Friday, September 14, 2012

அஃதே,இஃதே-3



யார் சிந்தனையாளர்கள்?

சென்னையில் நடந்த அன்ன தான விழாவில் ஒருவர் பேசியதாவது, மற்ற ஜாதினருக்கு தானம் அளிப்பதை விட பிராமணர்களுக்கு தானம் அளிப்பது மிகவும் சிறந்தது எனப்பேசினார், அதற்கு விவேகானந்த அய்யா அவர்கள், இக்கருத்தில் நல்லதும் உண்டு ,தீயதும் உண்டு. நாட்டில் உள்ள எல்லா பண்பாடுகளும் பிராமணர்களிடையே நடைமுறையில் உள்ளன,நாட்டின் சிந்தனையாளர்களாகவும் அவர்களே உள்ளனர்,அவர்களை சிந்தனையாளர்களாக ஆக்குகின்ற வாழ்க்கை வழியை அடைத்துவிட்டால் நம்ம் நாடு முழுவதும் பெரும் துன்பத்துக்குள்ளாகும் என சொன்னார்.

விவேகானந்த அய்யாவின் கூற்றினை கட்டுடைத்து பார்த்தால்,

# பிராமணர்களுக்கு மட்டுமே சிந்திக்க தெரியும்??!!

# அவர்களை சிந்தனையாளர்களாக உருவாக்க அவர்களுக்கு நிறைய தானம் செய்ய வேண்டும் .

அல்லது தானம் கொடுத்து சொகுசாக வாழ வைத்தால் சிந்திக்க மாட்டாங்கன்னு சேம் சைட் கோல் அடிக்கிறாரா?

# பிராமண சிந்தனைகள் ஊற்றெடுக்கவில்லை எனில் நாட்டுக்கு பெரிய துன்பம் உண்டாகிடும்.

பிராமண சிந்தனை ஊற்றெடுத்து என்ன நாடு வளமாச்சுன்னு எனக்கு ஒன்னியும் பிரியலை.

ஹி..ஹி எதையவாது படிப்போமேனு தேடினப்போ எப்போவோ வாங்கி சும்மா கிடந்த , விவேகானந்தரின் " கொழும்பு முதல் அல்மோரா வரை" என்ற பயணக்கட்டுரை நூல் கிடைச்சது, கொஞ்சம் பக்கங்கள் மானாவாரியா படிச்சதில் சிக்கினது தான் மேற்கண்டது.

500 பக்கமுள்ள இந்நூல் வெறும் 38 ரூவா தான் அதனாலேயே இந்நூலை வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன். மலிவான விலையில் விற்க காரணம் இராமகிருஷ்ண மட வெளியீடும், அதற்கு டீ.வி.எஸ் குழுமத்தின் சுந்தரம் நிதிநிறுவனத்தின் பண உதவியும் ஒரு காரணம்.

---------------
"பாசி"ட்டிவ் எனர்ஜி.



ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த உயிர் வேதியல் அறிஞர் " Pierre Calleja" என்பவர் பாசியில் இருந்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்கு எரிய வைக்கும் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

இவ்வகையான பாசியை தண்ணீர் கொண்ட கலத்தில் வைத்து பகலில் வெயில் படும் படி வைத்துவிட்டால் காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் , கதிரவனின் ஆற்றலை ஈர்த்து மின்சாரமாக மாற்றி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமித்து வைத்துவிடும், பின்னர் இரவில் தெருவிளக்கினை ஒளியூட்டலாம். இதன் மூலம் நகரத்தில் வாகன போக்குவரத்தினால் உருவாகும் கரியமில வாயு குறைவதோடு, மின்சாரம் தயாரிக்கும் போது உருவாகும் கரியமில வாயு இன்ன பிற வாயுக்களும் உற்பத்தியாவது குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.


இத்திட்டங்கள் எல்லாம் ஆய்வு நிலையில் வெற்றிகரமாக இயங்குகின்றன, வணிக ரீதியில் விலை குறைவாக தயாரிக்க முடிந்தால் பெருமளவு மின் தேவையை இயற்கையாக பெறலாம் ,மேலும் அபாயமான அணு உலைகள் கட்டுவதும் தேவைப்படாது.

மேலும் பாசிகள் மூலம் பெருமளவில் மின்சாரம் தயாரிக்கவும் உலக அளவில் சோதனைகள் நடந்துக்கொண்டுள்ளன, நம் நாட்டில் வழமை போல நிலக்கரி, அணு உலை என தீரா ஆர்வத்துடன் வேலை நடக்கிறது :-))

தேவையே கண்டுப்பிடிப்பின் தாய்! நம் தேவைகள் புதிய தீங்கில்லா மாற்று எரிசக்திகளை உருவாக்கினால் மட்டுமே எதிர்காலத்திற்கு நல்லது.

------------------------

சந்தையில் புதுசு:மின் வெட்டில் மின்னும் விளக்கு.

மேற்கண்ட படத்தில் உள்ள லெட் விளக்கு ஒரு சீனத்தயாரிப்பாகும், இதில் ஒரு சிறிய ,மின்கலமும்,மின்னேற்றியும் உள்ளது ,வழக்கமான மின் விளக்குகளை பொறுத்துவது போல "தாங்கியில்"(ஹோல்டரில்" ),மாட்டலாம். தானாக மின்னேற்றம் ஆக்கிவிடும், மின்வெட்டு ஆகும் போது சேமித்த மின்சாரம் மூலம் தானாகவே எரியும், சுமார் 3 மணி நேரம் வரையில் ஒளி கொடுக்கும். விலை 150 ரூவிலிருந்து இருக்கிறது,படத்தில் இருப்பது 150 ரூ, அடுத்து 200, 250 என கூடுதல் ஒளிரும் திறனுடன் விளக்குகள் இருக்கிறது.

எப்படி இருக்கிறது சோதனை செய்ய ஒன்றை வாங்கினேன் , நன்றாகவே இருக்கிறது ,இன்னும் இரண்டு வாங்கி மாட்டலாம் எனப்பார்க்கிறேன். தலை கீழ் மின்மாற்றி சேமகலம் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நல்ல பயனுள்ள ஒன்று எனலாம்.

மக்களுக்கு பயனுள்ள பொருட்களை எளிமைப்படுத்தி புதிய வகையில் மலிவாக கொடுப்பதில் சீனர்கள் எப்போதும் முந்திக்கொள்கிறார்கள், நல்ல மூளைக்காரர்கள் தான்!

---------------------

பாட்டொன்று கேட்டேன்!

ஹி... ஹி... மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டார் பாடல் காணொளி.சூப்பர் ஸ்டாருக்கு நடனம் அவ்வளவாக வருவதில்லை என்றாலும் வருவதை வச்சு அழகாக பாடல் காட்சிகளில் நடித்து , நடனமாட தெரியவில்லை என்ற குறையே தெரியாமல் பாடலை ஹிட் ஆக்கிவிடுவார்(அதான்யா நடிப்பு), அப்படியான எப்போதும் பசுமையான ஒரு பாடல் பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து.


-----------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், யூடியூப், டிஜிடெய்லி ,இணைய தளங்கள் ,நன்றி!
************

24 comments:

ராஜ நடராஜன் said...

எங்கே வவ்வால் எங்கும் பறக்கவேயில்லையேன்னு பார்த்தேன்.இங்கேயாவது வந்து உட்கார்ந்திருக்குதே:)

கட்டுடைத்தலை மாதிரிதான் நானும் கமெண்ட்டுறேன்.ஆனால் கடிச்சு வச்சுடுவேன்னு கவுண்டமணி ஸ்டைலில் பதில் போடுறீங்க!

டெட் பற்றியெல்லாம் நான் சொன்னால் அதில் எனக்கு ஒப்புதல் இல்லைங்கிறீங்க.ஆனால் நீங்களே TED மாதிரிதான் அறிவியல் கருத்து போடுறீங்க:)

சார்வாகன் said...

சகோ
//பிராமண சிந்தனை ஊற்றெடுத்து என்ன நாடு வளமாச்சுன்னு எனக்கு ஒன்னியும் பிரியலை.//

விவேகானந்தர் பிராமணரா என்பதும்,விக்கிபிடியாவில் அவரின் இனம் காயஸ்தா என்பது அவர்களில் ஒரு பிரிவா என அறியேன் விளக்கினால் தன்யன் ஆவேன்!!.

/http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda//Born into an aristocratic Bengali Kayastha family of Calcutta,/
சரி அது கிடக்கட்டும் பல் இந்து புராணங்கள் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தால் நலம் பெறுவோம் என கூவுகின்றன.ஆகவே அதனை விவேகானந்தர் சொல்லி இருந்தால் வியப்பில்லை!!
மனிதர்கள் வாழும் கால் சூழலை பிரதி பலிப்பதுப்பதுதான் உண்மை,எதார்த்ம்.அதை வ்ட்டிவிட்டு அன்றே கூறினார்,அதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சர்வ ரோக நிவாரணி என்பது த்வறு.

அரிஸ்டார்டில்,சாக்ரடீசில் இருந்து ஆதி சங்கர்,இரமானுஜர்,மத்துவர்,....விவேகானந்தரோ,டார்வினோ அன்னி பெசன்டோ,காந்தியோ பெரியாரோ ,ஜே.கோவோ யார் சொன்னாலும் சீர் தூக்கிப் பார்த்து இப்போதைய சூழலுக்கு பொருந்துவதை மட்டுமே எடுப்பது அறிவு!!!

ஆம் அப்படி சூழல் இருந்தது என்பதை நாம் ஏற்கிறோம்.ஆனால் இபோது அது சரியில்லை.பிறப்பு அடிப்படையின்றி யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம்.

பூசாரிக்கு விருப்பப் பட்டு எதைக் கொடுத்தாலும் பக்தரின் விருப்பம்!!கட்டாயம் இல்லை!!!
************

/மின்சாரம் தயாரிக்கும் போது உருவாகும் கரியமில வாயு இன்ன பிற வாயுக்களும் உற்பத்தியாவது குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.//

மக்கள் அறிவியல் வாழ்க!!! இது பெரிய அள்வில செய்ய முடியுமா? காப்பி ரைட் உரிமை பெறாமல் இருந்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் பயன் பெற்றால் நன்று

*************
//மக்களுக்கு பயனுள்ள பொருட்களை எளிமைப்படுத்தி புதிய வகையில் மலிவாக கொடுப்பதில் சீனர்கள் எப்போதும் முந்திக்கொள்கிறார்கள், நல்ல மூளைக்காரர்கள் தான்!/

சைனா அண்ணன்களுக்கு மூக்கு மட்டுமே கொஞ்சம் சப்பை!!. அறிவு ரொம்ப கூர்மைங்கோ!!!கண்னை இடுக்கி இடுக்கி பார்த்தே பெரிய அண்ணன் அமெரிக்கவையே அசத்துகிறார்கள் வாழ்த்துகள்!!!
**********88
//அப்படியான எப்போதும் பசுமையான ஒரு பாடல் பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து.//
பொல்லாதவன் படத்தில் நடித்தாலும் அரசியலுக்கு வந்து பொல்லாங்கு செய்யாத இயல்பான நல்ல மனிதர்!!!
கையில் இருப்பது என்ன ப்ராண்டு சரக்கு??

வாழ்க வளமுடன்!!!

ஆனால் நான் பொல்லாதவன்!!
பொய் சொல்லுபவன்!!!

ஹி
***************

குட்டிபிசாசு said...

//பிராமண சிந்தனை ஊற்றெடுத்து என்ன நாடு வளமாச்சுன்னு எனக்கு ஒன்னியும் பிரியலை.//

:))

வவ்வால் said...

ராச நட ராசர் ,

நன்றி ,வணக்கம்!
--------------------

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

ஆமாம் காயஸ்த என்பதில் 9 வகையான மக்கள் இருக்காங்க அதில் , பிராமணர் ,ஆனால் அதனை பிராமணர்களே ஒப்புக்க மாட்டாங்க :-))

பிரம்மனின் உடல் வடிவில் தோன்றியவர்களாம் காயஸ்தா.

காயம்= உடல்.

ஒரிஜினல் பிராமணர்கள் பிரம்மணின் மனசில்= நெற்றியில் இருந்து.

எனவே விவேகானந்தர் கொஞ்சம் செகண்ட் கிரேட் பிராமணர், அப்படினு பிராமணர்களே சொல்லுறாங்க :-))

பூசாரிக்கு கொடுப்பது அவரவர் விருப்பம் ,அவர் சொன்ன சிந்திக்கும் மக்கள் பிராமணர்கள் என்பதே எனது கேள்வி?

பிராமணர் சிந்திக்கலைனா தேசம் பாழாப்பூடும்னு விவேகனாந்தர் பேசி இருக்கார். என்னோட கேள்வி பிராமணர் என்னிக்கு சிந்தித்து இருக்காங்க?

எல்லாம் வேதம் பல லட்சம் ஆண்டு முன்னால வந்துச்சுன்னு தானே சொல்லிண்டு இருந்தா?

அப்புறம் எங்கே சிந்தித்து இருப்பாள்?

------------
வெளிநாட்டுக்காரன் பல பில்லியன் டாலர் செலவு செய்து ஆய்வு செய்றான் காபி ரைட் வாங்காமலா இருப்பான்?

மக்களுக்கு கடசியில் குறைவான விலையில் கிடைத்தால் போதாதா.

இல்லைனா சைனா சப்பை மூக்கன் நமக்கு ஒரு வழி காட்டுவான்ல :-))
------------

சைனாக்காரன் எல்லாத்தையும் எளிமையாக்கி விக்குறான், நாம அதைக்கூட செய்ய மாட்டேன்கிறோம்.

------------

பொல்லாதவன் .... பொய் சொல்லாதவன் ...யார் வம்புக்கும் செல்லாதவன் ,,,யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடாதவன் ....அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ....வவ்வால் :-))

mont castle ...டமுக்கு டப்பா டிக்கா :-))

1/4 க்கு 5 ரூ விலை ஏத்திட்டாங்க என்னடா பொல்லாத வாழ்க்கை :-))

Anonymous said...

//கூகிள், யூடியூப், டிஜிடெய்லி ,இணைய தளங்கள் ,நன்றி!//

you are very truthful! never seen such a person.

Anonymous said...

அந்த விளக்கு மதுரையில் ரொம்ம்....பவே பழசு! விலை ரூ.100 - தான். என்ன, சில மாதங்களில் செயல் இழந்துவிடுகிறது!

சரவணன்

அஞ்சா சிங்கம் said...

/////மேற்கண்ட படத்தில் உள்ள லெட் விளக்கு////

அது லெட் அல்ல ... எல்.ஈ.டி............... லைட், எமிட்டிங், டையோடு ,

எப்புடி நாங்களும் குற்றம் கண்டு பிடிப்போமுலே .........எதுக்கும் கடைசியில் ஸ்மைலி போட்டு வைப்போம் ..:-)

அஞ்சா சிங்கம் said...

அந்த பாசி மேட்டர் ஹிஸ்டரி சேனலில் விரிவான டாக்குமென்ட்ரி பார்த்தேன் .. அதில் பெரிய அளவிற்கு மின்சாரம் தயாரிக்க கூடிய சாத்தியம் இருப்பதாகவே நினைக்கிறேன் ........


அஞ்சா சிங்கம் said...

இன்னும் சொல்ல போனால் இது போல் மாற்று எரிசக்தி திட்டங்கள் பல அமெரிக்கர்களிடம் இருக்கு ..திட்டம் என்று சொல்வதை விட அது செயல் வடிவம் பெற்று தயார் நிலையிலேயே இருப்பதாக எண்ணுகிறேன் ..

ஆனாலும் இப்போது பெற்றோலிய பொருட்கள் எல்லாம் டாலரில் வர்த்தகம் ஆவதால் . அது தடை பட்டால் அமெரிக்க பொருளாதாரம் எத்தகைய பாதிப்பு ஏற்ப்படும் என்று யூகிப்பது கடினம் . அநேகமாக பெட்ரோல் கிணறுகள் அரேபிய தேசத்தில் வற்றும் வரையாவது இந்த மாற்று எரிபொருள் திட்டங்கள் வெளியில் வராமல் இருக்க அமெரிக்கா முயற்சி செய்யும் என்று நினைக்கிறேன் ..

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றி!

உரத்த சிரிப்பா? ஆணவ சிரிப்பில்லையே, ஆனந்த சிரிப்பு தானே சிரிக்கலாம் ...கலாம்...லாம்!

----------

அனானி,

வாங்க,நன்றி!

உள்குத்து ஏதுமில்லையே, பாராட்டுக்கு நன்றி!
---------

சரவணன்,

அப்படியா மதுரையில் முன்னரே வந்தாச்சா,அதுவும் 100 ரூ தானா, , முன்னரே கூட வந்திருக்கலாம்,நான் இப்போ தான் ஒரு எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் வாங்கப்போனப்போது இங்கே கடையில் பார்த்தேன்,சரின்னு வாங்கினேன்,அந்த கடையில் எல்லாமே கொஞ்ச கூட தான் விலை சொன்னான், புற நகரில் அருகமையில் இருக்க கடை என்பதால் அப்படி இருக்கலாம்னு நினைச்சேன்.

சில மாதங்களில் செயலிழக்குதா, பார்ப்போம் எதனை நாள் எரியுதுன்னு.
-------------

அஞ்சா ஸிங்கமே,

வாரும் நன்றி!

L.E.D=led=லெட் என சேர்த்து போட்டிருக்கேன், அப்படித்தான் பேசுவது நம்ம வழக்கம்,கணினி வன் பொருள் கடையில் கூட லெட் ஸ்கிரீன் என்று தான் சொல்வாங்க.

ஆனாலும் எல்லாரும் நம்ம பதிவை கண்ணில் விளக்கெண்ணை விட்டுப்படிக்கிறாங்கப்பா,

சிரிப்பான் போட்டுப்போம் :-))

---------
ஆமாம் பெரிய அளவில் பல பாசிக்குட்டைகள் எல்லாம் வடிவமைத்து மெகா வாட்டில் மின்சாரம் தயாரிக்கும் ஒரு முன்னோடி திட்டம் அமெரிக்காவில் போயிட்டு இருக்கு,முழு விவரமும் படத்துடன் இணையத்திலும் இருக்கு, இங்கே சிறிய அளவில் தெருவிளக்க்கு திட்டமாக கொண்டு வந்திருப்பதை மட்டுமே சொன்னேன்.

அமெரிக்கா பல திட்டங்கள் சோதனையாகவும், உடன் பயன்ப்படுத்தவும் செய்துக்கிட்டு இருக்கு, நீர் சொன்னது போல அதில் டாலர் அரசியலும் இருக்கலாம்.

அமெரிக்கா தான் உலகில் மிக அதிகமாக பசுமை இல்ல வாயு கக்குதுன்னு ஒரு புகாரும் இருப்பதால் கூடிய சீக்கிரம் மாற்று எரிப்பொருளுக்கு மாற வேண்டியதாகவும் இருக்கும். 2020 க்குள் 40% மாற்று எரிசக்திக்கு மாற திட்டம் எனப்படித்தேன்.

பரவாயில்லையே அஞ்சா ஸிங்கமும் விடாமல் கவனிச்சு வருதா அமெரிக்காவை :-))

Robin said...

//பிராமணர்களுக்கு மட்டுமே சிந்திக்க தெரியும்// அந்தக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் சிந்திக்க நேரம் இருந்திருக்கும். வேலை செய்யாமல் ஓசி சோறு சாப்பிட்டவர்களாச்சே. மற்றவர்களுக்கு உழைத்து உண்டு உறங்குவதற்குத்தான் நேரம் சரியாக இருந்திருக்கும்.

naren said...
This comment has been removed by the author.
naren said...

வவ்வால்,

உங்க இடுக்கைள், இடுக்கைகளின் மறுமொழிகள் வைத்தே பலர் நொண்டி சாக்கு பதிவுகள் எழுதி நொண்டி விஞ்ஞானிகள் ஆகுகிறார்கள்.)))

பிராமணர்களில் யார் உண்மையான பிராமணர்கள் என்று சண்டை வேறா. இந்த அக்கப்போர் பதிவுகளில் எங்கேயாவது நடக்கின்றதா. அப்போ யார்தான் உண்மையான பிராமணன்.??

முந்தைய காலதலைவர்களின் பேச்சுக்கள் அன்றைய கால சமூக, அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை வைத்தே இருக்கும். அதை எக்காலத்திற்கும் பொறுத்துவது மடத்தனம்.

இந்தியாவே பிராமண சிந்தனையில் தானே ஓடிக்கொண்டிருக்கிறது. பிராமணர் சிந்தனையே எல்லாத் துறைகளிலும் ஓடுகின்றது, நாட்டாண்மை செய்கின்றது. கேபிளை போற்றுகிறார்கள், ஜாக்கியை தூற்றுகிறார்கள், நம்ம சூத்திரர்களும் பிராமண மாதிரியேதானே சிந்திக்கின்றனர்.

ஏன் நம்ம புரட்சியே பிராமண சிந்தனையிலிருந்துதானே ஆரம்பிக்கிறது(LoL)...http://www.maamallan.com/2012/08/blog-post_26.html .

///வணிக ரீதியில் விலை குறைவாக தயாரிக்க முடிந்தால்//// எல்லா திட்டங்களும் இங்குதான் இறுதியாக வெற்றியா தோல்வியா என்ற நிலை அடைகின்றது.

அந்த லெட் விளக்கையும் பயன்படுத்துகிறேன், சில சமயங்களில் எறிந்து விடுகின்றது, கடைக்காரரிடம் விசாரிக்கையில் அதிக மின் சேமிப்பை தாங்காமல் சில தரமற்ற விளக்குகள் அப்படி ஆவதாக சொல்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் நடன எல்லையை அவரின் ரசிகர்கள் அறிந்து வைத்துள்ளார்கள், அதனால் ரசிக்க்முடிகின்றது. அனேக அந்த கால குத்துபாடல் ரகங்களில் நடனத்தில் ரஜினி தனது பாணியில் அசத்துகிறார். ஆண்மைத்தனம் உள்ளது. லோக நாயகர் நடனத்தில் பெண்மைத்தனம் உள்ளது :) :0

மேலே நீக்கப்பட்ட மறுமொழியை வைத்து, நொண்டி கட்டுகதைகள் ஏதாவது எழுதப்படுமா என்று பார்க்கவேண்டும்.

நன்றி.

குட்டிபிசாசு said...

வவ்வால்,

//ஆமாம் பெரிய அளவில் பல பாசிக்குட்டைகள் எல்லாம் வடிவமைத்து மெகா வாட்டில் மின்சாரம் தயாரிக்கும் ஒரு முன்னோடி திட்டம் அமெரிக்காவில் போயிட்டு இருக்கு//

நம் நாட்டில் கூட 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திட்டம் துவங்கப்பட்டுவிட்டது. இன்னும் முடிவடையவில்லை. கூடிய சீக்கிரம் முடிந்துவிடும். பாசியோடு குட்டைகள் கோவில்களிலும், பொதுயிடங்களிலும் தயார்நிலையில் உள்ளன. மின்சாரம் எடுக்கவேண்டியது மிச்சம்.

நரேன்,

மறுமொழி நீங்க சரியாக போடமாட்டீர்களா? போட்டுவிட்டு அழிப்பீர்களா? இதவச்சி உடனே நம்ம மோட்டார் மவுத் (நன்றி: வவ்வால்) ஒரு பதிவு போட்டுடும். ஜாக்கிரதை.

வேகநரி said...

வவ்வால் அவர்களே,
உங்க சிறகுகள் பதிவிலிட்ட கருத்துக்குSeptember 15, 2012 6:01 PM எனது பாராட்டு. அது தான் மிக உண்மை.
மிக குறிப்பாக
//இங்கே சில நடுநிலைவியாதிகள் மீது தான் செம காண்டாகிறது அவர்கள் என்ன மட்டமாக எழுதினாலும் வலிக்காமல் பட்டதும் படாததுமாக மிக மென்மையாக சொல்லுவார்கள் ஆனால் மற்றவர்கள்(நாம்) சொல்லிவிட்டால் வம்பு சண்டைக்கு இழுப்பதாக சொல்லுவார்கள்//

உங்க நேர்மைக்கு எனது பாராட்டுக்கள்.
உங்க பதிவை பின்பு படிக்கிறேன் நன்றி

வவ்வால் said...

துப்பறியும் ராபின்,

வாங்க,நன்றி!

என்ன கொஞ்ச நாளாக காணவில்லை, துப்பறிவதில் மூழ்கிட்டிங்களா?

சரியா சொன்னீங்க அந்த காலத்தில இருந்தே உட்கார்ந்தே சாப்பிட்ட இனம் ஆச்சே, வெள்ளைக்காரன் வந்ததும் அவனிடம் ஒட்டிக்கொண்டார்கள் , கடல் கடக்க கூடாதுன்னு சாஸ்திரம்ம் சொல்லுதுண்ணு சொல்லிக்கிட்டே முதல் ஆளா அமெரிக்காவுக்கு ஓடினாங்கோ எல்லாம் அவாள் சொல்றது தான் வேதம் :-))

--------------
நரேன் ,

வாரும் ,நன்றி!

நீர் ஒரு சரியான கலகக்காரர் அய்யா, இப்படியா பின்னூட்டு போட்டு அழித்து விளையாடி மோட்டார் மவுத்தை கன்பியூஸ் செய்வீர்,:-))

உண்மையான பிராமணன் யாருன்னு சோ அய்யங்காருக்கு கூட டவுட்டு வந்து எங்கே பிராமணன் என என்னமோ சொல்லிண்டு இருந்தார் :-))

நீர் சொன்னாப்போல அக்கால கருத்துக்களை இப்போ பொருத்தக்கூடாது ஆனால் எங்கே கேட்கிறார்கள்.

அதுவும் இல்லாமல் நம்ம மக்களின் மூளையில் பிராமணிய கருத்தாக்கங்களின் எச்சம் இன்னும் ஒட்டிக்கிட்டு போக மாட்டேன்தே,அதன் விளைவே நீங்கள் சொன்ன வலையுல அரசியலும்.

புதிய கண்டுப்பிடிப்புகள் ஆரம்பத்தில் மிக விலையதிகமாகவே இருக்கும், முதல் கணீனியின் விலை அப்போதை விமானத்தினை விட அதிகம், இன்று என்ன நிலை, எனவே கண்டுப்பிடித்து விட்டால் போக போக குறையும்.

பிளாட்டினம்ம் லைட் பேனல் என ஒன்று கன்டுப்பிடித்துள்ளார்கள் , மிக குறைவான மின்சாரத்தில் அதிக ,ஒளி நீண்ட ஆண்டுகள் வரும் ஆனால்ல் ஒரு விளக்கு 1000 டாலருக்கு மேல் , வருங்காலத்தில் விலை குறைந்து அனைவருக்கும் பயன்ப்படலாம், இப்போது மிக ஆடம்ம்பரமான 5 நட்சத்திர உணவகங்களுக்கு பயன்படலாம்.
------------
பெரும்பாலும் சீனத்தயாரிப்புகளில் இக்குறை உண்டு, வரும் வரைக்கும் வரட்டுமே. நான்ன் வாங்கிய லெட் லைட் அடிவாங்கியதும் அதனைப்பிரித்து , வேறு என்ன செய்யலாம்னு பதிவு போடுகிறேன் :-))
-----------
//அனேக அந்த கால குத்துபாடல் ரகங்களில் நடனத்தில் ரஜினி தனது பாணியில் அசத்துகிறார். ஆண்மைத்தனம் உள்ளது. லோக நாயகர் நடனத்தில் பெண்மைத்தனம் உள்ளது :) ://

இந்த உள்குத்து யாருக்கோ? ஆனாலும் உலகத்தரமானது :-))

உண்மை தான் அக்காலப்படல்களில் இன்றும் கவனிக்க வைப்பதில் ரஜினிப்பாடல்களே முன்னனியில் உள்ளது, லோகநாயகர் இடமும் வலமுமாக திரும்பி அடிக்கடி காலை தூக்கி காற்றில் கழுதை போல உதைப்பார் :-))
--------
அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்கோ?
-----------
குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றீ!

ஹி..ஹி நிறைய கோயில் குளம் பாசியோடு வளமாக இருக்கு ,ஆனால் ஊரில் இருக்கும் குளம் ,குட்டை எல்லாம் மண்ணைப்போட்டு மூடி , வீடு ,கடைன்னு கட்டி ரொம்ப நாளாச்சு.

எங்க ஏரியாவில் அக்கம் பக்கம் எல்லாம் சுற்றிப்பார்க்கவில்லையே என ஒரு நாள் கொஞ்ச தூரம் போய்ப்பார்த்தேன் ஒரு பெரிய ஏரி இருந்துச்சு , நல்ல உயரமா கரை ,உள்ள தண்ணி இருக்கான்னு தெரியலை ஏறிப்பார்த்தால் உள்ளே ஒரு நகரே இருக்கு :-))

பாதி ஏரி அளவுக்கு செம்மண் ரோடு போட்டு , எக்கச்சக்க வீடு கட்டியாச்சு....

லோகேஷனும் சொல்லுறேன் யாராவது நடவடிக்கை எடுக்கிறாங்களா பார்ப்போம்.ஜி.எஸ்டி சாலையில் ஊரப்பாக்கம் அடுத்து காட்டுப்பாக்கம் செல்லும் சாலையில் அயஞ்சேரி என்ற இடத்தில் இருக்கும் ஏரி தான் , அயன் ஏரி என்பது தான் அயன்சேரி என ஆயிற்றாம்.

அந்த ஏரியில் வீட்டு மனைகள் விற்பனைக்கு இருக்கு, வேன்டும்னா சொல்லுங்க மலிவா வாங்கிடலாம் :-))
---------

நரேனுக்கு , மோட்டர் மவுத்துடன் கண்ணாம்பூச்சி ஆட ஆசை :-))
-----------------

வவ்வால் said...

வேகநரி,

உங்க பாராட்டுக்கு நன்றி!

நம்மை தூண்டுவதை கண்டுக்காமல் ,பதில் கொடுப்பதை கண்டிப்பதையே நடுநிலை சொம்புகள் கொள்கையாக வைத்திருப்பதை அவதானிப்பதால் சொன்னேன்.

பேசாமல் நானும் ஒரு நடு நிலை சொம்பாக ஆகி நல்ல்ல்வ்வான்ன்னு பேரு வாங்கி ,நாக்கு வழிக்கலாமா என பார்க்கிறேன் :-))

சார்வாகன் said...

சகோ வவ்வால்!!

//பேசாமல் நானும் ஒரு நடு நிலை சொம்பாக ஆகி நல்ல்ல்வ்வான்ன்னு பேரு வாங்கி ,நாக்கு வழிக்கலாமா என பார்க்கிறேன் ://

ஹி ஹி அது உம்மால் முடியாது!!

ஏன்?

பொய் சொல்பவர்களை ஆதாரம்,சான்று காட்டி தவறு என் நிரூபித்தால் எல்லாரும் கொஞ்சுவார்களா??

ஆகவே நடுநிலை ஆக வேண்டுமென்றால் நிறுத்த வேண்டும். அதாவது பொய் சொல்பவர்கள்,கருத்து திணிப்பு பதிவுகளை படிப்பதை,அதற்கு மறுப்பு பின்னூட்டம் இடுவதை. ஹி ஹி

ஆனால் பதிவு எழுதுவதை விட‌ முடியுமா??

ஹி ஹி என்னால் முடியாது?

எனினும் தவிர்க்க முடியாத இன்றியமையா விடயங்களை மட்டுமே அம்பலப்படுத்துவது என ஒரு கட்டுப்பாடு வைத்தல் நல்லது!!

நாம்,

1.(போலி) வரலாறு,
2. போலி(மத) அறிவியல்


போன்றவற்றை மட்டுமே மறுப்பது என மட்டுமே கொள்கை.

ஓவ்வொரு மாற்று கருத்தையும் பின்னூட்டம் போட்டு எதுவும் செய்ய முடியாது என்பதால் எதிர் பதிவு போட்டு விட்டு வேறு வேலை பார்ப்போம்.


ஆகவே கருத்து திணிப்புகளை தடுக்கலாம்,ஆனால் அதற்கும் ஒரு எல்லை,கட்டுப்பாடு அவசியம்!!

அவ்வளவுதான்!!!

நன்றி!!!!

வவ்வால் said...

சார்வாகன்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி நீங்க சொன்னாப்போல அதெல்லாம் படிக்காம இருந்தா நல்லா தான் இருக்கும், அதுவும் படிச்சிட்டு எனக்கு ஒரு கருத்து தோன்றிவிட்டால் சொல்லாமலும் இருக்க மாட்டேன், வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாது :-))

பின்னூட்டம் போட்டோ,பதிவு எழுதியோ யாரையும் மாற்றிவிட முடியாது, ஏதோ நினைத்ததை சொன்னோம்னு ஒரு திருப்தி தான்.

நீங்க பதிவுக்கு எதிர்ப்பதிவுன்னு போட்டுடுறிங்க எனக்கு பதிவு போடவே சோம்பலாக இருக்கும், பின்னூட்டம் தான் சட்டுன்னு தட்டிட்டு வந்திருவேன்.

மேலும் மெனக்கெட்டு எதிர்ப்பதிவு போட்டு அதனை சம்பந்தப்பட்டவங்க படிக்கவே இல்லைனா என்ன செய்வதாம்? எனவே யாருக்கு என்ன சொல்லனுமோ அங்கே சொல்லிவிடுவேன்.

குறிப்பாக சிலவற்றை மட்டும் தான் எதிர்ப்பது ,மாற்றுக்கருத்து சொல்வது என்பதும் ஒரு வகையான சார்பு தன்மையே, மேலும் நம்மையே ஏமாற்றிக்கொள்வது,எனவே நேரம் கிடைச்சால் எல்லா தீயவற்றையும் சாடி விட வேண்டும், எனவே அது ,இது என தேர்வு செய்வதில்லை. நான் கருத்தினை தான் நல்லதா,கெட்டதா என பார்க்கிறேன் ஆட்களை அல்ல,ஆனால் ஆட்களோ அவர்களையே சொன்னதாக எடுத்துக்கொள்கிறார்கள் ,அதுவே உரசலாக போய்விடுகிறது.

சமீபத்தில் கூட என் மீது கேஸ் போடுவேன் என ஒருத்தர் சொன்னார், ஹி...ஹி நான் போட்டால் உங்கள் வேலையே காலி என்ன சொன்னதும் ஓடியே போயிட்டார். பின்னர் பலரையும் அப்படி சொல்லவே இப்போ எல்லாம் கும்பலாக அவரை ஓட்டுவதையும் பார்க்கிறேன், என் கிட்டேவாது கோவமா பேசினார், ஆனால் இப்போ அவரை ஓட்டுவது பிராபல்ய பதிவர்கள் என்பதால் வழிந்து கொண்டு இருக்கார், என்ன மானஸ்தனோ :-))

ஆள் , அவர்கள் பிராபல்யம் எல்லாம் வைத்து தான் சிலருக்கு ரோஷமே பொங்குது :-))

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வவ்வாலு...

பதில் கமெண்ட் போடும்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியா போடும்...

ஒவ்வொருவரா மீண்டும் போய் பார்க்க வேண்டி இருக்கு....
சிரமம் புரியும் என்று நினைக்குறேன்...
:-))))))))

இந்த முறை தட்டி விடலை...
:))))))))))))))))))))

நாய் நக்ஸ் said...

12:28 PM, September 15, 2012//////
8:14 PM, September 15, 2012/////

மிக நீண்ட இடைவெளி....
:-)
சியர்ஸ்....

I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...I KNOW...






இனியும் என்னை தொடர்பு கொள்ளா விட்டால்....?????????

உங்க இஷ்ட்டம்.....

நாய் நக்ஸ் said...

17:____________//////////

இது கடைசி....குலு...
:-)))))))))))

குட்டிபிசாசு said...

//ஆகவே நடுநிலை ஆக வேண்டுமென்றால் நிறுத்த வேண்டும். அதாவது பொய் சொல்பவர்கள்,கருத்து திணிப்பு பதிவுகளை படிப்பதை,அதற்கு மறுப்பு பின்னூட்டம் இடுவதை. ஹி ஹி //

சார்வாகன்,

நீங்கள் சொல்வதில் பாதி உண்மையுள்ளது. நடுநிலையாளர்களாக இருக்க இன்னும் சில அடிப்படை தகுதி இருக்கின்றன. தனிமனித தாக்குதல் செய்யாதீர்கள், அடுத்தவர் மனம் புண்படும்படி பின்னூட்டமிடாதீர்கள் என ஆங்காங்கு சொல்ல வேண்டும். உங்களுடைய கருத்து உங்களுக்கு அவர்களுடைய கருத்து அவர்களுக்கு, எதற்கு வீண்விவாதம் என்று சில பிலாசபி பிட்டு போடவேண்டும்.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

என்னய்யா சொல்றீர், ஆனால் தட்டிவிடாமல் ச்சியர்ஸ் சொன்னதுக்கு நன்றி!

நெசம்மா நானும் சரக்குல இருந்தேன், நீர் என்னமோ நீண்ட இடைவெளின்னு சொல்றீர் ,எதுக்குன்னு பிர்யலை?

கண்டிப்பா பார்க்கலாம் ,எப்போன்னு எனக்கே தெரியலை ...அவ்வ்வ்!
-------------

குட்டிப்பிசாசு,

ஹி...ஹி அந்த சூட்சமம் எல்லாம் எனக்கு தெரிஞ்சா நான் இன்னேரம் பிராபல்ய பதிவரா ஆகி சங்கம் வச்சிருக்க மாட்டேன் :-))

ஆனாலும் சிலதுங்க, நாம பூனை ,யானைனு சொன்னாலே தனி மனித தாக்குதல், கேசு போடுவேன் சொல்றாங்க, ஆனால்ல் மெண்டல்னு சொன்னாக்கூட ...ஹி..ஹி னு வழியறாங்க ...

உண்மையில எனக்கு தனி மனித தாக்குதல்னா என்னனு இப்போ அர்த்தமே(பொருளே) பிரியலை :-))