Monday, October 24, 2011

கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை



கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை


அணு ஆற்றல் என்பது ஆபத்தான ஒன்றே அதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது, அப்படியில்லை என்பவர்கள் எல்லாம் அரசியல் மற்றும் வியாபார புத்திசால 07;களே. அணு சக்திக்கு மாற்றாக உள்ள ஆற்றல் உற்பத்தி முறைகள்,

#அனல்
,#புனல்,
#கடல் அலை,
#காற்றாலை,
#சூரிய சக்தி,
#புவி வெப்ப சக்தி,
#இயற்கை எரிவாயு,
#குப்பைகள் மறுசுழற்சி எரிவாயு,

என பல பாதகமில்லா அல்லது குறைவான பாதகம் கொண்ட மாற்று ஆற்றல் உற்பத்தி முறைகள் உள்ளன, இணையத்தினால் நீங்களே அறிந 21;து; கொள்ள முடியும்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் போட்ட மாற்று ஆற்றல் குறித்த பதிவு.

கடலில் அலை அடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கூடன்குளம் அணுத்திட்டத்தின் மீதான எனது சந்தேகங்கள் சில இருக்கு,ரஷ்ய பொருளாதாரம் சரிந்த பின்னால் அங்கு ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டன அவற்றுக்காக தாயாரிக்கப்பட்ட அணு உலைகள் அப்படியே கிடக்கலாம் அவற்றை ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் ஆக இந்தியாவின் தலையில் கட்டுகிறார்களோ என்பது தான்.

மேலும் EVVR-1000 வகை அணு உலைகள் 1977 இல் டிசைன் செய்யப்பட்டவை, அதனை வடிவமைத்தவர் கூட விமான விபத்தில் போய் சேர்ந்துட்டார். இப்போதும் அவை இந்த காலத்திற்கு ஏற்றார் போல இருக்குமா? போன வருடம் வாங்கிய கணிணியே இந்த வருடம் புராதண பொருள் ஆகி விடுகிறது.

ஆனால் ரஷ்யா இந்த EVVR- 1000(water coold water moderated reactor) வகை அணு உலையை மேம்படுத்தி இருக்கோம் என்று சொல்கிறது ,யாரை வைத்து, எப்படி? வடிவமைத்தவர் தான் போய் சேர்ந்துட்டாரே? மேலும் இப்போ ரஷ்யா ஒரே ஒரு அணு உலை திட்டத்தை மட்டும் கையில் வைத்துள்ளது ஆனால் அதற்கு EVVR-1200 என புதிதாக சுட சுட வேறு வகை அணு உலை வடிவமைக்கிறார்கள். Ī;4;ம்மக்கிட்ட பழச வித்து அவங்க புதுசா செய்கிறார்கள் போல!

பொதுவாக எல்லா நாட்டு தயாரிப்பு அணு உலைகளும் ஆபத்தானவையே அதை விட ரஷ்ய தயாரிப்பு மீது தான் சந்தேகமா இருக்கு, காரணம் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் தரம் குறித்து அக்கரை கொள்பவர்கள் அல்ல. புள்ளையார் புடிக்க போய் கொரங்கு வந்தாலும் இதான்பா புள்ளையார் மாறு வேடத்தில இருக்கார்னு சொல்றவங்க.

மேலும் உலக அளவில் காப்புரிமை பெற்ற சில சிறப்பு தொழில்நுட்பங்கள் இருக்கு, அதனை எல்லாம் காசுக்கொடுத்து வாங்க மாட்டார்கள், அதற்கு பதில் ஜெனிரிக்கா இருக்கும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இவர்களே ஒரு மாதிரி தயாரித்து பயன்ப்படுத்திக்கொள்வார்கள்.

உதாரணமாக ரஷ்ய தயாரிப்பு தொலைக்காட்சிகளை அருகில் இருந்து பார்க்க கூடாது...ஏன் கண் கெட்டு விடுமா? இல்லை உயிரே போய் விடும் , எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும்.
தொலைக்காட்சிப்பெட்டியில் சிஆர்டி திரை சூடு ஆவதை தடுக்க ஒரு மின்சுற்று உள்ளது இது காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பம், இதனை வாங்கி பயன்ப்படுத்தாமல், தூரமா உட்கார்ந்து பாருங்க, ரொம்ப நேரம் டீவி பார்க்காதிங்க 85;ு எச்சரிக்கை நோட்டிஸ் கொடுத்துட்டாங்க.நம்ம ஊரில் கூட சில சமயம் டீவி வெடித்து விட்டதுனு செய்தி வரும் ,காரணம் அந்த மின்சுற்று ஏதோ காரணத்தால் பழுதாவதால் தான். இப்போ திறந்த பொருளாதாரத்திற்கு வந்த பின் இறக்குமதி தொலைக்காட்சிப்பெட்டிகளை பயம் இல்லாமல் பயன்ப்படுத்துறாங்க.

அங்கே அதிகம் விற்பனையாகும் டீவி நம்ம ஊரு ஒனிடா டீவி தான். பத்துலட்சம் பெட்டிகளுக்கு மேல் விற்று சாதனைப்படைத்துள்ளது ஒனிடா! இதனை ஒனிடா டீவி தளத்தில் காணலாம்.

இதனை எதற்கு சொன்னேன் என்றால் சாதாரணமான டீவிக்கே இப்படினா அவங்க அணு உலை எப்படி இருக்கும்? அவங்க வெடிக்காதுனு சொல்றதுக்கு என்ன உத்திரவாதம்...கியாரண்டியோ, வாரண்டியோ கொடுக்க நாங்க என்ன பிரஷ்ஷர் குக்கரா விக்கிறோம்னு சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

அதனால் தான் விபத்து ஏற்பட்டால் அது எங்களைக்கட்டுப்படுத்தாது, உங்க பொறுப்புனு இப்பவே நழுவிட்டாங்க.

சரி மக்களே இவ்வளவு நேரம் பாதகங்களைப்பார்த்தோம், இப்போ இங்கே நடக்கிறப்போறாட்டத்தின் பரிமாணத்தைப் பார்ப்போம், அதுக்குள்ள அரசியல்,சுயநலம், விளம்பர மோகம் எல்லாம் கலவையா ஒளிந்து இருக்கு.

கூடன்குளம் ஏன் கொதிக்கிறது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பொதுவாக ஒரு சந்தேகத்தினை எல்லாம் கேட்கிறாங்க, 1988 திட்டம் அறிவிக்கப்பட்டு 20 வருடமா இதோ அதோனு இழுத்து முடியப்போற நேரத்தில ஏன் இந்த போராட்டம் என்பதே?

போராட்ட்தில் கலந்து கொண்டவர்கள் படங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன, அவர்களைப்பார்த்தால் அணு உலைக்கும் அடுப்பில வைக்கும் உலைக்கும் கூட வித்தியாசம் தெரியாது போல இருக்கு. பெரும்பாலும் இது போன்ற மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்றால் "அணு உலைனு சொல்றாங்க ஆபத்தானதுனு சொல்றாங்க ஆனால் அரசாங்கமே இதை செய்யுது, இனிமே நாங்க என்ன செய்றது.. எல்லாம் விதி...ஆண்டவன் இருக்கான் பார்த்துப்பான் என்று பெருமூச்சு விடுவார்கள் அவ்வளவே.



ஆரம்பத்தில் இத்தனை தீவிரம் இல்லாத போராட்டம் இப்போ மட்டும் ஏன் இப்படி தீவிரமாக? நியாயமான கேள்வி தான் ,வழக்கமாக சில ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு, சாலை சரியில்லை, பஸ் வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவார்கள், கடை அடைப்பு , ஏன் உண்ணாவிரதம் கூட இருப்பார்கள், சரியாக கண்டுக்கொள்ளப்படவில்லை எனில் தேர்தல் காலத்தில் , தேர்தல் புறக்கணிப்பு என ஒரு குண்டுப்போடுவார்கள், அவ்வளவு தான் மாவட்ட ஆட்சியர், எம்.எல் ஏ, மந்திரி என எல்லாம் ஓடி வந்து சமரசம் பேசி குறைகள் களையப்படும் என்று வாக்குறுதி அளிப்பார்கள்.

ஆனால் கூடங்குளத்தில் போராடுபவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் சரி இப்போதைய உள்ளாட்சி தேர்தலின் போதும் சரி தேர்தல் புறக்கணிப்பு என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்ப்படுத்தவில்லை, ஏன் மந்திரம் மறந்து போச்சா? இதில் தேர்தலுக்காக ஒரு நாள் போராட்டத்துக்கு லீவ் எல்லாம் விட்டார்கள்.மாநில அரசை கோபப்படுத்தக்கூடாது என்பது போல அது இருந்தது.

இதில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாகவே தோன்றியது. அது என்ன?

எனவே எனக்குள் தூங்கிகொண்டிருந்த ' துப்பறியும் ஷெர்லாக்ஸ் ஜேம்ஸ் சாம்பு லால்"  விழித்துக்கொண்டான், என்னளவில் சிறிது முயற்சி செய்தேன், ஒரு தென்மாவட்ட நண்பரைப்பிடித்து கேட்டேன், அவர் லைட்டாக சொன்னாலும்,சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. மேற்கொண்டு தெரிந்து கொள்ள சரி நாமும் இணையத்தை துழாவலாம் அது என்ன பூட்டியா இருக்குனு தேடினேன், அவர் சொன்னது உண்மை தான் என்பது போலவே செய்திகள் கிடைத்தன.

நான் பார்த்ததை பார்வைக்கு வைக்கிறேன், இதில் தனிமனித விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை, அப்படி நினைத்து யாரேனும் கச்சைக்கட்டிக்கொண்டு வந்தாலும் கவலை இல்லை!

கூடன்குளம் போராட்டம் திடீர் என்று ஒரு புதிய சக்தி பெற்றதற்கு பின்னால் இருப்பது ஒரு தனி மனிதரே,காரணம் மணல்!!! ஆம் மணல் தான் கார்னெட் மணல் தொழில். ஏற்கனவே 2007 இல் டாடா கார்னெட் மணல் , டைடானியம் டை ஆக்சைட் தொழில் தொடங்க வந்த போதும் விவசாயிகள் போர்வையில் போராட்டம் நடத்தி ஆனானப்பட்ட டாடாவுக்கே டாடா காட்டியவர் இந்த மணல் மனிதர்.

அனுசக்திக்கும் , கார்னெட் மணலுக்குமென்ன சம்பந்தம், அப்போ டாடா வை விரட்டினார் இப்போ ஏன் ?
பதில் இந்த செய்தியைப்பாருங்க, ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புதின் இந்தியா வந்த போது வெளியானது. கூடன்குளத்தில் அணு உலை அமைப்பதுடன் இந்திய-ரஷ்ய கூட்டுறவில் டைட்டானியம் டை ஆக்சைட் ஆலை அமைக்கப்படும் என்று 62;ப்பந்தம் கையொப்பம் ஆனதாக கூறுகிறது.

//Russian President Vladimir Putin arrived in India earlier in the day on a visit aimed at boosting trade ties and securing military and energy deals. Defense Minister Sergei Ivanov is also in the country, and has signed several arms deals, including an agreement on the licensed production two-day visit, the Russian president is expected to sign agreements on the construction of additional reactors for the Kudankulam NPP and of new nuclear plants in India under Russian designs, as well as setting up a Russian-Indian joint venture for the production of titanium dioxide and other titanium products.//

இப்போ தெரிஞ்சு இருக்குமே எலி ஏன் அம்மணமா ஓடுச்சுனு!

கஜினி முகம்மது, இந்தியாவின் மீது 17 முறை படை எடுத்தான் எனப்படித்துள்ளோம், உண்மையில் அவை படை எடுப்பே அல்ல கொள்ளை அடிக்க வந்த தாக்குதல்.முதல் முறை கஜினி முகம்மது வந்த போதே யாராவது இந்திய மன்னர்கள் செமத்தியாக கவனித்து இருந்தால் அவன் ஏன் 17 முறை மீண்டும் மீண்டும் படை/கொள்ளையடிக்க வந்திருக்கப்போகிறான்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் கூடன்குளத்திற்கு முன்னரே தமிழகத்தில் கல்பாக்கத்தில் அணு உலை அமைக்கப்பட்டு செயல்ப்பட்டு வருகிறது இந்த அணு சக்தி எதிர்ப்பாளர்கள் அன்றே கல்ப்பாக்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி இருந்தால் தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு இருக்கு என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு வேளை எதிர்ப்பையும் மீறி கல்ப்பாக்கத்தில் அணு உலை அமைக்கப்பட்டிருந்தாலும் , மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் அணு உலை வைக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு வந்திருக்காது. வேறு எதாவது மாநிலம் பார்த்திருப்பார்கள் கூடன் குளம் தப்பியிருக்கும்.கேரளாவில் 50;ரம்பத்திலேயே சரியாக எதிர்ப்பு காட்டினார்கள். எனவே தான் அங்கிருந்து அணு உலை கூடன் குளம் வந்தது.

நாம் அப்போது சரியான எதிர்ப்புக்காட்டவில்லை. இந்த 58;திர்ப்பாளர்களும் நேற்றுப்பிறந்து இன்று வளர்ந்து போராட்டத்தில் குதிக்கவில்லை. தொடர்ந்து கல்ப்பாக்கத்தில் போராடி இருக்கலாம். இப்போது கல்ப்பாக்கத்தில் உள்ள அணு உலை அதன் செயல்பாட்டின் இறுதி நிலையில் உள்ளது,ஒரு அணு உலையின் சராசரி ஆயுட்காலம் 35 ஆண்டுகளே, பின்னர் புதுப்பித்தால் மேலும் 15 ஆண்டுகள் ஓடும். புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். போதும் இதோடு மூடி விடுங்கள் என்று இவர்கள் போராடலாமே, ஒரு வேளை நல்ல ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை போலும், கிடைத்தால் போராடுவார்களாயிருக்கும்!
----------------------------------------------

சரி ரஷ்யா கூட ஒப்பந்தம் போட்டா  என்ன அது இந்தியாவில வேற எங்காவது அமைக்கப்போறாங்க ,கூடன்குளத்துக்கா வருவாங்கனு கேட்கலாம், ஆம் அங்கே தான் வருவாங்க வேற வழியில்லை, தென் தமிழ் மாவட்ட கடல் ஓர கார்னெட் மணல் தான் இந்தியாவிலேயே தரமானது, ஏன் உலகத்திலேயே நல்ல தரமானதும் கூட.மேலும் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் டைட்டானியம் ஆலைகள் கடந்த சில ஆண்டுகளில் அரசின் ஆதரவில் வந்து விட்டது.

உலக டைட்டானியம் டை ஆக்சைட் தேவையில் 75% தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது, அதில் தமிழகத்தின் பங்கு மிக மிக அதிகம்.இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் தான் டைட்டானியம் அதிகம், தரமானதும் கூட. தமிழகத்தில ரொம்ப நாளா இந்த தொழில் நடக்கிறது.அந்த மணல் மனிதர் இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவிலும் பெரிய கார்னெட் தொழிலதிபர்.அவர்கள் தளத்தில் உங்களுக்கு எத்தனை டன் டைட்டானியம் வேண்டுமானாலும் எங்களால் சப்ளை செய்ய முடியும் எனப்பெருமையாக போட்டிருப்பதைக்காணாலாம்.

இது மட்டும் காரணம் அல்ல , சமிப காலமாக கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்கம், ஒரிசா , மேற்கில் கேரளா என புதிய கார்னெட் ஆலைகள் 49;ரசாலோ அல்லது தனியார் -ரஷ்ய கூட்டுடனோ; அமைக்கப்பட்டுவிட்டது.இப்போ அதிக வளமுள்ள தென் தமிழகத்தில் மட்டும் தனியார் ஒருவர் மட்டுமே கோலோச்சுகிறார். எனவே அங்கே ரஷ்ய-இந்திய ஆலை வர வாய்ப்பு மிக அதிகம்.

மேலும் சில டைட்டானியம் டை ஆக்ஸைட் ஆலைகள் பற்றிய செய்திகள்.

//Orissa titanium plant offers villagers jobs, work resumes
07-07-2008 18:32:04 by IANS ( 1 comment )
//Bhubaneswar, July 7 (IANS) The work at the site of a proposed titanium dioxide plant in Orissa’s Ganjam district was resumed after the company assured employment opportunities to villagers affected by the project, a government official said Monday. “The local villagers and administration allowed the company to resume work after it assured that it will provide work on priority basis to all the people who lost land due to the project,” additional district magistrate Madan Mohan Deo told IANS.//

//Kolkata-based Saraf Group and the Russian government are jointly setting up the plant in two phases in over 600 acres of land near Chhatrapur town, about 175 km from here.
The integrated plant will produce 40,000 tonnes per annum of titanium dioxide per year. The first phase of the project, with an investment of $250 million, is expected to turn commercial by the end of 2009.//
--------------------------------------------------

Kollam, Feb 27 (IANS) India Sunday join a select band of titamium sponge producers with Defence Minister A.K. Antony inaugurated a 500 tonne-capacity plant at Chavara near here.A select group of nations like the US, China, Japan and Britain have the technology for industrial-scale production of titanium sponge
-----------------------------------------------------

அதெல்லாம் இருக்கட்டும் அரசு ஆரம்பித்தால் என்ன அது ஒரு பக்கம் ,இவர் ஒரு பக்கம் நடத்தப்போறங்க எனலாம் . ஆனால் மணல் மனிதரின் பாராக்கிரமங்களைப் பார்த்தால் அவர் விட்டுக்கொடுக்க முன்வர மாட்டார் என்பது புரியும்.மேலும் மிக அதிக அளவில் முதலீடும் , 15 கிலோ மீட்டர் கடற்கரையை அரசிடம் இருந்து 40 ஆண்டு குத்தகை எடுத்துள்ளார்.


அங்கே
பீச் மினரல்ஸ் </span>என கம்பெனி வைத்துள்ளார், இது கூடன்குளத்தில் இருந்து கூப்பிடு தொலைவே.அது போக சொந்தமாக தேரிக்காட்டில் 2300 ஏக்கர் நிலம்
வளைத்துப்போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பினாமி நிலம், பொறம்போக்கு இடம் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில், இதனை எப்படி விடுவார். தூத்துக்குடியில் இருந்து கன்யாகுமரி வரை கடற்கரை அவரது கட்டுப்பாட்டில்.
மேலும் தற்போது அங்கே செயல்பட்டு வந்த கில்பர்ன் கெமிக்கல்ஸ் எனப்படும்
மற்றொரு டைட்டானியம்ம் டை ஆக்சைட் ஆலையும் வாங்கி விட்டார். இனி அவரது ஏக போகம் தான் அங்கே.

கார்னெட் மணல் அள்ளப்படும் இடங்களைக்காட்டும் படம்:





மணல் மனிதரின் கார்னெட் தொழில் சம்பந்தப்பட்ட செய்திக்குறிப்புகள்.



V.V. Mineral is the only company in India with a 15km stretch of beach area under a mining lease for 40 years. This ensures a continuous deposition of placer minerals from the Gulf of Mannar. The gulf's geological characteristics, typical wave action and beach structure make it a highly valuable zone for continuous deposition of heavy minerals like Garnet, Ilmenite, Rutile and Zircon. Another 2,300 acres of heavy minerals-rich land add to our total annual output of 150,000 metric tonnes of garnet ,2,25,000 metric tonnes of ilmenite, 12000 M.Tons of Zircon and 5000 M.Tons of Rutile.
---------------------------------------------------------------------------------------

Kilburn Chemicals sells TiO2 division
Kilburn Chemicals Ltd (KCL), a producer of anatase grade titanium dioxide, will sell its chemical division producing anatase grade titanium dioxide to S Vaikundarajan of partnership firm V V Mineral, one of the country’s largest producers of garnet & ilmenite, for an estimated Rs.110 crore, KCL said in a statement.


KCL has a manufacturing plant in Tuticorin, Tamil Nadu. KCL also manufactures the by-product ferrous sulphate. V V Minerals, established in 1989, is based in Tirunelveli, in Tamil Nadu and caters to Europe, Middle East, East Asia, Australia and USA.
Titanium Dioxide is a vital ingredient for diverse industrial applications and is one of the most commonly-used white pigment in the world. It is used for a variety of applications like manufacturing of paint, rubber, paper, detergents, cosmetics, printing inks, textiles, plastics among other products.
--------------------------------------------------------

 மணல் மனிதரின் ஆலையில் வேலை செய்யும் பெண்கள், ஆண்கள், மேலும் சம்பளம் கொடுத்து ஊர் மக்கள் என முறை வைத்து ஆட்களை அனுப்புவதுடன், போராட்டத்தின் ஸ்பான்சரும் அவரே.கூடவே மிஷனரிகள், இன்ன பிறர் என சரியாக காய் நகர்த்தி கொண்டு போகிறார் என தோன்றுகிற;து.போராட்டம் நடத்தினால் தான் நாளைக்கு, வேலை ,அல்லது இழப்பீடு எல்லாம் கிடைக்கும் வரலைனா அரசாங்கம் கண்டுக்காது போன்ற நயமான அழைப்புகளும் உண்டு.

ஒரு வேளை அந்த மக்கள் பாவம் நல்ல மனுசன் அணு உலைக்கு எதிராக நல்லா ஆதரவு தருகிறார் என நினைத்துக்கொண்டிருக்கலாம்.அவர் மணலுக்காக ஆதரவு தருகிறார் என தெரியாமலே கூட இருக்கலாம்.மணல் மனிதர் பின் புலத்தில் இருப்பதால் தான் தேர்தல் புறக்கணிப்பு அஸ்திரம் போராட்டத்தில் பயன்ப்படுத்தப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலும் இப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலும் அம்மையாருக்கு மிக முக்கியமானவை, எனவே அம்மைக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார் அவர்.

ஒரு வேளைப்போராட்டம் வெற்றிப்பெற்றால் அணு உலையில் இருந்து மக்களும் தப்பிப்பார்கள், அவருக்கு மணலும் தப்பிக்குமĮ1;!

இந்திய அரசாங்கம் என்று இல்லை எந்த அரசுமே இந்த பிடிவாதம் கொண்டவையே,எனவே இவ்வளவு தூரம் வந்த திட்டத்தை கை விடாமல் மாற்று வழியில் மணல் மனிதரை மடக்கிடும் என தோன்றுகிறது, உங்க கார்னெட் பிசினெசுக்கு பங்கம் வராது, அங்கே ரஷ்ய கூட்டு ஆலை வராதுனு உத்திரவாதம் தந்தா போதும், அவர் கழண்டுப்பார், முன்னால் நிற்கும் சமூகப்போராளிகளுக்கு காத்து இறங்கிடும், நாங்க போரடினோம் என்னப்பண்றதுனு சொல்லி போராளிப்பட்டத்தை வாங்கிக்கிட்டு போய்டுவாங்க பாவம் மக்கள் தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும் வழக்கம் போல விதியை நொந்து வாழ்வார்கள்.

இதில் உள்ள அரசியல் என்னவென்றால், அம்மையாருக்கும் காங்கிரசுக்கும் ஆகாது, அம்மையாரின் ஆதரவு பெற்றவர் மணல் மனிதர், கடந்த சட்ட மன்ற தேர்தலில் "ரொம்ப" உதவியவர் மணல்மனிதர். தற்சமயம் காங்கிரசுக்கு குடைச்சல் கொடுக்க இது உதவும் என்பதால் தான் சாத்வீகமாக இருக்கிறார் அம்மையார். இல்லையென்றால் "இரும்புக்கரம்"பேசி இருக்கும்!

இப்போ காங்கிரசே பெங்களூரு வழக்கு விவகாரத்தில் சாதகம், திமுக கழட்டி விடல்,மேலும் சில முக்கிய புள்ளிகள் திஹார் கைது என அம்மைக்கு ஆதரவுக்காட்டினால் போதும், திமுகவின் இடத்தில் அம்மையார் ஒட்டிக்கொள்வார், மணல்மனிதரையும் தட்டி வைத்து விடுவார். பின்னர் சமூகப்போராளிகளும்" சமூகப்போராளிப்பட்டத்தை" தூக்கி தோளில் போட்டுகொண்டு போய்டுவாங்க பாவம் மக்கள் , வழக்கம் போல அவர்களுக்கு அல்வா தான்! ஆனால் இந்த தடவை ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா!

பின்குறிப்பு:

#எந்த ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ எண்ணி இப்பதிவிடவில்லை, எல்லாவற்றுக்குமே ஒரு மாற்றுப்பார்வை உண்டு அது போன்றதே இதுவும் எனவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

# இங்கு தரப்பட்டுள்ள செய்தி குறிப்புகள், புள்ளி விவரங்கள் அனைத்தும் சம்ப ந்தப்பட்ட இணைய தளங்களில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது, நம்பகத்தன்மை அவற்றை சார்ந்தே!

சுட்டிகள்:

# http://www.energy-daily.com/reports/Russia_To_Build_Four_More_Nuclear_Reactors_In_India_999.html

# http://www.vvmineral.com/mining.htm

#http://www.thaindian.com/newsportal/business/orissa-titanium-plant-offers-villagers-jobs-work-resumes_10068743.html

# http://www.chemindigest.com/news.html

Tuesday, November 10, 2009

சிரிப்பொலி!

ஷங்கரோட எந்திரன் படத்தில கமல ஹாசன் நடித்திருந்தா என்ன பெயர் வைத்திருப்பார்?

எந்திரன் சந்திரன்!
---------------------------------------------------
மணிரத்னம் படத்தில் மு.க அழகிரி கதாநாயகனா நடிக்கிறார்...
படம் பேர் ?
மதுர நாயகன்!
--------------------------------------------------
நடிகர் ஜீவா அகோரியா ஒரு படத்தில் நடிக்கிறார்...

படம் பெயர் என்ன?

சிவா மனசுல பக்தி!
---------------------------------------------------
முழுவதும் தென் ஆப்பிரிக்காவில எடுக்கிற ஒரு படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.

பேர் என்ன?

கேப்டவுன் பிரபாகரன்!
-----------------------------------------------------
ஷூ கடை வைத்திருப்பவர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தால் படத்துக்கு என்னப்பேர் வைப்பாங்க?

குவாண்டம் ஆப் ஷூலேஸ்!
-----------------------------------------------------

தமிழ் படங்களை ரிமேக் செய்தால் நம்ம ஊர் பிரபலங்கள் நடிக்க விரும்பும் படங்கள்.

கலைஞர்- ஆசையில் ஓர் கடிதம்!

ஸ்டாலின் - அடுத்த வாரிசு!

உதயநிதி ஸ்டாலின் - ஒரு வாரிசு உருவாகிறது!

சுப்ரமணியம் சுவாமி- ஜகதலப்பிரதாபன்! அல்லது மணல் கயிறு!

கார்த்திக்- மாயாவி.

வைகோ- அக்ரஹாரத்தில் கழுதை!

மருத்துவர் ராமதாஸ் - பூந்தோட்ட காவல்காரன் அல்லது நாடோடிகள்!

ஜெயலலிதா - இருவர்

தா.பாண்டியன் - தோழா!

சோனியா காந்தி!- இட்டாலியன் ஜாப்(ஆங்கிலம்)

ராகுல் காந்தி - பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம் மு.க)

மம்தா பானர்ஜி - கிழக்கே போகும் ரயில்!

"ஸ்பெக்ட்ரம்" ராசா - அனுபவி ராஜா அனுபவி!

என்.கே.பி.பி.(எஸ்கேப்)ராஜா - சட்டம் என் கையில்!

விடுபட்ட மற்ற பெருந்தலைகளுக்கும் ஏற்ற மாதிரி ரீமேக்க படங்கள் இருந்தால் நீங்களும் சொல்லுங்க!

Monday, November 09, 2009

பெங்களூரு புத்தக விழா

பெங்களூருவில் பேலஸ் கிரவுண்டில் புத்தக கண்காட்சி நடப்பதாக "முற்போக்கு மற்றும் கலவரப் பதிவர்" தோழர் செந்தழல் ரவி!(இன்னும் பல பட்டங்களுக்கும் தகுதியானவரே, இடம் போதாமையால் இது மட்டும்) "பதிவிட்டிருந்தது சும்மா கிடந்த என் மனச்சங்கை ஊதிவிட்டிருந்தது, அதற்கேற்றவாறு பெங்களூருக்கு செல்லும் வாய்ப்பு வந்தது , அப்படியே புத்தக கண்காட்சியையும் ஒரு நடைப்போய்ப்பார்த்தாச்சு, பார்க்க மட்டுமே செய்தேன் எதுவும் வாங்கவில்லை.

மெஜஸ்டிக் கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சென்றேன் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக 100 வாங்கிக்கொண்டான்(ர்), ஆனால் வரும் போது மீட்டர் போட்ட ஆட்டோவில் 35 ரூபாய் தான் ஆச்சு! (அது வேறு வழி, இது வேறு வழியா எனத்தெரியவில்லை)அப்போது தான் நான் பல்பு வாங்கியது தெரிந்தது!


கண்காட்சி என்றார்கள் ஆனால் அங்கே யாரும் கண்ணை தோண்டி காட்சிக்கு வைத்திருக்கவில்லை(கண்காட்சி என்பது தவறு கருத்துக்காட்சி தான் சரி என நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் சொன்னார்) , புத்தகங்கள் தான் அதுவும் பெரும்பாலும் கனட, ஹிந்தி , ஆங்கிலம் கொஞ்சமே கொஞ்சம் தமிழ் நூல்கள் கொண்ட கடைகளை விரிந்திருந்தார்கள்.

மழைக்கு பயமில்லாத உள்ளரங்குகளில் அமைத்திருந்தார்கள். நுழைவு சீட்டுக்கொடுக்கும் இடம் கொஞ்சம் உள் தள்ளி இருந்ததால் பெரும்பாலோர் /சிலர் அதற்கு முன்னரே இருந்த வாசல் வழி சும்மாவே போய்க்கொண்டிருந்தார்கள்.நான் டிக்கெட் எடுத்து தான் சென்றேன்(மொழி தெரியாத இடத்தில் வம்பு வேண்டாம் என்று தான்), 20 ரூபாய் , இது சென்னை புத்தக விழா கட்டணத்தை விட அதிகம்.ஆனாலும் வழ வழப்பான , மங்கலான அட்டைகளுடன் தடித்த , மெலிந்த என பல ரூபாய் விலைகளில் பல விதமான புத்தகங்கள் கண்களைக்காய்ச்சி எடுத்து விட்டது!

இரவு 8.30 வரைக்கும் என சொல்லி விட்டு 8 மணிக்கே கடையை மூட ஆரம்பித்து விட்டார்கள். அரங்கில் புத்தக விழா பேனர்களில் எல்லாம் ஒரு உப்புமா நடிகர் புத்தகம் வாசிப்பது போன்ற படத்தை பெரிதாக போட்டிருந்தார்கள், விளம்பர யுக்தியாம்!

இதற்கு மேலும் அதிகம் எழுதி எழுத்து வன்கொடுமை எதுவும் செய்யாமல் சுமாராக எடுத்த சில புகை இல்லாத(நிழல்) இல்லாத சில படங்களை மட்டும் பதிவில் போட்டு விட்டு எஸ் ஆகிக்கொள்கிறேன்!





நுழைவுவாயில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது!(மழை வந்து எனது திட்டத்தை எல்லாம் கெடுத்திருந்தது)

விஸ்தாரமான உணவகம்! நுழைவுக்கு அருகிலேயே உள்ளது.பிரெட் ஆம்லெட் கிடைக்கிறது வேறு என்ன வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.

அனுமதி சீட்டு வழங்கும் இடம்!

நூல் அரங்கம்.
சாகித்ய அகதமியின் அரங்கம்.

சென்னையை சேர்ந்த டவ் மல்டி மீடியாவின் அரங்கு.(பொதுவாகவே எல்லா அரங்குகளிலும் சொற்ப கூட்டமே இருந்தது) ஹாயாக தேநீர் பருகிக்கொண்டிருந்தார்கள்.
திருமகள் தமிழ் நூல் அரங்கம்

கிழக்கு பதிப்பத்தின் அரங்கம். நான் இங்கே வரும் போதெல்லாம் கடையை கட்டும் நேரம் ஆகி விட்டதால் தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டிருந்தார்கள்.

நேஷனல் புக் டிரஸ்ட்டின் அரங்கம்

ஆனந்த விகடன் அரங்கம்.
ஒரு தமிழ் ஆன்மீக நூல் பதிப்பகத்தின் அரங்கம்.
அரிய , மற்றும் பழமையான நூல் அரங்கம் என்றுப்போட்டிருந்தார்கள், அட்டை பிய்ந்த நூல்கள் எல்லாம் இருந்தது(எவ்வளவு பிய்ந்து இருக்கோ அவ்வளவு அரிய வகை போல).சென்னையில் பெல் ரோட்டில் இது போல பல கடைகள் இருக்கு என்பதால் அரங்கை அதிகம் ஆராயவில்லை.

எதை எடுத்தாலும் 50 ரூபாய் என சகாய விலையில் ஒரு கடை(வாசிக்க பிடிக்காத வகையில் பல நூல்கள் இருந்தது)

எதை எடுத்தாலும் 100 ரூபாய் தான் முன்னர் கூறிய அதே ரக நூல்கள் தான், ஒரு வேலை தம்கட்டி தேடினால் நல்ல நூல்கள் கிடைக்கலாம்.

விவசாயம் சம்பந்தமான குறுந்தகடுகள் வைந்திருந்தார்கள்.

இராம கிருஷ்ண மடத்தின் சார்பில் அனைவருக்கும் இலவசமாக சிறு கையேடுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் இங்கே!

இந்த கடையில் சிறிய கையடக்கமான மின்சார தையல் எந்திரங்கள் விற்றார்கள் (படித்துக்கிழிந்த நூல்களை தைக்குமா எனத்தெரியவில்லை, நூல் கொண்டு "நூல்" தைக்க முடியாதா?).

இன்னும் கொஞ்சம் படங்கள் உள்ளன ஆனால் அவை எல்லாம் இன்னும் சுமாராகவே வந்திருக்கு , அதையும் போட்டு மக்களை பரிசோதிக்க விரும்பவில்லை.

Friday, November 06, 2009

நீள் உறக்கம்



ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனை பொதுவாக ஹைபர்னேஷன்(hibernation) என்பார்கள்.வெப்ப ரத்த உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கத்திற்கு தான் ஹைபர்னேஷன் என்று பெயர்.


அதுவே குளிர் ரத்த உயிரினங்கள் கோடையில் மேற்கொள்ளும் கோடை உறக்கத்திற்கு

எஸ்டிவேஷன்(estivation) என்று பெயர். அதுவே பூச்சிகள் மேற்கொள்ளும் நீண்ட உறக்கத்திற்கு டயாபாஸ்(diapause) என்று பெயர்.


இந்த மூன்றும் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளும் உறக்கம்,அதுவே மிகச்சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு பெயர் டோர்போர்(torpor).இது காலையில் தூங்கி இறவில் எழுவது அல்லது இரவில் தூங்கி காலையில் எழுவது போன்றது இதனை சாதரணமாக கால் செண்டர் பார்டிகளும், மனிதர்களும் செய்வது தான்.


ஆனால் ஹைபர்னேஷன்,எஸ்டிவேஷன், டயாபாஸ் எல்லாம் சில மாதங்கள் தொடர்ந்து உணவின்றி தூங்குவது, இது மனிதருக்கு சாத்தியமில்லாத ஒன்று!அந்த உயிரினங்களின் ஜீன்களின் இதற்கான தகவல்கள் பொதிந்துள்ளன. தாவரங்களிளும் உண்டு ஆனால் அது விதைகளுக்கு மட்டுமே, தேவையான ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விதை முளைக்கும் தன்மை இழந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் கிடைக்கும் காலம் வரைக்கும் உயுருடன் விதை இருக்க கடினமான மேல் தோலுடன் விதை இருக்கும்,இந்நிலைக்கு டார்மன்சி என்பார்கள்,அத்தகைய விதைகளுக்கு டார்மண்ட்(dormant) விதை எனப்பெயர்.எனவே தான் விதைக்கும் முன்னர் தண்ணீரில் சில விதைகளை நனைத்து வைத்து விதைப்பார்கள்.



ஏன் இந்த நீண்ட உறக்கம்?

கோடை/குளிர் என்ற இரு கால நிலையிலும் நீர்/உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாடும், புற வெப்பம் உடல் வெப்ப நிலையை விட அதிகம்/குறைவு ஆவதால் ஏற்படும் சூட்டினை/குளிர்ச்சியை தாங்கும் திறன் இல்லாமை மேலும் மனிதனை போன்று ஏசி/ஹீட்டர் போட்டுக்கொண்டு வாழிடத்தின் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் வசதி விலங்குகள்/பூச்சிகளுக்கு இல்லாமையால் இயற்கையாக அமைந்த தகவமைவே இந்த நீண்ட உறக்கம்.


எப்படி நீண்ட உறக்கதிற்கு தயாராவது?

குளிர்/கோடை காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும் ,இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும்,இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும்.

அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினை தேர்வு செய்து உடலினை சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக கொத்துக்கறி ஆகிவிடும்.


நீள் உறக்கத்தின் போது இதய துடிப்பு,ரத்த ஓட்டம்,சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும் உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது.கிட்டத்தட்ட சேப் ம்னோடில் உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினை கொண்டு வரவே இந்த செயல்பாடுள்.சாதாரணமாக வெப்ப ரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும்.

குளிர் ரத்த உயிரினங்கள் நிலையான உடல் வெப்பத்தினைக்கொண்டிருக்காது புற வெப்பம் 100 என்றால் அவையும் 100க்கு போகும் ,60 என்றால் அவையும் 60க்கு போகும், ஆனால் மிக மோசமான பருவக்காலத்தில் இப்படி உடல் வெப்பத்தினை அடிக்கடி மாற்றிக்கொண்டும், உணவு வேட்டைக்கு போவதும் சாத்தியப்படாது என்பதால் குளிர் ரத்த உயிரினங்களும் கோடையில் இந்த உறக்கத்தினை மேற்கொள்கின்றன.


நீள் உறக்கம் கொள்ளும் சில உயிரினங்களின் பட்டியல்:


குளிர் ரத்த உயிரினங்கள்:


தேரை













ஆமை










பல்லி


பாம்பு(பெரும்பாலும் பாலைவன பாம்புகள்-ராட்டில் ஸ்னேக்)



பூச்சிகள்:











தேனீ


வெப்ப ரத்த உயிரினங்கள்:

சிப்மங்க்










லெமுர்












கரடி











ஹேம்ஸ்டர்

அணில்


கூடவே வவ்வாலும் நீள் உறக்கம் கொள்ளும்!













மனிதரில் இத்தகைய நீள் உறக்கம் சாத்தியமில்லாது போனாலும் இதிகாசத்தில் இது போன்ற நீள் உறக்கம் கொண்ட ஒருவர் உண்டு பெயர் கும்ப கர்ணன்(என்னைப்பொருத்தவரை கும்பகர்ணன் மனிதனே). ஆறு மாதம் உறக்கம் ஆறு மாதம் விழிப்பு என வாழும் வசதிக்கொண்டவர்! இதிகாசங்கள் அறிவியல்ப்பார்வை கொண்டது என ஜல்லி அடிப்போருக்கு உதவலாம் இது!



Thursday, March 27, 2008

என்னக்கொடுமை சார் இது!

சில சம்பவங்களை பார்க்கும் போதோ, சில செய்திகளை படிக்கும் போதோ ரொம்ப கொடுமையா இருக்கும்! அப்படி இந்த வாரம் செய்திகளில் கூத்தாடிய சில கொடுமைகளை பார்த்த போது என்னக்கொடுமை சார் இதுனு தான் சொல்ல தோன்றியது, என் கண்ணில் சிக்கிய சில கொடுமை பட்டியல்!

கொடுமை-1

ரிலையன்ஸ் மூன்றில் இரண்டு பகுதி பெட்ரோல் விற்பனை நிலையங்களை வரும் ஆறு மாத காலத்தில் மூடப்போகிறது என்று அறிவித்துள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் சர்வதேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப விற்கப்படவில்லை, அரசு சார் நிறுவனங்கள் விலைக்குறைத்து விற்கின்றன, ஏற்படும் இழப்புக்கு அரசு அவர்களுக்கு மானியம் தருகின்றது, ஆனால் தனியார்கள் சந்தை விலைக்கு விற்க வேண்டியது இருக்கு , அது இந்தியாவில் மற்ற அரசு விற்பனையாளர்களை விட கூடுதல் விலையாக இருப்பதால் விற்பனை சரிவு ஏற்பட்டு நட்டம் ஏற்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் விற்பனை போட்டியில் அரசுக்கும் தனியாருக்கும் சம விகிதம் இல்லை, அவர்களுக்கு மானிய சலுகை இருக்கு அதனால் எங்களால் போட்டிப்போட இயலவில்லை, எங்களுக்கும் மானியம் அளித்தால் போட்டி சமச்சீராக இருக்கும்,அல்லது அவர்களுக்கு மானியத்தை நிறுத்தி சந்தை விலைக்கு ஏற்ப விற்க செய்ய வேண்டும், அப்போது தான் அழகான வியாபார நடைமுற ஏற்படும் என்று அரிய கருத்தினையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதான் எனக்கு புரியவில்லை, அரசு நிறுவனங்கள் மக்கள் பணத்தால் நடத்தப்படுகிறது, மானியம் பெறும் அந்த நிறுவனங்களின் லாபம் மீண்டும் மக்கள் பணிக்காக செலவிடப்படுகிறது. எனவே அரசு மானியம் அளித்தால் அது மக்கள் நன்மைக்காக தானே.

ஆனால் தனியாருக்கு மானியம் அளித்து அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தினை எடுத்து மக்கள் பணிக்கு செலவிடப்போகிறார்களா இந்த தனியார்கள்.இல்லையே அவங்க குடும்பத்தினர் மட்டுமே அனுபவிப்பார்கள் , அதுக்கு எதுக்கு மானியம் தரனும் தனியாருக்கு.

மானியம் அரசு நிறுவனங்களுக்கு தருவதால் , குறைந்த விலையில் விற்கிறாங்க, மக்கள் அதை தான் வாங்கிறாங்க எங்களுக்கு விற்பனைப்பாதிக்குதுனு இப்போ சொல்றவங்க, ஆரம்பத்தில் அரசு மட்டும் விற்பனை செய்துக்கொண்டு இருந்தப்போது ஏன் எங்களுக்கும் விற்பனை செய்ய அனுமதிக்கனும் போய் கேட்டாங்க, அப்படிக்கேட்கும் போதே ஆரம்பத்தில இருந்தே அரசு சார் நிறுவனங்கள் மானியம் பெற்றுத்தானே விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியாதா?

இப்போ அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பது தப்பு அதுக்கு அரசே உதவி செய்வதால் "fair trade practice " செய்ய முடியலைனு புலம்புறாங்களே,

தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பித்ததும், ஜெட், சஹாரா, போன்றவை சில இருக்கைகளை மட்டும் ஒதுக்கி 1 ரூபாய்க்கு கூட பறக்கலாம் , குறைந்த விலை பயணச்சேவைனு , என்னமோ முழுக்க முழுக்க குறைந்த கட்டணம் என்பது போல விளம்பரம் செய்து அரசு விமான சேவைகளுக்கு போட்டிக்கொடுக்கலையா? அப்போ அரசு விமான நிறுவனங்கள் ஒரு நியாமான கட்டணம் தான் நிர்ணயிக்கணும் இப்படிலாம் செய்யக்கூடாதுனு சொன்னா என்ன சொல்லி இருப்பாங்க இவங்க, முடின்சா நீங்களும் விலையைக்குறைத்து போட்டிக்கு வாங்க இல்லைனா மூடிக்கிட்டு போங்கனு சொல்லி இருக்க மாட்டாங்களா?

இப்படியே போனா , இவர்களும் எங்களுக்கும் மானியம் வேண்டும் என்பார்கள்.


* அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதால் தனியார் மருத்துவ மனைக்குலாம் கூட்டமே வரலை, நாங்க மருத்துவர்களுக்கு சம்பளம், இன்ன பிற செலவுகள் எல்லாம் இருக்கு, அதை சமாளிச்சு நாங்களும் தொழில் செய்யனும் , எனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அரசே சம்பளம் தராப்போல எங்க தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் சம்பளம் தரணும்.

இல்லைனா அரசும் எங்களைப்போல கட்டணம் வசூலிச்சு ஒரு "fair trade practice " நடத்த வழி செய்யணும்னு கேட்பாங்க போல இருக்கு!

*அரசுப்பள்ளியில் இலவச கல்வித்தருவதால் எங்கள் கல்வித்தொழில் பாதிக்குது அரசு பள்ளியிலும் கட்டணம் வாங்கு, இல்லைனா எங்களுக்கு மானியம் தா என்று தனியார் பள்ளி நடத்துறவங்களும் கேட்பாங்க!

*அரசு பேருந்துகளில் குறைவா கட்டணம் இருப்பதால், எங்களுக்கு தொழில் பாதிக்குது என தனியார் பேருந்து அதிபர்கள் மானியம் கேட்பார்கள்!

என்ன கொடுமை ...சார் இது!

கொடுமை -2

வர்த்தக துறை அமைச்சகம் தற்போது ஒரு உத்தரவு போட்டு இருக்கு பகுதி -15 இல் உள்ளப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தடைனு அதுல சொல்லி இருக்காங்க,அந்த பகுதி -15 இல் என்ன பொருட்கள் இருக்குனா சமையல் எண்ணைகள் இருக்கு. இதன் மூலம் சமையல் எண்ணைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. இப்படி அறிவிக்க காரணம் உள்நாட்டில் சமையல் எண்ணைக்கு அதிக தேவை இருக்குனு சொல்றாங்க , சரி நல்ல காரணமாத்தானே இருக்குனு நினைச்சா, ஆமணக்கு எண்ணை உற்பத்தியாளர்கள் கோவப்படுறாங்க, ஏன்னு பார்த்தா ஆமணக்கு எண்ணையும் ஏற்றுமதி செய்யக்கூடாதுனு தடை பண்றாங்களாம் , பகுதி -15 இல் பட்டியலிடப்பட்ட எண்ணைகளில் ஆமணக்கு எண்ணையும் இருக்கு அதனால் அதனை ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க.

ஆமணக்கு எண்ணைல சமைக்க முடியுமா அதை ஏன் சமையல் எண்ணைல போய் சேர்த்தாங்க, அதை "industrial oil" அப்படினுத்தான் சொல்றாங்க,அதை ஏறுமதி செய்வதும் பெயிண்ட், வார்னிஷ், லுப்ரிகேஷன், எரிபொருள் ஆகிய பயன்ப்பாட்டுக்கு தான்.வருடத்திற்கு 800 கோடி மதிப்புக்கு இந்தியாவில இருந்து ஆமணக்கு எண்ணை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுதாம். சமையல் எண்ணைக்கு தடைப்போட போய் எங்க பொழப்பு போச்சேனு ஆமணக்கு ஏற்றுமதியாளர்கள் பொலம்புறாங்களாம்!

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-3

காரைக்குடியை சேர்ந்த 64 வயது இளைஞர்?! நாராயணன் ஒரு விவசாயி இவரது 60 செண்ட் நிலத்திற்கு பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகிறாராம், இது வரைக்கும் கொடுத்தப்பாடில்லை, முதல்வர் வரைக்கும் புகார் கொடுத்துப்பார்த்தும் வழக்கம் போலவே பலன் எதுவும் இல்லையாம், எனவே முதல்வர் கோட்டைக்கு வரும் போது தான் கட்டிய வேட்டியை திடீர் என உருவி முதல்வர் கார் மீது வீசி தனது எதிர்ப்பைக்காட்டியுள்ளார். அவரைக்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்களாம்.

பதவி தோளில் போட்டுள்ள துண்டு போன்றது , சுயமரியாதை வேட்டிப்போன்றது, துண்டை இழந்தாலும் வேட்டியை இழக்க மாட்டோம் என்று கலைஞர் அடிக்கடி சொல்வார், அதனால் தானோ என்னவோ தனது எதிர்ப்பை நாராயணன் வேட்டி உருவி எறிந்து காட்டி விட்டாரோ?

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-4

இது ஒரு தமிழ் மணக்கொடுமை, லக்கி லுக் என்ற பிரபல கும்பி /கும்மி பதிவரை தமிழ்மணத்திலிருந்து அலேக்காக தூக்கிட்டாங்களாம், ஏன் என்று பார்த்தால் அது ஒரு சங்கிலித்தொடர் வினையா இருக்கு, ஒரு அம்மணி முன்னர் எல்லாம் யோனி பிரசங்கம் அவர்கள் பதிவில் செய்துக்கொண்டிருந்தாங்க, அவங்களுக்கும் பிரபல "மாட்ரிக்ஸ்"பதிவர் பெயரிலிக்கும் தற்காலமா ஒரு சொற்போர்/ மற்போர் நடந்து வந்தது , பலருக்கும் அது ஒரு நல்லப்பொழுது போக்காக இருந்தது என்பது தனிக்கதை! அதுக்கும் லக்கி ஒரு கை கொடுத்துள்ளார், அம்மணி சார்பாத்தான்.

இப்படி இருக்கையில் அம்மணி பதிவை அலேக்கா கிரேன் வைத்து தூக்கிட்டாங்க , அதுக்கும் லக்கி அம்மணி சார்பா ஆதரவு தெரிவித்துள்ளதால் தான் லக்கிக்கும் "தூக்கு" என்று "நைற் ஆந்தை" செய்தி வாசித்தார்.

அம்மணி பதிவில் கோரமான வார்த்தை தாண்டவம் நடந்தபோது எல்லாம் பொது வெளியில் எழுத்து நாகரீகம் எதிர்ப்பார்த்த பதிவர்கள் சிலர் பதிவை தூக்க சொல்லி பிராது கொடுத்தாங்க ஆனால் அப்போதெல்லாம் நீதி தேவன் விடுப்பில் இருந்தார் போல பதிவை தூக்க காணோம், இப்போ திடீர் என விழிப்பு வந்து தமிழ்மண சட்ட திட்டங்களின் படி தூக்கிட்டதா ஓலை அனுப்பி இருக்காங்க. இப்போ மட்டும் "சட்டம் தன் கடமையை "செய்ய பாய்ந்த காரணம் மேட்ரிக்ஸ் பதிவர் பெயரிலியுடனான சொற்போர் தான் என்று சொல்கிறாங்க.

பலான பலான புகார்கள் வந்தபோது செய்திருந்தா பிராது கொடுத்த பதிவர்கள் இதனை கண்டிக்க செய்த செயல்னு சந்தோஷப்பட்டு இருப்பாங்க, இப்போ இது ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக தண்டிக்க செய்த செயலோனு சந்தேகப்படுறாங்களே. இப்போ மட்டும் ஏன் இந்த திடீர் சுறு சுறுப்பு, ஒரு வேளை அரசன் அன்று கொல்வான் தமிழ்மண தெய்வம் நின்று கொல்லும்னு சொல்லாம சொல்றாங்களா?

தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டிங்க :-))

என்னக்கொடுமை ...சார் இது!

Tuesday, March 25, 2008

sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு!

  சென்செக்ஸ் ஒருப்பார்வைஎன்ற பதிவில் பங்கு சந்தை குறியீடு பற்றி சொல்லி இருந்தேன்,பின்னர் ஏன் பங்கு சந்தை அடிக்கடி, சரிகிறது, நிமிர்கிறது, ஊசலாடுகிறது என்பதையும் சொல்ல சொல்லி மக்கள் கேட்டாங்க, சொல்வதாக சொல்லி இருந்தேன், நாம் ஒன்றும் இதில் பழம் தின்று கொட்டைப்போட்ட ஆள் அல்ல என்பதால் சொல்வது சரியாக வருமா என்று வாளாவிருந்தேன், தமிழ் படிக்க விருப்பம் இல்லாதவங்க எல்லாம் வீட்டில் "தமிழ் பேசியே" தமிழை வளர்க்கிற காலத்தில பங்கு சந்தை வேடிக்கைப்பார்க்கிற நாம் ஏன் பொருளாதார அறிவு வளர்க்க கூடாதுனு துணிச்சலா அடுத்த பாகம் போட வந்தாச்சு, இப்போவே சொல்லிடுறேன் பங்குசந்தையினை அவதனிப்பதன் மூலம் நான் உணர்ந்த என்னோட சுய அறிதலின் விளைவாக சொல்லும் கருத்து(கூகிள் வழி பல தளங்களைப்பார்த்தூ தான்), பெரிய நிபுணத்துவம் எல்லாம் இருக்காது., ஒரு வழி போக்கன் பாணியில் இருக்கும்!


பங்கு சந்தை சரியும் போதெல்லாம் hedge fund, FII, odi ,p-note , fdi , செய்த விளையாட்டு என்பார்கள் தொ.காவில், இவை எல்லாருக்கும் தெரிஞ்சாலும் அவற்றைப்பற்றி சும்மா சொல்லி வைக்கிறேன்,


hedge fund: கையில அதிகமா காசு இருக்கு அதை குறுகிய காலத்தில் ,ரொம்ப ரிஸ்க் எடுக்காம ஒரு மாற்று வகையில் முதலீடு செய்யனும் என்று நினைப்பவர்கள் வைத்திருக்கும் பணம் இது, இது பெரும்பாலும் வெளிநாட்டுக்காரங்க காசு தான்.எங்கே எல்லாம் காசு போட்டா குட்டிப்போடுமோ அங்கே எல்லாம் காச இறக்கி ஆடுவாங்க.


அமெரிக்காவை சேர்ந்த உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனம் ரெனைசன்ஸ் டெக்னால்ஜிஸ் இந்தியாவில் தற்போது தங்கள் கிளையை நிறுவியுள்ளார்கள் என்றால் இந்திய பங்கு சந்தையின் மதிப்பை உணர்ந்துக்கொள்ளலாம்.


FII: foreigne institutional investors ,


ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற அயல்நாட்டு நிதி நிறுவனங்கள், நிதிஆலோசனை குழுமங்கள் , பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்தியாவில் இப்படி முதலீடு செய்வது தான் fii எனப்�000; font-weight: bold;">

P-note: participatory note, என்ற ஒரு வகையின் ம�D இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய இது தான் வழி. ஹெட்ஜ் பண்ட் என்ற பணம் கையில் இருந்தாலும் யாரும் நேரடியாக முதலீடு செய்ய முடியாது . அந்த பணத்தை இப்படி fii வழியாகத்தான் அனுப்புவார்கள்.
உ.ம்:
Citigroup and Deutsche Group—the largest FIIs in Indian markets,
Morgan Stanley & Co. International,
Merrill Lynch Capital Markets,
CLSA Asia-Pacific,
Goldman Sachs Investments Mauritius
and JPMorgan


P-note: participatory note, என்ற ஒரு வகையின் மூலம் தான் fii தாங்கள் பெற்ற ஹெட்ஜ் பண்ட் நிதியை இந்திய பங்கு சந்தையில் இறக்குவார்கள். fii நேரடியாகவும் நிதி முதலீடு செய்யும். ஆனால் அதற்கான ரிசவ் பேங்க் நடைமுறைகள், வரி விகிதம் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனால் இந்த p-note முறையில் அவை எளிமையாகா இருக்கு. இந்த வகையில் பணம் முதலீடு செய்பவர் யார் , எந்த நாடு என்று வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கலாம்.


ODI: offshore derivatives investors . இது ஒரு தொகுப்பாக உள்ளது இதில் தான் p-note வகையும் அடக்கம், இதில் மேலும்,
equity-linked notes,
capped return note,
participating return note,
investment note and similar instruments


ஆகியவையும் இருக்கு.


FDI: foreigne direct investment, எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் அரசின் அனுமதியுடன் ஒரு இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வது. இந்திய நிறுவனத்தின் பங்கு தாரர் ஆகிவிடுவார்கள்.


பங்கு சந்தை சரிவுக்கு காரணமாக இருப்பது p-note வழியாக வரும் ஹெட்ஜ் பண்ட் கள் காரணமாக இருப்பதாக கருதக்காரணம் என்ன? ஏன் இந்த ffi கண்டு பங்கு சந்தைப்பயப்படுகிறது. இதுக்குலாம் யார் காரணம்?


இதுக்கு ஆரம்ப காரணம் நம்ம அரசாங்கம் தான், ஏன்னா 1992 க்கு முன்ன வரைக்கும் இந்திய பங்கு சந்தையில் அந்நியர்கள் முதலீடு செய்ய முடியாது, அப்போ இருந்த நரசிம்ம ராவ் அரசாங்கம் பொருளாதார சீர் திருத்தம் செய்ய புகுந்த போது இப்படி fii, odi, p-note ஆகிய வழிகளை உருவாக்கி வெளியில இருந்து முதலீடு கொண்டு வர செய்தார்கள்.


உண்மைல அப்போ இருந்தவங்களுக்கு ஏன் இந்த p-note க்கு இப்படிப்பட்ட ரகசியம் காக்கும் உரிமை தரோமே பின்னாடி பிரச்சினை வரும்னு தெரியாதா? அப்படிலாம் சலுகை ஏன் தரனும் ? அப்போது யாராவது நிர்பந்தப்படுத்தி சலுகை பெற்றார்களா? இது மில்லியன் டாலர் கேள்வி, இப்போ அய்யோ அம்மானா எப்படி.


அதுலயும் ப.சி போன்றவர்கள் தொ.கா ல பங்கு சந்தை உயர்ந்தால் வந்து அன்னிய சக்திகள் முதலீட்டு சந்தையில் நுழைந்து விட்டன என்பார், இப்படி ப.சி தொகா ல பேசியதற்காக அவர் மீது ஒரு நிதி ஆலோசகர் sebi vigilence இல் புகாரே கொடுத்துள்ளார், p-note என்பது ரகசியம் , அது யாருக்கும் சொல்லப்பட மாட்டாது என்று உறுதி தருகிறது செபி , அப்புறம் அது நிதி அமைச்சருக்கு மட்டும் எப்படி தெரிந்தது, செபி சொல்லி இருந்தால் ,அப்படினா அது தொழிற்தர்மத்துக்கு எதிரானது ஆச்சேனு.சந்தை சரிந்தால் இது வெறும் கரெக்ஷன் தான் என்பார் ! அரசுதூக்கி நிறுத்தும் என்பார்.


அப்புறம் இந்த fii க்கு, p-note க்கு கட்டுப்பாடு போடனும் என்று தொ.கா ல பேசிவைப்பார்,உடனே fii பங்குகளை விற்கும், விளைவாக பங்கு சந்தை சரியும் , ப.சி என்னதான் நினைத்திருக்கார்னு ஒன்னுமே புரியலை!


இதிலும் மேலும் இடியாப்ப சிக்கலை உருவாக்கிறா மாதிரி , இதற்கு முன்னர் fii ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் 24 சத பங்கு களுக்கு மேல் வாங்க கூடாதுனு இருந்த கட்டுப்பாட்டையும் தளர்த்தி 49 சத பங்குகள் வாங்கலாம்னு 2004 இல் உத்தரவுப்போட்டாங்க, இதிலும் அதையும் தாண்டி கூட பங்குகளை வாங்கலாம் , அதற்கு ரிசர்வ் பேங்க்கிட்டே தனி அனுமதி வாங்கனும், கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாமாம். அரசாங்கம் செய்றதெல்லாம் செய்துட்டு அப்போ அப்போ இந்த p-note க்கு ஒரு செக் கொண்டு வரனும்னு செபி மூலமா அறிக்கை மட்டும் ஏன் விடுது? சும்மா கண் துடைப்புக்கா?






1992 ல எல்லாம் சென்செக்ஸ் ஒரு 2500- 3000க்குள்ள தான் இருக்கும் பெருசா யாருக்கும் நட்டம் வராது. இந்த fii உள்ள விட்டப்பிறகு தான் காளை ஓட்டம் அதிகம் ஆச்சு, அப்போதைய fii முதலீடு 827 மில்லியன் டாலர்கள் தான், , ஆனால் இப்போது அதன் மொத்த மதிப்பு 66.8 பில்லியன் டாலர்கள், கைமாறும் பங்குகளில் 60 சதம் fii மூலமே. 2007 இல் ஒரே ஆண்டில் வந்த fii முதலீடு மட்டும் 17.2 பில்லியன் டாலர்கள். 2000 ஆண்டுக்கு பிறகு வந்த ஆண்டுகள் பங்கு சந்தையில் fii களின் பொற்காலம்னே சொல்லலாம், அவங்களால தான் பங்கு சந்தை விண்ணைத்தொட்டது , அப்போ அப்போ மண்ணையும் கவ்வியது!


ஒரு காலத்தில் 100க்கும் குறைவான fii நிறுவனங்களுக்கு மட்டுமே செபி அனுமதி கொடுத்திருந்தது, இப்போ 2007 நிலவரப்படி 1219 fii நிறுவனங்கள் இயங்குது. இவர்கள் கொடுத்திருக்கும் p-note களின் எண்ணிக்கை 34 ,மட்டுமே ஆனால் 30.5 சத இந்திய பங்கு சந்தை மதிப்பை இந்த p-note வகையில் முதலீடு செய்தவர்கள் கையில் இருக்கு.


இப்படி முதலீடு செய்தவர்கள் எல்லாம் குறுகியகால நோக்கில் செயல்படுவர்கள் , எப்போது வேண்டுமானாலும் விற்பார்கள் மீண்டும் வாங்குவார்கள், இதனால் அவ்வப்போது பங்கு சரிவு ஏற்படும், ஏன் எனில் இவர்கள் தான் மொத்த எண்ணிக்கையில் பங்குகளை கை மாற்றுபவர்கள், எனவே இவர்கள் செயல் வைத்தே பங்கு சந்தை ஊசலாட்டம் இருக்கும், மற்ற உள்நாட்டு பொது மக்கள் வாங்கும் பங்குகள் சில்லரை வர்த்தகம்(retail investors) வகையில் வரும், அவர்களால் பங்கு சந்தையின் திசையினை நிர்ணயிக்க முடியாது, ஆனால் உண்மையில் அவர்கள் தான் பங்கு சந்தையின் முதுகெலும்பு .


மார்ச் 24 இல் பங்கு சந்தையில்


fii செயல்பாடு,


பங்கு வாங்கியது - 2884.39 கோடி,விற்றது= 2508.26 கோடி,


நிகர வாங்கிய தொகை= 376.13 க்கோடி.


விற்றதை விட வாங்கியது அன்று அதிகம்.


அதே நாளில் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் dii , செயல்பாடு,


வாங்கியது = 836.61 கோடி , விற்றது = 1089.88 கோடி,
நிகர விற்றத்தொகை =253.27 கோடி,
வாங்கியதை விட விற்றது அதிகம்.


எனவே மார்ச்-24 , 2008 இல் பங்கு சந்தை சரிவில்லாமல் இருந்திருக்கும், ஆனால் எப்பொதெல்லாம் அதிகம் பங்குகளை fii விற்கிறார்களோ அப்போதெல்லாம் சரிவு வரும்.


இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் தனி ஒரு நிறுவனமாக அதிக அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பது அந்நிய நிறுவனமல்ல, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (lic) 50 பில்லியன் டாலர்களுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது.


சில முன்னனி இந்திய பங்கு சந்தை பங்களிப்பாளர்கள்;


lic - 49.5


reliance mutal fund- 19.74


icici mutal - 13.93


uti mutual -13.24


hdfc mutual -11.87


சில முன்னனி fii முதலீட்டாளர்கள்;

citi group- 13.54

deutsche group- 13.16
hsbc global- 6.41
morgan stanly- 5.94
merrill lynch- 5.71


* amount in billion usd


பட்டியலைப்பார்த்தால் இந்திய பக்கம் அதிகம் முதலீடு இருக்காப்போல தோன்றும் அப்படி இருந்தும் , ஏன் fii கள் சந்தையை அசைத்து பார்க்கின்றன.


இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (dii)பரஸ்பர நிதி திரட்டி செயல்படுவர்கள் , ஹெட்ஜ் பண்ட்கள் கொண்டு அல்ல, நீண்டக்கால நோக்கில் முதலீடு செய்வார்கள், அடிக்கடி வாங்கி விற்றலில் ஈடுபடுவதில்லை.


அதே சமயம் fii க்கள் அப்படி அல்ல, ஆக்டிவாக விற்பனையில் இறங்கி செயல்படுவார்கள், அதனால் தான் தினசரி 60 சத பங்குகள் இந்த பக்கமும் அந்த பக்கமும் கைமாறுவதில் பங்கு பெறுகிறார்கள். இது தான் பங்கு சந்தையின் ஓட்டத்திற்கு பெரிதும் காரணம்.


அதே போல fii க்கள் எப்போது வேண்டுமானால் மொத்தமாக பங்குகளை ஒரே நாளில் விற்பார்கள்.


மேலும் fii க்கள் bse - 30 எனப்படும் அடிப்படை பங்குகளில்லோ nifty-50 எனப்படும் பங்குகளிலோ உள்ள முதன்மை பங்குகளில் அதாவது லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் அளவு குறைவாக இருக்கும், அதிலும் முக்கியமாக பங்கு சந்தை சரிவதற்கு முன்னர் அவர்கள் மெதுவாக இந்த முக்கிய பங்குகளில் இருந்து தங்கள் பணத்தை திரும்ப எடுப்பதைக்காணலாம்.அவர்கள் பெரும்பாலும் மிட் கேப் எனப்படும் நடுத்தர பங்குகளில் அதிகம் முதலீடு செய்திருப்பார்கள்.


மேலும் பங்கு சந்தை வளர்ச்சி என்பது அசுரத்தனமானது , இது ஒரு ஆரோக்கியமான நிலையே இல்லை எனலாம், நமது தேசிய உற்பத்தி வளர்ச்சி gdp 8 சதம் , ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நமது பங்கு சந்தை வளர்ச்சி 800 சதம் அதிகரித்துள்ளது, இது ஒரு வீக்கம் போன்றது தானே!


கடந்த காலங்களில் ஏற்பட்ட பங்கு சரிவுகளின் போது ஏற்பட்ட சென்செக்ஸ் மாற்றங்கள்
Top 5 market falls
Date Close Change % Chg
January 21, 08 17605.35 -1408.00 -7.41
March 3, 08 16677.88 -901.00 -5.12
January 22, 08 16729.94 -875.00 -4.97
February 11, 08 16630.91 -834.00 -4.78
May 18, 06 11391.43 -826.00 -6.76


ஜனவரி மாதம் ஏற்பட்ட சரிவில் மட்டும் 2,78,593 கோடி ரூபாய், சந்தை மதிப்பில் இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளார்கள்.


2006 இல் 44.17 சதம் மிட் கேப்பில் fii முதலீடு செய்தார்கள் அதன் விளைவாக bse sensex 38.84 சதம் உயர்ந்து , குறியீட்டு எண் 12,454.42 இல் இருந்து 17,281.10 ஆக உயர்ந்தது. bse-30, nifty-50 இல் லார்ஜ் கேப், மிட் கேப் என எல்லாமே இருக்கும், அதில் இருக்கும் மிட் கேப் பங்குகள் இவை.


ஏற்கனவே சொன்னது போல லார்ஜ் கேப் புளு சிப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யக்காரணம் அவற்றின் விலை எப்போதுமே அதிகமா இருப்பது, எனவே குறைந்த "volume of shares" தான் வாங்க முடியும். மேலும் வளர்ச்சி விகிதம் வேகமாகவும், அதிகமாகவும் இருக்காது. அதே சமயத்தில் மிட் கேப் களில் அதிக "volume of shares" வாங்கலாம், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.


ஆனால் fii விற்க ஆரம்பிக்கும் போது பெரிய புளுசிப் ஷேர்களையும் விற்பார்கள், supply and demand தான் பங்கு வர்த்தகத்தை நிர்ணயிக்கிறது , எனவே பெரிய அளவில் திடீர் என பங்குகள் சந்தையில் விற்கப்பட்டு , வாங்க கிடைத்தால் demand குறைவது இயல்பு தானே. எனவே ஒட்டு மொத்தமா பங்கு வணிகத்தின் நிலைத்தன்மை பாதிக்கும். இதன் விளைவாக ஒரு பயத்தில் சில்லறை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பொதுமக்களும் பங்குகளை விற்கப்பார்ப்பார்கள், எனவே சர்வ நாசம் ஏற்படுகிறது.இதுவே சரிவின் மூல காரணம்.


அதே போன்று fii முதலீடு அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்கு உடனே மேலே போகும், fii எப்படி தங்கள் முதலீட்டினை எப்படி பிரித்து முதலீடு செய்கிறார்கள்(pattern of investment or portfolio) என்பதைப்பார்த்தாலே எந்த பங்கு மேலே போகும் என்று சொல்ல முடியும்.


பங்கு சந்தை தரகர்கள் , ஆலோசகர்களுக்கு முன் கூட்டியே fii முதலீடு பாயப்போகும் திசை தெரிவதால் தான் அவர்கள் பாதுகாப்பாக இயங்குகிறார்கள், இதன் அடிப்படையில் தான் ஷேர் டிப்ஸ் தருவதும்.இணையத்தின் மூலம் பல பங்கு வர்த்தக தளங்களிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள fii மூலதனத்தின் அளவைப்பார்க்க முடியும்.ஆனால் இவை கடந்த கால நிலவரத்தை காட்டுவது, நாளை, இன்று எதை fii கள் வாங்க போகின்றது என்பதை யூகம் தான் செய்ய வேண்டும்.


அந்நிய முதலீடு என்று இல்லை உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின(DII) செயல்பாடும் தரகர்களுக்கு தெரியும், ஏன் எனில் அவர்கள் தானே யார் , யார் பங்கு வாங்க "quote "கேட்டு இருக்கிறார்கள் என்பதை அறிவார்கள், அவர்கள் தானே நமக்கு வாங்கி தருபவர்கள். எந்த செக்டாரில் அதிகம் நிறுவன பங்களிப்பு இருக்கோ அது மேலே போகும் இதை சில்லரை பங்கு விற்பனையாளர்களும் பயன்ப்படுத்திக்கொண்டால் லாபம் நிச்சமே, ஆனால் இந்த கணிப்பு எல்லாருக்கும் கை வருமா?


பங்கு சந்தையில் சாதரண பொது ஜனம் அடிப்பட காரணம், அவர்கள் நேரடியாக எதையும் வாங்க முடியாது தரகர்களிடம் சொல்லி நம் சார்பாக அவர்களை வாங்க வைக்க வேண்டும். முன்னர் எல்லாம் நாம் ஒரு பங்கினை வாங்க முயலும் போது அப்போது என்ன விலை இருக்கிறதோ அதை விட கொஞ்சம் உயர்த்தி தான் quote செய்ய வேணும் , அப்படி ஒரு விலைக்குறிப்பிட்டு சொன்னால் 24 மணி நேரங்களுக்கு பின்னரே விற்பனை உறுதீ செய்யப்படும். இந்த டைம் கேப்பில் அங்கே சந்தையில் நாம் கேட்ட பங்கு சரிந்தாலும் , அடுத்த நாள் நாம் முதல் நாள் கேட்ட விலைக்கு வாங்கியது என்று கொடுப்பார்கள்.


உதாரணமாக , முதல் நாள் 100 விலைக்கு போன ஒரு பங்கினை , 110 ரூபாய் என நாம் விலை வைத்து வாங்க சொல்லிவிட்டோம், நாம் சொன்ன பிறகு அந்த பங்கு அந்த நாளின் மாலையில் சரிந்து 90 ரூபாய் என்று ஆனாலும் அதற்கு முன்னரே நமது பங்கு தரகர் அதனை 110 ரூபாய்க்கு வாங்கி நமக்கு தந்து விடுவார். இது நமக்கு அடுத்த நாள் தான் தெரிய வரும். அப்போது நாம் பங்கினை வாங்கிய போதே ஒரு பங்கிற்கு 20 ரூபாய் நட்டத்தில் இருப்போம்.


இப்போது தான் இணையம் வழி வர்த்தகம் நடைப்பெறுகிறதே இந்த பிரச்சினை இருக்காதே எனலாம். இணையத்திலும் நமக்கு 1 மணி நேரம் காலக்கெடு விதிக்கிறார்கள், எனவே ஒரு மணி நேரத்தில் அந்த பங்கு சரிந்தால் அதே போன்ற நட்டம் ஏற்படும். நாம் வாங்கும் பங்கு நல்ல நிறுவனமாக இருந்தால் பின்னர் மேம்பாடு காணும் இல்லை எனில் கீழே தான் போகும்.எனவே இணையம் வந்ததால் பொது ஜனம் பங்கு சந்தையில் பெரிதாக பாதுகாப்பாக இல்லை, அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களே நேரடியாக பார்த்து பங்கு வணிகம் செய்கிறார்கள் என்று.


சரிவு ஏற்படும் போது , வாங்க சொன்னால் பங்கு தரகர்கள் அதான் சாக்கு என்று சரியும் பங்கினையும் வாங்கி தள்ளுவார்கள், ஆனால் சரியும் பங்கினை வைத்திருந்து நாம் விற்க சொன்னால் விற்று தர மாட்டார்கள். மேலும் ஸ்டாப் லாஸ் என்று ஒரு அமைப்பு இருக்கு அதனைக்கொண்டு நட்டம் ஏற்படுவதை தடுக்கலாம் என்பார்கள், அதாவது ஒரு பங்கு இந்த விலைக்கு கீழ் போகும் என தெரிந்தால் என் அனுதிக்கு காத்திராமல் விற்று விடுங்கள் என தரகருக்கு நாம் முன் கூட்டியே அனுமதி தருவது, ஆனால் சரிவின் போது அது வேலை செய்யாது, அதில் ஒரு கண்டிஷன் வைத்திருக்கிறார்கள் எதிர்ப்பாராத சந்தர்ப்பங்களின் போது ஸ்டாப் லாஸ் அமைப்பின் படி செயல் பட முடியாது!


gvk power infra structure இல் ffi இன் முதலீடு உயர்ந்தபோது 267% லாபம் தந்தது பங்கு வைத்திருந்தவர்களுக்கு, அதே சமயம் அம்புஜா சிமெண்டில் இருந்து fii முதலீட்டு விகிதம் குறைந்ததும் , 160 ரூபாய் என உச்சம் தொட்ட அப்பங்கு மிக குறைவாக 110 ரூபாய் தொட்டது, தற்போது 120 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலம் fii களின் முதலீட்டால் ஒரு பங்கினை மேலே கொண்டுபோக முடியும் என்பது தெரிய வரும்.


இந்திய நிறுவன பங்களிப்பு பங்கு சந்தையில் அதிகம் இருந்தாலும், அவர்கள் நினைத்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் யூகத்தின் அடிப்படையில் குறுகியக்காலத்தில் லாபம் சம்பாதித்து வெளியேரும் fii க்கள் நினைத்தால் பங்கு சந்தையை சுருட்டி வீசிவிடுவார்கள் என்பதே கசப்பானா உண்மை.பங்கு சந்தை சரியும் போதெல்லாம் lic, uti, icici போன்ற இந்திய நிறுவனங்களை முதலீடு செயய் வைத்தே நிதி அமைச்சகம் சரிவை தடுக்கிறது, அந்த நிறுவனங்களின் பணம் மக்கள் பணமே , அதை லாபமாக fii க்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள், ஆனால் அது யாருக்கு போகுதுனு அந்த fii நடத்துறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி ரகசியம் காத்து செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மேனேஜர்கள் பில்லியனில் சம்பளம் வாங்குகிறார்களாம், ரெனைசன்ஸ் டெக்னாலஜிஸ் என்ற fii நிறுவனத்தலைவரின் ஆண்டு சம்பளம் 1.7 பில்லியன் டாலர்கள் என்று பங்கு வணிக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

Tuesday, March 18, 2008

ville noire -அடிமை சின்னம்!

பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியின் வரலாற்றினை தற்செயலாகப் மீண்டும் படிக்க நேரிட்டது அதில் இருந்து சில ஆர்வம் தூண்டும் செய்திகளும் நெருடலான சில உண்மைகளும் எனக்கு புலப்பட்டது.

இதிகாச காலத்தில் அகத்தியர் தான் புதுவையை உருவாக்கியவராம் , இங்கே ரோமானியர்கள் எல்லாம் வந்து யாவாரம் செய்துள்ளார்கள். பின்னர் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு , விஜயநகர மன்னர்கள் வசம் வந்து , அதன் பின்னர் ஆர்காட் நவாப் வசம் வந்து சிறிது காலம் இருந்துள்ளது.

நாடு பிடிக்கும் ஆசையில் பல அய்ரோப்பிய நாடுகளும் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிய காலத்தில் இந்திய கரையோரம் ஒதுங்கி பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியினரை புதுவை பகுதியை வளைத்துப்போட்டார்கள் 1673 இல், 1693 இல் டச் காரர்கள் சண்டைப்போட்டு புதுவையை பிடித்தார்கள் பின்னர் ரிஸ்விக் ஒப்பந்தம்மூலம் மீண்டும் 1699 இல் பிரஞ்ச் வசம் வந்தது.

அதன் பின்னர் நடந்த ஆங்கில - பிரஞ்ச் சண்டைகளின் போது அடிக்கடி கை மாறி இருக்கு. கடைசியாக பிரஞ்ச் கம்பெனி வசமே வந்து சேர்ந்தது.பிரஞ்ச் ஆண்ட போது புதுவையில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிக்கு வச்ச பேரு தான் "ville noire" அப்படினா கருப்பு நகரமாம், பிரஞ்ச் காரங்க வசித்த பகுதிக்கு"ville blanche" வெள்ளை நகரமாம்.

இந்திய சுதந்திரப்போர் நடைப்பெற்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப்போன பிறகும் புதுவை பிரன்ச் காலனியாகவே இருந்தது. அப்போதைய இந்திய தலைவர்களும் புதுவை சரியாக்கண்டுக்கலை போல.

அதன் பிறகு தனியா ஒரு புதுவை சுதந்திர போராட்டம் நடத்தி பிரஞ்ச் காரங்களும் புதுவையை சுதந்திர இந்தியாவுடன் சேர்த்து வைத்துவிட்டு கிளம்ப 1954 இல் தான் தயாரானார்கள் . அப்போ சுதந்திரம் அடைந்தாலும் 1963 வரைக்கும் முழுமையா சுதந்திரம் அடையாம இழுத்துக்கிட்டே போய் இருக்கு.

1963 இல் தான் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது, அதுவரைக்கும் பிரஞ்ச் அரசிடம் வேலைப்பார்த்த இந்தியர்களுக்கு என்ன தான் கருப்பர்கள், அடிமைகள்னு பிரஞ்ச் எஜமான்கள் சொன்னாலும் அவங்களை நாட்டை விட்டு போக சொல்ல மனசே வரலை. நீங்க போனா நாங்களும் உங்க கூடவே வந்திடுறோம்னு ரொம்ப ராஜ விசுவாசம் காட்டி இருக்காங்க, அப்படிக்காட்டினவங்க எண்ணிக்கை ஒரு 10,000 சொச்சம் இருக்கும். ஒரு பக்கம் பல ஆயிரம் பேர் உயிரைக்கொடுத்து பிரஞ்ச் அரசை துறத்த போராடினால் இப்படியும் ஒரு கூட்டம் அங்கே இருந்து இருக்கு.

ஏகாதிபத்திய சக்தியா இருந்தாலும் , தன்னோட அடிமைகள் மேல அக்கரைக்கொண்ட அரசா பிரஞ்ச் அரசாங்கம், எங்கக்கிட்டே சேவகம் பார்த்தவர்கள் யார் யார் எல்லாம் பிரஞ்ச் குடியுரிமை வேணுமோ அவங்களை எல்லாம் எங்க நாட்டுக்காரங்களா அங்கிகரிக்கணும்னு இந்திய அரசாங்கத்தோட ஒரு கேவலமான ஒப்பந்தம் போட்டார்கள், அதன் படி ஒரு 10,000 பேரு பிரஞ்ச் நாட்டுக்குடியுரிமை வாங்கிட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார்கள், அதிலும் சில மானஸ்தர்கள் இருந்து இருக்காங்க எங்களுக்கு பிரஞ்ச் குடியுரிமை வேண்டாம்னு சொல்லி இருக்காங்க, அது சில 100 பேர்கள் தான்.

பிரஞ்ச் குடியுரிமை பெற்றவர்களுக்கு அப்போவே ஒரு வசதி செய்து தரப்பட்டிருந்தது , விருப்பப்படும் வரைக்கும் இந்தியாவில் இருந்துக்கொள்ளலாம் தேவைப்படும் போது பிரான்ஸுக்கு போய்க்கொள்ளலாம்.இங்கே இருக்கும் முன்னாள் காலனி இந்தியாவை சேர்ந்த பிரஞ்ச் சேவகம் செய்தவர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் பிரஞ்ச் அரசு வழங்கும்.அந்தஓய்வூதியத்தை வாங்கிட்டு இங்கேவே சொகுசா அவர்கள் வாழ்ந்தார்கள். இங்கேயே கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டு படிப்பெல்லாம் முடித்துக்கொண்டு பிறகு நேரா பிரான்ஸுக்கு போய் அங்கே வேலை கேட்டு வாங்கிக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஏன் அப்படி செய்றாங்கனா பிரான்ஸில் ஒரு சட்டம் இருக்கு அனைவருக்கும் அரசு கண்டிப்பா வேலை தரணும் , அதனால் பெரும்பாலும் கட்டாய ராணுவ சேவைனு சில ஆண்டுகள் வேலை தந்துடுவாங்க, பிறகு நல்ல வேலைக்கு அரசே ஏற்பாடு செய்யும். வேலைக்கிடைக்கவில்லை எனில் அது வரைக்கும் உதவி தொகை தரும்.

இதை எல்லாம் படித்த போது எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்தியா விடுதலை அடைந்தபோது இப்படி ஏன் ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை தரவில்லை. இல்லை மக்கள் கேட்கலையா ?

மேலும் நாட்டை விட்டுப்போ என்று போராடி தொறத்திட்டி எப்படி எனக்கு குடியுரிமை குடுனு புதுவை ஆட்கள் வெட்கம் இல்லாமல் கேட்டாங்க?

எனக்கு என்ன தோன்றுகிறதுனா , ஆங்கிலேயர்கள் போனபிறகு சில ஆண்டுகள் கழித்து தான் பிரஞ்ச் விடுதலை கிடைத்தது. அப்போ சுதந்திர இந்தியாவில் முன்னாள் ஆங்கில அரசு ஊழியர்களுக்கு கிடைத்த சம்பளத்தை பார்த்து இருப்பாங்க , புதுவையில் வாங்குவதை விட ரொம்ப கம்மியா இருந்து இருக்கும், ஆஹா இந்த வேலையை விட்டா காசு தேறாதுனு , நீங்க போனாலும் நாங்க உங்க குடிமக்களா இருக்கப்பிரியப்படுறோம்னு சொல்லி காரியம் சாதித்துக்கொண்டார்கள் போலும்.

இந்தியர்கள்னு சொல்லிக்கிறதை விட காசு பெருசா போய் இருக்கு அந்த சில மக்களுக்கு மட்டும், அப்படி பணத்திற்காக நாட்டை மாற்றிக்கொண்டவர்கள் வழி வந்த வாரிசுகள் இப்போவும் பிரான்சில் நாம் இன்னும் காலனி ஆதிக்க சின்னத்தை துறக்காமல் சுமந்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் தமிழனோ , தமிழச்சியோ தங்கள் இழிவு நீங்க காலனி ஆதிக்க அடிமை சின்னத்தை துறக்க வேண்டாமா?

Thursday, March 13, 2008

காதுல பூ!

வட அமெரிக்காவின் மிகப்புகழ்ப்பெற்ற??!! தென்றல் என்ற அபூர்வ இதழை இலவசக்கொத்தனார் மட்டுமே படிக்கும் வழக்கம் இருப்பதால் அதில் இருந்து ஒரு பேட்டியை எடுத்து அவரதுப்பதிவில் போட்டுள்ளார், அதைப்படித்ததும் எனது பகுத்தறிவு அவமானப்பட்டுப்போனது(உனக்குலாம் ஏதூடா பகுத்தறிவு நீ தலை கீழ் தொங்கும் பிராணி ஆச்சே), ஒரு அப்பாவி பொது சனமாக எனக்குள் எழுந்த சில கேள்விகளை கேட்காமல் இருக்க முடியவில்லை.அவைக்கடைசியில்.

"தமிழறிஞர்" இலவசகொத்தனாரின் பதிவில் இருந்து ஒரு பகுதி:

இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!

அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!

கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.

மூலம் இலவசக்கொத்தனார்: நன்றி!

இப்போது எனது கேள்விகள்,

//1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059.//

தமிழறிஞர் ஏன் 1995 இல் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் சொல்லி இருக்கிறார், 95 க்கு பிறகு யாரும் பத்தாம் வகுப்பு படிக்கவில்லையா? :-)) 1995 க்கு அப்புறம் 12 வருஷம் ஆச்சு இந்த டைம் கேப்புல 100 தடவை பெட்ரோல் விலை ஏறி இருக்கு, மக்கள் தொகை பெருகி இருக்கு, டாலர் விலை மாறி இருக்கு, இரண்டு ஆட்சியே மாறி இருக்கு இப்படி எத்தனையோ மாற்றம் நடந்து இருக்கே! இந்த கால நிலை மாற்றம் பற்றி கேள்விலாம் பெருமையாக பதிவுப்போட்டவருக்கு ஏன் எழவில்லை, அது எப்படி அவர் தான் தமிழர் ஆர்வலர் ஆச்சே :-)), இதுவே இப்படி பழைய புள்ளிவிவரத்தை வேற யாராவது சொல்லி இருந்தா புலிப்பாய்ச்சால் பாய்வாங்களே!

இதில் அவர் குறிப்பிட்டது அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமா இல்லை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களும் அடக்கமா? அப்படி இரண்டும் சேர்த்த எண்ணிக்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.

தமிழக அரசின் உயர்நிலைப்பள்ளிக்குறித்தான புள்ளிவிவரங்கள்,2005-2006 ஆண்டுக்கானது.(அதுவரைக்கும் தான் விவரம் இருக்கு)

High Schools

Government

2016

8.33


Municipal/Corporation

110

0.50


Aided

613

3.12


Unaided

179

0.43


Anglo Indian(High School)

12

0.10


Matriculation(High School)

2053

6.17


Central Board(High School)

63

0.51


Total for all High Schools

5046

19.16

*மாணவர் எண்ணிக்கை லட்சத்தில்
http://www.tn.gov.in/schooleducation/statistics/tablep3.htm

இந்த அட்டவணையில் இருந்து ,

அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள்.

மேலும் நகராட்சி , மாநகாரட்சி , உதவி பெரும், உதவிப்பெறாப்பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் .

மொழி சிறுப்பாண்மை என சொல்லி வேற்றும்மொழி படிப்போர் என இருப்பவர்கள் படிப்பது இந்தப்பள்ளிக்களில் என எடுத்துக்கொள்ளலாம்.
முனைவர் சொன்னது போல இரண்டு சதம் மாற்றுமொழி படிப்போர் அவர்களாகவே இருக்கட்டும்.

ஆனால் தனியார் நடத்தும் மெட்ரிக்குலேஷன் மாணவர்கள் யார், அவர்கள் எல்லாம் மொழி சிறுப்பாண்மையினரா என்று ஒரு கேள்வி வருகிறதே, அவர்கள் எண்ணிக்கை ஒன்றும் சிறியது அல்லவே ,

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம்..

அரசுப்பள்ளிகளில் மொழி சிறுப்பாண்மையினருக்கு அவர்கள் மொழி சொல்லித்தர மட்டுமே ஆசிரியர்கள் உண்டு அதுவும் சில பள்ளிகளில் மட்டுமே மற்றப்படி அங்கே பிரெஞ்ச், ஜெர்மன், ஹிந்தி, இன்ன பிற மொழி சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை, ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் பல மொழி சொல்லித்தர ஆசிரீயர்கள் உண்டு, எனவே மாணவர்கள் தமிழ் படிக்காமலே வேற்று மொழியினைப்படித்து தேர்வு எழுதும் நிலை, அதுவும் 6.17 லட்சம் மாணவர்கள் என்றால் அது ஒன்றும் புறக்கணிக்கக்கூடிய எண்ணிக்கையா? அல்லவே.

மேலும் மொத்தமாக தொழிற்கல்வி , மருத்துவம் என உயர்ப்படிப்புக்கு தேர்வாகும் மாணவர்களில் பெரும்பான்மை இத்தகைய தனியார் பள்ளி மாணவர்களே , அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவே. எனவே தமிழில் எழுத,படிக்க தெரியாத மருத்துவர்களும் , பொறியாளர்களும் அதிகம் உருவாகும் அபாயம் வேறு உள்ளது.

இப்போது தமிழக அரசு போட்ட அரசாணை யாருக்கு , மொழி சிறுப்பாண்மையினரை பாதிக்கவா இல்லையே, இப்படி மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் டிமிக்கு கொடுப்போரை தடுக்க தானே, ஆனால் ஏனோ அதை மறைத்து விட்டு ஏதோ அரசு ம்ஒழி சிறுப்பாண்மையினரை தண்டிப்பது போலவும், அவர்கள் கண்டிப்பாக படிக்காவிட்டால் என்ன நஷ்டம் என்றும் அந்த பேட்டியில் தமிழறிஞர் என சொல்லிக்கொள்பவர் சொல்லி இருப்பது ஏன்?

மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கூட பிற மொழி படிக்க காரணம் , அவர்கள் படிக்க வேண்டிய பாட அளவு அதில் குறைவு என்பதால் தான். துவக்கப்பள்ளியில் தமிழ் எந்த அளவுக்க்கு படிப்போமோ அதே அளவுக்கு பிரென்ச்/ ஜெர்மனில் அ,ஆ , என்ற ரீதியில் 10 ஆம் வகுப்பில்(+2 விலும் கூட) படித்தாலே போதும், ஆனால் தமிழை படித்தால் அதில் மனப்பாட செய்யுள் ,கட்டுரை , இலக்கியம் என்று அதிகம் படிக்க வேண்டி இருக்கும்.

ஏன் எல்லா மாணவர்களும் அப்படி பிற மொழி படிக்கலாமே எனலாம் அரசுப்பள்ளிகளில் அத்தகைய வசதிகள் இல்லை, ஆனால் காசு வாங்கிக்கொண்டு படிப்பு சொல்லித்தரும் பள்ளிகளில் உண்டு, எனவே இலகுவாக மதிப்பெண், கூடுதலாக தமிழ் புறக்கணிப்பு என்று மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதால் தான் தான் அரசு அனைவரும் தமிழ் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்கிறது.


இதெல்லாம் தெரிந்தும் தெரியாது போல அரசு ஏதோ மொழி சிறுப்பாண்மையினருக்கு துரோகம் செய்வதாக சந்தில் சிந்து பாடும் தமிழறிஞர்கள் வலைப்பதிவில் பெருத்துப்போய்விட்டார்கள்!

பின்குறிப்பு:

இந்தப்பதிவை முனைவர் " தமிழறிஞர்" குழந்தைசாமி படிக்கமாட்டார் எனவே அவரை விளக்கம் கேட்கவும் முடியாது, வலைப்பதிவில் கூகிளாண்டவருக்கே கற்றுக்கொடுப்பவர்களையும் குறிவைத்து பதிவிடவில்லை எனவே அய்யோ என்னை மட்டும் குறிவைத்து பதிவிடுகிறேன் என்று என்னை கேட்கும் வாய்ப்பும் இப்பதிவு மூலம் வராது. எனவே உண்மையான தமிழார்வலர்கள் /வலைப்பதிவர்கள் என யார் வேண்டுமானாலும் பதிவு குறித்து கருத்துக்களை கூறலாம்!ஏன் இப்படி என்று விளக்கம் தரலாம்!

Thursday, February 21, 2008

sensex- ஒரு பார்வை!

பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது என்னைப்போல சும்மா வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை sensex அப்படி என்றால் என்ன? , sensitive index என்பதன் சுருக்கமே sensex, இதனை வைத்து எப்படி பங்குவணிகத்தினை கணிக்கிறார்கள், இந்த முறை எப்போது இருந்து நடைமுறைக்கு வந்தது என்பதைப்பார்ப்போம்.

கி.பி 1875 ஆம் ஆண்டு மும்பையில் 318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே முதலீட்டு பங்காக போட்டு ஒரு வியாபார அமைப்பாக நிறுவியது தான் இன்றைய மும்பை பங்குவர்த்தக மையம்.அபோதேல்லாம் எந்தவித குறியீடுகளும் இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் பங்கு வணிகம் நடந்தது. 1986 இல் தான் முதன் முதலில் sensex என்ற பங்குவணிக குறியீட்டினை செயல்படுத்தி , சந்தையின் ஏற்ற இறக்கங்களை தெளிவாக உணர செய்தார்கள். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் sensex புதிதாக வெளியிடப்படும்.

இந்த sensex எதன் அடிப்படையில் செயல்படுகிறது?

முதலில் முழு சந்தைமதிப்பு முதலீடு (
"Full Market Capitalization")என்ற அடிப்படையிலும் , பின்னர் 2003 இல் இருந்து கட்டற்ற மாறும் சந்தை மதிப்பு முதலீடு ("Free-float Market Capitalization" )என்ற அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.

முழு சந்தைமதிப்பு முதலீடு:

உதாரணமாக ஒரு நிறுவனம் 1000 சமவிகித பங்குகளை தலா 100 ரூபாய் மதிப்பில் வைத்து துவக்கப்படுகிறது என்றால் , அதன் மொத்த மதிப்பு 100x1000= 1,00,000 ஆகும், இந்த மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது முழு சந்தை மதிப்பு முதலீடு ஆகும்.

இதில் உள்ள குறைப்பாடு என்னவெனில், அந்நிறுவனத்தின் உண்மை சந்தை மதிப்பு என்ன என்பதை சரியாக கணக்கிட முடியாது, ஏன் என்பதை அடுத்த உதாரணம் பார்க்கும் போது தெரியும்.

கட்டற்ற மாறும் சந்தை முதலீடு:

அதே நிறுவனத்தின் 1000 பங்குகளில் 250 பங்குகளை அதன் முதலாளி தனக்காக வைத்துக்கொண்டு 750 பங்குகளை மட்டுமே மக்கள் வாங்க சந்தையில் விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், மக்களுக்கு கிடைக்கும் பங்குகளின் மதிப்பு என்ன 750x100= 75,000 தான். இப்போது மக்கள் பங்கு பெறும் பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடும் போது விற்பனைக்கு வராத 250 பங்குகளையும் சேர்த்து மதிப்பிட்டு சொல்வதால் என்ன ஆகும், தேவை இல்லாமல் மதிப்பைக்கூட்டிக்காட்டும், ஆனால் புழக்கத்தில் உள்ள பங்கு மதிப்பு குறைவு, அதன் விற்பனை செயல்ப்பாடுகளே நேரடியாக supply & demand அடிப்படையில் சந்தையின் மதிப்பை வெளிப்படுத்தும்.

எனவே தான் தற்போது எல்லாம் உலக அளவில் அனைத்து பங்கு சந்தைகளும் கட்டற்ற மாறும் சந்தை முதலீடு அடிப்படையில் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது நம் பங்கு சந்தை குறியீட்டு எண் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

இக்குறியீட்டினை ஏதோ ஒரு ஆண்டினை அடிப்படை ஆண்டாக (base year)வைத்து துவக்க வேண்டும், நமக்கு 1979 தான் பங்கு சந்தை குறியீட்டு அடிப்படை ஆண்டு.

அந்த ஆண்டில் தோராயமாக 10 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்தது என்று வைத்துக்கொள்வோம், இதுவே அடிப்படை பங்குகள் எனப்படும், அதன் மொத்த மதிப்பு 1000 ரூபாய் , என்றால் அதனை வைத்து குறியீடு ஏற்படுத்தி முழு மதிப்பாக வைத்து குறியீட்டு எண் 100 என்று நிர்ணயித்துக்கொண்டார்கள்.

அதாவது 1979 இல் sensex மதிப்பு 100 என்று துவக்கமதிப்பாக நிர்ணயித்துக்கொண்டார்கள்.

இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் , புதிதாக எத்தனை நிறுவனங்கள் பங்கு வெளியிட்டாலும் அதனை முதலில் அந்த அடிப்படை பங்குகளின் செயல் பாட்டுடன் ஒப்பிட்டே மொத்த சந்தையினை மதிப்பிடுவர்கள். பங்குகளின் மொத்த மதிப்பினை, துவக்க பங்கு மதிப்புக்கும் , துவக்க பங்கு குறியீட்டுக்கும் உள்ள விகிதத்தால் பெருக்கி கிடைக்கும் எண்ணுக்கு தான் sensex என்று பெயர்.

1979 இல் ஒரு உதாரணமாக 10 நிறுவனங்களை எடுத்துக்கொண்டார்கள் என்று சொன்னேன், ஆனால் உண்மையில் 30 நிறுவனப்பங்குகள் எடுத்துக்கொண்டார்கள், அதன் மொத்தமதிப்பாக 60,000 ரூபாய் என்றும், அதன் ஆரம்ப குறியீடாக 100 என்றும் வைத்துக்கொண்டார்கள்.

இப்பொழுது sensex கணக்கிட அந்த 30 பங்குகளின் சந்தை மதிப்பை, சந்தையில் கிடைக்கும் விற்பனைக்கு கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை வைத்து கணக்கிடுவார்கள், அப்படி கிடைக்கும் மதிப்பினை 100/60,000 என்ற எண்ணால் பெருக்குவார்கள் , (இந்த விகிதத்திற்கு index divisor என்று பெயர்) அப்படி பெருக்கி கிடைக்கும் எண்ணே அப்போதைய sensex.

30 அடிப்படை நிறுவனங்களை பெரிய , நடுத்தர , மிக நீண்டக்காலமாக இருக்கிற , நம்பிக்கையான , அதிகம் வியாபாரம் ஆகும் பங்குகள் என்று பல அளவுகோள்களின் அடிப்படையில் அவ்வப்போது தேர்வு செய்வார்கள்.

தற்போதைய பங்கு சந்தை sensex அடிப்படை 30 பங்கு நிறுவனங்கள் இவை தான்,

ACC, Ambuja Cements, Bajaj Auto , BHEL, Bharti Airtel , Cipla, DLF, Grasim Industries , HDFC , HDFC Bank, Hindalco Industries , Hindustan Lever , ICICI Bank , Infosys , ITC, Larsen & Toubro, Mahindra & Mahindra, Maruti Udyog , NTPC, ONGC , Ranbaxy Laboratories , Reliance Communications , Reliance Energy , Reliance Industries , Satyam Computer Services , State Bank of India , Tata Consultancy Services , Tata Motors , Tata Steel , and Wipro .

இந்த 30 நிறுவனங்களின் செயல்ப்பாடு, வர்த்தகம் , அதன் மதிப்பே sensex ஐ நிர்ணயிப்பது.

பின்னர் எப்படி திடீர் , திடீர் என பங்கு சந்தையில் சரிவு ஏற்படுகிறது, இந்த 30 நிறுவனங்களும் எப்போதும் லாபத்தில் இருக்குமே எனலாம், அதுக்குலாம் மேலும் பல காரணங்கள் இருக்கு , பின்னர் பார்க்கலாம்,அல்லது பின்னூட்டங்களில் யாரேனும் சொல்லக்கூடும்!