Friday, November 18, 2011

சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?
சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்10 (எவனாவது சண்டைக்கு வந்தா உதைப்படுவான்)

காரணம் இணைக்கும் போது ஏதும் சொல்லாமல் இணைந்த பிறகு 10 பேருக்கு ஓட்டு போட்டால் தான் உங்க பதிவை இணைப்போம்னு சொல்றாங்க!

அந்த திரட்டி நிர்வாகிகள் அவங்க பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்யும் போது மண மகனிடம் இப்படி 10 பேரை என கண்டிஷன் போடாமல் இருக்க கூகிளாண்டவர் அருள் புரியக்கடாவது!

அப்புறம் மக்கள் னு ஒரு திறட்டி அங்கே போனா ரொம்ப கொடுமையா இருக்கு, எல்லாம் ஏதோ கில்மா டோரண்ட் போல பதீவ போடுறாங்க, கொடுமை என்னான பதிவில தமிழ் தப்பா இருக்குனு சண்டைக்கு வருவாங்க,அங்கே திரட்டிலவே தப்பா இருக்கு தமிழ்!

இண்டலி .என்னையா இது அகில இந்திய பாரதிய வித்யாபவன், போல ஆரம்பிச்ச்சுட்டு, ஓவரா கடிக்கிறாங்க! அவங்க கேப்சாவிலா தப்பா போட்டா கூட தப்புனு மெசேஜ் வர மாட்டேங்குது , ரொம்ப பயங்கரமான டெக்னாலஜியா இருக்கும் போல :-))


யுடான்ஸ் லேட்டஸ்டாக ,பதிவர்களுக்காக ,பதிவர்களால் என்று கிளம்பி இருக்கு, இது நல்லா இருக்காப்போலவும் இருக்கு இல்லாதது போலவும் இருக்கு :-))

ஏன் கேட்டிங்கண்ணா பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுது, எவன் படிப்பான், இல்லை என் பதிவை எத்தன பேரு படிப்பான்னு எனக்கு தெரியாதா?

ஆனால் எனக்கு ஒரு கமெண்ட் கூட இருக்காது, அதே சமயத்தில் தமிழ் மணத்தில் இணைத்தவுடன் கமெண்ட் வரும்!(ஓட்டுக்கு யுடான்ஸ், கமெண்டுக்கு தமிழ்மணமா)

இது எப்படி உனக்கு தெரியும் நீ என்ன ஜேம்ஸ்பாண்டா என்றெல்லாம் கேட்காதிங்க, என் பதிவு தமிழ் மணத்தில 30 நிமிடம் தாமதமாக வரும் காரணம் நான் அப்போ 2006 ல பதிவு பண்ண ஆளூ,நடுவில வரலை,எனவே இப்போ மெதுவா தமிழ் மணத்தில காட்டும். எனவே யுடான்ஸ்ல 2 டூ 3 ஓட் வாங்கின பிறகு தான் தமிழ்மணத்தில வரும், சில - ஆர் + ஓட்டுகள் காட்டும், கமெண்டுகள் காட்டும்.

என்னைப்பொறுத்த வரைக்கும் - ஆர் + ஒன்றுமே இல்லை, எல்லாம் என் ஓட்டு பொட்டில விழுந்த பிறகு அதுல என்ன மைனஸ் ஹி..ஹி!(எல்லாம் என்னோட ஓட்டு,மொத்தமா கூட்டிப்பேன்)

யுடான்ஸ்ல பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுவது எப்படி, அது நம்ம ஓட்டா? தமிழ் மணம் சேர 30 நிமிடம் ஆகும் அதுக்கு இடையில 2-3 என யுடான்ஸ்ல ஓட்டு மட்டும் வரும் ஆனால் கமெண்ட் வராது. ஆனால் தமிழ் மணத்துல சேர்ந்த உடன் சில கமெண்ட்ஸ் வரும்.எனவே என்ன பொறுத்த வரைக்கும் தமிழ்மணம் தான் சரியா என்னை கொண்டு போய் சேர்க்கிறது.

என்னோட தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தமிழ் மணம் எல்லாப்பதிவருக்கும் இலகுவா இருக்கு, அந்த அளவுக்கு மற்ற வலைத்திரட்டிகள் இல்லைனே சொல்வேன்.

அடுத்து யுடான்ஸ் இருக்குனு நினைக்கிறேன்! காரணம் நான் இந்த இரண்டில் மட்டுமே எளிதாக சேர்ந்துள்ளேன்! மற்ற இணைய உலக ஜாம்பவான்கள் என்னை புறக்கணிக்க வேண்டும்!

19 comments:

முரட்டுக்காளை said...

என்னய்யா ஐதிங்கு, ரெண்டு வருஷமா ஆளை காணோம், நீள் உறக்கமா இல்லை பாண்டி சரக்கால உண்டான மட்டையா? புழல், பாளையங்கோட்டை, வேலூர், கோயம்புத்தூர் ன்னு மத்திய சிறை விசிட் ஆ? சும்மா அறிவியல் அவியல் பொரியல் ன்னு திரும்பவும் கொட்டம் ஆரம்பிச்சிட்டீரா? உம்மை திருத்தவே முடியாது சாமி. யாஹூ ல இருந்து காணாம போனதுக்கு என்ன காரணம் அய்யா ? இப்பல்லாம் வரீரா?

இப்படிக்கு

முரட்டுக்காளை

வவ்வால் said...

புல்ஸ் சாமியோவ்,

வாங்க ..வாங்க, நலமா? நீள் உறக்கம் , கிறக்கம் எல்லாம் ஓவர், தேசாந்திரம் போயிருந்தேன், அதான் வரலை.

என்ன ஓய் நீர் பாளையங்க்கோட்டை, வேலூர்னூ ஏதோ நில அபகரிப்பு பிரமுகர் போல சொல்லிக்கிட்டு, ஏன் திகார் எல்லாம் போக மாட்டோமா, தகுதி இல்லையா என்ன?

இப்போ யாஹுல ஊளையிட ஆரம்பிச்சாச்சு, குயில்கள் தான் ஒன்னியும் காணோம். பீக்ஸ்,டீகேஸ்,ஆலம் கூட தான் மொக்கை ஒடுது :-))

நீரும் வாரும் கோரஸ்சா மொக்கைப்போடலாம் !

SURYAJEEVA said...

நல்ல அலசல், நான் எந்த திரட்டிகளிலும் இணைப்பதில்லை என்று முடிவெடுத்து வெகு நாட்களாகி விட்டது...

வவ்வால் said...

வாங்க சூர்யா,

நன்றி!வணக்கம், நானும் பிராபல்யம் ஆகலாம்னு ஒரு நப்பாசையில தான் திரட்டிகள் பக்கம் போய்ப்பார்த்தேன் எதுவும் செட் ஆகலை, தமிழ்மணமே பெஸ்ட் னு இங்கேயே குந்திட்டேன். இப்போ யுடான்ஸிலும் துண்டுப்போட்டு இருக்கேன் :-)).

நீங்கபசித்திரு, தனித்திரு ,விழித்திருனு தீவிர கொள்கையாளர் போல , நான் எல்லாம் போகிற போக்கில்ல எல்லாம் பார்ப்போம் வகை.

Robin said...

தமிழ்மணத்திற்குதான் முதலிடம்.

அனேகமாக சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட ஒரே திரட்டி தமிழ்மணமாகத்தான் இருக்கும்!

வவ்வால் said...

ராபின்,

உண்மைத்தான் தமிழ்மணமே முதலில் இருக்கு,அப்புறம் யுடான்ஸ், இரண்டுமே எளிமையாக ,எந்த இடியாப்பமும் பிழியாமல் செயல்படுகிறது.

காய்த்த மரம் தானே கல்லடிப்படும்! அதான் தடை ,வடை எல்லாம்!

Cable சங்கர் said...

நன்றி தலைவரே.. நிச்சயம் குறைகள் களைந்து மேலும் மேம்படுத்தப்படும் உங்களைப் போன்ற பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டி.

Vidya Poshak said...

Nice to see you after a long time ... good review

CS. Mohan Kumar said...

Indli is also good as mentioned in my todays post. It brings lot of new visitors to our blog.

வவ்வால் said...

வாங்க கேபிள்,

நன்றி, வணக்கம்,

யுடான்ஸ் எளீமையாக , எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கு மேம்படுத்த நிறைய வாய்ப்புகளும் இருக்கு.குறுகிய காலத்திலேயே தமிழ்மணத்திற்கு அடுத்து என சொல்லும் நிலைக்கு வந்துள்ளதே நல்ல முன்னேற்றம் தானே.தன்னார்வமாக செயல்படுவது பாராட்டுக்குரியது.தொடர்ந்தது சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.

வவ்வால் said...

வெங்கி,

வாங்க, நன்றி,வணக்கம், உங்களைப்போன்றவர்கள் ஆதரவு இருக்கும் போது பிலாக் விட்டு ஓடிருவனா :-))

ஏதொ எனக்கு ஏற்பட்ட அனுபவம், பயன்பாட்டின் அடிப்படையிலேயே சொல்லி இருக்கேன், ஆளுக்கு ஆள் விருப்பம்,தேவைகள் மாறுபடலாம்.

வவ்வால் said...

மோஹன் குமார்,

வாங்க, நன்றி,வணக்கம்.

உங்க அலசலும் பார்த்தேன், நான் எங்கே இருந்து எப்படி வராங்க என்பதெல்லாம் பார்ப்பதில்லை, எல்லாருக்கும் ஒரே வழிலவும் வருவதில்லை.நான் பயன்ப்பாட்டுக்கும், சேர்வதற்கும் எளிதாக , ஒரு நல்ல அறிமுகம் தரும் திரட்டி எது எனப்பார்க்கிறேன். தமிழ்மணம் பதிவர்கள் சேர்க்கைல மட்டும் இல்லை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதிலும் முன்னணீல இருக்கு, அதனாலேயே முதலிடத்தில இருக்குனு நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்10 (எவனாவது சண்டைக்கு வந்தா உதைப்படுவான்)//

அல்லக்கை நான் இருக்கேன்!இன்னும் சவுண்டா உதார் வுடுங்க:)

ராஜ நடராஜன் said...

//என்னய்யா ஐதிங்கு, ரெண்டு வருஷமா ஆளை காணோம், நீள் உறக்கமா இல்லை பாண்டி சரக்கால உண்டான மட்டையா? புழல், பாளையங்கோட்டை, வேலூர், கோயம்புத்தூர் ன்னு மத்திய சிறை விசிட் ஆ? சும்மா அறிவியல் அவியல் பொரியல் ன்னு திரும்பவும் கொட்டம் ஆரம்பிச்சிட்டீரா? உம்மை திருத்தவே முடியாது சாமி. யாஹூ ல இருந்து காணாம போனதுக்கு என்ன காரணம் அய்யா ? இப்பல்லாம் வரீரா?

இப்படிக்கு

முரட்டுக்காளை//

பின்னூட்டம் போட வுடுங்கய்யா!இன்னும் எத்தனை பேர் இப்படி குசலம் விசாரிக்க க்யூவுல நிற்கிறாங்களோ:)

tamil10 said...

என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்10 //////// lol..............
அதனால் தான் தமிழ் 10 தளத்தில் முற்றிலுமாக ஸ்பாம் வருவதில்லை . எனினும் அதனை எப்போதோ மாற்றி அமைத்து விட்டோம் .

வவ்வால் said...

தமிழ்10,

வாங்க ,எப்போவோ போட்ட பதிவு இது, லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா பதில் சொல்லி இருக்கீங்க,

நான் திரட்டியை எல்லாம் நம்புவதில்லை என்பதால் 10 ஓட்டுப்போடனும் சொன்னதும் கடுப்பாகி சொன்னது, மற்றப்படி வேறு எண்ணம் இல்லை, இன்னும் திரட்டி இருக்கா அப்போ?

விதியெல்லாம் மாத்தியாச்சுன்னு சொன்னா , இணைந்துப்பார்க்கிறேன்,நன்றி!

tamil10 said...

loll....முழுசா மாறல நீங்க ஒரு புது பதிவ இணைப்பதற்கு முன்னால எதாச்சும் மூணு பதிவுக்கு ஓட்டுப் போட்டு இருக்கணும் .(இது பாக்கறதுக்கு கட்டாயபடுத்தி செய்றது மாதிரி தெரியலாம் , ஆனால் எம் முகப்பு பக்கத்தை பார்த்தால் ஆங்கிலத் தளங்களோ , ஸ்பாம் வகையாறக்களோ , அல்லது படத்தை மட்டும் பகிரும் தளங்களோ இல்லை , நீங்கள் நிஜமாகவே எது சிறந்த தளம் என்று பார்க்க வேண்டுமெனில் , கூகுளே பேஜ் ரேங்க் , alexa டிராபிக் , தளத்தின் தரம் , வடிவமைப்பு அனைத்தையும் ஒப்பிட்டால் இலகுவாக கண்டறிய முடியும் .

நன்றி

வவ்வால் said...

//சிறந்த தளம் என்று பார்க்க வேண்டுமெனில் , கூகுளே பேஜ் ரேங்க் , alexa டிராபிக் , தளத்தின் தரம் , வடிவமைப்பு அனைத்தையும் ஒப்பிட்டால் இலகுவாக கண்டறிய முடியும் .//

தமிழ்10,

வாங்க,நன்றி!

அப்படிப்பார்ப்பது எந்திரத்தனமான முடிவு. நல்ல தளங்களை விட மட்டமான தளங்களே ,பேஜ் ரேன்க்,அலெக்சா ரேங்கில் முன்னணியில் இருக்கிறது :-))

3 ஓட்டுப்போட்டுட்டு ஸ்பாம் சேர்க்கமாட்டாங்களா என்ன?

என்னமோ சொல்லுறிங்க ,சரியா இருந்தா சரி தான்.

S. Robinson said...

இதை பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க ( www.tamiln.org )