Monday, August 20, 2007

உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

முன்னோட்டம்:

ஓகை அவர்கள் ஒரு பதிவிட்டு அதில் தற்காலத்தில் கிராமத்தில் லாபமற்ற விவசாயம் செய்வதை விட நகரத்தில் சாலைப்போடுதல் , கட்டுமானம், கல் உடைத்தல், மூட்டை தூக்குதல் இன்ன பிற கூலி வேலை செய்வது நிறைவான வாழ்வை தரும் எனக்கூறியுள்ளார். அதனை செல்வன், தெ.கா மற்றும் வவ்வாலுக்கு சமர்ப்பணம் என வேறு அறிவித்து , கருத்துகளும் கேட்டுள்ளார்.
ஓகை அவர்களின் பதிவு
கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!
ஓகை அவர்களுக்கு மிக பெரிய மனது, மாற்று கருத்துகளை வரவேற்று இருக்கிறார். அவர் எதிர்பார்ப்பை வீண் ஆக்காமல் சில பல கருத்துகளை அள்ளி விட்டேன் ஆனாலும் நீளமாக போய்விட்டது எனவே தனியே ஒரு பதிவிடுகிறேன்.

உள்ளது உள்ளபடி:

இந்திய பொருளாதரத்தை விவசாய பொருளாதாரம் என்பார்கள் , 65 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பது விவசாயம். ஆனால் தற்போது விவசாயம் செய்வதர்கான இடு பொருள் , இன்ன பிற முதலீட்டு காரணிகளின் விலை ஏறிய விகிதாசாரத்தில் விளைப்பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. மேலும் இயற்கையின் திருவிளையாடல் வேறு மழை பெய்து கெடுக்கும் இல்லை காய்ந்து கெடுக்கும். எனவே விவசாயிகள் பலரும் நொடித்து போய் விட்டார்கள்.

சிரமப்படுபவனுக்கு உதவாமல் அவனை அதை விட்டு வெளியேற சொல்கிறார்கள். வேறு எந்த உற்பத்தி கூடத்திலும் உற்பத்தியை நினைத்தால் கூட்டலாம் , குறைக்கலாம் , அல்லது சிறிது காலம் மூடிவிட்டு தொடரலாம். தேவைக்கு ஏற்றார்ப்போல அதிகப்படியாக உழைத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தில் அப்படி எல்லாம் செய்ய முடியாது, 140 நாள் சாகுபடி நெல் என்றால் அத்தனை நாட்களுக்கு பிறகு தான் நெல் கிடைக்கும், நிலத்தில் ஓவர் டைம் வேலைப்பார்த்தாலும் அதன் உற்பத்தி காலம் குறையாது.

ஷூ போடுபவர் அது கிடைக்கவில்லை என்றால் செருப்பு போடலாம், தோலில் கிடைக்கவில்லை என்றால் ரப்பரில் போட்டு சமாளிக்கலாம் ஆனால் உணவுக்கு வேறு மாற்றே இல்லை. பசித்தால் சாப்பீட்டு தான் ஆக வேண்டும் ,அதுவும் எந்த உணவாக இருந்தாலும் நிலத்தில் இருந்து தான் வர வேண்டும். தொழிற்சாலையில் செயற்கையாக ஒரே ஒரு அரிசியை கூட உற்பத்தி செய்ய முடியாது.

எப்படி தமிழைப்படிக்காமல் ஒரு தலைமுறையே தமிழ் தெரியாமல் நாட்டில் உருவாகி வருகிறதோ அதே போல நகரத்திற்கு கூலி வேலை தேடி போய்விட்டால் ஒரு தலைமுறையே விவசாயம் தெரியாமல் உருவாகிவிட்டால் என்ன ஆவது. நாடு முழுக்க நிலம் தரிசாக கிடக்கும். உணவு தட்டுப்பாடு வரும்.

நம் சுய நலம் முன்னிட்டாவது விவசாயம் வாழ வேண்டாமா?

சரி விவசாயம் வாழ வேண்டும் அப்படி என்றால் விவசாயி கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டுமா? இல்லை அதற்கும் சில தீர்வுகள் இருக்கிறது.

தீர்வு:

ஒரு தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி சாத்தியம் ,செங்குத்து வளர்ச்சி, கிடைமட்ட வளர்ச்சி என்ற இரண்டு வகை சாத்தியம். விவசாயம் வெறும் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது அதில் இந்த இரண்டு வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.

செங்குத்து வளர்ச்சி:(vertical integration)

மாடு வளர்க்கிறார், பால் கறக்கிறார் ,விற்கிறார் இது சராசரி. அதுவே பால் கறந்து விறபதோடு , அதில் இருந்து தயிர், மோர் வெண்ணை , நெய், ச்சீஸ், பால்கோவா, பால் பவுடர் என அனைத்து பால் பொருட்களும் செய்து விற்றால் அது செங்குத்து வளர்ச்சி.

இதெல்லாம் கடினம் செய்வது முடியாது தொழில் நுட்பம் வேண்டும் என்று சொல்ல கூடியவை அல்ல. வெளி நாட்டில் எல்லாம் விவசாயிகள் செய்து விற்கும் ச்சீஸ், யோகர்ட் க்கு ஃபார்ம் யோகர்ட், ச்சீஸ் என்றே பெயர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இவை எல்லாம் குடிசை தொழிலாகத்தான் செய்தார்கள்.

சிறுவனாக இருக்கும் போது பார்த்து இருக்கிறேன் தலையில் கூடை வைத்து மோர், தயிர், நெய் எல்லாம் விற்றுக்கொண்டு ஒரு பெண் வருவார்கள். இப்போது அப்படி வருவது இல்லை ஏன். விளம்பரங்களில் வாழும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க நாம் பழகிக்கொண்டோம்!

கிடைமட்ட வளர்ச்சி!(horizontal integration)

மாட்டிற்கு என்ன வேண்டும், உணவு அதற்கு என்று தீவன புல்லும் வளர்க்கலாம். மேலும் செறிவூட்டிய தீவனம் தயாரிக்க மக்க சோளம், கம்பு போன்றவையும் வளர்க்கலாம் , தானியமும் கிடைக்கும் , தீவனமும் தயாரிக்கலாம். எண்ணை வித்துகள் பயிரிட்டு அதில் இருந்து எண்ணை எடுத்து விட்டு புண்ணாக்கை கால் நடை தீவனம் ஆக பயன்படுத்தலாம், அதிகப்படியை விற்கலாம்.

தனி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் இருக்கும் அவருக்கு இதெல்லாம் சாத்தியமா எனக்கேட்கலாம். சிறு விவசாயிகள் பத்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டாக இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு கடன் உதவியும் அரசு செய்யலாம்.மகளீர் சுய உதவிக்குழுக்கள் போல இது விவசாயிகள் சுய உதவி குழு!

இவை எல்லாம் சில உதாரணங்களே , இடத்திற்கு ஏற்றார்ப்போல இன்னும் என்ன என்னவோ எல்லாம் செய்யலாம்!

நிலத்தினை பன்னோக்கு வழியில் உபயோகிக்க வேண்டும்(integrated Farming)

விவசாயம் பண்ண தேவை நீர், ஆனால் அதற்க்கு தட்டுபாடு , தீர்வு, நமக்கு என சொந்தமாக ஒரு சிறு பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் அதில் மழை நீரை சேகரிக்கலாம். இருக்கிற ஒரு ஏக்கரில் இதெல்லாம் சாத்தியாமா எனக்கேட்கலாம், ஒரு ஏகர் என்பது 100 சென்ட், அதில் ஒரு 5 சென்ட் ஒதுக்கினால் கூட போதும்.

5 சென்ட்டில் குட்டை போட்டால் உற்பத்தி பாதிக்குமே என்பீர்கள், குட்டையை சும்மா விட்டால் தானே , அதில் மீன் வளர்க்கலாம். அந்த குட்டைக்கு மேலெ கம்பி வலை அமைத்து கூண்டில் கோழி வளர்க்கலாம்.கோழியின் கழிவு மீனுக்கு உணவு.

குட்டையின் கரை ஓரமாக மலர் செடிகள், தென்னை , வாழை என குறைந்த அளவில் போட்டாலும் உபரி வருமானம் தானே!

நெல் வயலாக இருந்தாலும் ஆங்காங்கே சில தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கலாம். நெல்லின் மலரிலும் தேன் உண்டு. மேலும் மகரந்த சேர்க்கையும் நன்கு நடக்கும்.

இதற்கு பெயர் தான் ஒருங்கிணைந்த விவசாயம்.



இதெல்லாம் ஏதோ நானே சொந்தமாக சொல்லவில்லை பல நூல்களிலும் இவை எல்லாம் இருக்கிறது. இவற்றை நடை முறைப்படுத்த ஆரம்பக்கட்ட பண உதவி தேவை , ஆலோசனை வழங்க வேண்டும் , ஒரு முறை செய்து பார்த்து விட்டால் , பின்னர் அவர்க்களே பிடித்துக்கொள்வார்கள்.

விவசாயி, விவசாய தொழிலாளி நகரத்திற்கு பிழைப்பு தேடி செல்வதால் ஏற்படும் பின்னடைவினை அடுத்துப்பார்ப்போம்

தொடரும்...

48 comments:

Anonymous said...

//நெல் வயலாக இருந்தாலும் ஆங்காங்கே சில தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கலாம். நெல்லின் மலரிலும் தேன் உண்டு. மேலும் மகரந்த சேர்க்கையும் நன்கு நடக்கும்.//

ரொம்ப‌ ச‌ரி. தேனோட பை ப்ராட‌க்ட்ஸ்லயும் வ‌ருமான‌த்துக்கு ந‌ல்ல‌ வ‌ழி உண்டு. ம‌ருந்துக்கு தேன‌டைக‌ள் உப‌யோகிக‌ப்ப‌டுதுதானே

ILA (a) இளா said...

நாம் எழுத நினைத்ததை பலதை நீங்களே பதிவா போட்டுடீங்களே :).

வவ்வால் said...

வாங்க சின்ன அம்மிணி!

நன்றி! ஆமாம் தேன், தேனடை, தேன் மெழுகு எல்லாம் பயன்படும், உபரி வருமானம் கிடைக்கும்!

வவ்வால் said...

இளா!

நன்றி!

அப்போ மயிரிழையில் முந்திட்டனா :-))

நான் போடலாம்னு இருந்த பதிவ நேற்று வேற ஒருவர் இப்படி தான் போட்டுடாங்க!

ஓகை அவர்கள் பதிவு ஒன்று போட்டார்கள் அதற்கு விளக்கமாக சொல்லவேண்டும் என்று தான் பதிவாக போட்டேன். உங்களுக்கும் இத்தகைய கருத்துக்களே வந்தது மகிழ்ச்சியே!யார் சொன்னா என்ன எல்லாம் நாம சொன்னது தானே!

வவ்வால் said...
This comment has been removed by the author.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
ஆழமான யோசனைகள்...
ஒன்று சொல்வேன். அமைச்சர்கள் சிந்திக்க வேண்டியவை இவை...
அடுத்து "கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்" தேடுகிறார்கள்.இலவசமாகக் கொடுக்கச் செலவு செய்யும் காசில் கால்வாசியை இப்படியான விடயங்களில் பரீட்சார்த்தமாக செய்ய உதவலாம்.
செய்வார்களா?? கையேந்துபவர்கள் இருந்தாலே தாங்கள் காலத்தை ஓட்டலாம் என அரசியல் வாதிகள்
கருதுகிறார்கள்.

Anonymous said...

தேனீ வளர்ப்பினால், அமெரிக்க வேளாண்துறையினருக்கு பல பில்லியன் லாபம் என்று


படித்தேன்.(கவனிக்க பல பில்லியன்!). தேனுக்காக மட்டுமல்ல, மகரந்த சேர்க்கைக்கு


தேனீக்களின் பங்கு மிகவும் முக்கியம். நான்


சிறுவனாக இருந்த போது, புற நகர் பகுதியில்


எங்கள் வீட்டில் மூன்று தேன்கூடு பெட்டிகள் இருந்தது. தேனீ
வளர்ப்பில், அதிக முதலீடு, இல்லை.பெட்டிகளும், அதை வைக்க சின்ன மேசைகளும்
வாங்கினோம்.ராணித்தேனீயை கொண்டுவந்து விட்டால், மற்ற தேனீக்கள், தானே வந்து விடும்! சின்ன கை இயந்திரத்தில (centrifuge principle)், அமாவசைக்கு முன் தேன் எடுத்து விடுவோம்!

வேப்பம் பூ பூக்கும் காலத்தில், தேன் கொஞ்சம்


கசக்கும். சீசனுக்கு எற்ற மாதிரி சுவை மாறும்!

இதில் சோம்பேறிகள் ஆண் தேனீக்களே(Drone)!

கன்னங் கரேலென்று இருக்கும் இவற்றை


கூட்டு வாசலில் வரும் போது பிடித்து நசுக்கி


விட்டால், ஐந்து காசு கிடைக்கும். ஆண் தேனீ


கொட்டாது. Low maintenance, great
investment! தேனீக்களை, அமைதியாக


கையாண்டால், கொட்டாது! தேனீ வளர்ப்பை


பரப்ப பலரும் முன் வர வேண்டும்!

வவ்வால் said...

யோகன் நன்றி!

அம் இப்படி பல திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தினால் விவசாயம் லாபகரமாக இருக்கும் , கடன் தொல்லையால் விவசாயிகள் இறப்பதும் தடுக்கப்படும்!

வவ்வால் said...

அனானி,

நன்றி! நான் சுருக்கமாக தேனீ வளர்ப்பு என்று சொல்லிவிட்டு போய்விட்டேன் ஆனால் விளக்கமாக அதனை சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள் சொல்வது உண்மை தான் தேன் மூலம் அதிக உழைப்பின்றி நல்ல லாபம் வரும்! புதியவற்றை தெரிந்து கொள்ள ,நிறைய பேருக்கு பொறுமை தான் இல்லை என நினைக்கிறேன்

Anonymous said...

http://www.answers.com/topic/amul

சிறு விவசாயிகளுக்கு உதவ இன்றைய தேவை


கூட்டுறவு சங்கங்கள்! இதற்கு ஒரு நல்ல


முன் மாதிரி அமுல்(Anand Milk Union Limited). சென்னை அண்ணா சாலையில்


ஆனந்த் திரையரங்கம் அருகே இவர்கள்


விளம்பரம் இருக்கும். வேடிக்கையான


வாசகங்கள்,மக்களைக் கவர! குரியன் என்கிறவரால்
ஆரம்பிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கே ஒரு
முன் மாதிரியான அமைப்பாக விளங்குகிறது!தேவை தமிழ்நாட்டில் இதைப் போன்ற அமைப்புகள்.திருச்சியில் சிந்தாமணி என்ற அமைப்பு இருந்தது!இவர்கள் அங்காடியில் எப்பொழுதும் கூட்டம் அலை
மோதும். இப்பொழுது இருக்கிறதா
என்று தெரியவில்லை!

பொது ஊடகங்களுக்கு நமீதாவின் சுற்றளவைப்


பற்றிய கவலையே தவிர, பொதுமக்களின்


வாழ்க்கையை மேம்படுத்தும் எண்ணம் குறைவாக


இருக்கிறது!

Thekkikattan|தெகா said...

ஆஹா,

வவ்வால் அசத்தல் பதிவு. எனக்கு குட்டை ஒன்றை ஐந்து செண்ட்களில் ஏற்படுத்தி அதற்கு மேலே கோழி வளர்ப்பு செய்து என்கிற யோசனைகளை மண்டைக்குள் வைத்து திணிக்க போதுமான அளவிற்கு தேடுதல் இல்லாமல் போனது. அருமையான யோசனைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். நன்றி!

இதனைப் படிப்பவர்கள் குறைந்த பட்சம் தனது கிராமங்களுக்கு செல்லும் பொழுது தனக்கு தெரிந்தவர்களிடத்தில் கொஞ்சம் பகிர்ந்து வைக்கலாம். அவர்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.

யாருங்க இந்த அனானி, இப்படி பிட்டு பிட்டு வைக்கிறாரு, ஆனா, தான் யாருன்னு காமிச்சிக்க விரும்ப மாட்டீங்கிறாரே :-)

நமீதாவைப் பத்தி சொன்னீங்களே அது எம்பூட்டு உண்மை...

வவ்ஸ், நீங்க நடத்துங்க, நடத்துங்க... எனக்கென்னமோ நீங்க அக்ரி படிச்ச ஆளா இருப்பீகளோன்னு சந்தேகமா இருக்கு... :))

G.Ragavan said...

நல்ல நல்ல விசயமாத்தான் சொல்லீருக்கீங்க. ஆனா பாருங்க..மாநில மத்திய அரசுகள் இத யோசிக்கவே மாட்டேங்குறாங்களே. அரசியல் செய்யவே இவங்களுக்கு நேரம் சரியா இருக்கு. என்ன செய்றது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். இது உண்மை. நாளைக்கு ஏதோ ஒரு நாடு உழும். அவங்களை நோக்கிச் சாப்பாட்டுக்கு நமது கைகள் தொழும். :((((((

வவ்வால் said...

அனானி,

நீங்கள் யாராக இருந்தாலும் நான் எதன் அடிப்படையில் இதை பேசினேன் என்பதை சரியாகவே ஊகம் செய்துள்ளீர்கள், நான் இதை எழுதியது அமுல் போன்றவற்றின் அடிப்படையில் தான், அமுல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே உருவான ஒன்று ஆனால் அதன் வளர்ச்சிக்கு பின்னர் மாநில , மைய அரசுகள் அதிகம் உதவி செய்துள்ளது.குரியன் காலம் அதன் பொற்காலம் எனலாம். அமுலை உதாரணம் காட்டினால் அவர்கள் பெரிய நிறுவனம் என்பார்கள் என்று தான் 10 பேர் சேர்ந்து சிறு விவசாய உதவிகுழுக்கள் அமைக்க வேண்டும் என சொன்னேன்.மேலும் விவசாயம் + பால் பண்ண தொழில் என சேர்த்து வளர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதுவே பின்னர் அமுல் போல கூட வளரலாம்.

நான் அமுல் கார்டூன்களை காய்தே மில்லத் கல்லூரி அருகில் தான் பார்த்துள்ளேன் , ஆனந் திரை அரங்கம் அருகிலும் இருக்கிறதா?

சிந்தாமணி போன்றவைகள் எல்லாம் அரசியல் ஊடுருவல் காரணமாக சீர் கெட்டு விட்டது, ஏதோ பெயருக்கு ஓடுகிரது.

தமிழ் நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் அழிய காரணம் அரசியல் ஊடுறுவல் தான்! அதைப்பற்றி சொன்னால் இன்னும் நீளும்!

ஆவின் என்ற அரசின் பால் நிறுவனம் அமுல் போல வர வேண்டிய ஒன்று , அரசியல் தலை ஈட்டினால் ஏதோ நாங்களும் இருக்கோம்னு அடையாளம் காட்டப்படுகிறது!

அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நம்ம ஊரு அரசு அதிகாரிகள், அதிலும் எல்லாம் ஐ.ஏ.எஸ், படித்தவர்கள் இப்படி இருக்கிறார்கள். இதை பற்றி பேசினால் அதற்கு முடிவே இல்லை!

சதுக்க பூதம் said...

Agriculture provides 18% GDP in indian economy.But more than 60% of people depends on agriculture as primary occupation.That means productivity in agriculture is not efficient.The only way to change the situation is that more people needs to be re-deployed in other fields.If you like it or not, Indian agriculture( of course world agriculture) will be opened up in 5-10 years. If productivity doesn't improve during that period, Indian food poduce will be more costlier (especially against chinese food produce). At that time, it will be cheaper for the farmers to buy rice from market instead of producing food,even for themselves.
If you like it or not, It is going to open.
I strongly believe that we can not get great productivity improvement with out moving to large farm with mechanisation.

On social front also, If dalit moves to city, they will get more social recognition (than from Village, as Amdedkar told)

வவ்வால் said...

தெ.கா,
நன்றி நாங்கள் இன்னும் விவசாய குடும்பம் தான் அதனால் எனக்கு நேரடி அனுபவம் உண்டு.சிறு வயதில் இருந்தே நெல் வயலிலும், களத்திலும் விளையாண்டு வளர்ந்தவன்.நானே பல விவசாய வேலைகளை செய்துள்ளேன், நாற்று நடுவது ,அறுவடை செய்வது என.இப்பொழுதும் ஒரு 6 ஏக்கர் நிலம் வைத்துக்கொண்டு அதனை உற்று பார்க்கிறேன் ஊருக்கு செல்லும் போதெல்லாம்(அதனை விற்க சொல்லி நிறைய புத்திமதி, ஒரு காலத்தில் கிராமம் சென்றால் எனக்கென நிலம் வேண்டாமா என வைத்துள்ளோம்).அதனால் அதிகப்படியாக கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளேன்! மற்றபடி விஷேஷம் ஏதும் இல்லை!

அந்த அனானி நிறைய தெரிந்து வைத்துள்ளார் , ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.திட்டினால் கூட வரட்டும் என நம் பதிவில் மட்டுறுத்தலே வைப்பதில்லை. அப்படி இருக்கும் போது ஆக்கபூர்வமாக பேசும் அவருக்கு ஏதும் தடை இல்லை இங்கே.

அவர் அனானியாக வந்து சொன்னாலும் வரவேற்பேன் அவரே தன்னைப்பற்றி சொல்லிக்கொள்ளட்டும் வருங்காலத்தில்.

-/பெயரிலி. said...

நல்ல பதிவு வவ்வால்

வவ்வால் said...

ராகவன் ,
நன்றி!
//உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். இது உண்மை. நாளைக்கு ஏதோ ஒரு நாடு உழும். அவங்களை நோக்கிச் சாப்பாட்டுக்கு நமது கைகள் தொழும். :((((((//

ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்கள். அப்படி ஒரு நிலை வரகூடாதெனதான் நான் சொல்லிவருவது!

பெப்சி உமா போன்றவர்கள் ஏதாவது உளறினால் கூட அதனை பெரிதாக செய்தி ஆக்க இங்கே பலரும் இருக்கிறார்கள்,அவருக்கும் கொடி கட்ட , முரசு கொட்ட ஆள் வருவார்கள். ஆனால் ஜீவாதாரப்பிரச்சினைகளை தான் ஏறெடுத்து பார்க்க ஆள் இல்லை. எதுவும் நேரடியாக செய்யவில்லை என்றாலும், பேசக்கூட ஆள் இல்லாத நிலை!

கேட்டால் அப்படிலாம் நடக்கிறதா என்பார்கள்.கஷ்டம்னா எதுக்கு அந்த தொழிலை செய்யனும் வேற வேலைக்கு போறது தானெ என்பார்கள். அவர்களுக்கு என்ன எப்படியோ காசு வரும்,ஒரு கிலோ அரிசி என்ன விலை ஆனாலும் வாங்க தயார் ஆக இருப்பார்கள்!

வவ்வால் said...

சதுக்க பூதம்,

என்ன ஒரு பெயர், சிலப்பதிகாரம் படிப்பவரோ? நீங்கள் சொல்வது உண்மை தான், உற்பத்திதிறன் மேம்பட வேண்டும். அதற்கான வழிகளை காட்ட வேண்டும். அதை விடுத்து தற்போது விலைமலிவென விவசாயத்தை ஊத்தி மூடினால் , வருங்க்காலத்தில் மிக பெரிய ஆப்பு இருக்கிறது!

உற்பத்தியினை மேம்படுத்த தான் நான் மாற்று வழிகளை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.எனது நாற்று நடும் எந்திரம் படித்து பாருங்கள் அதிலும் நீங்கள் இப்போது சொன்னதை தான் சொல்லி இருப்பேன்!
கிராமிய வாழ்க்கை விட்டு ஒருவன் வெளி வருவதால் என்ன வகை மேம்பாடு கிடைக்கும். நகரத்தில் குடிக்கும் நீர் முதல் கொண்டு காசு அல்லது , காத்திருப்பு என கழுத்தருப்புகள் அதிகம். அதே சமயத்தில் கிராமத்தில் அவன் வாழ்கை அவன் கையில் என வாழலாம்.

இரண்டாவது பாகம் இருக்கிறது அதையும் படித்து விட்டு சொல்லுங்கள் தற்போது தொடரும் தானே போட்டு இருக்கிறேன்!

வவ்வால் said...

பெயரிலி,
//நல்ல பதிவு வவ்வால்//

தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

Unknown said...

வவ்வால்

நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் பலவற்றை விவசாயிகள் ஏற்கனவே செய்துகொண்டு தான் உள்ளனர். வயலில் பயிர் நட்டதுபோக தென்னை, மாமரம், மல்லிகை, கீரை நடுவது மாடுகளை வைத்து பால் விற்பது என செய்கின்றனர்.ஆனாலும் கடன் சுமையில் சிக்கிக்கொண்டுதான் உள்ளனர்.இவற்றால் அதிக அளவில் வருமானம் அதிகரிக்காது.

விவசாயிகள் குடும்பகட்டுப்பாடு செய்துகொள்லாததால் அப்பாவுக்கு 10 ஏக்கர் இருந்து நாலு மகன் இருந்தால் தலைக்கு 2.5 ஏக்ரா கிடைக்கும்.அவர்களுக்கு தலா இரு மகன் பிறந்தால் தலைக்கு ஒரு ஏக்ரா தான் கிடைக்கும், மகளுக்கு சீதனமாக மஞ்சக்காணி நிலம் தருவதும் உண்டு.இப்படி நிலத்தை பிரித்து பிரித்து நாலைந்து தலைமுறையில் பெருவிவசாயிகள் குறுவிவசாயிகளாகிவிடுவது உண்டு.

65 கோடி பேருக்கு வாழ்வாதாரம் தரும் அளவுக்கு விவசாயதுறை பலமுடன் உள்ளதா என்று சிந்தித்து பாருங்கள்.வளர்ச்சி அடைந்த எந்த நாட்டிலும் 10%க்கு மேல் மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை.

வவ்வால் said...

வாங்க செல்வன்,

//விவசாயிகள் குடும்பகட்டுப்பாடு செய்துகொள்லாததால் அப்பாவுக்கு 10 ஏக்கர் இருந்து நாலு மகன் இருந்தால் தலைக்கு 2.5 ஏக்ரா கிடைக்கும்.அவர்களுக்கு தலா இரு மகன் பிறந்தால் தலைக்கு ஒரு ஏக்ரா தான் கிடைக்கும், மகளுக்கு சீதனமாக மஞ்சக்காணி நிலம் தருவதும் உண்டு.இப்படி நிலத்தை பிரித்து பிரித்து நாலைந்து தலைமுறையில் பெருவிவசாயிகள் குறுவிவசாயிகளாகிவிடுவது உண்டு.//

நீங்கள் சொல்வதை பார்த்தால் எல்லாருக்கும் கட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு செய்ய சொல்வீர்கள் போல இருக்கே :-))

நான் சொன்னதையும் பாருங்கள், 1 ஏக்கர் , 2 ஏக்கர்னு இருக்க யாரோ 10 பேரு ஒண்ணா சேர்ந்து விவசாயம் சொல்லி இருக்கேன்,அப்படி இருக்கும் போதே ஒரே அப்பாவின் வாரிசுகள் ஒண்ணா சேர்ந்து விவசாயம் செய்ய கூடாதா?

இந்தியாவில் விவசாயினு இல்லை எல்லா பெண்ணைப்பெற்றவர்களும் செலவு செய்து தான் கல்யாணம் செய்ய வேண்டும் , அதனால் பெண்களையே பெற்றுக்கொள்ள வேண்டாம் என உசிலம்பட்டி பெண் சிசு கொலையாளி போல சொல்வீர்களோ? அப்படி நீங்கள் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை!

நீங்கள் சொன்னது போல தென்னை போடுபவர் அதை மட்டுமேவும், மல்லிகை போட்டவர் அதை மட்டுமே செய்கிரார்கள் , நான் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க சொல்கிறேன்! வித்தியாசம் புரிகிறதா?

வளர்ந்த நாடுகலிள் 10 சதவீதம் பேர் தான் விவசாயம் செய்கிறான் சரி மீதி பேர் என்ன செய்கிறான் கூலி ஜீவனம் தான் செய்கிறானா? இல்லையே. இன்னும் மீதி பேருக்கு எல்லாம் நல்ல வேலைவாய்ப்பு இல்லை அப்பொ விவசாயம் செய்யலாமே. இன்னும் நமக்கு விவசாய எந்திரங்களில் டிராக்டர் தவிர மற்ற எதுவும் பரிச்சயம் ஆகவில்லை. எந்திரங்களும் வந்து விடட்டும் பின்னர் இடம் பெயரலாம்.

இடம் பெயர வேண்டும் என்ற ஒன்றை மட்டும் பார்க்காமல் விவசாய உற்பத்தி குறையாமல்,இடம் பெயர்பவனுக்கும் நல்ல வேலை இருக்க வேண்டும்! என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்!

Unknown said...

//நீங்கள் சொல்வதை பார்த்தால் எல்லாருக்கும் கட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு செய்ய சொல்வீர்கள் போல இருக்கே :-))

நான் சொன்னதையும் பாருங்கள், 1 ஏக்கர் , 2 ஏக்கர்னு இருக்க யாரோ 10 பேரு ஒண்ணா சேர்ந்து விவசாயம் சொல்லி இருக்கேன்,அப்படி இருக்கும் போதே ஒரே அப்பாவின் வாரிசுகள் ஒண்ணா சேர்ந்து விவசாயம் செய்ய கூடாதா? //

குடும்ப கட்டுப்பாடு இந்தியாவின் தலையாய பிரச்சனை வவ்வால்.கட்டாயமாக்குதல் தவிர்த்து மற்ற எல்லா வழிகளையும் அரசு முயன்று பார்க்கிறது.சீனாவில் இருப்பது போல் 9 மாத கர்ப்பிணிகளுக்கு கட்டாய அபார்ஷன் செய்யும் முறை கூட இன்னும் சில நூறாண்டுகள் கழித்து நம் நாட்டிலும் வரலாமோ என்னவோ:((

சகோதரர்கள் சேர்ந்து விவசாயம் செய்வது சாத்தியமில்லை.அவர்களுக்குள் அடித்துக்கொண்டு தான் பாகபிரிவினை செய்துகொள்கிரார்கள்.கோர்ட்டில் இந்த வழக்குகள் லட்சக்கணக்கில் தேங்கி நிற்கின்றன.இதெல்லாம் மாறுவது சாத்தியமா என்ன?

//நீங்கள் சொன்னது போல தென்னை போடுபவர் அதை மட்டுமேவும், மல்லிகை போட்டவர் அதை மட்டுமே செய்கிரார்கள் , நான் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க சொல்கிறேன்! வித்தியாசம் புரிகிறதா? //

புரிகிறது.கோவையில் பல தோட்டங்களில் அப்படித்தான் செய்கிறார்கள்.அப்படி செய்தும் கடன் சுமையால் தவித்து நிலங்களை விற்பவர்கள் ஏராளம் உள்ளனர்.என் வீட்டருகே இருந்த பெரிய தோட்டத்தில் தென்னை,சோளம்,பால் விற்பனை, கீரை விவசாயம் முதல் மளிகை கடை வரை நடத்தினர்.இரண்டு மகன்கள் சொத்தை பிரித்தபின் இருவரும் தனிதனி கடைகளை திறந்து ஒருவர் கடையை மற்ரவர் முடித்து கட்டினர். மாடுகளை பிரித்து, கிணற்று தண்ணீர் யாருக்கு என அடிதடியில் இரங்கி ஏழெட்டு வருடம் கழித்து சமாதானமாகி கடைசியில் இப்போது கடன்பட்டு உள்ளனர்.ஒருவருக்கு இரு மகள்கள்.இன்னொருவருக்கு ஒரு மகன், மகள்.நிலத்தின் சில பகுதிகளை விற்றுத்தான் மகள்களுக்கு கல்யாணம் செய்துவைத்தனர்.

பெரிய விவசாயியின் நிலையே இப்படி.சிறு விவசாய குடும்பங்களின் நிலை இன்னும் மோசமாக அல்லவா இருக்கும்?

வவ்வால் said...

செல்வன்,
//தண்ணீர் யாருக்கு என அடிதடியில் இரங்கி ஏழெட்டு வருடம் கழித்து சமாதானமாகி கடைசியில் இப்போது கடன்பட்டு உள்ளனர்.//

விவசாயம் செய்து நொடித்து போனார்கள் என்பதை விட சண்டை , வழக்கு என செலவு செய்து நொடித்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டு. சண்டை இல்லாமல் இருந்தால் வசதியாக தானே இருந்து இருப்பார்கள்.

ஒருங்கிணைந்த விவசாயத்தை, பொதுவான கூட்டுறவு அமைப்பில் இணைந்து செயல் பட்டால் சாத்தியமே.

இப்போது மகளீர் சுய உதவிகுழுக்கள் தோல்வியா, வங்க தேசத்தில் செயல்படும் கிராமீன் சிறுகடன் வழங்கும் திட்டம் தோல்வியா, அமுல் தோல்வியா , என சொல்லுங்கள்!

Unknown said...

//விவசாயம் செய்து நொடித்து போனார்கள் என்பதை விட சண்டை , வழக்கு என செலவு செய்து நொடித்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டு. சண்டை இல்லாமல் இருந்தால் வசதியாக தானே இருந்து இருப்பார்கள்.//

கூட்டுகுடும்ப அமைப்பு நசித்து போனபின் சண்டை இல்லாமல் பாகப்பிரிவினை செய்வது சாத்தியமில்லை.கிராமங்களில் வாய்க்கால்-வரப்பு தகராறு பெரும் கலவரமாக மாறி கோர்ட்டில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கி நிற்பதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் வீழ்கிறார்கள் என்பதும் உண்மை

சண்டை இல்லாமல் இருக்கும் குடும்பங்களிலும் பெரிதாக நிலைமையில் முன்னேற்றம் இல்லை.ஏதாவது ஒரு வருடம் வானம் போய்த்துபோனால் அந்த வருடத்தில் அவர்கள் படும் கடன்சுமை பல வருட லாபத்தை எளிதில் கரைத்துவிடும் என்பதுதான் நிஜம்.

//இப்போது மகளீர் சுய உதவிகுழுக்கள் தோல்வியா, வங்க தேசத்தில் செயல்படும் கிராமீன் சிறுகடன் வழங்கும் திட்டம் தோல்வியா, அமுல் தோல்வியா , என சொல்லுங்கள்!//

வெற்றி அடையும் ஒவ்வொரு அமுலுக்கு பின்புறமும் தோல்வி அடைந்து திவாலான ஓராயிரம் கூட்டுறவு சங்கங்கள் உண்டு.

கூட்டுறவு சஙங்களில் நடக்கும் அரசியலும் ஊழலும் சொல்லி மாளாது.சமீபத்தில் கூட்டுறவு தேர்தல் ஒத்திபோடப்பட்டு அதில் நடந்த அரசியல் உங்களுக்கு தெரியுமல்லவா?அமுல் இன்னமும் குரியனின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நன்றாக ஓடுகிறது.குரியனின் காலத்துக்குபின் என்ன ஆகும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.கிராமின் வங்கிக்கும் அதே நிலைமைதான். சுயௌதவி குழுக்கள் ஏற்கனவே அரசியல்மயமாகி விட்டன.இனி வரும் காலங்களில் அவை என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாக உள்ளது.

வடுவூர் குமார் said...

தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கேன்,நான் ஏன் விவசாயம் பண்ணக்கூடாது என்று.கடந்த 5 வருடங்களாக அந்த எண்ணம் இருந்தாலும் அடி எடுத்துவைக்க தயக்கம்.்

வவ்வால் said...

செல்வன்,

அப்போ என்ன செய்யலாம் சொல்லுங்கள் எல்லாவற்றுக்கும் அரசியல் தான் காரணம் பாழ் படுத்துகிறார்கள் என சொல்லிவிட்டு தப்பிச்சுகலாமா?

எல்லாவற்றிலும் தோல்வி வரும், அதை குறைக்கதான் முயற்சி செய்கிறார்கள். தோல்வி அடைவதை மீண்டும் நகல் எடுக்க விரும்ப மாட்டார்கள். வெற்றி அடைந்த ஒன்றை தான் முன் மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும்.

//இனி வரும் காலங்களில் அவை என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாக உள்ளது.//

குரியனுக்கு அப்புறம் என்ன ஆகும் அமுல். பில் கேட்ஸ்க்கு அப்புறம் என்ன ஆகும் மைக்ரோ சப்ட், கலைஞருக்கு அப்புறம் என்ன ஆகும் தி.மு.க என எல்லாம் சொல்லிக்கொண்டே போனால் எதுவும் செய்ய முடியாது.

நிலவுக்கு ராக்கெட் விடலாம்னு திட்டம் போட்டா அன்னிக்கு அம்மாவாசை வந்த நிலா இருட்டில் எப்படி தெரியுனு ரொம்ப புதுமையா ஒரு காரணம் கண்டு பிடிப்பிங்க போல செல்வன் :-))

காட்டில் மரங்களை யார் நட்டார்கள் ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒரு லட்சம் விதைகள் மண்ணில் விழுந்தாலும் அதில் 10 மட்டுமே முளைக்கிறது , அப்படி இருந்தும் காடுகள் உருவாகவில்லையா. அது போல 1000 முயற்சிகள் செய்து அதில் 10 தேறினாலும் அதை வைத்தே முடிந்த வரைக்கும் வளம் காணலாம்.

வவ்வால் said...

குமார் ,

ஆஹா நீங்க தான் உண்மையான கதாநாயகன். இப்படி பத்து பேரு இறங்கி புதிய உத்திகளைக்கொண்டு விவசாயம் செய்தால் போதும். இந்தியா சுபிட்சம் அடைந்து விடும்.

ஆங்கில பிலாக்குகளில் பாருங்கள் நிறைய பேர் வெளி நாட்டில் இருந்து திரும்பி வந்து இயற்கை விவசாயம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக எழுதுகிறார்கள்.மைக்ரோசப்ட்டில் இருந்து வந்தவர் விவசாயம் செய்வதாக ஒரு பிலாக்கில் எழுதுதியுள்ளார்.

Anonymous said...

அமுல் ஆரம்பித்து, கிட்டத்தட்ட அறுபது வருடங்கள்
ஆகப் போகிறது. 33 வருடத்தை ஒரு

தலைமுறை என்று சொல்கிறார்கள். பல குடும்பங்கள் பலனடைந்திருக்கும். குரியனும்

ஒரு காலத்தில் இளைஞனாக இருந்தவர்தானே!
இன்று நம் கண் எதிரே ஒரு குரியன் தென்பட்டால்
நம்மாலான உதவிகள் செய்வோம்! விழிப்புணர்வால்
பல குரியன்கள் விரைவாக உருவாக வலையுலகத்தை
பயன்படுத்தலாம்.


விஜயகாந்த் போன்றவர்கள் இது போன்ற முயற்சியில்
ஈடுபட்டால், அம்மாவையும், அய்யாவையும்
ஒரங்கட்டிவிட்டு, முதலமைச்சர் ஆகி விடலாம்!

குமரன் (Kumaran) said...

கலக்குறீங்க அப்பு. செங்குத்து வளர்ச்சி, கிடைமட்ட வளர்ச்சி என்று பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லி.

பெப்சி உமா சொன்னதைப் பெரிதாக்கிப் பேசினாலும் அது சூடான இடுகையில் வந்தாலும் உங்களின் இது போன்ற இடுகைகளும் நிறைய பேரால் இப்போது படிக்கப்படுகிறதே பாருங்கள். ஒளித்து வைத்தாலும் எறும்புகள் இனிப்பைத் தேடி வந்துவிடாதா என்ன?

இது போன்ற விடயங்கள் பேசப்படவேண்டும்; பேசுவதற்கு உங்களைப் போன்றவர்கள் தயங்காமல் முன் வர வேண்டும். இது போன்ற ஜீவாதார விடயங்கள் தழைத்தோங்கினால் மற்றவை தானாக அடிவுற்றுப் போய்விடும்.

சதுக்க பூதம் said...

I am not telling that all the people should quit agriculture.Percentage of people depends on agri should be reduced.As you told,Mechanization is first step for development.If you introduce, transplanter and harvester, it will automatically reduce the need for labour.If they don't get job, they have to go to urban for other employment.

வவ்வால் said...

அனானி ,

நீங்க அவரே தான இல்லை வேர அனானியா?
//ஒரு காலத்தில் இளைஞனாக இருந்தவர்தானே!
இன்று நம் கண் எதிரே ஒரு குரியன் தென்பட்டால்
நம்மாலான உதவிகள் செய்வோம்! விழிப்புணர்வால்
பல குரியன்கள் விரைவாக உருவாக வலையுலகத்தை
பயன்படுத்தலாம்.//

இதாங்க எதிர்பார்த்தேன்! சரியா சொல்றிங்க!

//விஜயகாந்த் போன்றவர்கள் இது போன்ற முயற்சியில்
ஈடுபட்டால், அம்மாவையும், அய்யாவையும்
ஒரங்கட்டிவிட்டு, முதலமைச்சர் ஆகி விடலாம்!//
:-))))

வவ்வால் said...

வாங்க குமரன் ,
நன்றி!

அறிவியல் ,னிர்வாவியல் எல்லாம் எத்தனையோ வளர்ந்து இருக்கு அதை எல்லாம் விவசாயத்திலும் செயல் படுத்தலாமே அதான் கிடை, செங்குத்து வளர்ச்சிலாம் இதெல்லாம் வேளான்கல்லூரிகளிலும் படிக்கிறாங்க ஆனா செய்றது இல்லை போல!

//ஒளித்து வைத்தாலும் எறும்புகள் இனிப்பைத் தேடி வந்துவிடாதா என்ன?//

நீங்க எறும்பு போல உழைப்பாளி தான் குமரன்,( எத்தனை தலைப்புல வலைப்பதிவு போடுறிங்க சும்மாவா)
உங்களுக்கு சர்க்கரை அதிகம் இல்லையே ரத்ததில :-))

//இது போன்ற விடயங்கள் பேசப்படவேண்டும//

கண்டிப்பா பேசிடுவோம் , படிக்க உங்களை போன்றோர் இருந்தால்!

வவ்வால் said...

சதுக்க பூதம்,

நானும் அப்படி சொல்லவில்லை, விரயமாகும் மனித ஆற்றலை வேறு வகையில் பயன்படுத்த வேண்டும் ஆனால் அது கல் உடைப்பது , கட்டிட வேலை என கூலி வேலை, அல்ல , நல்ல தரமான வாழ்கைக்கு வழிகாட்டி விவசாயத்தில் இருக்கும் அதிகப்படியானவர்களை வெளியேற்றலாம். அப்படி செய்ய முடியவில்லை எனில் மேலும் விவசாயம் அதன் சார்ந்த தொழில்களையும் மேம்படுத்த வேண்டும்.

சதுக்க பூதம் said...

I agree that.But real problem is there in marketing.If the farmers initiates some AMUL kind of cooperatives for veg/grains etc from themselves, That will be the real revolution.Due to deep rooted caste system in the society and the involvement of political parties, it is not possible.Now Indian agriculture is loosing great opportunity to utilize the booming urban economic growth.I noticed lots of village educated youths tried to find some data entry jobs in urban with out success(Having a big dream to become software/call center professionals).If those youths organises the selling of farm veg to city directly, revolution is possible.
Few days back, i read one article in dinamalar.Now 90% of vegetables coming to koyembedu market is from ANDHRA AND KArnataka.Since most of the sellers are from andhra and kerala
Chennai is the big market and if tamil nadu farmers are not able to market their produce in chennai, how can they get benefit.
I heard from one of my friend who is working for NGO started by C.Subramaniam that it is very difficult to convine tamil nadu farmers about recent technologies.(I am telling about majorities.Lots of expections are there.Exceptions can not be taken as examples)
You wrote about agriculture collages.Reseach in agriculture is a great joke.Please don't expect more from them.I am going to write about it seperate article.

வவ்வால் said...

சதுக்க பூதம்,

உண்மை தான், நிறைய வாய்ப்பிருந்தும் பயபடுத்திக்கொள்வதில்லை.நம்ம்மவர்கள் ஒன்றை பிடித்தால் அதையே தொங்கிகொண்டு இருப்பார்கள். இன்னும் கிராமத்தில் சிலர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

நான் வேளாண்கல்லூரிகள் பற்றி சொன்னதை நன்றாக பாருங்கள் , படிக்கிறார்கள் ஆனால் செய்வதில்லை என சொல்லியிருக்கிறேன்.

உண்மையில் ஆராய்ச்சிகள் என்ற பெயரில் காகிதம் தான் வீணாக்குகிறார்கள்!

குமரன் (Kumaran) said...

//இது போன்ற ஜீவாதார விடயங்கள் தழைத்தோங்கினால் மற்றவை தானாக அடிவுற்றுப் போய்விடும்.
//

இது போன்ற ஜீவாதார விடயங்களைப் பேசுவது தழைத்தோங்கினால் மற்றவை தானாக அடிபட்டுப் போய்விடும் என்று சொல்ல வந்தேன். நடுவில் ஒரு சொல் விடுபட்டு தவறான பொருள் கொள்ளும் படி ஆகிவிட்டது. மன்னிக்கவும்.

வவ்வால் said...

குமரன்,
நன்றி,
பெரிதாக எதுவும் கருத்துபிழை ஏற்பட்டுவிடவில்லை.சொன்னதில் எந்த தவரும் ஏற்படவில்லை.நிங்கள் சொல்லவந்த பொருளையே தான் நானும் புரிந்துகொண்டு இருந்தேன்.பின்னர் ஏன் இந்த மன்னிப்பெல்லாம்! அடிக்கடி வாங்க!

மா சிவகுமார் said...

சதுக்க பூதம்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று படித்திருக்கிறோம் இல்லையா!

விவசாயம் முதன்மைத் தொழில். அதில் கிடைக்கும் உணர்வு பூர்வமான நிறைவு சம்பளத்துக்கு வேலை பார்ப்பதில் கிடைக்காது என்பதால்தான் நமது பொருளாதாரக் கணக்குகளைத் தாண்டி பல கோடி மக்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் உங்களைப் போலவே, அமெரிக்க முறையில் 2% மக்கள் எல்லோருக்கும் சோறு போட உழைத்தால் போதும் என்று நினைப்பதுண்டு. விவசாயம் செய்து வாழ்பவர்களுக்குத்தான் அதன் அருமையும் பெருமையும் தெரியும் என்று நினைக்கிறேன்.

அவர்கள் கௌரவத்துடன் வாழ்க்கை நடத்தும் படியான பொருளாதார அமைப்பை ஏற்படுத்திக் கொள்வது நமது தேவை. மேலை நாடுகளைப் போல இயந்திர மயமாக்கப்பட் விவசாயம் நமக்குத் தீர்வாக இருந்து விட முடியாது.

அன்புடன்,
மா சிவகுமார்

வவ்வால் said...

மா,சி,
நன்றி,
//அதில் கிடைக்கும் உணர்வு பூர்வமான நிறைவு சம்பளத்துக்கு வேலை பார்ப்பதில் கிடைக்காது என்பதால்தான் நமது பொருளாதாரக் கணக்குகளைத் தாண்டி பல கோடி மக்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.//

இதே கருத்தை தான் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றிப்போட்டு ஓகை அவர்களின் பதிவில் சொல்லி இருந்தேன், அதன் தொடர்ச்சியாக தான் இப்பதிவு.

சுருக்கமாகவும் தெளிவாகவும் அதை சொல்லிவீட்டிர்கள்.

இயந்திரமாக்கப்பட்ட விவசாயம் தீர்வாகாது , ஆனால் பெருகிவரும் தொழில்வளர்ச்சி காரணமாக அதிக சம்பளம் கிடைக்கும் வேறு வேலைக்கு இடம் பெயரும் தொழிலாளர்களை விவசாயத்தில் பிடித்தும் வைக்க முடியாது, கூடாது , அதன் காரணமாக ஏற்படும் மனித உழைப்பை ஈடு கட்ட சரியான அளவில் எந்திரங்களும் பயன் படுத்த வேண்டும், அதனை தவிர்க்க முடியாது.

உதாரணமாக புதுவையில் அதிக தொழிட்சாலைகள் வந்து விட்டதால் விவசாய பருவத்தில் ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் , இதனால் சில சமயம் நாற்று நடுதல் , அறுவடை எல்லாம் அப்படியே நின்று நஷ்டம் கூட ஏற்படும்.

அரசு அலுவலங்கள் முதல் அனைத்திலும் கணினி கொண்டு வேலைகள் செய்ய பழகி கொண்டோமோ, வேலையின் தரம் , வேகம் கூட்டப்பட்டதோ அது போல விவசாயத்திலும் எந்திரங்கள் கொண்டு இன்னும் மேம்படுத்தலாம்.

அதே சமத்தில் இன்னும் நாம் விவசாயத்தின் முழு சக்தியையும் பயன் படுத்தவில்லை. தற்போது உள்ளதை விட அதிக வருமானம் தரக்கூடிய ஒன்றாக மாற்றலாம்.

Poov said...

Nalla pathivu. Padikka santhosama irukkura athe nerathula itha sampantha pattavanga yosikkanume (vivasaigalum, Arasiyalvathigalum, antha antha idathuil irukkum arasu aluvalargalum) - Pathivukku Nandri.

Neenga yellam americala irunthuttu pesureengala illa vulloorla konja peravathu irukeengala?


Yeppadi ayya Tamilil adikireergal? yenakku tamil typewriting theriyum...

Anonymous said...

நல்ல பதிவு. படிக்க சந்தோசமா இருக்குர அதே நேரத்துல இத சம்பந்த பட்டவங்க யோசிக்கனுமே (விவசயிகளும், அரசியல்வதிகள்ம், அந்த அந்த இடத்துல இருக்கும் அரசு அலுவலர்கலும்) - பாதிவுக்கு நன்றி.

நீங்க எல்லாம் அமெரிக்கால்ல இருந்துட்டு பேசுரீங்கள இல்ல உள்ளூர்ல கொஞ்ச பேராவது இருகீங்களா?


எப்படி அய்யா தமிழில் அடிக்கீறீர்கள்? எனக்கு தமிழில் தட்டசு தெரியும்...

ஓகை said...

வவ்வால் ஐயா,

இந்தப் பதிவிற்கு மிக நன்றி. மிகுந்த வேலை பளுவினால் பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. உடனே கவனிக்காததற்கு வருந்துகிறேன். என் பதிவில் நான் என்ன சொன்னேன் என்பதைக் குறிப்பிட்டுவிட்டு பதிவை எழுதியிருக்கிறீர்கள். பலர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் என் பதிவின் சுட்டி கொடுத்திருந்தீர்களானால் நான் சொல்ல வருவதை நேரடியாகவே வாசகர்கள் புரிந்துகொண்டிருக்க ஏதுவாயிருக்கும். வலுவான வாதமாக வைக்கவேண்டுமென்பதற்காகவே அதை ஒரு சிறுகதை வடிவில் வைத்திருந்தேன். இது தொடர்பான பல செய்திகளையும் கோர்வையாக தொகுத்து மனதில் பதியும்படி செய்ய நான் முயன்றிருந்தேன். அன்பர்கள படித்துவிட்டுக் கருத்து சொல்லுமாறு கேட்டுக் கொள்ள்கிறேன்.

என் பதிவு:

கிருஷ்ணமூர்த்திக்கு ஜே

ஓகை said...

//ஓகை அவர்கள் ஒரு பதிவிட்டு அதில் தற்காலத்தில் கிராமத்தில் லாபமற்ற விவசாயம் செய்வதை விட நகரத்தில் சாலைப்போடுதல் , கட்டுமானம், கல் உடைத்தல், மூட்டை தூக்குதல் இன்ன பிற கூலி வேலை செய்வது நிறைவான வாழ்வை தரும் எனக்கூறியுள்ளார்.//

இந்த விஷயம் இவ்வளவு மேம்போக்கானது அல்ல.

என் கதையில் வரும் கதாநாயகன் ஒரு விவசாயத் தொழிலாளி. அவனுக்கு வாழ வழியற்ற நிலை வந்துவிட்டதாகக் கூட நான் சொல்லவில்லை. அவனும் சித்தாள் வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படவில்லை. தான விரும்பியே அதைச் செய்யச் செல்கிறான். எதிர்காலம் இருட்டாக இருக்கிறது என்பது இன்று விவசாயத்தில் ஓர் உணர்வாக இருக்கிறது என்பதையே நான் அழுந்தச் சொல்ல முயன்றிருக்கிறேன்.. வளர்ந்துவரும் மற்ற துறைகளில் வாய்ப்புகள் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் விவசாயத்தைச் சார்ந்திருப்பதில் வாய்ப்புகள் அருகி வருகின்றன என்பதை என் கதை மூலமாக கிட்டத்தட்ட ஓர் இயல்பு நிகழ்வாகச் சொல்லியிருக்கிறேன். வவ்வால் விவசாயத்தை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து பல யோசனைகள் சொல்லியிருக்கிறார். விவசாயத்தில் அருகிவரும் வளர்ச்சி வாய்ப்புகள், இன்றைய நிலையில் அது மிகச்சிறிய அளவில் செய்யப்படும்போது இலாபமில்லாமலிருக்கும் நிலை, போன்ற காரணங்களை உத்தேசித்து மிகவும் வரவேற்கப் படவேண்டியதும் ஊக்குவிக்கப் படுவதுமாகும். ஆனால் நாட்டின் நூறு கோடி மக்களுக்காக எழுபது கோடி மக்கள் உணவு தயாரிக்க வேண்டுமா என்பது என் அடிப்படை கேள்வி.

ஓகை said...

மேலும் வவ்வால் இந்தப் பதிவிலும் என் பதிவின் பின்னூட்டங்களிலும் சித்தாள் வேலை போன்ற வேலைகளை சற்று தாழ்வாகக் கருதுவதாகத் தோன்றுகிறது. உண்மை அப்படி இல்லை. எந்தத் தொழிலும் தாழந்தது இல்லை.

கூலி வேலைகளால் மட்டுமே எந்தத் தகுதியையும் முன்னனுபவத்தையும் கோராமல் ஒரு வாழ்வாதாரத்தை உடனடியாக ஒருவருக்கு அளிக்க முடியும். இந்த வகையில் இன்றைய நிலையின் கற்பகத் தரு என்றே இவ்வித வேலைகளைக் கூறலாம்.

வவ்வால் said...

ஓகை அவர்களுக்கு மிக்க நன்றி!

என் பதிவிலும் உங்கள் பதிவிற்கு சுட்டி தராமால் விட்டு விட்டேன் , மன்னிக்கவும், அங்கு படித்தவர்கள் தான் இதையும் படிப்பார்கள் என எண்ணிவிட்டேன், அதனால் தான் உங்கள் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டு சுட்டி தந்தேன்!இப்பொது இங்கும் ஒரு சுட்டி போட்டு விடுகிறேன்!

//எதிர்காலம் இருட்டாக இருக்கிறது என்பது இன்று விவசாயத்தில் ஓர் உணர்வாக இருக்கிறது என்பதையே நான் அழுந்தச் சொல்ல முயன்றிருக்கிறேன்.. வளர்ந்துவரும் மற்ற துறைகளில் வாய்ப்புகள் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் விவசாயத்தைச் சார்ந்திருப்பதில் வாய்ப்புகள் அருகி வருகின்றன//

//சித்தாள் வேலை போன்ற வேலைகளை சற்று தாழ்வாகக் கருதுவதாகத் தோன்றுகிறது. உண்மை அப்படி இல்லை. எந்தத் தொழிலும் தாழந்தது இல்லை.//

எப்படி விவசாயத்தில் இருட்டாக இருக்கிரது என்று சொல்கிறீர்களோ அப்படிதான் , தினக்கூலி வேலைகளும் இருக்கின்றன.

அதே போல சித்தாள் வேலைகளை தாழ்வாக சொல்லவில்லை, அதன் நிச்சமற்ற தன்மையை தான் சுட்டிக்காட்டியுள்ளேன். விவசாய வேலையை விட்டு செல்பவர்கள் அதை விட மேம்பட்ட வேலைக்கு செல்ல வேண்டும் அதை விட நிச்சயமற்ற , மிக கடினமான , அவர்கள் வாழ்கைகையை , சுயமரியாதையை பாதிக்கும் வேலைக்கு போவது தான் தீர்வென்று சொல்வதை தான் நான் கேள்விக்குட்படுத்தினேன்.

100 கோடி பேர் உணவுக்கு 70 கோடி பேர் வேலை செய்ய வேண்டாம் அதே சமயத்தில் அதிகமாக இருக்கும் மனித ஆற்றலை தின கூலி ஆக்க வேண்டாம் , வேறு வகையில் விவசாயம் சார்ந்த்தோ(விவசாயம் தான் தெரிந்த தொழில்) அல்லது நிரந்தர வருமானம் வரும் தொழில் ஏதோ ஒன்றில் ஈடுபடுத்த வேண்டும் என்று தான் சொல்லியுள்ளேன்.

சித்தாள் வேலைக்கு சென்ற ஒருவர் சொந்த காரில் ஊருக்கு வருகிறார் என்று சொல்வது , எப்படி யதார்த்தம் ஆகாது என்பதை தான் சொல்லியுள்ளேன்!

மேலும் இப்பதிவை இன்னும் முடிக்கவில்லை தொடரும் தான் போட்டுள்ளேன், மேலும் தகவல்கள் இருக்கிறது. உங்கள் பதிலுக்காக தான் காத்திருந்தேன்!
விரைவில் விவசாயி/ தொழிலாளர்கள் நகருக்கு இடம் பெயர்வதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறேன்!

வவ்வால் said...

அனானி ,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, நான் இருப்பது இந்தியாதான் , மற்றவர்கள் எங்கு இருந்து சொன்னா என்ன நல்லதை சொல்லலாம் , வெறும் குறைமட்டும் சொல்லாமல் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் சொல்லலாம்.

தமிழ் எப்படி தட்டச்சு செய்வது என்று அதற்குள் தெரிந்து கொண்டீர்கள் போல !

சாலிசம்பர் said...

வவ்வால்,நீங்கள் தெகா அவர்களின் பதிவிற்கும் இணைப்பு கொடுக்க வேண்டும்.

ஓகை அவர்களின் பதிவிற்கு இணைப்பு இல்லாததை நேற்றே சுட்டிக்காட்ட நினைத்திருந்தேன்.ஓகை அவர்களே அதைச் செய்து விட்டார்.

சரி,பேசுபொருளிற்கு வருகிறேன்.சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத எந்த உயிரியும் அழிந்து விடும் என்பது இயல்பானது.
நகரமயமாக்கல்,இயந்திரமயமாக்கல்,தொழில்மயமாக்கல்,உலகமயமாக்கல் என்று மாற்றங்கள் வெகுவேகமாக நடைபெறுகின்றது.அந்த
மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாதவன் அழிவை நோக்கி சென்று விடுவான்.

தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களில் ஆறில் ஒரு பங்கு மக்களுக்கு சென்னை வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.இது தான்
எதார்த்தமான உண்மை.ஆனால் விவசாயத்தை வளப்படுத்த வேண்டும்,விவசாயிகள் கவுரவமாக வாழவேண்டும் என்பதையே வலுவான
ஒரு வாதமாக வைக்க முடியாது.காட்டுக்குள் வாழும் ஆதிவாசிகள் கூடத்தான் தாங்கள் வாழும் முறைகளையே பெரிதாக எண்ணி ,
மகிழ்ச்சியாக,கவுரவமாக வாழ்கிறார்கள்.வேறு வழி தெரியாததால் தங்களுக்குத் தெரிந்ததையே உலகம் என்று எண்ணி வாழ்கிறார்கள்.
அவர்களது வாழ்க்கைத்தரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.

ஓகை அவர்கள் சொன்ன மறுக்க முடியாத கருத்து,70%மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கக்கூடாது என்பது.அதிகபட்சம் 30%மக்கள்
விவசாயத்தில் ஈடுபடலாம்.மற்றவர்களுக்கு தேவையான வேலை,தொழில் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.அதை
அசுர வேகத்தில் செய்ய வேண்டும்.

வவ்வால்,ஒரு ஏழை விவசாயியை விட நகரத்தில் வாழும் சித்தாள் நன்றாக வாழ்வதாக தான் உணரவில்லை என்கிறார்.அது தவறு.
வறுமை காரணமாக எந்த சித்தாளும் தற்கொலை செய்துகொள்ளவில்லை.இவர்களைப் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு
அரசு இப்போது நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறது.

உயிர்வாழ்தலை நீடித்துக் கொள்ள ஒரு மனிதனுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியம் இல்லை.அது அவனது உள்ளுணர்விலேயே
இருக்கும்.ஆனாலும் வீண் கர்வத்தாலோ,அல்லது அடிமுட்டாள் தனத்தினாலோ அழிவைத் தேடிச்செல்லும் ஒரு மனிதனுக்கு ஓகை
அவர்களது கதையின் கருத்து நிச்சயம் பயன்படும் என்பதே எனது கருத்து.

வவ்வால் said...

வாங்க ஜாலி ஜம்பர்,
நன்றி!
//ஓகை அவர்கள் சொன்ன மறுக்க முடியாத கருத்து,70%மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கக்கூடாது என்பது.அதிகபட்சம் 30%மக்கள்
விவசாயத்தில் ஈடுபடலாம்.மற்றவர்களுக்கு தேவையான வேலை,தொழில் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.அதை
அசுர வேகத்தில் செய்ய வேண்டும்.//

நான் சொல்லிக்கொண்டு இருப்பதை தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்.

மாற்று ஏற்பாடு,விவசாயம் கெடாத வகையில் அதற்கு தேவையான எந்திரங்களும் பயன்பாட்டிற்கு வரவேண்டும்.

//அது தவறு.
வறுமை காரணமாக எந்த சித்தாளும் தற்கொலை செய்துகொள்ளவில்லை.இவர்களைப் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு
அரசு இப்போது நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறது.//

நகரத்தில் பணம் சிறிதளவு கிடைக்கும் அதற்கு விலையாக அவனது வாழ்க்கையை தொலைக்க வேண்டும்.

மேலும் விவசாயம் ,அதன் உப தொழில்கள் இவை பெருகினால் உபரி தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு என்ன செய்கிறது , எப்படி மக்கள் நலப்பணிக்கு என நிதி ஒதுக்கி யாரும் பயன் அடையவதில்லையோ அப்படி தான் அரசின் அந்த திட்டமும் இருக்கிறது. அரசு புள்ளிவிவரத்தை நம்புபவரா நீங்கள்.

//உயிர்வாழ்தலை நீடித்துக் கொள்ள ஒரு மனிதனுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியம் இல்லை.//

உயிர்வாழ்தலை நீட்டிக்க தான் நான் சில வழிகளை விவசாயம் சார்ந்து இப்பதிவில் சொல்லியுள்ளேன்! this is called sustainable agriculture!

மேலும் இப்படி இடம் பெயர்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு பதிவும் போட்டு இருக்கிறேன் அதையும் பாருங்கள்.