Wednesday, November 16, 2011

புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!





புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!


சன் செய்திகளை விட புதிய தலைமுறை செய்திகள் சேனல் முன்னிலை வகிப்பதாக ஏ.சி.நீல்சன் சர்வேயின் அடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டார்கள். அதாரமாக GRP புள்ளிகளை காட்டியிருந்தார்கள்.

பொதுவாக டிஆர்பி என்ற ஒன்றே அதிகம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன GRP ?

ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரம் அதிகம் பார்க்கப்படுகிறதா என்பதை டீஆர்பி புள்ளிகள் மூலம் கண்டுப்பிடிப்பார்கள்.

இது எப்படி எனில்,

சேனல் A, சேனல் B இரண்டு சேனல்கள் ஒரு பகுதியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்பகுதியில் 100 வீடுகள், 100 டீ.விகள் இருக்கு. எத்தனைப்பேர் எந்த சேனல் எப்பொழுது பார்க்கிறார்கள் எனப்பார்க்க ஒரு மீட்டர் இருக்கு(மக்கள் மீட்டர்). அத்தனை வீட்டிலும் மீட்டர் வைப்பது சாத்தியம் இல்லை என்பதால் 10 வீட்டுக்கு ஒன்று என 100 வீட்டுக்கு 10 வீட்டில் மட்டும் வைப்பார்கள். இங்கே சாம்பிளிங் ரேட் 10 சதவீதம், எனவே கிடைக்கும் டீஆர்பி புள்ளிகளை 10 ஆல் பெருக்கினால் எத்தனைப்பேர் பார்த்தார்கள் என தெரிந்து விடும்.

சேனல் A,

10 மீட்டர் வீடுகளில் 8 பேர் பார்க்கிறார்கள் எனீல்

டீஆர்பி = 8*10=80%

இங்கே ஒரு துணைக்கேள்வியாக ஒவ்வொருவரும் எத்தனைமுறைப்பார்க்கிறார்கள் எனக்கேட்தாக வைத்துக்கொண்டால் GRP வந்து விடும்.

உ.ம்,
ஒவ்வொருவரும் ஒரு முறை என்றால்,8 பேருக்கும் சராசரி= 1+1+1+1+1+1+1+1/8=1

GRP =8*1*10=80 % என்றே வரும்.

சேனல் B :

10 மீட்டர் உள்ள வீடுகளில் 4 பேர் மட்டும் பார்ப்பதாக காட்டினால்,

டீஆர்பி= 4*10=40%




துணைக்கேள்வியாக எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு ஒவ்வொருவரும் தலா இரு முறை பார்ப்பதாக கூறுகிறார்கள்,
எனவே, சராசரி 4 பேருக்கு =2+2+2+2/4=2

GRP =4*2*10=80% என வரும்.

8 பேர் பார்க்கும் சேனலுக்கும் GRP 80, 4 பேர் மட்டுமே பார்க்கும் சேனலுக்கும் GRP 80,ஆனால் டீஆர்பியில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும்!

அதாவது ஒரு சேனல், நிகழ்ச்சியை எத்தனைப்பேர், பார்க்கிறார்கள் என்பதை விட எத்தனை முறை என்ற ,பிரிகுவென்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடுவது தான் GRP புள்ளிகள் ஆகும்.

TRP= TARGET (TELEVISION) RATING POINT,

GRP= GROSS RATING POINT

இதன் அடிப்படையில் நம்பர் 1 என சொல்லிக்கொள்வது ஊரை ஏமாற்றும் தந்திரம்.

பதிவுகளிலேயே பார்த்திருக்கலாம், நல்லப்பதிவர்களின் தரமான பதிவுக்கு பத்து பேர் படித்து பத்து பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், சில அடாசுப் பதிவுகளுக்கு நான்கு பேர் தான் படித்து இருப்பார்கள் அவர்களே வளைத்து வளைத்து ,மாமா, மாப்ஸ்,மச்சான் என்று பல பின்னூட்டங்கள் போட்டு 100 தாண்டி இருப்பார்கள். பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் பார்த்தால் 100 க்கு மேல வாங்கியதை தான் தரமானது என்று சொல்ல வேண்டியது இருக்கும், அது தான் சூடான இடுகையிலும் இருக்கும்.ஆனால் தரமான பதிவோ பத்து பேர் படித்து 10 பின்னூட்டம் மட்டுமே வாங்கி இருக்கும், அது முன்னிலையில் இராது.

வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா? அப்படிப்பட்ட சர்வே தான் புதிய தலைமுறை நம்பர் 1 என்பதும்.

இது புதிய தலைமுறை சேனலை குறைத்துக்காட்ட சொல்லவில்லை, சன் ஆதிக்கம் தகர்ந்தால் நல்லது தான் ,ஆனால் உண்மையில் அப்படி இல்லை என தெளிவுப்படுத்தவே சொல்கிறேன்.





32 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சன் டிவி ஏ.சி.நீல்சன் சர்வேயைப் பயன்படுத்தி, இதே மாதிரித்தான் தங்களுடைய ரேட்டிங்கைத் தொடர்ந்து முன்னணியில் வைத்திருந்தார்கள் என்பதும், மெகா சீரியல்களுக்கு அடிமைகளாக்க இந்த ஓவர் ஹைப் தான்பயன்பட்டது என்பதும் பழைய வரலாறு. சன் அல்லது வேறெந்த டீவீயாக இருந்தாலும் சினிமாக் காட்சிகளை வைத்துத்தான் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் புதியதலைமுறை டிவி கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்பதுவரை மட்டுமே உண்மை.

SURYAJEEVA said...

அருமையான விவரம்... நான் புரிந்த கொண்ட விதம் தவறு என்று சுட்டி காட்டியதற்கு நன்றி

வவ்வால் said...

கிருஷ்ணமூர்த்தி,

வாங்க ,வணக்கம், நன்றி!

ஏசி.நீல்சன் , தனிப்பட்ட மார்க்கெட் கருத்து கணிப்பு தான், INTAM (Indian television audience measurement) என்ற அமைப்பு எடுக்கும் டீ.ஆர்.பி தான் பொதுவானது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது. ஏ.சீ நீல்சன் கொடுத்த காசுக்கு வேலைப்பார்ப்பாங்க :-))

வவ்வால் said...

சூர்யா,

வாங்க, வணக்கம், நன்றி!

என்ன வேற எங்கோ போட வேண்டியதை இங்கே பின்னூட்டமா போட்டிங்களா? எப்போ எதை சுட்டிக்காட்டினேன்?

ராஜ நடராஜன் said...

ஒப்பீடு செம:)இன்னுமா சன் டீ.வி ஓடுது அங்கே?

வவ்வால் said...

ராஜ்,

வாங்க , வணக்கம்,நன்றி!

//ஒப்பீடு செம:)இன்னுமா சன் டீ.வி ஓடுது அங்கே?//

ஹி...ஹி, உதாரணத்துக்கு பதிவுல எங்கேயும் போக வேண்டாம் எல்லா வகையும் கிடைக்குது.

சன் டீவி என்பது தவிர்க்க முடியாத தீயசக்தி! (யாரும் சண்டைக்கு வருவாங்களோ) கேபிள் மாற்றம் வருமுன்னரே சுமார் 20 லட்சம் டீடீஎச் இணைப்புகளை விற்று நிலைப்படுத்திக்கொண்டார்கள், வேறு யாராவது பெருசா காசு போட்டு ஆட்டத்துக்கு வந்தா தான் உண்டு.

Radhakrishnan said...

மிக எளிய முறையில் நல்ல விளக்கம். இந்த ரேட்டிங் விசயம் மிக தெளிவாக புரிந்தது. நன்றி வவ்வால்.

இருதயம் said...

உண்மை .....உண்மை ....

வவ்வால் said...

வாங்க ரா.கி,

வணக்கம், நன்றி,

இங்கே நிறைய மீடியா ஜாம்பவான்கள் இருக்காங்க, அவங்க மேட்டர் இதுனு தான் நாம என்ன சொல்றதுனு இருந்தேன், ஆனால் மொட்டையன் குட்டைல விழுந்தா போல அவங்க எழுதவே நான் எழுத வேண்டியதா போச்சு. ஏதோ புரியறாப்போல இருக்கா, அது போதும்

வவ்வால் said...

வாங்க இருதயம்,

வணக்கம், நன்றி, இருதயப்பூர்வமா சொல்றிங்க போல ! உண்மையை, அடிக்கடி வாங்க!

ஜோதிஜி said...

புதிய தலைமுறை எந்த விதத்தில் பார்த்தாலும் செய்திகளை கொண்டு வந்து தரும் விதம் ரொம்பவே அற்புதம். அலுப்பு தட்டாத அளவுக்கு மாற்றி மாற்றி பல விசயங்களை கொண்டு வந்து தருகிறார்கள்.

தமிழ்விடுதி சத்யபிரபு said...

Super how to gather it

நாய் நக்ஸ் said...

Thanks....
:)

வவ்வால் said...

ஜோதிஜி,

வாங்க, வணக்கம்,நன்றி!

புதிதாக, நல்ல முறையில் செய்திகளை வழங்கினால் காலப்போக்கில் முதலிடம் வருவார்கள், ஆனால் தற்போது ஏசி நீல்சன் கருத்துக்கணிப்பு ஜிஆர்பி என்பதெல்லாம் பம்மாத்து. ஏசிநீல்சன் தனிப்பட்ட கருத்துக்கணிப்பே, அது பொதுவான தொ.கா , தரவரிசை அல்ல.

ஆனால் புதியதலைமுறை ரொம்பவும் மக்கள் நலனில் அக்கறை உள்ள சேனல் என்றெல்லாம் கொண்டாடி விட முடியாது கல்வியை வியாபாரமாக்கியவரின் சேனலிடம் ரொம்ப எதிர்ப்பார்த்து ஏமாறவும் வேண்டாம்!

------------------------------------------
தமிழ்விடுதி,

நன்றி, வணக்கம்,

எதை சேகரம் பண்ணப்போறிங்க, பீப்பிள்ஸ் மீட்டர் என ஒரு கருவி வைத்து எந்த சேனல் என்பதை பிரிகுவென்ஸி வைத்தோ, அல்லது படத்துணுக்குகள் வைத்தோ கண்காணிப்பார்கள்.

----------------------------------------

நாய்-நக்ஸ்,

நன்றி, வணக்கம்!

sathees said...

அண்ணே வணக்கம்.
"வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா?"
அன்னியன் மாதிரியே இருக்கு.
நல்லாத் தான் தலைகீழாய் (தொங்கிக் கொண்டு) எல்லாத்தையும்
புரட்டிப் பாக்கிறீங்கள்.
வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

வாங்க சதீஸ்.

வணக்கம், நன்றி!

//அன்னியன் மாதிரியே இருக்கு.
நல்லாத் தான் தலைகீழாய் (தொங்கிக் கொண்டு) எல்லாத்தையும்
புரட்டிப் பாக்கிறீங்கள்.
வாழ்த்துக்கள்!//

ஹி..ஹி எல்லாருக்குள்ளவும் ஒரு அன்னியன் இருப்பான்ல, அதன் விளைவு போல, வாழ்த்துக்கு நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

புரியாத மெட்டரெல்லாம் இருக்கு.நன்றி.

muralee said...

forget about the trp and grp as a viewer my opinion that puthiya thalamurai channel telecasting unbiased news and defnitely they are going to get no 1 spot and the day are not far.

மாயன் said...

வவ்வால்...
வருக
வருக
என்னை ஞாபகம் இருக்கா?

SURYAJEEVA said...

சரியா தாங்க போட்டிருக்கேன், இந்த grp trp எல்லாம் புதுசா அதை சுட்டி கட்டியதற்கு நன்றி அப்படின்னு சொன்னேன்

வவ்வால் said...

வாங்க சிபி,

வணக்கம், நன்றி! என்னது உங்களுக்கே புரியாத மேட்டரா அவ்வ்வ்!

வவ்வால் said...

மோசமில்லை,

வாங்க, வணக்கம்,நன்றி!

சன் போன்ற டீவிக்களுக்கு மாற்று தேவை , அந்த இடத்தை புதிய தலைமுறைக்கைப்பற்றுமா என்பதை காலம் தீர்மானிக்கும், இப்போது ஆரம்பஜோரில் நல்லா தான் இருக்கு.

வவ்வால் said...

மாயன்,

வாங்க , வணக்கம்,நன்றி!

நியாபகம் இல்லாமலா, என்னை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி! பழைய பதிவுலக நண்பர்களை காணும் போது தனி உற்சாகம் தான்!(நீங்க, ரத்னேஷ், பிச்சைக்காரன் , கல்வெட்டு எல்லாம் நினைவில் இருப்பவர்கள்)

வவ்வால் said...

சூர்யா,

வாங்க ,வணக்கம், ஓ அப்படியா , சுட்டிக்காட்டினேன் சொன்னதும் குழம்பிட்டேன் அப்போ சரி! :-))

மாயன் said...

உங்களுக்கும் நன்றிகள் பல.. நானும் வலையுலகம் பக்கம் வந்து ரொம்ப நாளாயிடுச்சு தலை..
உங்களை மாதிரி பழைய ஆளுங்க திரும்ப வரும் போது உற்சாகமா இருக்கு..
கலக்குங்க.. உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.. :-)

TBCD said...

வவ்வால்,

உங்க கடையை துவிட்டரில் துவங்க அன்போடு அழைக்கிறேன் :-)

twitter.com/TPKD_

TBCD said...

இது தொடர்ச்சிக்காக

Unknown said...

vilambaraththai pottu makkalaiyum,ratingai pottu vilambaram tharuvbavarkalaiyum emaari...ithu oru pozhappu!

வவ்வால் said...

மாயன்,

நன்றி! மிக்க மகிழ்ச்சி, ரொம்ப எதிர்ப்பார்க்காதிங்க பயமா இருக்கு :-))

----------

தமிழன்,

வணக்கம்,நன்றி, ஆமாம் சேனல்கள் செய்வது எல்லாம் பித்தலாட்டம் தான், யாருமே முழுமையாக உண்மை சொல்லமாட்டார்கள் சார்புத்தன்மை இருக்கவே செய்யும், ஒரு விஷயம் தெரிந்துக்கொள்ள 4 சேனல் செய்திப்பார்க்க வேண்டியதா இருக்கு!

வவ்வால் said...

ஆஹா திபிசிடி அய்யா ,
வணக்கம்,நன்றி!
வாங்கோ ...வாங்கோ என்ன இன்னும் துவித்தர் மயக்கம் தீரலையா, பதிவு போட மாட்டேன்கிறிங்களே? உங்களைப்பார்த்து மாமாங்கம் ஆச்சே(நீயே காணாம போய்ட்டு இது வேறயானு கேட்பது கேட்கிறது)

ரொம்ப தாமதமாக பதில் சொல்வதற்கு மன்னிக்கவும் இந்தப்பதிவ கவனிக்கவே இல்லை, புது சரக்குல வந்து தலையக்காட்டி இருக்கலாம்லா?

சரி நானும் துவித்தர் ல என்ன தான் இருக்குனு பார்க்க வரேன். எத்தனைக்காலம் தான் இங்கே மொக்கை போடுவது!

Hopkinsrezh said...

ஜோதிஜி, வாங்க, வணக்கம்,நன்றி! புதிதாக, நல்ல முறையில் செய்திகளை வழங்கினால் காலப்போக்கில் முதலிடம் வருவார்கள், ஆனால் தற்போது ஏசி நீல்சன் கருத்துக்கணிப்பு ஜிஆர்பி என்பதெல்லாம் பம்மாத்து. ஏசிநீல்சன் தனிப்பட்ட கருத்துக்கணிப்பே, அது பொதுவான தொ.கா , தரவரிசை அல்ல. ஆனால் புதியதலைமுறை ரொம்பவும் மக்கள் நலனில் அக்கறை உள்ள சேனல் என்றெல்லாம் கொண்டாடி விட முடியாது கல்வியை வியாபாரமாக்கியவரின் சேனலிடம் ரொம்ப எதிர்ப்பார்த்து ஏமாறவும் வேண்டாம்! ------------------------------------------ தமிழ்விடுதி, நன்றி, வணக்கம், எதை சேகரம் பண்ணப்போறிங்க, பீப்பிள்ஸ் மீட்டர் என ஒரு கருவி வைத்து எந்த சேனல் என்பதை பிரிகுவென்ஸி வைத்தோ, அல்லது படத்துணுக்குகள் வைத்தோ கண்காணிப்பார்கள். ---------------------------------------- நாய்-நக்ஸ், நன்றி, வணக்கம்!

Thompsoninrg said...

வாங்க இருதயம், வணக்கம், நன்றி, இருதயப்பூர்வமா சொல்றிங்க போல ! உண்மையை, அடிக்கடி வாங்க!