Monday, February 27, 2012

என்ன கொடுமை சார் இது-3





சாருவின் பீற்றல்!

”மக்யா நாளே…”
 February 25th, 2012
/மக்யா நாளே //

சூப்பரான வார்த்தை பிரயோகம் சாரு.
இதனாலெல்லாம் தான் நான் எல்லோரிடமும் சொல்வது சாரு வின் எழுத்து நடைக்கு நிகர் இங்கு யாரும் இல்லை என்று.
இந்த ”மக்யா நாளே ” என்ற வார்த்தை கொங்கு பகுதியில் ,அதுவும் அதிகமாக கரூரின் கிராமப் பகுதியில் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுவும் குறிப்பாக கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் தான் அதிகம். நான் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியை சார்ந்தவன் தான் . நான் இங்கு என் ஜாதியை குறிப்பிட்டு சொன்னதற்காக என்னை தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு தகவலுக்காக சொன்னேன்.
இன்னும் எங்கள் கிராமத்து பெண்கள், என் அம்மா கூட இந்த வார்த்தையைப் பயன் படுத்துவார்கள். அவர்கள் இந்த வார்த்தையையே சற்று மாற்றி ” மக்யா நேத்தே ”என்று சொலவார்கள்.  ஆனால் உரை நடையில் அதுவும் கட்டுரையில் இந்த வார்த்தையை ”மக்யா நாளே ” என்று எழுதுவதே அந்த வார்த்தையின் உணர்ச்சியின்  தீவரத்தை கொடுக்க சரியாக இருக்கிறது.. . நன்றி சாரு.
—————-
கரூர்.
நண்பருக்கு,
என் அம்மா என்ன ஜாதி என்று சொன்னதே இல்லை.  எப்போது கேட்டாலும் ஏதாவது ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லுவார்கள்.  பர்மாவிலிருந்து வந்த என் அம்மாச்சி மேலே ரவிக்கை போட்டு நான் பார்த்ததில்லை.  காதில் மிகப் பெரிய ஒரு பாம்படம் தொங்கும்.  செட்டிநாட்டுப் பக்கத்தில் அவர்களுக்கு நிறைய உறவுக்காரர்கள் இருந்தார்கள்.  என்னால் அம்மாவின் ஜாதியை யூகிக்க முடியவில்லை.  அம்மாவின் அப்பா பர்மாக்காரர்.  அதனால் ஜாதி பற்றிய பேச்சே இல்லை.  என் அம்மாச்சி தான் மக்யா நாள் என்று சொல்லுவார்கள்…
சாரு

சாரு--மக்யா நாளே
****

மாமல்லனின் பழைய பதிவு:

அவதூறுகள் ஏன்? - ஜெயமோகன்
February 13th, 2011

//இணையத்தில் கூட ஜெயமோகனின் கொடி அவர் சொல்லும் அளவிற்கு எல்லாம் ஒன்றும் பட்டொளி வீசிப் பறக்கவில்லை, அலெக்ஸா ரேட்டிங்கில் சவுக்கு, சாரு நிவேதிதா, வினவு என பலர் முன்னிலையில் இருக்கின்றனர், அவர்களுக்கெல்லாம் மிகப்பின் தங்கியே (நான் கூறியது சில மாதங்களுக்கு முன். அந்த சமயத்தில் ஜெயமோகன் 14,000, சாரு 7,000, வினவு 8,000 என்றிருந்தனர்) என ராயப்பேட்டைப் பாலத்திற்கு அடியில் வசிக்கும் ஜெமோவிற்கும் எனக்குமானப் பொது நண்பரிடம் சாதாரணத் தகவலாக, கூறினேன். அதற்கு மக்யா நாளுக்கு மக்யா நாள் சிவராமன் என்பவர் இதைக் கேள்வியாய்க் கேட்கிறார் அவர் வலைபூவில். ஆதெள கீர்த்தனாரம்பத்திலே கேபிள் சங்கர் தான் நெம்பர் ஒன்......மஹாஸ்வாமிகள் விளக்கவுரை நல்கினார்.  இதற்குப் பெயர் பொச்சரிப்பா இல்லையா? இல்லையில்லை, ஓ! அரித்துக்கொண்டே இருக்கும் பொச்சா?//
mamallan

மாமல்லன் -மக்யா நாளே
*****

சாரு இந்த பிப்ரவரியில் "மக்யா நாளே" என்ற சொல்லாடலுக்காக அவரது அல்லக்கை மூலம் கடிதம்/லெட்டர் போட வைத்து(சுய புனைவா)  அவரது வட்டார மொழியாளுமைக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்துக்கொள்கிறார்.

ஆனாலும் விதி வலியது ஆச்சே ,அந்த மக்யா நாளு சொல்லாடலை போன பிப்ரவரியிலே மாமல்லன் ஒருப்பதிவில் பயன்ப்படுத்திய ஒன்று தான்.

மக்யா நாளுக்கு மாமல்லன் ஒன்றும் காப்புரிமையாளர் அல்ல ஆனால் அப்படி சொல்லாடல் கையாண்டேன் என பீற்றிக்கொள்ளவில்லை . ஆனால் சாருவோ ஒத்த சொல்லுக்கே என்னே என் மொழியாளுமைனு அல்லக்கை நொல்லக்கைனு கூட்டு சேர்ந்து கும்மியடிக்கிறார் :-))

வட்டார மொழி சொல்லாடலில் பின்னிப்பெடல் எடுக்கும்.கி.ராஜநாரயணன் எல்லாம் படித்திருப்பாரா அல்டிமேட் எனத்தெரியவில்லை.

சாருவை  விடாமல் நொங்கெடுப்பவர் மாமல்லன் அதனால் அவரை புரூஃப் ரீடர், விக்கி லீக்ஸ் விமல் என்றெல்லாம் வசைப்பாடிக்கொண்டிப்பார் கடைசியில் அவர் கிட்டேவே ஆட்டையப்போட்டு பீற்றிக்கொள்கிறார், இன்னும் மாமல்லன் கண்ணில் இந்த பீற்றல் படவில்லைப்போலும் ,பட்டதும் ஸ்கிரீன் ஷாட்டுடன் ஒரு ஆப்பு வரும் :-))

இன்னொரு முக்கியமான  டவுட், சாரு அஞ்சலகத்துறை ஊழியராக பணிப்புரிந்தவர்  , 70 களில் பணிக்கு சேர்ந்திருக்கலாம், ஆனால் இப்போ எனக்கு என்ன ஜாதினே தெரியாது சொல்லிக்கிறார், அப்போ 70 லவே ஜாதி இல்லைனு சொல்லி வேலைக்கு சேர்ந்தாரா இல்லை அதுக்கு முன்னரே பள்ளியில் ஜாதிப்போட்டுக்காம சேர்ந்து படிச்சாரா? அப்படி உண்மையில் செய்திருப்பாராயின் இம்மாம் பெரிய புரட்சிய செய்துவிட்டு அமைதியா இருக்கும் அந்த நல்ல உள்ளத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை :-))

ஆப்பை யாரும் நமக்கு வைப்பதில்லை நாமா தான் ஆப்பு மேல போய் குந்துகிறோம் :-))

என்ன கொடுமை சார்(ரு) இது!

--------------

சட்டம் என்ன செய்யும்?

2ஜி ஊழல் இந்தியாவின் சரித்திர சாதனைகளில் ஒன்று, ஊழல் உண்மை என்பதாக கருதி 122, 2ஜி உரிமங்களும் இரத்து செய்யப்பட்டு தலா 5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டது.

பொது புத்தியில் நீதி வென்றதாக தோன்றினாலும் உண்மையில் வென்றதா?

டிபி ரியாலிட்டி ,யுனிடெக், போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் ,உரிமையாளர்களும் உள்ளே போய் வெளியே வந்தார்கள்,


ஊழலுக்கு காரணமான ஆ.ராசா, அவரின் ஊக்க சக்தி கனிமொழி , இடைத்தரகர் நீரா ராடியா எல்லாம் உள்ளே போய் வந்தார்கள்(ராசா மட்டும் கோட்டையில்)

ஆனால் பாருங்க டாடா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஆதித்ய பிர்லா, ஏர்செல் , ஏர் டெல், வீடியோ கான் போன்றவற்றின் உரிமையாளர்கள் மட்டும் உள்ளே போகவேயில்லை, அங்கே மட்டும் அதிகாரிகளோடு வேலையை முடித்துக்கொண்டது நீதித்துறை, அப்படினா இவங்க எல்லாம் உத்தம சீலர்கள் , அதிகாரிகளா முடிவு செய்து தப்பு செய்து விட்டார்களா?

சரி அது போகட்டும் அது என்ன மை லார்ட் 5 கோடி தண்டத்தொகை அதெல்லாம் ஆ.ராசா பி.ஏ க்கே டிப்ஸ் ஆக கொடுத்திருப்பார்கள் நம்ம உத்தம வியாபாரிகள். அதை போய் தண்டமா கட்ட சொன்னா அவங்களுக்கு வலிக்கவா போகுது.

ஆல மரம்,அரச மரத்தடி நாட்டாமைகள் எல்லாம் மைனர் குஞ்சு ரேப் செய்தால் இப்படித்தான் குத்தத்த  ஒப்புக்கிறியா , னு கேட்டுட்டு ஒப்புக்குக்கிறேன் சொல்லீட்டா சர்..சர் மைனர் குஞ்சு  செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுக்கிட்டதால அவருக்கு 101 ரூவா அவராதம் விதிக்குது இந்த பஞ்சாயத்துனு  தீர்ப்பை சொல்லிட்டு  கெம்பீரமா துண்டை உதறி  தோளில் போட்டுக்கிட்டு போவார் நாட்டாமை அத விட காமெடியா இருக்கு இந்த 5 கோடி அபராதம் :-))

ஆயிரக்கணக்கான கோடி ஊழல் ஆனால் அபராதம் அஞ்சு கோடி தான் , இப்படி இருந்தா எல்லாம் ஊழல் செய்துவிட்டு மாட்டிப்போம்னு பயப்படாம அபராதம் கட்டிக்கலாம்னு துணிச்சலா களம் இறங்கிட மாட்டாங்க? மைனர் குஞ்சு வேற 101 ரூபாய இப்பவே பாக்கெட்ல வச்சுக்கிட்டு அடுத்த வேட்டைக்கு அலையறாராம் :-))

திறந்த சந்தையான அமெரிக்காவில் சில நிறுவனங்கள் ஒன்று கூடி கார்டெல் அமைத்து விலையைக்கட்டுக்குள் வைத்து சந்தையை வசப்படுத்தினாலே மில்லியன் கணக்கில் அபராதம் போடுகிறார்கள்.

டிராம் எனப்படும் மெமரி சிப் விலையை செயற்கையாக கட்டுப்படுத்திய குற்றத்திற்கு சாம் சங் 90 மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டியது.
சுட்டி:http://www.dailytech.com/Samsung+Fined+90+Million+for+DRAM+Price+Fixing/article6016.htm"> சாம்சங்க்

எல்சிடி டிவிக்களின் விலையை நிர்ணயிக்க முயன்றதால் சாம் சன்ங்க், எல்ஜி ,ஷார்ப் இன்னும் சிலர்  என மொத்தமாக 585 மி.டாலர் அபராதம் கட்ட ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுட்டி:http://www.theinquirer.net/inquirer/news/2130848/samsung-sharp-chimei-pay-millions-lcd-price-fixing"> எல்சிடி டீவி அபராதம்.

எல்லா நாட்டிலும் ஊழல் செய்யவோ விதி மீறவோ வழியை தேடவே செய்கிறார்கள் வியாபாரிகள்,ஆனால் மாட்டினால் ஊழலுக்கு ஏற்ற தண்டனை,அபராதம் அங்கெல்லாம் உண்டு. ஆனால் இந்தியாவில் தண்டனை/அபராதம் என்பது ஊக்க மருந்தாக இருக்கிறதே...

என்ன கொடுமை சார் இது!

---------

குற்றமும் பின்னணியும்.



#சென்னைப்புற நகரில் ஒரு பெண்ணை  அவரின் ஆண் நண்பரும் இன்னும் சில கல்லூரி மாணவர்களும் ஒன்று கூடி பாலியல் பலத்காரம் செய்ததாக ஒரு செய்தி,

#வங்கிக்கொள்ளையில் ஈடுப்பட்டு துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒருவர் சென்னை புற நகர நிகர் நிலை பல்கலை மாணவர் என்ற மற்றொரு செய்தி,

இவை எல்லாம் படிப்பாளிகளின் குற்றங்களாக கண்ணில்ப்பட்டவை, இதற்கு எல்லாம் என்னக்காரணம்.

பொதுவாக தனியார் பொறியியல் கல்லூரிகளை விட  நிகர் நிலைப்பல்கலையில் பயில்வோரே அதிக அளவில் அடாவடிகளில் இறங்குகிறார்கள் ,

தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 % அண்ணாப்பல்கலை கலந்தாய்வின் மூலம் சேர்கிறார்கள், பெரும்பாலும் மத்தியவர்க்க மாணவர்கள், படிக்க வேண்டிய கட்டாயம்,தேவை உள்ளவர்கள்.மீதி 50%  கட்டண சேர்க்கை, அவர்கள் கொஞ்சம் சுமாராண மாணவர்கள் அப்படி இப்படி இருப்பார்கள் ஆனால் எப்படி பார்த்தாலும் தமிழ் நாட்டு மாணவர்கள் தான் அதிகம்.

ஏன் எனில் அண்ணாப்பல்கலை விதிப்படி 15%  மேல் பிற மாநில மாணவர்களை சேர்க்க முடியாது.

ஆனால் இந்த நிகர் நிலைப்பல்கலைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை,யுஜிசி கட்டுப்பாடு எல்லாம் பெயரளவிலே. அவர்கள் விருப்பம் தான் வெளி மாநிலம், வெளிநாடு யார் வேண்டுமானாலும் சேரலாம் ஜஸ்ட் பாஸ் ஆனால் போதும்  காசு கொடுத்தால் சீட். எல்லாவற்றுக்குமே விலை அங்கே.

இப்படி 100 சதவீத வியாபாரமாக இருக்கும் நிகர் நிலைப்பல்கலையில் மாணவர்களை கண்டிப்பது என்பது பேச்சுக்கு கூட இருக்காது, ஏன் எனில்  எல்லாம் காசு கொடுத்து சேர்ந்த செல்லப்பிள்ளைகள் ஆச்சே.

ஒரு வெளி மாநில மாணவன் அவன் மாநிலத்து மாணவர்களை கொண்டு வந்து சேர்த்தால்  நிர்வாகமே கமிஷன் கொடுக்கிறது. இப்படிப்பட்ட புரோக்கர் வேலையில் மாணவர்களிடையே போட்டி வந்து அடி தடி எல்லாம் சகஜம்.

அங்கு நடக்கும் தேர்வுகள் செம கேலிக்கூத்து , ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பது போல தேர்வு நடத்தி ஃபெயில் ஆக்குவார்கள், அப்புறம் பார்க்க வேண்டியவர்களை பார்த்து வெட்ட வேண்டியதை வெட்டினால் பாஸ்.

பணம் கறக்கவே ஃபெயில் ஆக்குவார்கள்.எவ்வளவு மக்காக இருந்தாலும் 90% மதிப்பெண் உடன் ஆல் கிளியராக படிப்பு முடிக்க உத்திரவாதமான ஒரே இடம் நிகர் நிலைப்பல்கலைகளே, அதனாலேயே வெளிமாநில மாணவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு தமிழக நிகர்நிலைப்பல்கலையில் சேர்கிறார்கள்.

நண்பன் படம் போல  ஆள் மாறாட்டம் எல்லாம் அரதப்பழசு , கை நாட்டா இருந்தாலும் கைல காசு இருந்தா பொறியியல் பட்டம் கிடைக்கும் :-))

பணக்காரர்களை படுத்தாமல் பட்டதாரிகள் ஆக்க அரும்பாடு பட்டு சேவை செய்பவர்களே கல்வி தந்தைகள் :-))

இது போன்ற நிகரில்லா பல்கலையில் பயிலும் கண்மணிகள் பெரும்பாலும் அக்கம் பக்கத்தில் வீடு /ஃப்ளாட் வாடகைக்கு எடுத்தே படிக்கிறார்கள்,அதுவே குற்ற செயல்களில் ஈடுபட முதல் படியாகிறது.

பெரும்பாலும் இரவுகளில் உற்சாக பானத்துடன் , பாட்டை அலறவிட்டு அமளி துமளி செய்வார்கள், அவ்வப்போது பெண் நண்பர்களுடன் குருப் ஸ்டடி வேறு செய்கிறார்கள் :-))

இதில் பெரிய காமெடி என்னன்னா அந்த பொண்ணுங்க யாருனு கேட்டால் பிரண்டு இல்லைனா ரூம் மேட் சிஸ்டர்னு சொல்வாங்க :-))

புறநகர்ப்பகுதிகளில் பேச்சிலர் , அதுவும் மாணவர்களுக்கு என்றே சிலர் வீடு,ஃப்ளாட் வாங்கிப்போட்டுள்ளார்கள் , சாதாரணமாக 3000 வாடகை என்றால் இவர்களுக்கு தலைக்கு 2000 என்று எப்படியும் 8000 தீட்டி விடுவார்கள் வீட்டு உரிமையாளர்கள். இவர்களாலேயே புற நகரிலும் வீட்டு வாடகை ஏறிவிட்டது.

காசுக்கு ஆசைப்பட்டு உரிமையாளர்கள் மாணவச்செல்வங்கள் என்ன செய்தாலும் கண்டுக்கொள்வதில்லை அக்கம்பக்கத்தார் புகார் செய்தாலும் காதில் ஏறாது.

வீட்டு வாடகை,உணவு, பைக் பெட்ரோல்,செல்போன் பேச்சு, கேளிக்கை செலவு என அதிகம் செலவாகிறது,வீட்டில் இருந்து எவ்வளவு பணம் அனுப்பினாலும் ஒரு வாரம் தான் ஓடும் இவர்களுக்கு, அவர்களை  பொறுத்து பணம் இல்லை எனில் பிணம்  தான் சொகுசாக என்ஜாய்  செய்ய முடியாது என்பதாலே இது போன்ற மாணவர்கள் சின்ன சின்ன குற்றங்கள் செய்து பின்னர் பெரிய அளவிலும் செயல்படப்போய் குண்டடிப்படுகிறார்கள்.

புற நகர்ப்பகுதிகளில் மாணவர்கள் சிலர் செல் போன், லேப் டாப் போன்றவற்றை செல் போன் கடைகளில் விற்பது சகஜம் , கடைக்காரனும் மலிவு விலைக்கே வாங்குவான், காரணம் அவை எல்லாம் சக மாணவர்களிடமே ஆட்டைப்போட பட்டவை.

மேலே செய்தியில் அடிப்பட்ட இரண்டு குற்ற சம்பவங்களும் வெளியில் வீடு எடுத்து தங்கியிருந்த மாணவர்களாலேயே நடந்துள்ளது.

ஏன் கல்லூரியில் விடுதியில்லையா என்ன ? அத்தனைப்பேருக்கும் இருக்காது, இருந்தாலும்  பணக்கார மாணவர்களுக்கு பிடிக்காது. வசதியாக விருப்பம் போல இருக்க வெளியில் வந்து, ஆடம்பரமாக செலவு செய்ய பணம்  இல்லாமல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.பணத்தட்டுப்பாடு இல்லை எனில் பெண்ணை கூட்டாக பாலியல் பலத்காரம் செய்கிறார்கள்.

சென்னையை சுற்றியுள்ள சில நிகர் நிலைப்பல்கலைகளை இழுத்து  மூடினாலேயே போதும் இது போன்ற செய்திகள் நின்றுவிடும். அதுவும் பொத்தேரியில் ஒரு நிகர் நிலைப்பல்கலை இருக்கு அங்கு பயிலும்  சில மாணவிகள் இரயில்வே டிராக் கடக்கும் போது அடிப்பட்டு சாவுனு செய்தி வரும் ஆனால உண்மையில் அது தற்கொலையாக இருக்கும்.மாணவர்களைப்போன்றே  மாணவிகளும்  சீரழிந்து போனதே காரணம். போதை,மது,மாது எல்லாம் கைவரப்பெற்ற அதிஷ்டசாலி மாணவர்கள் அவர்கள். இப்போது என்கவுண்டர் ஆன நபரும் பொத்தேரி மாணவரே.

காசு ஒன்றே குறியாக செயல்ப்படும் அக்கல்வி நிலையத்தை நடத்துபவர் சேர்த்த பணத்தை பாதுகாக்கவே அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து போஸ்டர் ஒட்டிக்கொண்டு திரிகிறார்.

என்ன கொடுமை சார் இது!

---------

note:image courtsy google image.

10 comments:

naren said...

நல்ல நல்ல “ளள்னுயப” பதிவுகளாக போட்டீங்க. நல்லா இருந்திச்சு.
ஆனா திடிர்னு எலுத்தாலர் ஆக ஆசைப்பட்டுட்டீங்க போலிருக்கு. அதனாலே எலக்கிய அக்கப்போர் சாக்கடையில் குதிச்சுட்டீங்க.
பார்த்து தளம் நாறிடப் போகுது.

வவ்வால் said...

நரேன்,

வாங்க, வணக்கம்,நன்றி!

உங்கள் கடிதம்??!! பார்த்தேன் , எனது இந்த எலக்கிய வேட்கை பாதியில் வந்தது அல்ல ஆதியிலே ஊற்றெடுத்த ஒன்று, அப்போதெல்லாம் ஒரு லெகர் பீர் அடித்தாலே நாபிகமல்லத்தில் இருந்து குபீர் என பிறிடும் ஹி..ஹி கவித தான் !இப்போது பீருடன் பிராந்தி மிக்ஸ் செய்து அடிக்கும் அளவுக்கு வளர்ச்சியடந்தாச்சு அதன் பின்/பக்க/ முன் என எதோ ஒரு விளைவாக எலக்கியம் பீறிடும் போது அதுக்கூடாது என்பது என்னை சுவாசிக்க கூடாது என்பது போல உள்ளது. மற்றவர்களைப்போல குமுதம்,விகடன் போன்ற எலக்கிய பத்திரிக்கைகளில் எழுதும் லக்சரி எனக்கு கிடைப்பதில்லை,(வெட்கமில்லாமல் கேட்டும் பார்த்தாச்சு) இருப்பது இலவச பிலாக்கர் தான் அதில் எழுதி சுமார் 2 கோடிப்பேரை விஞ்ஞானிகள் ஆக்கியது தான் என் சாதனை, என்ப்பதிவை தான்சானியா , டிம்பக்டுவில் எல்லாம் படிக்கிறார்கள் , ஆனால் தமிழ் நாட்டில் தான் கண்டுக்க மாட்டேன்கிறார்கள், இப்போதும் மெரினாவில் கூட்டம் போட்டால் என் பெயருக்காகவே அதன் நீள அகலங்களை நிரப்ப என் உலக வாசகர் வட்டத்தினர் தயாராக இருக்கிறார்கள்.இது எல்லாம் இணையத்தில் இலவசமாக எழுதி சாதித்தது. :-))

எலக்கியம் என்பது சகாரா பாலையில் கண்ணுக்கு தெரியாமல் பாயும் ஒரு நதி என நினைத்தேன் ,நீங்களோ சாக்கடை என்று சொல்லிவிட்டீர்கள் இருந்துவிட்டுப்போகட்டும் சாக்கடையிலும் மீன்கள் இருக்கலாம் ,பிடித்து விடுகிறேன், சாக்கடையில் பிடித்த மீனாக இருந்தாலும் ருசியாக இருந்தால் சரி தான்.

நான் தலைக்கீழாக தொங்கிக்கொண்டிருப்பேன் ஆனால் பக்கவாட்டில் பயனுள்ள என திருப்பிபோட்டு என்னை ஜன்னல் கம்பியில் தொங்க வைத்துவிட்டீர்களே :-))

எலக்கிய வாதிகளிடம் விழித்திருக்கும் மிருகம் ,என்னுள் தூங்கிக்கொண்டு இருக்கு அதை தட்டி எழுப்பி விட்டார்கள் இனி வேட்டை ஆரம்பாமயிடுச்சு :-))

ஒன்றைக்கவனித்தீர்களா ,உங்களுக்கு எழுதிய இக்கடிதத்தில் எந்த இடத்திலும் "இரு" என்ற சொல்லையேப்பயன்ப்படுத்தவில்லை, இப்படி எழுதுவதற்கு லிப்போ கிராமட்டிக் என்று பெயர், இப்படி இதற்கு முன்னர் லியார்னாடோ டாவின்சி என்ற பிரெஞ்ச் எழுத்தாளர் மட்டுமே எழுதியிருக்கிறார், தமிழ்ப்பதிவுகளில் நான் மட்டுமே,அது இங்கே எத்தனைப்பேருக்கு தெரியும்? :-))

சார்வாகன் said...

வணக்கம் சகோ
உங்களுக்கு எல்க்கியோஃபோபியா வந்துவிட்டது என நினக்கிறேன்,இளநீரில் கொஞ்சம் மருந்து கலந்து படுக்கப்போகும் முன் கு(அ)டித்துவிட்டு படுத்தால் பறந்துவிடும்!!!!!!!!!!.
**********
இந்தியாவில் எந்தக் காலத்தில் ஊழல் செய்தவன் தண்டிக்கப்பட்டான்?[அம்பாள் எந்த கால்த்தில் பேசினால் என்ற பராசக்தி வசனம் மாதிரி படிக்கவும்
**************
வ்ட இந்தியாவில்[குறிப்பாக் பீஹார்,வங்காளம்] இன்னும் சாதிக் கட்டுபாடு,அடாவடி இதெல்லாம் அதிகம்.சட்டம்,சரி த்வறு எல்லாம் அங்கே அதிகம் கிடையாது. பல்ருக்கு பல பெயர்களில் கடவுச்சீட்டு,ஓட்டுனர் உரிமம்,போலி சான்றிதழ்கள் இருப்பது உண்டு.நம் நண்பர் ஒருவருக்கு 3 [வேறு பெயர்களில்] ஓட்டுனர் உரிமம் பார்த்து பயந்து விட்டேன்.ரொம்ப சாதாரணமக் அதனை காட்டி விள்க்கினார்.ஹி ஹி
அனைவரையும் குற்ற‌ம் சொல்ல முடியாது எனினும் இவர்களை காவல்துறை கொஞ்சம் கண்காணித்து வருவது அவர்களுக்கும் நல்லது.நிகர் நிலை[யில்லா]
வியாபாரிகளையும்தான்!!!!!!!!

நன்றி

naren said...

உல்டாமேட் * தல எலுத்தாலர் வவ்”வால்” அவர்களுக்கு, உங்கள் வாசகர் வட்டத்தில் “பிச்சைகாரனாக” இருந்து, ப்ளாக், டிவிட்டர், பேஸ்புக், ஓர்குட் இத்யாதி இத்யாதி போன்றவைகளில் உங்கள் புகழை ரவுண்டு கட்டி பரப்புவேன். உங்கள் புத்தகங்களை ஆயிரம் ஆயிரமாக வாங்கி பிச்சைகாரர்களுக்கு தானாமாக அளிப்பேன். இனிமேல் உங்கள் வாசகர் வட்டத்தில் நானும் ஒரு உறுப்பினர் (நானும் ஒரு ரவுடிதான் ரவுடிதான் ரவுடிதான்)

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

எலக்கிய போஃபியாவோ மாஃபியாவோ தெரியலை உச்சந்தலைல கிர்ருனு ஏறிடுச்சு ஒரு சாக்கு தைக்கிற அகதமி அவார்டாவது வாங்காம கீழ இறங்காது போல இருக்கு :-))

--------

500 ரூ லஞ்சம் வாங்கினா ரூவால மஞ்சப்பொடி தடவி பொறி வச்சு புடிச்சுடும் கெவர்மெண்ட் :-))

அதனால தான் அந்த காலத்திலேயே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு சொல்லி இருக்காங்க, சுருட்டினா பெருசா சுருட்டணும் அப்போ தான் வையத்துள் வாழ்வாங்கு வாழ முடியும்னு அத சரியா பின்பற்றிய கொள்கை வீரர்கள் தான் 2ஜி ஆசாமிங்க!

--------
வட இந்தியாவில நீங்க சொல்கிற சமாச்சாரம் கொஞ்சம் அதிகம் தான் , மும்பைல ராகுல் காந்தி போட்டோவோட போலி ரேஷன் கார்ட் ஒருத்தன் வச்சி இருந்தான்னு செய்திப்படிச்சேன்(போட்டோ ஒட்ட வேற போட்டோ கிடைக்கலை போல)

நிகரில்லா பல்கலைகள் 100% பிசினஸ் கிளாஸ் ஆகிடுச்சு, அதன் பின்விளைவு தான் இது, என்கவுண்டர்ல செத்த ஒருத்தன் படிப்பு முடிச்சுட்டு ஊருக்கு போகாம இங்கேவே தங்கி இருந்து மாணவர்களை சேர்க்கும் புரோக்கராக இருந்தான்னு படிச்சேன்.

இது போல வேலை செய்தே பணம் சம்பாதிக்க முடியும் போது வேலைக்கு போக பிடிக்குமா? அட்டென்டண்ஸ், அரியர் இதெல்லாம் கரெக்ட் செய்ய கூட ஏஜெண்ட் உண்டாம் :-))

வவ்வால் said...

நரேன்,

நம்ம எலக்கிய குண்டர்ப்படையில் இணைய வருக ..வருக என வரவேற்க்கிறேன், வாசகர் வட்ட எலக்கிய குண்டர் படையின் பிரபஞ்ச தளபதி பொறுப்புக்கு போட்டியின்றி (போட்டிக்கு ஆள் இருந்தா தானே) உம்மை தேர்வு செய்தாச்சு :-))

நம்ம எலக்கிய குண்டர்ப்படையில் பிச்சைக்காரனல்ல ,நரேன் என்ட தளபதி!(தளபதி பிஜிஎம்)
இனிமேல் துவித்தர், முகநூல் ,பிளாக்,ஒருகூடு என எல்லா இடங்களிலும் அடிக்கும் அடியில் தாரை தப்பட்டைகள் கிழிய வேண்டும், விரைவில் முதுமலையில் வாசகர் வட்ட எலக்கிய குண்டர்ப்படையின் முகாம் நடத்த உள்ளேன் , விரைவில் அறிவுப்பு வரும் :-))

அடிக்கடி கடிதம் போடவும்! நடுவில மானே தேனே பொன் மானே போல எலக்கிய நாராசங்களையும் தூவிக்கொள்ளவும் :-))

இது மனிதர் புரிந்துக்கொள்ள மனித எலக்கியம் அல்ல ...அதையும் தாண்டி குஜாலானது!

சமுத்ரா said...

ஆம்.. சாருவின் சுய விளம்பரம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Robin said...

திரட்டியில் இணைக்காமல் இப்படி ரகசியமாகப் பதிவிடுவது சரியா?

வவ்வால் said...

வாங்க சமுத்ரா,

வணக்கம்,நன்றி!

சுய பீற்றலுக்கும் ஒரு தகுதி வேண்டாம் , சும்மா மொக்கையாக வடிவேலு போல நல்லாப்பார்த்துக்க நானும் ரவுடி தான் போல சொல்லிக்கொண்டு, அதுக்கு ஒரு அல்லக்கை கூட்டம் வேற :-))

-------

ராபின் வாங்க,

வணக்கம்,நன்றி!

ஹி..ஹி நீங்க தான் துப்பறியும் ராபின் ஆச்சே அதல பாதளமா இருந்தாலும் கண்டுப்பிடிச்சுடுவிங்கனு தான் ரகசியமா போட்டேன் :-))

இன்டெலி,சங்கமத்தில் இணைக்கிறேன்,ஒரு வேளை பதிவு தெரியவில்லையோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு