Friday, May 25, 2012

கடல் மீன்கள்!மனிதர்களாக நாம் அறிவிற் சிறந்த விலங்குகளே, அப்படியிருப்பினும் பயணம் செய்ய நமக்கு பலவகையான வழிக்காட்டிகள் தேவைப்படுகிறது ,ஏதோ ஒரு ஊர் நோக்கி செல்லும் சாலை என தெரிந்தால் மட்டுமே அதில் பயணம் செய்து அவ்வூரை அடைவோம், வழியில் நான்கு முனை சந்திப்பு வந்தால் கைக்காட்டியில் குறிப்பிட்ட ஊர்ப்படி பயணம் செய்வோம்.

இப்போ ஒரு புதிர்(ரொம்ப பழசு தான்)

மெட்ராஸ் ல இருந்து அறிமுகமில்லாத சட்ராஸ்னு ஒரு ஊருக்கு தீயாய் நானோ மகிழுந்துவில் போறிங்க, போற வழில மாமல்லபுரம் அருகே ஒரு நான்கு முனை சந்திப்பு வருது எந்தப்பக்கம் போறதுனு தெரியலை கைக்காட்டியப்பார்க்கலாம்னு பார்த்தால் அது மணல் சுமையுந்து மோதி கீழ விழுந்து கிடக்கு ,உங்க கிட்டே உலகவழிக்காட்டியும் (ஜி.பி.எஸ்) இல்லை,அருகிலும் யாரும் இல்லை, இப்போ எப்படி சட்ராஸுக்கு சரியான வழிய கண்டுப்பிடிப்பிங்க?

ஹி..ஹி இது எனது பள்ளிப்படிக்கும் காலத்திய புதிர், சும்மா இப்போ ஒரு இடைச்செறுகலா போட்டுவிடுகிறேன், இதை யோசிச்சுக்கிட்டே அடுத்த பத்திக்கு வாங்க... பதிலைப்பின்னூட்டத்தில சொல்லுங்க!

நவீனக்காலத்திய வரவான கூகிள் வரைப்படம், உலகவழிக்காட்டி எல்லாம் பயன்ப்படுத்தி அதிக முக்கல் முனகல் இல்லாம தெரியாத ஊருக்கு கூட இப்போ பயணம் செய்ய முடியும்.

தரையில் பயணம் செய்ய இது போதும் ,அலையடிக்கும் கடலில் வழி தெரிய என்ன செய்வாங்க , மனிதர்கள் அதுக்கும் வழக்கம் போல உலக்கவழிக்காட்டி,திசைக்காட்டி(காம்பஸ்), அல்லது வானியல் படி பகலில் சூரியன் நிலை, இரவில், சந்திரன், நட்சத்திரம்,கலங்கரை விளக்கம்னு பயன்ப்படுத்தி வழிக்கண்டுப்பிடிப்பாங்க.

கடலுக்கு மேல இது வேலை செய்யும், கடலுக்கு அடியில் அதுவும் மீன்கள் எப்படி திசை அறிந்து பயணிக்கும்?

கடலில் நீந்தும் மீன்கள் திசை அறியுமா? பின்ன மனம் போனப்போக்கிலா கடலில் உலாவும். மீன்களும் திசையைக்கணித்து கடலில் பயணிக்கின்றன.

மீன்கள் கடல் வாழ் சூழலில் தடைகளையும், தடத்தையும் எப்படி கணிக்கின்றன எனப்பார்ப்போம்.

மீன்களின் உடலில் பக்கவாட்டில் அழுத்தம் உணரும் குழாய்கள் உள்ளன, அவற்றிள் நீர் நிரம்பியிருக்கும், அதோடு துடுப்புகளில் உள்ள குஞ்சம் போன்றவைகளுக்கும் தொடர்புண்டு. மீன்களின் உடலில் இருக்கும் குஞ்சம் போன்றவை உணர்வு கருவிகள் ஆகும்.ஒரு கப்பலோ,அல்லது ஒரு மீனோ அருகில் சென்றால் எழும் அலைகள் அழுத்தக்குழாய்களில் மோதியதும் ,அழுத்த வேறுப்பாட்டிற்கு ஏற்ப அப்பொருள் எவ்வளவு பெரிது என மீன் கணித்துவிடும்.மேலும் மீன்களுக்கு சுவை,வாசனை உணரும் சக்தியும் உண்டு அதனை வைத்து இரையா அல்லது திடப்பொருளா என்றெல்லாம் கண்டுப்பிடிக்கும்.

எண்ணைக்கப்பல்கள்,இரசாயன கழிவுகள் கொண்ட கப்பல்கள் விபத்தில் சிக்கி கடலை அசுத்தப்படுத்தும் சமயங்களில் மீன்கள் இறப்பதோடு கடலின் வாசனை மாறுவதால் மீன்களும் வழி மாறி சென்றுவிடுகின்றன சில ஆய்வுகள் சொல்கின்றன.கடல் மாசுபடுவதைக்கண்டறிய மீன்களைப்போன்றே புலன் உணர்வுக்கொண்ட செயற்கை மீன்களை உருவாக்கி ஸ்பெயினில் கடலில் விட்டு ஆய்வும் செய்துள்ளார்கள் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.ஆனால் மீனின் விலை தான் கொஞ்சம் அதிகம் 20,000 பவுண்டுகள் ஒரு மீனுக்கு மட்டும்!

அழுத்தக்குழாய்களின் மூலம் கடல் நீரோட்டங்களை உணரும்,மேலும் என்ன ஆழம் என்பதையும் உணர முடியும்.கடல் நீர் எல்லா இடங்களிலும் ஒரே வாசனையோடு இருக்காது,எனவே நீரின் வாசனையை வைத்தும், நீரோட்டத்தினை வைத்தும் தங்கள் பயணம் செய்யும் திசையை அறிந்து பயணிக்கும்.

சில நாடுகளில் சட்ட விரோதமாக வெடிப்பொருளை கடலில் வெடிக்க செய்து மீன் பிடிக்கும் பழக்கம் உண்டு, வெடிப்பொருள் கடலில் வெடிக்கும் போது மீன்களின் புலன் உணர்வுகள் பாதிக்கப்படுவதால் மயங்கிவிடும் அல்லது அதிர்ச்சியில் இறந்து விடும்.சில சமயம் வெடிமருந்தும் மீன் உடலில் ஊடுருவி விடக்கூடும்.

இந்தியா,இலங்கைப்போன்ற நாடுகளில் இப்படி வெடிப்போட்டு மீன் பிடிக்கும் பழக்கம் உண்டு, நாம் உண்ணும் கடல் மீன்களிலும் இப்படி வெடி மருந்து கலந்து இருக்க வாய்ப்புண்டு.எல்லாத்திலயும் கலப்படம்,அபாயம், காரணம் அறிவாளி மிருகமான மனிதனின் பேராசையே.

கடல் நீரில் ஒளி ஊடுருவம் தன்மையும் ,பார்வையும் குறைவாக இருக்கும்,அதற்கேற்ப சில மீன்களுக்கு தொலைநோக்கு பார்வை சக்தியும் இருக்கிறது.

மீன்களால் ஒலியை எழுப்பவும்,கேட்கவும் முடியும், அதன் மூலம் மற்ற மீன்களோடு தொடர்பும் கொள்கின்றன. சிறிய மீன்கள் மிக குறைந்த அதிர் வெண் ஆன 100 ஹெர்ட்ஸ் வரையிலும் கேட்க வல்லவை.

டால்பின்கள், திமிங்கிலங்கள் செவியுணர் ஒலி , மீ ஒலி இரண்டையும் உணரக்கூடியவை.இவை 2000 ஹெர்ட்ஸ் வரைக்கும் கேட்க கூடியவை.

வவ்வால்களை போல எதிரொலிக்கொண்டு கடலில் உள்ள தடை,இரை,மற்ற பொருட்களை கண்டறிய வல்லவை. இதற்கு எக்கோலோகேஷன் எனப்பெயர்.


சாலமோன் போன்ற மீன்கள் பிறப்பில் நன்னீர் மீன்களாக இருந்து வளர்ப்பருவத்தில் கடல் நீர் மீன்களாக மாறுபவை, அவை கடல் நீர், ஆற்று நீர் ஆகியவற்றில் உள்ள உப்பின் அளவையும் அறியவல்லவை, அதற்கேற்ப உடலில் உள்ள நீரின் அளவை மாற்றியமைத்துக்கொள்ளும்.

கடலில் இருக்கும் மீன்களின் உடலில் உப்பின் அளவு கடல் நீரை விட குறைவாக இருக்கும், எனவே வெளியில் இருக்கும் உப்பின் அடர்த்திக்கு ஏற்ப மீனின் உடலில் இருந்து தண்ணீர் எதிர் சவ்வூடு பரவல் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்)மூலம் வெளியேறிக்கொண்டே இருக்கும் ,அதனை சமப்படுத்த தொடர்ந்து கடல் நீரைக்குடித்து அதில் உள்ள மிகை உப்பை வெளியேற்றிக்கொண்டே இருக்கும். அவற்றை நன்னீரில் விட்டால் உயிர் வாழாது ஏன் எனில் உப்பின் அளவுக்கு ஏற்ப நன்னீரில் சவ்வூடுபரவல்(ஆஸ்மாசிஸ்) ஏற்பட்டு அதிக நீர் திசுக்களில் சேரும் ,இபடி சேரும் நீரினை வெளியேற்றவில்லை எனில் கடல் மீன்கள் நன்னீரில் இறந்து விடும்.

இதற்கு எதிர்மாறாக நன்னீர் மீன்களின் உடலில் உப்பு அதிகமாக இருக்கும், அவ்வை வாழும் ஆற்றில் உப்பு இருக்காது, எனவே இப்போது சவ்வூடு பரவல் மூலம் உடலில் நீர் சேரும், அவற்றை தொடர்ந்து வெளியேற்றிக்கொண்டே இருக்கும் நன்னீர் மீன்கள். எனவெ நன்னீர் மீன்களை கடலில் விட்டால் உப்பை பிரிக்கும் ஆற்றல் இல்லாததால் இறந்து விடும்.

அதாவது கடல் மீன்களுக்கு மிகை உப்பை பிரிக்கும் ஆற்றலும், நன்னீர் மீன்களுக்கு மிகை நீரைப்பிரிக்கும் ஆற்றலும் மட்டுமே உண்டு.

ஆனால் சாலமோன் போன்ற மீன் வகைகள் இரண்டையும் செய்யும் ஆற்றல் பெற்றவை.

சாலமோன் போன்ற மீன்கள் இனப்பெருக்க காலத்தின் போது முட்டையிடுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் கடலில் பயணித்து ஆற்றை அடையும்.அப்படி பயணிக்க நுகர்வு சக்தியையும், நீரோட்டத்தினையுமே பயன்ப்படுத்துகின்றன.ஆற்றின் முகத்துவாரத்தினை அடைந்ததும் உப்பின் அளவை ஒப்பிட்டு பார்த்து அதற்கு உடலில் உள்ள நீரை சமப்படுத்த நிறைய நீரைக்குடித்து , பின்னர் அதில் இருந்து உடல் உப்பின் அளவை அதிகப்படுத்திக்கொள்ளும், இதற்கு இடை நிலையான உப்பின் அளவுள்ள முகத்துவாரங்கள் உதவுகின்றன.ஒவ்வொரு சாலமோன் மீன் கூட்டத்திற்கும் அவை எந்த நதியின் வாசனை நினைவிலேயே இருக்கும், எனவே அதே நதிக்கே திரும்ப செல்லும்.

பின்னர் முட்டையிடும் இடத்தினை தேடி ஆற்றிலும் பல கிலோமீட்டர் பயணிக்கும். ஏன் அவைக்கடலில் முட்டையிடவில்லை எனில் குட்டி மீன்களுக்கு பிறந்தவுடன் கடலின் உப்பு சூழலை தாங்கும் சக்தி இருக்காது, ஓரளவு வளர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். குட்டி சாலமோன்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் அவற்றுக்கு சுமோல்ட் என்றுபெயர். கடலுக்கு திரும்புவதை சுமோல்டிபிகேஷன்(smoltification). என்பார்கள்.

மேலும் சாலோமோன் மீன்கள் முட்டையிடும் வரை உணவே உண்ணாமல் இருக்கும், காரணம் பெரிய மீன்களால் கடல் உணவை மட்டுமே உண்ண முடியும், எனவே தான் வளர்ந்ததும் மீண்டும் கடலுக்கு திரும்புகின்றன.

முட்டையிடும் வரை உண்ணாமல் இருப்பதால் முட்டையிட்டதும் சாலமோன்கள் இறந்து விடும்.முட்டைப்பொறித்து வெளிவரும் மீன் குஞ்சுகள் சிறிது காலம் ஆற்றில் உண்டு வாழவல்லவை சிறிது வளர்ந்ததும் தானாகவே கடலை நோக்கிப்பயணித்து விடும், துருவப்பறவைகள் வலசைப்போதலை இயல்பாக செய்வது போல செய்ய வல்லவை சாலமோன் மீன்கள்.

---------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி ,

கூகிள்,விக்கி, தி மெயில், இணைய தளங்கள் நன்றி!

*****

9 comments:

ராஜ நடராஜன் said...

நான் தான் திறப்பு விழா போல இருக்குதே!பதிவைப் போட்டு விட்டு வான்கோழி பிரியாணி சாப்பிடப் போயிட்டீங்க போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

மீன்கள் திடப்பொருள்களையும் கடலின் அலை வரிசையையும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும் என்பதற்கு மீனுக்கு சாட்சி நான் தான்:)

இப்ப பதிவுலகத்துக்குள்ள நுழைஞ்சதுனால இங்கேயே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டியிருக்குது.இல்லைன்னா முன்னாடி குடும்பத்தோடு கடற்கரைக்கு போவதொ இல்லை நானே தனியாக கடல் ஞானம் பெறப்போவதோ வழக்கம்.சென்னையிலேதான் ஐந்து மைலுக்கு அப்பாலேயே கப்பலை நங்கூரம் பாய்ச்சி உட்கார வச்சிடறாங்க.இங்கே நாம் கட்ற்கரையில் உட்கார்ந்துகிட்டிருந்தாலே கப்பல் நமக்கருகில் கடந்து போகும்.

அலைகளுக்கு சும்மாவே கரையை முத்தமிடுவது பிடிக்குற சமாச்சாரம்.அம்மாம்பெரிய கப்பல் வந்து உட்கார்ந்து கொண்டு நகர்ந்தால் சொல்லவா வேண்டும்?கப்பல் முன்பக்கம் நீரை நீக்குவதும் பக்கவாட்டில் நீரை விலக்குவதும் கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கே தெரியும் போது நீந்த கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத மீனுக்கு சொல்லிக்கொடுக்கவா வேண்டு?மீன்கள் கடலின் மையப்பகுதிக்கு பயணிப்பதும் நம்ம ஆட்கள் வலையையும் விசைப்படகையும் இழுத்துக்கொண்டு போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நாம என்ன எல்லாத்துக்கும் ஆமாம் சாமி பின்னூட்டம் போடுற ஆட்களா என்ன:)கப்பல் கழிவுகள் இன்ன பிற எண்ணைக் கசிவு போன்றவற்றிற்கு தப்பிக்கும் வேகமான மீன்களும் உண்டு.அவ்வளவு தூரம் யார் ஓடுவது என்று முடிந்த வரை ஓடும் மீன்களும் உண்டு.எய்ட்ஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தியான செல்களும் உண்டு.இன்னும் சில தாக்குப்பிடிக்காமல் வீழ்ந்து விடுவதும் மாதிரி கப்பல் கழிவுகளுக்கு தப்பிக்கும் செல் வலு கொண்ட மீன்கள் கூட உண்டு.என்ன கப்பல் கழிவுக்கு தப்பித்து மீன்பிடி வலைக்குள் மாட்டிகிட்ட மீன்களை நாம் சாப்பிடும் போது மீன் கவிச்சயோடு கொஞ்சம் பெட்ரோல் வாடையும் வீசும்:)

ராஜ நடராஜன் said...

சாலமன் மீன் வரைபடம் தப்பாயிருக்கிற மாதிரி தெரியுதே?சாலமன்கள் கொஞ்சம் நீண்ட மூக்கு கொண்டவை என நினைக்கிறேன்.சாலமன்களை அதன் முட்டைகளான காவியர்களுக்காக மட்டும் கொன்று விட்டு மீனை கடலில் தூக்கி வீசி விடுகிறார்கள்.

காவியர் கெனாபிஸ் என்ற் சரக்கோட அடிக்கும் சிறு சாண்ட்விச் மாதிரியானவற்றிகு மேற்கத்திய பார்ட்டிகளில் பயன்படுகிறது.ஸ்மெர்னொஃப் எனப்படும் பெயர் பெற்ற பிராண்டான ரஷ்யன் வோட்காவுடனும்,ஜின்னுக்கும் வறுத்த மீனுக்கும் பொருத்தமான ஜோடி.எனக்கேவா ங்கிறீங்களோ:)

ராஜ நடராஜன் said...

காலையில் தினத்தந்தி படித்து விட்டு இப்ப மாலையில் மாலை முரசு படிக்கிறேன்:)

படங்களை பார்க்காமல் உங்கள் எழுத்தை மட்டும் வாசித்ததால் சாலமன் வாழ்க்கை சுற்று படம் சாலமன் மாதிரியே தெரியலையேன்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்.
நீலக்கடல் தண்ணீரில் நீந்துவதுதான் சாலமன்.

அதுக்கும் மேலே மஞ்சளா மிதக்குற மீன் சின்ன சைஸ்ல நானே மிதக்கவிட்டு மீன் பிடிச்சுருக்கிறேன்.எம்புருசனும் மீன் புடிக்க போறார்ங்கிற மனைவிக்கு இத்துணூண்டு மீன்களையும் ஒரு நண்டையும் கொண்டு வந்து கொடுத்து வீட்டுல வாங்கி கட்டிகிட்டு இப்ப மீன் பிடிக்க போவதில்லையென்பதும் கூடுதல் தகவல்.வீணா கம்ப்யூட்டரை மட்டும் குறை சொல்லக்கூடாது பாருங்க:)

ராஜ நடராஜன் said...

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஆனால் பதிவருக்கு சம்ப்நதப்பட்டு இன்னுமொரு பின்னூட்டம்.

இத்தனை தடவை வந்திருக்கிறேன்.ஆனால் யார் இந்த விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்க் என்பதைக் கூட பார்க்காமலே திரும்பி சென்றிருக்கிறேன்.

வவ்!எனது ரசனைக்கு ஏற்ற சினிமாவையே நான் தெரியாமல் விலகி நிற்கும் போது எதையெல்லாமோ என் பின்னூட்டத்தில் சொல்லும் ரசனையாளனைப் பார்த்து என்னவென்று தெரியாமல் ஙே!

இதற்கான மறுமொழி வேண்டாம்.உங்கள் புரிதலுக்காக மட்டுமே.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க, வணக்கம், நன்றி!

ஆச்சரியம் தான் ஓபனிங்கிலேயே சியர்ஸ் சொல்ல வந்துட்டிங்களே :-))

மீனுக்கு சாட்சி சொன்ன சிபி ராஜன் :-))

ஆமாம் மீன்களுக்கு நல்ல புலனுணர்வு இருந்தும், வலை,தூண்டில்னு மாட்டிக்கவே செய்யுதுங்க!.விதி வலியது போல !

ஹி...ஹி ஆமாம் போட்டால் மட்டும் அடை சும்மா விடுவேனா நான், அதுக்கும் ஒரு கவுண்டர் அட்டாக் போவேனாக்கும்.

நான் என்ன எல்லா மீனும் செத்துடும்னா சொன்னேன், வழி உணரும் மோப்ப சக்திப்பாதிக்கப்பட்டு மீன்கள் வேறு எங்கோ சென்றுவிடுகிறதாம்னு சொன்னேன், விரிவா சொன்னா மீன்கள் ஒரு குழுவா,கூட்டமா தான் இருக்கும், எல்லாம் சொந்தக்கார மீன்களோ என்னமோ? அப்படி இருக்கும் மீன்கள் கூட்டத்துக்கு பேரு "ஸ்கூல்" அதில் இருந்து தான் மாணவர்கள் கூட்டமா இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் "ஸ்கூல்"னு பேரு வந்திருக்கலாம்(எல்லாம் நம்ம யூகம் தேன்)

மோப்ப உணர்வு பாதிக்கப்படுவதால் மீன்கள் கூட்டம் கண்ணீர்ப்புகை வீசிக்கலைப்பட்ட மக்கள் கூட்டம் போல காணாமல் போயிடுதாம், மேலும் கழிவுகள் அகற்றப்பட்ட பிறகும் அதே இடத்திற்கு மீன்கள் மீண்டும் வருவதே இல்லையாம், இதைத்தான் மீன் வளம் பாதிக்கப்படுகிறது என சொல்றாங்க. புதிதாக மீன் கூட்டம் உருவாகி வந்தால் மட்டுமே உண்டு.

மீன்களுக்கு எல்லாம் எய்ட்ஸ் வருமா என்ன? மனிதன் போன்ற ஜீன் இருந்தா தானே வரும்?

எசப்பாட்டு பாடினாலே விட மாட்டோம் இதில எதிர்ப்பாட்டு பாடினா விடுவோமா :-))

//சாலமன்களை அதன் முட்டைகளான காவியர்களுக்காக மட்டும் கொன்று விட்டு மீனை கடலில் தூக்கி வீசி விடுகிறார்கள்.//

இது தடை செய்யப்பட்ட ஒன்று ஆச்சே, இங்கிலாத்தில் ஏதோ ஒரு ஹென்றி காலத்திலவே தடை செய்து இருக்காங்க. இப்பவும் இனப்பெருக்க காலத்தில் சாலமன்களை பிடிக்க கூடாது. அவ்வளவு இந்தியாவிலே எல்லா வகை மீன்களையும் இனப்பெருக்க காலத்தில் பிடிக்க தடை. இப்போ கூட அந்த தடை செயல்பட்டுக்கிட்டு இருக்கு ,45 நாள் மீன் பிடிக்க தடை காலம் இப்போ தமிழ் நாட்டில்.கேரளா,ஆந்திரா மீன் தான் வருது இங்கே.

அதுவும் மீனை தூக்கிப்போடுவாங்களா? மீனுக்கும் நல்ல விலையுண்டே, ஆலிவ் ஆயிலில் சமைக்கணும்னு கூட படிச்சேன்.

ஹி...ஹி சரக்கெல்லாம் அடிச்சிருக்கேன் ஆனால் சைட் டிஷ் அஹ் சாலமன் வருவல் தான் இல்லை, நெத்திலி தான் கடையில் அதிகம் கிடைக்குது.

அப்படியே மிட்நைட் மசாலாவுக்கும் வர்ரது.

அந்த எந்திர மீன் வச்சு மீன் பிடிப்பிங்களா? என்னமோ 20 ஆயிரம் பவுண்டு போட்டு இருக்கான் அது விலையை.நீங்க சல்லீசா இருக்காப்போல சொல்றிங்க.சின்ன எந்திர மீன் விலைக்கம்மியோ?

நல்ல வேளை தவளை,ஆமைக்குஞ்சுனு புடிச்சுக்கிட்டு போகலைனு சந்தோஷப்படுங்க :-))

ராஜ நடராஜன் said...

எல்லா மீன்களும் ஒன்றாக சுத்துவதில்லை.அயிலை என சொல்லப்படும் மேக்ரல்,பாம்ரட்,கெண்டை,கெழுத்தி இந்த மாதிரி சொந்தம் கொண்டாடும் மீன்கள்தான் வலையில் மாட்டிக்குது.இவைகளை முள்ளிவாய்க்காலில் மாட்டிக்கிட்ட அப்பாவி மக்கள் மாதிரி.

இன்னும் சுறா மாதிரி சில மீன்கள் தனியாகவே சுத்தும்.இவைகளை கருணா,பிள்ளையான் போன்று ஒன்றாக சுத்திகிட்டு தனியா பிரியும் ஒண்டிப்பிசாசுகளோடு ஒப்பிடலாம்:)

சாலமன்களைக் கொல்லக்கூடாதுங்குறது காஞ்சு போன நமக்கு வேணும்ன்னா இருக்கலாம்.ஆனால் நிறைய வளரும் ரஷ்யா போன்ற பகுதிகளில் சட்டவிரோதம்ங்கிறதால வேக வேகமாக வயிற்றைக் கிழித்து காவியரை மட்டும் எடுத்துக்கொண்டு மீனை கடலில் தள்ளி விடுகிறார்கள்.இரண்டு கிலோ காவியர் எடுக்கறதுக்கு 2 டன் மீனையா சுமந்துகிட்டு திரிய முடியும்?

மீனை ஆலிவ் ஆயிலில் சமைக்கனும்ன்னு கேள்விப்பட்டீங்களா?ஏன் வைட் வைன்ல சமைக்கனும்ன்னு கேள்விப்படலையா?இதுல வேற பாண்டிச்சேரி அடிக்கடி ஓடுறீங்கன்னு வேற சொல்றீங்க!பிரெஞ்சுக்காரனின் உணவின் சமையலில் வைன்,பிராந்தி,சேம்பைன் கலந்து சமைக்கும் உணவுகளே கிளாசிக்கல் உணவுகள்.ஓய்!பிரெஞ்சுக்காரங்க யாராவது வலைக்குள்ள சுத்திறீங்க?

நீங்க சொல்ற மீன் ஆராய்சிகளுக்காக இருக்கலாம்.நான் சொல்றது கடற்கரை ஈர மணலில் வங்குலருந்து ஓடிப்பிடிச்சு விளையாடுற நண்டு சைஸ்.

முன்பு ஆக்டோபஸ் மாதிரி வெள்ளையா ஒரு மீன் இருக்குமே!பெயர் மறந்து விட்டது.துண்டு போட்டு பிரெட்கிரம்ப்ல பொரிச்சு எடுத்தா எறா மீனுக்கும்,இந்த மீனுக்கும் வித்தியாசமே தெரியாது.அதை துண்டு துண்டா வெட்டி தூண்டில் முள்ளில் குத்தி மீன் ராடா சுழற்றினால் உடனுக்குடன் கடல் மீன் நம்ம மீனைக் கடிக்க வரும்.மீன் மீனைக்கடிக்கும் அந்த ஒரு சில கணங்களில் நைலான் கயிறு நகர்வதும் ராடை ரோல் செய்வதிலும் உள்ள திரிலேதான் மீன்பிடிக்கும் ரகசியம்.இந்த ஆக்டோபஸ்க்கு சொந்தக்கார மீனுக்கு அப்புறம் மார்க்கெட்டுல நல்ல கிராக்கியானதால கொஞ்ச ஆட்கள் கடலில் நீர்மட்டம் குறையும் காலை நேரமா பார்த்து கடலை மேய்ந்து புழு தேட ஆரம்பிச்சாட்டாங்க.எனக்கு இது சரிப்பட்டு வராத காரணத்துனால எவ்வளவு மீன் வாங்குறதுன்னு நீங்க சொல்ற எந்திரன் மீனுக்கு தாவி விட்டேன்.ஆனால் இதுக்கு பொறுமையா காத்திருக்கனும்.மீன் பிடிக்கிற சுவாரசியம் குறைவு.

ஒவ்வொரு மீனாப்புடிச்சுட்டுப் போனால்தானே வீட்டுல திட்டு வாங்க வேண்டியிருக்குதுன்னு ஒரு நைலான் வலையை வேறு வாங்கி முயற்சி செய்தேன்.சினிமாவிலும்,புகைப்படத்திலும்தான் வளை வீசுவது அழகாக தெரியுது.எனக்கு மீன் வலை வீசும் லாவகம் தெரியாமல் அதையும் கைவிட்டு விட்டேன்.இதுல இன்னுமொரு கூத்து வேற செய்தேன்.என்னன்னா 3 மணி வெயில் போல மீன்கள் நீங்க சொல்ற மாதிரி கூட்டம் கூட்டமா வரும்.ஒரு ஆள் நான் மீன்வலையோட அவதிப்படுறதைப் பார்த்துட்டு நான் மீன் பிடிச்சு தருவேன்.ஆனால் மீன் ஆளுக்கு பாதி பாதின்னாரு.இந்த டீலிங் எனக்கு ரொம்ம்ப்ப புடுச்சுப்போனதால சரின்னுட்டேன்.இரண்டு வார இறுதிக்கு இந்த டீலிங் சரிப்பட்டு வந்தது.அப்புறமா அந்தாளு காணமல் போயிட்டாரு.

ஆமைக்குஞ்சுகளையும் கூட சிங்கப்பூருக்கு கடத்துறதெல்லாம் உங்க சென்னையோட வேலை.இங்கே ஆமைகளை யாரும் கண்டுக்குறதில்லை.ஆமையும் எங்களைக் கண்டுக்கிறதில்லை.

வவ்வால் said...

ராஜ்,

பெரும்பான்மையான மீன்களை சொன்னா விதி விலக்குகளை தூக்கிட்டு வரிங்க.

பாண்டிச்சேரி பிரஞ்ச் காலனியா இருந்துச்சுன்னு தான் பேரு இங்கே அந்த கலாச்சார உணவுலாம் பெரும்பாலும் கண்ணில் படாது, அதிக பட்சம் பிரஞ்ச் வகை பிரட் லோப் தான் விலாங்கு மீனாட்டம் கிடைக்குது. மற்றபடி நம்ம ஊர் முட்டை தோசை, கொத்துப்பரோட்டா போலத்தான் எல்லாம்.

எதாவது நட்சத்திர விடுதி போய்ப்பார்க்கணும் போல.

மீனை சமைக்கும் போது ஏன் வீணாக கடலில் போடனும் எனக்கேட்டேன்.எல்லா நாட்டிலும் தடையிருக்கு , திருட்டுத்தனமா செய்றாங்கன்னு இப்போ தானே சொல்றிங்க.நம்ம ஊரில சாலமோன் மீன் இருக்கா? புதுசா சொல்றிங்க.

ஆக்டோபஸ் போல மீன் ஆஹ்? கணவாய் எனப்படும் ஸ்குயிட் அஹ் சொல்றிங்களா?

மீன் பிடிக்கிறதே நேரம் கடத்த தானே,என்னமோ மீன் வியாபாரி போல சலிச்சுக்கிறிங்க டைம் ஆகுதுன்னு :-))

நானெல்லாம் சின்ன வயசிலவே கால்வாய்ல மடைக்கட்டி ,பானை ஓட்டால தண்ணிய இறச்சு ஊத்தி கெலுத்தி, கெண்டைனு புடிச்சு இருக்கேன், ஆனா ஆரம்பம் எல்லாம் நல்லா தான் போகும் பினிஷிங் தான் வீட்டுல உதை வாங்கி துன்பியல் சம்பவமா முடியும்,அந்த காலத்தில சர்ப் எக்செல்லும் இல்லை கறை நல்லதுன்னு சொல்லுற விளம்பரமும் இல்லை அதான் உடம்பெல்லாம் சேறோட போய் செமத்தியா வாங்கிக்கட்டிப்பேன் :-))

//அப்புறமா அந்தாளு காணமல் போயிட்டாரு.//

அந்தாளு கம்யூனிஸ்ட்டா இருந்திருப்பார், உழைக்கிறது ஒருத்தன் உட்கார்ந்து சாப்பிடுறது இன்னொருத்தனா என ஓடிப்போயிட்டார் போல :-))

ஆமைக்குஞ்ச இங்கே புடிச்சாலும் அதை பொறிச்சு சாப்பிடுறது சிங்கை சீனர்களே, ஆமைக்கறி,எண்னை எல்லாம் சாப்பிட்டா பலான சமாச்சாரத்துக்கு பலம் சேர்க்கும்னு அவங்க நம்பிக்கை, அதுக்கு இங்கே இருந்து சப்ளை. இதான் உலக வர்த்தகம் :-))

காண்டா மிருக கொம்பு,புலிக்கறி,எலும்பு,பல்லு என ஒன்று விடாம பொடி செய்து சூப்புல போட்டு சாப்பிடுறாங்க சீனர்கள், அதற்காக வேட்டையாடியே இந்தியாவில், புலி,காண்டா மிருகம் எல்லாம் அழியுது. ஏற்கனவே மக்கள் தொகை தான் பிச்சுக்கிட்டு போகுதே அப்புறம் இன்னும் என்னத்துக்கு பலான மேட்டருக்கு பலம் சேர்க்கிறானுங்க ?

ராஜ நடராஜன் said...

வவ்வு!நேற்று மீன் மார்க்கெட்டுக்குப் போனேனா ஆக்டோபசுக்கு பக்கத்து வீட்டு மீனோட பேரு ஸ்க்விட் ன்னு நினைவு வந்துடுச்சு.அதுக்கு பேரு கணவாயா?தமிழ்ப் பெயர்ச்சொற்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களே.பிரெஞ்ச் குசேன் என்பதையே நம்மாளுக குசினின்னு சமையக்கட்ட மாத்திட்டாங்க.ஸ்க்விட் விக்கெட்ன்னு ஆயிருந்தால் கூட பரவாயில்லை.அது என்ன கணவாய்.

பிரெஞ்ச் லோஃப் விலாங்கு மீனாட்டம் செம ஒப்பீடு:)

ஆஹா!அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

முதல் மரியாதை சிவாஜி,ராதா ஸ்டைலி துண்டு போடறதுதான் எங்க ஊர் பக்கமெல்லாம்.அது மீன் பிடிக்கிறதாகட்டும்,பஸ்,சினிமா வாகட்டும்:)

பலான சமாச்சாரத்துக்கு ஆமைக்கறியா!இது என்ன புதுக்கதை?இந்தியாவில் ஜனத்தொகையேறுவதற்கு காரணம் மட்டன் மசாலான்னு அரபிகள் நம்புவது மாதிரி!ஆனாலும் ஷார்க் ஃபின் சூப் சீனாவில் மிகவும் பிரபலமும் விலை அதிகமும் தெரியுமா?

இங்கே கூட டைகர் பாம் தைலம்ன்னு விற்கிறாங்க.ஜனத்தொகைக்கு சரியான சீதோஷ்ண நிலை இந்தியா மட்டும்தான்.ஆனால் இந்த சீனாக்காரன் குளிருக்கு ஜாக்கெட் மாட்டிகிட்டு எப்படி தொகையைப் பெருக்கிறானுங்க என்பது ஆச்சரியமான விசயம்தான்.ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி பார்த்தாலும் நாய் ஒன்றைத் தவிர காண்டாமிருகம்,புலிக்கறியெல்லாம் அவ்வளவு ஜனத்தொகைக்கு கட்டுபடியாகாதே!சீனாக்கரான் கிட்ட என்னமோ ரகசியமிருக்குது.கொழும்பு வரைக்கும் வந்துட்டானுங்க.இந்தப்பக்க கடற்கரை ராமேஷ்வரம் பக்கம் வரும் போது கேட்டுடுவோம்.