Wednesday, July 11, 2007

பெயரின் மறுபக்கம்!

1)P.T.உஷா - "பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் ".உஷா

2)S.P.பால சுப்ரமணியம் - " ஷ்ரிபதி பண்டித ராயுல ".பாலசுப்ரமணியம்.

3)K.J.ஏசுதாஸ்- "கட்டசேரி ஜோசப்". ஏசுதாஸ்.

4)A.R. ரஹ்மான் - "அல்லா ரக்கா. ரஹ்மான்" (அ) A.S. திலிப் குமார்

5)M.S.சுப்புலஷ்மி - மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி

6)மனோ - நாகூர் பாபு

7)P.B. ஷ்ரினிவாஸ் - "பிரதிவாதி பயங்கரம் "ஷ்ரினிவாஸ்

8)மணிரத்னம் - "கோபால ரத்னம்" சுப்ரமணியன்

9)பாரதி ராஜா - P.சின்னசாமி

10)K.பாலசந்தர் - கைலாசம் பாலசந்தர்

11)சிரஞ்சீவி - கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.

12)N.T.ராமா ராவ் - "நந்த மூரி தாரக".ராமராவ்

13)S.V.ரங்கா ரவ் - "சாமர்லா வெங்கட்ட" ரங்கா ராவ்

14)T.R.பாப்பா - சிவசங்கரன்

15)L.R. ஈஷ்வரி - "லூர்து மாரி" ஈஷ்வரி

16)S.G. கிட்டப்பா - செங்கோட்டை கங்காதர கிட்டப்பா

17)M.R.ராதா - மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.

18)சின்னி ஜெயந் - கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.

19)V.V.S.லஷ்மண் - வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்

20)கவாஸ்கர் - சுனில் மனோகர் கவாச்கர்

21)கபில் தேவ் - கபில் தேவ் ராம்லால் நிகாஞ்

இன்னும் பல பெயர்களின் பின்புலம் பற்றி தேடிக்கொண்டுள்ளேன் , தெரிந்தவர்கள் கூறலாம் , உதாரணமாக ,எம்.எஸ்.விச்வநாதன், எம்.கே.டி., டி.எம்.சவுந்தர் ராஜன் போன்றோரின் பெயர்களுக்கு.

24 comments:

J S Gnanasekar said...

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதுதான் சரியென நினைக்கிறேன். சண்முகவடிவு என்பது அவரின் தாயாரின் பெயர் எனவும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

-ஞானசேகர்

வவ்வால் said...

ஞானசேகர் ,

வருகைக்கு நன்றி ,

விக்கி பீடியாவில் இருந்து எடுத்து போட்டேன் , நீங்கள் சொன்னது கூட சரியாக இருக்கலாம் , பார்ப்போம் வேறு யாராவது இதையே சொல்கிறார்களா என்று!

துளசி கோபால் said...

ஞானசேகர் சொன்னது சரி.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

வவ்வால் said...

வாங்க துளசி கோபால்,

அப்படியா தனது MS தாயார் பெயரைத்தான் வைத்துள்ளார்களா? வித்தியாசமனவர்கள்.

TMS இன் பெயரில் வரும் M க்கு கூட மீனாட்சி அய்யர் என்று வரும் அது அவர் தந்தை பெயர் , அப்படி இருக்கும்.

பத்மா said...

mothalla ushava lol.

வவ்வால் said...

வாங்க பத்மா!

ஹே ...ஹே ஆமாம் ஏதோ நம்மால் ஆனது!

Anonymous said...

Mamutty - Mohammed Kutty

I follow j.s.ganasekar - its Madurai Shanmugavadiu Subbulakshmi. ( ref: Life of Music by antony )

வவ்வால் said...

அடியா,
நன்றி.பலரின் பெயர்கள் போடாமல் விடுபட்டது , அதனால் தான் மம்முட்டி போன்றவர்கள் குறித்து போடவில்லை.விரைவில் இன்னும் கொஞ்சம் பெயர்கள் போடுகிறேன்.

சதுக்க பூதம் said...
This comment has been removed by the author.
சதுக்க பூதம் said...

jani,marx,maruthaiyan...?- what is the real name?

கைப்புள்ள said...

நல்ல தொகுப்பு வவ்வால் அவர்களே, இவ்வரிசையில்
1. முன்னாள் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி - வராஹகிரி வேங்கட கிரி

2. நாகேஷ் - குண்டு ராவ் பின்னாளில் பீட்டர் நாகேஷ்

3. ரமண மகரிஷி - வெங்கட ரமணன்

கைப்புள்ள said...

4. எம்.கே தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்.

இங்கே பாருங்க
http://raja1630.tripod.com/mktb/id1.html

கைப்புள்ள said...

கண்டுபிடிக்கனும்னு தேட ஆரம்பிச்சா நெறைய இருக்குங்க

வி.கே.ராமசாமி
எஸ்.ஜி.கிட்டப்பா
பி.யு. சின்னப்பா
எம்.எல்.வசந்தகுமாரி

அப்புறம் எனக்கு தெரிஞ்சு எல்.ஆர்.ஈஸ்வரி - லூர்து ராஜேசுவரி.
ராஜேசுவரியைப் பிரிச்சு ஆர்.ஈஸ்வரி ஆக்குனதா அவங்களே ஒரு பேட்டியில சொல்லிருக்காங்க.

வவ்வால் said...

சதுக்கபூதம்,
அதெல்லாம் விஸ்கி,வொட்கா,பட்ட சாராயம் பேரா, எதுக்குய்யா என்னை புடிச்சு வம்புல மாட்ட பாக்குறிங்க!

வவ்வால் said...

வாங்க கைப்புள்ள,
நன்றி,
பல நல்ல பெயர்களை சொல்லி இருக்கிங்க, தெரியாதவற்றுக்கும் எப்படியாவது கண்டுபிடித்து போட தூண்டுகிறது, உங்களின் ஆர்வம்.

L.R.ஈஸ்வரிக்கு ஏற்கனவே பெயர் காரணம் போட்டுள்ளேன் பாருங்க.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
என்ன??விக்கிமீடியாவை நம்ப முடியாது போல இருக்கே!!
எம்.எஸ் அம்மாவுக்கு ஞான சேகர்,துளசியக்கா கூறியதே,சரி
எல். ஆர். ஈஸ்வரியும்..லூர்து மேரி ராஜேஸ்வரியே..
வி.சி.கணேசன்..விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன்..நம்ம நடிகர் திலகம் சிவாஜி
s.w.r.d.bandaranayaka-Soloman William Richard Deias Bandaranayaka-தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்து இலங்கையை இந்த நிலைக்கு ஆக்கிய முன்னாள் பிரதமர்
J.R.Jeyawardana-Julies Richard Jeyawardana- போர் எனில் போர்-சமாதானமெனில் சமாதானம் என ராஜீவையும் கூப்பிட்டு துப்பாக்கிப் பிடியால் அடிவாங்கிக் கொடுத்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி..என்ன??இவங்க பெயர் ஆங்கிலமாக இருக்கெனப் பார்க்கிறீர்களா??இவர்கள் கிருஸ்தவர்களாக மாறி வெள்ளையனிடம் பயனடைந்து,பின் பௌத்தச் சிங்களவரை ஏமாற்ற மீண்டும் பௌத்த வேசம் போட்டு இலங்கையைச் சீரளித்தவர்கள்.
S.J.V.Selvanayagam- Savier.Jemes.Velllupillai.Selvanayagam -தமிழரசுக் கட்சி ஆரம்ப கர்த்தா. தமிழர் கூட்டணித் தலைவர் தந்தை செல்வா எனக் பெருமைப்படுத்தப்பட்டவர்.

வெற்றி said...

வவ்வால்,
M.G.இராமச்சந்திரன்
T.M.செளந்தரராஜன்
M.N.நம்பியார்
P. சுசீலா
S.ஜானகி
P.S.வீரப்பா

இவற்றிற்கும் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ! :-))

யோகன் அண்ணை:
/* S.J.V.Selvanayagam- Savier.Jemes.Velllupillai.Selvanayagam -தமிழரசுக் கட்சி ஆரம்ப கர்த்தா.*/

நீங்கள் மேலே சொல்லியுள்ளது தவறு.

S.J.V.Chelvanayakam [1898-1977] = Samuel James Veluppillai Chelvanayakam.

செல்வநாயகத்தை தமிழில்
சா.ஜே.வே. செல்வநாயகம் என்றே அழைப்பர்.

வவ்வால் said...

யோகன் வாங்க ,
பல புதிய தகவல்களும் அளித்துள்ளீர்கள் , இப்படி கிடைக்கும் பெயர்களை எல்லாம் சேர்த்து தனியே ஒருப்பதிவிடலாம் போல உள்ளது.

வவ்வால் said...

வெற்றி,
நன்றி,

எம்.ஜி,ஆர், பற்றிலாம் தெரிந்த பெயர்கள் தெரிய பெயர்கள் என்று ஒரு பதிவில் பேசும் போது குறிப்பிட்டாயிற்று.

T.மீனாட்சி அய்யர்.செளந்தர்ராஜன் என்று வரும்.

நம்பியார், வீரப்பாவிற்கு எல்லாம் தேடணும் , கிடைத்தால் போட்றலாம்.
மற்றவர்கள் பெயர் எல்லாம் ஓர் எழுத்தில் அவர்கள் இனிசியம் மட்டும் தானெ இருக்கு.

நீங்கள் தமிழில் சொன்னாலும் அது யோகன் சொன்ன பெயர் தானே!
//S.J.V.Selvanayagam- Savier.Jemes.Velllupillai.Selvanayagam -தமிழரசுக் கட்சி ஆரம்ப கர்த்தா. தமிழர் கூட்டணித் தலைவர் தந்தை செல்வா எனக் பெருமைப்படுத்தப்பட்டவர்.//

வெற்றி said...

வவ்வால்,
மிக்க நன்றி.

/* நீங்கள் தமிழில் சொன்னாலும் அது யோகன் சொன்ன பெயர் தானே! */

இல்லை வவ்வால். யோகன் அண்ணர் சொன்னது Savier என்று. அதுதான் தவறு என்றேன். அது Savier அல்ல Samuel என்று.

/* எம்.ஜி,ஆர், பற்றிலாம் தெரிந்த பெயர்கள் தெரிய பெயர்கள் என்று ஒரு பதிவில் பேசும் போது குறிப்பிட்டாயிற்று.*/

அப் பதிவிற்கான சுட்டி இருக்கிறதா உங்களிடம்? ஆட்சேபனை இல்லையெனின் உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து சொல்ல முடியுமா?

/* T.மீனாட்சி அய்யர்.செளந்தர்ராஜன் என்று வரும்.*/

T எந்த முதலெழுத்தைக் குறிக்கிறது என்று சொல்லவில்லையே!

TMS அவர்கள் பற்றிக் குமரனிடம் கேட்கலாம் என நினைக்கிறேன். குமரன் TMS இன் உறவினர் என சில காலங்களுக்கு முன் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

வவ்வால் said...

வெற்றி,
நன்றி,

மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பது தான் எம்.ஜி.ஆரின் விரிவாக்கம்.

சாமுவேல் , சேவியர் ஆகிவிட்டதா , அப்போ சரி ,! நான் சரியாக கவனிக்காமல் இரண்டும் ஒன்று என நினைத்துவிட்டேன்.

//TMS அவர்கள் பற்றிக் குமரனிடம் கேட்கலாம் என நினைக்கிறேன். குமரன் TMS இன் உறவினர் என சில காலங்களுக்கு முன் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.//

அப்படியா ஆச்சரியமான தகவல்!

அப்போ விளக்கம் கேட்டுற வேண்டியது தான்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
செல்வநாயகம் பற்றி வெற்றி கூறியதே சரியானது.
கே.பி.சுந்தராம்பாள்-கொடுமுடி பாலாப்பாள் சுந்தரம்பாள்
பி.யு.சின்னப்பா-புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா

Anonymous said...

anne ennoda peyaraiyum podunga

jansi kannan said...

L.R.ஈஸ்வரி − லூர்து மேரி (லூர்து மாரி அல்ல) என்பதே.