Monday, November 05, 2012

We oppose present I-T Act 66A, Demanding change on it





==============================================

 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

=============================================


**************************************
துவித்தர்,முகநூல், ஜீ பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,

"இந்திய அரசே,
தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"

*****************************

source:http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html

நன்றி!

*********************

வேண்டுகோள்:

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி அவர்களின்(சுட்டி மேலேயுள்ளது) தளத்தில் இணைக்கவும். நன்றி!
-----------------------

பின்குறிப்பு:

படங்கள் உதவி, கூகிள் இமேஜஸ்,நன்றி!
--------------------

Saturday, November 03, 2012

என்ன கொடுமை சார் இது-9:துவித்தர்,சுவாமி,நாயகன்.



(ஹி..ஹி வருகைப்புரிந்தோர் அனைவருக்கும் வணக்குமுங்க)


முட்டை மந்திரம்!




தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இல் உள்ள பிரிவு 66ஏ என்றால் என்ன என இணையத்தில் தேடிய போது கிடைத்தது...

//Information Technology Act, 2000

66. Hacking with Computer System. -


(1) Whoever with the intent of cause or knowing that is likely to cause wrongful loss or damage to the public or any person destroys or deletes or alters any information residing in a computer resource or diminishes its value or utility or affects it injuriously by any means, commits hacking.

(2) Whoever commits hacking shall be punished with imprisonment up to three years, or with fine which may extend up to two lakh rupees, or with both.//

மூலம்:http://www.vakilno1.com/bareacts/informationtechnologyact/s66.htm

செக்‌ஷன் 66 ஏ கணினியை ஹேக் செய்த குற்றத்திற்கான பிரிவு என இந்த இணைய தளம் சொல்கிறது.

ஹி...ஹி துவித்தரில் ஆபாசமாக கமெண்ட் போட்டதாக சொல்லப்பட்டு  ராஜன் என்பவரும், கார்த்தி சிதம்பரம் அவர்கள் பற்றி கமெண்ட் போட்டதற்காக ,புதுவையை சேர்ந்த ரவிஶ்ரீனிவாசன் மீதும் பிரிவு 66ஏ வின் கீழ் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அப்போ துவித்தரில் கமெண்ட் போடுவது தான் ஹேக்கிங்கா அவ்வ்வ் :-))

என்ன கொடுமை சார் இது!
*****
update:

section 66A of information tectchnology act 2000 , செய்தியில் வந்ததை அப்படியே தேர்வு செய்து கூகிளில் தேடியப்போது கிடைத்த வக்கீல் நம்பர்-1 தளத்தில் இருப்பதை அப்படியே போட்டேன், சட்டம் 2008 இல் திருத்தப்பட்டு , புதிய பிரிவுகளும் 66ஏ வில் சேர்க்கப்பட்டுள்ளதை பதிவர் நந்தவனம் குறிப்பிட்டுள்ளா ,அது இங்கே,

"நந்தவனத்தான் said...
வவ்வாஜி, இன்னமும் 2000ல்ல போட்ட சட்டத்தையே பார்த்துகிட்டு இருந்தா எப்படி? சட்டத்தை 2008ல்ல திருத்திவிட்டார்கள்.

66 A Punishment for sending offensive messages through communication service, etc.( Introduced vide ITAA 2008)

Any person who sends, by means of a computer resource or a communication device,-

a) any information that is grossly offensive or has menacing character; or

b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by making use of such computer resource or a communication device,

c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages (Inserted vide ITAA 2008)

shall be punishable with imprisonment for a term which may extend to three years and with fine."


முழு ஐடி தண்டனை சட்டமும் இங்க இருக்கு

http://cybercrime.planetindia.net/ch11_2008.htm

சுட்டியில் சென்று முழு சட்டமும் அறிக.

நன்றி, திரு.நந்தவனம்.

------------------
சொல்லி அடிக்கும் சு.சுவாமிகள்!




ஜனதா கட்சியின் தலைவர் அதிரடி பட்டாசு சு.சுவாமி அவர்களின் துவித்தரில் இது போல நிறைய பட்டாசுகள் வெடிக்கிறார் ...



நன்றி:
//https://twitter.com/Swamy39/status/264183595843862528

வலைப்பதிவு:http://swamy39.blogspot.in/2011/11/news-makers-of-2011-dr-subramanian.html

ஹி...ஹி போட்டு தாக்குற பெருந்தலைகளை எல்லாம் விட்டுப்புட்டு புள்ளைப்பூச்சிகளை போட்டு தாளிக்குறாங்களே :-))

என்ன கொடுமை சார் இது!
-------------------------------
லோக நாயகர்- ரீல் அந்து போச்சு!




கி.பி.1987 இல் தமிழில் வெளிவந்த நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு கிரானைட் கல்(எத்தினி நாளுக்கு மைல் கல்லையே இழுப்பதாம்) என்றால் மிகை இல்லை, நாயகன் படம் வெளிவந்த காலத்தில் இருந்தே காட்பாதரின் தமிழ் பரிணாமம் என்றே கூறப்பட்டு வந்தாலும் Time magazine இல் சிறந்த 100 படங்களின் பட்டியலில் இடம் பெற்று ,தரத்தில் குறைவில்லாத தமிழ் படம் தான் நாயகன் என ISO  சான்றும் பெற்றாச்சு, படம் வந்து 25 ஆண்டுகள் உருண்டோடி போயிற்று, ஆனால் இப்போ வந்து லோகநாயகன் அந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.முக்தா ஶ்ரீனிவாசன் மட்டும் கொஞ்சம் தாரளமாக நடந்துக்கொண்டிருந்தால் உலகப்படமாக நாயகன் வந்திருக்கும் என சாம்பிராணி போடுகிறார்.

மணிரத்னத்தின் திறமைக்கும், லோகநாயகரின் திறமைக்கும் உரிய மதிப்பு கொடுத்து கலைப்படமாக ,உலகப்படமாக எடுக்காமல் மிகப்பெரும் லாப நோக்கோடு 5 லட்சம் லாபம் சம்பாதிக்க மட்டுமே தயாரிப்பாளர் ஆசைப்பட்டார் என குண்டை போடுகிறார்.

1987 கால கட்டத்தில் ஒரு கோடி என்பது பெரிய தொகை, 60 லட்சம் பட்ஜெட் போட்டு ஒரு கோடி செலவழித்த படத்தில் இருந்து 5 லட்சம் லாபம் கிடைத்தால் போதும் என நினைப்பது எந்த வகையில் குற்றம் ஆகும்?

5 லட்சம் என்பது முதலீட்டில் மீது 5% லாபமே ஆகும், எந்த ஒரு தொழிலிலும் 12% ரிட்டர்ன் எடுப்பதே சரியான லாப விகிதம் ஆகும், 12% க்கு மேல் கிடைத்தால் உபரி லாபம். பொருளாதாரம் படித்தவர்களுக்கு தெரியும், படிக்காமலே வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் கூட 10% கம்மியா லாபம் வருவது போல வியாபாரம் செய்ய மாட்டார்கள்.

இந்த சமாச்சாரத்தில் அலச நிறைய விடயங்கள் இருக்கு, ஆனால் லோக நாயகர் சொன்னதில் ஃபில்ம் ரோல் குற்றச்சாட்டினை மட்டும் பிரதானமாக பார்க்கலாம்.

தேவையான ஃபில்ம் ரோல்கள் கூட கொடுக்காமல் தினசரி கோட்டா வைத்து கஞ்சத்தனமாக தயாரிப்பாளர் நடந்து கொண்டார் என சொல்லி இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் 1987 இலேயே 100 ரோல்கள் பில்ம் செலவழித்து எடுத்தப்படம் என உண்மையை சொல்லி இருக்கிறார்.

100 ரோல் ஃபில்ம் என்பது தேவைக்கு அதிகமான ரோல்களே.

திரைப்படங்களின் நீளத்தினை ரீல் கணக்கில் சொல்வார்கள்.

ஒரு ரீல் என்பது 1000 அடி, 300 மீட்டர் , சுமார் 11 நிமிடம் ஓடும் அளவுக்கான திரைச்சுருள்.

ஒரு ரோல் colour film negative  என்பது 1000 அடி நீளம் இருக்கும், அதாவது ஒரு ரீல் நீளம் இருக்கும்.

பெரும்பாலும் 35 மி.மீ  திரைப்பட நெகட்டிவ் ரோல்கள் , 1000 அடி, 400 அடி என இரண்டு வகையில் விற்கப்படும். பொதுவாக ஒரு ரோல் ஃபில்ம் என்றால் 1000- அடி நீளத்தையே குறிக்கும்.

ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் 12 ரீல் அதாவது 12,000 அடி நீளத்தில் பொதுவாக தயாரிப்பார்கள் , தமிழில் 14-15 ரீல்கள் பொதுவான திரைப்பட நீளம் ஆகும்.

திரைப்படம் எடுக்க திட்டமிடும் போது , film roll எவ்வளவு தேவைப்படும் என்பதையும் கணக்கிடுவார்கள். இதனை இறுதியாக எடிட் செய்து உருவாக்கும் திரைப்படத்தின் நீளத்துடன் ஒரு விகிதாச்சாரத்தில் ஒப்பிட்டு கணக்கிடுவார்கள்.

பொதுவாக 1:4 ,கொஞ்சம் தாராளமாக ஷூட் செய்யலாம் என நினைத்தால் 1:5 என்ற விகிதத்தில் கணக்கிடுவார்கள்.

12 ரீல்  திரைப்படம் எடுக்க 1:4 என்ற விகிதம் எனில் 48 ரோல் ஃபில்மும், 1:5 எனில் 60 ரோல் ஃபில்ம் எனவும் கணக்கிட்டு வாங்குவார்கள்.

ஹாலிவுட் பாணி என சொல்லிக்கொள்ளும் லோக நாயகர் ,முக்தா ஶ்ரீனிவாசை "tight fisted" என கஞ்சத்தனம் என்கிறார். ஆனால் ஹாலிவுட்டில் ஒரு இயக்குனர் இப்படி கணக்கிட்ட அளவுக்கு மேல் ஃபில்ம் செலவழித்தால் படத்திலிருந்தே தூக்கிவிடுவார்கள்,பிறகு ஹாலிவுட்டில் எந்த ஸ்டுடியோவும் வாய்ப்பே கொடுக்காது.

ஹாலிவுட்டில் தயாரிப்பு தரப்பான ஸ்டுடியோ வைத்தது தான் சட்டம்.அதனால் தான் எவ்வளவு ஹிட் கொடுத்தாலும் ஒரு இயக்குனரோ, நடிகரோ 100 படம்ம் எல்லாம் அங்கு செய்ய முடியாது.

கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் , இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் விருப்பத்துக்கு படம் எடுக்க தனியாக தயாரிக்க கிளம்பிவிடுவது அதனால் தான். ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஒரு கதையை அவ்வளவு லேசில் அப்ரூவ் செய்யாது.

(ஹி..ஹி நம்ம வாசகி , நம்ம பதிவை தான் படிக்குறாங்க, என்ன கொடுமை சார் இது)


ஏன் திரைப்பட சுருளில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு பொருளாதார கணக்கீடு உள்ளது.

கலர் ஃபில்ம் நெகட்டிவ் விலை சர்வதேச விலை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும், முக்கியமாக வெள்ளியின் சந்தை விலையை வைத்து ,அவ்வப்போது விலை மாறும், ஏன் எனில் ஃபில்ம் ரோலில் உள்ள ரசாயன எமல்சன் silver halide ஆகும்.

வெள்ளியின் விலை 1 ரூபாய் ஏறினால் ஃபில்ம் நெகட்டிவின் விலை 10 ரூ ஏறும் என்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்..

திரைப்படம் எடுக்க ஒரு வகையான கலர் நெகட்டிவ் ஃபில்மும்  ,அதனை திரையிடும் சுருளாக print எடுக்க ஒரு வகையான ஃபில்ம் ரோல்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.

கலர் ஃபில்ம் நெகட்டிவ்கள்  பல வகையான வேகம், ஒளி அமைப்பில் படமெடுக்க என இருக்கிறது, அதற்கு ஏற்ப கொஞ்சம் விலை முன்ன பின்ன மாறுபடும்.

ஒரு ரோல், 1000 அடி கலர் ஃபில்ம் ரோலின் தற்போதைய சர்வதேச விலை 823 டாலர்கள். நம்ம ஊரில் சுமார் 50,000 Rs பக்கம் என கேள்வி.Kodak,Agfa ,Fuji film போன்றவை கலர் ஃபில்ம் நெகட்டிவ், பிரிண்ட் ஃபில்ம் என தயாரித்து வழங்குகின்றன.

see here: http://motion.kodak.com/motion/Products/Production/index.htm

இன்றைய நிலவரத்துக்கு 100 ரோல் ஃபில்ம் விலை மட்டும் ஐம்பது லட்சம் விலை வரும், டாலர் அடிப்படையில் என்பதால் 1987 இல் ஒரு டாலர் சுமார் 20-22 ரூபாய் அளவில் தான் இருந்தது. 20 ரூ என கணக்கிட்டாலும் அன்றைய விலைக்கே 100 ரோல் கலர் நெகட்டிவ் 20 லட்சம் வருகிறது.

அதாவது படத்தின் பட்ஜெட் ஒரு கோடியில் 20% , இது பொருளாதார ரீதியாக தவறான செலவீனம்.

இன்று 500 ரோல்கள் எல்லாம் வீணடிக்கும் உலகமகா இயக்குனர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் , ஆனால் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்பதை கணக்கில் கொண்டால் இது பெரிய தொகை இல்லை எனலாம்.500 ரோல் ஃபில்ம் விலை சுமார் 2.5 கோடி வரும். 100 கோடியில் 2.5% மட்டுமே.

ஆனாலும் தேவை இல்லாமல் ஃபில்ம் ரோல்களை வீணாக்குவதாலேயே படத்தின் பட்ஜெட் முதலில் கணக்கு போட்டதை விட தாண்டி போவது வழக்கம்.

மேலும் எடுத்த அனைத்து கலர் நெகட்டிவ்களையும் லேப்பில் கொடுத்து பிராசஸ் செய்து நெகட்டிவ் மற்றும் எடிட் செய்ய ஒரு பாசிட்டிவ் என தயாரிக்க வேண்டும். முதல் பிரதிஎன்பது  பாசிட்டிவில் எடிட் செய்து திரையிடும் வகையில் ஒரு படம் என ஒன்றை உருவாக்குவது ,பின் முதல் பிரதியின்  அடிப்படையில் நெகட்டிவில் எடிட்டிங் செய்து , பின்னர் அனைத்து திரையரங்குகளுக்கும் பிரிண்ட் போட்டு விநியோகம் செய்வார்கள்.

இப்பொழுது நான் லீனியர் எடிட்டிங்க் எல்லாம் வந்த பின் வேலை சுலபமாக நடக்கிறது. இதனை "Non_Destructive editing" எனவும் சொல்வார்கள் ஏன் எனில் உண்மையான ஃபிலிமில் கட் செய்வதே இல்லை,அனைத்தும் டிஜிட்டல் இண்டர் மீடியத்தில் மட்டுமே.

100 ரோல் ஷூட்டிங்க செய்தால் அதில் பல தேவையில்லாத ஓ.கே செய்யாத ஷாட்களும் இருக்கும், ஆனால் அனைத்தையும் பிராசஸ் செய்து பின்னரே எது தேவை ,தேவையில்லை என எடிட்டர் கண்டுப்பிடிப்பார்.எடிட்டரின் பணி குப்பை தொட்டியை கிண்டி புதையல் எடுப்பது போல :-))

நம்ம ஊரில் ஒரு அடி கலர் நெகட்டிவ் டெவெலப் செய்ய சுமார் 10 ரூ இன்றைய அளவில் பில்ம் லேப்கள் வசூலிக்கின்றன.ஹாலிவுட்டில் ஒரு அடிக்கு 0.16 முதல் .20 டாலர்கள்.

100 ரோல்கள் என்றால் ஒரு லட்சம் அடி அதனை 10 ரூபாயால் பெருக்கினால் சுமார் 10 லட்சம், பின்னர் நெகட்டிவ் பிரிண்ட், ஒரு மாஸ்டர் பாசிடிவ் பிரின்ட் என எல்லாம் சேர்த்து , 100 ரோல் வாங்க என்ன செலவாயிற்றோ அதே அளவுக்கு முதல் பிரதி எடுக்கவும் செலவாகும்.அதுக்கு அப்புறம் எடிட்டிங்க் இன்ன பிற போஸ்ட் புரொடக்‌ஷன் செலவுகள் இருக்கு.

பல படத்தயாரிப்பாளர்கள் பட்ஜெட் எகிறிவிட்டால், ஷூட்டிங்க் முடித்துவிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் செய்ய பணமில்லாமல் தவிப்பதுண்டு.

1987 இல் 20 லட்சம் ஃபில்ம் ரோல் வாங்க செலவாகியது என்றால் மேலும் 20 லட்சம் முதல் பிரதி தயாரிக்கவும் ஆகி இருக்கும்.ஒரு லட்சம் அடியில் 14 ஆயிரம் அடிக்கு தான் படம் மீதி எல்லாம் குப்பைக்கு தான் போயிருக்கும்.

இதனாலாயே ஹாலிவுட்டில் ஃபில்ம் ரோல்களை சிக்கனமாக்க தான் பயன்ப்படுத்த சொல்வார்கள். இப்போது 2013 க்கு அப்புறம் ஹாலிவுட்டில் செல்லுலாய்ட் 35 மி.மீ ஃபில்ம் என்பதே புழக்கத்தில் இருக்காது என சொல்கிறார்கள்.படம் எடுப்பதும் டிஜிட்டல், திரையிடுவதும் டிஜிட்டல் என மாற 2013 ஐ காலக்கெடுவாக வைத்துள்ளார்கள். எல்லாம் செலவீனத்தினை கட்டுப்படுத்தவே.இன்செப்ஷன் , பேட்மன் படங்களை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் , படம்பிடிக்க கண்டிப்பாக 35 மி.மி ஃபில்ம் ரோலை தான் பயன்படுத்த வேண்டும், எனவே ஹாலிவுட் இயக்கினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

காரணம் டிஜிட்டல் விலை மலிவு என்றாலும் அதன் தரம் செல்லூலாய்ட் எமல்ஷன் ஃபில்ம் அருகில் கூட இருக்காது என்பதை இயக்குனர்களும் ,ஒளிப்பதிவாளர்களும் அறிவார்கள். டிஜிட்டலில் படம் எடுப்பது ,புரொஜெக்‌ஷன் செய்வது எல்லாம் செலவை குறைக்கவே மற்றபடி டிஜிட்டல் தரம் இன்னும் ஃபில்ம் ரோல் அளவுக்கு முன்னேறவில்லை.

படத்தின் நீளத்தைப்பொறுத்து ஒரு படத்தின் திரைப்பிரதி தயாரிக்க சுமார் ரூ 70,000 இல் இருந்து ரூ  100,000 வரையில் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட் என்றால் ஒரு 300 ஜிபி ஹார்ட் டிஸ்க்கில் Digital cinema package(DCP) என்ற ஃபார்மேட்டில் ஒலி, ஒளி அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தியேட்டருக்கு அனுப்பப்படும், இதற்கு சுமார் ரூ 5000 போதும். ஆனால் நம்ம ஊரில் QUBE அல்லது UFO வில் அனுப்ப ரூ 20,000 ஆகிறதாம். Qube என்பது ஒரு digital film distribution server and player மட்டுமே அதனுடன் தனியாக , digital projector இணைக்க வேண்டும்.மேலும் கியூப் முறை E-cinema format மட்டுமே சப்போர்ட் செய்யும்,,dcp ஃபார்மேட் செய்வதில்லை. இப்போது கியிபிலும் dcp வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி, மேலும் இந்த விலை வித்தியாசம்,மற்றும் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் போன்றவற்றை இன்னொரு தனிப்பதிவில் காணலாம்.

இப்போ உங்களுக்கே புரிந்திருக்கும் , 1987 இல் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்திற்கு 100 ரோல் பில்ம் சுமார் இருபது லட்சம் ரூபாய் செலவழித்தது பெரிய விடயம் அல்லவா. அக்காலத்தில் பெரும்பாலான படங்கள் சுமார் 50-60 ரோல்கள்  செலவழித்தே எடுக்கப்பட்டது.  உண்மையில் ஒரு காட்சியினை எப்படி எடுப்பது என சரியான திட்டமிடாமல் (shot composition) படம்பிடித்தால் மட்டுமே ஃபில்ம் ரோல் நிறைய செலவாகும்.

இயக்குனர்கள் பாலா ,செல்வராகவன் போன்றோர் இப்படி ஃபில்ம் ரோலை கண்டபடி செலவு செய்தே தயாரிப்பாளருக்கு நஷ்டம் உண்டாக்குவது வழக்கம் என திரையுலகில் ஒரு பேச்சுண்டு. அதே வேலையை தான் அக்காலத்தில் மணிரத்னமும் செய்திருப்பார் போல, அதனையே தயாரிப்பாளர் முக்தா ஶ்ரீனிவாசனும் சொல்ல வருகிறார்.

மேலும் லோகநாயகர் அவரே ஃபில்ம் ரோல் கொடுத்து படபிடிப்பை தொடர்ந்து நடத்த உதவியதாக சொன்னதையும் தயாரிப்பாளர் இல்லை என மறுத்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்காத ஃபில்ம் ரோல், ஓல்டு ஸ்டாக் போன்றவற்றை ஒளிப்பதிவாளர்கள் பயன்ப்படுத்த தயங்குவார்கள். ஏன் எனில் அவற்றில் சில சமயங்களில் சரியாக பதிவாகாமல் போகலாம், காரணம் controlled temperature  இல் தான் ஃபில்ம் ரோல்கள் வைத்திருக்க வேண்டும், இல்லை எனில் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை "silver halide" கிரகித்து நீர்ப்படலம் (fog)உருவாகிவிடும், இதனால் படம் எடுப்பது பாதிக்கப்படும். உப்பினை திறந்து வைத்திருந்தால் நீர் பிடிப்பது போல, இதனை  hygroscopic  nature என்பார்கள்.

எனவே ஃபில்ம் ரோல் கொடுத்து உதவினேன் என சொன்ன கதையும் அடிப்பட்டு போச்சு. மேற்கண்ட உதாரணங்களே லோக நாயகர் விட்ட கதையை கந்தல் ஆக்கும் போது அவர் சொன்ன மற்ற கதைகளும் இப்படியானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு படம் அனைவராலும் பாராட்டப்பட்டு , 25 ஆண்டுகள் கடந்த பின் யாருக்கு உண்மை தெரியும், கேள்விக்கேட்க போறாங்க என அவதூறாக பேசுவதை தடுக்க எல்லாம் சட்டம் ஒன்றும் செய்யாது போல இருக்கே :-))

பிரபலம் அவதூறாக பேசினால் அதனை கேள்விக்கேட்க அவரை விட ஒரு பெரிய பிரபலத்தால் மட்டுமே நம்ம நாட்டில் முடியும் போல :-))

என்ன கொடுமை சார் இது!
------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி, கோடாக், ரெட் ஒன்,ஆசியன் ஏஜ்,தி இந்து, இணைய தளங்கள்,நன்றி!
-----------------------

Wednesday, October 31, 2012

இசையும்-வசையும்:2 அறமும்,உரிமையும்.



 பாடகி சின்மயி ஶ்ரீபதா மற்றும் துவித்தர்கள் இடையேயான வழக்கின் உண்மையறியும் நோக்கில் முந்தைய பதிவினை எழுதினேன்,அதிலும் முழுமையாக அலசவில்லை எனினும் ஓரளவுக்கு நினைத்ததை சொல்லி இருந்தேன் , எஞ்சியதை எழுத வேண்டாம் என நினைத்தாலும் சில பின்னவினத்துவ எழுத்தாள ஆளுமைகள் , தினத்தந்தி ,மாலை மலரில் வருவதை எல்லாம் அடிப்படையாக வைத்து , சொந்த கருத்தினையும் ஏற்றி மாபெரும் இணையக்குற்றத்தினை எதிர்ப்பது அறம் என்பது போல உண்மை தன்மைக்கு மாறாக கட்டமைப்பதை படிக்கையில் ,இதனை இன்னும் கொஞ்சம் ஆய்ந்து எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

எழுத்தாளர் திரு.மாமல்லன், திரு.மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நடு நிலையுடன் , மனித உரிமை மீறல் இவ்வழக்கில் மீறப்படுவதையும், எதிர்கால இணைய வளர்ச்சிக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் பூட்டுப்போடும் ஒரு முயற்சியின் துவக்க புள்ளி என்பதை உணர்ந்து , ஒரு எழுத்தாளராக ,கருத்தாளராக தத்தம் கருத்துக்களை பாரபட்சமின்றி வெளிப்படுத்தி ,கருத்து சுதந்திரத்தின் முக்கியத்தினையும், அதனை இழந்து விடக்கூடாது என்ற சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.

அதே சமயம் தங்களை உலக மகா எழுத்து சிற்பிகள் என பறை சாற்றிக்கொள்ளும் திரு.சாருநிவேதிதா மற்றும் திரு ஜெயமோகன் ஆகியோர் வாய் புளித்ததோ ,மாங்காய் புளித்ததோ என நானும் சொல்கிறேன் கருத்தென , கருத்து சுதந்திரம் ,அடிப்படை மனித உரிமைகளின் மீது ஒரு லாரி லோட் மண் அள்ளிக்கொட்டியிருக்கிறார்கள்.

ஜெயமோகன் அகவயமாக இந்து ஞான மறபின் அடிப்படையில் சிந்தித்து புறவயமாக இணையத்தில் எழுதி இருப்பார் போல :-))

இவர் ஏதோ ஒன்றுக்கு நிதி கொடுங்கள் என்றாராம் இணைய இளைஞர்கள் பைசா அவிழ்க்கவில்லையாம், ஆனால் இந்த "சோ கால்டு " இணைய போக்கிரிகளுக்கு வழக்காட 15 லட்சம் நிதி திரட்டப்பட்டு விட்டதாம் , ஏன் எனில் இணையத்தில் உலாவும் இளைஞர்கள் எல்லாம் ஆபாசமாக பேசுவதில் பெரு வேட்கை கொண்டு அலைபவர்கள் எனவே தம்மினத்தாரை காக்க கொடையளிக்கிறார்கள் என திருவாய் அருளியுள்ளார்.

அது எப்படி அய்யா அட்சர சுத்தமாக 15 லட்சம் என நாகர்கோவிலில் உட்கார்ந்து கொண்டே ஞான திருஷ்டியில் பார்க்க முடிகிறது?இனி இந்திய அரசு அன்னிய செலவாணி வழக்குகளில் உதவி கேட்டு நாகர்கோவிலுக்கு படை எடுக்கும் என்பது மட்டும் உறுதி. ஃபெரா,ஃபெமா வழக்குகளில் ஜெமோ வின் ஞானப்பார்வைக்கு நல்ல தீனிக்கிடைக்கும் :-))

அப்படியே சுவிஸ் வங்கிகளில் யார் ,யார் என்ன தொகையை பதுக்கி வைத்துள்ளார்கள் என கண்டறிந்து சொன்னால் , சென்னை மெரினா பீச்சில் சிலை வைத்து தொழுவார்கள் நாட்டு மக்கள் :-))

சில நாட்களுக்கு முன்னர் ஜெ.மோ தனது பரிவாரத்துடன் கூடன்குளம் சென்று வந்ததாக எழுதியுள்ளார், கூடங்குளத்தில் பெண்களின்  மீது பாலியல் ரீதீயான தாக்குதல்களை அரசு எந்திரம் நடத்தியதாக அய்யா விரும்பி படிக்கும் மாலைமலர்,தந்தி வகையறாவில் கூட செய்தி வந்ததே, அங்கிருந்த மக்களும் சொல்லி இருப்பார்களே, எனவே அதனடிப்படையில் பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான அறச்சீற்றத்தினை அய்யா ஏன் இது வரைக்காட்டவில்லை?

அப்படி எல்லாம் பேசினால் கிடைக்கும் ஒன்றிரண்டு நூலக ஆர்டர்களும் காணாமல் போகும், நஷ்டம் வரும் என தெரியாதா இந்து ஞான மறபின் அடியொற்றி தோன்றிய வேத எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு :-))

ஜெ.மோவாவது ஞான மறபு, அறம் ,புறம்னு சொல்லிக்கொள்ள ஒரு கருத்தாக்கம் வைத்துள்ளார், ஆனால் இணையத்தில் ஊர் சுற்றிப்பார்க்க காசு கொடுங்கள், விருது வாங்கணும் மொழிப்பெயருங்கள் என சொல்லிக்கொண்டு ,கமா,ஃபுல் ஸ்டாப் இல்லாமல் காமசூத்திரம் எழுதும் சாரு நிவேதிதாவும் சொம்பெடுத்து கரகம் ஆடுவது நேற்று புதிதாய் தமிழ் வாசிக்க ஆரம்பித்தவர்களையும் நகைக்க வைக்கும்.

இதற்கே இணைய உரையாடலில் பாலியல் தொல்லைக்கொடுத்து வகையாக மாட்டிக்கொண்டவர். இதே இணைய வெளியில் அனைவராலும் கழுவி கழுவி ஊத்தப்பட்டவர் ,ஆனால் மறதி ஒன்றே மாறாதது மக்கள் மறந்திருப்பார்கள் என திடீர் பெண்ணியக்காவலராக அவதாரம் எடுத்து அருள் வாக்கு சொல்லும் கொடுமைகளை வர்ணிக்க தமிழில் சொற்கள் இல்லை.

பின்னவினத்துவ எழுத்து சிற்பிகளில் சிலர் இப்படி பொங்க அடிப்படை காரணம் என்னவெனில் இவர்கள் எல்லாம் ஆதிகாலத்தில் தங்கள் எழுத்துக்களை வெளியிட முட்டி மோதி மண்டையுடைத்துக்கொண்டவர்கள் , இலக்கிய பத்திரிக்கையில் எழுதினாலும் சன்மானம் கிடையாது, வாசிப்பவர்களோ விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். நூல் வெளியிட சொந்த காசை செலவு செய்து சூனியம் வைத்துக்கொண்டவர்கள். இத்தனை கஷ்டத்திற்கும் பிறகு எழுத்தாளர் என பேர் வாங்கினாலும் மொத்தமாக ஒரு ரெண்டாயிரம் பேருக்கு இவங்க பேரு தெரிந்தாலே அது ஒலக அதிசயம்.

ஆனால் இணையம், வலைப்பதிவு , முகநூல்,துவித்தர் என வந்த பின் பொழுது போக்காக எழுத ஆரம்பித்தவர்களும் நன்றாக எழுதுகிறார்கள், வெகு ஜன ஊடகமும் கவனிக்கிறது ,அவர்களும் இணைய எழுத்தாளர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள் ,பலருக்கும் நன்கு அறிந்தவர்களாக உருவெடுக்கிறார்கள். இதனை எல்லாம் காணும் "சோ கால்டு" பின்னவினத்துவ எழுத்து சிற்பிகளுக்கு அடிவயிற்றில் அமிலம் அபரிமிதமாக சுறக்க ஆரம்பித்ததன் விளைவே சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இணைய படைப்பாளிகளின் மீது சாணியடிக்க காரணம் எனலாம்.

இணையத்தில் எழுதுபவர்களுக்கு இரண்டு வரிகளுக்கு மேல் எழுத வருவதில்லை, அரைப்பக்கத்திற்கு மேல் படிக்க பொறுமை இருப்பதில்லை என்றெல்லாம் பொருமியுள்ளார், ஜெமோ. பொதுவாக அப்படி ஒரு தோற்றம் இருந்தாலும் நிலைமை அந்தளவு மோசமில்லை எனலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரே ரெண்டு வரியில , ஏழு சீர்களில் 1,330 குறள்களை எழுதி , உலக பெரும் அறத்தினை சொல்லியிருப்பதை ஜெமோ ஏனோ கவனிக்கவில்லை.

அவரைக்கேட்டால் திருவள்ளுவருக்கு ரெண்டு வரிக்கு மேல தமிழ் எழுத தெரியவில்லை என சொன்னாலும் சொல்வாராயிருக்கும் :-))

உலகின் முதல் துவித்தர் திருவள்ளுவர் என்று சொன்னால் மிகையில்லை, துவித்தரை ஆரம்பித்தவர்கள் திருக்குறளை படித்திருப்பார்கள் என நினைக்கிறேன், அதான் 140 சொற்களில் சுருங்க சொல்லி விளங்க வையென துவித்தர் சேவை துவக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
-----------------



அறம் ,பெண்ணியம், என சொல்லி தர்க்கம் செய்பவர்களுக்கும், சட்டம் தன் கடமையை செய்தது என்பவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட முறைகளில் செயல் படுத்தப்பட்டதா என அறிவார்களா?

இதனை சுருக்கமாக காணலாம்.

A &B என இருவருக்கும் ,C என்பவருக்கும் துவித்தரில் விவாதம் நடக்கிறது , ஒரு கட்டத்தில் C உடன் விவாதம் முற்றவே , C இருவரையும் தடை செய்து விடுகிறார், எனவே A&B வெளியிடும் செய்திகள் தெரியாது.

A, மற்றும் B தங்களுக்குள் உரையாடுகிறார்கள் , தடை செய்தவர்கள் உரையாடுவதை ஏன் தொடர்ந்து போய் C கவனிக்க வேண்டும், ஆனால் கவனிக்கிறார், அவ்வப்போது அதனை விமர்சிக்கவும் செய்கிறார்.

பின்னர் தன்னை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள் என சில ஸ்கிரீன் ஷாட்டுகளுடன் சைபர் கிரைமில் புகார் செய்கிறார்.

புகாரினை விசாரிக்கும் காவல்துறை அதன் உண்மை தன்மை என்ன என விசாரிக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பையும் அறிய வேண்டும்.

அவதூறு சொல்லாடலின் ஸ்கிரீன் ஷாட்களின் உண்மை தன்மையை அறியவும், யாருடைய இணைய கணக்கில், ஐ.பியில் இருந்து அந்த தகவல்கள் இணையத்தில் ஏற்றப்பட்டது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

இன்னார் ஐ.பி என தெரியாத நிலையில் , துவித்தர் செர்வரில் இருந்து தகவல்கள் பெற வேண்டும்.

துவித்தர் அமெரிக்காவில் இருந்து இயங்குவதால் ,அவர்களை கேட்டதும் இந்தா எடுத்துக்கொள்ளுங்கள் என தகவல் கொடுக்க மாட்டார்கள் ,குறைந்த பட்சம் கோர்ட்டில் இருந்து ஒரு உத்தரவு பெற்று காட்ட வேண்டும்.

அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட துவித்தர் கணக்குகளின் log in விவரங்களை கொடுப்பார்கள்.

இதிலும் ஒரு தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, துவித்தரில் ஒருவரை லட்சத்திற்கு மேல் தொடர்பவர்கள் இருப்பார்கள், ஒரு செய்தி வெளியிட்டதும் அனைவருக்கும் துவித்தர் செர்வர் ரிலே (broadcast)செய்யும், எனவே செர்வர் சிறப்பாக இயங்க அதன் டேட்டா பேஸ் விரைவாக இயங்க வேண்டும், இதனால் எந்த துவித்தர் கணக்கிலும் 3,200 துவித்துகளுக்கு மேல் சேமிக்காது.

3,200 துவித்துகள் என்பதனை சிலர் 3 மாதங்களில் அடைந்துவிடுவார்கள் எனவே அவர்கள் இட்ட பழைய துவித்தர் விவரங்கள் அழிக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அழிக்கப்பட்டதை மீண்டும் எடுக்க ரெகவரி வேலை எல்லாம் செய்தால் தான் முடியும், எனவே துவித்தரிடம் சட்டப்படி விவரம் கேட்டு முறையிட்டாலும் உடனே தகவல் கிடைக்காது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

துவித்தரிடம் இருந்து பழைய துவித்துகள், மற்றும் ஐ.பி (internet protocol)விவரங்கள் மட்டுமே கிடைக்கும்.

ஐ.பி வைத்து பின்னர் முகவரி கண்டு பிடிக்க வேண்டும்.

ஒருவர் பல இணைய மூலங்களை பயன்ப்படுத்தினால் ,ஒரே துவித்தர் கணக்கிற்கு பல ஐ.பி, அதுவும் பல நேரங்களில் பதிவாகி இருக்கும்.

மேலும் ஐ.பியில் ஸ்டேட்டிக் ,I.p,டைனமிக் I.P என இரண்டு இருக்கிறது, டைனமிக் ஐ.பி ஒவ்வொரு முறையும் லாக்கின் செய்யும் போது மாறும். எனவே இந்த நாள் ,இந்த நேரத்தில் இந்த ஐ.பி ஐ பயன்ப்படுத்தியவர் பெயர் முகவரி கண்டுப்பிடித்து தாருங்கள் என , இணையம் வழங்கிய ஐ.எஸ்.பி (internet service provider)யிடம் கேட்டு பெற வேண்டும்.

இதுவே பல கணினிகள் ,ஒரே ஒரு இணைய இணைப்பு உள்ள அலுவலகம், பிரவுசிங்க் சென்டரில் இருந்து ,துவித்தரில் உரையாடி இருந்தால் ,இன்னார் என அடையாளப்படுத்துவது இன்னமும் கடினம், அப்பொழு கணினியின் MAC (Media Access Control address)  எண் வைத்து தான் அடையாளப்படுத்தப்படும், இது physical address of the lan card ஆகும். அதன் மூலமே நாம் ஒரு உள் கணினி வலையில்(local network-intranet ) இணைந்து ரூட்டர்/மோடம் மூலம் உலக வலைக்கு(world wide web-internet) இணைப்பு பெருகிறோம்.

எனவே நெட் ஒர்க்கில் உள்ள குறிப்பிட்ட கணினியில் ,குறிப்பிட்ட நேரத்தில் யார் பயன்ப்படுத்தினார்கள் என அறிந்த பின்னரே , இன்னார் என முடிவுக்கே வர முடியும்.

எல்லாம் செய்து முடித்தாயிற்று,இப்போது குறிப்பிட்ட சில ஐ.பிகளின் முகவரி கிடைத்துவிட்டது,முகவரியும் அறியப்பெற்றாயிற்று ,

அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பை அறிய , எழுத்துப்பூர்வமாக ஒரு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வர சொல்ல வேண்டும்.

சம்மன் பெற்றுக்கொண்டவர்கள் நேரில் ஆஜராக உரிய விளக்கம் அளித்து ,அது திருப்திகரமாக இல்லை என்ற பின்னரே கைது செய்து , நீதி மன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் தள்ளமுடியும்.

மேற்சொன்ன நடை முறையினை படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளலாம் , அனைத்தினையும் சட்டப்படி செய்ய சில ,பல நாட்கள் பிடிக்கும் என்பது, ஆனால் தற்போதைய கைதில் என்ன நடந்தது?

புகார் கொடுக்கும் போதே இன்னார் ,இன்னார் , இந்த ஊரு, இங்க வேலை செய்யறார், என சொல்கிறார், அடுத்த நாளே கைதாகி சிறையில்.எப்படி சாத்தியம்?

காரணம் ,பெயர் ,முகவரி கொடுத்து, புகாரும் கொடுத்து அதன் மீதே கைது நடந்திருக்கிறது. கூடவே குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவுமே இல்லாததை வைத்தே இதனை அறியலாம்.

எனவே இவ்வழக்கில் தொழில்நுட்பமும் ,சட்டமும் பின் பற்றப்படவில்லை, சாமனியனை பிடித்துப்போட்டால் ஆதாரம் இருக்கா என்று கேட்டால் உடம்புக்கு சேதாரம் தான் என்பதால் எவ்வித எதிர்ப்பும் காட்ட இயலவில்லை.

புகாரில் அவதூறாக பேசியது , கொலை மிரட்டல்,பாலியல் தொல்லை, ஆபாசமாக படம்ம் வெளியிட்டனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது ஆனால் எதற்கும் முறையான ஆதாரங்கள் இல்லை, இனிமேல் தான் கண்டுப்பிடிப்பார்க்களாயிருக்கும்.

இதில் மிகவும் கொடுமையான விடயம் என்னவெனில் , லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்பவர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது, அவரோ நான் "ஜின்னாத்தா" என ஒருவருக்கு துவித்தரில் சொன்னேன் அதை தவிர எதுவும் செய்யவில்லை என்கிறார்.

துவித்தரில் பகடி செய்தவர்கள் "சின்னாத்தா" என புனைப்பெயர் சூட்டி செய்தார்கள், எனவே ஜின்னாத்தா என சொன்னதும் மன உளைச்சலை ஏற்படுத்தியது என்ற ரீதியில் குற்றம் சாட்டுக்கிறார்கள்.

சின்னாத்தா என்ற பெயர் காப்புரிமை பெறப்பட்ட பெயரா என்ன?

தி.மு.க தலைவரை கலைஞர் கருணாநிதி என அழைக்கிறார்கள், எனவே கலைஞர் என மற்ற யாரையும் குறிப்பிட கூடாது என சொல்லிவிட முடியுமா?

அப்படி சொன்னால் விஜயகாந்திற்கு புரட்சிகலைஞர் என பட்டப்பெயர் வைக்க முடியாது, மறைந்த நடிகர் ஜெய்சங்கரை "மக்கள் கலைஞர்" என அழைத்திருக்க முடியாது. இவ்வளவு ஏன் இசைக்கலைஞர்,நாட்டிய கலைஞர் என்று கூட எழுதிட முடியாது.

இவ்வளவு ஏன் விகடனில் லூசு பையன் என்ற பெயரில் ஒரு காமெடி கார்ட்டூன் தொடர் வருகிறது, அதில் குலைஞர், ஸ்காலின், போனியா என்றெல்லாம் பெயரில் கேரிகேச்சர் ஓவியங்களை வரைந்து காமெடி செய்வார்கள் ,அதுவும் குற்றமாகிவிடும் :-))

உண்மையில் ஆபாசமாக, வக்கிரமாக பேசி மன உளைச்சல் அளித்திருந்தால் முறைப்படி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கட்டும்,ஆனால் ஜின்னாத்தா என சொன்னதற்கு எல்லாம் மன உளைச்சல் அளித்தார்கள் ,அதுவும் ஆபாசம் தான் என இறங்கினால் ,நாட்டில் அனைவரும் சாப்பிடுவதற்கு தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாத வாய்ப்பூட்டு நிலையே ஏற்படும்.கொட்டாவி விட வாயை திறக்கலாமா என வழக்குரைஞர் ஆலோசனை கேட்க வேண்டியதாகும்.

--------------------

இணைய வெளியில் கட்டுப்பாடின்றி ஆபாசமாக பேசுவதற்கு ஒரு கடிவாளம் தேவை என நினைப்பவர்களுக்கு இப்பிரச்சினையின் ஆழம் விளங்கவில்லை எனலாம். அரசு எந்திரம், அதிகார வர்க்கம் ஒரு சட்டத்தினை முன்னெடுக்கும் போது அதனால் எத்தனை சதவீதம் நன்மை , தீமை என நோக்க வேண்டும்.

சட்டத்தின் செயல் முறையில் அதன் வீச்சு கடலில் மிதக்கும் பனிப்பாறை போல அதன் ஒரு சிறு முனை தான் வெற்றுப்பார்வைக்கு காண கிடைக்கும் , மறைந்திருப்பதே பெரும்பகுதி.

உதாரணமாக அமெரிக்காவில் அறிவுசார் காப்புரிமைக்கு என அறிவு திருட்டினை தடுக்க ,
"The Stop Online Piracy Act (SOPA) and PIPA/PROTECT IP Act"

என இரண்டு சட்ட முன் வரைவுகளை இவ்வாண்டு ஜனவரியில் அமெரிக்க அரசாங்கம் முன் மொழிந்தது, அதனை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும் ஆதரித்தன ,ஆனால் இணைய ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் என விக்கிப்பீடியா, கூகிள், மோசில்லா, என பல அமைப்புகளும் எதிர்த்தன , ஒரு நாள் முழுவதும் " பிளாக் அவுட்" செய்து கண்டனம் செய்தன.

விவரங்கள் அறிய:

#http://en.wikipedia.org/wiki/Stop_Online_Piracy_Act

#http://www.bbc.co.uk/news/technology-16596577

#http://www.1stwebdesigner.com/design/how-sopa-pipa-can-affect-you/

#http://www.pcworld.com/article/248298/sopa_and_pipa_just_the_facts.html


சோபா&பிபா வுக்கு மாற்றாக ,ஓபன் என்ற ஒன்றினை பரிந்துரைத்தார்கள்.

Online Protection and Enforcement of Digital Trade Act (OPEN)

http://en.wikipedia.org/wiki/Online_Protection_and_Enforcement_of_Digital_Trade_Act

மேல் விவரங்களை சுட்டியில் அறியவும்.

சோபா மற்றும் பிபா நடைமுறைக்கு வந்தால் என்ன ஆகும்.

# காப்புரிமை பெற்ற படைப்பினை பகிரும் இணைய தளங்கள் முடக்கப்படும், மேலும் அவர்களோடு யாரும் வர்த்தக உறவுகள் வைத்திருக்க கூடாது. விளம்பரங்கள் அளிக்க கூடாது.

காப்புரிமை பெற்ற பொருளை பகிரும் இணைய தளம் என அறியாமல் ,நமது தளத்தினை அதில் விளம்பரம் செய்தால் நமது தளமும் முடக்கப்படும்.

விளம்பர வருவாயை பெற்று அளிக்கும் ஒரு அமைப்பு இருந்தால் அதன் மீதும் வழக்கு பாயும்.

ஒரு சமூக வளைதளம் , பல பகிர்வுகளை செய்கிறது ,அதில் யாரோ ஒருவர் காப்புரிமை பெற்ற படைப்பினை பகிர்ந்துவிட்டால் , அதற்கும் அத்தளம் முடக்கப்படும்.

உதாரணமாக நமது வலைப்பதிவில் , காப்புரிமை பெற்ற படைப்பினை பகிரும் சுட்டியை போட்டு விட்டால் , நமது பதிவு முடக்கப்படும், ஏன் பின்னூட்டப்பகுதியில் யாரோ ஒருவர் சுட்டியை போட்டுவிட்டாலும் , வலைப்பதிவு முடக்கப்படும்.

# மைக்கேல் ஜாக்சன் பாட்டு நல்லா இருக்குன்னு அதனை நாமே பாடி வலைப்பதிவு ஏற்றம் செய்தாலும் , காப்புரிமை மீறல் என தளம் முடக்கப்படும்.

மெல்லிசை கச்சேரி செய்பவர்கள் கூட மேடையில் திரைப்பாடல்களை, தனி ஆல்பத்தில் உள்ள பாடல்களை பாடி நிகழ்ச்சி நடத்த முடியாது.

பொது இசை கச்சேரி செய்யும் பாடகி சின்மயி கூட இசை நிகழ்ச்சிகளில் பாடுவது சட்ட விரோதம் என கருத்து சொல்லி இருக்கிறார், நம் நாட்டில் சரியாக காப்புரிமை சட்டத்தினை பின்ப்பற்றவில்லை என்பது அவருக்கு வருத்தமாம்.

அப்படியான சட்டம் நடைமுறைக்கு வந்தால் வருமான இழப்பு அவருக்கு தான் என்பதனை கூட உணரவில்லை.

படம்:-1



---------------------
பாடகி தரப்பினர் ஆரம்பகாலத்தில் இருந்தே இணையத்தில் அனைவரையும் சந்தேகித்தே வந்துள்ளார்கள், பாடகியின் தாயார் எழுதும் வலைப்பதிவில் இசைக்குறித்து சந்தேகம் இருந்தால் மின்னஞ்சலில் கேளுங்கள் என்கிறார், கேட்டவர்களை உங்க ஐ.பி பார்த்தேன் இரண்டு ஐ.பியில் இருந்து ஏன் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் , இரண்டு கேள்விகளை கேட்டவரும் ஒருவரே என கண்டுப்பிடித்துவிட்டேன் என துப்பறியும் சாம்புவாக கேள்விக்கேட்கிறார் :-))

படம்:-2


பாடகி 2009 இல் ஒரு பதிவில் , எனக்கு அனாமதேய கால்கள் வருகிறது, அதை எல்லாம் நோட் செய்து வைத்துள்ளதாகவும், அனாமதேயமாக துவித்தரில் கருத்து சொல்பவர்களின் ஐ.பி எல்லாம் தெரியும் சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என எழுதியுள்ளார்.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவரோடு விவாதம் செய்தால் சைபர் கிரைம் என சொல்வதை ஆரம்பத்தில் இருந்தே வழக்கமாக வைத்துள்ளார்.அதனை எல்லாம் அவதானித்து உரையாடி இருந்தால் மாட்டிக்கொண்டவர்கள் சூதனமாக உரையாடி இருப்பார்கள், பிரச்சினையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.


படம்:-3



உண்மையில் துவித்தரில் அனாமதேயமாக கருத்து சொல்லி , தொந்தரவு கொடுப்பதாக நினைத்தால் எடுத்ததும் காவல் துறை செல்ல வேண்டிய அவசியமே இல்லை, பிளாக் செய்யலாம் அப்படியும் கோபம் தீரவில்லையா, துவித்தருக்கு "ஸ்கிரீன் ஷாட்" உடன் ,அந்த ஐ.டியை பற்றி மின்னஞ்சல் அனுப்பி முடக்க சொல்லலாம். இது போன்ற நடவடிக்கைக்கே தொல்லை கொடுப்பவர்கள் புரிந்து கொண்டு ஒதுங்கிவிடுவார்கள். அதையும் தாண்டி தொடர்ந்தால் மேல் நடவடிக்கையாக காவல் துறையை அணுகலாம்.

ஆனால் அப்படியான நிதானமான அணுகு முறையே இல்லை, மேலும் மிகப்பெரும் குற்றச்சாட்டினை சொல்லிய அளவுக்கு ஆதாரங்களும் இது வரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை காணும் போது , இந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை, மீனவர் பிரச்சினை, இட ஒதுக்கீடு ஆகிய விவாதங்களின் போது ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என்றே நினைக்க தோன்றுகிறது.

காரணங்கள் வேறாகவும் இருக்கலாம், ஆனால் சட்டப்படி நடவடிக்கை என சட்டத்தின் நடை முறை வழிகாட்டிகள் தனி மனித கருத்து சுதந்திரத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
-------------

மேலும் இந்நிகழ்வு குறித்து எழுத்தாளர் மாமல்லன் எழுதிய பதிவுகளையும் படித்துப்பார்த்தால் இப்பிரச்சினையின் இன்னொரு பரிமாணம் புலப்படும்.

# ஸ்கிரீண் ஷாட்டில் எடிட் செய்து திரிப்பு வேலைகள் செய்ததை விளக்கும் பதிவு:

http://www.maamallan.com/2012/10/blog-post_23.html

#சோ கால்டு தாழ்த்தப்பட்டவர்கள், மாட்டு சாணி போன்ற பதங்களுடன் கூடிய பாடகியின் துவித்தரை அலசும் பதிவு.

http://www.maamallan.com/2012/10/blog-post_28.html

# இயக்குனர் ராஜமவுலியின் வர்ணாசிரம பற்றினை , ரீட்டீவ்ட் செய்து மகிழ்வதை அலசும் பதிவு.

http://www.maamallan.com/2012/10/blog-post_26.html

நன்றி எழுத்தாளர் திரு.மாமல்லன்.
-------------

பின்குறிப்பு:

#தகவல் உதவி மற்றும் படங்கள்,

கூகிள் விக்கி, துவித்தர், மற்றும் பிபிசி. இணைய தளங்கள்,நன்றி!

# ஆபாசமாக உரையாடுதல்,மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் ,ஆனால் போலியான புகார்கள் மற்றும் பழிவாங்கல் ,தனிமனித காழ்ப்புணர்ச்சிகளும், கண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவு எழுதப்பட்டுள்ளது.

#இக்கட்டுரையின் நோக்கம் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ கலங்கப்படுத்தவோ,காயப்படுத்தவோ அல்ல, அப்படியே யாரேனும் பாதிக்கப்படுவார்கள் எனில் அது அறியாமை அல்லது புரியாமை என கருத வேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். பின்னூட்டமிடுபவர்களின் கருத்துக்கு இப்பதிவு பொறுப்பாகாது.

# டிஸ்கிளைமர் எப்படி எழுதுவது என தனியா ஒரு பயிற்சி எடுக்கணும் போல இருக்கே ...அவ்வ்வ் :-((
-----------------------------

Monday, October 29, 2012

திரும்பிப்பார்-3:ரோசெட்டா கல்வெட்டு(Rosetta Stone)

(hi...hi கிளியோபட்ரா படம் கிடைக்கலை,அதான்  நம்ம ஊரு கிளியோபட்ரா )

 நெப்போலியனின் எகிப்து படை எடுப்பு:

பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபாட்(Napoleon Bonaparte,1769-1821 ) , 1797 ஆம் ஆண்டு டிசம்பரில் இத்தாலியை வென்று விட்டு அடுத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தினை முடக்கும் திட்டம் தீட்டினார், அதன் முதல் படியாக இந்தியாவை கைப்பற்றுவது என்றும் அதற்கு முதலில் எகிப்து வரை உள்ள பகுதியை பிடிக்க வேண்டும், இந்தியாவுக்கான வணிக பாதையை அப்போது தான் முடக்கி ,இங்கிலாந்தை மடக்க முடியும் என திட்டமிட்டார்.



ஏப்ரல் 19,1798 ஆம் ஆண்டு 300 கப்பல்களில் 21 பட்டாலியன் படை வீரர்களோடு ,கடற்படைக்கு அட்மிரல் புரேய்ஸ் மற்றும் நெப்போலியன் தலைமையில் பிரஞ்சு படை தனது எகிப்திய படை எடுப்பை துவங்கியது, வழியில் Toulon, Marseilles, Genoa, Ajaccio, and Civita Vecchia மற்றும் மால்டாவை கைப்பற்றி ,இங்கிலாந்து கடற்படையை வென்று ஜூலை ஒன்றாம் தேதி அலெக்ஸாண்ரியா அருகில் மாரபுட் என்ற இடத்தில் தரை இறங்கியது படை.

எகிப்தை ஆண்ட மாமுலேக் அரசாட்சியின் படை ,முராத் பே தலைமையில் ஜூலை 21 அன்று பிரஞ்சு படையுடன் ,பிரமிட் அருகே சண்டையிட்டு தோல்வி அடையவே ,எகிப்து நெப்போலியன் வசம் ஆனது. ஜூலை 24 இல் கெய்ரோவில் தனது அதிகாரப்பூர்வ ஆளுகைக்கு கொண்டு வந்தார்.


எகிப்தின் மீதான வெறும் படை எடுப்பாக மட்டும் திட்டமிடாமல் ,எகிப்தின் புராதன வரலாற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த நெப்போலியன்ன் ,படை எடுப்பின் போது தன்னுடன் 167 பேர் கொண்ட அறிஞர் குழுவையும் அழைத்து சென்றார். அக்குழுவில் அறிவியலாளர், பொறியாளர்,அச்சுக்கலை நிபுணர்,புவியியலாளர்,விலங்கியல், தாவரவியல்,ஓவியர், சிற்பி,கணித நிபுணர், பொருளாளர்,பத்திரிக்கையாளர் ஆகியோர் இருந்தனர்.

# எகிப்தைக் கைப்பற்றியதும், மேற்கொண்ட குழுவினரை கொண்டு ,எகிப்து அறிவியல் கழகம் என்ற ஒன்ற நிறுவினார். அவர்கள் எகிப்து குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டனர்.

# இரண்டு அச்சு இயந்திரங்களும் கொண்டு சென்று அப்போது கிடைத்த நூல்களை உடனே மொழிப்பெயர்த்து புத்தகமாக வெளியிட்டார், குரானின் மொழிப்பெயர்ப்பு முதலில் ஒரு பகுதியாக அப்போது தான் அச்சானது.

# எகிப்தின் முதல் செய்தித்தாள் "the Courrier de l'Egypte'" 1798 இல் துவங்கப்பட்டது.

# எகிப்தின், வரலாறு,கலை,இலக்கியம் ஆகியவற்றை தொகுத்து "“Description de l’Egypte,” என்ற பெயரில் நூலாக வெளியிடும் பணி துவங்கியது, இப்பணி பின்னர் நெப்போலியன் போரில் தோல்வியுற்ற பின்னரும் தொடர்ந்து 1809 இல் நூல்களாக வெளியிடப்பட்டது.

# நெப்போலியன் தான் எகிப்தின் முழுமையான மேப்பினை வரைய செய்தார், ஆனால் அது பிற்காலத்தில் தான் வெளியிடப்பட்டது.

நெப்போலியன் எகிப்தின் மீது படை எடுத்து ஆக்ரமித்த நேரத்திலும் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளிலும் கவனம் செலுத்தியது அவர் ஒரு அறிப்பூர்வமான ஆளுமை என்பதற்கு சான்று எனலாம். இத்தனைக்கும் நெப்போலியனின் ஆளுமையின் கீழ் எகிப்து இருந்தது கி.பி 1798-1801 வரையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இந்த இடத்தில் நம் நாட்டு ஆட்சியாளர்கள் ,கலை,இலக்கியம்,வரலாற்றில் காட்டும் ஆர்வத்தினை நினைத்தால் ரத்தக்கண்ணீர் தான் வரும்.

மதுரையில் சரித்திர புகழ் பெற்ற சமண குகைகள்,கோயில்கள் இருக்கும் மலையை கல்குவாரி, கிரானைட் என வெட்டி எடுத்து அழிப்பதை ஊக்குவிப்பவர்கள் நம்ம ஆட்சியாளர்கள்!

ரொசெட்டா கல்வெட்டு கண்டுபிடிப்பு:



ரோசெட்டா(Rosetta) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது ,எகிப்தின் நைல் நதியின் மேற்கு கரையில், மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள ஒரு துறைமுகம் ஆகும். அலெக்சாண்ட்ரியாவில் இருந்து 35 மைல் தொலைவில் உள்ளது. இத்துறைமுகத்தின் எகிப்திய பெயர் அல் ரஷீத். ரஷீத் என்பதை ரோசெட்டா என ஆங்கிலத்தில் எழுதிவிட்டார்கள்.

கி.பி 1798 இல் பிரஞ்சு படை அங்கு முகாமிட்டிருந்த போது ஒரு பழையக்கோட்டையை இடித்து பெரிதாக கட்டி ராணுவ முகாம் அமைக்க முயன்றார்கள். இதனை கேப்டன் Pierre François Xavier Bouchard  என்ற ராணுவ பொறியாளர் தலைமையிலான அணி செய்தது.



அப்போது ஒரு சுவற்றினை இடிக்கும் போது ஒரு பெரிய கல் பலகை சுவற்றில் பதியப்பட்டிருப்பதை வீரர்கள் கேப்டனிடம் சொல்லவே ,கல்லைப்பார்வையிட்ட கேப்டன் இது சாதாரணக்கல் போல இல்லை , ஏதோ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கிறது, எனவே முக்கியமானதாக இருக்கும் என தனியே எடுத்து சுத்தப்படுத்தி பார்த்துள்ளார், புரியாத மொழியில் இருக்கவும், கண்டிப்பாக பழமையான ஒரு கல்வெட்டாக இருக்கலாம், என அவரது மேல் அதிகாரி ஜெனரல்  Jacques-François Menou,விடம் தெரிவித்தார், அவரும் இதனைப்பார்த்துவிட்டு என்னவென்று புரியாவிட்டாலும் ,பழம்பொருள் என புரிந்து கொண்டு ,அதனை அவரது சொந்தப்பொருளாக வைத்துக்கொண்டார்.

இராணுவ பணியின் போது ,அவர்கள் கண்டெடுக்கும் பொருட்கள் அரசுக்கு சொந்தமானவையாக அளிக்கப்பட வேண்டும்,ஆனால் ஜெனரல் யாருக்கும் தெரிவிக்காமல் அவரே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்,ஏன் எனில் பிற்காலத்தில் அரிய கலைப்பொருள் என விற்கலாம் என ஒரு எண்ணமாக இருக்கலாம்.

ஜெனரல் ரோசெட்டா கல்வெட்டினை அரசுக்கு அளிக்கவில்லை என்பதை யாரோ சிலர் நெப்போலியனுக்கு மொட்டைக்கடிதாசி எழுதி சொல்லிவிடவே, நெப்போலியன்  ஜெனரலை விசாரித்து உடனே கல்லை எகிப்திய அறிவியல் கழகத்துக்கு எடுத்து வர வேண்டும் என சொல்லி , தொல்லியல் அறிஞர்கள் குழுவினரை ஆராய சொன்னார்.

யாருக்கும் அதில் உள்ள மொழியை படிக்க தெரியவில்லை, ஹியரோ கிளைப்சிலும் மேலும் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது என்ற அளவில் தான் அறியமுடிந்தது என சொல்லவே நெப்போலியனே நேராக சென்று ரோசெட்டா கல்வெட்டினைப்பார்வையிட்டு ,அது மிகப்பழமையான மொழியில் எழுதப்பட்டிருப்பதை உணர்ந்து, இதனை மொழிப்பெயர்த்தால் பல வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என  முடிவு செய்தார்.

அக்காலக்கட்டத்தில் எகிப்தின் பிரமிடுகளிலும், பல கல்வெட்டுகளிலும் ஹியரோ கிளைப்ஸ் கண்டுப்பிடிக்கட்டிருந்தாலும் யாருக்கும் அதனை மொழிப்பெயர்க்க தெரியாது, குத்து மதிப்பாக சித்திர எழுத்துக்கள் என சொல்லி ஆளாளுக்கு ஒரு கருத்தினை யூகமாக சொல்லிக்கொண்டு வந்த காலம்.

ரோசெட்டா கல்வெட்டினை பல பிரதிகள் எடுத்து உலகமெங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்களுக்கு அனுப்பி ,ஆராய சொல்லலாம் என நெப்போலியன் முடிவு செய்து, கல்வெட்டுக்களில் இருந்து பிரதி எடுப்பதில் வல்லவர்களாக சிட்டிசன் மார்செல் ,மற்றும் கேலன்ட் என்ற இருவரை பாரிசில் இருந்து வரவழைத்தார்.

கல்லினை நன்கு சுத்தப்படுத்திவிட்டு அதன் மீது அச்சு மையினை பூசி ,மேலே காகிதத்தினை பரப்பி , ரப்பர் ரோலர்களை உருட்டி கல்வெட்டின் எழுத்துகளை காகிதத்தில் பிரதி எடுத்தார்கள். மேலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் கல்வெட்டினை ஒத்த மாதிரிகளையும் உருவாக்கினார்கள்.

இது போன்று எடுத்த பிரதிகள் ஐரோப்பா முழுவதும் அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் பிரஞ்சு படை வாட்டர் லூ போரில் தோல்வியுறவே ,மீண்டும் இங்கிலாந்து எகிப்தினை கைப்பற்றியது. போர் விவரங்கள் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

போரின் முடிவில் நெப்போலியனுக்கும், இங்கிலாந்திற்கும் ஒரு உடன் படிக்கை உருவானது, அதன் படி எகிப்தில் இருந்து எடுக்கப்பட்ட புரதான பொருட்கள் அனைத்தையும் இங்கிலாந்து வசம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து பொருட்களும் கைப்பற்றப்பட்டு இங்கிலாந்து கப்பற் படையின் ஹெச்.எம்.எஸ்.அட்மிரல், மற்றும் ஹெச்.எம்.எஸ். மெட்ராஸ் ஆகிய கப்பல்களில் ஏற்றப்பட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் ரோசெட்டா கல்வெட்டு மட்டும் லண்டனுக்கு போகவில்லை ,ஏன் எனில் மீண்டும் பிரஞ்சு ஜெனரல் மானோயு ,கல்வெட்டினை அவர் வீட்டுக்கு எடுத்துப்போய் ,அவருக்கே சொந்தம் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நெப்போலியனுடன் போட்ட ஒப்பந்தம் தன்னைக்கட்டுப்படுத்தாது என்பது அவரது வாதம், ஆனாலும் இங்கிலாந்து அரசு விடுவதாயில்லை, மேஜர் ஜெனரல் டர்னர் என்பவரை அனுப்பி மிரட்டி வாங்கிவிட்டது, பின்னர் ரோசெட்டா கல்வெட்டு மட்டும் ஹெச்.எம்.எஸ்.எஜிப்தியனில் ஏற்றி இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு இப்போது ரோசெட்டா கல்வெட்டு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியுசியத்தில் உள்ளது.
---------

ரோசெட்டா கல்வெட்டு மொழி பெயர்ப்பு:

காலம்: தாலமி -5 என்ற மன்னர் காலம் சுமார் கி.மு 196.

கல்வெட்டின் இயல்பு:

உயரம்: 114.4 செ.மீ.

அகலம்:72.3 .செ.மீ

தடிமன்:27.9 செ.மீ.

எடை: 760 கிலோ கிராம்.

மேற்புறம் சிறிது உடைந்திருந்தது.

இக்கல்வெட்டில் ஒரே செய்தி மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்ததே இதன் முக்கியத்துவம் அதிகரிக்க காரணம்.

ஏன் எனில் அது வரையில் எகிப்திய ஹியரோ கிளைப்ஸை யாரும் சரியாக மொழிப்பெயர்த்ததே இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்த மொழி என்பதால் அதனை அறிந்தவர்களே இல்லை, எனவே எப்படி படிப்பது என தெரியவில்லை, இக்கல்வெட்டில் ஹியரோகிளைப்ஸ் உடன் மேலும் இரண்டு மொழிகள் பயன்ப்படுத்தப்பட்டிருப்பதால் ஏதேனும் ஒரு மொழியை டி சைபர் செய்தால் அதனை வைத்து ஹியரோ கிளைப்ஸ் மொழியை டி சைபர் செய்ய முடியும்.



கல்வெட்டில் இருந்த மொழிகள்:

மேற்புறம் ஹியரோ கிளைப்சில் (hieroglyphs )எழுதப்பட்டிருந்தது. ஹியரோ கிளைப்ஸ் என்பதற்கு கடவுளின் மொழி எனப்பொருள். எகிப்தில் அக்கால மத துறவிகளின் தொடர்பு மொழி.

அடுத்த பாகம் , டெமோடிக் எனப்படும் வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இது எகிப்திய மக்கள் பேசும் மொழியாக அப்போது இருந்தது. பின்னாளில் இதில் இருந்தே எகிப்திய காப்டிக் மொழி உருவானது.

கீழ் பாகத்தில் , பண்டைய கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. கிரேக்க மொழி அக்கால எகிப்தில் அரச மொழியாக இருந்தது. அரசனும்,அதிகாரிகளும் கிரேக்கத்தில் உத்தரவுகள் இடுவது வழக்கம்.

ஒரே கல்வெட்டில் மூன்று மொழிகளில் எழுதபட காரணம் அனைத்து மக்களுக்கும் அச்செய்தி சென்றடைய வேண்டும் என்பதே.

இதற்கு முன்னர் பிரமிடுகளில் காணப்பட்ட ஹியரோ கிளைப்ஸ்(hieroglyphs ) எல்லாம் தனியாக எழுதப்பட்டவை என்பதால் ,யாராலும் சரியாக மொழி பெயர்க்க முடியவில்லை, இக்கல்வெட்டில் டெமொடிக், மற்றும் பண்டைய கிரெக்கமும் பயன்ப்படுத்தப்பட்டிருந்ததால் அதனை மொழிப்பெயர்த்து, அதன் மூலம் ஹியரோ கிளைப்சை மொழிப்பெயர்த்தால், அம்மொழி எப்படி எழுதப்பயன்ப்படுகிறது என்ற ரகசியம் கட்டுடைக்கப்படும் என ஆய்வாளர்கள் முயற்சி செய்தார்கள்.



# பிரஞ்ச் மொழி வல்லுனர்கள் ,Jean-Joseph Marcel and Remi Raige ,ஆகியோர் தான் ஹியரோ கிளைப்ஸுக்கு அடுத்துள்ள மொழி டெமோடிக் எனப்படும் ஹெர்டிக் மொழி, ஹியரோ கிளைப்சின் சுருங்கிய வடிவம் என அறிவித்தார்கள்.

# பின்னர் 1802 இல் பிரஞ்சு மொழியியல் வல்லுனர் A.I. Sylvestre de Sacy  டெமோடிக் மொழிப்பகுதியை ஆய்வு செய்து சில சொற்களை மட்டும் இனங்கண்டு மொழிப்பெயர்த்தார்.

# அதன் பின்னர்  சுவீடனை சேர்ந்த வல்லுனர் J.D. Åkerblad  ஆய்வு செய்து சில சொற்களை வகைப்படுத்தி என்ன வகையில் எழுத்துகள், ஒலிக்குறிப்புகள் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது எனப்பட்டியலிட்டார்.

ஆனால் யாரும் முழுதாக மொழிப்பெயர்க்க இயலவில்லை. ஆனால் அகெர்ப்லாட் தயாரித்த சிறு அகராதி போன்ற அட்டவணை பின்னால் ஆய்வு செய்தவர்களுக்கு எப்படி அணுக வேண்டும் என உதவியது.

 Thomas  Young (1773-1829):



இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ்  யங்க் என்பவர் இளம் வயதிலேயே மொழி ஆய்வில் சிறந்து விளங்கினார், எகிப்திய மொழியினை மொழிப்பெயர்ப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , மற்றவர்களால் முடியாமல் விட்ட வேலையை முடிக்க முயன்றார். அக்கர்ப்லாட் தயாரித்த அகராதியை அடிப்படையாக வைத்து மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

பலரும்  தவறாக மொழிப்பெயர்க்க காரணம், ஹியரோ கிளைப்ஸ் என்பது ஐடியோகிராம் எனப்படும் சித்திர எழுத்துக்கள், ஒவ்வொன்றும் ஒரு குறியீடு ,அதன் மூலம் ஒரு பொருள் ,அல்லது சொல்லே முழுதாக உருவாக்கப்படும் என நம்பினார்கள். ஹியரோகிளைப்சின் அடுத்த வடிவம் டெமோடிக் என்பதால் அதுவும் அப்படியான குறியீடு மொழி என்றே ஆய்வு செய்தார்கள்.

அவை எல்லாம் எழுத்தின் வடிவம் , ஒலிக்குறிப்புகள் என அணுகவில்லை. தாமசுக்கு இதில் சந்தேகம் என்றாலும் யூகத்தின் அடிப்படையில் ஓரளவுக்கு வெற்றிகரமாக மொழிப்பெயர்த்தது அவர் தான். முதன் முதலில் இக்கல்வெட்டில் டாலமி, கிளியோபட்ரா, பெர்னிஸ் ஆகியப்பெயர்கள் இருக்கிறதென அறிவித்தார் , அவருக்கு இதில் உள்ள எழுத்துக்கள் வெறும் குறியீட்டின் அலகுகள் அல்ல அனைத்தும் ஒலியுடன் கூடிய எழுத்து என சந்தேகம், ஆனால் அக்கால புகழ்ப்பெற்ற ஆய்வாளர்கள் எகிப்திய மொழி ஒலிக்குறியீடு இல்லாத ,எழுத்து இல்லாத சித்திர வகை எழுத்து, என உறுதியாக சொல்லி வந்தார்கள்.

****************

கிளியோபட்ரா என்பதன் ஹியரோ கிளைப்ஸ் வடிவம்.

கிளியோ- அன்பு, பட்ரா- தந்தை, தந்தை மீது அன்புள்ளவள் என்ற காரணப்பெயரே சூட்டபட்டிருந்தது.

எகிப்திய வராலற்றில் பல கிளியோபட்ராக்கள் உண்டு, ஷேக்ஸ்பியர் எல்லாம் எழுதி வர்ணித்த கிளியோபட்ரா-7 ஆவார், அவரது தாயாரின் பெயரும் கிளியோபட்ரா தான் ,அவர் மூன்றாவது கிளியோபட்ரா எனப்பட்டார். மற்றவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.
******************

எனவே பெரும்பான்மை கருத்துக்கு எதிராக சொல்ல விரும்பாமல் , பாதியிலேயே ஆய்வினை நிறுத்திக்கொண்டார்.மேலும் அவர் பெரும்பாலும் யூகத்தின் அடிப்படையில் டாலமி என்றால் இது கிளியோபட்ராவாக இருக்கும் என்பது போல  மொழிப்பெயர்த்தார், அவரால் கடைசி வரையில் சித்திரம்,எழுத்து ஆகியவற்றுக்கிடையே ஒரு தர்க்க ரீதியான தொடர்பினை கொடுக்கவோ, ஒரு முறையான அமைப்பினை உருவாக்கவோ முடியவில்லை.



தாலமி என்பதன் ஹியரோகிளைப்ஸ் வடிவம்.

இதன் பின்னால் ஒரு அரசியலும் உள்ளதாக சொல்வார்கள். ஹியரொ கிளைப்ஸ் என்ற மொழி வடிவம் , மொழிகளிலேயே மிகவும் பழமையானது சுமார் 4000-3000 ஆண்டுகள் ,கிருத்துக்கு முன்னால். எனவே அப்பொழுதே ஃபொனடிக்குடன் ஒரு மொழி உருவாகி இருந்தது என்றால் அது வரையில் மிகப்பழையான பண்பட்ட மொழி இலத்தின் என சொல்லப்பட்டு வந்தது அடிபடும், ஆங்கிலம் ,ஆங்கிலோ-சாக்சான் எனப்படும் இலத்தின் வழி உருவானது.

எகிப்திய மொழி ஒலி,எழுத்து உடைய பண்பட்ட மொழி என நிறுவப்பட்டால், எகிப்திய கலாச்சாரமும் பேசப்படும், அது வரையில் எகிப்திய மக்களை நாகரீகம் இல்லாதவர்கள், அடிமை வியாபாரம், நரபலி கொடுப்பவர்கள், கற்கால மக்கள் என ஆங்கில அறிஞர்கள் எழுதி வந்தார்கள்.

பிரமிடு ,இன்ன பிற பிரமாண்ட கட்டுமானங்கள் எல்லாம் பார்த்த பின்னும் எகிப்திய மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என 18 ஆம் நூற்றாண்டிலும் வெள்ளைக்காரர்கள் சொல்லி வந்தார்கள் என்றால் என்ன சொல்வது.

இத்தகைய எண்ணங்களே ரோசெட்டா கல்வெட்டினை முழுமையாக மொழிப்பெயர்க்க தடையாக உருவாகி வந்தது எனலாம்.

Jean François Champollion:



அதே கால கட்டத்தில் , ஆங்கிலேயர்கள் மொழிப்பெயர்த்தாலும் முழுமையான உண்மையை வெளியிடாமல் மறைத்து விடுவார்கள் என பிரஞ்சு மொழி ஆய்வாளர் கேம்போலியன் என்பவரும் தனியே ஆய்வு செய்து வந்தார்.

ஹியரொ ஹிளைப்பிசில் உள்ள வட்டுக்களில்( cartouche)உள்ளே சில சித்திரக்குறியீடுகள் தனித்து காட்டப்பட்டிருப்பதை ஏன் என ஆய்வு செய்தார், அப்பொழுது தான் அவற்றில் முக்கியமான பெயர்களை குறிப்பாக வெளிப்படுத்த நீள்வட்டு வடிவத்துனுள் பொறிப்பதை உணர்ந்தார், அவற்றையும் , டெமோடிக் மொழியில் இருப்பதை ஒப்பிட்டு சிறிது சிறிதாக  புரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

ஹியரொ கிளைப்சில் ஒரு நீண்ட சொல்லினை இரண்டு ,முன்று சித்திரங்களின் மூலமும் சொல்கிறார்கள் அதே சமயம் ஒரு சித்திரம் ஒரு எழுத்தாகவும் பயன் படுத்தப்படுவதை புரிந்து கொண்டார்.


ஒப்பிட்டு மொழிப்பெயர்த்தல்.

சித்திர எழுத்து அதே சமயம் தேவைப்பட்டால் அது ஒலிக்குறியீடாகவும் ,எழுத்தாகவும் பயன்படும் மொழி என்ற சிக்கலை உடைத்தார்.

செப்டெம்பர் 22,1827 ஆம் ஆண்டு ,முதலில் ராம்சே-1 என்ற பெயரை நீள்வட்டில் இருந்து சரியாக மொழிப்பெயர்த்துவிட்டு ,சகோதரரை தேடி  ஓடிச்சென்று பார்த்து சந்தோஷத்தில் " கிடைச்சாச்சு" (“Je tiens l’affaire!” (“I’ve got it!”) எனக்கூவிக்கொண்டு மயங்கிவிழுந்து விட்டாராம், அதன் பின்னர் 5 நாட்கள் நினைவில்லாமல் படுக்கையில் கிடந்துள்ளார். காரணம் சரியாக சாப்பிடாமல்,தூங்காமல் ஆய்வு செய்த அழுத்தம், மற்றும் பலவீனமே ஆகும்.

இதன் மூலம் ஹியரோ கிளைப்சிற்கு என ஒரு இலக்கணம், அகராதி, நிலையான மொழி பெயர்ப்பு முறை என மீண்டும் கட்டமைத்தார் இதனால் , ஹியரோ கிளைப்ஸ் மொழியின் தந்தை எனவும் புகழப்பட்டார்.

ஒவ்வொரு சித்திர எழுத்தும் ஆங்கில எழுத்துக்கு இணையான ஒலிக்குறியீடு கொண்ட எழுத்து என நிருபித்து அதனைப்பட்டியலிட்டுள்ளார்.

எப்படி வட மொழியில் ச,ஷ , க,ஹ என வேறுபட்ட ஒலியுடன் எழுத்துகள் உள்ளதோ அப்படியே எகிப்திய மொழியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட, ஸ்,கே, என எழுத்துக்கள் உள்ளது.

கேம்போலியன் சிறப்பாக மொழிப்பெயர்த்து அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தாலும் ,ஆங்கிலேயர்கள் ரொம்ப காலம் புறணிப்பேசிக்கொண்டு தவறு என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள், அதிலும் தாமஸ் யங்க், நான் அப்போவே எல்லாம் செய்துவிட்டேன், ஆனால் அதை முழுசா வெளியிடவில்லை, கேம்போலின் காப்பி அடிச்சுட்டார்னு பொலம்பிக்கிட்டே தான் இருந்தார்.

ஹியரோ கிளைப்ஸ்-ஆங்கில ஒப்பீடு:

ஆங்கிலம் இலத்தின் மூலம் என்பதால் இலத்தின் அடிப்படையிலே அணுக வேண்டிய மொழி, கிரேக்கர்களும், ரோமானியர்களும், எழுத்து மற்றும் ஓவியம் என்பதை இரு வேறு கலைகளாக பிரித்து அணுகினார்கள்.

ஆனால் எகிப்திய மக்கள் எழுத்து, ஓவியம் ,சிற்பம் அனைத்தும் ஒரே கலை வடிவம் என அணுகினார்கள். ஒருங்கிணைந்த கலை. வரைவது போல எழுதுவார்கள், எழுதுவது போல சிற்பம் செதுக்குவார்கள் எனலாம்.

இப்படிலாம் இருக்குமா என நினைக்கலாம், இருக்கும் சீன மொழி, ஜப்பானிய மொழி சித்திர எழுத்துக்களே, எழுதுவது சீனத்திலும், ஜப்பானிலும் சித்திரக்கலையே.

மொழியின் எழுத்து வடிவம் ஓவியத்தில் இருந்தே உருவானது, ஓவியம் எழுத்து எனப்பிரிவது இலத்தின், பிரியாமல் இருப்பது எகிப்திய ஹியரொ கிளைப்ஸ்,ஜப்பானிய,சீன மொழிகள் எனலாம்.

ஹியரோ கிளைப்ஸ்-ஆங்கில எழுத்துகள்:



இந்த சுட்டியில் ஆங்கில, எகிப்திய ஹியரோ கிளைப்ஸ் மொழிமாற்ற வசதியுள்ளது ,நீங்களும் ஆங்கிலத்தினை எகிப்திய கியரோ கிளைப்சுக்கு மொழி பெயர்க்கலாம், எகிப்துக்கும் மொழி மாற்றலாம்.

ஆங்கில சொற்களுக்கான எகிப்திய அகராதியும் உள்ளது.

சுட்டி: http://hieroglyphs.net/0301/cgi/lookup.pl?ty=en&ch=a&cs=0

ரோசெட்டா கல்வெட்டில் உள்ள செய்தி:

எகிப்திய மன்னன் தாலமி-5(Ptolemy V Epiphanes (205-180 BC)  என்பவர் , இளம்சிறார் என்பதால் அவருக்கு பதிலாக அவர் தாயார் ஆட்சி செய்து வந்தார், எனவே 13 ஆம் வயதில் மன்னராக மூடிச்சூட்டிக்கொள்வதையே அக்கல்வெட்டில் அறிவித்து இருக்கிறார்.

தாலமியின் சகோதரி தான் கிளியோபட்ரா-7 .தாலமி -5 முடிசூட்டிக்கொள்வதுடன் தன்னை புனிதராகவும்(priest) அறிவிக்கும் நாள் அது. எகிப்திய மன்னராக முடிசூட்டிக்கொள்பவர்கள் முறைப்படி  புனிதராக ,மத குருக்கள் மூலம் அறிவிக்க பட வேண்டும். அதன் பின்னர் மன்னரும் ஒரு கடவுள் ஆகிவிடுவார்.

மன்னருக்கு கோவிலில் சிலை வைக்கப்படும், மேலும் தனிக்கோவிலும் கட்டப்படும், அப்படி வைக்கப்படும் சிலைக்கருகில் ,அவர் புனிதர் ஆனதை அறிவிக்க வைக்கும் கல்வெட்டே ரோசெட்டா கல்வெட்டு.

அதனால் தான் அப்பொழுது எகிப்தில் பயன்பாட்டில் இருந்த மும்மொழிகளிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தாலமி-5 மன்னராக முடி சூடியதும் ,எகிப்திய பாரம்பரியப்படி சகோதரி கிளியோபட்ராவை மணந்து கொண்டார்.

கிளியோபட்ரா தாலமியை விட வயதில் மூத்தவர் என்பதால் , அவரை டம்மியாக்கி விட்டு தானே ஆட்சி பொறுப்பினை எடுத்துக்கொண்டார்,, இதனால் சகோதரன்/கணவன் தாலமிக்கும் ,கிளியோபட்ராவுக்கும் சண்டை வந்து ,அதில் ரோமானிய சக்ரவர்த்தி ஜூலியஸ் சீசர் மத்தியஸ்தம் செய்து , பின்னர் கிளியோபாட்ராவை காதலித்தது,சீசருக்கு பின்னர் ஆண்டனி ,கிளியோபட்ரா காதல் என ஷேக்ஸ்பியர் இலக்கியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரோசெட்டா கல்வெட்டு மொழிபெயர்க்கப்படவில்லை எனில் கிளியோபாட்ரா என்ற எகிப்திய இளவரசி  ஷேக்ஸ்பியர் போன்ற இலக்கியவாதிகளால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என்றே சொல்லப்பட்டிருக்கும்.ரோசெட்டா கல்வெட்டின் மூலம் தான் மற்ற ஹியரோ கிளைப்ஸ் கல்வெட்டுகள் மொழிப்பெயர்க்கப்பட்டு , தாலமி,கிளியோபட்ரா, நெப்ரட்டி, சீசர், ஆண்டணி இன்ன பிற வரலாற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன, இல்லை என்றால் மேற்கண்ட சம்பவங்களும் ,பெயர்களும் எல்லாம் கற்பனையே உயிருடனோ அல்லது இறந்தவர்களையே குறிக்கவில்லை என்ற டிஸ்கி ஆகி இருக்கும் :-))

திரும்பிப்பார்த்தல் தொடரும்....

-------------
பின் குறிப்பு:

# சில பிழைகள் இருக்கலாம், கிடைத்த மூலங்களில் இருந்து முடிந்த வரை சரிப்பார்த்து வெளியிட்டுள்ளேன்.

# பிழை திருத்தம் செய்யவில்லை, அங்கே சந்திப்பிழை, இங்கே எழுத்துப்பிழை என சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம், பின்னர் பிழை திருத்தம் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி:

BBC,sacred-texts.com,WIRED.COM,HISTORY-BIBLE,napoleon-series.org,WIKI,இணைய தளங்கள்,நன்றி!

********************

Wednesday, October 24, 2012

இசையும்-வசையும்:துவித்தர்கள் கைது.




நிகழ்காலத்தின் பரபரப்பு பிரபல்ய திரையிசை பாடகி மற்றும் சாஸ்த்திரிய சங்கீத பாடகி சின்மயி ஶ்ரீபதா அவர்களை துவித்தரில் ஆபாசமாக பேசி ,கொலை மிரட்டல்,பாலியல் வன்முறை என மிரட்டல் விடுத்த ஆறு பேர் மீது வழக்கு ,இருவர் கைது என்ற நிகழ்வாகும்.

மெய்நிகர் உலகான ,பதிவுலகு,துவித்தர் உலகு, முகநூல் உலகு , மற்றும் மின்வெட்டில் குதுகலிக்கும் மெய்யுலகு என அனைவரும் இந்நிகழ்வினை ,இந்நாளுக்கான பொழுது போக்கி என கூர்ந்து அவதானித்து சுவைபட எழுதியும் ,பேசியும் வருகையில் ,நிகழ்காலத்தின் நாட்டு நடப்புகள் பெரிதும் தெரியாமல் பெர்ஷியாவின் அக்கேமேனிய மன்னன் டாரியஸ்-1 கட்டிய பெர்சியாபொலிஸ் நகரம் எங்கே ,அரண்மனை எவ்வளவு பெரியது என கூகிளில் துழாவி சோம்பி திரியும் எனக்கும் லேசாக கிர்ரடிக்கவே என்ன தான் நடந்தது ,நடக்குதுன்னு மெல்ல சோம்பல் முறித்து இணையத்தில் துழாவினால் தொல்பொருள் ஆராய்ச்சியை விட சில சுவையான தகவல்கள் கிடைக்கவே ,பளீச்..பளீச் என என் மண்டைக்குள் பல்ப் எரிந்தது(பவர் கட்டிலும் பல்பு எரியுதாமா) ,அதனை இங்கே பகிர்கிறேன்.

துவித்தர் விவகாரம், விகாரமாக உருவாகி சைபர் கிரைம் வழக்காகி,கைதானதும் , தமிழக மீனவர்கள், இடஒதுக்கீடு என பலவற்றிலும் முதிர்ச்சியற்ற கருத்துகளை சொன்னது தான் விவாதமாகி, சண்டையாகி நின்றது என அனைவரும் சொல்வதால், அப்படி எல்லாம் இல்லை நான் தமிழ் பெண், தமிழ் வளர்த்த அய்யங்கார் பரம்பரை, தென் தமிழக மறவர் சீமை என்றெல்லாம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் பாடகி அவர்கள்.இது மேலும் ஆர்வத்தினை தூண்டவே,துவித்தர் மட்டுமல்லாமல் ,வலைப்பதிவும் வைத்திருக்கிறாரே , அதுவும் ஆங்கில வலைப்பதிவு அதில் எதாவது தேறுமா என படித்துப்பார்த்தேன்.

அவரது  வலைப்பதிவுக்கு "என்ன பெயர் வைப்பது" என தெரியவில்லை ,அதாவது அதாங்க பெயரே "what to name it"(இதே போல பெயரில் இளையராஜா ஒரு இசை ஆல்பம்(how to name it) வெளியிட்டிருந்தார் என நினைவு , வீடு படத்தில் பின்னணி இசையாக இதனை தான் பயன்ப்படுத்தியிருந்தார்கள் எனவும் நினைவு)

இனி பதிவில் இருந்து....

# The Ramnad Connection

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-7-ramnad-connection.html

அவரது வலைப்பதிவில் 2011 வாக்கில் எழுதப்பட்ட  "ராம்நாட் கனெக்‌ஷன்" என ஒரு இடுகை படித்தேன், அதில் வருவதாவது.

ராமநாதபுரம் சமஸ்தான ராஜாவாகிய 'ஷண்முக ரகுநாத சேதுபதியும்" , இவரது தாத்தாவும் பால்யகால சினேகிதர்கள், கல்லூரி தோழர்கள், மேலும் கிரிக்கெட் ஒன்றாக விளையாடுவார்கள். இவரது தாத்தாவை ராஜா "கொரளி அய்யங்கார்' என அழைப்பார் எனவும் ,ராஜா அக்கால மத்திய அரசில் அமைச்சர் ஆக சில காலம் இருந்தார் எனவும் முதல் பத்தியில் வருகிறது.

படம்-1


இதில் சில சிறு  பிழைகள் இருக்கிறது,

ராஜாவின் சரியான பெயர் -ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி.

மத்திய அமைச்சராக இல்லை, சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி , முறையே ராஜாஜி,காமராஜர் காலங்களில் வீட்டுவாடகை நிர்ணய அமைச்சராக தமிழக அரசின் அமைச்சரவையில் இருந்துள்ளார்.

சுட்டி:

http://en.wikipedia.org/wiki/Shanmugha_Rajeswara_Sethupathi

காலம் கி.பி.1909-1967.

1967 இல் சுமார் 58 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, இருக்கு பொறுமை காக்கவும்.

தாத்தாவின் நண்பரான ராம்நாட் ராஜாவின் சகோதரி "கணேஷ குஞ்சர நாச்சியாரும்", சகோதரர் "காஷிநாத் தொரை" அவர்களும் ,பாடகியின் தாயாருக்கு நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்கள் என்றும், அப்போதெல்லாம் சென்னை செனடாப் சாலையில் உள்ள அவர்களது பெரியவீட்டில் பல புகழ்மிகு சாஸ்த்திரிய சங்கீத வித்வான்கள் பாடுவார்கள் என்றும் அங்கேயே பல மணிநேரங்கள் செலவிட்டு அவரது தாயார் இசை அறிவை பெருக்கிக்கொண்டதாகவும், மேலும் காஷிநாத் தொரை அவர்கள் பல சங்கீதவித்வான்கள் பாடிய சக்ர தனம், மண்டுக தனம், மர்கத தனம் ஆகியவற்றை அவரது தாயாருக்கும் எப்படி பாடுவது என பாடிக்காட்டுவாராம், மேலும் பல மணி நேரங்கள் இசைப்பற்றி பேசியும் பாடியும் அறிவை பெருக்குவதற்கு அடித்தளம் வகுத்தது எனவும் சொல்லியுள்ளார்.

படம்-2



இசை தெரிந்தவர்கள் இதெல்லாம் செய்வது சகஜம் தானே என நினைக்கலாம்,அட இருங்கப்பா அதுக்குள்ள நீங்களா ஒரு முடிவை எடுத்துக்கிட்டு ,இன்னும் வருது கதை...

படம்-3.





சிறுவயதில் தந்தைவிட்டு சென்றதால் இன்றளவும் தந்தைப்பெயரை வெளியில் சொல்வதில்லை, மேலும் அவரது தாயார் மிகக்கஷ்டப்பட்டு பாடகியை வளர்த்துள்ளார் என்பதும் தெரிகிறது.பாடகியும் இளம்வயதிலேயே நன்கு திறமைமிக்கவராக விளங்கியுள்ளார்.

தாயாருக்கு 15 வயது ஆகும் போது ஆண்டு 1985-86 ஆக இருக்க வேண்டும் என தெரிகிறது. அப்படியானால் அவர் பிறந்த ஆண்டு 86-15=1971  என வருகிறது.

திருமணம் சுமார் 1983 வாக்கில் ,அதாவது 12 ஆவது வயதில் நடந்துள்ளது. 1983 காலகட்டத்தில் பால்ய விவாகம் செய்யும் அளவிலேயே தமிழகம் இருந்துள்ளாதா? என்ன ஒரு கொடுமை இதனை இச்சமூகமும்,சட்டமும் அங்கீகரித்துள்ளதே.

பாடகியின் தாத்தா ராமநாட் ராஜாவின் கல்லூரி தோழர் எனில் அவரது வயதை ஒத்தவர்ராக இருக்கவேண்டும். அதாவது 1909-10 காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பாடகியின் தாயார் பிறக்கும் போது தந்தைக்கு வயது 61 ஆகிறது என வருகிறது.அந்த காலத்தில் வயதான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது சகஜமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சரி அது போகட்டும் ராம் நாட் ராஜா "ஷண்முக ராஜேஷ்வர சேதுபதி 1967 இல் இறந்துவிடுகிறார் ,ஆனால் 1971 இல் பிறந்த பாடகியின் தாயார் எப்படி அவர் வீட்டில் நடந்த "அரசவை தர்பார் கச்சேரிகளை "கேட்டு அறிவை வளர்த்துக்கொண்டிருக்க முடியும்.அப்போது பிறக்கக்கூடயில்லையே.

மேலும் ராஜாவின் சகோதர,சகோதரிகளுக்கும் அப்போது சுமார் 50-55 வயது இருந்திருக்க வேண்டும், ஆனால் 1971 இல் பிறந்தவருக்கு நண்பர்களாக இருந்தார்கள் ,வீட்டில் நடந்த கச்சேரிகளில் பாடிய நுணுக்கங்களை பாடிக்காண்பித்து தாயாருக்கு அறிவு புகட்டினார்கள், மணிக்கணக்கில் இசைக்குறித்து பேசிக்கொண்டார்கள் என சொல்கிறார்.

1971 இல் பிறந்த குழந்தையாக இருந்திருப்பார், பேச ,பாட ஒரு 6 வயது ஆவது ஆகும் அப்படி எனில் 1977 இல் என வைத்துக்கொண்டாலும் அப்போது ராஜாவின் சகோதர ,சகோதரிகளுக்கு இன்னும் வயதாகி 60-65 வயதில் இருக்கலாம், அவர்களுக்கு பாடகியின் தாயார் நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனவும் சொல்ல முடியாது, சரி சின்னக்குழந்தையுடன் பழகினார்கள் என சொல்லலாம், ஆனால் ராஜாவின் வீட்டில் இசை தர்பார் நடக்கும் ,மணிக்கணக்கில் அங்கு இருந்து கற்றுக்கொண்டது,பட்டை தீட்டியது எல்லாம் இராஜா இறந்த பிறகு நடந்ததா? அதனை சொல்லவும் இல்லை.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் என்னவெனில் அவரது தாயார் ஒரு வலைப்பதிவு வைத்துள்ளார் ,அதில் அவர் தனது 15 வயதில் சின்மயி பிறந்து, கணவன் விட்டு சென்ற பின் தான் முறைப்படி இசை பயில தொடங்கினேன், அது வரைக்கும் ஒன்றும் முறைப்படி தெரியாது என்கிறார்.இதெல்லாம் நடந்தது மும்பையில் என்றும் சொல்கிறார்.

ஆனால் பாடகியின் வலைப்பதிவில் ,சென்னையில் பல மணிநேரம் சங்கீத செஷன்ஸ் நடக்கும்,காஷிநாத் தொரை அவர்களும் , அவரது சகோதரியும் ,தாயாரும் பாடி,பேசிக்கொண்டு இருப்பார்கள் என்கிறார்கள்.60-65 வயதில் இருப்பவர்கள் 12 வயதுக்குள் உள்ள சங்கீதம் கற்காத சிறுமியுடன் ,சக்ர தானம்,மக்ர தானம் எல்லாம் எப்படி பாடுவது என சங்கீத விவாதம் செய்துள்ளார்கள்.

----------------

The Tanpura of Ustad Abdul Karim Khan saheb:

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-10-tanpura-of-ustad-abdul.html

அவரது இன்னொரு இடுகையில் அவரது தாயாருக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள பிரபல புல்லாங்குழல் வித்துவான் மாலி என்கிற டி.ஆர் மகாலிங்கம் 100 ஆண்டு பழமையான ustad-abdul Karim Khan saheb பயன்ப்படுத்திய தம்புராவை கொடுத்தார் என ஒரு சம்பவத்தினை சொல்லியுள்ளார்.

படம்-4



அதில் வருவதாவது, சங்கீதம் கற்றுக்கொள்ள சுருதிப்பெட்டி சரி வராது என குருவான த்வாரம் மங்காதாயாரு (தாத்தாவின் வளர்ப்பு மகளாம்)சொல்லிவிட்டு ,சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற போது மாலி அவர்களை சந்தித்த போது ஒரு தம்புரா பெட்டி கேட்டதாகவும் ,அவர் வைத்திருந்த 100 ஆண்டுகள் பழமையான தம்புராவை கொடுத்ததாகவும் சொல்லியுள்ளார். அதுவும் விரிவாக சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல ஆன கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் தம்புராவை ஒரு இசைக்கடையில் காட்டி 40 ரூ என விலை நிர்ணயம் செய்து அனைத்து கட்டணமும் வாங்கிக்கொண்டே  கொடுத்தார்கள் என எழுதியுள்ளார்.

படம்-5



சுட்டி:http://padmhasinit.blogspot.in/2006/02/womens-rights-on-spirituality-contd.html

15 வயதில் தான் த்வாரம் மங்காதாயாரிடம் முதன் முதலில் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் என அவரது தாயார் பதிவில் எழுதியுள்ளார், அப்போது ஆண்டு 1985-86 ,இடம் பம்பாய்! மேலும் அதன் பிறகு பம்பாயில் வேலை தேடிக்கொண்டு அங்கேயே புதிதாக வாழ தொடங்கினேன் என்றே எழுதியுள்ளார், அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு பின்னரே சென்னை வந்தது போல இருக்கிறது.ஏன் எனில் சென்னையை விட்டு போய் 15 ஆண்டுகள் ஆனது போல ஒரு இடத்தில் வருகிறது.


சரி மும்பையாக இருந்தால் என்ன , பெங்களூரில் இருந்த மாலியிடம் தம்புரா வாங்கி இருக்கலாமே எனலாம். அங்கும் ஒரு அதிசயம் இருக்கிறது ,மாலி 1980-85 வரையில் அமெரிக்காவில் இருந்தார். 1986 இல் இந்தியா வுக்கு திரும்பி பெங்களூரில் சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக இறந்துவிட்டார்.

சுட்டி: http://en.wikipedia.org/wiki/T._R._Mahalingam_(flautist)

1986 இல் இந்தியாவில் தங்கியிருந்த சில மாத இடைவெளியில் தம்புரா வாங்கியிருக்கலாம், ஆனால் மும்பை ,சென்னை என இடம் மாறுகிறது.ரொம்ப எல்லாமே ஒரு அசாதாரணமாக நடப்பது போன்றே எல்லா நிகழ்வும் உள்ளது.

இதோடு முடியவில்லை சில ஆண்டுகள் கழித்து மாலி சென்னைக்கு வந்து தான் கொடுத்த தம்புரா பத்திரமாக இருக்கிறதா எனப்பார்க்க ஆழ்வார் பேட்டையில் உள்ள இவர்கள் வீட்டிற்கும் வந்தார் என்கிறார் , தம்புரா நன்றாக பராமரிப்பது குறித்து மகிழ்வும் அடைந்தாரம்.ஏன் மாலி அப்படி செய்தார் எனில் தம்புராவை இசைக்கவில்லை எனில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் ,அது பழமையான தம்புரா என நிபந்தனை விதித்தே கொடுத்தாராம் :-))

சென்னை, பம்பாய், பெங்களூர், அமெரிக்கா, 1986 என எல்லாம் ரொம்ப டிராமடிக்கா நடந்திருக்கு, பாவம் மாலி வேறு 1986 இல் இறந்துவிட்டார்.

ஒரு வேலை 1980க்கு முன்னரே தம்புரா வாங்கி கொடுத்தால் உண்டு ,ஆனால் மும்பையில் இசைக்கற்று கொடுத்தவர் பெயரும் த்வாரம் மங்காதாயார் எனவும், சொல்கிறார்கள்.

---------------

ஶ்ரீபதா என தனது குடும்ப பெயராக போட்டுள்ளார் பாடகி, ஶ்ரீபதா என்பது தெலுங்கு ஸ்மார்த்தா (வைதீகி)பிராமணர்கள் பயன்ப்படுத்தும் சர் நேம் , தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை என அறிகிறேன். ஒரு வேளை ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம், ஆனாலும் தமிழ்ப்பெண் , தாய்மொழி தமிழ், தமிழ் வளர்த்த பரம்பரை என சொல்வதெல்லாம் எப்படியோ?

இதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம்!
-------------------


இப்படிலாம் நடக்காதா எனலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எனக்கு படித்த போது தோன்றிய சந்தேகங்களை பொழுது போகாம எழுதி இருக்கிறேன், இதுக்கெல்லாம் கேசு போடுவாய்ங்களோ ?

ஒரு சினிமா பார்த்தால் லாஜிக் மிஸ்டேக்குன்னு ஒரு பட்டியல் போடுறாங்க, அதே போல சில பதிவுகளை படித்தேன் லாஜிக் மிஸ்டேக் போல இருப்பதை பட்டியலிட்டு இருக்கேன் , வேறொன்றுமில்லை .... ச்சே ..ச்சே ..வர வர நாட்டுல கருத்து சுதந்திரமே இல்லாம போச்சுப்பா ... பிட்டு படம் எல்லாம் இணைய தளம் வச்சு பப்ளிக்கா ஓட்டுறாங்க ,ஆனால் ஒரு அட்டு மேட்டரை கருத்தா சொல்ல என்னமா யோசிக்க வேண்டியதா இருக்கு ...அவ்வ்வ் :-))
----------------------------------------------------

பிற் சேர்க்கை;

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்ற எழுத்தாளர்,பதிவர் பெயரையும் இவ்வழக்கில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்வேன் என அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

http://rightnews.in/4650/defamation-case-on-chinmayi/
-------------------------------

பின் குறிப்பு:

# பொது வெளியில் ஆபாசமாக, தனிநபர் தாக்குதல் செய்வது தவறு, அதே சமயம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை அனைவரும் நினைவு கொள்ளவேண்டும்.

#யாரையும் களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ இப்பதிவு எழுதப்படவில்லை.இப்பதிவில் குறிப்பிட்ட  நிகழ்வுகள், ஸ்கிரீன் ஷாட்கள்,சம்பந்தப்பட்ட நபர்களின் தளங்களில் இருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது , தரவுகள் விக்கியாப்பீடியா . நன்றி!

#பதிவில் தரவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள் எந்நேரத்திலும் அழிக்கப்படலாம்,எனவே அங்கு பதிவுகள் காணக்கிடைக்கவில்லை எனில் அடியேன் பொறுப்பல்ல.
-------------------------

Sunday, October 14, 2012

மின்சாரக்(கொடுங்)கனவுகள்.


தமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொல்வது மிக தவறான ஒரு குற்றச்சாட்டாகும் ,தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை என சொல்வதே சரியான சொல்லாடலாக இருக்கக்கூடும்.

மின்வெட்டு என்று சொன்னால் மின்சாரம் வந்து கொண்டிருக்கும் போது சிறிது நேரம் தடை ஏற்படுவதாகும், முழுக்க மின்சாரம் இல்லாத நிலையில் சிறிது நேரம் மட்டுமே மின்சாரம் வருவதனை  மின்வெட்டு என சொல்வது எப்படி சரியாகும், ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?

சரி எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிய எதுக்கு வார்த்தை விளையாட்டுல சொல்லிக்கிட்டு, இப்போதைய மின்சார தட்டுப்பாடான நிலைக்கு அடிப்படையான சில காரண ,காரியங்களை பார்க்கலாம்.

முதல் காரணம் கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 500 மெகா வாட் அளவுக்கே மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே காலகட்டத்தில் சுமார் 4000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு மின்நுகர்வு-தட்டுப்பாடு பட்டியல்.

in MW
Month     Jun - 10  July -10  Aug -10  Sep -10  Oct -10 Nov -10
Avg.
Demand  10850    10860     10500    10650 10990     9850
Avg.
Availability  9160    9130       9040     8500   7940      7250
Deficit -      1690   -1730     -1460    -2150 -3050      -2600

in MW

Month     Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand  10770  11080    11160    11580   11760     11840
Avg.
Availability 8150   7650     9150      9050     9400       10270
Deficit       -2620 -3430    -2010    -2530    -2360      -1570


The deficit varies from 1400MW to 3400MW
The availability Vs demand and the deficit during Day time
(6.00 to 18.00 Hrs)
in MW

Month       Jun - 10 July -10 Aug -10 Sep -10 Oct -10 Nov -10
Avg.
Demand   10300          10300   9980      10130     9890        8880
Avg.
Availability   8580       8400       8290      7780      6780        6400
Deficit        -1720      -1900      -1690 -    2350    -3110       -2480

in MW
Month        Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand     9150       11080      11160      11580      11160     11840
Avg.
Availability   7290       7450        8940         8740       9200      10160
Deficit -       -1860       -3630      -2220         -2840    -1960      -1680

-----------------

மின் தட்டுப்பாடு இவ்வளவு உக்கிரமாக இருக்கும் போது மின்வாரியம் ஏன் விரைந்து செயல்படவில்லை என பார்த்தால் அதனுள் ஏகப்பட்ட அரசியல் அதுவும் நிர்வாக அரசியல் என விரவிக்கிடக்கிறது, ஆள்வோருக்கு சரியான நேரத்தில் உண்மையான நிலவரத்தினை சொல்ல தவறிவிடுகிறார்கள், பொய்யான காகித கணக்குகளை காட்டி விரைவில் சரியாகிவிடும் என்பதே அதிகாரிகளின் பதில் ,அதனையே தலைமையும் நம்புகின்றது,ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என அவர்கள் அறிவதே இல்லை, ஊடகங்களில் வரும் செய்தியினைக்கூட அரசியல் காழ்ப்புணர்வு செய்தி எனப்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்நாடு மின்வாரியம் ஆமை வேகத்தில் வழக்கமாக செயல்ப்பட்டுக்கொண்டிருந்தது ,அதனை மேலும் சிக்கலாக்கி இன்னும் நத்தை வேகத்தில் செயல்படுமாறு சில மாற்றங்களை செய்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சேரும் எனலாம்.

முதன் முதலில் தமிழ்நாடு மின்வாரியம் 1957 இல் மாநில மின்விநியோக சட்டம் 1948 இன் கீழ் உருவாக்கப்பட்டது , இதன் பணி மின் உற்பத்தி, மின் பகிர்வு,மின் விநியோகம் ஆகும்.

1993 வரையில் மின்சார வாரியம் பொதுப்பணித்துறையின் ஒரு அங்கமாக செயல்ப்பட்டு வந்தது, பின்னர் மின்சக்தி துறை என தனியாகப்பிரிக்கப்பட்டு தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பின்னர் மீண்டும் 2003 இல் மின்சார துறையை நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதாக சொல்லிக்கொண்டு , மின் உற்பத்தி, கடத்துதல்,விநியோகம்,கட்டுமானம், நிதி என தனித்தனியாக பிரிக்கப்போவதாக ஒரு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் 2003 இல் தனி துறைகளாக பிரிக்க வேலைகள் காகித அளவில்  துவங்கினாலும் பிரிக்கப்படவில்லை அல்லது வேலை மெதுவாக நடந்து வந்தது எனலாம், இந்த இரண்டு வேலைகளையும் துவங்கியது அம்மையார் ஆட்சிகாலத்தில் என்றாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

பின்னர் 2010 இல் முத்தமிழ் வித்தவரான மஞ்சத்துண்டு அய்யா ஒரே வீச்சில் பல துறைகளாகவும், அவற்றை அரசு வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகவும் மாற்றியமைத்துவிட்டார்.

இப்படி தனித்தனியாக பிரிப்பது நல்ல விளைவினை ஏற்படுத்தும் திட்டம் போல தோன்றினாலும் , மின்வாரியம் செயல்ப்படும் வேகத்தினை குறைக்கவே செய்யும் என்பது அரசு நிர்வாகம் செயல்படும் விதம் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

மேலும் இது துறை ரீதியாக பிரிக்கப்பட்டது என சொன்னாலும் அனைத்து பிரிவினையும் தனி லிமிட்டட் கம்பெனிகள் என்றே உருவாக்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும்,அரசு துறை வேறு ,அரசு நிறுவனம் என்பது வேறு, நிறுவனமாக பிரிக்கப்பட்டால் எப்போது வேண்டுமானலும் தனியார் முதலீட்டினை அனுமதித்து தனியார் மயமாக்கலாம், பங்குகளை விற்கலாம், மேலும் லாப,நட்டம் என பார்த்து செயல்படும் ஒரு அமைப்பாக மாறிவிடும், சேவை என்பதற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது எண்ணை நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்த போதிலும் , சர்வதேச சந்தை விலைக்கு எண்ணை விலையை நிர்ணயிக்க உரிமை கொடுத்துவிட்டு, விலை ஏற்றினால் அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பேட்டிக்கொடுக்கிறார்கலே ,அது போல வருங்காலத்தில் மின் நிறுவனங்களும் செயல்படலாம்.

தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தமிழ் நாடு மின்வாரியத்தின் பிரிவுகள்.

I. Erstwhile TNEB which has been reorganized as,

i. TNEB Limited.

ii. Tamil Nadu Generation and
Distribution Corporation Limited
(TANGEDCO),

மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், நுகர்வோருக்கு மின்சாரம் அளித்தல்.

iii. Tamil Nadu Transmission Corporation
Limited (TANTRANSCO) and

மாநிலத்தின் உள் பகிர்வு வலை(கிரிட்) மற்றும் வெளியில் இருந்து வாங்கும், விற்கும் மின்சாரத்தினை மின் பகிர்வு வலை மூலம் செயல்படுத்துதல்.

II. Tamil Nadu Energy Development Agency
(TEDA)

உற்பத்தி, தேவை, எதிர்கால திட்டம் என வடிவமைத்தல்.

III. Chief Electrical Inspector to Government
(CEIG)

மின் திட்டங்கள், மின் பகிர்வு,விநியோகம் என கண்காணித்தல்.

IV. Tamil Nadu Power Finance and Infrastructure
Development Corporation Limited.

மின் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், திரட்டுதல்.

இப்படித்தனியாக  பிரிக்கப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து வேலை வாங்குவதே மிகப்ப்பெரிய வேலையாக இருக்கும்.

முன்னர் மின்வாரிய தலைவர் என ஒருவர் இருப்பார் அவர் முடிவு செய்து மற்றவர்களை செயல்ப்படுத்த சொன்னால் போதும், இப்போது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு மேலாண் இயக்குனர், அனைவரும் சம அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிகள், 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க வேண்டும் என கொள்கை முடிவு எடுக்க அனைவரும் ஒற்றுக்கொண்டு செயல்ப்படுத்த வேண்டும், இவர்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து வட்டம்,வட்டமாக மீட்டிங் போடுவதற்கே மின்சாரத்துறை அமைச்சருக்கு நேரம் சரியாக போய்விடும்.

கடைசியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ,மெது பகோடா ,காப்பி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே மீட்டிங் கலைந்துவிடும்.

இப்படி தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் , ஒவ்வொன்றாக தனியார் முதலீட்டுக்குள் நுழைக்கலாம், ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பினை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என எளிதாக காரியத்தினை முடிக்க முடியும்.

உதாரணமாக மின்பகிர்வு நிறுவனம் தனது கம்பிவட கட்டமைப்பினை ஒரு தனியார் மின் உற்பத்தியாளருக்கு குத்தகைக்கு விடலாம், அதனை மின் உற்பத்தி நிறுவனம் எதிர்க்க முடியாது. எல்லாம் அரசு நிறுவனம் தானே அமைச்சர் , முதலமைச்சர் இருக்காங்களே கேட்க மாட்டாங்களா என்றால், அவர்களுக்கு தெரிந்து தானே நடக்கிறது , அப்படியே  யாரேனும் கேள்வி கேட்டாலும் அந்நிறுவனங்கள் லாபகரமாக நடக்க என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது,அதில் அரசு தலையிடாது என டிப்ளமேட்டிக்காக சொல்வார்கள்,ஆனால் அந்த அதிகாரத்தினை கொடுத்ததே அமைச்சரவை என்பதை மறைத்துவிடுவார்கள்.

------------------------

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் பகிர்வு கட்டமைப்பு விவரம்,

• EHT & HT Substations:-

400 KV SS-துணை மின்நிலையம் : 13

230 KV SS  துணை மின் நிலையம்: 77

மேற்கண்ட வகை துணை மின்நிலையங்கள் கிரிட் மின்பகிர்வில் பயன்ப்படுபவை.

110 KV SS துணை மின்நிலையம்: 707

66 KV SS துணை மின்நிலையம் : 33

33 KV SS துனை மின்நிலையம்: 513
                                                    Total : 1343

மேற்கண்டவை முறையே மாநகர, தொழிற்சாலை, நகரம், சிற்றூர்களுக்கு மின் விநியோகம் செய்யப்பயன்படுபவை.

     
• EHT/HT Lines : 1.77 lakhs Ckt. Km

கூடுதல் உயர் அழுத்த.உயர் அழுத்த கம்பிவட அமைப்பு ,உற்பத்தி நிலையங்களில் இருந்து துணை மின் நிலையங்களுக்கு மின்பகிர்வுக்காக மின்சாரம் கொன்டு செல்ல பயன்படுகின்றன.

• LT Lines : 5.58 lakhs Km
குறைவழுத்த மின் கம்பி வட அமைப்பு வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின்விநியோகம் செய்ய.

• ஊர்களின் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய 2.05 lakhs Distribution Transformers பயன்படுகின்றன.
-------------

தமிழ்நாட்டில் அரசு சார்பில் இயக்க்ப்படும் அனல், புனல்,காற்றாலை, எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்கள்.




கவனிக்கவும்:-

* மேட்டூர் ,போன்ற நீர் மின் நிலையங்களில் நீர் இருக்கும் அளவைப்பொறுத்தே மின் உற்பத்தி என்பதால் ,காவிரியில் நீர் வராத நிலையில் இப்பொழுது மின் உற்பத்தி 50%க்கும் கீழே போய்விட்டது.

*எண்ணூர் அனல் மின்நிலையம் 50% மின் உற்பத்தி திறனில் செயல்ப்படும் நிலையில் இருப்பதால் பாதி மின் உற்பத்தி தான் செய்கிறது.

*அனல் மின் நிலையங்களுக்கு என ஆண்டுக்கு மொத்தம் 15 .5 மில்லியன் டன் நிலக்கரி ஒதுக்கப்படுகிறது, அதில் 13.5 மில்லியன் டன் மத்திய அரசின் கோல் இந்தியா அளிக்கும் மீதி 2 மில்லியன் டன் வெளியில் வாங்கப்படுகிறது,எனவே நிலக்கரி கையிருப்புக்கு ஏற்ப மின் உற்பத்தியின் அளவு ,குறைக்கப்படுவது வழக்கம், எனவே பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் 80-90% மட்டுமே மின் உற்பத்தி செய்யும்.

*குத்தாலம், வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படா நிலையில் உள்ளது.

*பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் நாப்தா மூலம் இயக்கப்படுவதால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே இயங்கும்.

மேற்கண்டப்பட்டியல் மூலம் அறிய வருவது என்னவெனில்,அரசு மின்னுற்பத்தி வெறும் 5,677 மெகாவாட்டுகள் மட்டுமே. மொத்த மின் தேவையோ 14,000 மெகாவாட்டுக்கு அருகில், சராசரியாக 11,000 மெகாவாட் மின்சாரம் எப்பொழுதும் தேவைப்படுகிறது.

ஆனால் அரசு மின் உற்பத்தில் முதலீடு செய்யாமல் தனியார் உற்பத்திக்கு முன் உரிமை அளித்து வருகிறது,இப்படியே போனால் வெகுவிரைவில் மின் உற்பத்தியில் தனியாரின் கை ஓங்கி, மின்சாரத்தின் விலை வெகுவாக உயரும், அரசின் பெரும்பணம் மின்சாரம் வாங்கவே செலவாகும் அல்லது சிக்கன நடவடிக்கை என மேற்கொண்டால் தற்போதுள்ளது போன்று கடும் மின்வெட்டு ஏற்படும்.

• Gross energy consumption during

2010-11 was 74990 MU.

• Total energy generated from State
owned stations during 2010-11 was
25784 MU.

• Energy purchased from Central
Generating Stations, Wind, Open
Market, Exchange etc., during 2010-11
was 49206 MU.

தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியே அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் செய்துள்ளன. மூன்றில் இரண்டு பகுதி மின்சாரம் வெளியில் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டு ,விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விநியோக விலை ரூ3.81 ,

ஆனால் அரசின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு ரூ 5.31

எனவே சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் விற்பதனால் மின்வாரியத்திற்கு 1.50 ரூ நட்டம்.

இதன் மூலம் ஆண்டுக்கு ஏற்படும் நிகர நட்டம் ரூ 38,000 கோடி ஆகும்.

மேலும் கடந்த காலங்களில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட கடன் 45,000 கோடிகள்.

இந்த லாப-நட்ட கணக்குகளின் காலம் 2011 ஆகும், பின்னர் ஆட்சிக்கு  வந்த அம்மையார் நட்டமில்லாமல் மின் நிறுவனங்கள் செயல்பட என்ன செய்வது என "உயர் அதிகாரிகளை" ஆலொசனை கேட்க கட்டணம் உயர்த்த வேண்டும் என்று சொல்ல ,கட்டணமும் உயர்த்தப்பட்டது,அப்படியும் நட்டமே வர , கூடுதலாக பணம் செலவழிக்க அரசால் முடியாது, எனவே முடிந்த வரை நட்டமில்லாமல் இயங்க சொல்ல , "உயர் அதிகாரிகளும்" கூடுதல் விலைகொடுத்து  மின்சாரம் வாங்கி, குறைவான விலையில் விநியோகித்தால் தானே நட்டம் வரும் என அதி அற்புதமாக கண்டுப்பிடித்து மின்சாரம் வாங்குவதை குறைத்து விட்டார்கள், அதன் விளைவே மின்வெட்டு.

மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் வெளியில் வாங்கப்படுகிறது ,அதனை முழுவதுமாக நிறுத்தி இருந்தால் 8 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும், அப்படி எல்லாம் மக்களை வதைக்க கூடாது என கருணை உள்ளத்துடன் மேலும் கொஞ்சம் நேரம் மின்சாரம் கொடுப்போம் என குறைந்த அளவுக்கு மின்சாரம் வாங்கி சுமார் 12 மணி நேரம் மின்விநியோகம் செய்கிறார்கள்.

நடுநிலையானவர்கள் நட்டத்தில் எப்படி மின்சாரம் கொடுக்க முடியும், மக்கள் தொகை அதிகம்ம் ஆகிடுச்சு ,நிறைய மின் இணைப்பு கொடுத்தாச்சு, அதற்கேற்ற மின் உற்பத்தி பெருகவில்லை, அரசும் என்ன தான் செய்யும் என அப்பாவியாக நினைக்கலாம்.

உண்மையில் மக்கள் அனுபவிக்கும் மின்சாரம் என்பது மொத்த மின்விநியோகத்தில் குறைவான அளவே,

வகை வாரியாக மின்நுகர்வு அளவு.



மேல் கண்ட அட்டவனையில் இருந்து அறியப்படுவது என்னவெனில்,

தமிழ்நாட்டில் மொத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 223.44 லட்சம்.

அவற்றின் மூலம் நுகரப்படும் மின் சாரத்தின் அளவு=60,357  மில்லியன் யூனிட்கள்.

ஆனால் இதில் வீட்டு மின் இணைப்பு 148.77 லட்சம், அவற்றின் மூலம் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு 16,387 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

இந்தளவானது அரசின் மின் உற்பத்தி அளவான 25,734 மில்லியன் யூனிட் மின்சாரம் என்ற அளவை விட குறைவு.

மேலும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 19.73 லட்சம்.
நுகரப்படும் மின்சாரத்தின் அளவு= 12,632 மில்லியன் யூனிட்கள்.

பொது மக்கள் +விவசாயிகள் மின்நுகர்வு=      29,019 மில்லியன்ன் யூனிட்கள்.

அரசு தயாரிக்கும் மின்சாரத்திற்கும் ,மக்கள்,மற்றும் விவசாயிகள் பயன்ப்படுத்தும் மின்சாரத்திற்கும் உள்ள இடைவெளி=4,715 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

அரசு ஒரு யூனிட் கொள்முதல் விலை சராசரியாக 5.31 ரூ எனவும் ,அதனை சராசரியாக 3.81 ரூவிற்கு விற்பதால் நட்டம் வருகிறது என சொல்கிறதே ,ஆனால் நிகர நட்டம் 38,000 கோடி என்கிறார்கள் அப்படியானால் மக்களுக்காக வாங்கும் மின்சாரம் வெறும் 4,715 மில்லியன் யூனிட்கள் தானே அவற்றின் விலையா 38,000 கோடி என ஒரு கேள்வி பாமரனுக்கும் வரனுமே ?

வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரம் 49,203 மில்லியன் யூனிட்டில் 4,715 மி.யூ போக மீதம் 44,500 மி.யூனிட்களுக்கு செலவாகும் பணமும் மக்கள் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது.

இந்த மின்சாரம் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் ,இதரவற்றிற்கு.

தொழிற்சாலை இணைப்புகளின் எண்ணிக்கை 5.37 லட்சம் மட்டுமே ஆனால்  21,075 மில்லியன் யூனிட்கள் என மொத்த மின்நுகர்வில் 34.92 சதவீதம் மின்நுகர்வினை அனுபவிக்கின்றன.

இத்தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை பன்னாட்டு பெரு நிறுவனங்கள்,மென் பொருள் நிறுவனங்கள்.சிறு குறு தொழிற்சாலைகள் மின் வெட்டினை அனுபவிக்கவே செய்கின்றன.

வெளியில் வாங்கும் மின்சாரம் சுமார் 8 ரூ -முதல் 17.50 ரூ வரையில் ஒரு யூனிட்டுக்கு ஆகிறது,

அரசு தயாரிக்கும் மின்சாரம் யூனிட்டுக்கு 2.50 ரூ மட்டுமே ஆகும், இதை எல்லாம் கூட்டி சராசரியாக 5.31 ரூ என யூனிட்டுக்கு கணக்கு சொல்லி ,அதன் மூலம் வரும் நட்டத்தினை அனைவருக்கும் பரவலாக்கிவிடுகிறார்கள்.

அதாவது 5.37 லட்சம் தொழிற்சாலை இணைப்புகள் பெருமளவு மின்சாரம் பயன்படுத்திக்கொண்டு, பெருமளவு பொதுமக்கள் 143 லட்சம் இணைப்புகள் மூலம் குறைவான மின்சாரம் பயன்ப்படுத்தினாலும் அனைவருக்கும் சராசரியாக ஒரே விகிதத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரத்தின் பெரும் பங்கினை அனுபவிப்பது தொழில்,வணிக துறைகளே, அவர்களையே நேரிடையாக வெளிமார்க்கெட்டில் மின்சாரம்ம் வாங்கிக்கொள்ளுங்கள் என சொன்னால் அரசுக்கு கூடுதலாக செலவாவது குறையும்.

அப்படியும் அரசு வெளிமார்க்கெட்டில் மின்சாரம் வாங்கி,மின்வாரிய மின்பகிர்வு கிரிட் மூலம் கொண்டு வந்துக்கொள்ளலாம் என அனுமதிக்கொடுத்தும் யாரும் அப்படி செய்யவில்லை ,காரணம் அவர்களே வாங்கினால் ஒரு யூனிட் மின்சாரம் சுமார்12 ரூக்கு குறைவாக வாங்க முடியாது. அரசு கூடுதல் விலைக்கு வாங்கினாலும் ரூ 5.31க்கு மேல் விற்காது என்பதால் , அரசின் மின்வாரியமே வாங்கிக்கொடுக்கட்டும் என இருக்கிறார்கள்.

ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 17.50 ரூ என்றெல்லாம் அநியாய விலை நிர்ணயம் செய்து வாங்கியதில் மஞ்சத்துண்டின் கைங்கர்யமும் உண்டு.

மேலும் மின் உற்பத்தியில் 18.5% மின்கடத்தி இழப்பாக போய்விடுகிறது, இது அல்லாமல் மின் திருட்டு  என கணிசமான அளவு இழப்பு ஏற்படுகிறது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது மின்சாரத்தின் விலை மட்டும் அல்லாமல் அவற்றை கிரிட் வழியாக கொண்டு வரவும் கட்டணம் உண்டு, இதனை வீலிங் சார்ஜ் என்பார்கள்.

மாநிலங்களுக்கு இடையே கிரிட்டில் மின்சாரம் கொண்டு வரும் போது எத்தனை சப் ஸ்டேஷன்களை கடக்கிறதோ அவ்வளவு மின் இழப்பு ஏற்படும்.

ஒரு சப்-ஸ்டேஷன் கடக்கும் போது 5% மின் இழப்பு என தேசிய மின்வாரியம் சொல்கிறது.

உதாரணமாக குஜராத்தில் இருந்து 800 மெ.வாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்கியது ,ஆனால் தமிழக எல்லையில் 450 மெ.வாட் தான் கிடைத்தது ,350 மெ.வாட் கடத்தி இழப்பு,வீலிங் இழப்பாக போய்விட்டது.

தொலை தூரத்திலிருந்து மின்சாரம் வாங்கினால் இப்படி இழப்பு அதிகம் ஆகும்.

ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி ,சுமூகமான உறவு இல்லை எனவே மின்சாரம் தரமாட்டார்கள். கர்நாடகாவில் தண்ணீரே தருவதில்லை, மின்சாரம் தரப்போவதில்லை.

மத்திய மின் தொகுப்பில் வழக்கமாக கொடுக்கும் மின்சாரம் வருவதிலேயே பிரச்சினை எனவே கூடுதலாக விலைக்கு கேட்டால் தர வாய்ப்பில்லை அல்லது தர விருப்பம் இல்லை எனலாம்.

இந்நிலையில் தனியாரிடம் வாங்கி சமாளிக்கலாம் என்றால் விலை மிக அதிகம், இதற்கெல்லாம் ஒரே தீர்வு, மாநில மின்வாரியம் உற்பத்தி திறனை பெருக்க வேண்டும்.ஆனால் அவர்களுக்கோ அதில் ஆர்வமில்லை, தனியாரை தயாரிக்கவிட்டு , விலைக்கு வாங்கி அரசின் கஜானாவை காலி செய்யலாம் இல்லை எனில் மின்கட்டணத்தினை உயர்த்தி கொள்ளலாம் ,அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மின்வெட்டு தான் என மக்கள் விரோத சிந்தனைகளில் ஆட்சியாளரும்,அதிகாரிகளும் சிந்திக்கும் ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

மின் வாரியத்தின் லாப நட்ட கணக்கு மற்றும் கடன் ,கடந்த ஐந்தாண்டுகளில்.



2006 இல் 9,000 கோடியாக இருந்த மின்வாரிய கடன் 2011 இல் 45,000 கோடியாக உயரக்காரணம் ,தனியாரிடம்ம் மின்கொள்முதல் செய்ய அதிக விலை நிர்ணயம் செய்ததும் ஒரு காரணம். பல தனியார் மின் உற்பத்தியாளர்களும், காற்றாலை அதிபர்களும் அரசியல் பினாமிகள் என்பதால் ,யாரு வீட்டு பணம் எடுத்துக்கோ என கண்ணை மூடிக்கொண்டு விலை நிர்ணயம் செய்து மின்வாரியத்தினை கடனுக்குள் தள்ளி , அதன் வளர்ச்சியினை முடக்கியதில் மஞ்சத்துண்டுக்கு பெரும்பங்கு உண்டு.

இப்பொழுதும் கூடுதல் பணம் செலவழித்தால் மின்சாரம் வாங்கி ,மின் தடையை நீக்கலாம், ஆனால் நிர்வாக மேம்பாடு என சொல்லி  நிதி ஒதுக்கீட்டினை குறைத்துவிட்டு மின்வெட்டினை அதிகரித்துவிட்டார்கள்.

மக்களுக்கு குறைவான விலையில் மின்சாரம் கொடுப்பதால் ஆகும் வருவாய் இழப்பு



மேற்கண்ட அட்டவணையிலிருந்து , பொதுமக்கள், விவசாயிகள், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் என அனைத்திற்கும் சேர்த்து அரசு அளிக்கும் மின்மானியம் சுமார் 2071 கோடிகள் மட்டுமே என்பது புலனாகிறது.

ஆகவே ஆண்டுக்கு 38,000 கோடி வருவாய் இழப்பு மின்வாரியத்திற்கு ஏற்படக்காரணம் மக்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ஆனால் மின்வாரியத்திற்கு நட்டம், எனவே மின்சாரம் வாங்க இயலவில்லை என மின்வெட்டு மட்டும் மக்களுக்கு?

ஆட்சிக்கு வந்தால் உடனே மின் வெட்டு தீரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதே எப்படி எனப்பார்த்தால்,

வட சென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல் மின்நிலையம், ஆகியவற்றில் கூடுதல் மின் நிலையம் அமைத்தல் ,திருவள்ளூர் அருகே வள்ளூர் மின் திட்டம் அனைத்தும் 2011 இறுதியில் செயல் பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி நடைபெறாமல் காலை வாரிவிட்டது.

எதிர்பார்க்கப்பட்ட மின் திட்டங்களின் பட்டியல்.



அனைத்து திட்டங்களும் இறுதிக்கட்டத்தில் இருந்தும் வேலை முடியாமல் இழுத்துக்கொண்டுள்ளது ,அதனை விரைந்து முடிக்க வைக்க அதிகாரிகள் அக்கரைக்காட்டியிருந்தாலே இப்போதைய மின்வெட்டினை சமாளித்து இருக்கலாம். அதனை செய்ய தவறிவிட்டார்கள். எதற்கெடுத்தாலும் சாட்டையை வீசும் அம்மையார் இதற்கு ஏன் சாட்டையை சொடுக்க மறந்தார்கள் என தெரியவில்லை.

இதில் மத்திய அரசின் கை இருக்குமோ எனவும் ஒரு சந்தேகம் இருக்கிறது, இத்திட்டங்களுக்கான பாய்லர், இன்ன பிற உபகரணங்களை வழங்க வேண்டியது பாரத மிகு மின் நிறுவனம் ஆகும், காலத்தே வழங்கி இருந்தால் இந்நேரம் மினுற்பத்தி நடந்து இருக்கும்.

கூடங்குளம் அணு மின்நிலையம் துவங்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், எனவே மின் தட்டுப்பாடு இருந்தால் மட்டுமே ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என ,  ,மத்திய அரசு அழுத்தம் கொடுத்து பாரத மிகு மின் நிறுவனத்தினை தாமதப்படுத்துவதாக செய்திகளில் அடிபடுகிறது.

எது எப்படி இருந்த போதும் மாநில அரசு மக்களின் நலன் கருதி இதனை சரி செய்திட போராடி இருக்க வேண்டாமா? மத்திய அரசை எதிர்த்து கேள்விக்கேட்காதவரா அம்மையார், ஒரு வேளை பெங்களூர் வழக்கெல்லாம் இருக்கும் நிலையில் ரொம்ப முறுக்கிக்கொள்ளக்கூடாது என நினைக்கிறாரோ என்னமோ?

-------------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,தமிழ்நாடு மின்வாரிய இணைய தளம்.நன்றி!
********