Saturday, August 18, 2012

சினிமா ரகசியம்-2:2D to 3D conversion.
சமீபகாலமாக உலக அளவில் மீண்டும் 3டி படங்கள் அதிகம் வர ஆரம்பித்து இருக்கின்றன, இதெல்லாம் திரையரங்கிற்கு வர தயங்கும் மக்களை வரவழைக்க செய்யப்படும் "கவர்ச்சி தந்திரங்களே" ஆகும். மேலும் பல பழைய 2டி படங்களும் 3டிக்கு மாற்றும் வேலைகளும் நடக்கின்றன,அத்தகைய முயற்சிகள் தமிழிலும் சூப்பர் ஸ்டாரின் "மெஹா ஹிட் படமான "சிவாஜி" மூலம் நடப்பெறுகின்றது. இப்பதிவில் 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றம் செய்வது எப்படி நடக்கிறது எனக்காண்போம்.


இவ்வாறு எடுக்கப்படும் பல 3டி படங்கள் உண்மையில் சொல்லப்போனால் உண்மையான 3டி படங்கள் கிடையாது, பலப்படங்கள் வழக்கம் போல 2டியில் எடுத்துவிட்டு பின்னர் போஸ்ட் புரொடெக்‌ஷனில் கணினி உதவியுடன் 3டி ஆக ரெண்டர் செய்யப்பட்ட படங்களே.

நேரடியாக 3 டி இல் எடுக்கும் போது இரண்டுக்கேமரா உதவியுடன் சற்றே மாறுப்பட்ட தூரத்தில் ஒரே காட்சியை எடுத்து ஒரு டெப்த் உருவாக்கி பின்னர் இணைத்து முப்பரிமாணக்காட்சியாக்குவார்கள். இப்படி அனைத்துகாட்சியும் படமாக்குவது கடினம், செலவும், நேரமும் ஆகும் என்பதால் முக்கியமான காட்சிகளை "உண்மையான ஸ்ட்டீரியோ ஸ்கோப்பில்" படமாக்கி கொண்டு மற்றக்காட்சிகளை போஸ்ட் புரோடக்‌ஷனில் 3டி ஆக மாற்றுவார்கள், இதனை டிஜிட்டல் 3டி என்பார்கள்.

அவதார், டின் டின் போன்ற 3 டியில் எடுக்கப்பட்ட படங்களிலேயே முழுக்க ஸ்டீரியோ ஸ்கோபிக் படப்பிடிப்பு கிடையாது.பெருமளவு டிஜிட்டல் 3டி யில் கன்வெர்ஷன்ன் செய்யப்பட்டதாகும்.

இப்படி செய்ய பல மென்பொருள்கள் இருக்கிறது, மாயா- ஃப்ளேர், அடோப் ஆஃப்டெர் எபெக்ட்ஸ், போன்றவற்றிலும் செய்ய முடியும்.

வழக்கமான படத்தினை 3டி ஆக இரு வகையில் செய்வார்கள், முழுக்க தானியங்கியாக, அதாவது முழுப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்து விட்டால் அதுவே 3டி ஆக மாற்றிவிடும், இதில் முழுத்தரமும் இருக்காது என்பதால், பகுதி மனிதர்கள் எடிட் செய்து தேவையான தரம் கொண்டுவருவார்கள்.

மாயா-ஃப்ளேரில் தேவையான எடிட்டிங் செய்து 2டி இல் இருந்து 3டி ஆக மாற்றும் காணொளி;


ஒரே படத்தின் பல அடுக்குகளை கொண்டு அல்லது டெப்த் ஆப் ஃபீல்ட் உருவாக்கி என 3டியாக மாற்றலாம்.

2டி + டெப்த் பிளஸ் என இதனை சொல்வார்கள், இன்னும் சில முறைகளைக்கொண்டும் வழக்கமான 2டி காட்சியை 3டிக்காட்சியாக மாற்ற முடியும். இப்படித்தான் டைட்டானிக் படம் 3டி ஆக மாற்றப்பட்டது.

இப்பொழது கணினிகளின் வேகமும், மென்ப்பொருளின் திறனும் வெகுவாக முன்னேறிவிட்டதால் வெகு எளிதாக 2டி யில் இருந்து 3டி ஆக மாற்ற முடியும்.

எல்.ஜி லைவ் 3டி சினிமா மேஜிக் எனப்படும் 3டி தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் வழக்கமான அனைத்து தொ.கா நிகழ்ச்சிகளையுமே 3டி யில் உடனே மாற்றிக்காட்டும்., மிக எளிய முறையில் செயல்ப்படும் அமைப்பு என்பதால் கொஞ்சம் பிசிறடிக்கலாம், ஆனால் இத்தொலைக்காட்சியில் 3டி படங்கள் நன்கு தெரியும். விலை 40,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

இந்துஸ்தான் டைம்சில் வந்த எல்ஜி. 3டி தொ.காவின் விமர்சனக்கட்டுரை;


2D to 3D conversion feature:

Let's say you are a Big B fan and your favourite movie is Deewar. Let's also add your favorite dialogue to this "Tumhara pass kaya hai.... mere pass ma hai". Now you can transform this into a 3D experience. LG 3D Cinema Smart TV allows conversion of existing pictures into 3D mode quite easily. The conversion feature is easy. Big B has bashed the baddies it's now time to feel the power of his punch. You can increase the "depth" feature to 20 (maximum) for maximum 3D effect. For the dialogues you could do 3D sound zooming. It's a lot of power in your hands in terms of conversion to 3D.

முழு விவரம் அறிய சொடுக்கவும் சுட்டியை:

3டி யில் படம்பிடிப்பதைக்காட்டும் காணொளி,


-----------
நல்ல கிராபிக்ஸ் கார்ட், நினைவகம், வேகமான சிபியு இருந்தால் யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே 2டி இல் எடுக்கப்பட்ட படத்த்இனை 3டிக்கு மாற்றலாம், அவ்வாறு 2D to 3D Conversion Test Using Xilisoft 3D Video Converter கொண்டு மாற்றியதை ஒருவர் யூடூயூபில் வெளியிட்டுள்ளார், நீங்களும் காணுங்கள்.

வீடியோ டைம் லைனில் 3டி என இருப்பதை அழுத்திவிட்டு , 3டி கண்ணாடி அணிந்து பார்த்தால் 3டியில் தெரியும்.

மேலும் 3டி என இருப்பதில் ஆப்ஷன் பகுதியில் பார்க்கும் முறையை கண்ணாடி இல்லாமல் என மாற்றியும் பாருங்கள், இரண்டு தனித்தனி காட்சிகள் பக்கம்,பக்கமாக காட்டும்.

இதை எல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லை மென்ப்பொருளே கொடுக்கப்பட்ட காட்சியினை இரண்டுக்காட்சிகளாக மாற்றி தேவையான டெப்த்தினை உருவாக்கி 3டி ஆக காட்டும்.தற்பொழுது தமிழில் மிகப்பெரும் வெற்றிப்பெற்ற சூப்பர் ஸ்டாரின் "சிவாஜி" படத்தினை 3டியில் மாற்றுவதாக செய்திகள் வருகின்றது, ஆனால் வழக்கம் போல "ரொம்பக்கஷ்டப்பட்டு" மாற்றுவதாக பில்ட் அப் கொடுக்கிறார்கள், மேலும் அவர்கள் சொல்வது போல பிரேம் ,பிரேம் ஆக கட் செய்தெல்லாம் 3டி ஆக்க மாட்டார்கள், அப்படி செய்ய முதலில் புளு மேட்/கிரீன் மேட்டில் எடுத்தக்காட்சியாக இருக்க வேண்டும். மேலும் அப்படி எல்லாம் செய்யத்தேவையே இல்லாதவாறு கணினி மென்ப்பொருள்களின் அல்காரிதம் அனைத்தினையும் பார்த்துக்கொள்ளும்.மொத்தப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்துவிட்டு தேவையான இடங்களில் பேராமீட்டர்களை நன்கு கணித்து எந்தக்காட்சி, பொருள் முன்னால் நீள வேண்டும், பேக்ரவுண்ட் எப்படி இருக்க வேண்டும் என சரிப்பார்த்தால் போதும், அல்லது சில அளவீடுகள் கொடுத்து முழுதாக கணினியே மாற்றம் செய்யவும் வைக்கலாம்.

ஒரு தொலைக்காட்சியில் லைவ்வாக மாற்றம் செய்யும் போது கணினியில் செய்ய ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்பது புரிந்திருக்கும், நல்ல தரமாக காட்சி வரவே கொஞ்சம் மெனக்கெட வேண்டும் மற்றப்படி மண்டை உடைக்கும் சமாச்சாரமில்லை 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றுவது.

இப்பொழுது பல லேப்டாப்புகளும் 3டி வசதியுடன் சந்தையில் கிடைக்கிறது, ஏசர், சோனி வயோ, டெல் என பல பிராண்டுகளும் கொண்டு வந்துவிட்டன.நாம் 2டி அல்லது 3டி எனமாற்றி வைத்துக்கொண்டு பார்க்க வேண்டியது தான். 3டியில் எடுக்கப்பட்டவை நல்ல தரமான காட்சியுடனும் 3டி யில் மாற்றியது கொஞ்சம் சுமாராகவும் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
-----------
பின்குறிப்பு;
தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,யூடுயூப்,இந்துஸ்தான் டைம்ச் இணைய தளங்கள். நன்றி!
---------------

8 comments:

குட்டிபிசாசு said...

80களில் 3d படங்கள் என சொல்லி சில படங்கள் வந்தன. மை டியர் குட்டிச்சாத்தான். ஜெய் வேதாளம்... சிறுவயதில் அப்படங்களைப் பார்த்த அனுபவங்கள் மறக்க இயலாது.

…//சமீபகாலமாக உலக அளவில் மீண்டும் 3டி படங்கள் அதிகம் வர ஆரம்பித்து இருக்கின்றன, இதெல்லாம் திரையரங்கிற்கு வர தயங்கும் மக்களை வரவழைக்க செய்யப்படும் "கவர்ச்சி தந்திரங்களே" ஆகும்.//
…உதாரணமாக் clash of titans கூட அவதாரின் வெற்றியைப் பார்த்து போஸ்ட்ப்ரோடக்ஷனில் அவசர அவசரமாக 3டிக்கு மாற்றப்பட்டது. ஆனால் கேமரூன் அவதாரில் தான் செய்த லைவ் அனிமேஷன் முழுமையாக ரசிகர்களை சென்றடைய 3டியைப் பயன்படுத்தினார். எல்லாம் ஒரு வியாபார உக்தி. வியாபாரத்திற்காக தற்போது பல படங்கள் 3டியாக மாற்றப்படுகிறது.

…//எல்.ஜி லைவ் 3டி சினிமா மேஜிக் எனப்படும் 3டி தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் வழக்கமான அனைத்து தொ.கா நிகழ்ச்சிகளையுமே 3டி யில் உடனே மாற்றிக்காட்டும்., மிக எளிய முறையில் செயல்ப்படும் அமைப்பு என்பதால் கொஞ்சம் பிசிறடிக்கலாம், ஆனால் இத்தொலைக்காட்சியில் 3டி படங்கள் நன்கு தெரியும். விலை 40,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.//

……3D கேமராக்கள், கேம்கார்டர்கள் எல்லாம் வர துவங்கிவிட்டன.

வவ்வால் said...

குட்டிபிசாசு,

வாங்க,நன்றி!

ஆமாம் மைடியர் குட்டிச்சாத்தான் போன்றவை தமிழுக்கு முதல் 3டியை அறிமுகம் செய்தது, இப்போக்கூட அம்புலி என 3டிப்படம் வந்தது, படத்தின் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும், 3டி என்பது ஆரம்பநாட்களுக்கு கூட்டம் வரவைக்கவே உதவும்.

ஆமாம் இப்போ செல்போன்,டேப்லெட் எல்லாம் 3டியில் கிடைகுது, எல்ஜி-ஆப்டிமஸ் ஆட்டொ 3டி போன் விளம்பரம் எடுப்பதை தான் போட்டுள்ளேன். கண்ணாடி இல்லாமலே 3டியில் பார்க்கலாம்,அதுவே ஆட்டோ 3டி.

சிவாஜி படத்தினை எப்படி 3டி மாற்றினோம் என சொல்லும் வீடியோவைப்பாருங்கள் செம காமெடியாக இருக்கும் :-))

முரளிகண்ணன் said...

ஷ்ரேயா 3டியில் வரப் போவது மிக்க சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு தொழிநுட்ப தகவல்! நன்றி!

இன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html

வவ்வால் said...

முரளிகண்ணன்,

வாங்க,நன்றி!

உங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட திருடி ஷ்ரேயா 3டியில் வருவதை கண்டு பேரானந்தமோ :-))

---------
சுரேஷ்,

வாங்க,நன்றி!

--------------

naren said...

வவ்வால்,

ரனினியிடம், இரத்தம் வரும்வரை பால் கறப்பதை விட மாட்டார்கள் போலும்.
பெத்த பொண்ணுங்களே செய்கிற போது மத்தவங்க சும்மாவா இருப்பானுங்க.

ரஜினி ரசிகர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. எதையும் தாங்கும் இதையம் அவனுக்கு மட்டும்தான் என்று எல்லோருக்கும் ஒரு நினைப்பு.

கோச்சடையான் ஊத்திகிட்டாதான் எல்லோருக்கும் ஒரு பாடம் வரும். மற்றவர்கள் விரும்புவதை விட, ரஜினி ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அதை தர முன்வருவார்கள்.

நன்றி.

பழூர் கார்த்தி said...

வவ்வால், விளக்கமா எழுதியிருக்கீங்க, நன்றி! நீங்க சொல்றத பாத்த ரொம்ப ஈசியான வேலையா இருக்கே, ஆனா பேப்பர்ல 450 பேர் இதுக்காக இரவு பகலா (சிவாஜி 3டி) வேலை பார்த்தாங்கன்னு ரஜினி சொல்லி இருக்காரே??

நீங்க சொல்லும் எல்.ஜி 3டி டிவி பார்க்க 3டி கண்ணாடி போட்டுக்கனுமா??

வவ்வால் said...

நரேன்,

வாங்க,நன்றி!

ரஜினி என்ற பெயருக்கு இருக்கும் சந்தை மதிப்பை பணமாக மாற்ற அனைவரும் துடிக்கிறார்கள், அதில் வாரிசுகளும் விதி விலக்கல்ல.

கோச்சடையான் ஒரு புதிய முயற்சி என்ற அளவில் வரவேற்கலாம்,ஆனால் அதிலும் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் சரியாகவும், கதையும் இருக்க வேண்டும், ஆனால் செய்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ரஜினி பெயரை மட்டும் வைத்து வியாபாரம் செய்யப்பார்க்கிறார்கள் என முன்னர் கோச்சடையான் பற்றியப்பதிவில் சொல்லி இருப்பேன்.

ரஜினி என்ற பிரம்மாஸ்திரத்தினை கோச்சடையானில் சரியாக ஏவினால் பலன் கிட்டும்,ஆனால் எல்லாம் கற்றுக்குட்டிகள் எனவே சொதப்புவதற்கே வாய்ப்புள்ளது.

---------------

பழுவூர் கார்த்தி,

வாங்க ,நன்றி!

ரொம்ப ஈசியா இருக்கும் ,மென்பொருளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள் செய்தால், கஷ்டமாக இருக்கும் தெரியாமல் செய்தால் :-))

ஹாலிவுட்டில் தலை முடி முதல் துல்லியம்மாக வர மெனக்கெடுவார்கள் எனவே நேரம் எடுத்துக்கொள்வார்கள். அப்படியும் 3மாதத்தில் இது போன்ற வேலையை செய்துவிடுவார்கள், பின்னர் மற்ற வேலைகள் செய்து சுமார் ஒரு ஆண்டில் வெளியிடுகிறார்கள்.அதிகப்பட்சம் 10-20 பேர் தான் வேலை செய்வார்கள். அவதார் படத்தின் மேக்கிங் பற்றிப்படித்தப்போது தெரியவந்தது.

ஜேம்ஸ் காமரூன் அவரது பண்ணை வீட்டில் வைத்தே மொத்த போஸ்ட் புரடெக்‌ஷன் முடித்தாராம், அங்கேயே சாப்பிட்டு தங்கி வேலையை முடிக்க வேண்டும்,காரணம் படம் பற்றிய தகவல்கள் வெளியில் செல்லக்கூடாது என்பதால்.எல்லாரையும் உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டாராம், இதற்கெனவே பிரத்யோகமான வங்கி லாக்கர் போன்ற கதவை வைத்தார்னு போட்டு இருக்காங்க.

இங்கே இந்த வேலைக்கே ஒரு ஆண்டு 450 பேர் என்பதெல்லாம் ரொம்ப அதிகம்.

நம்ம ஊர் ஆட்களுக்கு இப்படி கணினியில் 3டி ஆக மாற்றிய அனுபவம் இல்லாததால் கஷ்டப்பட்டிருக்கலாம்.

மேலும் தனிநபர் பயன்ப்பாட்டிற்கு மென்பொருள் விலைக்குறைவு ,ஆனால் வணிகப்பயன்ப்பாட்டிற்கு எனில் அதன் லைசென்ஸ் கட்டணம் அதிகம், எனவே இவர்கள் மென்பொருள் வாங்காமல் , தனிநபர் மென்ப்பொருளைப்பயன்ப்படுத்தி செய்து இருக்கலாம். எனவே இப்படி செய்ய்தோம் என வெளியில் சொல்ல முடியாமால் சுற்றி வளைத்து கதை சொல்கிறார்கள் என நினைக்கிறேன். ஏன் எனில் பேட்டியில் எந்த மென்பொருள் என சொல்லாமல் எங்ககிட்டே இதுக்குன்னு ஒரு மென்பொருள் இருக்குன்னு மட்டும் சொன்னார்கள்.

ரொம்ப கஷ்டப்பட்டு செய்தோம்னு சொன்னாத்தானே மதிப்பு கிடைக்கும் :-))

----------
ஆமாம் கண்ணாடி தேவையே, 3டி தொலைக்காட்சிக்கு ஃப்ளிக்கர் ஃப்ரீ கண்ணாடி எல்ஜியே தருகிறது. சமீபத்தில் கண்ணாடி இல்லாமல் பார்க்கும் 3டி தொலைக்காட்சிகளும் ஆட்டொ3டி என வந்துள்ளது ,ஆனால் பார்க்கும் கோணம் குறைவாகவும் ,கொஞ்சம் கிளார் அடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

முதன் முறையாக எல்ஜி ஆப்டிமஸ் கைப்பேசி ஆட்டோ 3டி வகை கைப்பேசியாக வந்துள்ளது எனப்போட்டுள்ளார்கள்.
------------