Monday, May 12, 2014

சிரித்து வாழ வேண்டும்!

(சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் ...ஹி...ஹி...!)


# நம்ம படத்துல ஹீரோ பயங்கர மொடாக்குடிகாரன்,ஆனால் பெரிய சாதனைய செஞ்சு ஹீரோயினை அடையுறார்...

அப்படியா படத்தோட பேரு என்ன?

வல்லவனுக்கு "ஃபுல்லும்" ஆயுதம்!

(சரக்கடிக்கிறதுக்கு பதிலா பாட்டிலை எடுத்து மண்டையில அடிச்சிருப்பாங்களோஅவ்வ்)
-----------

(திருஷ்டி "சுத்தி" போடும் போது இந்த சுத்தியால தான் போடுவாய்ங்களோ?)

# கதைப்படி நம்ம படத்துல ஹீரோ "ஒரு கார்ப்பெண்டர்" ஆ நடிக்கிறார்...

ஓ அப்படியா , படத்துக்கு பேரு என்ன?

சுத்தி!


--------------


# இயக்குனர்: சார் படத்துல உங்களுக்கு டபுள் ஆக்ட் ஒருத்தர் ஆறடி ,இன்னொருத்தர் மூனடி தான் உயரம் ,குள்ளமான கேரக்டருக்கு தான் படத்துல "வெயிட் ரோல்"

உலகநடிகர்:  ஆஹ் ஆஹ் ...இப்படியான உலகத்தரமான படத்துக்காக தான் காத்திருக்கேன் அப்படியே அசத்திடலாம் , படத்துக்கு என்ன பேரு வச்சிருக்கிங்க?

இயக்குனர்: உத்தம"குள்ளன்"!

--------------
(ஹி..ஹி பூச்சடையாள்!)

சின்னக்கா: இந்தக்காலத்துள்ள பொம்பளைங்களுக்கே இப்படி நீளமா முடி வளர்ரது இல்லையே ,உங்க வீட்டுக்காரருக்கு எப்படி ஆறடி நீளத்துக்கு முடி வளந்தது?

பெரியக்கா: அட நீ வேறக்கா, கோச்சடையான் படம் வர்ர வரைக்கும் முடியே வெட்டிக்க மாட்டேன்னு ஆரம்பிச்சார் ,அது பாட்டுக்கு ஆறடிக்கு சடைப்பின்னி போடுற அளவுக்கு வளந்துடுச்சு,படம் தான் இன்னும் வரக்காணோம் அவ்வ்!
---------------

(கண்ண மூடிப்பார்க்கணுமா அவ்வ்)

# நம்ம படத்துல ஹீரோ, ஹீரோயின் முதல் நடிக்கிற எல்லாருமே கண்ணு தெரியாத கதாபாத்திரங்கள் சார்..

படத்துக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?

கண்ணை மூடிப்பார்க்கவும்!!!
--------------

# வேட்பாளர்: ஒரு காலத்தில சமூக இணையதளங்களில் எல்லாம் "49-O" போடுங்கனு புரட்சிகரமா கருத்து சொன்னது தப்பா போச்சி!

தொண்டர்: ஏன்?

வேட்பாளர்: இப்போ நானே மறந்து போயிட்ட அந்த "ஓ" போடுங்கள ,மக்கள் இன்னும் மறக்கலை போல, நான் ஓட்டுக்கேட்டு போனால் ,கவலைப்படாதிங்க சார் ,நாங்க "ஓ" போட்டுறோம்னு சொல்லி கடுப்பேத்துறாங்கப்பா அவ்வ்!
-----------------
(ஈ...ஈ ...நெஜமா சிரிப்பே வரலே சும்மா சிரிச்சு வச்சேன்)

# இல்லத்தரசி: எலெக்‌ஷன் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா தேர்தல் நடத்தறேன்னு சொல்லிட்டு செய்யுறது ஆனாலும் ரொம்ப ஓவரா போகுது?

இல்லத்தரசன்: அப்படி என்ன ஓவரா போயிட்டாங்க?

இல்லத்தரசி: காலையில வாசப்பெருக்கலாம்னு ,"தொடைப்பத்த" எடுத்துக்கிட்டு வாசலுக்கு போறேன் , பிரச்சார நேரம் முடிஞ்சு போச்சு ,இனிமே அரசியல் சின்னத்த எல்லாம் பயன்ப்படுத்தக்கூடாதுனு ஒருத்தர் தடுக்கிறார் அவ்வ்!
-----------

# அவரு ஏன் இந்த தேர்தல் செல்லாது மீண்டும் தேர்தல் வைக்கணும்னு வழக்கு போட்டிருக்கார்?

# வாக்குப்பதிவு நடக்கும் இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் எந்த கட்சி சின்னமும் பயன்ப்படுத்த தடை இருக்கும் போது , பூத்துல இருக்க தேர்தல் அலுவலர்கள் எல்லாம்  காங்கிரஸ் கட்சி சின்னம்"கையோட" பூத்துக்குள்ள எப்படி இருக்கலாம், அது தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி தவறு எனவே "கை" இல்லாதவங்கள வச்சு மறு தேர்தல் நடத்தணும்னு தான் அவ்வ்!

(இப்படி கைய காட்டினாக்கூட கேஸ் போடுவாய்ங்களோ அவ்வ்)
-------

# என்னடி சாம்பார்ல என்னமோ நார் நாரா கிடக்கு?

நீங்க தானே சாப்பாட்டுல நார் சத்து இருக்கணும் அப்போ தான் ஆரோக்கியம்னு சொன்னீங்க, அதான் நல்லா ஆரோக்கியமா இருக்கட்டுமேனு ,தேங்கா நாரு கொஞ்சம் போட்டேன் !!!
--------------

# சமையல் பதிவர்:என்னடி இது காலிஃபிளவர் குருமா? வாயில வைக்கவே முடியல ,ஒரே கசப்பா இருக்கே? வெளெக்கெண்ணைய மறந்து போய் ஊத்திட்டியா?

மனைவி: இப்ப வாய மூடிக்கிட்டு சாப்பிடுறிங்களா, இல்லை நான் சமைச்சத எல்லாம் நீங்க சமைச்சாப்போல "படம் எடுத்து" முகநூலில் போட்டு பேர் வாங்குற ரகசியத்தை உங்க முகநூல் பக்கத்தில் கமெண்ட் போட்டு அம்பலமாக்கட்டுமா?

சமையல் பதிவர்: ஹி...ஹி காலிஃபிளவர் குருமா சூப்பரா இருக்கு அவ்வ்!
------------

# அவள்: உங்க மாமியார் மேல இம்புட்டு பாசமா, அவங்கள மலேசியாவுக்கு விமானத்துல டிக்கெட் போட்டு டூருக்கு அனுப்புற?

இவள்: ஹி...ஹி அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை, மலேசியா விமானம் தான் காணாமல் போனா கண்டே புடிக்க முடியாதாம் ,அதான் எப்படியாச்சும் காணாம போகட்டும்னு மலேசியாவுக்கு மலேசியா விமானத்துல அனுப்பி வைக்குறேன்!!!

(ஹையோ ...ஹையோ வவ்வாலோட  ஒரே நகைச்சுவையப்பா )

--------------------------

பின்குறிப்பு:

# ஆக்கங்கள் அனைத்தும் அடியேனது சுயநினைவின் படி சுய கற்பனையே , முன்னரே கேள்விப்பட்டது போல இருந்தாலோ அல்லது இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ நினைவூட்டினாலோ  அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல அது தங்களின் மனப்பிராந்தியாக இருக்கலாம்!

#எனது முந்தைய நகைச்சுவை மாதிரியான சிலப்பதிவுகள், படித்து விட்டு பேதியானால் அடியேன் பொறுப்பல்ல!!!

# சிரிப்பொலி-1

#மொக்கை சிரிப்பொலி-2

#மொக்கை சிரிப்பொலி-3

#காமெடி டைம்

#காமெடி டைம்-2

#அறிவியல் காமெடி

#அரசியல் காமெடி
----------------------------

# படங்கள் உதவி "google images" இணையதளம்,நன்றி!

***************************

18 comments:

குறும்பன் said...

குடிகாரன் நகைச்சுவையில் ஒரு கால அதிகமா போட்டு (குடிகாரான்) குறியீடு மூலம் அமர்க்களப்படுத்திட்டீங்க. நகைச்சுவையிலும் குறியீட்டை புகுத்திய இலக்கியவாதி வவ்வால் வாழ்க.

Anonymous said...

super vovs...


-Kongu Nattaan

பால கணேஷ் said...

சுத்தமான சுயகற்பனைல விளைஞ்ச ஜோக்குகள் அத்தனையும் ரசிச்சுச் சிரிக்க வெச்சது. அதிலயும் பூச்சடையாள், வல்லவனுக்கு ஃபுல்லும் ஆயுதம், சின்னமான கை இருக்கக் கூடாது, கட்சி சின்னமான துடைப்பததால பெருக்கக் கூடாது / இவையெல்லாம் அசத்தல். வவ்வாலுக்குள்ளயும் ஒரு நல்ல ஹ்யூமரிஸ்ட் இருக்காருங்கறதை நிரூபிச்சுட்டீங்க.

Anonymous said...

நான் விழுந்து விழுந்து சிரிச்சதை comment ல எப்படி சொல்றதுன்னு தெரியலையே!

Anonymous said...

நம்ம "வருத்தப்படாத வலைபதிவர் சங்க"துக்கு தலைவர் னு நீங்க நிருபிச்சிடீங்க வவ்வால்.

குட்டிபிசாசு said...

கடி தாங்க முடியவில்லை அமைச்சரே!:))

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் சிரிப்புக்கள்!

ராஜ நடராஜன் said...

விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு ஒரே குழப்பமா இருக்குதுன்னு காட்டுன பந்தா அரசியல் பதிவு இதுதானா:)

ராஜ நடராஜன் said...

விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு ஒரே குழப்பமா இருக்குதுன்னு காட்டுன பந்தா அரசியல் பதிவு இதுதானா:)

ராஜ நடராஜன் said...

விமான பதிவு போடறதா அல்லது அரசியல் பதிவு போடறதான்னு ஒரே குழப்பமா இருக்குதுன்னு காட்டுன பந்தா அரசியல் பதிவு இதுதானா:)

ராஜ நடராஜன் said...

//(ஹையோ ...ஹையோ வவ்வாலோட ஒரே நகைச்சுவையப்பா )//

அந்தக்கா அய்யோடா... அய்யோடா இல்ல சொல்லும்!

Amudhavan said...

பகவான்ஜியுடைய தளத்துக்கு வந்துவிட்டோமா என்கிற சந்தேகம். அவர் அசின் படங்களை இப்படிப் போட்டு நிரப்பமாட்டாரே என்ற நிதர்சனம், நான் ராசநடராசனுடைய பக்கம் சேர்ந்துக்கலாமான்னு பார்க்கிறேன்.

சீனு said...

//வவ்வாலுக்குள்ளயும் ஒரு நல்ல ஹ்யூமரிஸ்ட் இருக்காருங்கறதை நிரூபிச்சுட்டீங்க.//

ஹா ஹா ஹா வாத்தியாரே வவ்வால் ஹ்யூமரிஸ்ட் தான் என்ன கொஞ்சம் சீரியஸ் ஹ்யூமரிஸ்ட்... :-)

//பகவான்ஜியுடைய தளத்துக்கு வந்துவிட்டோமா என்கிற சந்தேகம். //

நான் கூட வவ்வால் தளத்துல வேற யாரோ அனானி எழுதியிருக்காங்கன்னு நினைச்சேன் ... ;-)

வவ்வால் said...

ஓய் குறும்பன்,

வாரும்,நன்றி!

நாம தான் பதிவ போட்டுவிட்டு தான் பிழை திருத்தமே செய்வோம்னு தெரியும்ல, அவசரத்துல ஒரு குவாட்டர(கால்) கூடப்போயிடுச்சு,அதுக்குனு போயி குறியீடு ,எலக்கியவாதினு என்னைய இப்படி "இன்சல்ட்" செய்றீரே அவ்வ்!

சோக்கு சொன்ன சிரிக்கோணும் ,இப்படிலாம் "சீத்தலை சாத்தனார்" போல ஆராயப்படாது!!!
---------

கொங்கு நாட்டார்,

வாரும்,ரசித்தமைக்கு, நன்றியோ நன்றி!
----------
பாலகணேஷர்,

வாங்க,நன்றி!

ரசித்ததோடு அல்லாமல் எவை எவை என பட்டியலிட்டு சொல்லி ரசித்தமைக்கு ,கோடான கோடி நன்றிகள்!

# ஹி...ஹி நாம எப்பவுமே சிரிப்பூட்டிசிங்காரம் தான் ஆனால் மக்கள் தான் என்னமோ சீரியஸ் சிங்"காரம்"போல பார்க்குறாங்க அவ்வ்!
-----------------
வேற்றுகிரகம்,

வாரும்,நன்றி!

நீர் தான்யா சங்கத்து சிங்கம் என்ற தளபதி , விழுந்து விழுந்து சிரிச்சால் அடிபடும்னு தெரிஞ்சும் ,எனக்காக "ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க்" சாப்பிடுறாப்போலனு விழுந்து சிரிச்சீரே ... என் இதயம் இனித்தது கண்கள் பனித்தது!!!

# ஹி...ஹி என்ன இருந்தாலும் தலைவருக்கு என சில கடமைகள் உண்டல்லவா அதை அவ்வப்போது செய்து வரலைனா 'வருத்தப்படாத வலைப்பதிவர் சங்கம்" மேல கரும்புள்ளி விழுந்திடுமே அவ்வ்!

ஆயிரம் பேரு அழுதாலும் நாலுப்பேரு சிரிக்கலாம்னா எதுவே தப்பில்லை அவ்வ்!
---------

குட்டிப்பிசாசே,

வாரும் ,நன்றி( நற நற)

பொறாமை...? இருக்கும் இருக்கும் , உலகத்தரத்தில் சிரிப்பூட்டினால் இந்த உள்ளூர் பிசாசுகளுக்கு புரியலையே நானென்ன செய்வேன் அவ்வ்!

சங்கத்தில் நீரும் ஒரு உறுப்பினர் தான் என்பதை மறந்துவிட்டு கடமை தவறலாமா? சிரிப்பே வரலைனாலும் சிரிக்கணும்யா இல்லைனா ,தலை கீழா கட்டி தொங்க விட்டு வேற்றுகிரகத்த விட்டு கிச்சு கிச்சு மூட்டியாவது சிரிக்க வச்சிடுவேன் ,சாக்கிரதை!!!

--------

சுரேஷ்,

வாங்க,நன்றி!

தளிரான இதயம் அதான் சிரிச்சி ரசிச்சிருக்காரு!!!

--------------
ராச நட,

வாரும்,நன்றி!

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணூங்கிறாப்போல அரசியல் பதிவே தான் வேணுங்கிறாரே அவ்வ்!

ஒட்டகம் மேய்க்கிறவங்களுக்குலாம் அரசியல்ப்பதிவு கிடையாது ..ஹி...ஹி!

# அய்யோடாவும் சொல்லும் ஹையோவும் சொல்லும் ,சொல்ல வச்சிடுவோம்ல அவ்வ்!
-------------
அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

யாரது பகவான் ,அவரெல்லாம் இப்ப தான் ,நாங்கலாம் அப்பவே அப்படி ,இப்போ எப்பூடி?

பழைய சுட்டிலாம் போட்டிருக்கேனே படிக்கலையா, பழைய மொக்கைசெல்வமா திரும்ப வருவோம்ல!!!

#//நான் ராசநடராசனுடைய பக்கம் சேர்ந்துக்கலாமான்னு பார்க்கிறேன்.//

சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறதும் ,ராச நடக்கூட கூட்டணி வைக்கிறதும் ஒன்னு ,நாம ஒன்னு பேசினா அவரு ஒன்னு பேசுவார் , அப்புறம் இது தேவையானு நொந்து போக வேண்டியிருக்கும் அவ்வ்!
-----------

சீனு,

வாங்க,நன்றி!

நடுநீசிக்கூத்து மொபைலில் படிச்சேன் ,அப்புறமா போய் கமெண்ட் போடலாம்னு நினைச்சேன் ,இப்பதான் வந்து டப்பாவ தொறந்தேன் ,இங்கே நீங்க!!!

#//வவ்வால் ஹ்யூமரிஸ்ட் தான் என்ன கொஞ்சம் சீரியஸ் ஹ்யூமரிஸ்ட்... :-) //

சீரியஸ் ஹூமரிஸ்ட்டா ,இதுவும் நல்லாத்தான் இருக்கு,
நல்லவேளை தீவிரவாத சிரிப்பாளினு சொல்லாம விட்டார் அவ்வ்!

# //நான் கூட வவ்வால் தளத்துல வேற யாரோ அனானி எழுதியிருக்காங்கன்னு நினைச்சேன் ... ;-)//

ஹி...ஹி வவ்வாலே ஒரு அனானினு தானே சொல்லுறாங்க, இதுல புதுசாஒரு அனானி வேற வரனுமா அவ்வ்!
---------

ஜீவன் சுப்பு said...

வவ்வ் ... உங்களின் பதிவுகளிலேயே நான் முழுசாகப் படித்தது இதை மட்டுந்தான் .... அவ்வ் ...!

ஜீவன் சுப்பு said...

சீரியஸ் ஹூமரிஸ்ட்டா ,//


துயரார்ந்த நகைச்சுவையுணர்வுடையவர்

இ.பு.ஞானப்பிரகாசன் said...

இல்லை. இதுவரை, இந்த நகைச்சுவைத் துணுக்குகளில் ஒன்றைக் கூட எங்கும் படித்ததாக நினைவில்லை. எல்லாமே உண்மையிலேயே உங்களுடையவைதாம் என்பதை நம்புகிறேன்.

Nanjil Siva said...

ஹி...ஹி அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை, மலேசியா விமானம் தான் காணாமல் போனா கண்டே புடிக்க முடியாதாம் ...
ஹ...ஹஹா ...புத்திசாலி பொண்ணு ...
https://www.scientificjudgment.com/