Sunday, December 16, 2012

சினிமா ரகசியம்-5:வியாபார தந்திரம்.


 (அய்யோடா...புள்ளிவிவரத்தோட கிளம்பிடான்யா..கிளம்பிட்டான்)


DTH இல் முதன் முறையாக ரிலீஸ்,Barco Auro-3D Sound,3000 பிரிண்டுகள் என்றெல்லாம் பிரமாண்டமாக கதைக்கிறார்கள், அதை எல்லாம் கேட்கும் போது தமிழ் சினிமா எங்கேயோ போய்விட்டது என சாமானிய ரசிகர்கள் வாய் பிளக்கிறார்கள், உண்மையில் தமிழ் சினிமாவின் வியாபார வீச்சு எந்த அளவுக்கு உள்ளது, சொல்வது போல செயலில் காட்டுவது சாத்தியமா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

முதலில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் நிலவரத்தினைப்பார்ப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் மொத்த எண்ணிக்கை நிலவரம்.As per tn govt revenue department stats.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக்கொண்ட பன்னரங்குகளின் எண்ணிக்கையும் இதில் அடக்கம் என நினைக்கிறேன்.

CINEMA THEATRES IN TAMIL NADU:

2010-11

Permanent -1085

Open Air Theatres-5

 Semi Permanent-75

Touring Theatres-32

Total=1,197

http://www.tn.gov.in/deptst/Tnataglance.htm#CINEMA THEATRES

இதில் பெருநகரம்,நகரம், சிற்றூர் வாரியாக திரையரங்குகளின் பரவலை காணலாம்.

மெட்ரோ-1 :சென்னை

மாநகராட்சி-9

திருச்சி,மதுரை,கோவை,சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு,திருநெல்வேலி.

சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 40 அரங்குகள் தேறினாலே அதிகம், எனவே 40 எனக்கொள்வோம்.

மற்ற ஒன்பது மாநகர எல்லைக்குள் தலா 20 எனக்கொண்டால், மொத்தம் 180 அரங்குகள்.

எனவே மாநகரப்பகுதிகளில் உள்ள அரங்குகள் மொத்தம் -220

நகராட்சி -150

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ,கடலூர் போன்ற ஊர்கள் ஆகும்.

மறைமலைநகர் போன்ற நகராட்சிகளில் தியேட்டர்களே கிடையாது.

நகராட்சி வகை ஊர்களில் ஒரு ஊருக்கு சுமார் 4- 5 அரங்குகள் இருக்கலாம், தோராயமாக 4 என வைத்துக்கொண்டால் ,

4*150= 600 அரங்குகள்.

டவுன் பஞ்சாயத்து-559

கூடுவாஞ்சேரி, வளசரவாக்கம் போன்றவை எல்லாம் டவுன் பஞ்சாயத்துகள் ஆகும், பெரும்பாலான இடங்களில் தியேட்டர்கள் இருக்காது, அப்படி இருக்கும் பல திரையரங்குகளில் புதியப்படம் வெளியாவதில்லை.

செமி பெர்மனண்ட் தியேட்டர் 75 இருப்பதாக பார்த்தோமே அவை இங்கு இருக்கலாம்.

இன்னும் சில டவுன் பஞ்சாயத்துகளில் ஓரளவு நல்ல தியேட்டர்கள் இருக்கலாம், ஆனால் புது படம் வெளியாவது வெகு அறிதே, அப்படியும் புதுப்படங்கள் வெளியாகும் வகையில் சுமார் 150 அரங்குகள் இருக்கலாம் என வைப்போம்.

கிராம பஞ்சாயத்து-12,524

இங்கு டூரீங்க் கொட்டகை போன்றவையே இருக்கும், அதும் அழிந்து தற்சமயம் 32 மட்டுமே இருக்கிறது.

(the show over-end of the entertainment)

டிஜிட்டல் மயமான திரையரங்குகளின் எண்ணிக்கை:

qube theatres-510

http://www.qcn.in/theatres/Tamil-Nadu

UFO theatres -242

http://www.ufomoviez.com/UFO_Presence.aspx?mode=state

தமிழகத்தில் உள்ள 1,197 அரங்குகளில் மொத்த டிஜிட்டல் அரங்குகள்எண்ணிக்கை=510+263=773.

இவற்றில் புதிய படங்கள் வெளியிட வாய்ப்புள்ள திரையரங்குகள்:

மாநகரம்=220

நகரம்=600

டவுன் பஞ்சாயத்து= 150

மொத்தம்= 970

ஆனால் அனைத்து தியேட்டரிலும் ஒரே படத்தினை வெளியிட இயலாது, ஒரு நகரில் 4 அரங்குகள்  இருந்தால் ஒன்றில் தான் வெளியிடுவார்கள், முதல் சில நாட்கள் மட்டும் ஒரே நகரில் இரண்டு அரங்குகளில் ஷேரிங்கில் வெளியிடும் வழக்கம் உண்டு, அது ஓப்பனிங் வாரத்திற்கு மட்டுமே இருக்கும் எனலாம்.

எனவே ஒரே ஒரு புதிய படம் அதிகப்பட்சம் எத்தனை அரங்கில் தமிழ்நாட்டில் வெளியாக வாய்ப்புள்ளது எனப்பார்ப்போம்.

மாநகராட்சியில் 220 அரங்கு எனில் அதில் சுமார் 100 அரங்குகள் என கொள்ளலாம்.

நகரப்பகுதியில் நகருக்கு ஒன்று என கொண்டால் -150

இரண்டு அரங்கு எனில் 300

டவுன் பஞ்சாயத்து 150 இலும் வெளியாகிறது என வைத்துக்கொண்டாலும் ,

மொத்தமாக 100+300+150= 550 அரங்குகள் மட்டுமே.

இந்த எண்ணிக்கையில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே நல்ல பார்வையாளர் கூட்டம் வருவதற்கு வாய்ப்புண்டு, மற்றபடி அதிக அரங்குகள் என வெளியிடுவதால் வருமானம் பெரிதாக உயராது.

ஏன் எனில் அருகிலேயே இன்னொரு அரங்கு இருந்தால் பார்வையாளர்கள் பிரிந்து ,அரங்க வருமானம் தான் பகிரப்படும், எனவே வருவாய் அதிகம்  உயராது.

அப்படியே மிக அதிக எண்ணிக்கையில் எல்லா ஊரிலும் ,எல்லா தியேட்டரிலும் வெளியிட்டாலும் 1090 தியேட்டர்களில்  மட்டுமே வெளியிட முடியும்.அப்படி செய்வது சாத்தியமேயில்லை என்று வைத்துக்கொண்டாலும் 1090 தியேட்டர்கள் என வைத்துக்கொண்டால் , 3000 பிரிண்ட்கள் என வெளியிடுவதாக சொல்லுபவர்கள் மற்றவற்றை எங்கு திரையிடுவார்கள்?

தமிழ்நாட்டுக்கு வெளியில் தான் திரையிட வேண்டும், தமிழ்நாட்டுக்கு வெளியில் எல்லாம் தமிழ் படங்களின் வியாபாரம் தியேட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லை, மொத்தமாக தெலுங்கு, மலையாளம் ,இந்தி என விலைப்பேசுவார்கள், பின்னர் அயல்நாடு.

எனவே 2000 பிரிண்ட் என சொல்லி எல்லாம் விற்க இயலாத போது 2000 பிரிண்ட் போட ஆகும் செலவே அதிகம் ஆகும் என்பதால், ஒரு குறிப்பிட்ட வருவாய் தரும் அவுட் சைட் தமிழ்நாடுக்கு எல்லாம் யாரும் 2000 பிரிண்ட் போட வாய்ப்பேயில்லை.

இது வரையில் வெளியான தமிழ்ப்படங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பிரிண்ட் போடப்பட்டு வெளியான தமிழ்ப்படம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் மட்டுமே, சுமார் 2500 பிரிண்ட்கள் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 900 பிரிண்ட்கள் வெளியாகி இருக்கக்கூடும், சரியான எண்ணிக்கை உறுதியாக எந்த தளத்திலும் இல்லை, ஆனால் வெளிநாட்டு பிரதிகளின் எண்ணிக்கை 300 என தெளிவாக சொல்லியுள்ளார்கள், இன்றைய தேதி வரையில் உலக அளவில் 300 பிரிண்ட்கள் வெளியான ஒரே தமிழ்ப்படம் எந்திரன் மட்டுமே.

//Tamil Superstar Rajinikanth's fans camped outside cinema halls and queued up at ticket counters since early morning today to buy tickets to his latest venture 'Enthiran (Robot).

Being shown across 300 screens outside India, 'Enthiran' is the largest worldwide release after Hollywood film 'Spiderman'. The movie is being screened in Singapore, Malaysia, UK, China and the US.//

http://www.indianexpress.com/news/rajinikanths-enthiran-magic-grips-malaysia/691605/0

எனவே எந்திரன் தமிழ் நாடு 900 +வெளிநாடு 300 =1200 பிரிண்ட்கள், மற்ற 1300 பிரிண்ட்கள் இந்தியாவின் மற்ற மொழிகளில் வெளியாகி இருக்கும் எனலாம், இதுவே தமிழ் சினிமாவின் மிக அதிகப்பட்ச வியாபார எல்லையாகும், இதனை தாண்டிய எண்ணிக்கையில் வெளியிடுவது , வியாபார ரீதியாக லாபகரமானதாக எந்த தமிழ்ப்படத்திற்கும் இருக்க வாய்ப்பில்லை.

அப்போ 3000 பிரிண்ட் போட்டு உலக அளவில் வெளியிடப்போவதாக சொல்வதெல்லாம் வாயிலேயே வடைசுடும் தொழில்நுட்பமே :-))



சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், விஷ்வரூபம் 2000 தியேட்டர்களில் வெளியாகும் என தெரியவருகின்றனது.

லோகநாயகர் ,இந்து பிசினெஸ்லைனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மொத்தம் 2000 பிரதிகள் வெளியாகும் என்றும் ,அவற்றில் 400 தமிழிலும்,அகில இந்திய அளவில் 1200 பிரதிகளும் என்கிறார், அப்படியானால் அயல்நாட்டில் 400 பிரதிகள் என கணிக்கலாம்.

செய்தி:

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

//Have you signed up with all the six DTH players?

No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium.

How many DTH homes do you expect to watch the movie at this price point?

The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch.

Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.

How much do you think Viswaroopam would gross?

I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore.

How many screens are you planning?

Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country.

Would you be able to rope in so many with this kind of protest?

In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that.//

அகில இந்திய அளவில் டிடிஎச் மார்கெட் அளவினை காட்டும் படம்.


இதில் மொத்தம் 48 மில்லியன் டிடிஎச் பயணாளர்கள் என்றாலும் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 29 மில்லியன்கள் என்பதை கவனிக்கவும், ஏன் எனில் அவர்கள் தான் உண்மையான  வாடிக்கையாளர்கள், மற்றவை எல்லாம் பயன்ப்பாட்டில் இல்லாத செட் டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை எனலாம்.

மேலும் தற்போது டாடா ஸ்கை பின்வாங்கியதாக தெரிகிறது, டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் பிக் டீவீ,ஏர் டெல் ஆகிய நான்கிலும் தமிழில் மட்டுமே டிடிஎச் இல் வெளியாகும் என்கிறார்.

தமிழ்நாட்டின் டிடிஎச் வாடிக்கையாளர்களில் முதலிடம் வகிக்கும் சன் டிடிஎச் 75-80% வைத்துள்ளது, அப்படி இருக்கும் போது மற்ற நான்கு சேவைகளிலும் 15 லட்சம் பேர் என சொல்வது மிகையான எண்ணிக்கையாகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த டிடிஎச்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே சுமார் 21 லட்சம் தான். அதில் சுமார் 80% சன் டிடிஎச் வசம் என்னில் எஞ்சியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என ஒரு கணக்கீடு,

//Sun Direct, with 17.5 lakh connections, controls 80% to 85 % of the DTH subscriber base in Tamil Nadu. The balance is shared by other operators like Airtel, Videocon, Tata Sky and Dish TV.//

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/chennai/30164367_1_dth-arasu-cable-tv-entertainment-tax

தமிழ் நாட்டில் 80-85% டிடிஎச் இணைப்புகளை சன் டிவி வைத்துள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 17.5 லட்சங்கள் என்கிறார்கள்.

80% என்றே எடுத்துக்கொள்வோம், = 17.5 லட்சம் என்றால் 100%?

17.5*100/80=21.875 லட்சங்கள்.

சன் டிவி யின் புள்ளிவிவரங்கள் சரியாக இருக்குமானால் தமிழ்நாட்டில் செப்டம்பர் ,2011 வரையில் 21.875 லட்சங்கள் தான் மொத்த டிடிஎச் இணைப்புகள் மட்டுமே.

சன் டிடிஎச் இன் 17.5 லட்சம் போக மீதம், 4.375 லட்சங்கள்.

அதனை டாடா, டிஷ், ஏர்டெல், பிக் டீவி, விடியோகான் ஆகியோர் சமமாக பிரித்துகொள்வதாக கொண்டால்.

ரிலையன்ஸ், டிஷ், விடியோகான், ஏர்டெல் ஆகியோருக்கு சுமார் நான்கு லட்சம் இணைப்புகளுக்கு கீழ் தான் வரும், இதில் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை என பார்த்தால் இன்னும் குறையும், அவற்றில் கட்டாயாம் 1000 ரூ செலுத்தி லோகநாயகரின் படத்தை எத்தனைப்பேர் பார்ப்பார்கள்? அதுவும் ஒரே ஒரு முறைக்கு!!!

தியேட்டர் கட்டண உயர்வுக்கு யார் காரணம்?


தியேட்டரில் கட்டணம் உயர்ந்துவிட்டதால் தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை ,அப்படி வராதவர்களை வர வைக்கவே டிடிஎச்சில் வெளியிடுவதாக லோகநாயகர் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல எப்படி என்றுப்பார்ப்போம்.

ஆதிகாலத்தில் எல்லாம் திரைப்பட விநியோகம் சதவீத அடிப்படையில் திரையிடப்படும், விநியோகஸ்தரும், திரையரங்கங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை  வசூலில் எடுத்துக்கொள்வார்கள், அதாவது சுமார் 40% ,மீதி 60% தயாரிப்பாளருக்கு, இம்முறையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள் முதலில் பணம் முதலீடு செய்ய தேவையில்லை.

பின்னர் படம் கிடைக்க போட்டி உருவாகவே ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் எடுத்து திரையிட்டால் நல்ல வசூலாகும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் முன்னதே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து ஏரியா வாங்க ஆரம்பித்தனர் ,இப்படியாக எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி பணம் செலுத்தும் முறை உருவாகியது.

(MGR- The Real Box Office King)

எம்ஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல, அவரது படங்கள் நிச்சயம் விநியோகஸ்தரை காலை வாரிவிடாது என்ற நம்பிக்கையில் ,படம் துவங்கிய அன்றே ஏரியா விற்பனை ஆகி தயாரிப்பாளர் கையில் பணம் கிடைத்துவிடும், அதை வைத்தே தயாரிப்பாளர்கள் படத்தினை எடுத்து முடிப்பார்கள்.

இதனால் எம்.ஜி.ஆர் என்பதையே மினிமம் கியாரன்டி .ராமசந்திரன் என சொல்வார்களாம்.

விநியோகஸ்தரிடம் நியாயமான அளவுக்கு எம்ஜி வாங்கி தயாரித்தவரையில் இம்முறையில் யாருக்கும் நட்டம் வரவில்லை. பின்னர் நடிகர்கள் சம்பளம் கோடிகளில் போய் தயாரிப்பு செலவு அதிகம் ஆனது ,எனவே போட்டக்காசினை எடுக்க தயாரிப்பாளர் அதிக எம்.ஜி கேட்க , விநியோகஸ்தர்களும், திரையரங்குகளிடம் அதிக எம்ஜி தொகை கேட்கலாயினர்.

எம்ஜி தொகைக்கு ஏற்ப வசூலானால் பரவாயில்லை நூற்றுக்கு 90 படங்கள் ஒரு வாரம் கூட ஹவுஸ்ஃபுல் ஆக ஓடுவதில்லை பின் எப்படி திரையரங்குகள் கட்டிய எம்ஜி ஐ எடுக்க முடியும் , எனவே ஓடும் ஒரு வாரத்திற்குள் போட்ட காசை எடுக்க அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க திரையரங்குகள் முற்பட்டன. இப்படியாகத்தான் திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது.

மலிவாக படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் திருட்டு டிவிடி பக்கம் போனார்கள், தாய்குலங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கினார்கள் ,இதனால் பல திரையரங்குகளும் காற்றாடின, 2000 ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டில் சுமார் 2000 அரங்குகள் இருந்தன இன்று அவை 1,197 என்ற எண்ணிக்கையில் சுருங்கிவிட்டன, இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கீழ் போய்விடும் எனலாம்.

சிறிய படங்களை போட்டாலும் கட்டணம் குறைவாக வைப்பதில்லை என்கிறார்கள், உண்மை தான் ஆனால் எந்த சிறிய படத்தயாரிப்பாளரும் குறைவான கட்டணம் வைத்து பொறுமையாக வசூலீக்க நினைப்பதில்லையே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட முதலை எடுக்க நினைக்கிறார்கள்.

ஏன் எனில் திரையரங்க வருமானம் என்பது ஒரு நாள் அரங்க வாடகை என நிர்ணயித்த கட்டணம் மட்டுமே, டிக்கெட் விலை கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அத்தொகை மட்டுமே அரங்க உரிமையாளருக்கு, மற்றவை எல்லாம் விநியோகம் செய்தவர் மூலம் தயாரிப்பாளருக்கு போய்விடும்.

தினசரி வசுலின் அடிப்படையில் பணத்தினை பெறுவது ரிஸ்க் என எம்ஜியில் விற்கிறார்கள், எம்.ஜி எடுக்க முதல் மூன்று நாள் ஓப்பனிங்க் கலெக்‌ஷன் தான் வழி எனவே திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

எனவே திரையரங்கில் கட்டணம் குறைய வேண்டுமானால் தயாரிப்பாளர் தான் முதல் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வளவு பேசும் லோகநாயகர் , திரையரங்குகள் அரசு நிர்ணய கட்டணம் மட்டும் வாங்கிக்கொண்டு எனது படத்தினை திரையிடுங்கள், எத்தனை நாள் ஓடுதோ அதற்கேற்ப எனக்கு வசூலாகட்டும் என சொல்ல வேண்டியது தானே?

மேலும் தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி இல்லை என சட்டம் இருக்கிறது, கண்டப்படி பெயரை வைத்துவிட்டு தமிழ் என சொல்லி கேளிக்கை வரிப்பெரும் தயாரிப்பாளர்கள், கேளிக்கை வரி தள்ளுபடிக்கு இணையான அளவுக்கு கட்டணம் குறைக்க சொல்ல வேண்டியது தானே, ஆனால் அப்பணத்தினை எடுத்து செல்வதும் தயாரிப்பாளர்களே அல்லவா?

லோகநாயகர் , விஷ்வரூப் என இந்தியில் பெயர் வைத்துள்ளார், அதனை தமிழில் "விஸ்வரூபம்" என எழுதிவிட்டால் தமிழ்ப்பெயர் என ஏதாவது சொல்லி கேளிக்கை வரி வாங்கிவிடுவார் ,அதற்காக தான் பம்மிக்கொண்டு மம்மியைப்பார்த்ததும், சேட்டலைட் உரிமையை ஜெயா டீவிக்கு கொடுத்ததும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

லோகநாயகர் , கேளிக்கை வரிக்கு ஏற்ப கட்டணம் குறைப்பேன் என சொல்லி திரையிட்டால் திரையரங்குகள் எதிர்க்க போவதில்லை, ஏன் எனில் எம்ஜியில் வெளியிடாமல் பெர்செண்டேஜில் வெளியிடுகிறேன், திரையரங்குகளுக்கு நஷ்டம் வராது என சொல்கிறார் அல்லவா , செய்ய வேண்டியது தானே?

DTH EFFECT:


# டிடிஎச் இல் வெளியிடுவது புரட்சி , அது திரையரங்குகளுக்கு வர இயலாதவர்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள், ஆனால் அது வருங்கால சாபமாக முடியும் எனலாம்,

இன்று வரையில் தமிழ்நாட்டில் திரையரங்க நுழைவு கட்டணம் ,சினிமாட்டோ கிராபி ஆக்ட் 1939 படியே அரசு நிர்ணயம் செய்கிறது, இதனால் மல்டிபிளெக்சில் 120 ரூ அளவிலும் நகரப்பகுதியில் 50 ரூ எனவும் அரசு நிர்ணய கட்டணம் உள்ளது.

மும்பை,பெங்களூரில் எல்லாம் மல்டிபிளெக்சில் 250 ரூ அளவிலும்,சாதாரண அரங்கில் 100 ரு போல இருக்கிறது.

ஆந்திராவில் நம்மை விட கட்டணம் குறைவு.

தியேட்டரில் கட்டணம் கூடுதல் என்பதால்  மக்கள் வரவில்லை என்றால், டிடிஎச் இல் ஆயிரம் ரூ 1000 கட்டணம் வைத்தால் மட்டும் அதிலும் பார்த்துவிட்டு பின்னர்  தியேட்டருக்கும் எப்படி மக்கள் வருவார்கள், ஏற்கனவே சுளையாக ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது ,பின்னர் தியேட்டருக்கு செல்ல மீண்டும் ஆயிரம் ரூபாய் செலவிட யாரால் முடியும், மன்னு மோகன் சொன்னது போல பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, ஒரே வாரத்தில் ஒரே படத்துக்கு இரு முறை ரூபாய் இரண்டாயிரம் செலவு செய்ய ?

டிடிஎச் இல் படம் ரிலீசுக்கு முன்னர் பார்ப்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், படம் நன்றாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட நல்லா இருக்குனு சொல்ல மாட்டான்,ஆனால் படம் மோசமா இருந்துச்சுன்னா, முகநூல்,துவித்தர், எஸ்.எம்.எஸ் ,பிலாக்னு எல்லா இடத்திலும் காரித்துப்பி முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் செய்து , கல்லாப்பெட்டிக்கு குண்டு வைத்துவிடுவான் :-))

ஆனால் பொது மக்கள் என்ன செய்வார்கள் எனில், தியேட்டர் போனால் செலவாகும், டிடிஎச் இல் பார்த்தால் இன்னும் செலவாகும்,எனவே  டிடிஎச் மூலம்  HD video தரத்தில் உருவாக்கப்பட்டு  கிடைக்கும் திருட்டு டிவிடி பார்ப்போம் என வீட்டில் இருந்து தரமான திருட்டு டிவிடி பார்ப்பார்கள் :-))

ஆனால் எது எப்படியோ திரையரங்க கட்டண நிர்ணயம் என்பது அரசின் கையில் இருப்பதால் ,நினைத்தப்படி கட்டணத்தினை அதிகாரப்பூர்வமாக மற்றவர்களால் உயர்த்த முடியாத கடிவாளம் உள்ளது.

ஆனால் டிடிஎச் இல் என்ன கட்டணம் நிர்ணயம் செய்வது என்ற கட்டுப்பாடு அரசிடம் இல்லை. டிடிஎச் மற்றும் படத்தயாரிப்பாளர் சேர்ந்து நிர்ணயிக்கலாம், அதனால் தான் லோகநாயகரின் படத்துக்கு ஒரே முறை பார்க்க 1000 ரூ என்றெல்லாம் அநியாயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை சூப்பர் ஸ்டார் படம் டிடிஎச் இல் வெளியானால் என்ன செய்வார்கள், 1,500 ரூ என்பார்கள், பின்னர் விஜய் ,அஜித், சூர்யா எல்லாம் நாங்க மட்டும் இளைத்தவர்களா எனப்போட்டி போட்டு விலை வைக்கக்கூடும்.

அதாவது அரசிடம் இருக்கும் கட்டண நிர்ணய அதிகாரத்தினை எடுத்து டிடிஎச் ஆபரேட்டர்கள் எனப்படும் பெரு முதலாளீகள் கையில் கொடுக்கிறார் லோகநாயகர், இது வருங்காலத்தில் வெற்றியடைந்தால் பணக்காரர்கள் மட்டுமே திரைப்படம் பார்க்கும் சூழலையும் உருவாக்கலாம்.

வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் வந்தால் ஆரம்பத்தில் விலையை குறைத்து போட்டியாளர்களை அழித்துவிட்டு , பின்னர் விலை உயர்த்திவிடுவார்கள் என பூச்சாண்டிக்காட்டுவோர்களும், ஆரம்பத்திலேயே விலையை அதிகமாக வைக்கும் டிடிஎச் பின்னாளில் போட்டியாளர்களான திரையரங்குகள் இல்லாத நிலையில் இன்னும் விலை ஏற்றி நுகர்வோர்களை கட்டுப்படுத்தும் என்பதை உணராமல் ஆஹா  நல்ல முயற்சி என்கிறார்களே, நேரத்துக்கு ஏற்ப கொள்கை போல :-))

# திரைப்பட வியாபார வருவாய் என்பது இது நாள் வரையில் , தியேட்டர்கள், அதன் ஊழியர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள்,விநியோகஸ்தர்கள்,அதனோடு தொடர்புடைய ஊழியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பகிரப்பட்டு ,அனைவருக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது.

டிடிஎச் முறை முழுக்க தலையெடுத்தால் இம்முறையில் வருவாய் டிடிஎச் ஆபரேட்டர்கள் எனும் பெரு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மட்டுமே பகிரப்படும் நிலை  உருவாகும்.

# வெளிநாட்டிலும் தமிழ்ப்படங்கள் டிடிஎச் இல் வெளியிடலாம் ,எனவே தமிழ்ப்படங்களுக்கு நல்ல வருவாய் பெருகும் என மனக்கோட்டை கட்டுகிறார்கள், ஆனால் வெளிநாட்டில் டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் உள்ள சட்டம் என்ன சொல்கிறது என்றால், குறிப்பிட்ட மொழியில் டிடிஎச் சேவை ஒளிப்பரப்ப உரிமை வாங்கியவர்கள், அம்மொழியில் உள்ள மீடியாவைத்தான் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் ஒளிபரப்பலாம் என்கிறது.

ஆங்கில டிடிஎச் சேவையில் ஆங்கிலப்படங்களும் ,பிரெஞ்ச் டிடிஎச் எனில் பிரெஞ்ச் படங்களுமே ஒளிபரப்பலாம், தமிழில் ஒளிபரப்பினால் டிடிஎச் லைசென்ஸ் ரத்து ஆகிவிடும்.

# சேட்டிலைட் உரிமம் என ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கும் போது ,அதன் டிடிஎச் உரிமம் அதில் அடங்கிவிடுவது போல தான் தற்போதுள்ளது, எனவே ஜெயா டீவிக்கு சேட்டிலைட் உரிமம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் எதிர்த்தால் டிடிஎச் இல் ஒளிபரப்ப இயலாது. ஒரு வேளை தனியே பிரித்து உரிமம் வழங்கினாரா என தெரியவில்லை.

பிரச்சினை உருவாக்குவது என்றால் , டிடிஎச் உம் சேட்டிலைட் ஒளிபரப்பு எனவே , எங்களுக்கு விற்ற பின் டிடிஎச் இல் ஒளிபரப்ப கூடாது என ஜெய டீவி சொன்னால் , டிடிஎச் திட்டமே எடுபடாது.

இதே போல தொலைக்காட்சி உரிமம் பெறுபவர்கள் சேட்டிலைட் உரிமம் , டிடிஎச் உட்பட அனைத்தும் என்றால் , பெரிதாக வியாபாரம் டிடிஎச் இல் இருக்கு என சொல்வதும் அடிப்பட்டு விடும்.

---------------

ஒலி நுட்பம்:

(Rajni -the Mass)

சிவாஜி -3டி இல் இம்மாதம் மீண்டும் வெளியானதை அனைவரும் அறிவீர்கள், அதோடு அல்லாமல் டால்பி அட்மோஸ் -64 சேனல் 3டி ஆடியோவில் வெளியாகியுள்ளது, இந்தியாவில் சென்னை சத்யம் -செரின் அரங்கிலும், மும்பையில் ஒரு அரங்கிலும் மட்டுமே டால்பி அட்மோஸ் நிறுவப்பட்டுள்ளது. இது ஆரோ 11.1 3டி விட பல சேனல்களில் 3டி ஆடியோவை அளிக்க வல்லது, இதனை 3டி இம்மெர்சிவ் சவுண்ட் என்கிறார்கள்,அப்படி இருந்தும் பெரிதாக இவ்வொலி அமைப்பில்  உருவான முதல் தமிழ் படம் என விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை, மேலும் லைப் ஆஃப் பை என்ற படமும் டால்பி அட்மோசில் தான் வெளியானது அவர்களும் நாங்கள் தான் சிறப்பான ஒலியுடன் படம் காட்டுகிறோம் என சொல்லிக்கொள்ளவில்லை.

சிவாஜி பழைய படம் ஆயிற்றே அதற்கு எப்படி டால்பி அட்மோசில் மீண்டும் ஒலிச்சேற்கை செய்திருப்பார்கள், புதிதாக ரீ-ரிக்கார்டிங் ஏ.ஆர் .ரஹ்மான் செய்திருப்பாரா என்றெல்லாம் யாருக்கும் கேள்வியே எழவில்லையா?

உண்மையில் புதிய ரீ -ரிக்கார்டிங் எல்லாம் செய்வதில்லை, எல்லாம் பழைய கள் புதிய மொந்தை டெக்னிக் தான் ,5.1 ஆடியோ டிராக்கினை மீண்டும் அடோப் பிரிமியர் புரோ டூல்ஸ்,MAC pro tool போன்ற ஒலி சேர்க்கை மென்பொருளில் கொடுத்தால் மீண்டும் 5.1 டிராக் ஆக தனியாக பிரித்து கொடுக்கும்(ஆனால் பழைய PCM track போல இருக்காது)  , அதனை அட்மோசின் 64 டிராக்கிற்கு ஏற்ப மறு ஒலிச்சேர்க்கை ,செய்து ,அட்மோஸ் கோடக்கில் கொடுத்தால் 64 டிராக் ரீ-ரிக்கார்டிங் தயார்.

உண்மையில் 64 டிராக் என்பதெல்லாம் கணினி மென்பொருள், கோடிங், மற்றும் மெட்டா டேட்டா வைத்து உருவாக்குவதே , இவ்வாறு பழைய ஆடியோ டிராக்கினை எடிட்டிங்கில் மாற்றுவது அப்ஸ்கேலிங் என்பார்கள்,ஆனாலும் புதிதாக ரீ-ரிகார்டிங் செய்த அளவுக்கு இருக்காது,முழுதாக பின்னர்  இன்னொரு பதிவில் காணலாம்.

இதை விட இன்னொரு எளிய வழி இருக்கிறது, எந்த பழைய ஒலிச்சேர்க்கை கோப்பையும் டால்பி அட்மோஸ்,ஆரோ போன்ற ஒலிச்சேர்க்கை கருவியில் கொடுத்தாலும் தானாகவே பல சேனல் ஆடியோ ஆக மாற்றிவிடும், இதனை அப்மிக்ஸிங் என்பார்கள்.

எனவே தற்போது இந்தியாவில் ஆரோ,அட்மோஸ் ஆகிய ஒலிச்சேர்க்கையில் அனுபவம் கொண்ட ஆடியோ ரெக்கார்டிங் சென்டர்களே இல்லாத சூழலில் அனைவரும் அப்மிக்ஸிங் செய்திருக்கவே வாய்ப்புள்ளது, எனவே தான் சிவாஜி 3டி அட்மோஸ் படம் அமைதியாக வெளியாகியுள்ளது எனலாம், ஆனால் லோகநாயகர் ,படத்தினை விளம்பரப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே ஆரோ 11.1 3டி என சவுண்டு கொடுக்கிறார் :-))

அடுத்தப்பதில் ஆரோ 3டி, டால்பி அட்மோஸ் போன்ற மல்டி சேனல் ஆடியோ முறைகளை ஒப்பிட்டு அவை எல்லாம் வெறும் எண்ணிக்கை விளையாட்டே, உண்மையான ஒலிதரத்தின் அளவில் பெரிதாக ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்பதை காணலாம்.
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து பிசினெஸ் லைன்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,dreamdth.com, தமிழக வருவாய் துறை, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------------------------------------

51 comments:

நாய் நக்ஸ் said...

Hai....vavvaal....
Good.......
Nalla alasal....
Come back after.....

In exam duty.....
:)
:)
:)

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
படம் பார்த்து கதை சொல்வதை விட ஆட்டுப் பாடுவதே நமக்கு பிடிக்கும்

ஆத்தாடி பாவாடை காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட‌

இந்த பாட்டு பாடனும் போல் இருக்கு
***
புள்ளி விவரம் கொடுட்து கோடு,கோலம் போட்ட்டது அருமை என்றாலும், விளையாட்டு ஆரம்பித்து விட்டது. பார்க்க்லாம் என்ன நடக்கிறது என்று.

இப்போ பகவத் கீதை படிக்கோனும்!![இசுக்கான் தாசு மன்னிக்கவும்!!]

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்...

ஆகவே ஒருநாள் (மட்டும்) டி டிஎச்சில் வருவது (அப்போதே) திருட்டு விசிடி ஆகும்.

//ஆங்கில டிடிஎச் சேவையில் ஆங்கிலப்படங்களும் ,பிரெஞ்ச் டிடிஎச் எனில் பிரெஞ்ச் படங்களுமே ஒளிபரப்பலாம், தமிழில் ஒளிபரப்பினால் டிடிஎச் லைசென்ஸ் ரத்து ஆகிவிடும்//

லோக நாயகர் படத்தில் பாதி ஆங்கிலம் வருமே!! அப்போ 50% ஆங்கிலப் படம்னு சொன்னா?? ஹி ஹி
**
//உண்மையில் 64 டிராக் என்பதெல்லாம் கணினி மென்பொருள், கோடிங், மற்றும் மெட்டா டேட்டா வைத்து உருவாக்குவதே , இவ்வாறு பழைய ஆடியோ டிராக்கினை எடிட்டிங்கில் மாற்றுவது அப்ஸ்கேலிங் என்பார்கள்,//

இளையராசா பாட்டு

பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதில்லை
இராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
**
ஆகவே பழைய நுடபம் கொன்டு செய்து புதிய பெயர் சூட்டி விட்டால் புதிதாகுமா??
காலம் பதில் சொல்லும்!!

டிஸ்கி: காமிரா மேதை கௌபாய் புகழ் இயக்குனர் கர்ணன் அவர்களுக்கு அஞ்சலி!!!

நன்றி!!!

Dinesh Kumar said...

Vovalji,
I know you did lot of researches and went through lot of articles for preparing this detailed analysis. I hope kamal also did lot of researches for this new method. I too feel 1000 rupees is quite a lot. Even 500 would be nominal for family of four.Somehow, he and dth operators are still feels his theory might be correct.
But,
It is very unfair to have this much rage on kamal.
He is a very good actor.
Even our beloved super star praised him for introducing new technologies in Tamil cinema. We need both kamal and rajini kind of actors in our industry for mass and class.Whether it is good or bad, let him explore the new method in practical. If it fails, nobody is going to experiment again. In case if it succeed it will be a new trend. Let's wait and wait.
I am a rajini fan. But I don't want to see kamal's movies getting flop.
nandri

முத்தரசு said...

ஹலோ பிசின் ச்சே அசின் ரசிகரே வணக்கம்

நல்ல அலசல் - புள்ளிவிவர அலசல் நன்றி பகிர்வுக்கு

T.Thenmathuran said...

ஏன் வவ்வாலு, முன்பு தானே தமிழ்ப் பெயர்களைப் பார்த்து வரி விலக்கு கொடுத்தார்கள்... இப்போது படம் U or A ஆ எனப் பார்த்துத் தான் கொடுக்கின்றார்கள்... படத்தை ஜெயா டி.விக்கு கொடுத்த பிறகுமா தியேட்டர் உரிமையாளர்கள் போராடிக் கொண்டிருகிறார்கள்.... ஹி..ஹி.. அவர்களின் நம்பிக்கைக்கு எனது பரிதாபமான வாழ்த்துக்கள்...... நீங்கள் ஹாலிவுட் பாலாவின் பதிவு படித்தீர்களா...? படிக்காவிட்டால் அவசியம் படித்துப்பார்க்கவும்... http://hollywoodbala.com/kamal-on-demand/

அஞ்சா சிங்கம் said...

உங்கள் ஆராய்ச்சியை பாராட்டி இந்த சீனை உங்களுக்கு டெடிகேட் செய்கிறேன் ...........
நீங்கள் இதை வேறு யாராவது இளிச்ச வாயனுக்கு டெடிகேட் செய்து விடவும் .
ரொம்ப நேரம் வச்சிருக்காதீங்க மன நலம் பாதிக்க படும் அபாயம் உள்ளது ..

https://www.youtube.com/watch?v=vQ_haiwgTlY

குரங்குபெடல் said...

அண்ணே அருமையான பதிவு

லோக நாயகரு படத்துல matter இல்லாத காரணத்துனாலதான்

இப்டி பண்றாருன்னு தோணுது . . .

ஒரு உதாரணம் . .

மும்பை express சச்சின் சந்திரமுகி

மூணு படமும் ஒரே நாள் ரிலீஸ்

opening show in a mid town

சந்திரமுகி கட்டணம் 80 ரூவா - Full

சச்சின் கட்டணம் 40 ரூவா - 85 percent full

லோக நாயகரு படம் 20 ரூவா 50 percent full

இதான் உண்மை நிலவரம்

கமல் தன்னிச்சையாக இயங்கும் திரைப்படங்களுக்கு no opening

என்பதே உண்மை

கமல் செய்வது துரோகமே




அப்புறம் after effectsஎன்பது graphics மென்பொருள்

sharfu said...

i request u to write an article abt the real estate business, if already written plss share the link.

ராஜ நடராஜன் said...

அய்யோ!மறுபடியுமா?

டெர்மினேட்டரிலிருந்து துவங்கி இங்கிலீசு படங்களை திருடி ஒட்ட வச்ச எந்திரனே ரஜனி என்ற பெயருக்காக வசூலாகும் போது வசூல் ராஜாவுக்கே கூட்டம் கூடாதா என்ன:)

யாரங்கே பால்கனியில் mass,class ன்னு ராகம் பாடியது? தினேஷ் குமாரா?செம ரிதம் போங்க.

ஒரு விமர்சனமோ,கருத்தோ என்னை மாதிரி பக்க சார்பில்லாமல் அலசனும்:)

வவ் வாலுக்கு ஒரு காது மட்டுமே கேட்குது!

தேன் மதுரன்!நீங்க ஹாலிவுட் பாலா தொடுப்புக்கு ரொம்ப லேட்.நாம கொடுத்ததற்கே பாலா ஓவர் பீலிங் சீன் போடறரார்ன்னுட்டார்.வவ்வாலு மண்டையிலதான் போய் முட்டிக்கனும்:)

குரங்குபெடல்!கமலின் படங்கள் பேசாமலும் பேசுபவை.காலம் கடந்தும் இனி பேசப்படுபவை.

பெடலு!வவ்வாலு மண்டையில் ஓங்கி கொட்ட வேண்டாமா?நான் கொட்டினா வலிக்கவேயில்லைங்கிறார்:)
after effects என்பது graphics மென்பொருள் என்பதோடு போட்டோஷாப்பில் செய்யும் படத்தை மேலும் மிளிர செய்வதோடு (enhance) திரைப்பட டைட்டில் ஜிம்மிக்ஸ்,அப்புறம் படம் முடிஞ்சு எழுத்துக்கள் படம் முடிஞ்ச சோகத்தில் சோர்வாக கீழேயிருந்து மேலே நகருவது போன்றவைகளுக்கு பயன்படுவது.

ஒரு லைட்டின் glare ஐ நகரச்செய்வது,உதாரணமா விஸ்வரூபத்தில் கமல் காலை சூரிய ஒளியில் காரோட்டிகிட்டு வந்தா சூரிய ஒளி காமிராவில் பட்டு நகர்வதை panning செய்வது,மழை,மின்னல் போன்ற திகில் காட்சிக்கு மின்னலை Flash செய்வது போன்றவற்றிற்கு பயன்படுத்துவது.

திரைப்படங்களில் ஆப்டர் எபக்ட்ஸ்,பில்டர் போன்றவை நீண்ட நாட்களாகவே பயன்பாட்டில் உள்ளது.

ராஜ நடராஜன் said...

என் இனிய தமிழ் நண்டே:) நான் கணக்குல ரொம்ப வீக்கா இருந்தாலும் லாஜிக்ல செம கெட்டி.தமிழ்,இந்தி,தெலுங்குல முதலில் தமிழில் உங்க கூட்டல் கணக்கோடு தமிழ் நாட்டு தமிழர்கள்,இந்திய தமிழர்கள்,உலக தமிழர்கள் கணக்கோடு,தெலுங்கில் ஆந்திரவாடு,தெலுங்கு அமெரிக்கவாடு அப்புறம் இந்தியில் தமிழகம் தவிர்த்த இந்தி பேசும் மாநில மெட்ரொ நகரங்கள்,வெளிநாட்டு உரிமைன்னு எத்தனை பிரின்ட் போடலாம்ன்னு கொஞ்சம் கணக்கு பார்த்து சொல்லுங்களேன் ப்ளீஸ்! அப்புறம் இன்னும் கொஞ்ச நாள் போனா என்னை மாதிரி நெட்பிளிக்ஸ்ல படம் பார்க்கும் கூட்டத்தின் சில சதம் கமலோடு உழைப்புக்கு சேரும்ன்னு நினைக்கிறேன்.

இன்னா எதிர்க்கணை:)

Anonymous said...

very nice article...


By---Maakkaan.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

வாங்க,நன்றி!

ஆஹா கடமைக்கு நடுவேயும் கமென்ட் போடுறிங்களே, :-))

அது சரி எக்ஸாம் டுயுட்டில போய் மேற்பார்வை பார்க்கிறதுக்கு பதில மொபைலில் தான் பார்வை ஓடுதா, அப்போ எல்லாம் பிட் அடிச்சு எஞ்சாய் பண்னுவாங்க போல இருக்கே?

இன்று காரை எஃப்.எமில் சொன்னது,

மனதில் வேதனையோடு வருபவருக்கு பச்ச தண்ணிக்கூட தர மாட்டாங்க, ஆனால் வாட்டி வதைப்பவருக்கு டீயும் ,வடையும் தராங்க...

இடம் எக்சாம் ஹால், மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளராம் :-))

உங்க கதை அப்படித்தான் இருக்கு, எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் ,செல் போனை வெளியில் வச்சுடனும்,ஆனால் நீங்கள் கையில் வைத்துக்கொண்டு , பிலாக்கில் கமெண்டிங் ,என்ன கொடுமை சார் இது :-))

திரும்ப வாங்க,நல்லா காய்ச்சுவோம்!
---------------------

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

பாட்டாலே புத்தி சொன்னார், பாட்டாலே பக்தி சொன்னார் ... பதிவில் பின்னூட்டம் போடுவதற்கு பாடுகள் சில நான் பட்டேன்னு பாடுறிங்களா :-))

#//ஆகவே ஒருநாள் (மட்டும்) டி டிஎச்சில் வருவது (அப்போதே) திருட்டு விசிடி ஆகும்.//

அஃதே...அஃதே!

# கலவையான மொழிக்கு என ஒரு டிடிஎச் தான் ஆரம்பிக்கணும்!

#//பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதில்லை
இராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை//

படங்கள் கோடி கோடி ,

எதுவும் புதிதில்லை,

கதைகள் கோடி கோடி

எதுவும் புதிதில்லை!!!

#ஒளி ஓவியர் கர்ணனுக்கு அஞ்சலிகள்!
---------------
தினேஷ் குமார்,

நன்றி!

நாமே இந்த அளவுக்கு அலசுகிறோம், என்றால் அவரும் அலசி இருப்பார் என்பதே உண்மை, ஆனால் ,பின்னர் பொய்யான தகவல்களை அளிக்கிறார், எனவே உண்மையை நாம் சொல்ல வேண்டியதாகிறது.

1000 ரூ குறைவு என்பது போல திருட்டு டிவிடி ஒழியும் என்றெல்லாம் சொல்ல தேவையில்லை, ஆனால் டிடிஎச் இல் ஒளிப்பரப்புவது சர்வரோக நிவாரணி என்பதாக ஓவர் பில்ட் கொடுப்பதால் ,சுட்டிக்காட்டுகிறோம்,மற்றபடி காழ்ப்புணர்ச்சி கொள்ள ஏது இடம்.

புதிய முயற்சிகளை , அதன் உண்மையான விளைவுகளை சொல்லி செய்யலாமே.

நன்றி!
-------------

முத்தரசு,

நன்றி!

அழகை ஆராதிக்கணும் அவ்வளவு தான் :-))
--------------
தேன்மதுரன்,

நன்றி,

யூ/ஏ மட்டும் பார்ப்பதில்லை, தமிழ் பெயராக இருக்க வேண்டும், மேலும் தமிழ் கலாச்சாரத்தினை வலியுறுத்த வேண்டும், இதனை ஆய்வு செய்து வரிவிலக்கு அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

சரியா விவரங்களைப்பார்க்கவும்.

ஜெயா டிவிக்கு கொடுத்தாலும், திரையரங்குகள் நினைத்தால் புறக்கணிக்கலாம், டிடிஎச் இல் ஒளிப்பரப்ப கூடாது என ஜெயா டிவியே கட்டையை போட்டால் ,மொத்தமாக வழித்துக்கொண்டு விடும், அதற்கான வாய்ப்பிருப்பதையும் சுட்டியுள்ளேன்.

ஒரு தொலைக்காட்சிக்கு உரிமம் வாங்கினால், அதை வைத்தே டிடிஎச் இலும் போட்டுக்கொள்ள முடியும்.

ஹால்லிவுட் பாலா பதிவையும் படித்தேன் , தரவுகள் இன்றி , அவராக கட்டமைத்து சொல்லியுள்ளார், இங்கே எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் காட்டியுள்ளேன், மேலும், பல நடைமுறைகளையும் அலசிவிட்டே சொல்லியுள்ளேன்.

---------------
அஞ்சா ஸிங்கம்,

நன்றி!

உங்க டெடிகேட்டை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் அதை பின்னால் காத்திருக்கும் கு.பெக்கு டெடிகேட் செய்துவிடுவோம்.

--------------------

கு.பெ,

நன்றி!

//கமல் தன்னிச்சையாக இயங்கும் திரைப்படங்களுக்கு no opening

என்பதே உண்மை

கமல் செய்வது துரோகமே //

உண்மை அதே தான்.

விஜயின் படமே 600 பிரிண்டுகள் தமிழில் ஓடுது, ஆனால் லோகநாயகருக்கு 400 தான் இது வரை , ரிலீஸ் ஆகும் போது இன்னும் குறையலாம்.

இப்போ தான் நாகப்பட்டினம் வரை போய் வந்தேன் , அங்கே காரைக்காலில் ஷமினா என்ற அரங்கில் துப்பாக்கி இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு.

இத்தனைக்கும் அங்கே இஸ்லாமியர்கள் அதிகம், ஒரு வேளை படத்தில என்ன நமக்கு எதிரா இருக்குன்னு ஆய்வு செய்ய எல்லாம் பார்க்கிறாங்க போல :-))

# அடொப் னு எழுதும் போது ஒரு ஃப்லோவில் ஆஃப்டெர் எஃப்ஃபெட்ஸ்னு வந்துடுச்சுய்யா, அது அடோப் பிரிமியர் புரோ டூல், மேக் புரோ டூல் என எழுதும் போதே ஸ்ட்ரைக் ஆச்சு, ஆனால் அப்படியே தட்டிவிட்டேன், இன்னும் பிழை திருத்தம் எதுவுமே செய்யலை, இன்னும் என்ன பிழைகள் இருக்குன்னு பார்க்கணும், இந்த வீக் எண்ட் ஃபுல்லா டிராவல், இப்போ தான் மீண்டும் பார்க்கிறேன்.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி, திருத்தி விடுவோம்.

நாம செய்ற பிழையை எல்லாம் விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு பாருங்க,லோகநாயகர் பிழையான தகவல்களை பிரச்சாரம் செய்தாலும் ஆஹா புதுசா சொல்லிட்டார்னு ஒத்து ஊதுங்க :-))

------------------

வவ்வால் said...

ஷார்பு,

நன்றி,

இன்னும் ரியல் எஸ்டேட் பற்றி எழுதவில்லை, ஆனால் கொஞ்சம் நேரா அனுபவப்பட்டு இருக்கேன், இப்போ ரோடு ஓரம் ஒரு இடம் இருந்தா உடனே ,பிளாட் போட்டு வித்துடுறாங்க.

சென்னை டு நாகை போய்ப்பார்த்துட்டு இப்போ தான் வரேன், போற வழியெல்லாம் ரியல் எஸ்டேட் தான், அங்கே பக்கத்தில வீடு இருக்கா, பஸ் நிக்குமா, மின்சாரம்,குடி நீர் இருக்கா எதை பற்றியும் கவலையில்லை அத்துவான காட்டில் எல்லாம் ரியல் எஸ்டேட் தான்.

இப்போ அப்துல்கலாம் வேற ரியல் எஸ்டேட்டில் இறங்கிட்டார் போல எங்கே பார்த்தாலும் அப்துல்கலாம் நகர்னு போட்டு விக்குறாங்க :-))

வண்டியில வேகமா போயிட்டதால படம் எடுக்க முடியலை, அடுத்த முறை அப்துல்கலாம் நகர் படத்தோட , அலசிடுவோம்.

----------------
ராச நட,

வாரும்,நன்றி!

விட்ற முடியுமா?

ஹி...ஹி அப்படிப்பார்த்தால் லொகநாயகர் படம் எல்லாமே பிச்சு போட்ட படம் தானே:-))

நமக்கு எல்லா காதும் திறந்தே இருக்கு ,கூடவே கண்ணை மூடிக்கொண்டு எதனையும் ஆதரிப்பதில்லை, அட்மோஸ் ஒலிச்சேர்க்கை எப்படினும் சொல்லி இருக்கிறேன் பாருங்கள்.

சும்மா அப்ஸ்கேலிங்/அப் மிக்ஸிங் செய்துவிட்டே கூவும் லோகநாயகரை பற்றி நீங்க கண்டுக்காதிங்க :-))

# ஆவிட், மாயா , ஹூடுனி எல்லாம் பார்த்தாச்சு , நீங்க எனக்கு சொல்லுங்க, ஒரு ஃப்லோவில் வந்ததுக்கே எனக்கு சொல்லிக்கொடுங்க, ஆனால் ஊரையே ஏமாற்றுவதை கண்டுக்காதிங்க ,:-))

# வாழைப்பழம் கொடுத்தால் போதாது ,உறிச்சு வாயில வேற ஊட்டனுமா?
நெட் ஃப்ளிக்ஸ் இந்தியாவுக்கு வரட்டும் அப்புறமா பேசிக்கலாம்.ஆனால்ல் யாரும் 1000 ரூ என்றெல்லாம் விக்க மாட்டாங்க.

டிடிஎச் முறையில் விலை வைப்பதற்கு என்ன அளவு கோல், யாருக்கு லாபம்னு நீங்களே சொல்லுங்க தெரிஞ்சுப்போம்.

----------------------

# மாக்கான்,

நன்றி!
---------------------

நாய் நக்ஸ் said...

என்னை தாண்டிதான் போய் இருக்கீங்க...வவ்வால்....
இது பச்சை துரோகம்....இன்னும் எவ்வளவு நாள் தான் ஏமாற்றுவதா உத்தேசம்....???????

சொல்லி இருந்தா காரைக்காலில் ஒரிஜினளா கள் இறக்கி தர சொல்லி இருப்பேனே....???????
:))))))))))

அது சரி எங்களை எல்லாம் கண்டுக்குவீங்களா....?????????

ஒரு கொடுப்பினை வேணும் போல....
:(((((((((((((((((((((((((((((((((((

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

//அது சரி எங்களை எல்லாம் கண்டுக்குவீங்களா....?????????

ஒரு கொடுப்பினை வேணும் போல...//

ஆஹா நானா ஒளறிட்டேனா?

நான் தனியா வந்தால் தானே நின்னு நிதானமா , எல்லாம் செய்ய கூட்டத்தில கோவிந்தா போட்டுக்கிட்டு போயிட்டு வரேன், பைபாஸில் வரும் போது உங்களை தான் நினைச்சேன்...மதியானம் 3 மணிக்கு பொறையேறி இருக்குமே :-))


என்ன பைபாஸ் எல்லாம் பேந்து போய் கிடக்கு, அந்த ஏரியா ஃபுல்லா பிளாட் வேற போட்டுடாங்க, எல்லாம் உங்க வேலை தானா?

பார்க்கலாம் அண்ணாத்த ...எங்கே போயிடப்போறோம் , கழுதை கெட்டா குட்டி சுவருன்னு இங்கனக்குள்ள தானே சுத்திக்கிட்டு கிடக்க போறேன்.

ச்சியர்ஸ்!!!!

நாய் நக்ஸ் said...

சியர்ஸ்..........
சரி அப்ப நானும்.....
சியர்ஸ்........

குறும்பன் said...

பசின் சொல்லுதுன்னு மிராண்டா குடிச்சி ஏன் இந்த கலாட்டா :) மிராண்டா குடிக்கறத நிறுத்துங்க.

Anonymous said...

Aadu nanaiyudhunu onai aluthuthan
Neega epaum upside down na thongarathala adiyila thongaratha parkura.

Voval dont worry about kamal
What you trying to prove.
Will this movie flap.You.. FCUK

Nee Rajini adivarudiya irupathu,Romba kashtam
Unga parvaiyila rajini earn pnna panathai enga invest panniyirukunu oru pathivu poda mudiyuma.
.

ஜோதிஜி said...

டிடிஎச் தலைப்பிட்டது வரைக்கும் ஒழுங்காக படித்துக் கொண்டு வந்தேன். லோகம் கெட்டுப் போயிடும் என்றவுடன் அட இது வவ்வால் எழுத்தா? என்று கோபம் வந்துவிட்டதா?

நம்ம ராஜ நடராஜன்க்கு விழுந்த மாத்து எனக்கு விழுந்துடும்ங்ற பயத்துல ஹாலிவுட் பாலா தளத்தை எடுத்துப் போடாமல் நகர்கின்றேன்.

அடுத்த வருடம் 2014 டிசம்பர் அன்று தமிழ்திரை உலகம் மாறியிடும். அப்ப என்ன சொல்றீங்கன்னு படிக்க ஆசை.

வலைச்சரம் ஜனவரி 1 ஒன்று வரவும். ஒருமாத்து இருக்கு.

aravi said...

Ennaa moola....Ennnaaaa arivu
Vovaalin your recent post u r trying to defame kamal.
Nalla illaye....be positive and think positive.illainna anony avargalidam asingapada vendiyathuthan....cheers

வவ்வால் said...

குறும்பன்,

நன்றி!

ஹி...ஹி மிரிண்டா தனியா குடிக்கிற பழக்கமில்லிங்க :-))

நான் சொல்வதில் உள்ள உண்மை பலருக்கும் புரியவில்லை ,என்ன கொடுமை சார் இது!
-----------

அனானி,

வாய்யா ,வந்து ஒராம குந்தி ஒரு பாட்டம் அழுதுட்டு போ,நா ஒன்னும் தப்பா நினைக்கம்மாட்டேன், இத்தினி நாளா எந்த புதர்ல மறைசிருந்தாங்களோ தெரியலை , இப்போ வந்து கூவுறானுங்களே :-))

------------

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

//என்று கோபம் வந்துவிட்டதா?
//

யாருக்கு?

எப்ப மாறினா என்ன , நடப்பதை தானே சொல்லப்போறேன்.

நீங்க சமுதாய கருத்தெல்லாம் பேசுறிங்க, ஒரு படத்துக்கு ஒரு முறை டிவியில் பார்க்க 1000 ரூ என விலை நிர்ணயம் செய்வதில் இருக்கும் எதேச்சாதிகாரம் மட்டும் ஏன் கண்ணுக்கே தெரியவில்லை.

எத்தனை பேரு பார்க்கிறாங்க என்பது வேறு விஷயம், ஆனால் அப்படி விலை வைத்ததும் இல்லாமல் , டிவில பார்த்துட்டு ,தியேட்டருக்கும் வருவாங்க, இது ஒரு விளம்பரம் என கூசாமல் சொல்லும் அளவுக்கு நாட்டில் எல்லார் கையிலும் பணம் மித மிஞ்சி புழங்குதா?

ஒரு வேளை சோறு இல்லாமல் வாடும் மக்கள் பல கோடி நாட்டில் இருக்காங்க, ஒரு திரைப்படத்துக்கு ஆயிரம் ரூ என விலை வைக்கிறார்கள் எனில் இச்சமூகம் செல்வந்தர்களால் மட்டுமே ஆனது என சொல்ல வருகிறாரா?

இனிமே நீங்க சமூக அக்கறையுடன் ,வறுமை,வேலையின்மைனு பேசுவதை கேட்க நேரிட்டால், சந்தர்ப்பவாதமோ என்றே நினைக்க தோன்றும்.

இன்னும் விடலைப்பருவ ரசிக மனோபாவத்தில் இருந்து மீளாமல் இருப்பதாகவே படுகிறது.

டிடிஎச் இல் போடட்டும், கேபிளில் போடட்டும் ஆனால் பொய்யாக ஜஸ்டிபை செய்யாமல் இருக்கட்டும், எனவே தான் லோகநாயகர் புழுகுவதை விளக்க வேண்டியதாகிறது.
----------------



Anonymous said...

தியேட்டரில் விற்கும் சமோசாவின் விலையை விட டிக்கெட் விலை அதிகமாக இருக்கனும்னு சொன்னாரே..என்ன அர்த்தம்?

வவ்வால் said...

அரவிந்தன்,

நன்றி!

ஏன் ஸ்பாம் பொட்டிக்கு போறிங்க?

// r trying to defame kamal.//

ஓ இனிமே என்னத்த டீஃபேம் செய்ய :-))

லோகநாயகரு ரசிகருன்னு சொன்னா வெட்க்கக்கேடுன்னு, வெட்கப்படுறவங்களாம் அனானியா தா வரனும், அப்புறம் என்னத்த நமக்கு அசிங்கம், வர்ர அனானிக்கு தான் அசிங்கம் :-))

பாசிட்டிவ்வா இருக்கனும்னு சொல்லிக்கிட்டு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் ஆகிட கூடாதில்ல :-))

சில நேரங்களில் நெகட்டிவ் வேண்டும் :-))

புழுகு மூட்டையை சொல்லி தொழில்நுட்பம்னு ஜல்லியடிப்பதை சுட்டிக்காட்டுவது நேர்மையான முயற்சி அல்லவா.

------------

அனானி,

சமோச 120 ரூபாயா அப்போ? இல்லை லோகநாயகர் படத்துக்கு சமோசா தான் போட்டியா?

சமோசாவுக்கு இருக்கும் மதிப்பு கூட அவரு படத்துக்கு இல்லாம போயிடுச்சே :-))

aravi said...

Brother relax. Better Stop your pediction about kamal movie and his new buisiness tactice, You know kamal is like Rail engine in flim ind, always lead in front, abviously the leader has to face some obstruction, Your S...th stars like rajini can sit comfortably behind him.
What is your answer to anony question about S...th star’s money.
Can you write a detail article , I love to see it from you.
:>)

வவ்வால் said...

அரவிந்தன்,

நன்றி!

ரொம்ப ஆர்வமா இருக்கிங்களே, கூல்...கூல்!

ரயில் எஞ்சின் மட்டும் தனியே ஓடிக்கொண்டிருந்தால் புண்ணியமில்லிங்க, பெட்டிகளையும் இழுத்துக்கொண்டு பயணிக்கனும்.

அதே போல முன்னாலே ஓடுறேன் ,என் இஷ்டம்னு தண்டவாளத்தை விட்டு இறங்கி தார் ரோட்டில் எஞ்சின் ஓடினால் விபத்து தான் ஆகும்:-))

சில கனரக ரயில் சேவையில் முன்னாடி ஒரு எஞ்சின் இழுக்க ,பின்னாடி ஒரு எஞ்சின் சேர்த்து தள்ளவும் வைப்பாங்க. மலைப்பாதையில் இயங்கும் பயணிகள் ரயிலில் முன்னாடி ஒரு எஞ்சின் பின்னாடி ஒரு எஞ்சின் என இருக்கும்.

எலெக்ட்ரிக் டிரெயினில் நடுவிலும் எஞ்சின் இருக்கும், பயணிகள் பெட்டி நடுவில் ஒரு அறை போல இருக்கும் பாருங்க, அதுவும் மின்சார எஞ்சின் தான்.

சூப்பர் ஸ்டார் அப்படி எந்த நிலையிலும் தன்னை வைத்துக்கொண்டு பொறுப்பை இயக்குனர் கையில் கொடுத்துவிடுவார்.

#அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கினவங்க கூட,அங்கே டாலரில் சம்பாதித்து இந்தியாவுக்கு அனுப்புறோம்னு பெருமையா சொல்லிக்கிறாங்க, எனவே ,சூப்பர் ஸ்டார் சம்பாத்தியம் எங்கே முதலீடு செய்தால் என்ன?

டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்டதால், சம்பாத்தியம் எங்கே முதலீடு செய்யனும்னு சொல்ல உரிமை வந்திடுமா?

அவரவர் விருப்பப்படி செய்றாங்க, அனானிகள் பேசுவதை எல்லாம் வைத்து பேசினால் இப்படித்தான் முட்டு சந்தில் மாட்டிக்க நேரிடும் :-))

ராஜ நடராஜன் said...

மூணு காலு வவ்வாலு:) முன்னாடி ஒரு காதுதான்னு நினைச்சா இப்ப ரெண்டுமே நொள்ளை மாதிரி தெரியுதே!

பேரு வச்சுட்டு வந்தாலும் விளாசுறீங்க!ஒளிஞ்சுகிட்டு கத்தினாலும் கத்துறீங்க!எப்படியோ உங்களை மொத்தறதுக்கும் ஆள் சேருவதைப் பார்க்கும் போதும்,நினைக்கும் போதும் எனக்கு ரொம்ப........சிப்பா இருக்குது:)

ஜோதிஜி!பாலா கடையில போய் மராத்தான் பின்னூட்டம் போடுங்க!இந்த ஒற்றைக்கண் வவ்வாலைக் கண்டதும் அப்படியே பம்முங்க:)

தனி மனித இயல்பில் ரஜனியின் குணம் சிறப்பே.ஆனால் நடிப்பு,பரிட்சார்த்த முயற்சியில் ரஜனி சராசரியே.படம் பூஜை போட்டவுடனே வித்துடற எம்.ஜி.ஆர் ராசி ரஜனிக்கு வந்துட்டதால் நிற்கிறார் பீல்டில்.நோகாம நொங்கு தின்னும் கிளிப்பிள்ளைன்னு பேரு திரைப்பட தயாரிப்பாளரும்,இயக்குநரும் சொல்வதை அப்படியே கேட்டு நடிக்கிறது.ரஜனி எந்திரனுக்கு முன்னாடி என்ன படம் நடிச்சார் என்பதே இப்ப மறந்து போயிடுச்சு.கமலின் படங்கள் அப்படியல்ல.கமர்சியல் போக புது முயற்சி படங்கள் எப்பொழுதும் நினைவில் நிற்க கூடியவை.அந்த வரிசையில் நீங்க என்னதான் நீட்டி முழக்கினாலும் விஸ்வரூபம் பேசப்படும்.

இவை மதிப்பீடு என்பது போக தமிழ் திரையுலகில் ரஜனிக்கும்,கமலுக்கும் அவரவருக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.இருவரின் படங்களையும் திரையரங்கில் ஸ்நாக்ஸ்,ஸ்டார்பக்ஸ் காபி சகிதமாக ரசிக்கவே செய்தாலும் கமலுக்கு முன்னாடி ரஜனி நடிப்பு ஜூஜுபி:)

விஸ்வரூப படத்துக்கு புது புரமோசனா 60 செகண்டில் ஒரு குறும்பட எடுப்பவர்களில் சிறந்த குறும்படத்துக்கு பரிசுன்னு அறிவிச்சிருக்கிறார் லோகநாயகர்.விஸ்வரூபம் டப்பான்னு நீங்களும் ஏன் 60 செகண்டுல ஒரு ஆப்டர் எபக்ட் படம் விடக்கூடாது:)

வவ்வால் said...

ராச நட,

வாரும் ,நன்றி(ஆடு சிக்கிடுச்சு!!!))

ஹி...ஹி நீங்க சொல்லுறத பார்த்தால்,ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராத சொல்லுற வசனம் தான் நியாபகம் வருது, என்னடா இவன் நம்மளை தூக்கி விடுறானே, ஒரு வேளை இவனுக்கும் வியாதி இருக்குமோனு , சொல்லுவார்.உங்களுக்கு கண்ணு பியுசா பூட்டா எல்லாருக்கும் பூடுமா?

இந்தப்பதிவிலோ, அல்லது இதற்கு முன்போ எங்காவது யார் நல்ல நடிகர்னு பேசப்பட்டு இருக்கா? இங்கே பேசுவது லோகநாயகரின் வியாபாரதந்திரம்,மற்றும் புழுகு மூட்டைகளை பற்றித்தான்,ஆனால் நீங்கள் வழக்கம் போல அவுட் ஆஃப் காண்டெக்ஸ்டில் என்னமோ பேசிட்டு இருக்கிங்க,

என்ன கொடுமைய்யா இது, லோகநாயகர் போலவே அவரது தொண்டரடிப்பொடிகளும் வெந்ததும் வேகாததுமா இருக்காங்களே :-))

இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடலை , உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதி பாதியில தொங்கவிட்டு வச்சிருக்கேன், அதை தூசு தட்டி போட்டால் சாயம் வெளுத்துடும் , அப்போ வந்து உங்க பொலம்பலை ஆரம்பியுங்க பொறுத்தமா இருக்கும், இந்த பதிவுல சொல்லி இருப்பது என்னனு உங்களுக்கு புரிய கொஞ்சம் லேட் ஆகும் :-))

# படமே தேறுமான்னு தெரியலை, அதுக்கு குறும்படம் வேற எடுக்கணுமா,நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாருங்க :-))

படம் நல்லா இல்லைனா அதன் ஆயுள் அன்றே ஓவர், லோகநாயகர் அடுத்த படத்துக்கு போயிடுவார், ஆனால் ரசிக கண்மணிகள் தான் வழக்கம் போல படத்தில சொல்லாத விஷயங்களை கண்டுப்பிடிச்சு பேசிட்டு இருக்கபோவுதுங்க :-))

தமிழ்சேட்டுபையன் said...

வவ்வூ எப்படிய்யா கீர புள்ள குட்டியெல்லாம் சௌக்கியமா...?

புள்ளி விவரம் அள்ளி விடுறீரு!
பதிவுலக விஜய்காந்த் வவ்வூ வாழ்க..!

ராஜ நடராஜன் said...

வவ்!வாலு!ஆடு சிக்கிடுச்சு டயலாக்கை முன்னாடி எங்கோயோ கேட்ட மாதிரி இருக்குதே!எங்கே?ஆங்!மார்க்க பந்துக்கள் யாரும் கண்ணுல மாட்டலையா? அவுக இப்ப கொஞ்சம் அசந்து தூங்கறதால இப்ப நான் ஆடாகி விட்டேனா:)

வடிவேலரே!ஒலக கருத்தையெல்லாம் நீங்க அள்ளிக்கொட்டினா சப்பான் மூளை.அதையே பட்டாம்பூச்சி தியரி மாதிரி ஏதாவது ஒரு விதத்தில் தொடர்போடு நாம பேசினாலும் கான்டெக்ஸ்டில் பேசறதே இல்லையா?நடிப்பு ஒப்பீடே நீங்க காண்டெக்ஸ்ட்டில் ரஜனிய பின்னியதால்தான்.

நாமெல்லாம் பின்நவீனத்துவ பின்னூட்டக்காரங்க!குவான்டின் ஜெரோம் டாரன்டினோ பின்னல் மாதிரிதான் இருக்கும்.தோ!காண்டக்ஸ்ட்டில் பேச சேட்டுப்பையன் வந்திருக்காக!அனானிக வந்திருக்காக:)

ஆமா!வந்திருந்தா பனைமரத்துக்கு பக்கத்திலேயே உட்கார வச்சிருப்பேனேன்னு நக்ஸ் ஆசை காட்டறதெல்லாம் எதுல சேர்த்தி:)

க்ளிக்காம மேலே மோட்டு வலை பின்னூட்டத்தை மறுபடியும் பார்க்க ஆரம்பிச்சதுல சமோசா கண்ணுல பட்டது.வாட் எ கோ இன்ஸிடன்ஸ்!நான் சமோசா சாப்பிட்டுகிட்டே பின்னூட்டமிட்டேன் எனபதை கான்டக்ஸ்டில் சொல்லிகிட்டு க்ளிக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

அய்யா!புள்ளிவிபரம்!இப்பத்தான் கவனிச்சேன்....அசின் நிற்கிற தோரணையே சரியில்லையே:)

வவ்வால் said...

தமிழ் சேட்டு,

இதர் ஆவோஜி, நன்றி!

என்ன கோராமை ,கருப்பு எம்சியாரோடு ஒப்பிட்டதால் எனக்கு பெருமையா,இல்லை சிறுமையா, ஒரே கன்பியுஷன் ஆஃப் இந்தியாவா இருக்கே?

ராச நடையை நீங்க எல்லாம் கண்டுக்கலியாம், வருத்தப்படுறார் பாருய்யா, அவரையும் கட்டம் கட்டி ,பாராட்டுவிழா நடத்துறது:-))
-----------------

"புள்ளி" ராச நட ,

வாரும், வாரும், விதி வலியது என மெய்ப்பிக்கிறீர், மே மே.மெம்மெமேனு சொன்னதையே திருப்ப சொல்லுவோர் எல்லாம் ஆடுகளே :-))

பட்டர் பிளை எஃபெக்ட் என சொல்லிக்கிட்டு பட்டர் வெட்டும் மொன்னைக்கத்தியா இருக்கீரே :-))

நாம் பேசியது வசூல் நிலவரத்தினையும், உலக அளவில் அதிக பிரிண்டுகள் வெளியிட்டதையும், அதில் எங்கே இருந்து வந்தது நடிப்பு பற்றிய பேச்சு, காலஞ்சென்ற" Thespian"பூர்ணம் விசுவநாதன் கூட லோகநாயகரை விட அருமையாக நடிப்பார் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

# முன் நவீனத்துவமே விளங்காது இதில் பின்னிய நவீனத்துவமாம் , எங்கே நந்தவனம் ,அவரு தான் மண்டையில் நச்சுனு கொட்டு வைப்பார் :-))

//குவான்டின் ஜெரோம் டாரன்டினோ பின்னல் மாதிரிதான் இருக்கும்.தோ!//

என்னாது குவாட்டர் அடிச்சு ஜெர்க்காகி தள்ளாடுறிங்களா, பார்த்து பத்திரமா வூட்டுக்கு போங்க!!!

தமிழ்சேட்டுப்பையன் உங்களை எல்லாம் இன்னும் கட்டம் கட்டி தாயம் ஆடலையேனு வருத்தம் போல சொல்லி இருக்கேன் ,சீக்கிரம் ஆடுபுலி ஆட்டம் ஆடுவாங்க :-))

//ஆமா!வந்திருந்தா பனைமரத்துக்கு பக்கத்திலேயே உட்கார வச்சிருப்பேனேன்னு நக்ஸ் ஆசை காட்டறதெல்லாம் எதுல சேர்த்தி:)//

பனைமரத்துக்கு அடியில குந்திக்கினு ஆட்டுப்பாலும் ,அவிச்ச கடலையும் தின்னலாம்னு தான் ஆசைக்காட்டினார், ஏன்னா அவரு காந்தியவாதியாம்...ஹி...ஹி நான் சாந்தியவாதி...அதாவது உலகத்தில சாந்தி ,சமாதானம் , சமரசம் உலாவனும்னு நினைப்பேன் ,அதை சொன்னேன்!!!

# சாப்பிட்ட சமோசா செரிக்கிற வரைக்கும் ,இப்படிக்கா உலாத்தலாம்னு வந்தீங்க போல, வந்த காரியம் ஆச்சா, அடுத்த காரியத்த கவனிக்க போங்க :-))

#//அய்யா!புள்ளிவிபரம்!இப்பத்தான் கவனிச்சேன்....அசின் நிற்கிற தோரணையே சரியில்லையே:)//

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், உலக அழிவின் விளிம்பிலும், பெண்கள் எப்படி நிற்க வேண்டும், என கட்டுப்பாடுகளை பற்றி பேசுவதில் இருந்து,உமது ஆணாதிக்க வெறி வெளிப்பட்டுவிட்டது, பெண்ணிய போராளிகளே , இதனை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா, முறம் கொண்டு புலியை துறத்திய வீராங்கனைகளே , உங்கள் முறத்துக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது,உங்கள் அறச்சீற்றத்தினை முறம் கொண்டு முறையாக ராச நடைக்கு காட்டுங்கள்!!!

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

ராஜ நடராஜன் said...

//வாரும், வாரும், விதி வலியது என மெய்ப்பிக்கிறீர், மே மே.மெம்மெமேனு சொன்னதையே திருப்ப சொல்லுவோர் எல்லாம் ஆடுகளே :-))//

மே.மெம்மெமேனு குறுக்கு சால் மேயும் கமல் எதிர்ப்பு கறுப்பு ஆடே:)விதியா!அது எந்த பொட்டிக்கடையில கிடைக்குது?ஓ!பூமராங் மாதிரி திருப்பி வருவதற்கு பெயர்தான் விதியோ:)

ரெவரி!புத்தாண்டில் பொங்கலுக்குப் பின்னாவது வவ்வாலுக்கு கண்ணு தெரியுதான்னு பார்ப்போம்.நானும் கிறுஸ்மஸ்,புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

சேட்டு பையன்!பதிவு போட்டே பத்து மாசமான பீலிங்ல இருக்குற நல்ல பையன் நான்.வழியைப் பார்த்து போகாமல் தனியா ஓடும் இந்த ஆட்டை துரத்தும் ரொம்ப ரொம்ப நல்ல பையன் நான்.முடிஞ்சா போற வழியில கொஞ்சம் உஸ்சு உஸ்சுன்னு இதை இந்தப் பக்கம் துரத்தி விட்டுட்டு போங்க:)

ராஜ நடராஜன் said...

கண்ணூ அஞ்சா சிங்கம்! துவக்கமா ரெவரி பேர்ல ஒரு கிறுஸ்துமஸ் வாழ்த்தும்,புத்தாண்டு வாழ்த்தும் சொல்லிக்கிறேன்.

இப்பத்தான் யூடியுப் பார்த்தேன்.இத்ல சுட்டியை படிக்கிறதில்லைன்னு என் மேல புகார் வேற பாடுறார் புள்ளி விபரம்.

என்னா எதுகை மோனையா விஜயகாந்த் புள்ளி விபரம் புள்ளி விப்ர பதிவோடு இட்லிக்கு சட்னி மாதிரி, பன்னுக்கு டீ மாதிரி,சரக்குக்கு சைட் டிஷ் மாதிரி,பதிவுக்கு அசின் மாதிரி:)

ராஜ நடராஜன் said...

மிஸ்டர் புள்ளி விபரம்!இங்கே வந்துட்டு அப்படியே ஒரு இணைய மேய்ச்சலுக்குப் போனேனா!நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஜாபர்சேட் மீது சங்கர் என்பவர் வழக்குன்னு ஒரு லைன் ஓடுச்சா!ஜாபர் சேட்டுன்னா சவுக்கா இருக்குமேன்னு நினைச்சு போனா அவரேதான்.பதிவின் இறுதியில்------

//சந்திக்கும் போது….

மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் மீண்டும் சேரும்போது…..

பேசமுடியவில்லையே……//

என்று முடித்திருந்தார்.

ஆனால் இங்கே ஆடுகள் மீண்டும் சேரும் போது மீண்டும் பேசுகிறதே:)


காண்டக்ஸ்ட்!காண்டக்ஸ்ட்!ஆடு.

வவ்வால் said...

ராச நட,

வாரும்,

கொசுவுக்கு இருக்கிற அளவுக்கு கூட மூளை இல்லைனா என்ன செய்ய, ஒரு வேளை பணம் அதிகம் சேர்ந்துட்டா மூளை மழுங்கிடும்னு சொல்வாங்க அது போல ஆகிடுச்சு போல, 1000 ரூ டிடிஎச் இல் பார்க்க என கட்டண கொள்ளை அடிப்பது கூட கண்ணுக்கு தெரியலைனா நான் என்ன செய்ய, கிருஸ்மஸ், புத்தாண்டுக்கு பின்னராவது மூளை வளரட்டும் :-))

எத்தனை அப்பாவி ஆடுகள் குடும்ப செலவுக்கு வைத்திருக்கும் பணத்தினை டிடிஎச்சுக்கு கட்டி ஏமாறப்போகுதுங்களோ, அப்பாவி ரசிகர்களின் காசை ஆட்டையைப்போடும் நடிகருக்கு வால்ப்பிடிக்கும் உம்மை போன்ற வெள்ளாடுகள் இருக்கும் வரைக்கும் லோகநாயகரை யாரும் அசைச்சுக்க முடியாது ...அசைச்சுக்க முடியாது :-))

அஞ்சா ஸிங்கம் போட்ட வீடியோவைப்பார்த்தாச்சுன்னு சொல்லிட்டு போறது தானே அதைவிட்டுட்டு சுட்டி எல்லாம் படிப்பேன்னு வேற சொல்லிக்கிட்டு, பதிவையே ஒழுங்கா படிச்சு என்ன சொல்லியிருக்குன்னு புரிஞ்சுக்க முடியலை, இதுல தனியா ஒரு சுயபுராணம் வேற?

இந்தியாவில் தினம் 32 ரூபா இருந்தா வசதியா வாழலாம்னு சொன்ன திட்டக்கமிஷன் தலைவரை போல அதிமேதாவிகளான உங்களுக்கு டிடிஎச் இல் படம் பார்க்க 1000 ரூ எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கலாம், ஆனால் பலருக்கு அந்த 1000 ரூ சம்பாதிக்க பல நாட்கள் முதுகொடிய கடின வேலை செய்ய வேண்டியது இருக்கும், வயலில் ஒரு நாள் முழுக்க வேலை செய்தால் 100 ரூ தான் கிடைக்கும், 1000 ரூ சம்பாதிக்க 10 நாள் உழைக்கணும், ஆனால் அந்தப்பணத்தினை நோகாமல் டிடிஎச் இல் படம் போட்டு பிடுங்க திட்டம் போடும் ஒரு நடிகர் ,புரட்சியாளராக உங்களைப்போன்றவர்களுக்கு தெரிவதில் வியப்பே இல்லை,ஏன்னா அம்பானி பரம்பரையாச்சே :-))

டிடிஎச் இல் 1000 ரூ, திருட்டி டிவிடி 20 எனக்கு 20 ரூபாயில் சோலி முடிஞ்சா போதும் :-))

என்னை போன்ற ஏழைகளின் எளிய என்டெர்டெயின்மெண்ட் திருட்டு டிவிடியே!!!

வவ்வால் said...

ரெவரி,

நன்றி!

தங்களுக்கும்,குடும்பத்தார்,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், மகிழ்வான கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

ஒட்டகம் தேய்ந்து ஆடாகி இப்ப கொசு சைசுக்கு வந்து விட்டதா?ஒட்டகத்துக்கே இந்த நிலைமைன்னா இருட்டுல சுத்துற அதுவும் தலைகீழா பறக்கிற வவ்வால் நிலைமையை நினைச்சா:)

தீபாவளியை பலகாரம்,புத்தாடை,பட்டாசுன்னு கொண்டாடுற மாதிரி ரஜனி,கமல் வெளியீடு.பதிலா பொங்கலோடு பொங்கல்.

வாங்கும் திறனை அதாவது செலவு செய்யும் வருமானத்தை தரமுடியாத அளவுக்கு தன் தொப்பையை மட்டும் நிரப்பும் ஊழல் பேர்வழிகளையெல்லாம் விட்டுட்டு விஸ்வரூபத்துக்கு 1000 ரூபாயான்னு வவ்வால் வாயைப் பொழங்க.ஒரு குடும்பத்தில் 4 பேர் 6 பேர் சேர்ந்து பார்த்தால் வரும் தொகை எவ்வளவு என்ற புள்ளி விபரத்தை ஏன் விட்டுட்டுப் பேசுறீங்க?சரி,டி.டி.எச் 1000 ரூபாய் அதிகம்ன்னா தியேட்டரில் போய் படம் பார்க்கலாமே!சின்ன வயசுல டூரிங்க் டாக்கிஸ் சவுண்டை மட்டுமே கேட்டு படம் பார்த்த மாதிரியோ,அல்லது ஒருத்தன் படம் பார்த்து விட்டு வந்து நாலைந்து பேருக்கு கதை சொல்ற மாதிரியான கற்பனை அனுபவம் கூட கிடையாது திருட்டு வீடியோவில் படம் பார்ப்பது.

பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான்.டி.டி.எச் இருக்கிறவங்க விரும்பினா படம் பார்த்துட்டுப் போறாங்க.உங்களுக்கு 20 ரூபாயில சோலி முடியுதுன்னு எல்லார்கிட்டயும் 20 ரூவால கிடைக்குதுன்னு தம்பட்டம் அடிச்சாற் எப்படி:)

யாரு!லோகநாயகர் அப்பாவிக காசை ஆட்டையப் போடுறார்?உழைப்பவன் காசை வீடியோ திருடி ஆட்டையப்போடுறது நீங்க.பிடிச்சவங்க டி.டி.எச் விஸ்வரூபம் பாருங்க,இல்லைன்னா தியேட்டர்ல பாருஙகன்னு சொல்வது மேல் அல்லவா?

தொழில் நுட்பம் செவ்வாய் கிரகத்துக்கே பறக்குற காலத்துல திருட்டு வீடியோவுக்கு வக்காலத்து வாங்கறதுமில்லாமல் இதுல தொழில்நுட்ப பதிவுகள் வேற.பேச்சைப் பாரு பேச்சை:)

வவ்வால் said...

ராச நட,

வாரும்,வாரும்,

சரக்கே இல்லாம பதிவு போடுறவங்கலை பார்த்திருக்கேன், ஆனால் சரக்கே இல்லாமல் பின்னூட்டமிடுபவரை இப்போ தான் பார்க்கிறேன் :-))


பதிவை ஒழுங்கா படியுங்காணும் , இப்படி அறைகுறையப்படிச்சுப்புட்டு பொலம்பினால் எப்படி, முந்தையைப்பதிவிலே எல்லாம் சொல்லியாச்சு...

//ஏன் எனில் நல்ல தரமான திரையரங்கில் ,பெரிய திரையில் பார்க்கவே ஒருவருக்கு 120 ரூ தான் கட்டணம் எனும் நிலையில் ஒரு குடும்பத்தில் 5 பேர் திரையரங்கு சென்றாலும் 600 ரூ தான் கட்டண செலவு. மேலும் ஆன் லைன் புக்கிங்க் எல்லாம் உள்ள சூழலில் கொஞ்சம் முன்கூட்டியே முயன்றால் டிக்கெட் வாங்கிவிடலாம். எனவே அவசியம் லோகநாயகர் படம் பார்க்க நினைக்கும் குடும்பம் திரையரங்கில் பார்ப்பதே மலிவாகவும், நன்றாகவும் இருக்கும் எனவே டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து பொது மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் எனலாம்.
//

# ஆஹா லோகநாயகர் டிடிஎச் இல் 1000 ரூன்னு கட்டணம் வச்சாப்பொறவு தான் அய்யாவுக்கு ஊழல் அரசியல்வாதிகள் மக்களை சொறண்டி 1000 ரூ கூட சம்பாதிக்க விடலைனே ஞானோதயம் பொறக்குதுப்பா :-))

ஏன் கோடிக்கணக்கில் பணம் போட்டு படத்த எடுக்கிறதுக்கு பதிலா, ஊழல் அரசியல்வாதிகளை எதிர்க்க அரவிந்த்கேஜ்ரிவால் போல இயக்கம் ஆரம்பிக்கலாமே லோகநாயகர்,அதைவிட்டுப்புட்டு ஹாலிவுட் படங்களை நகல் செய்து படம் எடுத்து 1000 ரூபாவுக்கு அப்பாவிகள் தலையில் மிளகாய் அரைப்பதேன் ?

ஆனால் உங்களைப்போன்ற ஆடுகளுக்கு , என்னைப்ப்போன்ற ஏழை ,எளிய அப்பாவிகளைப்பார்த்து தான் நோகாமல் கேள்விக்கேட்க தெரியும்.

அரசியல்வாதி ஒரு பக்கம் நாட்டை கொள்ளை அடிக்கிறான் என்றால் ,ஏன் நான் மட்டும் சும்மா இருப்பனா என கிளம்பிட்டாரா லோகம் :-))

கேட்டால் ,அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் என்பாரோ :-))

அய்யா லோகநாயத்தின் ஊது குழலே, 1000 ரூ கொடுத்து டிடிஎச்ல் படம் பார்த்துவிட்டால், நாட்டில் ஊழல், கொலை, குற்றம் ,பாலியல் வன்முறை எல்லாம் அடியோடு அழிந்துவிடும் என உறுதி கொடுங்கள், நான் கடன் வாங்கியாவது 1000ரூக்கு படம் பார்க்கிறேன், இல்லைனா 20 ரூபாவில் சோலிய பார்க்கிறேன்:-))

நாட்டில் மூனூ வேளை முழுசா சோறு கிடைக்காம கோடிக்கணக்கில் கொலைப்பட்டினி கிடக்காங்க, ஒரு சினிமா படத்தை 1000 ரூ கொடுத்துப்பாருங்கன்னு கூசாம சொல்ல கிளம்பிட்டாங்கய்யா :-((

பல்லு இருக்கிறவன் பகோடா சாப்ப்பிடுறான் அதே போல தில்லு இருக்கிறவன் திருட்டு டிவிடி பார்க்கிறான்.

திருட்டு டிவிடி பார்ப்பது குற்றம் என்றால் முதலில் பாலு மகேந்திராவை சாடிவிட்டு என்னை சாட வாரும், ஒரு சினிமா விழாவில் நான் உலக படங்களை திருட்டு டிவிடியில் தான் பார்க்கிறேன், அதற்காக என்னை கைது செய்தாலும் கவலையில்லை என்கிறார்.

உலகப்படங்களின் ஒரிஜினல் டிவிடி சுமார் 500 ரூபா தான் , அதனை வாங்கி பார்க்க வக்கில்லாமல் தான் பாலு மகேந்திரா அப்படி சொன்னாரா?

சென்னையில் ஒரிஜினல் டிவிடி விக்கிற கடைகளும் இருக்கு அவங்க சொல்லுற விலைக்கு இந்த சினிமாக்காரங்களே வாங்கிப்பார்ப்பதில்லை, என்னை குறை சொல்ல கிளம்பிட்டார் அய்யா :-))

தனி ஒருவனுக்கு மலிவாக திரைப்படம் பார்க்க வழியில்லை எனில் திருட்டு டிவிடியை பார்த்திடுவோம் :-))

ராஜ நடராஜன் said...

அதென்னமோ உண்மைதான்!இதுவரைக்கும் போட்ட பதிவுகளிலும் சரி,பின்னூட்டங்களிலும் சரி சரக்கே இல்லாமல்தான் போட்டிருக்கிறேன்.ஒரு வேளை சமோசா வாடை வீசக்கூடும்:)

அறிமுகமேயில்லாத நமக்கெல்லாம் வாய் எட்டு ஊர் வரை திறக்கும்.லைம் லைட்டில் இருப்பவர்கள் ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிப்பது எவ்வளவு சிரமம் என்பது பிரபலங்களுக்கு மட்டுமே தெரியும்.
லோகநாயகர் தனது உழைப்புக்கான விலை இவ்வளவு என்று நிர்ணயிக்கிறார்.பிடிச்சா டி.டி.எச்ல் பாருங்க.மாட்டேன்,திருட்டு வீடியோவில்தான் பார்ப்பேன்னு அடம் பிடிச்சா போலிசுல புடிச்சுக்கொடுத்திடுவேன்:)

முதலில் பாலுமகேந்த்ரா விலாசத்தையோ,போன் நம்பரையோ அவர்கிட்ட கேட்டு வாங்கி கொடுங்க.திருட்டு வீடியோவே பார்க்காம சல்லிசா உலக படங்கள் பார்ப்பது எப்படின்னு அவர் காதுல போடுறேன்.

நமக்கெல்லாம் அகன்ற பார்வையும்,அகன்ற திரையுமே பிடிக்கும்.ஒளிஞ்சுகிட்டும்,பம்மிகிட்டும்அசின் பாவாடை சைசுல ரஜனி,கமல் படத்தை திருட்டு வீடியோவில் பார்ப்பது பிடிக்கவே பிடிக்காது:)

தோ! வந்துட்டாரு திருட்டு பாரதி:)

எங்களுக்கும் பாட தெரியுமே!
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த திருட்டு வீடியோ மனிதரை நினைத்து விட்டால்....

வவ்வால் said...

ராச நட,

வாரும்,

இப்படியே சொன்னதையே சொல்லிட்டிருங்க,விளங்கிடும்!

லோகநாயகர் அவர் உழைப்புக்கு விலை வைக்கட்டும், அதை ஏன் தியேட்டர்காரங்க, போடனும், போட்டா போடட்டும் இல்லாட்டி போகட்டும்னு இருக்க வேண்டியது தானே, ஏன் உலகம் உருண்டைனு எல்லாம் பினாத்தனும்.

தியேட்டருக்கு ,முதல் நாள் ,முதல் ஷோ பார்க்க வருவது ரசிகர்கள் மட்டுமே, அந்த ரசிகர்களையும் வரவிடாமல் செய்வதோடு,அவனிடம் இருந்து அதிகப்படியாக உறிஞ்ச திட்டம்ம் போடுகிறார், நடிகர்களின் மீது கண்மூடித்தனமாக பற்று வைத்திருப்பவர்களை ஏமாற்றும் செயல் தானே.

எந்த ரசிகனும் முதல் நாள் இரவு டிடிஎச் இல் அதுவும் 1000 ரூ கொடுத்துப்பார்த்துவிட்டு ,அடுத்தநாள் காலையில் மீண்டும் 500 ரூ செலவு செய்ய விரும்பமாட்டான்,முடியாது, எனவே வழக்கமாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களும் வரமாட்டார்கள், சாமனியர்களோ, படம் நல்லா இருக்குன்னு தகவல் உறுதி செய்துக்கொண்டு ஒரு வாரம் கழித்தே பார்க்கலாம் என நினைப்பார்கள், அதற்குள் டிடிஎச் மூலம் தரமான திருட்டு டிவிடி கிடைக்கும், பார்த்துவிடுவார்கள்.

நீங்க எத்தனைப்பேரை போலீசில் புடிச்சு கொடுப்பீங்க :-))

உங்களுக்கு மட்டும் தான் இணையத்தில் படம் பார்க்கிற வித்தை தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருங்க, இந்தியாவில் இணைய வேகம் என்ன, அதன் விலை என்னனு யோசிக்காதிங்க. அதெல்லாம் பாலுமகேந்திராவுக்கு தெரியாமலா திருட்டு டிவிடி வாங்குறார். அவருக்கே ஒரு உலக படத்துக்கு 500 ரூ செலவு செய்ய முடியலை, சாமானியன் உள்ளூர் படத்துக்கு 1000 ரூ செலவு செய்வானா?

//நமக்கெல்லாம் அகன்ற பார்வையும்,அகன்ற திரையுமே பிடிக்கும்.ஒளிஞ்சுகிட்டும்,பம்மிகிட்டும்அசின் பாவாடை சைசுல ரஜனி,கமல் படத்தை திருட்டு வீடியோவில் பார்ப்பது பிடிக்கவே பிடிக்காது:)//

ஆமாம் நெட்டு புளிக்குதுல அய்யா மட்டும் 40 அடி திரையில பார்க்கிறாரு :-))

ஆண்டுக்கு ஒரு முறை தியேட்டர் பக்கம் ஒதுங்குவீங்களா? நான் எல்லாம் ஒரு காலத்தில் வாரா வாரம் தியெட்டர் போனேன், அதுக்கு முன்னர் நினைச்சுக்கிட்டா உடனே போவேன், இப்போ வரும் மொக்கை படத்துக்கு டிவிடியே போதும்னு முடிவு செய்தாச்சு.

டிவிடில மொக்கையான காட்சியை ஃபார்வர்ட் செய்துவிட்டு பார்க்கலாம், திரையரங்குல அது முடியுமா, எல்லா மொக்கையும் அனுபவிக்கனும் :-))

//நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த திருட்டு வீடியோ மனிதரை நினைத்து விட்டால்...//

அப்படியே இதையும் சொல்லுங்க ,நெஞ்சு பொறுக்குதில்லையே திருடி படம்ம் எடுக்கும் லோகநாயகரை நினைத்துவிட்டால்னு :-))

முதலில் சொந்தமா கதை தயார் செய்து படம் எடுக்கட்டும்,அப்புறமா திருட்டு டிவிடிக்கு விசனப்படலாம்!
-----------------

ராஜ நடராஜன் said...

//இப்படியே சொன்னதையே சொல்லிட்டிருங்க,விளங்கிடும்!//

ரிபீட்டே:)

நெட்புளி எத்தனை அடின்னு தெரியல.நிச்சயமா அசின் பாவாடை சைஸ் கிடையாது:)புளியிலும் முன்னாடி,பின்னாடின்னு மொக்கையை தவிர்க்கலாமே!

இங்க பாருங்க!தியேட்டர்காரர்கள் பிகு செய்வதன் பின்ணனி ஒரு நாள் திரையரங்கின் வாடகை மட்டுமே,லாபமோ,நஷ்டமோ கமலை சார்ந்தது என்ற அடிப்படையில்தான்.நீங்க என்னதான் பிளிறினாலும் திரையரங்குகாரர்கள் வில்லங்கம் செய்யாமலிருந்தால் போட்ட காசு திரும்ப வந்துடும்.

ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி 20 ரூவாயில சோலிய முடிச்சிடலாம்ன்னா திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பலனில்லை.லோகநாயகருக்கும் அடிசறுக்கலாம்.பார்க்கலாம் பொங்கல் வந்தா புள்ள பொறந்துடப் போகுது!

இத்தனை புள்ளி விபரம் தந்தீங்களே 20 ரூவா சோலிக்காரங்க எத்தனை பேர்ன்னு கொஞ்சம் புள்ளி விபரம் தர்றது:)

ராஜ நடராஜன் said...

வவ்சு!ஏதாவது அசின் புதுப்படம் தேடுறீங்களா இல்ல ரொம்ப பிசியா இருக்கீங்களா?

அதென்னமோ இங்கே வந்து உங்களை நோண்டுலேன்னா மேஞ்ச மாதிரியே பீலிங்க் இல்ல:)

ஜெயசரஸ்வதி.தி said...

தகவல்கள் அருமை ...
நிறைய குழப்பத்தில் இருந்தேன் ...
கொஞ்சம் தெளிவு கிட்டியது ....!!!

Anonymous said...

//20 ரூவா சோலிக்காரங்க எத்தனை பேர்ன்னு /// 90% of the film makers are doing the thiruttu DVD business... am i correct voval :-)

ராஜ நடராஜன் said...

அனானி!வவ்வாலைக் காணோம்!ஒரு ஃபோர் அடிச்சா அரை சதமாவது தேறும்.

என்னது வேலியே பயிரை மேயுதா!இதையெல்லாம் முன்னாடியே சொல்லித் தொலைஞ்சிருந்தா தமிழ் சினிமா நாசமா போகட்டும்ன்னு விஸ்வாமித்திரர் ஆகியிருக்கலாமே!

ஆக 20ரூவாய்ல சோலி பார்த்தாலும் மாமா,மாமாவுக்கு மாமாவுக்குத்தான் துட்டு சேருதா?

Anonymous said...

wat happpend voval?
long time no see!!

ராஜ நடராஜன் said...

இன்னா!20 ரூவாயில சோலி பார்த்துட்டுத்தான் புதுசா ரிலிஸ் செய்வேன்னு சபதமோ?

இருக்கிற அத்தனை டி.டி.ஹெச்சுக்கும் ஆர்டர் புடிச்சிட்டாக தெரியுமா?

உங்க நாரத வேலையால வீணாப் போறது எசப்பாட்டு பாடும் படத்தயாரிப்பாளர்கள்தான்.சொல்லிப்புட்டேன்.

வவ்வால் said...

ஜெய சரஸ்வதி,

வாங்க,நன்றி!

சட்டுன்னு படிக்கும் போது ஜெயேந்திர சரஸ்வதின்னு படிச்சுட்டேன் , நம்ம வாசகர் வட்டத்தில!!?? காஞ்சி சாமியாரும் வந்துட்டாரான்னு ஒரே ஷாக்காகிட்டேன் :-))

என்ன கொழப்பம், என்ன தெளிவுன்னு ஒன்னும் சொல்லலையே, சரி ஏதோ தெளிவாகிற அளவுக்கு நம்ம பதிவும் தெளிவாக இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன்,நன்றி!
-------------
அனானி ,

நன்றீ!

சொன்னாப்போல சினிமாக்காரங்களில் பலரும் திருட்டு டிவிடிக்கு உடந்தை தான். முதலில் திருட்டு டிவிடி வருவதே வெளிநாட்டுப்பிரிண்டில் இருந்து தான்.

---------------

ராச நட ,

வாரும் ,நன்றி!

போரடிக்கும் போது எல்லாம்ம் இங்கே வரிங்க போல இருக்கே :-))

ஆமாம் படம் கிடைக்கலை தேடிக்கொடும்.

# திருட்டு டிவிடி எப்படி தயாராகுதுனு சினிமாவில் இருக்கும் பலருக்கும் தெரியும். பல சமயம் லேபில் இருந்தே காபி செய்துவிடுவதுண்டு.

அய்ங்கரன்,லோட்டஸ் எல்லாம் டிவிடி உரிமம்ம் வாங்கியா விற்கிறாங்க, வெளிநாட்டு உரிமம் வாங்கிட்டு அப்படியே திருட்டு டிவிடி தான். பெயர் போட்டே விற்கும் போது ஏன்னு கேட்க தெரியாதா இந்த சினிமாக்காரங்களுக்கும், கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது, சும்மா உள்ளூரில் திருட்டு டிவிடியை ஒழிங்கன்னு , ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்த வேண்டியது :-))

# 20 ரூவாயில சோலி முடியத்தான் போவுது.

ஹி...ஹி முதலில் டாட்டா ஸ்கையுடன் பேசியதும் 40 கோடிக்கு வியாபாரம் ஆச்சுன்னு சொன்னது?

இப்போ எல்லா டிடிஎச்யும் ஏன் பிடிக்கிறார், முன்னரே டாடா ஸ்கையின் வாடிக்கையாளர்கள் குறைவுனு நான் சொன்னது தான் காரணம்.

இப்போவும் எல்லா டிடிஎச் லும் போட்டாலும் யாரும் முதலில் :UPfront payment" ஆக தொகையே தரமாட்டார்கள், எத்தனைப்பேர் பார்க்கிறார்களோ அதில் வரும் வசூலில் சதவிகிதம் படி பிரித்துக்கொள்வார்கள் ,இது தான் டிடிஎச் செயல்படும் முறை,அது தெரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் 40 கோடி,50 கோடிக்கு டிடிஎச் இல் விலை கொடுத்தாங்கன்னு புழுகிக்கொண்டு திரிகிறார்கள்.

எது எப்படியோ டிடிஎச் இல் அதிகம் பேர் பார்த்தால் தியேட்டருக்கு கூட்டம் வராது, டிடிஎச் வருமானம் மட்டும் ,மொத்த பட்ஜெட்டை எடுக்க உதவாது எனவே நிகர நட்டம் என பின்னாளில் தெரிய வரும் போது அன்றே சொன்னான் தீர்க்க தரிசி வவ்வால் என காலம் சொல்லும் :-))

தியேட்டர்களும் உறுதியாக உள்ளன, எனவே சிக்கல் தான்.

மேலும் சன் டிடிஎச் உம் இப்போது ஒளிபரப்ப உள்ளதால், விரைவில் ஜெயா டீவி தரப்பில் இருந்து ஒரு அஸ்திரம் பாயும் என எதிர்ப்பார்க்கலாம். மேலும் இனிமேல் ஆளும் தரப்பின் ஆதரவு கிடைப்பதும் சந்தேகமே.
--------------

அனானி,

அடடா என்ன ஒரு பாசம், இங்கே தானே இருக்கேன், அதுக்குள்ள காணாமல் போனதாக தேட ஆரம்பிச்சுட்டாங்களே , நன்றி!

ராஜ நடராஜன் said...

50 அடிக்கலைன்னா நான் அடிக்கலாம்ன்னு இருந்தேன்.என்னது!ஆள் இல்லாத கடைல டீயா?

வரலாற்றை பின்னாடி திரும்பி பார்க்கும் போது வரலாறு நம்ம பின்னூட்டம் பற்றியும் பேசுமில்ல:)