(இந்த வவ்வால் மண்டையில் எதாவது "microcontroller" இருக்குமோ? ஹி...ஹி!)
கடந்தப்பதிவில் மின்னணு வாக்கு எந்திரத்தில் எளிய முறையில் "ஏமாற்ற ஒரு வழி இருப்பதை" அலசினேன் ,அதே போல மேலும் பல எளிய மற்றும் உயர் நுட்ப வழிகள் உள்ளன , இதனை நான் ஒன்றும் புதிதாக கண்டுப்பிடித்து சொல்லவில்லை பலரும் இது போல ஆய்வு செய்துள்ளார்கள், அப்படி சொல்லாமல் விடுபட்டு போன வழிகள் சிலவற்றை மட்டுமே அடியேன் அலசி வருகிறேன்.
மேலும் சில வழிமுறைகளை காண்போம்,
தேர்தல் ஆணையம் ,எந்திரத்தின் நம்பகத்தன்மைக்கு சான்றாக சொல்லி வருவது என்னவெனில், அவர்கள் பயன்ப்படுத்தும் மைக்ரோ கண்ட்ரோலர்
"masked microcontroller chip" வகை எனவும் ஒரு முறை அதில் இயங்கு மென்ப்பொருள் அல்லது கணினி ஆணைத்தொடரை எழுதிவிட்டு அதனை மூடிவிட்டால் போதும் பின்னர் அதில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது என்பதேயாகும்.
அவர்கள் சொன்னப்படி "EVM "மைக்ரோ கண்ட்ரோலர் என்பது
"தீண்டா திருமேனியாகவே" இருக்கட்டும் , ஆனால் எந்திரத்தில் திரிசமன் செய்ய அதனை தொடாமலே காரியத்தினை முடிக்கலாம், அப்படியான ஒரு முறை தான் "
நடுவே ஒரு நாட்டாமை"(man in the middle) முறையாகும்.
அது எப்படி எனக்காண்போம்,
வாக்கு எந்திரத்தில் இரு பகுதிகள் உள்ளன என அறிவோம்,
1)
பேலட் யூனிட்- இது வாக்கு பதிவு கூண்டில் இருக்கும்.
இதில் வரிசையாக வேட்பாளர்கள் பெயர் அகரவரிசையில் ஒட்டப்ப்பட்டு இருக்கும், ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் ஒரு சிவப்பு லெட் விளக்கு, நீல நிற பித்தான் இருக்கும்,அதனை அழுத்தி வாக்களிக்க வேண்டும், அப்பொழுது சிவப்பு விளக்கு ஒளிறும், மேலும் பீங்க் என சனநாயக சங்கு ஊதுவது போல சத்தமும் வரும் ,அதுவே நாம் வாக்களித்து விட்டோம் என்பதற்கான அத்தாட்சி , மற்றபடி வேறு எவ்வகையிலும் வாக்களிக்கப்பட்டதை நாம் உறுதி செய்யவியலாது.
2)கண்ட்ரோல் யூனிட்.
இது வாக்குப்பதிவினை நடத்தும் அதிகாரியின் முன்னால் மேசையில் இருக்கும்.
ஒரு வாக்காளர் வாக்களிக்க தயாராகும் போது "ரெடி" என ஒரு பித்தானை அழுத்தி ,பேலட் யூனிட் செயல்பட தயாராக்குவார். அதன் பின்னரே பேலட் யூனிட்டில் பித்தானை அழுத்த இயலும், ஒரு முறை வாக்களித்தவுடன் , அடுத்தும் அவரே இரண்டாவது வாக்களிக்க இயலாதவாறு "நிறுத்தும்" வசதியும் இந்த யூனிட்டில் தான் உள்ளது.
ஒரு முறை பேலட் யூனிட்டில் பித்தானை அழுத்தியவுடன் அடுத்து அழுத்த சுமார் 10 நொடிகள் தேவைப்படும் வகையில் "டைம் டிலே" மெக்கானிசம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து அடுத்து ரெடி பித்தானை அழுத்திக்கொண்டே வாக்களித்தாலும் ஒரு நிமிடத்தில் 5 ஓட்டுகளையே பதிவு செய்ய இயலும், இது மெசினை வன்முறையாளர்கள் கைப்பற்றி கள்ள ஓட்டினை போடும் வேகத்தினை குறைக்கவே.
# ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகள் அனைத்தும் இந்த கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள "
non removable memory" இல் தான் சேமிக்கப்படும், இதுவே முக்கியமான பாகம் ஆகும், பேலட் யூனிட் என்பது வெறும் "உள்ளீடு" கருவி மட்டுமே.
இதெல்லாம் சரி ,இரண்டு கருவிகளும் தனி தனியாக இருக்கு ,இவற்றிற்கிடையே எப்படி "தகவல் பரிமாற்றம்" நிகழும் என ஒரு கேள்வி வருகிறதல்லவா?
இணைப்பில்லாமல் தகவல் பரிமாற்றம் சாத்தியமல்ல தானே.எனவே இரண்டு கருவிகளும் ஒரு "ரிப்பன் கேபிள்" மூலம் இணைக்கப்பட்டுள்ளது ,இதன் நீளம் 5 மீட்டர்.
இப்படி இணைப்பதும் ஒரு வகை நெட் ஒர்க் ஆகும், வாக்கு எந்திரமும் அப்படி நெட் ஒர்க் செய்யப்பட்டுள்ளது எனலாம், இதற்கு பயன்ப்படும் நெட் ஒர்க் புரோட்டோ காலின் பெயர் - RS-485 ஆகும்.
ரிப்பன் கேபிளை கண்ட்ரோல் யூனிட் உடன் இணைக்கும் சாக்கெட் வகை RS-485 ஆகும் ,அதன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
protocol என சொல்லிக்கொண்டாலும் TCP/IP போல எல்லாம் கிடையாது, உண்மையில் இது இணைப்பிற்கான ஒரு தர நிர்ணயம் தான் , வெறுமனே "ஓட்டையில் சொறுகி" இயக்கிக்கொள்ளும்
"plug and play" வகை இணைப்பே.
*RS= Recommended Standard!
கண்ட்ரோல் யூனிட்டும் ,பேலட் யூனிட்டும் , RS-485 சாக்கெட் உள்ள ஒரு 5 மீட்டர் நீளமுள்ள உள்ள ரிப்பன் கேபிள் மூலம் இணைக்கப்பட்டு தொடர்பு கொள்கிறது.
எந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலரில் ஒரு எளிமையான அல்காரிதம் அசம்ப்ளி லாங்க்வேஜில் எழுதப்பட்டு பதியப்பட்டுள்ளது ,அதை தவிர எந்திரத்தில் வேறு கணினி நிரல்களே இல்லை,எனவே இரு பாகங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் "என்கிரைப்ட்" செய்யப்படாமல் மட்டுமே நிகழ்கிறது. தேர்தல் ஆணையமும் என்கிரைப்ட் செய்யும் வசதி இருப்பதாக சொல்லவில்லை.
இங்கே தான் நடுவில நாட்டாமை எனப்படும்
"man in the middle" வருகிறார்.
இவரோட வேலை ஒட்டுக்கேட்பது அல்லது தகவலை திருத்துவது/திருடுவது ஆகும், இது எப்படி எனப்பார்க்கலாம்.
வழக்கமாக இரு கணினி இடையே தகவல் பரிமாறும் போது என்கிரைப்ட் செய்யப்படாமல் இருந்தால் , அத்தகவல்களை இடையில் யார் வேண்டுமானாலும் கைப்பற்றி படிக்க இயலும், இவ்வாறு படிக்க இயலாமல் என்கிரைப்ட் செய்யப்பட்டு தகவல் பரிமாறும் இணைய தளங்களை செக்கியூர் செர்வர் இணைய தளங்கள் என தனியாக குறிப்பிடுவார்கள், அத்தளங்களின் முகவரி
https:// என ஆரம்பிக்கும், பிலாக்கர் போன்றவற்றில் லாக்கின் செய்யும் தளம் இவ்வாறு இருப்பதை காணலாம்.
என்கிரைப்ஷன் விளக்க படம்:
(senders message encrypted with public key-receiver decrypted with private key)
கண்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் இடையே என்கிரைப்ஷனே இல்லை என்பதால் , பரிமாறப்படும் தகவலை எளிதில் கைப்பற்றி படிக்க இயலும், அதற்கு தகவல் அனுப்பும் பேலட் யூனிட்டிலோ அல்லது தகவல் பெறும் கண்ட்ரோல் யூனிட்டிலோ அல்லது இரண்டுக்கும் நடுவில் ரிப்பன் கேபிளிலோ ஒட்டுக்கேட்கும் கருவியினை பொருத்தினால் போதும்.
பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் முழுக்க " அரக்கு சீல் வச்சு , பேப்பர்லாம் ஒட்டி ,நூல் போட்டு கட்டி "பாதுகாப்பாக வச்சிருப்பாங்கலாம், எனவே யாராவது திருப்புளி வச்சு நட்டைக்கழட்டி டப்பாவ தொறந்தால் "தொறந்தாச்சு என்ற" உண்மையை கண்டுப்புடிச்சுடுவாங்களாம் , எனவே அதுக்கு பயந்துக்கிட்டே யாரும் டப்பாவ தொறக்க மாட்டாங்க ,ரொம்ப நல்ல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என சிரிக்காமல் விளக்குறாங்க தேர்தல் ஆணைய அதிகாரிகள்,சரி அப்படியே வச்சிப்போம், ரெண்டு எந்திரப்பாகங்களையும் திறக்கவில்லை அப்பவும் தகவலை திருட முடியாதா என்றால் முடியுமே!!!
எப்படி எனில் "
இணைக்கும் ரிப்பன் கேபிள்" தான் அம்போனு அனாமத்தா சீல் வைக்காம கிடக்கே ,அங்க நடுவில நாட்டாமைய நிக்க வைக்கலாம் அவ்வ்!
நாட்டாமை எப்படி தீர்ப்பை மாத்தி எழுதுறார் என்பதை புரிந்துக்கொள்ள அனைவருக்கும் நன்கு தெரிந்த உதாரணம் ஒன்றினைப்பார்ப்போம்.
சாதாரணமாக நாம் பயன்ப்படுத்தும் கணினியில் ஏதேனும் ஒரு தகவலை பதிய என்ன செய்கிறோம் , உளிய எடுத்து செதுக்கவோ இல்லை பேனா எடுத்து எழுதவோ செய்வதில்லை, ஒரு தட்டச்சு விசைப்பலகையை இணைத்து அதில் தகவலை உள்ளீடு செய்கிறோம்.
விசைப்பலகையில் a,b,c,d ... or A,B.C,D... என ஆங்கில எழுத்துக்களும், 1,2,3,4... என எண்களும் ,@,#,& ,* ,? என பலக்குறியீடுகளும் கீ களின் மேல் பொறிக்கப்பட்டிருக்கு ,அதனை அழுத்தினால் திரையில் "சம்பந்தப்பட்ட" வடிவங்கள் தோன்றுகின்றவே அது எப்படி ?
(அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது- K/B controller)
எப்படி என்றால் விசைப்பலகையின் உள்ளேயும் மைக்ரோ கண்ரோலர் உள்ளது ,அதில் ஒவ்வொரு எழுத்துக்கும் என ஒரு "
ASCII code"( American Standard Code for Information Interchange) மதிப்பினை கொடுத்துள்ளார்கள்.மொத்தம் 127 ascii code values.
"a" என்ற key ஐ அழுத்தினால் அதற்கு என ஒதுக்கப்பட்ட "ASCII code" மதிப்பான "
097" என்ற டெசிமல் வேல்யுவினை கணினிக்கு அனுப்பும்.
கணினியில்
"the Microsoft Direct Input Keyboard Device" என்ற ஒரு பிரிவு மென்பொருளில் இதற்கென இயங்குகிறது( இயங்கு தளத்தில் வடிவமைச்சிருப்பாங்க)அதில் விசைப்பலகையின் எல்லா கீக்களுக்கும் மதிப்பு கொடுக்கப்பட்டு இருக்கும், "ASCII code" மதிப்புக்கு எந்த எழுத்து எனப்பார்க்கும், அதனை திரையில் காட்ட கேரக்டர் மேப்பிங்கில் "அந்த எழுத்தின் வடிவை தேடும்"(glype) அதை தான் "ஃபான்ட்" என்கிறோம்.
"097" என்ற எண்ணுக்கு "a" என கண்டுப்பிடிக்கும், கேரக்டர் மேப்பிங்கில் "a" எழுத்தினை அதே மதிப்பினை பெயராகக்கொண்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கும், அதாவது நாம் பயன்ப்படுத்தும் ஃபாண்டில் இருக்கும் ஒவ்வொரு எழுத்துருவும் "ASCII code" பெயரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
அதாவது ஒவ்வொரு எழுத்துருவும்(glype) ஒரு சிறிய படம் ஆகும்,அதன் கோப்பு பெயர் அதற்கான "ASCII code" ஆகும்.
கவனிக்க:
இங்கே சுருக்கமாக சொல்ல ""ASCII code" ஒன்றை மட்டுமே சொல்கிறேன் ,ஆனால் பைனரி,ஹெக்சா டெசிமல், யுனிகோட் என அனைத்து கோடிங் மதிப்பிலும் எழுத்துரு கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும்.
கொரியர் ,டைம்ஸ் நியு ரோமன் என பல ஃபாண்ட்கள் உள்ளதல்லவா அவை எல்லாமே எழுத்தின் வடிவங்களை சிறிய படங்களாக மாற்றி அவற்றிற்கு ""ASCII code" கொடுத்து சேமிக்கப்பட்டவையே.
நாம் கூட வித விதமான "ஸ்டைலில் எழுதி" ஸ்கேன் செய்து தனி தனி எழுத்துக்களாக எல்லாவற்றையும் படங்களாக சேமித்து "ASCII code" கொடுத்து விட்டால் போதும் நாமே உருவாக்கிய ஃபான்ட் எனலாம், இப்படித்தான் பல வகையான ஃபாண்ட்கள் உருவாக்கப்படுகின்றன. "font forge" என்ற மென்ப்பொருள் இலவசமாக கூட கிடைக்கிறது அதனை வைத்து உருவாக்கலாம்.
unicode எனில் அதன் மதிப்பினை எழுத்துருவுக்கு கொடுக்க வேண்டும்.
கேரக்டர் மேப்பிங் படம்.
இப்போது கணினியில் உள்ளீடு செய்யப்பட்டதை இயங்கு தளம் எப்படி மீண்டும் உருவாக்கி திரையில் காட்டுகிறது எனப்பார்த்தோம், திரையில் காட்டுவதை சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
இதே போல தான் வாக்குப்பதிவு எந்திரத்திலும் 'பேலட் யூனிட்" ஒரு தட்டச்சு விசைப்பலகையாக செயல்ப்படுகிறது.
அது அனுப்பும் தகவல் என்னவெனில்,
ஒன்றாம் எண் பித்தான் என அதன் வரிசை எண்ணின் மதிப்பும்,ஒரு முறை அழுத்தப்பட்டது என்பதற்கான குறியீட்டு மதிப்பும் மட்டுமே ஆகும், அதே போல அனைத்து பித்தான்களுக்கும் நடைபெறும்.
இதனை பேலட் யூனிட்டில் இருக்கும் ஒரு சிறிய மைக்ரோ கண்ட்ரோலர் செய்யும். அங்கிருந்து தகவல் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் யூனிட்டுக்கு சென்று " கணினியில்" கேரக்டர் மேப்பிங்கில்" தேடி "எழுத்துருவை காட்டுவது போல , செவன் செக்மெண்ட் டிஸ்ப்ளேயில் காட்டும் ,அதனையே நினைவகத்திலும் சேமித்து வைத்துக்கொள்கிறது.
இது வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு இதுல என்ன குத்தம் கண்டுப்பிடிச்சேனு ,பொங்காதிங்க , கொஞ்சம் நல்லா புரியிறாப்போல சொல்லணும்னு தான் இம்புட்டு "சபினா" போட்டு விளக்குறேன் அவ்வ்.
இப்போ ,மீண்டும் நம்ம கணினிக்கே வருவோம், ஆங்கில விசைப்பலகையில் ஆங்கில எழுத்தினை அமுக்கினால் அதன் "ASCII code" மதிப்பினை அனுப்புதகிறது ,கணினி அதனை காட்டுகின்றது, ஆனால் NHM writer அல்லது e-கலப்பையை நிறுவி விட்டு தமிழ் என தேர்வு செய்து , "a" என அமுக்கினால் எப்படி "அ" என மொழி மாற்றி காட்டுகிறது என யோசித்து இருப்பீர்களா?
அதான் யுனிக்கோட் டிரான்ஸ்லிட்டரேஷன் டைப்பிங் அப்படித்தான் காட்டும் என சொல்லிடலாம் , அப்படிக்காட்டணும் என கணினிக்கு என்ன அவசியமா?
இதன் விளக்கம் தான் மொழி மாற்று உள்ளீடு மென்பொருட்கள் உருவாக்கத்தின் அடிப்படை ஆகும்.
யுனிக்கோட் முறையில் ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களுக்கும் அதற்கென ஒதுக்கப்பட்ட Unicode block இல் குறிப்பிட்ட இடம் ,எண்ணிக்கையில் மதிப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.தமிழுக்கு என 128 (72+56) இடங்களை கொடுத்திருக்கிறார்கள் , அதில் "அ" என்ற எழுத்துக்கு என்ன மதிப்பெனில் "0B85" ஆகும்.
இப்பொழுது "a" என விசைப்பலகையில் அழுத்தினால் "ASCII code" மதிப்பில் 097 என அனுப்பாமல் ,யுனிக்கோடில் "0B85" என "அ" மதிப்பினை விசைப்பலகை அனுப்பும் படி செய்துவிட்டால் போதும், கணினியில் "அ" தெரியும், ஆனால் என்ன செய்ய விசைப்பலகை மைக்ரோ கண்ட்ரோலர் ஏற்கனவே புரோகிராம் செய்யப்ப்பட்டு சீல் வச்சிட்டாங்களே எனவே விசைப்பலகையில் யூனிக்கோட்டினை புகுத்த முடியாதே அவ்வ்.
இதுக்கு மாற்று என்னவெனில் , கணினியில் இருக்கும் " எழுத்துரு மேப்பினை" நமது மொழிக்கு ஏற்ப திருத்துவது தான் வழியாகும்.
அப்படி திருத்த உதவுவது தான்
எ -கலப்பை ,NHM writer போன்ற யுனிகோட் தமிழ் எழுதிகள்.
இந்த தமிழ் எழுதிகளை நிறுவியதும் அவை மைக்ரோ சாப்ட் டைரக்ட் கீ யின் கேரக்டர் மேப்பிங்கில் , ஆங்கில கேரக்டர்களுக்கு உண்டான மதிப்பிற்கு பதில் தமிழ் எழுத்துக்களுக்கான யுனிகோட் மதிப்பினை கொடுக்கும்.
அதாவது
"a" = 097 என விசைப்பலகை அனுப்பினால் அதற்கு சப்ஸ்டிடியூட்டாக யுனிக்கோட்டில் ""0B85" என்ற மதிப்பினை கேரக்டர் மேப்பில் கொடுக்கும், அதற்கான எழுத்துரு என்ன என கணினி "ஃபான்ட் ஃபோல்டரில்" தேடிப்பார்க்கும் அங்கே "
அ" எழுத்து "0B85" என்ற பெயரில் இருக்கும் அதனை இழுத்து வந்து திரையில் போடும்,நாமும்
"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி "..என சரஸ்வதி சபதம் வித்யாபதி போல ஒரே நாளில் தமிழ்ப்புலமைப்பெற்று பதிவு எழுத ஆரம்பிச்சுடுவோம் -))
இதன் மூலம் அடியேன் என்ன சொல்ல வருகிறேன் என்றால் , கணினியின் மென்ப்பொருள் வழக்கமாக செய்யும் வேலையை இடையில் ஒரு மென்ப்பொருளை போட்டு மாத்தி செய்ய வைக்கிறோம், மற்றபடி அதே கீ போர்ட், அதே கணினி தான்.
NOTE:
ஆஸ்கி அல்லது யுனிக்கோடின் மதிப்பு தெரிந்தால் நேரடியாக உள்ளிடு செய்தும் தட்டச்சு செய்யலாம்.
Inserting ASCII characters
To insert an ASCII character, press and hold down ALT while typing the character code. For example, to insert the degree (º) symbol, press and hold down ALT while typing 0176 on the numeric keypad.
NOTE You must use the numeric keypad to type the numbers and not the keyboard. Make sure that the NUM LOCK key is on if your keyboard requires it to type numbers on the numeric keypad.
Inserting Unicode characters
To insert a Unicode character, type the character code, press ALT, and then press X. For example, to type a dollar symbol ($), type 0024, press ALT, and then press X. For more Unicode character codes, see
Unicode character code charts by script.
IMPORTANT Some of the Microsoft Office programs, such as PowerPoint and InfoPath, cannot convert Unicode codes to characters. If you need a Unicode character and are using one of the programs that doesn't support Unicode characters, use the
Character Map to enter the character(s) that you need.
NOTES
- You must use the numeric keypad to type the numbers and not the keyboard. Make sure that the NUM LOCK key is on if your keyboard requires it to type numbers on the numeric keypad.
- If you have trouble getting the Unicode to convert to your character, type the code using the numeric keypad, select the code, and then click ALT+X.
மூலம்:
http://office.microsoft.com/en-in/onenote-help/insert-ascii-or-unicode-latin-based-symbols-and-characters-HA010167539.aspx
ASCII Table:
Unicode table:
இவ்வாறு செய்ய இயலக் காரணம் கணினி ஒரு மென்ப்பொருளை நிறுவ அனுமதிக்குது. அதே சமயம் வாக்கு எந்திரம் இவ்வாறு அனுமதிக்காது என சொல்கிறார்கள்.
வாக்கு எந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலருக்குள் "தகவல் போனப்பிறகு மாற்ற முடியாது" என்பதை ஏற்றுக்கொள்வோம், இப்போ போகும் வழியில் நாம் விரும்பிய மென்ப்பொருளை நிறுவி மாற்றலாமே!
NHM writer எப்படி"a" வை ஆ என மாற்றுதோ அதே போல பேலட் யூனிட்டில் உள்ள பித்தான் ஒன்று அனுப்பும் ஓட்டினை பித்தான் இரண்டு அனுப்பும் ஓட்டாக அடையாளம் மாற்றும் ஒரு அல்காரிதம் உருவாக்கி அதனை ஒரு தனித்தியங்கும் ஐ.சியில் நிறுவி ஒரு அடாப்டர் போல உருவாக்கலாம், அதனை கேபிளில் ஏதேனும் ஒரு இடத்தில் நிறுவிவிட்டால் போதும்,பேலட் யூனிட் அனுப்பும் தகவலை இடைமறித்து , ஒன்றை இரண்டாக மாற்றி கன்ட்ரோல் யூனிட்டுக்கு அனுப்பும் அவ்ளோ தான் வேலை ஓவர்.
இப்படி உருவாக்கின அடாப்டரை ரிப்பன் கேபிளின் கனெக்டரின் ஒரு முனையில் இணைப்பது போல செய்து அதனை கண்ட்ரோல் யூனிட் உடன் இணைத்து விட்டால் போதும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் அடாப்டரை கழட்டி வைத்துக்கொண்டு , மெசின்களை மட்டும் பக்குவமாக சீல் செய்து அனுப்பிடலாம்.
இப்படி இடையில் ஒரு அடாப்டரை மாட்டியிருப்பதை பூத்தில் உள்ளவர்கள் யாராவது விஷயம் தெரிந்து கேட்டால் தான் உண்டு, எத்தனை பூத் ஏஜண்டுகளுக்கு இந்த விவரம்லாம் தெரியும்?
அப்படியே கேட்டாலும் இப்படித்தான் மாட்டணும் இல்லைனா மெசின் வேலை செய்யாது என மிரட்டலாக சொன்னால் போதும் ,அரசு அதிகாரி தப்பாவா சொல்லப்போறார் , நமக்கேன் வம்பு என ஒதுங்கிடுவார்கள்.
#இப்படி செய்வதன் மூலம் மெசின்களை திறக்கவோ , இல்லை சேதமுண்டாக்கவோ தேவையில்லை எனவே அடையாளம் காணவும் இயலாது.
# மாக் போல் நடக்குமே அதில் தெரியாதா என முரளி போல சிலர் கேட்கக்கூடும், மாக் போல் முடித்து விட்டு , மெசினை அட்ஜெஸ்ட் செய்வது போல , கேபிளின்
RS.485 jack உடன் அடாப்டரை மீண்டும் மாட்டிவிட்டு இயக்கினால் போதும்.
# தேர்தல் ஆணையம் வழங்கும் வழிக்காட்டுதல் புத்தகத்தில் " கட்சிகளின் பூத் ஏஜண்டுகள்" கேபிள் உட்பட அனைத்தையும் பரிசோதிக்கலாம் என சொல்லி இருக்கிறது,ஆனால் பெரும்பாலும் மேலோட்டமாக பார்ப்பதோடு சரி, மேலும் அவ்வப்போது எந்திரங்கள் செயல்ப்படாமல் "ஜாம்" ஆகி நிற்பதும் பின்னர் அங்கே இங்கே தட்டி ,அமுக்கி சரி செய்வதும் வெகு சகஜம் என்பதால் , வாக்குப்பதிவு நடந்து வரும் வேளையில் ஏதோ பழுதினை சரி செய்வது போல "ரகசியமாக " ஒரு அடாப்டரை செறுகி விட்டு , வாக்குப்பதிவினை திசை திருப்பிவிடலாம்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் அடாப்டரை பிரித்தெடுத்து கொண்டு ,தேர்தல் ஆணைய தளவாடங்களை மட்டும் பேக் செய்துக்கொள்ளலாம்.
# இந்த அடாப்டரின் அளவு மிக சிறியதாக ஒரு பென் டிரைவ் அளவிலோ அல்லது அதனை விட சிறியதாகவோ தயாரிக்க முடியும்.
#ஒரு லோக் சபா தொகுதிக்கு சுமார் 1200 -1500 பூத்துக்கள் தான் , அதில் ஒரு 100 கிராமப்புர பூத்துக்களாக பார்த்து தேர்வு செய்து , தேர்தல் அலுவலர்களை மடக்கி "அடாப்டர்" மாட்டி தேர்தலை நடத்துவது "
சர்வ வல்லமை' படைத்த ஆளுங்கட்சியால் முடியாதா என்ன?
ஒரு பூத்துக்கு அதிக பட்சம் 1500 ஓட்டுக்கள், சராசரியாக 1000 ஓட்டு என வைத்துக்கொண்டாலும் 100 பூத்தில் சுமார் ஒரு லட்சம் ஓட்டுகளில் விளையாடலாம், அதுவே தேர்தல் முடிவுகளை சாதகமாக்க போதுமே?
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேகமாகவும் ,எளிதாகவும் இருப்பதால் மட்டுமே அதனை பயன்ப்படுத்த காரணமே அன்றி ,அதன் பாதுகாப்பு அம்சம் காரணமல்ல, சுப்ரீம் கோர்ட் இதனை புரிந்துக்கொண்டு , 2014 லோக் சபா தேர்தலிலேயே
"வாக்களிப்பினை பிரிண்ட் அவுட்" எடுக்கும் வசதியுள்ள மெசின்களை பயன்ப்படுத்த சொல்லி அறிவுறுத்தியது ,ஆனால் போதுமான எந்திரங்கள் தயாரிக்க அவகாசம் இல்லை என ஆணையம் பழைய முறையிலேயே செயல்ப்பட்டது.
# மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான பரிசோதனைப்பற்றி ரெடிப் இணையத்தளத்தில் வந்த கட்டுரை:
வாக்குப்பதிவு துவங்கும் முன்னரே "தொகுதி வாரியாக பதிவான வாக்கு, வெற்றிப்பெற்ற வேட்பாளர் என தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் "சில ஃபைல்கள்" சேமித்து வைக்கப்பட்டிருந்ததாம், முடிவு வரும் போது தேதியை மட்டும் மாற்றிவிட்டு வெளியிட்டார்கள் என சொல்கிறது.
"Concerns about the Indian EVMs were raised during the 2009 election in part as a result of an astounding discovery on the Election Commission of India Web site. Dr Anupam Saraph, at the time chief information officer for the city of Pune, and Professor M D Nalapat, vice-chair of the Manipal Advanced Research Group, discovered files on the ECI Web site that seemed to show election results days before votes were actually cast and counted.
India's 2009 elections were held in five phases, running from April 16 to May 13. Counting was not supposed to begin until all the phases were complete. Before the voting started, Saraph and Nalapat decided to track the elections and create a wiki for constituencies and candidates, with data sourced from Excel files on the ECI Web site."
(ஹரி கே.பிரசாத்)
Subsequently, a team of IT specialists, including J Alex Halderman from the University of Michigan, Electronic Frontier Foundation Pioneer Award winner Hari K Prasad, and Dutch Internet pioneer Rop Gonggrijp, used an actual Indian EVM to demonstrate two ways they could be hacked.
As Florida voters (and watchers of Scandal know, often elections come down to just a few precincts in a few constituencies. Those wishing to swing an election need only manipulate a few well-chosen machines. Less than that if the goal is just to ensure specific people gain or maintain their seats.
சுட்டி
http://www.rediff.com/news/column/ls-election-how-secure-are-the-evms/20140515.htm
#
உச்ச நீதிமன்ற ஆணை:
//India ordered to introduce 'paper trail' in electronic voting machines
India’s Supreme Court has directed the country’s Election Commission to introduce a paper backup of votes cast through electronic voting machines, but allowed the commission to introduce it in stages during general elections next year.//
சுட்டி:
http://www.pcworld.com/article/2053800/india-ordered-to-introduce-paper-trail-in-electronic-voting-machines.html
(EVM with printer)
# மேகலாயாவில் பிரிண்ட் அவுட்" EVM" சோதனை செய்யப்பட்டுள்ளது.
The two Assembly constituencies, situated in Meghalaya’s East Khasi Hills district, were chosen to be the testing grounds for the newly-developed Voter Verifiable Paper Audit Trail (VVPAT) to improve authenticity during India’s expensive and extensive electoral battles.
The VVPAT is an independent verification system for voting machines designed to allow voters to verify that their votes were cast correctly. The technology also provides room to detect possible election fraud or malfunction, and to audit the stored electronic results.
The VVPAT, used by South American countries, has been developed by Bharat Electrical Ltd (BEL) and Electronic Corporation of India (ECIL).
சுட்டி:
http://www.telegraphindia.com/1110727/jsp/northeast/story_14292680.jsp
# கேரளாவில் பிரிண்ட் அவுட் EVM சோதனை செய்யப்பட்டுள்ளது.
The counting of votes of the Voter Verifiable Paper Audit Trail (VVPAT) mock poll held on Sunday in 36 polling booths in the Vattiyoorkavu Assembly constituency took place at the District Collectorate here on Monday. The votes in the electronic voting machines were counted first.
The printed paper ballot slips stored in the printers and those deposited by the voters in ballot boxes were counted and tallied with the number of votes recorded for each ‘candidate' in the respective EVMs. Except for some minor differences noticed in some booths, the votes registered in the EVMs and those printed in the printers tallied, a press note quoting the Chief Electoral Officer said.
சுட்டி:
http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/article2295753.ece
# இந்த லோக்சபா தேர்தலில்,காந்தி நகரில் "பிரிண்ட் அவுட் வசதி" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"Voter Verifiable Paper Audit Trail (VVPAT) will be used in Gandhinagar Lok Sabha among the seven seats of the country," said Chief Electoral Officer of Gujarat Anita Karwal.
VVPAT has to be attached with the Electronic Voting Machine (EVM), which can generate a slip immediately after a voter casts his/her vote by pressing a button.
சுட்டி
http://www.business-standard.com/article/elections-2014/ls-polls-voters-to-get-automated-receipts-at-gandhinagar-114042901134_1.html
# சுப்ரமணியம் சுவாமியி "தி இந்து நாளேட்டில்" எழுதிய கட்டுரை:
THE DEMONSTRATION
On September 3, 2009, I went to Nirvachan Bhavan along with Vemuru Hari Prasad, a software specialist from Hyderabad, to demonstrate that EVMs can indeed be tampered with. (Dr. Prasad has since been arrested.)
The proceedings at Nirvachan Bhavan were videotaped by the ECI, in the presence of officials of the Electronics Corporation of India Limited (ECIL) and Bharat Electronics Limited (BEL), which manufacture EVMs. But the ECI has refused to provide me a copy of the recording made.
Dr. Hari Prasad was given an EVM and asked to give a demonstration. He efficiently went about seeking to prove that it could be tampered with. When he was in the final stage of his work, suddenly the ECIL and BEL representatives began to protest, and claimed that he was violating the companies' ‘intellectual property rights'.
....
The ECI must cut its losses and agree to a paper receipt. If it cannot arrange that, we should return to ballot papers. Ballot papers are riggable at a ‘retail' level; but with EVMs, an entire election can be stolen with a chip.
(Dr. Subramanian Swamy is a former Union Minister for Law and Justice.)
சுட்டி:
http://www.thehindu.com/opinion/op-ed/the-problem-with-evms/article607744.ece
இதில் உள்ள முரண் நகை என்னவெனில் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்காரணம் , சுப்பிரமணியம் சுவாமி ,ஹரிபிரசாத் என்பவர் செய்த ஆய்வின் அடிப்படையில் அவருடன் இணைந்து போட்ட வழக்கே ஆகும் கூடுதலாக வி.வி.ராவ் மற்றும் Rajendra Satyanarayan Gilda என்பவர்களும் வழக்கு போட்டிருந்தார்கள். இதில் ஹரிபிரசாத் என்பவரை மட்டும் தேர்தல் ஆணையம் பின்னர் மிரட்டும் நோக்கில் தனியாக அழைத்து "கைது செய்து" பின்னர் ஜாமீனில் விட்டது அவ்வ்!
சுவாமியின் காணொளி உரை:
பேட்டி:
கொஞ்ச காலம் முன்னர்வரையில்
"மின்னணு வாக்குப்பதிவு" எந்திரங்களை நம்ப முடியாது ஏமாற்றி வெற்றி பெறுகிறார்கள் என பொங்கல் வைத்துக்கொண்டிருந்த,சு.சாமி தற்போது பாரதிய ஜனதாவில் உள்ளார் , ஒரு வேளை பிஜேபி தோற்றிருந்தால் , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி தேர்தல் ஆணையம் செயல்படவில்லை ,எனவே இத்தேர்தலே செல்லாது என இன்னேரம் கோர்ட் படியேறி இருப்பார் சு.சாமி :-))
பிஜேபி தோல்வி அடைந்திருக்குமானால் இந்த ஊடகங்களும்,உடனடியாக ஓடிப்போய் சு.சுவாமியிடம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை என்னவென கேள்விக்கேட்டு பரபரப்பை கூட்டியிருக்கும் ,ஆனால் இப்பொழுது எல்லாம் தூங்குவதேன்?
தற்போது மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சு.சுவாமிகள் என்ன கருத்தினை சொல்லக்கூடும்?
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்:
Dr. Subramanian Swamy Vs. Election Commission of India
Print this judgment Save this judgment as PDF
Court : Supreme
Judge : P SATHASIVAM and RANJAN GOGOI
Decided On : 2013-10-08
Appellant : Dr. Subramanian Swamy
Respondent : Election Commission of India
Judgment:
REPORTABLE IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION12 3 CIVIL APPEAL NO.9093 OF20134 (Arising out of SLP (Civil) No.13735 of 2012) Dr. Subramanian Swamy .... Appellant(s) Versus Election Commission of India .... Respondent(s) WITH WRIT PETITION (C) No.406 OF2012
JUDGMENT
P. Sathasivam, CJI.
1) Leave granted. Civil Appeal @ SLP (C) No.13735 of 2012
2) This appeal is directed against the judgment and order dated 17.01.2012 passed by the Division Bench of the High Court of Delhi at New Delhi in W.P.(C) No.11879 of 2009 whereby the High Court disposed of the petition by disallowing the prayer made by the appellant herein for issuance of a writ of mandamus directing the Election Commission of India (ECI)-Respondent herein to incorporate a system of “paper trail/paper receipt” in the Electronic Voting Machines (EVMs) as a convincing proof that the EVM has rightly registered the vote cast by a voter in favour of a particular candidate.
3) Being aggrieved of the above, the present appeal has been filed by way of special leave. Writ Petition (Civil) No.406 of 2012
4) One Rajendra Satyanarayan Gilda has filed this Writ Petition, under Article 32 of the Constitution of India, praying for issuance of a writ of mandamus/direction(s) directing the Union of India, the Chief Election Commissioner and the Technical Experts Committee-Respondent Nos. 1-3 herein respectively to effect the necessary modifications in the EVMs so as to allow the voters to verify their respective votes and to attach the printers to the EVMs with a facility to print the running record of the votes for the purpose of verification by the voters in the process of voting. He also prayed for a direction to frame guidelines and to effect necessary amendments in the Conduct of Election Rules, 1961.
5) In view of the pendency of the appeal filed by
Dr. Subramanian Swamy, this Court issued notice in the writ petition and tagged with the said appeal.
6) Heard Dr. Subramanian Swamy, appellant-in-person in the appeal, Dr. R.R. Deshpande, learned counsel for the writ petitioner, Mr. Ashok Desai and Ms. Meenakshi Arora, learned senior counsel for the ECI. Contentions:
7.
Dr. Subramanian Swamy, the appellant herein contended before this Court that the present system of EVMs, as utilized in the last few general elections in India, does not meet all the requirements of the international standards and though the ECI maintains that the EVMs cannot be tampered with, but the fact is that EVMs, like all electronic equipments, are open to hacking.
8) The appellant has further highlighted that the instant matter arises out of the refusal of the ECI to incorporate a certain obvious safeguard in the EVMs called “paper backup”, “paper receipt” or “paper trail”, presently in use and mandated in some countries like USA, which would easily and cheaply meet the requirement of proof that the EVM has rightly registered the vote cast by a voter. The appellant has further highlighted that the “paper trail” system is to supplement the procedure of voting as in this procedure, after recording a vote in the EVM, a print out will come out which will appraise the voter that his vote has been rightly registered and the same will be deposited in a box which can only be used by the ECI in case of election dispute.
9) It is the categorical stand of the appellant that the above said system will bring more accuracy in the present system and if a particular election is challenged on the ground that some particular identified voter’s voter or the votes of a group of voters have been suppressed/have not been correctly assigned by the EVMs, the accepted current procedure is for a re-run of the same EVMs for a re-count, however, under the new procedure, a re-count will be of the receipts in the ballot box containing the printouts the EVMs had issued to the voter thereby ensuring more transparency in the process.
10) The writ petitioner has also raised similar contentions as those of Dr. Swamy. According to the petitioner, in the present system of voting through EVMs, there is no such facility by which a voter can verify and confirm his own voting. At present, a voter presses a button only but cannot ascertain the actual voting. He is not sure whether his vote is recorded or not, if recorded, whether it is recorded in favour of the person to whom it was intended or not. Whether it is valid or invalid and whether it is counted or not. It is submitted by the petitioner that unless and until answers to these questions are personally seen by the voter, it cannot be said that voting is made by him because “pressing a button of choice and getting flashed the red-light” is not actual voting in real sense unless the voter knows well that what has happened in consequence of pressing a button of his choice from the EVMs. Stand of the Election Commission of India:
11. Mr. Ashok Desai, learned senior counsel for the ECI submitted that the apprehension that EVMs could be tampered with is baseless. It was also informed to this Court that the ECI has been exploring the possibility of incorporating a viable Voter Verifiable Paper Audit Trail (VVPAT) system as a part of the presently used EVMs to make the election system more transparent. Further, it was brought to our notice that the ECI conducted field trials for VVPAT system earlier also but the same had not been successful and were discontinued. The ECI also filed a counter affidavit stating that the EVMs provided by the Commission are of such a high end technology that it cannot be hacked.
12) Referring to Section 61A of the Representation of the People Act, 1951, it is submitted that the Statute itself provides for recording of votes by EVMs and the ECI has been given the discretion to prescribe recording of votes by such EVMs as it may deem fit. This discretion has to be exercised in a manner to preserve the sanctity of the election process and ensure that the election is conducted in a free and fair manner. The ECI has exercised due diligence to ensure that EVMs so used are “tamper proof” and it is also in the process of exploring to incorporate VVPAT system which is compatible with the present EVMs used by it. It is asserted that there is no instance of tampering with EVMs so far by anyone.
13) It is further submitted that the EVMs used in India are unique and unlike the ones used in the elections in USA and other countries, which are personal computer based. EVMs deployed by the ECI have been lauded not only in India but also abroad. EVM’s Control Unit retains in the memory each vote recorded elector-wise. The information stored in the memory of the Control Unit can be retrieved by using a device called the “decoder” which, when attached to the Control Unit of EVM, can print out the statement of voting data showing the order in which each voter has voted and to whom he has voted.
14) Insofar as the transparency of the election process as well as the right of a voter to know whether his vote has actually been recorded for the candidate for whom it was cast is concerned, it is submitted that as soon as a vote is recorded by a voter by pressing the “candidate’s” button on the Ballot Unit, a light glows against the name and symbol of the candidate, which the voter can see for himself/ herself. This is a visual (electronic) assurance to the voter that the candidate for whom he has cast his vote has actually got that vote. Thereafter, the light goes off to protect the secrecy of voting.
15) It is further submitted that the feasibility of VVPAT system was sought to be explored to by various political parties and they were explained the technical and administrative safeguards. The ECI also constituted a Technical Experts Committee to examine the viability of the VVPAT system. On 27.05.2011, the Technical Experts Committee, after discussion with political parties and civil society members and also after seeing the demonstration of the prototype VVPAT system developed by M/s. Bharat Electronics Ltd. (BEL) and M/s. Electronics Corporation of India Ltd. (ECIL), recommended that a field test of the prototype VVPAT system should be carried out in a simulated election under different environmental conditions in Jaisalmer, Thiruvananthapuram, Delhi, Leh and Cherapunji. The ECI also held further meetings with the manufacturers of EVMs on various dates to fine tune the system and expedite the follow up action required. Several meetings were also held with the Expert Committee on VVPAT system.
16) In wider fulfillment of the objectives of the field trial, the ECI has requested the National and State parties to extend necessary cooperation by getting involved in the trial process actively and also witness the trial in order to have a first hand experience of the system. The ECI has also requested the individuals including the appellant – Dr. Subramanian Swamy and the groups, who have been engaged with the ECI on the issue of EVM-VVPAT, to witness the trial.
17) We have carefully perused the relevant materials and considered the rival contentions. Discussion
18) When the matter was listed before this Court for hearing on 27.09.2012, Mr. Ashok Desai had brought to our notice that the ECI is contemplating foolproof method in EVMs for which they are taking various steps in consultation with the Technical Experts Committee and the views of all recognized political parties. Mr. Desai also promised to appraise this Court about the deliberations and the ultimate decision to be taken by them in this regard. Accordingly, this Court granted sufficient time to the ECI to file Status Report regarding introduction of VVPAT system in EVMs to be used in the elections.
19) Pursuant to the directions of this Court, the ECI filed a Status Report on the developments of VVPAT system. In the said report, the ECI, citing various technicalities, prayed for further time to make the system more robust for the field conditions.
20) On 15.12.2012, M/s BEL, Bangalore filed a report showing the status of development of VVPAT system which contains changes that have been carried out in VVPAT from September to December, 2012 and also furnished chronological changes made in VVPAT system after the field trial of the VVPAT system held in July and August, 2012.
21) Pursuant to the directions of this Court, the Secretary, ECI, filed an affidavit highlighting the following steps/ information:
“(i) That vide its Affidavit dated 14.01.2013, the Commission had filed the status report regarding introduction of the VVPAT system in the Electronic Voting Machines (EVMs). (ii) That subsequently, in the Technical Expert Committee meeting held on 04.02.2013, the Committee approved the design of the VVPAT and decided that software fine tuning will be done and completed by the end of February, 2013, and modified design specifications will be submitted to the Technical Expert Committee for approval. The Committee also recommended that the Commission may for using the VVPAT and that the VVPAT should be tried in a bye-election. (iii) That in the Technical Expert Committee meeting held on 19.02.2013, the Committee finalized the VVPAT design. The manufacturers, namely, M/s. Bharat Electronics Limited and M/s. Electronics Corporation of India Limited have quoted Rs. 16,200/- (excluding duties, taxes and transport charges) per VVPAT system. The Commission has decided to purchase sufficient units of VVPAT for trials in a Bye-election, at an approximate cost of Rs.72,90,000/- (Rupees seventy two lakh ninety thousand) approximately. (iv) It is submitted that the Commission will require approximately 13 lakh VVPAT units to be manufactures for 13 lakh EVMs presently available and roughly about Rs. 1690 crores (One Thousand Six Hundred Ninety Crores)(i.e. 13 lakh units x Rs.13,000 per unit) are required for the purpose of implementation of the VVPAT system taking into account the possible reduction in the cost per unit when produced in bulk. (v) It is further submitted that in order to implement the new system the Conduct of Election Rules, 1961 will require certain amendments. In this connection, vide letter No.3/1/2013/Vol.II/SDR/86 dated 28.03.2013, the Commission has informed the Legislative Department of the Ministry of Law and Justice inter alia the various amendments required to the relevant parts of Rules 49A to 49X, 66A, 55C, 56C, 57C and Form 17C of the Conduct of Elections Rules, 1961, as well as introduction of Rules 49MA and 56D in the said Rules… (vi) That the Commission has called for a meeting of all the recognized National and State Parties on 10th May, 2013 for the purpose of demonstration of VVPAT unit to them and for discussion with them for eliciting their views regarding use of VVPAT system in the elections. The petitioner herein and others interested in the matter would also be invited at the meeting.”
22) It is seen from the records that after various deliberations with the experts and persons concerned with the technology, the Technical Experts Committee approved the final design of VVPAT units in its meeting held on 19.01.2013. In order to meet the directions of this Court and for proper execution of VVPAT system, as noticed above, the ECI in its letter dated 28.03.2013, addressed to the Secretary to the Government of India, Ministry of Law and Justice stated that necessary ground work for amendment to the Conduct of Election Rules, 1961 (in relevant parts in Rules 49A to 49X, 66A, 55C, 56C, 57C and Form 17C) may be made so that the amendment to the Rules can be notified immediately which will enable the ECI to use the VVPAT system in bye-elections in consultation with the political parties. By placing all those materials, the ECI requested the Ministry of Law and Justice for drafting and notifying amendment Rules expeditiously.
23) From the materials placed by the ECI, it is noted that the purchase order has been placed with M/s BEL and M/s ECIL for supplying 150 and 300 VVPAT units respectively at Rs. 16,200/- per unit excluding excise duty, sales tax and transportation etc. costing Rs. 72,90,000/- (approx.). The ECI has also highlighted that if the VVPAT systems are ultimately to be used with all the 13 lakh EVMs available, the total cost in the purchase of VVPAT units may come to about Rs. 1,690 crores, taking into account the possible reduction in the cost per unit due to bulk production the cost may come to Rs. 13,000/- per unit approximately.
24) The affidavit dated 21.08.2013, filed on behalf of the ECI, shows that the Ministry of Law and Justice, on 24.07.2013, referred the draft notification to amend the Conduct of Election Rules, 1961 to provide for use of VVPAT system of elections to the ECI for its views and comments. The ECI suggested certain minor modifications in the draft notification and sent the same back to the Ministry of Law and Justice on 02.08.2013 with a request to notify the amendment Rules at the earliest. Accordingly, the Ministry of Law and Justice notified the amendments to the Conduct of Election Rules, 1961 in the Gazette of India vide notification No.S.O. 2470(E) dated 14.08.2013 to enable use of VVPAT with EVMs.
25) The aforesaid affidavit of the ECI also shows that the ECI had also convened a meeting of all the recognized National and State political parties on 10.05.2013 and demonstrated before their representatives the working of VVPAT system. Separately, on the same day, the ECI also held a meeting with individuals including the appellant herein who had been engaged with the ECI over the past several years regarding the functioning of EVMs. VVPAT system was demonstrated before them as well. Representatives of political parties and other individuals expressed their satisfaction over the VVPAT system. Thereafter, the ECI had decided to use the VVPAT system in the bye-election from 51-Noksen (ST) Assembly Constituency in the State of Nagaland. Instructions were issued to hold special meetings with the contesting candidates in that constituency to brief them about the use of VVPAT system. The ECI also organized special training sessions for poll officers for the use of VVPAT and steps were taken to educate the electors for the same.
26) After various hearings, when the matter was heard on 4.10.2013, an affidavit dated 01.10.2013 filed on behalf of the ECI was placed before this Court. The said affidavit was filed to place on record the performance/result of the introduction of the VVPAT system in the bye- election from 51-Noksen (ST) Assembly Constituency of Nagaland for which the poll was conducted on 04.09.2013 indicating the future course of action to be decided by the ECI on the basis of said performance. By this affidavit, it was brought to our notice that since VVPAT system was being used for the first time, the ECI has decided that intensive training shall be given to the polling officers. Members of the Technical Experts Committee of the ECI also went to supervise training and the actual use of VVPAT in the bye-election. It is further stated that the ECI also wrote letters to all the recognized political parties and other persons, including the appellant herein, engaged with the ECI on this subject inviting them to witness the use of VVPAT. It is also brought to our notice that VVPAT was successfully used in all the 21 polling stations of 51-Noksen (ST) Assembly Constituency of Nagaland. It was also stated that as per the Rules, the paper slips of VVPAT shall not be counted normally except in case the Returning Officer decides to count them on an application submitted by any of the candidates. However, since VVPAT system was being used for the first time in any election, the ECI decided on its own to count paper slips of VVPAT in respect of all polling stations. According to the ECI, no discrepancy was found between the electronic and paper count.
27) In the said affidavit, it is finally stated that the ECI has decided to increase the use of VVPAT units in a phased manner and for this purpose the ECI has already written to the Government of India, Ministry of Law and Justice to issue administrative and financial sanction for procurement of 20,000 units of VVPAT (10,000 each from M/s BEL and M/s ECIL) costing about Rs. 38.01 crore.
28) Though initially the ECI was little reluctant in introducing “paper trail” by use of VVPAT, taking note of the advantage in the system as demonstrated by Dr. Subramanian Swamy, we issued several directions to the ECI . Pursuant to the same, the ECI contacted several expert bodies, technical advisers, etc. They also had various meetings with National and State level political parties, demonstrations were conducted at various places and finally after a thorough examination and full discussion, VVPAT was used successfully in all the 21 polling stations of 51-Noksen (ST) Assembly Constituency of Nagaland. The information furnished by the ECI, through the affidavit dated 01.10.2013, clearly shows that VVPAT system is a successful one. We have already highlighted that VVPAT is a system of printing paper trail when the voter casts his vote, in addition to the electronic record of the ballot, for the purpose of verification of his choice of candidate and also for manual counting of votes in case of dispute.
29) From the materials placed by both the sides, we are satisfied that the “paper trail” is an indispensable requirement of free and fair elections. The confidence of the voters in the EVMs can be achieved only with the introduction of the “paper trail”. EVMs with VVPAT system ensure the accuracy of the voting system. With an intent to have fullest transparency in the system and to restore the confidence of the voters, it is necessary to set up EVMs with VVPAT system because vote is nothing but an act of expression which has immense importance in democratic system.
30) In the light of the above discussion and taking notice of the pragmatic and reasonable approach of the ECI and considering the fact that in general elections all over India, the ECI has to handle one million (ten lakhs) polling booths, we permit the ECI to introduce the same in gradual stages or geographical-wise in the ensuing general elections. The area, State or actual booth(s) are to be decided by the ECI and the ECI is free to implement the same in a phased manner. We appreciate the efforts and good gesture made by the ECI in introducing the same.
31) For implementation of such a system (VVPAT) in a phased manner, the Government of India is directed to provide required financial assistance for procurement of units of VVPAT.
32) Before parting with the case, we record our appreciation for the efforts made by Dr. Subramanian Swamy as well as the ECI, in particular Mr. Ashok Desai and Ms. Meenakshi Arora, learned senior counsel for the ECI.
33) With the above directions, the appeal and the writ petition are disposed of. No separate order is required in the applications for intervention. Both sides are permitted to approach this Court for further direction(s), if need arises. ...…………….…………………………
CJI (P. SATHASIVAM) .…....…………………………………J.
மூலம்:
http://www.legalcrystal.com/judgements/description/1092581
நன்றி!
# சு.சாமிக்கள் எல்லாம் "தேவை ,காலம் ,இருக்கும் இடம் அறிந்து கலகம் செய்வார்கள்,அடியேன் உண்மைக்காக மட்டுமே கலக்குவேன் , எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து வழக்கெல்லாம் போட்ட மனுசன் , அவருக்கு சாதகாமா தீர்ப்பு வந்த பின்னும்
" தேர்தல் ஆணையம்" அதனை செயல்ப்படுத்தாமல் தேர்தலை நடத்தியதை குறித்து ஏன் வாயே தொறக்கலை?இப்போ தொறந்தா வாயிலே குத்து விழுமோ அவ்வ்!
வாய்மையே வெல்லும்!
********
# மின்னணு எந்திரத்தில் அந்நிய சதி:
BEL(Bharat Electronics Ltd) பெங்களூர் & ECIL(Electronics Corporation of India Ltd) ஹைதரபாத்,ஆகிய இரு மத்திய அரசு நிறுவனங்களும் தான் மின்னணு வாக்கு எந்திரத்திற்கான அல்காரிதம் கோடினை எழுதுகின்றன.
இந்த அல்காரிதத்தினை மைக்ரோ கண்ட்ரோலர் சிப்பில் பதிய வைக்கும் வேலையை சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் செய்ய முடியும், இந்திய நிறுவனங்கள் அல்ல. நமக்கு ஜப்பானை சேர்ந்த
Renesas (jappan) முன்னால் ஹிட்டாச்சி குழுமம், and
Microchips(usa) ஆகிய இரு நிறுவனங்களே மைக்ரோ கண்ட்ரோலரை தயாரித்து , பெல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் எழுதிய அல்காரிதத்தினை "பதிவு" செய்து தருகிறார்கள்.
பின்னர் இந்த சிப்பினை வைத்து முழு மின்னணு எந்திரமும் இந்தியாவில் தயாரித்துக்கொள்ளப்படுகிறது.
ஒரு முறை எழுதிய பின் அதன் சோர்ஸ் கோட் என்ன என யாராலும் அறியவும் முடியாத மாஸ்க்டு மைக்ரோ கண்ட்ரோலர் சிப்கள், எனவே இந்திய நிறுவனங்கள் கொடுத்த அதே சோர்ஸ் கோட் தான் பதியப்பட்டதா அல்லது அந்நிய நிறுவனங்கள் வேறு ஏதேனும் "கூடுதல்" ஆணைத்தொடர்களை சேர்த்துள்ளார்களா எனவும் அறிய இயலாது.
அப்படி கூடுதல் ஆணைத்தொடர்களை எழுதி , அதனை வைத்து "வாக்கு எண்ணிக்கையை" மாற்ற ஏதேனும் ரகசிய செயல்பாட்டினை உருவாக்கினார்களா என்பதையும் அறிய முடியாது.
உதாரணமாக அலைப்பேசியில் " எவ்வளவு" பேலன்ஸ் என அறிந்திட
*111# அழுத்தினால் காட்டுகிறது அல்லவா ,அது போல , மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள , குளோஸ், ரெடி, ரிசல்ட் , கிளியர் போன்ற பித்தான்களை ஏதேனும் ஒரு காம்பினேஷனில் அழுத்தினால் " பதிவான வாக்குகளின்" வரிசையை ஒரு எண் முன்னர் அல்லது பின்னர் நகர்த்தலாம் என்பது போல கூட ஆணைத்தொடர்களை உருவாக்கி ரகசியமாக மைக்ரோ கண்ட்ரோலரில் பதிவு செய்திருக்கலாம், அதற்கான வாய்ப்புள்ளதை மறுக்கவும் இயலாது!
உதாரணமாக ,
ரெடி+டோட்டல்+ ரெடி என தொடர்ச்சியாக அழுத்தினால் , பதிவான வாக்குகள் ஒரு வரிசை எண் முன்னோக்கி மாறிக்கொள்ளும் படி ஆணைத்தொடர் உருவாக்கி இருக்கலாம்,
அதே போல
டோட்டல் +
ரெடி+டொட்டல் என்றால் பின்னோக்கி வரிசை எண் மாறிக்கொள்வது போல ஒரு ஆணைத்தொடர் உருவாக்கி பதிய வைத்திருக்கலாம்.
மேற்கண்ட ரகசிய இயங்கு முறையினை யாரேனும்
"பெரிய தொகை கொடுத்தால் " அவற்றை விற்கலாம் எனக்கூட அவ்வாறு மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவனங்கள் செய்யலாம். அந்நிய நிறுவனங்கள் லாப நோக்கில் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதற்கு ஒன்றும் உத்தரவாதமில்லையே?
அல்லது அரசியல் காரணங்களுக்காக நம் நாட்டு ஆளும் அரசினை மாற்றியமைக்க ரகசிய ஏற்பாடாக கூட அந்நிய வல்லரசு நாடுகள் முன் கூட்டியே மைக்ரோ கண்ட்ரோலர் தயாரிக்கும் நிறுவனங்களை " மிரட்டி" செய்யவும் கூடும்.
நம் நாட்டு அரசின் தலையெழுத்தினை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவினை நிர்ணயிக்கும் எந்திர தயாரிப்பில் அன்னிய நிறுவனங்களின் பங்கிருப்பது , ஒரு வகையில் அபாயகரமானது ஆகும், அவர்கள் நேர்மையாக நடந்துக்கொண்டால் மட்டுமே " நேர்மையான" தேர்தலே நடக்க சாத்தியம் உள்ளது, பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது அரசியல் சூழ்ச்சியில் சிக்கி ரகசிய ஏற்பாட்டினை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் செய்திருந்தால் அதனை கண்டுப்பிடிக்க கூட "நமது தேர்தல் ஆணையத்தால்" இயலாது என்பது மிகப்பெரும் பாதுகாப்பு ஓட்டை ஆகும்.
இப்படியான பல பாதுகாப்பு குறைபாடுகளும் ,சந்தேகங்களும் உடைய ஒரு மின்னணு எந்திரத்தினை நம்பி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலையெழுத்தினை நிர்ணயிப்பது சரியா?
சூது கவ்வும்!
----------------
பின் குறிப்பு:
# பிழைதிருத்தம் மற்றும் சில தகவல் மேம்பாடுகள் பின்னர் செய்யப்படும்.
# என்னளவில் புரிந்துக்கொண்டதை வைத்து சில சாத்தியக்கூறுகளை எழுதியுள்ளேன் , அப்படியே என்ன நடக்குமென்பதை சொன்னதாக எடுத்துக்கொள்ளக்கூடாது, வெள்ளத்தனைய மலர் நீட்டம் உள்ளத்தனைய புரிதல் ஹி..ஹி!
# தகவல் மற்றும் படங்கள் உதவி,
மைக்ரோ சாப்ட்,ஆஸ்கி,யுனீ கோட்.ஆர்க், தேர்தல் ஆணையம், விக்கி ,கூகிள் மற்றும் இன்ன பிற இணைய தளங்கள்,நன்றி!
# http://www.asciitable.com/
# http://www.fileformat.info/tip/microsoft/enter_unicode.htm
# http://office.microsoft.com/en-in/onenote-help/insert-ascii-or-unicode-latin-based-symbols-and-characters-HA010167539.aspx
# http://www.zenith-india.com/zen/trainingmaterial/details/how_computer_keyboards_work.htm
# http://www.bbc.com/news/10123478
# http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/article2295753.ece
# http://www.business-standard.com/article/elections-2014/ls-polls-voters-to-get-automated-receipts-at-gandhinagar-114042901134_1.html
# http://www.thehindu.com/opinion/op-ed/the-problem-with-evms/article607744.ece
--------------------