Monday, August 27, 2007

காணாமல் போகும் நாட்டுக்காளைகள் - தொடர்ச்சி புகைப்படங்கள்

யோகன் அவர்கள் நாட்டுக்காளைகள் படங்கள் கிடைத்தால் போட சொல்லிக்கேட்டார் , இணையத்தில் தேடியதில் பெரும்பாலான காளைகள் மாட்டியது சில காளைகள் மட்டும் கண்ணில் சிக்கவில்லை , கிடைத்தவரை போட்டுள்ளேன் படத்தை பார்த்துவிட்டு யாரும் ம்மா.... ம்மா என்றெல்லாம் கத்தக்கூடாது!

11 comments:

வடுவூர் குமார் said...

சரி கத்தலை.
:-)

வவ்வால் said...

குமார்,
நன்றி ,
கத்தாம படிச்சதற்கு, ம்மா னு கத்தினா அப்புறம் வீட்டில் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு தான் வைப்பாங்க சாப்பாட்டுக்கு :-))

வடுவூர் குமார் said...

பின்னூட்டம் அல்ல.
உங்க பக்கத்துக்கு என் பதிவில் ஒரு தொடுப்பு உங்களை கேட்காமலே கொடுத்திட்டேன்.
ஆட்சேபனை என்றால் சொல்லவும்.

வடுவூர் குமார் said...

சாமி,இப்படியா திறந்து வைப்பது.
ரகசியமா கூட போட முடியவில்லை.
:-))

வவ்வால் said...

வாங்க குமார்,
நன்றி!

நம்ம கிட்டே கருத்து தணிக்கை எல்லாம் எதுவும் கிடையாது, மற்றவர்கள் தவறாக இருக்கிறது எடுக்க சொன்னால் மட்டும் தான் எடுப்பேன் , மற்றபடி என்னை திட்டினால் கூட வரட்டும் என தான் திறந்தவெளியாக வைத்துள்ளேன்.

இணைப்பு தந்ததுக்கு எல்லாம் என் கிட்டே வேறு கேட்கணுமா, அதுக்கு நான் தான் நன்றி சொல்லனும். இந்த பக்கம் எல்லாம் கூட்டம் வராது, செம மொக்கைனு ஓடிருவாங்க ஏதோ உங்கள் இணைப்பின் மூலம் நாளு பேர் வந்தா நல்லது தானே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
மிக்க நன்றி!
அப்பப்பா; நம்ம மாடுகள் தான் என்ன கம்பீரம்... இங்க மாடுகளுக்கு கொம்பிராது மொட்டையாக இருக்கும்; அத்துடன் ஸ்பெயின் சண்டையினமே கொம்புடன் ஆனாலும் இப்படி அழகான கொம்புகள் இல்லை. இதில் காங்கேயன்;அண்ணாமலை இல்லைத் தானே....
இதில் சில இனம் போல் ஆபிரிக்காவிலும் உண்டு.சில பிறேசில் இறக்குமதி செய்து இனப் பெருக்கம் செய்துள்ளது;
அந்த நாட்டு விபரணப் படத்தில் கூறினார்கள்.

வவ்வால் said...

வாங்க யோகன் ,
நன்றி!
காங்கேயன் காளையை தான் அந்த பதிவில் முகப்பிலேயே போட்டு விட்டேனே. அந்த பதிவிலேயே , பிரேசில், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் நாட்டுக்காளைகளை இறக்குமதி செய்து அவர்கள் மாடுகளை நோய் எதிர்ப்பு, வறட்சி ,வெப்பம் தாங்கும் தன்மை உடையதாய் மாற்றினார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருந்தேனே!

அதனால் தான் நம் காளைகளை மரபியல் கூறு வழங்கிகள்(gene banks) அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா போன்றவையே பரிந்துரை செய்துள்ளது

Anonymous said...

சார்!! பட்டுக்கோட்டையார் சொன்ன" மணப்பாறை மாடு" எது?


என் இதயத்தயே தொட்டுட்டுது. பசுக்கள் பார்த்தா என்னவாகும்?

புள்ளிராஜா

ராஜ நடராஜன் said...

மாடு ஓட்டுவதற்கு சோம்பல் பட்ட அந்த நாள் ஞாபகம்.பொருளாதார தேடல் என்ற ஒன்று பாரம்பரியங்களின் அழகுகளை சிதைக்கின்றன.

வவ்வால் said...

வாங்க புள்ளி ராஜா,

மணப்பாறை மாடு படம் இதில் இல்லை, ஆனால் அவற்றின் சிறப்பு அதன் கொம்புகள் தான், கிட்டதட்ட மேல் வளைந்த ஆங்கில யு வடிவில் இருக்கும் , அனைத்து மாடுகளுக்கும் அப்படியே ஒரே சீராக இருக்கும் கொம்பு!

அவை அழியும் இனத்தில் இல்லை. நல்ல ஆரோக்கியமாக சந்தததி வளர்க்கின்றன என நினைக்கிறேன்.

வவ்வால் said...

நட்டு,
நன்றி.
//பொருளாதார தேடல் என்ற ஒன்று பாரம்பரியங்களின் அழகுகளை சிதைக்கின்றன.//

இது தான் இப்பதிவின் கருத்தும் , அதனை அழகாக சொல்லிவிட்டீர்கள்.
நான் பக்கம் பக்கமாக சொல்வதை சுருக்கமாகவும் ,எளிமையாகவும் சொல்லிவிட்டீர்கள்.(பேசாம நான் ஒரு பதிவு எழுதி அதனை உங்க கிட்டே கொடுத்து சுருக்கி எழுதி தர சொல்லலாம் போல இருக்கு)