Sunday, September 09, 2007

வயது வந்தவர்களுக்கு மட்டும்!-week end posting

அறிவு ஜீவிகள் எல்லாம் இதைக்கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுங்கள், வாரக்கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் பாண்டி வரைக்கும் ஒரு மின்னல் வேக பயணம் போய்விட்டு வந்தேன். எதுக்கா எல்லாம் அதுக்கு தான்யா.. பச்ச புள்ளையாட்டாம் கேட்கப்படாது , அங்கு போனதும் ராயல் சேலஞ்ச ஆர்டர் செய்து குமுறிவிட்டேன்! சரி திரும்ப வரும் போது வெரும் கையுட்ன் வரக்கூடாது என்று ஒரு முழு புட்டி இம்பீரியல் புளு என்ற சரக்கு வாங்கினேன்(கைல அது வாங்குற அளவு தான் காசு இருந்துச்சு full - 210 rs/- only very cheap) Rc வாங்கணும்னு தான் திட்டம் , ஒரு குளிர் ஊட்டப்பட்ட பாரில் பெக் கணக்கில் ஊத்தி அரை RC க்கு முழு அளவுக்கு காசப்பிடுங்கிட்டான்!

நேற்று இரவில் இருந்து இன்று இரவு 12க்குல் அந்த முழு புட்டியும் காலி ஆகிடுச்சு உபயம் நம்ம இந்திய கிரிக்கெட் அணி, வந்தவுடன் கொஞ்சம் போட்டேன் , மேட்ச் பார்த்தேன்.. தூத்தேரி எழவு எடுத்த பசங்கனு இன்னும் கொஞ்சம் போச்சு இப்படியே கேப்ல எல்லாம் போட்டு கடைசில இன்னிக்கே எல்லாம் தீர்ந்து போச்சு ... அடுத்த வீக் எண்ட் வரைக்கும் வைத்து இருக்கனும்னு திட்டம் போட்டேன் அது நாசாம போச்சு! வேற என்ன செய்ய வழக்கம் போல பச்சை கலர் போர்ட் போட்ட கடைக்கு நாளைக்கும் போகனும்! :((

25 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
என்னங்க நடந்தது.

வவ்வால் said...

யோகன்,
நன்றி,

சும்மா வாரக்கடைசி அதான் மஜா பண்ணாலாம்னு, மற்றபடி நமக்கு ஒன்னும் நடக்கல..ஸ்டீல் பாடியாச்சே ...:-))

ILA (a) இளா said...

அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன். கடைசியா நம்ம மக்கள் அட்டகாசமா விட்டாங்களே.....

நான் மேட்சை சொன்னேங்க..

Thekkikattan|தெகா said...

பாத்தீங்களா சொல்லவே இல்லை ;))

Anonymous said...

இப்படிக்குடிச்சா எங்க ஊர்ல மொடாக்குடிகாரன்னு சொல்லுவாங்க.
வாழ்க வளமுடன்.

நாமக்கல் சிபி said...

:)

Unknown said...

மேட்சை இன்று நல்லவேளை பார்க்கலை.தப்பித்தேன்

வவ்வால் said...

இளா,

திருந்தாத ஜென்மங்கள் அவர்களும் , நாமும் தான்:

டிராவிட்: இன்னுமாடா இந்த மக்கள் நம்மளை நம்புறாங்க...
கங்குலி: அது அவனுங்க தலை விதி தல..
(வின்னர்ல வர வடிவேல் மாதிரிப்படிக்கவும்)

வவ்வால் said...

தெ.கா,

சொல்லிக்கிறாப்போலவா இருக்கு நிலமை..!

வவ்வால் said...

யோவ் உங்கள் தமிழன்,

போதும் நிறுத்திப்போம்...
நான் மடக் ..மடக்னு தான் குடிப்பேன் மொடாக்னு குடிக்க மாட்டேன் :-))

வவ்வால் said...

சிபி,
ஏனிந்த வருத்தம்...சந்தோஷமா இருங்க... உற்சாகமா இருக்க என்கிட்டே ஒரு பானம் இருக்கு அனுப்பவா?

வவ்வால் said...

செல்வன்,
//மேட்சை இன்று நல்லவேளை பார்க்கலை.தப்பித்தேன்//

மகா ஞானஸ்தன் தான் நீங்க..
ஞானக்கண் எதுவும் இருக்கா, முன் கூட்டியே தெரிஞ்சுக்கிட்டு எஸ்கேப்பாகிட்டிங்க!

ச.மனோகர் said...

நீங்கள் வவ்வாலாக இருக்கலாம்... ஆனால் காக்காயிடமிருந்து சில விசயங்களை கற்றுக் கொள்வதில் தவறில்லை. முழு பாட்டிலையும் நீங்க மட்டுமா..வயிறு எரிகிறது.. :-(

வவ்வால் said...

பாபுமனோகர்,

ஏன் சார் இப்படி கண்ணு வைக்கறிங்க :-))

வேணும்னா சொல்லுங்க அடுத்த முறை புதுவைல இருந்து உங்களுக்கும் ஒன்னு பார்சல் கட்டிறலாம்!

காக்கா பற்றி சொன்னதால் ஒரு தகவல்,

யாராவது சாப்பாடு வச்சு சாப்பிடக்கூப்பிட்டா மட்டுமே அது மற்றக்காக்காவை எல்லாம் கூப்பிடுமாம். தானே எதாவது உணவை எடுத்து வந்தால் சத்தம் போடாம அது மட்டும் அமுக்கிடுமாம் :-))

ச.மனோகர் said...

எல்லாத்துக்கும் ஒரு விளக்கம்...சரக்கு நல்ல சரக்கத்தான் இருக்க வேண்டும்... இல்லாவிட்டால் எப்படி இப்படியெல்லாம் விளக்கம் தரமுடியும்..

வவ்வால் said...

பாபு மனோகர்,
சரக்கூ நல்லா தான் இருந்துச்சு,ஆனால் மப்பு தான் கம்மியா இருக்கிறாப்போல ஃபீலிங்!

ச.மனோகர் said...

மப்பு கம்மினு இப்போ பொலம்பி என்ன பிரயோசனம்.. மிக்சிங் அனுபவசாலிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு,அவர்களுக்கும் ரண்டு ரவுண்டு கொடுத்து அடிச்சிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா? :-)

வவ்வால் said...

பாபு,
இதெல்லாம் ஓவரா இல்ல, நாமளே மிக்சிங்ல புதுமைய செய்பவன்னு பேர் வாங்கினவங்க...

வழக்கமா பீர் + ஜூஸ் னு சரக்குல கலப்பேனாக்கும், இப்போ அவசரத்துல அப்படியே தண்ணிய் ஊத்திக்கிட்டாச்சு!

இப்படி விலாவாரிய பேசுறதுக்கு யாராவது சின்னப்பசங்க வர இடத்துல இப்படிலாம் பேசலாமானு சண்டைக்கு வர போறங்க :-))

ச.மனோகர் said...

மிக்சிங்க்கு பீரா? விளங்கிரும்...ஐயா சாமி ஆளவிடுங்க..

Agathiyan John Benedict said...

குடியும், குடித்தனமுமாக வாழ வாழ்த்துகிறேன்.
மனுஷனுக்கு இதெல்லாம் தேவை தானே???

வவ்வால் said...

வாங்க பெனடிக்ட்,
//மனுஷனுக்கு இதெல்லாம் தேவை தானே???//

மனிதனாகிய எனக்கு தேவை, உங்களுக்கு தேவைப்படாது! :-))

சிவபாலன் said...

வவ்வால்,

நீங்க ஏன் இந்த புனைப்பெயர் வைத்தீர்கள் என இப்பதான் புரியுது!!..

எப்பவுமே 'புல்'லாகி தலைகீழாத்தான் இருப்பீங்களா?!!

ஹா ஹா..

சும்மா சொன்னங்க.. இரசிக்கும் படி இருந்தது பதிவும் பதில்களும்..

நன்றி

(எனக்கும் நல்ல பதில் சொல்வீர்கள் என நன்றாக தெரியும்..ஹா ஹா..)

வவ்வால் said...

சிவபாலன் ,
உங்களுக்கும் பதில் வேணுமா, இது என்ன மதன், அரசு போல கேள்விபதில் பகுதியா?

சரி உங்களுக்காக இது ....

வவ்வால் வழக்கமா தலைகீழா இருக்கும் , ஃபுல்லானதும் தலைக்கீழுக்கு தலை கீழ்... நேராகிடும் :-))

பத்மா said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.