Wednesday, May 03, 2006

தீவிரமாக எழுதி மண்டை தீய வைப்பதில் உடன்பாடு இல்லை



ரொம்ப லைட் ஆக எதாவது எழுதனும்னு ஆசை பட்டேன் ஆனால் கடந்த முறை கொஞ்சம் தீவிரமா போய்டுச்சுங்கண்ணா........அத சரி கட்ட இந்த தடவை ஒரு கவிதை எழுதிடலாம்...னு பார்க்கிரேன்(இது அத விட "தீ"விரம்னு சொல்றிங்களாண்ணா)

நீங்க வேணாம்னு சொன்னாலும் .... விடுவதாக நான் இல்லை ...அப்ரம் எப்போதான் நானும் "கவி பேரரசு "ஆவுரதுங்கண்ணா (தோடா ...பிலாக் போடுரவன் எல்லாம் இப்படியே கிளம்புராங்கப்பா....சாமி இத்தோட 1118 ஆவது ஆளு இவனு சொல்ரது கேட்குதுங்கண்ணா)........

படிச்சு பாருங்கண்ணா... நல்லா இருந்தா வெளில நாலு பேருக்கு சொல்லுங்க நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்கண்ணா பொய்மையும் வாய்மை இடத்துனு சொல்லுவாங்கண்ணா!........சரி இதோ கவித...... புடிங்க படிங்க ......இது 100 சதவிகிதம் எனது சொந்த படைப்பே...யாரையும் தழுவி எழுதியதல்ல (பெண் கவிதாயினிகள் நன்றாக எழுதும் பட்சத்தில் தழுவும் உத்தேசம் உண்டு கவித எழுத தான் சொன்னென் வேர எதுக்கும் இல்லங்கண்ணா)


பிரிவும்...சந்திப்பும்

அவர் அவர் உணர்வுகள் அவர் அவர் இதயத்தில்


அவர் அவர் பயணம் ஆளுக்கொரு திசையில்

ஏதோ ஒரு புள்ளில் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனம் காண கூடுமோ

அல்லது நீ யாரோ நான் யாரோ என்று

வேறு திசை நோக்கி பயணிப்போமா?

பிரிவது தெரிந்தே பிரிந்தோமா...

மீண்டும் சந்திக்க நேராமல் கூட போகலாம்..

காற்றில் அலைந்தாடும் பட்டம் வெகு தொலைவு பறப்பதில்லை

கையில் நூல் உள்ள வரை கட்டுண்டே பறக்கிறது காற்றில்

உணர்வுகள் தொடரும் வரை விலகி சென்றாலும்

பின் தொடர்ந்தே செல்கிறது மனம்!

3 comments:

வவ்வால் said...

நரியா,நன்றி!
பயணம் முடிவை நோக்கி என்றாலும் இலக்கை அடையாமல் இடையிலே முடிய கூடும்.அப்படி இருக்க இடைல் வரும் நிகழ்வுகளே நெஞ்சில் நிரைந்து இருக்கும்.வாழ்வை சுவை ஆக்கும்.சில மழலை கால நினைவுகல் மரணம் வரையிலும் நம்மை அலை கழிக்கும்.எனவே உணர்வு பூர்வமாக வாழ்வை பார்ப்பவனுக்கு முடிவு ஒரு பொருடல்ல !-- வவ்வால்

Anonymous said...

I say briefly: Best! Useful information. Good job guys.
»

வவ்வால் said...

வணக்கம் அனானி,
தங்கள் வருகைக்கு நன்றி!அடிக்கடி வந்து ஊக்கப்படுத்துங்கள்!