Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts

Monday, October 21, 2013

Bt COTTON- ஒரு மாற்றுப்பார்வை!


(அய்யோடா இது பிடி காட்டன் இல்லை ..ஹி...ஹி)

பி.டி காட்டனை அமெரிக்க நிறுவனமான மோன்சாண்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தியப்போது முதல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது,அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பி.டி பருத்தி இந்தியாவில் ஊடுருவாமல் போய்விட்டது எனப்பலரும்நினைக்கலாம் ஆனால் உண்மையில் நிலை வேறு இந்தியா முழுக்க மிக அதிக அளவில் பி.டி வகை பருத்தி தான் பயிரிடப்படுகிறது, நம்ம போராளீகள் எப்படி விட்டிருப்பாங்கனு நினைக்கலாம் ல்..ஹி....ஹி அந்தப்போராட்டங்களே ஒரு செட்டப்பு தானே அப்புறம் எங்கே இருந்து பி.டி பருத்தி பி.டி உஷா போல ஊரவிட்டு ஓட, நல்லா ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு இந்தியாவில் உட்கார்ந்துக்கிச்சு பி.டி பருத்தி, இந்தியாவில் இனிமே பி.டி பருத்தி இல்லைனா வேட்டீ இல்லை  எவனுக்கும் அவ்வ்!

சுமார் 65 லட்சம் விவசாயிகள் பி.டி பருத்தி சாகுபடி செய்கிறார்கள்,தேசிய உற்பத்தில் இவர்களின் பங்களிப்பு 94.5 சதவீதமாம், மிச்சம் இருக்க அய்ந்து சொச்சம் சதவீதமும் விரைவில் பீ.டி பருத்தியாகிடும் என்பதில் சந்தேகமேயில்லை, வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி" வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!!

காண்க செய்தி....

//

Bt cotton now accounts for 94.75 p.c. of total cotton cultivation: T.M. Manjunat (www.cottonyarnmarket.com)
The area under Bt cotton cultivation in the country has rapidly increased from 29,000 hectares in 2002 when commercial cultivation of the variety was permitted to 11.2 million hectares in 2012, according to biotechnology experts.
Participating at an interaction programme organised by the University of Agricultural Sciences-Bangalore on Monday, Biotechnology and Integrated Pest Management Consultant T.M. Manjunath said Bt cotton now accounts for 94.75 per cent of the country’s entire cotton cultivation. He was interacting with about 150 innovative farmers and Bt experts from public and private sectors on various issues related Bt crops.
Similarly, the number of farmers engaged in cultivation of Bt cotton has increased from about 20,000 in 2002 to 65 lakh in 2012, he said. Referring to the opposition from various quarters to Bt crops and the apprehensions on its impact on health and environment, he said there would not have been a rapid increase in the number of farmers cultivating Bt cotton and its area if the variety was not useful to them. It is cultivated mainly in Maharashtra, Karnataka, Tamil Nadu, Andhra Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Rajasthan and Gujarat, he said.//


நம்ம போராளிகள் நடத்தியப்போராட்டத்தின் நுண்ணரசியலை காண்போம்,

ஆரம்பத்தில் மோன்சாண்டோ நேரடியாக பி.டி விதியினை சந்தைப்படுத்த களம் இறங்கியது,அப்பொழுது  நம்மப்போராளீகள் பொங்கி எழுந்தார்கள்! ஏதடா வம்பாப்போச்சேனு சற்றே சிந்தித்த மோன்சான்டோ ஒரு மாற்றுவழியைப்பிடித்தது, மகாராஷ்ட்ராவில் பருத்தி விதை விற்பனையில் முன்னணீ நிறுவனமான மாஹிகோவை ( Mahyco or Maharashtra Hybrid Seeds Co)வாங்கி அதன் பெயரில் விற்க ஆரம்பித்தது,கூடவே  வேளாண் பல்கலைகளின் புதிய வகை பருத்தி ஆய்வுகளுக்கு நிதியை அள்ளீவிட்டது, எனவே நம்ம ஊரு வேளாண்பல்கலைகள் எல்லாமே பி.டி வகை பருத்திகளையே புதிய ரகமா வேறு வேறூ பெயர்களில் வெளியிட ஆரம்பித்தன.

மேலும் மிக எளிதில் தங்களது பிடி மரபணு நுட்பத்தினை இந்தியாவில் பரப்ப இந்திய வேளாண் பல்கலைகளை பின்வாசல் வழியாக "மாகிகோ(மோன்சான்டோ) பயன்ப்படுத்துகிறது, சமிபத்தில் The National Biodiversity Board (NBA) அனுமதியில்லாமலே  கத்திரிக்காயில் பிடி நுட்பத்தினை புகுத்தி உள்ளூர் ரகமாக செய்ய கர்நாடக தார்வாட் வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போட்டு வேலை செய்த விஷயம் வெளியாகி , கர்நாடக உயர் நீதிமன்றத்தில் "கிரிமினல் வழக்கே' மாகிகோ மீது பதிவாகியுள்ளது.

செய்தி,

//The National Biodiversity Board (NBA) and the Karnataka Biodiversity Board (KBB) filed a case for criminal prosecution of 13 individuals, including some top management officials of Mahyco or Maharashtra Hybrid Seeds Co. Limited which is partly owned by Monsanto, for biopiracy. The authorities complained in 2012 that the company along with others had genetically modified local varieties of eggplant without the mandatory approvals and then laid illegal proprietary claim to the genetically modified seeds. In other words, they were accused of biopiracy under the Biodiversity Act 2002.//

http://www.thehindu.com/news/national/criminal-prosecution-of-mahyco-for-biopiracy-revived/article5244950.ece

மேலும் பிடி விதைகளை பரப்பவும், புதிய பிடி விதைகளை உருவாக்க , ஏற்கனவே உள்ள சுதேச விதைகளை பிடியாக மாற்ற என பிராந்திய அளவில் செயல்ப்டும் நூற்பாலை சங்கங்களையும் வளைத்துப்போட்டு அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எஞ்சிய பருத்தி வகைகளையும் பிடியாக மாற்ற மாகிகோ(மோன்சான்டோ) தீவிரம் காட்டி வருகிறது.

தென்னிந்திய நூற்பாலை சங்கத்துடனும்அப்படியான ஒப்பந்தத்தில்  மாகிகோ ஈடுப்பட்டுள்ளது.

//V. Muthusamy, Research Manager at SIMA CD&RA, said that the renovated Suvin seeds have been distributed for field trials by farmers’ fields in Andhra Pradesh and Karnataka. The seeds have been distributed in north Gujarat also, he added

Rajkumar said that the association has inked an agreement with Kaveri Seed Company, Hyderabad (a sub-licensee of Mahyco Monsanto Biotech (India)) for co-marketing KCH-999 BGII hybrid cotton seed as SIMA GKD 1.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece

வெள்ளைக்காரன் தனியா வந்து நம்மை ஆண்டு விடவில்லை அப்பொழுது அவனுக்கு துணை நின்றதே நம்மாட்கள் தான் அதே போல தான் மோண்சான்டோவும் தனியா எதுவும் செய்துவிடவில்லை, காசு கிடைக்குதேனு நம்ம ஆட்களும் கூட சேர்ந்து தான் எல்லாம் செய்றாங்க, ஆனால் போராளிகள் பொங்குவதெல்லாம் வெளிநாட்டுக்காரன் செய்துப்புட்டான்னு :-))

அனைத்து மாநிலங்களிலும் முன்னணி விதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு மோன்சாண்டோ பி.டி விதைகளை காங்கா,காவேரி என உள்ளூர் பெயரில் விற்க வச்சிடுச்சு,இப்படியாக 94.5 சதவீத பருத்தி மார்க்கெட்டும் மோன்சாண்டோ கைக்கு போய் ரொம்ப நாளாச்சு, மோன்சாண்டோவுக்கு எதிராகக்கொடிப்புடிச்ச போராளிகள் ஏன் அதே பி.டிவிதைகளை உள்நாட்டு விதை நிறூவனங்கள் விற்றப்போது செய்யவில்லையே ஏன்?

காரணம் ரொம்ப சிம்பிள் உள்நாட்டு யாவாரிகள் ஒவ்வொருவரும் அந்த அந்த மாநிலத்துலவும் ஜாதி மற்றும் அரசியல் ரீதியில் செல்வாக்கானப்பின்ப்புலங்கள் கொண்டவர்கள், அவங்களுக்கு எதிராகப்பேசினால்  வாயிலவே குத்துவாங்க, மேலும் பல இயக்க தலைவர்களுடன் நல்ல "அண்டர்ஸ்டேண்டிங்கும்" உண்டு, ஜாதி,அரசியல்,மதம் என ஏதோ ஒரு வகையில் தொடர்பும் இருக்கும்,தேர்தல் அல்லது கட்சி செலவுகளுக்கு கவனிப்பும் உண்டு, அப்படி இருக்கும் போது "புரட்சி புண்ணாக்கு" எல்லாம் செய்வாங்களா என்ன?

ஆனால் ஒன்னு இப்பவும் மோன்சாண்டோ எதாவது மாநிலத்தில நேராடியாக பி.டி விதைகளைவிற்கலாம்னு திட்டம் போட்டு ஃபீல்ட் ஒர்க்கில் இறங்கினால் உடனே கொடியப்பிடிச்சுக்கிட்டு கூட்டம் கூட்டமா கிளம்பிடுவாங்க, அதுக்கு உள்ளூர் வியாபாரியின் ஆசிர்வாதமும் உண்டு!

பி.டி விதைக்கான எதிர்ப்பு என்பது சுதேச விதை வியாபாரிகளின் விதை வியாபாரத்தைகாக்க மட்டுமே ,அது எப்புடி மரபணு மாற்றப்பட்ட பி.டி விதைய வெள்ளைக்காரன் நம்ம ஊருல விக்கலாம், மக்கள் பாதிக்கப்படுவாங்களே என புரட்சிபேசுபவர்கள் அதே பி.டிவிதையை கங்கா,காவேரினு நம்ம ஊரு விதை விற்பனையாளர்கள் விக்கும் போது பாதிப்பே வராது என கண்மூடிக்கொள்ளும் வில்லேஜ் விஞ்சானிகள் தான் நம்ம ஊரு சேகுவேராக்கள் அவ்வ்!!!

எல்லா களவாணித்தனத்திலும் நம்மாட்களும் கூட இருக்காங்க ஆனாலும் பழிய மட்டும் தூக்கி "மோன்சாண்டோ" மேல போட்டு அவன் என்னமோ  தன்னந்தனியா இந்த வேலைய செய்துட்டாப்போல ஒரு காட்சித்தோற்றத்தினை உருவாக்க வேண்டியது!

நம்ம நாட்டில் நடக்கும் போராட்டங்கள்,எதிர்ப்புகள் எல்லாமே ஏதேனும் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதே சாபக்கேடு, யாரோ ஏதோ தீமையை எதிர்த்து போராடுராங்க அந்த தீமை போயிடும்னு மக்கள் நம்பிக்கிட்டு சும்மா இருந்துடுவாங்க, கடைசியில் எது நடக்காது என நினைத்தார்களோ அதான் நடந்திருக்கும் :-))

பி.டி தொழிருட்பத்தில் தயாரிக்கப்ப்பட்ட விதைகள் எவ்வித தீங்கும் தராது,பாதுகாப்பானது என மெத்த படித்த விஞ்"சாணி"கள் கொண்டு பரப்புரையை மோன்சாண்டோ கன கச்சிதமாக செய்து வருகின்றது, பல ஊடகங்களும்  "கவனிக்கப்பட்டு விடுவதால் பிடி பருத்தியால் தான் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகமானது, என பல புள்ளி விவரங்களை அள்ளி விடவும் செய்கின்றன. ஆனால் உண்மை நிலவரம், பிடி பருத்தி எல்லாம் இந்தியவுக்கு வரும் முன்னர் இருந்தே இந்தியா உலக அளவில் பருத்தி உற்பத்தியில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பிடித்தே இருந்தது.

இன்றும் உலகில் பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடம், சாகுபடி பரப்பில் முதலிடம் வகிக்கிறது,ஆனால் பழைய வரலாற்றினை கண்டுக்கொள்ளாமல் அதெல்லாம் தற்போது பிடி பருத்தியால் தான் சாத்தியமாயிற்று என சொல்வது மிகப்பெரும் பித்தலாட்டம் ஏன் எனில் ஆரம்பத்தில் இருந்த சாகுபடி பரப்பு நாளாக ஆக அதிகரித்து வருகிறது, எனவே இப்பொழுது மொத்த உற்பத்தி பேல்களில் அதிகமாக இருப்பதை மட்டும் காட்டி சொல்கிறார்கள், சதவீத அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கிட்டத்தட்ட ஒரே நிலையினை வகித்து வந்தது.

வெள்ளைக்காரன் ஆண்டக்காலத்திலேயே மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் பெயர் வாங்கிடுச்சு, ஏன் எனில் பிரிட்டீஷ் இந்தியாவில் அவ்வளவு பருத்தி உற்பத்தி இந்தியாவில் செய்யப்பட்டு ஏற்றுமதியானது.

பி.டி தொழிற்நுட்பத்தால் தீங்கு உண்டா?


BT- Bacillus thuringiensis என்ற பேக்ட்டீரியாவின் நச்சு தன்மையுள்ள புரதத்தினை ,மரபணு மாற்றத்தின் மூலம் தாவர மரபணுவுடன் - பருத்திஉடன் இணைத்து செய்யப்படும் மரபணுகலப்பு விதையே பிடி பருத்தியாகும்.

பேக்டீரியா என்பது நுண்ணுயிர் விலங்கு எனலாம்கெனவே அதன் மரபணு தாவர மரபணுவுடன் இயற்கையாக சேராது, அதனை ஆய்வகத்தில் செயற்கையா ரசாயனங்கள் உதவீயுடன் இணைக்கப்படுகிறது,எனவே பி.டி நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாவர பொருளில் பி.பி மரபணு மட்டுமில்லாமல் ரசாயன எச்சமும் இருக்கும்,எனவே நுகர்விற்கு பின் எம்மாதிரியான பக்க விளைவுகள் வரும் என சொல்லவியலாது ,ஆனால் செயற்கையாக செய்யப்பட்ட அனைத்தாலும் பக்க விளைவுகள் உண்டாகும் என்பது மட்டும் உறுதி.

தற்போது தெளிவாக உயிர் சுற்றுச்சூழலில் உண்டாகும் பாதிப்பினை காணலாம்.

//When consumed by insects, the protein is converted to its active, toxic form (delta endotoxin), which in turn destroys the gut of the insect. Bt preparations are commonly used in organic agriculture to control insects, as Bt toxin occurs naturally and is completely safe for humans.

More than 100 different variations of Bt toxin have been identified in diverse strains of Bacillus thuringiensis. The different variations have different target insect specificity. For example, the toxins classified under Cry1a group target Lepidoptera (butterflies), while toxins in the Cry3 group are effective against beetles.//


http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/breeding_aims/147.pest_resistant_crops.html


http://en.wikipedia.org/wiki/Pink_bollworm


http://en.wikipedia.org/wiki/Helicoverpa_armigera


http://insected.arizona.edu/ladyinfo.htm



பருத்தியில் அதிகம் சேதம் விளைவிப்பது காய் துளைப்பான் எனப்படும் பூச்சியாகும், இதில் பொதுவான காய் துளைப்பான், பிங்க் காய் துளைப்பான் என இரண்டு உள்ளது, இதற்கு பொல்கார்ட் ‍‍‍‍‍–1,2 என இரண்டு வகையினை மோன்சாண்டோ உற்பத்தி செய்துள்ளது.

(pinkbollworm moth)

கிரை‍‍–1 என்ற டாக்சின் உள்ள விதைகளாகும், இவை லெபிடாப்டிரா வகை பூச்சிகளுக்கு எதிரானவை, இரண்டு காய் துளைப்பானும் அவ்வகையே.

ஆனால் லெபிடாப்டிரா வகையில் சுமார் 1774,250 க்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளன, அவற்றுள் சில வகையே விவசாய "பெஸ்ட்" எனலாம், மற்றவை சாதாரணமானவை, வண்ணத்துப்பூச்சிகளும் லெபிடாப்டிரன் வகையே, மகரந்த சேர்க்கைக்கு இயற்கையான வெக்டார்கள் வண்ணத்துப்பூச்சிகளே! இவ்வகை பூச்சிகளை " நன்மை பயக்கும் பூச்சிகள் " என்பார்கள்.

அதிலும் சில லெபிடாப்ட்ரன்கள் அபூர்வமானவை,
மேலும் மொனார்ச் வண்னத்துப்பூச்சி ஒரு அரிய வகை இனமாகும்,

(monarch butterfly)
காய்த்துளைப்பானுக்கு விஷம் எனப்பயிரிடப்படும் பி.டி பருத்தியின் பூக்களில் தேன் உண்னும் மற்ற லெபிடாப்டிரா வகை வண்ணத்துப்பூச்சிகளூம் பாதிப்புக்குள்ளாகி இறந்து விடும்.

பருத்தி என்ற ஒரு வணிக்கப்பயிரில் ஏற்படும் பூச்சி தாக்ககுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உருவாக்கப்பட்ட ஒரு உயிர் தொழில்நுட்பம் ஒரு உயிர்வகைப்பாட்டியியல் ஆர்டரில் உள்ள பல்லாயிரம் பூச்சிக்களுக்கும் எமனாக இருப்பதை பலரும் உணரவேயில்லை, ஒரு வேளை வருங்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அருகிவிட்டால் அப்போதான் விழித்துக்கொண்டு ஒலக வண்ணத்து பூச்சி டே" என ஒன்றை உருவாக்கி தமது கடமையை முடித்துக்கொள்வார்களாயிருக்கும் :-))

அதான் ஏற்கனவே சிட்டுக்குருவி தினம் ,சுண்டெலி தினம்னு உருவாக்கி நமக்குலாம்ம் விழிப்புணர்ச்சி ஊட்டுற அறிவு சீவிங்க இதை செய்ய மாட்டாங்களா என்ன அவ்வ்!

மேலும் பல பூச்சிகள் இயற்கை பிரிடேட்டர்கள் ஆகும்,அவை தீமைசெய்யும்பூச்சிகளின் முட்டை, புழு ஆகியவற்றை உண்பதன் ,மூலம் இஅயற்கையான பூச்சிக்கட்டுப்பாடாக உள்ளன. பி.டி விஷம் உள்ள பருத்தியில் உண்டு வளர்ந்த காய் துளைப்பானின் முட்டை ,புழு ஆகியவற்றை உண்ணும் நன்மை பயக்கும் பூச்சிகளூம் இறந்து விடும்.

கிரை –3 டாக்சின் பீட்டில் வகைப்பூச்சிகளூக்கு நஞ்சாகும், பெரும்பாலான பீட்டில்கள் நன்மை பயக்கும் பிரிடேட்டர் ஆகும், அவையும் பி.டி பருத்தி உண்ட காய்த்துளைப்பானின் புழுக்களை, முட்டைகளை உண்டோ, அல்லது பருத்தியின் பொருளாதார முக்கியம் இல்லாத பகுதிகளை உண்டோ பாதிப்புக்கு உள்ளாகலாம்.

உதாரணமாக லேடி பர்ட் பீட்டில் என்பது ஏபிட்ஸ் எனப்படும் சாறுண்ணிகளின் பிரிடேட்டர், பருத்தியில் உள்ள பிடி டாக்சின் ஏபிட்ஸ்களைப்பாதிக்காது, எனவே பிடி பருத்தியின் சாறுண்ட ஏபிட்ஸ்களை உண்ணும் லேடிபர்ட் பீட்டில்களுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகும், இதனால் இயற்கை பூச்சிக்கட்டுப்பான லேடி பர்ட் பீட்டில் அழிந்து ,சாறுண்ணீ பூச்சிகளின் இனம் பல்கிப்பெருகிடும், இது கதையல்ல நிஜம் என்பதற்கு கண் கூடாக சான்று, பி.டி பருத்தியில் காய் துளைப்பான் தாக்குதல் குறைந்து "சாறுண்ணி பூச்சி" தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகளே சொல்வதிலிருந்து அறியலாம்.

பீ.டி பருத்தி காய்த்துளைப்பானுக்கு எதிராக மட்டுமே நல்லப்பலனைக்கொடுக்கும்,ஆனால் காலப்போக்கில் இயற்கை சமநிலை சிர்க்குலைவதால் பிறப்பூச்சி தாக்குதல் அதிகரிக்கவே வகை செய்யும். பல அரிய வகைப்பூச்சியினங்கள் முற்றீலும் அழியவும் காரணமாகலாம்.

# மேலும் நம் நாட்டில் பருத்தி என்பது இழைகளுக்காக மட்டும் பயன்ப்படுத்தப்படவில்லை, இழைகள் நீக்கப்பட்ட பருத்திக்கொட்டை என்பது கால்நடை தீவனமாக பயன்ப்படுகிறது, பிடி பருத்திக்கொட்டைகளை உண்ட பசுமாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் பிடி யின் தாக்கம் என்னவாக இருக்கும் என இதுவரையில் ஆய்வுகள் ஏதும் நடைப்பெற்றதாக தெரியவில்லை, எனவே அவ்வகை பாலை அருந்தும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் தெரியாது.

நிறைய இடங்களில் பருத்திப்பால் எடுத்து மனிதர்களும் சாப்பிடுகிறார்கள், பருத்தி அல்வா என்று கூட உண்டு, இவ்வாறு உணவாக பிடி பருத்தியினைப் பயன்ப்படுத்தினால் என்ன பின்விளைவுகள் வரும் என  சரியான ஆய்வுகள் இதுவரையில் நடக்கவில்லை.

இந்தியாவில் சாலையை கடப்பதே உயிர் ஆபத்தான ஒன்று அதையே கவலைப்படாமல் செய்கிறோம், பிடிக்குலாம் பயப்படலாமா...ஸ்டீல் பாடி உடம்புலே இதுனு நம்ம மக்கள் தெம்பா பிடி பருத்திப்பால் குடித்துக்கொண்டு , தொலைகாட்சியில் சூப்பர் சிங்கரோ, மானா மயிலாடவோ பார்த்து இன்புற்று வாழ்வார்கள்!

--------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.monsanto.com/newsviews/Pages/india-pink-bollworm.aspx

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece
http://www.simamills.com/news.asp?id=3639

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் நன்றி!

Monday, September 17, 2007

காற்றினிலே வரும் குடிநீர்!

நமக்கு தேவையான நீர் மழை மூலம் கிடைக்கிறது. அந்த மழை எப்படி பெய்கிறது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள், கடல் நீர் அல்லது மற்ற நீர் ஆதாரங்களில் உள்ள நீர் ஆவியாகி மேகம் ஆகி ,பின் குளிர்ந்த காற்று வீசும் போது மேகம் குளிர்ந்து மழையாகிறது என்று.அந்த மழையை நாம் விரும்பிய போது வர வைக்க முடியுமா ,விமானம் மூலம் மேகங்களின் மீது வெள்ளி அயோடைட் ரசாயனத்தை தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம், ஆனால் நமக்கு தண்ணீர் தேவைப்படும் போது நம் வீட்டுக்குள் அப்படி வர வைக்க முடியுமா?

அழைக்கும் போது உதித்து விட்டால் அதற்கு பெயர் நிலவும் அல்ல , அழைக்கும் போது வீசிவிட்டால் அதற்கு பெயர் தென்றலும் அல்ல, அழைக்கும் போது மழை வந்து விட்டால் அதற்கும் பெயர் மழையும் அல்ல, அப்போ அது என்ன ,எப்படி, அது தான் காற்றில் இருந்து நீர் தயாரிக்கும் எந்திரம்.

அமெரிக்க ராணுவம் ஈராக் போன்ற பாலைவனங்களில் இருக்கும் போது குடி நீர் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது அதற்கு ஒரு காலனுக்கு 30 டாலர்கள் செலவாகிறதாம் அதனை குறைக்க , நாசா மூலம் ஆய்வு செய்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை செயற்கையாக குளிர வைத்து , சுருங்க வைத்து நீராக மாற்றும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.ஆனால் நாசாவிற்கு முன்னரே அக்யூவா சயின்ஸ் என்ற இன்னொரு நிறுவனம் அதை விட சிறப்பான எந்திரத்தை உருவாக்கியுள்ளது , இப்பொழுது அதனை தான் அமெரிக்க ராணுவத்தினர் பாலைவனங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றின் ஈரப்பதத்தில் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளதாம்.காற்றில் 14 சதவீத ஈரப்பதம் இருந்தால் கூட போதும் ஒரு நாளைக்கு 600 காலன் நீர் தயாரிக்கலாம். பெரிய அளவு எந்திரங்களைக்கொண்டு 500,000 லிட்டர் கூட தயாரிக்க இயலுமாம்.

இந்த எந்திரம் செயல் படும் முறை, கிட்டதட்ட நம் வீட்டில் உள்ள குளிர் சாதனப்பெட்டி போன்ற முறை தான்.

காற்றினை உறிஞ்சி இழுத்து முதலில் ஒரு வடிக்கட்டி வழியாக செலுத்தப்படுகிறது, இதன் மூலம் தூசுக்கள் அகற்றப்படுகிறது.

பின்னர் காற்று குளிரூட்டும் வாயு கொண்ட குழாய்களுக்கு இடையே செலுத்தும் போது குறைந்த வெப்பத்தில் நீராவி சுருங்கி நீராக மாறும்.

அதனை ஒரு தொட்டியில் சேகரித்து , பின்னர் வழக்கமான , புற ஊதாக்கதிர் , ஒசோன் , சவ்வூடு பரவுதல் முறை மூலம் சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றப்பட்டு பயன் பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த கருவியை வடிவமைக்கும் முறையினைப்பொறுத்து திறனின் அளவு மாறுபடுவதால், எந்த நிறுவனமும் அதன் எந்திரங்களின் செயல் முறையை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளன. மேலே சொல்லப்பட்டுள்ளது அடிப்படை தத்துவம் மட்டுமே.

மேலும் சில நிறுவனங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை கிரகிக்கும் ரசாயனங்களைப்பயன் படுத்தியும் எந்திரங்களை வடிவமைத்துள்ளன.


மற்றொரு நிறுவனம் , காற்றலை வடிவில் மின்சக்தி இல்லாமல் , இயங்கும் வண்ணம் , ஒரு எந்திரம் வடிவமைத்துள்ளது, அதன் உற்பத்தி திறன் சிறிது குறைவாக இருக்கும். இம்முறையில் எவ்வித குளிரூட்டும் பொருளும் பயன் படுத்தாமல் காற்றினை ஒரு சுழல் பாதையில் செல்ல விட்டு குளிர வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 12, 2007

சிமெண்ட் செங்கல்லை இணைப்பது எப்படி?


பசைக்கொண்டு காகிதம் ஒட்டுகிறோம் , அதே போல சிமெண்ட் கொண்டு இரண்டு செங்கல்லை ஒட்ட முடிகிறது , எவ்வாறு அது ஒட்டுகிறது. சிமெண்ட் , பசை இதற்கெல்லாம் ஒட்டும் , இணைக்கும் தன்மை எப்படி வருகிறது.

சிமெண்ட் கால்சியம் சிலிகேட்,கால்சியம் கார்பனேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் பொடி செய்யப்பட்ட கலவையாகும். தண்ணீருடன் கலந்து கிடைக்கும் பசை போன்ற சிமெண்ட் காயும் போது ஏற்படும் நீரேற்ற வினையினால்(hydration) கெட்டிப்படுகிறது, அப்பொழுது அது கால்சியம் சிலிகேட் ஹைட்ரேட் ஆக மாறிவிடும்.அது ஒரு திரும்ப பெற இயலாத வேதி வினை ஆகும். சிமெண் குழம்பு செங்கல்லில் உள்ள நுண்ணிய துளைகளில் புகுந்து காயும் போது இறுகுவதால் பிடித்துக்கொள்ளும். இதன் மூலம் இணைக்கும் தன்மை கிடைக்கிறது. இது மட்டும் இல்லாமல், சிமெண்டில் உள்ள மூலக்கூறுகளின் மின்னியல் பண்புகளும் இணைப்பு சக்தியை சிமெண்டிற்கு தருகிறது.

மேலும் சிமெண்டுடன் தண்ணீர் சேர்ப்பதால் கால்சியம்சிலிகேட், கால்சியம் அலுமினேட் போன்ற மூலக்கூறுகள் பிளவுற்று கால்சியம் அயனிகள்(ca2+) உருவாகும், எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை , அவற்றில் எலெக்ட்ரான்கள் என்ற எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் இருக்கும். செங்கல்லில் உள்ள அணுக்களில் இருந்து சில எலெக்ட்ரான்கள் பிணைப்பில் இருந்துவிடுபட்டு கால்சியம் அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும். கட்டுமானப்பணியின் போது செங்கல் மீது தண்ணீர் தெளிப்பார்கள் ,இது எலெக்ட்ரான்கள் விடுபட்டு எளிதாக இடம் மாற உதவும். இவ்வாறு எலெக்ட்ரான் பரிமாற்றத்தால் ஏற்படும் பிணைப்பிற்கு கோவேலண்ட் பாண்ட்(covalent bond) என்று பெயர்.இதன் மூலம் மூலக்கூறுகளிடையே ஒரு இணைப்பு விசை உருவாகும் அதற்கு வாண்டர் வால்ஸ் விசை(wanderwalls force) என்றுப்பெயர்.

செங்கல்லை சிமெண்ட் இணைப்பதன் காரணம் மேல் சொன்ன இரண்டும் தான்.மேலும் சிமெண்டில் நீரேற்ற வினை ஏற்பட்டு இறுகும் போது சுருங்கும் , அதன் காரணமாக வெடிப்பு ஏற்படலாம் சில சமயங்களில். மேலும் முழுவதும் நீரேற்றம் ஆகாத மூலக்கூறுகளையும் நீரேற்ற அதிகப்படியாக தண்ணீர் கட்டுமானத்தின் மீது ஊற்றப்படும். இதற்கு செட்டிங் என்பார்கள் சாதரணமாக 28 நாட்கள் தேவைப்படும்!

இதே போன்று பசை காகிதத்தை ஒட்டவும் , எலெக்ட்ரான்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் கோவேலண்ட் பாண்ட் தான் காரணம்.

Friday, September 07, 2007

அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில் ,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள் ,,

சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony),
மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

LetterMorse
Adi-dah
Bdah-di-di-dit
Cdah-di-dah-dit
Ddah-di-dit
Edit
Fdi-di-dah-dit
Gdah-dah-dit
Hdi-di-di-dit
Idi-dit
Jdi-dah-dah-dah
Kdah-di-dah
Ldi-dah-di-dit
Mdah-dah


N dah-dit
Odah-dah-dah
Pdi-dah-dah-dit
Qdah-dah-di-dah
Rdi-dah-dit
Sdi-di-dit
Tdah
Udi-di-dah
Vdi-di-di-dah
Wdi-dah-dah
Xdah-di-di-dah
Ydah-di-dah-dah
Zdah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ், லாண்ட் மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

லிப்டில் போனால் உடல் எடை குறைக்கலாம்?

சாதாரணமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் , சில சிறிய வேலைகளையும் உடல் உழைப்பின் மூலம் செய்வதால் அதிக கலோரிகள் எரித்து உடல் எடைக்குறைக்கலாம் என சொல்வார்கள். அந்த வகையில் மாடிப்பகுதிகளுக்கு செல்ல லிப்டிற்கு பதில் படிகளில் ஏறி சென்றால் எடை குறையும் என்பார்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சாட்சியாக சொல்கிறேன், லிப்டில் இறங்கி வந்தால் உடனடியாக உடல் எடை குறையும் , 100 சதவீதம் உத்திரவாதம் !

அது எப்படி என்று சொல்கிறேன்,

முதலில் உங்கள் எடை என்னவென்று குறித்துக்கொள்ளுங்கள்

முதல் தளத்தில் இருக்கும் ஒரு லிப்டில் ஏறி நின்று கொள்ளுங்கள் , எடை குறைவதைக் காண கையோடு ஒரு எடை பார்க்கும் கருவியும் எடுத்து செல்லுங்கள். இப்பொழுது எடை பார்க்கும் எந்திரத்தின் மீது நின்று கொண்டு முதல் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வாருங்கள். அப்படி வரும் போது உங்கள் எடை என்னவென்று எடை பார்க்கும் எந்திரத்தில் பாருங்கள், கண்டிப்பாக எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்! கடினமாக உழைக்காமல் எப்படி எடை குறைந்தது, ஆச்சரியமாக இருக்கிறதா , அது தான் இயற்பியலின் விந்தை!

நம் உடல் எடை என்பது புவி ஈர்ப்பு விசை ஆனது உடலின் பருமன் மீது செயல்படுவதால் ஏற்படும் விசை ஆகும், அவ்விசையை எடைப்பார்க்கும் கருவி உணர்வதால் அதில் எடை காட்டுகிறது.

லிப்டில் மேல் இருந்து கீழ் நோக்கி இறங்கும் போது எடை குறைவாக காட்டக்காரணம் , லிப்ட் அது ஒரு வேகத்தில் இறங்குகிறது எனவே அதன் மூலம் ஒரு விசை நம் உடலில் செயல்படும், எனவே இப்பொழுது நம் உடலின் மீது இரண்டு விசை செயல்படுகிறது , புவி ஈர்ப்பு விசை மேல் திசையிலிருந்து கீழ் நோக்கிய விசை , கூட லிப்டின் மேலிருந்து கீழ் நோக்கிய விசை இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் , இப்போது புவீஈர்ப்பு விசையில் ஒரு மாற்றம் ஏற்படும் அதன் காரணமாக உடலின் மீது மொத்த விளைவு ஈர்ப்பு விசை குறையும்! எனவே தான் எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்!

இரண்டு விசையும் எதிர் எதிராக இருந்தால் எடை கூடுதலாக காட்டும் .

*லிப்டில் கீழ் இருந்து மேல் மாடிக்கு செல்லும் போது எடை அதிகம் காட்டும் எடைப்பார்க்கும் கருவி.

*லிப்ட் நிற்கும் போது உடலின் உண்மையான எடைக்காட்டும் !

எடைப்பார்க்கும் எந்திரத்தின் மீதான விசை = எடை
f =m*a

இங்கு a = g , லிப்டின் மேல் , கீழ் செயல்பாட்டினால் நம் உடலில் ஏற்படும் விசை ,மேலும் லிப்ட் இயங்கும் வேகத்தினால் வரும் முடுக்கத்தினால் (a= acceleration)வருவது என இரண்டு விசை , எனவே மொத்த கூட்டு விசை

f= m*(g - or +(a)

இதன் மூலம் நிகர எடை அறியாலாம்.

இந்த சூத்திரம் கொண்டு லிப்ட் வேகத்தீற்கு ஏற்ப மேல் அல்லது கீழ் செல்லும் போது ஏற்படும் எடை மாற்றத்தினை கணக்கிடலாம்.கீழ் இறங்கும் போது "-" மேல் ஏறும் போது "+".

உடல் எடையை குறைக்கணும்னா இனிமே வேகமா லிப்டில் இறங்கினா போதும்! உண்மையா உடல் நலம் ,எடைக்குறைத்தல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஓடி வந்து படித்த மக்கள் அடியேனை பொருத்தருள்க!

Thursday, September 06, 2007

நீங்களும் கண்டுபிடிக்கலாம் பூமியின் சுற்றளவை

இன்று பல தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்ட நிலையில் எதுவும் சாத்தியம் ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழில் நுட்பம் , கருவிகள் என எதுவும் இல்லாமலே பலவற்றையும் வெறும் கணக்கீட்டின் மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

அப்படி பூமியின் விட்டம் , சுற்றளவை மிகச்சரியாக கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயெ எரட்டோதீனியஸ்(Eratothenes, 230 B.C) என்ற கிரேக்க அறிஞர் முக்கோணவியல் மூலம் கண்டு பிடித்துள்ளார். அது மிக எளிய ஒன்று , நாம் கூட அம்முறையை செய்துப்பார்க்கலாம்.
















எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த முறை:

ஒரு அடி நீளம் உள்ள குச்சி ஒன்றினை பூமியில் செங்குத்தாக நட்டுவைக்கவும். அதன் நிழலை தொடர்ந்து கவனித்து வந்தால் , இருப்பதிலேயே மிக நீளம் குறைவான நிழல் சூரியன் தலைக்கு நேராக உச்சியில் வரும் போது தான் விழும் என்பது தெரியவரும். எனவே சூரியன் உச்சியில் வரும் போது குச்சியின் நிழல் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

பின்னர் ஏறக்குறைய அதே தீர்க்க ரேகைப்பகுதியில் உள்ள வேறு ஒரு இடத்தில் குச்சியை நட்டுவைத்து , மீண்டும் சூரியன் உச்சியில் இருக்கும் போது நிழலின் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

இதில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது ஏற்படும் கோணத்தூரம் என்பது , சூரியக்கதிர் பூமியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கு சமம் , அதனைக்கண்டு பிடிக்க தான் நிழல் , குச்சி இரண்டும் பயன்படுகிறது. இங்கே நிழல், குச்சி இரண்டின் நீளங்கள் தெரியும் அதைக்கொண்டு Tan கோணம் கண்டறியலாம்.

இரண்டு இடங்களில் நிழல் விழவைத்து இரண்டு கோணங்கள் ஏன் கணக்கிட வேண்டும் , இந்த இரண்டு புள்ளிகளும் , பூமியின் மையம் மூன்றாவது புள்ளியாக கொண்டு ஒரு முக்கோணம் வரைந்தால் , அதில் பூமியின் மையத்தில் வரும் வரும் கோணம் இந்த இரண்டு கோணத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். படத்தினை பார்த்தால் கொஞ்சம் விளங்கும்!

1) h1/b1= tan deeta1
2)h2/b2= tan deeta2

tan1-tan2= புவிமையத்தில் வரும் கோணம்.

நிழல் விழும் இரண்டு புள்ளிகள் , மையம் மூன்றும் இணைந்து ஒரு முக்கோணம் உருவாக்கினால் , அதில் ஒரு பக்கம் இரண்டு நிழல் புள்ளிகளுக்கும் இடைப்பட்ட தொலைவு தெரியும், மற்றொரு பக்கம் என்பது பூமியின் ஆரம் அது தெரியாது , ஆனால் மையத்தில் வரும் கோணம் இப்போது தெரியும் ,

எனவே , அதனைக்கொண்டு ,

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ ஆரம் = மையக்கோணம்
எனவே ,

பூமியின் ஆரம் = இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ மையக்கோணம்

என எளிதாக கண்டுபிடித்து விடலாம்,

அப்படி எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த ஆரம் , 6371.02 கி.மீ

இதனைக்கொண்டு பூமியின் சுற்றளவும் சொல்ல முடியும், 2xpi xR= 40,008 km .இப்போது நீங்களும் பூமியின் சுற்றளவை கண்டுப்பிடிக்கலாம்!

இதுமட்டும் அல்லாமல் முக்கோணவியலைக்கொண்டு தான் அக்காலத்திலேயே நிலவின் அளவு, அதன் தொலைவு, மேலும் சூரியன் இருக்கும் தூரம் கூட சரியாக கண்டுப்பிடித்தார்கள்!மேலும் மலைகளின் உயரம் கூட இப்படி அளக்கலாம்.

Monday, August 27, 2007

காணாமல் போகும் நாட்டுக்காளைகள் - தொடர்ச்சி புகைப்படங்கள்

யோகன் அவர்கள் நாட்டுக்காளைகள் படங்கள் கிடைத்தால் போட சொல்லிக்கேட்டார் , இணையத்தில் தேடியதில் பெரும்பாலான காளைகள் மாட்டியது சில காளைகள் மட்டும் கண்ணில் சிக்கவில்லை , கிடைத்தவரை போட்டுள்ளேன் படத்தை பார்த்துவிட்டு யாரும் ம்மா.... ம்மா என்றெல்லாம் கத்தக்கூடாது!

Saturday, August 25, 2007

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!

(அரசு வெளியிட்ட காங்கேயம் காளை சிறப்பு தபால் தலை!)

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு ... என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.

இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.

இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.

அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.

எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என "UNO" போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.

அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.

இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால் -கர்நாடகா

2) பச்சூர் - பிகார்

3) பர்கூர் - தமிழ்நாடு

4) தாங்கி - மகாராஷ்டிரா

5) தியோனி - மகாராஷ்டிரா

6) கவொலாவோ - மகா

7) கீர் - குஜராத்

8) ஹல்லிகர் - கர்நாடகா

9) ஹரியானா - ஹரியானா

10) காங்கேயேம் - தமிழ்நாடு

11) காங்ரெஜ் - ராஜஸ்தான்

12) கேன்கதா - உத்திரப்பிரதேசம்

13) கேரிகார்க் - உத்திரப்பிரதேசம்

14) ஹில்லார் - மகாரஷ்டிரா

15) கிருஷ்ணா வாலி - கர்நாடகா (250க்கும் குறைவாக)

16) மால்வி - ராஜஸ்தான்

17) மேவாதி - உத்திரபிரதெசம்

18)நகோரி - ராஜஸ்தான்

19)நிமாரி - மகா

20)ஓங்கோல் - ஆந்திரா

21) பொன்வார் - உத்திரபிரதேசம்

22) புங்கனூர் - ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)

23) ரதி -ராஜஸ்தான்

24) சிவப்பு காந்தாரி - மகா, குஜராத்

25) சிவப்பு சிந்தி - பஞ்சாப்,

26) சாஹிவால் - பஞ்சாப்

27) சிறி - மேற்குவங்கம் , சிக்கிம்

28) தார்பார்க்கர் - ராஜஸ்தான்

29) உம்பளச்சேரி - தமிழ்நாடு

30) வச்சூர் - கேரளா (100 க்கும் குறைவாக)

31) கங்காத்திரி - உ.பி, பீகார்,

32) மல்நாட் ஹிடா - கர்நாடகா

33) தோ தோ - நாகாலாந்த்

*இவற்றில் மிகவும் அருகி , அழியும் நிலையில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மாடு வகைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

*இது வரை அந்த வகை மாடுகளில் எந்தனை இருக்கிறது என கணக்கெடுக்பட கூட இயலாத எண்ணிக்கையில் உள்ள மாடு வகைகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இவையும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இன மாடுகளே!

மாடுகள் மட்டும் அல்ல , ஆடு , கோழி , ஒட்டகம் என பல இந்திய கால்நடைகளும் ,விலங்குகளும் வணிக நோக்க இனப்பெருக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது , அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்!

Thursday, August 23, 2007

கடல் நீர் மட்டுமா , கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிக்கும்!

ரொம்ப நாளாக சர்வேசர் ஒரு பதிவை போட்டு கடல் ஏன் உப்பா போச்சுனு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கார் , இணையத்துல் விடை கிடைக்கும் என தெரிந்தும் அவர் பகுத்தறிவை நம்பாமல் கடவுளை கேட்கிறார் நான் எனக்கு தெரிந்த பகுத்தறிவை வைத்து (இணையத்தின் உதவியுடன்) ஒரு விளக்கம் சொல்கிறேன்.

கடல் உருவானது எப்படி:

ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல் .

கடல் உப்பானது ஏன்:

1)ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம், மழை பெய்து குளிரும் போது ,வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது.

2)கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன , அவை வெளியிடும் லாவக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.

3)கடல் வாழ் ஜீவாராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும்.

4)கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும்.

மேலும் கடலில் தான் நதிகள் கலக்கின்ற , கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை இதனால் நீர் வெளியேற்றம், சேர்ந்த உப்பு என எதுவும் வெளியேறது.

சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி.அவ்வாறு ஆவியாகும் போது , உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும். இது போன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில்ஆவியாதல் தவிர வேறு வழியில் நீர் வெளியேறி கொண்டு இருந்து இருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது.

தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும் , சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலைப்பு விகிதத்தில் இருக்கிறது.

கடல் மட்டும் அல்லாது சில ஏரிகளும் நீர் வெளியேற்றம் இல்லாது , ஆவியாதல் மட்டுமே நீர் இழப்பு என இருப்பதால் உப்பு மிகுந்து இருக்கிறது.great salt lake , dead sea ஆகியவை கடல் நீரை விட அதிகம் உப்பு அளவினைக்கொண்டுள்ளது.

கடல் நீர் உப்புக்கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிப்பது ஏன்?

கண்ணீர்:

கண்ணீர் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வருகிறது. அதில் உப்பு வரக்காரணம். நம் உடலில் இருக்கும் உப்பு தான்.நம் உடலில் உள்ள செல்கள் , மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது!

வியர்வை:

வியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது அதிலும் நம் உடலில் இருக்கும் உப்பு இருக்கும், மேலும் உடல் செயல் படுவதால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் யூரியாவும் கலந்து வரும் அதனால் வியர்வையும் உப்பு கரிக்கும்! அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி , தசை பிடிப்பு ஏற்படும் அப்பொழுது அதனை ஈடு செய்ய உப்பு சத்துள்ள திரவங்களை உட்கொள்ள வேண்டும்.

Monday, August 20, 2007

உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

முன்னோட்டம்:

ஓகை அவர்கள் ஒரு பதிவிட்டு அதில் தற்காலத்தில் கிராமத்தில் லாபமற்ற விவசாயம் செய்வதை விட நகரத்தில் சாலைப்போடுதல் , கட்டுமானம், கல் உடைத்தல், மூட்டை தூக்குதல் இன்ன பிற கூலி வேலை செய்வது நிறைவான வாழ்வை தரும் எனக்கூறியுள்ளார். அதனை செல்வன், தெ.கா மற்றும் வவ்வாலுக்கு சமர்ப்பணம் என வேறு அறிவித்து , கருத்துகளும் கேட்டுள்ளார்.
ஓகை அவர்களின் பதிவு
கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!
ஓகை அவர்களுக்கு மிக பெரிய மனது, மாற்று கருத்துகளை வரவேற்று இருக்கிறார். அவர் எதிர்பார்ப்பை வீண் ஆக்காமல் சில பல கருத்துகளை அள்ளி விட்டேன் ஆனாலும் நீளமாக போய்விட்டது எனவே தனியே ஒரு பதிவிடுகிறேன்.

உள்ளது உள்ளபடி:

இந்திய பொருளாதரத்தை விவசாய பொருளாதாரம் என்பார்கள் , 65 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பது விவசாயம். ஆனால் தற்போது விவசாயம் செய்வதர்கான இடு பொருள் , இன்ன பிற முதலீட்டு காரணிகளின் விலை ஏறிய விகிதாசாரத்தில் விளைப்பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. மேலும் இயற்கையின் திருவிளையாடல் வேறு மழை பெய்து கெடுக்கும் இல்லை காய்ந்து கெடுக்கும். எனவே விவசாயிகள் பலரும் நொடித்து போய் விட்டார்கள்.

சிரமப்படுபவனுக்கு உதவாமல் அவனை அதை விட்டு வெளியேற சொல்கிறார்கள். வேறு எந்த உற்பத்தி கூடத்திலும் உற்பத்தியை நினைத்தால் கூட்டலாம் , குறைக்கலாம் , அல்லது சிறிது காலம் மூடிவிட்டு தொடரலாம். தேவைக்கு ஏற்றார்ப்போல அதிகப்படியாக உழைத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தில் அப்படி எல்லாம் செய்ய முடியாது, 140 நாள் சாகுபடி நெல் என்றால் அத்தனை நாட்களுக்கு பிறகு தான் நெல் கிடைக்கும், நிலத்தில் ஓவர் டைம் வேலைப்பார்த்தாலும் அதன் உற்பத்தி காலம் குறையாது.

ஷூ போடுபவர் அது கிடைக்கவில்லை என்றால் செருப்பு போடலாம், தோலில் கிடைக்கவில்லை என்றால் ரப்பரில் போட்டு சமாளிக்கலாம் ஆனால் உணவுக்கு வேறு மாற்றே இல்லை. பசித்தால் சாப்பீட்டு தான் ஆக வேண்டும் ,அதுவும் எந்த உணவாக இருந்தாலும் நிலத்தில் இருந்து தான் வர வேண்டும். தொழிற்சாலையில் செயற்கையாக ஒரே ஒரு அரிசியை கூட உற்பத்தி செய்ய முடியாது.

எப்படி தமிழைப்படிக்காமல் ஒரு தலைமுறையே தமிழ் தெரியாமல் நாட்டில் உருவாகி வருகிறதோ அதே போல நகரத்திற்கு கூலி வேலை தேடி போய்விட்டால் ஒரு தலைமுறையே விவசாயம் தெரியாமல் உருவாகிவிட்டால் என்ன ஆவது. நாடு முழுக்க நிலம் தரிசாக கிடக்கும். உணவு தட்டுப்பாடு வரும்.

நம் சுய நலம் முன்னிட்டாவது விவசாயம் வாழ வேண்டாமா?

சரி விவசாயம் வாழ வேண்டும் அப்படி என்றால் விவசாயி கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டுமா? இல்லை அதற்கும் சில தீர்வுகள் இருக்கிறது.

தீர்வு:

ஒரு தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி சாத்தியம் ,செங்குத்து வளர்ச்சி, கிடைமட்ட வளர்ச்சி என்ற இரண்டு வகை சாத்தியம். விவசாயம் வெறும் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது அதில் இந்த இரண்டு வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.

செங்குத்து வளர்ச்சி:(vertical integration)

மாடு வளர்க்கிறார், பால் கறக்கிறார் ,விற்கிறார் இது சராசரி. அதுவே பால் கறந்து விறபதோடு , அதில் இருந்து தயிர், மோர் வெண்ணை , நெய், ச்சீஸ், பால்கோவா, பால் பவுடர் என அனைத்து பால் பொருட்களும் செய்து விற்றால் அது செங்குத்து வளர்ச்சி.

இதெல்லாம் கடினம் செய்வது முடியாது தொழில் நுட்பம் வேண்டும் என்று சொல்ல கூடியவை அல்ல. வெளி நாட்டில் எல்லாம் விவசாயிகள் செய்து விற்கும் ச்சீஸ், யோகர்ட் க்கு ஃபார்ம் யோகர்ட், ச்சீஸ் என்றே பெயர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இவை எல்லாம் குடிசை தொழிலாகத்தான் செய்தார்கள்.

சிறுவனாக இருக்கும் போது பார்த்து இருக்கிறேன் தலையில் கூடை வைத்து மோர், தயிர், நெய் எல்லாம் விற்றுக்கொண்டு ஒரு பெண் வருவார்கள். இப்போது அப்படி வருவது இல்லை ஏன். விளம்பரங்களில் வாழும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க நாம் பழகிக்கொண்டோம்!

கிடைமட்ட வளர்ச்சி!(horizontal integration)

மாட்டிற்கு என்ன வேண்டும், உணவு அதற்கு என்று தீவன புல்லும் வளர்க்கலாம். மேலும் செறிவூட்டிய தீவனம் தயாரிக்க மக்க சோளம், கம்பு போன்றவையும் வளர்க்கலாம் , தானியமும் கிடைக்கும் , தீவனமும் தயாரிக்கலாம். எண்ணை வித்துகள் பயிரிட்டு அதில் இருந்து எண்ணை எடுத்து விட்டு புண்ணாக்கை கால் நடை தீவனம் ஆக பயன்படுத்தலாம், அதிகப்படியை விற்கலாம்.

தனி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் இருக்கும் அவருக்கு இதெல்லாம் சாத்தியமா எனக்கேட்கலாம். சிறு விவசாயிகள் பத்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டாக இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு கடன் உதவியும் அரசு செய்யலாம்.மகளீர் சுய உதவிக்குழுக்கள் போல இது விவசாயிகள் சுய உதவி குழு!

இவை எல்லாம் சில உதாரணங்களே , இடத்திற்கு ஏற்றார்ப்போல இன்னும் என்ன என்னவோ எல்லாம் செய்யலாம்!

நிலத்தினை பன்னோக்கு வழியில் உபயோகிக்க வேண்டும்(integrated Farming)

விவசாயம் பண்ண தேவை நீர், ஆனால் அதற்க்கு தட்டுபாடு , தீர்வு, நமக்கு என சொந்தமாக ஒரு சிறு பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் அதில் மழை நீரை சேகரிக்கலாம். இருக்கிற ஒரு ஏக்கரில் இதெல்லாம் சாத்தியாமா எனக்கேட்கலாம், ஒரு ஏகர் என்பது 100 சென்ட், அதில் ஒரு 5 சென்ட் ஒதுக்கினால் கூட போதும்.

5 சென்ட்டில் குட்டை போட்டால் உற்பத்தி பாதிக்குமே என்பீர்கள், குட்டையை சும்மா விட்டால் தானே , அதில் மீன் வளர்க்கலாம். அந்த குட்டைக்கு மேலெ கம்பி வலை அமைத்து கூண்டில் கோழி வளர்க்கலாம்.கோழியின் கழிவு மீனுக்கு உணவு.

குட்டையின் கரை ஓரமாக மலர் செடிகள், தென்னை , வாழை என குறைந்த அளவில் போட்டாலும் உபரி வருமானம் தானே!

நெல் வயலாக இருந்தாலும் ஆங்காங்கே சில தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கலாம். நெல்லின் மலரிலும் தேன் உண்டு. மேலும் மகரந்த சேர்க்கையும் நன்கு நடக்கும்.

இதற்கு பெயர் தான் ஒருங்கிணைந்த விவசாயம்.



இதெல்லாம் ஏதோ நானே சொந்தமாக சொல்லவில்லை பல நூல்களிலும் இவை எல்லாம் இருக்கிறது. இவற்றை நடை முறைப்படுத்த ஆரம்பக்கட்ட பண உதவி தேவை , ஆலோசனை வழங்க வேண்டும் , ஒரு முறை செய்து பார்த்து விட்டால் , பின்னர் அவர்க்களே பிடித்துக்கொள்வார்கள்.

விவசாயி, விவசாய தொழிலாளி நகரத்திற்கு பிழைப்பு தேடி செல்வதால் ஏற்படும் பின்னடைவினை அடுத்துப்பார்ப்போம்

தொடரும்...

Friday, August 17, 2007

இயற்கை கொசு விரட்டிகள்!


செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.

பல மிக எளிமையான தீங்கற்றவை.

ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):

பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.

கொசு விளக்கு பொறி!

இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!

பெரோமொன் கொசு பொறி!

கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.

கொசுவின் இயற்கை எதிரிகள்:

உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.

அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்

நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.

உயிரி்ல் கொல்லி!

பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.

தாவரவியல் கொசு விரட்டி!

சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
mari gold flower
,ஹார்ஸ்மின்ட் ஆகிய தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.இவற்றில் இருந்து பெறப்படும் சாறுகளும் கொசு விரட்டப்பயன்படும்.


கொசு விழுங்கும் தாவரம்:

அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.

கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,

கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!

Wednesday, August 15, 2007

கொசு வி(மி)ரட்டும் வர்த்தி!


இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரணம் கிடைத்தாலும் . அதன் பின் விளைவுகளை யாரும் அறியவில்லை. கொசுவர்த்தியில் மறைந்து இருக்கும் பயங்கரம். என்ன?

கொசுவர்த்திகளில் கொசு விரட்டும் காரணிகளாக செயல்படும் வேதிப்பொருட்கள் என்ன ,

*சிந்தெடிக் D அல்லித்ரின்
*ஆக்டோ குளோரோ - டை- ப்ரோபைல் ஈதர் அல்லது s-2
இவை எரியும் போது ஏற்படும் வேதி வினையால் உருவாகி வெளியிடும் வேதிப்பொருள் பை - குளோரோ மெதைல் ஈதர்

இந்த வேதிப்பொருட்களை தொடர்ந்து மூடிய அறையில் இரவு முழுவதும் சுவாசித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து ,மேற்கொண்ட வேதிப்பொருட்களை கொசுவர்த்தியில் பயன்படுத்த தடை விதிக்க செய்துள்ளார்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில்.

ஆனால் இந்தியாவில் இப்ப்டி எந்த தடையும் இது வரை கொண்டு வரவில்லை. நாம் தினசரி கொசுவர்த்தி புகையினை இன்பமாக நுகர்ந்து வருகிறோம்!

இந்த வேதிப்பொருட்கள் ஒரு பக்கம் தீங்கு விளைவிக்கிறது என்றால் , கொசுவர்த்தி சுருளின் அளவுக்கு ஏற்ப ஒரே ஒரு கொசுவர்த்தீ எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் என்பது கீழே கொட்டும் சாம்பல் அல்ல நுண்ணிய காற்றில் மிதக்கும் சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய் and cancer போல நோய்கள் வரலாம்.

மேலும் கொசு வர்த்தி எரிவதனால் ஃபார்மல் டி ஹைட் என்ற வேதிப்பொருளும் பக்க விளைபொருளாக வரும்.

கொசுவை விரட்ட என்று காசு கொடுத்து கொசு வர்த்தி வாங்க போய் என்னவேல்லாம் இலவசமாக கிடைக்கிறது பாருங்கள்.

அப்படி என்றால் கொசுவிடம் இருந்து தப்பிக்க என்ன தான் வழி.

1)கொசு உற்பத்தி ஆகும் இடங்களிலே அழிப்பது,
2)கொசு உருவாகாமல் சுத்தமாக சுற்று புறத்தினை வைத்துக்கொள்வது.
3)கொசு வலை பயன்படுத்துவது.

Tuesday, August 14, 2007

நாற்று நடும் எந்திரம் !

paddy seedling transplanter

இந்தியாவில் நெல் வயலில் நாற்று நடுவதற்கு மனித சக்தியே இதுவரைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் நடவின் போது பாடுவதற்கு நாட்டுப்புற பாடல்கள் கூட உண்டு!

தற்போது நாற்று நட எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது, நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம் , ஜப்பான், சீனா , கொரியா போன்ற நாடுகளில் 1970 களில் இருந்தே எந்திர நடவு நடை முறையில் உள்ளது!

நாற்று நடுவது உடல் வலிக்கொடுக்கும் ஒரு வேலை, குனிந்தவாறே தொடர்ந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களின் உடல் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் இதனை எளிதில் செய்வார்கள் எனவே நடவிற்கு பெண்களே அதிகம் நடவு வேலைக்கு பயன்படுத்தப்படுவார்கள்.

நடவு எந்திரத்தில் இரண்டு வகை உள்ளது,

  1. மனித சக்தியால் இயங்குவது ,
  2. எந்திர சக்தியால் இயங்குவ்து.
இரண்டும் செயல்படும் தத்துவம் ஒன்றே!

எந்திர நடவிற்கு சாதாரணமாக வளர்க்கப்படும் நாற்றை பயன்படுத்த முடியாது , இதற்கென தனியாக நாற்று வளர்க்க வேண்டும். அதனை பாய் நாற்று என்பார்கள்.

அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் விரிப்பின் மீது நன்கு உழுத மிருதுவான வயல் மண்,மணல் , தொழு உரம் இவற்றை கலந்து பரப்பி ஒரு மண் படுக்கையை 3 cm உயரத்திற்கு உருவாக்க வேண்டும். அதன் மீது முளைக்கட்டிய விதைகளை தூவி ,விதைகளை மூடுவது போல சிறிது மண் தூவ வேண்டும். பின் வழக்கம் போல நாற்றுகளை வளர்க்க வேண்டும். இதற்கு குறைவான நீரே போதும் , பூவாளி எனப்படும் நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்தாலே போதும்.

நாற்றுகள் வளர்ந்தவுடன் இரண்டு அடி நீளம் , 1 அடி அகலம் வருவது போல பத்தைகளாக நாற்றுடன் வெட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.

நாற்று நடும் எந்திரம்:

ஒரே நேரத்தில் எட்டு வரிசைகளில் நடும். சாய்வான நாற்று வழங்கும் வார்ப்புகள் இருக்கும். நாற்றை மனித விரல்கள் போல் எடுக்க 3 முனைகள் கொண்ட பிக்கர் (picker)எனப்படும் கொக்கிகள் இருக்கும். நாற்றுபத்திகளை அடுக்கிகொண்டு எந்திரத்தை ஓட்டி சென்றால் மட்டும் போதும். 3 மணி நேரத்தில் ஒரு ஏக்கரில் நடும். நாற்று வரிசைக்கிடையே உள்ள இடை வெளி(24 cm), ஒரு நாற்று முடிச்சில் எத்தனை நாற்று(3 or 5) இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை நாம் அமைத்து கொள்ள முடியும்.

ஒரு நாற்று நடும் எந்திரத்தின் விளை 80,000 - 1,50,000 Rs/- வரை எஞ்சின் திறனுக்கு ஏற்ப கிடைக்கிறது.

வழக்கமாக நடவு வேளைக்கு கூலியாக சுமார் 1500 ரூபாய் ஆகும். இதன் மூலம் 600 ரூபாயில் முடித்து விடலாம். இந்தியாவில் நிறைய மனித ஆற்றல் இருந்த போதிலும் தற்போது பெரும்பாலோர் நகரங்களுக்கு இடம் பெயர்வதால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது , இத்தகைய சூழலில் நடவு எந்திரம் உதவும்!

டா பே, எஸ்கார்ட்ஸ், போன்ற டிராக்டர் தயாரிப்பாளர்கள் இந்த எந்திரங்களை தயாரிக்கிறார்கள்.
*****

Monday, August 13, 2007

ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி

பொக்காலி நெல் வயல்

ஆழ் நீர் நெல் சாகுபடி என்று ஒரு முறை உள்ளது , பிலிப்பைன்ஸ், தாய்லாந், பர்மா , போன்ற நாடுகளில் அதிகம் , இந்தியாவின் கடலோரம் உள்ள சில தாழ்வான நிலப்பகுதிகளிலும்(w.bengal,kerala) செய்யப்படுகிறது.கேரளாவில் ஆலப்புழா,எர்ணாக்குளம், திரிசூர் பகுதிகளில் அப்படி செய்யப்படும் சாகுபடிக்கு பொக்காலி நெல் என்று பெயர்.

அதிலும் கடலோரமாக உள்ள கழிமுகம் பகுதிகளில் கடல் நீர் புகுந்து தேங்கி உள்ள உப்பு நீரில் பொக்காலி விவசாயம் நடக்கும். இந்த நெல் வகை அதிக உப்பு சகிப்பு தன்மை கொண்டது. வேறு எந்த வகையும் இப்படி தாங்கு திறன் கொண்டது அல்ல.

இம்முறை ஒரு இயற்கை விவசாயம் ஆகும். பூச்சி மருந்து, உரம் பயன்படுத்தபடுவதில்லை.இம்முறையில் நெல்வயலில் மீன், இறால் போன்றவையும் சேர்த்து வளர்க்கப்படும் அவ்வளவு நீர் வயலில் தேங்கி இருக்கும். குறைந்த பட்சம் 30 cm நீர் நிற்கும்.பல இடங்களில் நெல் வரப்புகளுக்கு இடையே படகில் போய் அறுவடை செய்வார்கள்

எப்படி இறால், நெல் சாகுபடி நடக்கிறது எனப்பார்ப்போம்.

நீர் தேங்கி உள்ள வயலில் வரிசையாக வரப்புகள் போல உருவாக்கி அதில் நெல் நடப்படும். இடை உள்ள நீர் தேங்கியுள்ள வாய்க்கால் போன்ற பகுதியில் இறால்,/ மீன் வளர்க்கப்படும். நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் அப்படியே நீரில் விடப்படும் அது மக்கி புழு உருவாக உதவும் அது இறாலுக்கு உணவு. இறால் வெளியிடும் கழிவுகள் நீரில் கலந்து நெல்லுக்கு உரம் ஆகும். இறால் கழிவுகளில் அதிகம் நைட்ரஜன் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்து அது!இவ்வாறு உப்பு நீர் தேங்கி உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதால் அப்பகுதியின் உப்பு தன்மை மேலும் அதிகரிக்கபடாமல் தடுக்கப்படுகிறது.

சராசரியாக 200 கிலோ இறால் கிடைக்கும் ஒரு கிலோ 400 - 500 ரூபாய்க்கு விற்கப்படும். நெல் ஒரு கிலோ 5 - 7 ரூபாய் , இரண்டு டன் வரை நெல் அறுவடை ஆகும்.இதன் மூலம் விவசாயிக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

பொக்காலி நெல்வகை - IR 64,
இறால் வகை - வெள்ளை இறால், டைகர் இறால்

கேரள அரசு பொக்காலி நெல் சாகுபடிக்கு தற்போது பல உதவிகளும் , ஆர்கானிக் ஃபார்மிங் என்பதால் பொக்காலி நெல் விற்பனைக்கு சிறப்பு சந்தைகளும் உருவாக்கி தருகிறது.மேலும் அறிவுசார் காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது.

Sunday, August 12, 2007

இயற்கை விவசாயம் செய்யலாமா?

இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே, அதில் அதிகம் பயன்படும் ஒரு இயற்கை நோய் எதிர்ப்பு, வளர்ச்சி ஊக்கி பஞ்சகவ்யம் .இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது .அதனை தயாரிப்பதை எப்படி என்று பார்ப்போம்!

பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.

மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:

மூலப்பொருள்:

*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்

இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!

தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!

ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.

மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!

பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!


பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.

Saturday, August 04, 2007

மெதுவாக போகும் நத்தையின் அதிவேக விஷம்!

ஈ - மெயில் வந்த பிறகு... சாதாரண தபால்களை எல்லாம் ஸ்னெயில் மெயில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த நத்தை அத்தனை சாதாரணமானது இல்லை. படா கில்லாடி. அதற்கென பல சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டது.இதனை வீட்டு தோட்டங்களிலும், வயல் வெளிகளிலும் பார்த்து இருக்கலாம்.

மோலஸ்க் பைலம் என்ற தொகுதியில் ஒரு வகையான கேஸ்ட்ரோபோட்ஸ் (gastropods.) என்ற வகையை சார்ந்தது தான் நத்தை.இதற்கு தூரத்து சொந்தம் ஆக்டோபஸ். கிரீக்கில் காஸ்ட்ரோ என்றால் வயிறு, போடோஸ் என்றால் கால்கள் , வயிற்றில் கால்களைக்கொண்டது என பொருள். நத்தை வயிற்றின் மீது தான் ஊர்ந்து செல்கிறது, அதன் வாயும் அங்கே தான் இருக்கிறது, தட்டு , ஸ்பூன் எல்லாம் வைத்து சாப்பிடாது, அதன் சாப்பாடே தட்டு தான் , எதன் மீது ஊர்ந்து செல்கிறதோ அதனை உண்ணும்.

நில நத்தைகள், கடல் நத்தைகள் என்று இரண்டு வகை உண்டு , வயல்களிலும் தோட்டத்திலும் காண்பது நிலவகை. முன்னால் இரண்டு நுகர் உணர்வு கொம்புகள் உண்டு அதன் முனையில் சக்திவாய்ந்த கண்கள் உண்டு!அவை ஊர்ந்து செல்லும் போது ஒரு கோழை படிவத்தை விட்டு செல்லும் அது எளிதாக நகர உதவுகிறது.மேலும் அதன் உடல் உலராமல் இருக்கவும் பயன்படுகிறது.கோடைகாலத்தில் நீண்டகால உறக்கத்தில்(hybernation) சென்று விடும் நத்தை அப்போது இந்த கோழைபடிவத்தை வைத்து தான் உடலை போர்த்திக்கொள்ளும். மீண்டும் மழை பெய்தவுடன் வெளிவரும்.

* ஒரு நத்தையால் கூர்மையான பிளேடு் ஒன்றின் விளிம்பில் கூட நகர்ந்து செல்ல முடியும் அத்தனை வலிமையானது அதன் பாதங்கள் மற்றும் அடிவயிறு!

*மூல வியாதிக்கு நத்தை கறி சாப்பிடுவது இன்றும் இருக்கும் நாட்டு வைத்தியம்!

* சில நத்தைகள் விஷத்தன்மை கொண்டது , பெப்டைட்(peptides) வகை விஷம்.அதிலும் கடலில் வாழும் கூம்பு வடிவ நத்தையின்

கூம்பு வடிவ நத்தை

(Conus magus,
Conus geographus) விஷம் வீரியமானது அதன் இரைகளை விஷம் கொண்ட நாக்கால் அம்புவிடுவது போன்று விட்டு தீண்டி செயலிழக்க செய்து சாப்பிடும். அதன் விஷம் ஒரு வினாடியில் 10 இல் ஒரு பகுதி நேரத்தில் தாக்கி செயலிழக்க செய்யும், இயற்கை விஷத்தில் வேகமானது இது தான். ஆனால் மனிதர்களை தாக்குவதில்லை. தெரியாதனமாக நாமே கையால் தொட்டு கொட்டு வாங்கினால் உடல் உறுப்புகள் செயல் இழக்கப்படலாம்,மரணம் வெகு அரிதே!

* இந்த விஷத்தையும் விஞ்ஞானிகள் சும்மா விடவில்லை ஆராய்ந்து பார்த்து உடல் வலி நீக்கும் வலி நிவாரணி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.ரியால்ட் (Prialt ) என்று பெயர்.முதுகெலும்பு வலிக்கு நல்ல மருந்தாம்.

*நத்தைகளில் ஆண் பெண் என்று தனியே கிடையாது , ஒரு நத்தையிடமே ஆண்,பெண் பால் உறுப்புகள் (hermaphroditic.) இருக்கும். இரண்டு நத்தைகள் சேர்ந்தும் இனப்பெருக்கம் செய்யும், ஒரே நத்தையே அதன் ஆண்,பெண் உறுப்புகளைக்கொண்டு தனக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியும்!

Sunday, July 29, 2007

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!

மேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல்.
spotted deer
பொதுப்பெயர் - அறிவியல்பெயர்

1)ஆசிய யானை - எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus)

2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana)

3)நீர் யானை - ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius)

4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis)

5)கருப்பு கரடி - உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus)

6)பாண்டா கரடி - ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca)

7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus)

8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris)

9) பேக்டீரியன் ஒட்டம் - கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus)

10) வரிக்குதிரை - ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus)

11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla)

12) இந்திய நரி - வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis)

13) சிறுத்தை - பாந்ரா பார்டுஸ் (panthera pardus)

14)புலி - பாந்ரா டைகரிஸ் (panthera tigeris)

15)சிங்கம் - பாந்ரா லியோ (panthera lio)

16)வீட்டு எலி - முஸ் முஸ்குலஸ் (mus musculas)

17)மான்(Sambar) - செர்வஸ் யுனிகலர் (cervus unicolor)

18) புள்ளி மான் - செர்வஸ் ஆக்சிஸ் ஆக்சிஸ் (cervus axis axis)

Thursday, July 26, 2007

ஆத்தா ஆடு ,வளர்த்தா , கோழி வளர்த்தா .. பேரு வைச்சாங்களா...

அன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இருப்போம் அவற்றின் விஞ்ஞான பெயர்களை நினைவு கூர்வதில்லை, ஆத்தா வளர்த்த ஆடு ,கோழிக்கு என்ன அறிவியல் பேருனு தெரிஞ்சுக்கலாமா!

பொதுப்பெயர் - அறிவியல்ப்பெயர்

1)கோழி - கால்லஸ் டொமெஸ்டிகஸ் (Gallus domesticus)

2)வான்கோழி - மெல்லெக்ரிஸ் காலோபோவா (Melleagris gallopavo)

3)புறா - கொலம்பியா லிவியா ( Colombia livia)

4)வாத்து - ஆனஸ் பிளாடிரிங்கா(Anas platyrhyncha)

5)ஆடு - ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries)

6) செம்மறி ஆடு - கேப்ரா ஹிர்கஸ் (Capra hircus)

7) முயல் - ஒரிக்டோலாகஸ் க்யுனிகுலஸ ( Oryctolagus cuniculus)

8)பன்றி - சூஸ் க்ரோபா (Sus scrofa)

9) எறுமை - பபலஸ் பபாலிஸ் (Bubalus bubalis)

10)மாடு - போஸ் இன்டிகஸ் ( Bos indicus)

11) எருது - பைசன் பைசன் ((Bison bison)

12)குதிரை - ஈக்கஸ் கேபலஸ் (Equus caballus)

13) கழுதை - ஈக்கஸ் அசினஸ் (Equus asinus)

14) நாய் - கேனிஸ் பேமிலியாரிஸ் ( Canis familiaris)

15) பூனை - பெலிஸ் கேடஸ் (Felis catus)

கடைசியா சிங்கிளா வர சிங்கத்துக்கு பேரு தெரிஞ்சிக்காம போக கூடாதுல,

சிங்கம் - பேந்த்ரா லியோ (Panthera lio)

Tuesday, July 17, 2007

ஓடு பாதை இல்லாமல் மேலெழும்பும் விமானங்கள்!

( விமானம் தாங்கி கப்பலின் ஓடு தளம்!)


சென்னைக்கு அமெரிக்காவின் USSநிமிட்ஸ் CVN- 68 என்ற அணு ஆற்றல் விமானம் தாங்கி கப்பல் வந்து சென்றதை அனைவரும் அறிவார்கள். சாதாரணமாக நீண்ட ஓடுபாதை தேவைப்படும் விமானங்கள் எப்படி ஒரு கப்பலின் மேல் தளத்தில் உள்ள குறுகிய பறப்பில் இருந்து பறக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். இதற்காக சில சிறப்பு உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

முதல் விமானம் ஒரு கப்பலின் மேல் தளத்தில் இருந்து பறந்தது 1910 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று USS பிர்மிங்காம் என்ற கப்பல் தளத்தில் இருந்தே , விமானத்தை ஓட்டியவர் யூஜென் எலி(eugene ely) என்பவர். கப்பல் மேலிருந்து ( முதல் விமானம் தாங்கி USSபர்மிங்காம் கப்பல்.)

கிளம்பியதும் கிட்டத்தட்ட கடலில் விமானம் விழுந்து பின்னர் திறமையாக தண்ணீர் பறப்பை முத்தமிட்ட விமானத்தை மேலே கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டும் பறந்தாலும் சரித்திரம் படைத்து விட்டார்.

விமானாம் தாங்கி கப்பல்கள் சாத்தியம் என்பதை இதன் பின்னரே உணர்ந்து ராணுவத்தில் பயன்படுத்தப் பட்டது.

சாதாரணமாக 3000 - 4000 மீட்டர் ஓடுதளம் தேவை ஆனால் மிகப்பெரிய கப்பல் ஆனா நிமிட்சில் உள்ள ஓடுதளம் 320 மீட்டர் தான் எனில் எப்படி விமானங்கள் குறுகிய தூரத்தில் மேல் கிளம்பும்?( நேரான ஒரு ஓடுபாதை படம்)

ஆரம்ப்பத்தில் இலகுவான போர்விமானங்களை மேலே கிளப்ப சற்றே சாய்வான ஓடு தளம் அமைத்தார்கள், அதன் மூலம் கூடுதல் விசை கிடைக்கப் பெற்றது.
(சாய்வான ஓடுபாதை படம்.)

அதிக ராணுவ தளவாடங்கள் ஏற்றி செல்லும் போது இவ்விசை பற்றவில்லை, எனவே கவன்கல் நுட்பம்(catapult)
எனப்படும் ஒரு உத்தியை பயன்படுத்தி மேலே கிளப்பினார்கள்.

கப்பல் மேற்தளத்தில் உள்புதைந்த வாறு ஒரு பிஸ்டன் போன்ற அமைப்பு இருக்கும் அதனுடன் விமானத்தின் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் ,அந்த பிஸ்டன் மிகவேகமா முன் செல்லும் அதனுடன் இனைந்த விமானமும் முன் எடுத்து செல்லப்படும் , விசையுடன் உந்தி தள்ளிவிட்டு இணைப்பு விடுவித்துக்கொள்ளும்.

இதிலும் நவினமாக லீனியர் மோட்டார் இழுவை என்ற உத்தியும் பயன்படுகிறது ,இதன் அடிப்படையில் தான் புல்லட் டிரெயின்கள் வேகமாக இயங்குகிறது.

இது போன்ற முறைகள் இல்லாமல் சில சிறிய ராக்கெட்டுகளை விமானத்தின் பக்கவாட்டில் பொருத்தி குறைந்த தூரத்திலும் மேல கிளப்புவார்கள்(RATO = rocket assisted take off). இத்தகைய ராக்கெட்டுகளுக்கு பூஸ்டர் ராக்கெட் என்பார்கள்.
(ராக்கெட் உதவியுடன் மேலெழும்பும் விமானம்!)

அப்துல்கலாம் இந்திய விமானப்படைக்காக இந்தியாவிலேயே பூஸ்டர் ராககெட்டுகளை வடிவமைத்ததில் ஈடுபட்டவர். பின்னாளில் அந்த பூஸ்டர் ராக்கெட்டுகள் தான் அக்னி ஏவுகணைகளாக மேம்படுத்தப்பட்டது. அக்னி சிறகுகள் புத்தகத்தில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளார் கலாம்.

இதே போன்று ஜெட் உதவியுடன்


விமாங்கள் மேலே கிளப்புவதும் உண்டு. (JATO = jet assisted take off)

இது சாதாரணமாக வடிவமைக்கப்பட்ட போர் விமானங்களை குறைந்த தூரத்தில் மேலே கிளப்புவது . ஆனால் இது போன்று ஓடுபாதையே இல்லாத இடத்திலும் மேலே கிளம்பும் வகையில் வடிமைக்கப்பட்ட சிறப்பு விமானங்களும் உள்ளது அவை வெர்டிகலாக மேலே கிளம்பும் ஹெலிகாப்டர்கள் போன்று, அவற்றின் மூக்கிலும் பெரிய புரொபெல்லர்கள் இருக்கும்.

மின்காந்த சக்தி கொண்டு விமானத்தை செலுத்தும் முறை ஒன்று ஆய்வில் உள்ளது , பரிசோதனைகள் வெற்றி அடைந்தால் அம்முறையில் போர் விமானங்கள் குறைந்த தூரத்தில் மேல் கிளம்பும்!

Thursday, July 12, 2007

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

மின்சாரம் இல்லாத உலகில் இனி மனிதன் இருக்க மாட்டான் , நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டேயுள்ளது , பொறக்கும் போதே கைல செல்ஃபோன், கம்பியூட்டர் நு தான் பொறக்குறாங்க இப்போ, எல்லாத்துக்கும் மின்சாரம் வேணுமே, அரசு இலவச மின்சாரம் தருமா? அதுக்கு எங்கே போகும், ஆனால் கடல் தரும் மின்சாரம் அதுவும் இலவசமா, இது ஒரு மின்சார கனவு இல்லை , உண்மை!

பொதுவா மின்சாரம் , அனல் ,புனல்( எண்ணை ஊத்துற புனல் இல்லிங்கோ), அணு மின்சாரம் எனத்தான் தயாரிக்கப்படுகிறது , இவைகளால் பல சுற்று சூழல் மாசு ஏற்படுவதால் , தற்போது மரபு சாரா மின் உற்பத்தி பக்கம் அரசாங்கம் திரும்பியுள்ளது.

அப்படி மரபு சார மின்சார தயாரிப்புகளில்,

காற்றாலை,
சூரிய சக்தி ,
புவி வெப்ப சக்தி ,
கடல் அலை மின்சாரம் என தயரிக்கப்படுகிறது.

இப்பொ அலை அடிச்சா ஷாக் அடிக்கும் மின்சாரம் எப்படினு வருதுனு லேசா பார்ப்போம்!

கடலும் ,ஆறும் சந்திக்கும் இடங்கள் , அல்லது கடலை ஒட்டியுள்ள கடல் நீர் ஏரிகள்(லகூன்)
ஆகியவற்றில் ஒரு தடுப்பணைக்கட்டுவார்கள் அதில் ஒரு வாய்க்கால்,அல்லது குழாய்களை அமைத்து அதனுடன் டர்பைன் பொருத்தி அதனைக்கொண்டு மினுற்பத்தி செய்வார்கள்.இதனல் சில சுற்று சூழல் பாதிப்பு உண்டு , கழிமுகஙளில் வரும் பறவைகள் ,மற்றும் அது சார்ந்த உயிர் மண்டலம் பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்க கடலில் அலை மின்சார உற்பத்தி மைங்களை தற்போது அமைக்கிறார்கள்.

நடுக்கடலில் தூண்களை அமைத்து அதனுடன் டர்பைன் மற்றும் ஜெனெரேட்டர்கள் பொருத்தி நீர் அடி நீரோட்டத்தின் விசையை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள், இதிலும் ஒரு மேம்பாடு செய்து நீரில் மூழ்கி இருக்கும் டர்பைன்களும் அமைக்கிறார்கள்.



நல்ல கடல் அடி நீரோட்டம் ,அலையடிக்கும் இடங்களில் மிக பெரிய அளவில் மின்னுற்பத்தி செய்யலாம்.

நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு சக்தி மாறுபாடுகளினால் அலை உற்பத்தி ஆகிறது எனவே ஒரு முறை அமைத்து விட்டால் காலா காலத்திற்கும் இலவச மின்சாரம் தான்!