Saturday, December 22, 2007

வசூல்ராஜாக்களின் கிராமப்புறக்கணிப்பு-3

மருத்துவ மாணவர்களின் கல்வி செலவுக்கென dme வழியாக அரசு ஒதுக்கும் பணம் 712.20 கோடி,(மக்கள் சுகாதாரப்பட்ஜெட் தனியா உள்ளது) எனில் அதில் மாணவர்களுக்கு செலவு ஆவது வெகு குறைவு என்கிறார்கள்.ஆனால் அப்படி அல்ல என்பதை கொஞ்சம் அலசினால் தெரியும்.

மாணவர்களுக்கு கையில் எந்த நிதியியும் போய் சேராது , அவர்களுக்கு தரப்படும் கல்வி உதவித்தொகை தவிர. மற்ற செலவுகள் எல்லாம் மறைமுக செலவுகள்.

உதாரணமாக ...

மருத்து விரிவுரையாளர்கள்,
கல்லூரி பணியாளர்கள்,
ஆய்வுக்கருவிகள்,
ஆய்வக செலவுகள்,
நூலகம்,
கான்பெரன்ஸ் ஹால்,
வகுப்பரை,
விடுதி,
சமையல் கூடம்,
நூலகம்,
தொலைப்பேசி, அலுவலக ஸ்டேனரி , நிர்வாக செலவுகள்,
குடிநீர்,
மின்சாரம்,
இன்ன பிற என்று 1000 செலவீனங்கள் உண்டு.

ஒரு சின்ன உதாரணம்,

சென்னை மருத்துவக்கல்லூரியில் உள்ள மொத்த mbbs இடங்கள் 165 மட்டுமே.
ஆனால் தற்போது அங்குள்ள விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 510. ஆகும் இதிலும் இன்னும் பல இடங்களில் ஆசிரியர்கள் அங்கே நியமிக்கப்படவே இல்லை,அவர்களும் நியமிக்கப்பட்டால் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்தச்சுட்டியில் சென்னை மருத்துவக்கல்லூரியில் வேலை செய்யும் விரிவுரையாளர்களின் பட்டியல் உள்ளது.

http://www.tnhealth.org/dmedoctorslist/dmelistprocess.asp

ஒரு விரிவுரையாளர் தோராயமாக சராசரியாக குறைந்த பட்சம் 20,000 சம்பளம்(15000- இல் இருந்து 35000 வரைக்கும் சம்பளம் இருக்கு) வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டாலும் ,
510x20,000= 10,200,000

ஒரு மாதத்திற்கு மட்டும் teaching staff சம்பளம் மட்டுமே ஒரு கோடியே இரண்டு லட்சம்! இதை மட்டும் ஒரு மாணவனுக்கு கற்பிக்க ஆகும் செலவு என்று கணக்கிட்டால் 61,818 ரூபாய் வருகிறது. ஒரு வருடத்திற்கு 7,41,818(ஏழு லட்சத்து சொச்சம்) இது வெறும் கற்பித்தலுக்கான செலவு மட்டுமே!

மற்ற மாதாந்திர செலவுகள் எவ்வளவு வரும்? எல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்தால் மொத்த தொகை எங்கோ போய்விடும்.இது சென்னை மருத்துவக்கல்லூரியை மட்டும் வைத்து சொல்வது.மக்களே கொஞ்சம் சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கினால் தோராயமாக என்ன செலவு ஆகிறது என்பதை சுயமாக கண்டுப்பிடித்து விடலாம். கூகிள் போதுமே உதவிக்கு.

இப்போ சொல்லுங்க மக்களே மருத்துவ மாணவர்களுக்கான அரசின் செலவு அற்பமா? அவை எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே!

22 comments:

மாயன் said...

வவ்வால்... இன்றைக்கு தான் ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவை நேரடியாக பார்க்கிறென்.. கூகிள் ரீடரில் பதிவுகள் கூட படித்து விடலாம்.. ஆனால் மறுமொழிகள் படிப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது சாமி....

ப்ருனோ விடாகண்டர் என்றால் நீங்கள் கொடாக்கண்டர்... இப்போதெல்லாம் விழுப்புரம் என்று பஸ்ஸில் போர்டு எழுதியிருப்பதை பார்த்தால் கூட அலர்ஜியாக இருக்கிறது

மாயன் said...

பதிவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

வவ்வால் said...

வாங்க மாயன்,
நன்றி!

நீண்ட நாட்களுக்கு பின்னர் வர்ரிங்க!

எந்தவிதமான தரவுகள் இல்லாமலே வாய்ப்பந்தல் போடும் ஒருவரே அசரமால் புழுகுகிறார் என்பதால் விட முடியுமா?

அசந்தா அடிக்கிறது சிலர் பாலிசி,அசராம அடிக்கிறது வவ்வால் பாலிசி ஆச்சே! :-))

இது எதுவரைப்போகுதோ அதுவரைக்கும் போய் பார்த்திடுவேன்ல!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பருக்கு,

செல்லாவின் பதிவில் நான் சொல்லியிருந்தபடி, 10 லட்சமா அல்லது கூடவா அல்லது குறைவாகவா என்பது பிரச்சனையைத் திசை திருப்பிவிடும்.

165 மாணவர்களுக்கு 510 விரிவுரையாளர்களா என்பது போன்ற லாஜிக்கலான கேள்விகளுக்குப் போக விருப்பமில்லை (பிறகு இதைச் சுற்றியே விவாதம் நடக்கும்).

உங்களுடைய முதல் பதிவையும் படித்துவிட்டு, என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

வவ்வால் said...

ஜியோவ்ராம் சுந்தர்,
நன்றி,

நான் சொல்வது என்னவெனில், பல அரசு துறைகளிலும் காலி இடங்கள், இருக்கு, ஆசிரியப்பணியிலும் காலி இடங்கள் இருக்கு அரசின் நிதி நிலைக்கு ஏற்ப இத்தனை பேரைத்தான் பணி நியமனம் செய்ய இயலும். ஆனால் செய்ய இயலாத கட்டத்தில் , மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் சாகட்டும் என்று இருக்க முடியாது. எனவே ஒரு மாற்று ஏற்பாடாக இவற்றை செய்கிறார்கள் என்பதே.

ஊதியம் என்று எதுவும் கொடுக்காமல் செய்ய சொல்லவில்லை. அல்லது அதிக ஊதியம் தரவேண்டும் என்று கேட்கலாம், அல்லது பணி நிரந்தரம் கூட கேட்கலாம், அவை எல்லாம் கொடுக்க அரசுக்கு நிதி இருந்தால் செய்யாதா? ஆனால் மருத்துவ மாணவர்கள் சொல்வது என்னவென்றால், கல்யாணம் செய்துக்கொள்ள முடியாது, மேற்படிப்பு படிக்க இயலாது, கிராமத்தில் வசதிகள் இல்லை என்பது போன்றவை.

மேலும் முதலில் அரசின் திட்டத்தினை ஏற்றுக்கொண்டு, பின்னர் கேட்டால் என்ன?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பருக்கு,

முதல் பதிவில் நிறைய பின்னூட்டங்கள் இருப்பதால், இங்கேயே எழுதுகிறேனே :

சில முக்கியப் புள்ளிகளுக்குச் சுருக்கமாக விளக்கம் கொடுக்க முடியுமா.?

1. Dr Bruno தொட்டிருந்த permanent job Vs contract labour
2. Doctor Vs Student
3. Out of 1 year, only 4 months is going to be in villages. How this is going to help villages.?

அரசு பணம் செலவழிக்கிறது என்றால், செலவழித்துத் தானே ஆகவேண்டும். அதற்கென்ன செய்ய.? இங்கிருக்கும் பிரச்சனைக்கு ரஷ்யாவை compare செய்யலாமா.? (பிறகு யாராவது cubaவைச் சொல்வார்கள்).

வேளாண் கல்வியை நீங்கள் refer செய்திருப்பதால் கேட்கிறேன் : மற்ற படிப்புகளுக்கும் அரசு செலவு செய்கிறது; அவர்களுக்கும் இது மாதிரி ஏதாவது கட்டாயமிருக்கிறதா.?

உங்கள் பதில்களைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் தொடர்கிறேன். உங்களுக்குச் சலிப்பயிருந்தாலும் சொல்லுங்கள், நிறுத்திக் கொள்வோம்.

வவ்வால் said...

ஜி.ராம்,
நன்றி,

உங்களுடன் உரையாடுவதில் எனக்கு சலிப்பெதுவும் ஏற்படாது , உங்களுக்கு நிகழலாம் :-))

நீங்கள் கேட்டவற்றை ஒவ்வொன்றாக சொல்கிறேன்.

அனைத்து தரப்பிற்கும் தேவை இருக்கிறது , ஆனால் அவற்றை பூர்த்தி செய்ய அரசிடம் பணம் இல்லை.அரசியல்வாதிகள் ஊழல் இல்லாமல் இருந்தால் பணம் இருக்கும் என்பது அதீதமான எதிர்ப்பார்ப்பு!

எனவே இருக்கும் நிதி ஆதாரத்தில் மக்களுக்கு எப்படி சில நன்மைகள் செய்யலாம் என்று அரசும் அவ்வப்போது திட்டம் போடுகிறது.

//permanent job Vs contract labour//

கண்டிப்பாக நிரந்தர வேலை தரவேண்டும் தான், நிதி எங்கே இருக்கிறது, நிதி நிலை சரியானதும் அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்கலாம் அதுவரைக்கும் மக்கள் நோயால் மடிய வேண்டுமா?

சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தையும் அதனால் தான் உதாரணம் காட்டி இருந்தேன். நாட்டில் எத்தனையோ ஓராசிரியர் பள்ளி இருக்கு என்பதையும் சொல்லி இருந்தேன்.முழு ஊதியத்தில் பணிக்கொடுக்க இயலாத நிலையில் அப்படி அரசு செய்கிறது.

நான் பிரச்சினையை மக்களின் பிரச்சினையாக பார்க்கிறேன், ஆனால் அவரோ மருத்துவர்களின் பிரச்சினையாக பார்க்கிறார்.

நான் மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.மருத்துவர்களுக்கு கையில் கிடைப்பதே போதும், அதுவும் ஓர் ஆண்டு தானே என்கிறேன்.

//2. Doctor Vs Student//

காரணம் மருத்துவர்களாக கிராமத்தில் நியமித்தால் அங்கே பணிக்கே போகாமல் அருகே இருக்கும் ஒரு சிறிய நகரத்தில் மருத்துவமனை ஆரம்பித்து சுய லாபம் தேடப்போய்விடுகிறார்களே.

இன்றும் பணி நியமனம் செய்யப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு திடீர் என்றுப் போய் பார்த்தால் பூட்டித்தான் கிடக்கும். அறிவித்துவிட்டு போனால் திறந்து இருக்கும் :-))

மாணவராக இருப்பவரை நியமித்தால் தனியே தொழில் செய்ய முடியாது அல்லவா?

மாணவராக இருக்கிறார், அவருக்கு ஒன்றும் தெரியாது என்றால், ஓர் ஆண்டு உள்ளுறை மருத்துவராக பணி செய்துவிட்டு தானே கிராமம் போகிறார். இதற்கு முன்னர் அந்த 1 ஆண்டு பயிற்சி முடித்ததும் டாக்டர்கள் என்று மருத்துவம் செய்ய போகவில்லையா?

//3. Out of 1 year, only 4 months is going to be in villages. How this is going to help villages.?//

இது ஒன்று மட்டுமே கேட்கப்பட வேண்டியக்கேள்வி, பேசாமல் மாணவர்கள் எங்களை 1 ஆண்டு முழுவதும் கிராமத்தில் இருக்குமாறு செய்ய வேண்டும் என்ற போராடினால் என்ன? அப்படி செய்யலையே?

அரசே 1 ஆண்டு முழுவதும் கிராமத்தில் போடும் திட்டத்தில் இருந்ததாகவும், பின்னர் சிலரின் பரிந்துரையால் குறைத்தது அறிவித்தது என்றும் படித்தேன்.

ரஷ்யாவை உதாரணம் காட்ட , கல்வி காலம் அதிகரித்தால் வாழ்க்கை பாதிக்கும் எனில் ஆண்டுக்கு 12000 பேர் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு போவதேன், அவர்கள் வாழ்க்கை பாதிக்கவில்லையா என்று கேட்கத்தான்.

ஏன் எனில் இந்தியாவில் ஆண்டுக்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் 30,000 பேர் தான்.ஒரு கணிசமான அளவுக்கு ரஷ்யாவில் தெரிந்தே போய் படிக்கிறார்கள் எனில் அந்த ஓராண்டு கால தாமதம் ஒன்றும் பெரிதாக பாதிக்காது என்று தானே அர்த்தம்!

வேளாண்மை தவிர கால்நடை மருத்துவத்திலும் இருக்கிறது என்று நினைக்கிறேன், ஆனால் அங்கேயே தங்கி இருக்கனுமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து வேறு எந்த படிப்பிலும் கிராம தங்கல் திட்டம் இல்லை என நினைக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பருக்கு,

/கண்டிப்பாக நிரந்தர வேலை தரவேண்டும் தான், நிதி எங்கே இருக்கிறது, நிதி நிலை சரியானதும் அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்கலாம் அதுவரைக்கும் மக்கள் நோயால் மடிய வேண்டுமா? /

இதற்கான பொறுப்பு அரசைத் தானே சாரும். (ராணுவத்திற்குச் செலவு செய்யும் ஆயிரக்கணக்கான கோடிகளைப் பற்றி நான் பேசப்போவதில்லை).

நீங்கள் சர்வ சிக்ஷா அபியான், ஓராசிரியை பள்ளிகளைப் பற்றிச் சொல்வதால் கேட்கிறேன். iit / iim போன்ற படிப்பு படித்தவர்களுக்குக் கட்டாய கிராம சேவை கிடையாது - ஆனால் மருத்துவப் படிப்பு படிப்பவர்களுக்கு மட்டும் ஏன் என அவர்களுக்குத் தோன்றலாம் இல்லையா.

அவர்கள் கிராமத்திற்கு போக மாட்டோம் என்று சொல்லவில்லை; நிரந்தர வேலை மற்றும் சரியான ஊதியம் (அதிகப் படியான ஊதியம் இல்லை) கேட்கிறார்கள். கிராமப்புற மக்கம் நலனின் அரசுக்கு அக்கறை இருக்குமானால் இவர்களது கோரிக்கையை ஏற்பதில் என்ன தவறு. (நிதி ஆதாரம் பற்றி அரசுதான் கவலைப் பட வேண்டும்).

வவ்வால் said...

ஜி.ராம்
நன்றி!

//iit / iim போன்ற படிப்பு படித்தவர்களுக்குக் கட்டாய கிராம சேவை கிடையாது - ஆனால் மருத்துவப் படிப்பு படிப்பவர்களுக்கு மட்டும் ஏன் என அவர்களுக்குத் தோன்றலாம் இல்லையா.//

சர்வ சிஷ்யா அபியான் போன்றவற்றில் சம்பளம் குறைவென்றாலும் வேலை செய்கிறார்கள், வேளாண்மாணவர்களும் கிராமம் போகிறார்கள் என்று உதாரணம் கொடுத்ததே மருத்துவ மாணவர்கள் மட்டும் புதிதாக இப்படி நிர்பந்திக்கப்படவில்லை என்று சொல்ல தான் அப்படி இருக்க , iit,iim அப்படி இல்லையே என்றால் எப்படி, இருக்கும் உதாரணங்கள் காட்டினேன் அல்லவா, அதைப்போல இருக்கலாமே.

1000 கெட்டவர்கள் இருக்கலாம், அதை உதாரணம் எடுப்பார்களா, இல்லை சராசரிகளை உதாரணம் எடுப்பார்களா, ஆனால் இருப்பதில் நல்லவர்களை தானே முன்மாதிரி உதாரணம் எடுப்பார்கள்.

நிதி ஆதாரம் பற்றி அரசு தான் கவலைப்படனும், அரசு நிதி வரும் வரை மருத்துவர்கள் இல்லை கிராமத்தில் என கண்டுக்காமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா?

இருப்பதைக்கொண்டு சீராக நிர்வகிக்கப்பார்ப்பது தவறா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பருக்கு,

மூன்று புள்ளிகள் :

1. permanent job vs contract labour. இதற்கு அரசிடம் நிதி வசதி இல்லை என்கிறீர்கள்.

2. Doctor Vs Student. இதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் ஏற்றுக் கொள்வது போலவே உள்ளது.

3. only 4 months in villages. இதற்கு சரியான பதில் இல்லை.

கிராம மக்களின் நலன் பாதுகாப்பது மாணவர்களின் பிரச்சனையா அல்லது அரசின் பொறுப்பா.? பிறகு நிதி வசதியில்லை என்பது அரசாங்கத்தின் பிரச்சனை (மறுபடியும் சொல்கிறேன் நான் ராணுவச் செலவுகளைப் பற்றிப் பேசப் போவதில்லை).

/ஆனால் இருப்பதில் நல்லவர்களை தானே முன்மாதிரி உதாரணம் எடுப்பார்கள்/ இப்படியெல்லாம் idealise பண்ண வேண்டாமே. கிராமத்திற்குப் போகும் மாணவன் ideal student (அதன் நீட்சியாக ideal citizen). இந்த ideal student அல்லது ideal citizen என்பது பிறதை (other) நிராகரிக்கும் தன்மையுடையது.

விசாரித்துப் பார்த்தால் அவர்களும் வேறு வழியில்லாததால் / வேறு வேலை கிடைக்காததால் ஒப்புக் கொண்டிருப்பார்கள் (சர்வ சிக்ஷ்யா அபியான்).

இதையே புரட்டிப் போட்டு இன்னொருவர் சர்வ சிக்ஷயா அபியான், வேளாண் இரண்டும் விதிவிலக்குகள், பொது விதியாக முடியாது என விவாதிக்க முடியும்தானே...

வவ்வால் said...

ஜி.ராம்,

எல்லாரையும் ஐடியாலஜிப்படி பார்க்க முடியாது, ஆனால் மக்களுக்கு தேவை கதாநாயகர்கள், வில்லன்கள், அல்ல, மருத்துவர்கள் கதாநாயகர்கள் போல மக்களை ரட்சிக்கவில்லை என்றாலும், இம்சிக்காமல் இருக்கலாமே!

வேற வழி இல்லாமல் ஒத்துக்கொண்டார்கள் என்றால் காரணம் என்ன, அந்தப்படிப்புகள் அதிக ம் இருக்கு, மருத்துவ இடங்கள் குறைவா இருக்கு, கொஞ்ச காலம் முன்னர் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு அரசு அனுமதி அளிக்கும்னு ஒருப்பேச்சு வந்த போது , மருத்துவ மாணவர்கள், போராடினார்கள், அப்படி அதிக கல்லூரிகள் வந்தால் மதிப்பில்லாமல் போய்டும்னு, மக்களுக்கு பயன்படாத ஒன்றுக்கு மதிப்பிருந்தா என்ன இல்லாட்டி என்ன, அரசும் தனியார்களும் அதிக மருத்துவக்கல்லூரிகள் திறந்து அதிக மருத்துவர்களை உருவாக்கினா தெரியும்.

நகரத்தில் டீக்கடை திறப்பது போல மூலைக்கு ஒன்று என 24 மணி நேர சிறிய மருத்துவமனை திறந்து, கேவலப்படுகிறார்கள் மருத்துவர்கள்.அதுக்கு கிராமத்துக்கு போனா மக்கள் கை எடுத்துக்கும்பிடுவார்களே!

4 மாதத்திற்கு பதில் ஒரு வருடம் ஆக்க சொல்லி மாணவர்களைப்போராட சொல்லுங்களேன்! நீங்க நல்லா இருப்பிங்க! புண்ணியமா போகும்!

வவ்வால் said...

//கிராம மக்களின் நலன் பாதுகாப்பது மாணவர்களின் பிரச்சனையா அல்லது அரசின் பொறுப்பா.? //

ஜி,ராம்,

சட்டத்தினை காப்பது காவல்துறையின் கடமையா , மக்களின் பொறுப்பா?

காவல் துறை இருந்தாலும் சட்டத்தினை மக்கள் மதிப்பதால் தானே குற்றம் குறைவாக இருக்கு, மதிப்பதே காப்பது தானே. இல்லை எனில் அனைவரும் குற்றவாளிகள் ஆகிவிடுவார்கள்.

அதே போல அரசின் கடமை எனினும், அரசின் ஒரு அங்கம் மக்கள் , மக்களின் ஒரு அங்கம் மருத்துவ மாணவர்கள், அவர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது.

கிராமப்புறமப் பக்கம் உறவினரைப்பார்க்க போகும் போது நோய்வாய்ப்படும் ஒரு மருத்துவ மாணவனுக்கு மருத்துவம் கிடைக்கவில்லை எனில் அப்போது தெரியும், கிராமப்புற மக்கள் எப்படி அவதிப்படுகிறார்கள் என.

முன்னர், ஒரு சிவாஜி, கே.ஆர்.விஜயா, சுரேஷ் நடித்த படம் ஒன்று வந்தது, அது இப்படித்தான் இருக்கும். கிராமத்தில் பிறந்த தம்பி சுரேஷை மக்களுக்கு சேவை செய்ய வைக்க கிராம மக்களிடம் பணம் வசூலித்து டாக்டருக்கு படிக்க வைப்பார் சிவாஜி,,படித்ததும் கிராமத்துக்கு வர மாட்டேன் என்பார், சிவாஜி சுரேஷ் காதலியை கடத்திவந்து விடுவார்.பின்னர் கிராமத்துக்கு காதலியை தேடி வரும்போது அடிப்பட்டு உயிருக்கு போராடுவார் சுரேஷ், அப்போது கத்தி முனையில் சிவாஜி ஒரு மருத்துவரைக்கிராமத்துக்கு கொண்டு வந்து சுரேசைக்காப்பாற்றுவார், அப்போது தான் அவர் தவறு தெரிந்து உணர்வார். அப்படத்தை எல்லா மருத்துவ மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டும்.

எனக்கு படம் பெயர் மறந்து விட்டது. கல்தூண் ஆஹ்? சரியாத்தெரியவில்லை.

Anonymous said...

வவ்வாலு தூங்கவே மாட்டியா? பகலில் என்ன பன்னுவ? நிஜ வவ்வாலேதானா நீ.

வவ்வால் said...

யோவ் அனானி,
இத தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போற...

//பகலில் என்ன பன்னுவ? நிஜ வவ்வாலேதானா நீ.//

அதான் பகலில் தூங்கிடுவோம்ல(வேலைப்பார்க்கிறேன்னு தூங்குவோம்ல)
(இப்போ தான் சரக்குவிட்டுகிட்டு நேரா பில்லா படம் நைட் ஷோ ஆல்பர்ட்ல பார்த்துட்டு, பாதி திறந்து இருந்த கடைல கூலா கூல்டிரிங்க்ஸ் இருக்கானு கேட்டு வாங்கி குடிச்சிட்டு (அவன் என்னை வினோதமா வேற பார்த்து கூலாத்தான் வேணுமானு கேட்டது தனி)... பனில ...ஜாலியா ... பனி விழும் இரவு... னு பாடிக்கிட்டே வந்து சேர்ந்தேன்.)

பின்ன என்ன போலி வவ்வாலா, நான்... மெய்யான வவ்வாலுய்யா... நாங்கலாம் பேரு வச்சாலும் சும்மா குன்சா வைக்க மாட்டோம், காரணத்தோட தான் பேரு வைப்போம்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து விவாதித்தால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அது நாம் எடுத்துள்ள நிலையை உறுதிப் படுத்துவதற்காகவே விவாதிக்கும் அபாயம் இருக்கிறது.

மட்டுமல்லாது இந்தப் பிரச்சனைப் பாட்டை சரி x தப்பு என்று குறுக்கும் அபாயமும் இருப்பதால், நிறுத்திக் கொள்கிறேன்.

உங்கள் நேரத்தைச் செலவழித்து என்னுடன் உரையாடியதற்கு நன்றி நண்பரே. எனக்குச் சில புரிதல்களை ஏற்படுத்தின என்றும் சொல்லி விடுகிறேன்.

வவ்வால் said...

ஜி.ராம்,
நன்றி,

நீங்கள் சொல்வது போல வெறும் அர்த்தமற்ற பேச்சாக நீளும் அபாயம் உண்டு, நானும் அதை செய்திருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் அதுவும் தேவைப்படுகிறது.

நான் பல முறை பின்னூட்டங்களில் சொன்னது , சம்பளம் குறைவு தான் ஆனால் திட்டத்தில் சேர்ந்துக்கொண்டு பின்னர் ஊதியம் அதிகரிக்க சொல்லி கேட்கலாமே என்பது தான்.

தங்கள் புரிதலுக்கு நன்றி!

புருனோ Bruno said...

//மருத்து விரிவுரையாளர்கள்,
கல்லூரி பணியாளர்கள்,
ஆய்வுக்கருவிகள்,
ஆய்வக செலவுகள்,
நூலகம்,
கான்பெரன்ஸ் ஹால்,//

மருத்துவக்கல்லூரியில் விரிவுரையாளர்கள் தான் நோயாளிகளுக்கும் வைத்தியம் பார்க்க வேண்டும்

எனவே அங்கு மாணவர்கள் இல்லை என்றாலும் இந்த செலவுகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவாகும்

புருனோ Bruno said...

//விடுதி,//
விடுதி கட்டணம் வாங்கப்படுகிறது

//சமையல் கூடம்,
நூலகம்,
தொலைப்பேசி, அலுவலக ஸ்டேனரி , நிர்வாக செலவுகள்,
குடிநீர்,
மின்சாரம்,
இன்ன பிற என்று 1000 செலவீனங்கள் உண்டு.//
மருத்துவக்கல்லூரியுடன் இணையாத 300 மருத்துவமனைகளிலும் இந்த செலவு உண்டு

புருனோ Bruno said...

//ஆனால் தற்போது அங்குள்ள விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 510. //

இவர்கள் தான் அங்கு வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கிறார்கள்

மே மாதம் மாணவர்களுக்கு விடுமுறை

ஆனால் இந்த ஆசிரியர்கள் வரவேண்டும் தெரியுமா

இல்லை என்றால் நோயாளிகளுக்கு யார் வைத்தியம் பார்ப்பது

புருனோ Bruno said...

//ஒரு மாதத்திற்கு மட்டும் teaching staff சம்பளம் மட்டுமே ஒரு கோடியே இரண்டு லட்சம்! இதை மட்டும் ஒரு மாணவனுக்கு கற்பிக்க ஆகும் செலவு என்று கணக்கிட்டால் 61,818 ரூபாய் வருகிறது. ஒரு வருடத்திற்கு 7,41,818(ஏழு லட்சத்து சொச்சம்) இது வெறும் கற்பித்தலுக்கான செலவு மட்டுமே!//

ஐயா

அது நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்கான செலவு

புருனோ Bruno said...

//இப்போ சொல்லுங்க மக்களே மருத்துவ மாணவர்களுக்கான அரசின் செலவு அற்பமா?//

அற்பம் தான்

// அவை எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே!//

வரிப்பணம் எல்லாம் இலவச சிகிச்சை அளிக்கத்தான்

புரிந்ததா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வவ்வால், எங்கே போயிட்டீங்க... ஒரு வருஷத்துக்கு மேல ஆளையே காணல?