சிலர் ஆபாசமாக திட்டுகிறார்கள் என ஒப்பாரி வைப்பார்கள் ஆனால் அவர்கள் நடந்து கொள்வது அதை விட கேவலமாக இருக்கிறது, அற்ப விளம்பர மோகம் கொண்டு அலைகிறார்கள் ,உண்மையில் நாலு பேரு கண்டனம் சொல்லி திட்ட வேண்டும் , பின்னர் மனம் உருகி அய்யோ நான் தப்பு செய்து விட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டு பதிவு போட வேண்டும் என்ற நமைச்சல் சிலருக்கு அதிகம் ஆகி விட்டதோ எனத் தோன்றுகிறது.
நான் பெயர் எதுவும் போடாமல் சொல்வதால் அனாவசியமா யார் என்று குழம்பிகொள்ள வேண்டாம் , தமிழ்மணத்தை பார்த்தாலே தானாகவே புரியும. நாளு பேர் அவங்களை கண்டுக்க வேண்டும் என்பதற்காகவே பதிவு போடும் அவர்களது பெயரை சொல்வதும் அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் என நினைத்து சந்தோஷம் அடையும் அல்பமாக இருக்கிறார்கள் .சாவு வீட்டுக்கு போனாலும் அண்ணன் வாழ்க என்று கோஷம் போடும் அல்லக்கை கூட்டம் கொண்டவர்கள் ஆச்சே!அது தான் மொட்டை கடுதாசிப்போல பதிவு போட்டு இருக்கேன்!
மக்களே வாரக்கடைசியில் இப்படிப்பட்ட மண்டை இடி தேவையா என டென்ஷன் ஆகாம சிந்தித்து சத்தம் போடாமல் கண்டு பிடியுங்கள் அந்த விளம்பர பிரியரை! ங்கொய்யாலே இந்த லட்சணத்தில் மக்களுக்கு இணைய விழிப்புணர்வு இல்லை , அது இல்லைனு சீன் காட்டுகிறது அந்த அல்பம்!
52 comments:
அந்த விளம்பர பிரியரை தெரிந்து கொள்ள ஆவல்
பெயர் தனியஞ்சலில் சொல்ல முடியுமா
அன்புடன்
அரவிந்தன்
அரவிந்தன் ,
நன்றி! அந்த பதிவுக்கு விளம்பரம் தந்தா போல ஆகிட கூடாதுனு தான் சொல்லாம விட்டேன் , தனியா சொன்னாலும் அதன் நடக்கும்! ஆபாசம் + வக்கிரம் கலந்த ஒரு வீடியோ காட்சியை போட்டு வந்துள்ளப்பதிவு. அதை கலைக்கண்ணோடு வேறு பார்க்கணும்னு சொல்றார்! என்ன கொடுமை சார் இது!
சீக்கிரம் யாராவது பேர போட்டே அந்தாளை நாளு வாங்கு வாங்க அப்போ தெரிஞ்சிட போவுது!
செல்லா என்ற விளம்பர பிரியர் அவர். எதற்கெடுத்தாலும் நச்சுன்னு ஒரு செல்லா பதிவு. நச்சுன்னு செல்லாவின் கேள்வி என்று ஆயிரத்தெட்டு முறை அவர் பெயரையே அவர் சொல்லிகொள்வார். லக்கிலுக், செந்தழல் ரவி என்று கைதடிகள் வேறு அந்தாளுக்கு ஜால்ரா அடிப்பார்கள். எல்லாம் கொடுமை சாமி!!
அனானி...
சும்மா இருந்தாலும் என்னை ஏன் இழுக்கிறீங்க ?
நன்பர் வவ்வால்...
மலேசிய புண்ணூட்டம் இது :))
பதிவு பற்றி...!!!
உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க நேராவே சொல்லலாம்...இருந்தாலும் அந்த வீடியோ கொஞ்சம் ஓவர்தான்...தாய்மையை கொச்சைப்படுத்தும் செயல்...இருந்தாலும் கட்டற்ற இணையத்தில் ஆயிரக்கணக்கில் இவை காணக்கிடைக்கின்றனவே நன்பரே...
எது நமக்கு தேவை, எது தேவையில்லை என்று நாம் தான் முடிவு செய்யவேண்டும் இல்லையா...
ரவி,
நன்றி!
//உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க நேராவே சொல்லலாம்...இருந்தாலும் அந்த வீடியோ கொஞ்சம் ஓவர்தான்...தாய்மையை கொச்சைப்படுத்தும் செயல்...இருந்தாலும் கட்டற்ற இணையத்தில் ஆயிரக்கணக்கில் இவை காணக்கிடைக்கின்றனவே நன்பரே...//
இணையத்தில் நிறைய இருக்கிறது ஆனால் தமிழ் வலைப்பதிவுகளில் எத்தனை இருக்கிறது, ஒரு வேளை எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது , அது இது தானா?
நேராகவே சொல்லி இருக்கலாம், ஆனால் எனக்கும் கட்டற்ற இணையம் என்பதன் மீது நம்பிக்கை உண்டென்பதால் தடை விதிக்கும் பாணியில் சொல்ல முடியாதே, எனவே சொல்ல வந்ததை மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டேன்.
எதை கொடுக்கலாம் என்பது கொடுப்பவர் விருப்பம் , எதை ஏற்கலாம் என்பது ஏற்பவர் விருப்பம், ஆனாலும் ஒரு சுய ஒழுங்கு என்பது நிர்பந்திக்காமலே வரவேண்டும் என்பதே பொதுவான விருப்பம்!
நண்பர் ரவி, எனவே புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
அனானி நண்பரே,
நியாயமான கருத்து தான், உங்கள் கருத்தை சொல்லுங்கள் , ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாத மற்றவர்களையும் ஏன் இழுத்து தனி நபர் நேரடி தாக்குதல் செய்கிறீர்கள்!
உங்கள் பின்னூட்டம் அப்படியே தான் இருக்கும் (கருத்து சுதந்திரம்!அதே சமயம் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் நீக்க நேரிடும்), இனி அப்படி மற்றவர்கள் பெயரை குறிப்பிடாமல் தவிர்க்கவும்!
//உங்கள் பின்னூட்டம் அப்படியே தான் இருக்கும் (கருத்து சுதந்திரம்!அதே சமயம் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் நீக்க நேரிடும்), இனி அப்படி மற்றவர்கள் பெயரை குறிப்பிடாமல் தவிர்க்கவும்//
Very good
சதுக்க பூதம் ,
தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி!
//கருத்து சுதந்திரம்!அதே சமயம் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் நீக்க நேரிடும்),//
கருத்து சுதந்திரத்தை காக்க போராடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் வவ்வால்!
இந்த பின்னூட்டம் பற்றி என்னிடம் தொலைபேசியில் பேசிய ஓசை செல்லா, "செல்லா தான் லக்கிலுக்கின் கைத்தடி. அந்த அனானி தப்பா எழுதிட்டான்" என்றார்.
இதுக்கென்ன சொல்றது? :-((((((
வாங்க லக்கி,
யாருக்கு யார் கைத்தடி என்ற ஆராய்ச்சியில் எல்லாம் நான் இறங்க தயாரில்லை!
அப்படி பின்னூட்டம் போட்டது அனானியாக வந்த ஒரு நபர் , ஒரு வேளை உங்கள் முன்னால் நண்பரோ என்னமோ?
இந்தப்பதிவில் நான் சொல்லவந்தது ... ஆபாசமாக இருக்கும் ஒரு பதிவினைப்பற்றி தான் அது ஆபாசம் இல்லை எனில் சொல்வதற்கு ஏதும் இல்லை(ஒரு வேளை முற்போக்குவாதிகள் என் பார்வை ஆபாசம் எனக்கூறலாம்) ஆனாலும் உங்களுக்கு அருமையான கலை ரசனை! எதுவுமே ஆபாசமாக தெரிய மாட்டேன்கிறது!
கருத்து சுதந்திரம் எனக்கு யாரும் தருவதில்லை அதான் நான் மற்றவர்களுக்கு தருகிறேன், ஏதோ என்னால் இயன்றது!
உங்களுக்கு அந்த அனானி பின்னுட்டம் சரியாக படவில்லை என நினைக்கிறேன். எடிட் செய்து மாற்றி போட்டு விடலாம் , ஒன்றும் பிரச்சினை இல்லை. அவரே அனானியாகத்தான் வந்துள்ளார் ஏன் கையை வைத்தாய் என்று எகிற மாட்டார் என நினைக்கிறேன்!
வவ்வால்!
கருத்துசுதந்திரத்துக்காக மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கும் உங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்!
இந்தப் பதிவு செல்லா குறித்து நீங்கள் போட்டீர்களா என்பதை பதிவுவாயிலாக சரியாக அறியமுடியவில்லை. செல்லா பெயரை நீங்கள் குறிப்பிடாததால் அது வேறு ஒருவரை குறித்து போட்டதாகவும் இருக்கலாம். இல்லை செல்லா குறித்து தான் போட்டேன் என்று நீங்கள் சொன்னாலும் பிரச்சினையில்லை.
இந்தப் பதிவுக்கோ, செல்லாவுக்கோ சம்பந்தமில்லாமல் "லக்கிலுக், ரவி இருவரும் கைத்தடிகள்" என்று யாரோ ஒரு அனானி போட்ட கமெண்டின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் உங்களது அரியப்பண்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
அந்தப் பின்னூட்டத்தை நீங்கள் எடிட் செய்யவோ, நீக்கவோ தேவையில்லை. நாங்களும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம் :-)))))))
ஒரு மலேசிய அனானி எத்தை தின்றால் பித்தம் தெளீயும் என்று திரிகிறது :))))))
இருந்துட்டு போகட்டும் :))))
பி.கு: நான் செல்லாவின் கால் தடியாக்கும் :))
செந்தழல் ரவி சார்,கட்டற்ற இணையத்தில் தானே மூர்த்தியும் எழுதினான்.அதை அப்படியே வேறு ஒரு பதிவில் எடுத்து போடலாமா? இது சரியா?
ஒரு மலேசிய அனானி எத்தை தின்றால் பித்தம் தெளீயும் என்று திரிகிறது :))))))
இருந்துட்டு போகட்டும் :))))
பி.கு: நான் செல்லாவின் கால் தடியாக்கும் :))
முந்தின பின்னூட்டம் அனானியா போச்சு...பரவால்லை...:))))
//덧글 내용...
செந்தழல் ரவி சார்,கட்டற்ற இணையத்தில் தானே மூர்த்தியும் எழுதினான்.அதை அப்படியே வேறு ஒரு பதிவில் எடுத்து போடலாமா? இது சரியா?
///
சகோதரரே..
மூர்த்தி அடுத்தவன் மம்மி டாடி பத்தி எழுதினான்...
ஆனால் செல்லா பதிவு பார்த்துட்டு சொல்லுங்க...
அந்த தோழி யாருக்கு சொந்தம்
அனானியாக இருக்கட்டும். கட்டற்ற சுதந்திரம் என்று சொல்வது எப்போதும் தப்பிக்கும் செயல். அப்படி ஒன்று என்றால் மூர்த்தி செய்ததும் சரியாகிவிடுமே ரவிசார். கொஞ்சம் யோசியுங்கள்.
ஏன் பெயர் போடவில்லை என கேக்கதீர்கள். என் பெயர் தெரிந்த பெயர் இல்லை
வக்கிரம் வக்கிரம்தானே,மூர்த்தி உங்களை திட்டும் போதும் திட்டு வாங்காத மற்றவர்கள் உங்களுக்கு தார்மீக ஆதரவு தந்தார்கள்தானே.
யாருக்கும் சொந்தம் இல்லயென்றால் விட்டுவிடலாமா?
லக்கி,
நன்றி!
//யாரோ ஒரு அனானி போட்ட கமெண்டின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் உங்களது அரியப்பண்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.//
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன், நான் இது வரைக்கும் மட்டுறுத்தல் , எதுவும் செய்ததே இல்லை. அதே போல பின்னூட்டங்களை நீக்கியதும் இல்லை!தவறாக இடம் மாறி வந்துவிட்ட பின்னூட்டங்கள் சிலவற்றை நீக்கியுள்ளேன் அதையும் சொல்லிடுவோம்.
என்ன இப்படி வலைப்பதிவை திறந்து போட்டு வைத்து இருக்கனு இனிமே யாராவது சாணி அடித்தால் தான் உண்டு! :-))
வேண்டும் என்றால் என்னையும் உங்கள் கை தடி, கால் தடி என எதாவது ஒன்றில் சேர்த்துக்கொள்ளுங்கள்!
ரவி ,
அந்த அனானி கூட பேசி என்ன ஆகப்போகுது விடாம அதான் இதுனு பேசுவார் போல இருக்கு!
//அந்த தோழி யாருக்கு சொந்தம்//
இது என்னங்க லாஜிக்கே இல்லாம இருக்கு, அந்த பெண்ணை விடுங்க, இங்கே வலைப்பதிவு படிக்க எத்தனை பெண்கள் வருவாங்க அவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க, ஒரு வேலை அவங்களும் சொந்தமா ,பந்தமானு கேட்கரிங்களா?
அந்த பொண்ணுக்கு அது சாதாரணம் தான் ஆனால் அதை பார்க்கிறவங்க பாவம் சார்! அதுக்கு தான் நான் கேட்டேன்!
அதான் பார்க்க வேண்டாம்னு டிஸ்கி போட்டு இருக்கேனு சொல்விங்க போல :-))
அனானி நண்பரே,
உங்கள் கருத்தை சொல்லியாச்சு அப்புறம் ஏன் விடாம விவாதம் செய்றிங்க! இத்தோட நிப்பாட்டிப்போம்! நன்றி!
வவ்வால்...
ஏற்கனவே நிறைய கை / கால் / தடிகள் இருப்பதால், எதுகை மோனையோடு உங்களை 'வால்' தடியாக சேர்த்துக்கொள்ள திராவிட திம்மிகள் குழுமம் முடிவுசெய்துள்ளது :))))))
செல்லாவா கொக்கா? அது ஒரு பனங்காட்டு நரி. சலசலப்புக்கெல்லாம் அஞ்சாதுன்னு அவர் காம்பிச்சிட்டார். பிடிக்குதோ பிடிக்கலையோ செல்லா பதிவுகளோட கிக் ஒரு தனி வகை. நானும் தான் பதிவுஎழுதுகிறேன் மூன்று வருடமாக. ஆனாலும் அவரளவுக்கு தன்னம்பிக்கையோடு எல்லாத் தலைப்பையும் அணுகமுடிவதில்லை. ஒரு வேளை பயமாகக் கூட இருக்கலாம். உங்கள் பயர் பாக்ஸ் நீட்சி சூப்பர்.எதற்கோ வந்தால்எதேதோ கிடைக்கிறது. நன்றி
அனானி ,
என்ன சொல்லவறிங்கனு புரியலை , கொக்கு, பனங்காட்டு நரினு அனிமல் பிளானட் பத்தி ஏதோ சொல்றிங்க போல :-))
நானும் என் பங்குக்கு ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கிறேன் ,
ஏய் வவ்வாலுக்கே சவ்வாலா!
//எதுகை மோனையோடு உங்களை 'வால்' தடியாக சேர்த்துக்கொள்ள திராவிட திம்மிகள் குழுமம் முடிவுசெய்துள்ளது :))))))//
எனக்கு மிகப்பெரிய பதவி கொடுத்த தானைத்தலைவர் செந்தழலுக்கு நன்றி நன்றி!...
வழக்கமாவே நான் ரொம்ப வாலாட்டுகிறேன் என்கிறார்கள் இனிமேல் அது இன்னும் அதிகம் ஆகுமேப்பானு மக்கள்ஸ் பொலம்புறாங்கய்யா!
எல்லோரும் வந்து பாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்ததாய் எனக்கு நினைவில்லை....
பெண்ணின் கெண்டைக்காலையும் கொலுசையும் பார்த்து கிளர்ச்சியடையும் ஆரம்பகால தமிழ் சினிமா வில்லனை போல இருக்கிறது உங்களின் வாதம்....
மாயாவி,
நன்றி!
//எல்லோரும் வந்து பாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்ததாய் எனக்கு நினைவில்லை....//
ஓ நீங்கள் இது வரைக்கும் எல்லோரும் வந்து பாருங்கள் என சொன்னப்பதிவுகளை மட்டும் தான் போய் படிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்! :-))
(அது எப்படி சீரியசாக ஜோக் அடிக்கிறிங்க, எனக்கும் சொல்லிக்கொடுங்க)
தமிழ் மணத்தில் வரும் பதிவுகள் எல்லாரும் பார்க்க தான் அன்றி அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டும் என்றில்லை.
பிளாக்ரில் ஒரு வசதி இருக்கிறது எல்லோரும் பார்க்க அல்லது தேர்ந்தெடுத்தவர்கள் மட்டும் பார்க்க என்று, அதனை கூட செயல்படுத்தி இருக்கலாமே அவர்! ஒரு வேளை இணைய விழிப்புணர்வு இல்லை போல!
//பெண்ணின் கெண்டைக்காலையும் கொலுசையும் பார்த்து கிளர்ச்சியடையும் ஆரம்பகால தமிழ் சினிமா வில்லனை போல இருக்கிறது உங்களின் வாதம்....//
உங்களுக்கு நாடி நரம்புலாம் செத்து போச்சுனு நினைக்கிறேன்!
வவ்வால்ஜி
செல்லா எப்போதுமே செக்ஸ் விஷயத்தில் நாம் மூடி முறைத்து வாழ்கிறோம் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் புதிய கலாச்சார கலகக்காரராகவே வலையுலகில் வாழ்ந்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்..
பிடிக்கவில்லை எனில் மறுப்பு சொல்லலாம். அல்லது சொல்லாமலும் இருக்கலாம். மறுப்பு சொல்ல வேண்டுமெனில் எடுத்த எடுப்பிலேயே அவன் தலையை வெட்டி காலடியில் வைப்பேன் பார் என்ற ரீதியிலேயே மறுப்பறிக்கை வெளியிடுவது தேவையில்லாதது....
அதிலும் நீங்கள் குறிப்பிடும், வக்கிரம், அல்பம் என்றெல்லாம் செல்லாவை அழைத்ததும் தேவையில்லாதது. அதற்குப் பதில் நேரடியாகவே அவர் பெயர் குறிப்பிட்டு இது ஆபாசமான செயல் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்.
நீங்கள் வேறு சில நிகழ்வுகளையும் இந்தச் சம்பவத்தில் இணைத்து எழுதிக் குமுறிவிட்டதால், செல்லாவின் அந்தப் பதிவை மட்டும் கண்டிக்காத நிகழ்வாகப் போய் செல்லா என்கிற வலைப்பதிவரையே மொத்தமாக தாக்குவதைப் போல் அமைந்துள்ளது உங்களுடைய துரதிருஷ்டம்..
நீங்கள் குறிப்பிடுவதைப் போல் செல்லாவுக்கு விளம்பரம் தேவையில்லை ஸார்.. தனது கருத்தைச் சொல்வதற்கு அனைவரும் பேனாவால் எழுதி படி என்று கை காட்டுவார்கள். ஆனால் செல்லா கையில் சுத்தியலை வைத்து அடித்து படி என்பார். இதுதான் வித்தியாசம்.. அல்ப விளம்பரம் என்றெல்லாம் நீங்கள் எழுதியது, செல்லாவை நீங்கள் ஓவராக கற்பனை செய்துவிட்டதால் என்று நினைக்கிறேன்..
எனக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால் இதுதான் கட்டற்ற சுதந்திரமாச்சே.. என்ன செய்வது? தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்..
ஆமாம்.. ஒரு கேள்வி.. நாளை எங்காவது வலைப்பதிவர் கூட்டத்தில் நீங்கள் செல்லாவைச் சந்திக்க நேர்ந்தால் அப்போது என்ன பேசுவீர்கள்..? பேசவே மாட்டீர்களா? அப்படியெனில் எதற்கு வலைப்பதிவர் என்ற பெயர்.. பேசுவேன் என்றால் எப்படி ஆரம்பிப்பீர்கள்..?
ஒரு முறைக்கு இரு முறை நாம் அனைவருமே இதை யோசித்துப் பார்த்து கமெண்ட்ஸோ, பதிவோ எழுத ஆரம்பித்தால் அனைவருக்கும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு மட்டுமே கமெண்ட்ஸ் போடவில்லை. செல்லாவுக்கும் போட்டிருக்கிறேன். பப்ளிஷ் செய்வார். படித்துப் பாருங்கள்..
"இல்ல.. வேணாம்.. போதும்.. பொத்திக்கிட்டு போடா.." என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது சொன்னாலும் சரி.. எனக்குக் கவலையில்லை..
ஏனெனில் வலையுலகத்திற்கும், எனக்கும் திரு.ஓசை செல்லாவும், திரு.வவ்வால்ஜியும் அவசியம் வேண்டும்.
வாழ்க வளமுடன்..
அன்புள்ள உண்மைத்தமிழர் அவர்களுக்கு!
நீங்கள் பலவற்றையும் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தாலும் , இங்கிருந்து எனது பதிலை ஆரம்பிக்கிறேன்!
//இல்ல.. வேணாம்.. போதும்.. பொத்திக்கிட்டு போடா.." என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது சொன்னாலும் சரி.. எனக்குக் கவலையில்லை.. //
பொத்திக்கிட்டு போடா என நான் பேசுவேன் என நீங்கள் எப்படி நினைத்தீர்கள் எனத்தெரியாது, நான் இது வரையில் யாருக்கும் அப்படி என் பதிவில் நினைத்து பேசியது கிடையாது, என்னை திட்டுவதாக இருந்தாலும் நிபந்தனை இல்லாமல் வெளிவரும் வண்ணம் மட்டுறுத்தல் இல்லாமலே வலைப்பதிவில் ஜீவித்து வருகிறேன்.
நான் இது வரைக்கும் பல முறை தீவிரமாக நான் சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறேன் பலர் அது ரொம்ப காட்டமாக இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் எதுவாக இருந்தாலும் அவர்கள் சொன்னது சொன்னபடியே என் பதிவில் வரும் , மட்டுறுத்தலே வைத்தது இல்லை ,(நான் சொல்வதை மற்றவர்கள் தேவைப்பட்டால் மட்டுமே வெளியிடுவார்கள்) முழு சுதந்திரம் அளித்து விடுவேன் , இதை தெரிந்த பலரும் என்னை திட்ட வேண்டும் என நினைத்தாலும் திட்டுவதில்லை! இது வலைப்பதிவர்கள் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எனக்கு கிடைத்த மரியாதை எனவே நினைக்கிறேன்!
சரி மேற்கொண்டு நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு வருவோம்,
//செல்லா எப்போதுமே செக்ஸ் விஷயத்தில் நாம் மூடி முறைத்து வாழ்கிறோம் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் புதிய கலாச்சார கலகக்காரராகவே வலையுலகில் வாழ்ந்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்..//
இதில் எங்கே கலகக்காரர் என்ற பெரிய விஷயம் எல்லாம் வருகிறது. தைரியம் என்றால் பயப்படாதது போல நடிப்பது என்று சொல்வார்கள், ஆனால் அப்படி கூட இருக்க இயலாதவர்களை எப்படி அய்யா கலக்காரார் என சொல்கிறீர்கள். தனது பதிவில் எங்கே யாராவது வந்து கன்னா பின்னாவென சொல்லி விடுவார்களோ எனப்பயம் இருப்பதால் தானே மட்டுறுத்தல் எல்லாம் வைத்திருக்கிறார். உண்மையில் நீங்கள் சொன்ன கலகக்கார மனோபாவம் இருந்தால் மட்டுறுத்தல் என்ற கவசமே தேவைப்படாது!
தமிழ்மணம் என்ற திரட்டியின் மீது நம்பிக்கை இருந்தாலே போதும், அவதூறாகப்பேசும் பதிவர்களை கண்டிப்பாக அவர்களே கட்டம் கட்டி விடுவார்களே! என்ன கொஞ்சம் காலம் தாழ்த்தி நடவடிக்கை இருக்கலாம்!
கலகக்காரன் என சொல்லிக்கொள்ள எல்லாம் தகுதி வேணும் சார், நான் எல்லாம் என்னை கலகக்காரன் என சொல்லிக்கொள்ள கூச்சப்படுவேன்!
//மறுப்பு சொல்ல வேண்டுமெனில் எடுத்த எடுப்பிலேயே அவன் தலையை வெட்டி காலடியில் வைப்பேன் பார் என்ற ரீதியிலேயே மறுப்பறிக்கை வெளியிடுவது தேவையில்லாதது....//
தலையை வெட்டுவேன் என்ற ரீதியிலோ அல்லது மிரட்டல் தொனியிலோ உள்ளக்கருத்து எனது பதிவில் எங்கே இருக்கிறது என சுட்டிக்காட்டினால் நன்றிக்கடன் பட்டவன் ஆவேன்!
படி என்று சொல்லாமல் சுத்தியல் வைத்து அடித்து படி என்று சொல்ல முடியும் எனில் எதையும் தாங்கும் மனவுறுதி கொண்டவராக இருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் அடுத்தவருக்கு மட்டும் ஆணை இடும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை!
கட்டற்ற சுதந்திரம் தான் ஆனால் அது எனக்கு மட்டும் தான் அடுத்தவருக்கு நான் தான் அளந்து கொடுப்பேன் என சொல்பவர்கள் , கட்டற்ற சுதந்திரம் என முழக்கம் இடுவதில் அர்த்தம் இல்லை!
//ஒரு கேள்வி.. நாளை எங்காவது வலைப்பதிவர் கூட்டத்தில் நீங்கள் செல்லாவைச் சந்திக்க நேர்ந்தால் அப்போது என்ன பேசுவீர்கள்..? பேசவே மாட்டீர்களா? அப்படியெனில் எதற்கு வலைப்பதிவர் என்ற பெயர்.. பேசுவேன் என்றால் எப்படி ஆரம்பிப்பீர்கள்..?//
வலைப்பதிவர் என்பது "interpersonal relationship develope" செய்வதற்கு மட்டும் என்பது போல உள்ளது உங்கள் கூற்று! வலைப்பதிவர்கள் சந்தித்தால் பேசிக்கொள்ளலாம் ஆனால் வலைப்பதிவு செய்வதே ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்ளத்தான் என்பது சரி அல்ல! பேசலாம் பேசாமலும் போகலாம் அது எல்லாம் கட்டாயம் இல்லையே!
ஆனால் நான் சந்தித்தால் கண்டிப்பாக பேசுவேன் , பீர் சாப்பிடலாமா, இல்லை பிராந்தி சாப்பிடலாமா என ஆரம்பித்தே பேசுவேன்,அதில் என்ன இருக்கிறது, நீங்கள் என்னமோ போனப்பிறவி வஞ்சம் வைத்து வவ்வால் பேசுகிறான் என்பது போல சொல்லுகிறீர்களே, இதெல்லாம் ஓவரா தெரியலை :-))
//உங்களுக்கு மட்டுமே கமெண்ட்ஸ் போடவில்லை. செல்லாவுக்கும் போட்டிருக்கிறேன். பப்ளிஷ் செய்வார். படித்துப் பாருங்கள்..//
நான் பப்ளிஷ் செய்து நீங்கள் படிக்க வேண்டும் என்ற நிலையை நான் வைக்கமாட்டேன் அது தான் வவ்வாலின் கட்டற்ற சுதந்திர சிந்தாந்தம்! மற்றவர்கள் போல போலி சுதந்திரம் பேசுபவன் அல்ல, உங்கள் பின்னூட்டம் போட்டால் தானாகவே வந்து விடும்!
//திரு.வவ்வால்ஜியும் அவசியம் வேண்டும்.//
என்னைப்போன்றவர்களுக்கும் இங்கே இடம் இருக்கிறது என பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்ட உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியும் , வணக்கமும்!
செந்தழல் அண்ணாச்சி,
அப்பிடியே சொக்கிப் போயிட்டன் போங்கோ.
இருந்தாலும் நீங்கள் இப்பிடி வெளிப்படையா எழுதியிருக்கக் கூடாது. பொம்பிளைகளை வெறும் சொத்தாக மட்டும் பார்க்க வேண்டுமென்பதை எழுதிவிட்டு உங்கள் தோழர் தோழியரிடமே வாங்கிக்கட்டுவது உங்களுக்குத் தேவைதானா?
யாருக்கும் 'சொந்தமான' பெண்ணைச் சொன்னால் தான் தப்பு; 'சொந்தமில்லாத' பெண்ணைச் சொன்னால் தப்பில்லை என்பது உங்கள் சித்தாந்தம்.
இவ்வளவு காலமும் 'பெண்' என்ற பொதுவகையில்தான் போராட்டங்கள் இருந்து வருகிறது. இனிமேல் 'சொந்தமான' பெண்களுக்கு என்றவகையில்தான் நடத்த வேண்டும்.
உங்களுக்குச் 'சொந்தமான' பெண்ணை மூர்த்தி திட்டியெழுதியபோது மற்றவர்கள் ஏன் வரிந்துகட்டிக்கொண்டு வந்தார்கள்? தங்களுக்குச் சொந்தமில்லாத பெண்ணைப் பற்றி அவர்களுக்கென்ன அக்கறை? அதேபோல் ஒவ்வொரு வலைப்பதிவாளரின் சொந்தங்களையும் போலிகள் திட்டியபோது அந்தந்த வலைப்பதிவர் மட்டும்தான் அதையெதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியிருக்க முடியும். ஏன் மற்றவர்கள் எல்லாம் தோள்கொடுக்க வந்தார்கள்? உங்கள் சித்தாந்தப்படி பார்த்தால் குறிப்பிட்ட வலைப்பதிவர் மட்டுமே அதைப்பற்றிப் புலம்பத் தகுதியுடைவர்.
பொன்சுக்காக தளபதி பாலபாரதியும் அவரது பரிவாரங்களும் படைதிரட்டிக் களமேகியதுகூட உங்கள் சித்தாந்தப்படி தவறல்லவா?
அல்லது, தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தினால்தான் யாரும் அதையெதிர்த்துக் கருத்துச் சொல்லலாம் என்று ஏதாவது புதிய சித்தாந்தம் வைத்திருக்கிறீர்களா?
(அடடா, இங்கேகூட செல்லா தாய்மையை இழிவுபடுத்தும் படத்தைப்போட்டுவிட்டார் என்று சொல்லிவிட்டு பிறகு அடிக்கிறீர்களே குத்துக்கரணம்.... அங்கே நிக்கிறீர்கள் சார்).
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செல்லா வெளியிட்ட வீடியோ பெண்களை இழிவுபடுத்துகிறதென்றளவுகூட நான் சொல்லவரவில்லை. அதை வெளியிடுவது அவர் விருப்பம். அனால் திரட்டியொன்றில் இணைந்திருப்பவர், தனது இடுகைகள் அனைத்தும் திரட்டியில் தோன்றுமென்பதைப் புரிந்திருப்பவர் 'தனது சுதந்திரத்தை' மட்டும் கருதும் நிலையை இழந்துவிடுகிறார்.
பலர் திரட்டியின் துணையின்றி வலைப்பதிவு நடத்துகிறார்கள். அப்படியொரு வலைப்பதிவில் இப்படி நடந்திருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. மாறாக இப்படி நடந்தால் திரட்டியைக் கருத்திற்கொண்டு விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.
விமர்சனத்தைச் சரியாக எதிர்கொள்ளும் பக்குவம் செல்லாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றில் தாம்தூம் என துள்ளிக் குதித்துச் சண்டித்தனம் செய்வது, இல்லையேல் அழுது வடித்து மற்றோரின் பச்சாத்தாபத்தைத் தேடுவது. இவையிரண்டும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் முறைகளல்ல.
உண்மைத்தமிழன்,
எனக்கு உங்களின் சித்தாந்தம் புரியவில்லை, முன்னர் ஆபாசமான பின்னூட்டம் வரும் போது ,மின்னஞ்சல் திறக்கவே பயமாக இருக்கிறது , பக்கத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தான் திறக்க வேண்டி இருக்கிரது என வருத்தப்பட்டீர்கள்.
மின்னஞ்சலில் யார் அனுப்பியது எனப்பார்த்து அப்படியே அழிக்க முடியும் அதற்கே மனம் சங்கடப்பட்டவர், ஆனால் இப்போது இவரின் பதிவில் இருக்கும் வீடியோவை நாங்கள் எல்லாம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்ற கவலை இல்லாமல் பதிவை திறந்து பார்க்கலாம் என்பது போல இருக்கு நீங்கள் பேசுவது!
நீங்கள் இப்பொழுது அந்தப்பதிவை அக்கம் பக்கம் யாரும் இருக்கிறார்களா எனப்பார்க்காமலே தான் திறந்து பார்க்கிறீர்களா?
கொண்டோடி,
நன்றி!
ஆபாத் பாந்தவன், அனாதை ரட்சகனாக வந்து நல்ல கருத்தினை சொல்லி இருக்கிறீர்கள்!
சரியாக சொன்னீர்கள் , ஒரு பொது ஊடக வெளியில் எப்படி செயல்படுவது என்பதை ஒரு பதிவு போட்டு சொல்ல வேண்டியது இருக்கிறது இந்த எல்லாம் தெரிந்த இணைய மேதாவிகளுக்கு!
//அனால் திரட்டியொன்றில் இணைந்திருப்பவர், தனது இடுகைகள் அனைத்தும் திரட்டியில் தோன்றுமென்பதைப் புரிந்திருப்பவர் 'தனது சுதந்திரத்தை' மட்டும் கருதும் நிலையை இழந்துவிடுகிறார்.
பலர் திரட்டியின் துணையின்றி வலைப்பதிவு நடத்துகிறார்கள். அப்படியொரு வலைப்பதிவில் இப்படி நடந்திருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. மாறாக இப்படி நடந்தால் திரட்டியைக் கருத்திற்கொண்டு விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.
விமர்சனத்தைச் சரியாக எதிர்கொள்ளும் பக்குவம் செல்லாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றில் தாம்தூம் என துள்ளிக் குதித்துச் சண்டித்தனம் செய்வது, இல்லையேல் அழுது வடித்து மற்றோரின் பச்சாத்தாபத்தைத் தேடுவது. இவையிரண்டும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் முறைகளல்ல.//
இப்போ சொன்னிங்களே இது...இது திருவாசகம்! இதை சொல்லப்போய் தான் எனக்கு அடுத்தவர் சுதந்திரத்தில் மூக்கு விட்டவன் என்ற சிறப்பு வந்துள்ளது! :-))
இங்கே வெளிப்படையாக தவறு நடக்கும் போது சொல்ல முயன்றால் , நீ என்ன இன்னாருக்கு அடி வருடியா என முத்திரை தான் குத்துகிறார்கள்.
எல்லோருமே தங்களுக்கு என்றால் சென்சிடிவ் ஆக இருக்கிறார்கள் அடுத்தவர்களுக்கு என்றால் இதெல்லாம் சகஜமப்பா என எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள்!
என்ன கொடுமை சார் இது...
அறுவெறுப்பு....ஆபாசம்...வக்கிரம்
இதை பகுத்தறிவதில் உங்களுக்கு நிறையவே குழப்பமிருக்கிறது என நினைக்கிறேன்....
மாயாவி,
//அறுவெறுப்பு....ஆபாசம்...வக்கிரம்
இதை பகுத்தறிவதில் உங்களுக்கு நிறையவே குழப்பமிருக்கிறது என நினைக்கிறேன்....//
ஆமாங்க எனக்கு ஒரே கொயப்பமாக இருக்கு நீங்க தான் வந்து தெளிவாக்கிட்டு போவனும்! :-))
ஆமாங்க தெரியாம தான் கேட்கிறேன் ஒரு பொதுவான வலைத்திரட்டியில் பதிவ போட்ட பிறகு உங்களை அழைத்தார்களா ஏன் போய் பார்த்திங்கனு ரொம்ப தெளிவாக கேட்கும் உங்களை எப்படி எடுத்துக்கொள்வதாம்?
//பொத்திக்கிட்டு போடா என நான் பேசுவேன் என நீங்கள் எப்படி நினைத்தீர்கள் எனத்தெரியாது, நான் இது வரையில் யாருக்கும் அப்படி என் பதிவில் நினைத்து பேசியது கிடையாது, என்னை திட்டுவதாக இருந்தாலும் நிபந்தனை இல்லாமல் வெளிவரும் வண்ணம் மட்டுறுத்தல் இல்லாமலே வலைப்பதிவில் ஜீவித்து வருகிறேன்.//
எந்த நேரத்தில் யார் எப்படிப் பேசுவார்கள் என்பதனை என்னால் அவதானிக்க முடியவில்லை. நீங்கள் அப்படியில்லை என்று இப்போது தெரிந்தது என்பதால் அதனை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.. எல்லாம் என்னுடைய அனுபவங்கள்தான்.. வேறொன்றுமில்லை..
//இதில் எங்கே கலகக்காரர் என்ற பெரிய விஷயம் எல்லாம் வருகிறது. தைரியம் என்றால் பயப்படாதது போல நடிப்பது என்று சொல்வார்கள், ஆனால் அப்படி கூட இருக்க இயலாதவர்களை எப்படி அய்யா கலக்காரார் என சொல்கிறீர்கள். தனது பதிவில் எங்கே யாராவது வந்து கன்னா பின்னாவென சொல்லி விடுவார்களோ எனப்பயம் இருப்பதால் தானே மட்டுறுத்தல் எல்லாம் வைத்திருக்கிறார். உண்மையில் நீங்கள் சொன்ன கலகக்கார மனோபாவம் இருந்தால் மட்டுறுத்தல் என்ற கவசமே தேவைப்படாது!//
கலகம் என்பதே பலருக்கும் ஒவ்வாத ஒன்றை சபையில் சொல்லி திகிலைக் கிளப்புவது என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். அதனால்தான் செல்லாவை அப்படிக் குறிப்பிட்டேன். மற்றபடி நீங்கள் இதில் அரசியல் நோக்கிலோ, அல்லது செல்லாவை பிரபலப்படுத்தும் நோக்கில் நான் எழுதியிருப்பதாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் அவர் சும்மா இருக்க மாட்டாத கலகக்காரர்தான்..
மட்டுறுத்தலை அவர் மேற்கொண்டதற்குக் காரணம் தேவையில்லாமல் எதையாவது அனுமதித்துவிட்டு பின் அதற்காக ஒருவருக்கு பதில் சொல்லிக் கொண்டு தேவையில்லாமல் நேரத்தை வீணாக்க வேண்டாமே என்பதற்காக இருக்கலாமே.. இதில் பயம் என்கிற வார்த்தை செல்லாவைப் பொறுத்தமட்டில் தேவையில்லாத வார்த்தை.. அது அவருடன் நெருங்கிப் பழகியிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் தெரியும்.. மூர்த்தி விஷயத்தில் அவர் காட்ட மூர்க்கத்திலேயே உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
//தலையை வெட்டுவேன் என்ற ரீதியிலோ அல்லது மிரட்டல் தொனியிலோ உள்ளக் கருத்து எனது பதிவில் எங்கே இருக்கிறது என சுட்டிக ்காட்டினால் நன்றிக் கடன பட்டவன் ஆவேன்!//
இல்லை வவ்வால்ஜி.. நீங்கள் இதுபோல் எழுதி நான் பார்த்ததில்லை. அதிலும் செல்லாவுக்கும் உங்களுக்கும் இதற்கு முன் இப்படியொரு நிகழ்வும் நடக்காததால்.. ஆபாசம், வக்கிர மனம் உடையவர் என்ற அர்த்தத்தில் நீங்கள் எழுதியிருந்ததால் ஒரு உவமைக்காகத்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.. அவ்வளவுதான்..
//படி என்று சொல்லாமல் சுத்தியல் வைத்து அடித்து படி என்று சொல்ல முடியும் எனில் எதையும் தாங்கும் மனவுறுதி கொண்டவராக இருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் அடுத்தவருக்கு மட்டும் ஆணை இடும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை!//
அப்படி இருப்பவர்தான் செல்லா. இல்லாவிடில் இத்தனை தைரியமாக இதை பப்ளிஷ் செய்திருப்பாரா..? யோசித்துப் பாருங்கள்.. அதே தைரியம் உங்களுக்கும் உண்டுதான். இல்லையெனில் நீங்கள் ஒருவர் மட்டும் கண்டித்துப் பதிவு போட்டிருப்பீர்களா..? சரியான போட்டிதான்..
//கட்டற்ற சுதந்திரம்தான்.. ஆனால் அது எனக்கு மட்டும் தான் அடுத்தவருக்கு நான்தான் அளந்து கொடுப்பேன் என சொல்பவர்கள் , கட்டற்ற சுதந்திரம் என முழக்கம் இடுவதில் அர்த்தம் இல்லை!//
இது எனக்குப் புரியவில்லை.. என்ன அர்த்தம்..?
//வலைப்பதிவர் என்பது "interpersonal relationship develope" செய்வதற்கு மட்டும் என்பது போல உள்ளது உங்கள் கூற்று! வலைப்பதிவர்கள் சந்தித்தால் பேசிக்கொள்ளலாம் ஆனால் வலைப்பதிவு செய்வதே ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்ளத்தான் என்பது சரி அல்ல! பேசலாம் பேசாமலும் போகலாம் அது எல்லாம் கட்டாயம் இல்லையே!//
அப்படியல்ல வவ்வால்ஜி.. எழுதுவதோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. இது ஒரு சகோதர மனப்பான்மையோடு ஒருவரையொருவர் அறிந்து அதன் மூலம் அவரவர் தங்களையும், தாம் சார்ந்த சமூகத்தையும் வளர்ப்பது ஒன்றுதான் தமிழை வளர்க்கும் வழி.. எழுத மட்டும்தான் செய்வோம் எனில் எதற்கு மற்றவர்களுக்கு அழைப்பு. அந்த ஒரு கட்டத்தோடு நாம் நின்றுவிடக்கூடாது.. தமிழை நாம் அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு சென்று தெரியாதவற்றை தெரியாதவர்கள் வீட்டுக்குக் கொண்டு போக வேண்டுமெனில் பேசியே ஆக வேண்டும்.. இது ஒரு குடும்பமாக சென்றடைந்தால் மட்டுமே நாம் இவ்ளோ தூரம் நமது கருத்துக்களை முன் வைப்பதற்கு வெற்றி கிடைத்ததாக அர்த்தம்..
//ஆனால் நான் சந்தித்தால் கண்டிப்பாக பேசுவேன் , பீர் சாப்பிடலாமா, இல்லை பிராந்தி சாப்பிடலாமா என ஆரம்பித்தே பேசுவேன்,அதில் என்ன இருக்கிறது, நீங்கள் என்னமோ போனப்பிறவி வஞ்சம் வைத்து வவ்வால் பேசுகிறான் என்பது போல சொல்லுகிறீர்களே, இதெல்லாம் ஓவரா தெரியலை :-))//
இதுதான் எனக்கு ஓவராத் தெரியுது.. ஒருவேளை செல்லா இதை ஓவராக எடுத்துக் கொண்டு பதில் சொல்லி வக்கிர மனம் படைத்தவனா நான் என்று எதையாவது எழுதித் தொலைத்தால் அதன் பின்பும் அதை நீங்கள் இருவருமே ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு பேசுவோம் என்று சொன்னால்.. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். அப்படி நடக்கவில்லையெனில் என்ன செய்வது என்ற நோக்கில்தான் நான் இதை எழுதினேன்..
ஆமா.. அப்படியும் பீர், பிராந்தியை பத்திதான் பேசுவீங்களா..? வேற சப்ஜெக்ட்டே இல்லையா.. அந்தச் சனியன்ல அப்படி என்னதான் இருக்கு.. போங்க ஸார்.. இதுக்கும் செல்லா போட்ட படத்துக்கும் ஒண்ணும் வித்தியாசம் இல்லையே வவ்வால்ஜி..
இதுல ஒரு ஸ்மைலி போட்டிருக்கீங்க பார்த்தீங்களா.. அந்த மாதிரி யாரும், யாருக்குமே ஸ்மைலி போடாம பேசணும்.. கமெண்ட்ஸ் போடணும்னு நான் நினைக்கிறேன். தமிழால் ஒன்றுபட்டவர்களுக்கிடையில் எதற்கு ஒரு தடைக்கல்.. ஏன் தேவையில்லாமல் புரிந்து கொள்ள ஒரு உதவி.. நம் மொழியே போதாதா.. அதற்குத்தான் சொன்னேன்.. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் மென்மையான வார்த்தைகளைப் பிரயோகிக்கலாமே என்று.. இது உங்களுக்கு மட்டுமல்ல செல்லாவுக்கும் பொருந்தும்..
///உங்களுக்கு மட்டுமே கமெண்ட்ஸ் போடவில்லை. செல்லாவுக்கும் போட்டிருக்கிறேன். பப்ளிஷ் செய்வார். படித்துப் பாருங்கள்..//
நான் பப்ளிஷ் செய்து நீங்கள் படிக்க வேண்டும் என்ற நிலையை நான் வைக்கமாட்டேன் அது தான் வவ்வாலின் கட்டற்ற சுதந்திர சிந்தாந்தம்!///
செல்லாவுக்கு போட்ட கமெண்ட்ஸையும் படித்த பின்பு, நீங்கள் எனக்குப் பதில் சொல்லியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
//At 11:23 AM, செந்தழல் ரவி said…
சகோதரரே..
மூர்த்தி அடுத்தவன் மம்மி டாடி பத்தி எழுதினான்...
ஆனால் செல்லா பதிவு பார்த்துட்டு சொல்லுங்க...
அந்த தோழி யாருக்கு சொந்தம்
//
செந்தழல் ரவியும், ஓசை செல்லாவும் சேர்ந்து கொண்டு கவிதா என்ற பெண் பதிவரை போலியுடன் தொடர்பு இருப்பதாக போலிசில் செல்லுவதாக மிரட்டினார்கள். இவர்களின் வக்கரத்தில் சிக்க வேண்டாம் என்று அந்த பதிவர் பதிவுலகைவிட்டு சென்றுவிட்டார்.
இவர்கள் கருத்து சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் இவர்கள் இஷ்டப்படி எழுதுவதைப் பற்றி எவரும் பேசக் கூடாது என்பதைத்தான்.
இது வக்ர குருப், இவர்களை எதிர்த்து எழுதினால் வீட்டிற்கு முன் முற்றுக்கை இட்டு 'மலம்' வீசும் அளவுக்கு செல்லும் என்பதாலேயே இவர்களை எல்லோரும் கண்டும் காணாமலும், சகித்துக் கொண்டும் செல்கிறார்கள்.
:(
பெயர் வெளியிட அவசியமில்லை என்பதால் வெளியிடவில்லை.
அனானி ,
நீங்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் எப்போதும் ஒப்பீட்டு பார்வையிலேயே எதையும் பார்க்க வேண்டாம் , அதுவும் இப்போது வேண்டாம் , எனவே இதில் நான் கருத்து கூறவில்லை.புரியும் என நினைக்கிறேன் , மேலும் சிக்கல் ஆக்கி வேறு திசைக்கும் போய்விடும் பதிவு!
பொதுவாக வலைப்பதிவின் செயல்பாட்டின் அடிப்படையில் பார்ப்போம்.
உண்மைத்தமிழன்,
நன்றி!
என்னைப்பற்றி நல்லவிதமான அபிப்பிராயம் இருப்பது குறித்து மகிழ்ச்சியே, எனது மோதல்கள் என்பது கருத்துடன் மட்டுமே அன்றி மனிதர்களுடன் இல்லை. ஒரு வேளை அப்படிப்பார்க்கும் பக்குவம் இங்கே மற்றவர்களுக்கு இல்லாமல் போனதால் கருத்து மோதலையும் தனி நபர் மோதலாக பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.
//ஒருவேளை செல்லா இதை ஓவராக எடுத்துக் கொண்டு பதில் சொல்லி வக்கிர மனம் படைத்தவனா நான் என்று எதையாவது எழுதித் தொலைத்தால் அதன் பின்பும் அதை நீங்கள் இருவருமே ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு பேசுவோம் என்று சொன்னால்.. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். அப்படி நடக்கவில்லையெனில் என்ன செய்வது என்ற நோக்கில்தான் நான் இதை எழுதினேன்..//
அப்படி ஒரு பதிவும் அவர் போட்டு விட்டார் , அதைப்பார்த்த பின்னரும் தான் நான் இப்படி சொல்லி இருக்கிறேன்.
ஆமாம் நீங்க எந்த பதிவில அந்த பின்னூட்டம் போட்டிங்க , எனக்கு போட்டே 24 மணி நேரம் ஆச்சு இது வரைக்கும் அங்கு அப்படி எதுவும் பார்க்கலையே!
appudi podu appu(ithu puthu anonymous)
//விமர்சனத்தைச் சரியாக எதிர்கொள்ளும் பக்குவம் செல்லாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றில் தாம்தூம் என துள்ளிக் குதித்துச் சண்டித்தனம் செய்வது, இல்லையேல் அழுது வடித்து மற்றோரின் பச்சாத்தாபத்தைத் தேடுவது. இவையிரண்டும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் முறைகளல்ல.//
ரிப்பீட்டேய்....
வவ்வால் அவர்களே..
நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென நினைக்கிறேன்....செல்லா தனது பதிவின் தலைப்பிலும் துவக்கத்திலும் பின்வருமாறு கூறியிருப்பதை மீண்டும் படியுங்கள்...
//WeekEnd A+ Joke! சின்னப்பசங்க பாக்ககூடாதது..
முதல்லயே சொல்லிட்டேன்... அதுனால பாத்துட்டு திட்டவேண்டாம்! ஆனால் ரசிக்கத் தெரிஞ்சவங்க மட்டும் பாக்கலாம்! அந்த முகங்களை மட்டும் பாருங்கள்.. சிரிங்க... மத்தத பாக்கவேண்டாம்! வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்!
//
இதைத்தான் "எல்லாரையும் வந்து பாருங்க என" அவர் அழைத்தாரா? என சுட்டிக் காட்டினேன்....
மாயாவி,
உமக்கு சித்த சுவாதினம் எதுவும் இல்லையே? நம்ம ஊருல பிட் படத்துக்கு போஸ்டர் ஒட்டும் போது கூட "மேல துணி எதுவும் இல்லாத பொண்ணு" படத்த போட்டு சரியாக மாருக்கு நேராக ஒரு கருப்புப்பட்டை போட்டு இருக்கும் , அதைப்பார்த்த பிறகும் அது ஆபாச படம்னு தெரியாமலா எல்லாம் போறாங்க, சமயத்துல அப்படிப்பட்ட போஸ்டர் ஒட்டியதுக்கு கண்டனம் எல்லாம் சொல்லியும் இருக்காங்க.
அதே போல இதை சின்னப்பசங்க பார்க்க வேண்டாம்னு போட்டா அது தமிழ் மணம் போல ஒரு பொதுவான திரட்டில வர ஏற்றப்பதிவாக ஆகிவிடுமா?
ஒன்றும் வேண்டாம் அப்பதிவின் முதல் பின்னூட்டமாக போட்ட சுப்பையா அவர்களின் கூற்றெ என்னவெனப்பாருங்கள், "இப்படிப்பார்க்காதீர்கள் எனப்போடுவதே பாருங்கள் எனச் சொல்வது தானே" என சொல்லி இருக்கிறார்.
நானும் அப்படி டிஸ்கி ஒன்றைப்போட்டா போதுமா என ஏற்கனவே குறிப்பிட்டே இருக்கேன்.
சரி சின்னப்பசங்க பார்க்க வேண்டாம் என்று சொன்னார் , அப்போ தமிழ் மணம் என்ற திரட்டியில் வருவது எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரமா? அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரம் வீடியோ போட்டால் இங்கு திரட்டுவார்களா, நானும் கொஞ்சம் போட்டுக்காட்டவா? எங்களுக்கு எல்லாம் இப்படி பட்ட வீடியோவே கிடைக்காது என்ற எண்ணமா?
சரி நானும் சின்னப்பசங்க பார்க்காதிங்கனு அறிவிப்போட ,குழந்தை எப்படி பிறக்குதுனு வீடியோ காட்டவா அதைப்பார்த்துட்டு இங்கே எவனும் வந்து எண்ணைக்கேள்விக்கேட்க கூடாது! அதுக்கு நீங்க தான் பொறுப்பு ஏற்கனும் மாயாவி! முடியுமா?
பெண்கள் எல்லாம் பார்த்தால் என்ன நினைப்பார்கள் , அதுகுறித்து எதுவும் கவலைப்பட்டுள்ளாரா? இல்லை அறிவிப்பு அதில் உள்ளதா? சும்மா செய்ததை நியாயப்படுத்த வராதிங்க.
ஒருத்தர் முரட்டுத்தனமா பேசுவதைப்பார்த்து பெரும்பாலோர் கருத்து சொல்லாமல் போவதால் அவர் செய்வது எல்லாம் நியாயம் ஆகாது, அப்படி எல்லாம் அஞ்சி செல்பவன் அல்ல இந்த வவ்வால்! தவறென்று அறிந்தால் சுட்டிக்காட்டுவேன், அதுவே நான் செய்தது தவறு என சரியாக சொன்னால் திருத்திக்கொள்வேன்.
தவறை உணர்ந்து திருந்தப்பாருங்கள், இல்லை எனில் திருத்தப்படுவீர்கள்!
செந்தழல்ரவி, ஓசை செல்லா மற்றும் குழலி ஆகிய மூனு பேரையும் எதிர்த்து எவனாச்சும் பதிவு போட்டால் ஒன்னு மூர்த்திம்பானுங்க, இல்லாட்டி மூர்த்தியின் கையாள்னு சொல்லுவானுங்க.
ஆக வவ்வால் அவரோட அடிவருடின்னு சொல்ல வர்றானுங்க இப்போ.
ஒருத்தன் எங்க ஆயா சட்டிய கானும் என்றோ இல்லை ஆயா சட்டியை புலிகள் தூக்கிட்டு போயிட்டானுங்க என்றோ பதிவிடலாம். அது ஆபாசம் இல்லை.
இன்னொருத்தன் நான் வன்னியன் அதனால் நான் பிறந்த ஜாதியவும் அதன் கட்சித் தலைவனையும் ஆதரிப்பேன், அதற்காக பைத்தியக்காரத் தனமாக பதிவுகள்போடுவேன் என்று சொல்வான், ஆனால் அவனுக்கு ஜாதிவெறி அறவே இல்லையாம்.
இன்னொருத்தன் பேஸ்ட்டுமேல பிரஸ் ஏறுவது, ஒரு பெண்மணி தன் முலைப்பாலை காப்பியில் ஊற்றுவது என்று செக்ஸ் பதிவுகள் போடலாம் தமிழ்மணத்தில். அப்றம் நான் தலித்து என்று சொல்லி அனுதாபம் தேட முயலலாம். அடுத்தவன் பேரில் அவன் தன்னைத்தானே தலித்து என்று திட்டிக்கொண்டு மற்ற பதிவர்களின் அனுதாபம் தேடலாம்.
இதெல்லாம் தமிழ்மணத்திலயும் தமிழ்மண சர்க்கிளிலும் தப்பே இல்லைங்க.
இணையத்தில் வருமானம் தேட இதைவிட்டால் வேறு வழியேதுப்பா இருக்கு.. மானம் கீனம்லாம் போன தலமுறைக்குத்தான.. இது காசு பாக்குற காலம் ..கூகுள் குடுக்குற பிச்ச காசுக்கு எதெல்லாம் விக்க வேண்டியிருக்கு பாருங்க..உருப்படியா எதாவது படிக்கலாம்ன்னா.. எங்க முடியுது.. கண்ட கண்ட தலைப்பயும் வெச்சு ம்ஹும்.. நாம நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டிருந்தாலும் தெருவுல நின்னு சத்தம்போட்டு சண்டைப் போட்டாலோ ..இல்லண்ண நீங்க சொண்ண கழிசட மாதிரி மூத்திரம் போனாலோ .. நம்மயும் பாதிக்குதல்ல.. யாராவது ஒருத்தர் கேட்டுத்தான ஆவணும்.. அதுக்கு நீங்க எதிர்ப்ப பதிவு செஞ்சது சரின்னு தான் படுது.. இன்னமும் கொஞ்ச நாள்ள என்ன இழவு இதுன்னு வலையுலக விட்டு எல்லாம் தல தெரிச்சு ஓடிடுவாங்க .. இனி இந்த தறுதலைகலே அடிச்சுட்டு கெடக்கட்டுமப்பா.. ச்சய்..
vaval jakrathai.
ungalai
thamilmanaththil
irunthu
olikka
nadakkum sathi.
ushar
அனானி,
மன்னித்துக்கொள்ளவும், நான் கருத்து சுதந்திரம் தருகிறேன் என்பதற்காக ஆபாசமாக பேசுவதையும் அதன் பெயரில் அனுமதிக்க முடியாது, மேலும் நீர் குறிப்பிட்ட பெயருக்கும் இங்கே பேசுவதற்கும் யாதொரு தொடர்புல் இல்லை, உமது தனிப்பட்ட சண்டைகளுக்கு இது களமும் அல்ல, நான் அதற்கான சாரதியும் அல்லன். எனவே உமது பின்னூட்டம் என் சுய விருப்பத்தின் பெயரில் நீக்கப்படுகிறது.
இனியும் இப்படி பின்னூட்டம் போடும் என்னம் இருந்தால் , தயவு செய்து தவிர்த்து விடவும். உமது கருத்துக்குப்பைகளை கொட்ட வேறு இடம் இல்லாமலா போய்வுடும் அங்கே போய் திருவிளையாடலை ஆரம்பிக்கவும்! :-))
அனானி,
என்ன பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு , எதாவது செய்து தான் பார்க்கட்டுமே! என் பயணம் எனது முடிவு எவர் வந்து தடுக்க முடியும்!
வவ்வால் அன்னாச்சி,
நான் இந்த பின்னூட்டம் எல்லாம் பார்த்த பின்னாடி, இவ்வளவு கலக்கு கலக்குன அந்த படத்த தேடி புடிச்சு பர்த்தேன்.
Pogo Channel-ல்ல அடுத்தவங்கள கலாய்க்கர நிகழ்ச்சி இரவு போடுவங்க. அத பார்க்கும்போது எல்லம் ஒரே ஆச்சர்யமா இருக்கும்... ரோட்டுல குறுக்க ஒருத்தன் போனலே நமக்கு கோவம் மூக்குமேல ஏருது. எப்படி இவங்க எல்லாம் சாதாரனமா எடுத்துக்கிரங்கன்னு...
நகைச்சுவைக்காக படத்த போட்டு இருக்குறாரு. இதுல நிஜமாவே அவங்க முகத்த பாருங்களேன்...எப்படி எப்படி கலவையான உனர்ச்சிகள்... இதுக்கு எதுக்கு இப்படி பின்னூட்டம், பின்னூடத்துக்கு பின்னூட்டம்...
எனக்கு தோனினத சொன்னென்..கோவப்படதீங்க...
நான் தேடுன மாதிரி யாரும் தேடவேனாம். இந்தாங்க அந்த படம் http://osaichella.blogspot.com/2007/10/joke.html>
பூவேந்திரன்,
நகைச்சுவையாகப்பார்க்கலாம், ஆனால் சம்பந்தப்பட்ட நபர் யாராவாது திட்டினால் ஆபாசமாக திட்டினான் அவனுடன் பேசுவது குற்றம் என , நெற்றிக்கண் திறப்பவர், எனவே அவரும் , அப்படியே ஆபாசாம தவிர்க்க வேண்டாமா, என்பதிவை படிக்காமலே அந்த பதிவை மட்டும் தேடிப்படித்தீர்களா, அதே போல மேல் நாட்டினர் நகைச்சுவை வேறு நமது வேறு, அதையே பின் பற்றுபவர் எனில்,
இப்படி வெள்ளைக்காரத்தனமாக பேச தெரிய வேண்டும் ,
ஒருவரிடம்,
உங்கள் அம்மா ஒரு விபச்சாரி என்றால்,
என் அப்பா மட்டுமே ஒரே ஒரு வாடிக்கையாளர் என சொல்லத்தெரிய வேண்டும்!
இதுவே வெள்ளைக்காரத்தனமான கடிமான குற்றச்சாட்டையும் எதிர்க்கொள்ளும் பக்குவம்! அது இல்லாமல் வெள்ளைக்காரனின் பழக்கம் மட்டும் வேண்டுமா?
வவ்வால் அன்னாச்சி,
நான் இந்த பின்னூட்டத்தை பின்னூட்டமாக இல்லாமல் mail அனுப்ப நினைத்தேன் - உங்கள் ID தெரியாததால் பின்னூட்டம்.
நான் உங்கள் பதிவு மற்றும் அனைத்து பின்னூட்டமும் படித்த பின்னர்தான் அந்த படத்தை தேடி., பார்த்தேன்.
உங்கள் பதிவில் இருந்து, நீங்கள் அவரையும் அவரின் எழுத்தையும் தெரிந்தவர் என்பது தெரிகிறது. நான் சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் போட்டு இருக்க கூடாது.
ஆனால் நான் ஒன்று சொல்ல வேண்டும்:-
1) தரமான எழுத்தாளர்கள், சிறிய இதழ்களில் எழுதுபவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இன்றி தனி நபர் துவேசம் செய்துகொண்டு தங்களால் முடிந்ததை செய்யாமல், தங்களுக்கும், தமிழுக்கும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். (சில சமயங்களில் இதனாலேயே தகுதி இருந்தும் அங்கீகாரம் மறுக்கப் பட்டிருக்கிறது)
2) வலைப்பதிவுக்கு நான் ரொம்ப புதியவன். இருந்தும், தமிழிலில் தரமான வலைபதிவுகள் அதிகம் இல்லை - மற்ற மொழிகளை ஒப்பிடும்போது.
3) தமிழில் உள்ள தரமான வலைபதிவுகளில் உங்களுடயதும் ஒன்று. இந்த பதிவில் குடுமிபுடி சண்டை மாதிரி - இடை இடையே அனானி வேறு - வேண்டாமே...?
அதனாலதான் நான் ஏற்கனவே - //எனக்கு தோனினத சொன்னென்..கோவப்படதீங்க// - அப்படி சொன்னேன்.
பூவேந்திரன் ,
உங்கள் உணர்வுகள் புரிகிறது, நன்றி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் சொல்வதை கேட்டு ஏன் கோபம் வர வேண்டும்?
இதில் உள்ள ஒரு அபாயம் புரியவில்லை. அவரின் ஒரு பதிவில் எதாவது நல்ல கட்டுரை வந்திருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் அதனைப்படித்து பார்க்க சொல்லி நண்பர்களுக்கு சொல்லி இருக்கிறோம் (அதுவும் குறிப்பாக பெண்கள் எனில்) நண்பரும் அந்த கட்டுரை தவிர தற்செயலாக மேலும் என்ன இருக்கிறது எனப்பார்க்கும் ஆர்வத்தில் மற்றப்பதிவுகளையும் திறந்து , இது போன்றவை கண்ணில் பட்டால் என்ன நினைப்பார்கள், நாம் வேண்டும் என்றே ஏதோ ஆபாச தளத்தை கொடுத்து பார்க்க சொல்லி அவர்களை டீஸ் செய்வதாக நினைக்க மாட்டார்கள்!
உண்மையில் அப்படி நடந்தும் இருக்கிறது, ஒரு சில இணையத்தளங்களில் கிராக் சாப்ட்வேர்கள் இருக்கும் அதில் கூடவே ஆபாச இணையத்தளங்களின் விளம்பரம் , படம் , லின்க் இருக்கும் , அது கவனிக்காமல் இதில் அந்த கிராக் செய்த சாப்ட்வேர் இருக்கிறது என ஒரு தளம் தறப்போக அவர்கள் திறந்தால் அதில் சில பலான விளம்பரங்களின் பேனர்கள் , பின்னர் சொந்த செலவில் சூன்யம் கதை ஆகிவிட்டது.
மேலும் அந்தப்பதிவில் அந்த படம் ஓடி முடித்ததும் மேலும் பல அதை விட மோசமான படங்களின் முன்னோட்டம் காட்டுகிறது பாருங்கள்.
இதெல்லாம் ஒரு பொதுவான ஊடகத்தில் தேவையா எனக்கேட்டு தான் நான் பதிவிட்டேன். பூனைக்கு யாராவது மணிக்கட்டித்தானே ஆக வேண்டும்.
மற்றபபடி இதில் குடுமி புடிசண்டை எல்லாம் எதுவும் இல்லை.
Post a Comment