Thursday, May 24, 2012

பங்கு சந்தையால் பயனடைவது யார்?




பங்கு சந்தைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவை என பொதுவான கருத்துண்டு,ஆனால் அதில் நடப்பது என்னமோ யூகங்களின் அடிப்படையிலான சூதாட்டமே, மேலும் பல்லாயிரங்கோடிகள் பங்கு வர்த்தகத்தில் புழங்கினாலும் அதன் பலன் யாருக்கு போய் சேருகிறது,சாமனிய மனிதனுக்கு அதனால் பலன் உண்டா என்பதையெல்லாம் அலசும் நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்.அனைத்தும் வாசிப்பின் அடிப்படையில் உருவான எனது சொந்த பார்வையே,பிழை இருக்கலாம்,இல்லாமலும் போகலாம் ,மாற்றுக்கருத்து இருப்பின் கூறலாம்.

பங்கு சந்தையின் பலாபலன்களை புரிந்து கொள்ள ஒரு பணக்கார தொழிலதிபர், ஒரு சிறு தொழில் செய்பவர் ஆகிய இருவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

முதலில் குப்பன் எனும் சிறு தொழில் செய்பவரைப் பார்ப்போம்,

குப்பன் ஒரு தேநீர்க்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார்,அவரது வாழ் நாள் லட்சியம் சொந்தமாக தேநீர் கடை ஆரம்பிப்பதே.உழைப்பில் கொஞ்சம் சேமிப்பு இருக்கு அதனுடன் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும் கடை போட்டுவிடலாம் என்ற நிலை.

மேற்கொண்டு நிதிக்காக அனைத்து வங்கிகளுக்கும் படை எடுத்து பார்க்கிறார்,கஜானா திறப்பேனா என அடம் பிடிக்கிறது. வேறு வழி இல்லாமல் கந்து வட்டி கந்தனிடம் 50 ஆயிரம் வட்டிக்கு வாங்கி, கையில் உள்ளப்பணம் ,மனைவி நகை எல்லாம் அடகுவைத்து நிதி திரட்டிவிடுகிறார்.

கடைக்கு இடம் தேடியலைந்து ஒருவழியாக பிடித்து ,அங்கு கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லை என ,வண்டியில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்து ,பல முறை கார்ப்பரேஷன் அலுவலத்துக்கு அலைந்து,கடைசியில் லஞ்சம் கொடுத்து கடைக்கு அனுமதி வாங்கி ஒருவழியாக தேநீர்க்கடையை ஆரம்பித்து விடுகிறார்.

வரும் வருமானம் எல்லாம் வட்டிக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக போய்விடுகிறது.மேற்கொண்டு கடையை விரிவுப்படுத்த நிதி இல்லை என்று ரொம்ப டைட்டாக ஓடுது வியாபாரம்.

இப்போது பணக்கார தொழிலதிபர் ஜூனியர் கும்பானி என்பவரைப் பார்ப்போம், பணக்கார குடும்பத்தில் தங்க ஸ்பூனோட பொறந்தவர்,ஆனாலும் சொந்தமாக ஒரு வியாபாரம் செய்யணும் என சுமார் ஒரு கோடி முதலீட்டில் ஒரு தேயிலைத்தூள் நிறுவனம் ஆரம்பிக்க நினைக்கிறார்.

இவர் இடம் எல்லாம் தேடவில்லை, ஆரம்பிக்க அனுமதி கேட்டதும் அரசே தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கொடுத்து விடுகிறது,மேலும் தடையில்லா மின்சாரம், குடிநீர் எல்லாம் கொடுக்கிறோம், கூடவே 7 ஆண்டுக்கு 100 சதவீத வரிவிலக்கு எல்லாம் சொல்லி தொழிலை துவங்க ஊக்குவிக்கிறது அரசு.

கும்பானியும் தொழிற்சாலை ஆரம்பித்து ஊட்டியில் பச்சை தேயிலையை கிலோ 20 ரூக்கு வாங்கி வந்து அரைத்து பொடியாக ஒரு கிலோ 300 என சல்லீசாக கொளை லாபத்தில் விற்கிறார், அந்த தேயிலைக்கு ஃப்ரீரோசஸ்னு அழகா பேரும் வச்சுக்கிறார்(ரோசாவுக்கும் டீக்கும் என்னையா சம்பந்தம்?)

பேரு மட்டும் வச்சாப்போதுமா ,அதை விளம்பரப்படுத்த ,ஃபிரிஷா என்ற கோலிவுட்/பாலிவுட் நடிகையை வச்சு விளம்பரம் எடுத்து விடுறார், அந்தம்மணியும் வாங்குன காசுக்கு வஞ்சணையில்லாம தம்மாத்துண்டு துணிய உடுத்திக்கிட்டு வந்து என் மேனி எழிலுக்கு காரணம் ஃப்ரிரோசஸ் டீ தான் ??!! சொல்லுது.

மேலும் உங்களுக்கு ஏன் ஃபிரிரோசஸ் புடிக்கும்னு இந்த நம்பருக்கு கால் செய்து சொல்லுங்கன்னு கொஞ்சலா சொன்னதும் ,ஒரு நிமிடத்துக்கு 10 ரூபா புடுங்கிடுவான்னு தெரியாம பல ரசிகக்கண்மணிகள் கால் செய்து ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டு பூரிப்பது தனிக்கதை ;-))

பிரிஷா குடிச்ச டீயத்தான் !!?? குடிப்பேன்னு மக்களும் போட்டிப்போட்டு ஃபிரிரோசஸ் டீத்தூளை வாங்கி குடிக்கவே கும்பானிக்கும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது ,நல்ல லாபமும் வருது ,வராதா பின்ன 20 ரூ டீத்தூளை 300 ரூனு வித்தா ?

நம்ம டீக்கடை குப்பன் கூட பிரிரோசஸ் டீத்தூளை தான் வாங்குறார்னா பார்த்துக்கோங்க.

இப்படியே ஒரு மூன்று ஆண்டுகள் ஓடுது, கும்பானி அவரோட ஃபிரீரோசஸ் டீக்கம்பெனிய பங்கு சந்தையில் இறக்குறார், ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தை நிதி தணிக்கை மற்றும், மதிப்பீடு நிறுவனங்கள் 100 கோடினு மதிப்பீடு செய்கிறது.அது எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது அதான் சந்தை மதிப்பு செய்வது என்ற பொருளாதார நிபுணத்துவம் :-))

ஒரு பங்கு பத்து ரூ என்பதை புக் பில்டிங் முறையில 120 ரூ என மதிப்பிடப்பட்டு ஐபிஓ வெளியிடப்படுகிறது,இதற்கென "lead run book managers" என book building process செய்ய தனி அமைப்புகள் இருக்கு, கமிஷன் வாங்கிக்கிட்டு ,வேலைய கச்சிதமா முடிச்சுக்கொடுப்பாங்க. மக்களும் போட்டிப்போட்டு வாங்குறாங்க. இப்போ போட்டக்காசை விட பல மடங்கு கும்பானிக்கு திரும்ப கிடைச்டுச்சு, இனிமேல் டீத்தூளை விற்கவில்லை என்றாலும் கவலையே இல்லை.

இங்கே குப்பனின் நிலை என்னாச்சுனு பார்த்தா அவரோ இன்னமும் மூன்று ஆண்டுக்கு முன்னர் வாங்கிய 50 ஆயிரம் கடனையே அடைக்க முடியாமல், கந்து வட்டி கந்தனை பார்த்தாலே தலையில் முக்காடுப்போட்டுக்கொண்டு ஓடிவிடுகிற நிலையில் இருக்கார்.

கும்பானிக்கு வியாபாரம் நல்லா போகுது, நிறைய சம்பாதிக்கிறார் ,அப்போ அரசுக்கும் நிறைய வருமான வரிக்கட்டுவார்னு நினைப்பீங்க தானே அதுவும் இல்லை, அப்போ வரியைக்கட்டாமல் ஏய்க்கிறாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது ஆனால் அரசாங்கமே சலுகை கொடுக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கும்பானியோட சம்பளம்னு எதுவும் காட்டிக்க மாட்டார்,அப்படியே காட்டினாலும் அது சொற்ப தொகையா இருக்கும். அவருக்கு வரும் வருமானம் அவரது நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மூலம் வரும் டிவிடென்ட் வருமானம் எனக்காட்டுவார்,அப்படிக்காட்டினால் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் அடிப்படையில் வரிப்போடுவாங்க,

வழக்கமான வருமான வரி விகிதம் ஆனது,

2 லட்சம் வரை - வரி இல்லை,

2-5 லட்சம்-10%

5-8லட்சம் வரை-20%

8 லட்சத்திற்கு மேல் 30% வரி ஆகும்.

ஆனால் தொழிலதிபர்கள் ,பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஆகியோர் லாங்க் டெர்ம் கேபிட்டல் கெயின் டாக்ஸ் என்ற வகையில் ஒரே விகிதமாக 20% வரிக்கட்டினாலே போதும், அந்தப்பணத்தையும் ,நிறுவனத்தின் பொது வருமானத்தில் இருந்து கட்டிடுவாங்க,அப்படித்தான் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் விதி இருக்கு.

இப்போ டீக்கடை குப்பனுக்கே வியாபாரம் நல்லா சூடுப்பிடிச்சு நல்ல லாபம் வருதுனு வச்சுக்கோங்க, அவருக்கு ஆண்டு வருமானம் 10 லட்சத்தினை தாண்டிவிட்டால் போதும் 30% வரிக்கட்ட சொல்லுவாங்க.ஏன் எனில் அவர் பங்கு சந்தையில் இல்லை என்பதாலே அப்படி.

குப்பனுக்கு மட்டுமில்லை நாம் அனைவருக்குமே அப்படியான வருமான வரி விகிதம் தான்.

இதனை எப்படி சொல்கிறார்கள் என்றால் உழைப்பின் மூலம் வரும் வருமானத்திற்கு அதிக வரியும் ,மூல தனத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு குறைவான வரியாம்.

இப்படிலாம் நடக்குதா என நீங்கள் நினைக்கலாம், கடந்த ஆண்டு இந்தியாவில் அதிக வருமான வரிக்கட்டியது உலகின் முன்னணி இந்திய பணக்காரர் ஆன அம்பானிகள் அல்ல ,ஒடிஷாவை சேர்ந்த ஒரு இரும்பு தாது சுரங்க அதிபரே ஆவார், 95 கோடி ரூ வருமான வரிக்கட்டி சாதனைப்படைத்துள்ளார். மேலும் முதல் மூன்று இடங்களும் ஒடிசா இரும்பு தாது அதிபர்களுக்கே போய்விட்டது.

செய்திக்கான சுட்டி:


இதை ஏதோ நான் பங்கு சந்தை, மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது ஏதோ கடுப்பில் சொல்கிறேன் என நினைக்கலாம் சிலர், ஆனால் இதை எல்லாம் சொன்னது பங்கு சந்தையின் குரு என சொல்லப்படும் வாரென் பஃபெட் ஆவார், நான் இந்தியாவுக்கு ஏற்றாப்போல ஒரு உதாரணக்கதைய மட்டுமே சொன்னேன் :-))

வாரன் பஃபெட் கட்டுரை:


மேலும் அவர் பெரும்பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும், என்னிடமும் வசூலித்துக்கொள்ளுங்கள் என வெளிப்படையாக எழுதியுள்ளார். சுட்டியில் சென்று முழுவதும் படிக்கவும்.

ஆனால் இந்தியாவிலோ இப்படி பேசக்கூட ஒருவரும் தயாரில்லை, எப்படி எல்லாம் வரிக்கட்டாமல் தவிர்க்கலாம் என பல திட்டங்கள் போடுகிறார்கள், அதற்கு மன்னு மோகன் அரசும் பலமாக ஒத்துழைக்கிறது.

அப்படி தொழிலதிபர்களுக்கு சாதகமாக போட்ட திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம், அவற்றில் ஏகப்பட்ட சலுகைகள்,

#முதலீட்டுக்கு 100% வருமான வரி விலக்கு.

#உற்பத்தி பொருளுக்கு, லாபத்திற்கு, முதல் 7 ஆண்டுகளுக்கு 100% வரிவிலக்கு பின்னர் ,25%,அப்புறம் 50% என ,மொத்தம் 15 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை.

#பத்திரப்பதிவு, முத்திரை தாள் கட்டணம் இல்லை.

# மறு விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்கும் வரி இல்லை.

உ.ம்: சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஏக்கர் இடம் இருக்கு,ஆரம்பத்தில் குறைவான விலைக்கு வாங்கிய இடத்தை சில ஆண்டுகளுக்கு பின்னர் அதில் ஒரு ஏக்கரை அதிக விலைக்கு விற்றால் அதற்கு வரி கிடையாது.

சாதாரண குடிமக்கள் அப்படி தங்கள் இடத்தினை விற்று லாபம் சம்பாதித்தால் கேபிட்டல் கெயின் டாக்ஸ் எனக்கட்ட வேண்டும்.

# வெளியில் இருக்கும் துணை நிறுவனங்களில் இருந்து பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் விற்பனை வரி,சேவை வரி இல்லை.

#500 மில்லியன் டாலர் வரை வெளிநாட்டு நிதியமைப்புகளிடம் கடன் பெற அனுமதி பெற வேண்டியது இல்லை.

இப்படிப்பல சலுகைகள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் வேலை வாய்ப்பையும்,உற்பத்தியை பெருக்க தானே அரசு செய்கிறது எனலாம், ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதற்கு அமெரிக்காவே உதாரணம்.ஏன் எனில் இந்த திட்டத்தையே அமெரிக்காவைப்பார்த்து தான் மன்னு மோகன் காப்பி அடித்துள்ளார்.

அமெரிக்காவில் 60-70 களிலேயே இத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டது.நிறைய உற்பத்தி ஆனது என்னமோ உண்மை தான் ஆனால் இப்போது என்ன ஆனது என்றால் குமிழி உடைந்து விட்டது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

ஏன் எனில் 1000 பேர் செய்ய வேண்டிய வேலையை நவீன எந்திரங்கள்,கணினி என வைத்து 100 பேரைக்கொண்டே இத்தகைய சிறப்பு தொழிற்சாலைகளில் முடித்து விடுவதால் ஆரம்பத்தில் சில வேலைவாய்ப்புகள் உருவானாலும் நீண்டக்கால நோக்கில் வேலை வாய்ப்பின்மையே உருவாக்குகிறது.

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறார், ஏழை மேலும் பரம ஏழை ஆகிறான்!இதுவே நவீன பொருளாதார சித்தாந்தத்தின் பலன்!

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

நியுயார்க் டைம்ஸ்,டைம்ஸ் ஆப் இன்டியா,கூகிள், ரெடிப் இணைய தளங்கள்,நன்றி!




24 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.பெரும் பணக்காரர்கள் தொழில் தொடங்க சலுகைகள்,வரி ஏய்ப்பு செய்ய பங்கு சந்தை என்பது தெளிவாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட பணக்காரர்களை ஆதரிக்கும் அரசு மட்டுமே ஆள் முடியும் என்பதும் உண்மை. அரசு அமைக்க பணம் கொடுப்பவனுக்கு அரசியல்வாதி செய்யும் பதில் மொய்.[மொய்க்கு மொய் செய்து சீர் செய்கிறார்கள்]

இதை பற்றி விவாதிக்காமல் இலவசம் ,இட ஒதுக்கீடு,இனம்,மொழி என்று எதையாவது பேசி ஓட்டை வாங்கி பணக்காரர்களுக்கு நல்லது செய்யும் அரசியல்வாதிகள் உண்மையிலேயே கில்லாடிகள்தான்.

நன்றி

naren said...

பங்குச் சந்தையால் பயனடைவது யார்? என்ற மில்லியன் டாலர்(பெட்ரோல்) கேள்விக்கான...விடை: நம்ம அரசியல்வாதிகள் தான். எப்படி.

எ.கா. பழமொழி குடிமகன் ( அதாங்க opposite of கனிமொழி ராஜா) ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறு கோடி ரூபாய் (எத்தனை சைபருங்க - ஜீரோ ஸ்பெஷலிஷ்ட் கபில் சிபல் தான் பதில் சொல்ல வேண்டு)கருப்பு பணம் வைத்துள்ளார்(கள்) என வைத்துக்கொள்வோம். அதை வெள்ளையாக்குணும்.

நேரா போங்க மும்பைக்கு. புடிங்க பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் கம்பெனியின் முதலாளியான நல்ல ஒரு குஜராத்தி தொழிலதிபரை, அவர் நல்ல ஒரு குஜராத்தி பங்கு வர்த்தகரை பிடிப்பார். கம்பெனியின் ஷேர் கம்மியான ரேட்டில் இருகும் போது வாங்குங்க- வெள்ளை பணத்தை கொண்டு. ஒரு இரண்டு வருடம் வெயிட் பண்ணுங்க. அப்பத்தான் capital gain tax கிடைக்கும். பிறகு மெதுவாக குஜராத்தி நண்பர்கள் ஷேர் விலையை ஏத்துவார்கள். mauritius ல் ஆரம்பித்த (கருப்பு பணத்தால்) டூபாக்கூர் கம்பெனியின் P-notes மூலம் ஷேர் விலை உச்சத்தில் இருக்கும்போது அதாவது உங்களுக்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறு கோடி ரூபாய் தேறுமாறு வாங்குமாறு பாத்துக்கொள்ளுங்க. இப்படி mauritiusல் பதுக்கியிருந்த உங்கள் கருப்பு பணம் திரும்ப உங்க கைக்கு வெள்ளையாக வந்துவிட்டது. உங்களுக்கு கருப்பு வெள்ளையாகிவிட்டது, அதிலிருந்து சில கோடிகளை குஜராத்திகளுக்கு கமிஷணை சந்தோசமாக அள்ளி விடுங்க. தமிழ்நாட்டு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவாங்க.

இதைவிட சூப்பர் ஐடியா ஒண்ணு இருக்கு...

http://www.openthemagazine.com/article/business/the-art-of-borrowing
இதையும் படித்து பயன் பெறுங்க.


///கும்பானியும் தொழிற்சாலை ஆரம்பித்து ஊட்டியில் பச்சை தேயிலையை கிலோ 20 ரூக்கு வாங்கி வந்து அரைத்து பொடியாக ஒரு கிலோ 300 என சல்லீசாக கொள்லை லாபத்தில் விற்கிறார்,///

எப்படி கரெக்டா சொன்னீங்க. அங்கன ஏதாவது வேலை பாக்கரீங்க.

இது நம்ப கும்பானியால் தான் முடியும், நம்ம கந்தசாமியால் முடியாது.

Thomas Ruban said...

//பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறார், ஏழை மேலும் பரம ஏழை ஆகிறான்!இதுவே நவீன பொருளாதார சித்தாந்தத்தின் பலன்//

நூறு சதவிகிதம் மறுக்கமுடியாத உண்மை.

அருமையான பதிவு நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் குறித்து எளிமையான முறையில் விளக்கியமைக்கு நன்றி! பங்குச் சந்தையில் ஷேர் உயர்வதும் தாழ்வதும் கார்பரேட் நிறுவனங்களே உண்டாக்கும் மாய வேலைகள்.

ராஜ நடராஜன் said...

என்னது!டீக்கும் ரோஜாவுக்கும் என்ன சம்பந்தமா?ரோஜா இழதகளை காய வச்சு குடிச்சா அதுவும் ஒரு டீதான் தெரியுமில்ல!

எனக்கு பங்கு வர்த்தகம் அ கூட தெரியாது.யார்கிட்டயாவது காசு கொடுத்தாவது சூதாட விடலாம்ன்னு நினைச்சும் என்னை கன்வின்ஸ் செய்றமாதிரி ஒருத்தரும் மாட்ட மாட்டேங்குறாங்க.அதனாலேயே ரீசசன் வரைக்கும் தப்பித்து விட்டேன்.

ராஜ நடராஜன் said...

நமக்கு புரியாத விசயத்தை ஆஹா!அருமைன்னு சொல்வதுதானே ப.பா.

நானும் ஒரு ஆஹா அருமை சொல்லிக்கிறேன்.ஆனாலும் வரி,வாரன் பொபர்ட்க்கும் முன்னால் வரை டீக்கடையும்,ரோசாவும்,ப்ரிசாவும் ரொம்ப.....வே புரியுது.

ராஜ நடராஜன் said...

பங்கு சந்தையில் குஜராத்திகள் அதிகம் இருக்கலாம் மற்றும் தில்லுமுல்லுகள் செய்யலாம்.உதாரணம் ஹர்சத் மேத்தா.அவ்வளவு தூரம் ஏன் போகனும்?நானும் கூட தங்கியிருந்த பேச்சலர் நண்பர்களும் மாச சம்பளத்துக்கு லோ லோன்னு பாந்தரா,கொலாபா,சாந்தாகுருஷ்ன்னு பஸ்ஸையோ ரயிலையோ பிடிச்சு விலேபார்லேயிலிருந்து ஓடினா கூட தங்கியிருந்த குஜராத்தி எங்களைப்போலவே குளித்து முடித்து விக்டோரியா டெர்மினல் போயிட்டு சாயங்காலம் மப்போட பீடா போட்டுகிட்டு வந்து பாக்க்டெலருந்து சில்லறை நோட்டுகளை படுக்கையில் போட்டு கொட்டிவார் பாருங்க மனுசன் நல்லா சம்பாதிக்கிறாரேன்னு ங்ங்கேன்னு பார்க்கறதோட சரி.இப்பத்தான் புரியுது இந்த வியாபரம் ப்ரிஷா வரைக்கும் வளர்ந்திருக்குன்னு.

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

பணக்காரர்கள் ஏன் கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவதில்லை தெரியுமா? யார் ஆட்சிக்கு வந்தாலும் அது அவர்களின் ஆட்சிப்போல் என்பதாலேயே. பணம்+அரசியல்= ஆட்சி!

இதில் அரசியல் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்,ஆனால் பணம் படைத்தவர் இடம் நிலையானது.

பொது ஜனமாவது யாருக்கோ ஓட்டுப்போட்டு தானே ஆகணும் என போட்டு வைக்குது,ஆனால் சில அரசியல் அல்லக்கைகள் தீவிர விசுவாசமாக அரசியல்வாதி எது செய்தாலும் சரினு சொல்லிக்கொண்டு அலையுதுங்க,இப்படிப்பட்ட அடிமைகளை உருவாக்க தெரிஞ்ச அரசியல்வாதிகள் கில்லாடிங்க தான் :-))

-------------

நரேன்,

வாரும்,வணக்கம், நன்றி!

அரசியல்வாதிகள் பலனடைவது உண்மை தான்,

நீங்க சொன்ன வழிமுறை தான் ஆனால் சொல்லியிருப்பது கொக்கு தலை வெண்ணை. அப்படி இல்லாமல் நேரடியாக மொரிஷியஸ்,செயிண்ட்.கிட்ஸ்ல கணக்குக்கு பணம் அனுப்பி, பின்னர் அதை அந்நிய முதலீடாக பங்கில் போட்டு பின்னர் விற்று பணம் எடுத்துவிடுவார்கள். இதனால் தான் அடிக்கடி பங்கு சந்தை சரிந்து பின் எழும். கேட்டா கரெக்‌ஷண் சொல்லிப்பாங்க, எல்லாத்துக்கும் ஒரு பேரு வச்சிடுறாங்க உத்தம ராசாக்கள் :-))

நீங்கள் சொல்வது போல பங்குகள் விலை ஏறும் வரைக்காத்திருக்க மாட்டார்கள்,அப்படி செய்தால் முதலுக்கே மோசம் ஆகிவிடும்.

இதை விட இன்னொரு வழி இருக்கு இம்பெக்ஸ் என்று நிறுவனம் நடத்துபவர்களைக்கேட்டால் சொல்லுவாங்க, தெரிஞ்சவங்க யாராவது இருந்தா கேட்டுப்பாருங்க. இம்முறையில் ரொம்ப பெரிய தொகை கைமாறாது ஆனால் இது கரண்ட் அக்கவுண்ட் போல அடிக்கடி பணம் கைமாறிக்கொண்டே இருக்கும்.

நீங்க போட்ட சுட்டி சமாச்சரம் தான் இப்போ சொல்லி இருப்பதும்,ஆனால் அதில் சொல்லி இருக்கும் வழி பழசு இப்போ , 3 ஆண்டு ஆனால் தான் பங்கில் வர முடியும், இல்லைனா , அந்நிய நேரடி முதலீடாக வாங்கணும். அவன்ங்க சும்மா தருவாங்களா?

தேயிலை ஏல முறையை நேரில் பார்த்து இருக்கேன்,ஊட்டியில் உபாசினு ஒரு தேயிலை கூட்டுறவு அமைப்பு இருக்கு அது மூலம் ஏலம் நடக்கும்,எல்லாம் புரோக்கர்கள் ராஜ்ஜியம் தான்.கேட்கிற விலைக்கு வித்துட்டு போகணும் தோட்டக்காரர்கள்.

-----------

ரூபன்,

வணக்கம்,நன்றி!

ஆமாம் காலங்காலமாக அதான் நிலைமை,அப்போ நிலச்சுவாந்தார்கள், இப்போ கார்ப்பரேட் கம்பெனிகள் அவ்வளவு தான் வித்தியாசம்.

-------
தி.த.இளங்கோ,

வணக்கம்,நன்றி!

வங்கியாளாரே எளிமையாக சொல்லிட்டேன் சொல்லும் போது சந்தோஷமாக இருக்கு. ரொம்ப சொல்லி குழப்பிடக்கூடாதுனு முடிந்தவரை பலவற்றை தவிர்த்துவிட்டேன்.

நேரடி அனுபவம் கொண்டவரான நீங்க இது போல சப்ஜெக்ட்களில் பதிவு போட்டிங்கன்னா அனைவருக்கும் உபயோகமா இருக்கும்.

நீங்க எளிமையா இருக்குன்னு சொன்னப்பிறகும் உங்களுக்கு பின்னாடி ஒருத்தர் ஒன்னுமே புரியலைனு சொல்லிக்கிட்டு இருக்கார் போய் அவரை கவனிக்கணும் :-))
--------

வவ்வால் said...

ராஜ்,

வணக்கம்,நன்றி!

ரோஜா, சாமந்திப்பூ இதுல எல்லாம் டீ போல ஒன்று தயாரிக்கிறாங்க என்பது தெரியும், ஆனால் அதை தேயிலையில் தயாரிக்கப்பட்ட டீக்கு ஏன் சொல்றாங்க என கேட்டேன்.

சென்னையில 25 வகையான வாசனை தேயிலைக்கிடைக்குது , ஒரு முறை மல்லிகைப்பூ தேயிலைனு!!?? ஒன்னு சொன்னாங்களேனு வாங்கினேன் குடிக்கவே முடியலை, வாங்கின தோஷத்துக்கு குடிச்சு வச்சேன் :-))

உங்களுக்கு முன்னரே தி.த.இளங்கோ எளிமையாக இருக்குனு சொன்னதைப்பார்க்கலையோ, ஆனாலும் புரியலைனு சொல்லிட்டு ஆஹா போட்ட பண்பாட்டுக்காவலர் தான் நீர் :-))

ரோசா,பிரிசான்னா புரியுதாம் :-))

---
அந்த குஜாராத்தி நண்பரை அப்பவே கொஞ்சம் தாஜா செய்திருந்தா ஒட்டகம் மேய்க்க போகாமலே அம்பானிக்கு பங்காளி ஆக்கியிருக்கலாம் :-))

குஜராத்தின்னு சொன்னாலும் மார்வாரிக்கு ஒன்னுவிட்ட வியாபார வகையான பனியாக்கள் தான் பங்குல்ல கிங்கு ஆக இருப்பாங்க. அம்பானிலாம் அந்த வகை தான். உலகம் அறிந்த பனியா என்றால் காந்தி தாத்தா தான் :-))

இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசியலில் கார்ப்பரேட்களின் பங்களிப்பை கொண்டு வந்த உத்தமரே அவர் தான்,அதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது.

Santhosh said...

நல்ல தெளிவான உபயோகமான கட்டுரை வாழ்த்துக்கள் !

முரட்டுக்காளை said...

பெரியோர்களே, நண்பர்களே, தாய்மார்களே,

பங்குச்சந்தையில் சூதாட்டம் நடப்பது குறித்தும், வரி ஏய்ப்பு குறித்தும், பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆவது குறித்தும் கவலைப்படும் தாங்கள், பங்குச்சந்தையை ஏன் ஒரு பணம் காய்க்கும் மரமாக நினைக்க கூடாது?
பங்குச்சந்தையில் முதலீட்டளானாக மட்டுமல்லாமல், பத்தாண்டுகளுக்கும் மேல் ஆய்ந்தறிபவனாகவும் இதை கேட்கிறேன். ஒரு முறை பங்கு தரகு நிறுவனம் ஒன்று தங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தது , நானும் சென்றேன். உங்களை போலவே எல்லாரும் நையாண்டி செய்தனரே தவிர, இந்த குப்பையில் மாணிக்கம் கிடைக்குமா என்று தேட முயற்சிக்கவே இல்லை. உலகப்புகழ் பெற்ற மெக்ரா ஹில் நிறுவனம் என்னை தங்களது பாடநூல் வெளியீட்டிற்கு முன் தொடர்பு கொண்டு நூலில் எழுதியது சரியா தவறா என்று கேட்டனர், நானும் எனக்கு தெரிந்த ஆலோசனையை வழங்கினேன். இதயத்தில் கோளாறு என்றால் ஈ.சீ. ஜி. எடுத்து அந்த துறை நிபுணரிடம் ஆலோசனை செய்வது நன்று. அதை விடுத்து சம்பந்தமில்லாமல் செய்தி வெளியிடுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பின் குறிப்பு:

உண்மையிலேயே எவ்வாறு பங்கு சந்தையில் பணம் பார்ப்பது என்பது குறித்து அறிய நிறைய இணைய தளங்களின் வாசிப்பும் , பகுப்பாய்வு மென்பொருள்களும், அனுபவ அறிவும் சிறிது பொது சிந்தனையும் தேவை. நையாண்டி தர்பார் நாலு காசுக்கு உதவாது.

வவ்வால் said...

புல்ஸ்,

வாரும்,வணக்கம், இஷ்டமித்ர பந்துக்களுடன்,சகல சம்பத்துகளுடன் ஷேமமா இருக்கீரா?

ஹி...ஹி ... அந்தக்காலத்துல எதுனா லேகியம் விக்குற வேலைப்பார்த்தீரா :-))

நீங்க சொல்றத பார்த்தால் வாரென் பஃபெட் எல்லாம் வாரண்ட் இல்லாம நாடுகடத்திடாலாம் போல இருக்கே.

அவர் எப்படி உலகின் மூன்றாவது பெரும் செல்வந்தர் ஆனார், அவரை ஏன் எல்லாம் பங்கு சந்தை குரு என சொல்றாங்க , முட்டாப்பசங்களா இருப்பாங்க போல எல்லாம் :-))

பங்கு சந்தையில் பணம் செய்ய முடியாது என்றே சொல்லவில்லை ஆனால் சாமனியனின் உழைப்பை உறிஞ்சாமல் அது நடப்பது இல்லையே.

இங்கு நான் சொல்லவருவது பொருளாதார நீதியின் அடிப்படையில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படாமல் , பணக்காரனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி ,ஒரு கண்ணில் வெண்ணை வைத்துவிட்டு போகட்டும் ஆனால் மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்க வேண்டாம் என்கிறேன்.

நான்கு பேர் ஒரு இடத்தில் கொள்ளை அடிக்கிறாங்க ,அதைப்பார்த்துவிட்டு தடுக்காமல் நாமும் போய் என்ன கிடைக்கிறதோ அதை அள்ளி வர வேண்டும் அதுவே நிபுணத்துவம், நாலு காசு பார்க்கும் வழி என்கிறீர்கள்.

என்னிடம் அப்படிப்பட்ட நிபுணத்துவம் இல்லிங்க சாமியோவ் :-))

நன்றி!
---------

சந்தோஷ்,
நன்றி,வணக்கம்,

அடிக்கடி வாங்க,ஆரம்பத்தில் வந்தது இப்போ தான் மீண்டும் பார்க்கிறேன்.

முரட்டுக்காளை said...

//பங்கு சந்தையில் பணம் செய்ய முடியாது என்றே சொல்லவில்லை ஆனால் சாமனியனின் உழைப்பை உறிஞ்சாமல் அது நடப்பது இல்லையே.//

ஏழை பங்காளனின் உழைப்பு தேவை இல்லை சாமி முதலீட்டாளரின் உழைப்பு மட்டுமே தேவை!!

//என்னிடம் அப்படிப்பட்ட நிபுணத்துவம் இல்லிங்க சாமியோவ் :-))//

ஒப்புக்கொண்டதற்கு நன்றி, இனிமேல் பங்கும் வேண்டாம் சந்தையும் வேண்டாம் உமக்கு.

அடுத்த பதிவிற்கு முன் நீர் படிக்க வேண்டியவை:

Dow Theory
Elliott Wave Theory
Candlestick Patterns
Reversal Patterns
Continuation Patterns
Indicators

just to mention a few.

படித்து விட்டு பதிவு போடும் சாமியோவ்!!!

வவ்வால் said...

புல்ஸ்,

வாரும்,வேகமா வருது பதில்,

//முதலீட்டாளரின் உழைப்பு மட்டுமே தேவை!!//

ஆமாம் கொள்ளையடிக்க கூட உழைப்பு தேவை தான் :-))
எனது சில கேள்விகளுக்கு பதில் சொல்லவும்.
#பங்கு சந்தை சரியும் போது ஏன் பொதுத்துறை வங்கி, எல்.ஐ.சி போன்றவற்றை முதலீடு செய்ய சொல்கிறார் நிதியமைச்சர்.

#ஏன் அம்பானி இந்தியாவின் முதன்மை வருமான வரிக்கட்டுபவராக இல்லை?

#வார்ரன் பபட் கட்டுரைக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்,அவர் சொன்னதற்கு உங்கள் பதில் என்ன?

# நீங்கள் சொன்ன தியரிகளின் அடிப்படையில் முதலீடு செய்தால் 100% லாபம் மட்டும் கிடைக்கும் என உத்திரவாதம் உண்டா?

# முகமதிப்பு 10 ரூ இருக்கும் பங்கு 1000 ரூபாய்க்கு விற்பனை ஆவது எப்படி?

# டிவிடெண்ட் என்பது முகமதிப்புக்கு மட்டுமே ஏன் தர வேண்டும்,அப்படி எனில் 1000 ரூ என விற்பது சரியா?

# புக் பில்டிங் முறை இந்திய பங்கு சந்தையில் எப்போது வந்தது?

# ஏன் புக் பில்டிங் முறையில் அதிக விலைக்கு ஐ.பி.ஓ விற்கப்பட வேண்டும்?

# அப்படி அதிக விலைக்கு விற்கப்பட்டு பட்டியல் இடப்பட்ட அன்றே ,விலை சரிவது ஏன்? மேலும் கடந்த ஆண்டு வெளியான ஐ.பி.ஓ க்களில் 50 சதவீதத்துக்கும் மேலான பங்குகள் ஆரம்ப விலைக்கு பின்னர் ,அதற்கு கீழாகவே டிரேட் ஆகியது ஏன் ?

அப்படி எனில் செயற்கையாக விலை ஏற்றப்பட்டது தானே/

# பீ.நோட்டில் ஏன் ரகசியம் காக்கப்பட வேண்டும்?

இன்னும் பல கேள்விகள் என்னால் கேட்க முடியும், சும்மா சாம்பிள் தான் இதெல்லாம்.

மேலும் என்னுடைய அமெரிக்க பொருளாதார சரிவும்,வால்ஸ்டீரிட் முற்றுகையும், இந்திய ரூபாய் சரிவு பதிவுகளையும் பார்க்கவும்.

நன்றி!

முரட்டுக்காளை said...

//இன்னும் பல கேள்விகள் என்னால் கேட்க முடியும், சும்மா சாம்பிள் தான் இதெல்லாம்.//

உமது கேள்விகளுக்கு எல்லாம் எனது பதில் போட்டுவிட்டேன் முன்னமே...

அடுத்த பதிவிற்கு முன் நீர் படிக்க வேண்டியவை:

Dow Theory
Elliott Wave Theory
Candlestick Patterns
Reversal Patterns
Continuation Patterns
Indicators

just to mention a few.

படித்து விட்டு பதிவு போடும் சாமியோவ்!!!
#பங்கு சந்தை சரியும் போது ஏன் பொதுத்துறை வங்கி, எல்.ஐ.சி போன்றவற்றை முதலீடு செய்ய சொல்கிறார் நிதியமைச்சர்.

மழை பெய்யும் பொது குடை பிடிப்பது போல தான் சாமி !!!

#ஏன் அம்பானி இந்தியாவின் முதன்மை வருமான வரிக்கட்டுபவராக இல்லை?

அது அவரை கேட்க வேண்டிய கேள்வி!

#வார்ரன் பபட் கட்டுரைக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்,அவர் சொன்னதற்கு உங்கள் பதில் என்ன?

அவருக்கு யாரும் வேலை தரவில்லை போல! அதனால வேலை செய்து வாழ்வாரே வாழ்வார் னு பேசி இருக்கார்!

# நீங்கள் சொன்ன தியரிகளின் அடிப்படையில் முதலீடு செய்தால் 100% லாபம் மட்டும் கிடைக்கும் என உத்திரவாதம் உண்டா?

200 % லாபம் கிடைச்சா வங்க கடல் ல போய் போட்டுடுவீரா ?

# முகமதிப்பு 10 ரூ இருக்கும் பங்கு 1000 ரூபாய்க்கு விற்பனை ஆவது எப்படி?

ஏன் என்றால் பொது சனம் வாங்க தயாரா இருக்குது...

# டிவிடெண்ட் என்பது முகமதிப்புக்கு மட்டுமே ஏன் தர வேண்டும்,அப்படி எனில் 1000 ரூ என விற்பது சரியா?

விலை ஏற்ற இறக்கத்துக்கு தின அடிப்படையில் வரையறை உண்டு. ஆனால் நீண்ட கால அடிப்படையில் கிடையாது என்பதை நீர் புரிந்து கொள்ளவும்.

# புக் பில்டிங் முறை இந்திய பங்கு சந்தையில் எப்போது வந்தது?

நல்ல கேள்வி. செபி கிட்ட கேளும் சாமி!

# ஏன் புக் பில்டிங் முறையில் அதிக விலைக்கு ஐ.பி.ஓ விற்கப்பட வேண்டும்?

அந்த துறை (industry ) ல இருக்கிற பட்டியலிட்ட நிறுவனங்கள் எந்த விலையில் விற்பனையாகிறதோ அதற்கு ஒரு குத்து மதிப்பான அளவுகோல் னு வச்சிக்கலாமே

# அப்படி அதிக விலைக்கு விற்கப்பட்டு பட்டியல் இடப்பட்ட அன்றே ,விலை சரிவது ஏன்? மேலும் கடந்த ஆண்டு வெளியான ஐ.பி.ஓ க்களில் 50 சதவீதத்துக்கும் மேலான பங்குகள் ஆரம்ப விலைக்கு பின்னர் ,அதற்கு கீழாகவே டிரேட் ஆகியது ஏன் ?

நீர் மேன்ஷன் ஹவுஸ் மட்டும் வாங்குவது ஏன்? ராத்திரி 12 மணிக்கு மேல சாட் பண்றது ஏன் னு கேட்டா எப்படி இருக்கும்?

# பீ.நோட்டில் ஏன் ரகசியம் காக்கப்பட வேண்டும்?

கொள்கை முடிவு (செபி கிட்ட கேளுமய்யா!)

//மேலும் என்னுடைய அமெரிக்க பொருளாதார சரிவும்,வால்ஸ்டீரிட் முற்றுகையும், இந்திய ரூபாய் சரிவு பதிவுகளையும் பார்க்கவும்.//

பயனில்லை சாமி, அங்கயும் Elliott wave theory தான் வொர்க் ஆகும்!!

வவ்வால் said...

புல்ஸ்,

//குத்து மதிப்பான அளவுகோல் னு வச்சிக்கலாமே//

அப்போ குத்து மதிப்பா சொல்லி காசை புடுங்கிறிங்க ,அப்பறம் என்னாதுக்கு மண்ணாங்கட்டி தியரிலாம்.

ஐ.பி.ஓ லிஸ்ட் ஆன அன்றே நஷ்டம் வருதுன்னா எந்த தியரியும் சொல்லாத போது ஒரு சம்பவம் நடந்த பிறகு விளக்க கொடுத்து ஏமாற்றத்தானே :-))

உங்களுக்கு ஏதோ தெரியும்னு நினைச்சு பேசிக்கிட்டு இருக்கேன், ஒருக்கேள்விக்கு கூட சரியா பதில் சொல்லக்காணொம், இதுல முரட்டுக்காளையாம் :-))

போய் முதலில் பேரை மாத்தும்!

இப்படித்தான் எதுவுமே தெரியாம ஜல்லி அடிச்சே பங்குல கிங்குனு சொல்லிக்கிட்டு அலையுறாங்களா எல்லாம் :-))

முரட்டுக்காளை said...

குத்து மதிப்பு = fair value

//ஐ.பி.ஓ லிஸ்ட் ஆன அன்றே நஷ்டம் வருதுன்னா எந்த தியரியும் சொல்லாத போது ஒரு சம்பவம் நடந்த பிறகு விளக்க கொடுத்து ஏமாற்றத்தானே :-))//

லாபம் மட்டுமே வரும்னா ஐ.பி. ஓ. ல போடுவாங்கல்ல எல்லா பொது சனமும்! RHP , Offer document படியும் முதல்ல, அப்புறம் யாவாரத்துல உள்ள risk , reward தெரியும்!

//ஒருக்கேள்விக்கு கூட சரியா பதில் சொல்லக்காணொம்//

நான் போட்ட பதில் உமக்கு புரியலைன்னா திரும்ப படியும் அல்லது google செய்யும் !

ராஜ நடராஜன் said...

புல்ஸ்!புல்ஸ்ன்னு தொடர்ந்து வருவதைப் பார்த்து யாருக்கு புல் தர்றீங்கன்னு பார்த்தா முரட்டுக்காளைக்கு:)

புல்லண்ணா!நீங்களாவது சுட்டியாவது கொடுக்கிறீங்க!எல்லோரும் ஷேர் ஆட்டோ....பழக்கதோசம் போகுமா...ஷேர் மார்க்கெட்டுங்குறாங்களே அப்படி என்னதான் அதில் இருக்குதுன்னு மொத்தமா பண்ட்லா 7 சிடி வாங்கினேன்.வாங்கினதோடு சரி.இப்ப நீங்க சுட்டி கொடுக்கவும்தான் நினைவுக்கு வருது.சரி நமக்குத்தான் கொடுப்பினையில்லைன்னு இங்கே நண்பர் ஒருவர் ஷேர் மார்க்கெட்டுக்கு ஆள் புடிக்கிறேன் பேர்வழின்னு அலைஞ்சுகிட்டு அவரும் ஆன்லைன்ல தூள் கிளப்பிகிட்டிருந்தாரு.கொஞ்ச நாள் கழிச்சு எப்படி போகுது ஆட்டம்ன்னு கேட்டா ரிஸசன் வந்ததும் எல்லாம் ஊத்திகிச்சுன்னார்.சரி அவராவது நெத்திலி மீன் மாதிரி ஆள் சைஸும் அந்த மாதிரிதான்.ஆனால் ஒரு வங்கியே ஷேர் மார்க்கெட்டுல விளையாண்டு திவாலாகிடுச்சுன்னா நம்பவா போறீங்க.எப்படி விஜய் மல்லையாவுக்கு அரசாங்கம் முட்டுக்கொடுக்குதோ அந்த மாதிரி வங்கிக்கு அரசாங்கம் தோள் கொடுத்து இப்பவும் வங்கியும் ஓடுது.

புல்!கிண்டி ரேஸுக்கு போயிருக்கிறீங்களா?நான் போயிருக்கிறேன்.ஆனால் அங்கேயும் கூட நூறு ரூபாய் வச்சு ஆடினதில்லை.சும்மா குதிரை எப்படி ஓடுதுன்னு பார்க்கிற ஆவல்தான்.நம்ம கலைஞர் கிண்டி ரேஸை நிறுத்தி விட்டேன்னு கூட சிலை வைத்த செம்மல் அல்லவா:)

முரட்டுக்காளை said...

நன்றி நடராஜன். ஒரு மளிகை கடையில மாசத்துக்கு 30 கிலோ புளி விக்குதுன்னு வச்சிக்குவோம். எதோ ஒரு காரணத்தால புளி வரத்து இல்லைன்னாலும், புளியின் தேவை அதிகரித்தாலும் விலை ஏறும். அதே போல வரத்து அதிகமானாலும், தேவை குறைந்தாலும் விலை குறையும். அதாவது demand supply gap என்ற அடிப்படை தத்துவம் தான் இங்கும் செயல்படுகிறது. இதை ஆராயத்தான் தியரி, patterns எல்லாம் இருக்குது. உண்மையான வியாபாரி தேவைக்கேற்ப நஷ்டபடாமல் பொருளை வாங்குவார் விற்பார். அதே போல ஆராய்ந்து இதை செய்தால் லாபம் நிச்சயம். திவால் இங்க மட்டுமில்லை, மேலை நாடுகள் கீழை நாடுகளிலும் உண்டு. எப்படி தடம் புரள்தல், விபத்து போல. அதுக்காக வண்டியிலே போகமாட்டேன் னு சொல்றது மடத்தனம். விஷயம் புரியாமல் மலைப்பது அறியாமை. விஷயமறிந்து களமிரங்குதல் சாணக்கியத்தனம்..

வவ்வால் said...

புல்ஸ்,

வந்துட்டார்யா சாணக்கியர் :-))

அது என்ன குத்து மதிப்பு சொல்லிட்டு அப்பாலிக்கா ஃபேர் வேல்யு ,ஃபேர் & லவ்லி வேல்யு னு ஒரு டகால்ட்டி :-))

நியாயமான மதிப்பா இருந்தா எதுக்கு லிஸ்ட் செய்த ஒரு மணி நேரத்தில் சரியுது? மேலும் பல பங்குகள் ஐ.பி.ஓ விலைக்கு பாதிக்கு கீழ போயிடுது,அப்போ செயற்கையா செய்வது தானே எல்லாம்.

ஓய் நான் பால பாடம் தாண்டி ஃபைனல் வந்தாச்சு, இப்போ அதைப்படின்னா, தெரிஞ்சா சொல்லணும் இல்லைன தெரியலைனு ஒத்துக்கணும்.

என்னது நீர் சொன்னத்உ எல்லாம் ஒரு பதில் அது புரியாம போச்சுன்னா கூகிள்ல தேடணுமா? பெங்களூரு கோர்ட்ல அம்மையார் சொன்னாப்போல தெரியலை, நினைவில்லை, சின்னம்மாவ தான் கேட்கணும் போல பதிலை சொல்லிட்டு ,கூகிளை தேடணுமாம்ல , நான் மட்டும் தேடினேன்னு வச்சுக்கோங்க, கூகிளே காரி துப்பிடும் :-))

-----

புளிக்கிடைக்கலைனா ,எலுமிச்சம் பழம் போட்டு ரசம்,சாம்பார் வைப்பாங்க மக்கள் , கிப்பன்ஸ் தியரிலாம் சொல்லிக்கொடுக்காமலே செய்றவங்க மக்கள் :-))

சப்ளை & டிமாண்ட் தியரிலாம் சந்தையை கட்டுப்படுத்தாமல்ல் இருக்கும் போது, சில தரகர்கள் மொத்த சந்தையின் போக்கையும் தீர்மானிக்கும் போது அந்த ஜல்லி சில்லு சில்லா சிதறிடும் :-))

-----

ராஜ்,

சாணக்கியர் வந்திருக்காக வாங்க :-))

முரட்டுக்காளை said...

//அது என்ன குத்து மதிப்பு சொல்லிட்டு அப்பாலிக்கா ஃபேர் வேல்யு ,ஃபேர் & லவ்லி வேல்யு னு ஒரு டகால்ட்டி :-))//

புதிதாக பட்டியலிடப்படும் பங்கின் விலைக்கு ஒரு வழிகாட்டி!

//நியாயமான மதிப்பா இருந்தா எதுக்கு லிஸ்ட் செய்த ஒரு மணி நேரத்தில் சரியுது? மேலும் பல பங்குகள் ஐ.பி.ஓ விலைக்கு பாதிக்கு கீழ போயிடுது,அப்போ செயற்கையா செய்வது தானே எல்லாம்.//

இயற்கையோ செயற்கையோ அதை அறிந்து கொள்ளத்தான் பகுப்பாய்வு! நுழைவு மற்றும் வெளியேற்றம் (entry /exit) இது தெரிய வேண்டுமென்றால் பகுப்பாய்வு நிச்சயம் வேண்டும்.. இது திண்ணம் அய்யா.. திண்ணம்..

//ஓய் நான் பால பாடம் தாண்டி ஃபைனல் வந்தாச்சு, இப்போ அதைப்படின்னா, தெரிஞ்சா சொல்லணும் இல்லைன தெரியலைனு ஒத்துக்கணும்.

என்னது நீர் சொன்னத்உ எல்லாம் ஒரு பதில் அது புரியாம போச்சுன்னா கூகிள்ல தேடணுமா? பெங்களூரு கோர்ட்ல அம்மையார் சொன்னாப்போல தெரியலை, நினைவில்லை, சின்னம்மாவ தான் கேட்கணும் போல பதிலை சொல்லிட்டு ,கூகிளை தேடணுமாம்ல , நான் மட்டும் தேடினேன்னு வச்சுக்கோங்க, கூகிளே காரி துப்பிடும் :-))//

அட போய்யா... மெக்ரா ஹில் கே புரிஞ்சு போச்சு.. நீர் என்ன... பிசாத்து... போய் மேன்ஷன் ஹவுஸ் அடிச்சிட்டு கிழவிகளோட குப்பை போடும் (இளசுகளோட போட்டா கடலை... உமக்கு மாட்டுரதெல்லாம் கிழவிகள் தானே!)

//புளிக்கிடைக்கலைனா ,எலுமிச்சம் பழம் போட்டு ரசம்,சாம்பார் வைப்பாங்க மக்கள் , கிப்பன்ஸ் தியரிலாம் சொல்லிக்கொடுக்காமலே செய்றவங்க மக்கள் :-))

சப்ளை & டிமாண்ட் தியரிலாம் சந்தையை கட்டுப்படுத்தாமல்ல் இருக்கும் போது, சில தரகர்கள் மொத்த சந்தையின் போக்கையும் தீர்மானிக்கும் போது அந்த ஜல்லி சில்லு சில்லா சிதறிடும் :-))//

இதுல இருந்தே தெரியலையா, உமக்கு அடிப்படை தத்துவமே புரியலை ன்னு, தரகரை பற்றி நீர் ஏன் பேசுறீர்? நீர் என்ன தரகரா இல்லை உப தரகரா?

ஆனாலும் இது ரொம்ப ஓவர்... கூரை மேல ஏறி கோழி பிடிக்க முடில... வானத்து மேல ஏறி வைகுண்டம் போறேன்னு சொல்றீரே... ஹி ஹி ஹி ...

வவ்வால் said...

புல்ஸ்,

வாரும், ரொம்ப சூடாத்தேன் வாரிக ,சூடு தணிய கடசில டிப்பு சொல்லுறேன் :-))

PNB,reliance petro,NMDC , ஐ.பிஓ எல்லாம் ட்ரேட் ஆன அன்றே கடந்த காலங்களில் சரிந்தது. இதற்கே ரிலையன்ஸுக்கு எக்க சக்க டிமாண்ட் ஆனால் அடுத்த நாளே எல்லாம் புலம்பினாங்க.

மேலும் பல ஐபீ.ஓக்கள் திரும்பவும் பெறப்பட்டன , முக்கியமாக மைரோமாக்ஸ், விஆர்.எல் போன்றவை, ஏன் அப்போ யாருக்கும் பகுப்பாய்வு தெரியலையா?

அதற்கு சொல்லப்பட்டக்காரணம், நிறுவனங்கள் பேராசைப்பட்டு ஐபிஓ விலேயே அதிக விலை வைப்பது என எக்கனாமிக்ஸ் டைம்ஸ் போன்றவையிலேயே கட்டுரை வந்துள்ளது.

ஆனால் நீர் மட்டும் மெக்ரா ஹில்லுக்கே பாடம் எடுத்தேன்னு பம்மாத்து செய்ய வேண்டியது, அப்போ வார்ரன் பபெட் விட உமக்கு அதிகம் தெரியுமோ :-))

ஓய் உம்மை எல்லாம் இக்னோர் செய்றாங்கன்னா அதுக்கு ஏன் என் மேல் காண்டாவுறிர் :-))

அய்யோ தரகருக்கும் சந்தைக்கும் சம்பந்தமே இல்லை பாருங்க,எத்தனை ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக், ராமலிங்க ராஜி வந்து முதுகில் குத்தினாலும் குனிஞ்சு காட்டிக்கிட்டு குத்துங்க எசமான் குத்துங்கன்னே இருப்பீர் நீர் , எல்லாரும் அப்படியே இருக்க உம்மை போல அதி மேதாவியா என்ன :-))

மெத்த படிச்ச மூஞ்சூரு கழனிப்பானையில் விழுந்துப்போச்சாம் :-))

கூரையிலா கோழி மேயுது :-))

சுகுணா சிக்கன் ,கடையில சல்லீசா, உறிச்சு,வெட்டி விக்குறாங்க ,நான் அங்கே வாங்கிப்பேன், கூறை ஏறப்போரென்னு ஏறி கீழ விழுந்து கை,காலை உடைச்சுக்காதீர் :-))

கூலாக டிப்பு சொல்றேன்னு சொன்னேன்ல ,ஒன்னும் இல்லை வழக்கம் போல லேகர் பீர்ல சோடா கலந்து குடிப்பீரே அதையே செய்யவும் :-))

Unknown said...

எனது கணிப்பில் பங்கு சந்தை என்பது betting மாதிரி ஒரு சூதாட்டமே.. பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் நிறைய பேர் ஒரு வேலையும் செய்யாமல் வெறுமனே betting செய்து சம்பாதிக்கிறார்கள். யோசித்து பாருங்கள்.. இந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருடையது? யாரோ ஒருவர் இழந்த பணத்தை இவர்கள் பெறுகிறார்கள், ஒரு வேலையும் செய்யாமலே..

பங்கு சந்தை தேவையில்லை என்றே நான் நம்புகிறேன்.. அதற்கு பதிலாக கடன் பத்திரங்களை ஊக்குவிக்கலாம்.. அல்லது, ஷேர் வாங்குபவர்களுக்கு 3 வருடங்கள் லாக்-இன் கட்டாயமாக்கலாம்.. இதன் மூலம் தில்லுமுல்லுகளை குறைக்க முடியும்..

வவ்வால் said...

வெள்ளை மனசு,

வாங்க, வணக்கம்,நன்றி!

செவப்பு எம்ஜிஆர், கறுப்பு எம்ஜிஆர் போல ,ம்னசுக்கும் ஒரு கலரா, நல்லாத்தான் இருக்கு ,உஜாலா போடுவீங்களோ மனசுக்கும் :-))

பங்கு சந்தையில் சூதாட்டம் நடக்குது அதை மக்கள் யோசிக்கணும் சொன்னா ,சொன்னவன் கிட்டேயே யோசிச்சு பாருங்க சொல்லுறிங்க ;-))

சீட்டாட்டம் ஆடவும் விதியுண்டு அது போல பங்கு சந்தைக்கும் விதி வைத்துக்கொண்டு ,இது வியாபாரம்னு ஊரை ஏமாத்துறாங்க.3 ஆண்டுக்கு லாக் இன் சொன்னால் யாரும் வாங்கவே மாட்டாங்க :-))

பங்கு சந்தை தேவை இல்லை ,அப்படி இருக்க வேண்டுமானால் இப்போது இருக்கும் பணக்காரர்களுக்கு சாதகமான விதிகளை மாற்ற வேண்டும்.