(ஹி...ஹி மனதை பொங்க வைக்கும் பொங்கல்!)
தைப்பொங்கலின் இன்சுவையை மென்மேலும் கூட்டும் வகையில் தை முதல் நாளே தமிழ்ப்பொங்கும் தமிழ்ப்புத்தாண்டும் பிறப்பது சர்க்கரை பொங்கலில் தமிழ்த்தேனும் கலந்துண்பதற்கு ஒப்பாகும்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தை முதல் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என விரிவாக விளக்கும் சில கட்டுரைகள்:
# http://tamilvalluvam.org/KuralArticalPage.asp?Id=13
# http://valavu.blogspot.in/2007/01/blog-post.html
கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.
தமிழ் மாதங்கள்:
சுறவம்- தை
கும்பம் - மாசி
மீனம் - பங்குனி.
மேஷம் -சித்திரை
விடை- வைகாசி
இரட்டை- ஆனி
கடகம் - ஆடி
மடங்கல்- ஆவணி
கன்னி -புரட்டாசி
துலை - அய்ப்பசி
நலி- கார்த்திகை
சிலை- மார்கழி.
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என முன்னர் நான் இட்ட இடுகை:
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
*****
பண்டிகைகளும் பயணங்களும்:
உலகம் முழுவதும் நவீன வளர்ச்சியின் தாக்கத்தால் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு,மனிதர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் இந்தியாவில் அதன் தாக்கம் என்னமோ அனைவரையும் சென்றடையவில்லை என்றே நினைக்க வைக்கிறது ,ஒவ்வொரு முறை மேற்கொள்ளும் விழாக்கால பயணங்கள்!
சில முன் யோசனை முத்தண்ணாக்கள் வெகுஜாக்கிரதையாக பொங்கலுக்கு ஒரு மாதமுன்னரே இருக்கைகளை முன்ப்பதிவு செய்திருந்தார்கள் அவர்கள் பாடு கொண்டாட்டம் தான், ஆனால் தங்கள் புறப்பாடு எப்போது என தீர்மானிக்க இயலாத நடுத்தட்டு மக்கள் ,எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்து பொங்கலுக்கு முதல் நாள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து , அரசையும் ,போக்குவரத்து கழகத்தையும் சுத்த மோசம் என வசைப்பாடிக்கொண்டிருந்தார்கள் :-))
சென்னையில் பேருந்து, தொடர்வண்டி என அனைத்திலும் கால் வைக்க இடமில்லாத அளவுக்கு பிதுங்கி வழிந்தாலும் மக்கள் கொஞ்சமும் அசராமல் எப்படியோ தொற்றிக்கொண்டு ஊர் போய் சேர்ந்தால் போதுமென கிடைத்த கேப்பில் எல்லாம் தங்களை சொறுகிக்கொண்டு , பொங்கல் கொண்டாட ஊர் நோக்கிப்பயணப்படலானார்கள்.
சொந்தமாக கார் வைத்திருந்தவர்கள் வளர்ப்பு நாய் சகிதம் மூட்டைக்கட்டிக்கொண்டு கிளம்பி விட, கார் இல்லாத மக்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ரெண்டு பசங்களையும் , பின்னாடி மனைவி, இன்னொரு பையன் என ஏற்றிக்கொண்டு வீரப்பயணம் கிளம்பிவிட்டார்கள். ஒருவர் தனது ஸ்கூட்டரில் மொத்த குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு சென்றதையும் பார்த்தேன் , தேசிய நெடுஞ்சாலை 45 இல் இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது,இதனால் எல்லா டோல் கேட்டிலும் பெரும் வரிசை உருவாகி , டோல் கேட்டை கடக்கவே அரைமணி நேரத்திற்கு மேலானது.
டோல் கேட்:
இவ்வளவு அரும்பாடுப்பட்டு ஊருக்கு வந்தாலும் வழக்கம் போல தொலைக்காட்சிகளில் காட்டப்படும் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என கூவிப்போடப்படும் பாடாவதி தமிழ்ப்படங்களையும், தொலைக்காட்சிப்பெட்டிக்கண்டுப்பிடித்த நாள் முதலாக அரங்கேறி வரும் சாலமன் பாப்பையா வகையறாக்களின் என்ன மக்களே நான் சொல்லுறது சரி தானய்யா பட்டிமன்ற பேச்சுக்களையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இதுக்காய்யா படிக்கட்டில தொங்கிட்டு 200-300 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டீர்கள் :-))
இதுக்கு பேசாமா ஊருல ஊட்டோட இருந்து இருக்கலாமே!
*******
புத்தக சந்தை- 2013: A TEASER.
பொங்கலுடன் சேர்ந்தாற்ப்போல புத்தக திருவிழாவும் வருவது சென்னையின் சிறப்பு எனலாம், ஆனால் அச்சிறப்பே பல நேரங்களில் மண்டையை குடைய வைக்கிறது, என்னிக்கு ஊரு கிளம்புவது என்றே தீர்மானிக்க இயலாத ஆசாமி நான் இதில் என்னிக்கு புத்தக சந்தைக்கு போவது என தீர்மானம் எடுக்க வேண்டிய கூடுதல் சுமை வேறு வந்து மண்டையை குடைந்தால் என்ன தான் செய்வதாம் , வழக்கம் போல இன்று போய் நாளைவானு ஒத்தி வைப்பு தீர்மானம் தேன் :-))
பொங்கல் முடிந்தவுடன் போய் ஒரு ரவுண்டு அடிக்கலாம்னு எழுதப்படாத தீர்மானம் இயற்றியாச்சு , ஒரு வாரத்திற்குள் எல்லா நூல்களையும் கபளீகரம் செய்துவிட மாட்டார்கள் சென்னை வாழ் பெருமக்கள் என்ற ஒரு அபார நம்பிக்கை தான் :-))
சில பழங்கால பதிவர்கள் வழக்கம் போல சுஜாதா தாத்தாவின் கத புத்தகங்களையே காணததை கண்டது போல இன்னும் தொடர்ந்து அள்ளிக்கொண்டிருப்பார்கள் என்பதால் ,மற்ற நூல்கள் எல்லாம் புத்தக சந்தை துவக்க நாளன்று வச்சது வச்ச மாதிரியே இருக்கும் ,இனிமேல் நான் போய் தான் எல்லாத்தையும் கலைச்சு போடணும் :-))
என்ன ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம், நம்ம பதிவர்கள் எழுதும் புத்தக சந்தைப்பதிவுகளை தொடர்ந்து படிச்சாலே தெரியும் ,எல்லா ஆண்டும் ஒரே மாதிரியே எழுதியிருப்பார்கள் , ஒரு வேளை முன்னர் எழுதிய புத்தக சந்தை பற்றிய பதிவையே காபி&பேஸ்ட் செய்வார்களோ என்னமோ?
வலைப்பதிவுகளின் மூலம் பலப்பதிவர்களும் எழுத்தாளராக அவதாரமெடுக்கும் வேகம் ஆண்டு தோறும் மர்மக்காய்ச்சலை விட வேகமாக பரவுவது ஏற்கனவே அவதாரமெடுத்து எழுத்து சிம்மாசனத்தை ஆக்ரமித்துக்கொண்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது :-))
பல ஒலக எலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை விட அதிகமாக நம்ம பதிவர்களின் நூல்கள் விற்பது , தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் பதிவர்களின் சாதனை எனலாம்.
பதிவர்களின் சில படைப்புகளும் இவ்வாண்டு அச்சுவடிவில் வெளியாகின்றன ,அவைப்பற்றி,
பிரபலப்பதிவர் திருப்பூர் ஜோதிஜி லோகநாயகரை விட பெரிய ஆளா இருப்பார் போல ,அவரோட டாலர் நகரம் எனும் நூலை பொங்கல் ரிலீஸ் இல்லைனு சனவரி 27 அன்று திருப்பூரில் வெளியிடுகிறார் :-)),
வாழ்த்துக்கள் ஜோதிஜி!
மேலதிக தகவல்களுக்கு ஜோதிஜியின் வலைப்பதிவினை காண்க,
http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html
#பலப்பதிவர்களின் வலைப்பதிவுகளை தொகுத்து எதிர்க்குரல் என்ற பெயரிலும் ஒரு நூல் வெளியாகிறது. கொஞ்சம் "மார்க்க"மான நூலாக அச்சிலும் கொண்டு வந்திருப்பார்கள் போல , "Tag line" உம் இஸ்லாமோ போஃபியா VS இஸ்லாமியப்பதிவர்கள் என ஒரு மார்க்கமாக இருக்கு :-))
எதிர்க்குரல் நூல் வெளியீட்டு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!
மேலதிக தகவல்களுக்கு பதிவர் சிராஜின் வலைப்பதிவினை காண்க,
http://vadaibajji.blogspot.in/2013/01/vs.html
# மேலும் சிலப்பதிவர்களின் நூல்களும் வெளி வருகின்றன என தகவல்கள் உலா வருகின்றன,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
---------------------
.jpg)

