Sunday, July 08, 2012

நெய்வேலியில் நூல்வெளி-புத்தக சந்தை-2012




வழக்கமாக சென்னை புத்தக சந்தைக்கு போய் வேடிக்கை பார்ப்பதுண்டு, பின்ன வேடிக்கை பார்க்கும் விலையில் தானே நவீன எழுத்துலக பிரம்மாக்களின் படைப்புகள் இருக்கு, இந்த வாரம் ஊரு பக்கமா போய் இருந்த போது தினமலரை தற்செயலா விரிச்சா ,நெய்வேலியில் புத்தக சந்தைனு விளம்பரம் கண்ணில் பட்டது, வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் வைப்பாங்க ,இம்முறை முன்கூட்டியே வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பதிவர் சுரேகா பதிவில் சொல்லியிருந்தார் ஆனால் இந்த மாதம் தான் என்பதை கவனத்தில் வைக்கவில்லை.இவ்வளவு தூரம் வந்தாச்சு ,அதையும் போய் பார்த்துவிடுவோம் என 2 மினிட்ஸ் பிளான் ஒன்று போட்டாச்சு. சரி வாங்க சுரங்க நகரத்தின் உள்ளே போவோம்.

சுரங்க நகரத்தின் முகப்பு நுழைவாயில் ..ஆர்ச் கேட் பஸ் ஸ்டாப் என்று பெயர், கும்பகோணம் சென்னை பேருந்துகள் உள்ளே செல்லாது இங்கே இறங்கி லோக்கல் பேருந்தில் செல்ல வேண்டும். புத்தக்காட்சியரங்கு 11 ஆம் வட்டத்தில் ,பாரதி விளையாட்டு அரங்கு அருகே உள்ளது.


நெய்வேலி நகரம் அன்புடன் அழைக்கிறதாம், வழி நெடுக யூகலிப்டஸ் மரங்கள் தான் நிக்குது சாலையோரம் ,என்னை வரவேற்று பூமழை தூவ பூவையார் யாரும் காணோம் :-))

புத்தக அரங்கு முகப்பு,கோட்டை போல படம் வரைந்து வெட்டி டி.ஆர் போல செட்டிங் போட்டு இருக்காங்க!


நுழைவு சீட்டு வழங்கும் இடம், கட்டணம் 3 ரூபாய் மட்டுமே, கார் பார்க்கிங் 5 ரூ, 2 சக்கர வாகனம் நிறுத்த 3 ரூ என எல்லாம் சகாய விலையில் , காரணம் புத்தக சந்தைக்கு உபயதாரர் பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்பதால் லாப நோக்கு இல்லை.

சென்னை போல எழுத்து சிற்பிகளும், பதிப்பங்களும் சொந்தக்காசில் வினைல் போர்ட் வச்சு நாசம் செய்யவில்லை என்பது கூடுதல் அழகு. மேலும் அரங்கும் சின்னது எளிதில் ரவுண்டு அடித்துவிடக்கூடியதே ஆனாலும் மத்தியான வேளையில் சென்றதால் செம வெயில் , தொப்பர நனையும் அளவுக்கு வியர்த்துக்கொட்டிவிட்டது.
ஒரு சில அரங்குகளை மட்டுமே கைப்பேசியில் படம் எடுத்தேன் அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த செக்கியூரிட்டி படம் எடுக்க கூடாது என எச்சரிக்கை விட்டார், என்ன கொடுமை சார் இது, நான் பெங்களூர்,சென்னையில எல்லாம் டிஜிட்டல் கேமிராவிலே படம் எடுத்து இருக்கேன், இங்கே புதுசா சொல்றாங்களேனு கேட்டேன் அது அப்படித்தான் சொல்லிட்டு போயிட்டார்... சண்டை வந்திருக்கும் , ஆனால் நெய்வேலிக்கு என சில விதிகள் இருக்கு,அங்கு பொதுவாகவே படம் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. என்பதால் அமைதியா ஆகிட்டேன் ...ஹி ..ஹி ஆனாலும் படம் எடுக்கிறதையும் விடவில்லை...என்ன கொஞ்சம் அமுக்கமா செஞ்சேன் ..நீங்க பார்க்கிறது எல்லாம் திருட்டு படங்கள் (திருட்டு டிவிடி போல)

500 ரூ க்கு மேல வாங்க கூடாதுன்னு முடிவு செய்து போனேன் ,அந்த தொகைக்கு புத்தகத்தோட அட்டைய மட்டும் தான் வாங்க முடியும் போல :-))

வழக்கம் போல அதே ...அதே பதிப்பாளர்களின் அதே ..அதே எழுத்தாளர்களின் ..அதே ..அதே புத்தகங்களே குவிந்திருந்திருந்தன , என்ன ஒன்று சென்னையை விட இங்கே கம்மியா லோடு இறக்கி இருந்தாங்க.

பதிவுலக நண்பர் சுரேகாவோட புத்தம் புதுத்தகம் தலைவா,வா! வெளியிடப்பட்டு இருக்குன்னு சொன்னாரே என தேட ஆரம்பித்தால் கண்ணுல அகப்படுவனானு தண்ணிக்காட்டுச்சு, என்ன பதிப்பகம்னு மறந்து விட்டதால் வந்த வினை, ஒரு வழியா ரெண்டாவது ரவுண்டில் "மதி புத்தக நிறுவனத்தில் " கண்டேன் தலைவனை.

புத்தகம் நல்லா வடிவமைக்கப்பட்டிருக்கு, தரமும் நல்லா இருக்கு, விலையும் குறைவு தான் 80 ரூ, (10% கழிவு போக 72ரூ) பக்கங்கள், 114,(ஒரு பக்கத்தின் விலை எனப்பார்த்தால் கூடுதலோ என நினைக்கிறேன், ஒரு பக்கம் 1 ரூ 58 பைசா வருது)

அட்டைக்கு எல்லாம் காசு சேர்த்து கணக்கு செய்தா கொடுத்த காசு செரிச்சிடும்னு நினைக்கிறேன் :-))
(இந்த கணக்கை எல்லாம் குவார்ட்டர் வாங்கும் போது போட தோன்றுவதில்லை!)

திரும்பி வரதுக்குள்ள ரேண்டமாக அங்கே ,இங்கே என சில பக்கங்கள் படித்துவிட்டேன், இதுல காப்பி ரைட் ஸ்டேட்மென்ட் தான் சூப்பர் ... யாருக்கும் இரவலாகவோ அல்லது வாடகைக்கோ புத்தகத்தை விட கூடாதாம், லெண்டிங் லைப்ரரிகாரங்க வாங்கினா, விற்பனை குறைஞ்சிடும்னு முன்னெச்சரிக்கை போல :-))

தோராயமா திறந்த பக்கத்தில் துருவ ஐஸ் கட்டியில் 20% மேல தெரிவது திறமை, தெரியாம உள்ள மூழ்கி இருப்பது குணாம்சம்னு தத்துவம் சொல்லியிருக்கார் தலைவர், அப்படியே ,காந்தி பார்த்த் வேலை,காமராஜரின் குணம்னு எல்லாத்தையும் தொட்டு போறாபோல இருக்கு.

சந்திர மவுலி, விக்னேஷ் பாத்திரப்படைப்பின் அடிப்படையில் பார்த்தால் " ராபின் ஷர்மா" எழுதின "தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" போலவோனு தோனுது.காப் மேயர், ,எம்.எஸ்.உதயமூர்த்தி போல கட்டுரை வடிவில் இல்லாமல் "paulo coelho" ராபின் ஷர்மா வகையில் கதையாக கொண்டு போயிருக்கிறார்.

இன்னும் முழுசா படிக்கலை ,படிச்சிட்டு விமர்சனம் எழுதலாம்னு ஒரு எண்ணம், அது சொந்த செலவில் சூனியம் ஆகிடுமோன்னு ஒரு கெவுளி கூவுது , சுரேகா தான் இன்னும் என்னை திட்டாம இருக்கார், அவர் கிட்டேவும் திட்டு வாங்கலாம்னு முடிவு செய்துட்டா ...விமர்சனம் எழுதிட மாட்டோம், ஏன்னா நான் ஒரு தடவை முடிவு செய்திட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் :-))

பக்கத்தில கேபிள்ஜியின் சினிமா வியாபாரமும் இருந்துச்சு(சோடிப்போட்டு வைக்குறாங்கப்பா) எடுத்து புரட்டிப்பார்த்தேன், அட்டை ரொம்ப டல்லா பழுப்பு ,கருப்பு கலரில் கவருவது போல இல்லை,கேபிள்ஜி சினிமா புத்தகம்னா சும்மா ஜிலு ..ஜிலுனு அட்டை போட வேண்டாம்?

சரியாக கவனிக்காமல் போய் இருப்பேன் , புத்தகம் பேரு கடைசி வினாடியில் பிளாஷ் ஆகி நினைவுப்படுத்தியது, எடுத்து பார்த்ததோடு சரி வாங்கவில்லை,
ஏற்கனவே பட்ஜெட் தாண்டியாச்சு அதனால் அப்புறம் பார்க்கலாம்னு வந்துவிட்டேன்.


ஏற்கனவே ஒரு ரவுண்ட் போய்விட்டதால் வந்த வினை, முதல் ரவுண்டில் பாரதி புத்தகாலயம்,விடியல்,அலைகள், நியுசெஞ்சுரி போன்ற பதிப்பக அரங்குகளில் மலிவு விலையில் நல்ல நூல்களாக கொஞ்சம் பொறுக்கிவிட்டேன்.இது போன்ற பதிப்பங்களில் தான் சர்வதேச அளவில் புகழ்ப்பெற்றவர்களின் மொழியாக்க நூல்கள் சல்லீசாக கிடைக்கிறது.

கிழக்கில் எல்லாம் டவுசரை உருவ என்றே ரஜினி,கலைஞர், விஜயகாந்துக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு நூல்களை போட்டு காசு புடுங்கிற வேலையை கன கச்சிதமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எஸ்.ரா.எழுதிய 5 நூல்கள் 150 ரு என ஒரு அறிவிப்பு, ரொம்ப ஆசைப்பட வேண்டாம் பேசும் புலி, அது இதுனு சின்ன குழந்தைகளுக்கு எப்போவோ எழுதி இருப்பார் போல ,அது போன்றவையாம்.

மேற்கொண்டு எதுவும் வாங்காமல் ,வேடிக்கைப்பார்க்கலானேன், சின்னப்பசங்க நிறையபேர் அவரவர் அப்பா,அம்மாவை இழுத்துக்கொண்டு கடை கடையா அலைய விட்டார்கள், நெய்வேலியில் எல்லாருமே உத்தியோகஸ்தர்கள், என்பதாலும் , பசங்களும் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள், பசங்க வேகத்துக்கு பெற்றோர் வளரவில்லை எனலாம்,,இது போன வருஷம் வாங்கின புத்தகம், வேண்டாம் என்றே சொல்லி பசங்களை இழுத்துப்போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பையன் அவசரப்பட்டு பாலித்தின் கவரை பிய்த்து புத்தகத்தை அவங்க அப்பாக்கிட்டே காட்ட எடுத்து போக பார்த்தான், கடையில் இருந்தவர் திட்டிக்கொண்டு இருந்தார். இரு வேறு உலகால் ஆனது வாழ்க்கை.

பாலித்தீன் ஒழிப்போம் என யாரும் கேரி பேக் தரவில்லை, ஒரு பேப்பர் கவரில் போட்டு கொடுத்தார்கள் ,கை வேர்வையிலே ஊறி பிய்ந்துக்கொண்டது, அப்புறம் எதுக்குய்யா புத்தகத்தை மட்டும் பாலித்தீன் கவரில் போட்டு மூடி வைக்குறிங்க :-))

குறைவான புத்தகங்களையே வாங்கினேன் , அதற்கே 1000 வந்துவிட்டது, எப்படியும் 10 நாளில் படித்துவிடுவேன். வாங்கிய புத்தகங்கள் எல்லாம் சராசரியான ஒரு "முட்டாளின்" தேர்வாகவே இருக்கும் என்பதால், வெளியில் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை :-))

மேலும் சில படங்கள்...





15 comments:

குரங்குபெடல் said...

"விஜயகாந்துக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு நூல்களை போட்டு காசு புடுங்கிற வேலையை கன கச்சிதமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள். "


அண்ணே புரியுது அண்ணே . . .


நல்லாதானே போயிட்டிருக்கு . .

ஏன் இப்படி . .

மற்றபடி . . .

நல்ல பகிர்வு

நன்றி

சுரேகா.. said...

அட..

ரொம்ப சந்தோஷம் வவ்வாலு!

என்னால நெய்வேலி வரமுடியலை!

எனக்குப் பதிலா நீங்கதான் போயிட்டீங்களே! :)

நேர்மையா விமர்சனம் எழுதுங்க!
அதுதான் அழகு!

நானும் உங்க கேரக்டர்தான்..

தனிமனிதன் வேறு...படைப்பு வேறுன்னு தெளிவா இருக்கேன்.

அதுனால நோ திட்டல்! :))

தி.தமிழ் இளங்கோ said...

வழக்கம் போல வவ்வாலின் நகைச்சுவை பதிவெங்கும் கொடிகட்டி பறக்கிறது.!

// ஒரு சில அரங்குகளை மட்டுமே கைப்பேசியில் படம் எடுத்தேன் அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த செக்கியூரிட்டி படம் எடுக்க கூடாது என எச்சரிக்கை விட்டார், என்ன கொடுமை சார் இது //

மேலே இருந்து அமெரிக்காகாரன் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுதான் இருக்கான். இங்கு கீழே சில இடங்களில் செக்யூரிட்டிகள் செய்யும் அலம்பல் தாங்க முடியாது.

naren said...

வவ்வால்,

விசயகாந்த் சரித்தரத்தை யாருங்க எழுதினது??LOL

நெய்வேலியில் அரசாங்க(நிலக்கறி) ஊழியர்கள் அதிகமாக இருப்பதால், நம் நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் தமிழ் எலக்கியவாதிகள் ஆன முன்னால் இன்னால் அரசாங்க ஊழியர் எலக்கியவாதிகள், புத்தக காட்சிக்கு சென்று தங்களின் பொருடகளை மார்கெட்டிங்க் செய்திருந்தால் குறைந்தது 1000 காப்பியாவது வித்திருக்கும்.
அதை விட்டுவிட்டு தமிழர்கள் எலக்கியவாதிகளை மதிக்கேறேதில்லே என மகாபுலிபுரம் தண்ணி பார்ட்டிக்கு திட்டம் தீட்டுகிறார்கள்.

ஆனாலும் நீஙகளும் ஒரு எலக்கியவாதின்னு தெரியுது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.

வவ்வால் said...

யோவ் கு.பெ,

வாரும், வவ்வால் என்றால் கலகம்னு "கலிஞர்" போல புது அகராதி போடும் எண்ணம் உண்டா?

ரஜினி, கலைஞர் பேரை கட் செய்துவிட்டு வி.காந்து பேரை மட்டும் எடுத்துப்போட்டு பேசுவதன் நுண்ணரசியல் என்னய்யா ?

பார்த்ததை , உணர்ந்ததை எழுதினால் அதை வச்சு அரசியல் பண்ண கிளம்பிடுறாங்கய்ய்யா :-))

நன்றி!

---------
சுரேகாஜி,

வாங்க, வணக்கம்,நன்றி!

வருங்கால எம்.எஸ்.உதயமூர்த்திக்கு வாழ்த்துக்கள்!

நீங்க வரலையா ,நெய்வேலிக்கு , அப்போ எனக்கு கன்வேயன்ஸ் போட்டுக்கொடுங்க :-))

ஹி..ஹி நேர்மையா எழுதப்போய் தான் வம்புல சிக்குறேன், புத்தி,மனசு ரெண்டும் ஒரே போல நமக்கு, எனவே நினைப்பதையே எழுதுவேன், நல்லாப்படிச்சுட்டு கரைச்சல் இல்லாம ஒரு விமர்சனம் போடப்பார்க்கிறேன்,திட்டுனாலும் சந்தோஷமே,எழுத்தாளர் திட்டுனாலும் பெருமை தானே :-))

//நானும் உங்க கேரக்டர்தான்..//

ஆஹ்ஹா... நமக்கு ஒரு கம்பெனி இருக்கு,கவலைப்படாதடா வவ்வாலு :-))

--------
தி.த.இளங்கோ சார்,

வணக்கம்,நன்றி!

உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு சார், இல்லைனா நம்ம ரைட்டிங்க்ல இருக்கிற "மொக்கை நகைச்சுவையும்" ரசிப்பீங்களா :-))

கூகிள்காரன் எல்லாத்தையும் படம் எடுத்து போட்டுட்டான், இவனுங்க இன்னும் இப்படி இருக்காங்களேனு நான் நினைச்சாப்போலவே நீங்களும் நினைச்சு இருக்கிங்க, இது கூட பரவாயில்லை பி.எஸென்.எல் அலுவலகம் இருக்கு அங்கே கூட புகைப்படம் எடுக்க கூடாதுனு போட்டு இருப்பாங்க, அந்த டவர் 7 மைல் அந்தப்பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் அதை படம் எடுக்க கூடாதுன்னு போட்டு இருப்பாங்க :-))
----------
நரேன்,

வாரும், வணக்கம்,நன்றி!

என்ன எல்லாம் வி.காந்து ரசிகர்கள் ஆகிடிங்களா? ஆமாம் அவரு பெரிய சரித்திர நாயகரு ரோமிலா தாப்பர் இல்லைனா ராமச்சந்திர குஹா போன்றவர்கள் வரலாற்று சரித்திரம் எழுத, யாராவது ரசிகர்மன்றத்து ஆளுங்க கேப்டன் கட்சில வாய்ப்பு கிடைக்கும்னு எழுதி இருப்பாங்க :-))

நீரே பெரிய எலக்கியவாதியா இருப்பீர் போல, எல்லா எழுத்தாளர்களின் பூர்வாசிரம ரகசியம் எல்லாம் சொல்லுறீர். போஸ்ட் ஆபிஸ்ல ஜாப்பா குத்தினவர், தொலைப்பேசில ஒயர் புடுங்கினவர், ரயில்வேல தண்டவாளம் போட்டவர், ஸ்கூலில் பெல் அடிச்சவர்னு எல்லா எலக்கியமும் அரசு பணத்தில தான் வளர்ந்து இருக்காங்க. ஒரு வேலை கவர்மெண்டு வேலையில சேர்ந்தால் கற்பனை நல்லா ஊற்றெடுக்கும் போல. பேசாம நானும் காப்பரேஷன்ல கொசு மருந்து அடிக்கிற வேலையில சேர்ந்து எலக்கியவாதி ஆகிடாலம்னு பார்க்கிறேன் :-))

எலக்கியங்கள் நெய்வேலிக்கு வந்திருந்தால் ஒரு நாளு புக்கு எக்ஸ்ட்ரா வித்திருக்கும், ஆனால் இங்கே ரசிகர் மன்றம் யாருக்கும் இல்லை போல, அதான் ஒருத்தரும் ஓசில உபச்சாரம் கிடைக்காதுன்னு வரலை :-))

எலக்கியவாதிகளை கலக்கியவாதினு பேர் எடுக்கலாமுனு பார்க்கிறேன் ,நீர் வேற என்னையும் குட்டையில குதிக்க சொல்லிக்கிட்டு :-))
-----------

கொக்கிகொமாரு said...

கொஞ்சம் இங்க வர்றது.
http://www.blogger.com/comment.g?blogID=35738214&postID=2685953851066751525&isPopup=true

Anonymous said...

வவ்வாலு,
இருந்தாலும் உங்களுக்கு ஜி.கே. நாளேட்ஜ் கம்மி -:(. விஜயகாந்த சரித்திரத்தை பத்தி சொன்னா ரோமிலா தாப்பருக்கு தாவுற ரேஞ் மேட்டரா ??)))).

கருப்பு எம்சியார் சரித்திரத்தை எளுதியது புகழ்பெற்ற பத்திரிக்கையளர் லக்குலுக் தான், கூடவே அவுங்க தேர்தல் அறிக்கையும் ஒருவாட்டி எளுதினாராம்.

ILA (a) இளா said...

//வெளியில் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.//
ஓசி கேட்டுருவாங்களோன்னு பயம்தானே?

வவ்வால் said...

அனானி,

விவரமான ஆளா இருப்பார் போல தெரியுதே, அண்ணாத்த கழகத்தின் தீவிர சொம்பாச்சே, எப்படி கரும்பு எம்சியாருக்கு எழுதுவார்னு நினைச்சிட்டேன், அதுவும் கருப்பு எம்சிஆர், ஆத்தாவை மென்மையாவும், அய்யாவை வன்மையாவும் வேற வறுத்து எடுத்தாரே?

என்ன கொடுமையிடா இது,கொள்கை கொத்தவரங்காய் எல்லாம் பேச்சுக்கு தானா அப்போ :-))

-----------

இளா ,

வாங்க,வணக்கம்,நன்றி!

என்ன ரொம்ப நாளா பார்க்கவே முடியவில்லை, துவைப்பதிலே மூழ்கிட்டிங்களோ?

அப்படிலாம் முன்சாக்குறதையா இருந்திருந்தா நிறைய புத்தகம் கையில நின்னு இருக்கும். புத்தகம் பேருலாம் சொன்னா அறிவு சீவீகள் சிரிக்குமோனு தான் சொல்லலை, உங்களுக்கு வேணும்னா ரகசியமா சொல்லுறேன் ,யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க :-))

ராஜ நடராஜன் said...

ஒரு அழகான எலக்கிய பதிவை இப்படியா கமெண்டுல வடிவேலு காமெடி ஆக்கிறது:)

கமெண்டுவாதிகளே!எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக்கிட்டாலும் அனானியின் அசத்தலுக்கு தனியா ஒரு சலாம்:)

ராஜ நடராஜன் said...

ஒரு அழகான எலக்கிய பதிவை இப்படியா கமெண்டுல வடிவேலு காமெடி ஆக்கிறது:)

கமெண்டுவாதிகளே!எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக்கிட்டாலும் அனானியின் அசத்தலுக்கு தனியா ஒரு சலாம்:)

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி காமெடி தான் இருக்கிறதுலயே கஷ்டம்னு சொல்லுவாங்க, அப்போ நமக்கு நல்லா காமெடி வருது போல :-))

இப்போலாம் பிலாக் ஆரம்பிச்சு 10 பதிவு போட்டா அடுத்த வாரமே யாரையாவது பிடிச்சு புக்கு போட்டுறாங்க,அதனால யார் என்ன புக்கு போட்டாங்கன்னு எனக்கு எப்படி தெரியும் :-))

நானும் ஆள்ப்பிடிச்சு புக்கு போட்டால் தான் ,நீங்கலாம் அடங்குவீங்க :-))

நானும் புக்கு போடுறேன் ,தூங்கிக்கிட்டு இருந்த வவ்வாலை தட்டி எழுப்பிட்டாங்க , புக்கு பேரு "30 நாளில் புத்தகம் எழுதுவது எப்படி?"

Kirschiwfa said...

"விஜயகாந்துக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு நூல்களை போட்டு காசு புடுங்கிற வேலையை கன கச்சிதமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள். " அண்ணே புரியுது அண்ணே . . . நல்லாதானே போயிட்டிருக்கு . . ஏன் இப்படி . . மற்றபடி . . . நல்ல பகிர்வு நன்றி

சுரேகா.. said...

இன்னும் தலைவா வா! விமர்சனம் வரலையே வவ்ஸ்!

அடுத்து விமர்சனத்துக்கு ரெண்டு புக் ரெடியா இருக்கு!

“எஸ்கேப்”
“வடிவேலு மேலாண்மை”

காத்திருக்கிறேன்.

வவ்வால் said...

சுரேகாஜி,

வாங்க ,என்னது பழைய பதிவுல வந்து தாக்கீது கொடுக்கிறிங்க, பழையப்பதிவ எல்லாம் கவனிக்கிறதேயில்லை அவ்வ்.

வேலியில தொங்குற வவ்வாலை புடிச்சு வேட்டியில விடப்பார்க்குறிங்க, சரி எழுதிடுவோம், புது புக்கும் வாங்கிப்பார்க்கிறேன்.

இப்பவே சொல்லிட்டேன் எதா இருந்தாலும் பேச்சு பேச்சா தான் இருக்கணும் சொல்லிட்டேன் அவ்வ்!