Sunday, December 23, 2007

வீணாவின் ஜாக்கெட்!

வீணா தணிகாச்சலம் வளர்ந்து வரும்(உயரத்தில் அல்ல) குறும்பட, விளம்பரப்பட இயக்குனர்,பெண் விடுதலை, ஒடுக்கபட்டோர்க்காக குரல் கொடுத்தல் எனப்புரட்சிகரமான சிந்தனை மட்டுமல்ல செயலும் கொண்டவள். ஆனால் பார்த்தால் திரை நட்சத்திரம் போன்ற ஒரு வாளிப்பு! முப்பதுகளின் துவக்கத்தில் இருந்தாலும் பார்ப்பவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு வசீகரம் கொண்டவள்.

அன்று நகரத்திலேயே மிகப்புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்ந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள். அது அவளுக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான் நம்மையும் அம்மாம் பெரிய கல்லூரியில் கூப்பிட்டு இருக்காங்களே என்று. பின்னே இருக்காதா இவளின் குரு நாதர் என்று அறியப்படுபம் புகழ்ப்பெற்ற திரைப்பட இயக்குநர் "வேலு ராஜேந்திராவும்", மற்றொரு புகழ் பெற்ற விளம்பரப்பட இயக்குனர் "விஜயன் பாலாவும்", "அமரன்"என்ற ஒரு பெரிய எழுத்தாளரும் அழைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் அனைவரும் ஆண்கள், ஏற்கனவே தங்கள் துறையில் முத்திரை பதித்தவர்கள்.இவள் மட்டுமே வளர்ந்து வரும் பெண் படைப்பாளி. அவர்களுக்கு சரிசமமாக ஒரு வாய்ப்பு என்பது பரவசம் அளிக்கும் ஒன்று தானே!

நேரத்தோடு போய் சேர்ந்து விட வேண்டும் என்று அவளது ஸ்கூட்டியை விரட்டிக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள், வழக்கமாக எல்லா இடத்திலும் கேட்பது போன்று அங்கிருந்த செக்யூரிட்டி வாசலில் நிறுத்தி விசாரித்தான் , சற்றே கர்வத்துடன் , விழா அழைப்பிதழை எடுத்துக்காட்டி, நான் இங்கே நடக்கிற பங்ஷனில் சீப் கெஸ்ட்டாக கலந்துக்க வந்திருக்கேன் என்றாள்.

ஆனால் அந்த செக்யூரிட்டி கல்லுளி மங்கன் போல, சாரி ... உங்களை உள்ளேவிட முடியாது என்றான்.

-ஏன்?...
-உங்கள் ஜாக்கெட்....
-அதுக்கு என்ன? ....
-ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு இருக்கிங்க...

- அப்போது தான் உணர்ந்தாள் , வழக்கமாக அணியும் அவளது ஃபேவரைட் புளு கலர் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் , பின்க் கலர் காட்டன் புடவையில் அசத்தலாக வந்திருந்தால், அது அவளுக்கு பளிச்சென்று எடுப்பாகவும் இருக்கும்.

நான் வழக்கமாக இது போல உடை உடுத்திக்கொண்டு பல இடத்துக்கும் ,கல்லூரிக்கும் போய் இருக்கேன், அங்கே எல்லாம் என்னை யாரும் ஆட்சேபணை செய்யவில்லையே, இங்கே இது என்ன புது பழக்கம் எனக்கேட்டாள்.

மற்ற இடத்தில் எப்படியோ இங்கே டிரெஸ் கோட் இருக்கு,புடவைனா, கை வைத்த ஜாக்கெட், சுடிதார் என்றால் ,துப்பட்டா என்று பெண்கள் அணிய வேண்டும், அப்படி உடை அணிந்தவர்கள் மட்டும் தான் கல்லூரிக்குள் வர முடியும்.இது பிரின்சிபாலின் உத்தரவு , நான் மீற முடியாது என்று சொல்லிவிட்டான் செக்யூரிட்டி.

அட கடங்கார பாவி என்று மனசுக்குள் சபித்தவாறு. பிரின்சிபாலைப்பார்க்கணும் என்றதுக்கு, அவர் இப்போ பங்ஷனில் பிசியாக இருப்பார், நீங்க உள்ள போகணும்னா போய் பக்கத்தில இருக்க ரெடிமேட் கடை எதுலவாச்சாம் வேற ஜாக்கெட் வாங்கி மாத்திக்கிட்டு வாங்க என்று சிரிக்காமல் சொன்னான்.

தன்மான பெண்ணாச்சே வீணா, அப்படிலாம் டிரெஸ் மாத்திக்கிட்டு இந்த விழாவில் நான் கலந்துக்கொள்ளவேண்டிய தேவையே இல்லை, வர்ரேன், ச்சே இனிமே இந்தப்பக்கமே வர மாட்டேன் என்று திரும்பியவள். போவதற்கும் முன்னர் இதனை அங்கு வந்திருக்கும் அவள் குருநாதர் காதுக்கு தெரியப்படுத்துவோம் அவர் கண்டிப்பாக கேள்வி கேட்பார் என்று நினைத்தாள், ஆனால் அவர் செல் போன் பயன்படுத்துவதே இல்லை,அப்படி ஒரு கொள்கை அவருக்கு.

நல்ல வேளை இன்னொரு விளம்பர பட இயக்குனரான விஜயன் பாலாவின் நம்பர் இருந்தது. அதில் அழைத்து அவனிடம் விபரம் சொன்னாள். அவனோடு நல்லப்பழக்கமும் உண்டு .அவனும் சரி .. சரி என்று கேட்டுக்கொண்டான்.கண்டிப்பாக தகவல் போய் மேடையில் வைத்தே இதை கேள்விக்கேட்டு ஒரு பிரச்சினை ஆக்கி விடுவார் தனது குருநாதர் என்ற நம்பிக்கையுடன் வீணா விர்ரென கிளம்பினாள்.

விஜயன் பாலா போனை துண்டித்துவிட்டு , ... ஆமாம் இவள் வந்திருந்தா, நாம என்ன பேசினாலும் எவனும் கவனிக்க மாட்டான்,அவள் அலங்காரத்தையும் அவளையும் பார்த்துக்கிட்டு அவள் பேசுறதுக்கு மட்டும் யாருமே சொல்லாததை சொன்னாப்போல கை தட்டி ரசிப்பாங்க, பொம்பள பேசினா மவுசு தானே. இனிமே நிம்மதியாக நாம மட்டும் "நச்சுனு" பேசி அசத்திடலாம் ,என்று நினைத்தவாறே, பக்கத்தில் இருந்த வீணாவின் குருநாதரிடம் பாத்ரூம் எங்கே இருக்கு என்று கேட்டு விட்டு சாவகாசமாக ஒரு லேட்டஸ் பாடலை முனுமுனுத்தபடி பாத்ரூம் கிளம்பினான்.

செக்யூரிட்டியை அழைத்த பிரின்சிபல் நான் சொன்னாப்போல சொல்லி வீணாவை திருப்பிட்டியா , தாங்க்ஸ் என்று 100 ரூபாய் எடுத்துக்கொடுத்து விட்டு..... எஞ்சினியரிங்க் படிச்சுகிட்டு இருந்த என் பொண்ணை விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி,மனச மாத்தி அரை குறை உடைல டீவி விளம்பரத்தில நடிக்க வச்சிட்டு, இப்போ அவள் எப்போதும் அரை குறை டிரெஸ் போட்டுக்கிட்டு அலையறா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா, பெண்கள் உடை விஷயத்தில் கவனமா இருக்கனும் என்பதும் டிரெஸ் எப்படி போடனும் என்பதும் இனிமே உனக்கும் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கும் வீணா! என்று மனதுக்குள் சொல்லி திருப்தியுடன் சிரித்துக்கொண்டே விழாவுக்கு போனார்.
------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:-
இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே, ஏதேனும் பெயரையோ,உண்மை சம்பவத்தை நினைவூட்டினால் அது தற்செயலே!

இக்கதை சர்வேசனின் நச்சு "கதைப்போட்டிக்காக"

36 comments:

Thekkikattan|தெகா said...

:-)) அட இதுவும் நல்லாத்தான் இருக்கு.

சின்னப் பையன் said...

அட தற்செயலாகூட எனக்கு சம்மந்தப்பட்ட சம்பவம் எதுவும் ஞாபகம் வரவில்லையே!!!! நிறைய படிக்கணும் போல!!!

Anonymous said...

hey, this my hollywood movie "ANACONDA" storyline. don't you ashamed of copying stuffs like this??? expect my lawsuit against you anytime soon.ANACONDA story dept (c) pty ltd
alley wooden

வடுவூர் குமார் said...

எனக்கும் எந்த சம்பந்தப்பட்ட ஞாபகமும் வரவில்லை. :-))
பிரின்ஸி தான் டர்னின் பாயிண்ட்.
நன்றாக இருக்கு.

Anonymous said...

தேவையான திருப்பங்களுடன் நல்லாத்தேன் இருக்கு.

Anonymous said...

அடக்கடவுளே. அதுக்குள்ள கதையைக்காப்பி அடிச்சாச்சுன்னு கேஸ் போட்டுட்டங்க

இலவசக்கொத்தனார் said...

:))

நானும் ஒண்ணு எழுதறேன்!!

இன்ஸ்பையர்ட் பை வவ்வால்!!

cheena (சீனா) said...

இது மாதிரி நிச்சயமா எந்த சம்பவமும் நடக்கலே - பிரின்ஸிபால் - நச்சுனு திருப்பம் - நன்று - ரசித்தேன்

இலவசக்கொத்தனார் said...

ஐயா, வாக்கு குடுத்தா மாதிரி வவ்வால் இன்ஸ்பையர்ட் கதை எழுதியாச்சு.

இங்க பாருங்க.

கோபிநாத் said...

\\இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே, ஏதேனும் பெயரையோ,உண்மை சம்பவத்தை நினைவூட்டினால் அது தற்செயலே!\\

எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வருது...கதை நல்லா தான் இருக்கு..:)

போட்டிக்கு வாழ்த்துக்கள் வவ்வால்

இராம்/Raam said...

ஹி ஹி சூப்பரு.... :)


//hey, this my hollywood movie "ANACONDA" storyline. don't you ashamed of copying stuffs like this??? expect my lawsuit against you anytime soon.ANACONDA story dept (c) pty ltd
alley wooden//

இது யாரு வேலை'ப்பா??? :)))))

வவ்வால் said...

தெகா,
நன்றி!

நல்லா இருக்கா, அட எதிர்ப்பார்க்கவே இல்லை நல்லா இருக்கும்னு!

-----------------------
பூச்சாண்டி,
நன்றி!
நியாபகம் வரலையா, நல்லதாப்போச்சு!
----------------------------------
அனானி,
நன்றி,
அனகோண்டா கதையே நான் சொன்னத உருவி எடுத்துட்டு எனகே கேஸ்?
இப்போ தான் சஞ்சய் லீலா பன்சாலி ஐஸ்வர்யா கால்ஷீட் இருக்கு உடனே இந்த கதைய படம் எடுக்கனும் மும்பை வானு சொல்லி இருக்கார்!
-------------------
குமார்,
நன்றி!

நியாபகம் வரலைனா மெமரி பிள்ஸ் சாப்பிடுங்க! :-))

-----------------
சின்ன அம்மிணி,
நன்றி!
சிவாஜி படத்தில இருந்த கடுகளவு கதையே ஏன் கதைனு கேஸ் போட்ட உலகம் ஆச்சே இது :-))
---------------
இ.கொ,
நன்றி,
ஆகா என்னோட கதைக்கூட இன்ஸ்பைர் பண்ற அளவுக்கு இருக்கா? ஆச்சரியம் தான்.
உங்க கதையை படிச்சேன், கலக்கல் ரகம்!
-------------------
சீனா,
நன்றி!
என்ன இது சொல்லி வச்சாப்போல சம்பவம் எதுவும் நடக்கலைனு சொல்றிங்க :-)), அப்போ இனிமே அப்படி ஒரு சம்பவம் நடக்கும்!
------------------
கோபிநாத்,
நன்றி,
அப்பாடா என்னோட எழுத்தின் வலிமைய இப்போத்தான் உணர்ந்தேன், நியாபம் வருதுனு சொல்லிட்டிங்களே!
----------------------
ராம்,
நன்றி!

//இது யாரு வேலை'ப்பா??? :)))))//

நாட்டில வவ்வால் எல்லாம் கதை எழுதுதேனு வகுத்தெரிச்சல் கோஷ்டி உருவாகிச்சுச்சு அது தான் போல ! :-))

சுரேகா.. said...

இதுக்கு இப்படி ஒரு உள்குத்து இருக்குறது தெரியாம போச்சேப்பா..!

அடடா..

(அ)சத்தியமா எங்களுக்கு உண்மைச்சம்பவம் எதுவும் நினைவுக்கு வரலை..!

வவ்வால் said...

சுரேகா,
நன்றி!
உள்குத்தா அதுலாம் எதுவும் இல்லையே!

இதுக்கு தான் சீரியல் மட்டும் பார்க்காம அப்போ அப்போ பத்திரிக்கை செய்தினும் பார்க்கணும்! :-))

Unknown said...

யுரெகா...

எனக்கு புரிஞ்சுரிச்சு , இல்லை ஒன்று புரியலை.....

இது யாருக்கு ....?

SurveySan said...

:)

நல்ல நச்சு.
கொத்ஸ வேர எழுத தூண்டிட்டீங்களே. ஜூப்பர்.

வெ. ஜெயகணபதி said...

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்ட உங்கள் சிறுகதைக்கு வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை. ஆனால் உங்கள் கற்பனைக்கு கண்டனத்தையும் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை...
இது சிறுகதையாக தெரியவில்லை. குப்பையாகவே தெரிகிறது...

தோழி said...

இதுல என்னங்க தற்செயலா ஞாபகம் வரதுக்கு இருக்கு. அதான் தெளிவா பேர்ல இருந்து எல்லாமே போட்டாச்சே. என்ன ஜீன்ஸ்-க்கு பதிலா சேலைனு போட்டு இருக்கீங்க. ஆனால் காரணம் மட்டும் நச்-னு இல்லை. இந்த கதையை படிச்சுட்டு யாரும் உங்க மேல எந்த வழக்கும் போடாம இருந்தா சரிதான்.

வவ்வால் said...

எம்பரர்,

புரிந்தும் புரியாமலும் இருக்கிங்க:-))

யாருக்கா உங்களைப்போல வாசக கண்மணிகளுக்காகவே தீட்டப்பட்ட அர்த்த ராத்திரி காவியம் இது!
-----------------
சர்வே,
நன்றி!
நச்சு போட்டி அறிவித்த வாயாலே நச்சுனு இருக்குனு சொல்லிட்டிங்களே, இதுவே போதும்!
--------------------------
ஜெயகணபதி,
நன்றி!
//குப்பையாகவே தெரிகிறது...//

கோழி குப்பைய கிளறும், அதுக்கு ஆகாரம் அதிலே இருக்கு, மிச்சம் இருப்பது குப்பை மட்டுமே, நீங்க இந்த கதைய கிளறி இருக்கிங்க, உங்களுக்கு ஆகாரம் கிடைத்தும் இருக்கு, மிச்சம் இருப்பது குப்பை தானே!

சரியா தான் சொல்லி இருக்கிங்க :-))

சுஜாதா சிரிரங்கத்து தேவதைகள் கதை எழுதியப்போது சொன்னது, அவர் கதை வரும் போது சிரிரங்கத்து ஆசாமிகள் அவர்கள் கேரக்டர் என்னப்பெயரில் வந்து இருக்கு, அதுல என்ன கதை விட்டான் ரெங்கராஜன்னு(சுஜாதா) தேடுவாங்கலாம்!

உண்மையையும் , கற்பனையும் சரியான விகிதத்தில் கலப்பதே கதை, புனைவு! அது எழுதுபவரின் கையில் இருக்கு!பாருங்க நீங்க என்னமோ சொல்லப்போக நான் சுஜாதா ரேஞ்சுக்கு பில்ட் அப் போட்டுக்கிட்டேன்! :-))
----------------------------

அனுராதா ,
நன்றி!
நீங்க புத்திசாலி! சரியா புரிஞ்சுக்கிட்டிங்க! இது கதைனு!

//உங்க மேல எந்த வழக்கும் போடாம இருந்தா சரிதான்.//

வழக்கு வேறவா... வாய்தா வாங்கிட வேண்டியது தான்!

மங்களூர் சிவா said...

எனக்கும் எந்த சம்பந்தப்பட்ட ஞாபகமும் வரவில்லை. :-))

நல்லாத்தான் இருக்கு.

வவ்வால் said...

ம.சிவா,
நன்றி!
//எனக்கும் எந்த சம்பந்தப்பட்ட ஞாபகமும் வரவில்லை. :-))//

இப்படி யாருக்குமே சம்பவம் நினைவு வராத அளவுக்கு எழுதி இருக்கேன் அப்படினா நான் உண்மைல நல்லா கதை எழுதிட்டனா? :-))

Anonymous said...

//பார்த்தால் திரை நட்சத்திரம் போன்ற ஒரு வாளிப்பு! முப்பதுகளின் துவக்கத்தில் இருந்தாலும் பார்ப்பவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு வசீகரம் கொண்டவள்.//

அப்படியா?

வவ்வால் said...

அனானி,
//அப்படியா?//
அப்படித்தான் ;-)

Nithi said...

நிஜமா,எனக்கு உண்மைச்சம்பவம் எதுவும் நினைவுக்கு வரலைங்க..!

வவ்வால் said...

நித்யா, அங்கு செட்டிப்பாளையம்? அப்படினு ஒரு பெயரா இது?

பசுபதி ராசாக்கா பாளையம் உங்க ஒன்னு விட்ட அண்ணாவா? :-))

நன்றி!

நிஜமா எதுவும் நியாபகம் வரலைனா அதுக்கு காரணம் என் எழுத்தோட வலிமை, அந்த அளவுக்கு அற்புதமாக(கேவலமாக)எழுதி இருக்கேன் போல! :-))

Anonymous said...

Podanur செட்டிப்பாளையம்
Perur செட்டிப்பாளையம்

Please check Kongu(Kovai) Makkals....

கதிர் said...

பெயரை போல்டு பண்ணி போடணும்னு அவசியமே இல்லிங்க. முதல் பாராவின் முதல் பத்து வரிகள்லயே தெரிஞ்சு போச்சு. பயங்கரமான நகைச்சுவை உணர்வு தெரியுது. :)

வவ்வால் said...

அனானி,
நன்றி!

எனக்கு அப்படி ஊர் இருக்கா என்பதில் ஆச்சர்யம் இல்லை, பேரில் ஊரை சேர்த்துப்போட்டு ஒரு பேர் ஆக்கிட்டிங்களா என்று கேட்க வந்தேன்!
-----------------------------
தம்பி சார்,
நன்றி!

நீங்க அநியாத்துக்கு புத்திசாலியா இருக்கிங்க அதான் புரிஞ்சுப்போச்சு,அப்படியும் புரியாதவங்களுக்கு புரிய வைக்கத்தான் கலர் அடிச்சேன் :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by a blog administrator.
சேதுக்கரசி said...

நல்லாருக்குங்க கதை. இதுதான் கொத்தனாரை இன்ஸ்பையர் பண்ணிச்சாக்கும் :-) இப்ப புரியுது அவர் தலைப்பு வச்ச மர்மம்.

வவ்வால் said...

சேதுக்கரசி ,
நன்றி,
மெய்யாலுமே நீங்க துப்பறியும் பிலி தாங்க, இ.கொ அவர் டிஸ்கிளைமர்லவே சொன்னத இத்தனை சீக்கிரம் கண்டுப்பிடிச்சுட்டிங்க(அங்கே நாளைந்து முறை ஏன் இப்படி ஒரு கதைனு கேள்விக்கேட்டு இருக்கிங்க அதான் ) :-))

இது என்னமோ சும்மா டைமிங்க் சென்ஸுக்காக போட்டது , எப்படியோ இ.கொ வை இன்ஸ்பைர் பண்ணிடுச்சு! :-))(அது எப்படினு தான் எனக்கும் புரியலை)

சேதுக்கரசி said...

ஏங்க இந்த வஞ்சப்புகழ்ச்சி வெறி? பதிவையே ஒழுங்கா படிக்கமாட்டேன், இதுல டிஸ்கி எல்லாம் யார் படிக்கிறது.. அதுவும் இப்பத்தான் கொஞ்ச நாள் முன்னாடி கொத்தனார்ட்ட சொன்னேன்.. பெரிய பதிவு போட்டா படிக்கமாட்டேன்னு.

வவ்வால் said...

வடிவுக்கரசி ,

//ஏங்க இந்த வஞ்சப்புகழ்ச்சி வெறி? பதிவையே ஒழுங்கா படிக்கமாட்டேன், இதுல டிஸ்கி எல்லாம் யார் படிக்கிறது.. //

பலப்பேர் சரியாப்படிக்காமலே புலிப்பாய்ச்சல் பாய்றாங்க ,
நீங்க ரொம்ப நல்லவங்களா இருப்பிங்க போல உண்மையை ஒத்துக்கிறிங்களே!

ஒழுங்கா படிக்கலைனாலும் பரவாயில்லை , ஒரு வரியை மட்டும் படிச்சுட்டு நீங்க சொன்னது தப்புனு சண்டைக்கு வராத வரைக்கும் நிம்மதி தான் :-))

சேதுக்கரசி said...

//வடிவுக்கரசி//

ஏங்க இந்தக் கொலவெறி? :-)

வவ்வால் said...

ஹி ஹி
மன்னிக்கவும் சேதுக்கரசி, என்னமோ வடிவுக்கரசினு வந்துடுச்சு(சில பேர் அப்படித்தான் தான குழப்பிக்குது)

ஜோதிஜி said...

ரசித்தேன்.