Monday, November 07, 2011

தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு , வேண்டுதல்!.தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,
வேண்டுதல்!.நட்சத்திரப்பதிவுகள் என்பது சிறப்பாக எழுதும் பதிவரை மேலும் சிறப்பாக எழுத தூண்ட தமிழ்மணம் மிக சிரத்தை எடுத்து தீட்டிய ஒரு நெடுங்கால திட்டம் ஆகும். ஆனால் தற்போதெல்லாம் பெரும்பாலும் நட்சத்திரமாக தேர்வானவர்கள் காபி&பேஸ்ட்*(terms and conditions apply) பதிவையே நட்சத்திரப்பதிவாக போடுவதைக்காண்கிறேன்.

இது வரைக் காபி & பேஸ்ட் பதிவு போட்டிருந்தாலும் நட்சத்திரமாக தேர்வான காலத்திலாவாது புதிதாக எழுதக்கூடாதா?

அரைவேக்காடு லகடன்கள்,அமுதம் போன்றவை ஏற்கனவே எந்த ஒரு பத்திரிக்கையிலும் வெளிவராத ஆக்கங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என சொல்லும் போது, உலக தமிழ் திரட்டிகளின் தாயான தமிழ் மணம் நட்சத்திரப்பதிவர்கள் கண்டிப்பாக சுயமாக,புதிதான படைப்புகளை மட்டுமே நட்சத்திர வாரத்தில் அரங்கேற்ற வேண்டும் என சொல்லக்கூடாதா, சொல்லலாமே!

பின்குறிப்பு:

இது ஏதோ நான் டைம் பாசுக்கு எழுதுறேன்னு நினைக்ககூடும் , ஆனால் ஏன் தமிழ்மண நட்சத்திர வாரத்திலும் ஒரு பதிவு நேர்,எதிர் என ஓட்டு வாங்கி இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

*a copy and paste is always copy &paste!

இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா?எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா? என்று. ஏன் எனில் இணையத்தில் தமிழ் பற்றி தேடும் போது கண்ணில் படும் பல இலக்கியம் குறித்தான மடல்குழுக்களின் விவாதங்கள் ,வலைப்பதிவுகளீன் உள்ளடக்கம் ஆகியவை , பல தவறான பொழிப்புரைகளை கொண்டுள்ளதாகவே எனக்குப்படுகிறது. ஆமாம் இவர் பெரிய நக்கீரர் குற்றம் கண்டுப்பிடிக்க வந்துட்டார்னு நினைக்காம எனக்கு சந்தேகம் தீர்க்க உதவுங்கள்.

சாதாரணமா தேனீ வளர்ப்பு,காளான் வளர்ப்பு எப்படி என்று எழுத அதை செய்யாதவங்க முன்வர மாட்டாங்க, ஆனால் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் எழுதியவற்றுக்கு விளக்க உரைக்கொடுக்க எந்த தயக்கமும் கொள்வதில்லை,வீட்டுல தமிழ் பேசுறேன் , தமிழ் பதிவுப்போடூறேன் அப்போ , எனக்கு தமிழ் தெரியாதா, இணையத்தில் தமிழ் வளர்க்க வேண்டாமா என்பார்கள்.

சரி தான் , இணையத்தில் தமிழ் இலக்கியம் வளரணும் ஆனால் சரியான விளக்க உரையுடன், நான் தேடியப்போது கிடைப்பதெல்லாம் எனக்கே பிழையாக தெரியுது (நான் கத்துக்குட்டி என்பதை நினைவில்கொள்க).நாமே ஆஃப்பாயில் இதுல அவங்க சொன்னா சரியா இருக்கும்னு அப்படியே விட்டா காலப்போக்கில் பிழையானவையே தேடலின் போது கிடைக்கும்.

சிலர் சிறப்பாக செய்யலாம் ஆனால் கூகிள் தேடலின் போது முதலில் வருவதில்லை. ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் கிடைக்க 1000 பக்கங்கள் திறக்க வேண்டியது இருக்கு.

தமிழ் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் , இணையத்தில் பங்களிப்பு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன், மேலும் அவர்கள் மடல் குழுக்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.அந்த பக்கமும் போய் விவாதங்கள், சந்தேகம் தீர்ப்பது என செயல்ப்பட வேண்டும்.

குறிப்பாக நான் நாலு வருஷமா தமிழில் பேசுறேன் எனவே தமிழ் இலக்கணம்,இலக்கியம் தெரியும்னு சொல்லாம, நல்லா தமிழ் இலக்கியம்,இலக்கணம் படிச்சவங்க,தெரிந்தவங்க இதை செய்யலாமே

கம்பரும் கொம்பரும் என்ற ஒருப்பதிவில், இலவசக்கொத்தனார் என்ற தமிழ் ஆர்வமுள்ளப்பதிவர் இப்படி விளக்கம் போட்டு இருந்தார்(அவருக்கும் யாரோ சொன்னதாம்) அந்த விளக்கம் கீழே,

சுட்டி:
http://elavasam.blogspot.com/2011/11/blog-post.html

//ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா? //

எனக்கு வழக்கம் போல சந்தேகம் வரவே என் சந்தேகத்தினையும், எனது விளக்கத்தையும் ,பின்னூட்டமாக போட்டிருந்தேன்,அது கீழே,

சந்தேகத்தின் சாராம்சம் இதான் நெய்த்து = நெய்ப்பூசிய என வருமா என்பது தான், ஏன் எனில் இது மலர் பற்றிய வரி, மலருக்கு ஏன் நெய்ப்பூச வேண்டும்.என் பின்னூட்டம் படிச்சுப்பாருங்க.

-------------------------------------------------------------------------------

இ.கொ,

பாவம்யா கம்பர், அவர் எல்லாம் இன்னிக்கு இருந்தா இணையம் வந்து தமிழ் கத்துக்கனும்!

அப்புறம் பூவில நெய் பூசி வாணலில போட்டு வறுத்து சாப்பிடணுமா> இப்படிலாமா நெய்த்துக்கு அர்த்தம் வருது? :-))

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப கச்சக சுற்று என்பதோட சேர்த்து பார்த்தா பொருள் மாறுமே,

சரமாக தொடுத்த குளிர்ந்த பிச்சி பூவினை அழககா சுற்றி இருந்தாள் அப்படினு தான் இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.யாரோ ஒரு பொண்ணு ,வள்ளியாக கூட இருக்கலாம் அப்படி கொண்டைல பிச்சி பூ வச்சு இருப்பதை சொல்லி இருக்ககூடும்.

பிச்சி = முல்லை,

தட்பம்= குளிர்,

கச்சக =அழகாக,

சுற்று= சுற்றி இருப்பது,

தனியா ஒரே ஒரு பூவ சுத்த முடியுமா?

நெச்சு= நெய்த= நெய் பூசிய என்று எப்படி எடுத்துக்கொள்வது, பூமேல எல்லாம் இயல்பா ஒரு வாக்ஸ் கோட்டிங்க் இருக்கும், அதை நெய்னு சொல்லி இருக்கலாம்னா, அருணகிரி பாட்டணி மேஜர் படிச்சு இருப்பாரா?
துணி நெய்தல்=இழைகளை இணைப்பது,அப்படியே பூக்களை தொடுப்பதை நெய்த என்று எ 75;ுத்துக்கலாமோ?

அடுத்த வரிகளை போட்டா ,முழுசா படிச்சா வேற பொருள் வரலாம்.அடுத்த வரிகளைப்போடுங்க.

கள்வடியும் பூக்கள்னு சொன்னா அதிலிருந்து கள் எடுத்து குடிக்கிறாங்கனு சொல்வாங்களோ? :-))