Sunday, December 16, 2012

சினிமா ரகசியம்-5:வியாபார தந்திரம்.


 (அய்யோடா...புள்ளிவிவரத்தோட கிளம்பிடான்யா..கிளம்பிட்டான்)


DTH இல் முதன் முறையாக ரிலீஸ்,Barco Auro-3D Sound,3000 பிரிண்டுகள் என்றெல்லாம் பிரமாண்டமாக கதைக்கிறார்கள், அதை எல்லாம் கேட்கும் போது தமிழ் சினிமா எங்கேயோ போய்விட்டது என சாமானிய ரசிகர்கள் வாய் பிளக்கிறார்கள், உண்மையில் தமிழ் சினிமாவின் வியாபார வீச்சு எந்த அளவுக்கு உள்ளது, சொல்வது போல செயலில் காட்டுவது சாத்தியமா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

முதலில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் நிலவரத்தினைப்பார்ப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் மொத்த எண்ணிக்கை நிலவரம்.As per tn govt revenue department stats.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக்கொண்ட பன்னரங்குகளின் எண்ணிக்கையும் இதில் அடக்கம் என நினைக்கிறேன்.

CINEMA THEATRES IN TAMIL NADU:

2010-11

Permanent -1085

Open Air Theatres-5

 Semi Permanent-75

Touring Theatres-32

Total=1,197

http://www.tn.gov.in/deptst/Tnataglance.htm#CINEMA THEATRES

இதில் பெருநகரம்,நகரம், சிற்றூர் வாரியாக திரையரங்குகளின் பரவலை காணலாம்.

மெட்ரோ-1 :சென்னை

மாநகராட்சி-9

திருச்சி,மதுரை,கோவை,சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு,திருநெல்வேலி.

சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 40 அரங்குகள் தேறினாலே அதிகம், எனவே 40 எனக்கொள்வோம்.

மற்ற ஒன்பது மாநகர எல்லைக்குள் தலா 20 எனக்கொண்டால், மொத்தம் 180 அரங்குகள்.

எனவே மாநகரப்பகுதிகளில் உள்ள அரங்குகள் மொத்தம் -220

நகராட்சி -150

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ,கடலூர் போன்ற ஊர்கள் ஆகும்.

மறைமலைநகர் போன்ற நகராட்சிகளில் தியேட்டர்களே கிடையாது.

நகராட்சி வகை ஊர்களில் ஒரு ஊருக்கு சுமார் 4- 5 அரங்குகள் இருக்கலாம், தோராயமாக 4 என வைத்துக்கொண்டால் ,

4*150= 600 அரங்குகள்.

டவுன் பஞ்சாயத்து-559

கூடுவாஞ்சேரி, வளசரவாக்கம் போன்றவை எல்லாம் டவுன் பஞ்சாயத்துகள் ஆகும், பெரும்பாலான இடங்களில் தியேட்டர்கள் இருக்காது, அப்படி இருக்கும் பல திரையரங்குகளில் புதியப்படம் வெளியாவதில்லை.

செமி பெர்மனண்ட் தியேட்டர் 75 இருப்பதாக பார்த்தோமே அவை இங்கு இருக்கலாம்.

இன்னும் சில டவுன் பஞ்சாயத்துகளில் ஓரளவு நல்ல தியேட்டர்கள் இருக்கலாம், ஆனால் புது படம் வெளியாவது வெகு அறிதே, அப்படியும் புதுப்படங்கள் வெளியாகும் வகையில் சுமார் 150 அரங்குகள் இருக்கலாம் என வைப்போம்.

கிராம பஞ்சாயத்து-12,524

இங்கு டூரீங்க் கொட்டகை போன்றவையே இருக்கும், அதும் அழிந்து தற்சமயம் 32 மட்டுமே இருக்கிறது.

(the show over-end of the entertainment)

டிஜிட்டல் மயமான திரையரங்குகளின் எண்ணிக்கை:

qube theatres-510

http://www.qcn.in/theatres/Tamil-Nadu

UFO theatres -242

http://www.ufomoviez.com/UFO_Presence.aspx?mode=state

தமிழகத்தில் உள்ள 1,197 அரங்குகளில் மொத்த டிஜிட்டல் அரங்குகள்எண்ணிக்கை=510+263=773.

இவற்றில் புதிய படங்கள் வெளியிட வாய்ப்புள்ள திரையரங்குகள்:

மாநகரம்=220

நகரம்=600

டவுன் பஞ்சாயத்து= 150

மொத்தம்= 970

ஆனால் அனைத்து தியேட்டரிலும் ஒரே படத்தினை வெளியிட இயலாது, ஒரு நகரில் 4 அரங்குகள்  இருந்தால் ஒன்றில் தான் வெளியிடுவார்கள், முதல் சில நாட்கள் மட்டும் ஒரே நகரில் இரண்டு அரங்குகளில் ஷேரிங்கில் வெளியிடும் வழக்கம் உண்டு, அது ஓப்பனிங் வாரத்திற்கு மட்டுமே இருக்கும் எனலாம்.

எனவே ஒரே ஒரு புதிய படம் அதிகப்பட்சம் எத்தனை அரங்கில் தமிழ்நாட்டில் வெளியாக வாய்ப்புள்ளது எனப்பார்ப்போம்.

மாநகராட்சியில் 220 அரங்கு எனில் அதில் சுமார் 100 அரங்குகள் என கொள்ளலாம்.

நகரப்பகுதியில் நகருக்கு ஒன்று என கொண்டால் -150

இரண்டு அரங்கு எனில் 300

டவுன் பஞ்சாயத்து 150 இலும் வெளியாகிறது என வைத்துக்கொண்டாலும் ,

மொத்தமாக 100+300+150= 550 அரங்குகள் மட்டுமே.

இந்த எண்ணிக்கையில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே நல்ல பார்வையாளர் கூட்டம் வருவதற்கு வாய்ப்புண்டு, மற்றபடி அதிக அரங்குகள் என வெளியிடுவதால் வருமானம் பெரிதாக உயராது.

ஏன் எனில் அருகிலேயே இன்னொரு அரங்கு இருந்தால் பார்வையாளர்கள் பிரிந்து ,அரங்க வருமானம் தான் பகிரப்படும், எனவே வருவாய் அதிகம்  உயராது.

அப்படியே மிக அதிக எண்ணிக்கையில் எல்லா ஊரிலும் ,எல்லா தியேட்டரிலும் வெளியிட்டாலும் 1090 தியேட்டர்களில்  மட்டுமே வெளியிட முடியும்.அப்படி செய்வது சாத்தியமேயில்லை என்று வைத்துக்கொண்டாலும் 1090 தியேட்டர்கள் என வைத்துக்கொண்டால் , 3000 பிரிண்ட்கள் என வெளியிடுவதாக சொல்லுபவர்கள் மற்றவற்றை எங்கு திரையிடுவார்கள்?

தமிழ்நாட்டுக்கு வெளியில் தான் திரையிட வேண்டும், தமிழ்நாட்டுக்கு வெளியில் எல்லாம் தமிழ் படங்களின் வியாபாரம் தியேட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லை, மொத்தமாக தெலுங்கு, மலையாளம் ,இந்தி என விலைப்பேசுவார்கள், பின்னர் அயல்நாடு.

எனவே 2000 பிரிண்ட் என சொல்லி எல்லாம் விற்க இயலாத போது 2000 பிரிண்ட் போட ஆகும் செலவே அதிகம் ஆகும் என்பதால், ஒரு குறிப்பிட்ட வருவாய் தரும் அவுட் சைட் தமிழ்நாடுக்கு எல்லாம் யாரும் 2000 பிரிண்ட் போட வாய்ப்பேயில்லை.

இது வரையில் வெளியான தமிழ்ப்படங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பிரிண்ட் போடப்பட்டு வெளியான தமிழ்ப்படம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் மட்டுமே, சுமார் 2500 பிரிண்ட்கள் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 900 பிரிண்ட்கள் வெளியாகி இருக்கக்கூடும், சரியான எண்ணிக்கை உறுதியாக எந்த தளத்திலும் இல்லை, ஆனால் வெளிநாட்டு பிரதிகளின் எண்ணிக்கை 300 என தெளிவாக சொல்லியுள்ளார்கள், இன்றைய தேதி வரையில் உலக அளவில் 300 பிரிண்ட்கள் வெளியான ஒரே தமிழ்ப்படம் எந்திரன் மட்டுமே.

//Tamil Superstar Rajinikanth's fans camped outside cinema halls and queued up at ticket counters since early morning today to buy tickets to his latest venture 'Enthiran (Robot).

Being shown across 300 screens outside India, 'Enthiran' is the largest worldwide release after Hollywood film 'Spiderman'. The movie is being screened in Singapore, Malaysia, UK, China and the US.//

http://www.indianexpress.com/news/rajinikanths-enthiran-magic-grips-malaysia/691605/0

எனவே எந்திரன் தமிழ் நாடு 900 +வெளிநாடு 300 =1200 பிரிண்ட்கள், மற்ற 1300 பிரிண்ட்கள் இந்தியாவின் மற்ற மொழிகளில் வெளியாகி இருக்கும் எனலாம், இதுவே தமிழ் சினிமாவின் மிக அதிகப்பட்ச வியாபார எல்லையாகும், இதனை தாண்டிய எண்ணிக்கையில் வெளியிடுவது , வியாபார ரீதியாக லாபகரமானதாக எந்த தமிழ்ப்படத்திற்கும் இருக்க வாய்ப்பில்லை.

அப்போ 3000 பிரிண்ட் போட்டு உலக அளவில் வெளியிடப்போவதாக சொல்வதெல்லாம் வாயிலேயே வடைசுடும் தொழில்நுட்பமே :-))



சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், விஷ்வரூபம் 2000 தியேட்டர்களில் வெளியாகும் என தெரியவருகின்றனது.

லோகநாயகர் ,இந்து பிசினெஸ்லைனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மொத்தம் 2000 பிரதிகள் வெளியாகும் என்றும் ,அவற்றில் 400 தமிழிலும்,அகில இந்திய அளவில் 1200 பிரதிகளும் என்கிறார், அப்படியானால் அயல்நாட்டில் 400 பிரதிகள் என கணிக்கலாம்.

செய்தி:

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

//Have you signed up with all the six DTH players?

No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium.

How many DTH homes do you expect to watch the movie at this price point?

The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch.

Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.

How much do you think Viswaroopam would gross?

I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore.

How many screens are you planning?

Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country.

Would you be able to rope in so many with this kind of protest?

In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that.//

அகில இந்திய அளவில் டிடிஎச் மார்கெட் அளவினை காட்டும் படம்.


இதில் மொத்தம் 48 மில்லியன் டிடிஎச் பயணாளர்கள் என்றாலும் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 29 மில்லியன்கள் என்பதை கவனிக்கவும், ஏன் எனில் அவர்கள் தான் உண்மையான  வாடிக்கையாளர்கள், மற்றவை எல்லாம் பயன்ப்பாட்டில் இல்லாத செட் டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை எனலாம்.

மேலும் தற்போது டாடா ஸ்கை பின்வாங்கியதாக தெரிகிறது, டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் பிக் டீவீ,ஏர் டெல் ஆகிய நான்கிலும் தமிழில் மட்டுமே டிடிஎச் இல் வெளியாகும் என்கிறார்.

தமிழ்நாட்டின் டிடிஎச் வாடிக்கையாளர்களில் முதலிடம் வகிக்கும் சன் டிடிஎச் 75-80% வைத்துள்ளது, அப்படி இருக்கும் போது மற்ற நான்கு சேவைகளிலும் 15 லட்சம் பேர் என சொல்வது மிகையான எண்ணிக்கையாகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த டிடிஎச்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே சுமார் 21 லட்சம் தான். அதில் சுமார் 80% சன் டிடிஎச் வசம் என்னில் எஞ்சியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என ஒரு கணக்கீடு,

//Sun Direct, with 17.5 lakh connections, controls 80% to 85 % of the DTH subscriber base in Tamil Nadu. The balance is shared by other operators like Airtel, Videocon, Tata Sky and Dish TV.//

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/chennai/30164367_1_dth-arasu-cable-tv-entertainment-tax

தமிழ் நாட்டில் 80-85% டிடிஎச் இணைப்புகளை சன் டிவி வைத்துள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 17.5 லட்சங்கள் என்கிறார்கள்.

80% என்றே எடுத்துக்கொள்வோம், = 17.5 லட்சம் என்றால் 100%?

17.5*100/80=21.875 லட்சங்கள்.

சன் டிவி யின் புள்ளிவிவரங்கள் சரியாக இருக்குமானால் தமிழ்நாட்டில் செப்டம்பர் ,2011 வரையில் 21.875 லட்சங்கள் தான் மொத்த டிடிஎச் இணைப்புகள் மட்டுமே.

சன் டிடிஎச் இன் 17.5 லட்சம் போக மீதம், 4.375 லட்சங்கள்.

அதனை டாடா, டிஷ், ஏர்டெல், பிக் டீவி, விடியோகான் ஆகியோர் சமமாக பிரித்துகொள்வதாக கொண்டால்.

ரிலையன்ஸ், டிஷ், விடியோகான், ஏர்டெல் ஆகியோருக்கு சுமார் நான்கு லட்சம் இணைப்புகளுக்கு கீழ் தான் வரும், இதில் ஆக்டிவ் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை என பார்த்தால் இன்னும் குறையும், அவற்றில் கட்டாயாம் 1000 ரூ செலுத்தி லோகநாயகரின் படத்தை எத்தனைப்பேர் பார்ப்பார்கள்? அதுவும் ஒரே ஒரு முறைக்கு!!!

தியேட்டர் கட்டண உயர்வுக்கு யார் காரணம்?


தியேட்டரில் கட்டணம் உயர்ந்துவிட்டதால் தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை ,அப்படி வராதவர்களை வர வைக்கவே டிடிஎச்சில் வெளியிடுவதாக லோகநாயகர் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல எப்படி என்றுப்பார்ப்போம்.

ஆதிகாலத்தில் எல்லாம் திரைப்பட விநியோகம் சதவீத அடிப்படையில் திரையிடப்படும், விநியோகஸ்தரும், திரையரங்கங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை  வசூலில் எடுத்துக்கொள்வார்கள், அதாவது சுமார் 40% ,மீதி 60% தயாரிப்பாளருக்கு, இம்முறையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள் முதலில் பணம் முதலீடு செய்ய தேவையில்லை.

பின்னர் படம் கிடைக்க போட்டி உருவாகவே ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் எடுத்து திரையிட்டால் நல்ல வசூலாகும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் முன்னதே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து ஏரியா வாங்க ஆரம்பித்தனர் ,இப்படியாக எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி பணம் செலுத்தும் முறை உருவாகியது.

(MGR- The Real Box Office King)

எம்ஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல, அவரது படங்கள் நிச்சயம் விநியோகஸ்தரை காலை வாரிவிடாது என்ற நம்பிக்கையில் ,படம் துவங்கிய அன்றே ஏரியா விற்பனை ஆகி தயாரிப்பாளர் கையில் பணம் கிடைத்துவிடும், அதை வைத்தே தயாரிப்பாளர்கள் படத்தினை எடுத்து முடிப்பார்கள்.

இதனால் எம்.ஜி.ஆர் என்பதையே மினிமம் கியாரன்டி .ராமசந்திரன் என சொல்வார்களாம்.

விநியோகஸ்தரிடம் நியாயமான அளவுக்கு எம்ஜி வாங்கி தயாரித்தவரையில் இம்முறையில் யாருக்கும் நட்டம் வரவில்லை. பின்னர் நடிகர்கள் சம்பளம் கோடிகளில் போய் தயாரிப்பு செலவு அதிகம் ஆனது ,எனவே போட்டக்காசினை எடுக்க தயாரிப்பாளர் அதிக எம்.ஜி கேட்க , விநியோகஸ்தர்களும், திரையரங்குகளிடம் அதிக எம்ஜி தொகை கேட்கலாயினர்.

எம்ஜி தொகைக்கு ஏற்ப வசூலானால் பரவாயில்லை நூற்றுக்கு 90 படங்கள் ஒரு வாரம் கூட ஹவுஸ்ஃபுல் ஆக ஓடுவதில்லை பின் எப்படி திரையரங்குகள் கட்டிய எம்ஜி ஐ எடுக்க முடியும் , எனவே ஓடும் ஒரு வாரத்திற்குள் போட்ட காசை எடுக்க அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க திரையரங்குகள் முற்பட்டன. இப்படியாகத்தான் திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது.

மலிவாக படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் திருட்டு டிவிடி பக்கம் போனார்கள், தாய்குலங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கினார்கள் ,இதனால் பல திரையரங்குகளும் காற்றாடின, 2000 ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டில் சுமார் 2000 அரங்குகள் இருந்தன இன்று அவை 1,197 என்ற எண்ணிக்கையில் சுருங்கிவிட்டன, இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கீழ் போய்விடும் எனலாம்.

சிறிய படங்களை போட்டாலும் கட்டணம் குறைவாக வைப்பதில்லை என்கிறார்கள், உண்மை தான் ஆனால் எந்த சிறிய படத்தயாரிப்பாளரும் குறைவான கட்டணம் வைத்து பொறுமையாக வசூலீக்க நினைப்பதில்லையே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட முதலை எடுக்க நினைக்கிறார்கள்.

ஏன் எனில் திரையரங்க வருமானம் என்பது ஒரு நாள் அரங்க வாடகை என நிர்ணயித்த கட்டணம் மட்டுமே, டிக்கெட் விலை கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அத்தொகை மட்டுமே அரங்க உரிமையாளருக்கு, மற்றவை எல்லாம் விநியோகம் செய்தவர் மூலம் தயாரிப்பாளருக்கு போய்விடும்.

தினசரி வசுலின் அடிப்படையில் பணத்தினை பெறுவது ரிஸ்க் என எம்ஜியில் விற்கிறார்கள், எம்.ஜி எடுக்க முதல் மூன்று நாள் ஓப்பனிங்க் கலெக்‌ஷன் தான் வழி எனவே திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

எனவே திரையரங்கில் கட்டணம் குறைய வேண்டுமானால் தயாரிப்பாளர் தான் முதல் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வளவு பேசும் லோகநாயகர் , திரையரங்குகள் அரசு நிர்ணய கட்டணம் மட்டும் வாங்கிக்கொண்டு எனது படத்தினை திரையிடுங்கள், எத்தனை நாள் ஓடுதோ அதற்கேற்ப எனக்கு வசூலாகட்டும் என சொல்ல வேண்டியது தானே?

மேலும் தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி இல்லை என சட்டம் இருக்கிறது, கண்டப்படி பெயரை வைத்துவிட்டு தமிழ் என சொல்லி கேளிக்கை வரிப்பெரும் தயாரிப்பாளர்கள், கேளிக்கை வரி தள்ளுபடிக்கு இணையான அளவுக்கு கட்டணம் குறைக்க சொல்ல வேண்டியது தானே, ஆனால் அப்பணத்தினை எடுத்து செல்வதும் தயாரிப்பாளர்களே அல்லவா?

லோகநாயகர் , விஷ்வரூப் என இந்தியில் பெயர் வைத்துள்ளார், அதனை தமிழில் "விஸ்வரூபம்" என எழுதிவிட்டால் தமிழ்ப்பெயர் என ஏதாவது சொல்லி கேளிக்கை வரி வாங்கிவிடுவார் ,அதற்காக தான் பம்மிக்கொண்டு மம்மியைப்பார்த்ததும், சேட்டலைட் உரிமையை ஜெயா டீவிக்கு கொடுத்ததும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

லோகநாயகர் , கேளிக்கை வரிக்கு ஏற்ப கட்டணம் குறைப்பேன் என சொல்லி திரையிட்டால் திரையரங்குகள் எதிர்க்க போவதில்லை, ஏன் எனில் எம்ஜியில் வெளியிடாமல் பெர்செண்டேஜில் வெளியிடுகிறேன், திரையரங்குகளுக்கு நஷ்டம் வராது என சொல்கிறார் அல்லவா , செய்ய வேண்டியது தானே?

DTH EFFECT:


# டிடிஎச் இல் வெளியிடுவது புரட்சி , அது திரையரங்குகளுக்கு வர இயலாதவர்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள், ஆனால் அது வருங்கால சாபமாக முடியும் எனலாம்,

இன்று வரையில் தமிழ்நாட்டில் திரையரங்க நுழைவு கட்டணம் ,சினிமாட்டோ கிராபி ஆக்ட் 1939 படியே அரசு நிர்ணயம் செய்கிறது, இதனால் மல்டிபிளெக்சில் 120 ரூ அளவிலும் நகரப்பகுதியில் 50 ரூ எனவும் அரசு நிர்ணய கட்டணம் உள்ளது.

மும்பை,பெங்களூரில் எல்லாம் மல்டிபிளெக்சில் 250 ரூ அளவிலும்,சாதாரண அரங்கில் 100 ரு போல இருக்கிறது.

ஆந்திராவில் நம்மை விட கட்டணம் குறைவு.

தியேட்டரில் கட்டணம் கூடுதல் என்பதால்  மக்கள் வரவில்லை என்றால், டிடிஎச் இல் ஆயிரம் ரூ 1000 கட்டணம் வைத்தால் மட்டும் அதிலும் பார்த்துவிட்டு பின்னர்  தியேட்டருக்கும் எப்படி மக்கள் வருவார்கள், ஏற்கனவே சுளையாக ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது ,பின்னர் தியேட்டருக்கு செல்ல மீண்டும் ஆயிரம் ரூபாய் செலவிட யாரால் முடியும், மன்னு மோகன் சொன்னது போல பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, ஒரே வாரத்தில் ஒரே படத்துக்கு இரு முறை ரூபாய் இரண்டாயிரம் செலவு செய்ய ?

டிடிஎச் இல் படம் ரிலீசுக்கு முன்னர் பார்ப்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், படம் நன்றாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட நல்லா இருக்குனு சொல்ல மாட்டான்,ஆனால் படம் மோசமா இருந்துச்சுன்னா, முகநூல்,துவித்தர், எஸ்.எம்.எஸ் ,பிலாக்னு எல்லா இடத்திலும் காரித்துப்பி முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் செய்து , கல்லாப்பெட்டிக்கு குண்டு வைத்துவிடுவான் :-))

ஆனால் பொது மக்கள் என்ன செய்வார்கள் எனில், தியேட்டர் போனால் செலவாகும், டிடிஎச் இல் பார்த்தால் இன்னும் செலவாகும்,எனவே  டிடிஎச் மூலம்  HD video தரத்தில் உருவாக்கப்பட்டு  கிடைக்கும் திருட்டு டிவிடி பார்ப்போம் என வீட்டில் இருந்து தரமான திருட்டு டிவிடி பார்ப்பார்கள் :-))

ஆனால் எது எப்படியோ திரையரங்க கட்டண நிர்ணயம் என்பது அரசின் கையில் இருப்பதால் ,நினைத்தப்படி கட்டணத்தினை அதிகாரப்பூர்வமாக மற்றவர்களால் உயர்த்த முடியாத கடிவாளம் உள்ளது.

ஆனால் டிடிஎச் இல் என்ன கட்டணம் நிர்ணயம் செய்வது என்ற கட்டுப்பாடு அரசிடம் இல்லை. டிடிஎச் மற்றும் படத்தயாரிப்பாளர் சேர்ந்து நிர்ணயிக்கலாம், அதனால் தான் லோகநாயகரின் படத்துக்கு ஒரே முறை பார்க்க 1000 ரூ என்றெல்லாம் அநியாயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை சூப்பர் ஸ்டார் படம் டிடிஎச் இல் வெளியானால் என்ன செய்வார்கள், 1,500 ரூ என்பார்கள், பின்னர் விஜய் ,அஜித், சூர்யா எல்லாம் நாங்க மட்டும் இளைத்தவர்களா எனப்போட்டி போட்டு விலை வைக்கக்கூடும்.

அதாவது அரசிடம் இருக்கும் கட்டண நிர்ணய அதிகாரத்தினை எடுத்து டிடிஎச் ஆபரேட்டர்கள் எனப்படும் பெரு முதலாளீகள் கையில் கொடுக்கிறார் லோகநாயகர், இது வருங்காலத்தில் வெற்றியடைந்தால் பணக்காரர்கள் மட்டுமே திரைப்படம் பார்க்கும் சூழலையும் உருவாக்கலாம்.

வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் வந்தால் ஆரம்பத்தில் விலையை குறைத்து போட்டியாளர்களை அழித்துவிட்டு , பின்னர் விலை உயர்த்திவிடுவார்கள் என பூச்சாண்டிக்காட்டுவோர்களும், ஆரம்பத்திலேயே விலையை அதிகமாக வைக்கும் டிடிஎச் பின்னாளில் போட்டியாளர்களான திரையரங்குகள் இல்லாத நிலையில் இன்னும் விலை ஏற்றி நுகர்வோர்களை கட்டுப்படுத்தும் என்பதை உணராமல் ஆஹா  நல்ல முயற்சி என்கிறார்களே, நேரத்துக்கு ஏற்ப கொள்கை போல :-))

# திரைப்பட வியாபார வருவாய் என்பது இது நாள் வரையில் , தியேட்டர்கள், அதன் ஊழியர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள்,விநியோகஸ்தர்கள்,அதனோடு தொடர்புடைய ஊழியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பகிரப்பட்டு ,அனைவருக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது.

டிடிஎச் முறை முழுக்க தலையெடுத்தால் இம்முறையில் வருவாய் டிடிஎச் ஆபரேட்டர்கள் எனும் பெரு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மட்டுமே பகிரப்படும் நிலை  உருவாகும்.

# வெளிநாட்டிலும் தமிழ்ப்படங்கள் டிடிஎச் இல் வெளியிடலாம் ,எனவே தமிழ்ப்படங்களுக்கு நல்ல வருவாய் பெருகும் என மனக்கோட்டை கட்டுகிறார்கள், ஆனால் வெளிநாட்டில் டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் உள்ள சட்டம் என்ன சொல்கிறது என்றால், குறிப்பிட்ட மொழியில் டிடிஎச் சேவை ஒளிப்பரப்ப உரிமை வாங்கியவர்கள், அம்மொழியில் உள்ள மீடியாவைத்தான் வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் ஒளிபரப்பலாம் என்கிறது.

ஆங்கில டிடிஎச் சேவையில் ஆங்கிலப்படங்களும் ,பிரெஞ்ச் டிடிஎச் எனில் பிரெஞ்ச் படங்களுமே ஒளிபரப்பலாம், தமிழில் ஒளிபரப்பினால் டிடிஎச் லைசென்ஸ் ரத்து ஆகிவிடும்.

# சேட்டிலைட் உரிமம் என ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கும் போது ,அதன் டிடிஎச் உரிமம் அதில் அடங்கிவிடுவது போல தான் தற்போதுள்ளது, எனவே ஜெயா டீவிக்கு சேட்டிலைட் உரிமம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் எதிர்த்தால் டிடிஎச் இல் ஒளிபரப்ப இயலாது. ஒரு வேளை தனியே பிரித்து உரிமம் வழங்கினாரா என தெரியவில்லை.

பிரச்சினை உருவாக்குவது என்றால் , டிடிஎச் உம் சேட்டிலைட் ஒளிபரப்பு எனவே , எங்களுக்கு விற்ற பின் டிடிஎச் இல் ஒளிபரப்ப கூடாது என ஜெய டீவி சொன்னால் , டிடிஎச் திட்டமே எடுபடாது.

இதே போல தொலைக்காட்சி உரிமம் பெறுபவர்கள் சேட்டிலைட் உரிமம் , டிடிஎச் உட்பட அனைத்தும் என்றால் , பெரிதாக வியாபாரம் டிடிஎச் இல் இருக்கு என சொல்வதும் அடிப்பட்டு விடும்.

---------------

ஒலி நுட்பம்:

(Rajni -the Mass)

சிவாஜி -3டி இல் இம்மாதம் மீண்டும் வெளியானதை அனைவரும் அறிவீர்கள், அதோடு அல்லாமல் டால்பி அட்மோஸ் -64 சேனல் 3டி ஆடியோவில் வெளியாகியுள்ளது, இந்தியாவில் சென்னை சத்யம் -செரின் அரங்கிலும், மும்பையில் ஒரு அரங்கிலும் மட்டுமே டால்பி அட்மோஸ் நிறுவப்பட்டுள்ளது. இது ஆரோ 11.1 3டி விட பல சேனல்களில் 3டி ஆடியோவை அளிக்க வல்லது, இதனை 3டி இம்மெர்சிவ் சவுண்ட் என்கிறார்கள்,அப்படி இருந்தும் பெரிதாக இவ்வொலி அமைப்பில்  உருவான முதல் தமிழ் படம் என விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை, மேலும் லைப் ஆஃப் பை என்ற படமும் டால்பி அட்மோசில் தான் வெளியானது அவர்களும் நாங்கள் தான் சிறப்பான ஒலியுடன் படம் காட்டுகிறோம் என சொல்லிக்கொள்ளவில்லை.

சிவாஜி பழைய படம் ஆயிற்றே அதற்கு எப்படி டால்பி அட்மோசில் மீண்டும் ஒலிச்சேற்கை செய்திருப்பார்கள், புதிதாக ரீ-ரிக்கார்டிங் ஏ.ஆர் .ரஹ்மான் செய்திருப்பாரா என்றெல்லாம் யாருக்கும் கேள்வியே எழவில்லையா?

உண்மையில் புதிய ரீ -ரிக்கார்டிங் எல்லாம் செய்வதில்லை, எல்லாம் பழைய கள் புதிய மொந்தை டெக்னிக் தான் ,5.1 ஆடியோ டிராக்கினை மீண்டும் அடோப் பிரிமியர் புரோ டூல்ஸ்,MAC pro tool போன்ற ஒலி சேர்க்கை மென்பொருளில் கொடுத்தால் மீண்டும் 5.1 டிராக் ஆக தனியாக பிரித்து கொடுக்கும்(ஆனால் பழைய PCM track போல இருக்காது)  , அதனை அட்மோசின் 64 டிராக்கிற்கு ஏற்ப மறு ஒலிச்சேர்க்கை ,செய்து ,அட்மோஸ் கோடக்கில் கொடுத்தால் 64 டிராக் ரீ-ரிக்கார்டிங் தயார்.

உண்மையில் 64 டிராக் என்பதெல்லாம் கணினி மென்பொருள், கோடிங், மற்றும் மெட்டா டேட்டா வைத்து உருவாக்குவதே , இவ்வாறு பழைய ஆடியோ டிராக்கினை எடிட்டிங்கில் மாற்றுவது அப்ஸ்கேலிங் என்பார்கள்,ஆனாலும் புதிதாக ரீ-ரிகார்டிங் செய்த அளவுக்கு இருக்காது,முழுதாக பின்னர்  இன்னொரு பதிவில் காணலாம்.

இதை விட இன்னொரு எளிய வழி இருக்கிறது, எந்த பழைய ஒலிச்சேர்க்கை கோப்பையும் டால்பி அட்மோஸ்,ஆரோ போன்ற ஒலிச்சேர்க்கை கருவியில் கொடுத்தாலும் தானாகவே பல சேனல் ஆடியோ ஆக மாற்றிவிடும், இதனை அப்மிக்ஸிங் என்பார்கள்.

எனவே தற்போது இந்தியாவில் ஆரோ,அட்மோஸ் ஆகிய ஒலிச்சேர்க்கையில் அனுபவம் கொண்ட ஆடியோ ரெக்கார்டிங் சென்டர்களே இல்லாத சூழலில் அனைவரும் அப்மிக்ஸிங் செய்திருக்கவே வாய்ப்புள்ளது, எனவே தான் சிவாஜி 3டி அட்மோஸ் படம் அமைதியாக வெளியாகியுள்ளது எனலாம், ஆனால் லோகநாயகர் ,படத்தினை விளம்பரப்படுத்த கொஞ்சம் அதிகமாகவே ஆரோ 11.1 3டி என சவுண்டு கொடுக்கிறார் :-))

அடுத்தப்பதில் ஆரோ 3டி, டால்பி அட்மோஸ் போன்ற மல்டி சேனல் ஆடியோ முறைகளை ஒப்பிட்டு அவை எல்லாம் வெறும் எண்ணிக்கை விளையாட்டே, உண்மையான ஒலிதரத்தின் அளவில் பெரிதாக ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்பதை காணலாம்.
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து பிசினெஸ் லைன்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,dreamdth.com, தமிழக வருவாய் துறை, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------------------------------------

Wednesday, December 12, 2012

அஃதே,இஃதே-4: 27-11-2043(12-12-12)



# 12-12-12

 எல்லாருக்கும் 27-11-2043 என்ற அபூர்வ நாளில் அடியேனின் அதி அற்புத வாழ்த்துக்கள்!!!

ஹி...ஹி இன்னிக்கு 12-12-12 தானே என சிண்டை பிச்சுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் ,தலைப்பிலேயே நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரிந்து இருக்கும்.

ஆங்கில முறையில் கிரிகோரியன் காலண்டர் முறையில் தான் இன்று 12-12-12 என வரும், அதனை நூறாண்டுக்கு ஒரு முறை வரும் அதிசயம் என பலர் அதிசயமே அதிசயத்துப்போகும் வண்ணம் பதிவுலகில் பிரஸ்தாபித்து இருப்பார்கள் :-))

ஆனால் நம்ம தமிழ்நாட்டு தமிழர்களுக்கு என்றே ஒரு நாட்காட்டி முறை உருவாகி ரொம்ப காலமாச்சு , நிறைய பேரு இன்னும் தமிழ் நாட்காட்டி முறை என்றால் பிரபவ என துவங்கி 60 ஆண்டுகளை கொண்ட விக்ரம சாகா நாட்காட்டியினையே நினைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் அது வடமொழி நாட்காட்டி, அப்படியே சுட்டு இங்கே வைத்துவிட்டார்கள், இந்த 60 ஆண்டுகளும் நாரத பாகவதருக்கும் , ஊதாங்குழல் கிருஷ்ணாவுக்கும் பிறந்த புள்ளைங்களாம் :-))

அது எப்படி ரெண்டு பேரும் ஆம்பிளைங்களாச்சே என வாய எல்லாம் தொறக்கப்படாது, பகவான் எல்லாத்துக்கும் ஒரு இண்டெலிஜென்ஸ் பிளான் வைத்திருப்பார், எனவே நாரத பாகவதரின் ஸ்திரி மோகத்தினை தனிக்க கவர்ச்சி கன்னி அவதாரம் எடுத்துவிட்டார் எல்லாம் வல்ல ஊதாங்குழல் கண்ணன் :-))

எனவே இந்த கண்றாவி வட மொழி ஆண்டுக்கணக்கு வேண்டாம் என கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.

கார்த்திகை என்பது 11 ஆவது மாதம் ,இன்று கார்த்திகை 27 எனவே தான் 27-11-2043 என இந்நாளை குறிப்பிட்டேன் , எனவே 12-12-12 என்று நாள்,மாதம், ஆண்டு வருவது எல்லாம் சிறப்பு என சொல்வதில் எந்த பெருமையும் இல்லை ,ஏன் எனில் ஒவ்வொரு வகை காலண்டரிலும் ஒவ்வொரு நாள் இப்படி வர வாய்ப்புள்ளது, எனவே எல்லா நாளும் சிறந்த நாளே!

ஹி...ஹி ஆனாலும் சும்மா இருக்க முடியுமா , ஒரு பதிவைப்போட்டு கடமையாற்றுவது தானே நம்ம பொழப்பு என இப்பதிவைப்போட்டு இந்நாளை எனது பதிவுலக டைம் லைனிலும் பதிவாக்கிட்டேன் :-))

கடந்தாண்டு 11-11-11 அன்றும் இதே போல சேவை ஆற்றியுள்ளேன் ,அதனைப்படிக்க சுட்டியை தட்டிவிடவும்.

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: 11-11-11


#சின்னசாமி சுப்பிரமணிய பாரதியார்.



11-12-1882 இல் திருநெல்வேலி சீமையில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார் ,சிறு வயதில் சுந்தரமூர்த்தி என்ற பெயரில் அறியப்பட்டாலும் பின்னாளில் சுப்பிரமணிய பாரதியாராக மாறி  தனது 38 வயதிற்குள் பல புரட்சி மிகு , எழுச்சி கவிதைகளை பாடி தமிழர் மனதில் நீங்கா இடம் பெற்று ,செப்டெம்பர் -11,1921 ஆம் ஆண்டு காலமானார். அவர் மறைந்த போது அவர் வயதின் எண்ணிக்கையை விட குறைவாக வெறும் 32 நபர்கள்  மட்டுமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பதில் இருந்து ,நம் மக்களின் தமிழ் ஆதரவு நன்கு புலப்படும்.

நம்ம ஊரில் ஒரு சாமானியன் தமிழ், தமிழன் என்றால் பொழைக்க தெரியாதவன் ,அதே அரசியல்வாதி தமிழ், தமிழன் என்றால் பொழைச்சுப்பான் :-))

பாரதியின் நினைவில் ...இப்பாடலை ரசியுங்கள்!



# super Star:



சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் ... கேட்கிறவன் கேணையனாகவே இருக்க வேண்டும், எனவே அவரைப்பற்றி நாம தனியாக சொல்லத்தேவையில்லை, தமிழ் திரைப்படத்தின் வணிக வலிமையை தமிழகம் தாண்டி உலகிற்கு நடைமுறையில் காட்டியவர் நம்ம "ரியல் தல" மட்டுமே!, அவரின் பிறந்த நாள் இன்று தான் என நான் வேற தனியாக சொல்லணுமா?

வாழ்த்துக்கள்!!!

பட்டைய கிளப்பும் இப்பாடலை ரசித்து மகிழுங்கள்!



#மரமும் மாணவர்களும்:



தமிழகத்தில் வனப்பரப்பு தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட 18 சதவீதத்திற்கும் குறைவாக 15 சதவீதம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொன்னாலும், அதெல்லாம் காகித எண்ணிக்கை என நினைக்கிறேன் ,அதைவிட குறைவாகவே வனப்பரப்பு இருக்க வேண்டும்.

மேலும் சாலை ஓரம் இருக்கும் மரங்களை எல்லாம் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் போடுவது என வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.  தானே புயல் வீசிய போது பல லட்சம் மரங்கள் வீழ்ந்து கிடப்பதை நேரடியாக பார்த்தவன், புயலால் கடலூர் மாவட்டத்தில் முன்பிருந்ததை விட மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும் சில ,பல அரசியல் கட்சிகள் மரம் வெட்டிப்போட்டே கட்சியை வளர்க்கிறார்கள்,இது போக சமூக விரோதிகளும் மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மரங்களே இல்லாத சூழல் உருவாகி, வெப்பம், சுற்று சூழல் மாசு அதிகரித்து, மழை பொழிவு குறையலாம், தற்சமயமே பெரும்பாலும் மழை பொழியாமல் ஏமாற்றிவிடுவதை அனைவரும் உணரலாம்.

அரசு ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அடிக்கடி மரம்நடுவிழா என நடத்தி பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பதை அடிக்கடி பார்க்கலாம், ஆனால் அப்படி நட்ட மரங்கள்(மரக்கன்று) என்னாச்சு என அதன் பின் யாரும் கவலைப்படுவதில்லை, புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவுக்கு வேர் ஊன்றி இருக்காது, எனவே தொடர்ந்து நீர் ஊற்ற வேண்டும், ஆனால் மரம் நட்டவர்கள், கைத்தட்டிக்கொண்டு வேற ஊருக்கு மரம் நடும் வேலையை செய்ய போய்விடுவார்கள், நம்ம மக்களும் மரம் வளர்ந்தால் நமக்கும் நல்லது தானே என சுயமாக தண்ணீரும் ஊற்றுவதில்லை,எனவே ஒரே வாரத்தில் மரக்கன்று காய்ந்து விறகாக ஆகிவிடும், அக்கம் பக்கம் மக்கள் அடுப்பெரிக்க பொறுப்பாக புடுங்கிக்கொன்டு போய்விடுவார்கள் :-))

இதான் மரம் நடும் விழாவின் உண்மையான நிலை, இப்படியே செய்துக்கொண்டிருந்தால் , எக்காலத்திலும் தமிழகம் பசுமையாக மாறாது.

இதற்கு ஒரு நல்ல தீர்வாக நான் நினைப்பது என்னவெனில் , பள்ளி மாணவர்களை இதற்கு பயன்ப்படுத்துவதே ஆகும்.

தமிழகத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை-5185

கடந்தாண்டு(2012) இல் 10.87 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்கள், அப்படியானல் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்டுக்கு இதே எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவர்கள் இருந்திருக்க வேண்டும்.

எனவே 5- 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை -

10.87*5=54.35 லட்சம் மாணவர்கள்.

ஒரு மாணவன் 5 ஆம் வகுப்பில் சேரும் போதே ஒரு மரக்கன்றை கொடுத்து நட்டு ,பராமரிக்க சொல்ல வேண்டும், ஏதேனும் ஒரு பொது இடத்தில் நட வைக்கலாம், மேலும் தினசரி ஒரு இரண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றினாலே போதும் சுமார் மூன்று மாதத்தில் மரம் நிலைத்துவிடும்.

இதே போல ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும். மாணவர்கள் நட்ட மரம் உண்மையில் இருக்கிறதா என்பதை ஆண்டு இறுதியில் ஆசிரியர் கணக்கெடுக்க வேண்டும், இவ்வாறு ஆண்டுக்கு ஒரு மரக்கன்றை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக கொடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள் ஊக்கத்துடன் மரம் நடுவார்கள்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மரக்கன்று நட்டு பராமரித்தை காட்டினால் 5 மதிப்பெண்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் கொடுக்கலாம், சமூக அறிவியல் பாடத்திற்கு கொடுத்தால் பொறுத்தமாகவும் இருக்கும். எத்தனையோ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சில மதிப்பெண்களில் தோல்வியடைவதுண்டு ,அவர்களுக்கு எல்லாம் போனஸ் மதிப்பெண் ஒரு வர பிரசாதமாக இருக்குமே.

போனஸ் மதிப்பெண்கள் கொடுத்தால் கல்வி தரம் குறையும் என்றெல்லாம் சிலர் சொல்லக்கூடும், ஆமாம் 5 மதிப்பெண் குறைவாக எடுக்க வைத்தால் மட்டும் கல்வித்தரம் கூடிவிடுமா? இதனால் யாருக்கு என்ன நட்டம் ,அனைவருக்கும் ஒரே சீராக 5 மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாதகமாகிவிடாது.

ஆண்டுக்கு 50 லட்சம் மாணவர்கள், 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக கொண்டால் பத்து ஆண்டுகளில் 5 கோடி மரங்கள், அவற்றில் 50% பிழைத்து மரமாக நின்றாலும் 2.5 கோடி மரங்கள், உருவாகி தமிழகம் பசுமையாகுமே!

மேலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு மரம் வீதம் 10 ஆம் வகுப்பு வரும் போது ஐந்து ஆண்டுகளில் ஐந்து மரம் நட்டு, உருவாக்கி இருப்பார்கள், இவை அம்மாணவர்களின் சொத்து , எனவே 10 ஆம் வகுப்பு முடித்து வெளியேறும் போது அம்மரங்களை அரசு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கிக்கொள்வது போல செய்ய வேண்டும், இதன் மூலம் மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி கல்வி முடிக்கையில் ஒரு ஊக்கத்தொகை கிடைத்தது  போல இருக்கும். மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் பசுமை சான்றிதழ் என ஒன்றை அளித்து அவர்களின் சேவையை கவுரவிக்கலாம். இது பின்னாளில் வேலைக்கு செல்லும் பொழுது அம்மாணவரின் சமூக பொறுப்புணர்ச்சிக்கு சான்றாக காட்ட உதவும்.

இது போல ஏதேனும் மாற்று வழியில் மரங்களை நட அரசு சிந்தித்தால் மட்டுமே தமிழகம் பசுமையாக மாறும், வழக்கம் போல அரசு எந்திரம் மூலம் மரம் நடுகிறோம் என செலவு கணக்கு காட்டிக்கொண்டிருந்தால் வருங்காலத்தில் தமிழகம் பாலைவனமாக தான் மாறும்.

------------------
பின் குறிப்பு:

தகவல் ,மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,விக்கி,யூடியூப்,தமிழ்நாடு அரசு இணைய தளங்கள்,நன்றி!
-----------------------

Saturday, December 08, 2012

சினிமா ரகசியம்-4:VISHWAROOPAM IN DTH RELEASE வெற்றியடையுமா?




 லோக நாயகரின் விஷ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் இதோ,அதோ என கால தாமதம் ஆனதற்கு பலரும் பல காரணங்கள் சொல்லியிருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு காரணத்தினை இப்போது சொல்லப்போகிறேன், அந்த அதி முக்கியமான காரணம் என்னவெனில்,

விஷ்வரூபம் BARCO AURO:3D-11.1  சேனலில் ஒலியமைப்பு செய்யப்பட்டது என முதலில் செய்திகளில் வந்ததை அனைவரும் அறிவீர்கள், அப்பொழுது தமிழ்நாட்டிலோ ,இந்தியாவிலோ  அத்தகைய ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகளே இல்லை என்ற உண்மையை மாற்றுப்பார்வைகளுக்கு பெயர் பெற்ற ஒரு கில்லாடி தமிழ்ப்பதிவர்  BARCO AURO:3D-11.1  குறித்து பதிவாக வெளியிட்டு ரகசியத்தினை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். (ஹி...ஹி என்ன கொடுமைடேனு சொல்லப்படாது)

அந்த கில்லாடி பதிவர் யார் என அறிய இங்கே செல்லவும் :vishwaroopam in barco auro- 11.1 3d audio.

எனவே புதிய தொழில்நுட்பம் என சொல்லி விளம்பரப்படுத்தி படத்தினை  வெளியிட்டு விடலாம் என நினைத்த நேரத்தில் அப்படி வெளியிட்டாலும் பார்வையாளருக்கு அதனால் பயனே இல்லை என்ற உண்மை  வெளியாகிவிட்டதால், இனி  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பு இல்லாத நிலையில் வெளியிட்டால் ஊடகங்கள் கேலி செய்துவிடும் என திரைப்படத்தினை வெளியிடுவதை தள்ளி வைத்துவிட்டு சில திரையரங்குகளையாவது ,  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பில் மாற்றம் செய்ய லோகநாயகர் தரப்பு முயன்றது இதனாலே இக்கால தாமதம் என கோலிவுட் பட்சிகள் ரகசியமாக கிசு கிசுக்கின்றன :-))

அப்படியும் தமிழ்நாட்டில் சத்யம் திரையரங்கம் ஒன்று மட்டுமே புதிய ஒலியமைப்பினை உருவாக்கியுள்ளது, மேலும் அவர்கள் ஆரோ ஒலியமைப்பினை விட அதிக திறனுள்ள டால்பி அட்மோஸ் 64 சேனல் ஒலியமைப்பினையும் அமைத்து , லைப் ஆஃப் பை திரைப்படத்தினையும் வெளியிட்டு விட்டார்கள்.

இருந்த போதிலும் ,  BARCO AURO:3D-11.1   என்ற ஒலியமைப்பும் தமிழுக்கு இன்னும் புது தொழில்நுட்பமே என்பதால் தமிழ்நாட்டில் சத்யம் அரங்கம் தவிர வேறு எங்கும் , அவ்வொலியமைப்பின் சிறப்பினை உணரும் வாய்ப்பு இன்றைய தேதி வரையில் உருவாகவில்லை. காரணம் ஒலியமைப்பினை மாற்றி அமைக்க சுமார் 20 லட்சம் முதலீடு தேவைப்ப்படுகிறது,எனவே பல அரங்க உரிமையாளர்களும் யோசிக்கிறார்கள்.

இந்நிலையில் குறைந்த பட்சம் சுமார் 30 திரையரங்குகளையாவது  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்பில் மாற்றியமைக்க திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி வருகிறார் லோகநாயகர்.

ஆனால் இதற்கு இடையில் லோகநாயகர் தனது விஷ்வரூபத்தினை திரையரங்கு வெளியீட்டுக்கு முன்னர் டி.டிஎச் தொலைக்காட்சி மூலம் மூவி ஆன் டிமான்ட் முறையிலும் வெளியிடப்போவதாக அறிவித்து சல சலப்பை உருவாக்கியுள்ளார், எனவே இப்பொழுது திரையரங்க உரிமையாளர்களும் லோகநாயகருக்கு எதிராக திரண்டுவிட்டார்கள், எனவே மேலும் திரையரங்குகள்  BARCO AURO:3D-11.1   ஒலியமைப்புக்கு மாற்றியமைப்பார்களா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது?

தற்போதைய சூழலில் விஷ்வரூபத்தினை  BARCO AURO:3D-11.1  ஒலியமைப்பில் காணும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு கிடைக்க வழியில்லை என்றே தோன்றுகிறது, என்ன செய்யப்போகிறார் லோகநாயகர்?

Movie On Demand @DTH:





டிடிஎச், அல்லது தொலைக்காட்சியில் திரைப்படத்தினை முதலில் வெளியிடுவது அல்லது DVD,VCR Tape, வடிவில் மட்டுமே திரைப்படத்தினை வெளியிடுவது போன்ற நடைமுறைகள் ஹாலிவுட்டில் நீண்டகாலமாகவே இருக்கிறது.

பெரும்பாலும் இண்டிபென்டன்ட் மூவி மேக்கர்ஸ் எனப்படும் சிறு படத்தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். குறைவான பட்ஜெட்டில் ஹாரர், ஆக்‌ஷன், கொஞ்சம் கில்மா கலந்து படம் எடுத்துவிட்டு நேரடியாக சேனல்கள், டிவிடி, டேப் என வெளியிட்டு காசுப்பார்த்து விடுவார்கள்.

பின்னர் படம் நல்ல வரவேற்பு பெற்றால் பெரிய அளவில் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யும் வழக்கம் உண்டு. இப்படி முதலில் வீடியோ டேப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி ,பின்னர் திரைக்கு வந்து கலக்‌ஷணை அள்ளிய ஹாலிவுட் திரைப்படங்கள் நிறைய உள்ளன. இதற்கு சிறந்த உதாரணம், எவில் டெட் என்றப்படமாகும்.

ஆனால் இம்முறை சிறிய பட்ஜெட் படங்களுக்கே நல்ல வியாபார யுக்தியாகும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு சரிப்படாது, எனவே ஹாலிவுட்டில் உள்ள பெரிய ஸ்டூடியோக்கள் இம்முறையில் வெளியிடுவதில்லை.

இந்தியாவிலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே ,அரங்குகளில் படம் வெளியான சில நாட்களில் டிடிஎச் சில் மூவி ஆன் டிமாண்ட் முறையில் வெளியிட்டுள்ளார்கள்.

 2009 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான Main Aurr Mrs Khanna என்ற இந்தி திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் ரிலையன்ஸ் பிக் டீ.வி, மற்றும் டிஷ் டிடிஎச் இல் வெளியானது. தயாரிப்பாளரும், டிடிஎச் நிறுவனமும்  50:50 என விகிதத்தில் லாபத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.




சல்மான்கானின் ரெடி, What s your Rashee, Kaminey, Rock On!!, Delhi 6, The President is Coming, Jodhaa Akbar and Aa Dekhe Zara.போன்ற படங்கள் படம் வெளியான முதல் வாரத்திலிருந்து டி.டிஎச் இல் மூவி ஆன்  டிமான்ட் அல்லது பே பெர் வியு முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

link: http://www.dnaindia.com/money/report_dth-emerging-channel-for-movie-releases_1300685

படத்தின் தயாரிப்பு மதிப்பு, ஸ்டார் வேல்யு, எவ்வளவு சீக்கிரம் டிடிஎச்சில் வெளியாகிறது என்பதை பொருத்து ஒரு படத்திற்கு 25 ரூ முதல் 150 ரூ வரையில் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்.

ஆனால் விஷ்வரூபம் படத்தினை டிடிஎச்சில் பார்க்க 1000 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வருவதால், அதிகம் பேர் அவ்வளவு அதிக தொகை கொடுத்து பார்க்க விரும்ப மாட்டார்கள் என சொல்லலாம்.

திருட்டு டிவிடி, இணைய தரவிறக்கத்தினை தடுக்க எனில் மலிவான கட்டணம் என்றால் மட்டுமே மூவி ஆன் டிமான்ட் மூலம் பலன் இருக்கும், அதிக கட்டணம் என்றால் , மலிவான திருட்டு டிவிடிக்கே மக்கள் போவார்கள். திருட்டு டிவிடியில் பார்க்க விரும்ப காரணமே திரையரங்க கட்டணம் அதிகமானதால் தான் ,அவ்வாறு இருக்க டிடிஎச் இல் இன்னும் அதிகம் கட்டணம் வாங்குவது எப்படி திருட்டு டிவிடிக்கு போட்டியாக அமைந்து கட்டுப்படுத்தும்?

ஏன் எனில் நல்ல தரமான திரையரங்கில் ,பெரிய திரையில் பார்க்கவே ஒருவருக்கு 120 ரூ தான் கட்டணம் எனும் நிலையில் ஒரு குடும்பத்தில் 5 பேர் திரையரங்கு சென்றாலும் 600 ரூ தான் கட்டண செலவு. மேலும் ஆன் லைன் புக்கிங்க் எல்லாம் உள்ள சூழலில் கொஞ்சம் முன்கூட்டியே முயன்றால் டிக்கெட் வாங்கிவிடலாம். எனவே அவசியம் லோகநாயகர் படம் பார்க்க நினைக்கும் குடும்பம் திரையரங்கில் பார்ப்பதே மலிவாகவும், நன்றாகவும் இருக்கும் எனவே டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து பொது மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் எனலாம்.

தீவிர லோகநாயகர் ரசிகர்கள் மட்டுமே முதல் நாள் ,முதல் காட்சி பார்க்கும் ஆசையில் டி.டிஎச்சில் 1000 ரூ கொடுத்து படம் பார்க்கலாம்.பொது மக்கள் பார்க்கப்போவதில்லை.மேலும் தொலைக்காட்சியில் பார்த்தால் பெருமையாக விளம்பரப்படுத்தப்பட்ட  BARCO AURO:3D-11.1   இன் ஒலியமைப்பையும் அனுபவிக்க முடியாது போன்ற காரணங்களும் டிடிஎச் ரிலீஸ் முறைக்கு பின்னடைவையே சேர்க்கும்.

பட வெளியீடுக்கு முன்னர் டிடிஎச்சில் வெளியிடுவது  திருட்டு டிவிடி தயாரிப்பவர்களுக்கே லாபகரமான எளிய வழியாக இருக்கும், வெறும்  1000 ரூ கொடுத்து படம் பார்த்துவிட்டு எளிதாக டிவிடி தயாரித்து விடுவார்கள், இதனால் ஒரே நாளில் தரமான திருட்டு டிவிடி கிடைக்க ஆரம்பித்துவிடும், First Day Frist Show வின் பொழுதே திரையரங்க வாயிலிலேயே திருட்டு டிவிடி விற்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை,இணையத்திலும் அப்லோட் செய்துவிடுவார்கள்,எனவே திரையரங்கங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படவே வாய்ப்புள்ளது.

டிடிஎச்சில் என்கிரைப்டட் வடிவில் இருக்கும் ,அதனை பதிவு செய்ய முடியாது என நினைக்கலாம், எளிதாக பதிவு செய்யலாம் , பல செட் டாப் பாக்ஸ்களில் பதிவு வசதியுடன் இருக்கிறது டிவிஆர் செட் டாப் பாக்ஸ் என்பார்கள், ஒரு வேளை டிடிஎச் நிறுவனம் ஏதேனும் முறையில் செட்டாப் பாக்ஸில் பதிவு செய்வதை தடுத்தாலும் , இன்னொரு முறையில் பதிவு செய்யலாம் , அது எப்படி என பார்ப்போம்.

SET TOP BOX TO COMPUTER:

இரு முறைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை கணினியில் காணலாம்.



#.தற்போது வரும் நவீன எல்.இடி டீவிக்களில் HDMI port or wireless networking எல்லாம் உள்ளது எனவே அவற்றின் மூலமும் கணினி, மடிக்கணினியை இணைக்கலாம், பின்னர் விண்டோஸ் மீடியா சென்டர்* மூலம் நிகழ்ச்சியைக்காணலாம் ,பதிவு செய்துக்கொள்ளலாம். அல்லது பல விடியோ கேப்சர் மென்பொருள்கள் உள்ளது அதன் மூலமும் செய்யலாம்.

All in One Media center PC என பல நிறுவனங்களும் கணினி தயாரித்துள்ளன, அவற்றில் புளுரே/டிவிடி ,டிவீ டியுனர் ,HDMI,DVI,USB,LAN,CO-AXIAL jack , CARD Reader,என அனைத்தும் இருக்கும், செட் டாப் பாக்சில் இருந்து இணைப்பை கொடுத்து விண்டோஸ் மீடியா சென்டர்* மூலம் டி.வீ பார்க்கலாம், பதிவும் செய்யலாம்.




* விண்டோஸ் மீடியா சென்டர் மூலம் டீ.வீ பார்க்கும் போது மட்டுமே தொலைக்காட்சி நிறுவனம் சில நிகழ்ச்சிகளை பதிவு செய்வதை கட்டுப்படுத்த முடியும், எனவே மாற்று மென் பொருளை பயன்ப்படுத்தலாம், அல்லது தனியாக ஒரு டீவி ட்யுனர் கார்ட் மற்றும் அதன் மென்பொருளைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

#செட் டாப் பாக்சில் அனலாக் மற்றும் டிஜிட்டல் அவுட் புட் என இரண்டும் உள்ளது , அதன் அவுட் புட்டினை நேரடியாக எடுத்து ஒரு டி.வி டியுனர் கார்டின் மூலம் கணினியுடன் இணைக்கலாம், பின்னர் கணினில் பதிவும் செய்துக்கொள்ளலாம்

நேரடியாக செட் டாப் பாக்சினை டிவி டியுனர் கார்டு மூலம் கணினியில் இணைத்து பதிவு செய்யும் முறையை விளக்கமாக காணலாம்.

சந்தையில் 1,500 ரூபாய்க்கு எல்லாம் தரமான எக்ஸ்டெர்னல் யு.எஸ்.பி டீ.வி டியுனர் கார்டுகள் கிடைக்கிறது.200 சேனல்கள் வரையில் காண முடியும், மேலும் எஃப்.எம் வானொலியும் கேட்கலாம்.

உதாரணமாக iBall என்ற நிறுவனத்தின்  External USB T.V Tuner card பற்றி பார்க்கலாம்.



இது ஒரு பென் டிரைவ் அளவிலேயே இருக்கும், ஒரு பக்கம் யு.எஸ்.பி மேல் சாக்கெட்டும் ,மறுபக்கம் அனலாக் கோஆக்சியல் கேபிளை இணைக்க சாக்கெட்டும் இருக்கும்.



டிஜிட்டல் AV cable இணைக்க மினி யுஸ்பியுடன் சாக்கெட்டும் உள்ளது. இதில் மினி யுஸ்.பி  AV cable  அடாப்டர் கொண்டு இணைத்துக்கொள்ளலாம், இவை எல்லாமே நாம் வாங்கும் டியுனர் கார்டுடன் அளிக்கப்பட்டுவிடும்.மேலும் ரிமோட் கண்ட்ரோல் எல்லாம் உண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்பதற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டு வழக்கமான தொலைக்காட்சி போல நமது கணினியில் , பதிவு செய்யும் வசதியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணலாம்.



இம்முறையில் ஒரு சேனலில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டு இன்னொரு சேனலின் நிகழ்ச்சியை கணினியில் பதிவும் செய்துக்கொள்ளலாம்.அப்படி கணினியில் பதிவு செய்ததை இணையத்தில் டோரண்ட் மூலம் எளிதில் பகிர முடியும், மேலும் ஒருவரே வெப் ஸ்ட்ரீமிங்க் முறையில் ஒளிபரப்பவும் முடியும்.

recording tv programme:



review :

http://broadbandforum.in/consumer-electronics/74794-exclusive-iball-usb-tv-tuner.html

iBall Claro TV Tuner / AV / FM Radio.

Features:

Clear and Crisp Picture Quality
Slim USB design - easy to carry
Time Shifting - Pause Live TV and Watch later
Real-time and Schedule TV Recording
Watch TV on PC or Laptop
Free Bundled Software - Power Director for Video Capture & Edit, Power Producer for Creating Movie Discs
Listen to FM Radio
Powerful and user-friendly software
Watch and record Analog TV
Video / Audio Capture
Still Image capture with multi-shot mode
Record video in MPEG1/2/4, AVI, VCD or DVD format
Multi-Channel Preview
Scrolling Text marquee support

Powerful and user-friendly software
10-bit analog-to-digital conversion and Noise Reduction

Built-in FM:  Built-in FM Radio with Recording function

Multi AV Input:  Composite and S-Video inputs to connect DVD player, Set Top Box etc.

Interface:  USB Interface

Remote Control:  Full-function IR remote control

System Requirment:

Pentium 2.4 GHz or Centrino 1.4 GHz or above
512MB RAM
1GB free Space for Hard disk
DirectX 9.0C or higher installed
AC97 Compatible Sound Card
One Free USB 2.0 interface

OS Supported:  Windows XP / Vista / 7

Package Contents:

iBall Claro TV Stick
Remote Control & Battery
Quick Installation Guide
FM Antenna
Driver CD with iBall Claro TV Software
Cyberlink Combo CD
Multi AV Cable
USB Extension Cable

MRP:  Rs. 1995( market price around 1500 rs)

Warranty:  1 Year

சுட்டி: http://www.iball.co.in/Product.aspx

இன்னும் கொஞ்சம் தரமாக படப்பதிவு செய்ய வேண்டும் எனில் சுமார் 3000 ரூபாய் விலையில் AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card என ஒன்று உள்ளது.



அதன்விவரங்கள்:

Specifications of AverMedia DVD EZMAKER 7 TV Tuner Card

IN THE BOX

Sales Package: AverMedia DVD EZMaker 7 (Weight: 50 g), Installation CD (Driver), Installation CD (CyberLink PowerDirector 8 DE & PowerProducer 5 DVD), Quick Installation Guide, USB Cable

GENERAL

Device type: External (PC) for PC
Model ID: DVD EZMAKER 7
Part Number: C039
VIDEO
TV Recording: Yes, TV Recording in MPEG-4 (H.264) formats
Video Analog-to-Digital Converter: Yes
POWER
Input Current: 5 V DC

CONNECTIVITY

Audio Jacks: Yes(In)
Audio L/R In: Yes
Video In: Yes
S-Video In: Yes
USB: USB 2.0

DIMENSIONS

Weight: 50 g

OTHER FEATURES

Additional Features: Edit, Organize and Highlight Video Clips on Storyboard

WARRANTY

Domestic Term: 2 Years
Service Type: Carry In

FlipKart.com போன்ற இணையவர்த்தக தளத்திலும் கிடைக்கின்றன.

http://www.flipkart.com/avermedia-dvd-ezmaker-7-tv-tuner-card/p/itmd2ryha7yuzjhw?pid=TVTD2RYK8AFHJEMV&icmpid=reco_pp_personalhistoryFooter_tv_tuner_card_1_nr

----------------------

கணினி மானிட்டர், எல்.சி.டி ஆகியவற்றையும் ,கணினி இல்லாமல் தொலைக்காட்சியாக பயன்ப்படுத்தவும் எக்ஸ்டெர்னல் டிவி. டியுனர் கார்டு உள்ளது.இதற்கு எந்த மென்பொருளும் நிறுவ தேவையில்லை, கணினியும் தேவையில்லை, மானிட்டர் மட்டுமே போதும்.

iBall External TV Box - CTV27


Features:

Watch TV on LCD / LED or CRT monitor
Plug-n-play, No Software or PC require
Full-band TV signals reception
Enjoy TV programs for leisure entertainment while working on your PC
Built-in FM Radio
High-resolution output delivers clear & stable picture without flicker

HD TV Box - Supports HD resolution up-to 1920 x 1200
3D high efficiency noise reduction to suppress noise effectively
PC / TV Switch

PIP function at PC mode allows you to adjust the size and position of the window

Child Lock function to restrict children from watching certain channels

Full-function remote control

AV interface for multi-media extension to DVD or Set-Top Box

Supports 4:3, 16:9 and 16:10 Aspect ratio

Schedule On/Off function

Built-in speaker

Built-in FM:  Built-in FM Radio

Power Input:  DC 5V / 600mA

RF Input:  47 - 870 MHZ

AV Input:  1Vp-p (PAL/NTSC)
Output Frequency:  Horizontal: 37KHz-75KHz, Vertical: 60Hz (Refresh rate)

Resolution:  800x600@60Hz, 1024x768@60Hz, 1280x1024@60Hz, 1440x900@60Hz, 1680x1050@60Hz, 1920x1080@60Hz, 1920x1200@60Hz

TV System:  PAL(SECAM)-B/G, PAL-I, PAL-D/K

Remote Control:  Full-function Remote control

Package Contents:  XGA TV Box, Stand, Remote Control (Batteries included), Power Adapter, VGA Cable, Stereo Audio Cable, FM Antenna Cable, AV Cable and User Manual

MRP:  Rs. 1899/-
Warranty:  2 Years

http://www.iball.co.in/Product.aspx


குறிப்பு:

தொழில் முறை ரீதியாக வீடியோ கேப்சர் செய்ய பல கிராபிக்ஸ்கார்டுகள் Nvidia, pinnacle போல  உள்ளது , அவற்றை கொண்டு ,நல்ல தரத்தில் டிவிடிக்களை டிடிஎச் ஒளிப்பரப்பின் போது உருவாக்க முடியும், எனவே திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ஒளிப்பரப்பு என்பது மொத்த வருமானத்தினை பாதிக்கும் ஒரு முடிவாகும்.
-----------------------

ஒரே கல்லில் பல மாங்காய்கள்:

ஒரு டிடிஎச் செட் டாப் பாக்ஸில் இருந்து பல டீ.விகளுக்கு இணைப்பை கொடுக்க AV splitter எனப்படும் அடாப்டர் உள்ளது. இதில் சிக்னல் பூஸ்டர் மேலும் பல அவுட் புட் முனைகள் என இருக்கும், ஆனால் அனைத்து இணைப்பிலும் ஒரே சேனலே காட்டப்படும். இம்முறையில் தான் உணவகங்கள், பார்கள் ஆகியவற்றில் பல டீ.விக்களில் டிடிஎச் நிகழ்ச்சியினை காட்டுகிறார்கள்.

1:3 AV splitter :

ஒரு செட் டாப் பாக்ஸ் மூலம் மூன்று தொலைக்காட்சிப்பெட்டிகளில் நிகழ்ச்சியினை காணப்பயன்ப்படுத்தலாம், சிக்னல் நன்றாக கிடைக்க இதில் சிக்னல் பூஸ்டரும் உள்ளது.



சென்னையில் ரிட்சி ஸ்ட்ரீட் போனால் பல பிராண்டுகள், பல விலையில் இது போன்ற உபகரணங்கள் கிடைக்கிறது, காசுக்கேற்ற தோசை போல ,கொடுக்கும் காசுக்கு ஏற்ற தரத்தில் வாங்கலாம்.
---------------------------

எனவே லோகநாயகர் தனது விஷ்வ ரூபம் படத்தினை  திரையரங்குகளுக்கு முன்னரே டி.டிஎச்சில் அதிக விலைக்கு வெளியிட்டால் அது திருட்டு டிவிடி தயாரிக்க மட்டுமே உதவும், எனவே திரையரங்குகளுக்கு செல்லும் கொஞ்சம் கூட்டமும் வீட்டோடு முடங்கி விடும் அபாயமே அதிகம் இருக்கிறது.

சிலர் சொல்லலாம் நான் டிவிடியில் படம் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் திரையரங்கிற்கும் செல்வேன் என ஆனால் அதெல்லாம் தனிநபர்களின் விருப்பம், குடும்பத்தோடு படம் பார்க்க செல்பவர்கள்  பெரும்பாலும் டிவிடியில் பார்த்தப்படத்தினை மீண்டும் பார்க்க அரங்கு செல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் திரையரங்க விநியோகம் செய்தவருக்கு பெருத்த நட்டம் உருவாக வாய்ப்புள்ளது.

மேலும் பல இடங்களிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்கள் டிடிஎச் சேனலை தங்களது கேபிள் ஒளிபரப்பின் மூலமும் பகிர்வதுண்டு, எனவே பல ஊர்களில் கேபிள் ஆபரேட்டர்கள் ஒரே ஒரு டிடிஎச் வைத்து ஊருக்கே படம் காட்டும் சாத்தியமுண்டு , இதனால் பெருத்த வருமான இழப்பும் ஏற்படலாம். இதனை தடுக்க எல்லா ஊரிலும் கேபிள் டீ.வீ ஆபரேட்டர்களை கண்காணிக்க ஆட்களை  நியமிக்க வேண்டும், அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியதும் அல்ல.

எனவே லோகநாயகரே சொந்தமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்தாலும் அவருக்கும் நட்டம் தான் வரும் என்பதே டிடிஎச் சில் ரிலீஸ் செய்வதால் உண்டாகும் பலன்.

லோகநாயகர் தமிழ் திரையுலகில் தொழில்நுட்ப ரீதியாக முன் கூட்டியே சிந்திப்பவர் என  பெருமையாக அவரது ரசிக கண்மணிகள் வேண்டுமானால் சிலாகித்து கொள்ளலாம், ஆனால் அவரது தொழில்நுட்ப அறிவு 100 கோடியில் படம் எடுத்து 1000 ரூபாயில் திருட்டு டிவிடி தயாரிக்க தான் உதவும் என்பதை கூட அறியாத நிலையில் தான் உள்ளது என்பதே அடிப்படையான உண்மை!

*********

முந்தைய திரைநுட்ப பதிவுகள் சில,

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-VFX-1

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-2:2D to 3D conversion.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-3:DIGITAL PROJECTION

------------------------

பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி,
iBall,FlipKart,DNA news,Times of india,google,AVforum,இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

Sunday, December 02, 2012

FDI in Retail market:வரமா,சாபமா?


(ஹி..ஹி லக்ஸ் பாப்பா மலபார்)

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினைப்பற்றி தொலைக்காட்சியில் பலத்த விவாதங்கள் ஓடுகின்றது, அதோடு அல்லாமல் பதிவுலகிலும், இங்கு பொருளாதார புள்ளி விவரங்கள், அந்நிய சில்லரை சந்தையில் பெரிய வணிக நிறுவனங்கள் செய்த "சில்லுண்டி வேலைகள்" என பல உதாரணங்கள் காட்டப்படுகின்றது.

இப்படிப்பேசுபவர்கள் யாருமே நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை தற்காலத்தில் வாழ்வதேயில்லை, அவர்களும் ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கமாக இருந்திருக்கலாம், ஆனால் அன்றைய நிலையை வைத்தே பேசுகிறார்கள். இவர்களில்  சிலர் நடுத்தர வர்க்க வாழ்வை வாழாமல் நேரடியாக மேல் வர்க்க வாழ்வினை சுவைத்தவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு mall  இல் சாண்ட்விட்ச் 150 ரூ என்றாலும் உறுத்தாமல் சாப்பிடுவார்கள், சுவையை மட்டுமே நாக்கு உணரும், அந்த சாண்ட்விட்சுக்கு ஏன் 150 ரூ விலை என கனவிலும் நினைக்க மாட்டார்கள், ஆனால் ஏன் மினரல் இலவசமாக கொடுக்கவில்லை, காசு கொடுத்து வாங்க சொல்கிறார்கள் என மூளையின் நியுரான்களுக்கு வேலைக்கொடுத்து சிந்தித்து , இதயத்தின் ரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் :-))

அந்நிய முதலீட்டின் சாதக பாதகங்களை பற்றி இப்பதிவில் மீன்டும் ஒரு முறை அலசலாம் என இருக்கிறேன், அதற்கு முன்னர் கடந்த காலங்களில் நாம் விவசாயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்து எழுதிய இப்பதிவுகளை சோம்பல் படாமல் படித்து சில,பல கலோரிகளை எரித்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாமே :-))

குறிப்பு: உடல் எடை 70 கிலோ உள்ள நபர் ,ஒரு மணி நேரம் அமர்ந்து படித்தால் சுமார் 91 கலோரி ஆற்றல் எரிக்கப்படுகிறது.

ஹி...ஹி ஐ.பேட் போல வைத்திருந்தால் நடந்து கொண்டே படித்தால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும், உங்கள் உடல் நலன் கூடும் :-))

முந்தைய பதிவுகள் :

வால் மார்ட் குறித்த இடுகைகள்:

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_29.html

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post.html

விவசாயிகள் குறித்த இடுகை:

விவசாயி படும்பாடு-1

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html
 விவசாயி படும்பாடு-2
http://vovalpaarvai.blogspot.in/2011/12/2.html

மேலும் சில விவசாயம் சார்ந்த பதிவுகள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

#பஞ்ச கவ்யம்

#நடவு எந்திரம்

# ஒருங்கிணைந்த விவசாயம்

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி

#காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

#காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2


விவசாயிகள் இடம் பெயர்வால் உண்டாகும் இடர்கள்:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: உள்ளது உள்ளபடி - 2:விவசாய தொழிலாளர்களின் நகர்ப்புர இடம் பெயர்வும் விளைவுகளும்


ஹி...ஹி சுட்டியெல்லாம் படித்து வயிறு எறிந்தால் தண்ணிய குடிங்க, குடிச்சுட்டு படிங்க!

எனது முந்தையப்பதிவுகளை படித்தால் மேற்கொண்டு பேசுவதை உள்வாங்க கொஞ்சம் எளிதாக இருக்கும், படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அடியேன் ஒன்றும் அறச்சீற்றம் கொள்ளப்போவதில்லை, தொடர்ந்து கீழ படிங்க(ஹி...ஹி..மேல படியுங்க என சொன்னால் மீண்டும் ஆரம்பத்திற்கே போயிடுறாங்க சில கூமாங்க்ஸ்)

வால்மார்ட், டெஸ்கோ என பல அந்நிய பெருவணிக நிறுவனங்கள் இந்திய சில்லரை வணிகத்தில் நுழைவதையே தற்போது சிலர் எதிர்க்கிறார்கள், அவர்கள் கருத்துக்கு ஆதரவாக முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவையே,

# அயல்நாட்டில் உள்ள சிறு வணிகர்களை அழித்துவிட்டார்கள்.எனவே இங்குள்ள சிறுவணிகர்களும் அழிந்து விடுவார்கள்.

#ஆரம்பத்தில் விலை குறைவாக கொடுப்பார்கள், போட்டியாளர்கள் இல்லாத சூழலில் ,விலையை ஏற்றுவார்கள்.

# குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக உற்பத்தியாளர்களை கசக்கி பிழிவார்கள்.

#விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு லாபம் எதுவும் வராது,அவர்கள் சொல்வதெல்லாம் கதை.

#பொருட்கள் தரமாக இருக்காது

#நாம் என்ன உண்கிறோம், பயன்ப்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்.

#வரி ஏய்ப்பு செய்வார்கள்.

இன்னும் சில பல சித்தாந்த ரீதியிலான எடுகோள்களை முன் வைக்கிறார்கள். இவை எல்லாம் நடக்குமா, அந்நிய முதலீடு சில்லரை வர்த்தகத்தில் வரவில்லை எனில் இங்குள்ள விவசாயிகளும், மக்களும் சுபிட்சமாக வாழ வழி கிடைக்குமா ?

வாருங்கள் விரிவாக காணலாம்.

இப்பிரச்சினையை முழுதாக புரிந்து கொள்ள , மேலை நாடு, மற்றும் இந்திய சந்தை,நுகர்வு கலாச்சாரம், உற்பத்தி திறன், விநியோக கட்டமைப்பு, மக்கள் தொகை குறித்த ஒரு புரிதல் தேவைப்படுகிறது.

மேலை நாடுகள் VS இந்தியா



# பல லட்சம் மக்கள் வசிக்கும் நகரிலும் , தெருவுக்கு தெரு வணிக நிலையங்கள், அங்காடிகள் இருக்காது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே அங்காடிகள் இருக்கும்.

ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு சமூக இடத்தில் ஒரு சிறு பெட்டிக்கடை கூட அங்கு காண இயலாது.

எனவே பெருவணிகருக்கும், சிறு வணிகருக்கும் போட்டியிடும் களம் ஒரே இடமாக போய்விடுகிறது.

வால் மார்ட் பக்கத்திலேயே, சிறுவணிகரின் கடை இருக்கும், நேரடியான போட்டியை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

# இந்தியாவில் உள்ள நகரங்களில் கடைத்தெரு என ஒரு இடம் இருக்கும், அங்கு அனைத்து வகையான கடைகளும் ,பக்கம்,பக்கமாக இருக்கும். ஆனால் அதோடு அங்காடிகள் முடிந்து விடாது, 500 குடும்பம் வசிக்கும் இடத்தில் கூட ஒன்றிரண்டு மளிகை கடை, பெட்டிக்கடைகள் என இயங்கும்.

கொஞ்சம் அதிக தொகைக்கு பொருட்கள் வாங்க என்றால் கடைத்தெருவுக்கும், தேவை தினசரி ஏதோ ஒரு உ.ம்: அரைலிட்டர் கோல்டு வின்னர் எண்ணை, 10 முட்டை, ரெண்டு தீப்பெட்டி, 5 ரூபாவுக்கு மிளகு தூள் என வாங்கும் மக்கள் அதிகம்.

# வாங்கும் திறன்:

வாங்கும் திறனை மதிப்பிட ஒருவரின் வருமானம் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையின் படி உலக மக்களின் வருவாய் திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு அதனை வருவாய் பிரமீட் என வகைப்படித்தியுள்ளார்கள். அதன் படம் கீழே.

படம்: வருவாய் பிரமீடு:




அப்படத்தில் பார்த்தால் நான்கு வகையான பிரிவுகள் இருப்பதைக்காணலாம்.

ஆண்டு வருவாய் 20,000 டாலர்கள் உடையவர்கள் உச்சத்தில், அவர்கள் எண்ணிக்கை  சுமார் 7.5-10 கோடி மட்டுமே.

இவர்களுக்கு சந்தை விலை ஏற்றம், பொருட்கள் தட்டுப்பாடு என்பதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

எனக்கு பொருள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும், விலையைப்பற்றி கவலையில்லை என்பார்கள், ஒரு சுவையான காப்பி 100 கி.மீக்கு அப்பால் இருக்கு என்றால் , கார், ஹெலிகாப்டர் என போயாவது குடித்து இன்புறும் உயர் வர்க்கம்.

ஐந்து நட்சத்திர விடுதி மட்டம் ,இங்கே ஏழு நட்சத்திர விடுதி இல்லையா ,இதெல்லாம்,என்ன நாடு,ஊரு , இன்னும் வளரவே இல்லை *&#@ என குமுறும் கோமகன்கள்! "High Income Group"

இவர்களுக்கு வால்மார்ட், டெஸ்கோ எல்லாம் பொட்டிக்கடை போல :-))

#அடுத்து ,ஆண்டு வருவாய் 20,000 டாலர், ஆனால் 1,500 டாலருக்கு மேல்.இவர்களை "Upper Middle Class"  எனலாம்.

#ஆண்டு வருவாய் 1,500 டாலருக்கு மேல் ,ஆனால் 20,000 டாலர் எல்லையை தொட முடியாதவர்கள். "Middle Class" எனலாம்.

பிரிவு 2& 3 இல் இருப்பவர்கள் அவ்வப்போது மேலும் கீழும் வருமானத்தில் சஞ்சரிக்க கூடியவர்கள், ஆனால் ஒரு போதும் உணவு, உடை, உறைவிட தட்டுப்பாட்டுக்குள் சிக்காதவர்கள்.

தேவையான போது ஐந்து நட்சத்தி விடுதியிலும் போஜனம் செய்வார்கள் , இல்லையென்றால் சரவண பவன் போன்றவற்றிலும் கையை நனைப்பார்கள்.

இவர்களின் எண்ணிக்கை சுமார் 150-175 கோடி ஆகும்.

#  கடைசியில் ஆண்டு வருமானம் சுமார் 1,500 டாலருக்கு கீழ் உள்ளவர்கள், இவர்களை "Lower Income Group" எனலாம்.

உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால், மொத்தம் உள்ள 600 கோடியில் இவ்வெண்ணிக்கை.

200 கோடி அளவிலான மக்கலே வருவாய் ரீதியாக செழிப்பாக இருப்பதை காணலாம்.

கடைசி நிலையில் , சுமார் 400 கோடி மக்கள் உள்ளார்கள். அவர்களின் ஆண்டு வருவாய் 1,500 டாலருக்குள், ஆனால் இந்தியாவில் சராசரி ஆண்டு வருவாய் 962 டாலர்கள் என்பதால் நாம் எல்லாம் நான்காம் நிலையில் உட்பிரிவாக 5 ஆம் நிலையில் இருக்க வேண்டியவர்கள் :-))

அந்த 5 ஆம் பிரிவு நிலையில் சேர முடியாமல் வறுமைக்கோட்டுக்கீழ் என ஒரு மக்கள் கூட்டம்ம் இந்தியாவில் இருக்கிறது என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.

உலகளாவிய பெரு வணிகர்கள் தங்கள் முதலீட்டை பெரிய அளவிலான சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது ,விரைவாக அதிகம் வியாபாரம் ஆக வேண்டும் என்றே நினைப்பார்கள், அப்பொழுது தான் அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் வரும்.

அப்படி நிறைய பொருட்களும், அடிக்கடி வாங்கி நுகர்வோர் யார் என பார்த்தால் வருவாய் பிரமீட்டில் மேல் இரண்டு பிரிவுகளே , ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு. ஆனால் இவர்களை தான் "potential Buyers" என்பார்கள்.

அதே சமயத்தில் அதிக அளவு நுகர்வு செய்யாத மக்கள் யார் என பார்த்தால் நான்காம் பிரிவில் உள்ளவர்களே, இந்திய அளவில் பார்த்தால் நான்காம் பிரிவிலும் 5, 6 என இருக்கு, இவர்கள் எல்லாம் மலிவான பொருளாக இருந்தாலும் அடிக்கடி வாங்கி,அதிகம் நுகர மாட்டார்கள், காரணம் துட்டு லேது!

இவர்கள் எல்லாம் மார்ஜினல் பையர்ஸ். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் 99% இந்த வகையிலே.

எனவே வால்மார்ட் போன்றவைக்கு இவர்கள் இலக்கே அல்ல. இவர்களை நம்பி கடையை திறந்தால் கடைக்கு மின்சார பில்  கட்ட கூட வருவாய் வராது :-))


படம்:வசிப்பிடவாரியாக சில்லரைவர்த்தக பரவல்.



விளிம்பு நிலை வருவாய் மக்கள், ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் சமையல் எண்ணை தேவை என தெரிந்தாலும் மாத ஆரம்பத்தில் மொத்தமாக பொருள் வாங்கினாலும் 5 லிட்டர் எண்ணை வாங்க மாட்டார்கள், ஒரு ரெண்டு லிட்டர் வாங்குவாங்க, அது தீர்ந்ததும் தேவைக்கு அரை லிட்டர் பாக்கெட்டுகளாக வாங்குவார்கள்.

எனவே இது நாள் வரையில் இவர்கள் ஷண்முகம் ஸ்டோரில் மாதம் ஒரு முறை மொத்த கொள்முதல் செய்திருப்பார்கள், பின்னர் தினசரி 50 ரூ-100 ரூ என அருகில் இருக்கும் முருகன் மளிகைக்கடையில் வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

இப்போ வால்மார்ட் வந்தாலும் என்ன செய்வார்கள், இவர்களின் வாங்கும் நடவடிக்கையில் மாற்றம் வராது, பெரிய கடையா இருக்கேன்னு மாத மளிகையை ஒரு முறை போய் வாங்கிக்கொண்டு தினசரி முன்னர் போல முருகன் மளிகையே சரணம்னு போவார்கள்.எனவே முழுக்க சில்லரை வர்த்தகர்கள் வழக்கொழிய மாட்டார்கள், இப்போதுள்ள மார்க்கெட் ஷேரில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வால்மார்ட் போன்றவர்களுக்கு போகும்.

வால்மார்ட் இன்ன பிறவுக்கு முன்னர், ரிலையன்ஸ், மோர் என பல சூப்பர் மார்கெட்டுகள் வந்தாச்சு, அப்போதும் இப்படித்தான் அதிகமாக வாங்குவதென்றால் அங்கு போவார்கள், அதுவும் விலை கொஞ்சமாக இருக்கும் பொருளாக பார்த்து வாங்குவார்கள். இன்னொரு பொருள் வெளியில் விலை குறைவென்றால் அங்கு போய் வாங்க தயங்கமாட்டார்கள்.

ஆனால் மேலை நாட்டு மக்கள் ஒரு கடைக்குள் வந்தாச்சு , இன்னொரு பொருளுக்காக இன்னொரு கடைக்கு அலையணுமா என அங்கே வாங்கிவிடுவார்கள்.

இது தான் இந்திய நுகர்வோருக்கும், மேலை நாட்டு நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசம்.

பெருநகரங்களிள் தான் பெரிய சூப்பர் மார்கெட்டுகளுக்கு நிலைத்திருக்க கூடிய வகையில் வியாபாரம் நடக்கும்.

இதன் மூலம் நுகர்வோருக்கு என்ன பலன் என்றால், விலையை ஒப்பிட்டு வாங்க இன்னொரு கடை என்ற சாய்ஸ் கிடைக்கிறது.

தனிப்பட்ட இந்திய சில்லரை விற்பனைக்கடைகளாக இருப்பினும், அவை எல்லாம் ஒரே மாதிரி விலையை கடைப்பிடிப்பார்கள்.

அவற்றில் மொத்த விலைக்கடை,சில்லறை விலைக்கடை என இரண்டு வகையில் விலை வைப்பார்கள்.

மொத்த விலைக்கடையில் எல்லாம் ஒரு பொருளுக்கு என்ன விலையோ அதுவே ஊரெங்கும் இருக்கும், அதே போல சில்லறை விலைக்கடைகளில் எல்லாம் ஒரே போல இருக்கும். எனவே அந்த கடையில் கம்மியாக இருக்கும் என மாறிப்போவதற்கு இடமே இல்லை, இந்த வியாபார வலைக்கு மாற்றாக ஒன்று வந்தால் ஒழிய நுகர்வோருக்கு விலையில் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை.

இந்நிலையில் தான் அந்நிய சில்லரை வர்த்தகர்கள் வருகிறார்கள், அவர்கள் விலையில் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பினை நுகர்வோருக்கு அளிப்பார்கள், இதனால் மோனோபோலி உடையும், நுகர்வோருக்கு கொடுக்கும் காசுக்கு ஏற்ற பொருள் கிடைக்கும்.

எந்த ஒரு வணிக சூழலிலும் மோனோ போலி இருக்கவே கூடாது. இந்தியாவில் மோனோ போலி டிரேட் பிராக்டிஸ் ஆக்ட் என்ற ஒன்று உண்டு, ஒருவரே முழு சந்தையினை கட்டுப்படுத்தக்கூடாது, முடியாது, ஆனால் தனித்தனி கடைகள், என்றப்பெயரில் இந்தியாவில் இயங்கும் அங்காடிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு மோனோ போலி சாம்ராஜ்யத்தினை நடத்துவது நிதர்சனமான உண்மை.

இதற்கு அடிப்படையாக அமைவது சப்ளை செயின் என்ற அமைப்பினை ஒரு சிலரே கட்டுப்படுத்துவது தான்.

உதாரணமாக பூச்சி மசாலா என ஒன்றை பார்ப்போம்.

அவர்கள் , மசாலாவுக்கான மூலப்பொருட்கலை வாங்கி அரைத்து பாக்கெட்கள் தயாரிக்கிறார்கள், ஆனால் நுகர்வோருக்கு நேரடியாக விற்க முடியாது ,கடைகளுக்கு அனுப்ப வேண்டும், ஒவ்வொரு கடையாக போய் கேட்டால் என்ன சொல்வார்கள் என்றால்,

நாங்க , அரிசி ,பருப்பு, எண்ணை, புளி, மிளகாய், சோப்பு, ஷாம்பு என பல பொருட்களை மாவட்ட விநியோகஸ்தரிடம் வாங்குகிறோம், அவரே பேச்சி மசாலா என்றை ஒன்றை அனுப்புறார், அதை விட்டுவிட்டு உங்க கிட்டே மட்டும் ஒரு பொருளை வாங்க முடியாது என்பார்.

சரி கடைக்காரர்கிட்டே விற்பதை விட ,மாவட்ட விநியோகஸ்தரிடம் விற்கலாம் என போனால், அவரோ மேற்கண்ட எல்லாவற்றையும், மாநில விநியோகஸ்தரிடம் வாங்குகிறோம், அவர் அனுப்பும் சரக்கை தான் நாங்க வாங்கி விநியோகம் செய்ய முடியும் என்பார்கள்.

அப்படியே மாநில விநியோகஸ்தரை அணுகினால் அவர் சொல்வார் , பேச்சி மசாலா எங்களுக்கு 50% மார்ஜினில் தருகிறது எனவே நீங்க அதை விட அதிக மார்ஜினில் கொடுக்க வேண்டும் என்பார், அவ்ளோ மார்ஜின் கொடுத்தால் மஞ்சளை அறைத்து மஞ்சத்தூளா கொடுக்க முடியும், மரத்தூளை அறைத்து மஞ்சள் சாயம் கலந்து தான் கொடுக்க முடியும்.

அந்த மார்ஜினுக்கு ஒற்றுக்கொண்டு பொருளை சப்ளை செய்தால் கலப்படம் செய்வதை தவிர வேறு வழியேயில்லை.

இதுக்கு நடுவில் பேச்சி மசாலாவுக்கு போட்டியா பூச்சி மசலா விளம்பரம் வேற கொடுக்க வேண்டும்.எதாவது ஒரு முன்னால் நடிகையை கூப்பிட்டு வந்து , சமைக்கவே தெரியாத அவரை நான் பூச்சி மசாலாவை தான் சமையலுக்கு பயன்ப்படுத்துறேன் ,சுவையோ அபாராம் என கூசாமல் புழுகி விளம்பரம் எடுத்து மக்களையும் ஏமாற்ற வேண்டும்.

வால்மார்ட் வந்தா நாம என்ன சாப்பிடுகிறோம் என்பதை அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என சொல்கிறவர்கள் , இப்போதுள்ள நடைமுறையை என்னனு சொல்வார்கள் :-))

மேலும் தற்போதுள்ள சூழலில் கூட மக்கள் என்ன வாங்க வேண்டும் என்பதை எப்படி இந்திய வியாபாரிகள் வலையமைப்பு தீர்மானிக்கிறது, இதனால் எப்படி உற்பத்தியாளர்கள் தங்கள் பொருளை சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நிஜ வியாபார உதாரணம் மூலம் பார்க்கலாம்.

நிர்மா;




முனைவர்.கர்சான் பாய் படேல் என்ற வேதியலாளர், 1969 இல் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் 100 சதுர அடியுள்ள இடத்தில் தனது வேதியல் அறிவைக்கொண்டு , பாஸ்பேட் இல்லாத டிடெர்ஜெண்ட் பவுடரை உருவாக்கினார், அவர் அப்பொழுது குஜராத் சுரங்க துறையில் பணிப்புரிந்து வந்தார், சைக்கிளில் அலுவலகம் செல்லும் போது 10-15 பாக்கெட்டுகள் எடுத்து சென்று சில கடைகள், தனிநபர்கள் என விற்றுவிட்டு செல்வார்.

ஒரு கிலோ சலவைத்தூள் விலை 3.50 ரூபாய் தான் என்பதால் மக்கள் விரும்பி வாங்கினர், ஏன் எனில், அப்பொழுது பிரபலமான இந்துஸ்தான் லீவர்(இப்போ யுனிலீவர்) நிறுவனத்தின் சர்ப் சலவைத்தூள் கிலோ 15 ரூபாய் ஆகும்.

இதனால் குறுகிய காலத்தில் சுற்றுவட்டாரத்தில் புகழடையவே பல கடைகளும் ஆர்டர் கொடுக்க சில ஆண்டுகளில் தனித்தொழிற்சாலையே அமைத்து பல மாவட்டங்கள், மாநிலங்கள் என வியாபாரத்தினை விரிவாக்கினார்.

ஒரு கட்டத்தில் சர்ப்பின் விற்பனையை தாண்டி சென்றும் விட்டது நிர்மா, வருமான அடிப்படையில் நிர்மா குறைவாக இருந்தாலும் சலவைத்தூள் வால்யும் அடிப்படையில்  800,000 tonnes  விற்று உலகில் அதிகம் விற்பனையாகும் சலவைத்தூள் என 2004 இல் உலக சாதனைப்படைத்தது.

நிர்மாவின் வெற்றிக்கு காரணம், அடிமட்ட வருவாய் பிரிவினரை குறிவைத்து பொருளை தயாரித்தது,மேலும் அதற்கேற்ற விலை நிர்ணயம், அவ்விலைக்கு ஏற்ற தரம்.

சர்ப் 15 ரூ என்றாலும் அதற்கு முன்னர் போட்டியே இல்லை என்பதால் அடிமட்ட வருவாய் பிரிவினரும் வாங்க வேண்டிய சூழல்.எனவே அவர்களின் வருமானம் உயராத நிலையிலும் தேவைக்கு வாங்கி வந்தார்கள். கிலோ 3.50 ரூபாய்க்கு நிர்மா வரவும் மக்களும் ஆதரித்தார்கள்.

இந்துஸ்தான் லீவர் என்பது பெயரில் தான் இந்துஸ்தான், அது ஒரு ஆங்கில-ஹாலந்து கூட்டு பன்னாட்டு நிறுவனம், லண்டனிலும், ரோட்டர்டாமிலும் தலைமையகம் உண்டு.

இவர்கள் ஏற்கனவே விநியோக வலையமைப்பு, எண்ணற்ற பொருட்கள் விநியோகம் என வலுவான நிலையில் உள்ள வியாபார சக்தி, ஆனால் சலவைத்தூள் என்ற ஒரே தயாரிப்பை வைத்துக்கொண்டு வெற்றிகரமாக சந்தைப்படுத்த நிர்மாவால் அன்று சாத்தியமானது ,காரணம் என்ன?

வட இந்தியாவில் தனிப்பட்ட அங்காடிகள் பெரும்பாலும் வலையமைப்பாக விநியோகத்தில் சிக்கிக்கொள்வதில்லை. அதே சமயம் தென்னிந்தியாவில் மாநில அளவில் இருந்து ஒரு சிற்றூரில் உள்ள தனிப்பட்ட கடை வரையில் ஒரு வலை இயங்கிவந்தது. மேல மடக்கிட்டால் போதும் உங்க தயாரிப்பு சென்னையில் இருந்து கன்னியா குமரி வரைக்கும் பாயும்.

நிர்மாவினை சமாளிக்கவே வீல் என்ற ஒரு மலிவு விலை சலவைத்தூளை இந்துஸ்தான் அறிமுகப்படுத்தியது, மேலும் ரின் சலவைத்தூளின் விலையை குறைத்தது. சர்ப் அவர்களின் பிரிமியம் சலவைத்தூள் என்பதால் குறைக்கவில்லை.

ஆனால் அப்படியும் நிர்மாவின் கடைமட்ட வருவாய் பிரிவினரின் சலவைத்தூள் என்ற மார்க்கெட்டினை இந்துஸ்தான் லீவரால் அசைக்கவே முடியவில்லை. வட இந்தியா முழுக்க கொடிக்கட்டி பறந்த நிர்மாவால் தமிழ் நாட்டில் மட்டும் பெரிதாக தாக்கத்தினை உண்டாக்க முடியவில்லை, என்ன காரணம் எனில் நம்ம ஊரு மாநில விநியோகம் இந்துஸ்தான் லீவரின் தயாரிப்பான வீல் மற்றும், ரின்னுக்கு ஆதரவு காட்டியதே. அதற்கு அப்புறம் பிராக்டர் & கேம்பலின் டைட் என்ற மலிவு விலை சலவைத்தூளுக்கே நம்ம ஊரு விநியோக அமைப்பு பச்சைக்கொடி காட்டியது.

அவர்கள் சொல்லும் காரணம் இந்துஸ்தான் யுனிலீவர் பல தரப்பட்ட பொருட்களை தருகிறது, தொடர்ந்து அவர்கள் பொருட்களை வாங்குவதால் இதையும் வாங்குகிறோம் என்பதே.

ஆனால் இதே நிலை வட இந்தியாவில் இல்லையே,அங்கே எல்லாம் இந்துஸ்தான் லீவர்  இதே போல அடம்பிடிக்க முடியவில்லையே ஏன்?



இப்போ நிர்மாவிற்கு பின்னர் காரி(Ghari= குகை எனப்பொருள்!)என்ற சலவைத்தூள் கடைமட்ட வருவாய் பிரிவினரின் அபிமான சலவைத்தூள் ஆக இடம் பிடித்துள்ளது.ரோகித் என்ற கான்பூரை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாகும், இந்தாண்டு நிர்மா, வீல் ஆகியவற்றை பின் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டது. ஆனால் அந்த சலவைத்தூள் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் இங்குள்ள வியாபார வலையமைப்பே.



தமிழ்நாடு தவிர ஆந்திரா ,கர்நாடகா முதல் வட மாநிலங்களில் கொடிக்கட்டி பறக்கிறது காரி சலவைத்தூள், மேலும் அவர்களே எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் பாத்திரம்ம் துலக்கும் சோப்பும், வீனஸ் என்ற பெயரில் குளியல் சோப்பும் தயாரிக்கிறார்கள்.



வீனஸ் குளியல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் வித்யாபாலன். ரோகித் நிறுவனம் தங்கள் பொருட்களை மிக எளிதாக விளம்பரப்படுத்துவதில் கில்லாடிகள், மத்திய அரசின் ரயில்வே போக்குவரத்தின் இரயில்களில் விளம்பரப்படுத்த கட்டணம் குறைவே எனவே வடமாநிலங்களில் ஓடும் இரயில்களில் உள்ளும் புறமும் விளம்பரம் செய்ய உரிமம் வாங்கி குறிப்பிட்ட இரயில்கள் முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

Ghari Detergent Express (a summer special) in 2008 that ran between Lucknow and Guwahati

Pushpak Express that runs between Lucknow and Mumbai

 Swarna Jayanti Express (from Trivandrum to Hazrat Nizamuddin in Delhi)

ஆகிய இரயில்களில் விளம்பரம் செய்தார்கள் , பல ஆயிரம் கோடி விளம்பரம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களை ஆண்டுக்கு  வெறும் 30 கோடி விளம்பர செலவு செய்து காலி செய்துள்ளார்கள்.

இதற்கு காரணம் விலைக்குறைவாக வைத்தது கிலோ 52 ரூ.

மேலும் விலை குறைவாக வைத்தாலும் அங்காடிகளுக்கு நல்ல விகிதத்தில் கமிஷனும் கிடைக்க செய்தார்கள், 9% கமிஷன், தங்கள் லாபத்தினை குறைத்துக்கொண்டார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் விலையும் குறைப்பதில்லை, அங்காடிகளுக்கு கமிஷனும் அதிகம் கொடுக்க முன்வருவதில்லை, தங்கள் போட்டியாளர்களை ஒடுக்க வேண்டும் என்றால் மட்டுமே கூடுதல் கமிஷன் கொடுப்பார்கள், இல்லை எனில் இத்தனை பொருட்களை நாங்கள் சப்ளை செய்கிறோம், எனவே போட்டியாளர் பொருளை விற்க கூடாது என மிரட்டுவதே வழக்கம்.

எனவே மக்கள் என்ன வாங்க வேண்டும் என வால்மார்ட் வந்தால் தீர்மானித்து விடும் என புரளி கிளப்புவதெல்லாம் வெற்று புரளியே, இப்போ உள்ள நடைமுறையிலும் நாம் என்ன வாங்குகிறோம் என்பது நம் கையில் இல்லை :-))

நாம் இவற்றை எல்லாம் விரும்பியா வாங்குகிறோம்:

HIndustan Unilever:

தலைமையகம்: மும்பை,

யுனி லீவர் கம்பெனி:

நிறுவனர்கள்:  William Hesketh Lever (1851–1925) and his brother, James Darcy Lever (1854–1910)

லண்டன் மற்றும் ரோட்டர் டாம்,ஹாலந்து.

http://en.wikipedia.org/wiki/Hindustan_Unilever

லீவர் சகோதரர்கள் 1888 இல் மும்பையில் லீவர் பிரதர்ஸ் என்ற பெயரில் துக்கப்பட்டது ,ஆரம்பத்தில் சன்லைட் சோப்புகளை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து விற்றார்கள்.

பின்னர் கி.பி.1933 இல்  Lever Brothers India Limited என ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் 1956 இல் இந்திய பங்குதாரர்களையும் சேர்த்துக்கொண்டு இந்துஸ்தான் லீவர் நிறுவனம் ஆனது.ஆங்கிலோ டச் நிறுவனமான யுனிலீவருக்கு 52 % பங்குகள் உள்ளது.

HIndustan Unilever Products:

35 பிராண்டுகள், 70 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனம், மூன்றில் இரண்டு இந்தியர்கள் இந்துஸ்தான் யுனிலீவர் தயாரிப்பினை நுகர்கிறார்கள்.

Food brands:

Annapurna salt and atta
Bru coffee
Brooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea
Kissan squashes, ketchups, juices and jams
Lipton tea
Knorr soups & meal makers and soupy noodles
Kwality Wall's frozen dessert
Modern Bread, ready to eat chapattis and other bakery items
Homecare Brands [8]
ActiveWheel detergent
Cif Cream Cleaner
Comfort fabric softeners
Domex disinfectant/toilet cleaner
Rin detergents and bleach
Sunlight detergent and colour care
Surf Excel detergent and gentle wash
Vim dishwash
Magic – Water Saver [9][10]
Personal Care Brands: [11]
Aviance Beauty Solutions
Axe deodorant and aftershaving lotion and soap
LEVER Ayush Therapy ayurvedic health care and personal care products
Breeze beauty soap
Clear anti-dandruff hair products
Clinic Plus shampoo and oil
Close Up toothpaste
Dove skin cleansing & hair care range: bar, lotions, creams and anti-perspirant deodorants
Denim shaving products
Fair & Lovely skin-lightening products
Hamam
Lakmé beauty products and salons
Lifebuoy soaps and handwash range
Liril 2000 soap
Lux soap, body wash and deodorant
Pears soap
Pepsodent toothpaste
Pond's talcs and creams
Rexona soap
Sunsilk shampoo
Sure anti-perspirant
Vaseline petroleum jelly, skin care lotions
TRESemmé [12]
Water Purifier Brand:
Pureit Water Purifier

அனைத்துமே சர்வதேச பிராண்ட்கள் ,பல நாட்டிலும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது, இந்தியாவிலும் விற்பனையாகிறது .இவை  எல்லாம் நமக்கு ரொம்ப பிடித்தமான வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் :-))

-----------

The Procter & Gamble Company

தலைமையகம்: Cincinnati, Ohio, USA

நிறுவனர்கள்:
William Procter
James Gamble

http://en.wikipedia.org/wiki/Procter_%26_Gamble

William Procter மெழுகு வர்த்தி தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார்,
James Gamble என்பவர் சோப்பு தயாரித்து வந்தார், இருவருமே அயர்லாந்த்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்,

Alexander Norris,என்பவரின் அழகான பெண்கள் ஆன
Olivia and Elizabeth Norris.ஆகியோரை பிராக்டர் மற்றும் கேம்பில் மணந்து கொண்டனர், மாமனார் நோரிஸ் மாப்பிள்ளைகளை ஏன் தனியாக தொழில் செய்யுறிங்க ஒன்றாக செய்தால் லாபம் நல்லா வருமே என சொல்ல கி.பி 1857 ஆம் ஆண்டு The Procter & Gamble Company உதயமாயிற்று.

தயாரிப்புகள்:

Ace is a brand of laundry detergent/liquid available in numerous forms and scents.
Always/Whisper is a brand of feminine care products.
Ariel is a brand of laundry detergent/liquid available in numerous forms and scents.
Bold is a brand of laundry detergent/liquid.
Bounce is a brand of laundry products sold in the United States and Canada.
Bounty is a brand of paper towel sold in the United States and Canada.
Braun is a small-appliances manufacturer specializing in electric shavers, epilators, hair care appliances and blenders.
Cascade is a brand of dishwashing products.
Charmin is a brand of toilet paper sold in the United States, Canada, and Mexico.
CoverGirl is a brand of women's cosmetics.
Crest/Oral B is a brand of toothpaste and teeth-whitening products.
Dash is a brand of laundry detergent/liquid.
Dawn/Fairy is a brand of dishwashing detergent.[16]
Dolce & Gabbana is an Italian fashion house.
Downy/Lenor is a brand of fabric softener.
Duracell is a brand of batteries and flashlights.
Eukanuba is a brand of pet food.
Febreze/Ambi Pur is a brand of air fresheners.
Fixodent is a brand of air denture adhesives.
Fusion is a brand of men's wet shave razors.
Gain is a brand of laundry detergent, fabric softeners and liquid dish soap.
Gillette is a brand of safety razor and male grooming products.
Head & Shoulders is a brand of anti-dandruff shampoo and conditioners.
Herbal Essences is a brand of shampoo and conditioners.
Hugo Boss is a brand of fine fragrances.
Iams is a brand of pet food.
Luvs is a brand of baby diapers.
Mach3 is a brand of safety razor and male grooming products.
Max Factor is a brand of women's cosmetics.
Mister Clean is a brand of multi-purpose cleaner sold in the United States, Canada and Great Britain.
Olay is a brand of women's skin care products.
Old Spice is a brand of men's grooming products.
Oral-B is a brand of toothbrush, and oral care products.
Pampers is a brand of disposable diaper and other baby care products.
Pantene is a brand of hair care products (conditioners/styling aids).
Prestobarba/Blue is a brand of safety razor and male grooming products.
Prilosec is an over-the-counter drug.
Puffs is a brand of facial tissue.
Rejoice/Pert is a brand of hair care products (conditioners/styling aids).
Safeguard is a brand of soaps.
Secret(brand) is a female anti-perspirant brand.
SK-II is a brand of women's and men's skin care products.
Swiffer is a brand of house-cleaning products.
Tampax is a brand of feminine care products.
Tide is a brand of laundry detergent.
Venus is a brand female hair-removal products.
Vicks is an over the counter medication.
Wella is a brand name of hair care products (shampoo, conditioner, styling, hair color).

இவற்றில் பல இந்தியாவில் இறக்குமதியாகவோ, அல்லது தயாரித்தோ விற்கப்படுகிறது, நமக்கு என்ன தேவையோ அதை தானே வியாபாரிகள் கொடுக்கிறாங்க :-))
-----------------------
Johnson & Johnson

 நிறுவனர்கள்: Robert Wood Johnson,  James Wood Johnson and Edward Mead Johnson

தலைமையகம்:New Brunswick, New Jersey, United States.

http://en.wikipedia.org/wiki/Johnson_%26_Johnson

கி.பி 1886 இல் ஜோசப் லிஸ்டரின் தொற்று நீக்குதல் குறித்த பிரச்சாரத்தினால் கவரப்பட்டு மருத்துவ பொருட்கள், கிருமிநாசினி, என தயாரிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தினை ஆரம்பித்தார்கள்.பேன்ட்-எய்ட் எனப்படும் ஒட்டுப்பசையுடன் கூடிய பிளாஸ்டர் இவர்கள் கண்டுபிடிப்பே.

இவர்களுக்கு பல டஜன் நிறுவனங்களும், பிராண்டுகளும் உள்ளன,

டைலினால் என்ற மருத்தினால் சிலர் இறந்து ,பல ஆயிரம் குப்பிகள் திரும்ப பெறப்பட்டது ,அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய திரும்ப பெருதல் அதுவே, இது போல இன்னும் பல சம்பவங்களும் உண்டு.

தயாரிப்புகள்:

Acuvue
Actifed
Aveeno
Bactidol
Band-Aid
Benadryl
Benecol
Bengay
Benylin
Bonamine
Calpol
Calcough
Calprofen
Calgel
Calrub
Carefree
Clean & Clear
Coach
Coach Professional
Coach Sport
Codral
Combantrin
Compeed
Conceptrol
Cortaid
Cortef
Delfen
Desitin
Dolormin
E.P.T.
Efferdent
Euthymol
First-Aid
Gynol
Healthy Woman
Imodium
Johnson's Baby
Johnson & Johnson Red Cross
Jontex
K-Y
Lactaid
Listerine
Listermint
Lubriderm
Meds[39]
Micatin
Monistat
Micralax
Migraleve
Modess[39]
Motrin
Motrin Children
Myadec
Mylanta
Nasalcrom
Neko
Neosporin
Neutrogena
Nicoderm
Nicorette
Nizoral
Nu-Gauze
O.B.
OneTouch
Pediacare
Penaten
Pepcid
Pepcid AC
Polysporin
Ponstan
Priligy
Provin
Quantrel
REACH
Reactine
Regaine
Rembrandt
Remicade
RoC
Rogaine
Rolaids
Simply Sleep
Simponi
Sinutab
Splenda
Stayfree
Steri-Pad
Stim-u-dent
Sudacare
Sudafed
Tucks Pads
Tylenol
Tylenol Baby
Tylenol Children
Ultracet
Vania
Visine
Zyrtec


--------------------
 Nestlé:

தலைமையகம்:Vevey, Switzerland

http://en.wikipedia.org/wiki/Nestl%C3%A9

கி.பி 1905 இல் Henri Nestlé, வின் சாக்கலேட் நிறுவனமும்,Charles Page, George Page ஆகியோரின் ஆன்க்லோ சுவிஸ் பால் நிறுவனமும் இணைந்து உருவானது. உலகம் முழுக்க கிளைகள் உள்ளது.

தயாரிப்புகள்:

Nespresso, Nescafé, KitKat, Smarties, Nesquik, Stouffer's, Vittel, and Maggi.

 L'Oréal, the world's largest cosmetics company இன் முக்கிய பங்குதாரர்கள்.
---------------

சில்லரை வர்த்தகத்தில் அந்நியர்கள் வந்து நமது நுகர்வு அமைப்பை மாற்றிவிடப்போவதில்லை, ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து வழங்குவதில் அந்நிய முதலீட்டின் கையே ஓங்கியுள்ளது. அவை எல்லாம் தரமானது என்றும் சொல்லிவிட முடியாது ,பல நாட்டிலும் கண்டனங்களுக்கு ஆளானவையே, ஆனால் அவற்றை இன்றும் வாங்கி விற்பது நம்ம ஊர் சுதேச வியாபாரிகளே, அவற்றின் தரம் குறித்தோ விற்பனைக்கு பிந்தைய சேவை குறைப்பாடு குறித்தோ நாம் கேள்வி எதுவும் கேட்டுவிட முடியாது.

பூச்சி பிடித்த கடலை பருப்பை விற்றாலும் வாங்கித்தான் ஆக வேண்டும் ,போய் கேட்டால் உடனே மாற்றி தரவும் மாட்டார்கள். அனைவராலும் நுகர்வோர் கோர்ட்டுக்கு அலையவும் முடியாது.

மேலும் இப்போது உள்ள சில்லரை வணிக முறையில் ,நுகர்வோருக்கும் நியாய விலை, தரம் என எவ்வித உத்தரவாதமும் இல்லை, உற்பத்தியாளர்கள், மற்றும் விவசாயிகளுக்கும் பொருட்கள் விலையாக உத்திரவாதமோ, அல்லது சீரான கொள்முதலோ சாத்தியமில்லாமலிருக்கிறது.

அடுத்தப்பதிவில் விவசாய கொள்முதல், மற்றும் இந்திய தயாரிப்புகள் எவ்வாறு பின் தள்ளப்படுகிறது, உற்பத்தி செய்தும் விரயம் ஆவதையும்,  தரத்திற்கு உத்திரவாதமில்லாமல் நுகர்வோரின் பணம் தேவையில்லாமல் சுரண்டப்படுவதையும் காணலாம்.

தொடரும்...

_________________

பின்குறிப்பு:


தகவல் மற்றும் படங்கள்,

எகனாமிக்ஸ் டைம்ஸ், இந்து,விக்கி ,கூகிள் மற்றும்,

http://strategicmoves.wordpress.com/2011/01/04/ghari-detergent-did-the-nirma-act/

இணைய தளங்கள்,நன்றி!
--------------------------