Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, May 16, 2014

தேர்தல்-2014 : ஒரு புதிய பார்வை!

(இந்த வவ்வால் பார்வையே வித்தியாசமா இருக்கே ...ஹி.ஹி)

அரசியல் பதிவு ஒன்னு போட வேண்டும் என நினைத்து ,அவ்வப்பொழுது சில குறிப்புகள் எடுப்பதும் ,பின்னர் குப்பையில் இடுவதுமாக போய்க்கொண்டேயிருந்தது, இன்றாவது அப்பதிவை வெளியிடவில்லை,எனில் ,நமது அரசியல் கணிப்புகளை பின்னர் சொல்வதில் பயனேயில்லை, அதான் இன்று முடிவே சொல்லிட போறாங்களே அப்புறம் என்ன கணிப்பு வேண்டிக்கிடக்கு, சரி நேரா மேட்டருக்கு போவோம்!

அகில இந்திய அளவில் மோடி அலை வீசுது என்கிறார்கள் ,மெரினா பீச்சில் கடல் அலையை தவிர வேற அலை எதுவும் நமக்கு தெரியலை, பிஜேபி என்பது தேசியக்கட்சி எனினும் பல மாநிலங்களில் அடித்தளமே இன்னும் உருவாக்கிக்கொள்ளாத கட்சியாக தான் உள்ளது.

# பிஜேபி செல்வாக்குள்ள மாநிலங்கள்;

குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ம.பி, டெல்லி, கோவா, இமாச்சால், உ.பி,ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களே, இங்கு தான் பெரும்பாலான தொகுதிகளை வென்றாக வேண்டும்.

தென்னகத்தில் கர்நாடகம் தவிர , கேரளா, தமிழ்நாடு,ஆந்திரா ,புதுவையில் எல்லாம் செல்லாக்காசு.

அதே போல , ஒரிசா, பீகார் , சத்தீஸ்கர் ,மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மேலும் வட கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் பெரிதாக செல்வாக்கே இல்லை.இப்பகுதிகளில் எல்லாம் மாநிலத்துக்கு ஒரு எம்.பி வென்றால் அதிசயம்.

எனவே பொதுவாக களப்பணி ஆற்றுதல் ,வாக்கு திரட்டுதல் என செய்தால் மட்டுமே அலையே அடிச்சாலும் வெற்றி கிட்டும் எனவே அடித்தளமே பல மாநிலங்களில் இல்லாத பிஜேபி தனிப்பெரும் மெஜாரிட்டியாக 272 இடங்களை பெற முடியாது( கரிப்பூசிடுவாங்களோ...ஹி...ஹி எனக்கு தான்)

பிஜேபி அதிகப்பட்சம் வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்- சுமார் 170-190 இடங்களே.

கூட்டணிகள் வெல்ல வாய்ப்புள்ள இடங்கள் சுமர் 50 வரையிலே இருக்கும் ,மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 240 இடங்களுக்குள் வரக்கூடும்.

# காங்கிரஸ் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் உள்ளது அதே போல சுமார் 15 மாநிலங்களில் இன்னமும் ஆட்சியில் உள்ளது.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் நல்ல அடித்தளமும் உள்ளது.

பொதுவாக தென்னக மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் இன்னமும் வலுவான சக்தியே ,எனவே அகில இந்திய அளவில் பிஜேபியை விட அடித்தளம் வலுவான கட்சியே.

தொடர் ஊழல் குற்ற சாட்டுகள், தொடர்ந்த்து 10 ஆண்டுகள் ,ஆட்சி எனும் நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிரான  அதிருப்தி என்பவை பலவீனங்களாகும் ,அதுவே பிஜேபியின் பலம், கடந்த பத்தாண்டுகளில் பிஜேபி எதிர்க்கட்சியாக பெரிதாக எதுவுமே சாதிக்கவில்லை , மோடியை திட்டமிட்டு விளம்பரப்படுத்தினாலும் , அவர் அகில இந்திய பிராண்டாக சொல்லிக்கொள்ள தக்க சாதனைகளை எதுவும் செய்யவில்லை.

காங்கிரசின் கோஷ்டி அரசியல்,ஊழல், அதிருப்தி மன நிலை ஆகியவற்றினை கடந்து இம்முறை அதிகப்பட்சம் வெற்றிப்பெற வாய்ப்புள்ள இடங்கள் சுமார் 110-120, குறைந்த பட்சம் 78 இடங்கள்.

தமிழகத்தினை பொறுத்த வரையில்,

அதிமுக

தேர்தலில் முந்திக்கொண்டி களத்தில் குதித்தது முதல் அனைத்திலும் பிறக்கட்சிகளை தனக்கு பின்னால் வர வைத்தார் அம்மையார்,ஆனால் நாற்பதும் நமக்கே எனும் வெற்றி நிலையெல்லாம் இல்லை,

மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 23-24 இடங்கள் அதிகபட்சமாகவும், குறைந்த பட்சம் 17 இடங்கள் வரலாம்.

இந்தளவு இடங்கள் கூட எப்படி வருமெனில் , கடந்த ஆட்சியை விட தேர்தல் வரையில் மின் வெட்டினை சமாளித்து விட்டது ,மேலும் தேர்தலுக்கு வெகு நெருக்கமாக பல இடங்களில் "அத்தியாவசிப்பணிகளைசெய்துக்கொடுத்தது", உ.ம். சென்னை புற நகர்ப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையே இல்லாத இடங்களில் எல்லாம் தார்ச்சாலை வந்துவிட்டது

(road work on progress)

தேர்தல் காலங்களில் எல்லாம் இப்படி செய்வது தானே என நினைக்கலாம், ஆனால் எனக்கு தெரிஞ்சு 2 சட்ட மன்ற தேர்தல் ,2 நாடாளு மன்ற தேர்தல் வந்து விட்டது ஆனாலும் அவ்விடங்களில் சாலைகளே போடப்படவில்லை, இம்முறை தான் சாலைகள் போடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வசதி என்பதோடு "லேண்ட் வேல்யூ" வேறகூடிப்போச்சு -))

மேலும் சென்னைப்புற நகர்ப்பகுதிகளில் பல மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன, இது வரையில் பேருந்துகள் செல்லாத தடங்களில் எல்லாம் செல்கின்றன.


கூடுவாஞ்சேரி அருகில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுமார் 8-10 கி.மி உள் இருக்கும் பகுதி காட்டூர் ,காட்டுப்பாக்கம் , காரணை ,கன்னிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு எல்லாம் மினி பஸ் ஜிகு ஜிகு என போகுது,முன்னர் எல்லாம் இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி ,அல்ல ஊரப்பக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து , பார்க்கிங்கில் வண்டிய விட்டு தான் நகருக்குள் செல்ல முடியும், இப்போ நேராக காட்டூர் - தாம்பாரம், கன்னிவாக்கம் - தாம்பரம் என மினி பஸ்கள் ஓடுது.


இதனால் சாலை வசதி ,பேருந்து வசதியுள்ள இடங்கள் என சொல்லி ரியல் எஸ்டேட் வேற தூக்குது , மக்களும் ஹேப்பி!!!.

ஒரு சில மினிபஸ்கள் விட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை உறுதி செய்தாயிற்று ,இப்படி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துலவும் , சில பல ஆயிரங்களில் கூடுதல் வாக்கினை அம்மையார் கைப்பற்றக்கூடும் என்பதால் ,இம்முறை நல்ல முடிவு கிடைக்கும் என தெம்பாக உள்ளார் எனலாம்.

தேர்தல் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என சொன்னதெல்லாம் "காகித அறிக்கை" தான் ,அவர்களும் பார்த்தா "ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்,பூசாதமாதிரியும் இருக்கணும்' என கெடுபிடி போல ஒரு மாதிரி வேலைப்பார்த்து முடித்து விட்டார்கள், வாக்குப்பதிவுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னரே வாக்களர்களுக்கு ஒரு ஓட்டுக்கு சுமார் 200 அல்லது 300 ரூ பட்டுவாடா ஆகிவிட்டது , கடைசி நாளில் பணப்பட்டுவாடா செய்யலாம் என முயற்சித்து மாட்டியது ,திணறியது எல்லாம் எதிர்க்கட்சிகளே அவ்வ்!

இதில் வேற மேலிடத்தில்  500 ரூ கொடுக்க சொல்லி கொடுத்ததில் அமுக்கிட்டு 300 அல்லது 200 கொடுக்கிறாங்கனு மக்களுக்கு புலம்பல் அவ்வ்.

# திமுக:

மேற் சொன்ன எந்த சாதகங்களும் இல்லை ,மேலும் கடந்த 10 ஆண்டுகளாக  மத்தியில் ஆட்சியில் இருந்தும் 2ஜீ இல்  மட்டுமே "பேர்" வாங்கியிருக்கு மற்றபடி சொல்லிக்கொள்ளும் சாதனைகளே இல்லை என்பதால் மாநில தேர்தல் போல அம்மையாரின் ஆட்சி குறைப்பாடுகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்கும் பரிதாப நிலை.

# சகோதர சண்டை, எனவே கட்சியினரில்  சில பிரிவுகள் உருவாகி நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருக்கு.

# பல மாவட்டங்களில்முன்னால் அமைச்சர்களை வேட்பாளர்களின் மேம்படி செலவினை கவனிக்க சொல்லவே ,அவர்கள் நாம ஏன் செலவு செய்து இன்னொருத்தனை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என "கஜானாவை" தொறக்கவேயில்லை, இதனால் வார்டு அளவில் கிடைக்க வேண்டிய தேர்தல் கவனிப்புகள் " இல்லாமல் உடன்ப்பிறப்புகள் பெரிதாக ஆர்வமில்லாமல் சுருண்டு விட்டார்கள்.

ஒரு வார்டுக்கு 10 பேருக்கு கூட தின செலவுக்கு காசு கொடுக்காம , நீப்பாரு அப்பறம் பார்த்துக்கலாம் என சொல்லவே ,பல கிளைச்செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் நைசாக நழுவிட்டார்கள் :-))

எனவே ஊழல் குற்ற சாட்டு, சகோதர சண்டை, ஒருங்கிணைப்பில் தொய்வு , என இம்முறை தேர்தல் களத்தில் திமுக பின் தங்கியே உள்ளது , அதிகப்பட்சமாக 7-9 இடங்களை கைப்பற்றலாம்.

குறைந்த பட்சம் -5.

கூட்டணியில் 1-2 இடங்கள் கிடைத்தால் அதிசயம்.

#பி.ஜேபி அலை எல்லாம் தமிழகத்தில் எடுபடவே இல்லை,

தமிழகத்தில் பிஜேபி அணியில் இருக்கும் கூட்டணிக்கட்சிகளே "நம்மளை தவிர கூட்டணியில்" யாருக்கும் அதிக இடங்கள் கிடைத்து விடக்கூடாது என உட்குத்து அரசியல் செய்வதால் ஒன்னும் பெரிதாக தேற வாய்ப்பில்லை அவ்வ்.

பாமக மற்றும் தேமுதிக   வினரின் ஓட்டுக்கண்டிப்பாக கூட்டணி என்ற முறையில் பரிமாறிக்கொள்ளப்படவேயில்லை.

அதிகப்பட்சம் 2 இடங்கள் கைப்பற்றலாம், ஆனால் அதுவே நிச்சயமில்லை.

# தமிழகத்தினை பொறுத்த வரையில் இத்தேர்தல் இரு பெரும் திராவிடக்கழகங்களின் நேருக்கு நேர் மோதல் , யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கு என இன்று மாலைக்குள் தெரிந்து விடும்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நம்பகமானதா?

# மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் " நம்பகமானது" அதில் திரிசமன் செய்யவே முடியாது என்கிறார்கள் ,ஆனால் மிக எளிதாக செய்யலாம் என நினைக்கிறேன் ,கீழ்கண்ட முறை எனது  அவதானிப்பே ,பிழை இருக்கலாம்.

ஒரு சுவிட்ச் போர்டில் அருகே மின் விளக்கு ,மின் விசிறி என இரு சுவிட்சுகள் உள்ளது , ஒன்றினை இயக்கினால் விளக்கு எரியும், இன்னொன்று மின் விசிறி என இருக்கு

நாமும் அப்படியே இயக்கி பழகிவிடுகிறோம், ஆனால் அதன் உள் இருக்கும் இணைப்புகளை மாற்றினாலே , மின் விளக்கு சுவிட்சை போட்டால் மின் விசிறி இயங்கும் படி செய்யலாமே?

காண்க படம்.





இதே போல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் ,வாக்களர்கள் பெயர்கள் அகரவரிசையில் இருக்கும் எனவே ஒருவரின் பித்தானின் இணைப்பினை , மின்னணு வாக்கு எந்திரத்தின் ஐசி உடன் இணைக்கும் சர்க்கியுட்டில் மட்டும் சால்டரிங் செய்து மாற்றி விடலாமே. நமது மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஐ.சி தான் "கை வைக்க முடியாத "read only" வகை, எனவே அதற்குள் செல்லும் இணைப்பில் எந்த பட்டனை மாற்றி இணைத்தாலும் கண்டுக்கொள்ளாது அவ்வ்!


"schematic diagram for EVM"

(சரியான இணைப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம்.)

(குறுக்காக இணைக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு எந்திரம்)


தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள EVM இல் ஐசி மற்றும் நினைவகம் மட்டுமே ஒரு முறை புரோகிராம் செய்த பின் "மாற்றம் செய்ய இயலாத வகையில் , "READ ONLY" ஆக உள்ளது, எனவே ஐ.சிக்கு உள்ளிடு செலுத்தும் ,பித்தான்களினை இரண்டாவது படத்தில் போல மாற்றி இணைத்துவிடலாம், ஆனால் அகர வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர் ஒன்றிலிருந்து துவங்கும், இதனால் முதல் பித்தானுக்கு நேராக உள்ள வேட்பாளருக்கு அழுத்தினால், அதன் எண்ணிக்கை "ஐசி" இல் இரண்டாவது "நினைவக ஒதுக்கீட்டில்" சேமிப்பாகும். இதனை வாக்களிப்பவர் உணர இயலாது,அவர் அழுத்திய பித்தானுக்கு நேராக "விளக்கு எரிவதை கண்டு வாக்குப்பதிவானது என "திருப்திப்பட்டுக்கொள்ள" மட்டுமே முடியும்.

வாக்கு பதிவு எந்திரத்தில் ,வேட்பாளர் பெயருடன் இணைந்த பித்தான்கள், அதற்கு அருகில் விளக்கு என இருக்கும் அமைப்பு "பேலட் யூனிட்"  ஆகும் , அதில் எந்த வரிசை பித்தானை அழுத்தினோம் என காட்டாது, பித்தானை அழுத்தியதும் விளக்கு மட்டுமே எரியும்.
(பேலட் யூனிட் -வரிசை எண் காட்டாது)

கண்ட்ரோல் யூனிட் என ஒன்று தேர்தல் அலுவலரின்  மேசையில் இருக்கும் அதில் தான் வரிசை எண் ,மற்றும் அதற்கு பதிவான வாக்குகளை காட்டும், எனவே பேலட் யூனிட்டில் , இரண்டு பித்தான்களை மாற்றி இணைப்புக்கொடுத்தாலும் , அதற்கான விளக்கு எரியும் என்பதால் ,அச்சின்னத்திற்கு வாக்கு அளித்ததாக தெரியும் ,ஆனால் வாக்குகள் பதிவாவது வரிசை எண்ப்படி என்பதால் , அதனை சரிப்பார்க்க வாக்களரால் முடியாது.

(கண்ட்ரோல் யூனிட்- வரிசை எண் ,பதிவான வாக்கினைக்காட்டும்)


தேர்தல் அலுவலரும் ஏதோ ஒரு வரிசை எண்ணில் வாக்குப்பதிவானதை மட்டுமே உறுதி செய்துக்கொள்வார், வரிசைப்படி இந்த சின்னம் இருக்கு அதில் தான் பதிவானது என்பது அவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் பித்தான்கள் மாற்றி இணைக்கப்பட்டு ஒன்றை அழுத்தி அது மற்றொன்றில் வாக்குப்பதிவு செய்துள்ளதை அவரும் அறிய இயலாது.

எனவே ஒரு தொகுதியில் "A" கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது எனில் அங்கு வலுவிழந்த இன்னொரு கட்சி "B" க்கு வாக்கு விழுமாறு செய்ய  இரண்டையும் மாற்றி இணைத்தாலே போதும், B இன் வாக்குகள் "A"  க்கு போகும் , "A"  வாக்குகள்  B க்கு போகும் , ஏதேனும் ஒருக்கட்சிக்கு வாக்குகளே விழாமல் போனால் தான் சந்தேகம் வரும் ஆனால் ஒரு குறைந்த பட்ச வாக்குகள் பதிவாகும் போது சந்தேகமே உருவாகாது. இப்படி மாற்றி இணைக்க , பேலட் யூனிட்டை மட்டுமே திறந்தால் போதும் ,ஐ.சி யூனிட்டில் கையே வைக்க வேண்டாம், இதனை சாதாரணமாக " செல் போன்" பழுதுப்பார்ப்பவர்களை வைத்து சால்டரிங் அயர்ன் மூலம் , பித்தான்களின் சர்க்கியூட் போர்டில் எளிதில் செய்ய இயலும்

வாக்கு எண்ணும் போதும் கண்ட்ரோலில் யூனிட்டில் பதிவான வாக்குகள் வரிசைப்படியே  பிரித்து எண்ணப்படும், அப்பொழுது மாற்றிப்பதிவானதையும் கண்டுப்பிடிக்க இயலாது.

இது எனது சந்தேகம் மட்டுமே, இப்படி செய்ய ஒரு சாத்தியக்கூறுள்ளதாக கருதுகிறேன், இதற்கு  " தேர்தல் அலுவலர்களின்" ஒத்துழைப்பும் தேவை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக தான் காவலுடன் வைத்துள்ளார்கள், ஆனால் அவர்களும் அரசு ஊழியர்களே எனும் நிலையில் ஆளும் அதிகாரம் படைத்தவர்கள் நினைத்தால் 'தில்லு முல்லு" செய்யலாம் என்பதை மறுக்க இயலாது!

EVM= Electronically Void Machine!
-----------

பின் குறிப்பு:

# இன்னும் சில அலசல்கள் ,படங்கள் பின்னர் இணைக்கப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், தேர்தல் ஆணைய இணைய தளம், தி இந்து மற்றும் விக்கி ,நன்றி!
--------------

Sunday, April 21, 2013

என்ன கொடுமை சார் இது-13

(ஹி...ஹி முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்)


காகதாளிய நியாயம்!

கூகிள்காரன் ஓசியில பிலாக்னு ஒன்னு கொடுத்தாலும் கொடுத்தான் ஆள் ஆளுக்கு ஒரு பிலாக் ஆரம்பிச்சுட்டு, எதையாவது கிறுக்கி தள்ள ஆரம்பிச்சுட்டாங்க, சில சமயம் நல்லாவும் எழுதி தொலைச்சுடுறாங்க, ஆனால் சிலர் பண்ணுற அலப்பரை இருக்கே அது ஒரு தனிரக பயங்கரமா இருக்கும், தான் ஒரு  திரைவிமர்சனம் எழுதினா மணிரத்னம்,ஷங்கர் வரைக்கும் படிக்குறாங்கல ஆரம்பிச்சு அமெரிக்க சனாதிபதி ஓபாமாவே என் வாசகர்,எனக்கு மெயில் அனுப்பினார் என்பதாக பெரும்பீத்து பீத்துறாங்கய்யா :-))

சரி அதுவாது போகட்டும்னு விடலாம், நேத்து மழை பெஞ்சா கூடா நான் முத்தாநேத்தே மழை வராப்போல இருக்குனு துவித்தர்ல சொன்னேன், பிளஸ்ல சொன்னேன் ,பிலாக்கர்ல சொன்னேன்னு சொல்லிக்கிறாங்க, இதமாரி தான் ஒருப்பதிவர் இருக்கார், அவர் எழுதுறத அவர தவிர நாலுப்பேர் படிச்சாலே அதிசயம், பிரபல திரட்டிகள் கூடக்கண்டுக்காத ஒரு டொக்குப்பதிவு வச்சுக்கிட்டு, எதையாவது எழுதிட்டு ,கொஞ்ச நாள் கழிச்சு நான் சொன்னா மாதிரியே நடந்துப்போச்சுனு ஓவரா பில்டப்பு கொடுக்கிறார்,

கொஞ்ச நாள் முன்ன லோகநாயகர் டிடிஎச் இல் படம் வெளியாகும் முன் வெளியிடுவேன்னு சொன்னதும், அதெல்லாம் சாத்தியமில்லைனு முழ நீளத்துக்கு ஒரு பதிவு போட்டு வெளக்கு வெளக்குனு வெளக்கினார், என்ன எழவு மாயமோ தெரியலை அதே போல டிடிஎச் இல் படம் வெளியாகவில்லை, அப்புறம் படம் வந்து ஒரு வாரத்தில் டிடிஎச் என லோகம் சொன்னார் ,ஆனால் இன்னிவரைக்கும் டிடிஎச் இல் படமே வரலை, உடனே அந்த வெளங்காவெட்டிப்பதிவர் பார்த்தீரா ...நான் அப்பவே சொன்னேன்ல என ஒரு அலப்பரைய கொடுத்தார் :-))

கெரகம் ஏதோ நல்ல நேரம் குத்து மதிப்பா சொன்னது போல நடந்துப்போச்சுனு மக்கள் பொறுத்துக்கொண்டார்கள், பின்னர் உரமானியத்தில் ஊழல் நடக்குதுனு ஒரு பதிவுப்போட்டார், ஒரு மாசம் கழிச்சு, உரமானிய ஊழல் பற்றி அம்மையார் ஒரு அறிக்கை விட்டாங்க, இதுல இன்னொரு கொடுமை என்னனா, அலப்பரைப்பதிவர் சொன்ன மாதிரியே கணக்கும் சொல்லி இருக்கவும், ஆசாமிக்கு உச்சந்தலையில கிர்ருனு ஏறிடுச்சு, நான் அப்பவே சொன்னேன்ல என அதை எடுத்து போட்டு ஒரு பதிவு போட்டு , காலரை தூக்கிவிட்டுக்கிறார்,எல்லாம் நேரம்யானு அப்பாவி பொதுமக்களும் ஏதோ போனாப்போவுதுனு அவர் பதிவை படிச்சு தொலைக்கிறாங்க என்பதை புரிந்துக்கொள்ளாமல் அடுத்த அலப்பரைக்கு அடிப்போட ஆரம்பிச்சுட்டார்.

சுட்டி:

உரமானிய ஊழல்.


அந்த அலப்பரைப்பதிவர் நவக்கிரகங்களுக்கும் நண்பனாகிட்டார் போல எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்விளைவாக இப்போலாம் ஒரு செய்தி மாட்டிக்குது,கச்சத்தீவு பற்றி ஒரு பதிவு போட்டு , கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது, அக்காலத்தில் திமுக பக்கோடா சாப்பிட்டுக்கிட்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? அப்படினு வில்லங்கமா ஒரு பதிவைப்போட்டார், ஆனாப்பாருங்க பதிவு வந்த சில நாட்களில் டெஷோ கூட்டமைப்பு சார்பாக ,கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போடப்படும்னு அறிவிப்பு வருது.

நீங்களே அந்த செய்தியப்பாருங்க,

//* கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.
* எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதி மன்றத்தை டெசோ அமைப்பு அணுகும்//

செய்தி மூலம்:
http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-teso-decides-approach-sc-cancel-kac-173503.html

ஹி..ஹி இதான் அந்த அலப்பரையின் தீர்க்க தரிசனப்பதிவு,
கட்சத்தீவு

அடப்பாவிகளா, 1974 இல் விட்டுக்கொடுத்துட்டு 2013 வரைக்கும் சும்மா குந்தியிருந்துட்டு , இப்போ வழக்குப்போடுவோம்னு அறிக்கை வெளியிட்டா, பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கிறவன், தீபாவளிக்கு சும்மா இருப்பானா அதுக்கு ஏற்றார்ப்போல  லட்டுப்போல செய்தி வந்து மாட்டிக்கிட்டதும், எல்லாம் என்னால தான், எம்பதிவை படிச்சப்பொறவு தான் "டேஷோ"தலிவருக்கு ஞானம் வந்து வழக்கு போட்டிருக்கார்னு டமாரம் அடிச்சுட்டு கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்!

ரொம்ப தாமதம் என்றாலும் 2008 இல் அம்மையார் வழக்கு போட்டாச்சு, அப்போலாம் சும்மா இருந்துட்டு இப்போ வழக்கு போட்டால் ,ஜட்ஜே கேட்பார் "ஏன் மிஸ்டர் 1974 இலே உங்க கட்சி தானே மாநில ஆட்சியில் இருந்துச்சு ,அப்போலாம் ஏன் வழக்குப்போடலைனு :-))

ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இப்படி எதாவது நடந்து தொலைக்குது  அதுக்கெல்லாம் வெட்டிப்பந்தா விடப்படாதுனு சொல்லலாம்னு நானும் பார்க்கிறேன் ,ஆசாமி கண்ணுலவே சிக்க மாட்டேங்கிறப்படி, நீங்களாச்சும் எங்காவது பார்த்தா சொல்லி வையுங்க, அப்பவாவது நல்லப்புத்தி வருதா பார்ப்போம்.

(நீ கலக்கு மாமு ...ALL THE BEST!!!!)

என்ன கொடுமை சார் இது!
--------------------

எல்லாமே அரசியல்-2


(ஓடாது தெரிஞ்ச பின் உஷாரா ஏறி போராட்டம்)

#ஈழப்பிரச்சினைக்காக முதலில் லயோல கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் துவக்கினார்கள், பின்னர் பலக்கல்லூரி மாணவர்களும் துவக்கினார்கள்,இதையெல்லாம் பார்த்த சில வெள்ளந்தியான பதிவர்கள் ,அடடே என்னா ஒரு தமிழுணர்வு ,இது போல யாருக்கும் வருமானு சிலிர்த்துக்கொண்டு பதிவெல்லாம் போட்டார்கள்,ஆனால் அப்பொழுதும் மாற்றுப்பார்வைக்கு பெயர் போன அலப்பரை பதிவர் ,இப்போராட்டங்களின் பின்னால் இருக்கும் அரசியலை புட்டு புட்டு வைத்தார், ஆனால் சில நாட்களுக்கு பின்னர் போராட்டம் நீர்த்துப்போக ஆரம்பித்ததும் சிலிர்த்துக்கொண்டவர்கள் எல்லாம் மனசுக்குள் சலித்துக்கொண்டு , ஐபிஎல் பார்க்க போயிட்டார்கள்.

மாணவர்கள் போராட்டத்தில் திடீர் திருப்பமாக , அதே லயோலா கல்லூரியில் இருந்து ஒரு பிரிவு மாணவர்கள் குழுவாக போய் 61 வயது ஆகியும் நரைகூடி கிழப்பருவம் அடையாத நித்திய இளைஞரான ,இளைஞரணி தலைவர் மு.க.இசுடாலினை(தமிழ்..தமிழ்) சந்தித்து இளைஞர் அணியில் ஐக்கியமாகி ,டெஷொவுக்கு ஆதரவாக போராடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதில் உள்ள இராச தந்திரம் என்னவெனில் , முதலில் ஈழப்பிரச்சினைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மாணவர்கள் சைக்கிள் கேப்பில் டெஷோவை எதிர்க்கிறோம் எனவும் பதாகை பிடித்திருந்தார்கள், மேலும் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள்,ஆனால் மறந்தும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவேயில்லை,இது மக்களிடயே கழகத்தின் இமேஜை டேமேஜ் செய்து வந்தது. இதனை கட்சி ரீதியாக எதிர்க்கொண்டால் எடுபடாது என புரிந்து கொண்டு ,இன்னொரு மாணவர் குழுவை வளைத்துவிட்டார்கள், இனி அவர்கள் மூலம் ஈழப்பிரச்சினைக்கான போராட்டம் ,அதே நேரம் டெஷோவையும் விளம்பரப்படுத்துவார்கள், வழக்கமாக எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை எளிதில் அனுமதி கொடுக்காது,அதுவும் ஆளுங்கட்சிக்கு விருப்பமில்லாத போராட்டம் எனில் அனுமதிக்கிடைப்பது குதிரைக்கொம்பு,

இப்பொழுது கழகத்தின் ஆதரவு மாணவரணிக்கு அனுமதி மறுத்தால், முன்னர் போராடிய மாணவர்களுக்கும் அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி கொடுத்தால் இரு தரப்புக்கும் கொடுக்க வேண்டும், அப்படிக்கொடுத்தால் கழகத்தின் டெஷோவிற்கு விளம்பரம் கிடைத்துவிடும்,எனவே அனுமதிக்க முடியாது ,அதே போல இனி முதலில் போராடிய மாணவர்கள் குழுவிற்கும் அனுமதி கிடைப்பது கடினம், மாணவர்களும் தடையை மீறி எல்லாம் போராட மாட்டார்கள்,எனவே இப்பொழுது தானாகவே மாணவர்கள் எழுச்சி அடங்கிவிடும், அல்லது இரு தரப்புக்கும் அனுமதிக்கொடுக்கப்படும் இதனால் கழகத்தின் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காக்கப்பட்டு விடும், இதுவே மஞ்சத்துண்டின் ராசதந்திரம்.

இச்சம்பவங்களே எந்த அளவுக்கு மாணவர்கள் போராட்டத்தின் பின்னால் அரசியல் இருந்து இயக்கியது என்பதனை விளக்கப்போதுமானது.

எல்லாமே அரசியல் தான்!

என்ன கொடுமை சார் இது!
-------------------------------

தனி ஆவர்த்தனம்!

ஆரம்பத்தில் பெரியாரின் திராவிடர் கழகம் திராவிட நாடு என தனி நாடு வேண்டும் என கோஷம் போட்டு வந்தது, பின்னர் தி.கவில் விருந்து பிரிந்த அண்ணதுரை அவர்கள் திமுக கண்டார், அவரும் திராவிட நாடு என முழங்கினார், பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவே ,மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று கூடுவோம் ,அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் முழங்கினார்.

ஆனால் இதுக்கெல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக கி.பி 1962 இல் இந்திய அரசியல் சட்டத்தின் 19 ஆம் பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள், இதனை பதினாராவது அரசியல் சட்டத்திருத்தம் அல்லது தனிநாடு தடைச்சட்டம் என்றார்கள். மேலும் இதனடிப்படையிலேயே பதவிப்பிரமாணமும் எடுக்க வேண்டும்.

இச்சட்டத்திருத்தத்தின் படி , இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ தனி நாடு என கோரிக்கை வைத்து இயங்கக்கூடாது, அப்படி செய்தால் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கப்படும், தேவைப்பட்டால் நிரந்தர தடையே விதிக்கப்படும்.

சட்ட திருத்த விவரங்களுக்கு காண்க...

http://indiacode.nic.in/coiweb/amend/amend16.htm

இச்சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது ராஜ்யசபாவில் அண்ணா அவர்கள் தம் கட்டி நீண்ட எதிர் விவாதம் எல்லாம் செய்தார் ஆனாலும் ,சட்டத்திருத்த மசோதா அபார வெற்றிப்பெற்றது, இனிமேல் திராவிட நாடு எனப்பேசினால் தேர்தல் தடை என்ற சூழலில் , தனிநாடுக்கோரிக்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு , மத்தியில் கூட்டாச்சி ,மாநிலத்தில் சுயாட்சி என புதிய கோஷம் உருவாக்கிக்கொண்டார், அதாவது ஃபெடரல் கவெர்ண்மெண்ட் அமைப்பில் மாநிலங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை கேட்பதாகும்.

இந்த பழைய மேட்டரெல்லாம் எதுக்குனு கேட்கிறிங்களா விடயம் இருக்கு, அண்ணா காலத்திலே ஊத்தி மூடப்பட்ட, ஒரு சமாச்சாரத்தினை பற்றி இப்பவும் ஒரு அரசியல் தலைவர் பேசிக்கிட்டு இருக்கார், அவர் வேறு யாருமல்ல புரட்சிப்போராளி குருமா ச்சே திருமா தான்.அவருக்கு அவ்வாறு பேசுவது அரசியல்சட்டப்படி தடை செய்யப்பட்டது என தெரியுமா என தெரியவில்லை,

சமீபத்தில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் வீர உரையாற்றிய திருமா, நான் நாடாளுமன்றத்திலேயே தனித்தமிழ் நாடு வேண்டும் எனக்குரல் கொடுத்தேன் என சொல்லி இருக்கிறார்.(செய்தி ஜூவியில் வந்துள்ளது)

இவ்வாறு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சில முரணான கருத்துக்களையும் சொல்லலாம்,ஆனால் யாரேனும் ஒரு உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தால் அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்படும், மேலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் ,சபாநாயகர் விரும்பினால் இடைநீக்கமும் செய்யலாம்.சட்ட மன்றமோ,நாடாளுமன்றமோ சபாநாயகருக்கு "வானாளவிய அதிகாரம்"உண்டு என்பது கடந்த கால வரலாறு!

எனவே நாடாளுமன்றத்தில் பேசினேன் என சொல்லிக்கொண்டு மேடைப்போட்டு பேசிக்கொண்டு இருந்தால் ,யாரேனும் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் தேர்தலில் கலந்துக்கொள்ள தடைவிதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சூனா சாமியின் கவனத்திற்கு  இதெல்லாம் இன்னும் செல்லவில்லை போல ,தெரிந்தால் உடனே பெட்டிஷன் போட்டு அலப்பரையை கொடுக்கலாம்.(ஹி...ஹி ,வருங்காலத்தில் அப்படி நடந்தால் அடியேனின் தீர்க்க தரிசனத்தின் அருமையை  நினைவு கூறவும்)

இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  நடைப்பெற சாத்தியமுல்ல தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்கே  தெலுங்கான மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை, அப்படி இருக்க சட்டத்தின் படி நிறைவேற வாய்ப்பேயில்லாத தனிநாடு பற்றிப்பேசினேன் என பெருமையாக பேசி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களை என்னவென்பது?

திருமாவிற்கு அரசியல் சட்ட நிலை என்னனு தெரிஞ்சு பேசினாரா, தெரியாம பேசினாரானு தெரியலை ஆனால் எதைப்பேசினாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரையில் அரசியல் கட்சிகளுக்கு வாழ்வுதான் :-))

என்ன கொடுமை சார் இது!
---------------

வாய்ப்பும்,வரமும்:



கருப்பு வெள்ளைக்காலப்படங்களில் வரும் ஜாலியான பாட்டுக்களை டப்பாங்குத்து பாட்டுக்கள் என்பார்கள், கிராமிய இசையின் பின்னணியில் பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்ப வரும் படங்களில் ஜாலியான பாட்டு என்றால் குத்துப்பாட்டு என்பார்கள், ஆனால் இசைனு சொல்லிக்கிறாப்போல எதுவும் இருக்காது, வெறும் டம்முக்கு டிப்பான் டப்பானு ஒரு பீட்ஸ் தான் பாட்டு முழுக்க ஓடும்.

மாமா ...மாமா மாமா ஏமா...ஏமானு ஜாலியான டப்பாங்குத்தாக இருப்பினும், பாட்டின் நடுவில் "தாலிக்கட்டும் முன்னே கை மேனியில் படலாமானு "கலாச்சாரமும் பேசு(பாடு)கிறார்கள் :-))

இப்போலாம் டாடி மம்மி வீட்டில் இல்லைனு நேரா இன்விட்டேஷன் தான் :-))

இந்த பாட்டில உள்ள கவனிக்க தக்க அம்சம் என்னவெனில் ,பாடலுக்கு ஆடும் ஆண் நடிகர் தான்,அவர் பெயர் "கள்ளப்பார்ட் நடராஜன்",அக்கால நாடகங்களில் வில்லனாக நடிப்பவர்களை "கள்ளப்பார்ட்"என்றும் ஹீரோவை "ராஜ பார்ட்" என்றும் சொல்வார்கள்.

நாடக நடிகர்கள் எல்லாருமே நடனம்,இசை என கற்றுக்கொண்டவர்களே, எனவே வில்லன் நடிகராக நாடகத்தில் நடித்தவர் என்றாலும் செமையா "உட்கார்ந்து எழுந்து" என குத்தாட்டம் போட்டிருக்கார். பாட்டின் நடுவில் எம்.ஆர்.ராதாவும் கனவாக ஒரு சில குத்துக்கள் போட்டிருக்கார்.

இப்படிலாம் நடனம் ஆடத்தெரிந்த நாடக நடிகர் பெரிய நடிகராக வந்தாரா என்றுப்பார்த்தால் இல்லை ,கடைசியில் பார்த்தால் தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக " மாயன் பார்த்தால் எங்களுக்கு தான் பிரச்சினை போயிடுங்க தம்பி " என அழுகாச்சி வசனம் பேசி நடித்தவர் இவர் தான் என தெரிய வருகிறது.

திறமை இருக்கும் பலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனால் திறமை என பெரிதாக இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு ,கிடைத்து பின்னர் திறமையை வளர்த்துக்கொண்டு பெரிய அளவில் வந்துவிடுவதும் நடக்கிறது. வாய்ப்பு கிடைப்பதை விட வரம் கிடைக்க வேண்டும் போல!

இப்போலாம் சினிமாவில ஹீரோவாக ஆகணும் என்றால் ஹீரோவிற்கு மகனாக பிறந்திருக்க வேண்டும், அரசியலில் முதல்வராக /தலைவராக ஆக வேண்டும் என்றால் முதல்வருக்கு மகனாக பிறந்திருக்க வேண்டும் என ஆகிவிட்டது.

என்ன கொடுமை சார் இது!
--------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,ஜீவி,நன்றி!
**********

Friday, April 05, 2013

கச்சத்தீவு-மறைக்கப்பட்ட உண்மைகள்!

(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா )


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு) பல மணற் திட்டுக்களும்,சிறிதும் பெரிதுமான பல தீவுகளும் உள்ளன,அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் 12 தீவுகள் உள்ளன,

1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள்.

அத்தீவுகளின் பெயர்கள்:

01 ராமேஸ்வரம்

02 குந்துகால் தீவு

03 புனவாசல் தீவு

04 முயல் தீவு

05 பூமரிச்சான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குருசடி தீவு



இதில் ஓரளவு பெரிய பரப்பினைக்கொண்டது கச்சத்தீவு ஆகும் ,ராமேஷ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, பரப்பளவு சுமார்  285 ஏக்கர்(1.15ச.கி.மீ).

இத்தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது அன்று முதல் இக்கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு சோதனைக்காலம் துவங்கிவிட்டது.

கச்சத்தீவினை தாரைவார்த்துக்கொடுத்ததின் பின்னால் உள்ள அரசியலையும், நமது தமிழக அரசியல் தலைவர்களின்  செயல்படாத்தன்மையும் விரிவாக காணலாம்.

1974 ஒப்பந்தம்:

பண்டார நாயகா மறைவுக்கு பின்னர் அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா இலங்கையின் பிரதமராக பதவிக்கு வந்தார், ஆனால் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் தனது அரசியலை வலுவாக்கிக்கொள்ள ஏதேனும் அசாத்திய சாதனை செய்ய விரும்பினார், இதனால் நீண்ட நாட்களாக இலங்கை உரிமைக்கேட்டு வந்த கட்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு ,அப்போதைய இந்திய பிரதமரை அனுகினார்.



பண்டாரநாயகா காலம் தொட்டே நேரு குடும்பத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள்,அதே நட்புடன் இந்திராவும் இருந்ததால் காரியம் சாதிக்க விரும்பினார். அக்காலக்கட்டத்தில் இந்திரா தலைமையிலான அரசுக்கும் ஒரு நெருக்கடி உருவானது,அது என்னவெனில்,மே-18,1974 இல் இந்திராவின் திட்டப்பட்டி ,ராஜஸ்தான் பாலைவனத்தில் போக்ரானில் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டிருந்து. இதனால் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருந்தன, மேலும் ஐநா சபையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஒரு தீர்மானம் கொண்டு வரும் திட்டமும் இருந்தது. எனவே ஐநா சபையில் தனக்கான ஆதரவை திரட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள இந்திரா காந்தி அவர்கள் ஆர்வமாக இருந்த சூழலில், சிரிமாவோ கட்சத்தீவைக்கேட்கவும் விட்டுக்கொடுத்து இலங்கையை வளைத்துவிடலாம் என திட்டமிட்டார்கள்.

பல நாடுகள் இருக்கும் போது இலங்கையால் என்ன பெரிதாக ஐநாவில் உதவிட முடியும் என நினைக்கலாம்,ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பினை இலங்கையே வகித்து வந்தது.

ஐநா பாதுகாப்பு அவையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்,அது அல்லாமல் 15 உறுப்பினர்களை தற்காலிகமாக தேர்ந்தெடுப்பார்கள், பின்னர் அவர்களில் ஒரு நாட்டினை அகரவரிசைப்ப்படி ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு அவையின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள், எனவே அக்காலத்தில் இலங்கைக்கு பாதுகாப்பு அவையின் தலைவராக வரும் சூழல் உருவானது.

எனவே இலங்கையை வளைப்பதன் மூலம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரும் தீர்மானத்தினை தகர்க்கலாம் என திட்டம் போட்டு ,கச்சத்தீவினை தாரை வார்க்கும் திட்டத்தினை முன்னெடுத்தார் இந்திராகாந்தி.

இது போன்ற "சூப்பர் திட்டங்களை" எல்லாம் அரசியல்வாதியே போட்டிருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது,எல்லாம் அயலக உறவுத்துறை அதிகாரிகளின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தனைக்கும், 1971 ஆம் ஆண்டு பங்களாதேச உருவாக்க போரின் போது ,பாகிஸ்தான் விமான படை விமானங்கள் இந்திய வான் வெளியில் பறக்க தடை என்பதால் ,அரபிக்கடலில் சுற்றிக்கொண்டு ,கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட பங்க்ளாதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை,அப்பொழது, விமான படை விமானங்களுக்கு எரிப்பொருள் கொடுத்து பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டிய நாடு தான் இலங்கை. ஆனாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்புப்பாராட்டி கச்சத்தீவினை கொடுக்க நம்ம ஆட்களே வரிந்துக்கட்டி வேலை செய்தார்கள் என்பதை எந்த வகையில் சேர்க்க?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அன்னிய நாட்டிற்கு விட்டுக்கொடுக்க நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமேயில்லை, சட்டமேதை அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு அப்படி ஒரு கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருந்தார் எனலாம். அதனைப்பின்னர் விரிவாக காணலாம்.

இந்திய நாட்டின்  ஒரு பகுதி என சொன்னால் தானே கொடுக்க முடியாது என கட்சத்தீவு இந்தியாவின் பகுதியேயில்லை ,இரு நாட்டுக்கும் இடையே பொதுவாக உள்ள ஒரு பகுதி ,யாருக்கு சொந்தம் என தெரியாத "டிஸ்பியுட்டட்" லேண்ட் என இந்தியாவே வலிய தெரிவித்தது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.ஏன் எனில் கட்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் அதற்கான ஆதரங்களும் உள்ளன.

இவ்வாறு கடல்ப்பகுதியில் உள்ள பகுதியில் ஒரு இடத்தினையும் உடனே கொடுக்க முடியாது,புதிதாக கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்.எனவே 1974 இந்தியா-இலங்கை கடல் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் என போடப்பட்டது. பின்னர் கச்சத்தீவினை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், இந்திய மீனவர்களுக்கு என சில  உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும் சொல்லி கட்சத்தீவினை தாரை வார்த்துவிட்டார்கள்.

இதில் நடந்த உரிமை மீறல்களை காண்போம்,

இரு நாட்டுக்கடல் எல்லைகள் ஒன்றின் மீது ஒன்றாக பரவும் நிலையில் புதிய கடல் எல்லை வகுக்க வேண்டும் எனில் ,இருநாட்டுக்கும் சம தூரம் வருமாறு கடல் எல்லை வகுக்க வேண்டும்,அப்படி செய்தால் கட்சத்தீவு தானாகவே இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிடும் என்கிறார்கள்,ஆனால் அப்படி செய்யாமல் இலங்கைக்கு அதிகப்படியான கடல் எல்லை வருமாறு எல்லைப்பிரித்து விட்டார்கள்.

மேலும் இந்தியாவின் ஒரு அங்கமான நிலப்பரப்பை வேண்டுமென்றே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனை விரிவாக காண்போம்.

கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி:

வெள்ளையர்களின் காலனியாக இந்தியா இருந்த போதும் இந்தியாவில் பல தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களும்,ஜமீந்தார்களும் இருந்தார்கள்,அவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அவர்களே, பிரிட்டீஷ் அரசு கூட அல்ல.

தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பே கச்சத்தீவு ஆகும், கி.பி 1882 ஆம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கச்சத்தீவு உட்பட எட்டுத்தீவுகளுக்கு உரிமையாளர்கள் ராமநாதபுர சமஸ்தானமே. இதற்கான ஆவணங்களும், மேலும் பலருடன் இடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களும் உள்ளன. வெள்ளையருக்கே கூட தீவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறார் என ஆவணங்கள் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தினை கட்டியதும் ஒரு தமிழரே, 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

கச்சத்தீவுரிமையை நிலைநாட்டும் பல ஒப்பந்தங்கள்,ஆவண விவரங்கள்:

1. During A.D. 1605, the clan of Ramanathapuram Sethupathy King was established by the Madurai Nayaks, incorporating 69 coastal villages and 7 Islands, of which Katchatheevu Island is one of the Island.

2. A copper plate plaque issued by King Koothan Sethupathy who ruled Ramanathapuram during the years 1622- 1635, depicts that the Sea upto Talaimannar belonged to Sethupathy Kings.

3. Coronation flowers which adorn the Goddess, Malai Valar Kathali Ammai of Rameswaram are grown in Katchatheevu Island. Similarly, cattle’s that are donated to the Temple are cared for in Katchatheevu Island and the Milk and other items needed for pooja are brought only from Katchatheevu island.

4. In the Kingdom of Ramanathapuram, there existed a separate account section to maintain and audit the accounts of Kathatheevu Island.

5. In the plaque issued to Jamindarine Mangaleswari Natchiyar, who took over after the period of Ramanathapuram King Muthuramalinga Sethupathy (who was imprisoned for a long period for having opposed the British), it is clearly mentioned that Katchatheevu Island belonged to Ramanathapuram Zamin.

6. There is a clear document evidencing leasing out Katchatheevu Island to East India Company by Ramanathapuram Sethupathy in the year 1822.

7. In Queen Victoria’s 1858 Proclamation whereby the powers got transferred to British Rule from East India Company, reference is made that Katchatheevu Island belong to Ramanathapuram Zamin.

8. P.P.Peris, who during the years of British Rule in 1936- 40, served as an Assistant Draftsman and later became a Ministerial Secretary after Sri Lanka attained independence, on 08.05.1966, made the following statement, confirming that Katchatheevu Island belonged to Ramanathapuram Kings. He says, “During the years 1936-40, when I served as Assistant Draftsman in the Land Survey Department, I was directed to survey the district boundaries of Ceylon. Therefore, I perused all records, documents, historical evidences and the Queen Victoria’s proclamation, by which 1 found that Katchatheevu Island belonged to King Sethupathy, Therefore I drew the Northern District of Ceylon delineating Katchatheevu Island.” This statement issued by the Ministerial Secretary on 08.05.1966, was widely reported in the then Daily Mirror published from Sri Lanka and thereafter reported in Indian Express in India.

9. There is a Registered Document (Registration No. 510/1880, Book 1, Volume 16) evidencing the fact that on 23.06.1880, eight coastal villages and four Island, including the Katchatheevu Island, belong to the Ramanathapuram Sethupathy’s were given in lease by the District Collector, Madurai jointly to one Abdul Kadar Marakayar and Muthusamy Pillai.

10. By a document dt.04.02.1885 (Registration No. 134/1885), Muthusamy Pillai, has taken the Katchatheevu Island on an annual lease of Rs.15 per annum from the Estate Manager of Ramanathapuram Sethupathy for the purpose of procuring dye roots.

11. Under a pact entered into between the Dutch and Ramanathapuram Seethupathy during the year 1767, a clause was incorporated to permit ail those residing Ramanathapuram Zamin can always visit Katchtheevu Island.

12. Baskara Sethypathy of Ramanathapuram, has assigned a portion of Katchatheevu island to Poet Sundaram.

13. When Zamindari Abolition Act came into force, Katchatheevu Island is mentioned as 285 Acres of Government Poromboke land in Ramanathapuram Village.

14. In the Ramanathpuram Gazetteer, issued by S.A.Viswanathan, Assistant Revenue Officer, Madras (then Tamiinadu was called Madras) on 11.11.1958, in Register No.68, Katchatheevu Island is shown as comprised in Ramanathapuram Village.

15. On 01.07.1913, when few Islands were taken on a 15 year lease by the Government of Madras Presidency from Ramanathapuram Sethupathy, Katchatheevu Island is mentioned by the Secretary to Government, as a territory belonging to Ramanathapuram Zamin and situate on the North East of Ramanathapuram.

16. In the year 1947, one K.M.Mohammed Merasa Marakayar, took the Katchatheevu Island on lease from Ramanathapuram Sethupathy. In the documents which was then executed, Katchatheevu Island was shown as a territory situated between Talaimannar and Danuskodi and belonging to Ramanathapuram Suzerainty.

17. In the Land Document Register issued by the Government, firstly issued in the year 1957 and again reprinted and issued as an updated publication, in the year 1966, at page 107, Katchatheevu Island is mentioned as a uninhabited territory belonging to Danuskodi.

18. Between the years 1913 and 1928, many Islands including the Katchatheevu Island were taken on lease from Ramanathapuram Sethupathy Kings and were again sublet to fishermen.

19. On several occasion the Sethupathy Kings, have themselves directly leased out many islands including the Katchatheevu Island to fishermen. There are records to show that fishermen from Tondi and Nambuthazhai have taken such leases.

20. In all the Indian Land Survey Records issued between the years 1874 and 1956, Katchatheevu Island is depicted as an Indian Territory alone. The Indian Land Survey Department has mentioned Katchatheevu Island as, measuring 285 Acres and 20 cents comprised in Survey No.1250,

மூலம்:  http://katchatheevu.com/katchatheevu-is-ours-concrete-evdiences/

நன்றி!
-------------------------



இந்தியா சுதந்திரமடைந்த போது சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது, அவ்வேளையில் ராமநாதபுரம் சமஸ்தானமும் இணைக்கப்பட்டது, அவர்கள் சமஸ்தானம் குறித்த நில ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது,எனவே அனைத்து ஆவணங்களும் மத்திய அரசிடம் சிக்கிக்கொண்டதால் யாரும் கேள்விக்கேட்க முடியாது என 1974 இல் துணிகரமாக கச்சத்தீவின் உரிமையாளர் யார் என தெரியாத "டிஸ்பியுட்டட் லேண்ட்" என அறிவித்து இலங்கைக்கு கைமாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு செய்தால் மட்டுமே இந்தியாவின் நிலப்பரப்பை அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும்,அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை சட்டமேதை அம்பேத்கர் வடிவமைத்துவிட்டார் என முன்னர் குறிப்பிட்டதை இப்பொழுது விரிவாக காண்போம்.

இந்தியா என்பது முழு தன்னாட்சி பெற்ற ஒரு நாடு ,அதன் செயல்ப்படுத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அன்னிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற , நிர்வகிக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒரு புதிய நிலப்பரப்பினை இந்தியாவுடன் இணைக்க யாருடைய அனுமதியும் பெறத்தேவையில்லை,ஆனால் ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பினை அன்னிய நாடுகளுக்கோ, சக்திகளுக்கோ தன்னிச்சையாக விட்டுக்கொடுக்க முடியாது என அரசியலமைப்பு சட்டத்தினை வரையறுத்துவிட்டார்.

ஆனால் சுதந்திரமடைந்த காலத்தில் சரியாக எல்லைப்பிரிக்காமல் இருந்தது எனவே எல்லைப்பிரச்சினையை தீர்க்க , பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நிலப்பரிமாற்றம் செய்யலாம் எனவும் வழியும் உருவாக்கி இருந்தார், அதை வைத்தே கட்சத்தீவை தாரைவார்த்தார்கள்.

மேலும் அரசியல் நிர்ணய சட்டத்தினை வடிவமைக்கும் போது பல பரிசீலனைகளை அரசியல் தலைவர்கள் முன் வைத்திருக்க கூடும்,எனவே ஆளுவோருக்கு இப்படி நிலத்தை விட்டுக்கொடுக்க அதிகாரம் இல்லைனு சொல்வதை ஏற்கவில்லை போல எனவே , அதுக்கும் ஒரு ஓட்டையும் போட்டுக்கொடுத்திருக்கார், ஆனால் கொஞ்சம் சிக்கலாக ,எளிதில் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாத படி தான் செய்திருக்கார் எனலாம்.

இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டுக்கொடுக்க வேண்டும் எனில் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை மாநிலங்கள் அவை,மக்களவை இரண்டிலும் சமர்ப்பித்து வெற்றிப்பெற வேண்டும், அதன் பின்னர் அச்சட்டத்தினை எந்த மாநிலத்தின் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க இருக்கிறார்களோ அம்மாநில சட்டமன்றத்திலும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்,அதன் பின்னரே நிலப்பரிமாற்றம் செய்யலாம்.

நாடாளுமன்ற இரு அவையிலும் ஒப்புதல் பெறுவதோடு,மாநில சட்டமன்றத்திலும் ஒப்புதல் பெறுவது(rattification at state council) என்பது கடினமான காரியம் எனவே எளிதில் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.

அம்பேத்காருக்கு அப்போவே தெரிஞ்சிருக்கும் போல நம்ம அரசியல்வாதிகள் வருங்காலத்தில் காசுக்கு நாட்டையே வித்தாலும் வித்துடுவாங்கன்னு எனவே முன்னெச்சரிக்கையாக சிக்கலான சட்டத்தை போட்டு வைத்துவிட்டார்.

கச்சத்தீவினை விட்டுக்கொடுக்கும் நிகழ்வில் டிஸ்பியூட்டட் லேண்ட் என அறிவித்து விட்டுக்கொடுக்க மேற்சொன்ன சட்ட சிக்கலே காரணம் ஆகும்.

கச்சத்தீவு குறித்தான ஆவணங்களை வைத்து நமக்கு சொந்தமான நிலம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், முன்னர் அரசு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொடுத்த கச்சத்தீவு உடன்படிக்கை செல்லாது என அறிவிக்க இயலும்.

இது முடியுமா என சந்தேகம் வரலாம், ஆனால் இதற்கும் ஒரு முன்னுதாரண சம்பவம் இந்தியாவில் உண்டு.

பெருபாரி வழக்கு:

கி.பி 1947 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையே முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே நன்கு தெளிவான எல்லைகள் கொண்ட பகுதிகளை மட்டும் சரியாக குறிப்பிட்டு பிரித்துக்கொண்டு , மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் மேற்கு,கிழக்கு என இரண்டுப்பிரிவாக உருவாகி இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு வங்கத்துக்கும் சரியாக எல்லை பிரிக்காத சூழல்.

அப்பொழுது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக பெருபாரி வட்டம் இருந்தது,இதில் ஒரு பகுதி ,கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட பகுதிக்குள் நீட்டிக்கொண்டு இருந்தது,அதே போல சில தனி தீவுகளாக கிழக்கு பாகிஸ்தானின் பகுதிகள் மேற்குவங்கத்தில் இருந்தன. அதாவது மதத்தின் அடிப்படையில் எந்த நாட்டில் சேர்வது என மக்களை முடிவெடுக்க சொல்லி பிரித்ததால் மேற்கு வங்க எல்லைக்குள் அமைந்த சில வட்டங்கள் மட்டும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைந்துக்கொண்டன,ஆனால் அவர்களுக்கு நிலவியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தானுடன் தொடர்பேயில்லை, இவ்வாறு தனித்தீவா ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் பகுதி இருப்பதை என்கிளேவ் என்பார்கள்.

இந்த என்கிளேவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானியர் அவர்கள் நாட்டுக்கு செல்ல பெருபாரி வட்டம் வழியாகத்தான் செல்ல வேண்டும்,ஆனால் அது இந்திய நிலப்பரப்பு என்பதால் ,ஒவ்வொரு முறை செல்லவும்,விசா நடைமுறையினைப்பின்ப்பற்ற வேண்டும்.

எனவே பாகிஸ்தான் அரசு பெருபாரி வட்டத்தில் பாதி எங்களுக்கு சொந்தம், எல்லைக்கோட்டினை வரையருக்கும் முன்னரே பெருபாரி வட்டம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் தான் இப்பிரச்சினை,எனவே பெருபாரியை கொடுங்கள் எனக்கேட்க ஆரம்பித்தார்கள்.

சமாதான பிறா  ச்சே புறா விரும்பியான நேருவுக்கு அண்டை நாட்டுடன் சர்ச்சை வேண்டாம் என ரொம்ப நல்ல மனசு,இத்தனைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் சண்டை எல்லாம் போட்டிருந்தது,ஆனாலும் பாகிஸ்தான் நம்ம சகோதர நாடு என பெருபாரியை எடுத்துக்கோங்க என சொல்லி ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துட்டார்.

(Dr.Bidan chandra roy)


இது நடந்தது 1951 இல்,அப்பொழுது மேற்குவங்கத்தினை ஆண்டதும் காங்கிரஸ் கட்சியே,அதன் முதல்வராக டாக்டர்.பிசி.ராய் என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல தலையாட்டி பொம்மையல்ல, அது எப்படி மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமான நிலத்தினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கலாம்,இதைப்பற்றி எங்கக்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கடுப்பாகிட்டார், ஒப்பந்தம் எல்லாம் செல்லாது, ரத்து செய்யுங்கள்னு நேருவிடம் சொல்லிப்பார்த்தார், நான் தேசிய தலைவர், நீர் மாநில முதல்வர் எனக்கே அறிவுரையா சொல்லுறீர்னு நேரு கண்டுக்கவேயில்லை போல.

பி.சி.ராயும் விடுவதாக இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மத்திய அரசுக்கு எதிராகவே போட்டுவிட்டார், அதற்கு அடிப்படை நாம் முன்னர் பார்த்த அரசியல் நிர்ணய சட்டமே, பெருபாரியை வெறும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது செல்லாது,அப்படி செய்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதம் என்பதே வாதம்.ஒரே கட்சியாக இருந்தாலும் ,மாநில நலனை கருதி அவ்வாறு செய்தார். வழக்கை வாபஸ் பெற வைக்க நேரு தரப்பும் பல முயற்சிகள்  செய்து பார்த்தது, ஆனால் பி.சி.ராய் மசியவேயில்லை, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கலாம்னாலும் அதுவும் முடியலை,எல்லா எம்.எல்.ஏக்களும் பி.சி.ராய் பக்கமே,போதாக்குறைக்கு மக்களும் பலத்த ஆதரவு,மத்திய அரசுக்கு ஆப்பசைத்த குரங்கு நிலைமை, சொந்த கட்சியையே சமாளிக்க முடியலை,பாகிஸ்தானிடமும் திரும்பி கேட்க முடியலை.

1951 இல் போட்ட வழக்கு ,அப்படி இப்படினு இழுத்து 1960 இல் உட்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசின் தலைமைப்பொறுப்பில் உள்ளவருக்கு அதிகாரம் இருக்கு,ஆனால் வெறும் ஒப்பந்தம் மூலமாக எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஏற்கனவே அரசியல் நிர்ணய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட திருத்த வழியை தான் பின்ப்பற்றனும் என்பதே தீர்ப்பாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

//the Agreement cannot be implemented by a law
relatable  to Art. 3 and legislation relatable to  Art. 368
would be inevitable.
It follows, therefore, that the Parliament acting under Art.
368  can  make a  law to  give effect and  implement the
Agreement  in  question covering  both Berubari  and the
Enclaves or pass a law amending Art. 3 so as to cover  cases
of  cession of the territory of India and thereafter make  a
law under the amended Art. 3 to implement the Agreement.//


முழு தீர்ப்பையும் காண்க:

http://www.indiacourts.in/IN-RE--THE-BERUBARI-UNION-ANDEXCHANGE-OF-ENCLAVES-Vs.-REFERENCE-UNDER-ARTICLE-143(1)-OFTHE-CONSTITUT_81ff5700-42dc-491f-89ab-d6b539e75ba1

----------------
(Nehru and V.Krishna menon)


நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார்,ஏன் எனில் அப்பொழுது மற்றக்கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள்,மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி ,மத்திய அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம்,எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினை சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர் நினைத்தால் மீட்க முடியும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

இப்படி லட்டு மாதிரி நல்ல முன்னுதாரண சம்பவம் இருந்தும் 1974 இல் கட்சத்தீவை விட்டுக்கொடுத்தப்போது தமிழகத்தினை ஆண்ட தி.முக அரசு என்ன செய்தது, மஞ்சத்துண்டு என்ன செய்தார் எனப்பார்ப்போம்.

கொஞ்சம் விரிவாகவே அக்கால திமுக-காங்கிரஸ் உறவைப்பார்ப்போம்,

அண்ணா அவர்கள் தலைமையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை முன் வைத்தே அரசியல் செய்து வந்தது, தமிழைக்காக்க ,தமிழர் உரிமையை நிலைநாட்ட காங்கிரசை விரட்ட வேண்டும் என்று சொல்லி தான் அரசியல் செய்து வந்தார்.

1967 இல் நடந்த பொது தேர்தலிலும் இதுவே கொள்கையாக இருந்தது, காங்கிரசை கடுமையாக எதிர்த்தார்கள், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் என அண்ணாவுக்கே நம்பிக்கை இல்லை போலும் சட்டமன்றத்திற்கு போட்டியிடாமல் ,நாடாளுமன்றத்துக்கு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தி எதிர்ப்பு,மாணவர் போராட்டம் ஆகியவற்றோடு, அக்காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதா ,எம்ஜிஆரை சுட்ட சம்பவமும் சேர்ந்துக்கொள்ள ,கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் போஸ்டரை ஒட்டி அனுதாப அலையை வீச செய்தார்கள், எல்லாம் சேர்ந்து காங்கிரசை வீழ்த்த உதவியது.

மாநில சட்ட சபைக்கும்,நாடாளுமன்றத்திற்கும் நடைப்பெற்ற தேர்தலில் தி.முக அமோக வெற்றி,

சட்ட சபை- 137 இடங்கள்,தனிப்பெரும்பான்மை.

நாடாளுமன்றம்- 25 இடங்கள்.

 இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ,இந்தியா முழுக்க வெறும் 283 இடங்களே வென்றது, ஆட்சி அமைக்க 273 இடங்கள் போதும் என்றாலும், 283 எம்பிக்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்ற முடியாது, கிட்டத்தட்ட "மைனாரிட்டி அரசு" நிலை தான்.

இந்நிலையில் தி.மு.க என்ன செய்தது என்றால், யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களுடனே தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள்,காங்கிரசுக்கு தனது 25 எம்பிக்களும்  நிபந்தனை அற்ற ஆதரவு வெளியில் இருந்தே அளிப்பதாக அண்ணா அறிவித்துக்கூட்டணி ஒன்றை உருவாக்கிவிட்டார். பின்னர் 1969 இல் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வரான கலைஞரும் கூட்டணி உறவை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட அரசியல் கொள்கையாளர்களுக்காக எளிமையும்,நேர்மையின் வடிவமான  தமிழக காங்கிரஸ் தலைவரான காமராஜரையே தமிழக மக்கள் தோற்கடித்தார்கள் என்றால் அக்காலத்தில்  காங்கிரஸ் மீது எத்தகைய  வெறுப்புணர்வு திமுகவால் தூண்டி வளர்க்கப்பட்டு வந்தது என உணரலாம்.அதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் ஆட்சிக்கு வந்ததும்,நட்புறவு :-))

அதன் பின்னர் 1971 இல் மீண்டும் பொது தேர்தல் வந்த போது , கலைஞர் தலைமையிலான திமுகவும்,இந்திராக்காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டாக உடைந்து ,காங்கிரஸ்-ஓ, காங்கிரஸ் ஐ என பிரிந்த கதை எல்லாம் நடந்துவிட்டது.எனவே இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வலிமையிழந்தே இருந்தது ஆனாலும் தி.மு.க விசுவாசமாக முட்டுக்கொடுத்து வந்தது.

1971 பொதுத்தேர்தலிலும் இந்திரா காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி,மாநிலத்தில் தி.முக ஆட்சி, தி.முகவுக்கு 28 எம்பிக்கள் வேறு கிடைத்திருந்தார்கள், அமோக செல்வாக்குடன் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக கலைஞர் வந்தார். வழக்கம் போல மத்தியில் இந்திராவுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் கொடுத்திருந்தார்.

இப்படியான அதி அற்புத கூட்டணி உறவு இருக்கும் சூழலில் தான் 1974 இல் தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை முன்னரே பார்த்த அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்தார், கூட்டணியில் பசைப்போட்டு ஒட்டியிருந்த கலைஞர் என்ன செய்திருக்கணும்?

சும்மா பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் நாஞ்சில்.மனோகரனை விட்டு கண்டனம் தெரிவித்தார்,  அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக உறுப்பினரான  ராமநாத புரம் எம்பி மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி எம்பி.பாரதிய ஜனதாக்கட்சியின் அடல்பிகாரி வாஜ்பாயி எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளே, இந்திராகாந்தி,வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் ஆலோசித்து, வெளியுறவு செயலாளர் கேவல் சிங்க் என்பவரை  தமிழகத்துக்கு அனுப்பினார், அவர் என்ன பேசினாரோ கலைஞரின் சுருதி அமுங்கிப்போச்சு :-))

காரணமில்லாமல் ஒன்றும் கலைஞர் அடக்கி வாசிக்கவில்லை, எப்பொழுதுமே ஒரு கொண்டான் கொடுத்தான் கொள்கையை வைத்திருப்பார் மஞ்சத்துண்டு,தான் ஒன்றை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஒன்றை பெற்று விடுவார்.

 அப்பொழுது கலைஞரின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, முக்கியமானது வீராணம் திட்ட ஊழல் ஆகும்,வீராணம் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்த சத்தியநாராயண ரெட்டி என்பவர் மர்மமான முறையில் தற்கொலை எல்லாம் செய்துக்கொண்டிருந்தார்,எனவே இது  பெரிய அளவில் பிரச்சினைகளை கழகத்திற்கு உருவாக்கியிருந்தது. வீராணம் திட்டம் குறித்து விசாரனைக்கமிஷன் அமைக்க வேண்டும் என தி.முக.வை விட்டுப்பிரிந்து தனிக்கட்சிக்கண்ட எம்ஜிஆர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நேரம், எங்கே மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கோ,இல்லை ஆட்சிக்கலைப்போ வரலாம் என பயந்த கலைஞர் , எனவே வழக்கப்படி  தனது கொண்டான் கொடுத்தான் கொள்கைப்படி கச்ச தீவை விட்டுக்கொடுத்தது பற்றி அதிக அழுத்தம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டு,ஊழல் குற்றச்சாட்டினை மத்திய அரசு கிளராமல் பார்த்துக்கொண்டார்.

தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என நினைத்திருந்தால் , பி.சிராய் வழியில் ,உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டே கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அல்லது 28 எம்பிக்கள் உள்ள ஒரு கட்சி நாடாளுமன்றத்தினையே கலக்கியிருக்கலாம், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஆதரவு தர தயாராக இருந்தது எனலாம், ஏன் எனில் அவர்களை பொறுத்தவரையில் கட்சத்தீவு "வாலித்தீவு" ஆகும். ராமனும்,வாலியும் சண்டையிட்டது கட்சத்தீவில் என ராமாயண அடிப்படையில் நம்புகிறார்கள்.

1976 கட்சத்தீவு ஒப்பந்தம்:

1974 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை,வலைகாய வைக்கும் உரிமை எல்லாம் இருந்தது,ஆனால் அவ்வுரிமை இலங்கைக்கு பிடிக்கவில்லை,எனவே ஒரு திருத்தம் செய்து ,எல்லா உரிமைகளையும் பறிக்க நினைத்து ,புதிய ஒப்பந்தம் போட்டது,நமது இந்திய அரசும் கொடுத்தது தான் கொடுத்தாச்சு முழுசாவே கொடுப்போம்னு ரொம்ப தாரளமாக அள்ளிக்கொடுத்துவிட்டது,இம்முறை சின்ன எதிர்ப்பு கூட மாநில அரசிடம் இருந்து வரவில்லை,ஏன் எனில் அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வளவு தான் மடங்கிப்போனாலும் விடுவதாகயில்லை,எமர்ஜென்சிக்கு எதிர்ப்புக்காட்டினார்கள் எனக்கூறி தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு செய்யப்பட்டு மிசாவின் கீழ் உடன்ப்பிறப்புகள் எல்லாம் தர்ம அடியும் வாங்கினார்கள்.

இம்புட்டு நடந்தும் 1981 பொது தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக்கூவிய தன்மான சிங்கங்கள் தான் கழகத்தினர் :-))

அதுக்கப்புறம் இன்று வரையிலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி என வண்டியோட்டியும் கட்சத்தீவு கைவிட்டு போனது போனதாகவே தான் இருக்கிறது,அம்புட்டு தான் மஞ்சத்துண்டின் இராச தந்திரம்.

கட்சத்தீவு மீட்பு சாத்தியமா?

1992 இல் ஆட்சிக்கு வந்த அம்மையார் தலைமையிலான அ.தி.முக ஆட்சியின் போது கட்சத்தீவினை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார்,ஆனால் ஏனோ உடனே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, 2008 இல் தான்,மேற்கு வங்க பெருபாரி வழக்கின் அடிப்படையில் உட்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டுள்ளது, இம்முயற்சி சற்றே காலங்கடந்த ஒன்று என்ற போதிலும் சரியான வகையில் கட்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான நிலப்பரப்பு என ஆவணங்களை காட்டி வாதாடினால் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வர பெருமளவு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட வழக்கினை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உட்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக சாதிக்க முடியாததை சட்டப்போராட்டத்தின் மூலம் சாதிக்க முடிகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,நல்ல தீர்ப்பு வர காத்திருப்போம்.
----------------------------

பின்க்குறிப்பு:

# சிற்சில தகவல் &காலப் பிழைகள்(நாள்,வருடம்) இருக்கலாம்,முடிந்த வரையில் சரியான தகவல்களை சேகரித்து அளித்துள்ளேன்,பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால் திருத்தம் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.asiastudies.org/index.php?option=com_content&view=article&id=221&Itemid=79

# http://www.eurasiareview.com/08022010-a-tamil-nadu-perspective-on-india%E2%80%99s-bilateral-agreements-center-state-relations/

# http://katchatheevu.com/

# http://bsubra.wordpress.com/2007/05/10/katcha-theevu-issue-history-indian-naval-strategy/

# http://www.thehindu.com/news/national/jayalalithaa-seeks-early-hearing-on-katchatheevu/article3911978.ece

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!

**********************

Friday, March 15, 2013

எல்லாமே அரசியல்!


(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு? )


இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ரீதியான பல போராட்டங்கள்,கண்டனங்கள் எழுந்துள்ளன, தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றளவில் இதற்கான ஆதரவு எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

அரசியல் இயக்கங்களை தாண்டி மாணவர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கின்றனர், அத்தகைய ஒரு வெளிப்பாடாக லயோலா கல்லூரி மாணவர்கள் கடந்த மார்ச் எட்டாம் தேதி காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து பன்னிரெண்டாம் தேதி முடித்துக்கொண்டுள்ளார்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் அல்லாமல் பிறக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள், ஆனால் இவையெல்லாம் அரசியல் நாடகங்களின் ஓரங்கமாகவே இருக்கிறதோ என சந்தேகிக்க தூண்டும் அம்சங்கள் பலவும் காணப்படுகின்றன.

மாணவர்களின் சிந்தனை மற்றும் எழுச்சி தேவை ,அது சரியே எனவும் நினைக்கிறேன் ஆனால் அரசியல் சதுரங்கத்தில் அவர்கள் அறிந்தோ,அறியாமலோ பகடையாக்கப்படுகிறார்களோ என நினைக்கவும் வேண்டியதாகிறது. நாட்டில் எல்லாமே அரசியல் தானோ என நினைக்கும் போது அயர்ச்சியாகிறது.

யே யப்பா உடனே உணர்ச்சி பொங்க ,நீ எல்லாம் தமிழனா, மாணவர்கள் போராட்டத்தை களங்கப்படுத்துவதும் ஒரு பொழைப்பா, ஏ தமிழ் நண்டே ,உன் நொள்ளைக்கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இரும் என கொந்தளிக்காதீர்கள் என்னருமை புரட்சி புடலைங்காய்களே, என்ன சொல்ல வருகிறேன் என சற்றே நிதானமாக வாசித்து உள்வாங்கிக்கொண்டு அப்புறமாக தீர்ப்பெழுத பேனா எடுங்களேன்!

(கம்யூனிச பாணியில் பறை முழங்க போராட்டம்)

லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் கடந்த எட்டாம் தேதி ஈழ இனப்படுகொலையை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் என அறிவித்தனர், முதலில் நுங்கம்பாக்கத்தில் உள்ள AICUF(All India Catholic University Federation ) வளாகத்தில் ஆரம்பிக்க சென்றனர்,ஆனால் அவ்விடம் இலங்கை தூதரகத்திற்கு வெகு அருகில் இருப்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம் என காவல் துறை அனுமதி மறுக்கவே, பின்னர் கோயம்பேட்டில் உள்ள ஒரு "தனியார் இடத்தில்" தங்கள் உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கினர்.

இங்கு கவனிக்க வேண்டியது ,காவல் துறை அவ்வளவு எளிதில் உண்ணாநிலை போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காது, காவல் துறை அனுமதி என சொல்லப்பட்டாலும் அது ஆட்சியாளரின் முடிவை பொறுத்தே என்பதால், அனுமதி கொடுக்கப்பட்டது ஆளுங்கட்சி தலைமையின் விருப்பத்தின் படியே என அறியலாம்.

பல பத்திரிக்கைகளும் கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என்றே எழுதின ,அது என்ன சிறப்பான தனியார் இடம், உண்ணா நிலைப்போராட்டத்திற்கு என யாராவது கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார்களா,அல்லது வீட்டை வாடகைக்கு எடுத்து போராட்டம் நடக்கிறதா?

இக்கேள்வி ரொம்ப அவசியாம என நினைக்கலாம்,ஆனால் அவசியம் ஆகிறது.

இப்போ சின்னதா ஒரு பிளாஷ் பேக் அடிப்போம்,

ஆகஸ்ட்,2011 இல் காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற தன்னார்வ அமைப்பின் உறுப்பினரான செங்கொடி என்பவர், ராஜிவ் கொலைவழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்ககோரி ,காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்டார்.

காஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும்,கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் ,கிருத்துவப்பின்னணிக்கொண்ட ஒரு மக்கள் சேவை இயக்கம் ஆகும். இவர்களுக்கு PUCL(PEOPLE'S UNION FOR CIVIL LIBERTIES) மற்றும் Madras Social Service Society (MSSS-இவ்வமைப்பு the official organ for social work in the Archdiocese of Madras-Mylapore), ஆகியவற்றின் ஆதரவும் ,ஒத்துழைப்பும் உண்டு.

அரசியல் ரீதியாக மக்கள் மன்றத்தின் போராட்டங்களுக்கு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் சமீபமாக வேல் முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி, மற்றும் பழ.நெடுமாறன், சேவ் தமிழர் இயக்கம் ,மே-17 இயக்கம், ஆகியன ஆதரவளிப்பதும் ,கூட்டுப்போராட்டங்கள் செய்வதும் வழக்கம்.

காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சென்னைக்கோயம்பேட்டில் ஒரு அலுவலகம் உள்ளது(உரிமையாளர் அவர்களா அல்லது கம்யூனிச இயக்கமா என தெரியவில்லை), அதற்கு தீக்குளித்து உயிர் நீத்த செங்கொடியின் பெயரை சூட்டி செங்கொடி மன்றம் என அழைக்கப்படுகிறது. லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திய தனியார் கட்டிடம் தான் இந்த செங்கொடி மன்றம்!

எதற்கு பத்திரிக்கைகள் மீண்டும் ,மீண்டும் சென்னைக்கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என "சிறப்பாக" தனித்து சொல்ல வேண்டும்? காரணம் என்னவெனில் செங்கொடி மன்றம் என சொல்லப்பட்டால் அவ்வியக்கம்,அதன் சார்புக்கட்சிகளின் நிலை எளிதில் வெளிப்பட்டுவிடும் என்பதாலே.

இப்போராட்டம் லயோலாக்கல்லூரி மாணவர்கள் தானே முன்னெடுத்தார்கள் இதற்கெல்லாம் எப்படி பொறுப்பாவார்கள் எனலாம், லயோலாக்கல்லூரி AICUF இன் ஒரு அங்கம், இது Archdiocese of Madras-Mylapore, ஒரு அங்கம்.இவர்களோடு சென்னை சமூக கூட்டமைப்புக்கும், அதனோடு மக்கள் மன்றதுக்கும் தொடர்பு உள்ளதை பார்த்தோம். மேலும் வைக்கோவிற்கும் கிருத்துவ அமைப்பினருக்கும் இணக்கமான உறவுண்டு, எனவே எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.


அதெல்லாம் சரி ,மாணவர்களின் எழுச்சியான போராட்டத்தில் இவர்கள் தொடர்பு இருந்தால் என்ன ,நல்ல நோக்கத்திற்காக தானே போராடினார்கள் என நினைக்கலாம், ஆனால் இவர்களின் தொடர்பால் மாணவர்களின் போராட்டத்தினை வைத்து ஆளுங்கட்சி ஒரு அரசியல் சதுரங்கம் ஆடியுள்ளதாக நினைக்கிறேன்.

மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தினை காவல் துறைக்கொண்டு ஆளுங்கட்சி அடக்கியிருக்கிறது எனவே இப்போராட்டத்தினை ஆளுங்கட்சி விரும்ப வழியில்லை, மேலும் மாணவர்கள் தி.முக.,காங்கிரஸ் கட்சியினரையும் எதிர்த்துள்ளார்கள் எனவே இதில் என்ன அரசியல் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் பல வெளியில் தெரியாத உள்நீரோட்டங்களே என்பதை புரிந்துக்கொண்டால் உண்மை தெளிவாகும்.

தி.மு.க கூட்டணியினர் டெசோ அமைப்பினை உயிர்ப்பித்து மீண்டும் ஈழ விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்த ,இழந்த இமேஜை தூக்கி நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்கள்,அதன் ஒரு அங்கமாக ஐ.நாவுக்கு மனு,புது தில்லியில் மார்ச்-10 இல் டெசோ கருத்தரங்கு, தமிழகத்தில் மார்ச்-12 இல் வேலை நிறுத்தப்போராட்டம் என பிசியோ பிசியாக தீயாக வேலை செய்ய பார்க்கிறார்கள்.

இந்நிலையில் எட்டாம் தேதி மாணவர்களுக்கு உண்ணாநிலைப்போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படுகிறது, பின்னர் சரியாக பதினோராம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் காவல் துறை கைது செய்கிறது. விடிந்தால் டெசோ பந்த்!

இதில் உள்ள நுண்ணரசியல் என்னவெனில் மறுநாள் நடைப்பெற்ற பந்தினை விட மாணவர்கள் கைது என்ற செய்தி முன்னிலைக்கு வந்துவிட்டது.

மேலும் கல்லூரிகள் இயங்காமல் இருந்தால் பந்துக்கு ஆதரவு மாபெரும் வெற்றி என திமுக சொல்லிக்கொள்ள முடியாது, கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தால் அது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு என்றே பார்க்கப்படும் நிலை.

அப்படிப்பார்த்தாலும் ஆளும்தரப்புக்கெட்டப்பெயர் தானே என நினைக்கலாம், எனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகனும் சித்தாந்தம் தான் :-))

மேலும் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளையும்,அவர்களின் டெசோ எதிர்ப்பு நிலையையும் பார்த்தால் , ஆளும்தரப்பை கோபப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

1)We strongly condemn the US-draft resolution. Do not pass it at UNHRC

2)What took place in Ilangkai [Sri Lanka] is not merely war crimes or violations of human rights, but planned genocide

3)International investigation and referendum are the only solutions for the Tamils. Government of India should propose a resolution to bring in international investigation and to conduct a referendum on independent Tamil Eelam.

4)A proposal should be made to remove the Deputy High Commission of the Sinhala chauvinistic State from the Tamil soil [Tamil Nadu]. India should severe all diplomatic relations with Ilangkai [Sri Lanka].

5)Government of India, accepting the request of the "Tamil Nadu State Government", should implement economic sanctions on Ilangkai [Sri Lanka].

6)On behalf of the "Tamil Nadu State Government", a foreign relations department should be created to assure the security of global Tamils.

7)No Asian country should be a member in the [international] investigation committee.

8)Killing Tamil Nadu fishermen should be stopped immediately.

9)If the Government of India is not finding solution to the question of Eezham Tamils, we will not pay any taxes from Tamil Nadu. We, students, will actively engage in this campaign.

சட்டப்பேரவையில் அம்மையார் கொண்டு வந்த தீர்மானத்தையும்,மாநில அரசையும் முன்னிறுத்த வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.அதாவது ஆளுங்கட்சியினரின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு போரட்டமாக கருத வாய்ப்புள்ளது,ஆனால் கைது ,அடக்குமுறை என்பது போலவும் ஒரு தோற்றம்,என்ன அரசியலப்பா இது?


உண்ணா நிலைப்பந்தலில் ,மாணவர்களுடன் "ஜென்டில் மேன்" வைகோ,ஹி...ஹி பளீர்னு பாலிஷ் அடிச்சு ஷீ,டக் இன் கெட்டப்பில் ,ஒரு கார்ப்பரேட் எக்சிகியூட்டிவ் போல இருப்பதால் ஜென்டில்மேன் என சொன்னால் தப்பில்லை தானே.

மாணவர்கள் தான் பாவம் திடீர்னு அவசரமா உண்ணா நிலைக்கு வந்துவிட்டதால் கருப்பு சட்டை வாங்க நேரமில்லை போல எல்வீஸ்னு எழுதிய கருப்பு பனியனை ,உள் பக்கம் வெளிப்பக்கமா வருமாறு திருப்பிப்போட்டு சமாளிச்சு இருக்காங்க!






மாணவர்களுடன் ,நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர்கள்,

//Activists Mallai sathya and Manimaran from MDMK,  Thirumalai from AISF, Senthil from the Save Tamils Movement, Arun shourie from the Tamil Nadu Makkal Katchi, Ilaya raja from the Tamil Thesiya Maanavar Iyakkam, movie directors Ram, Kalaignan and Gauthaman and few activists from the May 17 movement were among the arrested.//

நள்ளிரவில் கைது செய்யப்படும் பொழுதும் கூட கைதாகியுள்ளவர்கள் யார் எனப்பார்த்தால் மல்லை சத்யா உள்ளிட்ட 200 மதிமுக கட்சியினர் மற்றும் பலர் ,இதன் மூலம் மதிமுகவின் பங்கு என்னவென புரிகிறது. இப்போராட்டக்களத்தில் மதிமுகவினரின் பின்புலம் இருப்பதாலோ என்னவோ புதிய புரட்சி அவதாரம் "நாம் தமிழர்" சீமான் சீனுக்கு வராமலே ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

(முகமலர்ச்சியுடன் முதல்வர், கூட்டணி மறுமலர்ச்சி காணுமா?)

கம்யூனிஸ்டுகள் ஏற்கனவே அம்மையாருடன் இணக்கமான அரசியலில் உள்ளனர், சமீபத்தில் வைகோவின் மது பான பாதயாத்திரையில் திடீர் சந்திப்பு என அம்மையாருடன் புதிய அரசியல் மலர்ச்சியுடன் மதிமுக,இவை எல்லாம் வரும் நாடாளுமன்றத்தேர்தலை ஒட்டிய புதிய கூட்டணிக்கான அச்சாரங்களாக மாறக்கூடும்.


லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக்கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி ,புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.


மற்ற கலைக்கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளும் போராட்டத்தில் கலந்துள்ளன,ஆனாலும் அனைத்தும் ஒருங்கிணைக்க ஒரு அரசியல் இயக்கம் பின்னிருந்துள்ளதை தெளிவாக காணலாம்.ஏன் எனில் இலங்கைக்கு கண்டனம் என கோரிக்கை பதாகைகளுடன் டெசோவை புறக்கணிக்கவும் எனவும் பதாகைப்பிடித்து நிற்கிறார்கள்!

படம்.


ஆளுங்கட்சி , தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் , டெசோ பலூனில் காற்றையிறக்க இரு கோடுகள் தத்துவப்படி டெசோவை சின்னதாக காட்ட மாணவர்கள் போராட்டத்தினை அடக்குவது போல் நடவடிக்கை எடுத்து , பெரிதாக வளர்க்கிறது எனலாம். ஒருக்கட்டத்தில் தனது பேர் கெடாமல் செய்ய மாணவர்கள் கோரிக்கையை "எனது அரசு" ஏற்கிறது என பெருந்தன்மையான அறிக்கையே கூட அம்மையாரிடம் இருந்து வரலாம், அப்படி வந்துவிட்டால் ,மீண்டும் ஈழத்தாய் பட்டம் சூடி மகிழ சீமான் தயாராக இருப்பார் என சொல்லவும் வேண்டுமோ?

டெசோ என்பது வெண்ணைக்கூட வெட்ட உதவாத மொன்னைக்கத்தி என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை,ஆனால் மொன்னைக்கத்தியாக இருந்தாலும் என்னோடதாக்கும் என போராட்டத்தில் குதித்து பெயர் வாங்கப்பார்க்கும் திமுகவின் ஆசையில் ஒரு லோட் மண்ணள்ளி போடும் விதமாக அம்மையார் இராச தந்திரமாக மாணவர்கள் போராட்டத்தினைப் பயன்ப்படுத்திக்கொள்வதாக நினைக்கிறேன்.

லயோலா கல்லூரி மாணவர்களும் சொல்லி வைத்தார்ப்போல 12 தேதியுடன் உண்ணாநிலைப்போராட்டத்தினை நிறுத்திக்கொண்டார்கள், அரசு நிர்பந்தம் என சொல்லலாம்,ஆனால் நிர்பந்தம் வரும் என தெரிந்து தானே சாகும் வரைப்போராட்டம் என குதித்தார்கள்,அரசைப்பற்றி  12 தேதிக்கு அப்புறம் தான் தெரிய வந்ததா? இப்பொழுது நடக்கும்  போராட்டத்தில் மாணவர்கள் எத்தனை சதவீதம் உறுதியாக நிலைப்பார்கள்,என்று மங்கலம்பாடுவார்கள் என சொல்ல முடியாது.

ஆனால் அதற்குள் நம்ம இணைய சேகுவேராக்கள் ஒரு முன் முடிவுடன் என்ன என்னமோ பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது இப்போராட்டங்கள் பற்றி கேள்விக்கேட்டுவிட்டாலே போதும் , உடனே அறச்சீற்றம் கொண்டு கண்கள் சிவக்க ,காது மடல் சிலிர்க்க , ஒரு நீண்ட சொற்பொழிவை ஆரம்பிக்கிறார்கள்,ஒரு கணினியும்,இணையமும் இருந்துவிட்டால் என்ன  வேண்டுமானாலும் எழுதுவியா, நீ என்னிக்காவது போராடி இருக்கியா,வலினா என்ன தெரியுமா,இரத்தம் பார்த்து இருக்கியா , யாரும் எதுவும் பேசக்கூடாது பேசினால் உனக்கு தமிழுணர்வு இல்லை, இது மாணவர்களை கொச்சைப்படுத்தும் செயல் என ஏதேச்சதிகாரமா தீர்ப்பு எழுதி தள்ளுகிறார்கள்.

என்னைப்பொறுத்த வரையில் மாணவர்களோ,பொதுமக்களோ தன்னெழுச்சியாக ,சுயநல அரசியலற்று போராட வேண்டும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காணோம்.

எல்லாமே அரசியல் தானோ?
--------------

பின் குறிப்பு:

# நாம் எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளனும் அல்ல, செய்திகளில் படிப்பதை வைத்து எனது அவதானிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன், இதில் பிழையொன்றுமில்லை, அதெல்லாம் முடியாது நீ அந்தக்கட்சி ஆதரவாளன் தான் என ஏதேனும் ஒரு சாயம் பூச ஆசைப்பட்டால் நானென்ன செய்ய, சாயம் பூசி உங்க கொலை வெறியை தணித்துக்கொள்ளவும், ஆனால் பூசுறது தான் பூசுறிங்க நல்ல சேப்பு சாயமா பூசிட்டு போங்க அப்போவாச்சும் கொஞ்சம் கலர் கூடுதா பார்ப்போம் :-))

#படங்கள் மற்றும் தகவல் உதவி,

சேவ் தமிழ், தமிழ் நெட், விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

Monday, March 04, 2013

என்ன கொடுமை சார் இது-11


(ஹி...ஹி ஆடைக்கட்டி வந்த நிலவோ?)


வெட்கம் கெட்ட விளம்பர மோகம்!

கராத்தே வீரர் ஷிஹான் ஹீசைனி அடிக்கடி விளம்பரத்துக்காக எதையாவது செய்வார் ,அதுவும் அம்மையார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காலங்களில் எல்லாம் தன் மீது கவனத்தினை திருப்ப தவறாமல் ரத்தத்தில் படம் வரைவது, அல்லது கோணங்கி தனமாக  எதையாவது செய்து கவனம் ஈர்க்க முயல்வார், அதன் உச்சக்கட்டமாக்க இப்பொழுது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை செய்துள்ளார், சுமார் 11.5 லிட்டர் மனித இரத்தத்தினை மைனஸ் 27 டிகிரி செல்சியசில் உறைய வைத்து அதனைக்கொண்டு அம்மையாரின் மார்பளவு(BUST)  ஒரு சிலை செதுக்கியுள்ளார் , இதற்கு அவர் நடத்தும் வில்வித்தை பயிற்சி நிலைய மாணவர்களிடம் இருந்து  இரத்தம்  சேகரித்துள்ளார்,மேலும் அவர் ரத்தமும் பயன்ப்படுத்தி இருக்கிறார்.



இதற்காக எட்டு ஆண்டுகளாக அவரது இரத்தத்தினை சேகரித்து வைத்திருந்தாராம், இப்படி செய்வதற்கு பதில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்திருக்கலாம், ஒரு யூனிட் இரத்தம் என்பது சுமார் 200 மிலி என நினைக்கிறேன், எனவே 11.5 லிட்டர் ரத்தமும் சுமார் 57 யூனிட் அளவுக்கு வருகிறது, சாதாரணமாகவே 2 யூனிட் இரத்தம் இருந்தாலே ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யலாம்,எனவே சுமார் 114 மேஜர் ஆபரேஷன்களை இவர் சிலை வடிக்க பயன்ப்படுத்திய ரத்தித்தின் மூலம் செய்திருக்கலாம்,அத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,எத்தனையோ பேர் ஆபரேஷன்களுக்கு ரத்தம் கிடைக்காமல் அலைகிறார்கள், இணையம், தொலைக்காட்சி என விளம்பரமெல்லாம் கொடுக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதன் தனது அல்ப விளம்பர மோகத்திற்காக  விலைமதிப்பில்லா மனித இரத்தத்தினை சிலையாக்கி வீணடித்துள்ளார், இதனையும் தொலைக்காட்சிகள் செய்தியாக்கி மகிழ்கின்றன, இதற்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

என்ன கொடுமை சார் இது!
-------------------

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!

இலங்கையில் முள்ளி வாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது ,அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் நக்கீரன் பத்திரிக்கை முதல் பல பத்திரிக்கைகளிலும்,இணைய தளங்களிலும்  வெளியானது,ஆனால் சில  தமிழக அரசியல் தலைவர்கள் இறப்பினை உறுதிப்படுத்தாமல் பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை   உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்.



சில ஆண்டுகள் கடந்த பின் இப்பொழுது சேனல் நான்கில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் துளைக்கப்பட்டு இறந்த காட்சியினை வெளியிட்ட உடன் , தமிழக அரசியல் தலைவர்கள் இது நாள் வரையில்  கேள்வியேப்படாமல் இன்று தான் கேள்விப்பட்டது போல பேசுவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது, இவர்கள் ஈழ மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது  எல்லாம் கட்டுக்கதையா?

கோரச்சம்பவம் நடந்த அன்றே உண்மையை விளக்கி  பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கும், ஆனால் மொன்னையாக ,தெளிவில்லாமல் பேசி நடந்த கோரச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஒரு போராளி ஒரு அதிகார மையத்திற்கு எதிராக போராடினால் அவனை மட்டுமே  எதிரியாக பார்க்க வேண்டும், ஆனால் அவனது குடும்பத்தினரையும் எதிரியாக நினைத்து ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் அழித்துவிட்டு ,சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அதிபர் என தலை நிமிர்த்தி ஒரு  மனிதன் நடக்கிறான்,அதனை உலக நாடுகளும் வேடிக்கைப்பார்ப்பதை எல்லாம் பார்த்தால்,மனித குலம் நாகரிமடைந்துவிட்டது, நாம் வாழும் உலகம் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காயாக கற்பிக்கப்படும் சித்தாந்தங்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

மேலும் இராச பக்சே, பாலச்சந்திரன் படுகொலைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்கிறார் விட்டால் இலங்கைக்கும் ,இலங்கை இராணுவத்துக்குமே தொடர்பில்லை என்று சொன்னாலும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போமாக :-))

நல்ல வேளை சின்னப்பையன் ,அப்பா போன துக்கம் தாங்காமல் ,ஒரு துப்பாக்கிய எடுத்து நெஞ்சில ஐந்து முறை அவனே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என சொல்லாமல் விட்டார்களே என நிம்மதியடையலாம்.


இதில் சேனல் நான்கு பல தவணைகளாக ஆண்டுக்கணக்கில் காணொளிகளை வெளியிட்டு வருவதும் சரியல்ல, ஒரு கோரச்சம்பவத்தினை தங்கள் சேனலின் டி.ஆர்பி ரேட்டிங்க் அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பயன்ப்படுத்துகிறார்கள் ,மேலும் படுகொலைகளை படமெடுத்தவர்களோ நல்ல விலைக்கு பேரம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாகவும் தெரிகிறது, இதனை போர்க்குற்ற ஆவணமாக கருதி சரியான காலத்தில் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலியாக அமையும், ஏன் எனில்  சேனல் நான்கின் காணொளிகள் மட்டுமே இப்பொழுது உள்ள ஒரே போர்க்குற்ற ஆவணம், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்த ஆவணப்படங்கள் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முழுமையாக காட்டாமல் பகுதியாக காட்டுவதால் சரியான தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சேனல் நான்கு செயல்ப்பட வேண்டும்.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து, விரிவாகவும் தெளிவாகவும் தனது கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளரும் ,வலைப்பதிவருமான திரு. அமுதவன் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார்,அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்

# இதில் நம்ம ஊர் அரசியல் கட்சிகள் இன்னமும் வழக்கம் போல மேடைக்கச்சேரி மட்டுமே செய்துக்கொண்டுள்ளன. கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை  தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க  வைக்க  முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?

இதில் உட்சபட்ச கொடுமை என்னவெனில் ராஜ்யசபாவில் விவாதம் முடிந்த அன்றே காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (சல்மான் குர்ஷித்) சொல்கிறார் ,இலங்கை எதிரி நாடல்ல, ஜெனிவாவில் என்ன முடிவெடுப்போம் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது என்கிறார், இதன் மூலமே ராஜ்யசபாவில் தொண்டைக்கிழிய பேசினால் எல்லாம் வேலைக்காவாது என்பது நன்கு புலப்படும்.

தி.முக இப்படி செய்வதற்கு பதில் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிக்க முயற்சிக்கலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
--------------

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்!

வழக்கமாக மார்க்கப்பந்துக்கள் பரிணாமம் இல்லை ,உலகம்,உயிர்கள் அனைத்தும் அல்லா படைத்தார், விரித்தார் என கதை விடுவது வழக்கமே, ஆனால் அவர்களோடு சோடிப்போட்டுக்கொண்டு சில வைதீக மதப்பற்றாளர்களும் இப்பொழுது பரிணாமம் இல்லைனு கிளம்பி இருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி எனில் , மார்க்கப்பந்துக்களை பொறுத்த வரையில் அறிவியல் பார்வைக்கொண்ட நாத்திகர்களும் காஃபீர்கள் தான் , இறை நம்பிக்கைக்கொண்ட வைதீக மதப்பற்றாளர்களும் காஃபீர்கள் தான்,ஆனால் நாத்திகர்கள் முன் வைக்கும் பரிணாமவியல் கோட்ப்பாட்டினை எதிர்க்க மட்டும் மார்க்கப்பந்துக்கள் வைதீகர்களுடன் கைக்குலுக்கிக்கொள்கிறார்கள் :-))

வைதீக மதப்பற்றாளர்கள் பரிணாமத்தினை கேள்விக்குள்ளாக்க ,மார்க்கப்பந்துக்கள் கேட்ட அதே கேள்வியான , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் இருக்கிறதா எனக்கேட்கிறார்கள், அதாவது மனிதன் குரங்கிலிருந்து உருவானவன் என்றால் மனிதனுக்கும் குரங்குகிற்கும் இடைப்பட்ட வடிவில் ஒரு உயிரினம் இருக்க வேண்டும்,அதன் படிமம் எங்கே என கேட்கிறார்கள்.

இக்கேள்வியை அரேபிய மதத்தினை பின்ப்பற்றுபவர்கள் கேட்கலாம்,ஏன் எனில் அவர்களுக்கு இராமாயணமெல்லாம் தெரியாது, படித்திருக்க மாட்டார்கள்,ஆனால் சதா சர்வகாலமும் ,எம்பெருமான் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளை நினைத்து புளகாங்கிதம் அடையும் வைதீகர்கள் அப்படி எல்லாம் கேட்கலாமோ?

பகவான் பெருமாளின் தசாவாதரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின்  மகிமையை போற்றிப்பாடும் இராமாயணத்திலேயே பரிணாமத்திற்கு ஆதரவான சான்றுகள் உள்ளது, நம்பாதாவர்கள் கீழ்க்கண்ட படத்தினை காணவும்.



அனுமார் மனிதனைப்போல் இருகால்களில் நிற்கிறார், உடலும் மனித உடலை ஒத்துள்ளது ,ஆனால் குரங்கு போல முகமும்,வாலும் உள்ளது,இதன் மூலம் குரங்கிற்கும்,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருந்தது தெளிவாகிறது, அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))

இராமாயணத்தினை படித்துவிட்டு பரிணாமத்தினையும் எதிர்க்க நினைக்கும் வைதீகர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம் என்ற செயலை செய்யலாமா?

என்ன கொடுமை சார் இது!
---------------

மதமெனும் போதை!




புதுவை அண்ணா சாலையில் இராஜா திரையரங்கம் அருகில் இப்புண்ணியமிகு திருக்கோவில் உள்ளது, மாலை வேளையில் பக்த கோடிகள் பெரும் திரளாக வருவது வாடிக்கை. கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம் எல்லாம் கன்னத்துல போட்டுக்கோங்க!


கோயிலைபார்த்து பரவசமானீர்களா,வாங்க அப்படியே பக்தி பரவசமாகி ஏகாந்தமான பக்தர்களையும் தரிசிப்போம் ..........


பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))

என்ன கொடுமை சார் இது!
----------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி ,

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------

Saturday, February 02, 2013

வில்லங்க ரூபம்!

(ஹி...ஹி இந்த வவ்வால் அடங்கவே மாட்டான் போல இருக்கே..அவ்வ்வ்)

லோகநாயகரின் வில்லங்க ரூபம் திரைப்படத்தினை பார்க்கும் வரையில் படம் பற்றி பதிவெழுத வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் லோகநாயகர் மும்பையில் உட்கார்ந்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சோதனை வந்தால் மதச்சார்பற்ற ஒரு மாநிலம், அல்லது ஒரு நாட்டினை தேடிப்போவேன் என ஒரு டகால்ட்டி பேட்டிக்கொடுத்து சும்மா கிடந்த என்னை உசுப்பிவிட்டார் எனவே தான் இப்பதிவு.

பதிவினுள் செல்லும்முன் கவனிக்கவும்,

நான் இப்பதிவில் லோகநாயகரின் செயல்பாட்டினை நடு நிலையுடனே அலசவுள்ளேன் ,அப்படியும் முன் ஜென்ம விரோதம்,வாய்க்கா வரப்பு தகராறு என கற்பிதம் செய்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் ,மனமகிழ்வு தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட செல்லலாம், நன்றி!

திறந்த மனதுடன் விமர்சனங்களை எதிர்க்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.

# லோகநாயகரின் திரைப்படத்திற்கு தடை விதித்திருக்க  கூடாது என்பதே  எனது கருத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தி விடுகிறேன், இல்லை எனில் அரைகுறையாக படித்துவிட்டு சிலர் பொங்கல் வைக்க கிளம்பிவிடுவார்கள் :-))

உட்ப்பிரிவு-1:

இந்தளவுக்கு படம் வெளியிடுவதில் சிக்கலாக முதல் காரணமும் லோகநாயகரே ஆவார் என்பதையும் பதிவு செய்கிறேன்.

இனி மேற்கொண்டுப்பார்ப்போம்.

# திரைப்படம் தயாரித்து முடிந்ததும் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை  முதலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியிடம் லோகநாயகரே விற்றுள்ளார்.

//Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

அது ஏன்?

ஏன் எனில் படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் வந்தால் ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பதாலேயே,எனவே முன்னரே படத்திற்கு எதிர்ப்பு வரும் என கணித்தே லோகநாயகர் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது.

இப்பொழுது தமிழ்நாட்டினை மதச்சார்பு மாநிலம் என பேசும் லோகநாயகர் ,சேட்டிலைட்ஸ் உரிமம் விற்க தேடிப்போனப்போது மதச்சார்பு தன்மை எல்லாம் தெரியாமல் இருந்தாரா?

இல்லை இவர் நாத்திகம் பேசுகிறேன் என சொல்லிக்கொண்டாலும் மதச்சார்ப்பற்று உண்மையில் இருந்துள்ளாரா?

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், தசாவாதாரம் போன்ற படங்களை மதச்சார்ப்பற்றவர் ஏன் எடுத்திருக்க வேண்டும், தனது வணிக நோக்கத்திற்காக மதம் சார்ந்தே படங்களை எடுத்து லாபம் பார்த்தவர் , எதிர்ப்பு என்றதும் ,மதச்சார்பற்ற மாநிலம் தேடுகிறேன் என்பது முரண்நகையாகும்.

ஹே ராம் , இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தியது என சிலர் மேம்போக்காக சொல்லலாம், ஆனால் அதன் அடிப்படை கதை , தனக்கு கெடுதல் செய்த இஸ்லாமிய சமூகத்தினை மன்னித்து நன்மை செய்யும் சகிப்பு தன்மையுள்ள இந்து என்பதே ஆகும்.

அதாவது பெரும்பான்மை இந்துக்கள் சகிப்பு தன்மையுடன் இஸ்லாமியர்கள் செய்யும் தவறை பொறுத்துப்போகிறார்கள் என சொல்லியிருப்பார்.

உன்னைப்போல் ஒருவனில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக போய் , பெரும்பான்மை உள்ள சமூகத்தில் சிறும்பான்மையினர் அடங்கியிருக்க வேண்டும், ஏதேனும் வன்முறை செய்தால் பெரும்பான்மை பதிலடி கொடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்ற செய்தியினை திரைப்படமாக்கியிருப்பார்.

தசாவதாரம் படத்தில் பயோவார் என்ற கதைக்கு வைணவ பின்னணியே தேவையில்லை, ஆரம்பத்தில் வரும் சிலை மூழ்கடிப்பு எல்லாம் இல்லாமலே அக்கதையை சொல்ல முடியும், ஆரம்பக்காட்சிகளை கட் செய்துவிட்டு படம் பார்த்தாலும் பயோ வார் கதை தெளிவாக புரியும்.

ஆனால் தேவையில்லாமல் சைவ-வைணவ பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பார், அறிவியல் ரீதியான பயோ வார் படத்திற்கு எதற்கு வைணவ முலாம்?

இப்படி மதம் சார்ந்து படைப்புகளை உருவாக்கி ,பணம் சம்பாதித்தவர், பணம்  பண்ண துடிப்பவர், இவர் எப்படி மதச்சார்புள்ள மாநிலம் என தமிழகத்தினை குற்றம் சொல்ல முடியும்?

மதம் மட்டுமல்ல ஜாதியத்தினையும் வணிக நோக்கிற்காக அவ்வப்போது பயன்ப்படுத்திக்கொள்பவரே லோகநாயகர், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் எல்லாம் தேவரின புகழ்ப்பாடி வியாபாரமாக்கியிருப்பார்.

லோகநாயகருக்கு தமிழகத்தில் நிலவும் ஜாதிய பிரச்சினைகள்,சண்டைகள் தெரியாதா? அப்படி தெரிந்தும் இது போல படமெடுக்க காரணம் ,சர்ச்சைகளை பயன்ப்படுத்தி படத்தினை ஓட வைக்கவே என சின்ன குழந்தையும் சொல்லும், அப்படிப்பட்டவர் என்னமோ நாத்திகன்,நடுநிலையானவன் ,ஆனால் தமிழ்நாடு மத வெறியுடன் உள்ள மதச்சார்பு மாநிலமாகிவிட்டது என சொல்வதெல்லாம் உலக மகா காமெடி.

இவர் நாத்திகம் பேசுவதெல்லாம் சுயலாபத்திற்காக தான், தன் மீதுள்ள பிராமண சாயம் போகவும், தன்னை சாம்பார் நடிகர் என சொல்லிவிடாமல் இருக்கவுமே புரட்சிகர நாத்திக வேடம் போட்டுள்ளார். ஆனால் அடிப்படையில் உண்மையான நாத்திக உணர்வில்லாமையால் அவ்வப்போது அவரது மதவாத சுய ரூபம் திரைப்படங்களில் வெளியாகிவிடுவது வழக்கம்.

(அமீர்கான் தான் முன்மாதிரி போல)

# சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் வரையில் டிடிஎச் இல் வெளியிடும் எண்ணமே இல்லை , ஆனால் பின்னர் விநியோக முறையில் சரியான விலைக்கு விற்க முடியவில்லை என்றதும் , டிடிஎச் இல் வெளியிடும் திட்டம் தீட்டியுள்ளார், ஆனால் அதனை சேட்டிலைட்ஸ் உரிமம் விற்ற தொலைக்காட்சி நிறுவனத்திடம் உரியமுறையில் தெரிவிக்கவில்லை,

ஏன் சேட்டிலைட்ஸ் உரிமம் பெற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?

ஏன் எனில் சேட்டிலைட்ஸ் உரிமம் என விற்றால் அதிலேயே டிடிஎச் , வீடியோ ஆன் டிமாண்ட்  முறையில் வெளியிடும் அனைத்து உரிமங்களும் அடங்கிவிடும், எனவே சேட்டிலைட்ஸ் உரிம ஒப்பந்தம் போடும் போடுதே "Basic satellites rights"  எனக்குறிப்பிட்டு விட வேண்டும் ,பின்னர் sub-clause ஒன்றில் டிடிஎச், வீடியோ ஆன் டிமாண்ட் இன்ன பிற உரிமங்கள் அளிக்கப்படவில்லை என ஒப்பந்தம் தயாரிக்கப்பட வேண்டும் , அப்படி ஒப்பந்தம் செய்யாமல் விற்கப்படும் சேட்டிலைட்ஸ் உரிமத்துடன் அனைத்து வகையான தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமங்களும் வாங்குபவருக்கு சேர்ந்து விடும்.

T.V. Rights என ஒப்பந்தம் போட்டுவிட்டால் , டிவிடி உரிமமும் சேர்ந்துவிடும், எனவே ஒப்பந்தங்களில் பயன்ப்படுத்தும் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்.

நெகட்டிவ் ரைட்ஸ் என எழுதி கொடுத்துவிட்டால் படத்தின் அனைத்து உரிமங்களும் போய்விடும், பைனான்சியரிடம் நிதி உதவிப்பெரும் போது இப்படி நெகட்டிவ் ரைட்ஸை எழுதி வாங்கிக்கொண்டு தான் பணமே கொடுப்பது வழக்கம்.

நாயகன் படம் அக்காலக்கட்டத்தில் சுமார் 1.25 கோடிக்கு தயாரிக்கப்பட்டு சரியாக விலைப்போகாத சூழலில் ஜீவி நெகட்டிவ் ரைட்ஸ் என அனைத்து உரிமையும் வாங்கியதோடு அல்லாமல், விருது கிடைத்தாலும் எனக்கே தான் என நிபந்தனை விதித்து முக்தா சீனிவாசனிடம் இருந்து நாயகனை வாங்கினார்.

படம் விலையாகாத சூழலில் தயாரிப்பாளர் எப்படியெல்லாம் அடங்கிப்போக வேண்டியுள்ளது என்பதற்கு இது உதாரணம், ஆனால் அந்த தயாரிப்பாளரை தான் கஞ்சன் என 25 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சியேயில்லாமல் குதறினார் லோகநாயகர்.

சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் போது சரியாக முன் திட்டமிடவில்லை, உரிம விவகாரத்தில் ஒரு புரொபெஷனல் அப்ரோச் இல்லாமலே செயல்பட்டுள்ளது தெரிகிறது.ஆனாலும் முதலில் டிடிஎச் இல் வெளியிட டாடா ஸ்கையுடன் பேச்சு வார்த்தை போதே அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனைக்கண்டுக்கொள்ளாமல் லோகநாயகர் தொடர்ந்துள்ளார்.

பின்னர் எதிர் தரப்பு தொலைக்காட்சியையும் டிடிஎச் ஒளிப்பரப்பு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவே , தங்கள் அதிருப்தியை சொல்லி டிடிஎச் இல் முன்னரே வெளியிடப்படும் என ஏன் சொல்லவில்லை, டிடிஎச் இல் வெளியாகும் படத்திற்கு சேட்டிலைட்ஸ் உரிமமாக பெரும் தொகை எதற்கு என கேட்டுள்ளார்கள், இதை விட அதிக தொகைக்கு என்னால் விற்க முடியும் என முன்னர் செய்த ஒப்பந்தத்தினை நீக்கிவிட்டு ,பின்னர் விஜய் தொலைக்காட்சியிடம் விற்றுள்ளார்.

சேட்டிலைட்ஸ் உரிம இழுப்பறிப்பற்றி  ஜீவியிலும் செய்தி வந்துள்ளது.

சிலர் நினைக்கலாம் சேட்டிலைட்ஸ் உரிமம் தனி, டிடிஎச் உரிமம் தனி என்பது புரியாமலா ஆளும் தரப்பு சேனல் இருக்கும் என, ஆனால் டிராய் வழிக்காட்டுதலிலேயே சேட்டிலைட்ஸ் சேனலின் ஒரு அங்கமாக தான் டிடிஎச் வருகிறது. எனவே ஒப்பந்தம் செய்யும் போது சப்-கிளாஸ் போட்டு தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

மேலும் சேட்டிலைட்ஸ் சேனலின் விதி முறைகள் தான் டிடிஎச் ஒளிப்பரப்புக்கும் பொருந்தும், சேட்டிலைட்ஸ் ஒளிபரப்பு என்றால் அது டிடிஎச் ஒளிபரப்பும் தான் என சொல்லி  டிடிஎச் ஒளிபரப்பிற்கு கேளிக்கை வரியாக 30 சதவீதம் தமிழக அரசு விதித்தற்கு எதிராக ஒரு வழக்கினை போட்டு தடையாணை வாங்கியிருக்கிறார்கள், அந்த வழக்கின் பின்னணியில் உள்ளது கேடி பிரதர்ஸ் ஆகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் டிடிஎச் ஒளிபரப்பிற்கு அதிக வரி விதித்தால் பாதிக்கப்பட போவது அவர்களே, தமிழ்நாட்டில் சுமார் 80% டிடிஎச் மார்க்கெட்டினை வைத்துள்ளார்கள்.

செய்தி:1

The Jayalalitha government’s imposition of 30 per cent entertainment tax surpasses that of the state of Uttar Pradesh (25%), and is aimed at directly hurting the Kalanithi Maran-promoted Sun Group. Other DTH operators do not have a wide presence in Tamil Nadu, which accounts for approximately seven per cent of the subscriber universe.

http://www.indiantelevision.com/headlines/y2k11/sep/sep164.php


செய்தி-2:

//Allowing a batch of petitions filed by DTH service providers Bharti, Dish TV India Ltd, Reliance, Sun Direct and Tata Sky Network, a Division Bench of the Madras High court has held that the 30 per cent entertainment tax imposed on DTH (Direct-to-Home) services in Tamilnadu is unconstitutional.//

//” The Hon.Court further held that the tax on DTH was violative of Article 14 of the Constitution of India since there was no difference in the nature of DTH Services and Cable Network.//

http://spectralhues.com/television/2012/10/9252/


மேலும் அரசு கேபிள் டீவி வருவதற்கு எதிரான வேலைகளை தில்லியில் கேடி பிரதர்ஸ் செய்வதாகவும் ஒரு கடுப்புண்டு,எனவே இந்நிலையில் அவர்களுடன் டிடிஎச் ஒளிபரப்பில் கூட்டு சேர்ந்தது எரிகிற கொள்ளியில் எண்ணை வார்க்கும் செயலாக போய்விட்டது.

சேட்டிலைட்ஸ் உரிம விற்பனையில் செய்த குழப்படிகளே பின்னர் பிரச்சினை வளரக்காரணமாக அமைந்து விட்டது,இதனை கணிக்க தவறிவிட்டார்  என்றே சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி தரப்பிற்கு சேட்டிலைட்ஸ் உரிமத்தினை தானாக தேடிப்போய் விற்றதே எதிர்ப்பினை சமாளிக்க தான், அப்படி இருக்கும் போது அந்த டீலை அவர் கடைசி வரையில் தொடர்ந்திருக்க வேண்டும்,ஆனால் டிடிஎச் மூலம்ம் கூடுதல் வருமானம் வரும் என்றதும் திசை மாறிவிட்டார், அப்படியே டிடிஎச் இல் வெளியிட விரும்பினாலும் அதனை உரிய முறையில் எடுத்து சொல்லி இருக்கலாம், அல்லது எதிர் தரப்பு சேனலுடன் கூட்டு சேராமல் இருந்திருக்கலாம் ஆனால் இரண்டையும் செய்ய தவறிவிட்டார்.

இதற்கு காரணம் நாம் என்ன செய்தாலும் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டார்கள் என ஓவர் காண்பிடென்ஸ் எனலாம். பாலுக்கும் காவல் ,பூனைக்கும் நண்பன் என இரண்டு தரப்பிலும் வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார் ஆனால் அதுவே எதிராக திரும்பிவிட்டது.

 வழக்கமாக ஆடியோ வெளியீட்டினை ஒளிப்பரப்புவதால் பெரிதாக விளம்பர வருவாய் வருவதுதில்லை எனவே பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீட்டினை சேனலின் அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவதுண்டு.
ஆனால் நல்ல விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதால்  படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டிலேயே மூன்று இடத்தில் நடத்தி நேரடி ஒளிபரப்பும் செய்துக்கொண்டார், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வாங்கிய படம் என்பதால் நேரடி ஒளிப்பரப்பினை அதிக செலவு செய்து ஆளுங்கட்சி தரப்பு சேனல் செய்துள்ளது,இந்நிலையில் டிடிஎச் ஒளிப்பரப்பினைப்பற்றி முன்னரே தெரிவிக்காமல் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வாங்கியதால் இழப்பு என்ற மனக்கசப்பும் வெளியாக , உரிமம் கைமாறியது , இது படத்தினை விளம்பரப்படுத்த தங்களைப்பயன்ப்படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றிவிடப்பட்டதாக நினைக்க வைத்தது.

நம்மோடு வியாபாரம் செய்ய வந்ததே எதிர்ப்பை சமாளிக்க தானே, படம் வெளியிடும் வரையில் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கடைசியில் நழுவியதை சந்தர்ப்பவாதமாக ஆளும்தரப்பு கருதிய வேளையில், மார்க்கப்பந்துக்களுக்கு படத்தினை போட்டுக்காட்டி இன்னொரு தவறினை செய்து விட்டார் லோகநாயகர்.

அரேபிய சித்தாந்தப்படி புதிதாக முளைத்துள்ள இயக்கங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதேனும் பிரச்சினை சிக்குமா என ஆர்வத்துடன் அலையும் வேளையில் ,படம் போட்டுக்காட்டியது "பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தார் "போன்ற வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படிப்போட்டுக்காட்டவில்லை எனில் மார்க்கப்பந்துக்கள் கடைசி வரையில் எங்களுக்கு படத்தினைப்போட்டுக்காட்டு என்ற கோஷத்துடன் தான் போராடியிருப்பார்கள், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கோஷமே எழுந்திருக்காது,அதனை அரசும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்காது, அந்நிலையில் தடை விதிக்க வலுவான காரணங்களும் சொல்ல இயலாது.

படத்தை போட்டுக்காட்டு என பிரச்சினை நடைப்பெற்று கொண்டே இருக்கும் வேளையில் படத்தினை வெளியிட்டு இருக்கலாம், படம் வந்த பின்னர் எதிர்ப்பு காட்டினாலும், ஒரு பேச்சுவார்த்தை நடத்தி சில காட்சிகள் நீக்குகிறேன் என சொல்லி சமாளித்திருக்கலாம், படமே வெளியாகிடுச்சு,நாமளும் எதிர்ப்பை காட்டினோம்,நாம சொன்னதால் சிலக்காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கு எனவே நாமே வெற்றிப்பெற்றோம் என மார்க்கப்பந்துக்களும் மனத்திருப்தி அடைந்து இருப்பார்கள்.

இதற்கு வாய்ப்பிருக்கா என நினைக்கலாம், துப்பாக்கி படத்திற்கு எப்படி எதிர்ப்பு கிளம்பியது எப்படி முடிவுற்றது என்பதே நல்ல முன்னுதாரணம் ஆகும்.

ஆனால் அப்படி எல்லாம் ஏன் செய்யவில்லை? மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டினால் புரிந்துக்கொண்டு சமாதானமாக போய்விடுவார்கள் என எப்படி நினைத்தார்?  அவர்கள் போராடுவதே தங்களின் இருப்பை ஊடகத்திலும், மக்களிடமும் நிலை நிறுத்தத்தானே, எனவே என்ன தான் விளக்கினாலும் ஏற்றுக்கொள்ளப்போவதேயில்லை என்பது நன்கு தெரிந்த ஒன்று.

இந்நிலையில் சென்சார் பெற்ற படத்தினை மதவாத இயக்கங்களுக்கு போட்டுக்காட்டி அபிப்பிராயம் பெருவது அவசியமேயில்லை,ஆனால் அப்படி செய்து தவறான முன்னுதாரணத்தினை உருவாக்கிவிட்டார்.

குஸ்கா பிரியாணி சாப்பிட போனவங்களுக்கு லெக் பீஸ் அதுவும் ஆட்டு லெக் பீஸுடன்  பிரியாணி போட்டா சும்மா இருப்பாங்களா, இன்னும் அதிக வீரியத்துடன் படத்தினை தடை செய் என கிளம்பிவிட்டார்கள் ,ஏற்கனவே தங்களை சுயலாபத்திற்காக பயன்ப்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டதாக கடுப்பில் இருக்கும் ஆளும் தரப்பு,சேட்டிலைட்ஸ் உரிமம் எங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது எனவே டிடிஎச் இல் வெளியிட கூடாது என நேரடியாக தடை விதிக்க கூட வாய்ப்பிருந்தும் செய்யவில்லை ஏனெனில்  அப்படி செய்தால் நேரடியான மோதலாக போய்விடும் என்பதால் ஆளும் தரப்பு காத்திருந்தது இவ்வேளையில் மார்க்கப்பந்துக்களின் புகார் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது எனலாம் எனவே கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிவிட்டார்கள்.

# தனது இத்தனை ஆண்டுகால உழைப்பையும் முதலீடாக இப்படத்தில் போட்டுள்ளேன், படம் வரவில்லை எனில் எனது சொத்துக்கள் அனைத்தும் போய்விடும் எனவும் சொல்கிறார் ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே விவரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

(பிவிபி சினிமா தயாரிப்பில் பங்குபெற்றதை காணலாம்)

படத்தின் தயாரிப்பாளராக முதலில் இருந்தது பிவிபி சினிமாஸ் என்ற நிறுவனமே, அவர்களிடம் சுமார் 50 கோடி பணம் பெற்று படத்தயாரிப்பு நடந்து வரும் போது பட்ஜெட் அதிகமாகிவிட்டது 100 கோடி ஆகும் என சொன்னதால் , இப்படத்துக்கு 100 கோடி செலவிடுவது வியாபார ரீதியாக ரிஸ்க் என மேற்கொண்டு பணம் தரவில்லை, எனவே லோகநாயகரே தயாரிப்பாளராக பொறுப்பில் எடுத்து முடித்தார் என சொல்கிறார்.

ஆனால் மேற்கொண்டு பெரிதாக பணமே முதலீடு செய்யாமல் 50 கோடியில் தான் படம் எடுத்துள்ளார் , 95 கோடி என சொல்வது எப்படி எனில் லோகநாயகரின் நடிப்பு,கதை,வசனம்,திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றிற்கு சம்பளம் என ஒரு பெருந்தொகையை சேர்த்து சொல்வதாகும்,இதற்கெல்லாம் சுமார் 40 கோடியை கணக்கில் சேர்க்கிறார். எனவே படத்தின் உண்மையான தயாரிப்பு செலவென்பது சுமார் 50-60 கோடிக்குள் மட்டுமே, 50 கோடி ரூபாய் பிவிபி மூலம் வந்துவிட்டது ,மேற்கொண்டு சில கோடிகள் செலவு செய்துவிட்டு மொத்த உழைப்பும் கொட்டியுள்ளேன்,கடன் வாங்கியுள்ளேன் என சொல்வதெல்லாம் கிடைத்த வாய்ப்பினை பயன்ப்படுத்தி அனுதாப அலையை உருவாக்கவே எனலாம்.

தற்போது தமிழகத்தில் வெளியாகாத சூழலில் கூட படத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 90% சதவீதத்துக்கு குறையாமல் திரும்ப எடுத்துவிட்டார் (அதிகமாக எடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது படத்தின் உண்மையான பட்ஜெட் தெரியாத நிலையில் குறைவாக 90% எனக்கொள்வோம்)

எப்படி எனப்பார்க்கலாம்.

இந்தி விநியோக உரிமையை ஏக்தா கபூரின் Balaji Motion Pictures வாங்கியாகிவிட்டது , மிக குறைவான தொகை என சொன்னாலும் ஒரு பத்து கோடிக்கு கூடவா வியாபாரம் ஆகி இருக்காது?

அதே போல தெலுகு விநியோக உரிமையை தாசரி நாரயண ராவ் வாங்கியுள்ளார், அதன் மூலமும் ஒரு 10 கோடி கிடைக்கும் என வைக்கலாம்.

கேரளா,கர்நாடகா விநியோகத்தின் மூலம் 10 கோடி எனலாம்.

அமெரிக்க விநியோக விற்பனை -10 கோடி

யு.கே மற்றும் ஐரோப்பிய உரிமை- 10 கோடி

மலேசியா,சிங்கப்பூர்,அரபு தேசம்- 10 கோடி

சேட்டிலைட்ஸ் உரிமை- 12 கோடி

ஆடியோ உரிமை குறைந்த பட்சம் என்றாலும் -1 கோடி

மொத்தமாக சுமார் 73 கோடிக்கு தமிழகம் தவிர்த்து விற்பனை ஆகிவிட்டது.

மிகக்குறைவான தொகையையே கணக்கில் வைத்து சொன்னது இது, இதை விட குறைவான விலைக்கு தான் மேற்சொன்ன ஏரியாக்கள் விலை போகும் என்றால், உலகநாயகன் ,அயல்நாடுகளில் பெரிய மார்க்கெட் இருக்கு என இத்தனை காலமாக சொன்னதெல்லாமே பொய் என்றாகிவிடும்.

தமிழகத்தில் வெளியாகாத சூழலிலும் இவ்வளவு வருமானம் வர வாய்ப்புள்ள நிலையில் எனது சொத்துக்கள் அனைத்தும் இழந்துவிடுவேன் , நான் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்பதெல்லாம் மிகையான நடிப்பே என்பேன்.

தமிழக வெளியீட்டுக்கு பின்னர் கிடைக்கும் வருவாய் முழுக்க லாபமாகவே கருதப்படும்.

எனவே இத்தனை வருட சம்பாத்தியம் அத்தனையும் பணயம் வைத்துள்ளேன், இழந்துவிடுவேன் என சொல்வதில் உண்மையில்லை.

பின்னர் இப்படி எல்லாம் ஏன் பேசுகிறார் என்றால் ,வருங்காலத்தில் உதவும் என்பதும் மேலும் படம் சுமாராக இருப்பதாக பேச்சு நிலவுவதால் படம் சரியாக வசூலாகவில்லை என்றால் யாரும் திரும்பப்பணம் கேட்காமல் இருக்கவுமே, அப்படிக்கேட்டால் எதிர்ப்பால் சரியாக ஓடவில்லை, எனக்கு நஷ்டம் நான் எப்படி திரும்ப பணம் கொடுப்பேன் என சொல்லிவிடலாம் :-))

டிடிஎச் ,எதிர்ப்பு ,தடை என அமோகமாக விளம்பரம் கிடைத்தும் ,அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 44 திரையரங்குகளில் இருந்து சுமார் 3.4 கோடி அளவுக்கு தான் வசூலாகியுள்ளது, வார நாட்களில் வசூல் இன்னும் குறையும், மேலும் நாட்கள் செல்ல செல்ல குறையவே செய்யும், ஒரு வாரம் தாண்டி ஓடுவதே அமெரிக்கா போன்ற நாடுகளில் அபூர்வம் ,எனவே 10 நாட்கள் ஓடுவதாக வைத்துக்கொண்டாலும் , சுமார் 10 கோடி வசூலாவது கூட கடினமே, இது விநியோக செலவினை தான் ஈடுகட்டும், மேற்கொண்டு தியேட்டர் வாடகை, விளம்பர செலவு ஆகியவை எடுக்க இயலாது, விநியோகஸ்தரை பொறுத்த வரையில் நட்டம் என்ற நிலையினை தான் உருவாக்கும் சூழல் உள்ளது.

வெளிநாட்டு உரிமம் வாங்கியவர்களுக்கு பெரும்பாலும் திரையிடல் மூலம் போட்ட பணத்தினை எடுத்தால் போதும் என்ற நிலையே நிலவும், அவர்கள் லாபத்தினை டிவிடி வெளியிட்டு சரிக்கட்டிக்கொள்வார்கள்,அதனால் தான் வெளிநாட்டிலிருந்து வரும் டிவிடிக்குறித்து நம்ம தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதேயில்லை, அதனைக்கேள்விக்கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது!

உண்மையில் எதிர்ப்பு நிலவியதால் தான் வெளியான இடங்களில் இந்த அளவுக்கு ஆவது படம் ஓடுகிறது, எதிர்ப்பு, தடை ஆகியவை மிக நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது,அதற்கு தானே ஆசைப்பட்டார் லோகநாயகர் !

# அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும், கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு மதச்சார்புள்ள மாநிலமாக ,அரசியல் பழிவாங்கும் மாநிலமாக மாறிவிட்டதாக இப்பொழுது கூப்பாடு போடும் லோகநாயகர், இதற்கு முன்னர் எப்பொழுதாவது சக கலைஞர்களுக்கு இதே போன்ற பாதிப்பு வந்தப்போது குரலெழுப்பியுள்ளாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லோகநாயகரைப்பொறுத்த வரையில் மதம்,ஜாதியம் ஆகியவை படைப்புக்கு மூலப்பொருள்,சர்ச்சைகள் ,தடை எனில் விளம்பரம் என ஜெகஜோதியாக கல்லா கட்டும் வணிகர்.

தனிப்பட்ட முறையில் மூத்த திரைக்கலைஞன் இவ்வாறு பாதிக்கப்படக்கூடாது என்றே அவருக்கு ஆதரவாக நினைக்கிறேன்,ஆனால் லோகநாயகர் மற்றவர்களுக்காக இவ்வாறு நினைப்பதில்லை என்பது மனதில் உறுத்தலாக நிழலாடுகிறது.

#உதாரணமாக வைகைப்புயல் வடிவேலின் நிலையை பார்ப்போம், அவர் என்ன சினிமா மார்க்கெட் இழந்தா வீட்டில் இருக்கிறார், தேர்தல் பிரச்சாரம் செய்தார், அது அவரது உரிமை, அவர் பாதிக்கப்பட்டப்போது தனக்கு அரசியல்ரீதியாக ஒரு ஆதரவு வேண்டும் என அப்போதைய ஆளுங்கட்சியிடம் உதவிக்கு சென்றார் ,அவரை பயன்ப்ப்படுத்திக்கொண்டார்கள், தேர்தல் முடிந்ததும் அவரும் தனது வேலையைப்பார்ப்பேன் என்றார்,ஆனால் ஏன் திரையுலகில் ஒருவரும் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லை, சில நாட்களுக்கு முன்னர் வடிவேலின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள், கதை விவாதத்தின் போதே வடிவேலுவை மனதில் வைத்தே சீன் பிடித்த இயக்குனர்கள் எல்லாம் திடீர் என  அவரை மறந்து போனது ஏன்?

ஆட்சியாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்தவரை பயன்ப்படுத்தி ஆளும்தரப்பை கோபப்படுத்தி விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை தானே, ஏன் லோகநாயகரே அவரது படத்தில் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லையே ,அப்போ எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தது எப்படி?

வடிவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனிப்பட்ட விரோதமாக கருதி அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கியது கேப்டனின் ஆட்கள் தானே, அதனால் தானே அரசியல் அடைக்கலம் தேடி போய், இப்போது பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அதே கேப்டன் இப்பொழுது கருத்து சுதந்திரம் ,அரசியல் பழிவாங்கல் என சொல்லி லோகநாயகருக்கு ஆதரவாக பேசுவது எந்த வகையில் சேர்த்தி?

#நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இடைஞ்சல்கள் வந்தப்போது லோகநாயகர் குரல் எழுப்பினாரா? இல்லையே ஆனால் அதனை கிண்டல் செய்து உன்னைப்போல் ஒருவனில் ஒரு காட்சி மட்டும் வைத்துக்கொண்டார்?

ஒரு நடிகர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகுவது அப்பொழுது காமெடியாக பட்டது ஆனால் இப்பொழுது அதே வேலையைத்தானே லோகநாயகர் செய்கிறார் :-))

காவலன் படம் வெளியிட பல சிக்கல்கள் உருவான போதும் முனை ஒடிந்த மன்மதன் அம்பாக கழக அரசியல் சக்தியிடம்  அல்லவா முடங்கி கிடந்தார் :-))

அவ்வளவு ஏன் வெகு சமீபத்தில் டொக்டர் விஜயின் துப்பாக்கிக்கு மார்க்கப்பந்துக்கள் பிரச்சினை கொடுத்தார்கள் ,அப்போதாவது வாயை தொறந்தாரா என்றால் இல்லை, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை, தலைவர் படத்துக்கு எதிர்ப்புன்னா தான் மதவாதம் கண்ணுக்கே தெரியும் :-))

அப்பொழுதெல்லாம் அரசியல் பழிவாங்கல் ,படைப்பாளியின் சுதந்திரம் பாதிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாமல் போன மாயம் என்னவோ?

# நான் கடவுள் படத்திற்கு முதலில் அஜித்தினை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆறுமாதமாகியும் படத்தயாரிப்பு துவங்கவேயில்லை, பின்னர் இந்த பாத்திரத்துக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு சொல்லிவிட்டு கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கினார்கள், இதெல்லாம் அனைவருக்குமே நன்கு தெரியும், ஆனால் இதே போல பிரமிட் சாய்மீரா "மர்மயோகி" என்ற படம் தயாரிக்க லோகநாயகரிடம் 14 கோடி அட்வான்ஸ் கொடுத்தது ,படம் எடுக்க இயலவில்லை என்றப்போது அட்வான்ஸ் கொடுத்தால் படம் எடுக்கணும் ,இல்லைனா திரும்ப கொடுக்க முடியாது என சட்டம் பேசினார்.

அப்படி எனில் அஜித்திடம் கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கியதை பற்றி ஏன் லோகநாயகர் கவலையே படவில்லை ஏதேனும் குரல் கொடுத்தாரா அப்போது இல்லையே? ஏன் எனில் நான் கடவுள் படத்தினை ஆரம்பத்தில் தயாரித்தது தேனப்பன், லோகநாயகரின் முன்னால் நிர்வாகி,நண்பர் எனவே மிரட்டியதை அறிந்தும் கண்டுக்காமல் இருந்தார்,அதுவே தனக்கு என்றால் சட்டப்படி பேசுவார் :-))

தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சூசு :-))

அப்படியிருப்பினும் இச்சூழலில் அஜித் ,லோகநாயகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அதே போலவே லோகநாயகரின் சந்தர்ப்பவாதங்களை புறந்தள்ளிவிட்டு அவருக்கு ஆதரவாக தான் நடுநிலையான தமிழக மக்களும் பேசிவருகிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் சற்றும் கணக்கில் கொள்ளாமல் தமிழகமே மதவெறிக்கொண்டுள்ளது, வசிக்க தகுதியற்று போய்விட்டது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் லோகநாயகர் பேட்டிக்கொடுத்துள்ளது, அவரது சுயநலத்தினையே காட்டுகிறது.

ஹி...ஹி எவ்வளவு தான் எங்களை கேவலப்படுத்தினாலும் நாங்க எல்லாம் உயிருக்கு உயிரான ரசிகர்கள் , எப்படியும் படம் பார்த்தே தீருவோம் எனவே தமிழ்நாட்டில் படம் ஓடவில்லை என்றாலும் பக்கத்து மாநிலத்துக்கு போயாவது பார்ப்போம் ஏன்னா நாங்க தமிழர்கள் ,தீவிர சினிமா அடிமைகள் :-))

ஹி...ஹி இம்புட்டு பேசினாலும் நானும் படம் பார்ப்பேனில்ல,ஏன்னா நானும் தமிழனாச்சே :-))

கொசுறு:

புதுவையில் படம் பார்க்கலாம்னு திட்டம் போட்டு சென்றேன்,அங்கு ரத்னா தியேட்டரில் பெரிய பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க, ஆனால் படம் தான் ஓடவில்லை அவ்வ் :-((

ரத்னா தியேட்டர்:


பேனர்.


அறிவிப்பு:


இப்படி ஒரு அறிவிப்பை வைத்துவிட்டு போஸ்டரே ஒட்டாமல் சமர் படத்தை வெற்றிகரமாக 20 ஆவது நாளாக ஓட்டிக்கிட்டு இருக்காங்க,அவ்வ்.

சமர் படத்தை பார்க்கலாம்னு நினைச்சா சப்பை திரிஷா கண்ணு முன்னால வரவே ,ரிஸ்க் எடுக்க மனமில்லாமல் நீராகாரம் சாப்பிட அருகில் இருந்த "நீராகார அங்காடி"யில் அடைக்கலமானேன் ,

(ஹி...ஹி டுபோர்க்ரூபம்!)

எறும்பு கடிச்சாப்போலவே இருக்கவே அடுத்த ஆட்டம் இது!

-----------------

பின் குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

இந்து ,தினமலர், விக்கி,கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------