Sunday, May 28, 2006

காத்திருத்தலே தொழிலாய்....




உயிர் பிரிந்த பின்னும்

சுவாசித்திருப்பேன் உன் நினைவில்!

உதிர்ந்த பின்னும்

மணம் வீசும் உதிரிப்பூக்களைப் போல !

கனவென்று தெரிந்த பின்னும்

கலையாதிருக்க வேண்டினேன்!

காற்றில் வரைந்த ஓவியத்தை

கண்களில் சுமந்து நின்றேன்!

ஓவியம் உயிராகி வருமென

காத்திருந்தேன்...

காத்திருத்தலே தொழிலாய்ப் போனது !

11 comments:

Unknown said...

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ?

சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

வாங்க முதல் ஆளா பின்னூட்டம் போட்டு இருக்கிங்க நன்றி! ஆனா கவிதைலே சொல்லி இருக்கிங்க(அருமையான வார்த்தை விளையாட்டு,துள்ளி விளையாடுது தமிழ் ) ஏதோ ஒரு விஷயம் மறைந்து இருக்கா போல தெரியுதே! நான் ஒரு வெண்குழல் விளக்கு விளக்கி சொன்னா தான் புரியும் :-))

Unknown said...

இல்லைங்க வவ்வால்,

என்னை பொறுத்தவரை பிரிந்த காதலை நெஞ்சில் சுமந்து வாழ்வது வீண்.இம்மாதிரி சமயங்களில் சோகமே சுகமாக தோன்றும்.ஆனால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.ஒரு தரம் தான் வாழ்கிறோம்.அதை ஏன் வீணாக்க வேண்டும்?

வவ்வால் said...

வாங்க செல்வன் !

ஆகா விட்ட என்னை ஒரு தேவதாஸ் ஆக்கி கைல ஒரு நாய்குட்டியும் தந்துடுவிங்க போல இருக்கே! எல்லாம் கற்பனை தானுங்க. வேணும்னா ஒரு டிஸ்கிளைமர் போட்டுறலாம் கவிதையில் வரும் அனைத்தும் கற்பனையேனு :-))

Unknown said...

உங்களை சொல்லலைங்க வவ்வால்

இந்த மாதிரி வாழும் நிறைய ஆட்கள் இருக்கின்றனர்.கவிதையை படித்ததும் அவர்கள் ஞாபகம் வந்துவிட்டது

வவ்வால் said...

ஒகோ நல்ல வேளை செல்வன்! ம்ம் சிலருக்கு காதல் மலர் போல சிலருகு செடி போலனு விக்கிரமன் படத்து உச்சகட்ட காட்சி வசனம் பேசுவாங்க ,உணர்வுகள், சிக்கலானது , அவங்க கோணத்தில பார்த்தா சரினு தோணலாம்,பார்க்கும் பார்வைல இருக்கு எல்லாம்!

வவ்வால் said...

சிலரை நினைவுப்படுத்தும் அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கா எனது கவிதை.பரவாயில்லையே நான் கூட நல்லா எழுத ஆரம்பிசுட்டேன் போல இருக்கு செல்வன் :-))

Unknown said...

உங்களுக்கு அருமையா கவிதை எழுத வருது வவ்வால்.It took me back to my college days.

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தெம்பூட்டும் பேச்சு!

நரியா said...

வணக்கம் வவ்வால்,

//கணவென்று தெரிந்த பின்னும்

கலையாதிருக்க வேண்டினேன்!//

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய சந்தோஷ கவிதைகளையும் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன்.

நன்றி,
நரியா

வவ்வால் said...

வாங்க நரியா ,நன்றி,வணக்கம்!

நமக்கு சந்தோஷம் துக்கம் என பாகு பாடு இல்லை.உணர்வு எப்படியோ அதை எழுத்தில் கொண்டு வர முயற்சிப்பேன்.