Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Tuesday, January 15, 2013

கால்நடைச் செல்வம்.


(ஹி...ஹி..கண்ணா கரும்பு தின்ன ஆசையா?)

அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!

பாரத நாடு பழம் பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நிலை மறவாதீர் , இப்பாடல் நமக்கு மட்டும் அல்ல நம்ம ஊரு மாடுகளுக்கும் பொருந்தும், நம்ம நாடு உலகிலே மிக அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை கொண்ட நாடு, இச்சாதனை இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் சாதனையாகும்.

விவசாயமே பிரதான பொருளீட்டும் தொழிலாக கொண்டு உலகம் இயங்கிய காலத்தில் விவசாயத்தொழிலின் உச்சத்தில் நின்ற நாடு இந்தியா, எனவே உலக அளவில் செல்வ செழிப்பான நாடுகளில் முதலிடத்தில் இருந்தது.

விவசாயம் செய்ய நிலத்துக்கு அடுத்து இன்றியமையாத மூலதனம் கால்நடைகள் ஆகும், கால்நடைகளில் உழவு மாடு, கறவை மாடு, இரண்டுக்கும் பயன்ப்படும் வகை என உண்டு. அனைத்து வகை கால்நடைகளிலும் மிக அதிக எண்ணிக்கையில் உற்பத்தி திறனுடன் இந்தியா விளங்கியதாலேயே விவசாயத்தின் உச்சத்தினை தொட முடிந்தது.


உழவு மாட்டினை உயிருள்ள டிராக்டர் எனலாம், டிராக்டருக்கு எரிபொருள் செலவு செய்தால் உழலாம் ஆனால் உரம் கொடுக்காது, அதே சமயம் உழவு மாட்டுக்கு உணவு கொடுத்தால் உழும், வண்டி இழுக்கும், கறவை மாடுகளின் இனவிருத்திக்கு பயன்ப்படும், மேலும் சாணமானது உரமாகவும் பயன்ப்படும்.

மாட்டுக்கு  என தனியாக உணவு  உற்பத்தி செய்யத்தேவையில்லை, மனிதர்கள் பயன்ப்படுத்தாத தாவர கழிவுகள், வைக்கோல், பிண்ணாக்கு என எஞ்சியவையே உணவாக பயன்ப்படும், எனவே விவசாய உற்பத்தியில் எந்த பொருளும் விரயமாகாமல் சிக்கனமாக விவசாயம் செய்யலாம்.

(காங்கேயம் காளை,காங்கேயன்=கங்கையின் மைந்தன்,முருகன்)

எந்திர மயமாக்கல் விவசாய உற்பத்திக்கு தேவை எனினும், இந்தியா போன்ற கால்நடை மிகுந்த நாட்டில் எந்திர மயமாக்கல் விவசாய செலவீனங்களை அதிகரிக்கவே செய்கிறது, பாரம்பரிய எளிய விவசாயத்தில் உற்பத்தி செலவினை விவசாயி தீர்மானிக்க முடியும், எந்திர மயமாக்கப்பட்ட விவசாய உற்பத்தியில் எரி பொருள், இரசாயன உரம், பூச்சி மருந்து விலை என அனைத்தும் புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன, எனவே உற்பத்தி செலவு இன்னதென விவசாயியால் திட்டவட்டமாக முடிவு செய்ய இயலாது, அதே சமயம் விளைப்பொருளின் கொள்முதல் விலையும் விவசாயி கையில் இல்லாத சூழலில் , உற்பத்திக்கும் வியாபாரத்துக்கும் இடையில் விவசாயி வெறும் பொம்மையாக உழைப்பை சிந்திவிட்டு பலனை யார் கொடுப்பார்கள் என தெரியாத சூழலில் வாழ்கிறான்.

(சிவப்பு சிந்தி மாடு)

அதிக அளவில் கால்நடைகள் இந்தியாவில் இருந்த போதிலும் பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருக்கிறோம், இதற்கு காரணம் இந்திய மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது என நம்ம நாட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், இதனை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகளின் உயர் உற்பத்தி ரக மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு பல திட்டங்களைப்போட்டு செயல்படுத்தி வருகிறது, கேட்பதற்கு மிகவும் நல்ல திட்டம் போல தெரிந்தாலும் உண்மை வேறாக உள்ளதாக பல வேளாண் அறிஞர்களும், உயிர் தொழில்நுட்ப வல்லுனர்களும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

அது எப்படி எனப்பார்ப்போம்.

அமெரிக்காவில் மாட்டிறைச்சி மற்றும் பால் பண்ணை தொழில் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு தொழிலாகும்.

அவர்கள் கூடுதல் இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பெருக்கத்திற்கு நம்பி இருப்பது இந்திய வகை மாடுகளை தான் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும்.

(பிரம்மன் வகை காளை- Bos indicus)

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரம்மன் வகை எனப்படும் Bos indicus மாடுகள் பெரிதாக,வலுவாக வளரக்கூடியவை, இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு பயன்படுபவை.மிக அதிக இழுவைத்திறன் கொண்டவை.

ஐரோப்பிய வகை மாடுகளை Bos taurus என்பார்கள், மறபணு ரீதிய இந்திய மாடுகளை விட தரம் குன்றியவை,இந்திய வகை மாடுகளின் சிறப்பம்சம் என்னவெனில்,

குறைந்த வெப்பமும் தாங்கும், அதிக வெப்பமும் தாங்கும்.இந்திய மாடுகளின் வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருப்பதே இதற்கு காரணம்.

மேலும் வெகு அடர்த்தியான உரோமங்கள் உள்ளவை, உரோமங்களுக்கு அடியில் கருமை நிறத்தோல் இருப்பதால் வெப்பத்தினை சீராக பராமரிக்க வல்லவை.

மேலும் பிரம்மன் வகை மாடுகள் தளர்வான மேல் தோலினை கொண்டவை எனவே தேவைக்கு ஏற்ப உடல் மேற்பரப்பினை அதிகரித்து வெப்ப வெளியீடும் அளவை அதிகரிக்க ,குறைக்க வல்லவை.

இவ்வகை மாடுகளின் உடலில் இயற்கையாக ஒருவகை திரவம் சுரக்கும் ,இது பூச்சிகளை இயல்பாக விரட்ட வல்லது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.

(சாஹி வால் மாடு)

இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டப்பொழுது ,இந்திய பிரம்மன் வகை மாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றை போஸ் ஈரோப்பியன் வகையுடன் கலப்பினம் செய்தார்கள்,மேலும் நெல்லூர், கிர், கிருஷ்ணாவாலி வகை மாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் கலப்பினம் செய்யப்பட்டது.

ஆதாரப்ப்பூர்வமாக  Dr. Hilton Briggs, author of Modern Breeds of Livestock என்ற நூலில் இத்தகவல்கள் உள்ளது. இவரது நூலில் உள்ள தகவல் என்னவெனில்,

1849 இல் Dr. James Bolton Davis of Fairfield County, South Carolina, என்பவர் இரண்டு ஜோடி போஸ் இன்டிகஸ் காளைகளை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்து ,கலப்பின முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், இவர் அப்போது துருக்கி சுல்தானுக்கு கால்நடை ஆலோசகராகவும் செயல்ப்பட்டு வந்துள்ளார், இதனால் அங்கும் இந்திய மாடுகள் பரவியது.

பின்னர் 1854 இல் St. Francisville, LA வை சேர்ந்த Richard Barrow என்ற வேளாண் அறிஞரின் சேவையைப்பாராட்டி பிரிட்டீஷ் அரசே ஒரு ஜோடி போஸ் இன்டிகஸ் மாடுகளை அன்பளிப்பாக அளித்துள்ளது,அவர் உருவாக்கிய கலப்பினத்துக்கு பாரோவ் பிரீட் என்றப்பெயர் வைக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக கலப்பினங்கள் செய்யப்பட்டு இன்றைய அமெரிக்க பிரம்மன் வகை மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய மாடுகளே இன்றைய அமெரிக்காவின் மாட்டிறைச்சி மற்றும் பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் மிக அதிக அளவில் இந்திய மாடுகளை கொண்டு உருவாக்கிய கலப்பினங்களே உள்ளன. அவர்கள் சுய உற்பத்திக்கு மட்டுமில்லாமல் இப்பொழுது இம்மாடுகளை இனவிருத்தி செய்ய என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள், மலேசியாவில் உள்ள மாடுகள் அனைத்தும் இந்திய கலப்பின மாடுகளே ஆனால் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்வதை ஜெனிட்டிக்கல் பைரசி என்கிறார்கள், இப்போது நாமே நினைத்தாலும் இந்திய மாடுகளை ஏற்றுமதி செய்ய இயலாது, ஏன் எனில் போஸ் இன்டிகஸ் வகை மாடுகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் போன்றவை தங்கள் நாட்டு மாடு என பதிவு செய்துக்கொண்டுள்ளார்கள்.

(இந்திய கிர் வகை பசு-பிரேசிலில் அதிகம் பால் கொடுத்து சாதனை)

பிரேசிலில் கடந்தாண்டு மிக அதிக பால் கொடுத்த மாடு என சாதனை செய்திருப்பது குஜராத்தினை சேர்ந்த கிர் வகை மாடு ஆகும், ஷேரா எனப்பெயரிடப்பட்டுள்ள இம்மாடு ஒரு நாளில் 62 லிட்டர் கறந்துள்ளது.வெப்பமான நாடுகளில் வெப்பத்தினையும் தாங்கி கொண்டு பால் உற்பத்தியும் அதிகம் கொடுக்கும் வகை என்பதால் இவ்வகை மாடுகளை பல நாடுகளும் விரும்புகின்றன.

எனவே பிரேசிலில் உற்பத்தி செய்யப்படும் மாடுகளுக்கு உலக அளவில் நல்ல சந்தை ஏற்பட்டுள்ளது, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளை ஏற்றுமதி செய்வதில் பிரேசில் முன்னணி வகிக்கிறது ஆனால் அவை யாவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாட்டினங்கள். இந்தியாவிற்கு தான் அதன் மறபியல் உரிமை உண்டு ,நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டதால் அவர்கள் திருடி தங்கள் பொருளாக அறிவித்துவிட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு குளிர்நாடுகளான டென்மார்க்,ஹாலந்து, ஆகிய நாடுகளில் இருந்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்து கலப்பினம் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

மேலும் இந்திய மாடுகளில் ஜீன்களில் சர்க்கரை நோயை குறைக்கும் ஏ2 ஜீன் அல்லிகள் உள்ளதாகவும்,ஐரோப்பிய மாடுகளில் ஏ 1 அல்லில்கள் தான் உள்ளது எனவும் இது சர்க்கரை நோய்,உடல் பருமன், மற்றும் இதயநோய்களை அதிகரிக்கும் எனவும் கர்நாலில் உள்ள தேசிய கால்நடை  மறபணு ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

செய்தி:

 A recent study by Karnal-based National Bureau of Animal Genetic Resources (NBAGR) showed Indian cows have a rich A2 allele gene which helps them produce healthier milk. The frequency of this A2 allele in Indian breeds is 100 per cent whereas in exotic cattle breeds it is less than 60 per cent. Imported breeds posses A1 allele, which is considered to be associated with diabetes, obesity and cardiovascular

http://news.outlookindia.com/items.aspx?artid=725938

இவற்றை எல்லாம் பார்க்கும் போது அன்றே மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய(நடித்த) பாடல் தான் நினைவுக்கு வருகிறது,

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

ஒழுங்காய் பாடு படு வயல்காட்டில்

உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் ...

விவசாயி ...விவசாயி!


(என்னா ஆக்டிங்க் ....என்னா ரன்னிங்க் ...தலிவரு ஆல்வேய்ஸ் ராக்ஸ்)

பிற்சேர்க்கை:

 கலப்பினமாக்கலால் அழிந்து வரும் இந்திய நாட்டு மாடுகள் குறித்து முன்னர் இட்ட இடுகைகள்.


1)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2


--------------------
பின்குறிப்பு:

தகவல்கள் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி,

http://www.ansi.okstate.edu/breeds/cattle/brahman/

http://www.ilri.org/InfoServ/Webpub/fulldocs/SmHDairy/chap5.html

http://devinder-sharma.blogspot.in/2012/07/brazil-is-biggest-exporter-of-indian.html

http://agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_cattle%20_breed.html
இணைய தளங்கள் ,நன்றி!
-----------------------

Thursday, May 24, 2012

பங்கு சந்தையால் பயனடைவது யார்?




பங்கு சந்தைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவை என பொதுவான கருத்துண்டு,ஆனால் அதில் நடப்பது என்னமோ யூகங்களின் அடிப்படையிலான சூதாட்டமே, மேலும் பல்லாயிரங்கோடிகள் பங்கு வர்த்தகத்தில் புழங்கினாலும் அதன் பலன் யாருக்கு போய் சேருகிறது,சாமனிய மனிதனுக்கு அதனால் பலன் உண்டா என்பதையெல்லாம் அலசும் நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்.அனைத்தும் வாசிப்பின் அடிப்படையில் உருவான எனது சொந்த பார்வையே,பிழை இருக்கலாம்,இல்லாமலும் போகலாம் ,மாற்றுக்கருத்து இருப்பின் கூறலாம்.

பங்கு சந்தையின் பலாபலன்களை புரிந்து கொள்ள ஒரு பணக்கார தொழிலதிபர், ஒரு சிறு தொழில் செய்பவர் ஆகிய இருவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

முதலில் குப்பன் எனும் சிறு தொழில் செய்பவரைப் பார்ப்போம்,

குப்பன் ஒரு தேநீர்க்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார்,அவரது வாழ் நாள் லட்சியம் சொந்தமாக தேநீர் கடை ஆரம்பிப்பதே.உழைப்பில் கொஞ்சம் சேமிப்பு இருக்கு அதனுடன் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும் கடை போட்டுவிடலாம் என்ற நிலை.

மேற்கொண்டு நிதிக்காக அனைத்து வங்கிகளுக்கும் படை எடுத்து பார்க்கிறார்,கஜானா திறப்பேனா என அடம் பிடிக்கிறது. வேறு வழி இல்லாமல் கந்து வட்டி கந்தனிடம் 50 ஆயிரம் வட்டிக்கு வாங்கி, கையில் உள்ளப்பணம் ,மனைவி நகை எல்லாம் அடகுவைத்து நிதி திரட்டிவிடுகிறார்.

கடைக்கு இடம் தேடியலைந்து ஒருவழியாக பிடித்து ,அங்கு கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லை என ,வண்டியில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்து ,பல முறை கார்ப்பரேஷன் அலுவலத்துக்கு அலைந்து,கடைசியில் லஞ்சம் கொடுத்து கடைக்கு அனுமதி வாங்கி ஒருவழியாக தேநீர்க்கடையை ஆரம்பித்து விடுகிறார்.

வரும் வருமானம் எல்லாம் வட்டிக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக போய்விடுகிறது.மேற்கொண்டு கடையை விரிவுப்படுத்த நிதி இல்லை என்று ரொம்ப டைட்டாக ஓடுது வியாபாரம்.

இப்போது பணக்கார தொழிலதிபர் ஜூனியர் கும்பானி என்பவரைப் பார்ப்போம், பணக்கார குடும்பத்தில் தங்க ஸ்பூனோட பொறந்தவர்,ஆனாலும் சொந்தமாக ஒரு வியாபாரம் செய்யணும் என சுமார் ஒரு கோடி முதலீட்டில் ஒரு தேயிலைத்தூள் நிறுவனம் ஆரம்பிக்க நினைக்கிறார்.

இவர் இடம் எல்லாம் தேடவில்லை, ஆரம்பிக்க அனுமதி கேட்டதும் அரசே தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கொடுத்து விடுகிறது,மேலும் தடையில்லா மின்சாரம், குடிநீர் எல்லாம் கொடுக்கிறோம், கூடவே 7 ஆண்டுக்கு 100 சதவீத வரிவிலக்கு எல்லாம் சொல்லி தொழிலை துவங்க ஊக்குவிக்கிறது அரசு.

கும்பானியும் தொழிற்சாலை ஆரம்பித்து ஊட்டியில் பச்சை தேயிலையை கிலோ 20 ரூக்கு வாங்கி வந்து அரைத்து பொடியாக ஒரு கிலோ 300 என சல்லீசாக கொளை லாபத்தில் விற்கிறார், அந்த தேயிலைக்கு ஃப்ரீரோசஸ்னு அழகா பேரும் வச்சுக்கிறார்(ரோசாவுக்கும் டீக்கும் என்னையா சம்பந்தம்?)

பேரு மட்டும் வச்சாப்போதுமா ,அதை விளம்பரப்படுத்த ,ஃபிரிஷா என்ற கோலிவுட்/பாலிவுட் நடிகையை வச்சு விளம்பரம் எடுத்து விடுறார், அந்தம்மணியும் வாங்குன காசுக்கு வஞ்சணையில்லாம தம்மாத்துண்டு துணிய உடுத்திக்கிட்டு வந்து என் மேனி எழிலுக்கு காரணம் ஃப்ரிரோசஸ் டீ தான் ??!! சொல்லுது.

மேலும் உங்களுக்கு ஏன் ஃபிரிரோசஸ் புடிக்கும்னு இந்த நம்பருக்கு கால் செய்து சொல்லுங்கன்னு கொஞ்சலா சொன்னதும் ,ஒரு நிமிடத்துக்கு 10 ரூபா புடுங்கிடுவான்னு தெரியாம பல ரசிகக்கண்மணிகள் கால் செய்து ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டு பூரிப்பது தனிக்கதை ;-))

பிரிஷா குடிச்ச டீயத்தான் !!?? குடிப்பேன்னு மக்களும் போட்டிப்போட்டு ஃபிரிரோசஸ் டீத்தூளை வாங்கி குடிக்கவே கும்பானிக்கும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது ,நல்ல லாபமும் வருது ,வராதா பின்ன 20 ரூ டீத்தூளை 300 ரூனு வித்தா ?

நம்ம டீக்கடை குப்பன் கூட பிரிரோசஸ் டீத்தூளை தான் வாங்குறார்னா பார்த்துக்கோங்க.

இப்படியே ஒரு மூன்று ஆண்டுகள் ஓடுது, கும்பானி அவரோட ஃபிரீரோசஸ் டீக்கம்பெனிய பங்கு சந்தையில் இறக்குறார், ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தை நிதி தணிக்கை மற்றும், மதிப்பீடு நிறுவனங்கள் 100 கோடினு மதிப்பீடு செய்கிறது.அது எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது அதான் சந்தை மதிப்பு செய்வது என்ற பொருளாதார நிபுணத்துவம் :-))

ஒரு பங்கு பத்து ரூ என்பதை புக் பில்டிங் முறையில 120 ரூ என மதிப்பிடப்பட்டு ஐபிஓ வெளியிடப்படுகிறது,இதற்கென "lead run book managers" என book building process செய்ய தனி அமைப்புகள் இருக்கு, கமிஷன் வாங்கிக்கிட்டு ,வேலைய கச்சிதமா முடிச்சுக்கொடுப்பாங்க. மக்களும் போட்டிப்போட்டு வாங்குறாங்க. இப்போ போட்டக்காசை விட பல மடங்கு கும்பானிக்கு திரும்ப கிடைச்டுச்சு, இனிமேல் டீத்தூளை விற்கவில்லை என்றாலும் கவலையே இல்லை.

இங்கே குப்பனின் நிலை என்னாச்சுனு பார்த்தா அவரோ இன்னமும் மூன்று ஆண்டுக்கு முன்னர் வாங்கிய 50 ஆயிரம் கடனையே அடைக்க முடியாமல், கந்து வட்டி கந்தனை பார்த்தாலே தலையில் முக்காடுப்போட்டுக்கொண்டு ஓடிவிடுகிற நிலையில் இருக்கார்.

கும்பானிக்கு வியாபாரம் நல்லா போகுது, நிறைய சம்பாதிக்கிறார் ,அப்போ அரசுக்கும் நிறைய வருமான வரிக்கட்டுவார்னு நினைப்பீங்க தானே அதுவும் இல்லை, அப்போ வரியைக்கட்டாமல் ஏய்க்கிறாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது ஆனால் அரசாங்கமே சலுகை கொடுக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கும்பானியோட சம்பளம்னு எதுவும் காட்டிக்க மாட்டார்,அப்படியே காட்டினாலும் அது சொற்ப தொகையா இருக்கும். அவருக்கு வரும் வருமானம் அவரது நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மூலம் வரும் டிவிடென்ட் வருமானம் எனக்காட்டுவார்,அப்படிக்காட்டினால் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் அடிப்படையில் வரிப்போடுவாங்க,

வழக்கமான வருமான வரி விகிதம் ஆனது,

2 லட்சம் வரை - வரி இல்லை,

2-5 லட்சம்-10%

5-8லட்சம் வரை-20%

8 லட்சத்திற்கு மேல் 30% வரி ஆகும்.

ஆனால் தொழிலதிபர்கள் ,பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஆகியோர் லாங்க் டெர்ம் கேபிட்டல் கெயின் டாக்ஸ் என்ற வகையில் ஒரே விகிதமாக 20% வரிக்கட்டினாலே போதும், அந்தப்பணத்தையும் ,நிறுவனத்தின் பொது வருமானத்தில் இருந்து கட்டிடுவாங்க,அப்படித்தான் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் விதி இருக்கு.

இப்போ டீக்கடை குப்பனுக்கே வியாபாரம் நல்லா சூடுப்பிடிச்சு நல்ல லாபம் வருதுனு வச்சுக்கோங்க, அவருக்கு ஆண்டு வருமானம் 10 லட்சத்தினை தாண்டிவிட்டால் போதும் 30% வரிக்கட்ட சொல்லுவாங்க.ஏன் எனில் அவர் பங்கு சந்தையில் இல்லை என்பதாலே அப்படி.

குப்பனுக்கு மட்டுமில்லை நாம் அனைவருக்குமே அப்படியான வருமான வரி விகிதம் தான்.

இதனை எப்படி சொல்கிறார்கள் என்றால் உழைப்பின் மூலம் வரும் வருமானத்திற்கு அதிக வரியும் ,மூல தனத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு குறைவான வரியாம்.

இப்படிலாம் நடக்குதா என நீங்கள் நினைக்கலாம், கடந்த ஆண்டு இந்தியாவில் அதிக வருமான வரிக்கட்டியது உலகின் முன்னணி இந்திய பணக்காரர் ஆன அம்பானிகள் அல்ல ,ஒடிஷாவை சேர்ந்த ஒரு இரும்பு தாது சுரங்க அதிபரே ஆவார், 95 கோடி ரூ வருமான வரிக்கட்டி சாதனைப்படைத்துள்ளார். மேலும் முதல் மூன்று இடங்களும் ஒடிசா இரும்பு தாது அதிபர்களுக்கே போய்விட்டது.

செய்திக்கான சுட்டி:


இதை ஏதோ நான் பங்கு சந்தை, மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது ஏதோ கடுப்பில் சொல்கிறேன் என நினைக்கலாம் சிலர், ஆனால் இதை எல்லாம் சொன்னது பங்கு சந்தையின் குரு என சொல்லப்படும் வாரென் பஃபெட் ஆவார், நான் இந்தியாவுக்கு ஏற்றாப்போல ஒரு உதாரணக்கதைய மட்டுமே சொன்னேன் :-))

வாரன் பஃபெட் கட்டுரை:


மேலும் அவர் பெரும்பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும், என்னிடமும் வசூலித்துக்கொள்ளுங்கள் என வெளிப்படையாக எழுதியுள்ளார். சுட்டியில் சென்று முழுவதும் படிக்கவும்.

ஆனால் இந்தியாவிலோ இப்படி பேசக்கூட ஒருவரும் தயாரில்லை, எப்படி எல்லாம் வரிக்கட்டாமல் தவிர்க்கலாம் என பல திட்டங்கள் போடுகிறார்கள், அதற்கு மன்னு மோகன் அரசும் பலமாக ஒத்துழைக்கிறது.

அப்படி தொழிலதிபர்களுக்கு சாதகமாக போட்ட திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம், அவற்றில் ஏகப்பட்ட சலுகைகள்,

#முதலீட்டுக்கு 100% வருமான வரி விலக்கு.

#உற்பத்தி பொருளுக்கு, லாபத்திற்கு, முதல் 7 ஆண்டுகளுக்கு 100% வரிவிலக்கு பின்னர் ,25%,அப்புறம் 50% என ,மொத்தம் 15 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை.

#பத்திரப்பதிவு, முத்திரை தாள் கட்டணம் இல்லை.

# மறு விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்கும் வரி இல்லை.

உ.ம்: சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஏக்கர் இடம் இருக்கு,ஆரம்பத்தில் குறைவான விலைக்கு வாங்கிய இடத்தை சில ஆண்டுகளுக்கு பின்னர் அதில் ஒரு ஏக்கரை அதிக விலைக்கு விற்றால் அதற்கு வரி கிடையாது.

சாதாரண குடிமக்கள் அப்படி தங்கள் இடத்தினை விற்று லாபம் சம்பாதித்தால் கேபிட்டல் கெயின் டாக்ஸ் எனக்கட்ட வேண்டும்.

# வெளியில் இருக்கும் துணை நிறுவனங்களில் இருந்து பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் விற்பனை வரி,சேவை வரி இல்லை.

#500 மில்லியன் டாலர் வரை வெளிநாட்டு நிதியமைப்புகளிடம் கடன் பெற அனுமதி பெற வேண்டியது இல்லை.

இப்படிப்பல சலுகைகள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் வேலை வாய்ப்பையும்,உற்பத்தியை பெருக்க தானே அரசு செய்கிறது எனலாம், ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதற்கு அமெரிக்காவே உதாரணம்.ஏன் எனில் இந்த திட்டத்தையே அமெரிக்காவைப்பார்த்து தான் மன்னு மோகன் காப்பி அடித்துள்ளார்.

அமெரிக்காவில் 60-70 களிலேயே இத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டது.நிறைய உற்பத்தி ஆனது என்னமோ உண்மை தான் ஆனால் இப்போது என்ன ஆனது என்றால் குமிழி உடைந்து விட்டது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

ஏன் எனில் 1000 பேர் செய்ய வேண்டிய வேலையை நவீன எந்திரங்கள்,கணினி என வைத்து 100 பேரைக்கொண்டே இத்தகைய சிறப்பு தொழிற்சாலைகளில் முடித்து விடுவதால் ஆரம்பத்தில் சில வேலைவாய்ப்புகள் உருவானாலும் நீண்டக்கால நோக்கில் வேலை வாய்ப்பின்மையே உருவாக்குகிறது.

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறார், ஏழை மேலும் பரம ஏழை ஆகிறான்!இதுவே நவீன பொருளாதார சித்தாந்தத்தின் பலன்!

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

நியுயார்க் டைம்ஸ்,டைம்ஸ் ஆப் இன்டியா,கூகிள், ரெடிப் இணைய தளங்கள்,நன்றி!




Sunday, May 20, 2012

FALLING RUPEE:IMPACT ON INDIAN ECONOMY





சமீப நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக வரலாறுக்காணாத அளவில் வெகுவாக குறைந்து வருகிறது ,தற்போதைய நிலவரப்படி ஒரு டாலரின் மதிப்பு 54.47 ரூ ஆகும்.

ரூபாயின் மதிப்பு குறைய காரணங்களாக சொல்லப்படுவன,

அமெரிக்க பொருளாதாரமே சரிவில் இருந்தாலும் அதன் நாணய மதிப்பு உயர்ந்த்து வருவது எப்படி என சந்தேகம் எழலாம், உண்மையில் வேறு எந்த ஒரு நாடாக இருந்தாலும் நாணய மதிப்பு குறைந்து இருக்கும்,ஆனால் அமெரிக்க டாலர் என்பது சர்வதேச அளவிள் பல நாடுகளுக்கு தேவையான ஒரு அன்னிய செலவாணியாக இருப்பதே இதற்கு காரணம்,

சர்வதேச அன்னிய செலவாணி தகுதி எப்படி டாலருக்கு கைக்கொடுக்கிறது எனில், தற்போது யூரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை,சரிவு ஆகியவற்றாலே,அதுவும் கிரீஸில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் யுரோவின் நாணய மதிப்பு சரிவடைகிறது,எனவே பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வசம் இருக்கும் யூரோவிற்கு பதிலாக டாலரை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பி அதிக அளவில் வாங்குகின்றன.

மேலும் நிதி நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்களும் டாலரை அதிகம் கையிருப்பு வைத்திருக்க வாங்குகின்றன.அதோடு அல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்கள்,மற்றும் வங்கிகளுக்கு யூரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளே சுமார் 40% சதவீத டாலர் பரிவர்த்தனை செய்து வந்தன, அவற்றை பெருமளவு குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.



டாலரின் மதிப்பு உயர்ந்தால் இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும் இதனால் என்ன கஷ்டம்,நஷ்டம் ,யாருக்கு லாபம் எனப்பார்க்கலாம்.

இந்தியா ஆரம்ப காலம் தொட்டே ஒரு இறக்குமதி நாடு அதாவது நாம் ஏற்றுமதி செய்வதன் மொத்த மதிப்பை விட இறக்குமதி செய்வதன் மொத்த மதிப்பு அதிகம், இதனை ஒரு நாட்டின் நிகழ்கால நிதிக்கணக்கில் (current account of nation)பற்றாக்குறை பட்டுவாடா நிலை (Balance of payment -deificit) என்பார்கள்.

உதாரணமாக இப்படி சொல்லலாம், நாம் 1000 டாலருக்கு உற்பத்தி பொருளை/சேவையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம் எனில் 1500 டாலர் மதிப்பிலான பொருட்களை/சேவைகளை வெளிநாட்டில் இருந்து இறக்கு மதி செய்து விடுகிறோம்.இதனால் என்ன ஆகிறது எனில் ஏற்றுமதி செய்வதால் கிடைத்த 1000 டாலர் தான் இறக்குமதிக்கு செலவிட அல்லது கொடுக்க இருக்கும், மீதி 500 டாலர் கைவசம் இருக்காது பற்றாக்குறையாக போகிறது.

ஒரு பாடல் பாமா விஜயத்தில் வருமே அதான் வரவு எட்டணா,, செலவு பத்தண்ணா அதிகம் இரண்டனா துந்தனா ..துந்தனா தான் எப்போதும் இந்தியாவுக்கு.

பொதுவாக ஆரோக்கியமான நிதி நிலைமை உள்ள நாட்டில்,

இறக்குமதி=< ஏற்றுமதி

என இருக்கும், அப்படிப்பட்ட நாட்டுக்கு மற்ற நாடுகளில் இருந்து அன்னிய செலவாணி வந்து குவியும் அந்நாட்டை உபரி நாடு என்பார்கள்.

இந்தியாவில்,

இறக்குமதி >ஏற்றுமதி

இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால் நமது பணம் நாட்டில் இருந்து வெளியில் செல்லும் நிலை,எனவே அன்னிய செலவாணி பற்றாக்குறையாக இருக்கும்.

அல்லது ,

ஏற்றுமதி= இறக்குமதி

என சம நிலையில் இருந்தாலும் ஆரோக்கியமான பொருளாதாரம் எனலாம்.

இந்தியா ஒரு பற்றாக்குறை நாடு , நமது இறக்குமதியின் மதிப்பு 75 பில்லியன்ன் டாலர்கள், ஏற்றுமதியை விட 15 பில்லியன்ன் டாலர்கள் அதிகம. எனவே பற்றாக்குறை(Balance of payment) 15 பில்லியன் டாலர்கள்.

அந்நிய செலவாணிப்பற்றாக்குறையை எப்படி அரசு சமாளிக்கும் எனில், அந்நிய நாடுகளிடம் கடன் வாங்கியோ, அல்லது கடன் பத்திரம் கொடுத்து அல்லது பங்கு சந்தையில் வாங்கி என.

இப்போது ஒரு அணைக்கட்ட ஒரு பில்லியன் டாலர் உலக வங்கியிடம் கடன் வாங்குகிறோம், எனில் அதனை எப்படி இந்தியாவில் செலவு செய்யும் அரசு, வேலை செய்பவர்களுக்கு டாலராக கொடுக்குமா என்ன இல்லை,அதே மதிப்புக்கு இந்திய ரூபாய் அச்சடித்துக்கொள்ளும், அந்த டாலர்களை ரிசர்வ் வங்கியில் அன்னிய செலவாணி இருப்பாக வைத்துவிடும்.

இந்த அன்னிய செலவாணிகள் எதற்குப்பயன்ப்படுகின்றன என்றால் இறக்குமதிக்கு அதில் பெருமளவு பெட்ரோலிய பொருட்களுக்கும்,அடுத்து தங்கம் இறக்குமதிக்குமே செலவாகிறது.

இப்படி பெட்ரோல்,தங்கம் என இறக்குமதி செய்து மீண்டும் டாலர் வெளியில் போய்விடும், அதை குறைக்க ஒரு வழியாகத்தான் அரசு பெட்ரோலிய,தங்க நுகர்வை குறைக்க அவற்றின் மீதி அதிக வரி, விலையேற்றம் எல்லாம் செய்கிறது.இதனால் நுகர்வு குறைய வேண்டும்,ஆனால் நம்ம ஆட்களோ போட்டிப்போட்டுக்கொண்டு அட்சய திருதியை ,அம்மாவாசைனு சொல்லிக்கிட்டு தங்கம் வாங்குவதை குறைப்பதேயில்லை.

பைக்கில் பெண் நண்பியை அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உல்லாச சவாரிப்போவதையும் குறைப்பதில்லை.நாம் தான் காசுக்கொடுத்து விடுகிறோமே அப்புறம் என்ன எனலாம் ,அது ரூபாய் ,பெட்ரோல் இறக்குமதி செய்ய டாலர் அல்லவா வேண்டும்!

அரசுக்கு எப்படி ஏற்றுமதியாலர்களிடம் இருந்து டாலர் கிடைக்கிறது எனப்பார்க்கலாம், மேலும் ரூபாய் மதிப்பு குறைந்தால் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் எனவும் பார்க்கலாம்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி செய்பவர் அமெரிக்காவிற்கு 1 லட்சம் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்ய ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார், சரக்கு டெலிவரி ஆகும் அன்று அமெரிக்கர் ஒரு லட்சம் டாலர் கொடுப்பார் என ஆர்டர் எடுக்கும் போது ஒப்பந்தம் ஆகிறது எனில் அன்று டாலர் மதிப்பு 45 ரூ என இருக்கு எனில் இந்திய மதிப்பில் 45 லட்சம் ஆகும்.

சரக்கு அமெரிக்காவில் 1 மாதம் பின்னரே டெலிவரி ஆகிறது,அன்று டாலர் திருப்பூர் ஏற்ருமதியாளருக்கு கையில் வரும் அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 50 ரூ ஆகிவிட்டது எனில் அவர் 1 லட்சம் டாலரை வங்கியில் கொடுத்தால் 50 லட்சம் கிடைக்கும்.எதிர்ப்பார்த்தது , 45 லட்சம் ஆனால் 5 லட்சம் கூடுதலாக கிடைத்துவிட்டது.

இந்த காரணங்களுக்காகவே அடிமாட்டு விலைக்கு கூட ஏற்றுமதி செய்ய திருப்பூரில் பலரும் முன்வருகிறார்கள். உற்பத்தி செய்த பொருளை அடக்க விலைக்கு விற்றாலும் அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தின் மூலம் லாபம் கிடைக்கும் என கணக்குப்போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.பலரும் ஏற்றுமதி ஆர்டர் எடுத்துவிட்டு டெலிவரி நாளுக்குள் டாலர் மதிப்பு உயர வேண்டும் என டென்ஷனுடன் இருப்பார்கள் ;-))

இதிலும் அபாயம் உண்டு , டாலர் மதிப்பு குறைந்து விட்டால் கையை சுட்டு விடும்,காரணம் மிக குறைவான விலைக்கு ,அதிலும் உள்நாட்டு விலையை விட குறைவான விலைக்கு விற்க ஒப்பந்தம் போட்டு இருப்பவர்கள் அதிகம்.

உதாரணமாக ஒப்பந்தம் அன்று ஒரு டாலர் 45 எனப்பார்த்தோம், டெலிவரி அன்று 40 ரூபாயாக டாலர் குறைந்து விட்டால் ,திருப்பூராருக்கு ஒரு லட்சம் டாலருக்கு 40 லட்சம் தான் கிடைக்கும், ஏற்கனவே அடிமாட்டுக்கு விலைக்கு பேசி இருப்பதால் 5 லட்சம் குறைந்தால் பெரும் நட்டம் ஆகிவிடும்.

இந்திய அரசுக்கோ டாலர் மதிப்பு குறையணும், திருப்பூர் ஏற்றுமதியாளருக்கோ உயரணும், நாட்டை விட அவர் வியாபாரம் முக்கியம் இல்லையா?

இந்த அபாயத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர் தவிர்க்க முடியாதா எனக்கேட்கலாம் முடியும் ,

விலைப்பேசும் போதே குறிப்பிட்ட லாபவிகிதம் வைத்து வழக்கமான வியாபாரம் போல ஒப்பந்தம் போடலாம், ஆனால் அப்படி செய்யாமல் போட்டியில் தனக்கே ஆர்டர் கிடைக்க வேண்டும் என போட்டிப்போட்டுக்கொண்டு விலையை குறைத்து பேசுவார்கள்,பின்னர் அன்னிய செலவாணி மூலம் சரிக்கட்டிக்கலாம் என்று. இது தேவையற்ற அபாயகரமான ஒரு வியாபார அணுகுமுறை ஆகும். இதனாலே இப்பொழுது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளார்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இப்போது நிலவும் டாலர் மதிப்பைப்பார்த்து ஆனந்தத்தில் மிதப்பார்கள் என நினைக்கிறேன்.

அதோடு அல்லாமல் வங்கி மூலம் முன் வியாபார ஒப்பந்தம்(Forward contract) போட்டாலும் நட்டம் வராமல் தடுக்கலாம். எப்படி எனில் இன்று டாலர் 45 ரூ எனில் ஒரு மாதம் கழித்து டெலிவரி ஆகும் போதும் அதே விகிதத்தில் பணம் தரும் வங்கி.அதாவது டாலர் மதிப்பு குறைந்தால் வரும் நட்டத்தினை வங்கி ஏற்றுக்கொள்கிறது. இதனால் எதிர்காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற பயம் ஏற்றுமதியாளருக்கு இல்லை.

சரி வங்கி ஏன் தானாக முன்வந்து இதை செய்ய வேண்டும், ஏன் எனில் அரசுக்கு டாலர் தேவை பெட்ரோல் வாங்க ,எனவே வங்கிகள் மூலம் இப்படி திரட்ட ஏற்பாடு. மேலும் ஒரு காரணம் இருக்கு , இப்போ டாலரின் மதிப்பு ஒரு மாதம் கழித்து 50 ரூ ஆனால் அப்போதும் ஏற்றுமதியாளருக்கு 50 லட்சம் கொடுக்காது, முன் வியாபார ஒப்பந்தம் போட்டப்போது 45 ஒரு டாலர் என்ற விகிதத்தில் 45 லட்சம் மட்டுமே கொடுக்கும், மீதி 5 லட்சம் வங்கிக்கு லாபம்..ஹி..ஹி இப்போ தெரியுமே வங்கி ஏன் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறாப்போலனு முன் வந்தது என :-))

இதனாலே திருப்பூர்காரர்கள் என்று இல்லை பெரும்பாலான இந்திய ஏற்றுமதியாளர்கள் முன்வியாபார ஒப்பந்த்தினை வங்கி மூலம் போடாமல் ,அவர்களே ரிஸ்க் என்ற ரஸ்க் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்,சில நேரம் ரிஸ்க்,பல நேரம் ரஸ்க் கிடைக்கும், இப்போ ஏற்றுமதியாளர்கள் ரஸ்க் சாப்பிடும் நேரம் :-))

ரூபாய் சரிவால் அரசுக்கு கூடுதலாக செலவு செய்து டாலர்கள் வாங்க வேண்டியதாகிறது.அப்படி கூடுதலாக செலவு செய்து டாலர் வாங்கி ,அதில் பெட்ரோல் வாங்கி, பழைய விலையில் விற்றால் நட்டம் என சொல்லித்தான் பெட்ரோல் விலையை ஏற்றுகிறது அரசு. அரசும் கையை சுட்டுக்க விரும்பாது தானே.பெட்ரோல் விலையில் பாதி அரசின் வரி என முன்னரே ஒரு பதிவில் பார்த்துள்ளோம், வரியை குறைத்தாலே போதும் ஆனால் செய்ய மாட்டார்கள், ஒரு வியாபாரிப்போல ஏற்றியதைக்குறைக்காமல் மீண்டும் ஏற்றவே பார்ப்பார்கள்.

இங்கே இன்னோன்றையும் கவனிக்க வேண்டும், டாலர் மதிப்பு உயர்கிறது என்றால் அது உலக அளவிலும் உயர்ந்து தானே இருக்கும், எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும், இதனால் முன்னர் ஒரு பேரல் 100 டாலர் எனில் ,மதிப்பு உயர்வுக்கு ஏற்ப குறைந்து விடும் அதாவது ஒரு பேரல் 90 டாலருக்கே கிடைக்கும்,கிடைக்க வேண்டும், எனவே சரிந்த ரூபாயால் ஏற்பட்ட இழப்பு ஒரு அளவுக்கு சமன் ஆகி நாம் கொடுக்க வேண்டிய டாலர் அளவு குறைந்துவிடும், எனவே அரசுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் பெருமளவு நட்டம் வர வழியில்லை, ஆனால் அரசோ தட்டையாக டாலர் விலை ஏறிவிட்டது எனவே பெட்ரோல் விலை ஏற்றப்போகிறோம் என சொல்லி மக்கள் தலையில் விலையை கட்டிவிடும் :-((

ரூபாய் சரிந்தால் ஏற்றுமதியாளருக்கு கொண்டாட்டம், அரசும் நட்டம் எனப்புலம்பினாலும் உண்மையில் பெரிய நட்டம் இருக்காது ஆனால் அஷ்டகோணாலாக முகத்தினை வைத்துக்கொண்டு நிதியமைச்சர் என்னமோ வேண்டா வெறுப்பாக செய்வது போல பெட்ரோல் விலையை ஏற்றிவிடுவார், உண்மையில் இதில் உதைவாங்குவது பொது ஜனமாகிய நாம் தான் :-))

# ரூபாய் மதிப்பு சரிவை சரிக்கட்ட அரசு என்ன செய்யும் எனில்,

1)ரிசர்வ் வங்கியில் உள்ல கையிருப்பு டாலர்களை பயன்படுத்தும்,நீண்ட நாட்கள் சரிவு நீடித்தால் கஷ்டம் தான்

2)தங்கம் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும்,அல்லது வரி உயர்த்தி இறக்குமதியாளர்களை விரட்டும்.

3)வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,இந்திய வங்கியில் வைப்பு நிதியாக வைத்தால் அதிக வட்டி தரும் என அறிவிக்கும். இதனால் டாலர் வரத்து அதிகரிக்கும்.

4)இந்தியாவில் உள்ளப்பெரிய ஏற்றுமதியாளர்கள் கைவசம் எப்போதும் பெரிய அளவில் டாலர்கள் இருக்கும்,அதில் 50% கண்டிப்பாக வைப்பு நிதியாக வைக்க சொல்லும் மேலும் கூடுதல் வட்டியும் தருவதாக சொல்லும்.

5)கடன் பத்திரங்கள், வெளிநாட்டு வங்கிகள், நாடுகளிடம் கடன் வாங்கும், சில நாடுகளுடன் அன்னிய செலவாணி ஒப்பந்தங்கள் உள்ளது அதன் மூலம் சமாளிக்கும்.

உ.ம்: ஜப்பானுடன் ஒரு அன்னிய செலவாணி உதவி ஒப்பந்தம் இருக்கிறது, இது போல சரிவு வரும் போது ஜப்பான் 15 பில்லியன் அமெரிக்க டாலர் க்டன் கொடுத்து உதவ வேண்டும், அதே போல இந்தியாவும் கொடுத்து உதவ வேண்டும்.

இன்னும் பல நடவடிக்கைகள் இருக்கு. முடிந்தவரைக்குறிப்பிட்டுள்ளேன்.

பின் குறிப்பு:

#ரூபாய் சரிவால் இன்னும் பல விளைவுகள் இருக்கு, முக்கியமாக பங்கு சந்தை தள்ளாடும், வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க முன்வருபவர்கள் குறைவார்கள், உற்பத்தி பாதிக்கும் எனலாம் பிரச்சினை இருக்கு,இங்கு ஒரு சில பிரச்சினைகளை மட்டும் அலசி இருக்கேன், மற்றவற்றை நேரம் இருப்பின் தொடர்கிறேன்.

பொருளாதார விளைவுகளை முழுமையாக ஒரே பதிவில் பேசிவிட முடியாது ,இது ஒரு எளிய முயற்சியே. மேலும் பல விவரங்களை எளிமையாக சொல்ல வேண்டும் என லேசாக சொல்லி இருக்கேன், முழுமையாக சொல்லவில்லை என மேதைகள் மல்லுக்கட்டக்கூடும் என்பதால் இந்த முன் ஜாமின் :-))

# தகவல்,படங்கள், கூகிள், ரெடிப், எகனாமிக் டைம்ஸ் இணைய தளங்கள்,நன்றி!

*****

Tuesday, May 01, 2012

may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு?




என்னமோ பெருசா சொல்லப்போரேன்னு யாராவது ஓடி வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல, என்ன இணைப்பு என்று அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என யாருக்காவது மனசுல அரிச்சா பின்னூட்டத்தில கேளுங்க பதிலா சொல்கிறேன், ஹி..ஹி... பதிவு போட்டுவிட்டு பின்னூட்டம் வருமா என எல்லாம் காத்திருப்பாங்க எத்தனை நாளுக்கு தான் அதே பாணில பதிவு போடுறது ,எனவே பின்னூட்டம் வந்தா பதிவு வரும் அதாவது பதிவுக்கு பின்னூட்டம் இல்லை இங்கே பின்னூட்டத்திற்கு பதிவு போடப்படும் :-))

யாருக்காவது கோவம் பொத்துக்கிட்டு வந்தா மேல போட்டு இருக்க படத்த ஒரு 5 நிமிடம் உத்து பாருங்க கூலாகிடுவிங்க :-))

Tuesday, April 03, 2012

INDIA INC.,





இந்திய பொருளாதாரத்தை பற்றி சொல்லும் போது ரொம்ப உயர்வாக,  யானை ,தூங்கும் புலி என டெர்ராக சொல்வார்கள் பொருளாதார வல்லுனர்கள் ,அதை கேட்கும் போதெல்லாம் மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும் ,நாம ஏழை நாடு இல்லை ஏழையாக்கப்பட்ட நாடு, எதிர்காலத்துல இந்தியா சும்மா தக தகன்னு ஒளிரும், யானை போல பிளிரும் என்றெல்லாம் 70  எம்.எம் இல் 7.1 டால்பி சர்ரவுண்டு சவுண்டில் கலர் கலராக கனவு வரும் , வயலுக்கு அறுவடை செய்ய ஆடிக்காரில் போகும் காலம் வெகு தூரமில்லை , கவலைப்படாதடா கைப்புள்ள, நீ தூங்குனு இழுத்துப்போர்த்திக்கிட்டு கனவுக்கண்டுக்கொண்டிருந்தேன்.

கனவு மெய்ப்பட காலம் இன்னும் வரவில்லையோ இல்லை என்னைப்போல கனவு நம்ம ஆட்சியாளர்களுக்கு வரவில்லையோ தெரியவில்லை, அவங்க போடுற திட்டமெல்லாம் பார்க்க பிரமாண்டமாகவும் கேட்க பிரமிப்பாகவும் இருக்கு, ஆனால் அதன் பலன் மட்டும் நம்ம வீட்டுக்கு வராம அம்பானி , ஆதித்ய பிர்லானு விலாசம் மாறிப்போயிடுது. அடுத்த தடவை நமக்கும் யோகம் வரும் அப்போ  ராச லட்சுமி வாசக்கதவ  தட்டுவான்னு காத்திருந்தால் ,தபால்காரார் கபால்னு ஒரு காகிதத்த வீசிட்டுப்போறார் , வீட்டக்காலி செய் , 8 வழி விரைவு சாலை வரப்போகுதுனு சொல்லுது சர்க்கார் காகிதம்.

வயக்காடு இங்கே கிடக்க வீட்டை கொடுத்துட்டு எங்கே போக என கவலை கருவண்டா மனசைக்குடைய , ராசா அப்படிலாம் உன்னை கஷ்டப்பட விட மாட்டோம்   , உன் வயலையும் கொடு அங்கே சிறப்பு பொருளாதார மண்டலம் வருது , ஊரைக்காலி செய்துட்டு நிம்மதியா பஞ்சம் பொழைக்க எங்கே வேண்டுமானாலும் போய்க்கோனு அடுத்த நாளே இன்னொரு ஓலை வருது.அதைப்பார்த்ததும் என் ஆடிக்கார் கனவு ஆடிக்காத்துல பறந்த கூளமா பறந்துப்போச்சு!

என்ன தான் நடக்குது நாட்டுல?  யார் , ஏன் இப்படி என்னை ஆடிக்கார் வாங்க விடாம தடுக்கிறாங்க ?எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமினு சர்க்கார் ஆபிசுக்கு போனா , நாட்டோட வளர்ச்சிக்கு தான்  தம்பி எல்லாம், இதெல்லாம் செஞ்சா தான் நாடு நல்லா இருக்கும், நாலு பேர் நல்லா இருக்கணும்னா இதெல்லாம் செய்யணும் , இதை விட பெருசு பெருசா திட்டமெல்லாம் நாடு முழுக்க வரப்போகுது தம்பிப் போப்பா போ ...போனு பத்தி விடுறாங்க! அப்போ அந்த நாலு பேருல நானும் ஒருத்தன் இல்லையா ? நான் நல்லா இருக்க வேண்டாமா? நானும் இந்த நாட்டுக்குடிமன் தானே , என்னைய விட்டுப்புட்டு யாரோ நாலு பேரு நல்லாருக்கணும்னு சொல்லுறாகளே ,சரி அந்த நாலு பேரு யார் ,என்ன தான் திட்டம் போடுறாங்கனு தெரிஞ்சுக்காம விடக்கூடாதுனு நம்ம குல தெய்வம் கூகிளாண்டவரை  வழக்கம் போல உதவிக்கு கூப்பிட்டேன் ,அவரும் நம்பினார் கெடுவதில்லைனு அருள்பாலித்தார்.நான் கண்ட பாரத பொருளாதார பெருவளர்ச்சி திட்டங்களில் ஒன்று தான் "டெல்லி மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார்" இங்கு அழுத்தி முழு விவரம் காண்கவும்.
DMIC



டெல்லி மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார்:

டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே டெல்லி,யு.பி,ஹரியானா, இராஜஸ்தான்,குஜராத், மஹாராஷ்ட்ரா என ஆறு மாநிலங்கள் வழியாக சுமார் 1500 கி.மீ நீளத்திற்கு 10 வழி விரைவு சாலை மற்றும் இணையாக சரக்கு ரயில் இருப்பு பாதை போட்டு ஒரு மஹா பொருளாதார சிறப்பு மண்டலம் உருவாக்க இருக்கிறார்கள்.

அதன் சிறப்பு அம்சங்கள்:

#1500 கி.மீ 10 வழி சாலை மற்றும் இருப்பு பாதை.

#சாலை மட்டும் அல்ல சாலைக்கு இரு புறமும் தலா 150 கி.மி அகலத்திற்கு இடம் கையகப்படுத்தப்படும். அங்கு 6 மண்டலங்களாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்ப்படும்.

#மொத்த நிலப்பரப்பு 1500*300=450000 ச.கி.மீ.

# வெளியேற்றப்படும் மக்கள் எண்ணிக்கை 180 மில்லியன் அதாவது 18 கோடி. தமிழ் நாட்டின் மக்கள் தொகையைப்போல இரண்டரை மடங்கு. இந்தியாவில் மிக பெரிய அளவில் மக்களை புலம்பெயர வைக்கும் திட்டம் இது ஒன்று தான் என நினைக்கிறேன்.


#திட்ட மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 450000 கோடி ரூபாய்.
இது ஒரு அரசு, தனியார் கூட்டு நிறுவனம் , அரசுக்கு 49% பங்கு, தனியாருக்கு 51%

# திட்டத்தின்  தலைவர் மத்திய நிதியமைச்சர், இயக்குநர்கள் 6 மாநில முதல்வர்கள்,மற்றும் தனியார் நிறுவங்களை சேர்ந்தவர்கள்.

கேட்க நல்லாத்தானே இருக்கு ,நாடு வளர இதெல்லாம் செய்ய வேண்டாமா என்று பொதுவாக நினைக்க தோன்றும், கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் விளைவுகளின் தாக்கம் தெரியும்.

18 கோடி மக்களை வெளியேற்றி கொண்டு வரும் திட்டத்தால் பலன் அடைய போவது யார்? இப்படி  ஒரு திட்டம் அவசியம் தேவையா? கேட்டால் கிடைக்குமா பதில்!

18 கோடி மக்கள் எங்கு குடியேற்றம் செய்யப்படுவார்கள், அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும்.அவர்களுக்கு அங்கு கண்டிப்பாக வேலைக்கொடுக்க போவதில்லை.

#18 கோடி  மக்களை இடம் பெயர செய்து விட்டு எத்தனைப்பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் ? எதுவும் விவரம் சொல்லப்படவில்லை.

#வனங்கள்,இயற்கை சூழல் பாதிப்பு பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள், அதுவும் விவரம் இல்லை.

# பொருளாதார ரீதியாக இதன் பலன் நாட்டுக்கு கிடைக்குமா? கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 100 சதவீத வரி சலுகை , இன்ன பிற சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் திட்டத்துக்கு நிதி  திரட்டுவதிலேயே ஒரு டகால்டி செய்கிறார்கள்.

அதாவது 51% நிதி கொடுக்கும் தனியார்கள் அதனை கடன் மூலம் திரட்டுவார்கள் ,ஜப்பானிய வங்கி கொடுக்கிறது, அதே சமயம்  அவர்களும் பங்கு தாரர்கள்.

இது எப்படி எனில் கிடைக்கும் வருவாயில் கடன் தவணையை கட்டி அடைக்க வேண்டும் பின்னர் எஞ்சியதை 49:51 என பங்கு தாரர்கள் பிரித்துக்கொள்வார்கள்.கொடுத்த கடனையும் வட்டியோட வசூலித்துக்கொண்டு லாபத்திலும் பங்கு(அப்படித்தான் அவர்கள் தளத்தில் இருக்கு, சுட்டியில் சரிப்பார்த்துக்கொள்ளவும், எனக்கு இந்தளவு தான் புரிந்தது.)

# பொருளாதாரம், மற்றும் தொழில் வளர்ச்சி பெருக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது சரியே.

ஜி.எஸ்.டி சாலை 4 வழியாக போட்டார்கள் , தங்க நாற்கர சாலை எல்லாம் வந்தது, ஆனால்  சாலையின் இரு புறமும் இருந்த இடத்தின் மதிப்பும் உயர்ந்தது. அது நிலத்தின் உரிமையாளருக்கு தானே பலன் அளித்தது. தொழிற்சாலையோ ,வீட்டு மனையோ எதுவாகினும் நில உரிமையாளரை சென்றடையும்.

ஆனால் டெல்லி மும்பை திட்டத்தில் மட்டும் , சாலையை நாங்கள் போடுகிறோம் எனவே அதன் பயனும் எங்களுக்கு தான் என 300 கி.மி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்துகிறார்கள்.

மக்கள் நல அரசு எனில் உட்கட்டமைப்பு வசதியை செய்துக்கொடுத்து பலனை மக்களை அனுபவிக்க விட வேண்டும் ஆனால் இப்போதைய அரசு ஏதோ தனியார் முதலாளியைப்போல போட்டக்காசுக்கு பலன் எனக்கு தான் என செயல்படுகிறது .
உண்மையில் இது மக்களால் ,மக்களுக்காக,மக்களாலாயே உருவான மக்களாட்சியா அல்லது இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்ற கம்பெனிக்கு ஆட்சியை குத்தகைக்கு விட்டிருக்கிறோமா? என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் 4.5 லட்சம் கோடியையும் ஒரே ஆண்டில் முதலீடு செய்யப்போவதில்லை அப்படி இருக்க ஏன் கடன் , மற்றும் கடன் கொடுத்தவரும் பார்ட்னர் என லாபத்திலும் பங்கு என இரண்டு முறை பணம் கொடுக்க வேண்டும். பேசாமல் அரசே  ஆண்டுக்கு 1 லட்சம் கோடி என ஒதுக்கி திட்டத்தை முடிக்கலாம். முழுப்பயனும் அரசுக்கும் , மக்களுக்கும் என ஒரு திருப்தியாவது இருக்கும்

18 கோடி மக்களிடம் இருந்து நிலத்தை அடி மாட்டு விலைக்கு பறித்து ஒரு சில தொழிலதிபர்கள் பயன் பெற அரசே முன்னின்று தரகு வேலைப்பார்ப்பது மக்களாட்சியை மகா கேவலப்படுத்துவதாக உள்ளது.அக்காலத்தில் மேலை நாடுகள் தங்களது தொழில்,வியாபாரத்தை பெருக்க நாடுப்பிடித்து காலனி அமைக்க கப்பலில் ஆயுதங்களுடன் வந்தார்கள் ,இப்போது அவர்களது ஏஜண்ட்களையே அந்நாட்டின்  முக்கியமான பொறுப்பில் அமர வைத்து அதே காலனியாதிக்கத்தை தொடர்கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல.

விடுகதை நேரம்:

இப்போது ஒரு புதிர், இதற்கு விடை தெரிந்தும் கூறாவிட்டால் அவர்களது வலைப்பதிவு எந்த திரட்டியிலும் இணையாது , பின்னூட்டங்களும் வராது, ஹிட்ஸ் கிடைக்காது, எதிர் மறை ஓட்டுக்கள் கிடைக்கும்.! உஷார்!


"The United Nations Conference on Trade and Development" என்பது WTO,IMF,WORLD BANK  போன்ற சர்வதேச நிதியமைப்புகளுக்கு கொள்கை வகுத்து ஒருங்கிணைத்து செயல்பட வைக்கும் ஒரு அமைப்பு ஆகும் , அதில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் போன்ற புகழ்மிகு பல்கலைகளில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு இந்திய மேதைக்கு  வேலைக்கிடைத்தது. பின்னாளில் அவர் இந்தியாவுக்கு வந்து வேறு ஒரு நல்லப்பணியில் அமர்ந்தாலும்  அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு இன்னமும் பழைய பாசம் போகவில்லையோ என நினைக்க வைக்கிறார்.அவர் யார்?
---------------------------

பின்குறிப்பு:

தகல் மற்றும் படங்கள் உதவி dmic,rediff இணைய தளங்கள் ,நன்றி!

Thursday, December 08, 2011

பெட்ரோல் விலை ரகசியம்!



பெட்ரோல் விலை ரகசியம்!


நண்பர் சூர்யஜீவா தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது.

உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூரில் இருந்து இறக்குமதி ஆகிறதா இல்லையா என தெளிவாக இன்னும் தெரியவில்லை) என அக்கட்டுரையில் கேட்கப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கான தங்கத்தின் விலை நிர்ணயம் துபாய் கம்மோடிடி சந்தையின் அடிப்படையிலேயே தீர்மானீக்கப்படுகிறது.MCX india துபாய் தலைமையகமாக கொண்டு தான் செயல்படுகிறது.

துபாயில் தங்க சுரங்கம் இல்லை, நாமும் அங்கிருந்து இறக்குமதி செய்யவில்லை, பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தான் பின் ஏன் துபாய் கம்மோடிடி பார்க்க வேண்டும்.காரணம் நியுட்ரலாக இருக்கும் துபாய் தங்க மார்க்கெட்.

மேலும் துபாய் கோல்ட் கம்மோடிடி பெரிய ஒன்று, , உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது, ஆசியாவில், இந்தியாவிற்கு அருகில் இருக்கு. அமெரிக்க கோல்ட் கம்மோடிட்டி என்பது ஆசிய நிலவரத்தை சரியாக காட்டாது, மேலும் இரண்டுக்கும் கொஞ்சம் விலையில் வித்தியாசம் இருக்கும்.

துபாய்ல தங்க உற்பத்தி இல்லை ஆனால் பெரிய தங்க வியாபார மையம், எனவே நமக்கு துபாய் கோல்ட் கம்மோடிடி மார்க்கெட் சரியாக பொருந்தும்.

அதே போல தான் பெட்ரோல் விலைக்கு சிங்கப்பூரை வைத்துக்கொண்டுள்ளோம். மேலும் உலக அளவில் சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் நல்லப்பெயர் கொண்டது..கச்சா உற்பத்தி இல்லை ஆனால் சுத்திக்கரிப்பு இருக்கு, ஆசியாவிலேயே பெரிய எண்ணை சுத்திகரிப்பு நாடு சிங்கப்பூர்(இது ஒப்பீட்டளவு என நினைக்கிறேன்), எனவே நியுட்ரல் ஆனது.

உ.ம் துபாயில் குருட் விலை சர்வதேச அளவுக்கு ஒரே போல இருக்காது, காரணம் துபாய் பெட்ரோலிய நாடுகளிடையே இருக்கு. அங்கு விலை எப்போதும் மற்ற நாடுகளை விட கம்மியாகவே டிரேட் ஆகும் , இந்த வித்தியாசம் கணக்கிட்டால் பைசா கணக்கில் வாரும் என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் பல மில்லியன் பேரல்கள் என வர்த்தகம் செய்யும் போது பெரிய தொகை ஆகிவிடும்.

நமக்கு விற்பவனும், வாங்கும் நாமும் நம்பி ஒத்துக்கொள்ளும் ஒரு சந்தையை வைத்தே விலைப்பேசி முன் ஒப்பந்தம் போட முடியும். நாளைக்கே ஒரு பெரிய எண்ணை நிறுவனம் வேறு ஒரு மார்க்கெட் விலை வைத்து ஒப்பந்தம் போட வேண்டும் என சொன்னால் அதற்கும் தயாராகவே இருப்போம்.

சந்தையில் பேசும் விலைக்கு குருட்/பெட்ரோல் ஐ ஒரு நிறுவனம் வாங்க முடியாது, காரணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலைக்கும் ஏற்றுமதி செய்யும் இடத்துக்கும் இடையே இருக்கும் தூரம் , மற்றும் ஆகும் போக்குவரத்து செலவு என்று ஒன்று இருக்கு. எனவே ஏதோ ஒரு இடத்தினைக்குறிப்பிட்டு இங்கு வைத்து எனக்கு என்ன விலைக்கு விற்பீர்கள் என பேச வேன்டும்.

இதனை டெர்மினல் கேட் பிரைஸ் என்பார்கள் அதாவது இந்த துறைமுகத்தில் வைத்து எனக்கு குருட் கைமாற்றி விட வேண்டும் அப்போது என்ன விலைக்கு தருவீங்க என்று விலை பேசணும்.

உ.ம் சிங்கப்பூர் கம்மோடிட்டியில் ஒரு பேரல் 100 சிங்கை டாலர் என வியாபாரம் படிகிறது என்றால் , சிங்கப்பூர் துறைமுகத்தில் டெலிவரி எடுக்கவேண்டும் நாம், அப்போது துறைமுகத்துக்கு கொண்டு வர ஆகும் போக்கு வரத்து செலவு அதில் அடங்காது , போக்குவரத்து செலவு +வரி எல்லாம் சேர்த்து துறைமுகத்தில் நமக்கு கொடுக்கும் விலையே டெர்மினல் கேட் பிரைஸ்.

வரி விஷயத்தில் சிங்கப்பூரில் இன்னொரு அனுகூலம் இருக்கு,அங்கே துறைமுக வரி கிடையாது, அது ஒரு ஃபிரி டிரேட் துறைமுகம்.எனவே தான் சிங்கப்பூர் துறைமுகம் உலக அளவில் பெரிய டிரான்சிட் துறைமுகமாக இருக்கு.(முதல் இடம் ரோட்டர் டேம் ஹாலண்ட் என நினைக்கிறேன்).

இந்தியாவுக்கு வரும் சரக்குகள் பெரும்பாலும் சிங்கை துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டு விடும், பின்னர் வேறு ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு வரும். இன்னொரு டிராண்சிட் துறைமுகம் இலங்கையின் கொழும்பு துறைமுகம்.

ஏன் இப்படி இறக்கி, பின் ஏற்றி என அலைச்சல் என்றால் அதன் பின்னால் நம்ம துறைமுகங்களின் செயல்படா தன்மை இருக்கு, அதை சொல்ல தனிப்பதிவே தேவைப்படும்.


துறைமுகத்துக்கும், கம்மோடிடி மார்க்கெட்டுக்கும், தூரம் அதிகம் இருந்தால் டெர்மினல் கேட் பிரைஸ் அதிகம் ஆகும்.நேரடியாக எண்ணை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் போதும் இப்படி டெர்மினல் கேட் பிரைஸ் பார்ப்பார்கள்.அதிலும் டெலிவரி என்று கொடுக்கிறார்களோ அன்று என்ன விலை என தீர்மானிப்பார்கள், முன்பு பேசிய தொகை ஒரு ஒப்பந்ததிற்காக மட்டுமே, துறைமுகத்தில் கப்பலில் ஏற்றும் அன்று தான் இறுதி விலை நிச்சயம் ஆகும்.இதனை ஸ்பாட் பிரைசிங் என்பார்கள்.

எனவே சர்வேதேச சந்தையில் டெர்மினல் கேட் பிரைசில், ஸ்பாட் பிரைசிங்கில் தான் கச்சா விற்பனை ஆகும். சிங்கப்பூர் நமக்கு மிக அண்மையில் உள்ளது சிறிய நாடு என்பதால் டெர்மினல் பிரைஸ், கம்மோட்டி விலை என பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே நமக்கு ஏற்ற கம்மோடிட்டி மார்க்கெட் சிங்கப்பூர் ஆகும்.எனவே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட சிங்கப்பூர் கச்சா/ பெட்ரோல் விலையை பென்ச் மார்க் விலையாக எடுத்துக்கொள்கின்றன.

மேலும் சிங்கப்பூர் ஆசியாவிலேயெ பெரிய கச்சா சுத்திகரிப்பு நாடு, ஆஸ்திரேலியாவின் எண்ணை தேவையில் 30 சத வீதம் சிங்கப்பூர் மூலம் தான் பூர்த்தி ஆகிறது.
இபோது ஏன் சிங்கப்பூர் பெட்ரோல் விலைக்கு பெஞ்ச் மார்க் ஆக இருக்கு என்பது புரிந்திருக்கும்.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு துறைமுகத்துக்கு என ஒரு டெர்மினல் கேட் பிரைஸ் வைத்திருப்பார்கள்.

அந்த கட்டுரை ஏன் சரியானதாக இருக்கவில்லை என நினைத்தேன் என்றால் டிசம்பர் 2 இல் ஒரு பேரல் 112 டாலர் என்பதாக சார்ட் போட்டிருந்தார்கள், சிங்கை டாலர் எனில் SGD போட்டு டாலர் குறியிடு வரும்.ஆனால் அதில் அமெரிக்க டாலர் குறியீடே இருந்தது.சிங்கப்பூர் கம்மோட்டிடி மார்க்கெட்டில் சிங்கபூர் டாலரிலே வர்த்தகம் நடை பெரும்.

one SGD =0.77 USD, அப்படி எனில் அதில் போட்டிருந்ததை வைத்து 112 சிங்கை டாலருக்கு ஒரு பேரல் பெட்ரோல் என்றால் ரொம்ப மலிவாக விலை வருமே. ஒரு பேரலில் 42 கேலன் அதாவது சுமார் 159 லிட்டர் எண்ணை இருக்கும். இல்லை அது அமெரிக்க டாலர் என்றால் அப்போதும் மலிவான விலை ஆகவே வரும்.

சிங்கபூரில் டிசம்பர் 4 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 1.4 சிங்கை டாலர் என போட்டு இருக்கான்,வரி இல்லாத விலை 1 டாலர் வருது,(வரி 0.41 சிங்கைடாலர்) அப்படி ஆனால் 159 லிட்டர் பெட்ரோல் ஐ 112 டாலருக்கு விற்பாங்களா? எனவே தான் அது கச்சா எண்ணையாக இருக்க வேண்டும் என சொல்லி இருந்தேன்.

அந்த அளவுக்கு மலிவா பெட்ரோல் விற்பனை ஆகி இருந்தால் இந்தியாவில் வரிகளுடன் சேர்த்து பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய் தாண்டாது.

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்க உண்மைக்காரணம் என்ன எனப்பார்ப்போம்.

ஒரு லிட்டர் கச்சா எண்ணை சுத்திகரித்தால் என்ன கிடைக்கும் எனப்பார்ப்போம்.

What Does One Barrel Of Crude Oil Make?

One barrel of crude oil contains 42 gallons
About 46% of each barrel of crude oil is refined into automobile gasoline
In the US and Canada an average of 3 gallons of crude oil are consumed per person each day
The US imports about 50% of its required crude oil and about 50% of that amount comes from OPEC countriesProduct Refined Gallons/Barrel


Gasoline 19.3

Distillate Fuel Oil (Inc. Home Heating and Diesel Fuel) 9.83
Kerosene Type Jet Fuel 4.24

Residual Fuel Oil 2.10
Petroleum Coke 2.10
Liquified Refinery Gases 1.89
Still Gas 1.81
Asphalt and Road Oil 1.13
Petrochemical Feed Supplies 0.97
Lubricants 0.46
Kerosene 0.21
Waxes 0.04
Aviation Fuel 0.04
Other Products 0.34

Processing Gain 2.47


42 கேலன் கச்சா சுத்திகரித்தால் 44.47 கேலன் உற்பத்தி பொருள் கிடைக்கும் கூடுதலாக 2.47 கேலன் கிடைக்கும்.





Source: EIA March 2004 Data

ஒரு அமெரிக்க கேலன் =3.79 லிட்டர், அப்படி எனில் 19.3 கேலன் என்பது ,

19.3*3.79=73.47 லிட்டர்,

159 லிட்டர் கச்சா எண்ணை சுத்திகரித்தால் 73.47 லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது.இது கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும்.

இப்போ 100 டாலர் விலையில் இருக்கும் கச்சாவில் இருந்து 50 சதவீதம் பெட்ரொல் எடுத்தால் விலையை சராசரியாக 2 டாலர் என வைக்க வேண்டி இருக்கும், ஆனால் அப்படி இல்லையே ஏன்? காரணம் கச்சா சுத்திகரிப்பில் கிடைப்பவை அனைத்துமே விலை போக கூடிய பொருட்கள், டீசல் , மண்ணெணை, பாரபின் மெழுகு, மேலும் கடைசிப்பொருளான அஸ்பால்ட்(தார்) என எல்லாமே காசு தான். எனவே மொத்த வருவாய், செலவு எல்லாம் கணக்கிட்டே விலை நிர்ணயம் செய்வார்கள்.

மேலும் 42 கேலன் சுத்திகரிச்சா 44.47 கேலன் பொருட்கள் கிடைக்கும் கச்சாவில , கூடுதலாக 2.47 கேலன் உப பொருள் கிடைக்கும். அப்படி கிடைப்பதை சுத்திகரிப்பு லாபம் என்பார்கள்.

ஒரு பேரால், 42 கேலன் கச்சா வாங்க ஆகிய செலவு, சுத்திகரிப்பு செலவு எல்லாம் கணக்கிட்டு , சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் மற்ற பொருட்களின் மதிப்புடன் ஒப்பிட்டு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு இவ்வளவுனு தீர்மானிப்பார்கள்.

இப்படி கணக்கிடப்படும்  பெட்ரோல் விலை சுத்திகரிப்பு விலை பெட்ரோல் விலை( refinary price)என்பார்கள்,

//Petrol price in Delhi today costs Rs 66.42 per litre as against Rs 44.88 a litre price in the US, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh told Rajya Sabha in a written reply to a question.//

மேல போட்டு இருப்பது சமீபத்தில பார்லிமெண்ட்ல பெட்ரோலிய இணை  அமைச்சர் சொன்ன விவரம், இதன் அடிப்படையில் விலை உயர்வுக்கு காரணம் பார்ப்போம்.

அமெரிக்காவில் ஒரு கேலன் ,3.7 லிட்டர் விலை 3.2 அமெரிக்க டாலர், அங்கு பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி தேசிய சராசரி 16% , அங்கே அலாஸ்காவில் மிக குறைவாகவும் மற்ற மாகாணங்களில் வேறு வேறு விகித வரி உள்ளது.

அமெரிக்க மாகாணங்களில் வரி விகிதம் ஒரு கேலனுக்கு செண்ட் கணக்கில் ,
(100 செண்ட் =1 டாலர்)






இப்போ அமெரிக்காவில் ஒரு லிட்டர் 44.88 ரூ என்றால் அதில் 16% வரி ,

44.88x16/100=7.18 ரூ, இது தான் அங்கே விதிக்கப்படும் வரி.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்திய பெட்ரோலிய விற்பனையில் சதவிகித அடிப்படையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் செலவு,வரி, லாபம் ஆகியவற்றின் பட்டியல்,

Branded

Nov 28 $0.29 $2.73 $0.06 $0.02 $0.08 $0.36 $0.18 $3.72 (இறுதி விலை ஒரு கேலனுக்கு)

Unbranded $0.40 $2.73 -$0.06 $0.02 $0.08 $0.36 $0.18 $3.72 (ஒரு காலனுக்கு)

முழுப்பட்டியல் இங்கே,

http://energyalmanac.ca.gov/gasoline/margins/index.php

இந்த வரியை கழித்து விட்டால் எண்ணை நிறுவனம் பெட்ரோல் பம்ப்க்கு விற்கும் விலை வரும்.இந்த விலையில் பெட்ரொல் பம்ப் நடத்துபவரின் லாபம் அடக்கம்.

44.88-7.18=37.7 ரூபாய். இது தான் பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை. சுத்திக்கரிப்பு ஆலையில் ரிபைனிங் விலை என்று சொல்வது இதை விட குறைவாக இருக்கும்.

சுத்திகரிப்பு ஆலை விலை= கச்சா விலை +சுத்திகரிப்பு செலவு + ஆலை லாபம் + மூல தன முதலீட்டு லாபம் ஆகியவை அடங்கி இருக்கும்.

கனடாவில் சுத்திகரிப்பு செலவு பெட்ரோல் விலை காட்டும் பட்டியல்:




இந்தியாவிலும் என்ணை நிறுவனம் இதே போல பெட்ரோல் பங்குக்கு 37.7 ரூ அளவிற்கு தானே அளித்து இருக்கும், ஆனால் எப்படி 67 ரூபாய் ஆகிறது நாம் வாங்கும் போது?

காரணம் நம் மத்திய,மாநில அரசுகள் விதிக்கும் வரி, இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக 45% ஆகும்.அதாவது சுமார் 30 ருபாய் அரசுக்கு வரி வருவாயாக போகிறது.உலகிலே அதிக வரி விதிக்கும் நாடு யுனைட்டெட் கிங்க்டம், நாமும் அவங்க பக்கத்தில போக முயற்சிக்கிறோம்.

உலக அளவில் சில நாடுகளின் வரி விகிதம் , பெட்ரோல் விலை காட்டும் ஒரு பட்டியல்:







சில மாநிலங்களில் இருக்கும் வாட் வரி விகிதங்கள்,

ஆந்திரா =33%(இந்தியாவிலேயே மிக அதிக வாட்)

மேற்கு வங்கம்= 27

பஞ்சாப் =32.96%

கர்நாடகா =31.25%

உத்தரப்பிரதேஷ்=26.6%

ஒரிசா =19%

புதுவை =15%(இந்தியாவிலேயெ குறைவான வாட்)

தமிழ்நாடு =27%

மத்திய அரசு விதிக்கும் வரிகள் 20-25% வருகிறது. இப்படி தோராயமாக மொத்தமாக 45% பெட்ரோல் மீது வரி சுமை இருக்கு.

தமிழ் நாடு அரசுக்கு பெட்ரோலிய வரி வருவாய்,

//Tamil Nadu, for instance, charges a rather high 27% value added tax (VAT) on fuel.

The Tamil Nadu government has earned 15% more by way of taxes on fuel this year compared to last year, even though it lowered VAT to 27% from 30% after the decontrol of petroleum prices . Tamil Nadu's income on each litre of petrol sold is about 15.40 at current prices. With an average monthly petrol sales of 17 crore litres, the state earns close to 264 crore a month. That would amount to over 3,000 crore annually. Last year, TN earned about 13.40 per litre (at 30% VAT), when pump prices were 68 a litre.//

http://timesofindia.indiatimes.com/city/chennai/States-add-to-price-of-petrol-with-taxes/articleshow/10749952.cms

தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் 15.40 ரூபாய் வருமானம் போகிறது. மீதி 14.60 ரூபாய் மத்திய அரசுக்கு போகிறது.

ஒரு மாதத்திற்கு சுமார் 264 கோடி, என ஆண்டுக்கு சுமார் 3000 கோடி பெட்ரோல் விற்பனையில் மட்டும் தமிழக அரசுக்கு வரி வருவாயாக செல்கிறது.அப்புறம் டீசல் வேற இருக்கு.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு எங்கோ நடக்கிற கம்மோடிடி டிரேட் அல்லது கச்சா எண்ணை விலை காரணம் இல்லை, நம்ம மத்திய மாநில அரசுகள் தான் முக்கிய காரணம்.

உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஒப்பீடு,

Petrol Prices across the World Country $ per Gal. 2008 `/ ltr $ per Gal. 2009 `/ ltr $ per Gal. 2010 `/ ltr $ per Gal. 2011 `/ ltr % Deviation from India, 2011
Doha, Qatar -- -- -- -- -- -- 0.83 8.25 -87%
Saudi Arabia 0.61 5.71 -- -- -- -- 0.85 8.53 -86%
Kuwait -- -- -- -- -- -- 0.92 9.45 -85%
Kabul, Afghanistan -- -- -- -- -- -- 1.19 12.37 -80%
Nigeria -- -- -- -- -- -- 1.60 16.63 -74%
UAE 1.70 15.95 1.81 18.61 -- -- 1.82 18.14 -71%
Malaysia 2.31 25.49 -- -- 2.04 20.99 2.42 24.11 -62%
Iran -- -- -- -- 2.48 25.49 2.58 25.53 -59%
Hongkong -- -- -- -- -- -- 3.00 29.86 -53%
Dhaka, Bangladesh -- -- -- -- -- -- 3.35 36.12 -43%
Pakistan 3.23 30.54 -- -- 3.03 31.43 3.73 38.78 -38%
China -- -- -- -- -- -- 3.77 37.31 -41%
Vietnam -- -- -- -- 3.14 31.89 3.90 38.42 -39%
USA 1.69 17.57 2.40 25.59 2.55 26.25 3.99 39.64 -37%
SriLanka 5.73 54.12 -- -- 4.00 40.60 4.35 44.51 -29%
Nairobi, Kenya -- -- -- -- -- -- 4.54 45.55 -28%
Canada 2.62 26.59 -- -- 3.69 35.99 5.20 56.07 -11%
South Korea 3.69 39.25 -- -- -- -- 5.49 54.35 -14%
South Africa 4.58 44.08 5.00 52.58 -- -- 5.68 55.24 -12%
Bulgaria -- -- 5.34 54.79 -- -- 5.71 57.29 -9%
India 4.88 50.65 4.59 48.24 4.92 52.53 5.74 62.88 --
New Zealand 3.03 32.28 3.04 34.16 5.87 58.91 5.77 57.36 -9%
Australia 2.54 27.06 -- -- 4.32 43.84 6.20 62.46 -1%
Poland 8.15 77.35 -- -- 5.38 54.97 6.27 62.48 -1%
Spain 4.73 50.07 6.02 63.14 -- -- 6.48 64.58 3%
Cayman Islands -- -- -- -- -- -- 6.58 64.25 2%
Switzerland 7.56 66.44 -- -- 4.58 46.72 6.58 65.57 4%
Thailand -- -- -- -- 3.52 36.44 6.66 67.52 7%
Czech Republic 4.46 39.21 -- -- 5.87 59.98 7.10 70.76 13%
Japan 4.50 39.65 5.19 53.62 -- -- 7.23 70.75 13%
France -- -- 6.89 70.69 -- -- 7.51 74.84 19%
Sweden 8.13 76.29 -- -- 6.40 65.39 7.61 75.84 21%
Singapore 6.96 65.75 -- -- 4.92 49.97 7.61 75.07 19%
Finland 8.00 77.74 6.81 69.87 -- -- 7.76 77.33 23%
Denmark 9.27 86.46 -- -- 7.00 71.52 7.82 77.93 24%
Hungary 8.04 78.44 25%
Germany 8.19 79.61 -- -- 6.51 67.07 8.21 83.37 33%
Italy 9.19 86.27 -- -- 7.19 71.53 7.96 87.19 39%
UK 8.81 83.03 4.85 51.45 7.38 72.78 8.54 85.02 35%
Norway -- -- -- -- -- -- 9.00 90.30 44%
Netherland 8.85 85.96 -- -- -- 9.12 92.61 47%
Fiji -- -- -- -- -- -- 9.62 94.09 50%
Turkey -- -- -- -- 9.58 95.03 10.19 101.06 61%
Brazil -- -- -- -- 5.79 57.61
Bahrain 1.02 9.57 -- -- -- --
Lebanon 3.90 36.82 -- -- -- --
Kathmandu, Nepal 4.85 42.20 -- -- -- --
Egypt -- -- 1.35 14.20 -- --
Zimbabwe -- -- 4.54 46.38 -- --


Petrol Prices in IndiaCity 2008 Price (`) 2009 Price (`) 2010 Price (`) 2011 Price (`)
Agra -- -- -- -- -- -- 18-Sep-11 70.53
1-Nov-11 71.13
Ahmedabad 30-Sep-11 71.20
-- -- -- -- -- -- 22-May-11 67.52
-- -- -- -- -- -- 12-Feb-11 62.24
-- -- -- -- -- -- 25-Jan-11 52.28
Ajmer, Rajasthan -- -- -- -- -- -- 20-Sep-11 70.04
Allahabad -- -- -- -- -- -- 5-Jun-11 67.00
Ballia, Ghazipur/ UP -- -- -- -- -- -- 2-Mar-11 60.91
Bangalore -- -- -- -- -- -- 5-Nov-11 77.00
-- -- -- -- -- -- 3-Nov-11 74.82
-- -- -- -- -- -- 19-Oct-11 75.00
-- -- -- -- -- -- 29-Jun-11 73.00
23-May-08 55.00 14-Mar-09 52.17 16-Dec-10 63.45 22-May-11 71.00
11-Nov-08 57.17 -- -- -- -- 3-Apr-11 65.00
-- -- -- -- -- -- 17-Jan-11 65.45
Belgaum, Karnataka -- -- -- -- -- -- 14-May-11 65.00
Bhopal -- -- -- -- -- -- 10-Sep-11 68.49
Bhubaneswar, Orissa 27-Oct-11 66.72
Chennai -- -- -- -- -- -- 5-Nov-11 72.73
-- -- -- -- -- -- 23-Oct-11 71.10
-- -- -- -- -- -- 19-May-11 67.00
11-Jun-08 55.00 2-Jul-09 48.58 20-Aug-10 58 15-May-11 68.38
2-Jul-08 59.20 29-Jan-09 44.24 2-Jul-10 57 8-May-11 63.00
-- -- -- -- -- -- 8-Feb-11 65.00
-- -- -- -- -- -- 16-Jan-11 63.36
Cochin -- -- -- -- -- -- 20-Sep-11 69.70
Coimbatore -- -- -- -- -- -- 24-Oct-11 71.00
-- -- -- -- -- -- 13-Jun-11 67.05
9-Jun-08 58.91 -- -- -- -- 15-May-11 67.03
Dehradun -- -- -- -- -- -- 30-May-11 65.81
Faridabad -- -- -- -- -- -- 2-Feb-11 59.31
Gujarat 26-Jun-08 53.48 -- -- -- -- 5-Feb-11 62.10
Gurgaon, Haryana -- -- -- -- -- -- 15-May-11 61.98
-- -- -- -- -- -- 8-Feb-11 59.00
Guwahati( Assam) -- -- -- -- -- -- 25-May-11 66.65
Hyderabad -- -- -- -- -- -- 1-Nov-11 76.75
22-Apr-08 55.00 -- -- 14-Jul-10 57.91 16-Sep-11 74.48
30-May-08 51.10 -- -- -- -- 15-May-11 70.70
11-Jun-08 60.00 -- -- -- -- 21-Mar-11 65.15
13-Jun-08 56.65 -- -- -- --
25-Nov-08 56.00 -- -- -- --
Indore -- -- -- -- 6-Aug-10 55.17
Jaipur, Rajasthan -- -- -- -- -- -- 16-May-11 67.45
-- -- -- -- -- -- 5-May-11 62.64
Jalgaon/Maharashtra -- -- -- -- -- -- 15-May-11 69.00
Kanpur, UP -- -- -- -- -- -- 6-Jul-11 67.25
Kerala -- -- -- -- -- -- 19-Sep-11 70.00
-- -- -- -- -- -- 9-Jun-11 66.89
-- -- -- -- -- -- 26-Apr-11 61.96
-- -- -- -- -- -- 4-Feb-11 65.00
-- -- -- -- -- -- 18-Jan-11 61.31
Kolhapur -- -- -- -- -- -- 5-Nov-11 76.50
Kolkata -- -- -- -- -- -- 5-Nov-11 73.15
-- -- -- -- -- -- 16-Sep-11 71.15
4-Jun-08 48.95 2-Jul-09 48.25 -- -- 15-May-11 67.31
-- -- 29-Jan-09 44.05 -- -- 28-Feb-11 62.50
Lucknow -- -- -- -- -- -- 16-Sep-11 70.02
-- -- -- -- -- -- 5-Feb-11 62.61
Mangalore -- -- -- -- -- -- 23-May-11 71.00
-- -- -- -- -- -- 22-Jan-11 64.55
Margao /Goa -- -- -- -- 8-Jul-10 52.11 9-Mar-11 58.31
Mumbai -- -- -- -- -- -- 5-Nov-11 73.81
-- -- -- -- -- -- 31-Oct-11 71.92
-- -- -- -- -- -- 24-Sep-11 71.62
-- -- -- -- -- -- 12-Jun-11 68.33
8-Mar-08 56.00 2-Jul-09 48.76 7-Jul-10 55.20 15-May-11 68.32
4-Jun-08 50.51 4-Mar-09 44.00 -- -- 22-Feb-11 65.00
-- -- 29-Jan-09 44.55 -- -- 16-Jan-11 63.08
Muzaffarpur, Bihar -- -- -- -- -- -- 21-Jun-11 65.00
Mysore 1-Nov-11 74.06
Nagpur 23-Apr-08 54.25 -- -- -- -- 7-Feb-11 65.00
Nashik -- -- -- -- -- -- 17-Sep-11 71.75
New Delhi -- -- -- -- -- -- 5-Nov-11 68.64
-- -- -- -- -- -- 21-Sep-11 66.84
-- -- -- -- -- -- 15-May-11 63.41
24-May-08 47.00 2-Jul-09 44.63 4-Jul-10 51.43 16-Jan-11 58.37
Noida -- -- -- -- -- -- 19-Sep-11 70.77
Pondicherry -- -- -- -- -- -- 15-May-11 61.64
Pune 4-Jun-08 45.52 6-Jul-09 48.00 19-Dec-10 60.47 17-Sep-11 72.00
15-May-11 69.63
29-Feb-08 51.46 29-Jan-09 40.62 11-Jul-10 52.00 14-Apr-11 63.00
15-Jul-08 54.95 26-Jan-09 53.00 2-Feb-11 64.00
Punjab -- -- -- -- 13-May-10 53.00 20-Sep-11 73.87
Rajkot -- -- -- -- -- -- 1-Nov-11 70.68
Raipur,Chhattisgarh -- -- -- -- -- -- 21-Feb-11 59.89
Kashmir -- -- -- -- -- -- 18-Oct-11 69.85
-- -- -- -- -- -- 2-Feb-11 62.96
Simla 5-Nov-11 71.84
Surat 1-Nov-11 71.16
-- -- -- -- -- -- 17-Sep-11 71.00
Thane -- -- -- -- -- -- 3-Feb-11 41.41
Tamil Nadu -- -- -- -- 13-Jul-10 55.92 16-Jan-11 63.01
Tirupati -- -- -- -- -- -- 20-Sep-11 73.45
Trivandrum -- -- -- -- -- -- 17-Sep-11 70.00
-- -- -- -- -- -- 23-Jul-11 67.00
-- -- -- -- -- -- 16-Jun-11 65.91
Vadodara, Gujarat -- -- -- -- -- -- 1-Nov-11 70.36
-- -- -- -- -- -- 16-May-11 68.00
-- -- -- -- -- -- 18-Feb-11 61.51
Visakhapatnam -- -- -- -- -- -- 5-Nov-11 75.00
-- -- -- -- -- -- 27-Sep-11 73.00



Note:

மேற்கண்ட விலை ஒப்பீடு http://kshitij.com/research/petrol.shtml என்ற தளத்திலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை அதனையே சாரும். நன்றி!

எனவே பெட்ரோல் விலை உயர உண்மையான காரணங்கள் என நான் கருதுவது,

# மத்திய மாநில அரசுகளின் வரி மொத்தமாக 45 %

#எண்ணை சுத்திகரிப்பு நிலையத்துக்கும், விற்பனை நிலையத்துக்கும் இடையே கொண்டு செல்ல ஆகும் செலவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலும் குழாய்கள் வழிக்கொண்டு செல்லப்படும், நம் நாட்டில் அதிகப்பட்சமாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிரது. குழாய் வழி விநியோகம் குறைவே.

#எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு, வெளிநாட்டில் 100 பேர் செய்யும் வேலைக்கு இங்கே 1000 பேர் வேலை செய்ய இருக்காங்க, மேலும் அதிக சம்பளம், போனஸ், என 6 மாதத்துக்கு ஒரு முறை அள்ளி விடுவது, ஆனால் செயல் பாடு அதே அளவுக்கு இல்லை. அதாவது எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டே லாபத்தொகையை குறைக்கின்ற இப்படி பட்ட செலவீனங்கள் மூலமாக.
எந்த எண்னை நிறுவனமும் நட்டம் என பேலன்ஸ் ஷீட் காட்டவில்லை, ஆனால் ஏன் நட்டம் என்கிரார்கள், அவர்கள் 10000 கோடி லாபம் எதிர்பார்க்க 2500 கோடி லாபம் வந்தால் உடனே நட்டம் என்கிறார்கள், அதாவது லாபத்தில் நட்டம்!



பாரத் பெட்ரோலியத்தின் லாப நட்ட கணக்கு அதன் பேலன்ஸ் ஷீட்டில் இருந்து,

Profit loss account Mar ' 11 Mar ' 10 Mar ' 09 Mar ' 08 Mar ' 07
Income
Operating income 1,50,838.33 1,20,216.99 1,34,073.43 1,10,208.13 96,556.85
Expenses
Material consumed 1,38,971.98 1,09,894.18 1,23,567.17 1,02,136.48 88,539.75
Manufacturing expenses 886.02 621.84 414.26 291.29 310.08
Personnel expenses 2,802.85 2,141.12 1,884.88 1,297.21 1,003.70
Selling expenses 2,854.80 2,585.47 2,426.14 2,052.39 1,875.82
Adminstrative expenses 1,812.07 1,489.82 1,240.35 1,279.79 1,109.72
Expenses capitalised - - - - -
Cost of sales 1,47,327.72 1,16,732.43 1,29,532.80 1,07,057.16 92,839.06
Operating profit 3,510.61 3,484.56 4,540.63 3,150.97 3,717.79
Other recurring income 1,395.95 1,679.64 1,491.16 982.98 768.63
Adjusted PBDIT 4,906.56 5,164.20 6,031.79 4,133.94 4,486.42
Financial expenses 1,100.78 1,010.95 2,166.37 672.47 477.35
Depreciation 1,655.40 1,242.32 1,075.53 1,098.21 904.11
Other write offs - - - - -
Adjusted PBT 2,150.38 2,910.93 2,789.89 2,363.26 3,104.96
Tax charges 776.24 823.75 261.12 1,010.00 955.33
Adjusted PAT 1,374.14 2,087.18 2,528.77 1,353.26 2,149.62
Non recurring items -74.91 -489.45 -1,789.90 108.65 -217.64
Other non cash adjustments 247.45 -60.11 -2.97 118.65 -126.50
Reported net profit 1,546.68 1,537.62 735.90 1,580.56 1,805.48
Earnigs before appropriation 1,727.74 1,613.99 735.90 1,580.56 4,488.39
Equity dividend 506.16 506.16 253.08 144.62 578.47
Preference dividend - - - - -
Dividend tax 71.08 72.77 31.45 9.16 91.87
Retained earnings 1,150.50 1,035.06 451.37 1,426.78 3,818.05

Mutual Fund Selector
Find the fund that is right for you
Market Astrology
Stock market predictions by Satish Gupta

1546 கோடி இறுதி லாபம் எனக்காட்டியுள்ளார்கள், இதில் ரிடெய்ன்ட் எர்னிங்  1150 கோடி சேர்த்தால் 2696 கோடி லாபம் ஈட்டியதாக கணக்கில் கொள்ள வேண்டி இருக்கும்.






மேலும் லாபத்தை ஆங்காங்கே தொழில்நுட்ப ரீதியாக பரவ விட்டு பதுக்குவார்கள். கணக்கில் நேரடியாக காட்ட மாட்டார்கள்.


Tuesday, November 29, 2011

வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!



வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீதமும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீதமும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இதற்கு பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அல்லாது திமுக, திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் என அனைத்தும் எதிர்ப்பு காட்டியுள்ளது.

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பது சரியா, தவறா? இதில் என்ன லாப ,நட்டங்கள் இருக்கு என்பதை தெளிவாக யாரும் சொல்லவில்லை. ஏதோ "அன்னிய" என்ற சொல்லினை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்புக்காட்டுவதாகவே தெரிகிறது.

இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்திய சில்லரை வர்த்தகத்தினை ஒரு பார்வை பார்க்கலாம்.

இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள் ஆக 2012 இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இருப்பது தான் இந்தியாவின்  பெரிய பலவீனமே.

முறைப்படுத்தப்பட்ட இந்திய சில்லரை வர்த்தகம் சுமார் 3 % மட்டுமே, 97 % முறை சாரா வணிகமாகவே நடக்கிறது.சில்லரை வர்த்தகம் என்பது உற்பத்தியாளர்/பெரும் வினியோஸ்தரிடம் இருந்துஒரு வணீகர் வாங்கி நுகர்வோரின் இறுதி நுகர்வுக்கு விற்பனை செய்வது. அது பதப்படுத்துதல்,அல்லது மறு விற்பனைக்கு அல்ல.



முறை சார் சில்லரை வணிகம்
என்பது ரிலையன்ஸ் பிரெஷ், மோர், ஸ்பென்சர்ஸ் புட் ஓர்ல்ட், நீல் கிரீஸ் வகை சங்கிலித்தொடர் அல்லது தனி பல்ப்பொருள் அங்காடிகள் ஆகும்.இவர்களுக்கு வணீக எண், விற்பனை வரி,வருமான வரி,  தணிக்கை எல்லாம் உண்டு.

முறை சாரா சில்லரை வணிகம்:

இது தெருவுக்கு தெரு இருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ் ,சண்முகம் செட்டியார் பொது வணிகம் வகை கடைகள் ,இவர்கள் பெரும்பாலும் டின் எண், விற்பனை வரி,வருமான வரி , தணீக்கை போன்ற சடங்குகளுக்கு ஆட்படுவதில்லை.

உணவுப்பொருள் சில்லரை வர்த்தகத்தில் உதாரணமாக தக்காளி கடைசியாக ஒரு நுகர்வோரை எவ்வாறு வந்தடைகிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் காய்,கனி உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது, அங்கே ஒட்டன் சத்திரம் முக்கியமான உற்பத்தி மையம் ஆகும், அங்கு தக்காளி சாகுபடி செய்யும் விவசாயீ கூடைகளில் தக்காளி எடுத்துக்கொண்டு நேராக கமிஷன் மண்டிக்கு செல்வார், அங்குள்ள கமிஷன் ஏஜண்ட் விலை நிர்ணயம் செய்வார், எடை எல்லாம் இல்லை ஒரு கூடை இன்ன விலை என சென்னைக்கு என்ன விலைக்கு அனுப்பலாம் என்பதைக்கணக்கிட்டு நிர்ணயிப்பார். ஒரு கூடையில் சுமார் 8-10 கிலோ தக்காளி இருக்கும்.

சென்னையில் தக்காளி உட்சபட்ச விலையில் இருக்கும் போது கூட திண்டுக்கல்லில் விவசாயிக்கு கிலோவுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பது குதிரைக்கொம்பு.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து 10 டன் தான் அனுப்ப கமிஷன் மண்டிக்காரர்களுக்கு தேவை இருக்கும் போது 20 டன் தக்காளி வந்து விட்டால் கிலோ 50 பைசாவுக்கு கூட போகும், சமயத்தில் அதுக்கு கூட விலைப்போகாது. விற்க முடியாமல் விவசாயி ரோட்டில் கொட்டி செல்வதுண்டு.ஏன் எனில் திரும்ப கொண்டு சென்று மீண்டும் வர ஆகும் செலவுக்கு கூட காசு தேறாது , மேலும் அடிப்படுவது, அழுகுவது என தக்காளி வீண் ஆகும்.

இப்படி ஒரு கமிஷன் ஏஜண்டால் திண்டுகல்லில் கொள்முதல் செய்யப்பட்டு , சென்னை வரும் தக்காளி ,மீண்டும் சென்னையில் இன்னொரு கமிஷண் ஏஜண்ட் கை மாறும் அவர் மொத்த வியாபாரிக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து கை மாற்றி விடுவார், அந்த மொத்த வியாபாரி சில்லரை வியாபாரிக்கு கை மாற்றி விடுவார், இப்படியாக கடைசியில் நுகர்வோர் ஆகிய நம் கைக்கு வந்து வாய்க்கு போகும்.

இதற்கு இடையில் அனைவரின் லாபம், ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பயண செலவு எல்லாம் சேர்ந்து 5 ரூபாய் தக்காளி 50 ரூபாய் ஆக மதிப்பு கூடி இருக்கும்.

இந்த விலை நிர்ணயத்தில் மேலும் போக்குவரத்தின் போது ஏற்பட்ட அழுகல், நசுங்கல், முந்தைய நாள் விற்காமல் தேங்கிய தக்காளியால் ஏற்பட்ட நட்டம் என அனைத்தையும் சேர்த்தே வைப்பார்கள் வியாபாரிகள்.

அதாவது நாம் வாங்கும் ஒரு கிலோ தக்காளியில் கண்ணுக்கு தெரியாமல் உற்பத்தி,கையாளுதல் ஆகியவற்றின் போது  விரயம் ஆன  தக்காளியின் விலையும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில் ஒரு பொருள் உற்பத்தியானால் மட்டும் போதாது, அது குறைவான விரயத்தில் இறுதி நுகர்வோரை அடைந்தால் மட்டுமே விலைக்குறைவாக சந்தையில் கிடைக்கும் என்பதை நினைவுறுத்தவே.முறை சார் சங்கிலித்தொடர் சில்லறை வர்த்தகர்கள் இவ்வாறு ஆகும் சேதாரத்தைக்கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.

தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் என போட்டே விற்பார்கள், கய்,கனி வியாபாரத்தில் மறைந்து இருக்கும்.

சந்தைப்படுத்துதலில் உற்பதியை சிறப்பாக கையாண்டு, சேதாரம் குறைவாக , நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் உபரி உற்பத்தியை சேமித்து சீராக தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.அப்போது தான் சப்ளை அன்ட் டிமாண்ட் சீராக இருக்கும், திடீர் விலை ஏற்றம் இருக்காது.நுகர்வோரையும் பாதிக்காது.

மேற் சொன்ன முறையான வழுமை எதுவும் இந்திய சில்லரை வர்த்தகத்தில் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. இங்கே சந்தை ஒரு முறைப்படுத்த படாமல் " laizze fair market" ஆக எந்த ஒரு வகைக்கும் அடங்காமல் தன்னிச்சையாக இருக்கிறது. இதனாலேயே திடீர் என வெங்காயம் விலை கண்ணீரை வர வைக்கிறது.

இது போன்று இல்லாமல் நுகர்வோர் நலனுக்கு ஏற்ப சில்லரை வர்த்தகம் இருக்க வேண்டும் எனில் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தக சங்கிலித்தொடர் வியாபார நிறுவனங்கள் அவசியம் ஆகிறது.ஆனால் அவர்கள் வந்தால் பாரம்பரியமாக நாட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பார்கள்.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வணிகம் வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வேறு சொல்கிறார்கள், இது பெரிய நகைச்சுவை, இப்போது மட்டும் விவசாயிகள் நன்றாக வாழுகிறார்களா?, தக்காளி உதாரணத்திலேயே விவசாயிகளின் நிலை பரிதாபமானது என்பது புரிந்து இருக்கும், இப்போதைய முறைசாரா வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜண்ட்கள் கூட்டணியில் விவசாயிகள் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள். நுகர்வோருக்கும் சிரமம்.

ஆரம்ப்பத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கடைசி வரை கடன் காரனாகவே இருக்கான், ஆனால் கடன் வாங்கி சில்லரை வர்த்தகம் செய்பவர் சில காலத்தில் பெரிய அளவில் முதலாளி ஆகி விடுகிறாரே அது எப்படி?

எனவே முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்தால் விவசாயிக்கு ஆபத்து என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை தான்.

முறைப்படுத்தப்பட்ட வணிகம் பெரிய அளவில் நடந்தால் அவர்கள் பல கிளைகளுக்கும் தேவையானதை குளிர்பதன கிடங்குகள் அமைத்து சேமித்து வைத்து சீராக விநியோகம் செய்வார்கள், மேலும் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் விளைவித்து நேரடியாக கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது.விரயம் தவிர்க்கப்படும் எனவே விலை குறைவாகவே இருக்கும்.

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் நுகர்வோர் கொடுக்கும் பணத்தில் 2/3  பங்கு விவசாயிக்கு சேர்கிறதாம், ஆனால் முறை சாரா சில்லரை வர்த்தகத்தில்  அந்த அளவு சென்று சேர்வதில்லை சுமாராக 1/5 அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.

இந்த ஒப்பந்த விவசாயம் சிக்கல் இல்லாதது என சொல்ல மாட்டேன் அதிலும் வணிகர்களுக்கே சாதகமான நிபந்தனைகள் தான் இருக்கும், ஆனால் தற்போது விளைவித்தால் விற்பனை ஆகுமா காசு கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறதே அது இருக்காது, எப்படியோ கடைசியிலொரு குறைந்த பட்ச விலைக்காவது விற்று விட வாய்ப்பு இருக்கு, வீணாக ரோட்டில் கொட்ட வேண்டியது இருக்காது.

இந்த ஒப்பந்த முறை விவசாயம் ஓரளவு சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது உதாரணமாக கரும்பு விவசாயத்தினை சொல்லலாம்.சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை இல்லாத போதும் விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யக்காரணம் எப்படியும் விற்பனை ஆகிவிடும் என்பதால் தானே!

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் நுகர்வோர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என கூறுகிறார்கள். இப்போது மட்டும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம் இருக்கா, கடையில் அவர்கள் என்ன வைத்துள்ளார்களோ அது தானே நம் மீது திணிக்கிறார்கள். உதாரணமாக இராவணன் மசாலா என்பது கிழக்கு தாம்பரம் பகுதியில் தயாரிக்கப்படுகிறது ஆனால் அது எங்கள் அருகில் உள்ள கடையில் இல்லை, ஆச்சி மசாலா, சக்தி மசாலா தான் வைத்துள்ளார்கள்.பெரிய உற்பத்தியாளர் சில சலுகைகள் தருகிறார்கள் என்பதால் கடைக்காரர்கள் அதனையே வாங்கி விற்கிறார்கள், நுகர்வோர் தேவையை ,விருப்பத்தை கணக்கில் எடுப்பதே இல்லை.

நுகர்வோருக்கு வாங்கும் அனுபவம் நல்லதாக,இனிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முறை சாரா சில்லரை வர்த்தகர்களிடையே இல்லையே, அவர்கள் வசதிக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். தெரிந்தவர்களை முதலில் கவனிப்பார்கள், அதிகம் வாங்குபவர்கள் மீது அன்பு காட்டுவார்கள்! மற்றவர்கள் ஏதோ ரேஷன் கடையில் நிற்பது போன்று நிற்க வேண்டும்.இதற்கு நாம் விருப்பபடி தேர்வு செய்து பில் போட்டுக்கொள்ளும் பல்பொருள் அங்காடி அமைப்பு மேலானதாக இருக்கே.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்துவிட்டால் , முறைசாரா வணிகர்கள் ,அவர்களிடம் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.இது நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி ஆனால் அந்த பெரிய கடைகளுக்கு வேலைக்கு ஆட்களே தேவை இல்லையா, அங்கே வேலை கிடைக்காதா? கிடைக்கும் ஆனால் எல்லாருக்கும் கிடைக்கும் இப்போது உள்ளது போல ஒரு சில குறீப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் என்ற சிறப்பு போய்விடும்.

இப்போது உள்ள முறை சாரா சில்லரை வர்த்தக கடைகளை நடத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரே, அவர்கள் கடையில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் வேலை செய்வார்கள், மேலும் ஆட்கள் தேவை எனில் அவர்கள் ஊரை சேர்ந்த சொந்தம் அல்லது, அவர்கள் சார்ந்த வகுப்பினரை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.வேறு யாரும் வேலைக்கு சேர்ந்து வியாபார நுணுக்கம் கற்றுக்கொள்ள முடியாது.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எல்லாருக்கும் வேலை தருவார்களே!

இப்போது உள்ள முறை சாரா சில்லரைக்கடைகளில் வேலை செய்பவர்களூக்கு என்று பணி நிர்ணயம், சம்பள நிர்ணயம் என எதுவும் இல்லை.கொத்தடிமை வாழ்க்கை தான் இன்னும் சொல்லப்போனால் சம்பளம் என்பதே இல்லை, தீபாவளி,பொங்கல் என்றால் புது துணி ஊருக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் பணம் தருவார்கள் மற்றப்படி தினம்  மூன்று வேளை சோறு , அவ்வளவு தான். கேட்டால் தொழில் படிக்கிறான் இல்ல அது போதும் என்பார்கள். அந்த அப்ரண்டீசும் சில வருடங்களில் தனியாக கடைப்போட்டு பிழைத்துக்கொள்வார்.ஆனால் இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கிடையே மட்டுமே. மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை.

ரங்கநாதன் தெருவில் இயங்கும் பெரிய அளவிலான சில்லரை வர்த்தக நிறுவனங்களில் கூட இதே நடை முறை தானே என்ன சம்பளம் என்ற ஒன்று உண்டு மற்றப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பு பணியாளர்கள், கொத்தடிமை போன்ற நிலை தான்.

முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான சில்லரை வர்த்தகம் வரும் போது அனைவரும் வணிக வேலை செய்யலாம், பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.

அப்படியானால் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்து விட்டு அரசு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்றால் அதுவும் கூடாது அதிலும் கவனிக்க வேண்டியவை இருக்கு.

அன்னிய நுழைவுக்கு முன்னரே இந்திய அளவிளான முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தில் நன்கு வளர்ந்து இருக்க வேண்டும், துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் பெரிதாக வளரவில்லை. இப்போதைக்கு 3 % சந்தையே முறைப்படுத்தப்பட்ட வணிகமாக இருக்கிறது.மேலும் எனக்கு தெரிந்து இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், குளீருட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கவோ, கிராம பொருளாதாரத்துக்கு உதவியாக ஒப்பந்த விவசாயம், நேரடிக்கொள்முதல் என எதுவும் பெரிய அளவில் செய்ய தயாரில்லை.அவர்களும் பெரும்பாலும் தங்கள் தேவைக்கு கமிஷண் மண்டிகளையே நாடுகிறார்கள். சிறிய அளவில் நேரடிக்கொள்முதல் நடைப்பெறவும் செய்கிறது.

இது போன்ற பெரிய சில்லரை வணிகர்கள் கிராமப்புறக்கட்டமைப்புக்கும் உதவ வேண்டும் அல்லது அங்கே குளிரூட்டப்பட்ட கிடங்குகள், விவசாய தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள், இன்ன பிற வசதிகளை செய்ய அரசு நிர்பந்திக்க வேண்டும்.சும்மா அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க கூடாது.

உதாரணமாக காட்பரி என்ற தனியார் சாக்கலேட் உற்பத்தியாளர்கள் கோக்கோ பயிரிட ஆலோசனை, வழிக்காட்டுதல், உற்பத்திக்கு பின் கொள்முதல் என தாங்களே முன் வந்து செய்கிறார்கள்.இதன் மூலம் தங்களுக்கான மூலப்பொருளை சீராக பெருகிறார்கள்.விவசாயிக்கும் சந்தைப்படுத்தலில் உள்ள சிரமம் களையப்படுகிறது.

மேலும் அன்னிய சில்லரை வர்த்தகர்கள் பொருட்களை இங்கேயே கொள்முதல் செய்ய வேண்டும் இறக்குமதி சரக்குகளை இங்கே விற்று தள்ளக்கூடாது என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்களை அவர்கள் உள்நாடாக இருந்தாலும் சரி வால் மார்ட் போல வெளிநாடாக இருந்தாலும் சரி இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட கண்காணிப்புடன் அனுமதித்தால் , தொழிலாளர்கள்,நுகர்வோர்கள் ,விவசாயிகள் பயன் அடைவார்கள்.மேலும் விற்பனை வரி ,வருமான வரி வருவாய் முறையாக அரசுக்கும் வந்து சேரும்.




Tuesday, March 25, 2008

sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு!

  சென்செக்ஸ் ஒருப்பார்வைஎன்ற பதிவில் பங்கு சந்தை குறியீடு பற்றி சொல்லி இருந்தேன்,பின்னர் ஏன் பங்கு சந்தை அடிக்கடி, சரிகிறது, நிமிர்கிறது, ஊசலாடுகிறது என்பதையும் சொல்ல சொல்லி மக்கள் கேட்டாங்க, சொல்வதாக சொல்லி இருந்தேன், நாம் ஒன்றும் இதில் பழம் தின்று கொட்டைப்போட்ட ஆள் அல்ல என்பதால் சொல்வது சரியாக வருமா என்று வாளாவிருந்தேன், தமிழ் படிக்க விருப்பம் இல்லாதவங்க எல்லாம் வீட்டில் "தமிழ் பேசியே" தமிழை வளர்க்கிற காலத்தில பங்கு சந்தை வேடிக்கைப்பார்க்கிற நாம் ஏன் பொருளாதார அறிவு வளர்க்க கூடாதுனு துணிச்சலா அடுத்த பாகம் போட வந்தாச்சு, இப்போவே சொல்லிடுறேன் பங்குசந்தையினை அவதனிப்பதன் மூலம் நான் உணர்ந்த என்னோட சுய அறிதலின் விளைவாக சொல்லும் கருத்து(கூகிள் வழி பல தளங்களைப்பார்த்தூ தான்), பெரிய நிபுணத்துவம் எல்லாம் இருக்காது., ஒரு வழி போக்கன் பாணியில் இருக்கும்!


பங்கு சந்தை சரியும் போதெல்லாம் hedge fund, FII, odi ,p-note , fdi , செய்த விளையாட்டு என்பார்கள் தொ.காவில், இவை எல்லாருக்கும் தெரிஞ்சாலும் அவற்றைப்பற்றி சும்மா சொல்லி வைக்கிறேன்,


hedge fund: கையில அதிகமா காசு இருக்கு அதை குறுகிய காலத்தில் ,ரொம்ப ரிஸ்க் எடுக்காம ஒரு மாற்று வகையில் முதலீடு செய்யனும் என்று நினைப்பவர்கள் வைத்திருக்கும் பணம் இது, இது பெரும்பாலும் வெளிநாட்டுக்காரங்க காசு தான்.எங்கே எல்லாம் காசு போட்டா குட்டிப்போடுமோ அங்கே எல்லாம் காச இறக்கி ஆடுவாங்க.


அமெரிக்காவை சேர்ந்த உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனம் ரெனைசன்ஸ் டெக்னால்ஜிஸ் இந்தியாவில் தற்போது தங்கள் கிளையை நிறுவியுள்ளார்கள் என்றால் இந்திய பங்கு சந்தையின் மதிப்பை உணர்ந்துக்கொள்ளலாம்.


FII: foreigne institutional investors ,


ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற அயல்நாட்டு நிதி நிறுவனங்கள், நிதிஆலோசனை குழுமங்கள் , பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்தியாவில் இப்படி முதலீடு செய்வது தான் fii எனப்�000; font-weight: bold;">

P-note: participatory note, என்ற ஒரு வகையின் ம�D இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய இது தான் வழி. ஹெட்ஜ் பண்ட் என்ற பணம் கையில் இருந்தாலும் யாரும் நேரடியாக முதலீடு செய்ய முடியாது . அந்த பணத்தை இப்படி fii வழியாகத்தான் அனுப்புவார்கள்.
உ.ம்:
Citigroup and Deutsche Group—the largest FIIs in Indian markets,
Morgan Stanley & Co. International,
Merrill Lynch Capital Markets,
CLSA Asia-Pacific,
Goldman Sachs Investments Mauritius
and JPMorgan


P-note: participatory note, என்ற ஒரு வகையின் மூலம் தான் fii தாங்கள் பெற்ற ஹெட்ஜ் பண்ட் நிதியை இந்திய பங்கு சந்தையில் இறக்குவார்கள். fii நேரடியாகவும் நிதி முதலீடு செய்யும். ஆனால் அதற்கான ரிசவ் பேங்க் நடைமுறைகள், வரி விகிதம் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனால் இந்த p-note முறையில் அவை எளிமையாகா இருக்கு. இந்த வகையில் பணம் முதலீடு செய்பவர் யார் , எந்த நாடு என்று வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கலாம்.


ODI: offshore derivatives investors . இது ஒரு தொகுப்பாக உள்ளது இதில் தான் p-note வகையும் அடக்கம், இதில் மேலும்,
equity-linked notes,
capped return note,
participating return note,
investment note and similar instruments


ஆகியவையும் இருக்கு.


FDI: foreigne direct investment, எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் அரசின் அனுமதியுடன் ஒரு இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வது. இந்திய நிறுவனத்தின் பங்கு தாரர் ஆகிவிடுவார்கள்.


பங்கு சந்தை சரிவுக்கு காரணமாக இருப்பது p-note வழியாக வரும் ஹெட்ஜ் பண்ட் கள் காரணமாக இருப்பதாக கருதக்காரணம் என்ன? ஏன் இந்த ffi கண்டு பங்கு சந்தைப்பயப்படுகிறது. இதுக்குலாம் யார் காரணம்?


இதுக்கு ஆரம்ப காரணம் நம்ம அரசாங்கம் தான், ஏன்னா 1992 க்கு முன்ன வரைக்கும் இந்திய பங்கு சந்தையில் அந்நியர்கள் முதலீடு செய்ய முடியாது, அப்போ இருந்த நரசிம்ம ராவ் அரசாங்கம் பொருளாதார சீர் திருத்தம் செய்ய புகுந்த போது இப்படி fii, odi, p-note ஆகிய வழிகளை உருவாக்கி வெளியில இருந்து முதலீடு கொண்டு வர செய்தார்கள்.


உண்மைல அப்போ இருந்தவங்களுக்கு ஏன் இந்த p-note க்கு இப்படிப்பட்ட ரகசியம் காக்கும் உரிமை தரோமே பின்னாடி பிரச்சினை வரும்னு தெரியாதா? அப்படிலாம் சலுகை ஏன் தரனும் ? அப்போது யாராவது நிர்பந்தப்படுத்தி சலுகை பெற்றார்களா? இது மில்லியன் டாலர் கேள்வி, இப்போ அய்யோ அம்மானா எப்படி.


அதுலயும் ப.சி போன்றவர்கள் தொ.கா ல பங்கு சந்தை உயர்ந்தால் வந்து அன்னிய சக்திகள் முதலீட்டு சந்தையில் நுழைந்து விட்டன என்பார், இப்படி ப.சி தொகா ல பேசியதற்காக அவர் மீது ஒரு நிதி ஆலோசகர் sebi vigilence இல் புகாரே கொடுத்துள்ளார், p-note என்பது ரகசியம் , அது யாருக்கும் சொல்லப்பட மாட்டாது என்று உறுதி தருகிறது செபி , அப்புறம் அது நிதி அமைச்சருக்கு மட்டும் எப்படி தெரிந்தது, செபி சொல்லி இருந்தால் ,அப்படினா அது தொழிற்தர்மத்துக்கு எதிரானது ஆச்சேனு.சந்தை சரிந்தால் இது வெறும் கரெக்ஷன் தான் என்பார் ! அரசுதூக்கி நிறுத்தும் என்பார்.


அப்புறம் இந்த fii க்கு, p-note க்கு கட்டுப்பாடு போடனும் என்று தொ.கா ல பேசிவைப்பார்,உடனே fii பங்குகளை விற்கும், விளைவாக பங்கு சந்தை சரியும் , ப.சி என்னதான் நினைத்திருக்கார்னு ஒன்னுமே புரியலை!


இதிலும் மேலும் இடியாப்ப சிக்கலை உருவாக்கிறா மாதிரி , இதற்கு முன்னர் fii ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் 24 சத பங்கு களுக்கு மேல் வாங்க கூடாதுனு இருந்த கட்டுப்பாட்டையும் தளர்த்தி 49 சத பங்குகள் வாங்கலாம்னு 2004 இல் உத்தரவுப்போட்டாங்க, இதிலும் அதையும் தாண்டி கூட பங்குகளை வாங்கலாம் , அதற்கு ரிசர்வ் பேங்க்கிட்டே தனி அனுமதி வாங்கனும், கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாமாம். அரசாங்கம் செய்றதெல்லாம் செய்துட்டு அப்போ அப்போ இந்த p-note க்கு ஒரு செக் கொண்டு வரனும்னு செபி மூலமா அறிக்கை மட்டும் ஏன் விடுது? சும்மா கண் துடைப்புக்கா?






1992 ல எல்லாம் சென்செக்ஸ் ஒரு 2500- 3000க்குள்ள தான் இருக்கும் பெருசா யாருக்கும் நட்டம் வராது. இந்த fii உள்ள விட்டப்பிறகு தான் காளை ஓட்டம் அதிகம் ஆச்சு, அப்போதைய fii முதலீடு 827 மில்லியன் டாலர்கள் தான், , ஆனால் இப்போது அதன் மொத்த மதிப்பு 66.8 பில்லியன் டாலர்கள், கைமாறும் பங்குகளில் 60 சதம் fii மூலமே. 2007 இல் ஒரே ஆண்டில் வந்த fii முதலீடு மட்டும் 17.2 பில்லியன் டாலர்கள். 2000 ஆண்டுக்கு பிறகு வந்த ஆண்டுகள் பங்கு சந்தையில் fii களின் பொற்காலம்னே சொல்லலாம், அவங்களால தான் பங்கு சந்தை விண்ணைத்தொட்டது , அப்போ அப்போ மண்ணையும் கவ்வியது!


ஒரு காலத்தில் 100க்கும் குறைவான fii நிறுவனங்களுக்கு மட்டுமே செபி அனுமதி கொடுத்திருந்தது, இப்போ 2007 நிலவரப்படி 1219 fii நிறுவனங்கள் இயங்குது. இவர்கள் கொடுத்திருக்கும் p-note களின் எண்ணிக்கை 34 ,மட்டுமே ஆனால் 30.5 சத இந்திய பங்கு சந்தை மதிப்பை இந்த p-note வகையில் முதலீடு செய்தவர்கள் கையில் இருக்கு.


இப்படி முதலீடு செய்தவர்கள் எல்லாம் குறுகியகால நோக்கில் செயல்படுவர்கள் , எப்போது வேண்டுமானாலும் விற்பார்கள் மீண்டும் வாங்குவார்கள், இதனால் அவ்வப்போது பங்கு சரிவு ஏற்படும், ஏன் எனில் இவர்கள் தான் மொத்த எண்ணிக்கையில் பங்குகளை கை மாற்றுபவர்கள், எனவே இவர்கள் செயல் வைத்தே பங்கு சந்தை ஊசலாட்டம் இருக்கும், மற்ற உள்நாட்டு பொது மக்கள் வாங்கும் பங்குகள் சில்லரை வர்த்தகம்(retail investors) வகையில் வரும், அவர்களால் பங்கு சந்தையின் திசையினை நிர்ணயிக்க முடியாது, ஆனால் உண்மையில் அவர்கள் தான் பங்கு சந்தையின் முதுகெலும்பு .


மார்ச் 24 இல் பங்கு சந்தையில்


fii செயல்பாடு,


பங்கு வாங்கியது - 2884.39 கோடி,விற்றது= 2508.26 கோடி,


நிகர வாங்கிய தொகை= 376.13 க்கோடி.


விற்றதை விட வாங்கியது அன்று அதிகம்.


அதே நாளில் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் dii , செயல்பாடு,


வாங்கியது = 836.61 கோடி , விற்றது = 1089.88 கோடி,
நிகர விற்றத்தொகை =253.27 கோடி,
வாங்கியதை விட விற்றது அதிகம்.


எனவே மார்ச்-24 , 2008 இல் பங்கு சந்தை சரிவில்லாமல் இருந்திருக்கும், ஆனால் எப்பொதெல்லாம் அதிகம் பங்குகளை fii விற்கிறார்களோ அப்போதெல்லாம் சரிவு வரும்.


இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் தனி ஒரு நிறுவனமாக அதிக அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பது அந்நிய நிறுவனமல்ல, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (lic) 50 பில்லியன் டாலர்களுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது.


சில முன்னனி இந்திய பங்கு சந்தை பங்களிப்பாளர்கள்;


lic - 49.5


reliance mutal fund- 19.74


icici mutal - 13.93


uti mutual -13.24


hdfc mutual -11.87


சில முன்னனி fii முதலீட்டாளர்கள்;

citi group- 13.54

deutsche group- 13.16
hsbc global- 6.41
morgan stanly- 5.94
merrill lynch- 5.71


* amount in billion usd


பட்டியலைப்பார்த்தால் இந்திய பக்கம் அதிகம் முதலீடு இருக்காப்போல தோன்றும் அப்படி இருந்தும் , ஏன் fii கள் சந்தையை அசைத்து பார்க்கின்றன.


இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (dii)பரஸ்பர நிதி திரட்டி செயல்படுவர்கள் , ஹெட்ஜ் பண்ட்கள் கொண்டு அல்ல, நீண்டக்கால நோக்கில் முதலீடு செய்வார்கள், அடிக்கடி வாங்கி விற்றலில் ஈடுபடுவதில்லை.


அதே சமயம் fii க்கள் அப்படி அல்ல, ஆக்டிவாக விற்பனையில் இறங்கி செயல்படுவார்கள், அதனால் தான் தினசரி 60 சத பங்குகள் இந்த பக்கமும் அந்த பக்கமும் கைமாறுவதில் பங்கு பெறுகிறார்கள். இது தான் பங்கு சந்தையின் ஓட்டத்திற்கு பெரிதும் காரணம்.


அதே போல fii க்கள் எப்போது வேண்டுமானால் மொத்தமாக பங்குகளை ஒரே நாளில் விற்பார்கள்.


மேலும் fii க்கள் bse - 30 எனப்படும் அடிப்படை பங்குகளில்லோ nifty-50 எனப்படும் பங்குகளிலோ உள்ள முதன்மை பங்குகளில் அதாவது லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் அளவு குறைவாக இருக்கும், அதிலும் முக்கியமாக பங்கு சந்தை சரிவதற்கு முன்னர் அவர்கள் மெதுவாக இந்த முக்கிய பங்குகளில் இருந்து தங்கள் பணத்தை திரும்ப எடுப்பதைக்காணலாம்.அவர்கள் பெரும்பாலும் மிட் கேப் எனப்படும் நடுத்தர பங்குகளில் அதிகம் முதலீடு செய்திருப்பார்கள்.


மேலும் பங்கு சந்தை வளர்ச்சி என்பது அசுரத்தனமானது , இது ஒரு ஆரோக்கியமான நிலையே இல்லை எனலாம், நமது தேசிய உற்பத்தி வளர்ச்சி gdp 8 சதம் , ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நமது பங்கு சந்தை வளர்ச்சி 800 சதம் அதிகரித்துள்ளது, இது ஒரு வீக்கம் போன்றது தானே!


கடந்த காலங்களில் ஏற்பட்ட பங்கு சரிவுகளின் போது ஏற்பட்ட சென்செக்ஸ் மாற்றங்கள்
Top 5 market falls
Date Close Change % Chg
January 21, 08 17605.35 -1408.00 -7.41
March 3, 08 16677.88 -901.00 -5.12
January 22, 08 16729.94 -875.00 -4.97
February 11, 08 16630.91 -834.00 -4.78
May 18, 06 11391.43 -826.00 -6.76


ஜனவரி மாதம் ஏற்பட்ட சரிவில் மட்டும் 2,78,593 கோடி ரூபாய், சந்தை மதிப்பில் இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளார்கள்.


2006 இல் 44.17 சதம் மிட் கேப்பில் fii முதலீடு செய்தார்கள் அதன் விளைவாக bse sensex 38.84 சதம் உயர்ந்து , குறியீட்டு எண் 12,454.42 இல் இருந்து 17,281.10 ஆக உயர்ந்தது. bse-30, nifty-50 இல் லார்ஜ் கேப், மிட் கேப் என எல்லாமே இருக்கும், அதில் இருக்கும் மிட் கேப் பங்குகள் இவை.


ஏற்கனவே சொன்னது போல லார்ஜ் கேப் புளு சிப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யக்காரணம் அவற்றின் விலை எப்போதுமே அதிகமா இருப்பது, எனவே குறைந்த "volume of shares" தான் வாங்க முடியும். மேலும் வளர்ச்சி விகிதம் வேகமாகவும், அதிகமாகவும் இருக்காது. அதே சமயத்தில் மிட் கேப் களில் அதிக "volume of shares" வாங்கலாம், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.


ஆனால் fii விற்க ஆரம்பிக்கும் போது பெரிய புளுசிப் ஷேர்களையும் விற்பார்கள், supply and demand தான் பங்கு வர்த்தகத்தை நிர்ணயிக்கிறது , எனவே பெரிய அளவில் திடீர் என பங்குகள் சந்தையில் விற்கப்பட்டு , வாங்க கிடைத்தால் demand குறைவது இயல்பு தானே. எனவே ஒட்டு மொத்தமா பங்கு வணிகத்தின் நிலைத்தன்மை பாதிக்கும். இதன் விளைவாக ஒரு பயத்தில் சில்லறை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பொதுமக்களும் பங்குகளை விற்கப்பார்ப்பார்கள், எனவே சர்வ நாசம் ஏற்படுகிறது.இதுவே சரிவின் மூல காரணம்.


அதே போன்று fii முதலீடு அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்கு உடனே மேலே போகும், fii எப்படி தங்கள் முதலீட்டினை எப்படி பிரித்து முதலீடு செய்கிறார்கள்(pattern of investment or portfolio) என்பதைப்பார்த்தாலே எந்த பங்கு மேலே போகும் என்று சொல்ல முடியும்.


பங்கு சந்தை தரகர்கள் , ஆலோசகர்களுக்கு முன் கூட்டியே fii முதலீடு பாயப்போகும் திசை தெரிவதால் தான் அவர்கள் பாதுகாப்பாக இயங்குகிறார்கள், இதன் அடிப்படையில் தான் ஷேர் டிப்ஸ் தருவதும்.இணையத்தின் மூலம் பல பங்கு வர்த்தக தளங்களிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள fii மூலதனத்தின் அளவைப்பார்க்க முடியும்.ஆனால் இவை கடந்த கால நிலவரத்தை காட்டுவது, நாளை, இன்று எதை fii கள் வாங்க போகின்றது என்பதை யூகம் தான் செய்ய வேண்டும்.


அந்நிய முதலீடு என்று இல்லை உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின(DII) செயல்பாடும் தரகர்களுக்கு தெரியும், ஏன் எனில் அவர்கள் தானே யார் , யார் பங்கு வாங்க "quote "கேட்டு இருக்கிறார்கள் என்பதை அறிவார்கள், அவர்கள் தானே நமக்கு வாங்கி தருபவர்கள். எந்த செக்டாரில் அதிகம் நிறுவன பங்களிப்பு இருக்கோ அது மேலே போகும் இதை சில்லரை பங்கு விற்பனையாளர்களும் பயன்ப்படுத்திக்கொண்டால் லாபம் நிச்சமே, ஆனால் இந்த கணிப்பு எல்லாருக்கும் கை வருமா?


பங்கு சந்தையில் சாதரண பொது ஜனம் அடிப்பட காரணம், அவர்கள் நேரடியாக எதையும் வாங்க முடியாது தரகர்களிடம் சொல்லி நம் சார்பாக அவர்களை வாங்க வைக்க வேண்டும். முன்னர் எல்லாம் நாம் ஒரு பங்கினை வாங்க முயலும் போது அப்போது என்ன விலை இருக்கிறதோ அதை விட கொஞ்சம் உயர்த்தி தான் quote செய்ய வேணும் , அப்படி ஒரு விலைக்குறிப்பிட்டு சொன்னால் 24 மணி நேரங்களுக்கு பின்னரே விற்பனை உறுதீ செய்யப்படும். இந்த டைம் கேப்பில் அங்கே சந்தையில் நாம் கேட்ட பங்கு சரிந்தாலும் , அடுத்த நாள் நாம் முதல் நாள் கேட்ட விலைக்கு வாங்கியது என்று கொடுப்பார்கள்.


உதாரணமாக , முதல் நாள் 100 விலைக்கு போன ஒரு பங்கினை , 110 ரூபாய் என நாம் விலை வைத்து வாங்க சொல்லிவிட்டோம், நாம் சொன்ன பிறகு அந்த பங்கு அந்த நாளின் மாலையில் சரிந்து 90 ரூபாய் என்று ஆனாலும் அதற்கு முன்னரே நமது பங்கு தரகர் அதனை 110 ரூபாய்க்கு வாங்கி நமக்கு தந்து விடுவார். இது நமக்கு அடுத்த நாள் தான் தெரிய வரும். அப்போது நாம் பங்கினை வாங்கிய போதே ஒரு பங்கிற்கு 20 ரூபாய் நட்டத்தில் இருப்போம்.


இப்போது தான் இணையம் வழி வர்த்தகம் நடைப்பெறுகிறதே இந்த பிரச்சினை இருக்காதே எனலாம். இணையத்திலும் நமக்கு 1 மணி நேரம் காலக்கெடு விதிக்கிறார்கள், எனவே ஒரு மணி நேரத்தில் அந்த பங்கு சரிந்தால் அதே போன்ற நட்டம் ஏற்படும். நாம் வாங்கும் பங்கு நல்ல நிறுவனமாக இருந்தால் பின்னர் மேம்பாடு காணும் இல்லை எனில் கீழே தான் போகும்.எனவே இணையம் வந்ததால் பொது ஜனம் பங்கு சந்தையில் பெரிதாக பாதுகாப்பாக இல்லை, அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களே நேரடியாக பார்த்து பங்கு வணிகம் செய்கிறார்கள் என்று.


சரிவு ஏற்படும் போது , வாங்க சொன்னால் பங்கு தரகர்கள் அதான் சாக்கு என்று சரியும் பங்கினையும் வாங்கி தள்ளுவார்கள், ஆனால் சரியும் பங்கினை வைத்திருந்து நாம் விற்க சொன்னால் விற்று தர மாட்டார்கள். மேலும் ஸ்டாப் லாஸ் என்று ஒரு அமைப்பு இருக்கு அதனைக்கொண்டு நட்டம் ஏற்படுவதை தடுக்கலாம் என்பார்கள், அதாவது ஒரு பங்கு இந்த விலைக்கு கீழ் போகும் என தெரிந்தால் என் அனுதிக்கு காத்திராமல் விற்று விடுங்கள் என தரகருக்கு நாம் முன் கூட்டியே அனுமதி தருவது, ஆனால் சரிவின் போது அது வேலை செய்யாது, அதில் ஒரு கண்டிஷன் வைத்திருக்கிறார்கள் எதிர்ப்பாராத சந்தர்ப்பங்களின் போது ஸ்டாப் லாஸ் அமைப்பின் படி செயல் பட முடியாது!


gvk power infra structure இல் ffi இன் முதலீடு உயர்ந்தபோது 267% லாபம் தந்தது பங்கு வைத்திருந்தவர்களுக்கு, அதே சமயம் அம்புஜா சிமெண்டில் இருந்து fii முதலீட்டு விகிதம் குறைந்ததும் , 160 ரூபாய் என உச்சம் தொட்ட அப்பங்கு மிக குறைவாக 110 ரூபாய் தொட்டது, தற்போது 120 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலம் fii களின் முதலீட்டால் ஒரு பங்கினை மேலே கொண்டுபோக முடியும் என்பது தெரிய வரும்.


இந்திய நிறுவன பங்களிப்பு பங்கு சந்தையில் அதிகம் இருந்தாலும், அவர்கள் நினைத்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் யூகத்தின் அடிப்படையில் குறுகியக்காலத்தில் லாபம் சம்பாதித்து வெளியேரும் fii க்கள் நினைத்தால் பங்கு சந்தையை சுருட்டி வீசிவிடுவார்கள் என்பதே கசப்பானா உண்மை.பங்கு சந்தை சரியும் போதெல்லாம் lic, uti, icici போன்ற இந்திய நிறுவனங்களை முதலீடு செயய் வைத்தே நிதி அமைச்சகம் சரிவை தடுக்கிறது, அந்த நிறுவனங்களின் பணம் மக்கள் பணமே , அதை லாபமாக fii க்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள், ஆனால் அது யாருக்கு போகுதுனு அந்த fii நடத்துறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி ரகசியம் காத்து செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மேனேஜர்கள் பில்லியனில் சம்பளம் வாங்குகிறார்களாம், ரெனைசன்ஸ் டெக்னாலஜிஸ் என்ற fii நிறுவனத்தலைவரின் ஆண்டு சம்பளம் 1.7 பில்லியன் டாலர்கள் என்று பங்கு வணிக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.