Wednesday, August 15, 2007

கொசு வி(மி)ரட்டும் வர்த்தி!


இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரணம் கிடைத்தாலும் . அதன் பின் விளைவுகளை யாரும் அறியவில்லை. கொசுவர்த்தியில் மறைந்து இருக்கும் பயங்கரம். என்ன?

கொசுவர்த்திகளில் கொசு விரட்டும் காரணிகளாக செயல்படும் வேதிப்பொருட்கள் என்ன ,

*சிந்தெடிக் D அல்லித்ரின்
*ஆக்டோ குளோரோ - டை- ப்ரோபைல் ஈதர் அல்லது s-2
இவை எரியும் போது ஏற்படும் வேதி வினையால் உருவாகி வெளியிடும் வேதிப்பொருள் பை - குளோரோ மெதைல் ஈதர்

இந்த வேதிப்பொருட்களை தொடர்ந்து மூடிய அறையில் இரவு முழுவதும் சுவாசித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து ,மேற்கொண்ட வேதிப்பொருட்களை கொசுவர்த்தியில் பயன்படுத்த தடை விதிக்க செய்துள்ளார்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில்.

ஆனால் இந்தியாவில் இப்ப்டி எந்த தடையும் இது வரை கொண்டு வரவில்லை. நாம் தினசரி கொசுவர்த்தி புகையினை இன்பமாக நுகர்ந்து வருகிறோம்!

இந்த வேதிப்பொருட்கள் ஒரு பக்கம் தீங்கு விளைவிக்கிறது என்றால் , கொசுவர்த்தி சுருளின் அளவுக்கு ஏற்ப ஒரே ஒரு கொசுவர்த்தீ எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் என்பது கீழே கொட்டும் சாம்பல் அல்ல நுண்ணிய காற்றில் மிதக்கும் சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய் and cancer போல நோய்கள் வரலாம்.

மேலும் கொசு வர்த்தி எரிவதனால் ஃபார்மல் டி ஹைட் என்ற வேதிப்பொருளும் பக்க விளைபொருளாக வரும்.

கொசுவை விரட்ட என்று காசு கொடுத்து கொசு வர்த்தி வாங்க போய் என்னவேல்லாம் இலவசமாக கிடைக்கிறது பாருங்கள்.

அப்படி என்றால் கொசுவிடம் இருந்து தப்பிக்க என்ன தான் வழி.

1)கொசு உற்பத்தி ஆகும் இடங்களிலே அழிப்பது,
2)கொசு உருவாகாமல் சுத்தமாக சுற்று புறத்தினை வைத்துக்கொள்வது.
3)கொசு வலை பயன்படுத்துவது.

35 comments:

Thekkikattan|தெகா said...

வாவ் வவ்வால்,

நல்ல ஆராய்ச்சி. இதுவும் மிகவும் காலத்திற்கு அவசியமான தெரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம்.

நான் யோசிப்பதுண்டு சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும் பொழுதெல்லாம், சாப்பிட்டு விட்டு ஒரு வாழைப்பழத்தை உரித்து உள்ளே தள்ளிவிடுவதைப் போன்று, படுப்பதற்கு முன்பு மக்கள் இந்த கொசு(கொல்லு)வர்த்தி சுருளை ஒரு சிறிய அறையில், மூடப்பட்ட கதவுகளுடன் படுத்துறங்கிறார்களே இவர்களுக்கு எது போன்ற சிக்கல்கள் உண்டு என்பதனைப் பொருட்டு.

என் பொற்றோர்கள் கிரமாமப்புரங்களிருப்பதால் இது போன்ற கொசுவர்த்தி நம்பி இரவைக் கழிக்கும் நிலையில் இல்லை. ஆனால், இது ஒரு பயங்கரம்.

ஏன் பெரிய அளவில் மீடியாக்களின் மூலமாக இது பேசப் பட்டு இதற்கு ஒரு மாற்று வழி காணக் கூடாது? பாவம்ய்யா மக்கள்!!

நன்றி!!

வவ்வால் said...

தெ.கா,

நன்றி, உண்மையில் கொசுவர்த்தி என்பது கொசுவை உடனே விரட்டும் நம்மை மெதுவாக கொல்லும் ஒரு விஷம்ம். அரசிற்கு இதை எல்லாம் கவனிக்க ஏது நேரம். மேலும் கொசுவர்த்தி தயாரிப்பாளர்கள் என்ன பொட்டிகடை போன்ற சிறு தொழில்காரர்களா,
எல்லாம பன்னாட்டு முதலைகள். அவர்களுக்கே தெரியும் அமெரிக்காவில் "FDA" தடை செய்யப்பட்டது என்று ஆனலும் இங்கே அப்படி சட்டம் இல்லையே அப்புறம் என்ன என்று கேட்பார்கள்.

மீடியா எல்லாம் பேசினா ஒட்டு மொத்தமா கூவிக்கிட்டு வரும் இல்லைனா சத்தமே காட்டாது.

நமக்கு நாமே திட்டம் தான் இதில் போடனும்!

மாசிலா said...

//ஆனால் இந்தியாவில் இப்ப்டி எந்த தடையும் இது வரை கொண்டு வரவில்லை. நாம் தினசரி கொசுவர்த்தி புகையினை இன்பமாக நுகர்ந்து வருகிறோம்!//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! நம்ம சுதந்திர இந்தியாவில இந்த உரிமைகூட இல்லைன்னா அப்புறம் என்னங்க!

இது போல கொசு வத்தி வாங்கி உபயோகிக்கிறவங்க அதிகபட்சமானவங்க எழைங்க. ஓஹோ ஒரு வேளை இப்படித்தான் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்கறதா!

ஆஹா, அப்துல் கலாம் ஐயா, இங்கே பாருங்க உங்க தோஸ்துங்கள! இவங்கள மாதிரி ஆளுங்களதான் நீங்க இவ்ளோ காலம் தேடிக்கிட்டு இருந்தீங்க.

இந்த மாதிரி கொசு வத்தி உற்பத்தி செய்றவங்க, இது போல தங்களுடைய வாடிக்கையாளர்களை பொழுதோட விஷம் வெச்சி சாவடிச்சிட்டா அப்றம் அவங்க தொழில் படுத்துடுமே! இதுக்காகவாவது கொஞ்சம் யோசித்து நல்ல விஷம் இல்லாத வேறு மாற்று வழி கண்டுபடிச்சி கொசுவ மட்டும் சாகடிக்கிற முறைய செய்வாங்கனு நம்புவோம்.

தயவு செய்து பாவப்பட்ட மக்கள விட்டுடுங்கைய்யா!

அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு வவ்வால். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

வவ்வால் said...

மாசிலா நன்றி!

வேதனையையும் அருமையாக நகைச்சுவையா சொல்லிவிட்டீர்கள். க்சுவர்த்தி புகையினால் உடனே யாரும் சாவதில்லை , எனவே எதனால் செத்தார் என சொல்ல முடியாது அதை வைத்தே தப்பித்துக்கொள்கிறார்கள். கொசுவர்த்தி விளைவால் கொஞ்சம் பேரு மண்டையை போட்டால் அடுத்து அவங்க வாரிசுகள் இருக்காங்களே அவங்க கொசுவத்தி வாங்குவாங்கனு நம்பிகைல தான் கொசுவத்தி காரங்களும் தைரியமா விற்கிறாங்க :-))

மக்களாய்ப்பார்த்து இதை எல்லாம் புறக்கணிக்கனும் !

மாசிலா said...

//மக்களாய்ப்பார்த்து இதை எல்லாம் புறக்கணிக்கனும் !//

சரியா சொன்னீங்க வவ்வால். ஆனால் இந்த விசயங்கள மக்களின் அறிதலுக்கு கொண்டுசெல்ல வேண்டும். இதற்கு என்ன செய்ய போகிறோம்?

ஊடகங்கள் இதை கவனிக்கப் போவதில்லை. ஏனென்றால் இதனால் அவர்களுக்கு வருமானம் எதுவும் கிட்டப்போவதில்லை.

நாம், அதாவது இன்றை இணைய பதிவுலக அன்பர்கள் நினைத்தால் ஏதாவது சாதிக்க முடியுமா?

சிவபாலன் said...

Excellent Post!

Thanks

Thekkikattan|தெகா said...

மாசிலா,

நாம், அதாவது இன்றை இணைய பதிவுலக அன்பர்கள் நினைத்தால் ஏதாவது சாதிக்க முடியுமா?//

கண்டிப்பாக முடியும். இந்த பட்டறைகளை கொஞ்சம் விரிவுப் படுத்தி கிரமப்புறங்களிலும், நகர்ப்புரங்களிலும் இதனைப் பற்றி பேச வேண்டும். மீடியாக்களும், அந்த கொசுவர்த்தி சுருளின் டிஸ்ட்ரிபுயூட்டர்களின் கவனம் உடனடியாக நம்மீது திரும்பும். பிறகென்ன தரும அடியும், உடனடியாக மக்களுக்கு மெஸேஜ்யும் ஒரே நேரத்தில் பரவும் (this is what, what we call activism).

ஆனால் முடியும். அதுக்காக நீ என்னடா தெகா நொட்ரேன்னு என்னய திரும்ப கேக்கக் கூடாது. போனதடவை நான் அங்கே இருந்தப்ப பக்கத்து அரசாங்கப் பள்ளிகளில் சிறப்பு அனுமதி பெற்று இந்த கொசு ஒழிப்பும், சுற்றுப் புற தூய்மை பேணுதலையும் ஒரு சிறு Eco-clubவுடன் இனைந்து செய்தோம்.

நன்றி!

மாசிலா said...

//கண்டிப்பாக முடியும். இந்த பட்டறைகளை கொஞ்சம் விரிவுப் படுத்தி கிரமப்புறங்களிலும், நகர்ப்புரங்களிலும் இதனைப் பற்றி பேச வேண்டும். //
ஆஹா! இதுதான் சார் வேண்டும். இந்த சமூக சேவை செய்கிற உணர்வு இருந்தாலே மீதி எல்லாமே தன்னால வந்திடும்.

நான் கூட எனது வெளிநாட்டு வாழ்க்கையை வெகு சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு சொந்த என் மூதாதையர்கள் மண்ணில் தேவைப்பட்ட மக்களுக்கு நிறைய சமூக சேவைகளில் இறங்கறதா முடிவு செய்ஞ்சிட்டேன்.

விரைவில் சந்திப்போம் வவ்வால்.

மாசிலா said...

வவ்வால் சார் உங்க வலையில மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு உடனடியா செய்யுங்க.

Thekkikattan|தெகா said...

ஹும், மற்றொன்றும் இத் தருனத்தில் சொல்லிக் கொள்கிறேன். கடந்த முறை நமக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் (பரவலாக படிக்கப்படுகின்ற ஒரு நாளிதழில்) கொஞ்சம் இடம் ஒதுக்கி நம்மைப் பற்றி எழுதியிருந்த பொழுது எப்படி இந்த அக்டிவிசம் இந்தப் பதிவுகளில் ஓரளவிற்கேனும் தலையெடுக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கலாம்.

வெறும் மொக்கைப் பதிவுகளும், கும்மிப் பதிவுகளும் மட்டுமே காரசாரமாக இங்கே ஓட்டப் பட்டுக் கொண்டிருக்கப் படுகிறது என்று முதல் பக்கத்தில் ப்ரெஜெக்ட் பண்ணி காமித்ததைக் காட்டிலும், இது போன்ற நல்ல விசயங்களும் அலசப் பட்டுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கலாமோவென்று.

எனக்கென்னமோ, மற்ற வெகு ஜன ஊடகங்களைக் காட்டிலும் இது போன்ற தனிப்பட்ட வலைப்பதிவர்கள் ஆழ்ந்து உண்மையை உண்மையாக கூறும் விசயங்களில் நிறைய நம்பிக்கை இருக்கிறது. நாம் ஒரு அருமையான வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம். என்ற வருத்தம் எனக்குண்டு.

மாசிலா said...

Thekkikattan|தெகா //நாம் ஒரு அருமையான வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம். என்ற வருத்தம் எனக்குண்டு.//

மனசு தளர்ந்துடாதீங்க தெகா. வவ்வால் சொல்வத போல் மனசு வைத்து நல்ல திட்டங்கள் தீட்டி எதையும் சாதிக்கலாம்.

என்னை பொறுத்தவரை இந்த மொக்கை கும்மி பதிவுகளை பற்றி எந்த வெறுப்பும் எனக்கு இல்லீங்க. இந்த சுதந்திரம்கூட இல்லைன்னா நல்லா இருக்காது.

வவ்வால் said...

ஆகா , இப்படிலாம் பதிவ போட்ட படிக்கா யாரும் வர மாட்டங்கனு நான் யோசிப்பதுதுன்டு... ஆனா தெகா, மாசிலா ஆர்வத்தை பார்த்தா உண்மையாவே புல்லரிக்குதுங்க... நன்றி தெ.கா. மாசிலா.

மாசிலா, எனக்கு இந்த மட்டுறுத்தல் மீது துளி கூட உடன்பாடு இல்லை இரண்டு ஆண்டுக்கு முன்னரே இதை எதிர்த்து குரல் கொடுத்தேன். மறு மொழி திரட்டியில் கூட இதனால் சேராமல் இருந்தேன். ஒரு 15 நாட்களுக்கு முன்னர் தான் அப்படி பட்ட மட்டுறுத்தல் இல்லாமலே மறு மொழி திரட்டியில் வரும் என குமரன் சொன்னார் அதன் பின்னரே சேர்ந்தேன்.நன்றி குமரன்!

சரி மாசிலா மட்டுருத்தும் அளவிற்கு இப்போது இங்கே யார் என்ன தவறாக சொல்லிவிட்டார்கள்?

தெ.கா நீங்கள் முன்னரே கொசுவர்த்தி சுருல் பர்றிய விழிப்புணர்வில் ஈடுபட்டு செயல்பட்டுள்ளீர்களா , சிறந்த செயல் அது! பாராட்டுக்கள் தெ.கா.!

மாசிலா!

உங்கள் ஆர்வம் என்னை போல வெண்ணை வெட்டிகளை வெட்கி தலை குனிய வைக்கிறது! பாராட்டுக்கள் மாசிலா!

ஓகை said...

விவசாயத்தைப் பற்றி அருமையாக அலசிக் கொண்டிருக்கும் தெக்கா, வவ்வால், செல்வன் மூவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததை ஒரு கதையாக வடித்திருக்கிறேன்.
கிருஷ்னமூர்த்திக்கு ஜே!

படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

வவ்வால் said...

ஓகை சார்,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! உங்கள் கதையை படித்தேன் அது குறித்து எனக்கு மாற்று கருத்துள்ளது அதனை உங்கள் பதிவில் சொல்கிறேன்!

தங்கள் ஊக்கத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

Anonymous said...

கொசுவத்தி போட்டதும் தும்மல் வந்துரும். அதனால பெரும்பாலும் உபயோகிச்சதேயில்ல. அது எவ்வளவு நல்லதாப்போச்சு பாருங்க‌

வவ்வால் said...

வாங்க சின்ன அம்மினி,

நல்ல வேலை தப்பிச்சிங்க! நான் கூட திரவ கொசுவர்த்தி கொஞ்சம் நேரம் போட்டுவிடு பின்னர் நிறுத்திவிட்டு , ஜன்னல்களை மூடி விட்டால் கொசு எல்லாம் ஓடி இருக்கும் புதிய கொசுவும் வராது,பின்னர் தான் தூங்குவேன் , தூங்கும் போது எல்லாம் பயன்படுத்திக்கொண்டே இருக்க மாட்டேன்.i try to avoid this kind of use also!

ரசாயனம் ஒரு பக்கம் இருக்க கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தினால் வரும் புகையினால் புகை பிடிப்பதை விட அதிகம் அபாயம் உள்ளது

Nakkiran said...

mmm.. interesting points..

Thanks a lot

வெற்றி said...

நல்ல பதிவு. அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

jeevagv said...

கொசுகள் பொதுவாக மாலை நேரம் இரண்டு மணி நேரம்தான் அதிகமாக இருக்குமாம். அந்த நேரத்தில் கதவுகளை மூடிக்கொண்டு வீட்டுக்குள் அவை அண்டாமல் தடுத்தாலே போதுமானது.

நகரங்களில் பொதுவாக மேட் தான் பயன் படுத்தப் படுகிறது. இதில் புகை இல்லை.

வவ்வால் said...

நன்றி,
சிவ பாலன் , மன்னிக்கவும் உங்கள் பின்னூட்டத்தை உடனே கவனிக்கவில்லை!

வவ்வால் said...

உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

நக்கீரன், வெற்றி!

வவ்வால் said...

வாங்க ஜீவா ,

நன்றி!

கொஞ்ச நேரம் தான் கொசு வரும் என்பது ஒரு வகையில் ஏற்றுக்கொண்டாலும் , ஜன்னல்கள் திறந்து இருந்தால் எப்போது வேண்டுமானாலும் வரும்.

மேட்களில் புகை வராது என்றாலும் அதே ரசாயனம் தான் பயன்படுத்த படுகிறது. எனவே அதுவும் தீங்கு விளைவிக்கும் , ஆனால் கொசுவர்த்தி சுருளால் வரும் புகை தீமைதான் குறையும்.மூடிய அறைக்குள் அதனை சுவாசித்தால் மேலும் தீவிரம் கூடும்.

எனக்கு தெரிந்து நகரத்திலும் பலர் இன்னும் கொசு வர்த்தி பயன்படுத்துகிறார்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
ஈழத்தில் என் இளமைக்காலத்தில் மழைகாலம்,நுளம்புக் காலம் அந்தக் காலத்தில் வீட்டில் புகைச்சட்டி போடுவது வழமை அதாவது நெருப்புத் தணலில் வேம்பமிலை, கஞ்சாந்தகரை, பாவட்டை போன்ற இலைகள் போடுவார்கள். இவை பாதுகாப்பானவை.
ஆனால் இன்றைய நவீனமயம் காசு கொடுத்து நோயை வாங்குகிறது.இவை தரும் நோய்கள் நுளம்புக் கடியிலும் கொடியவை என்பதை அறியாது வாழ்வது ,நம் மக்களின் அறியாமை.
சென்னை வந்த போது நுளம்புத் தொல்லை அதிகமென்பதை உணர்ந்தேன். ஆனால் இதைப் பாவிக்கவில்லை.
ஒரு நண்பர் நகைச்சுவையாகக் கூறினார். இப்புகையில் நித்திரையை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது போல அதனால் பாவிப்பவர்கள் ஆழ்ந்து உறங்க நுளம்பு தன் அலுவலைப் பார்த்துவிட்டுப் போய் விடுவதாக.
இந்தக் கூற்று உண்மைபோல் தான் உள்ளது.
இன்றைய செய்தி சீனாவில் செய்த பொம்மையில் பூசிய வர்ணத்தில் விசத் தன்மையுள்ளதென, அமெரிக்கச் சந்தையில் இருந்து முற்றாக எடுக்க நடவடிக்கை எடுத்துவிட்டதாக, ஆனால் நம் நாடுகளில் இவற்றைக் கண்டு கொள்ளுகிறார்களே இல்லை.
விழிப்புணர்ச்சி குறைவாகத் தான் உள்ளது.

வவ்வால் said...

//வீட்டில் புகைச்சட்டி போடுவது வழமை அதாவது நெருப்புத் தணலில் வேம்பமிலை, கஞ்சாந்தகரை, பாவட்டை போன்ற இலைகள் போடுவார்கள்.//

யோகன் நன்றி!

நீங்கள் சொன்னது போல இயற்கையானவற்றை பயன்படுத்தினால் தீங்கு இல்லை தான். ஆனால் அப்படி சட்டியில் நெருப்பு வைத்து புகை போட்டால் அதை நாகரீகம் இல்லை என்பார்கள் இக்காலத்தில்.

இந்த புகை போடுவதை நான் எனது கிராமத்தில் பார்த்து இருக்கிறேன், அப்போதெல்லாம் நினைத்துகொள்வேன் கொசு வர்த்தி வாங்க காசு இல்லாமல் இப்படி செய்கிறார்கள் என!
இப்போது தானே தெரிகிறது நம்மோட படிச்ச அறியாமை!

இதில் வேப்பம் இலை தவிர மற்ற இரண்டும் என்னவென்று தெரியவில்லை எனக்கு.

//சீனாவில் செய்த பொம்மையில் பூசிய வர்ணத்தில் விசத் தன்மையுள்ளதென, அமெரிக்கச் சந்தையில் இருந்து முற்றாக எடுக்க நடவடிக்கை எடுத்துவிட்டதாக//

என்ன ஒரு ஒற்றுமை சீனாவில் இருந்து வரும் கொசு வர்த்தியில் தான் தடை செய்யப்பட்ட நச்சு அதிகம் என அமெரிக்காவில் தடை செய்ததாக வலையில் கொசுவர்த்தி குறித்து தேடியபோது படித்தேன். அது பதிவுக்கு சம்பந்தம் இல்லை என குறிப்பிட வில்லை!

இப்போது பொம்மைகள், ஆனால் இப்படி எல்லாம் நம்ம நாட்டில எதையும் ஆராய்வதே இல்லை வெளி நாட்டில் இருந்து சாக்கடையை புட்டியில் அடைத்து அனுப்பினாலும் தீர்த்தம் என்பார்கள்!

Thekkikattan|தெகா said...

ஆனால் இப்படி எல்லாம் நம்ம நாட்டில எதையும் ஆராய்வதே இல்லை வெளி நாட்டில் இருந்து சாக்கடையை புட்டியில் அடைத்து அனுப்பினாலும் தீர்த்தம் என்பார்கள்! //

:-))))

Anonymous said...

சாக்கடையை புட்டியில் அடைத்து அனுப்பினாலும் தீர்த்தம்் என்பார்கள்!
வழுக்கியிருக்கீர்கள்...வவ்வால்
தீர்த்தம் மாதிரி வேறு வார்த்தை கிடைக்கவில்லையா?
மனது சங்கடப்படுகிறது.

koothanalluran said...

ஈராண்டுகளுக்கு முன் ஜூ.வி யில் படித்தது, கொசு விரட்டும் வர்த்தி அதிகமாக விற்பனையாக வேண்டுமென்பதால் சென்னையில் இருக்கும் சில கொசுவர்த்தி தயாரிப்பாளர்கள் கூவம் நதியில் கொசு முட்டைகளை தூவுகிறார்கள் எனப் படித்தேன்.
பி.கு ஜூ.வி சில விஷயங்களை ஹேஷ்யமாகவே எழுதும்.

வவ்வால் said...

தெ.கா,

உண்மை அதானே , வெளிநாட்டு சரக்குனா தனி மருவாதி தானே நம்ம ஊருல!(burma bazarla dublicate saraka vaankuRaangkaLee makkals)

வவ்வால் said...

அனானி அய்யா,

தீர்த்தம் அதிகமா போய் வழுக்கிட்டேன் :-))

இப்போ தீர்த்தம் என்பதில் என்ன பெரிய குற்றம் கண்டிங்க? ஒரு பொண்ணு குளிச்ச தண்ணிய தீர்த்தம் என்று குடிப்பேன்னு ஒரு பாட்டில் வைரமுத்து எழுதி இருக்கார் அவர் கிட்டே போய் வழுக்கிட்டிங்க சொல்விங்களா அப்போ?

வவ்வால் said...

கூத்தலுரான் ,
நன்றி!

கூவம் இருக்கும் நிலைக்கு அதில் தனியாக கொசு முட்டைகளை வேறப்போடனுமா :-))
கூவம் இருக்கும் வரைக்கும் கொசுவும் இருக்கும் கொசு வர்த்தியும் இருக்கும்!

ஆனாலும் ஜூ.வி யோட கற்பனை வளத்துக்கு ஒரு அளவே இல்லை!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
ஈழத்தில் கஞ்சாந்தகரை எனக் குறிப்பிடும் பூண்டு வகை ;இது சரியாகத் துளசி போன்றது. அதே போல் ஆனால் வெளிர் பச்சை இலை. மணமும் அதே போல்; கதிர் போல் பூவரும்; ஆடு சாப்பிடும்
இதன் விதை கசகசா(சர்பத்துக்குப் போடுவது) போல் இருக்கும்; மழை காலத்தில் எங்கள் நிலங்கள் தோறும் சேனையாக வளரும்.ஆயுள் வேத வைத்தியர்கள் இதன் இலை வேர் சேகரிப்பர்கள்;

பாவட்டை என்பது பற்றையாக தானே வளரும் செடி;இதை மிருகங்கள் உண்பதில்லை. சுமார் 5 அடி உயரம் வளரும்; மாவிலைபோல் இலையுள்ளது. மல்லிகைப் பூப்போல் வெள்ளைப் பூப்பூக்கும்.
இதற்கும் மருத்துவக் குணம் உண்டு. பொதுவாக இதை வேப்பம்பட்டை;மங்சவண்ணாப்பட்டை; நொச்சிக் குழையுடன் சேர்த்து
அவித்து ஊறல்நீரில் குழந்தை பெற்ற பெண்களைக் குளிப்பாட்டும் பழக்கம் கிராமப்புறங்களில் இருந்தது;அத்துடன் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் இதை அவித்த நீரில் குளிப்பாட்டுவர்.ஆயுள் வேத கட்டு வைத்தியர்கள் உடலில் வரும் கட்டுகளுக்கு; ஒரு வகைச் சேர்வை தடவி; இந்த இலையை வாட்டிக் கட்டும் படி கூறுவார்கள்;கட்டுடைத்து வீக்கம் வற்றி வேதனை குறையும். இதுவும் ஆயுள் வேதத்தில் குறிப்பிடும் படியான செடி.
ஆடாதோடை என்பது இது தான் என ஒரு சிறு ஞாபகம்; வருகிறது; 2004 ஈழம் சென்ற போது எங்கள் வளவெல்லாம் நிறைந்திருந்தது. படம் எடுக்கவில்லை.
என்னால் தரக்கூடிய தகவல்கள் இவையே...
உங்களுக்குப் இப்போ புரிந்து மிருக்கலாம். என நம்புகிறேன்.

வவ்வால் said...

யோகன் ,
அருமையாக ஆயுற்வேதம் பர்றியும் விளக்கிவிட்டீர்கள், நன்றி. பெரும்பாலான மூலிகைகளின் பெயரும் அதன் பொதுப்பெயரும் குழப்பும் , ஆனால் நேராகப்பார்த்தால் அடையாளம் தெரியும். ஓரளவு புரிகிறது. ஆனாலும் இன்னும் முழுவதுமாக புறியவில்லை. நீங்கள் கொடுத்த தகவலே ஒரு பதிவு அளவுக்கு இருகிறது , புத்தகங்களிலும் தேடிப்பார்க்கிறேன், மேல் விபரங்கள் கிடைத்தால் நான் ஒரு பதிவு போட்டு விடுகிறேன் :-)

Thekkikattan|தெகா said...

யோகன்,

அருமையான பகிர்தல்கள். உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி, இத் தருனத்தில்.

வவ்வால் said...

தெ.கா,
யோகன் அவர்களது நேரடி அனுபவத்தின் வீச்சு என்னை மிரட்டுகிறது,பெரும்பாலும் அவர் எல்லாவற்றிலும் தேர்ந்த அனுபவம் கொண்டிருக்கிறார். அதனை வலைப்பதிவுகளில் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இப்பதிவுக்காக தேடிய போது இயற்கை கொசு விரட்டிகளின்னை பற்றி கொஞ்சம் கிடைத்தது ஏனோ அது போதுமானதாக நினைக்கவில்லை யோகன் சொன்னதும் தான் இன்னும் தேடினால் கிடைக்கும் என தேடி இயற்கை கொசுவிரட்டிப்பற்றி தனிப்பதிவே போட்டு விட்டேன் அதனையும் பாருங்கள்.

jansi kannan said...

Best idea.