Friday, January 18, 2008

பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்!

பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்கள் என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். வரதட்சனை வாங்காமல் எந்த அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்தார், (அமெரிக்காவில் வாங்கும் சம்பளம், கிரீன் கார்ட் என அதற்கு தக்க வரதட்சணை அளவு ஏறும்)அதுவும் அளவுக்கதிகமாக வாங்குவது வழக்கம்.எனவே விலைக்கொடுத்து வாங்கிய மாப்பிள்ளையினை கட்டுப்படுத்தப்பார்ப்பது வாங்கியவரின் (பெண்ணின்) விருப்பம் தானே! உண்மையான பிரச்சினையைப்பேசாமல் வேறு ஏதோ ஒன்றினைப்பேசி திசை திருப்பும் பதிவினைப்போட்டு அனுதாபம் தேடும் செயல் மானங்கெட்ட செயல் அல்லவா?

நான் இந்தப்பதிவில் தற்ப்போது பெரிதாக எதுவும் சொல்லப்போவதில்லை, அமெரிக்க உத்தியோகம் (NRI என சொல்லி), அல்லது மென்பொருள் துறை உத்தியோகம் என சொல்லி வர தட்சிணைக்கறக்காமல் எத்தனை மாப்பிள்ளைகள் மணம் புரிந்துக்கொண்டார்கள் என்று அறிவதே! வாங்குற
வரதட்சணையை எல்லாம் வாங்கிட்டு அந்த பெண் அதை சொன்னால் இதை சொன்னால் என்று சொல்வதால் என்னப்பயன்!

பொதுவாக நான் கேட்கிறேன், எத்தனை NRI மாப்பிள்ளைகள் "எதுவும்" வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்? (அதுவும் பொண்ணு அழகாக , சிவப்பாக , குறைந்தப்பட்சம் டிகிரி+mca , அல்லது பொறியியல் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் உண்டு,அப்போத்தானே அமெரிக்காவிற்கு வந்தாலும் வேலைக்கு அனுப்பி கூடுதலாக வருமானம் பார்க்கலாம்),விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இருக்க மாட்டார்கள்!

48 comments:

Voice on Wings said...

வழி மொழிகிறேன்.

Unknown said...

அப்படிப்போடுங்க அருவாள :-)

Sridhar V said...

வாங்க வாங்க!

உங்க ஸ்டைல்ல டைமிங்கா பதிவு போட்டிருக்கீங்க :-)

அங்க செம கூட்டம். இங்க அவ்வளவு வராதுன்னுதான் தோணுது. பெண்கள், பெண் குழந்தை பெற்றவர்கள் போல் சிலர் வரலாம்.

வரதட்சிணை விஷயத்தில் அந்த மாப்பிள்ளைகளை விட அதில் முனைப்பாக இருக்கும் அவர்கள் வீட்டு பெண்களைப் பார்க்கும்பொழுதுதான் ஆச்சர்யமாக இருக்கும்.

தங்கள் திருமணத்தின்போது வரதட்சிணையை பற்றி குறை கூறும் எத்தனை பெண்கள் தங்கள் சகோதரர், மகன் திருமணத்தின் போது வரதட்சிணை முறையை எதிர்க்கிறார்கள் என்பது ஒரு பெரும் கேள்வியே. :-(

Sridhar V said...

முந்திய பின்னூட்டத்தில் விடுபட்டுப் போன டிஸ்கி :-)

//பெண்கள், பெண் குழந்தை பெற்றவர்கள் போல் சிலர் வரலாம்.//

நான் பெண்ணுமல்ல. எனக்கு பெண் குழந்தையும் இல்லை. :-)

Thekkikattan|தெகா said...

இது, இதுதான் வவ்ஸ்ங்கிறது. அடிச்சீங்க பாருங்க ஒரு அடி.

இதேதான் என்னொட வரதட்சினை பதிவில நானும் கேட்டிருப்பேன்...

விளை போனதற்குப் பிறகு அவ இப்படி சொல்றா அப்படிச் சொல்றான்னு அழுதா அதுக்கு யார் பொறுப்பாளி...

::-))) நல்லா கேட்டீங்க, வவ்ஸ்...

Anonymous said...

I can't agree more with you.

Another thing is - while selecting girls, NRI guys usually go for a girl whose family is in economically high status than the guy's family. So, obviously the girl's expectations are more as she was raised so.

Guys are greedy b4 wedding and they suffer after the wedding. If he selects a girl suitable for him and his family, things will be different..

வவ்வால் said...

வாய்ஸ் ஆன் விங்க்ஸ்,
நன்றி!
அடிப்படை உண்மையை வழிமொழிந்தமைக்கு!
-------------------------------
சேதுக்கரசி,
நன்றி!
//அப்படிப்போடுங்க அருவாள :-)//

அருவாளை போடாம கைல வச்சுக்கிட்டு மிரட்டணும் போட்டாச்சுனா பயம் தெளிஞ்சு போய்டாதா :-))
------------------------------

ஸ்ரீதர் நாராயணன்,
நன்றி!

நீங்க ஏன் பயப்படுறிங்க இதுக்கு ஆதரவாக பின்னூட்டம் போட்டா பெண் என நினைப்பாங்கணு, பதிவு போட்ட நானே பெண் அல்ல, ஆணாக இருந்தாலும் உண்மைனு ஒன்று இருக்கே அதை சொல்ல வேண்டாமா?

//திருமணத்தின்போது வரதட்சிணையை பற்றி குறை கூறும் எத்தனை பெண்கள் தங்கள் சகோதரர், மகன் திருமணத்தின் போது வரதட்சிணை முறையை எதிர்க்கிறார்கள் என்பது ஒரு பெரும் கேள்வியே. :-(//

காரணம் அவர்களால் குடும்பத்தை விட்டு போன பணம் மீண்டும் வரட்டுமே என்ற "நல்ல" ஆசையாக இருக்கலாம், ஆனாலும் அதுவும் தவறே!

நீங்கள் சொன்னது சரியே சமீப காலமாக எனது திருமணம் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் எனது சகோதரியே எனக்கு பொண்ணுப்பார்க்க போனா எவ்வளவு கேட்கணும்னு எங்கம்மா கிட்டே என் எதிர்காலம் பத்தி சொல்லிக்கிட்டு இருக்காங்க!( ரொம்ப கேவலமாத்தான் இருக்கு , இது வரைக்கும் எதுவும் சொல்லாமல் அவர்கள் பேசுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன்,அடிப்படையாக இதை எல்லாம் எதிர்ப்பவன்)

மருமகள்கள் மட்டும் பேராசைப்படுவதாக பதிவு வந்தமையால் தான் இதையும் பதிவு செய்கிறேன்.

எல்லா நாணயத்திற்கும் இரண்டுப்பக்கங்கள் உண்டு தானே!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ILA (a) இளா said...

வவ்வால், NRIக்கள் பொதுவா பெருசா எதிர்பார்க்க மாட்டாங்க(இந்திய மாப்பிள்ளைங்க மாதிரி). ஏன்னா இவுங்களுக்கு பணம் பிரச்சினை கிடையாது. நல்ல பொண்ணா இருந்தா போதுங்கிறதுதான் இவுங்களுக்கு இருக்கிற பெரிய எதிர்பார்ப்பே. நானும் இதைப்பத்தி பதிவு எழுதிட்டே இருக்கேங்க. இதுக்கும் அங்கே பதில் இருக்குங்க.

Unknown said...

வாங்கைய்யா வவ்வாலய்யா... வாங்க ஒரு கை பாப்போம்னு எறங்கிட்டீங்க :)


//எனவே விலைக்கொடுத்து வாங்கிய மாப்பிள்ளையினை கட்டுப்படுத்தப்பார்ப்பது வாங்கியவரின் (பெண்ணின்) விருப்பம் தானே!//

நல்லா கேட்டீங்க! 'விலை' போகும் மாப்பிள்ளைகளால் காலம் பூராவும் பிரச்சினைதான்.
விலை பேசல் இல்லா வாழ்வில் இந்தப் பிரச்சினை என்றால், புரிந்து கொள்ளாமைதான் காரணம்!

வவ்வால் said...

தெகா,
நன்றி,

அடி எல்லாம் இடி மாதிரி இருக்கோ!
எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்தது தானே! :-))

விலைப்பேசி மணம் புரிந்தவர்கள் , மனம் நோவதேன்?
----------------------------------

அனானி,
நன்றி,
//NRI guys usually go for a girl whose family is in economically high status than the guy's family. So, obviously the girl's expectations are more as she was raised so.
//

அப்போ மணத்தின் போது பரிமாற்றம் எதுவும் இல்லாமல் மனசு பொருத்தம் மட்டும் நடை பெருமா அங்கே? தன்னை விட அதிக அந்தஸ்தில் பெண்ப்பார்ப்பதே கேட்டதை குறைவில்லாமல் கொடுப்பார்கள் என்று தானே!

//Guys are greedy b4 wedding and they suffer after the wedding. If he selects a girl suitable for him and his family, things will be different..//

இது தான் உண்மை இதைத்தான் நானும் சொல்கிறேன்!
-------------------------------
இளா,
நீங்க சூப்பர் ஸ்டார் போல , தமிழ்கலாச்சாரத்தோட பொண்ணு மட்டும் போதும்னு இருந்து இருப்பிங்க! :-))

//NRIக்கள் பொதுவா பெருசா எதிர்பார்க்க மாட்டாங்க(இந்திய மாப்பிள்ளைங்க மாதிரி). ஏன்னா இவுங்களுக்கு பணம் பிரச்சினை கிடையாது.//

ஆனால் உண்மை வேறு மாதிரி, lkg படிச்சதில இருந்து, அமெரிக்கா போனது வரைக்கும் ஆன செலவை சொல்லி திருமண பேரம் பேசுபவர்கள் தான் மிக அதிகம்!

ஒரு கிளாசிக்கல் உதாரணம் , உலகத்திலேயே இள வயதில் டாக்டர் ஆனது ஆந்திராவை சேர்ந்த ஒரு அமெரிக்க NRI குடும்பத்தை சேர்ந்தவர் தான் பால முரளி அம்பாடி M.D, 17 வயதில் டாக்டர் ஆனவர், கின்னசிலும் பேர் வந்தது, அவரது அண்ணன் அவரும் டாக்டர் , அவர்கள் குடும்பமே மருத்துவர் குடும்பாம், ஆனால் இந்தியாவில் 3 மாதம் சிறைக்கு போனார் குடும்பத்தோடு, அந்த சாதனை மருத்துவரும் உள்ளேப்போனார்,வரதட்சணைக்கொடுமை சட்டத்தில்! ஏன்? எல்லாம் பேராசை தான்!

இதனை கூகிளில் தேடிப்பார்த்தாலும் காட்டும்!

எனவே NRI கள் வரதட்சணை வாங்குவதில்லை என்பது வெகு அரிதானதே! எவ்வளவு வசதி இருந்தாலும் வாங்குபவர்கள் தான் அதிகம்.
------------------------------------
தஞ்சாவூரான்,
நன்றி,
ஒரு கை என்ன ஆயிரம் கை வந்தாலும் பார்ப்போம்ல, விலை பேசல் இல்லா வாழ்க்கை வரட்டும், அப்புறம் அதில் பிரச்சினை வேறு மாதிரி தான் வரும், அதையும் எதிர்க்கொள்ளட்டுமே.

வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்சினை இருக்கும், வாசல்கள் தோறும் வேதனை இருக்குமே!
--------------------------

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

ஒரு சிறு விளம்பர தட்டியை இங்கே சாச்சு வைச்சிக்கிறேன்... பெரிய மனசு பண்ணுங்கோ...

இப்படித்தான் என் வரதட்சிணை பதிவுல ஒரு இடத்தில் குறிப்பிட்டேன்... இப்ப நடக்கும் அடிதடியின் பிண்ணனிக்கு காரணமாக..

...இதன் உளவியல் பின்னணியில்தான் அது போன்று வாழ்க்கை நடத்த வந்த பெண்களில் சிலர் தனது கணவனையே தூக்கிப்போட்டு பந்தாடும் நிலையில் வைத்துக்கொள்கிறாரா, அட கடன்காரா என்று? ஆமாம், பிறகு எப்படி எடுத்துக்கொள்வது, ஒரு புது வரவு தன் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே கல்லூரி விடுதியில் தனது தங்கள், உணவிற்கென முன்பணம் கட்டிவிட்டு சேருவதனைப்போன்றல்லவா இந்த சூழ்நிலையும் இருக்கிறது. பிறகு பணம் கட்டி உள் நுழைபவர் வசதிக்கேணும் அந்த விடுதியில் இருப்பவர்கள் சற்று வளைந்து கொடுத்துப்போக வேண்டாமா? அவ்வாறு எதிர்பார்ப்பதில்தான் என்ன தவறு இருக்கிறது?...

http://thekkikattan.blogspot.com/2007/09/blog-post.html

ILA (a) இளா said...

//வரதட்சணைக்கொடுமை சட்டத்தில்! ஏன்//
இது சத்தியமா பொண்ணுங்க இந்த சட்டத்தை தப்பா பயன்படுத்துற சட்டம். இதே மாதிரி ஒரு VP மருமகள் ஒரு கேஸ் போட்டாங்க. இவுங்களுக்கு பழி வாங்கனும்னா இருக்கவே இருக்கு வரதட்சணை கொடுமை சட்டம். இதே மாதிரி அன்மையில திருச்சி மாப்பிள்ளைக்கும் ஆச்சு? அதுக்கு காரணம் மீடியாக்கள் சொன்னது வரதட்சணை, கேஸும் அதுதான். ஆனா உண்மையான காரணம் வேறைங்க.

வவ்வால் said...

தெகா,
இதென்ன கேள்வி,இங்கே எந்த கட்டுப்பாடும் கிடையாது(மட்டுறுத்தல் கூட இல்லை) தட்டி என்ன பெரிய ஹோர்டிங்க் கூட வச்சுக்கலாம்!

//பிறகு பணம் கட்டி உள் நுழைபவர் வசதிக்கேணும் அந்த விடுதியில் இருப்பவர்கள் சற்று வளைந்து கொடுத்துப்போக வேண்டாமா? அவ்வாறு எதிர்பார்ப்பதில்தான் என்ன தவறு இருக்கிறது?...//

நீங்க அப்பவே நெத்தி அடி அடிச்சு இருக்கிங்க போல நான் தான் அதைப்பார்க்கலை(வசந்தம் ரவி கூடப்பார்க்கலை போல)

ILA (a) இளா said...

என்னுடை ஒத்த வரி கருத்து, இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு காரணம் பணமோ பொருளோ அல்ல .. மனவியல்தான் காரணம்..

வவ்வால் said...

இளா,
நன்றி!
NRI கள் பொருளாதார எதிர்ப்பார்ப்பு( வரதட்சணை) இன்றி கல்யாணம் செய்வது வெகு ..வெகு குறைவே, அப்படி வாங்கிக்கொண்டு செய்தாலும் பிரச்சினை இல்லாமல் பலருக்கும் வாழ்வு அமைகிறது எனவே பெரிதாக வெளியில் தெரிவதில்லை. ஆனால் இப்படி வெளியில் தெரிய வரும் பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது அப்படிப்பட்ட டிமாண்ட்கள் தான்.

//பணமோ பொருளோ அல்ல .. மனவியல்தான் காரணம்..//

கண்டிப்பாக எந்த வகை திருமண பந்தத்திலும் மனவியல் தான் முக்கியம், ஆனால் பிரச்சினையை தூண்டும் காரணியாக பணவியல் இருக்கும் என்பதே உண்மை!

ILA (a) இளா said...

இதைப்பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தியதன் பிண்ணனியே இந்த மறுப்புக்கு காரணம். ஏனெனில் நான் செய்துவரும் முதுகலை உளவியலில் இதைத்தான் செய்து வருகிறேன். அதனால் என்னால் வெளியே சொல்ல முடியாத ஆதாரங்கள் உண்டு. மனப்புழுக்கம், பணப்புழுக்கத்தை கூடவே கூட்டி வரும்னு வேணுமின்னாலும் சொல்லிக்கலாம்

இம்சை said...

நன்று என்னொட கமெண்ட் அங்க போட்டேன் அதான் இங்கயும்.

நான் எதுவுமே சொல்ல வரலங்க, எல்லா செயல்களுக்கும் +ve & -ve இருக்கும், யாருமே யாருக்கும் வேண்டும் என்றே கெடுதல் நினைப்பதில்லை, எந்த மனிதனுக்கும் +ve & -ve இருக்கும், யாருமே இங்க perfect கிடையாது,

ஒரு மனைவி அப்படி இருக்கிறார் என்றால் அதற்கு ஒரு வகையில் காரணம் கணவன்/மாமியார்/மாமனார் தான்...

ஒருவர் நமக்கு கெடுதல் நினைக்கிறார் அல்லது செய்கிறார் என்றால் எதாவது காரணம் இருக்கும். தவறு நம்மிடமும் இருக்கும்...

ஆகா ரொம்ப தத்துவமா வருதே சரி இதோட போதும்.

இம்சை said...

என்னோட கேள்வி...ஏன் அமெரிக்கா போகனும்...இங்கயே சம்பாதிச்சி ஜாலியா இருக்கலாமே...

இங்க நாம வாங்கர சம்பளத்தில ஒருவர் சமையலுக்க்கு, ஒருவர் குழந்தைய பார்த்துக்க, ஒருவர் வீடு கூட்டி பெருக்கி, பாத்திரம் கிளின் பண்ன, ஒருவர் கார்டன் பராமரிக்க, ஒருவர் துணி துவைத்து ஜ்ரன் பண்ண, ஒருவர் கார் சுத்தம் பண்ண, ஒருவர் கார் ஓட்ட என் வெலைக்கு வைத்துக்கலாம், போன் பண்ணா காய்கரி, பொருள்கள், மாத்திரை, டாக்டர், ஹோட்டல், இன்னும் பல வீட்டுக்கு வரவைக்கலாம்.

இது போக ஆபிஸ்ல உக்கார்ந்து 7.5 மணி நேரம் தமிழ்மணம் படிக்கலாம், மொக்கை போடலாம், கும்மி அடிக்கலாம் நினைச்சப்ப வீட்டுக்கு போகலாம், லீவு போடலாம், வாழ்க்கைய ஜாலியா என்சாய் பண்ணலாம்...

என்ன சம்பளம் கொஞ்சம் கம்மி ஆனா அமெரிக்காவோ இல்ல வேற எங்கயாவது இப்படி பண்ண முடியுமா...

இத பத்தி ஏன் யாருமே பதிவு போடல... யாராச்சும் போடுங்கப்பா...
//
மங்களூர் சிவா said...

இம்சை டூட்டில ஒரு அரை மணி நேரம் கொறையுதே என்ன மேட்டர்??

இம்சை said...

அண்ணே அந்த அரைமணி நேரம் தான் உக்கார்ந்து யோசிச்சி ரூம் போட்டு யோசிச்சி time sheet fill பண்ணரேன், அப்புறம் டெய்லி நாம பண்ணர சாதனைகளை appraisalகாக ரெக்கார்ட் பண்ணி வைக்கனும், இதெல்ல்லாம் பண்ணினாதான்யா வருசா வருசம் புரமோசன், சம்பளம், டாப் பெர்பார்மர் அவார்டு, போனஸ் எல்லாம் கிடைக்கும்... ஆகா ஏன்பா வாய கிளரி இப்படி உண்மைய சொல்ல வைகறிங்க, நல்லவேளை என்னோட டேமேஜர்கு அங்கரேசி தவிர ஒன்னும் தெரியாது அவரு பாவம் அமெரிக்கால வாங்கர டாலர் பத்தாம பாவம் சைட் பிசினஸ் பண்ணராரு , அப்ப அப்ப என்கிட்ட பெங்களூர்ட் ஆயிடுவேனோன்னு பயமா இருக்குன்னு பொலம்பராரு...

எல்லா ஆட்டமும் இன்னும் கொஞ்ச நாள் தான், மீண்டும் 2000-01 போல ஒரு நிலம வந்தா எல்லாம் சரியாயிடும் , அது வரைக்க்கும் தமிழ்மணம் தான் கதி.

இம்சை said...

ILA(a)இளா said...
வவ்வால், NRIக்கள் பொதுவா பெருசா எதிர்பார்க்க மாட்டாங்க(இந்திய மாப்பிள்ளைங்க மாதிரி). ஏன்னா இவுங்களுக்கு பணம் பிரச்சினை கிடையாது. நல்ல பொண்ணா இருந்தா போதுங்கிறதுதான் இவுங்களுக்கு இருக்கிற பெரிய எதிர்பார்ப்பே. நானும் இதைப்பத்தி பதிவு எழுதிட்டே இருக்கேங்க. இதுக்கும் அங்கே பதில் இருக்குங்க.

அண்ணே அப்படியே நம்ம கேள்விக்கும் பதில் போடுங்கண்ணே ?

Sridhar V said...

//நீங்க ஏன் பயப்படுறிங்க //
பயந்தா உங்க பதிவு பக்கம் எல்லாம் வரமுடியுமா? நாங்க பின்னூட்டத்துக்கே டிஸ்கி போட்டு பதிவு ரேஞ்சுக்கு எழுதுவோம்ல :-)

//சமீப காலமாக எனது திருமணம் பற்றி பேச்சு வரும் போதெல்லாம்//

இது எந்த 'சமீப காலம்' ? :-))

//இது வரைக்கும் எதுவும் சொல்லாமல் அவர்கள் பேசுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன்,//

உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்கள் பெற்றோரிடம் பக்குவமாக எடுத்து சொல்லி புரியவைத்து 'புரட்சி' திருமணம் புரிவது.

அல்லது, அவங்க மனம் கோணாமல் நடந்து கொண்டுவிட்டு இன்னும் ரெண்டு பதிவு எழுதலாம் :-)

இளா!

நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். வரதட்சிணை விஷயத்துல மட்டுமல்ல... விவாகரத்துலயும் பெண்களுக்கு கொஞ்சம் சார்பாத்தான் சட்டம் செய்லபடும். ஏனென்றால் இந்த திருமணச் சடங்குல நம்ம சமூகம் பெண்களைத்தான் அதிகம் எக்ஸ்ப்ளாயிட் பண்ணுதில்லையா.

பெண் பிறந்தவுடன அந்த குழந்தையோட கல்வி மற்றும் இதர விஷயங்களுக்கு சேமிப்பு தொடங்கற மாதிரி, திருமணத்துக்கும் தொடங்கிடறாங்க. ஆண் குழந்தைகளுக்கு அப்படி யாராவது ஏற்பாடு செய்கிறார்களா?

100 பவுன், 2 இலட்சம், வைர நகைகள் - இதெல்லாம் என்னோட வெல்த் கிரியேஷன் நோக்கங்கள் இல்லைங்க... தமிழகத்தில் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சார்ந்த எனது நன்பர் 10 வருடம் முன்னால் திருமணம் செய்த பொழுது வந்த தட்சிணைதான். அதே மாதிரி கேரளாவை சேர்ந்த NRI நன்பர் ஒரு இசுலாமியர். அவரும் கிட்டத்தட்ட இதே ரெஞ்ச்தான். கூடவே ஒரு esteem கார், மற்றும் 10 இலட்சம் ரொக்கம் வாங்கிகிட்டார்.

வரதட்சிணை என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆக அல்லவா பார்க்கபடுகிறது.

வவ்வால் said...

இளா,
//இதைப்பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தியதன் பிண்ணனியே இந்த மறுப்புக்கு காரணம். //

நீங்கள் இது குறித்து கருத்துக்கணிப்பு எல்லாம் உங்கள் படிப்பு சார்ந்து செய்துள்ளீர்களா, நல்ல விஷயம் , புதுமையான ஒரு முயற்சி,பாராட்டுக்கள்!

ஆனால் கருத்துக்கணிப்பில் உண்மையை சொல்பவர்கள் வெகு குறைவு என்றும் நினைக்கிறேன்.

மற்றப்படி NRI என்று சொல்லி திருமணசந்தையில் அதிகப்பேரம் பேசுவது தான் இங்கே எனக்கு தெரிந்து வாடிக்கை!

உங்கள் தகவலுக்காக, பாண்டிச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமைப்பெற்ற பெண் எனில் பெண்ணுக்கே வரதட்சணைக்கொடுத்து சாதாரண மாப்பிள்ளைக்கட்டிக்கொள்வார்கள்!எனக்கு தெரிந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது அங்கு தான்!

வவ்வால் said...

இம்சை,
நன்றி!
//ஒரு மனைவி அப்படி இருக்கிறார் என்றால் அதற்கு ஒரு வகையில் காரணம் கணவன்/மாமியார்/மாமனார் தான்...//

இதன் அடிப்படையில் தான் இந்தப்பதிவேப்போடப்பட்டது.

ஏன் அமெரிக்காப்போகணும் இங்கேவே இருக்கலாமே என்றால் டப்பு தான் மேட்டர். மேலும் அவர்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் ஒரு மரியாதை... இப்படி பல சின்ன சின்ன காரணங்களுக்காக அமெரிக்காவில் நாய்ப்படாத பாடு படவும் தயாராக இருக்கிறார்கள் நம்மவர்கள். ஆனால் இப்போதைய iim மாணவர்கள் தெளிவாக இந்திய வேலையேப்போதும அமெரிக்காவை விட 1/4 அளவு சம்பளம் என்றாலும் அதுவே இங்கே 4 மடங்கு வசதி தருகிறது என்று நிம்மதியாக இந்திய வேலையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

வவ்வால் said...

ஸ்ரீதர் வெங்கட்,

//பயந்தா உங்க பதிவு பக்கம் எல்லாம் வரமுடியுமா? //

அப்போ நம்ம பதிவு என்ன திகில் ஊட்டும் வண்ணம் இருக்கா :-))

//இது எந்த 'சமீப காலம்' ? :-))//

இது அந்த சமீபகாலம் இல்லை, தற்சமயம் வெகு சமீபம் ஆகும்.

எப்படிப்பார்த்தாலும் ஒரு பதிவு போட வாய்ப்பு வரும் என்றே நினைக்கிறேன்!

நீங்க சொன்ன மற்ற வரதட்சணை மேட்டர்லாம் உண்மையோ உண்மை, அதுவும் நாகர்கோவில் பக்கம் எல்லாம் 3000 சம்பளத்தில் டிரைவர் வேலை செய்தால் கூட லட்சக்கணக்கில் அள்ளுவாங்கலாம்( சொந்தமாக டாக்சி வாங்கி கொடுங்க, நகைப்போடுங்க என்ற வகையில்)

//வரதட்சிணை என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆக அல்லவா பார்க்கபடுகிறது.//

படித்த, படிக்காத, மற்றும் NRI என எல்லா இடங்களிலும் இப்படித்தான் ஆகி போச்சுங்க!

இம்சை said...

வவ்வால் நானும் என் பங்குக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன் ஆனா பாருங்க என்னோட ப்லொக் பிராப்ளம் குடுக்குது.
This blog is currently inaccessible.

Blogger engineers will be deploying a fix presently.

We apologize for this interruption in service.

வவ்வால் said...

இம்சை,
//வவ்வால் நானும் என் பங்குக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன் ஆனா பாருங்க என்னோட ப்லொக் பிராப்ளம் குடுக்குது.//

அய்யகோ இது என்ன கொடுமை இம்சைக்கே இம்சை தரும் இந்த பிலாக்கரை என்ன செய்தால் தகும் ,கழு மரத்தில் ஏற்றலாமா? :-)

துளசி கோபால் said...

நான் 'அங்கே' போயிட்டு இப்ப 'இங்கே' வந்தேன்.

நானும் ஒரு பெண். எனக்கு(ம்) பெண் குழந்தை இருக்கு:-))))))

Sridhar V said...

//நானும் ஒரு பெண். எனக்கு(ம்) பெண் குழந்தை இருக்கு:-))))))//

ஆஹா... திருப்பிட்டீங்களே :-)

சரி விடுங்க 'பேராசை பிடித்த நியூசிலாந்து மாப்பிள்ளை(க்) குடும்பங்கள்' அப்படின்னு ஒரு பதிவு போட்டுர்றலாம் :-))))

ILA (a) இளா said...

1.

2.

வெளிநாட்டு வேலைக்கு போவனுமான்னு கேட்டதுக்கு நன்றி. இந்தியாவுல ஸ்டவ் வெடிக்கிற மாதிரி வேற நாட்டுல்ல வெடிக்கிறது இல்லீங்க. என்னமோ இந்தியாவுல இருந்துட்டா மட்டும் பிரச்சினை இல்லீங்கிற மாதிரி பேசிட்டு இருக்கிற இசை அவர்களே.

வவ்வாலு, பதிவின் நோக்கம் என்னன்னு தெரியாம வந்துட்டேன். வெளிநாட்டு வேலைக்கு போவனுமான்னு கேட்க பதிவு போட்டு இருந்தா நான் அப்பீட்டுங்கோவ்..காரணம் என்னோட வாதம் அது இல்லீங்க.வர்ட்டா.

இம்சை said...

வவ்வாலு, பதிவின் நோக்கம் என்னன்னு தெரியாம வந்துட்டேன். வெளிநாட்டு வேலைக்கு போவனுமான்னு கேட்க பதிவு போட்டு இருந்தா நான் அப்பீட்டுங்கோவ்..காரணம் என்னோட வாதம் அது இல்லீங்க.வர்ட்டா.

அண்ணே அவரு சரியாதான் போட்டு இருக்காறு தப்பு என்னோடது தான்

அரை பிளேடு said...

//இதே மாதிரி அன்மையில திருச்சி மாப்பிள்ளைக்கும் ஆச்சு? அதுக்கு காரணம் மீடியாக்கள் சொன்னது வரதட்சணை, கேஸும் அதுதான். ஆனா உண்மையான காரணம் வேறைங்க.
//

வரதட்சணையா அந்த அமெரிக்க மாப்பிள்ளை 1 லட்ச ரூபா கேட்டு கொடுமை பண்ணாராம். 5000 டாலர் வாங்குறாருன்னு வச்சிக்கிட்டா கூட மாம் 2 லட்ச ரூபா சம்பாதிக்கிற ஆளு வரதட்சணை கேட்டா 1லட்சம் கேட்பாரா. கேஸ் குடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா 20 லட்சம்னு கொடுக்க வேண்டியதுதான. இதுல அந்த பொண்ணோட அப்பா மாப்பிள்ளைக்கும் அவரோட அம்மாவுக்கும் தொடர்பு இருக்குன்னு பேட்டி கொடுக்கறாரு. பொண்ணு மீடியாவை பார்த்து V ன்னு விரல் காட்டுது. யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னே தெரியலை.

அரை பிளேடு said...

பணம் பிரச்சனையே இல்லை.

இன்னும் சொல்லப் போனா வரதட்சணைன்றது கொழுத்த மாப்பிள்ளைய பிடிக்க பெண் வீட்டார் போடுற தூண்டில். தூண்டில் பாவமா மீன் பாவமா.

பணத்தை யாரும் அதிகம் பார்க்கறது இல்லை. அழகான குணம் இருக்கற பெண்ணா தேடுறாங்க.

அழகு கண்ணுல தெரியுது. கல்யாணம் பண்ணிடறாங்க. குணம் கல்யாணத்துக்கு அப்புறம் தெரியுது. கஷ்டப்படறாங்க.

"பார்யா ரூபவதி சத்ரு."


அழகான பெண்களிடம் குணம் இருப்பதில்லை.

குணமிருக்கும் பெண்களிடம் அழகிருப்பதில்லை.

சிறந்த வழி கல்யாணமே பண்ணாம இருக்கறதுதான். (எனக்கு டூ லேட்). குறைந்த பட்சம் ஒரு அப்துல் கலாமாவாவது ஆகலாம் கனவு மட்டும் கண்டுகிட்டு. (ஆக கல்யாணம் பண்ணாலும் பண்ணாட்டியும் இரப்பர் ஸ்டாம்ப்தான். :))

அரை பிளேடு said...

பொதுவாக நான் கேட்கிறேன், எத்தனை பெண்கள் அதுவும் அழகாக , சிவப்பாக , குறைந்தப்பட்சம் டிகிரி+mca , அல்லது பொறியியல் படித்த பணக்கார வீட்டு பெண்கள் சாதாரணமான சராசரி சம்பளம் வாங்கும் பையன்களை கல்யாணம் செய்கிறார்கள். விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இருக்க மாட்டார்கள்!

ஆனால் இத்தனை தகுதிகளும் உள்ள ஆண்கள் சிலர் சாதாரணமான பெண்களை திருமணம் செய்கிறார்களே. (அப்படியும் கூட பாவம் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள்.)

ILA (a) இளா said...

பெண் வீட்டாருக்கு இரு வரன்கள் வருது. ஒன்னு அமெரிக்கா, இன்னொன்னு பெங்களூருக்கு. யாருக்கு பொண்ணைத் தருவாங்கன்னு சொல்லுங்க உங்க வாதத்தை ஏத்துக்கிறேன்

Anonymous said...

Let me register my side of the story :

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலாவது இருக்கும் குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று.

பார்க்கவும் நூறு சவரன் கேட்கும் பெற்றோர்களே இது நியாயமா ? பதிவில் அனானியாக (இங்குள்ளதுபோல) பின்னூட்டமிட்டிருக்கிறேன். படித்து விபரம் அறியவும்.

அன்புடன்
NRI_அனானி

செல்வம் said...

பெரியவங்கெல்லாம் என்னென்னமோ பேசுரீங்க...
சின்னப் பசங்க நாங்க கவனமா படிச்சுட்டு இருக்கோம்
:-)))
நல்ல பதிவு வவ்வால்.

Sridhar V said...

அரைபிளேடு... உங்க டிரேட்மார்க் நகைச்சுவை :-)) ரசித்தேன்.

//பொதுவாக நான் கேட்கிறேன், எத்தனை பெண்கள் அதுவும் அழகாக , சிவப்பாக , குறைந்தப்பட்சம் டிகிரி+mca , அல்லது பொறியியல் படித்த பணக்கார வீட்டு பெண்கள் சாதாரணமான //

நீங்க தமிழ் சினிமா பாக்கிறதே இல்லையா... அழகா, சிவப்பா, பணக்கார, படித்த பெண்கள் நமது ஹீரோவான ரவுடியை காதலிப்பாங்காளே. ஒரு 'அச்சுபிச்சு' அமெரிக்க மாப்பிளளை சும்மா ஊறுகாய் மாதிரி வந்துட்டு கிளைமேக்ஸில காணாம போய்டுவார். பாத்ததில்லையா?

//பார்யா ரூபவதி சத்ரு//

கருப்பா இருந்தா ரேட் கொஞ்சம் கூட்டலாம். குண்டா இருந்தா இன்னொரு அலவன்ஸ் கூட்டிக்கலாம். பொண்ணு அழகா இருந்தா இந்த சான்ஸ் இல்ல பாருங்க.

அதான் பார்யா ரூபவதி = டப்பு கம்மி :-)

அட நம்ம கனவு கன்னிகள் கூட கருப்பா இருந்திரக் கூடாது பாருங்க :-)

எனது சொந்தக்காரர் ஒருவருடன் நடந்த ஒரு சிறு உரையாடல் - அவர் பெண்ணிற்க்கு பல் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். திருமணத்திற்க்கு வரன் பார்க்கும்பொழுது அவர் சொல்வார் 'பல் கொஞ்சம் தூக்கலா இருந்தா என்ன? அதுக்கு ஒரு பத்தாயிரம் கூட கொடுத்திடறேன்'. அவருக்கு அது காமெடியாக இருந்திருக்கும். கேட்க அநாகரிகமாகத்தான் இருந்தது.


//ஆனால் இத்தனை தகுதிகளும் உள்ள ஆண்கள் சிலர் சாதாரணமான பெண்களை திருமணம் செய்கிறார்களே. (அப்படியும் கூட பாவம் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள்.)
//

நீங்கதான் சொல்றீங்க. ஒருவேளை உங்களை பத்தி நீங்களே அப்படி நினச்சுகிட்டீங்களோ என்னமோ... :-)

//பணம் பிரச்சனையே இல்லை. //

அப்படியா? நீங்க சொல்லிதான் தெரியுது.

Unknown said...

இளா சொல்றது ஒரு பக்கம் சரிதான், இருந்தாலும் முழுசா விவரிக்காம விட்டுட்டார். கொஞ்சம் கொசுவத்திய சுத்துனா, மனோவியலின் ஒரு பிரிவான காலாச்சாரம் சார்ந்த ஆதிக்க மனப்பான்மை கூறுகள் வெளிப்படையாக தெரியவரும்.

நம்ம NRI, அங்க போன கொஞ்ச நாள் சுறுசுறுப்பா வெள்ளக்கார பொண்ண சீரியசா டாவடிப்பார், உயிர குடுக்கரேன் மயிர குடுக்கரேன்னு லவ்ஸ் விடுவார், கொஞ்ச நாள்ள அது பல்பு குடுத்துட்டு வேற ஒருத்தன் கூட போயிடும் (கலாச்சார வேறுபாடு...) பாத்ரூம் போனாகூட பின்னாடியே வரும் அளவுக்கு நம்மாளுங்க சந்தேகப் பிராணிங்க, அதெல்லாம் அந்த பொண்ணுக்கு ஒத்துவராது.

கற்பு கஸ்மாலம்னு இவனுங்க போடுற சீன்வேற தாங்காது, அந்த பொண்ணு மெறண்டு ஆளவிட்ட போதும்டா சாமின்னு மறுபடியும் சர்ச் பக்கமா தலை வச்சு படுக்க ஆரம்பிச்சிரும்.

வெறுத்துப்போய் நம்ம ஆள், சிவாஜி மேஸ்திரி (ஆர்க்கிடெக்காமா...அப்போ மேஸ்திரி தானே)மாதிரி தமிழ் கலாச்சரம், பாவாடை, தலைய நிமிர்த்தாத பொண்ணுன்னு டிரீம் அடிச்சு இங்க வந்து பொண்ண புடிச்சிட்டு போக வேண்டியது, (அடேய்.. இந்தியாவுலேயே அதிகமா பேசுர பொண்ணு தமிழ் பொண்ணுங்கதான்றது உங்களுக்கு தெரியாமையே போயிடுச்சு)

பேக் டூ யூஎஸ், ஆணாதிக்கத்தின் மொத்த வெளிப்பாட அங்க பாக்கலாம், ஒரு பக்கம் ஓவர் சீன் போடுவானுங்க கொஞ்ச நாளைக்கு,அதில்லாம் அதிகாரமும் தாங்காது.. மெதுவ மெதுவ இது யூஎஸ் சிங்கமில்ல ஆஆஆஆஅசிங்கம்'ன்னு தெரிஞ்சு பொண்ணுங்க அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சிரும்.


புலியவே மொறத்துல அடிச்ச தமிழ் பொண்ணாச்சே, இந்த அசிங்கத்த ஓட்றது எவ்ளோ நேரம், அவன் உயிர வாங்கிட்டு இங்க வந்து அப்படி பன்னான், இப்படி பன்னானு இவ சொல்ல, அவரு இல்ல இல்லை அவ அப்படி பன்னா இப்படி பன்னா, நடத்த சரியில்லன்னு ரவுசு உட வேண்டியது.

கடைசியா ரெண்டுபேருமே நெனக்கிறது:

அவன்: வெள்ளக்காற பொண்ணே இதுக்கு தேவலம், பேசாம இங்கயே ஒண்ண புடிச்சி செட்டில் ஆகிட வேண்டியது தான்.

அவள்: அமிஞ்சிகர பாய் பிரண்ட் எவ்ளவோ தேவல, இனி அமெரிக்காவுக்கு கா...

ILA (a) இளா said...

//அங்க போன கொஞ்ச நாள் சுறுசுறுப்பா வெள்ளக்கார பொண்ண சீரியசா டாவடிப்பார்//
இசை, உங்க வாதம் ஒரு 5% க்குதான் ஆவும். ஏன்னா நிலைமை அப்படி. நம்ம ஆளுங்களுக்கு வெள்ளைப்பொண்ணுங்க விழுறது இன்னும் கூட ஒரு சதவீதம் கம்மியா இருக்கலாம். இந்த வாதத்துல காமமோ, காதலோ இல்லீங்க. மனம் & பணம்.

வவ்வால் said...

//நான் 'அங்கே' போயிட்டு இப்ப 'இங்கே' வந்தேன்.//

துளசி கோபால் ,
என்னது நீங்க வீடு கட்டியப்போது சொன்ன டயலாக்கையே திரும்ப சொல்றிங்க!

சரி நீங்க எவ்வளவு கொடுத்திங்க ,உங்க பெண்ணுக்கு எவ்வளவு கொடுப்பிங்க(கல்யாண சீர் வரிசையை சொல்றேன்)
--------------------------------

இளா,
//வவ்வாலு, பதிவின் நோக்கம் என்னன்னு தெரியாம வந்துட்டேன். வெளிநாட்டு வேலைக்கு போவனுமான்னு கேட்க பதிவு போட்டு இருந்தா நான் அப்பீட்டுங்கோவ்..//

பதிவின் நோக்கம் அதுவல்ல!

அயல்நாட்டு (உள்நாடும் கூட) மாப்பிள்ளைகளின் பெற்றோர் கறக்கும் வரதட்சணைப்பற்றியதே!
--------------------------------

அரைப்பிளேடு,
திருச்சி பெண் விஷயத்தில் எத்தனை வரதட்சனை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டு இருக்கிறார்கள், பெண்ணின் பெற்றோருக்கு கூட சரியான தகவல் தரவில்லை, அந்த மருத்துவர் தான் தந்து இருக்கிறார், செய்திகளின் அடிப்படையில் சொல்கிறேன், எனவே அடிப்படையாக ஒரு தவறு மணமகன் பக்கம் இருக்கிறது.

//இன்னும் சொல்லப் போனா வரதட்சணைன்றது கொழுத்த மாப்பிள்ளைய பிடிக்க பெண் வீட்டார் போடுற தூண்டில். தூண்டில் பாவமா மீன் பாவமா.//

பெண் வீட்டார் இவ்வளவு செய்வேன் என சுயமாக சொல்வது அல்லாமல் மேற்கொண்டு வலுக்கட்டாயமாக வாங்கும் போது தான் வரதட்சணை கொடுமை ஏற்படுகிறது.

கொழுத்த மாப்பிள்ளையை தூண்டில் போட்டு பிடித்து என்ன செய்ய உத்தேசம், அவர்கள் பெண் போகும் இடத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை தானே, ஆனால் எத்தனை செலவு செய்தாலும் பெண்ணை சித்திரவதை செய்தால் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்!

பெண்ணைப்பெற்றோர் எத்தனைக்கஷ்டப்பட்டாவது பணத்தை கொடுக்க தயாராக இருந்தாலும், பெண் சந்தோஷமாக அங்கே இருக்க உத்திரவாதம் இல்லையே!

சேலம் பெரியார் பல்கலையின் இணைவேந்தரின் மகன் அமெரிக்கவாசி, அவரது வழக்கில் கூட , கல்யாணம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை 2 ஆண்டுகள் ஆன பிறகும் அமெரிக்காவிற்கு அழைத்து போக முயற்சியே செய்யவில்லை, இதில் கோர்ட் தலையிட்டப்பிறகும் அதே நிலைமை தான் இருந்தது.

அவர்கள் எதிர்ப்பார்த்த வரதட்சணை வரவில்லை என்று சொல்லி இங்கேயே விட்டுப்போய் இருக்கிறார்,அப்படித்தான் அனத்த்து அமெரிக்க மாப்பிள்ளைகளும் செய்வார்களா?

//பெண்கள் சாதாரணமான சராசரி சம்பளம் வாங்கும் பையன்களை கல்யாணம் செய்கிறார்கள். விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இருக்க மாட்டார்கள்!//

சம அளவில் படித்த , சம்பளம் வாங்கும் மணமகனை கல்யாணம் செய்துக்கொள்வார்கள்.ஒரு சமாளிக்க கூடிய செலவில் திருமண செலவுகள் அமையும். நீங்கள் சொன்னது போல விரல் விட்டு எண்ணும் அளவல்ல அது.

=====================================

இளா,
அமெரிக்க மாப்பிள்ளை என்ற மோகத்தில் தான் தவறு செய்கிறார்கள் என்று இங்கே பேசிவருகிறேன். பெங்களூர் மணமகனை தவிர்த்து அமெரிக்க மணமகனுக்கு அதிக செலவு செய்யவும் தயாராகவே பெண்ணின் பெற்றோர் இருக்கிறார்கள், அதை தவறாகப்பயன்ப்படுத்திக்கொள்கிறார்கள்
-------------------------------------
அனானி,
//விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலாவது இருக்கும் குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று.//
அது மிக பாராட்டுக்குறியது! அப்படி அனைவரும் இருந்தால் பிரச்சினையே வராதே!
----------------------------
ஸ்ரீதர் நாராயணன்,
நன்றி,

அருமையாக சொன்னிங்க!
------------------------
செல்வம்
நன்றி!

இங்கே பெரியவங்க யாருங்க எல்லாம் உங்களைப்போன்றவர்களே!
---------------------------------------
இளா,
//காமமோ, காதலோ இல்லீங்க. மனம் & பணம்.//

காமத்தை வெள்ளைக்கார பெண்ணிடம் தீர்த்துக்கொள்கிறார்கள் , பணத்துக்கு தான் இந்திய திருமணம்!
------------------------------------

துளசி கோபால் said...

எங்க வழி தனி வழி.

நான் ஒரு காசும் வரதட்சணை கொடுக்கலை. இவ்வளவு என்னத்துக்கு? கல்யாணத்துக்குக்கூட செலவு ரொம்பக் குறைவு.

ரெண்டு கையெழுத்தோடச் சரி.

மகளுக்கும் வரதட்சணை கொடுக்கப்போறது இல்லை.

அவுங்களும் காதல் கல்யாணம்தான்.

வவ்வால் said...

துளசி கோபால்,
//எங்க வழி தனி வழி.//

ரியல்லி கிரேட், உங்களைப்போல இருப்பவர்கள் 100 இல் ஒருவரே!, மற்றவர்கள் அப்படி இல்லாததால் தான் பிரச்சினையே!

Thekkikattan|தெகா said...

சரி, இங்கு பேசிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு கேள்வி.

பெண் வீட்டார் தன்னுடைய செல்வாக்கை காமிக்கவோ, அல்லது கொழுத்த மாப்பிள்ளையைப் பிடிக்கவோ, அல்லது தன்னுடைய மகளின் நல் வாழ்விற்கோ எதற்கோ ஒன்றுக்கு பணத்தை முதலீடாக வழங்க முன் வருகிறார்கள், அப்படித்தானே.

சரி, இந்தச் சூழலில் பணமே முன் நிறுத்தப் படுகிறது. அது தானே முன் வந்து கொடுத்தாலும் சரி, அல்லது பேரம் பேசி மாப்பிள்ளை வீட்டார் (அது க்ளியர்) கேட்டாலும் சரி - அங்கே நிகழ்வது என்ன வடிகட்டிய அயோக்கியத் தனமான பொருளாதார கணக்கு வழக்கு.

அதிலும் மாப்பிள்ளை வீட்டாரே முன் வந்து பேரம் பேசும் பொழுது தாங்களே "என் அப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு ஒத்துக்கிற மாதிரி," நாங்க வடிக்கட்டிய அயோக்கியப் பசங்கன்னு சொல்லியும், மீறி அவனுக்கு திருமணம் முடிச்சிக் கொடுத்தா இந்த வரதட்சிணையையொட்டி பின்னாலே ஏதும் வாக்கு வாதம் வந்து அவன் (ஸ்டவ் வெடிச்சி) போர கார்லேயோ, இல்ல ட்ரெயின்ல இருந்து தள்ளிவிட்டா அதனைப் பற்றி பெருசாப் பேச இன்னிக்கு என்ன இருக்கிறது? அவனோ ஒரு வியாபாரி அவன் எப்படி நடந்து கொள்வான்... அப்படியே அவன் குணத்தை காட்டியிருப்பான்... புரியுதா நான் சொல்ல வராது? :))

குற்றத்தை நம்ம பக்கம் வைச்சிக்கிட்டு, அடுத்தவன திட்டீனா...

Sridhar V said...

//அவனோ ஒரு வியாபாரி அவன் எப்படி நடந்து கொள்வான்... அப்படியே அவன் குணத்தை காட்டியிருப்பான்... புரியுதா நான் சொல்ல வராது? :))
//

தெகி! You are missing the point. காசை கொடுத்து மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தின் 'நல்ல செயல்பாட்டை' வாங்குவது பெண் வீட்டார். பெண் புகுந்து வாழப் போகும் வீடுஅல்லவா?

பிரச்னை என்று வந்தால் பாதிக்கபடுவதும் பெண் வீட்டார்தான்.

'அவன் குணத்தை காட்டியிருப்பான்' என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படி ஒரு மோசமான குணத்தை மறைக்கத்தானே பணமும் நகையும் வாங்கறாங்க. அதாவது 'நாங்க நாங்களா இருக்காம, நல்லவங்களா இருக்க இவ்வளவு ரேட் கொடுத்திடுங்க'... இதானே ஒப்பந்தம்? நாளைக்கு வியாபார ஒப்பந்தம முறியும்போது நட்டபட்டவன்தானே மல்லு கட்டனும்?

வவ்வால் said...

தெகா,
//குற்றத்தை நம்ம பக்கம் வைச்சிக்கிட்டு, அடுத்தவன திட்டீனா...//

சரிதான், குற்றம் செய்வது , உடந்தையாக இருப்பது இரண்டும் குற்றமே, பெண் வீட்டார் செய்வது உடந்தையாக இருத்தல்.

காரணம் என்ன?....

ஏன் அப்படி என்று பார்த்தால், அது தவிற்க முடியாதது. சமூகத்தில் செலவு செய்யாமல் ஒரு பெண்ணைக்கட்டிக்கொடுப்பது என்பது குதிரைக்கொம்பு. இன்னும் வரதட்சணைக்கொடுக்க முடியாமல் திருமணம் நடக்காமல் முதிர்க்கன்னியாக ஏதேனும் கார்மெண்ட் கம்பெனி, அலுவலகம், கடைகளில் வேலை செய்து காலம் தள்ளும் பெண்கள் அதிகம் இருக்கும் நாடு தான் இது.

கோவை பக்கங்களில் சின்ன வயசிலேயே பெண்களை வேலைக்கு அழைத்து செல்வார்கள் மில் காரர்கள் , அவர்கள் போடும் ஒப்பந்தம் என்ன தெரியுமா மாங்கல்ய திட்டம் என்றே பெயர் அதுக்கு, 3 -5 வருடம் வேலை சம்பளம் எதுவும் கையில் தர மாட்டார்கள், ஆனால் கல்யாண செலவை ஏற்றுக்கொண்டு செய்வதாக அல்லது அதுக்கு ஏற்ப ஒரு தொகையை கடைசியில் தருவார்கள். சாப்பாடு மட்டும் போட்டு 3-5 வருடங்கள் வேலை வாங்கி கசக்கி பிழிந்து விடுவார்கள்.

இதெல்லாம் ஏன் இன்னும் இங்கே இருக்கு, யாரும் வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்தால் இதுக்கு தேவையே இருக்காதே.

வரதட்சணை என்பது தவிர்க்க முடியாத தீமையாக இருக்கு.

பல இடங்களிலும் ஒரு பெண் தானே செய்து விடுவோம் என சக்தி மீறி செலவு செய்பவர்களும் இருக்காங்க!

செலவு செய்யாமல் கல்யாணம் ஆகனும் என்று காலம் தள்ளினால் பொண்ணுக்கு செலவு செய்ய யோசிக்கிறான் என்று ஊரில் சொல்வார்கள் என்று செய்பவர்களும் இருக்காங்க.

இப்படிலாம் நடக்காம இருக்கணும்னா அடிப்படையில் சமூகம் மாறனும், நான் மாறிட்டேன் அப்படினு யாரோ ஒருத்தர் அரிதிலும் அரிதாக சொன்னா போறாது.
-----------------------------

ஸ்ரீதர் நாராயணன்,
//அதாவது 'நாங்க நாங்களா இருக்காம, நல்லவங்களா இருக்க இவ்வளவு ரேட் கொடுத்திடுங்க'... இதானே ஒப்பந்தம்? நாளைக்கு வியாபார ஒப்பந்தம முறியும்போது நட்டபட்டவன்தானே மல்லு கட்டனும்?//

மாப்பிள்ளை வீட்டாரை நல்லவராக ஆக்க ஆகும் செலவு அது ! அப்படி செலவு செய்தும் பலர் நல்லவராக இல்லாமல் பழைய குருடி கதவை திறடி ஆகிடுறாங்க அதான் பிரச்சினையே!
----------------------------

Thekkikattan|தெகா said...

Sridhar N,

'அவன் குணத்தை காட்டியிருப்பான்' என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படி ஒரு மோசமான குணத்தை மறைக்கத்தானே பணமும் நகையும் வாங்கறாங்க. அதாவது 'நாங்க நாங்களா இருக்காம, நல்லவங்களா இருக்க இவ்வளவு ரேட் கொடுத்திடுங்க'... இதானே ஒப்பந்தம்? நாளைக்கு வியாபார ஒப்பந்தம முறியும்போது நட்டபட்டவன்தானே மல்லு கட்டனும்?//

உங்களது படிக்கும் பொழுது நகைச்சுவையாக இருப்பினும், என்னவோ சொல்லாமல் இரு தரப்பினரும் போட்டுக் கொள்ளும் கூறியபடியான ஒப்பந்தம் போலத்தான் இருக்கிறது :-)).

காலக் கொடுமை... எல்லா இடத்திலும் லஞ்சம், லாவண்யம் அது உறவுகளை நிறுபித்துக் கொள்ளக் கூடவா, பொருமாளே!! :D.

வவ்ஸ்,

நீங்கள் கூறுவதனைப் படிக்கும் பொழுது எத்தனைப் பேருக்கு எவ்வளவு உண்மைகள் தன்னைச் சுற்றி கிடப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்... இந்த திருப்பூர் விசயங்கள் எல்லாம் கொடுமையிலும் கொடுமை.

இதற்கு ஒரே வழி இந்த பாலின ரோஷியோ 3:1; அதாவது, மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற நிலமை வந்தால் :-)) கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்...

பி.கு: வவ்ஸ், இங்கிருந்து என்னுடைய பின்னூட்டத்தையும், எனக்களித்த ஸ்ரீதர், மற்றும் உங்களுடைய பின்னூட்டங்களையும் என்னுடைய பதிவுலும் இணைத்துள்ளேன்... பொருதருள்க! :-P

வவ்வால் said...

தெகா,

நாளு பேருக்கு தெரியும் வண்ணம் எடுத்தாண்டிருப்பதில் பொருத்தருள என்ன இருக்கு. தாராளமாக செய்யுங்கள்.

//இதற்கு ஒரே வழி இந்த பாலின ரோஷியோ 3:1; அதாவது, மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற நிலமை வந்தால் :-)) //

விபரீதமா இருக்கும் போல , ஏற்கனவே அதிகம் இருந்த , இருக்கும் பெண் சிசுக்கொலையின் விளைவு இப்படித்தான் கொண்டு வந்திருக்கும், அரசு நடவடிக்கையால் மட்டுப்பட்டுள்ளது.மீண்டும் கருத்தம்மா கதைக்கு உயிர் கொடுக்க சொல்கிறீர்களா?

தானாக அப்படி 3:1 மாறாது. இப்படி செய்தாக வேண்டும். அது தவறு ஆச்சே.

எவ்வளவுப்படித்த, சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் அவளை கணவன் தான் வைத்துக்காப்பாற்ற போகிறான் என்ற எண்ணமே திருமணத்தின் போது செலவு செய்ய வைக்கிறது, அந்த எண்ணம் மாற வேண்டும்.உண்மையில் கணவனை விட அதிகம் படித்த , வேலை செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வரதட்சணை கொடுக்க யார் வருவார்கள்.

Anonymous said...

I came across an interesting story about immigrants contributing to US economy.

http://www.despardes.com/
Diaspora/2006/20060218-
south-asian-diaspora.htm

...The net benefit of immigration to the United States is nearly $10 billion every year. Seventy percent of immigrants arrive in prime working age and this means not a penny was spent for them in terms of education and the like. Yet over the next 20 years they are expected to pump $500 billion into the country's social security system.

Contrary to reports that immigrants take away jobs from U.S. citizens, they supplement rather than displace native workers...

Novaatha nonbu kumbuduraangalo?

Wild Bull