Wednesday, May 24, 2006

சிப்பிக்குள் முத்து!



இந்த கவிதையை முன்னரே நான் வெளியிட்டேன் ஆனால் ஏனோ எனது வலைபதிவில் தெரியவே இல்லை எனவே மீண்டும் போடுகிறேன்.


கடலை விட்டுப் பிரிந்தாலும்

கடலோசையை சங்கு துறப்பதில்லை

உன்னை விட்டுப் பிரிந்தாலும்

உன் நினைவுகள் அலையடிப்பது ஓய்வதில்லை!

கடல் நீரின் உப்பு போல கலந்து விட்ட

நினைவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை!

கரையைத் தொட்டு தொட்டு செல்லும் அலைகள்

கடலை விட்டு விலகி செல்வதில்லை

ஒவ்வொரு அலைகளும் மணல் வெளியில்

பதிந்து விட்ட கால் தடங்களை அழித்து சென்றாலும்

என் மன வெளியில் அழிவதில்லை உன் நினைவு தடங்கள்!

மனக்கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் முத்தென

உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்குகிறேன்!

5 comments:

நரியா said...

வணக்கம் வவ்வால்.
அருமையான கவிதை!

//கடல் நீரின் உப்பு போல கலந்து விட்ட

நினைவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை!//

கடல் நீரின் உப்பைக் கூட தனியே பிரித்து விடலாம். மனதிலே இருக்கும் நினைவுகளை பிரிக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.

வவ்வால் said...

நன்றி நரியா!

பிரிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது இறுதிவரை எண்ணங்களை சுமந்தே செல்ல வேண்டும் ஆனால் அதன் சுமை வெளிப்பார்வைக்கு தெரியாது!

இளைப்பாற said...

its very good..romba nalla erukka

உண்மைத்தமிழன் said...

வவ்ஸ்..

என்ன திடீர்ன்னு கவிதை..

ஆஹா.. இந்த ஒரு ஏரியாவைத்தான் விட்டு வைச்சிருக்கீகன்னு நினைச்சேன்.. அதுலேயும் மண்ணா..? நல்லா இரு சாமி..

'ஆட்டோகிராப்' படத்தை பார்த்தவுடனே எழுதினதா..?

புரியுது..

வவ்வால் said...

இளைப்பாற,
நன்றிங்க , பழைய பதிவை எல்லாம் தோண்டி எடுத்து கமெண்ட் போடுறிங்களே , நீங்க என்ன அகழ்வாராய்ச்சியாளரா :-))

---------------------------
உண்மைத்தமிழர்,

இதெல்லாம் ஆரம்ப காலத்தில் எழுதியது , கவித என்பது எனக்கு கம்மர் கட் சாப்பிடுறடு போல, இயல்பா வரும் :-)) இப்போ இளைப்பாற என்பவர் திடீர்னு அவதரித்து இதைப்படிச்சு கமெண்ட் போட்டு இருக்கார்!அதான் மேல வந்திருக்கு

//posted by வவ்வால் at 7:50 AM on May 24, 2006//

பதிவு போட்ட நாள் பார்க்கவில்லையா ?

எல்லாம் சொய ஆட்டோகிராப்பு தான் :-))