Wednesday, June 13, 2007

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.

பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்!

அப்போதைய தமிழக ஆட்சி முறை பாளையம் அல்லது சமஸ்தானம் என்ற பெயரில் நடைப்பெற்று வந்தது.இந்த பாளையக்காரர் முறை தமிழக முறை அல்ல அதனை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவ ராயர் ஆவார். மூவேந்தர் காலத்திற்கு பிறகு தமிழகம் விஜய நகர பேரரசின் கீழ் வந்தது,அப்போது தமிழகத்தை நிர்வகிக்க கிருஷ்ண தேவ ராயரிடம் மெய்க்காப்பாளர்கள்,மற்றும் அரண்மனை வாயில் காப்போன் என பணிபுரிந்த 3 பேரை நாயக்கர்களாக தமிழகத்திற்கு அனுப்பினர்.அவர்களை மதுரை நாயக்கர்கள்,தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்பர், புகழ் பெற்ற திருமலை நாயக்கர், ராணி மங்கம்மா எல்லாம இவர்கள் வழி வந்தோரே. ,அந்த நாயக்கர்களின் கீழ் வரி வசூலிக்கவும் நிர்வாகம் பண்ணவும் உருவாக்கப்பட்டது தான் பாளையம் முறை.

ஒரு பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது. அப்படி ஒரு பாளையத்தை தான் வீர பாண்டிய கட்ட பொம்மன் பஞ்சாலம் குறிச்சியை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார்.தந்தை பெயர் ஜக வீர பாண்டியன்.அவர் பால் ராஜு என்ற பாளையக்காரர் வழி வந்தவர் .

வீர பாண்டியனின் இயற் பெயர் கருத்தப் பாண்டி என்பதே. இரண்டு சகோதரர்கள் சிவத்தையா என்கிற ஊமைத்துரை,மற்றும் துரை சிங்கம் ஆகியோர்.இரண்டு சகோதரிகள் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு.

தென் மாவட்ட பாளையக்காரர்கள் அனைவரும் மதுரை நாயக்கர்களுக்கு வரி செலுத்த கடமை பட்டவர்கள் பின்னர் முகலாய ஆட்சியின் போது ஆர்க்காடு நவாப்புக்கு வரி செலுதினார்கள்.அப்போதைய ஆர்க்காடு நவாப் முகமது அலி என்பவர் வெள்ளையரிடம் கடன் வாங்கியதால் வரி வசுலிக்கும் உரிமையை தந்து விட்டார்.

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் வரி வசூலிக்கும் உரிமையை வாங்க வேண்டும் , காரணம் வெள்ளையர்களின் அனைத்து வியாபரங்களும் பலத்த நஷ்டம் அடைந்து விட்டது , வெள்ளையர்களின் துணிகளை வாங்க அப்போது யாரும் முன் வர வில்லை நம் மக்கள் மேல் சட்டை அணிவதில்லை , குழாய் மாட்டுவதில்லை பின்னர் அந்த துணிகளை எதற்கு வாங்கப் போகிறார்கள்.இங்கிலாந்தில் இருந்து லாபம் ஈட்ட வில்லை எனில் கம்பெனியை இழுத்து மூடி விட்டு வரவும் என இறுதி ஓலை வந்து விட்டது.எனவே வேறு வழி இல்லாமல் வரி வசூலித்து லாபம் ஈட்ட தலைப்பட்டார்கள்.

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.

இன்னும் சொல்ல போனால் வெள்ளையருடன் இனக்கமனவராக இருந்தவர் தான் கட்ட பொம்மனின் தந்தை ஜக வீரபாண்டியன், பூலித்தேவன் முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த போது வெள்ளையருக்கு ஆதரவாக படை வீரர்களை கொடுத்து உதவியுள்ளார் மேலும் பூலித்தேவன் போரில் தோற்று தலை மறைவாக இருந்த காலத்தில் அவரை தேட திருவிதாங்கூர் ராஜவுடன் சேர்ந்து வெள்ளயருக்கு உதவியுள்ளார், அதாவது எட்டையப்பன் செய்தது போன்று.

இதனால் அப்போது தேவர்களை தலைவராக கொண்ட பாளையங்களும் , சமஸ்தானங்களும் தெலுங்கு பேசும் நாயக்கர் வழி வந்த கட்ட பொம்மனின் தந்தை மீது வெறுப்புற்றிருந்தர் இதையே பின்னாளில் கட்ட பொம்மன் வெள்ளையரை எதிர்த்த போது பிரித்தாலும் சூழ்சியின் மூலம் பயண்ப்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

அப்போதைய பாளையங்களில் மூன்று வகையான படை வீரர்கள் இருந்தார்கள்,

அமரம் சேவகம் -பரம்பரை நில உரிமை பெர்ற்று அதிலிருந்து வரும் வருமானத்திற்கு பதிலாக படையில் பணிபுரிவர்.

கட்டுபுடி சேவகம் - பரம்பரை உரிமை இல்லாமல் நிலம் பெறு சேவகம் புரிவர்.

கூலி சேவகம் அல்லது படை - போர்க்காலத்தில் மட்டும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்வர், மற்றக் காலங்களில் இவர்கள் வழிப்பறி ,கன்னம் வைத்து கொள்ளை அடித்து வாழ்வார்கள்.இவர்களின் சேவைக்கு பரிசாக கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் விடுவார் பாளையத்தின் தலைவர் (நம்பித்தான் ஆக வேண்டும !) ஆனால் ஒரு நிபந்தனை உண்டு உள்ளூரில் அதாவது அதே பாளையத்தில் கொள்ளை அடிக்காமல் வெளியில் போய் கொள்ளை அடிக்க வேண்டும்.

இந்த மூன்று வகையான போர்ப்படை சேவைகளை செய்தது முக்குலத்தோர் சமூக மக்களே. இப்படிப் பட்ட படைகளை கொண்டிருந்தால் தான் கட்ட பொம்மனை கொள்ளைக்காரன் எனவும் வெள்ளையர்கள் குற்றம் சாட்டினர். திரைப்படத்தில் ஏன் வரிக்கொடுக்க வேண்டும் என்று வசனம் பேசினாலும் உண்மையில் வரி செலுத்த கட்ட பொம்மன் தயாராகவே இருந்தார். அருகாமை பாளையக்காரர்கள் கட்டபொம்மனை வெறுப்பதும், மேல் உதவிக்கு யாரும் வர மாட்டர்கள் என்பதும் தெரிய வந்ததால் ஒரே அடியாக பாஞ்சாலக்குறிச்சியை தங்க்கள் வசம் படுத்த படை எடுத்து சாதித்துக்கொண்டார்கள்.

எட்டையப்பனுடன் எல்லை தகராறு, தேவர் சமூகத்தினை சேர்ந்த பூலித்தேவனை பிடிக்க கட்ட பொம்மனின் தந்தை உதவியதால் ,பூலித்தேவனின் உறவினரான புதுக்கோட்டை சமஸ்தான ராஜா விஜய ரகுனாத தொண்டை மானுக்கும் வெறுப்பு எனவே அனைத்து வகையிலும் கட்ட பொம்மன் தனிமை படுத்தப் பட்டது தோல்விக்கு வழி வகுத்தது.

மேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.

26 comments:

Anonymous said...

//அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் //
மங்கல் பான்டே, ஆமிர்கான்?

Anonymous said...

வவ்வால் அய்யா,

சினிமாவுல ஜெமினி கணேசன் அய்யா நடித்த வெள்ளையத்தேவன் பாத்திரமும்,பத்மினி அம்மா நடித்த வெள்ளையம்மா பத்திரமும்,மற்றும் காளையை அடக்கும் சீன் இவையெல்லாம் கற்பனையா அல்லது சரித்திர ஆதாரங்கள் உண்டா;கொஞ்சம் விளக்கமா சொன்னாக்க நல்லாயிருக்கும்.

Sowmya said...

ennakum history kum romba thooramnga..sippai kalakatha..exam kkaaga padichathoda sari..comment panra alavukku enkitta ithu pathina sarakku illa :)

நந்தா said...

வணக்கம் வவ்வால்,

நீங்கள் கூறியது போன்று பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஹைதர் அலி, திப்பு சுல்தான், இன்னும் பல வீரர்கள், வீராங்கனைகள் வரலாற்றாளர்களால் சொல்லப் படும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்பே தமது எதிர்ப்பை காட்டியதுடன் மட்டுமின்றி, போரிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் என்ன காரணத்தாலோ வட இந்தியாவில் நடை பெற்ற அந்த போராட்டமே வரலாற்று ஆசிரியர்களால் முதல் போராட்டமாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இதற்கு காரணம் எனக்குத் தெரிந்த அளவில் நிச்சயமாக பிராமண சிப்பாயினால் தொடங்கப் பட்ட போராட்டம் என்பதல்ல.

ஒரு வேளை அப்போதிருந்தே இருந்து வந்த வடக்கு தெற்கு பாகுபாடுகள் கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில அதற்கு முன் மாதிரியாக இங்கே வேலூரில் நடை பெற்ற சிப்பாய் கலகத்தை ஒரு சிறு புரட்சியாகக் கூட கருதி அதற்கு முக்கியத்துவம் அளிக்காதது போன்றே தோன்றுகிறது.

முடிந்தால் இது குறித்து விளக்கமாக ஒரு பதிவிட வேண்டும்......

Anonymous said...

இதற்கு ஒரே காரணம், ம்யூடினி(கலகம்) ராணுவத்தில் ஏற்பட்டது தான்;பொதுவாக ராணுவம் command and control விஷயத்தில் கண்டிப்போடு இயங்கும் ஒரு அமைப்பு;அதிலேயே கலகம் வெடித்ததால் அவ்வாறு சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் வவ்வால் போன்ற கும்பல் இதற்கும் ஜாதி முலாம் பூசி மகிழும்.என்ன செய்வது?

வவ்வால் said...

அனானனி- 1, நன்றி பொறுமையா படிச்சதுக்கு!(சிவாஜி கணேசன் - வீரபாண்டிய கட்ட பொம்மன்? என்று ஏன் கேட்காம விட்டீங்க?)

அனானி - 2:

நன்றி!.
//கற்பனையா அல்லது சரித்திர ஆதாரங்கள் உண்டா;கொஞ்சம் விளக்கமா சொன்னாக்க நல்லாயிருக்கும்.//

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே நு ஜெமினி கணேசன், பத்மினி பாடிய டூயட்டுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது! வேண்டுமா?

வாங்க பெபி, நன்றி!

என்னது உங்க கிட்டே சரக்கு இல்லையா தோடா! நல்ல கதையா இருக்கே!

வாங்க நந்தா, வருகைக்கு நன்றி!

இந்திய விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு பற்றி தெரிந்தே பேசுகிறீர்கள் என்பது தெரிகிறது. நான் இந்த பதிவில் எழுதியது எதுவும் எனது சொந்த கருத்து அல்ல பல நூல்களில் இருந்து எடுத்த தொகுப்பே.

சிப்பாய் கலகத்திற்கு முக்கியத்துவம் தரக்காரணம் என்று தற்கால பல வரலாற்று ஆசிரியர்களும் அந்த பிராமன பின் புலனை தான் சொல்கிறார்கள், அதனையே நானும் இங்கே சொல்லியுள்ளேன், வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலில் மதன் கூட அப்படி தான் சொல்லியுள்ளார்.

சிப்பாய்க் கலகதினை பெரிதாக பேச வைக்க காரணமாக இருந்தது வினாயக் தாமோதர் சவர்க்கார்(வீர சவர்க்கார்) என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவரேக் காரணம் அவர் எழுதிய நூலில் தான் முதன் முதலில் அழுத்தி முக்கியத்துவம் கொடுத்தார் அதனையே மற்ற எல்லாரும் பின் பற்றினார்கள் , காரணம் பெரும்பாலும் அவர்களே அப்பொழுது சரித்திர ஆய்வாளர்களாக இருந்தமையே.

அனானி - 3

தங்களுக்கும் மேற் சொன்ன விளக்கமே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். இதில் வரும் அனைத்தும் ஏறகனவே எழுதிய நூல்களில் உள்ளவை , அதனை அலசும் விதமாகவே நன் பதிவிட்டுள்ளேன் , தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இங்கே இடம் இல்லை!

Geetha Sambasivam said...

நல்ல பதிவு வவ்வால், கட்டபொம்மன் பத்தி நானும் நிறையப் படிச்சிருக்கேன். ஆனால் சிப்பாய்க் கலகம் பத்தி பிரிட்டிஷார் பயந்ததுக்கு முதல் காரணம் அது அவர்கள் கைக்கு அடங்கிய ஒரு ராணுவம் ஆக இருந்ததுதான்னு நான் படிச்சிருக்கேன். ராணுவத்தை இயக்கியது முழுக்க முழுக்க பிரிட்டிஷார் தான். மற்றபடி உங்கள் பதிவுக்கும், எனக்குக்கொடுத்த தகவலுக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

என் பேரை மாத்தி எழுதிட்டீங்க வவ்வால்! :D

வவ்வால் said...

கீதாசாம்பசிவம்,
மன்னிக்கவும் எப்படி இது நேர்ந்தது என்றே தெரியவில்லை, என்னை அறியாமல் பெயரையே மாற்றிவிட்டேன். திருத்திவிடுகிறேன்.

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

வவ்வால் said...

தங்கள் வருகைக்கு நன்றி கீதாசாம்பசிவம்,

வரலாற்றின் ஒரு முனையைதான் நான் பார்த்து பதிவிட்டுள்ளேன் மற்றவை யார் அறிவார், ஆனால் , கட்டபொம்மன் விவாதத்திற்குறிய ஒரு வீரன் என்பது மறுப்பதற்கில்லை, ஆனல் எட்டயப்பன் அந்த அளவுக்கு கூட ஒப்பிட இயலாத ஒரு கைக்கூலி அதில் வீரம் எல்லாம் எங்கே வந்தது என்பது தான் எனது கேள்வி.

கட்டபொம்மன் பர்றிய பதிவில் புதுக்கோட்டை சமஸ்தானம் பற்றி அதிகம் சொல்ல வேண்டாம் என்று சொல்ல வில்லை, சொல்லாது தவிர்த்த ஒன்றை சொல்கிறேன்,

எட்டயப்பன் போன்ற ஒரு தைரியம் அற்ற சமஸ்தானம் தான் புதுக்கோட்டையும் அதன் ராஜாவும். அவருக்கு அரசாட்சி கிடைத்ததே ஒரு கேவலமான காரணத்தால்.

கிழவன் சேதுபதி என்பவர் ஒட்டுமொத்த ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்டார் அவரது ஆசை நாயகியின் பெயர் காத்தாயி, அவருக்கு ஒரு தம்பி உண்டு, தனது தம்பிக்கு ஒரு வாழ்கை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கிழவன் சேதுபதி அசந்த நேரம் பார்ட்து என் தம்பி பிழைப்புக்கு ஒரு வழி செய்யுங்கள் என்று கேடு புதுக்கோட்டை பகுதியை ஆளும் உரிமை வாங்கி விட்டாள் காத்தாயி அப்படி வந்தவர் தான் விஜய ரகுனாத தொண்டை மான். குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவருக்கு எப்படி வீரம் இருக்கும்.

எனவே தான் கட்ட பொம்மனை பிடித்துக்கொடுத்து விட்டு பூலித்தேவனுக்கு கட்ட பொம்மனின் தந்தை துரோகம் செய்ததற்கு சரியாகி விட்டது எனத்தப்பித்தார் அதனால் தான் வரலாற்றில் எட்டயப்பனுக்கு அவப்பெயர் , ஏன் எனில் ஒரே நாயக்கர் இனம் பகை என்று பெரிதாக எதுவும் இல்லை, ஒரே ஒரு கிராமத்தில் எல்லைப் பிரச்சினை அவ்வளவு தான்.

தென்றல் said...

நல்ல அலசல், வவ்வால்! நன்றி!!

வவ்வால் said...

வாங்க தென்றல் , சலிப்பூட்டும் வரலாற்றை எனது நடையில் நீங்கள் படிப்பதற்கு நான் அல்லவா நன்றி சொல்லனும்.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

சிவபாலன் said...
This comment has been removed by the author.
அருண்மொழி said...

பாளையக்காரர்கள் என்பது தான் ஆங்கிலத்தில் Poligar ஆயிற்று (Poligar war = பாளையக்காரர் போர்)
@@@
கட்டபொம்மன் சுமார் 30 கிராமங்களை ஆடசி புரிந்ததாக கூறுவார்கள்
@@@
//அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்!//


1. சரித்திரத்தை எழுதியவர்கள் பெறும்பாலும் வடக்கு நாட்டவரே

//ராணுவத்தில் ஏற்பட்டது தான்;//

2. வேலூர் என்னவாம்...
கட்டபொம்மன் மற்றும் அல்ல, திப்பு சுல்தான் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்

3. மற்றுமொரு விஷயம், 1850ல் இந்தியாவில் காஷ்மீர், ஹைதராபாத் எல்லாம் கிடையாது

வவ்வால் said...

அருண்மொழி,
நன்றி!

30 கிராமங்களா எப்படி? பொதுவாக பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது என்று வரும் நிர்வாகத்திற்காக செய்யப்பட்ட ஒரு நில பிரிப்பு வகை,எனவே 30 கிராமங்கள் என்பது சரியா எனத்தெரியவில்லை, வெறும் 30 கிராமங்களை ஆண்டவனுடன் வெள்ளையர்கள் இவ்வளவு போராட வேண்டி வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

////ராணுவத்தில் ஏற்பட்டது தான்;//

2. வேலூர் என்னவாம்...
கட்டபொம்மன் மற்றும் அல்ல, திப்பு சுல்தான் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்
//

ராணுவத்தில் ஏற்பட்டதால் என்றால் , ஜான்சி ராணி, போன்றவர்களின் போராட்டம் எல்லாம் எப்படி பெரிதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. வட இந்திய ஆசிரியர்கள் எழுதுவது தான் எப்போதும் முக்கியமாக கருதப்பட்டதால் தென்னிந்திய போராட்டங்கள் பின் தள்ளப்பட்டது என்றே சொல்வார்கள். சுதந்திரப்போராட்டத்தில் தென்னிந்திய வரலாற்றின் புறக்கணிப்பு பற்றி பலரும் நூல்களில் சொல்லி இருக்கிறார்கள்.

திருவிக தென்னிந்திய விடுதலைப்போர் பற்றி எழுதிய நூலில் கூட இதனை சொல்லி இருப்பார்.


//3. மற்றுமொரு விஷயம், 1850ல் இந்தியாவில் காஷ்மீர், ஹைதராபாத் எல்லாம் கிடையாது//

இல்லைங்க அப்போவே ஹைதிராபாத், காஷ்மீர் எல்லாம் உண்டு.

முகலாய பேரரசு வரும் முன்னர் இருந்த சுல்தான்களின் காலத்திலேயேயே டெக்கான் பகுதியில் உருவான சுல்தான்கள் அங்கே ஆட்சி செய்துக்கொண்டிருந்தார்கள்.பின்னர் அவுரங்கசீப் டெக்கான் மீது படை எடுத்து அவர் கீழ் கொண்டு வந்துவிட்டார்.

The history of Hyderabad begins with the establishment of the Qutb Shahi dynasty. Quli Qutb Shah seized the reins of power from the Bahamani kingdom in 1512 and established the fortress city of Golconda. Inadequacy of water, and frequent epidemics of plague and cholera persuaded Mohammed Quli Qutub Shah to venture outward to establish new city with the Charminar at its centre and with four great roads fanning out four cardinal directions.

1512 இல் ஹைதிராபாத் உருவாகி விட்டது, பின்னர் அது பலர் கைகளுக்கு மாறி கடைசியில் வெள்ளைக்காரர்களின் ஆளுகைக்கு கீழ் ஹைதிராபாத் நிசாம்களால் ஆளப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால் உலகின் முதல் பில்லினர் அப்போதைய(பிரிட்டீஷ் இந்தியாவில்) ஹைதிராபாத் நிசாம் தான். முதன் முதலில் உலகின் பெரிய பணக்காரார் யார் என்று கணக்கெடுக்கப்பட்டப்போது அவரே முதலில் வந்தார். அப்போதைய டைம் மேகசினில் அட்டைப்படத்தில் வந்த முதல் இந்தியர் அவர் தான் என நினைக்கிறேன். குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு சரித்திர தொடர் வருகிறது அதில் கூட இத்தகவல் இருந்தது.

அருண்மொழி said...

//வட இந்திய ஆசிரியர்கள் எழுதுவது தான் எப்போதும் முக்கியமாக கருதப்பட்டதால் தென்னிந்திய போராட்டங்கள் பின் தள்ளப்பட்டது என்றே சொல்வார்கள்//
முற்றிலும் உண்மை. இதைத்தான் நான் கூறினேன்

//3. மற்றுமொரு விஷயம், 1850ல் இந்தியாவில் காஷ்மீர், ஹைதராபாத் எல்லாம் கிடையாது//

நான் கூற வந்தது என்னவென்றால், அவர்கள் நம்மை, ஹைதராபாத் காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவின் பகுதியாக கருதியதே இல்லை

வவ்வால் said...

அருண்மொழி,

//முற்றிலும் உண்மை. இதைத்தான் நான் கூறினேன்//

அதைத்தானே நானும் பதிவு முழுக்க சொல்லி இருந்தேன் நீங்கள் மீண்டும் கூறவும், நான் சொல்லவில்லை என்று நீங்க சொல்றிங்களோ என்று திரும்ப சொன்னேன்.

//நான் கூற வந்தது என்னவென்றால், அவர்கள் நம்மை, ஹைதராபாத் காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவின் பகுதியாக கருதியதே இல்லை//

மீண்டும் குழப்பிட்டிங்க :-))

அப்போ இந்தியா என்ற தேசமே ஒன்றாக உருவாகி இருக்கவில்லை, எனவே அப்படி சொன்னால் எல்லா பகுதிக்கும் அதுவே ஆகும், ஆனால் நாம் பேசுவது சுதந்திர இந்தியா வந்த பிறகு , இந்தியாவின் எப்பகுதிக்கு சுதந்திர போராட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று வரலாற்றில் அதிகம் பேசப்படுகிறது என்பதை, இங்கே ரெபரெண்ஸ் புள்ளி 1947 பிறகு,, அதன் பார்வையில் சொல்லும் போது நீங்கள் அந்த பகுதி எல்லாம் இல்லை என்பது குழப்பும்.எந்த பகுதியை சொல்லி நாம் பேச முடியும் சொல்லுங்கள்.

தமிழகம் முழுக்க ஆர்க்காடு நவாப், அவருக்கு மேல அப்போ ஹைதிராபாத் நிசாம், அவர்களிடம் இருந்து வரி உரிமையை வாங்கிய ஆங்கிலேயர்கள், என்று எல்லாமே இந்தியா இல்லைனு சொன்னா அடிப்பட்டு போய்டும்.

எனவே வெள்ளையர் ஆட்சிக்கு கீழ் இருந்த இந்தியா, அதன் போராட்டங்கள் என்று பார்க்கலாம். இல்லைனா எப்படி சொல்வது என்று நீங்களே சொல்லிடுங்க :-))

பிறைநதிபுரத்தான் said...

அடையாளங்களை மறக்க - இழக்க-இகழ செய்யும் அதீ-நவீன- அவசர வாழ்க்கையிலே 'வரலாறு' பற்றி சிந்திக்க வைத்த உங்களின் பதிவுக்கு நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வவ்வால்,
இது ஒரு நல்ல கோணத்தில் அமைந்த பதிவு.
ஆயினும் கட்டபொம்முவும்,திப்புவும் தென்னாட்டில் ஆங்கிலேயர்களுக்கு சரியான எதிர்ப்பைக் காட்டினார்கள் எனபது உண்மை.
மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.
விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!

வவ்வால் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

பிறைநதிபுறத்தார்,
//அடையாளங்களை மறக்க - இழக்க-இகழ செய்யும் அதீ-நவீன- அவசர வாழ்க்கையிலே 'வரலாறு' பற்றி சிந்திக்க வைத்த உங்களின் பதிவுக்கு நன்றி.//

நன்றி!

சரியாக சொல்லி இருக்கிங்க, நீங்க சொன்ன காரணத்தினாலேயே எனக்கும் வரலாறு பிடிக்கும், காலப்போக்கில் வரலாறு தெரியாமையால் மறந்து விடக்கூடாது என்று படித்து வைப்பேன்.
--------------------------------
அறிவன்,
நன்றி!

//மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.//

கட்டபொம்மு வீரம் குறித்து தரக்குறைவு என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த தகவல்களிலும் சில கருத்துக்கள் உள்ளது. ஏன் எனில் அக்கால சூழல் அப்படி, எனவே சூழ் நிலைக்கைதி என்ற நிலையினால் அடங்கி இருக்கவும் நேரிடும்.

ஆனாலும் கட்டபொம்மு விடுதலைப்போராட்டத்தில் ஒரு முன்னோடி என்பதை யாரும் மறைக்கவோ ,மறுக்கவோ முடியாது.

உதாரணமாக கட்டபொம்மு வரிக்கொடுக்காத சுதந்திர பாளையக்காரனாக இருந்ததில்லை, அதற்கு முன்னரும் ஆர்க்காட் நவாப்புக்கு வரிக்கட்டிக்கொண்டு இருந்தவர்கள் தான்.பின்னர் வெள்ளையர்கள், வரித்தொகை அதிகம் கேட்கவும் தான் எதிர்ப்பு கிளம்பியது. இல்லை எனில் கட்ட பொம்முவும் இணக்கமாகவே இருந்திருக்க கூடும்.

ஆனால் இந்திய வரலாற்றில் உள்ள பிரச்சினை என்னவெனில் சரியாக ஆவணப்படுத்தாமையே.

//விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!//

இந்த புத்தகத்தை சமீபத்தில் நூலகத்தில் பார்த்தேன், பிறகு படிக்கணும் என்று குறித்துவைத்துள்ளேன். இந்தப்பதிவு போட்டு ஒரு வருடம் மேல் இருக்கும், அப்போது அறிந்ததை வைத்துப்போட்டது.இப்போது பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் நன்றாக பதிவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

Anonymous said...

Theeran chinnamalai enbavar kooda british
edhirthu vettrigaramaka sandai pottar.
ivanga ellam saritthira puthagathil illai.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மோகந்தாஸின் இந்த பதிவில் என்னுடைய பதிலையும் பாருங்கள்.

http://imohandoss.blogspot.com/2005/10/blog-post_17.html

ராஜ நடராஜன் said...

நல்ல அலசல்.கட்டிடக் கலை நிலைத்த அளவுக்கு நமது ஆவணக் கலை வளராதது வருத்தத்திற்குரியது.ஒருவேளை ஆவணங்கள் கூட ஓலைகளாக அங்கும் இங்குமாக சிதறிப் போயிருக்கலாம்.

அடுத்து சரித்திரம் படிக்கும் மாணவர்கள் வெறும் புத்தக மாணவர்களாக ஆக்காமல் ஒரு வருடப் படிப்பில் குறைந்தது 6 மாதங்களாவது இந்திய வரலாற்று தளங்களை சுற்றும் பயணப் பாடமாக மாறவேண்டும்.பயணம் என்றால் மொத்தமாக வகுப்பே பெட்டி கட்டிகிட்டு இல்லை.சின்ன சின்ன குழுக்களாக.

இனி தற்போதைய நடப்புக்கள் வரலாறுகளாய் மாறும்படியான ஆக்க பூர்வமான வேலைகள் எங்காவது காணப்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

Anonymous said...

விடுதலைப்போரில் தமிழர்களின் பங்கை அறிய ஈரோடு வழக்கறிஙர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் எழுதிய "விடுதலை வேள்வியில் தமிழகம்" என்ற நூலைப்படிக்கவும்.

jansi kannan said...

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி, அதிகம் தெரிந்தது தான். இருந்தாலும் மறந்து போன வரலாற்றிற்கு மீண்டும் உயிரூட்டுவது போன்று தெரிவித்ததற்கு வாழ்த்துக்கள்.