Tuesday, December 25, 2007

காமெடி டைம்!

வலைப்பதிவுகளில் நகைச்சுவை என்று தேடினால் மொக்கைப்பதிவுகளோ,கும்மி பதிவுகளோ தான் அடையாளம் காட்டப்படுகிறது. அது தான் காமெடியாம் என்ன கொடுமை சார் இது! (ஆனாலும் ஓசை செல்லா, புருனோ போன்றவர்கள் சீரியசா எழுதுவதே செம காமெடி என்பது வேறு)சரி நாமளும் சிரிப்பு வெடிய கொளுத்துவோம் என்று சில நகைச்சுவை துணுக்குகளை சொந்தமாக எழுதிப்பார்த்தேன்.இதுக்கு எல்லாம் சிரிக்க முடியுமா என்று கேட்காதிங்க, எவ்வளோ செஞ்சுட்டிங்க இதை செய்ய மாட்டிங்களா...can...can!

-------------------------------------------------------------------------------------------------------

இயக்குனர்: விஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன்.
தயாரிப்பாளர்: பேர் என்ன?
இயக்குனர்:அழகிய டுமீல் மகன்!
--------------------

நண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா...
நண்பர்2: எப்படிறா?
நண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான்.
-------------------------------

இயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன்.
தயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க...
இயக்குனர்: நேதாஜி - "the bose"

---------------------------------------------
(ஆசிரியர் இலவசக்கொத்தனார், பெற்றோர் அபிஅப்பா)

இ.கொ: உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்...
அபி அப்பா: அப்படி என்ன பேசினான்:
இ.கொ: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்?
-----------------------------------
(கண்மணி டீச்சர், அபி அப்பா)

கண்மணி: என்கிட்டேவும் அப்படித்தான் அதிகப்பிரசங்கியா பேசுறான்.
அபி அப்பா: என்ன பேசினான்....
கண்மணி: செங்கல் வச்சு வீடுகட்டுறாங்க, கருங்கல் வச்சு வீடு கட்டுறாங்க ,ஏன் யாரும் பொங்கல் வச்சு வீடுக்கட்டலைனு கேட்கிறான்!.....
அபி அப்பா:( மனசுக்குள்)அதான் நாங்கலாம் "பொங்கள்" வச்சு பதிவு போடுறோம்ல!
---------------------------------------------------------

அபி அப்பா: கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா?
குசும்பன்: படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ் செய்றாங்க!
-------------------------------------------------------------
நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே!
அபி அப்பா: என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கறிங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்!
-------------------------------
(சம்பந்தப்பட்ட பதிவர்கள் பெயரைப்பயன் படுத்தியதற்கு மன்னிப்பார்களாக சும்மா டமாசு)
----------------------------------------------------------------------------------------------------

தொண்டன்1: நம்ம தலைவர் கதை விடுறதுல பலே கில்லாடி...
தொண்டன்2: அப்படி என்னக்கதை விட்டார்...
தொ1: நாங்க ஆட்சிக்கு வந்தால் .... இரவில் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு சரியாக வழி தெரிய வானத்திலும் தெரு விளக்குகள் அமைப்போம்னு சொல்றார்.
----------------------------
ஒருவர்: எதுக்கு அந்த டிராபிக் போலீஸ் காரர் விமான நிலையத்தில வந்து சண்டைப்போடுறார்.
மற்றவர்: நோ எண்ட்ரி வழியா ஒரு பிளைட் ஆகாயத்துல பறந்து போச்சாம், அதுக்கு ஃபைன் போடணும்னு சொல்றார்!
-------------------------------------

வித்வான்:அந்தம்மாவுக்கு பெரிய நாட்டிய "தார"கைனு தான் பேரு, ஆனால் சம்பளம் ஒழுங்காவே தர மாட்டாங்க!
நண்பர்: அப்போ நாட்டிய தராத"கை"னு சொல்லுங்க!
-----------------------
நண்பர்: பக்கத்து வீட்டில திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டாரே கொன்னக்கோல் பாகவர் கிட்டப்பா இப்போ என்ன ஆனார்?
மற்றவர்: இப்போ அவரை எல்லாம் கன்னக்கோல் பாகவதர்னு சொல்றா!
--------------------------------------------------
நண்பர்1: உங்க பிரண்டு பெரிய விஜய் ஃபேனாக இருக்கலாம் அதுக்காக பஸ்டாண்ட்ல போய் மதுரைக்கு போகாதடினு பாடிக்கிட்டு நிக்கனுமா?
நண்பர்2: நீ வேற அவன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அவங்க அம்மா ஊரு மதுரைக்கு போகுது அவங்களை போக வேண்டாம் சொல்லிக்கிட்டு இருக்கான்!
--------------------------------------------------
ஒருவர்: உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல...
மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!
------------------------------------------------------
நண்பர்1: தனுஷ் "பொல்லாதவன், அஜித் "பில்லா" தெரியும் அது என்ன அவரைப்பார்த்து எல்லாம் பில்லாதவன் சொல்றாங்க!
நண்பர்2: அவர் பலே ஆசாமி , ஹோட்டலுக்கு சாப்பிட கூப்பிட்டு போய்ட்டு பில்லை நம்ம தலைல கட்டிட்டு எஸ்கேப் ஆகிடுவார், பில் தர மாட்டார் அதான் "பில்லாதவன்"
------------------------------------------------------
மீனா: நம்ம பரிமளாவுக்கு ஓவர் பந்தாடி...
வீணா: எப்படி சொல்ற...
மீனா: அவ ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு ஒரு விண்டோவ் ஏசி வைக்க போறாளாம்!
----------------------------------------------
அவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க:
இவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!
--------------------------------

அவள்: அந்த டைலர் லேட்டஸ்ட் டெக்னாலஜிப்படி ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாரம்?
இவள்: எப்படி?
அவள்: ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு "பவர் விண்டோவ் "எல்லாம் வைப்பாராம் ஒரு பட்டனை அமுக்கினா விண்டோவ் தானா மூடிக்கிட்டு சாதாரண ஜாக்கெட் ஆகிடுமாம்!
------------------------------------------------------------------

பின்குறிப்பு: என் பேரைப்பார்த்தாலே இங்கே சிலர் டென்சன் ஆகிறார்கள் , அவர்கள் டென்சனை குறைக்கத்தான் இப்படி ஒரு மருந்து கொடுத்து இருக்கேன். வசூல் ராஜாவில பிரகாஷ் ராஜ் செய்வாரே "லாப்டர் தெரபி" அதை தான் தருகிறேன்ன். இன்னும் நிறைய சிரிக்க வைக்கணும்(அப்போ இன்னும் நிறைய டென்சன் ஆவாங்கனு அர்த்தமானு கேட்கப்படாது)

27 comments:

ஆயில்யன் said...

ஒரே சமயத்தில் இவ்ளோ ஜோக்குகளா !

அய்யோ ஆபிசில இருக்கேன்

ஒரே சிரிப்பு சிரிப்பா வருதுங்க :))))

குசும்பன் said...

// நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!///

நல்லா இருக்கு!!!

பொங்கல் வெச்சு வீடு கட்ட முடியுமா என்று அபி அப்பா பையனுமா?
அபி அப்பா பொங்கல் மேட்டர் அவனுக்கும் தெரிஞ்சு போச்சா?:))))

வவ்வால் said...

ஆயில்யன்,
நன்றி!
//ஒரே சிரிப்பு சிரிப்பா வருதுங்க :))))//

இத ...இதைத் தானே எதிர்ப்பார்த்தேன்(நிசமாத்தான் சிரிப்பு வந்ததா? )
-----------------------------------

குசும்பன்,
நன்றி!
//பொங்கல் வெச்சு வீடு கட்ட முடியுமா என்று அபி அப்பா பையனுமா?
அபி அப்பா பொங்கல் மேட்டர் அவனுக்கும் தெரிஞ்சு போச்சா?:))))//

பொங்கல் அவங்க குடும்ப பிராண்ட் ஆச்சே அதான்!

கோபிநாத் said...
This comment has been removed by the author.
கோபிநாத் said...

\\கண்மணி: செங்கல் வச்சு வீடுகட்டுறாங்க, கருங்கல் வச்சு வீடு கட்டுறாங்க ,ஏன் யாரும் பொங்கல் வச்சு வீடுக்கட்டலைனு கேட்கிறான்!.....\\

:)))

நல்லா யோசிச்சிருக்கிங்க...:)).

Unknown said...

நகைச்சுவையா ஏதோ எழுதறேன்னு சொன்னீங்களே. எங்க பின்னூட்டத்துல எழுதுவீங்களா?

வவ்வால் said...

கோபிநாத்,
நன்றி,
//நல்லா யோசிச்சிருக்கிங்க...:)).//

யோசிப்பவர் நான் இல்லைங்க அது வேற ஒரு பதிவர்! :-))
-------------------------
உமையணன்,
நன்றி!

//நகைச்சுவையா ஏதோ எழுதறேன்னு சொன்னீங்களே. எங்க பின்னூட்டத்துல எழுதுவீங்களா?//

பார்த்திங்களா ...இப்போ உங்களையே நகைச்சுவையா எப்படி எழுத வச்சேன்னு, நாம தான் நகைச்சுவையா எழுதனும்னு இல்லை, அடுத்தவங்களை எழுத வைக்கிறோம்ல!

ஆயில்யன் said...

//பார்த்திங்களா ...இப்போ உங்களையே நகைச்சுவையா எப்படி எழுத வச்சேன்னு, நாம தான் நகைச்சுவையா எழுதனும்னு இல்லை, அடுத்தவங்களை எழுத வைக்கிறோம்ல!//

சூப்பர்!

குட்டிபிசாசு said...

செம காமெடி? ஐயோ! வயிறு வலிக்குது போங்க!! :)

வவ்வால் said...

ஆயில்யன்,

//சூப்பர்!//

அது.. ஊஉ.. ஊஉ!
---------
குட்டிப்பிசாசு,
நன்றி!
அது என்ன செம காமெடி? என்று ஒரு கேள்விக்குறி, சிரிப்பு வரலைனா... தமிழனுக்கே நகைச்சுவை உணர்ச்சி கம்மினு பழிய தூக்கி தமிழர்கள் மேல போட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவோம்ல!

கண்மணி/kanmani said...

ஏதோ எங்க பாசக்கார குடும்பம்பேரை வச்சி பொழச்சுப் போங்க

ஆயில்யா!குசும்பா!சிரிச்சி வயிறு வலிக்குதா?பாவம் வவ்வால் அவரு ரொம்ப நல்லவரு எவ்ளோ அடிச்சாலும் தாங்கிக்கிறார் ரொம்ப கலாய்க்காதீங்கப்பூ

கோபி இவரு நம்ம எதிரி நாட்டுக்காரர் ;) ஜாக்கிரதை

உமையணன் வெல் செட்.

வவ்வால் said...

கண்மணி,
நன்றி!

ஆனாலும் ஏன் இந்த குறுகிய மனப்பான்மை. வவ்வால் இப்படி காமெடிலவும் தூள் கிளப்புரானேனு லேசா உங்க காதுல புகை வருது போல இருக்கே!

அந்த ஏரியா...இந்த ஏரியானு எதுவுமே இல்லை எல்லாம் நம்ம ஏரியா தான் .... அடி தூள் தான்!
(என் மனசாட்சி:டேய் அடங்குடா ... கும்மிக்கு கலெக்ஷன் குறைஞ்சு போச்சுனு அவங்களே பாவம் நொந்து போய் வந்து இருக்காங்க இப்படி கலாய்க்கிற)

குட்டிபிசாசு said...

ஏன் இந்தக் கொலைவெறி!!

வவ்வால் அவர்களே... போகிறபோக்கில் நீங்க Vampire ஆனாலும் ஆகிடுவிங்க போல...!!

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,
நன்றி!

கொலைவெறியல்ல கலை வெறி!

//போகிறபோக்கில் நீங்க Vampire ஆனாலும் ஆகிடுவிங்க போல...!!//

empire ஆகலாம்னு பார்த்தா இப்படி சொல்லிட்டியேப்பா ....

மங்களூர் சிவா said...

present

வவ்வால் said...

ம.சிவா,
நன்றி!
//present//

என்ன இது விட்டா இதை ஒரு பால்வாடி ரேஞ்ச்ல ஆக்கி அட்டெண்டன்ஸ் எல்லாம் எடுக்க வச்சுடுவிங்க போல இருக்கே! :-))

ரசிகன் said...

//அது என்ன செம காமெடி? என்று ஒரு கேள்விக்குறி, சிரிப்பு வரலைனா... தமிழனுக்கே நகைச்சுவை உணர்ச்சி கம்மினு பழிய தூக்கி தமிழர்கள் மேல போட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவோம்ல!//

இது சூப்பர் காமெடிங்கோ......

ஹா..ஹா...:)))
(இல்லாட்டி கைச்சுவை உணர்ச்சி கம்மினு எம்மேல பழிய தூக்கி போட்டுட மாட்டிங்களா?..ஹிஹி..)

வவ்வால் said...

ரசிகன்,
நன்றி!
பெரும் சிரிப்பொன்று போட்டு
உண்மைத்தமிழன் என்று நிருபித்துவிட்டீர்!(அந்த உ.தமிழன் அல்ல...)

Anonymous said...

நெசமாலுமே படிச்சா சிரிப்பு வருதுங்கோ. அதுவும் அபிஅப்பாவோட பொங்கள் சூப்பருங்கோ. அப்பப்ப இந்தமாதிரி நகைச்சுவைப்பதிவும் போடுங்க. புதுவருட வாழ்த்துக்கள்

Anonymous said...

அண்ணா கொஞ்சம் கொஞ்சமா மொக்கை, கும்மிக்கு மாறிட்டு இருக்கீங்க...keep it up. When you are in Rome be a Roman

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிரித்தேன்.
'தல' ...நல்ல பகிடி

வவ்வால் said...

சின்னம்மிணி,
நன்றி!

சிரிப்பு வந்துச்சா...அது! சிரி...சிரி..சிரி ..சிரிக்க தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர்!

சிந்திக்க மட்டுமல்ல சிரிக்கவும் வைக்கணும்னு கொளுகை இருக்குல்ல!

புத்தாண்டு வாழ்த்துகள்!
-----------------------------------
இம்சை!

நான் எல்லாம் மாறலை, பழைய மொக்கை மன்னன் தான் , மீண்டும் கொஞ்சம் தூசு தட்டுறோம்!
சிங்கத்துக்கு வயசானாலும் சிங்கம் தான்லே!
-----------------------------------
யோகன்,
நன்றி!
தல பகிடி எல்லாம் ரசிக்கிறீர்களா ...நீங்க தான் காலத்துக்கேற்ற முறையில் புதிப்பித்துக்கொள்கிறீர்கள்!அப்போத்தான் இளமையா இருக்கலாம்.

Anonymous said...

ஏன் அபி அப்பாவை வம்புக்கு இழுக்கறேள்? அவர் பாட்டுக்கு சுய புராணம் இல்லன்னா சோத்து புராணம் பதிவுகளப்போட்டுன்டு இருக்கார்.

--மொக்கப்பான்டி

Boston Bala said...

ஜோக்கெல்லாம் ஆனந்த விகடனில் கேட்ட குரல் மாதிரி தோன்றியது. (அல்லது விகடனில் தோன்றக் கூடிய குரலாக கேட்டதா!?)

சொந்த சரக்கு என்றால் கலக்கல்!

வவ்வால் said...

அனானி,
நன்றி!(வேறெதுவும் சொல்லணுமா?)
-----------------------------
பா.பாலா,
நன்றி!

விகடன் , குமுதத்தில் வரும் நகைச்சுவை துணுக்குகளைப்படிக்கும் போது அதே ஸ்டைலில் முயற்சி செய்தால் வருகிறதா என்று பார்த்தன் விளைவு இது, சொந்த சரக்கு தான்.

பத்திரிக்கைகளில் வரும் துணுக்குகள் வகைகள் எல்லாம் டாக்டர், சினிமா, பாகவதர், மன்னர் , ஹோட்டல் ,பள்ளி ஆசிரியர், அரசியல்வாதி என்று சில அடிப்படையில் அமைந்தவை தானே. எனவே எல்லாமே ஒரே போல இருக்கும்.
ஆனாலும் ஒரு பயம் இதே போல முன்னரே யாரேனும் எழுதி இருக்கக்கூடும் என்று.

முரளிகண்ணன் said...

நல்ல தரமான நகைச்சுவை.

Tech Shankar said...

Dangerous Jokes .. My Mouth is paining due to your jokes.

Sakka komedy ponga..