Thursday, January 10, 2008

மொக்கைத்தோரணம்!

மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னு தெரியாம போய்டுச்சு அவங்களுக்கு(ஆனா நீ போடுறது எல்லாம் மொக்கை தானேனு யாரோ சொல்றது கேக்குது) எவ்வ்வளவோ செய்தாச்சு இதை செய்ய மாட்டோமா!

சரி என்னால முடிந்த மொக்கைய தீட்டுகிறேன்.மீண்டும் ஒரு முறை சிரிப்பு தோரணம்!
-----------------------------------------------------------------------------------------------

வாடிக்கையாளர்: என்னப்பா சர்வர் காபில ஈ மிதந்து பார்த்து இருக்கேன், இங்கே என்னடானா சிகரெட் பில்டர் மிதக்குதே?
சர்வர்: அதான் சார் பில்டர் காபி!
-----------------------------------------------

நபர்1: எதுக்கு அந்த பாடகர் 3 மைக் வச்சு அது பின்னாடி குத்துக்கால் போட்டு பாடுறார்?

நபர்2:அவர் கிரிக்கெட் விக்கெட் கீப்பராம் ஸ்டம்ப் மாதிரி 3 மைக் வச்சு இருந்தா தான் பாட வருமாம்!
------------------------------------------------------------------

சபாநிர்வாகி பாடகியிடம்: நீங்க வீட்டில தொட்டிலில் குழந்தையைப்போட்டு ஆட்டி தூங்க வைக்க பாடிக்கத்துக்கிட்டதுக்காக மேடைல பாடும் போதும் ஒரு தூளி கட்டி வைக்க முடியாதும்மா!
----------------------------------------------------------------

காவலன்1:நம் மன்னர் சர்வேச பாண்டியர் வலைப்பதிவு ஆரம்பித்ததில் இருந்து ரொம்ப மாறிவிட்டார்..
காவலன் 2: ஏன்?
காவலன்1:இளவரசிக்கு சுயம்வரத்தில் போட்டி வைப்பதற்கு பதில் அவரது வலைப்பதிவில் "இச்சுனு ஒரு கதை" எழுதும் போட்டி வைத்து சிறந்த கதை எழுதும் மன்னனுக்கே இளவரசி என்று அறிவித்து விட்டாரே!
-----------------------------------------------------------------------------

காவலன்1: மன்னருக்கு வலைப்பதிவு மோகம் அதிகரித்து விட்டது, அவர் வலைப்பதிவில் பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லை என , நாட்டு மக்கள் அனைவரும் தினசரி ஒரு பின்னூட்டம் ஆவது போட வேண்டும் இல்லை என்றால் சவுக்கடி என்று அறிவித்து விட்டாரே!
--------------------------------------------------------

சர்வேச பாண்டிய மன்னன்: மந்திரியாரே இன்று என் வலைப்பதிவில் புதிதாக எதுவும் பின்னூட்டம் வந்திருக்கிறதா பார்த்து சொல்லும்!

மந்திரி: மன்னர் மன்னா நீங்கள் ரகசியமாக பக்கத்து நாட்டு அரசனின் வலைப்பதிவில் அனானி கமெண்டாக போட்டு ஆபாசமாக திட்டியதை ஐ.பி வைத்து கண்டு பிடித்து விட்டானாம் , போர் தொடுத்து வருவதாக உங்கள் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான்!
-----------------------------------------------------------------

மன்னர் சர்வேச பாண்டியர்: மந்திரியாரே, நான் இந்த நாட்டின் மன்னன் ஆனால் என்பதிவை விட உங்கள் பதிவுக்கு அதிகம் ஹிட்ஸ் வருகிறதே எப்படி?

மந்திரி: மன்னா,நான் வீக் எண்ட் பதிவு என்று போட்டு அதில் நம் அரண்மனை நர்த்தகிகளின் நடன வீடியோவைப்போடுகிறேன்! அதான் ஹிட்ஸ் அதிகம் வருகிறது!
---------------------------------------------------------------------------------

மந்திரி: மன்னா நீங்கள் ஒலையில் செய்தி கொண்டு வரும் புறாவை பிடித்து வறுத்து சாப்பிடும் ரகசியம் பக்கத்து நாட்டு அரசனுக்கு தெரிந்து விட்டது போலும்!

மன்னர்: எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே!
மந்திரி: இந்த முறை புறாவுக்கு பதில் காக்காவின் மீது வெள்ளைப்பெயிண்ட் அடித்து செய்தி அனுப்பியுள்ளானே!
----------------------------------------------------------------------------

மன்னர்: என்ன மந்திரியாரே இம்முறை செய்தி எடுத்து வந்த புறாவுக்கு ஒரு கால் தான் இருக்கிறது?

மந்திரி: பக்கத்து நாட்டு அரசர் "மிஸ்டு கால் "அனுப்பியுள்ளாராம், சிம்பாலிக்காக சொல்கிறார், நீங்கள் தான் செய்தி என்ன என்று கேட்டு இன்னொரு புறா அனுப்ப வேண்டுமாம்!
------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:
இதற்கு மேலும் நான்கு மொக்கையர்களை தொடர அழைக்க வேண்டுமாம், யாரை அழைப்பது என்று தெரியவில்லை. எனவே இப்பதிவைப்படிக்கும் யாரேனும் நான்கு பேர் பொறுப்பேற்று மொக்கை சேவை புரிய "திறந்த வெளி அழைப்பு" வைக்கிறேன்!

30 comments:

Thekkikattan|தெகா said...

மொக்கையிலும் மெசெஜ்-ஆ... அது சரி :-)))

//இந்த முறை புறாவுக்கு பதில் காக்காவின் மீது வெள்ளைப்பெயிண்ட் அடித்து செய்தி அனுப்பியுள்ளானே!//

சிரிப்போ, சிரிப்பூ வெடிச் சிரிப்பு...

கானா பிரபா said...

arumai, arumai ;-)

கோவி.கண்ணன் said...

மொக்கை போடச் சொன்னால் சக்கைப் போடு போட்டு இருக்கிங்க. சிரிப்பு துணுக்குகள் நன்றாக இருந்தது.
:)

கோபிநாத் said...

;))))

நல்லவே மொக்கை போடுறிங்க...;))

Boston Bala said...

---ரகசியமாக பக்கத்து நாட்டு அரசனின் வலைப்பதிவில் அனானி கமெண்டாக போட்டு ஆபாசமாக திட்டியதை ஐ.பி ---

பதிவு களத்திற்கேற்ற துணுக்குகள் :))

cheena (சீனா) said...

ஆகா ஆகா - பொதுவா சிரிப்பு எழுதணும்னா - கேட்ட, படித்த, அறிந்த சிரிப்புகளைத்தான் எழுதறது. ஆனா நீங்க புதுப் புது வலைப்பூ சம்பந்தப்பட்ட சிரிப்பா எழுதித் தள்ளி இருக்கீங்க - இச்சுன்னு இருக்கு - பாராட்டுகள்

Anonymous said...

இதெல்லாம் உங்க சொந்த சரக்கா ? எல்லாமே சூப்பர் !!!!!!!!!!

பாச மலர் / Paasa Malar said...

வவ்வால் சார்,

Tag தொடர்ச்சிக்கு நன்றி..நல்ல துணுக்குகள்...வலைப்பூ துணுக்குகள் அருமை.

வவ்வால் said...

தெகா,
நன்றி!

ஆனாலும் இன்னும் மொக்கையிலும் மெசேஜ் தேடுறத விடுறாப்போல இல்லையோ?
-------------------------
கானா தல ,
நன்றி!
------------------------
கோவி,
நன்றி!
சக்கை மாதிரி சுவை இல்லாமல் இருக்கோ?
-------------------------------
கோபிநாத்,
நன்றி!
நாங்களெல்லாம் மொக்கைல சக்ரவர்த்திகளப்பா!
---------------------------------
பா.பாலா,
நன்றி!

இன்னும் கொஞ்சம் அப்படி தேறிச்சு அப்புறம் அதை வச்சு ஒரு பிரச்சினைக்கிளப்பிடுவாங்கனு அவற்றை எல்லாம் விட்டுட்டேன்!
-------------------------------
சீனா,
//இச்சுன்னு இருக்கு - பாராட்டுகள்//

பாராட்டுக்கு மிக்க நன்றி!
மொக்கைப்போட்டாலும் பாராட்டும் பெரிய மனசு உங்களுக்கு!
-------------------------------
செந்தழலாரே வாங்க,
நன்றி!

எல்லாம் 100 சதவீத சொந்த சரக்குங்க , மண்டபத்தில் எழுதி தர எனக்கு ஆள் இல்லையே....
-------------------------------
பாசமலர்,
நன்றி!
எப்படியோ என்னையும் tag la(வம்புல) மாட்டி வேடிக்கை பார்த்தாச்சு!

கண்மணி/kanmani said...

நல்லாவே சிரிப்பு வந்தது .ஆமா மொக்கை டேகுக்கு ஏன் காமெடி போட்டீங்க;)
உங்க சொந்த கற்பனைன்னா குட்..குட்

சுட்டதுன்னா...பரவாயில்லை.

வவ்வால் said...

கண்மணி,
நன்றி!

என்ன இது சொந்த சரக்குனு டிஸ்கி போட்டாத்தான் நம்புவிங்களா, எல்லாம் என் கைங்கர்யம் தான்.

நகைச்சுவைனு சொன்னா எப்படியும் இதுவா நகைச்சுவை சரியான மொக்கைனு தான் சொல்லப்போறாங்க , ஏற்கனவே மொக்கை tag வேற போட சொல்லியாச்சு, அதான் நானே மொக்கைனு சொல்லிட்டா எப்படியும் நான் சொன்னதை மறுக்கணும்னு முடிவில வரவங்க மறுத்து சொல்லுவாங்க தானே , :-))
(ஒ.க.இ.மா)

மேலும் இங்கே பலர் டென்சனாக அலையறாங்க ... சிரிச்சா டென்சன் குறையுமாமே அதான் சிரிக்க வைக்கிறேன்!

கண்மணி/kanmani said...

மேலும் இங்கே பலர் டென்சனாக அலையறாங்க ... சிரிச்சா டென்சன் குறையுமாமே அதான் சிரிக்க வைக்கிறேன்!//

ஆமாம் நானும் கேள்விப்பட்டேன்.
கோபத்தில் தனித்தனியா பதிவு கூட போட்டாங்களாம்;)
இதுதான் பு.கி.தொ.ஆ இரகசியமா?

Unknown said...

வவ்வால்,

சீரியசான அரசியல் மொக்கைக்கு உங்களை மாட்டிவிட்டிருக்கேன். கோவி வாராக, லக்கி வாராக, குசும்பன் வாராக... வாம்மா வவ்வால்... :)

வவ்வால் said...

கண்மணி,

//ஆமாம் நானும் கேள்விப்பட்டேன்.
கோபத்தில் தனித்தனியா பதிவு கூட போட்டாங்களாம்;)//

அப்படியா யாரது, டென்சனாக பதிவு போட்டாங்கனு தெரிஞ்சா அங்கே போய் இன்னும் டென்சன் பண்ணுவோம்ல!

சுட்டித்தரவும்!
(ஊரைவிட்டு ஓடிப்போரேன்னு அழுவாச்சி பதிவு போட்டவுகளை எல்லாம் கணக்கில எடுக்காதிக அம்மணி!நாளைக்கே sms ல அய்ஸ்வர்யா ராய் கூப்பீட்டாக அதான் வந்தேன்னு வருவாக :-)))

--------------------------
இசை ,

எங்கேய்யா என்னை மாட்டி விட்டிருக்க சொல்லிட்டு மாட்டுங்கய்யா.. இது என்ன ரோதனையா போச்சே!

நான் எல்லாம் சும்மா பொங்கலுக்கே பட்டாசு வெடிப்பேன், இப்படிலாம் வாய்ப்பு கிடைச்சா தீவாளி போல கொண்டாடிட மாட்டோமா! :-))

துளசி கோபால் said...

சர்வேச பாண்டியர்தாங்க தூள்:-)))))

மொதல் மூணு ஜோக்ஸ்- உண்மையான மொக்கை(கள்)

Mangai said...

Missed call and anony matter was excellent.

முரளிகண்ணன் said...

super super

வவ்வால் said...

துளசி கோபால்,
நன்றி!
என்ன முதல் மூன்றை மட்டும் மொக்கை சொல்றிங்க , எல்லாமே மொக்கை போடும் நோக்கத்தில் சொன்னது தானே! 3யை மட்டும் சொல்வதன் மூலம் என் நோக்கத்தை களங்கப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் :-))
--------------------------------
மங்கை,
நன்றி!
எல்லாம் தானா வரது தான்!
----------------------------
முரளிக்கண்ணன் ,
உங்கள் ஊக்கத்திற்கு
நன்றி!

Anonymous said...

//ஊரைவிட்டு ஓடிப்போரேன்னு அழுவாச்சி பதிவு போட்டவுகளை எல்லாம் கணக்கில எடுக்காதிக அம்மணி!நாளைக்கே sms ல அய்ஸ்வர்யா ராய் கூப்பீட்டாக அதான் வந்தேன்னு வருவாக :-))) //

ஆஹா! ஒரு ஆள் மாட்டக்கூடாதே! குசும்பனோட அண்ணாத்தைக் கிட்டயே குசும்பா?

(இருந்தாலும் சிரிக்காம இருக்க முடியல ஹி..ஹி..)

வவ்வால் said...

அனானி அண்ணாத்த ,
வலை அரசியலில் கைத்தேர்ந்தவர் போல தெரிதே! :-))

விக்கெட் போனாலும் ஸ்டீவ் பக்னர் போல யார் துணைலவாது ஆடும் சைமண்ட்ஸ் போல வலைப்பதிவில் அவுட் ஆனப்பிறகும் ஆட்டத்தை தொடர்வது சகஜம் தானே! :-))

கொசுத்தொல்லை தாங்க முடியலையப்பா! அப்படினு நாமளும் சகிச்சுக்கிட்டு போவதில்லையா என்ன?

மங்களூர் சிவா said...

vovaal Juper Juper

மங்களூர் சிவா said...

//
பலர் டென்சனாக அலையறாங்க ... சிரிச்சா டென்சன் குறையுமாமே அதான் சிரிக்க வைக்கிறேன்!
//
Needhaan ellarayum tension panradhaa thagaval!!

வவ்வால் said...

ம.சிவா,

நன்றி!

நாம் என்னத்தை டென்சன் பண்றோம், ஏதோ கலாய்க்கிறோம் அம்புட்டுதேன்! அவுகளா டென்சன் ஆவுறாக பொறவு நாம என்ன செய்ய அதான் கொஞ்சம் சிரிப்பு மருந்த கலக்கி கொடுக்கிறோம்ல, கெரகம் நடக்கிறது நடக்கத்தான் செய்யும் சரியா இருந்தா தானா சரியா நடக்கும்!

எலே மக்கா வாய் விட்டு சிரிச்சா நோவு வுட்டு பூடுமாம்,ஆனா ரோட்டில தனியா மட்டும் சிரிச்சுனு போவப்படாது

என்ன நான் சொல்றது சரித்தானே! :-))

தென்றல் said...

நீங்களும் ஜோதியில 'கலந்துட்டீங்களா'!!

பாண்டிய மன்னன், மந்திரி, காவலன் -- இவர்களுக்கும் இதே பேச்சு, சந்தேகம்தான...

நல்ல கற்பனை! கற்பனைதான..?? ;)

Unknown said...

பரவாயில்லை வவ்வால் இந்த முறை மேக்ஸிமம் லாஃப்டர் க்ரியேட் பண்ணியிருக்கீங்க.

வவ்வால் said...

தென்றல்,
//நீங்களும் ஜோதியில 'கலந்துட்டீங்களா'!!//

என்னமோ பரங்கிமலை ஜோதி ரேஞ்சுக்கு நீங்களுமானு இழுக்கறிங்க...ஆம் அடியேனும் தான்!

சொந்தக்கற்பனைனு டிஸ்கி போட மறந்துபோச்சு! சர்வேசபாண்டியர்னு உங்களுக்கு தெரிஞ்சவர் இருக்காங்களோ? :-))
------------------------

உமையணன்,
நன்றி!
sense of humour, humour sense என்று இருக்கு , ஒருத்தர் சிரிக்க வைப்பார் சிரிக்க தெரியாது, இன்னொருத்தர் சிரிப்பார் ,சிரிக்க வைக்க மாட்டார், எனவே எல்லாரும் ஒரே புள்ளியில் சிரிக்க மாட்டாங்க!

Anonymous said...

//விக்கெட் போனாலும் ஸ்டீவ் பக்னர் போல யார் துணைலவாது ஆடும் சைமண்ட்ஸ் போல வலைப்பதிவில் அவுட் ஆனப்பிறகும் ஆட்டத்தை தொடர்வது சகஜம் தானே! :-))

கொசுத்தொல்லை தாங்க முடியலையப்பா! அப்படினு நாமளும் சகிச்சுக்கிட்டு போவதில்லையா என்ன?//

சைமண்ட்ஸே பரவாயில்லையப்பூ! இவரு 105ல அவுட் ஆயிட்டு சத்தம் போடாம 106ன்னு ஆட வந்துட்டாருங்கோ!!!!

காட்டாறு said...

மொக்கைச் சிரிப்பா? புதுசா இருக்கே. ஹா ஹா ஹா

வவ்வால் said...

அனானி,
//சைமண்ட்ஸே பரவாயில்லையப்பூ! இவரு 105ல அவுட் ஆயிட்டு சத்தம் போடாம 106ன்னு ஆட வந்துட்டாருங்கோ!!!!//

பெரிய ஆளா இருக்கையா யார் அவுட் ஆகி , அழுகுணி ஆட்டம் ஆடிக்கினு வராங்கணு சரியா நோட்டம் பார்த்து வச்சுருக்கையா? சரி விடு இங்கே எதுனா ஸ்டீவ் பக்னி! துணை இருந்து இருக்கும்! :-))
--------------------------------
காட்டாறு,
நன்றி,

சிரிப்பு வந்துட்டா அது மொக்கை ஆகாதே:-(
(ச்சே நான் சிரிப்புத்துணுக்குனு போட்டா மொக்கைனு சொல்றாங்க ஆனா மொக்கைனு சொல்லிப்போட்டா சிரிக்குறாங்க , என்னக்கொடுமை சார் இது!)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by a blog administrator.