவுக கடைல நீட்டி முழக்குறது.இங்கே வந்தால் வவ்வாலுக்கு பயந்துகிட்டு பம்மிகிட்டு அடடா!எப்படிங்க இப்படியெல்லாம்ன்னு பக்க வாத்தியம் வாசிக்கிறது.

படம் பார்த்தேனோ இல்லையோ ஆப்கானிஸ்தானை ஒரு ரவுண்டு விட்டுட்டு இருக்கேன்.

என்னாது? விஸ்வரூபம் படத்தை வெளியிட முல்லா ஒமர்கிட்ட அனுமதி வாங்கனுமா:)அந்தாளு இருக்கிறாரோ இல்ல டோராபொரா குகையில அமெரிக்கா விட்ட ராக்கெட்டுல அம்போன்னு போயிட்டாரோ யாருக்கு தெரியும்?

படம்தான் உண்மை கலந்த கற்பனைக் கதைன்னு சொல்லியாச்சே!

சார்லஸ் said...

மாறுபட்ட பார்வை வேறுபட்ட கோணம் என்று உங்கள் வலைத்தளத் தலைப்பிலேயே ஒரு உண்மையை சொல்லி விட்டீர்கள் . அதனால் நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பது புரிகிறது . உங்களின் எல்லா விளக்கமும் நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை . இதில் படத்தைப் பற்றிய உங்கள் பார்வை நகைச்சுவையாக உள்ளது .
திரைப்படம் எல்லா உண்மையையும் அப்பட்டமாக என்றுமே சொல்லாது. ஏனென்றால் தணிக்கை குழுவில் அது செல்லாது . கலை வடிவம் கலைக் கண்ணோடு பார்க்கப்பட வேண்டும் . நீங்கள் கொலைக் கண்ணோடு பார்ப்பீர்கள் போல் இருக்கிறது . குதறி எடுத்து விட்டீர்கள் .

2006 ல் சுனாமி வந்தது . இந்த வார்த்தையை கமல் அவர்கள் 'அன்பே சிவம்' படத்தில் முன்னரே சொல்லி இருப்பார் . நமக்கு அந்த வார்த்தையே பின்னர்தான் கேள்விப்பட்டோம் . சீரியல் கில்லர்கள் பற்றியும் அவர்கள் கைது பற்றியும் செய்தி படித்தோம் . அதற்கு முன்னரே 'வேட்டையாடு விளையாடு ' படத்தில் அதே கதாபாத்திரங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கும் . swine flu பரவிய செய்தி படிக்கும் முன்னரே
தசாவதாரம் படத்தில் அது சொல்லப்பட்டிருக்கும் .

இப்படி பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே கலை வழியே சொல்லியதால்தான் அவரை 'கலைஞானி' என்று சொல்கிறோம் . அமெரிக்காவிற்கு இதைப் போல ஒரு வேளை நடந்தால் ....? நடந்தால் புரிய வரும் . அவர் படம் பார்க்க கொஞ்சம் ஞானம் வேண்டும் . எல்லோரும் புரிந்து கொள்ள முடியாது . கமல் எதையும் முழுமையாக கற்றுக் கொண்ட பிறகுதான் செயலில் இறங்குவார் . உங்களை விட அதிகமாக இந்த செய்திகளை படித்த பின்னர்தான் இந்த படம் உருவாகி இருக்கும் . ஏன்னா ..அவர் ஞானி ...கலை ஞானி .


வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

என்ப்பதிவை லோகநாயகரா படிக்கிறார்,லோகத்து மக்கள் தான் படிக்கிறாங்கோ,அவங்களுக்கு தெரிஞ்சா போறும் ஓய் :-))

ஆரோ சவுண்டை ஆதிக்காலத்தில இருந்தே எங்கேனு நான் தேடியாச்சே :-))

#//ஒற்றை வரியில் படம் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் பற்றி பேசுகிறது.பெண்களுக்கான அடக்கு முறையையும்,கல்வியறிவை தலிபான்கள் வெறுப்பதையும்,கலாச்சார கேளிக்கைகளை மறுப்பதைப் பற்றி பேசுகிறது.//

கூட ஒரு கால்வரியில் அமெரிக்காவின் சுயநலத்தையும் கோடிட்டு காட்டியிருந்தால் ஒன்றும் குடி முழுகி போயிருக்காது, காட்சியாக இல்லை எனினும், ஒரு வசம் ...மூச் ,அப்படிலாம் காட்டினால் எங்கே அமெரிக்க சினிமா முதலாளிகள் பார்க்காம போயிடுவாங்களோனு அச்சம் போல :-))

தாலிபான்களின் அடக்குமுறையை தமிழக மக்கள் தெரிந்து கொண்டால் ,நல்ல வேளை நாம் அங்கே பொறக்கவில்லைனு ,தமிழ்நாடு ஒரு சொர்க்கம் என மகிழ்வார்கள் என்ற நல்லெண்ணத்தில் லோகநாயகர் படம் எடுத்திருக்காருனு ,உங்களுக்கு மட்டும் எப்படி புரிந்ததோ :-))

தமிழ்நாட்டில் பாப்பாரப்பட்டி,கீரிப்பட்டினு ஆரம்பிச்சு ஆயிரம் உள்ளூர் தலிபானிசம் இருக்கு, ஈழத்தில் ஒரு நவீன நாஜிக்கும்பல் வெறியாட்டம் போட்டிருக்கு, தம்மிழ்நாடு முழுக்க மின்வெட்டால் ,சிறு தொழில்,விவசாயிகள் ,பொதுமக்கள் என செத்து சுண்ணாம்பாகிட்டாங்க ,அதைப்பற்றியெல்லாம் எந்த சினிமாக்காரன் கவலைப்பட்டான்?

எனது டிடிஎச் ஒளிப்பரப்பின் போது சிலர் தமிழகம் முழுவதும் மின் துண்டிப்பு செய்யப்போவதாக மிரட்டினார்கள் என கமிஷ்ணரிடம் புகார் கொடுத்தார் லோகநாயகர் , ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் 16-18 மணி நேர மின் வெட்டினை தெரியாது போல :-))

ஒரு வேளை அந்த மின் வெட்டை தான் அப்படி சொல்லி புகார் கொடுத்தாரா? அப்படினால் மின் துண்டிப்பு செய்வதாக முதல்வர் மீதே புகார் கொடுத்தாரா :-))

ஹி...ஹி அதான் தடைனு குண்டுப்போட்டாங்க போல :-))

# ஜியா உல்ஹக்,ஐ.எஸ்.ஐ தொடர்பில் போதை சாம்ராஜ்யம் செழித்தது ,பெரும் பணம் ஜியா அக்கவுண்டுக்கு போனதெல்லாம் படிச்சேன், இந்தப்படத்துக்கு இந்த டீடெயிலே போதும்னு விட்டாச்சு.

நான் இப்பதிவில் சொன்னது கொஞ்சம் தான் சொல்லாது விட்டவை அதிகம், வீணா வந்து மாட்டிக்காதிங்க சொல்லிட்டேன்,அப்புறம் படத்தோட ஓவ்வொரு டயலாக், ஒவ்வொரு காட்சி வாரியா பிரிச்சு மேஞ்சிடுவேன் :-))

# ஒசாமா அமெரிக்காவிற்கு எதிரியாக ஆகும் வரையில் ஆஃப்கானுக்கு போகவில்லை சிரியாவில் இருந்தார், அமெரிக்காவுடன் முட்டிக்கொண்ட பின்னரே ஆஃப்கான் சென்று தலிபான்கள் பாதுகாப்பில் தங்கினார், ஏன் எனில் அதற்கு கொஞ்ச காலம் முன்னர் வரை தலிபான்களும் அமெரிக்காவின் உதவிகளைப்பெற்றவர்களே.

அமெரிக்கா பல குழுக்களையும் ஆதரித்து, உதவிகள் செய்தது ,ஆனால் பின்னாளில் அவர்களே எதிராக திரும்பும் போது தான் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.

#//சோவியத் தோல்விக்குப் பின் குழு குழுவாய் உள் சண்டைகள் ஒற்றைக்கண் ஒமரின் தலிபான்களின் ஆட்சிக்கு வந்ததுதான் ஆப்கானிஸ்தானின் இப்போதைய ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலைக்கு காரணம்//

உலகத்து நாயம் எல்லாம் பேசுங்க, சோவியத் வெளியேறிய பின் ஷேக் நஜிமுல்லா ஷா ,,தலைமையில் அமெரிக்கா ஆட்சியை அமைத்து சில ஆண்டுகள் ஓடிப்போச்சு, அப்போ ஓமர் போரில் பட்ட காயத்தினாலும், போர் வேண்டாம்னு ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லையில் ஒரு மதாரசாவில் முல்லாவாகிட்டார்னு விவரம் சொல்லியிருக்கேன் ,அதெல்லாம் பார்க்காதிங்க.

தொடர்ந்து அமெரிக்கா ஆஃப்கானில் குழப்பம் செய்து, போதை மருந்து வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தியது எனலாம். சோவியத் காலத்தினை விட அமெரிக்க ஆதரவு காலத்தில் ஆஃப்கன் நிலவரம் மோசமான பின்னரே தலிபான்கள் உருவானார்கள் என்பது வரலாறு. சோவியத்துக்கு எதிரான காலத்தில் எல்லாமே முஜாகிதின் என்ற பெயரில் தான் இயங்கினார்கள்.

இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு முன்னரே அமெரிக்கா ஆஃப்கானில் குழப்படி செய்துவிட்டது ,அதன் பின் விளைவே இரட்டை கோபுர தாக்குதல். நீங்க சொல்றதப்பார்த்தால் அமெரிக்காவை சீண்டியதால் தான் ஆஃப்கானுக்கு படைகளை அனுப்பியது என்பது போல இருக்கே?

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க, 2001 க்கு பிறகு ஆஃப்கானில் ஓபியம் விளைச்சல் பல மடங்கு அதிகமாகி இருக்கு, இதற்கு யார்க்காரணம்?
-------

வவ்வால் said...

தொடர்ச்சி...

# படத்தை போட்டுக்காட்டியதே தவறான முன்னுதாரணம்னு எனது பதிவில் முன்னரே சொன்னேன் ,அப்போ ஒரு வியாக்கியானம் நீங்க சொன்னிங்க :-))

நான் சொல்லி ரொம்ப நாளான பின்னர் ,அதே போல ஒரு செய்தி தினமலரில் கூட வந்திருக்கு, லோகநாயகரால் எல்லாப்படங்களுக்கும் சிக்கல் வந்துவிட்டதுனு,இப்போ தயாரிப்பளர்கள் பலரும் அதிருப்தியில் இருக்காங்களாம்.

நான் எப்பவும் முன் கூட்டியே கணித்து சொல்கிறேன்,அதை புரிந்துக்கொள்ளும் சக்தி உமக்கு இல்லை :-))

#//உங்க விஸ்வரூப பதிவுக்கு வில்லனே நாந்தான்:)//

அது ரொம்ப கஷ்டம் ஏன்னா நானே ஒரு வில்லாதி வில்லன் ,yes I am a villain ,I am a Hero :-))

நிறைய நல்லதும் சொல்வேன், கெட்டதும் சொல்வேன் ,ஆனால் அந்த கெட்டது எல்லாம் கெட்டவைகளுக்கு எதிராக :-))

#//அவுக அவுக கடைல நீட்டி முழக்குறது.இங்கே வந்தால் வவ்வாலுக்கு பயந்துகிட்டு பம்மிகிட்டு அடடா!எப்படிங்க இப்படியெல்லாம்ன்னு பக்க வாத்தியம் வாசிக்கிறது.//

அவுக எல்லாம் பச்ச புள்ளைக என்ன பாத்து பயப்பட, என்ப்பதிவில் இருக்கும் நேர்மை, உண்மை,உழைப்பு (இன்னும் என்னனென்ன இருக்கோ போட்டுக்குங்க)இதைப்பார்த்து தான் அப்படி சொல்லுறாங்க, எதையும் தரவுகள் இன்றி குன்சா கதை விடுவதில்லை அடியேன்.

உமக்கு லோகநாயகருக்கு காவடி தூக்கியே பழகிடுச்சு ,அதே போல எல்லாரும் இருப்பாங்களா என்ன?

//விஸ்வரூபம் படத்தை வெளியிட முல்லா ஒமர்கிட்ட அனுமதி வாங்கனுமா:)அந்தாளு இருக்கிறாரோ இல்ல டோராபொரா குகையில அமெரிக்கா விட்ட ராக்கெட்டுல அம்போன்னு போயிட்டாரோ யாருக்கு தெரியும்?//

இதை நீங்க சு.பி.சுவாமிகள் கிட்டே கேட்டா சொல்லுவார், அவரு தான் முல்லா ஓமரின் ஈத் பெருநாள் கடுதாசி எல்லாம் வச்சிருக்கார் :-))

எனவே இந்த ஈத் பெருநாள் வரையில் கடுதாசிப்போட்டுக்கிட்டு ஓமர் தெம்பா இருக்கார்னு சொல்லலாம், ஓபமாவுக்கு நியு இயர் அப்போ கூட சமாதானமா போயிடலாம்னு கடுதாசி போட்டிருக்கார்னு தகவல்கள் இருக்கு.

//படம்தான் உண்மை கலந்த கற்பனைக் கதைன்னு சொல்லியாச்சே!//

சரி அப்படியே இருக்கட்டும், ஏன் அதில கொஞ்சம் அமெரிக்காவின் மொள்ளமாரித்தனத்தையும் சேர்த்து சொல்லி இருக்க கூடாது,எதுக்கு ஒரேயடியாக அமெரிக்காவுக்கு சொம்பு தூக்கணும்,இவரு என்ன அமெரிக்க சிட்டிசனா?

Michael Moore போன்ற அமெரிக்கர்களே தைரியமா அமெரிக்காவை விமர்சித்து படம்/டாக்குமெண்டரி எடுக்கிறாங்க,அப்படி இருக்க ஒரு இந்தியக்கலைஞனுக்கு அப்படி என்ன பயம்?

வவ்வால் said...

சார்லஸ்,

நன்றி!

புது வரவு என நினைக்கிறேன்,வருக!

நான் என்ன பிரஷ்ஷர் குக்கரா விக்குறேன் வாரண்டியோ,கியாரண்டியோ கொடுக்க :-))

விஷ்வரூபம் அளவுக்கு நகைச்சுவையை என்ப்பதிவில் எதிர்ப்பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான் ,ஆனால் கவலைப்படாதிங்க நானும் கொஞ்சம் சுமாரா ஜோக்கெல்லாம் அடிப்பேன் :-))

கலை வடிவம்னு வெறும் வாயால சொன்னா போதுமா ,கலைவடிவில் எடுத்து காட்டியிருக்க வேண்டாமா? உண்மையில் கலைவடிவமா இருந்தா பாராட்டிட்டு போகப்போறேன்,நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை செய்றேன், இருப்பதை பார்த்தேன் ,பார்த்தை எழுதினேன் , அம்ப்புட்டுதேன்!

சுனாமினு வார்த்தையே ஜப்பானிய அகராதியில் அன்பே சிவம் வந்த பிறகு தான் சேர்த்தாங்களாம் :-))

ஸ்வைன் ஃப்ளு,சீரியல் கில்லர் எல்லாம் ரொம்ப பழசு சார், அப்போ வேட்டையாடு விளையாடு பார்த்துட்டு தான் நாட்டில சீரியல் கில்லர்ஸ் உருவானங்கன்னு சொல்லுறிங்களா, அப்போ இதுக்கே உள்ள புடிச்சு போடனும் :-))

ஜாக் தி ரிப்பர் எல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா? எங்கே கேள்விப்பட சுனாமியே சினிமாவில ஒரே ஒரு செகண்ட் வந்த டயலாக்குக்கு அப்புறமா தான் தெரிஞ்சு இருக்கு :-))

சார்ஸ்,ஆந்த்ராக்ஸ், எல்லாம் கேள்விப்பட்டும் இருக்க மாட்டிங்க, சரி தமிழில் 1992 இல் நாளைய செய்தினு ஒரு படம் வந்துச்சு பிரபு நடிச்சது, ஜி.பி.விஜய்னு ஒருத்தர் இயக்கினார், அப்போவே பயோவார் பத்தி வந்த படம் ,ஒரு பலூனில் விஷவாயு நிரப்பி கூட்டம் நடக்கும் இடத்தில் வெடிக்க வச்சி கொல்வது போல , அந்த விஷ வாயு பலூனை கடல் தண்ணியில் முக்கி யாருக்கும் ஒன்னும் ஆகாம காப்பாத்துவார் ஹீரோ. என்ன எங்கேயோ கேட்டக்கதை போல இருக்கா?

இந்த கதைய தான் லோகம் ,தசவதாரம் ஆக்கினார் :-))

லோகநாயகரை வச்சு கலைஞனு படமும் அதே ஆண்டு ஜிபி.விஜய் எடுத்தார், ஆனால் நாளைய செய்திக்கதை ,ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வேண்டாம்னு சொல்லிட்டதால் தான் கலைஞன் படம் ,அப்புறம் கலைஞன் படமும் சீரியல் சைக்கோ கில்லர் படம் தான் :-))

சார் உங்களுக்கு எல்லாமே சினிமா பார்த்த பிறகு தான் தெரியும் என்பதால் சொன்னேன்,ஆனால் நீங்க எல்லாவற்றிலும் பல ஆண்டுகள் பின்னாடி இருக்கிங்க ,கொஞ்சம் அட்வான்ஸா முன்னேறுங்க :-))

R.Gopi said...

ஹாஹாஹாஹா....

யப்பா வவ்வால்....

கிடைக்கற கேப்புல எல்லாம் லோகநாயகர்க்கு வெள்ளை, ரோஸ் கலர் சுண்ணாம்பு எடுத்து டப்பா டப்பாவா வைக்கறீயளே!!!

ஜூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

selvakumar said...

சகோ ,

நான் இன்னும் படம் .பாக்கவில்லை .......ஆனால் நான் கேள்விப்பட்டவரை ...படத்தை எதிர்பதற்கு படத்துல ஒன்னும் இல்லை ... ஓலகத தரத்தில் இப்படி ஒரு படம் தமிழ் நாட்டில் வந்தது இலை என்றே ...கூறுகிறார்கள் . :)

ஆனாலும் இவ்ளோ பெரிய விமர்சனம் எதிர்பார்கவில்லை ...... எப்படின்னாலும்

லோகம் ரெண்டாவது ரவுண்டு அடிக்க ரெடி .ஆகிவிட்டது ...

நன்றி

ராஜ நடராஜன் said...

வில்லனுக்கு வில்லனா!ஹா ஹா ஹா ஹா ஹா போட்டுகோங்க பி.எஸ்.வீரப்பா சிரிச்ச மாதிரியே இருக்கும்:) ஜெயலலிதாவுக்கு,பந்துக்களுக்கு மற்றும் உங்களுக்கு கமலுக்கெதிரான ஒரு மோட்டிவ் இருக்குது.ஆனா எங்களுக்கென்ன கொடுக்கல் வாங்கலான்னு கமல் எங்களுக்கு எதிரியல்ல என்ற கோட்டில் வந்து நின்று கொள்வீர்கள்.

முன்னாடியே விசிலடிச்சான் குஞ்சுகள் பற்றி சொல்ல நினைச்சு மறந்து போச்சு.பெரும்பாலான கமல் ரசிகர்கள் விசிலடிச்சு தங்கள் ரசனையை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.அப்படியே சிலர் தியேட்டரில் விசிலடிச்சாலும் கூட விசில் ரசனையின் வெளிப்பாடு.கூடவே விசிலடிக்கவும் தெரிஞ்சிருக்கணும்.துருக்கியில் ஒரு கிராமத்து மொழியே விசில்தான்.

கமலின் திரையுலக பங்களிப்பு,கவிதை,பேசும் மொழியோடு இணைந்து செல்வதற்கு அதற்கான சம எண்ண அலைகள் இருக்க வேண்டும்.அதெல்லாம் அசின் ராமர்களுக்கு புரியாது:)

அமெரிக்காவின் சுயநலமெல்லாம் கமலின் படங்களில் ஏற்கனவே பேசப்பட்டு விட்டது.இங்கே கதைக்களம் தலிபான்கள் வில்லாதி வில்லனுக்கும் வில்லன்கள்:) அப்படியிருந்தும் ஜார்ஜ் புஷ் கண்களை துப்பாக்கி கொண்டு துளைத்தாகி விட்டது.இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்? கமல் கம்யூனிசம்,உலக மயமாக்கல் பத்தி பேசுனா மக்கள் தியேட்டரிலேயே படுத்து கொரட்டை விட வேண்டியது.கேபிடலிசம் பத்தி பேசினா நல்லாவே குத்தவில்லைன்னு நீங்க பொரணி பேச வேண்டியது.ஏன் இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் எந்திரன்கிட்டேயும்,இந்திரன்கிட்டேயும் கேட்கறது?

ராஜ நடராஜன் said...

கொஞ்சமாத்தானே சொன்னேன்!அதுக்குள்ள கூகிள் நீ 4000த்தை தாண்டிட்டங்குது.மிச்சத்தை இங்கே ஒட்ட வச்சிடறேன்.

எங்கோ மூலையில் மலையில் பதுங்கி கிடப்பதை சொல்வதற்கே ஆயிரம் நொட்டுச் சொல்.இதுல இலங்கை பற்றியெல்லாம் சொன்னா படம் வெளியாகும்ன்னு நினைக்கிறீங்க?

நம்ம ஊர்ல ரம்ஜான் பிரியாணிக்கே அரசியல்வாதிகள் தொப்பி போட்டா குளிர்ந்து போவதை நினைத்து கமல் தொப்பி போட்டதோடு மசூதியில் தொழுவதையும்,தாடி வச்சிகிட்டதையும் நினைச்சு மார்க்க பந்துகளிடம் பிரியாணி கேட்டிருக்கார் போல:)

கதை ஒரு மத பரமார்த்த குருவும் 23 சீடர்களுமாய் மாறிப்போச்சு::)

ஆப்கானிஸ்தானோட ஒப்பிட்டா தமிழ்நாடு சுவனபுரியேதான்.இதுல சந்தேகம்ன்னு யாராவது மார்க்க பந்துக்கள் நினைச்சா ஆப்கானிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து பார்த்துட்டு வரச்சொல்ல நான் தயார்:)

ஜியா உல்ஹக்,ஐ.எஸ்.ஐ தொடர்பில் போதை சாம்ராஜ்யம் செழித்ததுன்னு சும்மா சொன்னா போதுமா? பம்பாய்,பெங்களூர்ன்னு குண்டு வைப்பதெல்லாம் நவீன யுக்தி. இந்தியாக்காரன் யோசிக்கிறதால்தானே இவ்வளவு கொழுப்பு.நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்னு ஜியா உல் ஹக் ஆப்கானிஸ்தான் கஞ்சாவையெல்லாம் இந்தியாவுக்கு இறக்குமதி செஞ்சதுல ஹிப்பிக டாலர் கொடுத்து வாங்கினது,சாமியார்கள் யோகநிலைக்குப் போனது போக மிச்சம் மீதியெல்லாம் மெட்ராஸ்ல பொட்டிக்கடையிலேயும்,காலேஜ் பசங்க சிகரெட்டுக்குள்ளும் பூந்துகிச்சு:) அதென்ன கர்மமோ ஆப்கான் கஞ்சா செய்யாத வேலையை டாஸ்மாக்கு செஞ்சுட்டது:)


எங்கே கொஞ்சம் டயாலாக்கெல்லாம் உடுங்க பார்ப்போம்! நன்னா மனப்பாடம் செஞ்சேளான்னு பார்க்கிறனே::)

ஷேக் நஜிமுல்லா ஆட்சி அமைச்சது பற்றி மட்டும் சொன்னா போதுமா? சவுதி ஸ்டைலில் நஜிமுல்லாவை ஊருக்கு பொதுவா தலிபான்கள் தொங்க விட்டதையெல்லாம் சொல்றது.

தலிபான்கள் சோவியத் காலத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பார்டர் கேம்ப்களில் துயரமான சூழலில் மதப்பாடங்களை கற்பவர்களாகவே துவங்கினார்கள்.இவர்களை ஐ.எஸ்.ஐ மற்றும் அல்ஹைதா மதத்தால் மூளை சலவை செய்து விட்டார்கள்.

சோவியத் ஆப்கானிஸ்தான் தோல்வியும், சோவியத் பலவாறாக உடைந்த பின் அமெரிக்க சி.ஐ.ஏ இனி முஜாகிதீன்கள் நமக்கு தேவையில்லையென பண,ஆயுத உதவிகளை நிறுத்தின காண்டுலயும்,வகாபியிசத்துக்கு எதிராக அமெரிக்கா இருக்கிறது என்ற காரணத்தால் தலிபானும்,அல்ஹைதாவும் முல்லா ஒமரின் உதவியோடு ஒசாமா பின்லேடனால் கொம்பு சீவி விடப்பட்டவர்கள். இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு முந்தைய காலத்தில் அரேபிய எண்ணை வள நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் செல்வது மிகவும் எளிது.பேங்க பேலன்ஸ் மட்டும் நிறைய காட்டினா போதும்.

நீங்க சொல்வது மாதிரி வியட்நாமிலும்,ஆப்கானிஸ்தானிலும் சி.ஐ.ஏ சார்ந்த ஒபியம்,கஞ்சா வியாபாரம் இருக்கிறது என்பது உண்மையே.ஆனால் அதுவே அமெரிக்காவின் தேசிய கொள்கை என்பது சரியல்ல. முல்லா ஒமருக்கும்,ஒசாமா பின் லேடனுக்கும் ஒபியம் வளர்ப்பது ஷரியா மத விரோதமானது என்ற கருத்து இருந்த போதும் ஏனைய குழுக்களில் முக்கியமாக ஹெக்மத்தயருக்கு கஞ்சா செடி வளர்ப்பதும் பணம் சேர்ப்பதும் முக்கிய கொள்கை. காபூல் போன்ற நகர்ப்புறங்கள் மட்டுமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில். ஒபியம் வளர்க்கிற இடமெல்லாம் ஆயுதம் தாங்கிய குழுக்களிடமே இருக்கின்றன.

விஸ்வரூபத்தில் கமல் அரிசி காய்கறிகளை சுமந்துகிட்டு வருவதும்,ஆயுதங்கள் பரப்பி வைத்திருப்பதும் சோத்துக்கே சிங்கி அடிக்கும் போது ஆயுதங்களுக்கு குறைவில்லை என காட்டத்தான்.

ஆயுதங்கள் வாங்கவும், அமெரிக்காவை எதிர்க்கவும் கஞ்சா செடி வளர்ப்பது முக்கியம். இதில் தமிழ்நாட்டுல விளையுற அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவது போல் சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐ கரங்களுக்கும் கொஞ்சம் போய்ச் சேரும் சாத்தியமிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

உங்க போர்கள் முடிஞ்சதுன்னு பார்த்தா இன்னும் தொடர்ச்சியா? விட்டேனா பார்:)

நேரா சுப்ரமணி சாமிகிட்ட வந்துடறேன்.முன்னாடி அமெரிக்காவுக்கு ஓசி விசிட் போகுற சாக்குல ஏதாவது துப்பறியும் சாம்புகளின் சேம்பல்கள் என்கிட்ட இருக்குதுன்னு சொல்லிகிட்டு திரிய முடியும்.இப்ப டெல்லியில் என்.டி.டி.வியையும்,சி.என்.ஐபின விட்டா கேட்கறதுக்கு ஆட்களில்லை.
விஸ்வரூப ரிலீசுக்கு போலிஸ் பத்தலைன்னா துணை ராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தனும்ன்னு சொன்ன ஜோக்காளியாச்சே அவர்:)
சுப்ரமணி சாமியையெல்லாம் வாதத்துக்கு துணைக்கு கூட்டிகிட்டு வர்றிங்களே.

நேற்று மானாட மயிலாட கமல் ஸ்பெஷலில் கூட சார்லஸ் சொல்வது போல ஞானத்தனமெல்லாம் சொன்னாங்க.இவற்றோடு அன்பே சிவம்,ஹே ராம்,தசாவதாரம்ன்னு வேறுபட்ட கதைகளை ஒரே கோட்டில் முடிச்சு போடுவது என்ற இரண்டு நிலைகளிலும் எனக்கு உடன்பாடில்லை.

தமிழகத்தில் சட்டத்தையும் மீறிய கட்டபஞ்சாயத்து நிலையை மாற்றி சட்டம் மட்டுமே உச்சநிலையென்ற நிலை வரட்டும்.நாலு ஓட்டு கிடைக்குதுன்னா என்ன வேணா செய்யலாம்ங்கிற நிலை மாறட்டும். அப்புறமா மைக்கேல் மூர் மாதிரியெல்லாம் டாகுமென்டரி எடுக்கறதைப் பத்தி பேசலாம்.

இந்தியக் கலைஞன் படுற பாடுதான் தெரியுதே.

உங்க அசினை விட்டுப்புட்டு சல்மான் கான் காத்ரீனா கைப்புள்ள கூட ரா-ஐ.எஸ்.ஐன்னு ரீல் விட்டதெல்லாம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.கொஞ்சமாவது அர்த்தத்தோட கதை சொன்னாலும் கூட ஆயிரம் நொட்டை நொடிசல் சொல்ற உங்களையெல்லாம் தமிழ்நாட்டுல வச்சுகிட்டு இந்தியக்கலைஞன் சாதிக்க முடியுமா என்ன:)ராஜ நடராஜன் said...

@செல்வகுமார்! இடைவேளை நேரத்துல பூந்து படம் பார்த்தா இப்படித்தான் இவ்ளோ பெரிய விமர்சனம் எதிர்பார்க்கவில்லைன்னு கேட்க தோன்றும்.

Ahila said...

பின்னி எடுத்துவிட்டீர்கள்....நன்று...

வவ்வால் said...

கோபி,

வாங்க,நன்றி!

படத்தை விட நம்ம பதிவை ரொம்ப என்சாய் செய்து இருப்பீங்க போல :-))

சும்மா கிடந்தங்கிட்டே வந்து என் படம்லாம் உலக அறிவு ,உளுத்தம்பருப்புலாம் இருந்தா தான் புரியும்னு சொன்னா, சுண்ணாம்பு வைக்காம என்ன செய்வாங்க :-))

பின்னாடியே ஒரு லோகதாசர் வந்து எனக்கு சுண்ணாம்பு இல்லியான்னு நிக்குறார்,அவருக்கும் கொஞ்சம்ம் கொடுத்துட்டு வரேன் :-))
---------------
செல்வகுமார் சகோ,

வாங்க,நன்றி!

படத்தினை எதிர்க்க இருக்கோ இல்லையோ ஆனால் பார்க்க ஒன்றும் விஷேஷமாக இல்லை, ரொம்ப மொக்கையான படம், எதிர்ப்பு என்ற விளம்பரத்தால் ஓடிக்கிட்டு இருக்கு.

ரெண்டாவது ரவுண்டும் அடிப்பார்,ஆனால் ஃப்ளாட் ஆகிடுவார் :-))
-------------------
ராச நட,

வாரும்,நன்றி!

உமது பின்னூட்டங்கள் நீர் விசிலடிச்சான் குஞ்சுகளின் தலைவர்னே காட்டுது , அப்புறம் என்ன கலை ,கிலைனு பேசிக்கிட்டு ?

மவுன பாஷையின் விழி மொழி புரியாதோர்க்கு எல்லாம் அழகியலின் தாத்பரியம் புரிய வாய்ப்பேயில்லை, உமக்கு வாய்த்தது நாத்தம்புடிச்ச ஒட்டகமும், குளிக்காத அரபியின் கட்டிப்புடி வைத்தியமும் தான்ன் :-))

#எந்திரனும்,இந்திரனும் என் படம் பார்க்க உலக அறிவு வேணும்னு பீத்திக்கலையே :-))

# ஜியாவை பத்தி முழுசா சொல்லு, ஷேக் நஜிமுல்லாப்பத்தி முழுசா சொல்லுனு என்னை கேட்கிறிங்களே, இதை தானே நான் லோகநாயகர் கிட்டே கேட்கிறேன் ,ஆஃப்கான் பத்தி எதுவுமே சொல்லாம ,மொக்கையா ,துப்பாக்கி தூக்கிட்டு ஓடுறது...ய்யானு கத்திக்கிட்டு சுடுறதுனு திரும்ப திரும்ப காட்டி இதான் ஆஃப்கானு சொன்னாரே ,அவரை கேளுங்க, ஆக மொத்தம் ஒரு பதிவில் எவ்வளோ விவரம் சொன்னாலும் ,அதை எல்லாம் விட்டுட்டு அதை ஏன் சொல்லலைனு கேட்க தெரியுதே, 95 கோடியில படம் எடுத்த மனுஷனை இதே போல கேட்கிறது?

ஆனால் யாராவது சரியா சொல்லவில்லைனு சொன்னா அவங்களை கேளுங்க,அதுவிட்டு போச்சு இது விட்டுப்போச்சுன்னு, முதலில் லோகம் ஒழுங்கா படம் எடுத்திருந்தா நான் ஏன் இந்த பதிவை எழுதப்போறேன்?

//சோவியத் ஆப்கானிஸ்தான் தோல்வியும், சோவியத் பலவாறாக உடைந்த பின் அமெரிக்க சி.ஐ.ஏ இனி முஜாகிதீன்கள் நமக்கு தேவையில்லையென பண,ஆயுத உதவிகளை நிறுத்தின காண்டுலயும்,வகாபியிசத்துக்கு எதிராக அமெரிக்கா இருக்கிறது என்ற காரணத்தால் தலிபானும்,அல்ஹைதாவும் முல்லா ஒமரின் உதவியோடு ஒசாமா பின்லேடனால் கொம்பு சீவி விடப்பட்டவர்கள். //

ஒருத்தருக்கு காவடி தூக்குவதுனு முடிவு எடுத்துட்டா அப்புறம் பீலாவுட மட்டும் கூச்சமா படப்போறிங்க :-))

நீங்க சொன்னது போல தான் நடந்துச்சா? மறுபடியும் நஜிமுல்லா ஆட்சியை முழுங்கிட்டு பேசுங்க? சோவியத் ஓடிப்போனப்பின் ஒரு ஆட்சி அமைந்து முஜாகிதீன்கள் வேறு வேலைப்பார்த்துக்கிட்டு இருந்தாங்கன்னு முன்னமே சொல்லிட்டேன், மீண்டும் ,மொட்டையா பேசுங்க.

வரலாறு தெரிஞ்சவங்கிட்டே பேசிடலாம், தெரியாதவங்கக்கிட்டேயும் பேசிடலாம், ஆனால் அரைகுறையாக டீவியில் சேனல் மாத்தும் போது காதில விழுந்தது வச்சு பேசுறவங்கக்கிட்டேலாம் பேசினா , நமக்கு தான் காதுல ரத்தம் வரும் :-))

# உங்க சுற்றுவட்டப் பாதை பேச்சை எல்லாம் விடுங்க, சோவியத் ஓடிப்போன பின், நஜிமுல்லா ஆட்சிக்கு வந்த பின், அங்கே அமெரிக்காவுக்கு என்ன வேலை? அங்கேயே டேரா போட அது என்ன அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமா?

எனக்கு மார்க்கப்பந்துக்கள் படத்தின் மீது தடை கொண்டுவர செய்ததே பிடிக்கலை, ஆனால் படம் பார்த்த பின் லோகநாயகரின் அமெரிக்க சொம்பு தூக்கலுக்காகவே படத்துக்கு தடைப்போட்டிருக்கலாம் என நினைத்தேன் :-))

# பதிவுக்கு சம்பந்தமாக ,இல்லைனா சொல்ல வந்ததை தெளிவா சொல்லுங்க,சரக்கு அடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு ,ஒரு மையமே இல்லாமா பேசிட்டு இருக்கீர்?

படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள்,முரண்கள் பற்றி சொன்னேன் அதைப்பற்றி எதுவுமே சொல்லக்காணோம், ஆஃப்கானின் போராட்டத்துக்கு அடிப்படைக்காரணம் என்னனு சொன்னதில், இது விட்டுப்போச்சு,அது விட்டுப்போச்சுனு சொல்லும் நீங்கள் ,மொத்தமாக எல்லாத்தையும் விட்டுவிட்ட லோகநாயகரின் அறம் பற்றியும் ஏதேனும் சொல்வது?

#சீசியம் 137 எனக்கூட தெரியாமல் டர்ட்டி பாம் பத்தி படத்தில் கதை வச்சுட்டு, ரொம்ப பில்ட் அப் குடுக்கும் அளவுக்கு தான் லோகநாயகரின் அறிவே இருக்கு,போய் அதுக்கு ஒரு டியூஷன் வைக்க சொல்லும் :-))
---------------
அகிலா,

வாங்க,நன்றி!

உங்க பதிவில் தெளிவா படத்தின் தரம் பற்றி சொல்லீட்டிங்க,,நாம அதையே கொஞ்சம் டீடெயிலா சொல்லி இருக்கோம்,அவ்ளோ தான்!
------------------

Anonymous said...

Very nice post.....


by--
Maakkaan.

Anonymous said...

Very shortly this web page will be famous among all blogging
visitors, due to it's pleasant articles

My blog post :: buy real twitter followers

கோவை நேரம் said...

வணக்கம் வவ்வால்...எதிர்பார்க்கவே இல்லை...எவ்ளோ டீடெயிலு......அக்கு அக்கா பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க...
சாதாரண ரசிகனா இருக்கிறதால் என்னவோ இந்த படம் எனக்கு பிடிச்சிருக்கு வவ்வால்.மத்தபடி வேற என்ன சொல்ல...
வாழ்த்துக்கள்.

Anonymous said...

வவ்வால், கிண்டில் ரீடர் (கீபோர்ட்) 4 ஜிபி, நூக் ரீடர் 2 ஜிபி ரெண்டுமே சுமார் ரூ. 6500 - க்கு இபேயில் உள்ளன. (புதியவை). இரண்டுமே வைஃபை, பட் நோ 3 ஜி. கிண்டில் எம்.பி.3, ஹெச்.டி.எம்.எல். ஆகிய ஃபைல்களையும் படிக்கும் திறன் உள்ளது, நூக்கில் இவை இல்லை.

இவற்றில் எதை வாங்கறது இப்போதைய இந்திய சூழ்நிலையில் பெட்டர்? கிண்டில் ஃபார்மேட்டை மற்றது படிக்காது, இ-பப் ஃபார்மேட்டை கிண்டில் கண்டுக்காது என்பதுதான் பிரச்சினையே. இணையத்தில் திருட்டு டவுன்லோடுகள் பெரும்பாலும் இ-பப் வடிவில்தான் உள்ளன (பிடிஎப் தவிர்த்து). நான் பெரும்பாலும் செய்யப்போவது பைரேட்டட் டவுண்லோடுகளாதான் இருக்கும் ;-) அத வச்சிப் பாத்தா எத வாங்கலாம் தல?

சரவணன்

ராஜ நடராஜன் said...

விசிலடிச்சான் குஞ்சுகளின் தல!கூடுதல் பட்டம் கிளு கிளுப்பாக இருக்குது:)

பதிவும்,எனது எதிர்க்கணைகளும் ஆப்கானிஸ்தான் என்ற மையப்புள்ளியை மட்டுமே தொட்டாலும் கூட விஸ்வரூபம் விசுவலாக தெரிவதால் அதில் உள்ள ஓட்டைகள் பலருக்கும் புரிந்திருக்கிறது.ஆனால் நீங்க பதிவை தாளிக்கும் தாளிப்பு பலருக்கும் தெரியாமலோ அல்லது உங்க தாளிப்பு வாசத்துல மயங்கியோ ஆகான்னு கத்துறாங்க.உங்க பதிவின் ஓட்டைகள் எனக்கு தெரிவதாலும் கமலுக்கு எதிரான கோட்டில் மட்டும் நின்று கொண்டு நீங்க தாளிப்பதால் ஊ ஊன்னு விசிலடிக்கிறேன்:)

உங்களுக்கு தொடர் பின்னூட்டம் போடுவதால் வவ்வால் எப்பொழுது எகிறும்ன்னு அறிந்தே வைத்திருக்கிறேன்:)

ஒட்டகம் திறந்த வெளியில் உல்லாசமா சுத்துது.முன்பு மேற்கத்தியவர்கள் வாசனை திரவியத்துக்குத்தான் இந்தியா வந்தார்கள்.இப்ப இந்தியாவின் வாசனை திரவியங்கள் அத்தனையும் அரேபி வீட்டிலும் உடலிலும்தான்.அத்தர் பூசினா குளிக்காட்டியும் கூட நாத்தம் தெரியாது தெரியுமில்ல:)

பல்லு இருக்கிறவன் தான் பக்கோடா சாப்பிட முடியும்ங்கிற மாதிரி உலக அறிவு இருந்தாதான் பீத்திக்கவும் முடியும்.

படத்துக்கு 95 கோடி அதிகம்தான் என்றாலும் கூட படம் பல விசயங்களை தொட்டுச்செல்கிறது.அது உங்க வவ்வால் நொள்ளக் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது.தெரிஞ்சாலும் விஸ்வரூபத்தைப் பொறுத்த வரையில் ஒண்ணரைக்காலில் தான் நிற்பேன்னு பிடிவாதம் புடிச்சா என்ன செய்ய முடியும்?

ராஜ நடராஜன் said...

உங்கள் பதிவு பல விசயங்களை தொட்டு சென்றாலும் உங்களுக்கான சூழல் பல விசயங்களுக்கான தேடலுக்கான சாத்தியங்களை இல்லாமல் செய்கிறது.எனவே உங்க பீலாவும் முழு உருவம் கொண்டதென என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்பதாலேயே எதிர் வாதம் என்பதோடு நான் எப்பொழுதும் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு பக்க வாத்தியம் வாசிப்பதில்லை.

எந்த தொலைக்காட்சி இவ்வளவு பின்னூட்டங்களுக்கான காதுல விழுந்ததை சொல்கிறது?தொலைக்காட்சி சொல்வதை உள் வாங்கிக்கொள்ளும் நிலையை தாண்டி நான் தேடுவதை எவை தருகின்றன என்ற நிலைக்கு கடந்து விட்டேன் என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.நமக்கு நிகரா பின்னூட்ட பதில் சொல்றீங்களேன்னு சில விசயங்களை ஊடே விட்டாலும் கூட சுயபுராணம் பாடுகிறேன்,புளிச்ச மாவுல தோசை சுடுறேன்னு சொல்லுங்க.

சோவியத் ஆப்கானிலிருந்து போனபின் பணம்,ஆயுதம்ன்னு கொடுக்காம நஜிபுல்லாவை ஒப்புக்கு சப்பாணியா அமெரிக்கா அம்போன்னு விட்டுட்டுப் போனதால்தான் ஆப்கான் பிரச்சினையே.அமெரிக்காவின் பார்வையில் தான் சொல்கின்ற பேச்சை கேட்பதற்கு ஒரு ஆள் வேணும்.அவ்வளவுதான்.சில சமயம் நஜிபுல்லா மாதிரி சோப்ளாங்கியும் அமைந்து விடுவதுண்டு.சதாம் உசேன் மாதிரி திரும்ப முட்டும் ஆளாகவும் இருந்து விடக்கூடும்.இல்லைன்னா ராணுவ உடை போட்டாலும் முஷ்ரஃப் மாதிரி தன் பேச்சை கேட்கிற ஆளா இருந்தாலும் சரிதான்.முஷ்ரஃப் விளையாண்ட இரட்டை ஆட்டத்துலதான் இப்ப லண்டனில் உட்கார்ந்துகிட்டிருக்கார்.விஷ்வரூபத்துல ஒசாமாவை சந்திக்கிற மிலிட்டரி ஆளு கூட முஷ்ரஃப் கூட்டம்தான்.நஜிபுல்லாவை விட பாகிஸ்தான் நல்ல அடியாள்ன்னுதான் தொடர் பண,ஆயுத உதவியும் பாகிஸ்தானுக்கு.

சோவியத் கம்யூனிசத்திற்கு எதிராகவும்,ரீகன் காலத்தில் ஈரானின் மத புரட்சிக்கு எதிராகவும் ஆப்கானில் அமெரிக்கா மூக்கை நுழைத்தது.நீங்க சொல்ற மாதிரி கஞ்சா,ஒபியத்துக்காக அல்ல.ஆப்கானில் போய் கொண்டு வரும் கஞ்சா,ஒபியம் அமெரிக்கா விரும்பினால் லத்தீன் அமெரிக்காவிலேயே கிடைக்கும்.கம்யூனிசம்,கேபிடலஸ பனிப்போரையெல்லாம் விட்டுட்டு அமெரிக்கா அபினுக்கு ஆசைப்பட்டு ஆப்கான் போச்சுன்னு கதை விடுங்க.

இரட்டைக் கோபுர தகர்ப்பு,ஒசாமா பின் லேடன் வீட்டுக்கு ஹெலிகாப்டர்ல போனதுக்கு அப்புறம்தான் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் 51வது மாகாணம்.

எப்படி படம் எடுத்திருந்தா உங்களுக்கு திருப்தியாக இருந்திருக்கும்ன்னு கொஞ்சம் சொல்வதுதானே.

அமெரிக்க சொம்பு தூக்கல் மட்டுமே லட்சியமா இருந்திருந்தா அமெரிக்கன் பினான்ஸிலேயே படம் பண்ணியிருக்க முடியும்.இந்தியாவிலிருந்து உலக தர வரிசை இயக்குநர்களில் ஏற்கனவே சேகர் கபூர் இருக்கிறார்.உங்க நொட்டைகளையெல்லாம் எதிர்கொண்டு கமலும் உலகதர வரிசையில் நிற்கும் சாத்தியமிருக்கிறது.அப்படியே இயலாமல் போனாலும் கூட மார்லன் பிராண்டோவுக்கும் மேலான நடிகனாக சிவாஜி வாழ்ந்து விட்டுப் போனது போல் தமிழகத்தின் கலையுலக பொக்கிஷமே கமல்.உடனே ஹுசைன் மாதிரி ஹாசனும் ஓடிப்போக நினைத்தாரேன்னு எதிர்க்கேள்வி போட வேண்டாம்.

படத்தில் ஓட்டைகள் இருக்கிறதென முன்பே சொல்லியிருக்கிறேன்.

சரக்கு கிடைக்காததால் அடிக்காதவனாகிப் போனேன்.இப்ப கிடைச்சாலும் உவ்வே மனநிலைதான்.ஒரு வேளை அடிச்சிட்டுப் பேசினாத்தான் குதிக்காம நச்சுன்னு பேசுறேன்னு சொல்வீங்க போல இருக்குதே!நான் சொன்னா மையம் குவியலா இல்ல.இதென்னா காண்ட்டெக்ஸ்டுக்கு புது சொல்லா:)

உங்கள் தொடர் விஸ்வரூப பதிவுகள் தொடர்ந்து நொள்ளைக் கண்ணால் பார்க்கிறீர்கள் என்ற அறச்சீற்றம் மட்டுமே என்னிடமிருக்கிறது.இதில் லோகநாயகரின் அறம் பற்றியெல்லாம் பேசுவதற்கு தேவையே இல்லை.உங்களுக்கு தெரிந்ததை நீங்க சொல்ற மாதிரி அவருக்கு தெரிஞ்சதை அவர் சொல்கிறார்.ஆரோவில் தொடங்கி இவன் யார் எனப் புரிகிறதா என பாட்டு பாடுறீங்க:)நான் உங்களுக்கும் கமலுக்கும் பின்பாட்டு மட்டுமே பாடுகிறேன்.

முன்னாடி சுனாமி என்னன்னு தெரியாமல் சுனாமி வந்த பின் சுனாமி பொது அறிவு வளர்ந்தது போல் இனி சீசியம் 137 பற்றியும் தமிழகத்தில் பேசப்படும்.

சொன்னா வருவேன்.சொல்லாட்டியும் வருவேன்:)

Anonymous said...

Just checking..Came again on my dashboard...

எங்க தொடரா மாத்திட்டீங்களோன்னு பயந்திட்டேன்...-:)

Anonymous said...

Do u think u r smart? The information given here are from Google & u just spit it.But before the Google times he has proved that he is worth to tamil cinemas. So don't try to get cheap publicity by bullying a great hero like him. If there is no Google ur blog will be a bull shit.

Anonymous said...

If u think that u are more clever than him just try to give some information without Google support. So don't try to act too smart.

முட்டாப்பையன் said...

சரி..ஒடைத்தே பேசலாம்.நீங்க மூணு பேர்.
யார் எந்த பதிவு போடுறீங்க?

இன்றைய கமெண்ட் நேரம் எல்லாம் சொல்ல ஒன்னும் இல்லை.

16TH பதிவு போட்டு இன்னிக்கு READER-ல வர காரணம் என்ன?
அதுவும் லிங்க் இல்லாமல்?

உங்களுக்குள்ளேயே பதிவு,கமெண்ட்,போட்டுக்கிட்டு இப்பவெளியில விடுறிங்களா?

கொஞ்சம் இல்ல நிறையவே பதிவர்களை முட்டாள் ஆக்குற மாதிரி இருக்கு.

இதுக்கு மேலயும் நாங்கள் உடைத்து பேச விரும்பவில்லை....

உங்களில் மூன்று பேரில் யார் எந்த பதிவை எழுதியது என்று வௌவால்1,2,3,
என்று போடுங்கள்.

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.

முட்டாப்பையன் said...
This comment has been removed by the author.
முட்டாப்பையன் said...

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் மக்களே.
ராசருக்கும்,வவ்வாலுக்கும் ஜென்ம சொந்தம் போல் தெரியும்.

அது நம்மை முட்டாள் ஆக்க.
3பேர்.இப்ப ஊறுபினர்கள் சேர்ந்திருக்கலாம்.

:)))))))))))))))

பதிலுரை,போஸ்ட் ஸ்டைல் எல்லாம் அந்தந்த பதிவுடன் கம்பர் பண்ணுங்கள்.
கூகுல் ஆண்டவரே துணை.

முட்டாப்பையன் said...

வவ்வால்.
நோ தப்பார்த்தம் .ப்ளீஸ்.எங்கள் தம் அப்படி.

நம்மால் கிழிக்கபடவேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

:))))))))))

வவ்வால் said...

மாக்கான்,

நன்றி,
----------
அனானி,
நன்றி,
-----------------
கோவை ஜீவா,

நன்றி.

படம் ஒரு முறைப்பார்க்கலாம்,ஆனால்,அனைவருக்கும் பிடிக்கும் அளவில் இல்லை.
---------------
சரவணன்,

உங்களுக்கே நிறைய தெரியும்னு நினைக்கிறேன்,ஆனாலும் நம்மக்கிட்டேயும் கேட்கிறிங்க,கேள்விப்பட்டதை சொல்கிறேன்.

ஈ-புக் ரீடர் என தனியே வாங்குவதை விட ஒரு டேப்லெட் வாங்கிடலாமே?

Wammy Athena Key Features and Specifications

Dual core (1.5GHz) + Mali 400 GPU.
Android Jelly Bean (Android 4.1).
1GB DDR3 RAM, 16GB internal storage (1GB for app, 13GB for storage) and MicroSD card up to 32GB.
9.7 inch IPS capacitive touchscreen with 1024*768 resolution.
External 3G, Wi-Fi, Bluetooth, HDMI, 3.5mm jack and micro USB.
Dual cameras front and rear 2MP.
8000 mAh battery.
http://www.gogi.in/wammy-athena-review.html

மேற்கண்ட வாம்மியில் இதற்கு முந்திய மாடல் 8 இன்ச், 8000 இருக்கு, இதுக்கு அடுத்து 15,000 ஒன்னு இருக்கு, எல்லா வசதியும் இருக்கு.

வாம்மி ஐ-பேட் அளவுக்கு ஃபெர்பாமன்ஸ் இருக்கும்னு போட்டு இருக்காங்க,என்ன கொஞ்சம் தடிமனா இருக்கும்,700 கிராம் வெயிட் போல.

அந்த தளத்திலே இன்னும் பல மாடல் ரெவ்யூ இருக்கு படிச்சு பாருங்க.

----
Spice Mi-1010 Stellar pad key features and specifications

1.5GHz dual core CPU + quad core GPU.
Android 4.1 OS.
1GB RAM, 16GB internal storage and micro SD card slot.
10.10 inch IPS capacitive touchscreen with 1280×800 pixels resolution.
3MP rear FF camera and front VGA camera.
External 3G/2G support via USB dongle, Wi-Fi, Micro USB and 3.5mm audio jack.
Mi-1010 weighs 667 grams and is 10mm thick.
7600 mAh Li-po battery.
Price Rs. 12,999.
Leather cover included.

இதுவும் நல்லா இருக்கும் போல தெரியுது.

இன்னும்,ஐ-பெரி,ஸ்வைப், என மலிவாகவும், அதிக வசதிகளுடனும் டேப்லெட்ஸ் இருக்கு.

---------------------

வவ்வால் said...

ராச நட,

எனது பதிவே முழுசா சொல்லவில்லை எனச்சொல்வதால் விஷ்வரூபம் முழுசா சொல்லிடுச்சுனு சொல்லுறிங்களா?

படத்தில் சொல்லாமல் விட்டதை நான் சொல்கிறேன்,நான் சொல்லாமல் விட்டது என நீங்கள் சொல்வதும் படத்தில் இல்லை, எனவே நீங்கள் மறைமுகமாக படத்தில் முழுமை இல்லைனு சொல்லுறிங்க,அதைத்தானே நானும் சொல்கிறேன், அப்போ நீங்களும் என்க்கட்சி தான்,ஆனால் லோகத்துக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துப்பேசிட்டு இருக்கீங்க :-))

//எந்த தொலைக்காட்சி இவ்வளவு பின்னூட்டங்களுக்கான காதுல விழுந்ததை சொல்கிறது?தொலைக்காட்சி சொல்வதை உள் வாங்கிக்கொள்ளும் நிலையை தாண்டி நான் தேடுவதை எவை தருகின்றன என்ற நிலைக்கு கடந்து விட்டேன் என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.நமக்கு நிகரா பின்னூட்ட பதில் சொல்றீங்களேன்னு சில விசயங்களை ஊடே விட்டாலும் கூட சுயபுராணம் பாடுகிறேன்,புளிச்ச மாவுல தோசை சுடுறேன்னு சொல்லுங்க.//

நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம் :-))

நீங்க இன்னும் ஆரம்ப்பப்படியில் நின்னுக்கிட்டு இருக்கிங்க, கடந்து வாங்க பிற்ப்பாடு உங்களுக்கு என்ன தெரியுது பார்க்கலாம்,நான் இங்கேப்பேசிக்கொண்டு இருப்பதெல்லாம் எப்போவோ, இணைய உரையாடல்களின் போது சொன்னதே, அதன் அப்டேட்ட வெர்ஷன் தான் இது.

# லோகநாயகர் சீசியம் 132 சொல்லிக்கிடூ இருக்கார், நான் தான் சீசியம்-137னு சரியா சொல்லி இருக்கேன் :-))

ஒரு +2 படிச்ச பையனை உதவிக்கு வச்சிருந்தாக்கூட சரியான ஐசோடோப்புக்கான அணு என் சொல்லிக்கொடுத்து இருப்பான் :-))

லோகநாயகர் புரிஞ்சா கேள்விக்கேட்டுடுவாங்கன்னு உஷாரா குழப்படியா பேசுவார்,இப்போ அவரோட அடிப்பொடிகளும் உஷாரா குழப்படியா பேச ஆரம்பிச்சுட்டாங்க, உங்கள மாதிரி.... தமாஷ் :-))

டயலாக்கெல்லாம் நன்னா சொல்றேனா :-))
-----------------
ரெவரி,

என்ன குழப்பம்? அப்படியே தான் இருக்கு. பின்னாடி முட்டாப்பையர் வேற என்னமோ பேசிக்குழப்பிட்டு இருக்கார், என்ன நடக்க்குது?
---------------
அனானி கண்ணா,

நன்றி,

உமது கண்டுப்பிடிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம் :-))

நான் தான் தெளிவா கூகிள்,விக்கி, இன்னப்பிற தளங்களின் பெயரைப்போட்டு நன்றியும் சொல்கிறேனே, எங்காவது எல்லாம் நானே சொந்தமா கண்டுப்பிடிச்சேன்னு பீத்திக்கிட்டேனா?

ராச நட நல்லாக்கேட்டுக்கும், கூகிள் பார்த்து தான் எழுதி இருக்கேன் ,நானா கதை விடலைனு இன்னிக்கு புதுசா வந்த அனானிக்கு கூட தெரிஞ்சு இருக்கு பாருங்க :-))

//If u think that u are more clever than him just try to give some information without Google support. So don't try to act too smart.//

நான் எந்த அளவுக்கு ஸ்மார்ட்னு எனக்கு தெரியும்,அதுக்கு பக்கத்தில் அவரெல்லாம் வரணும்னா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யணும் :-))

கூகிளில் தேடி எடுக்கவும் கொஞ்சம் திறமை வேண்டும் கண்ணா, கூகிளில் மேம்போக்கா தேடினால் எல்லாம் சிலது கிடைக்காது,கூகிளில் தேடினாலும் கிடைக்காத சிலத்தகவல்களும் இருக்கு,அதுவும் நமக்கு கிடைக்கும். அதுக்குலாம் நூலகம் போகனும் :-))
கூகிள் இல்லாமல் கூட எனக்கு எழுத சில சப்ஜெக்ட் தெரியும், ஆனால் லோகநாயகரை டிவிடி பார்க்காமல் ஒரு படம் எடுக்க சொன்னால் காலி :-))

படம்னு வந்தா விமர்சிக்க தான் செய்வாங்க, விமர்சனமே இல்லாம இருக்கனும்னா, படம் ரிலீஸ் செய்யாம பொட்டியிலே வச்சுக்க சொல்லுங்க :-))

ஹி...ஹி இந்த விமர்சனம் மூலமா புகழடைந்து, அண்ணா நகரில் ஒரு கிரவுண்டு இடம் வாங்கிட்டேன்,அடுத்த அமெரிக்க ஜனாதிபதியா ஆகப்போறேன் பாருங்க :-))

முடிஞ்சா நீரும் ஒரு விமர்சனம் எழுதி என்னைப்போல புகழ் பெறலாமே ?

----------------

முட்டாப்பையர்,

என்னய்யா குழப்பிக்கிட்டு, உமக்கு ரீடரில் என்னிக்கு வருதுனு எனக்கு எப்படி தெரியும், பதிவு போட்ட அன்னிக்கே தமிழ்வெளியில் வந்துவிட்டது. நீர் தமிழ்மணத்தில் மட்டும் தான் பார்ப்பீர் போல.

நான் இணைப்பது இரண்டே திரட்டியில் தான் ,தமிழ்வெளி மற்றும் இண்டி பிலாக்கர். அதுவும் இன்டி பிலாக்கரில் இன்று தான் இணைத்தேன்.

என்னைப்போலவே யாரு எழுதுறா, உம் மூலமா நம்ம போல இன்னும் யாரு இருக்கான்னு தெரிஞ்சிப்போம் :-))

என்னைப்பத்தி எனக்கே தெரியாதது எல்லாம் இவுங்களுக்கு தெரியும் போல இருக்கே, இனிமே எதாவது மறந்துட்டா இவங்களை கேட்டுக்கலாம் :-))
--------------------

Raj said...

Good Review. Cesium - Dirty bomb funda is also not new. This basic plot is there in one of Micheal Connely's Novel. Its a NY times best seller. I am not saying its exact copy of that novel.

Making Bomb using Cesium used for Cancer treatments is explained in detail in that novel.
Rest all is half baked imagination from Ulloor Nayagan.

Anonymous said...

ரெண்டு நல்ல டேப்லட்களைக் குறிப்பிட்டதற்கு நன்றி! நான் இ-புக் ரீடர் என்று யோசிப்பது இ-இங்க் டிஸ்பிளே இருப்பதால் படிக்க ஓரளவு பிரிண்ட் மாதிரி இருக்கும், நேரடி வெளிச்சத்திலும் படிக்கலாம் என்பதாலேயே! மேலும் மாதக் கணக்கில் ரீசார்ஜ் தேவையில்லை. பார்க்கிறேன்.

மற்றபடி எனக்கும் கூகுள் ரீடரில் இதே பதிவு மீண்டும் வந்திருக்கிறது.. ஏதேனும் தொழில்நுட்ப காரணமாக இருக்கலாம்.

சரவணன்

ராஜ நடராஜன் said...

வவ்வால்!மறுபடியும் வந்துட்டேனே:)

மையக்குவியல் பற்றியெல்லாம் பேசுங்க உங்க பதிவின் மையக்குவியலின் தொகுப்பு இதோ...

விஸ்வரூபம் உளவாளிப்படங்களை ஸ்பூஃப்(Spoof) செய்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப்படமாகும்.

ஓபியம் வார் மற்றும் கஞ்சா செடிகள் எப்படியிருக்குமென உலக ஞானம்

கந்தகார் விமானக் கடத்தல்-பதிவுல உருப்படியான ஒரு விசயம் இது.

விஸ்வரூப கதையோட கொஞ்சம் விவரணம்.

முல்லா ஒமர்,பின் லேடன் படங்கள்

பதிவு திடீரென நாயகனுக்கு தாவி ஓடுது ( எப்படியாவது வவ்வாலுக்கு மூணு கால்ன்னு சாதிக்கனுமே)

மறுபடியும் வண்டி திரும்ப விஸ்வரூபத்து ரோட்டில் ஓடுது

டர்ட்டி பாம்

சீசியம் தயாரிப்பது எப்படி

நியுக்ளியர் ஆன்காலஜி

விஸ்வரூபம் அமெரிக்காவுக்கு ஓடுன கதை

பாரடே ஷீல்ட்

பிற்சேர்க்கை:

IMDB RATING:

இதையெல்லாம் கொஞ்சம் நீட்டி முழக்கினா போதும் விஸ்வரூபத்தை எதிர்க்கிற பட்டியலில் முன்னாடி போய் உட்கார்ந்துக்கலாம் இல்ல:)

உங்க பதிவு மட்டும் ஊரெல்லாம் சுத்தலாம்.விஸ்வரூபம் மட்டும் அமெரிக்கா,ஆப்கானிஸ்தான்,மறுபடியும்அமெரிக்கான்னு சுத்தக்கூடாது இல்ல?

உங்களுக்கு ஒழுங்கா வரும் ஒரே கலை புள்ளி விபரம்தான்னு நினைச்சுகிட்டிருந்தேன்.ஆனால் அதுக்கும் அமெரிக்காவுல 10 கோடி,ஐரோப்பாவுல 10 கோடி,மலேசியா,சிங்கப்பூர்,வளைகுடாவுல 10 கோடி,இந்தியில 10 கோடி,தெலுங்குல 10 கோடின்னு கணக்கு போட்டீங்க பாருங்க.எல்லாத்தையும் கூட ஒரு குத்து மதிப்பு கணக்கா எடுத்துக்கலாம்.ஆனால் படம் வெளியாகாத வளைகுடாவுக்கும் கணக்கு போட்டீங்க பாருங்க.உங்க புள்ளி விபரம் எப்படின்னு புரியுது:)

நிறைய ஆப்கான் தகவல்கள் என்னாலும் தரமுடியும்.ஆனால் வவ்வாலோட இடது காதுல வாங்கி வலது இறைக்கையில் பறக்க விடுவீங்கன்னு தெரியுமே:)

அடிப்பொடிகள் சொல்றதே காதுல ஏற மாட்டேங்குது.பின்ன லோகநாயகர் சொல்றதெல்லாம் உங்க மாதிரி ஆட்களுக்கு புரியவா போகுது? சும்மா டமாஷ்:)

ஆமா!நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குமாம்!மறுபடியும் டமாஷ்:)

கூகிள் அண்ணா!கொஞ்சம் விசுவலாகவும் பார்க்க முயற்சி செய்யுங்கோ.என்னமோ இணையமே இந்த சப்பான் மூளைகிட்டத்தான்னு பீத்திக்கிறது சிப்பு சிப்பா வருது:)

உங்க தொடர் விஷ்வருப எதிர் பதிவுகளால் உங்கள் நொள்ளைக்கண்ணை கண்டு பிடிச்சதுதான் மிச்சம்.விரும்பியோ விரும்பாமலோ இருவரும் கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் மாதிரி நிற்கிறோம்.எதையும் பாசிட்டிவா பார்க்கணும்ங்கிறதால நான் இந்திய அணி.விஸ்வரூப குற்றம் கண்டு பிடிக்காம எனக்கு தூக்கமே வரமாட்டீங்குதுன்னு நீங்க அடம் பிடிக்கிறதால அப்ப நீங்க பாகிஸ்தான் தானே:)

உங்களை முட்டாப்பையர் கூப்பிடறார்.வரட்டுமா.


நாய் நக்ஸ் said...

வவ்வால்....எப்ப பதிவு போட்டீர்....முட்டா பையன் சொன்னது போல எனக்கு இன்னிக்கு மதியம் தான் reader-ல வந்த்தது....அதுவும் லிங்க் காட்டலை....

நேத்திக்கு ஆரூர் மூனா பதிவுல இருந்துட்டேன்...fbல் நாற்று குழுமத்தில் நேத்திக்கு முட்டா பையன் உம்ம பதிவை ஷேர் பண்ணி இருந்தார்...அப்பத்தான் பார்த்தேன்...

செந்தில் பதிவுல கூட உம பதிவை படிக்க விடுயா-ன்னு கமெண்ட் போட்டேன்...

Mutta Paya
http://vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_15.html

மிக அருமையான தீனி கொடுத்துள்ளார் வவ்வால்.மார்க்க பந்துக்கள்
இடம் வவ்வால் இடம் பெயர்ந்துவிட்டாரோ ?

மிக அருமையான பதிவு.
கமலின் கேனத்தனத்தை உரித்துவிட்டார் வவ்வால்.
யாரப்பா மார்க்க பந்துக்கள் வாங்க கொண்டாடுங்க.
:)))))))))))))))///////////////


நேத்திக்கு வேற மோன நிலையை எட்டி பிடிக்க போய் பிடிக்க முடியாம போய்டுச்சி...

பெரிய்யியியியியியியியிய பதிவு...உம் பதிவில் கிடைக்கும் detailsகாக தற்சமயம் +2 எழுதும் மகளை அதை விட்டுவிட்டு...இதை படிக்க சொல்ல போறேன்....
எவ்வளவு நேரம்தான் பாட புக் படிப்பது...ரிலாக்ஸ்காக...

:))))))))))

Ravi said...

They will say "Room potu" yousipangee, but I think you had booked a Marriage Hall to review this film. Also tell me how do get so much time to write an article, so longggg. Are you a robo.

I believe a film should be judged how well ( Style ) its made, rather than the substance.

Movies are not made entirely realistic or scientific, they have to have cinematic-style to grab the attention of the viewer. No one can make a realistic\scientific movie, either censor board wont approve it or they wont get producers\distributors. Frankly they cant do business. Period.

I felt bad when Kamal said people need some "world knowledge" to watch this film. I sense he is trying to demean an average movie-goer. He has to understand ( I think he knew ) that mostly a story is between Good Vs Bad or a Romance film. This is Good Vs Bad, so anyone can understand the concept of the film, doesn't need "World Knowledge".

Coming back to this reviewer, Mr. Vovol can you tell us list of films you like or say the best films.

Ravi

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

குறும்பன் said...

எப்படி வவ்வால் இந்த உலக அறிவு படத்தை முழுசா பார்த்திங்க? அதுவும் விளக்கம் சொல்ற அளவுக்கு? முதல் சண்டை காட்சி வரை தான் ஒழுங்கா இருந்துச்சு ஆப்கானித்தான், அமெரிக்கா, டர்ட்டி பாம் எல்லாம் புரியவேயில்லை, படம் பார்த்த அனைத்து பெண்களுக்கும் இந்த படம் பிடிக்கவில்லை (மொத்தம் 4 பேர், 2 பேர் 20-30, 2 பேர் 30-40 வயசு, நாலு குடும்பம் போனோம்பா) பெண்கள் கருத்தே ஆண்களுடையதும். சண்டை நல்லா இருந்திச்சி என்பது எங்களது கருத்து அப்படியே இருக்ககூடாதில்ல ;). திரை அரங்குள்ள 50 பேர் தான் இருந்தாங்க. 80% காலி. ஆங்கிலம் தெரிந்த எனக்கு இந்த நிலைன்னா, ஆங்கிலம் தெரியாத உலக அறிவு சுத்தமா இல்லாத தமிழர்கள் எப்படி படத்தை பார்ப்பாங்கன்னு லோகம் நினைக்கவேயில்லையே. அமெரிக்க கனவுல நினைக்கலையோ? அமெரிக்க கனவு பலிக்குனும்னா அமெரிக்க BF படம் எடுக்கறவங்க நினைச்சாதான் உண்டு :-)) மார்க்க பந்துக்கள் எதிர்ப்பால் தான் படம் பார்க்க போனோம். எதிர்க்கிற மாதிரி என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்க இல்லாட்டி யார் போவா. (uncut version)

Mohammad Najibullah சோவியத் ஆள் அல்லவா? கஞ்சா என்பது OPIUM மா அல்ல Heroin ஆ?

ஓபியத்தாக நடந்த\நடக்கும் சண்டை என்பது எனக்கு புதிய செய்தி.

சீசியம் -137, நியுக்ளியர் ஆன்காலாஜி பற்றி தெரிந்து கொண்டேன்.

இந்த படத்துக்கு நல்ல IMDB RATING கிடைக்க வாக்கு போடுங்கள் என்று ஒரு கமலதாசர் நான் இருக்கும் ஒரு குழும மயிலில் கேட்டிருந்தார் :))
சன்னி என்பது தவறு சுன்னி என்பதே சரி. தமிழில் இதற்கு இப்போ தப்பான பொருள் உண்டு என்பதால் மாற்றத்தேவையில்லை. அரபி நன்கறிந்த மூமீன் சொன்னது.

பதிவுலகில் மாட்டு லோன் கொடுக்கற ஆபிசர் என்பதற்கு அடுத்து எனக்கு பிடித்த சொல் King Walker தான். மார்க்க பந்து தனி ஒருவருக்கான பெயர் அல்ல என்பதால் அது இதில் சேர்த்தி இல்லை. :)

வவ்வால் said...

ராஜ்,

நன்றி!

நாவல் குறித்த தகவலுக்கு ,நன்றி, நானும் படித்தேன்,ஆனால் என்ன நாவல்,யாரு எழுதியது என மறந்து போச்சு.

சீசியம்னு இல்லை எல்லாமே கத்துக்குட்டி தனமா இருக்கும், ஆஃப்கான் சண்டைக்காட்சிகள் எல்லாம் ஸ்டாக் வீடியோ வச்சு எடுத்து , கம்போசிட்டிங்க் செய்தது.
----------
சரவணன்,

நன்றி!

6,500 ரூ செலவு செய்து புத்தகம் படிக்க மட்டுமா என நான் டேப்லெட் சொன்னேன், நல்ல வாசிப்பனுவம் வேன்டும் என்னில் நீங்க சொன்னது போல ரீடர்களே வாங்கலாம், கிண்டிலில் எல்லாம் காசு கொடுத்து தானே வாங்கணும்,ஈ-பப்,பிடிஎஃப் எல்லாம் படிக்க எனில் நூக் வாங்கலாம்னே நினைக்கிறேன், அப்புறம் நான் ரீடர்லாம் பயன்ப்படுத்தியதேயில்லை, எல்லாம் வழக்கமான லேப்டாப்பிலெ முடிச்சுப்பேன், எல்லாத்துக்கும் தனி தனியா டிவைஸ் வாங்கிட்டு ,அப்புறம் அதை வேற மூட்டைக்கட்டிக்கிட்டு அலையனுமானு தான்.

அப்புறம் நாமளும் எல்லாம் பைரேட்டட் புக் தான், இதுக்காக கில்மா சைட் முதல் அனைத்து இணைய நூலகத்திலும் புகுந்து புறப்படுவேன் :-))
------------------
நக்ஸ் அண்ணாத்த,

//பெரிய்யியியியியியியியிய பதிவு...உம் பதிவில் கிடைக்கும் detailsகாக தற்சமயம் +2 எழுதும் மகளை அதை விட்டுவிட்டு...இதை படிக்க சொல்ல போறேன்....
எவ்வளவு நேரம்தான் பாட புக் படிப்பது...ரிலாக்ஸ்காக...//

உங்களை ரொம்ப யூத்துன்னு நினைச்சேனே ,அவ்வ்வ் :-))

என் பதிவை படிச்சிட்டு படிச்சது எல்லாம் மறந்து போயிடுச்சுன்னு சொல்லிடப்போறாங்க :-))

ரீடரில் மீண்டும் எப்படி வருதுனு தெரியலை, ஒரு வேளை எனது கூகிள் ஐடியில் ரிலாக் வேறு சிஸ்டத்தில் செய்ததால்ல் அப்படி ஆச்சானு தெரியலை.
---------------
ரவி,

நன்றி!

சாதா ரூம் இல்லை சரக்கு ரூம் :-))

ஹி...ஹி கொஞ்சம் பதிவை சுருக்கிட்டேன் அதுக்கே இப்படி சொல்லுறிங்களே? அப்புறம் நான் தினம் பதிவைப்போட்டு தாளிப்பவன் அல்ல, இப்பதிவு சுமார் ஒரு வாரமாக ,கொஞ்சம் ,கொஞ்சமாக தட்டச்சு செய்து, பின்னர் சேர்த்து சுருக்கி போட்டது, சமயங்களில் ஒரே பதிவையே ஒரு மாதத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக தட்டிக்கிட்டு இருப்பேன் :-))

வெறும் ஸ்டைலிஷ் மேக்கிங் மட்டுமே படத்தினை காப்பாற்றாது, அப்படிப்பார்த்தால் எல்லா படமும் ஓடுமே, அதுவும் மணிரத்னம் படமெல்லாமே ஹிட் ஆகிடனுமே?

// No one can make a realistic\scientific movie,//

100% நிஜமாக காட்ட முடியாது தான் ,அதுக்குன்னு மதுரை பீச்சில் காதலிக்கிறார்கள்னு காட்டினால் எப்படி?

சீசியம் 137 எனக்கூட சரியாக சொல்ல முடியாத அளவுக்கு என்ன நிர்பந்தம்?

எந்த படம் நல்ல படம் ,எந்த படம் கெட்டப்படம்னு நான் தீர்மானிக்க முற்படுவதில்லை, அதெல்லாம் வெள்ளிக்கிழமையானால் விமர்சனம் எழுதுபவர்களின் வேலை :-))

வெற்று அலப்பரை இந்த படத்துக்கு அதிகமாக இருக்கவே ,நான் உண்மையை சொல்லி இருக்கிறேன் அவ்வளவு தான்.

எல்லாப்படத்திலும் குறைகள் இருக்கும்,ஆனால் பெரிதாக உறுத்தாமல் காட்ட வேண்டும், மேலும் இது ஒலகப்ப்படம், பார்க்க அறிவு வேண்டும்னு சுய தம்பட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் :-))
-------------------
தி.தமிழ் இளங்கோ சார்,

நன்றி!

பார்த்தேன் , தகவலுக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி!
----------------

குறும்பன்,

நன்றி!

நமக்கும் ஒலக அறிவு இருக்கில்ல அதான் ஒலக அறிவு படம் பார்த்தோம் :-))

எல்லாம் மார்க்க பந்துக்களின் எதிர்ப்பு விளம்பரம்,அம்மையாரின் தடை ஆகியவற்றால் தான் படம் ஓடிச்சு, இல்லைனா முதநாளே தியேட்டர் காத்தாடி இருக்கும்.

நஜிமுல்லா அமெரிக்கா தேர்வு தான், ஒரு வேளை ரெண்டுப்பக்கமும் வாலை ஆட்டுவாரோ என்னமோ?

ஓபியத்தினை சுத்திகரித்து ஹெராய்யின் தயாரிக்கப்படுகிறது, பதிவில் சொல்லி இருக்கிறேனே.

ஆனால் ஹெராயின் என்ற பெயர் டிரேட் நேம் ,பேயர் கெமிக்கல்ஸ் மார்பினை செயற்கையாக தயாரித்து ஹெராயின் என்ற பெயரில் விற்றார்கள்,இயற்கையான மார்பின் தான் ஓபியம் ஆகும்,எனவே காலப்போக்கில் மார்பின் கொண்டதை எல்லாம் ஹெராயின் எனவும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் ஹெராயின் வந்து புத்துணர்ச்சியூட்டும்னு சொல்லி மெந்தால் போல பொட்டிக்கடையில் எல்லாம் விற்றார்கள் :-)),உண்மையான ஆண்கள் சாப்பிடுவதுனு விளம்பரம் எல்லாம் கொடுத்தாங்களாம் :-))

ஐம்டிபி கோல்மாலை அதனால் தான்ன் சொன்னேன், அந்த ரேட்டிங்க்கை வைத்து ஒரு லோகதாசர் வேற பீத்தி பதிவு போட்டுக்கிட்டு, சர்வதேச இணைய தளம் வழங்கிய ரேட்டிங்னு புழுகிக்கிறார் :-))

# மாட்டு லோன் ஆபிசர் போல வாக்கிங் கூட ஒட்டக லோன் ஆப்பிசர் தான் :-))
------------

ராச நட , கூகிள் இடிக்குது அடுத்த பின்னூட்டத்தில் கண்டுக்கிறேன்.
---------------------------

வவ்வால் said...

ராச நட,

வந்தாகணுமே,ஏன்னா நாம வச்ச ஆப்பு அப்படியாகப்பட்டது ஆச்சே, லோகதாசர்களுக்கு கொஞ்சம் சுள்ளுனு ஏறத்தான் செய்யும் :-))

நீங்க மையக்குவியலை சொல்லவே எத்தனை உப தலைப்புகளை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என எண்ணிப்பாரும், லாபநோக்கற்ற வகையில் எழுதப்படும் ஒரு இலவச வலைப்பதிவிலேயே இத்தனை விடயங்களை சொல்ல மெனக்கெடுகிறோம் என்றால் , 95 கோடியில் மிகப்பெரும் குழுவினரின் பின்ப்புலத்தோடு செயல் படும் ஒருவர் என்னமாதிரி கவனம் செலுத்தி இருக்க வேண்டும் ,அப்படி செய்தாரா?

ஹாலிவுட் தரம்னு வாயால வாசித்தால் போதுமா அதற்கேற்ற உழைப்பும்,படைப்பூக்கமும் வேண்டாமா?

ஹாலிவுட்டில் வெறுமனே கதை ,திரைக்கதை என்று மட்டும் எழுதுவதில்லை, எடுத்துக்கொண்ட கதையினை "ஸ்கிரிப்ட் பேக்கிரவுண்ட் ரிசர்ச்" உம் செய்வார்கள், இதற்கென ஒரு தனிப்பட்ட குழுவும் இருக்கும். கடைசியில் டைட்டில் போடும் போது பாருங்கள் ஒரு குழுவா சிலருக்கு கிரெடிட் கொடுப்பாங்க.

1985 இல் அமெரிக்க அதிபர் புஷ்னு கதாசிரியர் போற போக்கில் எழுதிட்டால், அதை "ரொனால்ட் ரீகன்" என திருத்தம் செய்வார்கள் ,அவர்கள் வேலையே கதையில் இருக்கும் "Factual errors" களைவதே.

அப்போ ஹாலிவுட்டில் லாஜிக் மிஸ்டேக் செய்ய மாட்டார்களா என்றால் செய்வார்கள்,ஆனால் பெரிதாக உறுத்தாமல் ,இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.மேலும் அனைத்து ஓட்டைகளையும் பார்த்துவிட்டு ,இதெல்லாம் தவிர்க்க முடியாது என்றால் மட்டுமே விட்டுவிடுவார்கள்,அனைத்திலும் ஒரு தொழில்நேர்த்தி இருக்கும். ஆனால் நம்ம ஊரில் உதவி இயக்குனர்களின் பலத்தில் தான் எல்லாமே நடக்கிறது, நல்ல உதவி இயக்குனர்கள் இருந்தால் படமும் நன்றாக வரும் ,கூட இருப்பவர்கள் உங்களைப்போல எல்லாத்துக்கும் "மண்டையை ஆட்டும் பூம்பூம் ஒட்டகம்/மாடென்றால்" இப்படி தான் சொதப்பலாக அமையும்.

கதிர்விச்சு தன்மையுள்ள சீசியத்திற்கு, சீசியம் 132.09 என அணு நிறை சொல்வது தவறு என்று கூட தெரியாமல் படம் எடுக்க வேண்டியது தான் ;-))

சரி நீங்க ,தலைப்புகளை பட்டியலிட்டு தான் இருக்கீங்க, இது வரையில் நீட்டி முழக்கியும் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலே வரவில்லையே ஏன்?

அப்போ அதெல்லாம் ஓட்டைகள் என உங்களுக்கும் தெரிகிறது தானே,, அப்புறம் என்ன வெட்டி நாயம் பேசிண்டு, அதெல்லாம் தப்புத்தான்னு சொல்லிட்டு போனால் உம்ம செங்கோல் வளைந்து, கிரிடம் நழுவிடுமா :-))

வவ்வால் said...

தொடர்ச்சி...

#//.ஆனால் படம் வெளியாகாத வளைகுடாவுக்கும் கணக்கு போட்டீங்க பாருங்க.உங்க புள்ளி விபரம் எப்படின்னு புரியுது:)//

ஆப்கான் கதைய எல்லாம் அப்புறம் சொல்லலாம் ,முதலில் சில அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நான் வளைகுடா நாடுகள் மட்டும் சொல்லவில்லை ,சிங்கப்பூர்,மலேஷியா, வளைகுடா நாடுகள்=10 கோடி என மூன்று பிராந்தியங்களை குறிப்பிட்டு இருக்கிறேன்.அப்படி தான் விநியோக உரிமை விற்பனை ஆகிறது.

தமிழக விநியோக உரிமையில் ,city,NSC என்றெல்லாம் குறிப்பிடுவார்களே கவனித்திருக்கிறீர்களா?

NSC என்றால், நார்த் ஆர்காட், சவுத் ஆர்காட், செங்கல்ப்பட்டு விநியோகம். அதே போல அயல்நாட்டு விநியோகத்தில் MAS, UK&Europe, North america& canada , rest of the world , என பிரித்து விற்பார்கள்.நடிகரின் மார்க்கெட்டுக்கு ஏற்ப ஏரியா பிரிப்பு அதிகமாகும்.சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு எல்லாம் ஜப்பானுக்கு என தனி விற்பனையே நடக்குது, ஸூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!!

ஜப்பான் தொலைக்காட்சியில் வெளியிட என தனியாக சேட்டலைட் ரைட்ஸ் கூட விற்பனையாகும் ஒரே தமிழ்ப்பட நாயகர் ஸூப்பர் ஸ்டார் தான் என்பதை இங்கே தற்பெருமையின்றி ,தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!!!

MAS, என்றால் மலேஷியா,அராப், சிங்கப்பூர் ஆகும், இந்த மூன்று ஏரியாவும் ஒன்றாகவே தமிழுக்கு விற்கப்படுகின்றன. இந்திப்படங்கள் தான் இன்னும் பெரிய ஸ்பெக்ட்ரமாக விற்பனையாகும், பாகிஸ்தான்& பங்க்ளாதேஷ், நேப்பாள் ,சவுத் ஆப்ரிக்கா என்றெல்லாம் இந்திப்படங்களுக்கு விநியோக வட்டங்கள் உண்டு.

கான் நடிகர்களின் படம் நல்லா இருக்கோ இல்லையோ பாகிஸ்தான் ,பங்க்ளாதேஷ் ஏரியாவே நல்ல விலைக்கு போய்விடும் மேலும் அரபு தேசம்,முதல் மற்றவைகளும்.ஆசாத் காஷ்மீர் எனப்படும் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரிலும் பாகிஸ்தான் விநியோகத்தில் படங்கள் வெளியாகின்றன, தியேட்டர் இருக்கானு கேட்காதிங்க,, படம் ரிலீசான அன்றே ஒரிஜினல் 5.1 டிவிடி போட்டு விற்பாங்க :-))

பாகிஸ்தான் &பங்க்ளா தேஷ் விநியோகம் என்பதே டிவிடி விக்க தான் :-))
அந்த டிவிடிக்கள் அப்படியே சென்னை வரைக்கும் படம் வெளியான ரெண்டாவது நாளே 5.1 இல் தரமாக கிடைக்குது :-))
அதே போல அக்‌ஷய் குமார் படங்கள், கனடா, வட அமெரிக்கா, யூகேவில் நல்ல விலைக்கு போகும், காரணம் பஞ்சாபி மக்கள் அங்கெல்லாம் அதிகம், அக்‌ஷய் பஞ்சாப் மாநிலத்தவர்.

இது போன்ற சில ,பல வியாபார காரணங்கள் இருப்பதால் தான் , சில குறிப்பிட்ட நடிகர்களுக்கு இந்தியில் எப்பொழுதும் பெரிய மார்க்கெட் இருக்கு. பல படங்கள் பாக்ஸ் ஆபிசில் படுத்துக்கொண்டாலும் தொடர்ந்து படம் கொடுக்க முடிகிறது.

நெட் புளிக்குதுல படம் பார்த்துட்டு உலகமே நம்ம கையிலனு மனப்பிராந்தியில ஊறிக்கிடக்கும் உங்களுக்கு எல்லாத்தையுமே விளக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கே, இதுல வாய் மட்டும் வங்காள விரிகுடா போல :-))

கொசுறு: லோகநாயகர் படத்தில் வருவது போல இந்திய உளவு நிறுவனம் ரா அமெரிக்காவை காப்பாற்ற உழைத்துக்கொண்டிருப்பதால் இந்தியாவை கவனிக்காமல் விட்டதால் தான் இந்தியாவில் ஹைதராபாத்தில் குண்டு வெடிக்குது போல ,அவ்வ் :-((

எனவே லோகநாயகர் ஒரு தீர்க்க தரிசினு நீங்களாம் பீத்திக்கலாம், முதலில் இந்தியாவை காப்பாற்ற பாருங்கய்யா, அப்புறமா அமெரிக்காவை காப்பாத்த போகலாம் :-))
--------------------------

நாய் நக்ஸ் said...

வவ்வாலு காரு...மூணு நாள் பிறகு நெட் பக்கம் வந்துள்ளீர் போல.....

போகட்டும்.....நீர் எந்த பேருளையாவது இந்த G+ -க்கு வாரும்....

எனக்கு தாங்களை......நீர் என்னமோ...கற்றது தமிழ் எழுதுரீறே....

அதான்............

ஏதாவது இருந்தால் வாரும்.....//////////////

Rathi K Yesterday 23:38 (edited) - Limited
நான் தமிழ் தான் என்னை நம்புங்கோ. எனக்கென்று ஒரு தனிவரலாறு இருக்கு. அதையும் நம்புங்கோ. தமிழை வீதி, வீதியாக புலம்பவிடாதீர்கள்.

இப்படிக்கு,

தமிழ்.

unesco report on language extinction | sumeriantamil
//Multilingualism is the most accurate reflection of multiculturalism. The destruction of the first will inevitably lead to the loss of the second. Imposing a language without any links to a people’s culture and way of life stifles the expression of their collective genius. A language is not only the main instrument of human communication. It also expresses the world vision of those who speak it, their imagination and their ways of using knowledge.//

//*Second, Tamil constitutes the only literary tradition
indigenous to India that is not derived from Sanskrit.
Indeed, its literature arose before the influence of
Sanskrit in the South became strong and so is
qualitatively different from anything we have in
Sanskrit or other Indian languages. It has its own
poetic theory, its own grammatical tradition, its own
esthetics, and, above all, a large body of literature
that is quite unique. It shows a sort of Indian
sensibility that is quite different from anything in
Sanskrit or other Indian languages, and it contains
its own extremely rich and vast intellectual
tradition.//
http://www.iglobal-tamil.com/Tamil/tamil.htm
இந்தியாவில் மிகப்பழமையான மொழி தமிழ் தான் என்று UNESCO வே சொன்னப்புறமும் என்னை வந்து கேள்விகேட்டு விளக்கம் சொல்லுன்னா என்ன செய்றது. வேணுமின்னா கூகுளில் யுனெஸ்கோ அறிக்கையை படிங்க.
My last point is that if Tamils are indigenous people, why can't be Tamil in the same way?
Collapse this post


Tamil »
Tamil as a Classical Language: WHY, WHAT and HOW ? Statement on the Status of Tamil as a Classical Language ======================================================= (http://tamil.berkeley.edu/Tamil%20C...
+7
Hide comments

விந்தைமனிதன் ராஜாராமன்Yesterday 23:48+1
2
1
வொய் டென்ஷன்? நோ டென்ஷன்! லெஸ் டென்ஷன் மோர் வொர்க்.. மோர் வொர்க் லெஸ் டென்ஷன் :))

Rathi K Yesterday 23:51+1
2
1
தமிழனை டென்ஷன் பண்ணவே ஒரு குறூப்பா இருக்காங்க யுவர் ஆனர் :)) என்ன இவர்களின் மேதாவித்தனம் அல்லது அறியாமை ராஜபக்‌ஷேக்களுக்கு சாதகமாகாமல் இருக்கவேண்டும் என்பது என் கவலை.

ராஜ்குமார் சின்னசாமிYesterday 23:57
தமிழ் பத்தி தெரிஞ்சுக்க ஆங்கிலம் தான் தேவைப்படுது பாருங்களேன்:)

தமிழ் அப்படின்னு ஒரு வார்த்தை எந்த பழம் பெரும் காப்பியங்களில் இருந்தது

# பலிக்கு பலி!

Rathi K00:04+4
5
4
ரா.சி. நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு சொன்னா என்ன பண்ணமுடியும்.

நானும் தமிழ் தவிர ஆங்கிலம் கொஞ்சம் பேசுவேன், எழுதுவேன். அதன் அடிப்படையே தமிழ் இலக்கண அறிவுதான். ஆனா, அதுக்காக சொந்தமொழியை நான் தொலைக்கவோ அல்லது வேறு பல பாதிப்புகளின் காரணமாகவோ கேள்வி கேட்கவேண்டும் என்பதில்லையே!

என் மொழியை மதிக்கத் தெரிந்ததால் தான் என்னால் ஆங்கிலத்தை கூட கற்கவும் பேசமும் முடியுது. மொழி என்கிற அடையாளத்தை தொல்லத்தால் என் சகலமும் தொலையும்.
Collapse this comment

விந்தைமனிதன் ராஜாராமன்00:04+1
2
1
//தமிழ் அப்படின்னு ஒரு வார்த்தை எந்த பழம் பெரும் காப்பியங்களில் இருந்தது//

அய்யகோ! ஏழுநாள் ப்ளஸ் பக்கம் வராம இருந்தியேடா ராசாராமா.. இன்னிக்கிப் பாத்தா வரணும்?! :))

ராஜ்குமார் சின்னசாமி00:10
மிஸ்டர் விந்தை!
தமிழ் எழுத்துருக்கள் மொத இருந்தே அப்படித் தானா இல்லை அப்பப்போ மாறிச்சா?
அந்த எழுத்துரு தமிழ் தான்னு எங்கேயாச்சும் சொல்லி இருக்காங்களா

# சீரியஸ் கேள்வி!

விந்தைமனிதன் ராஜாராமன்00:11 (edited)+3
4
3
”அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன்” - சிலப்பதிகாரம். ஒண்ணு போதுமா இல்ல இன்னும் வேணுமா ராசி? எல்லாக் கேள்விக்கும் ப்ளஸ்ல மட்டும் விடை கிடைக்கணும்னு நினைக்காதீரய்யா... போயி தேடிப்புடிச்சி படிங்க சாமீ :))

ராஜ்குமார் சின்னசாமி00:13
அண்ணே ! நன்றிகள் பல! 

விந்தைமனிதன் ராஜாராமன்00:16
நன்றிக்கு நன்றிய்யா :))

ராஜ்குமார் சின்னசாமி00:17
வள்ளுவர் சாமிய கும்புடும் முறை பத்தி சொல்லும் போது ஏதோ தாலாடின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்காப்லயாம்!

தாலடின்னா என்னா அர்த்தங்ணா!

நாய் நக்ஸ் said...

தாலடின்னா என்னா அர்த்தங்ணா!

விந்தைமனிதன் ராஜாராமன்00:19+2
3
2
கேக்குறதைத் தெளிவாக் கேளுமய்யா.. கேக்கத் தெரியாட்டி மண்டபத்துல கேட்டுட்டு வாரும் :))

ராஜ்குமார் சின்னசாமி00:21
க்கும். மண்டபத்தில கேட்டா நான் இப்படி காமெடியா கேட்பேனா! 

விந்தைமனிதன் ராஜாராமன்00:23+1
2
1
செரிய்யா.. நான் முடிஞ்சவரைக்கும் விவாதம் பண்றதில்லைன்னு விரதம் இருக்கேன்.. ஏதோ தெரியாத்தனமா உள்ள வந்துட்டேன்.. வுட்ரும்யா :))

ராஜ்குமார் சின்னசாமி00:24
சரி. நான் தூங்க போறேன் . நாளைக்கு காலையில 8 மணிக்கு ட்ரெயினிங் :(

babu r00:27+2
3
2
நான் தமிழ் தான் என்னை நம்புங்கோ. எனக்கென்று ஒரு தனிவரலாறு இருக்கு. அதையும் நம்புங்கோ. தமிழை வீதி, வீதியாக புலம்பவிடாதீர்கள்.
இப்படிக்கு,
தமிழ்.

Bharathi Elangovan01:58+2
3
2

”தமிழ் கூறும் நல்லுலகத்து"
”செந்தமிழ் இயற்கை”
”தமிழென் கிளவியும்”
”செந்தமிழ் நிலத்து”
”செந்தமிழ் சேர்ந்த”


இதெல்லாம் தொல்காப்பியத்தில் இடம் பெற்றது தான் :)


Collapse this comment

பிரியமுடன் பிரபு08:40
.

Rathi K10:08+2
3
2
:) 

nakkeeran jayaraman14:47Edit
My fathres name
is
jayaramen.......

My mom
told
to me.....

I have no
doubt.....on her......

Still.....
And ....
Not ever.....


By...tamil...
Font.....
I...
Will
come....
Back........
Expand this comment »

nakkeeran jayaraman14:49Edit
Fathers....name....

For...
English.......

Read ...as...
Father......


Couldnt...edit....by...
Mobile......
Collapse this comment

nakkeeran jayaraman14:52Edit
Where....
Where...
Where.....

Is he......?????????????
??????????????????????
????????????????????????

nakkeeran jayaraman14:53Edit
Im...come
back...
In
one...
Hr.....

nakkeeran jayaraman15:50Edit
வந்துட்டேன்...என் அப்பாவின் பேர் ஜெயராமன் என்று என் அம்மா சொன்னார்கள்....

நான் இதுவரை,,,,,,இனிமேலும்.....அவர்கள் சொல்லுவததை சந்தேக படமாட்டேன்....

எனக்கு நல்ல மன நிலை இருக்கு.....அது எப்போதும் பிழலாது...

இப்ப யாக்கு சந்தேகம் இருந்தாலும்....அம்மாவை சந்தேகபட்டுட்டு ...பிறகு வாங்களேன்...

:))))))))))))

இது சும்மா......!!!!!!!!!!
Collapse this comment

நாய் நக்ஸ் said...

நக்ஸ் அண்ணாத்த,

//பெரிய்யியியியியியியியிய பதிவு...உம் பதிவில் கிடைக்கும் detailsகாக தற்சமயம் +2 எழுதும் மகளை அதை விட்டுவிட்டு...இதை படிக்க சொல்ல போறேன்....
எவ்வளவு நேரம்தான் பாட புக் படிப்பது...ரிலாக்ஸ்காக...//

உங்களை ரொம்ப யூத்துன்னு நினைச்சேனே ,அவ்வ்வ் :-))

என் பதிவை படிச்சிட்டு படிச்சது எல்லாம் மறந்து போயிடுச்சுன்னு சொல்லிடப்போறாங்க :-))

ரீடரில் மீண்டும் எப்படி வருதுனு தெரியலை, ஒரு வேளை எனது கூகிள் ஐடியில் ரிலாக் வேறு சிஸ்டத்தில் செய்ததால்ல் அப்படி ஆச்சானு தெரியலை.///////////////////////////////////////////////////////////

யோவ்வ்வ்வவ்வ்வவ்வ்வ்..........என் போட்டோ பாக்காத மாதிரியே கமெண்ட் போடுறீர்....

நான் யூத் தான்யா....சின்ன வயசுலேயே பெற்றோர்க்காக திருமணம்,,இத்தியாதி,,,இத்தியாதி....

நம்ம கடலூர் மாவட்டம் உமக்கு தெரியாதா...

:))))))))))))))))))))))))))))))))))))

இன்னும் எத்தனை கண்ட கண்ட சாமி என்கிற கருமத்தில் எல்லாம் வந்து சத்தியம்
பண்ணணுமோ..............??????????????

பெரியாரின் ஒரே சீடனுக்கு வந்த சோதனை.........ம்ம்ம்மம்மம்ம்ம்ம்.........

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

வாரும்,நன்றி!

நான் மொபைலில் படிச்சுக்கிட்டு தான் இருந்தேன், ஒரு வாரமாவே என் சிஸ்டம் படுத்துக்கிச்சு, வேற ஒன்னுல லாக்கின் செய்தால்,அதில் தமிழ் இல்லை, எனவே வேற ஒரு சைட்டில் டைப் செய்து ,காபி பேஸ்ட் செய்து ,ரொம்ப சல்லைப்புடிச்ச வேலையாப்போச்சு.

இப்போ தான் நம்ம டப்பாவை சரி செய்தேன் :-))

-------------

கூகிள் பிள்ஸ்ச்சில் எல்லாம் மொக்கை காமெடி செய்துட்டு இருப்பாங்க, அங்கே எல்லாம் வந்து பேச முடியுமா, நமக்கு தான் நொரை தள்ளும் :-))

தமிழ் எழுத்துக்கள் பிரம்மினு சொல்வதே கப்சானு எப்போவோ நிறுபிச்சாச்சு, தினமணியில் கூட விரிவாக எழுதினாங்க.

இப்போ தாவரங்கள்,உயிரினங்களுக்கு எல்லாம் அறிவியல் பெயர் இலத்தினில் தான் இருக்கு,அதனால் அவை எல்லாம் ரோமில் மட்டுமே உருவாச்சுனு சொல்லிடுவாங்களா?

முதலில் வகைப்படுத்திய கரோலஸ் லின்னயஸ் செய்த ஏற்பாடு அது..

அதே போல தமிழை ஆய்வு செய்தவர்கள் பிரம்மி வட்டெழுத்துனு சொல்லிட்டு போயிட்டாங்க.

கொஞ்சம் கூட சிந்திக்காமல் ஆரம்பத்தில் தமிழ் எழுத்து இப்படி இருந்துச்சா, அது தமிழானு வெட்டியாக்கேட்டால் எப்படி, உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளின் எழுத்துமே ஆரம்பத்தில் இப்போ இருந்தது போல இல்லை.

திராவிடம் என்ற சொல் கூட தமிழ் இல்லை சமஸ்கிருதமே,அதனால் திராவிடர்கள் என்றால் அவங்க தமிழே இல்லைனு சொல்லிடுவாங்களோ :-))

அக்காலத்தில் தென்னாட்டினை குறிக்க திராவிட நாடுனு வட மொழியில் சொன்னது அப்படியே நிலைச்சு போச்சு.

தேசிய கீதம் வங்காள மொழியில் எழுதப்பட்டது ,உத்கல திராவிட பங்கானு பாடி இருப்பாங்க.

ஆங்கிலேயர்கள் மற்றும் அவாள் தான் அன்னிக்கு மொழி ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் எனவே தமிழ் எழுத்தை பிரம்மி எழுத்துனு சொல்லிட்டா ,தமிழ் எழுத்து இல்லைனு ஆகாது.

தமிழ் ஒரு "cursive language" எழுத்துக்கள் எல்லாம் வட்ட வட்டமாக இருக்கும். சன்ஸ்கிரிட்டில் கூட அப்படி இல்லைனு சொல்லும் போது எப்படி பிரம்மி வட்டெழுத்துனு சொல்ல முடியும்?

முதலில் சன்ஸ்கிரிட்டுக்கே எழுத்து கிடையாது,அது ஒரு ஒலி மொழி, அதனால் தான் அக்காலத்தில் வேதங்கள் ,செவி வழியே கேட்டே பாராயணம் செய்யப்பட்டது. பிற்காலத்தில் தான் எழுத்து வடிவு உருவாகி இருக்க வேண்டும், அதே சமகாலத்தில் தமிழுக்கும் எழுத்து இருந்து இருக்க வேண்டும்.

சமஸ்கிருதம் ,இரான் ,மெசபடோமியா பகுதியில் உருவாகி இருக்கக்கூடும்னு உலக அளவில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இரான் என்பது ஆர்யா என்பதில் இருந்தே உருவாச்சு, இரானிய மன்னன் டாரியஸ்-1 ,நான் ஒரு ஆர்ய மன்னன் என கல்வெட்டில் செதுக்கி வச்சு இருக்கான், காலம் கி.மு 500 போல.அலெக்ஸாண்டர் தி கிரேட் படை எடுப்பின் போது சுமார் கி.மு 232 இல் அவர்கள் தேசம் அழிக்கப்பட்டது,இன்றும் இரானில் பெர்சே போலிஸ் பகுதியில் இடிந்த அரண்மனைகள், எச்சங்கள் எல்லாம் இருக்கு,இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் இரானில் ஆண்ட மன்னர்கள் ஆர்யர்கள் என்றால் அப்போ சிந்து நதிக்கு இந்தப்பக்கம் யார் ஆண்டு இருப்பார்கள், தமிழ்நாட்டில் யார் ஆண்டு இருப்பார்கள், அப்போ தமிழ் இல்லாமல் போயிருக்குமா?

திராவிடம் எனப்படும் தென்னக மொழிக்குடும்பங்கள் தான் சிந்து சமவெளீ முதல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அப்போ இருந்தது. வெகு பின்னாளில் தான் தென்னக மொழிப்பேசுவோர் ,இந்தியாவின் தென்ப்பிராந்தியத்துக்கு விரட்டப்பட்டார்கள், இதுவே ஆரிய ஊடுருவல் எனப்படுகிறது.

விரிவா பின்னர் பதிவிடுகிறேன்,நீங்கள் எனது திரும்பிப்பார் தொடர்ப்பதிவுகளை கொஞ்சம் பாருங்க, அதன் தொடர்ச்சியாக எழுதலாம்னு இருந்தேன்,அப்படியே கிடக்கு.

நாய் நக்ஸ் said...

இதுக்குதான்............எபோவஇருந்து சொல்லுறேன்.........

ஏதாவது ஒரு கருமத்தை....எனக்கு மட்டுமாவது....தொடர்புக்கு வாரும்.........என்று.........

நாய் நக்ஸ் said...

அந்த போஸ்ட்-ஐ அக்காவோ...இல்லை...ஏதோ .....G+ல் தூக்கிட்டாங்க...வவ்வால்...


:)))))))))))))

நமக்கு ராசி இல்லையா...???

இல்லை....அவங்களுக்கு.......???? இல்லையா/??????????????

ராஜ நடராஜன் said...

இரண்டு நாட்கள் கேப்புல மறுபடியும் வந்தா நக்ஸ் சொல்றதெல்லாம் ஒரே மையக் குவியலா இருக்குதே:)

இந்தப் பதிவுக்கு இப்பவே தியேட்டர் காத்து வாங்குது.இதை 100 நாள் ஓட்டணுமின்னா நான் உட்கார்ந்து பார்த்தாத்தான் உண்டு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வேர்ஹவுசில் ஒரு குண்டு, அப்பார்ட்மென்டில் ஒரு குண்டு என வெடித்த பின்னும் FBI எந்த வித தீவிரமும் காட்டாமல் சாவகாசமாக செயல்படுகிறது, நடுவில் காமெடியான விசாரணைகள் வேறு!. ஓமர் சாவகாசமாக பிரைவேட் ஜெட் பிடிச்சு , போன் செய்து வெடிக்க வைக்கப்பார்ப்பார் :-))

ஆனால் இயல்பில் உடனே தேசமே ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு ,தீவிரமாகிவிடுவார்கள்.//

இதை தான் நானும் சொல்லிட்டு வந்தேன் அண்ணே :)

இது மட்டும் இல்லாம , தீபக் கம்பேனிய பக் செய்ய முடியும் போது நிரூபமா ஏன் ? பாஸ்வேட் தெரியும் போது ஏன் கம்பேனிக்குள்ள போவனும்?

தீவிரவாதிகள் எப் பி ஐ சைட் ஆக்ஸஸ் செய்ய முடியும் போது இத்துப்போன கம்பனி சிஸ்டத்த ரா& எப் பி ஐ மூலமா ஆக்ஸஸ் செய்ய முடியாதா ?

குபீர்ன்னு வந்த உருது தெரியாத தமிழ் தெரிஞ்ச(!) ஜிகாதிய ஓமர் எல்லா இடத்துக்கும் கூப்பிட்டு சுத்துவாரா?

கமல் வரும் வரை யார் ட்ரெயினிங் டிபார்ட்மெண்ட் :)

ஓமராச்சும் தமிழ் நாட்டில இருந்ததால தமிழ் பேசரார். ஆனா கூட இருக்கும் செவ்வாழை முதற்கொண்டு அமெரிக்க தீவிரவாதிகள் எல்லாம் தமிழ் பேசறாங்க.. ஓமர் அவங்க கூட பேசும் போதும் தமிழ்ல பேசறார் எப்படி !!

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

தூக்கினா போகட்டும் விடுங்க ,அடுத்த தடவை என்ப்பதிவு பக்கம் வர சொல்லிடுங்க,நான் நல்லா "கவனிச்சுக்கிறேன்"

மையப்புள்ளியை காணோம்னு ராச நட குமுறுறார்,அவரை பார்ப்போம்.

------------

ராச நட,

வாரும்,நன்றி!

அண்ணாத்த ஊர்ப்பஞ்சாயத்த இங்கே கூட்டிக்கிட்டு வர்ரார், நான் என்ன வக்கிலா ,இல்லை கோர்ட்டா, இல்ல ஆலமரத்தடி பஞ்சாயத்தா?

நல்லா கேளும் ஏன் மையப்புள்ளிய விட்டு வெளியே போறிங்கன்னு :-))

அவராவது மையப்புள்ளிய விட்டு வெளியே பேசுறோம்னு தெரிஞ்சே பேசுறார் ஆனால் அது தெரியாமலே பேசிட்டு இருக்கிங்களே :-))

#நான் என்ன லோகநாயகர் போல ஒலகப்பதிவா எழுதுறேன்,100 நாள் ஓடலைனா நடுத்தெருவுக்கு வந்திடுவேன்னு அழுது ஒப்பாரி வைக்க, நம்ம ரேஞ்சுக்கு இப்பவே ஹிட் தான்!!!

தோ பாருங்க பின்னாடி ஜீ+ சுனாமி ராசியே வந்து பாயிண்ட் எடுத்துக்கொடுக்கிறத,இன்னுமா லோகத்துக்கு காவடி தூக்க ஆசைப்படுறிங்க?

----------

ரா.சி,

வாங்க,நன்றி!

நீங்களும் நிறைய ஓட்டைகளை பார்த்திருக்கிங்க போல :-))

பக் செய்வது இருக்கட்டும் போன் டேப்பிங் செய்தாலே கதை முடிஞ்சிருக்கும் :-))

அது என்னமோ தெரியலை லோகநாயகர் கப்சா விட்டா எல்லாரும் ஒலகத்தரம்னு ஒத்துக்கிறாங்க, வி.காந்த்,அர்ஜூன் படம்னா என்ன படம்யா இது குப்பைனு சொல்லிடுறாங்க, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னு ரொம்ப தீவிரமா நம்புறாங்களே மக்கள் :-))

படத்துல ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள் நான் கொஞ்சமா தான் இங்கே சொல்லி இருக்கிறேன்.

டர்ட்டி பாம் வெடிக்க வைக்கிறதுக்கு ஆள் வச்சிட்டு ,கூடுதலாக செல்போன் வைப்பது ,அந்த ஆள் செய்யத்தவறினால் ரிமோட் ஆக வெடிக்க வைக்க,எனவே முதலில் அந்த ஆளுக்கு போன் செய்து பார்த்துவிட்டு தான் ரிமோட் ட்ரிக்கரிங் செய்ய முயல்வார்கள்,ஆனால் படத்தில தலைகீழா முதலில் ரிமோட் ஆ வெடிக்கா முயற்சித்துவிட்டு, அப்புறமா எதுக்கு போன் செய்யணும்?

நைஜீரியன் வீட்டின் நுழைவு வாயில் கதவு மூடி இருக்கும் போது வெளியில் ஓடும் டிரெயின் சத்தம் கேட்காது என்பது போலவும், திறக்கும் போதே டிரெயின் சத்தம் கேட்பதாக படத்தில் ஆரம்பத்திலேயே காட்டியிருப்பார்கள், நான் கூட ஒலியமைப்பில் உள்ளும்,புறமும் வித்தியாசம் ஏற்படுவதை எல்லாம் காட்சிப்படுத்தி இருக்காங்க,இதுக்கு ஒரு பயன் இருப்பதாக படத்தில் வருமோனு நினைச்சேன்,ஆனால் கிளைமாக்சில் அந்த கதவை திறக்கும் போது டிரெயின் சத்தம் உள்ளே கேட்கும்,ஆனால் அதனால் நைஜீரியன் விழிப்படைவதாக காட்டாமல் தேமேனு தொழுகை செய்ய ஆரம்பிப்பான், யாரா இருந்தாலும் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி என்னனு பார்ப்பாங்க,அதுவும் தீவிரவாதி இன்னும் அலர்ட்டாக இருப்பான்.

அதை விட கதவுக்கு வெளியில் நின்னுக்கிட்டு எல்லாம் பயங்கர கேஷுவலாக பேசிக்கிட்டு இருக்காங்க :-))

ராஜ நடராஜன் said...

எங்கடா ஓட்டை கிடைக்கும்ன்னு தேடிகிட்டே இருங்க:)

நானும் நிறைய விமர்சனங்களை பார்த்துட்டேன்.லோகநாயகர் கட்டை அவிழ்த்து விடச் சொல்லி அரபியில் பாடுவதின் பொருள் என்ன என்று யாரும் சொல்லக் காணோம்.

வால் ஸ்டீரிட் பத்திரிகையாளர் டேனியல் பேல் மற்றும் ஜிகாதி போட்டோ எடுக்கும் போதெல்லாம் எதையாவது சொல்லி விட்டோ அல்லது பின்னாடி அரபி பேனர் ஒட்டிகிட்டுத்தான் கழுத்தை வெட்டுறது வழக்கம்.லோகநாயகரும் என்னமோ அரபி பேனர் ஒட்ட வைச்சிருக்காரே யாருக்காவது தெரிஞ்சுதா?

ஆப்கான் கள காட்சிகள் ரொம்பவும் அமெச்சூராக இருந்தாலும் கூட அமெரிக்க,இஸ்லாமிய தீவிரவாதங்களைப் பேசுவது உங்க நொள்ளக் கண்ணுக்கு தெரிய நியாயமில்லை.

முழுசா நனைஞ்சாச்சு அதென்ன இனி லோக நாயகர்? நம்ம நாயகர்ன்னே போட்டுக்கிறேன்:) முன்னாடி சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கிறதைப் பத்தி சொன்னேனா!சொன்னேன் தானே?

கையில காய்கறி அரிசியை ஏந்திகிட்டு வரும் போது அங்கே ஒருத்தன் துப்பாக்கி ரவைகளை கிலோ கணக்குல வித்துகிட்டிருப்பான்.நொள்ளைக் கண்ணர்களுக்கு இதன் சூட்சுமமெல்லாம் புரியவேயில்லை:)

விஸ்வரூபம் எடுப்பதற்கும் முன்னாடி ஒரு சொட்டுத் தண்ணீர் மேலேயிருந்து கீழே விழும்.இதாவது புரிகிறதா?

படம் போட்டுட்டா அமெரிக்கா காரன் கஞ்சா செடிக்கு பாதுகாப்பா நின்னுகிட்டிருக்கான்னு அர்த்தமா?

காவிரி டெல்டா பகுதியில் நெற்பயிர் மாதிரி ஆப்கானிஸ்தானுக்கு ஊரெல்லாம் கஞ்சா பயிர்தான்.தாடியும் மீசை வச்சவனெல்லாம் தலிபானா இல்ல கஞ்சா விவசாயியான்னு தெரியாம குழம்பிகிட்டே விளைநிலத்துல பயந்தோ அல்லது பம்மிகிட்டோ போறதை Embeded photographer புடிச்ச போட்டோ அது.

கஞ்சா செடி வளர்ப்பதற்கு மாற்றாக பாமியன் சிலை தகர்ப்பு ஏரியாக் குகைகளை கொஞ்சம் தோண்டுனா நிலக்கரி போன்ற இயற்கை தாதுப்பொருட்கள் கிடைக்கின்றன.ஆனால் நீர் நிறைந்த சமவெளிப் பகுதிகளில் கஞ்சா விதையை தூவிவிட்டு விவசாயம் பார்ப்பது எளிது என்பதால் குகை தோண்டுவதற்கு பெரும்பாலோர் போவதில்லை.

தலிபான்களை பிடிக்கிறேன் பேர்வழியென மக்கள் சொத்தான மாடுகளை சுட்டு விடுவதும்,வீட்டு சுவரை ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து விடுவது போன்ற அத்துமீறல்களை நேட்டே படைகள் செய்துள்ளன.மக்கள் நிலைமைதான் பரிதாபம்.தலிபான்களைப் பற்றி அமெரிக்காவுக்கு தகவல் சொன்னா தலிபான்காரன் தலையை வெட்டி விடுவான்.தலிபான்களுக்குப் பயந்துகிட்டு சொல்லாமல் இருந்தால் அப்ப நீ தலிபானுக்கு உதவி செய்கிறாய் என அமெரிக்கா காரன் மொழிபெயர்ப்பாளனை வைத்துக்கொண்டு மிரட்டுகிறான்.

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

முதலில் ஒன்றை தெளிவுப்படுத்துங்க, நான் குறிப்பிட்ட லாஜிக் ஓட்டைகள் படத்தில் இருக்கிறது ,ஆம் /இல்லை ,ஏதாவது ஒன்றை சொல்லவும்,சும்மா சுத்தி சுத்தி பேச வேண்டாம்.

# உமக்கு கட்டம் சரியில்லை, நீரே இப்போ நிறைய எடுத்துக்கொடுக்கிறீர், இதை எல்லாம் நான் சொல்லாமல் தவிர்க்க காரணம் ,அரபிய மற்றும் இந்திய இஸ்லாமிய பழக்க வழக்கங்களில் வித்தியாசமுள்ளதால் எது சரியாக காட்டப்பட்டுள்ளது என எனக்கு புரியவில்லை, இஸ்லாமியர்கள் தான் சரியாக சொல்லக்கூடும் என தொடாமல் விட்டதை ,தொட வைக்கிறீர்கள் :-))

#//நானும் நிறைய விமர்சனங்களை பார்த்துட்டேன்.லோகநாயகர் கட்டை அவிழ்த்து விடச் சொல்லி அரபியில் பாடுவதின் பொருள் என்ன என்று யாரும் சொல்லக் காணோம்.//

துவா செய்யும் போது 5 கட்டமாக செய்வார்கள்,. இதனை 5 கலிமாஹாஸ் என்கிறார்கள்.

ஆனால் லோகநாயகர் முதல் கலிமா "Kalimah Tayyibah" சொல்லாமல் நேராக இரண்டாவது கலிமா "Kalimah Shahadah" வை சொல்கிறார்

"Ašhadu an lā ilāha illā'llāh waḥdah lā šarīka lahu, wa ašhadu anna muḥammadan ʿabduhu wa rasūluhu."

அஷடனுல்லா இலாஹா இல்லாஹ்னு ஆரம்பிச்சதும் சண்டையை துவக்குகிறார்.

அப்படி சொல்வதன் எளிய பொருள் ,அல்லாவை ஏக இறைவன் என்பதன் சாட்சியாக நான் இருக்கிறேன் என சொல்வது, ஆதாரம் எல்லாம் கேட்காமல் ,சந்தேகத்துக்கிடமில்லாமல் ஏற்றுக்கொண்டேன் என சொல்வது.

முதல் கலிமாஹ் சொல்லவில்லை, எனவே அவர் செய்த துவாவே தப்புனு நினைக்கிறேன் , சரியானு மார்க்கப்பந்துக்கள் தான் சொல்லணும்.

# கழுத்தினை வெட்டும் போது ,பிஸ்மில்லா சொல்வார்கள் என நினைக்கிறேன்.அப்போத்தான் கொன்ற பாவம் வராது :-))

# லோகநாயகர் காட்டியிருப்பது பேனர் இல்லை,தலிபான்கள் கொடி,ஆனால் கலர் எல்லாம்ம் கொஞ்சம்ம் மாத்தியிருப்பார், ஏன்னா தலிபான்களின் கொடி அடிப்படையில் தான் இப்போ ஆப்கானின் தேசியக்கொடியும் கூட வடிவமைக்கப்பட்டிருக்கு,அப்படியே காட்டினால் பிரச்சினை வரலாம். அதில் துவா சொல்லும் கலிமாக்கள் எழுதி இருக்கும். படத்தில் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

# //கையில காய்கறி அரிசியை ஏந்திகிட்டு வரும் போது அங்கே ஒருத்தன் துப்பாக்கி ரவைகளை கிலோ கணக்குல வித்துகிட்டிருப்பான்.நொள்ளைக் கண்ணர்களுக்கு இதன் சூட்சுமமெல்லாம் புரியவேயில்லை:)//

உமக்கு நொள்ளைக்கண்ணு கூட இல்லையே, மூளையே அழுகி போயிடுத்து :-))

தலிபான்கள் வசிக்கும் இடத்தில் துப்பாக்கி ரவை,ஆயுதங்கள் விற்றால் யார் வாங்குவார்கள்?

தலிபானாக இருக்கும் ஒரு ஆஃப்கானியர் ஒவ்வொருவரும் சொந்தக்காசு கொடுத்து ஆயுதம் வாங்கி சண்டை போடுறாங்களா அப்போ?

ஆயுதமும், சோத்துக்கு வழியும் இலவசமாக காட்டினால் தான் தலிபானாகவே மாறுவார்கள். எனவே தலைவர் வேலை ஆயுதம் கொடுப்பது.

அந்த இடத்துக்கு வெளியாட்கள் வந்து சில்லரை விற்பனையில் ஆயுதம் விற்கவோ,வாங்கவோ முடியாது,எனவே அப்படியான ஆயுதக்கடை அங்கே இருப்பதாக காட்டுவதே கத்துக்குட்டித்தனம்.

தலிபான்கள் அல்லாதவர்களுக்கு விற்க என்றால் ,கடையை தலிபான்கள் மட்டும் மறைவாக வாழும் பகுதியில் வைக்க தேவையேயில்லை. பொதுவானவர்கள் வந்து போகும் ஒரு நகரம் போன்ற இடங்களில் தான் கடை வைப்பார்கள்.

வவ்வால் said...

தொடர்ச்சி...

# இந்த ஒரு சொட்டுத்தண்ணி கீழ சிந்தும் முன் சண்டையை முடிப்பது, மேல தூக்கிப்போட்ட சிகரெட் கீழ விழுவதற்குள் பத்துப்பேரை முடிப்பதெல்லாம் நிறைய பார்த்தாச்சு, நீர் வேண்டுமானால் நெட் புளிக்குதுல கார்ட்டூன் சேனல் பார்த்துக்கொண்டிருக்கலாம்,நாங்கலாம் டெர்ரர்ரான ஆக்‌ஷன் படம் பார்க்கிறவங்க :-))

எக்ஸ்மென் -உல்வரைன் படத்தில ஒரு ஏஜெண்ட் ஸீரோ ரெண்டு தோட்டா மேகசின்களை மேல தூக்கிப்போட்டுவிட்டு , ரெண்டு கையிலும் இருக்கும் "கன்" காலியாகும் வரை சுட்டு தள்ளும், இது அத்தனையும் தூக்கிப்போட்ட மேகசின்கள் கீழ வருவதற்குள், கன் காலியானதும் ,காலி மேகசீன்களை எஜெக்ட் செய்துவிட்டு , சரியாக மேலிருந்து விழும் மேகசின்களை நேரடியாக கன்னில் லோட் செய்து அடுத்த ரவுண்ட் சுடும் :-))

ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸ் முடிஞ்சதும் மீண்டும் சுலோமோஷனில் ரிப்பீட் செய்வதெல்லாம்ம் ஜாக்கி சான் பிராஜெக்ட் ஏ படம் காலத்திலேயே செய்தது தான்.

டோனி கிரேஜா நடிச்ச "ஓங்க் பேக்"(தமிழில் மிரட்டல் அடி) படத்தில எல்லாம் மீண்டும் ரிப்பீட் செய்து ஸ்லோமோஷனில் காட்டுவார்கள்.

லோகநாயகர் பாய்ந்து ஒருவன் இடுப்பில் ஏறி அடிக்கும் டெக்னிக் கூட ஓங்க் பேக் காப்பி தான். ஓங்க் பேக்கில் முழங்கை முட்டியினால் கபாலத்தில் அடிப்பார், லோகநாய்யகர் கட்டை விரலால் கண்ணில் குத்துவார் (நல்லா கவனியும்) அவ்வளவு தான் வித்தியாசம்.

ஊரு உலகத்து ஆக்‌ஷன் படமெல்லாம் பார்க்கிற ,நம்மக்கிட்டே எல்லாம் லோக்கல் தமிழ் ஆக்‌ஷன் படத்தினை பத்திலாம் அளந்து விட ஆசைப்படாதீர் :-))

#//படம் போட்டுட்டா அமெரிக்கா காரன் கஞ்சா செடிக்கு பாதுகாப்பா நின்னுகிட்டிருக்கான்னு அர்த்தமா?//

அரைவேக்காடு தனமாகவே பேசும் நீர் ,உலக நடப்பெல்லாம் தெரிந்தார்ப்போல அளந்து விடுவதை நிப்பாட்டும்,நான் தான் கார்டியன், நியுயார்க் டைம்ஸில் வந்த கட்டுரைகளின் சுட்டிப்போட்டு இருக்கேனே, அதில் இருப்பதை தானே சொல்லி இருக்கேன். இன்னும் இணையத்தில் தேடினால் நிறைய அப்படியா கட்டுரைகள் கிடைக்கும். இதுக்கு தான் முழுசா படிச்சிட்டு பேசணும் என சொல்வது.

என்கிட்டேயே இன்னும் பல இணையத்தளங்களின் சுட்டி இருக்கு,அதை எல்லாம் போட்டால் மட்டும் படிச்சு பார்க்கவா போறீர், வழக்கம் போல ,லோகநாயகருக்கு காவடி ,கெரகம்னு தூக்கிட்டு ஆடப்போறீர் :-))

பதிவை முழுசாக படித்து விட்டு,சுட்டிகளையும் பார்த்துவிட்டு பின்னர் ,வாரும் கதைப்போம்.

#//அமெரிக்காவுக்கு தகவல் சொன்னா தலிபான்காரன் தலையை வெட்டி விடுவான்.தலிபான்களுக்குப் பயந்துகிட்டு சொல்லாமல் இருந்தால் அப்ப நீ தலிபானுக்கு உதவி செய்கிறாய் என அமெரிக்கா காரன் மொழிபெயர்ப்பாளனை வைத்துக்கொண்டு மிரட்டுகிறான்.//

தலிபான்கள் மட்டும் க்ல்லுறாங்க,அமெரிக்காக்காரன் அன்பா மொழிப்பெயர்ப்பாளர் வச்சி கேள்விக்கேட்பான்னு சொல்லுவதில் இருந்தே உமக்கும் அமெரிக்க பாசம் அதிகம்னு தெரியுது :-))

Anonymous said...

I've read some just right stuff here. Definitely price bookmarking for revisiting. I surprise how so much attempt you put to make this kind of excellent informative site.

Feel free to surf to my web site - buy followers

Anonymous said...

Vovs...What the US is doing there....They said other reasons for securing the opium fields. Let us know whats real situation there...?


http://www.washingtonsblog.com/2012/10/14066.html

----By--
Maakkaan.

naren said...

வவ்வால்,
பதிவுகளை படிக்க நேரமிருந்தது, மறுமொழி எழுதத்தான் நேரமில்லை. தோலை நல்லா உரிச்சீங்க போங்க.

Ignorance is bliss என்பாங்க. இந்த படத்தில் அது நமக்கு வாய்க்கவில்லை.

ஆனா நமக்கும் லோகம் சொன்ன லோகறிவு கொஞ்சம் இருப்பதால் படம் பார்த்தவுடன் ஒரே சிரிப்புதான். ச்சே ஸ்பூப் படம் என்று பார்த்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

ஆண்ட்ரியாவை விசாரித்த அந்த FBI ஆப்பிசரை பார்த்தால், ஏதோ FBI அலுவலகத்தில் housekeepingல் வேலைப்பார்க்கும் பெண்மணி போலத்தான் இருக்கிறாள்.

நுனிபுல்லைத்தான் மெய்ந்திருக்கிறார் என்றும் சொல்லவும் முடியவில்லை. நமக்கு அதில் cud, rumination ம் வரவில்லை. சும்மா மொந்துதான் பார்த்திருக்கிறார் லோகம்.

பாண்ட்ஸ் பவுடரை முகம் முழுவதும் அப்பி இதோ ஆணழகன் வர்ரான் பாரு என்ற கதைதான் ரூப கதை. இலக்கியவாதியாக சொல்லனும்னா ஆன்மா இல்லாத கதை.

எதோ மார்க்க”வியாதி”யால் ஓடுது.

ஒரு தடவை சொன்னா... நூறு தடவை.... என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப.

ஒரு நாள் ஓடிய ரூபம்....நூறு நாள் ஓடியதற்கு சமம்.

நன்றி.

வவ்வால் said...

மாக்கான்,

நன்றி!


சுட்டிப்பார்த்தேன்,இது போல நிறைய தளத்தில் இருக்கு,ஒரு படம் மட்டும் தான் நான் போட்டேன்,இன்னும் வியட்நாமில் அமெரிக்கா செய்தது எல்லாம் படிச்சால் உண்மையான நோக்கம் தெளிவா தெரியும்,எனது பதிவில் எல்லாவற்றையும் தொட்டுக்காட்டியிருப்பேன்,எல்லாம் ஆதாரத்துடன் இணையத்தில் சொல்லி இருப்பதே, இப்போ நீங்களே கூட கண்டுப்பிடிச்சு இருக்கீங்க,இப்போ உங்களுக்கே புரியும்,ஆனால் இன்னும் ராச நடப்போன்றவர்கள் கிணற்று தவளையாக இருக்கிறார்கள்,இது போன்றவர்கள் இருக்கும் போது அமெரிக்காவுக்கும் கவலையில்லை,லோகநாயகருக்கும் கவலையில்லை :-))

இன்னும் சில இணைய தளங்களில் பிடிஎஃப் ஆக நிறைய கிடைச்சது ,ஏகப்பட்ட கதையிருக்கு,எல்லாம் ஒரு பதிவில் சொல்லத்தேவையில்லைனு விட்டாச்சு.

அமெரிக்க உளவு,ராணுவ செலவுகளுக்கு ஓப்பியம் பணம் மிகவும் தேவை,மேலும் பலரும் தனிப்பட்ட வகையில் லாபம் அடைவதாக சொல்கிறார்கள்,உலக அளவில் போதை மருந்தின் விலையை நிர்ணயிக்கும் சக்தியே அமெரிக்கா தானாம் :-))

naren said...

வவ்வால்,

அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட கடன். மேலும் ஏற்றுமதியை விட நிறைய இறுக்குமதி செய்கிறது. அப்படியென்றால் அமெரிக்க டாலர்கள் மற்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. அவற்றை திரும்ப அமெரிக்காவிற்கே வரவழைக்க போதைப் பொருள் வணிகம் உதவலாம்.

இது, தன்நாட்டில் மட்டும் போதைப்பொருள் வணிகம் நடைப்பெற்க்கூடாது, அதன் தீமை அண்டக்கூடாது என்ற செய்கையிலிருந்து வெளிப்படுகிறது.

அமெரிக்காவிற்கு இது வெற்றி-வெற்றி (win win) நிலைதான்.

நாம் காய்ச்சும் கள்ளச்சாராயத்தை ஏதாவது பண்ண முடியுமா என்று யோசிக்கவேண்டியுள்ளது.

வவ்வால் said...

நரேன்,

வாரும்,நன்றி!

லோகம் படம் பார்த்ததும் எனக்கு மட்டும் தான் சிரிப்பு வந்துச்சுனு நினைச்சேன் உங்களுக்கும் வந்துச்சா,பரவாயில்லை நமக்கும் துணைக்கு ஆள் இருக்கு :-))

லோக அறிவு எனக்கும் கொஞ்சம் இருந்து தொலைச்சுப்போச்சு பேசாம "சின்னதம்பி" போல வளர்ந்திருக்கலாம்,நிம்மதியா இருந்திருக்கும் :-))

மாட்டு டாக்டர் போல ருமினன்ட் கட் பத்திலாம் சொல்லுறிங்க,நல்லா அசைப்போடுவிங்க போல :-))

ராச நடனு ஒரு லோகதாசர் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்ப்பிடிக்கிறாப்போல இது ஒலகப்படமே தான்னு ஒத்தக்காலில் நிக்கிறார் ,அவரப்பார்த்தா கொஞ்சம் வேப்பிலை அடிச்சு விடுங்க :-))

மார்க்கப்பந்துக்களின் புண்ணியத்தால் லோகத்தின் வீடு தப்பிச்சது :-))

பிவிபி சினிமாக்கு எனிமா கொடுக்காம காச திருப்பினாரானு தெரியலை :-))

நம்ம தியேட்டரில் ஒரு நாள் ஓடினா ஒரு வருஷம் ஓடினாப்போல :-))

வவ்வால் said...

நரேன்,

நான் பதில் தட்டிக்கிட்டு இருக்கும் போதே இன்னொரு பின்னூட்டம்,ரொம்ப வேகமா இருக்கீங்களே:-))

அமெரிக்கா அதன் பொருளாதார அளவை விட மிக அதிகமா டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளது,எல்லாம் வெளிநாட்டில் புழக்கத்தில் இருக்கும் வரை தான் அமெரிக்க பொருளாதாரம் நிற்கும்,எனவே அந்த டாலர்கள் அமெரிக்கா பொருளாதாரத்தினுள் மீண்டும் நுழையாமல் இருக்க வேண்டும்.

அப்புறம் ஏன் அமெரிக்கா இறக்குமதி செய்ய வேண்டும் என்கிறீர்களா? உலக அளவில் அமெரிக்க டாலருக்கு வணிக மதிப்பை அதாவது இன்டெர்நேஷனல் நாணயமாக இருக்க வைக்கவே. அப்போ தான் டாலர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்,நம்மக்கிட்டே பொருள் வாங்குதுனு,நம்பி எல்லா நாடும் அமெரிக்க டாலரை கையிருப்பில் வைக்க விரும்புவார்கள், இதனை மேலும் வலுப்படுத்த எண்ணை வியாபாரத்தினையும் டாலரில் நடக்க வைக்கிறது.

அமெரிக்க டாலருக்கு மதிப்பினை நிலைக்க வைக்க ,சர்வதே அளவில் நடக்கும் அனைத்து வியாபாரத்திலும் ,போதை மருந்து உட்பட பங்கெடுத்து ,மறைமுகமாக டாலர் புழக்கத்தினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது.அப்படி செய்யவில்லை எனில் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து விடும்,இப்போ கொஞ்சம் தள்ளாடக்காரணமும் அதான்.

அமெரிக்காவில் போதை மருந்து நடமாட்டம் கம்மியாக எல்லாம் இல்லை, உலகின் பெரும் டிரக் மாஃபியா எல்லாம் அமெரிக்காவில் தான் நிரந்தரமாக குடியிருக்காங்க. லாஸ் ஏஞ்சல்ஸ் தான் டிரக் ஹெட் குவாட்டர்ஸ்னு சொல்லுறாங்க. உலக அளவிலான டீல் எல்லாம் அங்கே தான் நடக்குதாம்.

எல்லாமே அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டுக்குள் நடக்க வேண்டும் அவ்வளவு தான். இன்னும் சொல்லபோனால் அரசின் கொள்கை முடிவுகளை சிஐஏ போன்றவையும் சில பெரும் பணக்கார தொழிலதிபர்களும் தான் தீர்மானிக்கிறார்கள்னு பலக்கட்டுரைகள் இருக்கு.

Anonymous said...

Vovs....See this link for "CIA's drug dealing history".http://www.serendipity.li/cia.html


By---

Maakkaan.

வவ்வால் said...

மாக்ஸ்.

நன்றி!

உங்க சுட்டியைப்பார்த்தேன், இதே செரன்டிப்பிட்டி தளத்தில் இருந்து தான் நான் மாஃபியா பத்தி பதிவுப்போட்டபோது சில தகவல்கள் எடுத்தேன், இந்த தளம் எந்த அளவுக்கு நம்பகம்னு தெரியலை ,ஒரு ரெஃபெரன்ஸுக்கு அப்போ பார்த்து வச்சுக்கிட்டேன்.

அப்போ இந்த குறிப்பிட்ட பக்கம் பார்க்கலை,உங்க மூலமாக பார்த்தாச்சு, பல இணைய தளங்களில் நிறைய இருக்கும் ,எல்லாம் பார்க்க சோம்பலாகிடும்,இப்படி குறிப்பாக எடுத்துப்போட்டால் நல்லா தான் இருக்கும் :-))

அப்புறம் நான் தான் சிஐஏ வின் இருண்ட பக்கங்கள் பத்தி தான் சொல்லிக்கிட்டு இருக்கேனே,அப்புறம் என்ன நம்பாதவனுக்கு சொல்லுறாப்போல சுட்டி பாருங்கன்னு சொல்லுறிங்க,இதை எல்லாம் ராச நட போன்றவர்களை பார்க்க சொல்லணும்,அவங்க தான் இன்னும் நம்பாமா அதெல்லாம் எப்படினு கேட்டுக்கிட்டு இருக்காங்க :-))

அதுக்குனு சுட்டி போடாமல் இருக்காதிங்க போடுங்க,நமக்கு நினைவுப்படுத்த உதவும்.

Anonymous said...

//அப்புறம் என்ன நம்பாதவனுக்கு சொல்லுறாப்போல சுட்டி பாருங்கன்னு சொல்லுறிங்க. இதை எல்லாம் ராச நட போன்றவர்களை பார்க்க சொல்லணும்//


போன பதிவு "பாகவதர்" நினைவில் நிற்கிறார்...

----by-
Maakkaan.

ராஜ நடராஜன் said...

இந்த மொக்கைப்பதிவு இன்னுமா ஓடுது:)

ஓய்!மாக்கான்!பாகவதரெல்லாம் ஒரே தலைப்புல கதாகாலட்சேபம் செய்றவரு:)

வவ் வாலு!நீங்க பெனாத்துறதை விட கொஞ்சமாத்தானே சொல்றேன்.இவுக சொன்னா உலக நடப்பு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்:)அடுத்தவன் சொன்னா அரைவேக்காடா?ஜால்ரா போடாத காண்டுல பேசுற பேச்சு இது:)

நாந்தான் படத்தில் ஓட்டைகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறேனே.அப்புறமென்ன ஆமாம் / இல்லை டிக் மார்க் செய்ன்னு கேள்விப் பேப்பரை நீட்டுறீங்க.படத்தில் விமர்சனம் செய்ய நிறைய விசயங்கள் இருக்கின்றது போலவே உங்க தொடர் நொள்ளைக்கண்ணு பதிவுகளும் ஒரு பக்க பார்வையாகவே இருக்கிறதென்பதை ஏன் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்?

ஆரோ ஒலி முதல் உங்க பதிவுக்கு இணையாக பல விசயங்களை நானும் தொட்டிருக்கிறேன்.இவுக சொன்னா லோகமெல்லாம் கரைச்சு குடிச்சிருக்காக.அடுத்தவன் சொன்னா புளிக்கிற மாவுல தோசை சுடறான்:)

நீங்க நுனிப்புல் மேய்வதை விட ஹாலிவுட் பாலா பிக்ஸார் பத்தியெல்லாம் ஆணி வேறு அக்கு வேறா பிரிஞ்சு மேய்ஞ்சிருக்கிறார்.அவருக்கு சுட்டி கொடுத்தாலே ஒரே உணர்ச்சிகரமா உருகுறார்ன்னு நீங்க உதாசீனப்படுத்தும் போதே உங்க ஒலக அறிவுக்கு மார்க்கு போட்டிருக்கனும்:)Grow up vov val.அப்புறமா அடுத்தவங்க உயரத்தைக் கணக்கிடலாம்:)

கார்டியன் சுட்டி மாதிரி நானும் சுட்டிகள் கொடுக்க முடியும்.ஆனா அது புளிக்குதுன்னு சொல்வீங்க.புளி ரசத்தை விட நீங்க முன்னாடியே தொட்ட VOD சோர்ஸ்கள் நிறைய இருக்கின்றன.

சி.ஐ.ஏக்காரனுக்கு முக்கிய தொழிலே கஞ்சா விற்பதுதான்னு சொல்வதற்கே உங்களை சி.ஐ.ஏக்காரன்கிட்ட புடிச்சி கொடுக்கலாம்:)உலக டாலர் வர்த்தக பரிமாற்றமே அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது என்கிற அடிப்படை கூட தெரியாம வவ்வாலுக்கு ஒண்ணரைக்கால்தான் சொன்னா என்ன செய்ய முடியும்?

விஸ்வரூப மாமி பணத்தை சேஃப்ல வைக்கிறது சேபான்னு கேட்பதற்கு மிடில் ஈஸ்ட் ஏனைய நாடுகள் அமெரிக்க டாலரில் முதலிடுவ்தில்லையென்பது இரட்டைக் கோபுர நேரத்து குறுகிய காலப் போக்காக இருந்திருக்கலாம்.ஆனால் பெட்ரோலியப் பொருளாதாரமும்,அரேபிய ஷேக்குகளின் பெட்ரோலிய ஏனைய வியாபாரங்கள் அமெரிக்காவிலேயே இன்னும் முதலீடு செய்யப்படுகிறது.9/11க்கு முன்பான ஹவாலாக்கள் இப்பொழுது குறைந்திருக்கின்றன.

அமெரிக்க அண்ணாத்தைகள் பேட்ரியாட் சட்டத்துக்கு பயந்தும் நந்தவனத்தான் ஒரு முறை சி.ஐ.ஏ ஒட்டுக்கேட்பான்னு சைனாக்காரன் கதவுப்பக்கம் எட்டிப்பார்க்கிற பயம் மாதிரி யாரும் வாயே திறக்க மாட்டேங்கிறாங்க:)

ராஜ நடராஜன் said...

போதை மருந்துக் கடத்தல் பற்றி முன்பு மியாமி வைஸ் என தொடர்க்காட்சி வந்தது.மைக்கேல் டக்ளஸ் நடித்த டிராபிக் என்ற ஆஸ்கார் விருது படம் அமெரிக்க மெக்ஸிகோ போதை மருந்து பற்றி சொல்கிறது.அமெரிக்காவிலேயே போதை வியாபாரிகள் உட்கார்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.எந்த தலிபான்,ஆப்கானிஸ்தான் வார் லாடுகள் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டுள்ளான்:)

ராஜ நடராஜன் said...

என்னமோ சி.ஐ.ஏ ரகசியத்தையே கார்டியன்,மற்றும் நியுயார்க் சுட்டிகள் கொடுத்த மாதிரி பீலா உடுறீங்களேன்னு நினைச்சேன்.ஆப்கானிஸ்தானிலேயே அதிக ஆபத்து நிறைந்த பகுதி ஹெல்மந்த் பகுதி.ஏனென்றால் தலிபான்களின் ஆதிக்கம் இந்த பகுதியில்தான்.

கர்சாயின் தம்பி என்ன சி.ஐ.ஏ கிட்ட பணம் வாங்குவது.அமெரிக்காவையும் சமாளிக்கனும்,கஞ்சா வார் லார்டுகளையும் சமாளிக்கனும்ங்கிற இரட்டைக் கொள்கையால் இடது கைப்பக்கம் ஒருவர்,வலது கைப்பக்கம் ஒருவர் என பொதுமேடையிலேயே சமரசம் செய்து கொண்டார்.

நேட்டோ படைகள் ஒவ்வொரு பகுதியாகப் பிரித்துக்கொண்டு கேம்ப் போட்டுக்கொண்டுதான் தலிபானை ஒழிக்கிறேன் பேர்வழியென வெர்ச்சுவலா போர்ப்பயிற்சி பெறுகிறார்கள்.நேட்டோ படைகளினூடே கூட கோ ஆர்டினேசன் கிடையாது.கனடா,டென்மார்க் படைகள் ஒரு விதத்தில் போரை கையாள்கிறார்கள்.அமெரிக்க படைகள் ஒரு விதத்தில் தலிபான்களை கையாள்கிறார்கள்.எவ்வளவுதான் குறைபாடுகள் இருந்தாலும் கூட நேட்டோ படைகள் முக்கியமாக அமெரிக்க படைகள் ஆப்கானிலிருந்து விலகிக்கொள்ளூம் பட்சத்தில் கர்சாய் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தலிபான் தாக்குதல்களை எதிர்கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.மேலும் தலிபான்கள் ஆப்கான்,பாகிஸ்தான் பெஷாவர் பகுதியிலிருந்து ஐ.எஸ்.ஐ உதவியுடன் இயங்குபவர்கள்.அமெரிக்கா தீவிரவாதத்தை ஒழிக்கவும்,தளம் மற்றும் நீண்ட நாள் கூட்டணி என்ற பெயரில் தரும் பண உதவியின் ஒரு பகுதி தலிபான்களுக்கும்,ஆப்கானிஸ்தானுக்கு கர்சாயின் ஆட்சிக்கு எதிராகவும் செலவிடுகிறது.

தற்போதைய நிலையில் தலிபான் படைகளும்,பாகிஸ்தானிய ராணுவமும் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் என்ற நிலையிலேயே மையம் கொண்டுள்ளன.அமெரிக்க படைகள் நிரந்தரமாக வெளியேறும் போது காஷ்மீர் பிரச்சினை மறுபடியும் பெரிதுபடுத்தும் வாய்ப்புக்களும் இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் நிகழவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற Strategy பற்றியெல்லாம் கவலைப்படாமல் சி.ஐ.ஏ கஞ்சா விக்குதுன்னு கவலைப்படுங்க:)

லோகநாயகர் உங்க மாதிரி உலகஞானம்ன்னு சொல்லிட்டு என்னை மாதிரி அரைகுறைகளை அம்போன்னு விட்டு விட்டாரே:)

ராஜ நடராஜன் said...

அமெரிக்கா ஒசாமா பின்லேடனை ஆப்கானிஸ்தானில் டோராபோர குகைக்குள் தேடிகிட்டிருந்த காலத்திலேயே பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பழங்குடியினர் பகுதியிலோ அல்லது பாகிஸ்தானின் மையப்பகுதியிலோ பின்லேடன் டேரா போட்டிருக்க கூடுமென கணிச்ச ஆளுக நாம.ஆனாலும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே காம்பவுண்ட் கட்டி வூடு கட்டிகிட்டு பின்லேடன் இருந்தாரென்பது கொஞ்சமும் எதிர்பார்க்காதுதான்.

ஆமா!பின்னூட்டத்தில் ஒருத்தர் நீங்க எதை சிறந்த படமாக சொல்வீர்கள் என்று கேட்டிருந்தாரே!அதற்கு ஒரு பதிலையும் காணோமே:)R.Puratchimani said...

மிகவும் விரிவான அருமையான அலசல் வவ்வால்

முட்டாப்பையன் said...

நடராசரு.

பதிவுல சொன்னதை--பூனும் சொல்லலாம்.
புஸ்பம்ன்னும் சொல்லலாம்.

சார் நடராசரு.ஒப்புதல் வாக்குமூலம் கேள்விபட்டிருக்கோம்.ஆனா இப்படி ஒன்னு கேள்வி பட்டதே இல்லை.தொடரவும்.
:-))))

பொழுது போகணும்ல.

யோவ்வ்வ்வ்.வவ்வாலு_அடுதுத்த பதிவு போடும்.
இன்னும் நிறைய முட்டாளை தெரிந்துகொள்வோம்.

:-))))

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

வழக்கம் போல ,இன்னதென இலக்கில்லாமல் அம்புவிட்டு இருக்கீங்க :-))

# படத்தில் ஓட்டைகள் இருக்குனு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி! அப்படி எனில் நொள்ளைக்கண்ணு என சொல்லிக்கொண்டு இருப்பது உமது லோகதாச வெறியினாலா?

# பிக்சார் பற்றி எழுதியதை யார் என்ன சொன்னா? இந்த படத்திற்கான விமர்சனம், விமர்சனம் என்ற வரையில் இல்லாமல் உணர்ச்சிகரமான ரசிகரின் பாராட்டு பத்திரமாக இருந்தது என்று தான் சொல்லி இருக்கிறேன் , உங்களுக்கு எதனையும் சரியாக புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்றால் என்ன செய்வது?

சாம்பார் நல்லா வச்சார்,அப்போ சிக்கன் குழம்பும் நல்லா செய்வார்னு நம்புவது போல இருக்கு உங்க பேச்சு :-))

# //சி.ஐ.ஏக்காரனுக்கு முக்கிய தொழிலே கஞ்சா விற்பதுதான்னு சொல்வதற்கே உங்களை சி.ஐ.ஏக்காரன்கிட்ட புடிச்சி கொடுக்கலாம்:)உலக டாலர் வர்த்தக பரிமாற்றமே அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது என்கிற அடிப்படை கூட தெரியாம வவ்வாலுக்கு ஒண்ணரைக்கால்தான் சொன்னா என்ன செய்ய முடியும்?//

கண்ணை மூடிக்கிட்டு அலைவதே வேலையாப்போச்சு ,நாம ஏற்கனவே டாலர் அரசியல் பொருளாதாரம்னு தனியாகவே பதிவெல்லாம் போட்டாச்சு,ஏன் இங்கு கூட நரேனுக்கு இட்ட பின்னூட்டம் பார்த்திருந்தாலே புரியும்,

//அமெரிக்கா அதன் பொருளாதார அளவை விட மிக அதிகமா டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளது,எல்லாம் வெளிநாட்டில் புழக்கத்தில் இருக்கும் வரை தான் அமெரிக்க பொருளாதாரம் நிற்கும்,எனவே அந்த டாலர்கள் அமெரிக்கா பொருளாதாரத்தினுள் மீண்டும் நுழையாமல் இருக்க வேண்டும்.

அப்புறம் ஏன் அமெரிக்கா இறக்குமதி செய்ய வேண்டும் என்கிறீர்களா? உலக அளவில் அமெரிக்க டாலருக்கு வணிக மதிப்பை அதாவது இன்டெர்நேஷனல் நாணயமாக இருக்க வைக்கவே. அப்போ தான் டாலர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்,நம்மக்கிட்டே பொருள் வாங்குதுனு,நம்பி எல்லா நாடும் அமெரிக்க டாலரை கையிருப்பில் வைக்க விரும்புவார்கள், இதனை மேலும் வலுப்படுத்த எண்ணை வியாபாரத்தினையும் டாலரில் நடக்க வைக்கிறது.

அமெரிக்க டாலருக்கு மதிப்பினை நிலைக்க வைக்க ,சர்வதே அளவில் நடக்கும் அனைத்து வியாபாரத்திலும் ,போதை மருந்து உட்பட பங்கெடுத்து ,மறைமுகமாக டாலர் புழக்கத்தினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது.அப்படி செய்யவில்லை எனில் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து விடும்,இப்போ கொஞ்சம் தள்ளாடக்காரணமும் அதான்.//

சுருக்கமாக சொன்னது, இன்னும் விரிவாகவும் சொல்ல முடியும்,அது இப்பதிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

லோகநாயகரை குற்றம் சொல்லிட்டாங்க என்ற காண்டுல கண்ணை மூடிக்கிட்டு பொங்குவதால் பயனில்லை,நீங்க வளர கூட வேண்டாம், கண்களை திறவுங்கள்,கருத்துக்களை உள்வாங்குங்கள் :-))

மேலும் நான் என்ன சொந்தமாகவா இந்த போதை வியாபாரக்கதை சொல்லிக்கிட்டு இருக்கேன்,சர்வதேச பத்திரிக்கைகளில் வந்தவற்றை தானே சொல்கிறேன், ஆங்கிலத்தில் இது குறித்து நிறைய படிக்க கிடைக்கிறது, தமிழில் யாருமே எழுதவில்லை போல,நான் முதன் முதலில் எழுதியதும் உங்களுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கிறது,முதன் முதலில் எய்ட்ஸ் தாக்குதலை பற்றி சொன்னப்போதும் யாரும் நம்பவில்லை, அதுக்கு மருந்தேயில்லை, உடலறவு மூலம் பரவும் என்றப்போதும் நம்பாமால் எல்லாம் அசட்டையாக இருந்தாங்க, ஆணுறை அணிய சொன்னதை கிண்டல் செய்தாங்க, இப்போ எல்லாம் என்ன சொல்லுறாங்க,ஆனால் எவ்வளவு சொல்லியும் இன்னமும் நம்பாம மூடநம்பிக்கையோட இருக்கிற இந்தியர்களும் இருக்கத்தான் செய்றாங்க, உங்களை மாதிரி :-))

நான் போட்ட சுட்டிகள் இல்லாமல் நம்ம மாக்ஸ் வேற ரெண்டு சுட்டி போட்டு இருக்காரே பார்க்கிறது,அதில நிறைய படங்கள், இன்னும் சுட்டிகள் இருக்கு படிச்சா கொஞ்சம் விளங்கக்கூடும்.

வவ்வால் said...

தொடர்ச்சி...

# டிராபிக்ம், மியாமி தொலைக்காட்சிலாம் பார்த்தீங்க சரி அதெல்லாம் புரிஞ்சு தான் பார்த்தீங்களா :-))

# //.அமெரிக்க படைகள் நிரந்தரமாக வெளியேறும் போது காஷ்மீர் பிரச்சினை மறுபடியும் பெரிதுபடுத்தும் வாய்ப்புக்களும் இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் நிகழவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற Strategy பற்றியெல்லாம் கவலைப்படாமல் சி.ஐ.ஏ கஞ்சா விக்குதுன்னு கவலைப்படுங்க:)//

ஆஃப்கான்,அமெரிக்கா,பாக்கிஸ்தான்,தலிபான்னு நீட்டி முழக்கிட்டா ,உங்களுக்கு உலக ஞானம் இருக்குதுனு எல்லாம் நம்பிடுவாங்களாம் :-))

பத்திரிக்கைகளில் சொல்லப்படும் கதைகளை படித்தால் மட்டும் போறாது ,சில நுண்ணரசியலை புரிந்துக்கொள்ள வேண்டும்.

சரி இப்படி ஸ்ட்ராட்டஜினு சொல்லிட்டு,அமெரிக்காவுக்கு நாம கவாடி தூக்கிட்டு இருக்கலாமா?

அப்போ இலங்கையில் இதே போல ஸ்ட்ராடஜினு சொல்லி தான் ராசபக்சவை ஆட விடுகிறோம்,அதுவும் சரினு சொல்வீங்களா?

//.ஆனாலும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே காம்பவுண்ட் கட்டி வூடு கட்டிகிட்டு பின்லேடன் இருந்தாரென்பது கொஞ்சமும் எதிர்பார்க்காதுதான்.//

அதெல்லாம் சர்வதேச ராணுவ அரசியலில்சகஜம், அதுவும் பாகிஸ்தான் போன்ற மதவாத அரசியல் மேலோங்கி இருக்கும் இடத்தில் சகஜம்.

அமெரிக்காவிற்கு தெரியாமல் எல்லாம் இருந்திருக்காது,பாகிஸ்தானின் இரட்டை வேடம் எல்லாம் உணர்ந்தேயிருந்தது,என்ன ஒரே அடியாக கழட்டிவிட முடியாத சூழல்,எனவே கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்ய வேண்டியதாக இருந்தது.

ஓசாமாவை அமெரிக்க நேவி ஸீல் குழு வேட்டையாடியதாக சொல்வதே கட்டுக்கதைனு ஒரு கதை இருக்கே தெரியுமோ :-))

# ஹி...ஹி நல்ல படம் பார்த்தால் நல்ல படம்னு சொல்லுவேன் :-))

ஓய் வாரத்துக்கு நான்கைந்து சினிமா விமர்சனம் எழுதுறவங்களை எல்லாம் விட்டுப்புட்டு என்னைப்பார்த்து ஏன் ஓய் கேட்டீர் அவ்வ் :-))

------------------

வவ்வால் said...

மாக்ஸ்.

பாகவதர் வாங்கின ஆப்புக்கு இந்த பக்கம் வர ரொம்ப நாள் ஆகும், அதுவரைக்கும் ராச நடவை வச்சு ஓட்டுவோம் :-))
---------------

புரட்சிமணி,

வாங்க,நன்றி!

எனக்க்கு ஒரு டவுட்டு...பதிவை மட்டும் படிச்சீங்களா இல்லை பின்னூட்டமுமா? பின்னூட்டத்தில் தான் நல்லா அலசியிருக்கேன், அதுக்கு ஏத்தாப்போல ஒருத்தர் தானா சிக்கினார் :-))
----------------
முட்டாப்பையர்,

நன்றி!

என்னய்யா கொடுமை இது, நீரே முட்டாள்களை கண்டுப்பிடிக்க ஆரம்பிச்சுட்டீர் :-))

அடுத்த பதிவுல இன்னொரு ஆடு சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது, ரெடியா இரும் :-))
--------------------

நாய் நக்ஸ் said...

வவ்வால் said...///


முட்டாப்பையர்,

நன்றி!

என்னய்யா கொடுமை இது, நீரே முட்டாள்களை கண்டுப்பிடிக்க ஆரம்பிச்சுட்டீர் :-))

அடுத்த பதிவுல இன்னொரு ஆடு சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது, ரெடியா இரும் :-))///////////////////காத்திருக்கிறோம்.

முட்டாள்களை இனம் கண்டு சொல்லத்தானே எங்கள் தளம் இருக்கு?
என்ன ஒரு சிலருக்கு மதிப்பு தந்து பதிவு போடுவதில்லை.தரம் இருக்கு இல்ல.
:-)))))))

சரி நான் வேளையில் இருக்கிறேன்..பிறகு வரேன்.மீண்டும்
:-)))))))வவ்வால் இந்த முறையாவது உடனே READERல் வருமாறு பதிவு போடவும்.மீண்டும்
:-)))))

Anonymous said...

//அடுத்த பதிவுல "இன்னொரு ஆடு" சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது//


யாரு...பாகவதரா... :-)


By--
Maakkaan.

முட்டாப்பையன் said...

நாய் நக்ஸ் said...

வவ்வால் said...///


முட்டாப்பையர்,

நன்றி!

என்னய்யா கொடுமை இது, நீரே முட்டாள்களை கண்டுப்பிடிக்க ஆரம்பிச்சுட்டீர் :-))

அடுத்த பதிவுல இன்னொரு ஆடு சப்லாக்கட்டையோட வந்து சிக்கப்போகுது, ரெடியா இரும் :-))///////////////////காத்திருக்கிறோம்.

முட்டாள்களை இனம் கண்டு சொல்லத்தானே எங்கள் தளம் இருக்கு?
என்ன ஒரு சிலருக்கு மதிப்பு தந்து பதிவு போடுவதில்லை.தரம் இருக்கு இல்ல.
:-)))))))

சரி நான் வேளையில் இருக்கிறேன்..பிறகு வரேன்.மீண்டும்
:-)))))))வவ்வால் இந்த முறையாவது உடனே READERல் வருமாறு பதிவு போடவும்.மீண்டும்
:-)))))

12:56 AM, February 27, 2013//////////////////////////////////


யோவ்வ்வ்வ் நாய் உனக்கு ஏன்யா இந்த பொழப்பு?
ஏற்கெனவே சொல்லி உள்ளோம் நீ ஒரு ___க்கும் லாயிக்கு இல்லை என்று.
இப்ப எங்களை வைத்து பெரிய ஆள் ஆகலாம் என்று கே.பு தனமான எண்ணமா?

உனக்கு இது கடைசி எச்சரிக்கை.போ நீதான் டம்மி பீஸ் ஆச்சே.
இந்த உட்டாலக்கடி வேலை எல்லாம் உன் அல்ல கைகளுடன் நிறுத்திக்கொள்.

எங்களிடம் வேண்டாம்.குடிகார நாயே.அதுதானே உன் பேர்?
உன்னை தீர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது!?

ராஜ நடராஜன் said...

முட்டாப்பையரு!நீங்க எப்ப வவ்வாலோடு கூட்டணி வச்சீங்க.பதிவுலகிலும் ஒரு ராமதாஸ் இருக்கிறார் போல தெரியுதே:)

வவ்வால் நொள்ளைக்கண்ணில் பார்க்கும் ஒற்றைப் பார்வைக்கு நான் எதிர்க்கணை விடுகிறேன்.அவ்வளவே.

எல்லோரும் ஜோரா கையத் தட்டுங்க!நான் செஞ்சுரி அடிக்கப் போறேன்:)

ராஜ நடராஜன் said...

இதோ!100.

இதுக்கு மேலும் இந்த மொக்கை ஆட்டத்தை தொடராமல் பெவிலியனுக்குப் போறேன்.யாராவது சந்துல சிந்து பாடுனா மறுபடியும் வாரேன்.வர்ட்டா!

வவ்வால் said...

மாக்ஸ்,

குறியீடாக சொன்னால் கப்புனு புரிஞ்சிக்கணும் :-))
-------

நக்ஸ் அண்ணாத்த,

என்ன முட்டாப்பையருக்கும் உங்களுக்கும் டீலிங்?

பதிவை போடுறது தான் தெரியும் ,அப்புறம் நடப்பதெல்லம் மக்கள் கையில்.
---------------

முட்டாப்பையர்,

என்னாய்யா பிரச்சினை திடீர்னு நக்ஸ் மேல பாயிறீர்,எல்லாம் ஒரே முகாமில்லையா?ஒரே கன்பியுஷனா இருக்கே,சரி விடுங்கப்பா,சரக்கு அடிக்கிறத எல்லாம் குத்தம் சொல்லிக்கிட்டு ,அடுத்தவனை மங்கலம் பாடி சரக்கடிச்சா தான் தப்பு.
----------

ராச நட,

வாரும்,

காத்தாடுது,100 நாள் ஓடாதுனு சொல்லிட்டு 100 அடிச்சிட்டு போறீர்,இப்பவாது தெரிஞ்சுக்கும் நம்ம கெத்த, பிரப்ல திரட்டிலாம் இல்லாமலே நம்ம கொட்டாயில சில்வர் ஜீப்ளி ஓடும். நாம தனிக்காட்டு ராஜா :-))

மொக்கை அம்பெல்லாம் தீர்ந்து போயி நிராயுத பாணியா இருக்கீர்,இன்று போய் நாளை வாரும் :-))

நாய் நக்ஸ் said...

வவ்வால்....இந்த பதிவை கமல் FB-ல்
லிங்க் பகிர்ந்துள்ளேன்.

நாய் நக்ஸ் said...

http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_25.html

இந்த சுட்டியில் உள்ள அனைத்தையும் படிக்கவும்....

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

உங்க இம்சைக்கு எல்லையே இல்லையா, லோகநாயகரை கலாய்க்கிற பதிவை கொண்டு போய் அங்கே இணைப்புக்கொடுத்தா வைப்பாங்களா,உடனே தூக்கிடுவாங்க, எனக்கு தெரியாது ,அங்கே சுட்டி போட, எதுக்கு வீணா லந்து செய்துக்கிட்டுனு தான் எங்கும் சுட்டிக்கொடுப்பதில்லை, இப்போ பாருங்க யாராவது லோகதாசர் வந்து நொய் ,நொய்னு கூவினாலும் கூவுவாங்க :-))

# கலையரசனு எழுதுபவர் பதிவா ஒன்றிரண்டு பார்த்திருக்கேன் ,இப்ப என்னனு பார்க்கிறேன்.

Anonymous said...

DogNax waste link...

நாய் நக்ஸ் said...

வவ்வாலு வர ஆரம்பிச்சிட்டாங்க.....
செம ஹிட் ஆகும் உம்ம பதிவு...என்ஜாய்....

ராஜ நடராஜன் said...

இந்த மொக்கைக்கு அதிகமாக பின்னூட்டம் போட்டவனே நாந்தான்.பின்ன யாரு செஞ்சுரி அடிப்பா?

உங்க ஆயுதங்களை நீங்கதான் மெச்சிக்கனும்:)

Anonymous said...

Secrets of the CIA, documentary:

http://www.youtube.com/watch?v=4RXPJmqkxmI&feature=related


The above link is for who don't know about CIA.

By---Maakkaan.

வவ்வால் said...

அனானி,

நன்றி!
------

நக்ஸ் அண்ணாத்த,


ஏற்கனவே போதுங்கிற\அளவுக்கு ஹிட்டாகிடுச்சு,இதுக்கு மேல எல்லாம் பேராசைப்படக்கூடாது :-))

---------

ராச நட,

எதா இருந்தாலும் நான் தான்..நான் தான்னு சொல்லிகோங்க :-))

ஹி...ஹி இந்தப்பதிவுல உண்மையில அதிகமா பின்னூட்டம் போட்டது அடியேன் தான் ,எல்லாத்துக்கும் பதில் சொல்லி இருக்கேன்ல,கூட்டிக்கழிச்சுப்பாரும் கணக்கு சரியா வரும் :-))

அம்பு ,சொம்புன்னு கைப்புள்ளக்கணக்கா பேசிட்டு இருக்காம ,மாக்ஸ் ஒரு யூட்டீயூப் சுட்டிப்போட்டிருக்காரு போய் அதில படம் பாருங்க.

---------

மாக்ஸ் ,

காணொளி சுட்டிக்கு நன்றி!

காணொளிகளை கண்டப்பின் போட வேண்டும் என்பதால் ,பொறுமையாக பார்க்க முடியாமல் போடுவதில்லை,காணொளி இல்லாத குறையை தீர்த்துட்டிங்க நன்றி!

தருமி said...

கொஞ்சம் பிரிச்சி பிரிச்சி போட்டுட்டா ஈசியா ஒரு M.Phil. பட்டம் கொடுத்திரலாம்.

வவ்வால் said...

தருமிய்யா,

வாங்க,நன்றி!

இப்படிலாம் எழுதினா எம்பில் பட்டம் கொடுப்பாங்களா,தெரியாம போச்சே,தெரிஞ்சிருந்தா இன்னும் ஒரு நாளு பக்கம் சேர்த்து மொக்கை போட்டிருப்பேன் :-))

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் பதிவை மட்டும் படிச்சிங்களா ,பின்னூட்டங்களுமா?

ஹி....ஹி முழுசா படிச்சிருந்திங்கன்னா ,உங்களுக்கு டாக்டர் ஆஃப் தி டாக்டர்னு ஒரு பட்டமே கொடுக்கலாம் :-))

பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி!

தருமி said...

மன்னிக்கணும். பின்னூட்டங்கள் முழுவதையும் வாசிக்கவில்லை. ஆனால் பதிவு முழுவதும் வாசிச்சிட்டேன். ‘சின்ன கவுண்டர்’ படத்திற்கு M.Phil. கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த நினைவு வந்ததால் உங்களுக்கும் ரெக்கமென்ட் பண்ணினேன். really it is worth it.

வவ்வால் said...

தருமிய்யா,

நன்றி!

பரவாயில்லிங்கய்யா, பின்னூட்டம் கொஞ்சமாச்சும் படிச்சீங்களே,ஏன் கேட்டன்னா ,நம்ம பதிவில் பின்னூட்டங்களில் தான் ஆக்‌ஷன் தூள் பறக்கும்,எம்சிஆர் படம் போல வாள்வீச்சுலாம் உண்டு :-))

சினிமா பாட்டெல்லாம் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கினாங்க,படத்தையும் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கிட்டாங்களா, அப்போ நாட்டுல ஏகப்பட்ட டாக்டருங்க இருப்பாங்களே?

//really it is worth it.//

நன்றி!

இதை பார்க்க ராச நடை இல்லாம போயிட்டாரே :-))

KUTTI said...

great article...

congrats...

Mano

Anonymous said...

பதிவு படித்தேன்...! 114 பின்னூட்டங்களை வாசிக்கவில்லை. நீங்கள் சொன்னதில் சில விஷயங்களை நானும் படம் பார்த்ததும் எழுந்த கேள்வியாக இந்த பதிவில் எழுதி உள்ளேன்.

http://pizhaikal.wordpress.com/cinema-review/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-seriously-kamal-are-you-kidding/

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாறுபடுகிறேன்... while the preparation is mediacore in terms of alert, they indeed had a bomb disposal squad there.

while the fbi agent call he gets informed that NEST Team has already arrived...

//போலீஸ் சம்பவ இடத்துக்கு வரத்துக்கு முன்னாடியே அங்க NEST படையை சேர்ந்தவர்கள் வந்திருப்பார்கள். NEST என்பது Nuclear Emergency Support Team. அணு பாதிப்புகளுக்கு உதவுவதற்கான தனி பிரிவு… ஒரு வார்த்தைக்காக கொஞ்சம் ஆழ்ந்து கண்டு பிடிச்சு இத பிரயோகிச்சது சந்தோஷம்… ஆனா அமெரிக்க படைல இருக்ரவங்களுக்கு விஷயம் தெரியாது…. சீசியம் பாம் பத்தி நிரூபமா போய் சொல்லனும்ன்றதுலாம்.. மூணு வயசுலையே காது குத்தியாச்சு கமல்//

-லாஓசி

Anonymous said...

The [url=http://lfcream.com]buy lifecell cream[/url] style of living and diet - there exists as yet no categorical and incontrovertible resistant they slow down ageing consequently. life cell Lifecell http://ywashst.com the more well-known types.

Unknown said...

இவ்வளவு செலவழித்து யாருக்குமே புரியாத மொக்கையான ஒரு படத்தைக் கொடுத்து விட்டு மார்தட்டுகிறார் கமல். அவருக்கு இல்லாத (எதையும் தெரிந்து சரியாகச் சொல்லும்) மெனக்கெடல் விமர்சிக்கும் தங்களுக்காவது இருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாராட்டுக்குரிய விமர்சனம். வவ்வாலை தலை கீழாக நின்று வாழ்த்துகிறேன்.
-சி.என்.இராமகிருஷ்ணன்

Anonymous said...

இவ்வளவு செலவழித்து யாருக்குமே புரியாத மொக்கையான ஒரு படத்தைக் கொடுத்து விட்டு மார்தட்டுகிறார் கமல். அவருக்கு இல்லாத (எதையும் தெரிந்து சரியாகச் சொல்லும்) மெனக்கெடல் விமர்சிக்கும் தங்களுக்காவது இருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாராட்டுக்குரிய விமர்சனம். வவ்வாலை தலை கீழாக நின்று வாழ்த்துகிறேன்.
-சி.என்.இராமகிருஷ்ணன்

ஜோதிஜி said...

ஏறக்குறைய 1,30 மணி நேரம். பதிவின் முதல் வரி முதல் பின்னூட்ட கடைசி வரை வரைக்கும்.

என்ன எழுதுவது என்றே தெரியல.

காரணம் அடுத்த பதிவில் நான் பார்த்த விஸ்வரூபம் பற்றி எழுதும் முன் நீங்க என்ன சொல்லி இருக்குறீங்கள் என்று பார்க்க வந்தேன்.

மனசார பாராட்டுகின்றேன் வவ்வால்.