Wednesday, February 27, 2013

பரிணாமம் சாத்தியமே- அறிவியல் சான்று.


(ம்ம்..இங்க வச்ச சப்ளாக்கட்டைய காணோமே, யாருப்பா எடுத்தா?)


ஏமக்குறைப்பு நோய் என தமிழில் அழைக்கப்படும் எய்ட்ஸ்(AIDS) நோய் HIV( Human Immunodeficiency Virus) என்ற வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.

HIV வைரசின் முதல் தொற்று தாக்குதல் மேற்கு ஆப்ரிக்க நாடான காங்கோ, கேமரூன் பகுதிகளில் இருந்தே துவங்கியது என அறியப்பட்டுள்ளது, சுமார் 1888 இலேயே முதல் தொற்று தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள், ஆனால் 1927 இல் தான் இப்படி ஒரு நோய் உள்ளது என்றும் ,1980 இல் தான் இந்நோய்க்கு காரணம் HIV, வைரஸ் என்றும் கண்டறிந்தார்கள்.

HIV, the Human Immunodeficiency Virus, என்பது மனிதர்களிடம் முதலில் உருவாகவில்லை, ஆப்ரிக்க சிம்பன்சிகளில் ஒரு வகையான Pan troglodytes troglodytes என்ற குரங்கினத்திடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்கிறார்கள்.

சிம்பன்சி வகைக்குரங்கிடம் காணப்படும் வைரஸ் SIVs (simian immunodeficiency viruses) எனப்படும், இது மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் உண்டாக்காது, மேலும் அக்குரங்குகளுக்கும் எவ்வித நோயையும் உண்டாக்குவதில்லை, ஆனால் காலப்போக்கில் குரங்குகளின் உடலிலேயே வைரஸ்கள் மியுட்டேஷன் அடைந்து மனிதர்களுக்கும் தொற்றும் வண்ணம் மாறியிருக்க வேண்டும் எனவும், அப்படி மாற்றமடைந்த வைரஸ் தொற்று உள்ள குரங்குகளை வேட்டையாடி ,மாமிசம் உண்டப்போது வேட்டையாடியவர்களின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களில் சிம்பன்சிகுரங்கின் இரத்தம் பட்டு மியூட்டேஷன் அடைந்த SIVs (simian immunodeficiency viruses) மனிதர்களுக்கு தொற்றினை உண்டாக்கி இருக்கிறது.

தொற்று உருவாகும் வழிகள் என கீழ்க்கண்ட காரணங்களை சொல்கிறார்கள் ,

# சிம்பன்சி வகைக்குரங்குகளை வேட்டையாடிய பொழுது வேட்டைக்காரர்கள் உடலில் இருந்த காயம் மூலம் உள்நுழைதல்.

# காங்கோ நாட்டில் அக்காலத்தில் வாய் வழி மூலம் கொடுத்த போலியோ சொட்டு மருந்து சிம்பன்சி வகை குரங்கின் சிறுநீரகத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது,எனவே போலியோ சொட்டு மருந்து மூலம் பரவியது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை போலியோ சொட்டு மருந்து தயாரித்த அமெரிக்காவை சேர்ந்த "the Wistar Institute in Philadelphia" நிறுவனம் மறுத்துவிட்டது , macaque monkey kidney cells மூலமே மருந்து தயாரிக்கப்பட்டது ,அவற்றுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என சொல்லிவிட்டார்கள்,ஆனாலும் இக்காரணம் இன்றும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

# காங்கோ பெல்ஜியத்தின் காலனியாகவும் கேமரூன் ஜெர்மனியின்  காலனியாகவும் இருந்தது ,அப்பொழுது அங்கு மலிவாக ரத்தம் சேகரிக்கப்பட்டு ,தேவையான நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் சுத்திகரிக்கப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது ,இதனாலும் பரவியிருக்கலாம் என்கிறார்கள்.

# விபச்சாரம்,போதை பொருள் எல்லாம் சகஜமாக உலவிய பகுதி என்பதாலும் எளிதில் பரவியது, அங்கு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாக நிலவியதால் பாலிகேமி எனப்படும் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்ற நிலையும் நிலவியுள்ளதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

# அமெரிக்காவின் சி.ஐ.ஏ நடத்திய பரிசோதனைகள் மூலமே ஹெச்.ஐ.வி வைரஸ் பரவியது என்ற கூற்றும் உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள்,கருப்பின மக்களை அழிக்க செய்ததாக அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்களாம்.

மனித உடலில் தொற்று உருவாதல்:

ஹெச்.ஐ.வி வைரஸ் மனித உடலில் நுழைந்ததும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தாக்கும் என அறிவோம்,ஆனால் அவற்றால் வெள்ளை அணுக்களில் எளிதில் நுழைய முடியாது அதற்கு ஒரு நுழைவு வாயில் தேவை ,அவ்வாறு செயல்படுவது CCR5 (C-C chemokine receptor type 5)எனப்படும் ரிசெப்டார்கள் ஆகும்,இது ஒரு கிளைகோ புரோட்டின் ஆகும். இதன் பின்னர் ஹெச்.ஐவி வைரஸ் CD4 (cluster of differentiation 4)  என்ற மற்றொரு கிளைக்கோ புரொட்டின் ரிசெப்டாரை தாக்கி இணையும், இதன் மூலமே மனித செல்லின் டிஎன்.ஏ வை ஹெச்.ஐவி வைரஸ் சென்றடையும். மனித செல்லின் டி.என்.ஏவின் பிரதி எடுக்கும் அமைப்பை வைரசின் ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரைப்டேஸ் மூலம் ஆர்.என்.ஏ பிரதி எடுக்கப்பயன்ப்படுத்திக்கொள்ளும், அப்பொழுது தான் பல வைரஸ்கள் பெருக முடியும், ஹெச்.ஐ.வி வைரசால் ஒரு உயிருள்ள செல் இல்லாமல் தனித்து வாழ முடியாது.


CD4 (cluster of differentiation 4) இன் வேலை என்னவெனில்  ஏதேனும் நோய் கிருமி உடலில் நுழைந்துவிட்டால் ,அதனை எச்சரித்து நமது நோய் எதிர்ப்பு அமைப்பினை இயக்குவதாகும். இவ்வாறு CD4 (cluster of differentiation 4) அறிவித்ததும் CD8 என்ற இன்னொரு கிளைகோ புரோட்டின் நோய்க்கிருமியை கொல்ல தேவையான ஆண்டிஜனை உற்பத்தி செய்யும். ஹெச்.ஐ.வி வைரஸ் சிடி4 இனை செயல்பட விடாமல் செய்து விடுவதால் ,நோய் எதிர்ப்பு ஆண்டிஜனை சிடி8 உற்பத்தி செய்யாமல் போய்விடுகிறது ,இதனால் தான் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது, இதனையே எயிட்ஸ் என்கிறோம். எயிட்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை செயல்படாமல் செய்யும் ஒரு தொற்று எனவே எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான வியாதிகளும் வந்து இறக்க நேரிடும், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படாததால் எந்த மருந்தும் வேலை செய்யாமல் போய்விடும்.

(HIV ON HUMAN CELL-ELECTRON MICROSCOP IMAGE)

இயற்கையில் எதிர்ப்பு:

CCR5 (C-C chemokine receptor type 5) டெல்டா-32 என்ற இன்னொரு வகை அல்லீல் ரிசப்டார்கள் சிலருக்கு இருப்பதை கண்டறிந்துள்ளார்கள், ஐரோப்பிய காக்கேசியன் வகை இனக்குழு மக்களில் சுமார் 20 சதவீதம் பேருக்கு இத்தகைய மாற்று அல்லீல் ரிசெப்டார்கள் உள்ளதாம். அவர்கள் இயல்பிலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

டெல்டா-32 வகை அல்லீல் ரெசப்டார்கள் ஹெச்.ஐ.வி வைரசினை நுழைய அனுமதிப்பதில்லையாம், எனவே வைரசால் மனித செல்லுடன் இணைய முடியாமல் அழிந்து விடுகின்றன.

இத்தகைய நோய் எதிர்ப்பு தன்மை உருவாக காரணம் ஆரம்ப நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் பிளேக் மற்றும் தட்டம்மை நோய்கள் பரவலாக பரவியது ,அப்பொழுது அதற்காக தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அவை CCR5 (C-C chemokine receptor type 5) ரிசப்டாரில் தற்செயலாக ஒரு மியுட்டேஷன் ஏற்படுத்தி டெல்டா-32 என்ற CCR5 (C-C chemokine receptor type 5) ரிசெப்டார்களை உருவாக்கி இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

இத்தகைய அல்லில்கள் இருப்பது ஹெச்.ஐவிக்கு முற்றிலும் பாதுகாப்பு எனவும் சொல்லிவிடமுடியாது ஆனால் எளிதில் நோய் தொற்றாமல் செய்கிறது என்கிறார்கள், எச்.ஐவி யால் பாதிக்கப்பட்டு கேன்சர் வந்தவர்களுக்கு டெல்டா-32 அல்லீல் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜையினை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை அளித்த பொழுது, ஹெச்.ஐ.வி வைரசின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளதாம்,எனவே டெல்டா-32 உள்ளவர்களின் ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்தால் ஹெ.எச்.வியை குணமாக்கலாம் என ஒரு ஆய்வு நடக்கிறது.

வைரசின் பரிணாம வளர்ச்சி:

ஆரம்பத்தில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்களை மனித நோய் எதிர்ப்பு சக்தி முறியடித்துள்ளது,ஆனால் தொடர்ந்து சிம்பன்சி வகைகளை வேட்டையாடும் பொழுது தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, SIVs (simian immunodeficiency viruses) மேலும் மியூட்டேஷன் மூலம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதர்களை தாக்கும் வைரசாக மாற்றமடைந்துள்ளது என்கிறார்கள்.

மேலும் ஹெச்.ஐ.வியிலேயே இன்னொரு வகை ஹெச்.ஐ.வி-2 என உருவாகி இருப்பதையும் 1999 ஆம் ஆண்டு கண்டுப்பிடித்தார்கள். இவ்வைரஸ்  sooty mangabey (the White-collared monkey) என்ற வகை குரங்கின் SIVs (simian immunodeficiency viruses) மூலம் உருவான ஹெச்.ஐ.வி வைரஸ் எனவே இதனை ஹெச்.ஐ.வி-2 என வகைப்படுத்தினார்கள்.

ஹெச்.ஐ.வி-1 வைரஸே மிக அதிக தொற்றினை உருவாக்கியுள்ளது, ஹெச்.ஐ.வி-2 மிக குறைந்த அளவிலேயே தொற்றினை உருவாக்கியுள்ளதாகவும், இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து புது வகை வைரசினையும் உருவாக்கின்றது எனவும் கண்டுப்பிடித்துள்ளார்கள்,இவ்வாறு செய்வதை viral sex" என்கிறார்கள்.

SURVIVAL OF THE FITTEST:

ஹெச்.ஐவி-1 வைரஸ் ஒரே நாளில் பல பில்லியன் எண்ணிக்கையில் பெருக வல்லவை ,இவ்வாறு பல்கி பெருகும் போது ,ஹெச்.ஐ.வியின் மரபியல் பொருளான ஆர்.என்.ஆ வும் பிரதி எடுக்கப்படும், இவ்வாறு அதி வேகமாக ஆர்.என்.ஏ மறு பதிப்பு  செய்கையில் ஆர்.என்.ஏவில் பல பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,இதனால் பல புதிய வகை ஹெச்.ஐ.வி வைரஸ்கள் உருவாகின்றன ,அவற்றில் மனித உடலில் வாழ தகுதியுள்ளவை பிழைத்து ,மீண்டும் புதிய வைரஸ்களை உருவாக்கும்.

இதனை ஹெச்.ஐ.வி வைரசின் பரிணாம வளர்ச்சி என்கிறார்கள். உலகிலேயே அதி வேகமாக பரிணாம வளர்ச்சி அடையும் வைரசாக ஹெச்.ஐ.வி உள்ளது. இதனாலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு உரிய மருந்தினை கண்டுப்பிடிக்க முடிவதில்லை.

ஒரு வகை மருந்தினை கொடுத்தால் அதனால் பெரும்பாலான வைரஸ்கள் அழிந்தாலும் சில மட்டும் தப்பிப்பிழைக்கின்றன, அவ்வாறு பிழைக்கும் வைரஸ்கள் அம்மருந்திற்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்கின்றன,பின்னர் சில நாட்களில் பல்கி பெருகி நோயை முற்ற வைக்கின்றன.

இது போன்ற  எதிர்ப்பு சக்தியை பூச்சிகளும் உருவாக்கிக்கொள்ள வல்லவை,இதனாலேயே பூச்சி மருந்துகளுக்கு பல பூச்சிகளும் கட்டுப்படாமல் விவசாயத்தில் பெரும் பாதிப்பு உண்டாகிறது, இவ்வாறு எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதும் பரிணாம வளர்ச்சியே.

எனவே ஹெச்.ஐவி தாக்கிய நோயாளிக்கு பலவகையான நோய் எதிர்ப்பு மருந்துகளை கூட்டாக கொடுக்க வேண்டும், பின்னர் தொடர்ந்து கண்காணித்து மேலும் சில நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து புதிதாக உருவாகிய வைரஸ்களை கட்டுப்படுத்த வேண்டும்,ஆனால் முற்றிலும் அழிக்க முடியாது.

படம்-1ஒரு வகை மருந்தில் முதல் வகை வைரஸ் மட்டுமே அழிக்கப்படுகிறது ,தப்பிய மற்ற வகை வைரஸ் அப்படியே உள்ளது.

படம்-2மேலும் சில வகை மருந்தினை கலந்து கொடுக்கப்படும் பொழுது மற்ற வகையும் அழிகிறது ஆனால் சில தப்பி பிழைத்து உள்ளது.

வகைகள்:

இவ்வாறு தொடர்ந்து மனித உடலில் ஹெச்.ஐவி வைரஸ் பரிணாமம் அடைந்து புதிய வகையினை உருவாக்கி வருவதால், எயிட்சை கட்டுப்படுத்த பரிணாம உயிரியியலாலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது வரையில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள ஹெச்.ஐ.வி வைரஸ்களின் வகைகள்.ஹெச்.ஐ.வி வைரஸ் ஒரு பொது மூதாதையரிடம் இருந்து உருவாகி பல்கி பெருகியதை விளக்கும் பரிணாம மரம்:இக்காலத்தில் ஒரு செல் கொண்ட நுண்ணுயிரான வைரஸ் பல பரிணாம மாற்றங்கள் அடைவதை ஹெச்.ஐவி வைரைஸ் மூலம் தெளிவாக பார்த்தோம், அப்படி இருக்கையில் ஆதிகாலத்தில் முதல் உயிரினமாக ஒரு செல் உயிரி உருவாகி தன்னிச்சையான மியூட்டேஷன் மூலம் பல உயிர்களாக பல்கி பெருகி இருக்க ஏன் முடியாது?

மேலும் வைரஸ் என்பதே உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் இடைப்பட்ட பாலமாக விளங்கும் ஒரு உயிர் அமைப்பாகும், சாதகமற்ற சூழலில் படிகமாக ஆகிவிடும், அப்பொழுது அது உயிரற்றது போன்றதாகும், மீண்டும் சாதகமான சூழலில் உயிர்ப்பெற்று விடும்,எனவே தான் வைரசினை எளிதில் அழிக்க முடியாது என்கிறார்கள்.

பேக்ட்டீரியா, வைரஸ் போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுவதை உயிர் தொழி நுட்ப வல்லுனர்கள் ஆய்வங்களில் நிறுவியுள்ளார்கள்,எனவே உயிர்களிடமும் அத்தகைய பரிணாம வளர்ச்சி சாத்தியமேயாகும் என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதுமானது, பொது அறிவு இல்லாமல் இன்னமும் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு என்பவர்கள் ஹெச்.ஐவி வைரசுடன் வாழ்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவு சொல்லவும் :-))

தொடரும்(வவ்வால் நாடினால்)....
----------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://evolution.berkeley.edu/evolibrary/article/medicine_04

http://www.avert.org/origin-aids-hiv.htm

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)61052-6/fulltext

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
------------------------------

27 comments:

நாய் நக்ஸ் said...

ரொம்ப ராவா இருக்கே.....
இடையிடையே கொஞ்சம் உம்ம ஸ்டைலில்
:-)))) போடும்...!!!!!!!

நாய் நக்ஸ் said...

வவ்வால் நேத்திக்கு நான் சொன்ன செய்தி பத்தி ஏதாவது?

”தளிர் சுரேஷ்” said...

ஓரளவுக்கு மேல படிக்க முடியலை! ஓவர் விஞ்ஞானம் என் உடம்புக்கு ஒத்துக்கிறது இல்லை! நன்றி!

Anonymous said...

கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு என்பவர்கள் ஹெச்.ஐவி வைரசுடன் வாழ்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவு சொல்லவும் :-))//

லொள்ளு டு தி பவர் த்ரீ...

Anonymous said...

s suresh said...
ஓவர் விஞ்ஞானம் என் உடம்புக்கு ஒத்துக்கிறது இல்லை! //

Over Chemicals and electronics என் உடம்புக்கு ஒத்துக்கிறது இல்லை...-:)

Anonymous said...

இது தாசுக்காக எழுதப்பட்டதா வவ்வால்ஜி?

Siva said...

எல்லாம் சரி வவ்வால்ஜி. அசின் போட்டோ போட மறந்துடீன்களே !!!

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

வாரும்,நன்றி!

இன்னிக்கு ஓப்பனிங்கே நீங்க தானா, தள்ளாடாம பின்னூட்டங்கள் வருதான்னு பார்ப்போம் :-))

இந்தப்பதிவில் எங்க அதிக சிரிப்பான் போட ? கடைசியில் ஒன்னு போட்டாச்சு ,அதுக்கே லொள்ளுனு சொல்லுறாப்படி ரெவரி அவ்வ்வ்!

# என்ன சொன்னீங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டேனே, எதாவது ஸ்பாம்ம்ல போயிடுச்சா ,பார்க்கிறேன்.
------------------
சுரேஷ்,

வாங்க,நன்றி!

விஞ்ஞானத்த வளர்க்க போறேன்டின்னு என்.ஏச்.கே பாடியிருக்கார் ,இப்படி சொன்னா எப்பூடி வளரும், வாங்க படிச்சு அறிவ தேத்துங்க கூடவே உடம்பும் தேறிடும் :-))
--------------
ரெவரி,

வாங்க,நன்றி!

ஹி...ஹி கொஞ்சமா தான் லொள்ளு செய்திருக்கோம் அதுக்கே இப்படி சொன்னா எப்பூடி?

ஆமாம் எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் மனிதனை பலவிதமாக பாதிக்குது, அதுவும் பெப்சி,கோக் போன்ற இரசாயனங்களும், தொலைக்காட்சி ,கைப்பேசி போன்ற எலக்ட்ரானிக்சும் மனிதர்களை ரொம்பவே தாக்குது :-))

#ஹி...ஹி ஆமாம், பாகவதர் , கிருஷ்ண லீலையை விட்டுப்புட்டு பரிணாமம் அறிவியல் இல்லைனு பினாத்துறார் அதான் லேசா ஒரு காட்டு காட்டி இருக்கேன்
----------

சிவா,

வாங்க,நன்றி!

அடடா இத்தனை நாளா கமெண்ட்டே போடாம இருந்துட்டு அசின் படம் போடலைனதும் என்னா ஆர்வமா கேட்கிறார் பாருங்கய்யா :-))

இந்த பதிவில படம் போட்டா விவேக் காமெடி "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" போல ஆகிடும்னு தான் போடலை.

அடுத்து மனித பரிணாமவியல் பற்றிய பதிவில் ஒன்னுக்கு ரெண்டா படம் போட்டு கணக்க சரி செய்துடலாம். ஹி...ஹி நீங்களும் மலபார் ரசிகரா ,அடடா என்ன கூட்டம் கூடிக்கிட்டே போவுது அவ்வ் :-((
---------------

சார்வாகன் said...

சகோ வவ்வால்,
நல்ல பதிவு.பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் மாறுகிறது என்னும் போது, நமது ஜீனோம்,அது சார் உருஅமைப்பும் மாறுவதில் என்னெ விந்தை. ஒவ்வொரு உயிரிக் குழுவிலும் ,ஒத்த உருஅமைப்பு,அதே சமயம் சிறிது வித்தியாசம் பல்வேறு வகைகள் உண்டு. இதனை கண்கூடாக பார்க்கிறோம். இந்த பல்வேறு வகை உயிரிகளுக்கு ஒரு மூலம் என்பதே பரிணாமம்.ஆகவே பரிணாமத்திற்கு சான்றுகள் இல்லை என்போர், கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும்.

நுண்ணுயிர்களில் இனவிருத்தி வேகமாக நடைபெறுவதால், பல சான்றுகளை ஆவணப் படுத்துகிறார். அதில் ஒன்றுதான் இந்த எச்.ஐ.வி வைரஸ் இது பற்றி நாம் எழுதிய பதிவு.
"எய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்!!!!!!"

http://aatralarasau.blogspot.com/2012/03/blog-post.html

இந்த வைரஸில் ஏற்பட்ட மாற்றம் சூழலினால்தான் ஏற்பட்டது என்பதை நிரூப்பிப்பது சிரமமே!!

இந்த வகை வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன் இல்லை என்பதையும், முதன் முதலில் கண்டறியப்பட்டதை மட்டுமே சொல்ல முடியும்.

இது பரிணாம எதிர்ப்புவாதிகளுக்கு குழப்ப சாதகம் ஆகிறது.

ஆனால் சிறுபரிணாமம் பல்வேறு வகைகளை உருவாக்குகிறது என்பதே ,பரிணாம நிரூபணத்திற்கு போதுமானது.பாருங்கள் எச்.ஐ.வி .வைரஸில் எத்தனை வகை. எப்படி ஒரே இனம், வெவ்வேறு இனம் என் வகைப் படுத்துகிறார்கள், இந்த வித்தியாசம் என்பதும் மாறும் என்பதை புரிய வேண்டும்.

ஆண்,பெண் வித்தியாசம் கூட மாறக் கூடியது என்பதன் நிரூபணமே மூன்றாம் பாலினத்தோர். ஒருவர் ஆணா,பெண்ணா என்பதே பரிசோதித்தே பல் சூழல்களில் ஏற்கிறார்.

அந்த சிறுபரிணாமம் அடைந்த பல்வேறு வகை உயிரிகள் ,தங்களுக்குள் இணைந்து இனவிருத்தி செய்ய இய்லாத நிலை அடைந்தால், அவை வெவ்வேறு உயிரிக் குழு ஆகின்றன.இது பெரும்பரிணாமம். இது நிகழும் சராசரி கால அளவு 30 இலட்சம் ஆண்டுகள்.

ஒரு உயிரிக் குழு சில உயிரிக் குழுக்களாக காலம்,சூழல் சார்ந்து[சாராமல்] பிரிவதே பரிணாமம்.

பரிணாம எதிர்ப்பினை தமிழ் பதிவுலகில் தொடந்து மறுப்பு கொடுத்து விளக்குவோம்.

நன்றி!!

நாய் நக்ஸ் said...

நேற்று தங்களிடம் கேட்டிருக்கேன்....நன்றாக மெயில் பார்க்கவும்....ஆனால் வேறு இடத்தில்...

சஞ்சய் said...

//(ம்ம்..இங்க வச்ச சப்ளாக்கட்டைய காணோமே, யாருப்பா எடுத்தா?) //

…அரே ராமா அரே கிருஷ்ணா!

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

நன்றி!

பரிணாமம் என்பது சந்தேகத்திற்கிடமின்றி ஏற்கப்பட்ட ஒன்று ,ஆனால் பல வகை உயிரிகளுக்கு என தனித்தனியே அதன் பரிணாம மரத்தினை நிறுவுவது தான் கடினமாகவுள்ளது.

வைரஸ்,பேக்ட்டீரியா போன்றவை ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கில் பெருகுவதால் நிறைய பிரதி எடுப்பதில் பிழை ,மியூட்டஷன் என நிகழ வாய்ப்புள்ளதால் எளிதில் சிறுமாற்றம் மூலம் தனி பிரிவு உண்டாவதை நிறுவ முடியும்.

விரைவில் ஆதி மனிதன் முதற்கொண்டு விரிவாக பதிவிடுகிறேன், ஏற்கனவே நீங்கள் சொன்னதாக கூட இருக்கலாம், என்னளவில் ஒரு முயற்சியாக செய்கிறேன்.

நீங்கள் சொன்னப்பதிவை முன்னரே படித்துள்ளேன், அப்பொழுதும் நாம் பேசினோம்.

பரிணாம மாற்றத்தினை புரிந்துக்கொள்ள கொஞ்சம் பொது அறிவும், அறிவியலும் தெரிந்தாலே போதும், புரியாதவர்களுக்கு புரிய வைப்போம்,நன்றி!
---------------

நக்ஸ் அண்ணாத்த,

உங்களை என்ன செய்றது,2006 பதிவில் போய் கமெண்ட் போட்டு வச்சிருக்கிங்க, அதை எல்லாம்ம் நான் இப்போ பார்ப்பதே இல்லை, பையனை நன்கு கவனித்துக்கொள்ளவும், கல்லூரி பற்றி விசாரித்து தான் சொல்ல முடியும், பின்னர் மின்னஞ்சல் செய்கிறேன்.

என்னைப்போன்ற சாமனியனால் என்ன செய்ய இயலும்னு சொல்லுறிங்க? தகவல்கள் தான் பெற்று சொல்ல இயலும், கண்டிப்பாக இயன்றவரையில் தகவல்களைப்பெற்று சொல்கிறேன்.
---------------

சஞ்சய்,

நன்றி!

கற்பூர மூளை! கப்புனு புடிச்சிட்டிங்க!
ஹரே ராமா ஹரே கிருஷ்ணானு நீங்களும் ஆரம்பிச்சுடாதிங்க ,அப்புறம் சப்ளாக்கட்டைக்கு பயங்கர டிமாண்ட் ஆகிடும் :-))

சப்ளாக்கட்டைனு சொன்னா எல்லாம் சப்புன்னு புடிச்சிக்கிறாங்கப்பா :-))

Anonymous said...


வவ்சு, நறுக்குன்னு இருக்கு பதிவு.


By---
மாக்கான்.

குஜால்காரன் said...

கருத்துச் செறிவுள்ள இடுகை. நன்றி.

Anonymous said...

//ஆதிகாலத்தில் முதல் உயிரினமாக ஒரு செல் உயிரி உருவாகி தன்னிச்சையான மியூட்டேஷன் மூலம் ......//

அந்த முதல் ஒரு செல் உயிரினத்தை கடவுள்தான் படைத்தாராம்.
அப்படியென்றால் கடவுளை யார் படைத்தது என்று கேட்டால் பதில் இல்லை.

அருமையான பதிவு.

naren said...

வவ்வால்,
பதிவு எளிமையாகவும் புரியும்படியாகவும் உள்ளது. பதிவை படித்தால் எய்ட்ஸ் தொத்தாது என டிஸ்கி போட்டிருக்கலாம்.

”நடிகை அசின் இந்த குரங்கிலிருந்துதான் பரிணாமமித்து வந்தாள்” என்று போட்டு ஷாக் தராமல் இருந்ததற்கு நன்றி. அசின் புகழ்பாடும் தமிழின துரோகி.

ஜெயதேவ் தாஸின் பதிவு முழுக்க முழுக்க மார்க்கவியாதிகளின் காப்பி பேஸ்ட் தான். அதனால் பரிணாமத்திற்கு ஆதரவாக அல்லது எதிர்ப்பாக எந்த ஒரு ஆதாரத்தை காட்டுவதாக இருந்தாலும், அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டயிருந்தாலும், அது அந்த அல்டிமேட் புக்கிலிருந்துதான் காட்ட வேண்டும்.

ஸோ, இந்த பதிவு சிறு பரிணாமத்தை பத்தி சொல்லது.

இதற்கு ஆதாராம், ஆதாம் 90 அடி நீளமுள்ள மனிதன், இறைவன் சஜ்தா செய்யச்சொல்ல செய்தான், நம்ம பிரண்டு சாத்தான் முடியாதுன்னுட்டான், அதனால் அல்டிமேட் அவரை விரட்டிட்டாருன்னா ஒரு ஹதீஸ் வரது பாருங்க, அதுதான் சிறு பரிணாமத்திற்கு ஆதாரம். முழு அதிஸையும் எண்ணையும் கேட்காதீங்க. தேடிப்பார்க்க நேரமில்லை. ஆங்கிலத்தில் இருக்கிறது, ஆனால் அதே எண்ணை வைத்து தமிழில் தேடினால், நம்ம அண்ணன்கள் வேறுவிதமாக மொழிப்பெயர்த்திருப்பார்கள், இதிலும் தக்கியா. மார்க்க அறிஞர் சார்வாகனிடம் கேட்டால் டக்குன்னு எடுத்து தருவார்.

90 அடி ஆதாம் இப்போது 6 அடி மனிதனாக மாறிவிட்டான். ஸோ, சிறு பரிணாமம் நடக்கின்றது ஆதாரமிருக்கிறது.

Speciationனுக்கு ஆதாரமிருக்கிறதா?? ஆமாம் அதற்கும் இருக்கிறது. இந்த யூதர்களை, நாய்களாகவும், பன்னிகளாகவும் மாற்றுவோம் என அல்டிமேட் கூறியதாக ஒரு ஹதீஸ் ஒன்னு வருது.
இதிலிருந்து, ஒரு உயிரினம் இன்னோரு உயிரினமாக மாற்றம் அடைவதாக நாம் அறிந்துக்கொள்ளலாம்.

ஆகையால் ஷார்ட் அண்டு சுவிட்டாக பரிணாமம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

நன்றி.

ராஜ நடராஜன் said...

அசின் பார்த்தா அழுகப் போகுது:)

வவ்வால் said...

மாக்ஸ்,

நன்றி!

வழக்கம் போல் நறுக்குனு பின்னூட்டம் :-))
------------

குஜால்ஸ்,

நன்றி!

------------

வேற்றுகிரகவாசி,

நன்றி!

முதல் ஒரு செல் உயிரி உருவானதற்கு காஸ்மிக் சூப் முதல் அயல்கிரகம்/விண்கல் என பல தியரி இருக்கு,எனவே அதை இங்கு தொடவில்லை, எப்பொழுதாவது உயிரின் மூலம் பற்றி எழுதும் போது பார்க்கலாம்.

விடை தெரியாதவற்றை யார் செய்தார் என சொல்ல உருவாக்கப்பட்டதே கடவுள் எனும் கதாபாத்திரம்,அதை யார் உருவாக்கினா என்றால் முதல் சிந்திக்க தெரிந்த மனிதனாக இருக்கும் :-))
---------

ராச நட,

வாரும்,.நன்றி!

சரி,சரி அதுக்குன்னு நீங்க அழுவாதிங்க ,கண்ண தொடச்சிக்கிட்டு ,பளிச்சுனு சிரிங்க...ஆங்க் அப்படித்தான் :-))

அடுத்த பதிவில் ஒன்றுக்கு இரண்டா படம் போட்டு கணக்கை சரி செய்துடலாம் :-))

வவ்வால் said...

நரேன்,

வாரும்,நன்றி!

என்ன ஸ்பாம் பொட்டிக்கு போயிட்டீர்? அங்கே இருந்து தூக்கிட்டு வரேன்.

படிச்சாலே தொத்திக்கும்னு நினைக்கும் அளவுக்கு மக்கள் இருக்காங்கன்னு சொல்றிங்களா :-))

அது அழகின் பரிணாமம் ,அதை தனியாக தான் பேச வேண்டும் :-))

மார்க்கப்பொந்துக்களின் பரப்புரையை அப்படியே பிரதி எடுத்து கக்கியிருக்கார்,பாகவதர்,ஆனால் அடிப்படை அறிவியல் கூட இல்லை :-))

சார்வாகனுக்கு போட்டியா தாக்கியா செய்ய கிளம்பிடுவீர் போல இருக்கே :-))

90 அடியில் இருந்து ஆறு அடியாக சுருங்குவது, நாய்,பன்னியாக மாற்றுவது எல்லாம் பரிணாமத்தின் அடிப்படையிலா சொல்லவேயில்லை, அப்புறம் ஏன் பரிணாமம் இல்லைனு சொல்லிக்கிட்டு இருக்காங்க,ஒரு வேளை ஒழுங்க புத்தகத்தை படிக்காத அப்ரண்டிசுகளா இவங்கலாம் :-))

சித்தார்த்தன் said...

வேற்றுகிரகத்தில் மனிதர்கள் உள்ளார்களா?இல்லையா?அவர்கள் பூமிக்கு வருவதை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.....இணையத்தில் தமிழில் நிறைய படித்தேன்..அது நிறைவாக இல்லை...நீங்கள்தான் ஒரு பெரிய பதிவு போட வேண்டும்...

சார்வாகன் said...

சகோ வவ்வால்,
இது நம்ம சகோ நரேனுக்கு, தமிழ் பதிவுலகில் மூமின்கள்,காஃபிர்களுக்கு,மார்க்கம்,தார்கியாவுடன் அறிவியலும் கற்றுக் கொடுக்கும் ஒரே தளம் நம்முடையதுதான். ஆகவே மார்க்கம்,அறிவியல் இரண்டுமே எனது கண்கள் என்பதால் ஆதம்(அலை) 90 அடி ஹதிதை உடனே அளிக்கிறோம். மேலும் வழிகேடர்களாக யூதர்களை சனிக்கிழமை மீன் பிடித்ததால் ஏக இறைவன் அல்லாஹ் பன்றிகளாகவும்,குரங்குகளாகவும் மாற்றிய குரான் வசனமும் தருகிறேன்.
ஏக இறைவனின் மார்க்கம் கற்போருக்கு அறிவியல் இலவசம் டொட்டய்ங்

ஆதம் 90 அடி[ 60 முழம்] ஹதிது
3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60

**
யூதர்கள் குரங்கும் ,பன்றியும் ஆன கதை!!

2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.

5:60. “அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
**
அதற்கு ஒரு ஹதித் இலவசம்!!

இதைப் படித்து சுவனம் அடைய உறுதி கொள்(ல்?)வோம்

3243. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
என (அபூ மூஸா) அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
(மற்றோர் அறிவிப்பின்படி) அறிவிப்பாளர் அபூ இம்ரான்(ரஹ்), 'அறுபது மைல்" என்று கூறுகிறார்கள்.
Volume :3 Book :59

மார்க்க வியாதிகளையே மிஞ்சிய நம்ம பாகவதர் மாப்ளே கேட்ட பாதிமீன்,பாதி டைனோசார் படிம ஆதாரம் கேட்டு நான் ஆடிவிட்டேன் ஹி ஹி நீங்க??

நன்றி!!

naren said...

////மார்க்க வியாதிகளையே மிஞ்சிய நம்ம பாகவதர் மாப்ளே கேட்ட பாதிமீன்,பாதி டைனோசார் படிம ஆதாரம் கேட்டு நான் ஆடிவிட்டேன் ஹி ஹி நீங்க??////

அதற்கு தான் நம்ம ”நரசிம்ம அவதாரத்தை” ஆதாரமா எடுத்து வெச்சாச்சே. அதற்கு மேலே..அதற்கும் மேலே..லே..லே.. இன்னும் என்ன வேண்டும்.

ராஜ நடராஜன் said...

நானும் பார்க்கிறேன் நானில்லாமல் எத்தனை பின்னூட்டம் எகிறுதுன்னு:)

வவ்வால் said...

சித்தார்த்தன்,

வாங்க,நன்றி!

வேற்று கிரகத்தில் உயிர்கள் இருக்க சாத்தியமுண்டு ,என பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன,ஆனால் எதுவும் உறுதியாக சொல்லாத நிலையே, பல வேற்று கிரகவாசிகள் வருகை குறித்து கதைகள் உண்டு, முடிந்தால் அவைப்பற்றி பதிவிடுகிறேன்.

-------------

சார்வாகன்,

நன்றி,

மார்க்கப்பந்துக்களுக்கே ஹதித்தில் சந்தேகம் என்றால் இனிமேல் உங்களைத்தான் நாடுவார்கள் :-))

இந்த ஆதாம் அலை 90 அடி உயரம் வச்சு முன்னர் சு.பி.சுவாமிகள் கூட ஒரு தாக்கியா நாமும் செய்துள்ளோம்,வரலாறு முக்கியம் அமைச்சரே :-))

,-----------
நரேன்,

சந்தேகம் தீர்ந்திருக்குமே, நரசிம்ம அவதாரம்,யாளி, அனுமார் எல்லாம் பரிணாமத்தின் சான்றுகளே,ஆனால் மதவாதிகளுக்கு இன்னும் புரியவில்லை ,புரிய வச்சிடுவோம் :-))
-----------

ராச நட,

வாரும்,

இப்படி நெனப்பா, அறிவியல் பதிவுக்கு இத்தனைப்பேர் வருவதே தமிழ்ப்பதிவுலகில் பெரிய ஆச்சரியம்.

இங்கே எல்லாம் சினிமா சார்ந்த பதிவுகள் என்றால் தான் கலைக்கட்டும்,நீரே மாய்ந்து மாய்ந்து பின்னூட்டம் போட்டீர் ,ஆனால் இங்கோ ஒரு வரிக்கு மேல் உமக்கு கை ஓடவில்லை :-))

ஹி...ஹி லோகநாயகரை தாளிச்சால் சிறப்பு வருகையாளர்களும் வருவார்கள் :-))

Anonymous said...

arivu jivigal nathiga nanbargalukku salam,

kaaikarigal paluthu kani agiyadhu ithuvum parinamam thaan, valibam vayothigam adainthadhu ithuvum parinamam thaan, pookkalin maganatham vithai anadhu parinamam thaan, nanba yosi. naan mutal ni pagutharivalan. Quran hadeeth ungalukku vilakkam tharadhu en endral ungalidam pidivaathm irukku, yaar sriyan thanidam matram vendum endru ninaithu padippargalo siyanadhai vilangamudiym.

முட்டாப்பையன் said...

இந்த பரிணாமமே எங்க பு______ நூல்ல எழுதி இருக்கு.
விரைவில் எங்கள் மாக்கான்கள் இதை பத்தி பதிவு போடுவாங்க.
எங்க பீ எப்பவோ சொன்னதை இப்ப நீர் சொல்லுறீர்?

Nanjil Siva said...

ஆரம்ப காலத்தில் போலியோ சொட்டு மருந்து சிம்பன்சி வகை குரங்கின் சிறுநீரகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதா .... ஆச்சரியமான தகவல் !!!
https://www.scientificjudgment.com/