Saturday, July 21, 2007

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!


விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை.

வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஈடுபட்டவர்களை பார்ப்போம்!

1)பறக்கும் எந்திரம் பற்றி முதலில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட ,

2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார்.

3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார்.

4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவி மூலாம் ஒரு விமானத்தை 50 மீட்டர் தூரம் பறக்கவைத்தார்.

5)ஓடோ லிலிந்தால் (german)என்பவர் கிளைடர் மூலம் வானில் பறந்து காட்டினார்.

6)இதன் பின்னரே ரைட் சகோதரர்கள்(america) தங்கள் முயற்சியில் இறங்கினார்கள் , கிட்டி ஹாக் , வடக்கு கரோலினா பகுதியில் முதல் பறக்கும் எந்திரத்தை பறக்க விட்டார்கள். அது பை பிளேன் எனப்படும் , 500 மீட்டர்கள் வரைக்கும் பறந்தது , பின்னர் அரை மணி நேரம் வானில் பறந்து காட்டினார்கள், இதன் பின்னறே விமானங்களின் வளர்ச்சி முழு வீச்சை எட்டியது.

விமானம் பறக்ககாரணம் , ஒரு விமானத்தின் மீது செயல்படும் விசைகள் என்னவெனப்பார்ப்போம்!1) மேல் தூக்கும் விசை(lift),

இந்த விசை விமானத்தின் இறக்கைகளின் வடிமைப்பினால் பெறப்படுகிறது. இறக்கையானது மேல் புறம் வளைந்து காணப்படும் அதனால் காற்றில் ஒரு அழுத்த வித்தியாசம் உருவாக்கப்படும். மேல் புறம் அழுத்தம் குறையும் அதே சமயத்தில் இறக்கையின் கீழ்புறம் அழுத்தம் மிகும். எனவே இறக்கைப்பறப்பு மேல் நோக்கி தூக்கப்படும் அதனால் விமானம் மேல் கிளம்ப்பும் , இது விமான எடையை சமன் செய்ய வேண்டும்.அப்போது தான் தொடர்ந்து விமானம் காற்றில் மிதக்கும்.

2) அதற்கு எதிறாக கீழ் நோக்கி செயல்படும் எடை(weight)

3) முன்னோக்கி செயல்படும் உந்து சக்தி(thrust)
இது விமானத்தின் மூக்கில் உள்ள புரோபெல்லர்கள் சுழல்வதால் கிடைக்கிறது ... ஒரு எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் எப்படி காற்றை உள் இழுக்கிறதோ அப்படி செயல்படும் அதன் மூலம் விமானம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

4) இதற்கு எதிறாக பின்னோக்கி செயல்படும் இழுவை சக்தி(drag)

காற்றோடு விமானம் உரசுவதால் ஏற்படும் பின்னோக்கிய இழுவை சக்தி இது , இதனை உந்து சக்தி சமன் செய்ய வேண்டும்.

மேல்நோக்கி செயல்படும் விசை விமான இறக்கை மூலம் எப்படி பெறப்படுகிறது என்பதை விளக்கமாக பார்ப்போம்,

இது இரண்டு விதிகளின் படி விளக்கபடுகிறது ,

1) பெர்னோலி விதி,
2) நியூட்டன் இரண்டாவது இயக்கவியல் விதி!

பெர்னோலி விதிப்படி ...

1)வேகமாக ஒரு திரவம் செல்லும் போது அழுத்தம் குறையும்,

2)ஒரு நீர்மம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இரண்டாக பிரிக்கும் போது இரண்டும் சம தூரத்தை சம நேரத்தில் கடக்கும்.

எனவே பெர்னோலி விதியை செயல்ப்படுத்தும் ஒரு கட்டமைப்பு காற்றில் மிதக்கும்,இதனை காற்றுச்சட்டம் (ஏர் பிரேம்/ஏர் ஃபாயில்) என்பார்கள். இதற்காக விமானத்தின் இறக்கை மேல்புறம் குவிந்து வளைவுடன் இருக்கும் அதனால் மேல்புறம் அதன் பரப்பளவு அதிகமாக இருக்கும்  அதே சமயம் கீழ்புற்ம் சமமாக இருக்கும், எனவே  குறைந்த பறப்பு!

எனவே இறக்கையின் முன்புறம் மோதும் காற்று இரண்டாக பிரிந்து செல்லும் போது மேல் செல்லும் காற்று அதிக தூரத்தை கடக்க நேரிடும் , அதே நேரத்தில்  கீழ் செல்லும் காற்று குறைந்த தூரம் கடக்கும் , ஆனால் இரண்டும் இறக்கையின் பின் புறம் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டும்.

எனவே தானகவே மேல் செல்லும் காற்றின் வேகம் அதிகரிக்கும், அதனால் குறைந்த அழுத்தம் உண்டாகும் அதனுடன் ஒப்பிடுகையில் கீழ் செல்லும் காற்று அழுத்தம் அதிகம் இருக்கும் எனவே இறக்கையின் மீது மேல் நோக்கி ஒரு விசையை உண்டாக்கும்.

இந்த விசையை அதிகரிக்க காற்று இறக்கையின் மீது மோதும் கோணத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக விசைய பெற செய்யலாம்.

நியூட்டனின் விதிப்படி ,விசை = முடுக்கம்xநிறை,
கீழ்புறம் செல்லும் காற்றினை கீழ் நோக்கிய கோணத்தில் திசை திருப்பினால் மேலும் லிப்ட் கிடைக்கும்.

எனவே கீழ் செல்லும் காற்றின் அளவை அதிகரித்தும் , அதனை கீழ் நோக்கிய கோணத்தில் இடப்பெயர்ச்சி செய்ய வைக்க வேண்டும். எவ்வளவு காற்று கீழ் நோக்கி இடப்பெயர்ச்சி செய்றதோ அவ்வளவு எடையை மேல் நோக்கி நகர்த்த முடியும்.

இதனை அதிகரிக்க விமான இறக்கைகளின் பின் விளிம்பில் நகரும் தன்மையுள்ள நீள்ப்பட்டிகள் (எயிலிரான்)இணைக்கபட்டு இருக்கும்.

விமானத்தின் மீது மோதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் லிப்ட் அதிகம் கிடைக்கும் என்பதால் தான் விமானம் பறப்பதற்கு முன் வேகமாக ஓட்டப்படுகிறது.

மேல் எழும்பி பறக்க ஆரம்ப்பித்ததும் முன் செலுத்தும் விசை ப்ரொபெல்லர்கள் மூலம் பெறப்படுகிறது.

மேல் எழும்ப ,கீழ் இறக்க .. இறைக்கைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டிகளை மேல்/ கீழ் நோக்கி நகர்த்துவன் மூலம் செய்யலாம்!

இடம், வலமாக திரும்ப வால்ப்பகுதியில் உள்ள செங்குத்தான அமைப்பு, ரட்டர் எனப்படும் அதனுடன் இணைந்த பட்டிகளை இடது வலதாக திருப்புவதன் மூலம் திருப்பலாம்.

மேற்சொன்ன தத்துவத்தின் அடிப்படையிலேயே நவீன விமானங்கள் உட்பட அனைத்தும் வானில் வட்டமிடுகின்றன.வாய்ப்பு கிடைத்தால் வானில் பறந்துப்பாருங்கள்!

----------------

19 comments:

Anonymous said...

இராமயண காலத்தில் புஸ்ப விமானத்தைக் கண்டுபிடித்து உலகசாதனை செய்தவர்கள் நாங்கள் தான். அமெரிக்கா திருடிக் கொண்டு போயிட்டாங்க.
சந்திரனுக்கு ஆம்ஸ்ரோங் போக முதல் அவ்வையாரை அனுப்பியதும் நாங்களே தான்.?????????????????????????????

புள்ளிராஜா

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வவ்வால்!
நல்ல ஆரம்பம், கட்டுரை விளக்கப்பட்ட விதம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

ஜீவி said...

வவ்வால் அவர்களே!
சின்ன வயசில் படித்தது. தூசு தட்டி
நினைவுக்குக் கொண்டுவந்தேன்.
இந்த மாதிரியான நிறைய அறிவியல்
செய்திகளை அவ்வப்போது அழுத
வேண்டுகிறேன்.

வவ்வால் said...

புள்ளி ராசா ,
ஆமாம் அந்த புஷ்பக விமானத்திற்கு அனுமார் தன் பெட்ரோல் போட்டாரம்!

வவ்வால் said...

பாரி அரசு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

வவ்வால் said...

ஜீவி,

பதிவை படித்து அழுதுடிங்களா அழுத சொல்றிங்க ,உண்மையில் அழுகை வந்தாலும் அவ்வப்போது எழுதுகிறேன் ஜீ.வி! lol

Anonymous said...

ரைட் ப்ரதர்ஸை பறக்க ஆசைப்பட்டதுக்கு எல்லாரும் கிண்டல் பண்ணினாங்களாம். பைத்தியக்காரங்கன்னு. விடாமுயற்சியே அவங்க வெற்றிக்கு காரணம்.

வவ்வால் said...

சின்ன அம்மினி ,

நன்றி!

புதுசா எதாவது செய்ய நினைச்சா முதலில் கிடைக்கும் பட்டம் பைத்தியக்காரப்பட்டம் தானே,சூப்பர் ஸ்டார் சொன்ன செவிட்டு தவளைப்போல போனாத்தான் சாதிக்க முடியும்! ரைட் சகோதரர்கள் அப்படிலாம் சொல்றாங்கனு முயற்சியை கைவிட்டு இருந்து புகழ் பெற்று இருக்க முடியுமா. சைக்கிள் ரிப்பேர் செய்யும் தொழில் செய்தவர்கள் தான் ரைட் சகோதரர்கள். விமானம் பறக்கவிட்டு அழியா புகழ் பெற்றுவிட்டார்கள்.

லக்ஷ்மி said...

நல்ல தகவல்கள், அலுப்பூட்டாம சுவையாவும் சொல்றீங்க வவ்வால். தொடர வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

லஷ்மி,

தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!

குமரன் (Kumaran) said...

வவ்வால், மிக எளிதாக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்தது. இப்போது தமிழில் படிக்க மிக நன்றாகவும் மறந்ததை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.

பெர்னொலி விதியை இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா? இரண்டாகப் பிரியும் காற்று ஏன் ஒரே நேரத்தில் மீண்டும் இணைய வேண்டும்? காற்று வேகமாகச் சென்றால் ஏன் அழுத்தம் குறையவேன்டும்? இரண்டாவதை அணுத்திரள்களின் அடர்த்தி குறைவதால் அழுத்தம் குறையும் என்று புரிந்து கொள்கிறேன் சரியா?

வவ்வால் said...

குமரன் ,
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!
புரிந்தும் புரியாதது போலக் கேட்கிறிங்களே,உங்களுக்கு புரியாதது உண்டோ? தனிப்பதிவு போட்டாவது எனக்கு எட்டியவரையில் சொல்கிறேன் :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

விமானம் பற்றிய ஒரு விபரணச் சித்திரத்தில் இந்த விபரங்கள் பார்த்தேன்.
தங்கள் விளக்கம் இலகு தமிழில் நன்றே!

சதங்கா (Sathanga) said...

//நல்ல தகவல்கள், அலுப்பூட்டாம சுவையாவும் சொல்றீங்க வவ்வால். தொடர வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்டேய் ...

//புதுசா எதாவது செய்ய நினைச்சா முதலில் கிடைக்கும் பட்டம் பைத்தியக்காரப்பட்டம் தான//

மிகச் சரி. வாழ்வில் முன்னுக்கு வந்த பலரும் இதை அனுபவித்திருக்கிறார்கள். அனாடமி என்று நினைக்கிறேன், டாவின்சி அவர்களுக்கு 'பைத்தியம்' பட்டம் கிடைத்தது. அது சம்பந்தமாய் 'Vitruvian Man' உலகப் புகழ் பெற்றது. 'Da vinci code' நாவல் படித்தவர்கள் எளிதில் மறக்க முடியாது.

டாவின்சி அவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் கண்ணாடியில் காட்டி வாசிக்கும் வண்ணம் செய்திருக்கிறார் என்று படிக்கிறோம். அதுபற்றி தகவல் திரட்டி பதிவு போடுங்கள் வவ்வால்.

ILA (a) இளா said...

அடடே! இவ்வளவு விஷயம் இருக்கா? தமிழ்ப்படுத்தினது அழகா இருக்குங்க

வவ்வால் said...

வாங்க யோகன், நன்றி!

நானும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்து பின்னர் வலையில் படித்து தான் தெரிந்து கொண்டேன். இதில் ஜெட் வகைகளின் முன்னோடி ஒருவர் இருக்கிறார் அவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் தான், ஹென்றி கோயென்டா(Henri Coanda) என்பவர்.

வவ்வால் said...

வாங்க சதங்கா , நன்றி!

டாவின்சி ஒரு மேதை , ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் எழுத வல்லவர் அதனை ஆம்பி டெக்ஸ்ட்ரஸ் என்பார்கள்(சிவாஜில ரஜினி கை எழுத்து போடுவார்!) அதே போல கண்ணாடியில் பார்த்தால் தெரிவது போலவே எழுதுவார் நேராக. உடற்கூறு இயல் படங்கள், பல எந்திரங்களின் மாதிரிகள் எல்லாம் செய்தார் , அவரது ஒரே பிரச்சனை எதையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து போகாமால் விட்டது தான், ஒரு வேலை ஜீனியஸ்கள் எல்லாரும் கொஞ்சம் போல சோம்பேறிகளாக இருப்பார்கள் போல! (நான் சோம்பேறி மட்டுமே!)

நிறைய இணையத்தில் இருக்கிறது அவரது படங்கள், குறிப்புகளின் கை எழுத்து பிறதியை கூட பி.டி.எப் ஆகா போட்டுள்ளார்கள். நீங்கள் சொன்னதையும் முயற்சி செய்துப்பார்க்கிறேன்.

வவ்வால் said...

வாங்க சூப்பர் ஸ்டார் "இளா" நன்றி!

இதில் சில பல , தொழில் நுட்ப தவறுகளை தெரிந்தே விட்டு இருக்கிறேன் யாராவது சுட்டிக்காட்டுவார்களா என்று பார்க்க(ரொம்ப விளக்கினா பெரிசா ,சிக்கலா போய்டும் என்பது வேறு விஷ்யம்) , நீங்கள் என்னாடாவென்றால் இவ்வளவு இருக்கிறாதா என்று சொல்கிறீர்கள், இன்னும் பாதி கதை இருக்கு உள்ள!

ராஜ நடராஜன் said...

2007 ல தயாரிச்ச வண்டியா இருந்தாலும் 2012ல வண்டில உட்கார்ந்தோமோ,அக்கம் பக்கம் பார்த்துகிட்டே பயணம் செய்தோமோன்னுதான் எல்லோருமே.இன்னும் கொஞ்சம் பேர் டிரைவர் வண்டிய எப்படி ஓட்டுறார்,கிளட்ச் எப்படி மாத்துறார்,எத்தனைக் கிலோ மீட்டர் காட்டுதுன்னுதான் பார்ப்பாங்க.

ஓட்டுனர் வண்டிக்கு ஆயில் போட்டாரா?வண்டி நேர் எஞ்சினா,குறுக்கு எஞ்சினா என்றெல்லாம் விசாரிப்பதேயில்லை.

அதுபோலவே நீங்க இளாவுக்கு மட்டும் சொல்லி தெரிஞ்சே விட்டாலும் தொழில் நுட்ப தகவல்கள குற்றங்களை சொல்லுமளவுக்கு நுண்ணியல் நுட்பம் தெரியாது எனக்கு.இல்லாட்டி விமானம் கண்டு பிடிச்சிருக்க மாட்டோம்:)