Sunday, December 02, 2012

FDI in Retail market:வரமா,சாபமா?


(ஹி..ஹி லக்ஸ் பாப்பா மலபார்)

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினைப்பற்றி தொலைக்காட்சியில் பலத்த விவாதங்கள் ஓடுகின்றது, அதோடு அல்லாமல் பதிவுலகிலும், இங்கு பொருளாதார புள்ளி விவரங்கள், அந்நிய சில்லரை சந்தையில் பெரிய வணிக நிறுவனங்கள் செய்த "சில்லுண்டி வேலைகள்" என பல உதாரணங்கள் காட்டப்படுகின்றது.

இப்படிப்பேசுபவர்கள் யாருமே நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை தற்காலத்தில் வாழ்வதேயில்லை, அவர்களும் ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கமாக இருந்திருக்கலாம், ஆனால் அன்றைய நிலையை வைத்தே பேசுகிறார்கள். இவர்களில்  சிலர் நடுத்தர வர்க்க வாழ்வை வாழாமல் நேரடியாக மேல் வர்க்க வாழ்வினை சுவைத்தவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு mall  இல் சாண்ட்விட்ச் 150 ரூ என்றாலும் உறுத்தாமல் சாப்பிடுவார்கள், சுவையை மட்டுமே நாக்கு உணரும், அந்த சாண்ட்விட்சுக்கு ஏன் 150 ரூ விலை என கனவிலும் நினைக்க மாட்டார்கள், ஆனால் ஏன் மினரல் இலவசமாக கொடுக்கவில்லை, காசு கொடுத்து வாங்க சொல்கிறார்கள் என மூளையின் நியுரான்களுக்கு வேலைக்கொடுத்து சிந்தித்து , இதயத்தின் ரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் :-))

அந்நிய முதலீட்டின் சாதக பாதகங்களை பற்றி இப்பதிவில் மீன்டும் ஒரு முறை அலசலாம் என இருக்கிறேன், அதற்கு முன்னர் கடந்த காலங்களில் நாம் விவசாயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்து எழுதிய இப்பதிவுகளை சோம்பல் படாமல் படித்து சில,பல கலோரிகளை எரித்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாமே :-))

குறிப்பு: உடல் எடை 70 கிலோ உள்ள நபர் ,ஒரு மணி நேரம் அமர்ந்து படித்தால் சுமார் 91 கலோரி ஆற்றல் எரிக்கப்படுகிறது.

ஹி...ஹி ஐ.பேட் போல வைத்திருந்தால் நடந்து கொண்டே படித்தால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும், உங்கள் உடல் நலன் கூடும் :-))

முந்தைய பதிவுகள் :

வால் மார்ட் குறித்த இடுகைகள்:

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_29.html

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post.html

விவசாயிகள் குறித்த இடுகை:

விவசாயி படும்பாடு-1

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html
 விவசாயி படும்பாடு-2
http://vovalpaarvai.blogspot.in/2011/12/2.html

மேலும் சில விவசாயம் சார்ந்த பதிவுகள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

#பஞ்ச கவ்யம்

#நடவு எந்திரம்

# ஒருங்கிணைந்த விவசாயம்

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி

#காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

#காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2


விவசாயிகள் இடம் பெயர்வால் உண்டாகும் இடர்கள்:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: உள்ளது உள்ளபடி - 2:விவசாய தொழிலாளர்களின் நகர்ப்புர இடம் பெயர்வும் விளைவுகளும்


ஹி...ஹி சுட்டியெல்லாம் படித்து வயிறு எறிந்தால் தண்ணிய குடிங்க, குடிச்சுட்டு படிங்க!

எனது முந்தையப்பதிவுகளை படித்தால் மேற்கொண்டு பேசுவதை உள்வாங்க கொஞ்சம் எளிதாக இருக்கும், படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அடியேன் ஒன்றும் அறச்சீற்றம் கொள்ளப்போவதில்லை, தொடர்ந்து கீழ படிங்க(ஹி...ஹி..மேல படியுங்க என சொன்னால் மீண்டும் ஆரம்பத்திற்கே போயிடுறாங்க சில கூமாங்க்ஸ்)

வால்மார்ட், டெஸ்கோ என பல அந்நிய பெருவணிக நிறுவனங்கள் இந்திய சில்லரை வணிகத்தில் நுழைவதையே தற்போது சிலர் எதிர்க்கிறார்கள், அவர்கள் கருத்துக்கு ஆதரவாக முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவையே,

# அயல்நாட்டில் உள்ள சிறு வணிகர்களை அழித்துவிட்டார்கள்.எனவே இங்குள்ள சிறுவணிகர்களும் அழிந்து விடுவார்கள்.

#ஆரம்பத்தில் விலை குறைவாக கொடுப்பார்கள், போட்டியாளர்கள் இல்லாத சூழலில் ,விலையை ஏற்றுவார்கள்.

# குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக உற்பத்தியாளர்களை கசக்கி பிழிவார்கள்.

#விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு லாபம் எதுவும் வராது,அவர்கள் சொல்வதெல்லாம் கதை.

#பொருட்கள் தரமாக இருக்காது

#நாம் என்ன உண்கிறோம், பயன்ப்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்.

#வரி ஏய்ப்பு செய்வார்கள்.

இன்னும் சில பல சித்தாந்த ரீதியிலான எடுகோள்களை முன் வைக்கிறார்கள். இவை எல்லாம் நடக்குமா, அந்நிய முதலீடு சில்லரை வர்த்தகத்தில் வரவில்லை எனில் இங்குள்ள விவசாயிகளும், மக்களும் சுபிட்சமாக வாழ வழி கிடைக்குமா ?

வாருங்கள் விரிவாக காணலாம்.

இப்பிரச்சினையை முழுதாக புரிந்து கொள்ள , மேலை நாடு, மற்றும் இந்திய சந்தை,நுகர்வு கலாச்சாரம், உற்பத்தி திறன், விநியோக கட்டமைப்பு, மக்கள் தொகை குறித்த ஒரு புரிதல் தேவைப்படுகிறது.

மேலை நாடுகள் VS இந்தியா



# பல லட்சம் மக்கள் வசிக்கும் நகரிலும் , தெருவுக்கு தெரு வணிக நிலையங்கள், அங்காடிகள் இருக்காது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே அங்காடிகள் இருக்கும்.

ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு சமூக இடத்தில் ஒரு சிறு பெட்டிக்கடை கூட அங்கு காண இயலாது.

எனவே பெருவணிகருக்கும், சிறு வணிகருக்கும் போட்டியிடும் களம் ஒரே இடமாக போய்விடுகிறது.

வால் மார்ட் பக்கத்திலேயே, சிறுவணிகரின் கடை இருக்கும், நேரடியான போட்டியை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

# இந்தியாவில் உள்ள நகரங்களில் கடைத்தெரு என ஒரு இடம் இருக்கும், அங்கு அனைத்து வகையான கடைகளும் ,பக்கம்,பக்கமாக இருக்கும். ஆனால் அதோடு அங்காடிகள் முடிந்து விடாது, 500 குடும்பம் வசிக்கும் இடத்தில் கூட ஒன்றிரண்டு மளிகை கடை, பெட்டிக்கடைகள் என இயங்கும்.

கொஞ்சம் அதிக தொகைக்கு பொருட்கள் வாங்க என்றால் கடைத்தெருவுக்கும், தேவை தினசரி ஏதோ ஒரு உ.ம்: அரைலிட்டர் கோல்டு வின்னர் எண்ணை, 10 முட்டை, ரெண்டு தீப்பெட்டி, 5 ரூபாவுக்கு மிளகு தூள் என வாங்கும் மக்கள் அதிகம்.

# வாங்கும் திறன்:

வாங்கும் திறனை மதிப்பிட ஒருவரின் வருமானம் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையின் படி உலக மக்களின் வருவாய் திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு அதனை வருவாய் பிரமீட் என வகைப்படித்தியுள்ளார்கள். அதன் படம் கீழே.

படம்: வருவாய் பிரமீடு:




அப்படத்தில் பார்த்தால் நான்கு வகையான பிரிவுகள் இருப்பதைக்காணலாம்.

ஆண்டு வருவாய் 20,000 டாலர்கள் உடையவர்கள் உச்சத்தில், அவர்கள் எண்ணிக்கை  சுமார் 7.5-10 கோடி மட்டுமே.

இவர்களுக்கு சந்தை விலை ஏற்றம், பொருட்கள் தட்டுப்பாடு என்பதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

எனக்கு பொருள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும், விலையைப்பற்றி கவலையில்லை என்பார்கள், ஒரு சுவையான காப்பி 100 கி.மீக்கு அப்பால் இருக்கு என்றால் , கார், ஹெலிகாப்டர் என போயாவது குடித்து இன்புறும் உயர் வர்க்கம்.

ஐந்து நட்சத்திர விடுதி மட்டம் ,இங்கே ஏழு நட்சத்திர விடுதி இல்லையா ,இதெல்லாம்,என்ன நாடு,ஊரு , இன்னும் வளரவே இல்லை *&#@ என குமுறும் கோமகன்கள்! "High Income Group"

இவர்களுக்கு வால்மார்ட், டெஸ்கோ எல்லாம் பொட்டிக்கடை போல :-))

#அடுத்து ,ஆண்டு வருவாய் 20,000 டாலர், ஆனால் 1,500 டாலருக்கு மேல்.இவர்களை "Upper Middle Class"  எனலாம்.

#ஆண்டு வருவாய் 1,500 டாலருக்கு மேல் ,ஆனால் 20,000 டாலர் எல்லையை தொட முடியாதவர்கள். "Middle Class" எனலாம்.

பிரிவு 2& 3 இல் இருப்பவர்கள் அவ்வப்போது மேலும் கீழும் வருமானத்தில் சஞ்சரிக்க கூடியவர்கள், ஆனால் ஒரு போதும் உணவு, உடை, உறைவிட தட்டுப்பாட்டுக்குள் சிக்காதவர்கள்.

தேவையான போது ஐந்து நட்சத்தி விடுதியிலும் போஜனம் செய்வார்கள் , இல்லையென்றால் சரவண பவன் போன்றவற்றிலும் கையை நனைப்பார்கள்.

இவர்களின் எண்ணிக்கை சுமார் 150-175 கோடி ஆகும்.

#  கடைசியில் ஆண்டு வருமானம் சுமார் 1,500 டாலருக்கு கீழ் உள்ளவர்கள், இவர்களை "Lower Income Group" எனலாம்.

உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால், மொத்தம் உள்ள 600 கோடியில் இவ்வெண்ணிக்கை.

200 கோடி அளவிலான மக்கலே வருவாய் ரீதியாக செழிப்பாக இருப்பதை காணலாம்.

கடைசி நிலையில் , சுமார் 400 கோடி மக்கள் உள்ளார்கள். அவர்களின் ஆண்டு வருவாய் 1,500 டாலருக்குள், ஆனால் இந்தியாவில் சராசரி ஆண்டு வருவாய் 962 டாலர்கள் என்பதால் நாம் எல்லாம் நான்காம் நிலையில் உட்பிரிவாக 5 ஆம் நிலையில் இருக்க வேண்டியவர்கள் :-))

அந்த 5 ஆம் பிரிவு நிலையில் சேர முடியாமல் வறுமைக்கோட்டுக்கீழ் என ஒரு மக்கள் கூட்டம்ம் இந்தியாவில் இருக்கிறது என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.

உலகளாவிய பெரு வணிகர்கள் தங்கள் முதலீட்டை பெரிய அளவிலான சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது ,விரைவாக அதிகம் வியாபாரம் ஆக வேண்டும் என்றே நினைப்பார்கள், அப்பொழுது தான் அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் வரும்.

அப்படி நிறைய பொருட்களும், அடிக்கடி வாங்கி நுகர்வோர் யார் என பார்த்தால் வருவாய் பிரமீட்டில் மேல் இரண்டு பிரிவுகளே , ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு. ஆனால் இவர்களை தான் "potential Buyers" என்பார்கள்.

அதே சமயத்தில் அதிக அளவு நுகர்வு செய்யாத மக்கள் யார் என பார்த்தால் நான்காம் பிரிவில் உள்ளவர்களே, இந்திய அளவில் பார்த்தால் நான்காம் பிரிவிலும் 5, 6 என இருக்கு, இவர்கள் எல்லாம் மலிவான பொருளாக இருந்தாலும் அடிக்கடி வாங்கி,அதிகம் நுகர மாட்டார்கள், காரணம் துட்டு லேது!

இவர்கள் எல்லாம் மார்ஜினல் பையர்ஸ். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் 99% இந்த வகையிலே.

எனவே வால்மார்ட் போன்றவைக்கு இவர்கள் இலக்கே அல்ல. இவர்களை நம்பி கடையை திறந்தால் கடைக்கு மின்சார பில்  கட்ட கூட வருவாய் வராது :-))


படம்:வசிப்பிடவாரியாக சில்லரைவர்த்தக பரவல்.



விளிம்பு நிலை வருவாய் மக்கள், ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் சமையல் எண்ணை தேவை என தெரிந்தாலும் மாத ஆரம்பத்தில் மொத்தமாக பொருள் வாங்கினாலும் 5 லிட்டர் எண்ணை வாங்க மாட்டார்கள், ஒரு ரெண்டு லிட்டர் வாங்குவாங்க, அது தீர்ந்ததும் தேவைக்கு அரை லிட்டர் பாக்கெட்டுகளாக வாங்குவார்கள்.

எனவே இது நாள் வரையில் இவர்கள் ஷண்முகம் ஸ்டோரில் மாதம் ஒரு முறை மொத்த கொள்முதல் செய்திருப்பார்கள், பின்னர் தினசரி 50 ரூ-100 ரூ என அருகில் இருக்கும் முருகன் மளிகைக்கடையில் வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

இப்போ வால்மார்ட் வந்தாலும் என்ன செய்வார்கள், இவர்களின் வாங்கும் நடவடிக்கையில் மாற்றம் வராது, பெரிய கடையா இருக்கேன்னு மாத மளிகையை ஒரு முறை போய் வாங்கிக்கொண்டு தினசரி முன்னர் போல முருகன் மளிகையே சரணம்னு போவார்கள்.எனவே முழுக்க சில்லரை வர்த்தகர்கள் வழக்கொழிய மாட்டார்கள், இப்போதுள்ள மார்க்கெட் ஷேரில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வால்மார்ட் போன்றவர்களுக்கு போகும்.

வால்மார்ட் இன்ன பிறவுக்கு முன்னர், ரிலையன்ஸ், மோர் என பல சூப்பர் மார்கெட்டுகள் வந்தாச்சு, அப்போதும் இப்படித்தான் அதிகமாக வாங்குவதென்றால் அங்கு போவார்கள், அதுவும் விலை கொஞ்சமாக இருக்கும் பொருளாக பார்த்து வாங்குவார்கள். இன்னொரு பொருள் வெளியில் விலை குறைவென்றால் அங்கு போய் வாங்க தயங்கமாட்டார்கள்.

ஆனால் மேலை நாட்டு மக்கள் ஒரு கடைக்குள் வந்தாச்சு , இன்னொரு பொருளுக்காக இன்னொரு கடைக்கு அலையணுமா என அங்கே வாங்கிவிடுவார்கள்.

இது தான் இந்திய நுகர்வோருக்கும், மேலை நாட்டு நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசம்.

பெருநகரங்களிள் தான் பெரிய சூப்பர் மார்கெட்டுகளுக்கு நிலைத்திருக்க கூடிய வகையில் வியாபாரம் நடக்கும்.

இதன் மூலம் நுகர்வோருக்கு என்ன பலன் என்றால், விலையை ஒப்பிட்டு வாங்க இன்னொரு கடை என்ற சாய்ஸ் கிடைக்கிறது.

தனிப்பட்ட இந்திய சில்லரை விற்பனைக்கடைகளாக இருப்பினும், அவை எல்லாம் ஒரே மாதிரி விலையை கடைப்பிடிப்பார்கள்.

அவற்றில் மொத்த விலைக்கடை,சில்லறை விலைக்கடை என இரண்டு வகையில் விலை வைப்பார்கள்.

மொத்த விலைக்கடையில் எல்லாம் ஒரு பொருளுக்கு என்ன விலையோ அதுவே ஊரெங்கும் இருக்கும், அதே போல சில்லறை விலைக்கடைகளில் எல்லாம் ஒரே போல இருக்கும். எனவே அந்த கடையில் கம்மியாக இருக்கும் என மாறிப்போவதற்கு இடமே இல்லை, இந்த வியாபார வலைக்கு மாற்றாக ஒன்று வந்தால் ஒழிய நுகர்வோருக்கு விலையில் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை.

இந்நிலையில் தான் அந்நிய சில்லரை வர்த்தகர்கள் வருகிறார்கள், அவர்கள் விலையில் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பினை நுகர்வோருக்கு அளிப்பார்கள், இதனால் மோனோபோலி உடையும், நுகர்வோருக்கு கொடுக்கும் காசுக்கு ஏற்ற பொருள் கிடைக்கும்.

எந்த ஒரு வணிக சூழலிலும் மோனோ போலி இருக்கவே கூடாது. இந்தியாவில் மோனோ போலி டிரேட் பிராக்டிஸ் ஆக்ட் என்ற ஒன்று உண்டு, ஒருவரே முழு சந்தையினை கட்டுப்படுத்தக்கூடாது, முடியாது, ஆனால் தனித்தனி கடைகள், என்றப்பெயரில் இந்தியாவில் இயங்கும் அங்காடிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு மோனோ போலி சாம்ராஜ்யத்தினை நடத்துவது நிதர்சனமான உண்மை.

இதற்கு அடிப்படையாக அமைவது சப்ளை செயின் என்ற அமைப்பினை ஒரு சிலரே கட்டுப்படுத்துவது தான்.

உதாரணமாக பூச்சி மசாலா என ஒன்றை பார்ப்போம்.

அவர்கள் , மசாலாவுக்கான மூலப்பொருட்கலை வாங்கி அரைத்து பாக்கெட்கள் தயாரிக்கிறார்கள், ஆனால் நுகர்வோருக்கு நேரடியாக விற்க முடியாது ,கடைகளுக்கு அனுப்ப வேண்டும், ஒவ்வொரு கடையாக போய் கேட்டால் என்ன சொல்வார்கள் என்றால்,

நாங்க , அரிசி ,பருப்பு, எண்ணை, புளி, மிளகாய், சோப்பு, ஷாம்பு என பல பொருட்களை மாவட்ட விநியோகஸ்தரிடம் வாங்குகிறோம், அவரே பேச்சி மசாலா என்றை ஒன்றை அனுப்புறார், அதை விட்டுவிட்டு உங்க கிட்டே மட்டும் ஒரு பொருளை வாங்க முடியாது என்பார்.

சரி கடைக்காரர்கிட்டே விற்பதை விட ,மாவட்ட விநியோகஸ்தரிடம் விற்கலாம் என போனால், அவரோ மேற்கண்ட எல்லாவற்றையும், மாநில விநியோகஸ்தரிடம் வாங்குகிறோம், அவர் அனுப்பும் சரக்கை தான் நாங்க வாங்கி விநியோகம் செய்ய முடியும் என்பார்கள்.

அப்படியே மாநில விநியோகஸ்தரை அணுகினால் அவர் சொல்வார் , பேச்சி மசாலா எங்களுக்கு 50% மார்ஜினில் தருகிறது எனவே நீங்க அதை விட அதிக மார்ஜினில் கொடுக்க வேண்டும் என்பார், அவ்ளோ மார்ஜின் கொடுத்தால் மஞ்சளை அறைத்து மஞ்சத்தூளா கொடுக்க முடியும், மரத்தூளை அறைத்து மஞ்சள் சாயம் கலந்து தான் கொடுக்க முடியும்.

அந்த மார்ஜினுக்கு ஒற்றுக்கொண்டு பொருளை சப்ளை செய்தால் கலப்படம் செய்வதை தவிர வேறு வழியேயில்லை.

இதுக்கு நடுவில் பேச்சி மசாலாவுக்கு போட்டியா பூச்சி மசலா விளம்பரம் வேற கொடுக்க வேண்டும்.எதாவது ஒரு முன்னால் நடிகையை கூப்பிட்டு வந்து , சமைக்கவே தெரியாத அவரை நான் பூச்சி மசாலாவை தான் சமையலுக்கு பயன்ப்படுத்துறேன் ,சுவையோ அபாராம் என கூசாமல் புழுகி விளம்பரம் எடுத்து மக்களையும் ஏமாற்ற வேண்டும்.

வால்மார்ட் வந்தா நாம என்ன சாப்பிடுகிறோம் என்பதை அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என சொல்கிறவர்கள் , இப்போதுள்ள நடைமுறையை என்னனு சொல்வார்கள் :-))

மேலும் தற்போதுள்ள சூழலில் கூட மக்கள் என்ன வாங்க வேண்டும் என்பதை எப்படி இந்திய வியாபாரிகள் வலையமைப்பு தீர்மானிக்கிறது, இதனால் எப்படி உற்பத்தியாளர்கள் தங்கள் பொருளை சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நிஜ வியாபார உதாரணம் மூலம் பார்க்கலாம்.

நிர்மா;




முனைவர்.கர்சான் பாய் படேல் என்ற வேதியலாளர், 1969 இல் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் 100 சதுர அடியுள்ள இடத்தில் தனது வேதியல் அறிவைக்கொண்டு , பாஸ்பேட் இல்லாத டிடெர்ஜெண்ட் பவுடரை உருவாக்கினார், அவர் அப்பொழுது குஜராத் சுரங்க துறையில் பணிப்புரிந்து வந்தார், சைக்கிளில் அலுவலகம் செல்லும் போது 10-15 பாக்கெட்டுகள் எடுத்து சென்று சில கடைகள், தனிநபர்கள் என விற்றுவிட்டு செல்வார்.

ஒரு கிலோ சலவைத்தூள் விலை 3.50 ரூபாய் தான் என்பதால் மக்கள் விரும்பி வாங்கினர், ஏன் எனில், அப்பொழுது பிரபலமான இந்துஸ்தான் லீவர்(இப்போ யுனிலீவர்) நிறுவனத்தின் சர்ப் சலவைத்தூள் கிலோ 15 ரூபாய் ஆகும்.

இதனால் குறுகிய காலத்தில் சுற்றுவட்டாரத்தில் புகழடையவே பல கடைகளும் ஆர்டர் கொடுக்க சில ஆண்டுகளில் தனித்தொழிற்சாலையே அமைத்து பல மாவட்டங்கள், மாநிலங்கள் என வியாபாரத்தினை விரிவாக்கினார்.

ஒரு கட்டத்தில் சர்ப்பின் விற்பனையை தாண்டி சென்றும் விட்டது நிர்மா, வருமான அடிப்படையில் நிர்மா குறைவாக இருந்தாலும் சலவைத்தூள் வால்யும் அடிப்படையில்  800,000 tonnes  விற்று உலகில் அதிகம் விற்பனையாகும் சலவைத்தூள் என 2004 இல் உலக சாதனைப்படைத்தது.

நிர்மாவின் வெற்றிக்கு காரணம், அடிமட்ட வருவாய் பிரிவினரை குறிவைத்து பொருளை தயாரித்தது,மேலும் அதற்கேற்ற விலை நிர்ணயம், அவ்விலைக்கு ஏற்ற தரம்.

சர்ப் 15 ரூ என்றாலும் அதற்கு முன்னர் போட்டியே இல்லை என்பதால் அடிமட்ட வருவாய் பிரிவினரும் வாங்க வேண்டிய சூழல்.எனவே அவர்களின் வருமானம் உயராத நிலையிலும் தேவைக்கு வாங்கி வந்தார்கள். கிலோ 3.50 ரூபாய்க்கு நிர்மா வரவும் மக்களும் ஆதரித்தார்கள்.

இந்துஸ்தான் லீவர் என்பது பெயரில் தான் இந்துஸ்தான், அது ஒரு ஆங்கில-ஹாலந்து கூட்டு பன்னாட்டு நிறுவனம், லண்டனிலும், ரோட்டர்டாமிலும் தலைமையகம் உண்டு.

இவர்கள் ஏற்கனவே விநியோக வலையமைப்பு, எண்ணற்ற பொருட்கள் விநியோகம் என வலுவான நிலையில் உள்ள வியாபார சக்தி, ஆனால் சலவைத்தூள் என்ற ஒரே தயாரிப்பை வைத்துக்கொண்டு வெற்றிகரமாக சந்தைப்படுத்த நிர்மாவால் அன்று சாத்தியமானது ,காரணம் என்ன?

வட இந்தியாவில் தனிப்பட்ட அங்காடிகள் பெரும்பாலும் வலையமைப்பாக விநியோகத்தில் சிக்கிக்கொள்வதில்லை. அதே சமயம் தென்னிந்தியாவில் மாநில அளவில் இருந்து ஒரு சிற்றூரில் உள்ள தனிப்பட்ட கடை வரையில் ஒரு வலை இயங்கிவந்தது. மேல மடக்கிட்டால் போதும் உங்க தயாரிப்பு சென்னையில் இருந்து கன்னியா குமரி வரைக்கும் பாயும்.

நிர்மாவினை சமாளிக்கவே வீல் என்ற ஒரு மலிவு விலை சலவைத்தூளை இந்துஸ்தான் அறிமுகப்படுத்தியது, மேலும் ரின் சலவைத்தூளின் விலையை குறைத்தது. சர்ப் அவர்களின் பிரிமியம் சலவைத்தூள் என்பதால் குறைக்கவில்லை.

ஆனால் அப்படியும் நிர்மாவின் கடைமட்ட வருவாய் பிரிவினரின் சலவைத்தூள் என்ற மார்க்கெட்டினை இந்துஸ்தான் லீவரால் அசைக்கவே முடியவில்லை. வட இந்தியா முழுக்க கொடிக்கட்டி பறந்த நிர்மாவால் தமிழ் நாட்டில் மட்டும் பெரிதாக தாக்கத்தினை உண்டாக்க முடியவில்லை, என்ன காரணம் எனில் நம்ம ஊரு மாநில விநியோகம் இந்துஸ்தான் லீவரின் தயாரிப்பான வீல் மற்றும், ரின்னுக்கு ஆதரவு காட்டியதே. அதற்கு அப்புறம் பிராக்டர் & கேம்பலின் டைட் என்ற மலிவு விலை சலவைத்தூளுக்கே நம்ம ஊரு விநியோக அமைப்பு பச்சைக்கொடி காட்டியது.

அவர்கள் சொல்லும் காரணம் இந்துஸ்தான் யுனிலீவர் பல தரப்பட்ட பொருட்களை தருகிறது, தொடர்ந்து அவர்கள் பொருட்களை வாங்குவதால் இதையும் வாங்குகிறோம் என்பதே.

ஆனால் இதே நிலை வட இந்தியாவில் இல்லையே,அங்கே எல்லாம் இந்துஸ்தான் லீவர்  இதே போல அடம்பிடிக்க முடியவில்லையே ஏன்?



இப்போ நிர்மாவிற்கு பின்னர் காரி(Ghari= குகை எனப்பொருள்!)என்ற சலவைத்தூள் கடைமட்ட வருவாய் பிரிவினரின் அபிமான சலவைத்தூள் ஆக இடம் பிடித்துள்ளது.ரோகித் என்ற கான்பூரை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாகும், இந்தாண்டு நிர்மா, வீல் ஆகியவற்றை பின் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டது. ஆனால் அந்த சலவைத்தூள் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் இங்குள்ள வியாபார வலையமைப்பே.



தமிழ்நாடு தவிர ஆந்திரா ,கர்நாடகா முதல் வட மாநிலங்களில் கொடிக்கட்டி பறக்கிறது காரி சலவைத்தூள், மேலும் அவர்களே எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் பாத்திரம்ம் துலக்கும் சோப்பும், வீனஸ் என்ற பெயரில் குளியல் சோப்பும் தயாரிக்கிறார்கள்.



வீனஸ் குளியல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் வித்யாபாலன். ரோகித் நிறுவனம் தங்கள் பொருட்களை மிக எளிதாக விளம்பரப்படுத்துவதில் கில்லாடிகள், மத்திய அரசின் ரயில்வே போக்குவரத்தின் இரயில்களில் விளம்பரப்படுத்த கட்டணம் குறைவே எனவே வடமாநிலங்களில் ஓடும் இரயில்களில் உள்ளும் புறமும் விளம்பரம் செய்ய உரிமம் வாங்கி குறிப்பிட்ட இரயில்கள் முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

Ghari Detergent Express (a summer special) in 2008 that ran between Lucknow and Guwahati

Pushpak Express that runs between Lucknow and Mumbai

 Swarna Jayanti Express (from Trivandrum to Hazrat Nizamuddin in Delhi)

ஆகிய இரயில்களில் விளம்பரம் செய்தார்கள் , பல ஆயிரம் கோடி விளம்பரம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களை ஆண்டுக்கு  வெறும் 30 கோடி விளம்பர செலவு செய்து காலி செய்துள்ளார்கள்.

இதற்கு காரணம் விலைக்குறைவாக வைத்தது கிலோ 52 ரூ.

மேலும் விலை குறைவாக வைத்தாலும் அங்காடிகளுக்கு நல்ல விகிதத்தில் கமிஷனும் கிடைக்க செய்தார்கள், 9% கமிஷன், தங்கள் லாபத்தினை குறைத்துக்கொண்டார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் விலையும் குறைப்பதில்லை, அங்காடிகளுக்கு கமிஷனும் அதிகம் கொடுக்க முன்வருவதில்லை, தங்கள் போட்டியாளர்களை ஒடுக்க வேண்டும் என்றால் மட்டுமே கூடுதல் கமிஷன் கொடுப்பார்கள், இல்லை எனில் இத்தனை பொருட்களை நாங்கள் சப்ளை செய்கிறோம், எனவே போட்டியாளர் பொருளை விற்க கூடாது என மிரட்டுவதே வழக்கம்.

எனவே மக்கள் என்ன வாங்க வேண்டும் என வால்மார்ட் வந்தால் தீர்மானித்து விடும் என புரளி கிளப்புவதெல்லாம் வெற்று புரளியே, இப்போ உள்ள நடைமுறையிலும் நாம் என்ன வாங்குகிறோம் என்பது நம் கையில் இல்லை :-))

நாம் இவற்றை எல்லாம் விரும்பியா வாங்குகிறோம்:

HIndustan Unilever:

தலைமையகம்: மும்பை,

யுனி லீவர் கம்பெனி:

நிறுவனர்கள்:  William Hesketh Lever (1851–1925) and his brother, James Darcy Lever (1854–1910)

லண்டன் மற்றும் ரோட்டர் டாம்,ஹாலந்து.

http://en.wikipedia.org/wiki/Hindustan_Unilever

லீவர் சகோதரர்கள் 1888 இல் மும்பையில் லீவர் பிரதர்ஸ் என்ற பெயரில் துக்கப்பட்டது ,ஆரம்பத்தில் சன்லைட் சோப்புகளை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து விற்றார்கள்.

பின்னர் கி.பி.1933 இல்  Lever Brothers India Limited என ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் 1956 இல் இந்திய பங்குதாரர்களையும் சேர்த்துக்கொண்டு இந்துஸ்தான் லீவர் நிறுவனம் ஆனது.ஆங்கிலோ டச் நிறுவனமான யுனிலீவருக்கு 52 % பங்குகள் உள்ளது.

HIndustan Unilever Products:

35 பிராண்டுகள், 70 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனம், மூன்றில் இரண்டு இந்தியர்கள் இந்துஸ்தான் யுனிலீவர் தயாரிப்பினை நுகர்கிறார்கள்.

Food brands:

Annapurna salt and atta
Bru coffee
Brooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea
Kissan squashes, ketchups, juices and jams
Lipton tea
Knorr soups & meal makers and soupy noodles
Kwality Wall's frozen dessert
Modern Bread, ready to eat chapattis and other bakery items
Homecare Brands [8]
ActiveWheel detergent
Cif Cream Cleaner
Comfort fabric softeners
Domex disinfectant/toilet cleaner
Rin detergents and bleach
Sunlight detergent and colour care
Surf Excel detergent and gentle wash
Vim dishwash
Magic – Water Saver [9][10]
Personal Care Brands: [11]
Aviance Beauty Solutions
Axe deodorant and aftershaving lotion and soap
LEVER Ayush Therapy ayurvedic health care and personal care products
Breeze beauty soap
Clear anti-dandruff hair products
Clinic Plus shampoo and oil
Close Up toothpaste
Dove skin cleansing & hair care range: bar, lotions, creams and anti-perspirant deodorants
Denim shaving products
Fair & Lovely skin-lightening products
Hamam
Lakmé beauty products and salons
Lifebuoy soaps and handwash range
Liril 2000 soap
Lux soap, body wash and deodorant
Pears soap
Pepsodent toothpaste
Pond's talcs and creams
Rexona soap
Sunsilk shampoo
Sure anti-perspirant
Vaseline petroleum jelly, skin care lotions
TRESemmé [12]
Water Purifier Brand:
Pureit Water Purifier

அனைத்துமே சர்வதேச பிராண்ட்கள் ,பல நாட்டிலும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது, இந்தியாவிலும் விற்பனையாகிறது .இவை  எல்லாம் நமக்கு ரொம்ப பிடித்தமான வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் :-))

-----------

The Procter & Gamble Company

தலைமையகம்: Cincinnati, Ohio, USA

நிறுவனர்கள்:
William Procter
James Gamble

http://en.wikipedia.org/wiki/Procter_%26_Gamble

William Procter மெழுகு வர்த்தி தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார்,
James Gamble என்பவர் சோப்பு தயாரித்து வந்தார், இருவருமே அயர்லாந்த்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்,

Alexander Norris,என்பவரின் அழகான பெண்கள் ஆன
Olivia and Elizabeth Norris.ஆகியோரை பிராக்டர் மற்றும் கேம்பில் மணந்து கொண்டனர், மாமனார் நோரிஸ் மாப்பிள்ளைகளை ஏன் தனியாக தொழில் செய்யுறிங்க ஒன்றாக செய்தால் லாபம் நல்லா வருமே என சொல்ல கி.பி 1857 ஆம் ஆண்டு The Procter & Gamble Company உதயமாயிற்று.

தயாரிப்புகள்:

Ace is a brand of laundry detergent/liquid available in numerous forms and scents.
Always/Whisper is a brand of feminine care products.
Ariel is a brand of laundry detergent/liquid available in numerous forms and scents.
Bold is a brand of laundry detergent/liquid.
Bounce is a brand of laundry products sold in the United States and Canada.
Bounty is a brand of paper towel sold in the United States and Canada.
Braun is a small-appliances manufacturer specializing in electric shavers, epilators, hair care appliances and blenders.
Cascade is a brand of dishwashing products.
Charmin is a brand of toilet paper sold in the United States, Canada, and Mexico.
CoverGirl is a brand of women's cosmetics.
Crest/Oral B is a brand of toothpaste and teeth-whitening products.
Dash is a brand of laundry detergent/liquid.
Dawn/Fairy is a brand of dishwashing detergent.[16]
Dolce & Gabbana is an Italian fashion house.
Downy/Lenor is a brand of fabric softener.
Duracell is a brand of batteries and flashlights.
Eukanuba is a brand of pet food.
Febreze/Ambi Pur is a brand of air fresheners.
Fixodent is a brand of air denture adhesives.
Fusion is a brand of men's wet shave razors.
Gain is a brand of laundry detergent, fabric softeners and liquid dish soap.
Gillette is a brand of safety razor and male grooming products.
Head & Shoulders is a brand of anti-dandruff shampoo and conditioners.
Herbal Essences is a brand of shampoo and conditioners.
Hugo Boss is a brand of fine fragrances.
Iams is a brand of pet food.
Luvs is a brand of baby diapers.
Mach3 is a brand of safety razor and male grooming products.
Max Factor is a brand of women's cosmetics.
Mister Clean is a brand of multi-purpose cleaner sold in the United States, Canada and Great Britain.
Olay is a brand of women's skin care products.
Old Spice is a brand of men's grooming products.
Oral-B is a brand of toothbrush, and oral care products.
Pampers is a brand of disposable diaper and other baby care products.
Pantene is a brand of hair care products (conditioners/styling aids).
Prestobarba/Blue is a brand of safety razor and male grooming products.
Prilosec is an over-the-counter drug.
Puffs is a brand of facial tissue.
Rejoice/Pert is a brand of hair care products (conditioners/styling aids).
Safeguard is a brand of soaps.
Secret(brand) is a female anti-perspirant brand.
SK-II is a brand of women's and men's skin care products.
Swiffer is a brand of house-cleaning products.
Tampax is a brand of feminine care products.
Tide is a brand of laundry detergent.
Venus is a brand female hair-removal products.
Vicks is an over the counter medication.
Wella is a brand name of hair care products (shampoo, conditioner, styling, hair color).

இவற்றில் பல இந்தியாவில் இறக்குமதியாகவோ, அல்லது தயாரித்தோ விற்கப்படுகிறது, நமக்கு என்ன தேவையோ அதை தானே வியாபாரிகள் கொடுக்கிறாங்க :-))
-----------------------
Johnson & Johnson

 நிறுவனர்கள்: Robert Wood Johnson,  James Wood Johnson and Edward Mead Johnson

தலைமையகம்:New Brunswick, New Jersey, United States.

http://en.wikipedia.org/wiki/Johnson_%26_Johnson

கி.பி 1886 இல் ஜோசப் லிஸ்டரின் தொற்று நீக்குதல் குறித்த பிரச்சாரத்தினால் கவரப்பட்டு மருத்துவ பொருட்கள், கிருமிநாசினி, என தயாரிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தினை ஆரம்பித்தார்கள்.பேன்ட்-எய்ட் எனப்படும் ஒட்டுப்பசையுடன் கூடிய பிளாஸ்டர் இவர்கள் கண்டுபிடிப்பே.

இவர்களுக்கு பல டஜன் நிறுவனங்களும், பிராண்டுகளும் உள்ளன,

டைலினால் என்ற மருத்தினால் சிலர் இறந்து ,பல ஆயிரம் குப்பிகள் திரும்ப பெறப்பட்டது ,அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய திரும்ப பெருதல் அதுவே, இது போல இன்னும் பல சம்பவங்களும் உண்டு.

தயாரிப்புகள்:

Acuvue
Actifed
Aveeno
Bactidol
Band-Aid
Benadryl
Benecol
Bengay
Benylin
Bonamine
Calpol
Calcough
Calprofen
Calgel
Calrub
Carefree
Clean & Clear
Coach
Coach Professional
Coach Sport
Codral
Combantrin
Compeed
Conceptrol
Cortaid
Cortef
Delfen
Desitin
Dolormin
E.P.T.
Efferdent
Euthymol
First-Aid
Gynol
Healthy Woman
Imodium
Johnson's Baby
Johnson & Johnson Red Cross
Jontex
K-Y
Lactaid
Listerine
Listermint
Lubriderm
Meds[39]
Micatin
Monistat
Micralax
Migraleve
Modess[39]
Motrin
Motrin Children
Myadec
Mylanta
Nasalcrom
Neko
Neosporin
Neutrogena
Nicoderm
Nicorette
Nizoral
Nu-Gauze
O.B.
OneTouch
Pediacare
Penaten
Pepcid
Pepcid AC
Polysporin
Ponstan
Priligy
Provin
Quantrel
REACH
Reactine
Regaine
Rembrandt
Remicade
RoC
Rogaine
Rolaids
Simply Sleep
Simponi
Sinutab
Splenda
Stayfree
Steri-Pad
Stim-u-dent
Sudacare
Sudafed
Tucks Pads
Tylenol
Tylenol Baby
Tylenol Children
Ultracet
Vania
Visine
Zyrtec


--------------------
 Nestlé:

தலைமையகம்:Vevey, Switzerland

http://en.wikipedia.org/wiki/Nestl%C3%A9

கி.பி 1905 இல் Henri Nestlé, வின் சாக்கலேட் நிறுவனமும்,Charles Page, George Page ஆகியோரின் ஆன்க்லோ சுவிஸ் பால் நிறுவனமும் இணைந்து உருவானது. உலகம் முழுக்க கிளைகள் உள்ளது.

தயாரிப்புகள்:

Nespresso, Nescafé, KitKat, Smarties, Nesquik, Stouffer's, Vittel, and Maggi.

 L'Oréal, the world's largest cosmetics company இன் முக்கிய பங்குதாரர்கள்.
---------------

சில்லரை வர்த்தகத்தில் அந்நியர்கள் வந்து நமது நுகர்வு அமைப்பை மாற்றிவிடப்போவதில்லை, ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து வழங்குவதில் அந்நிய முதலீட்டின் கையே ஓங்கியுள்ளது. அவை எல்லாம் தரமானது என்றும் சொல்லிவிட முடியாது ,பல நாட்டிலும் கண்டனங்களுக்கு ஆளானவையே, ஆனால் அவற்றை இன்றும் வாங்கி விற்பது நம்ம ஊர் சுதேச வியாபாரிகளே, அவற்றின் தரம் குறித்தோ விற்பனைக்கு பிந்தைய சேவை குறைப்பாடு குறித்தோ நாம் கேள்வி எதுவும் கேட்டுவிட முடியாது.

பூச்சி பிடித்த கடலை பருப்பை விற்றாலும் வாங்கித்தான் ஆக வேண்டும் ,போய் கேட்டால் உடனே மாற்றி தரவும் மாட்டார்கள். அனைவராலும் நுகர்வோர் கோர்ட்டுக்கு அலையவும் முடியாது.

மேலும் இப்போது உள்ள சில்லரை வணிக முறையில் ,நுகர்வோருக்கும் நியாய விலை, தரம் என எவ்வித உத்தரவாதமும் இல்லை, உற்பத்தியாளர்கள், மற்றும் விவசாயிகளுக்கும் பொருட்கள் விலையாக உத்திரவாதமோ, அல்லது சீரான கொள்முதலோ சாத்தியமில்லாமலிருக்கிறது.

அடுத்தப்பதிவில் விவசாய கொள்முதல், மற்றும் இந்திய தயாரிப்புகள் எவ்வாறு பின் தள்ளப்படுகிறது, உற்பத்தி செய்தும் விரயம் ஆவதையும்,  தரத்திற்கு உத்திரவாதமில்லாமல் நுகர்வோரின் பணம் தேவையில்லாமல் சுரண்டப்படுவதையும் காணலாம்.

தொடரும்...

_________________

பின்குறிப்பு:


தகவல் மற்றும் படங்கள்,

எகனாமிக்ஸ் டைம்ஸ், இந்து,விக்கி ,கூகிள் மற்றும்,

http://strategicmoves.wordpress.com/2011/01/04/ghari-detergent-did-the-nirma-act/

இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

89 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல பதிவு. அதாவது இந்த வெளிநாட்டு சில்லறை வணிகத்திற்கு எதிரான நடைமுறைக் கருத்துகள் அனைத்தும் ஏற்கெனெவே ,வெளிநாட்டவரால் அமலில் உள்ளது என்பதை விள்க்கிய விதம் அருமை.

அதுவும் பாருங்க, பொருளாதாரரீதியாகவும் வர்ணப்பிரிவு போலவே 4 பிரிவு,அதிலும் சேராத 5 ஆம் பிரிவு.

எனினும் இந்த வெளிநாட்டு சில்லறை வணிக மையம் மக்களைப் பொறுத்தவரை எந்த விளைவும் ஏற்படாது என்வே நானும் கருகிறேன்.நாட்டின் பொருளாதர‌த்தில் காலரீதியாக என்ன விளைவு ஏற்படும் என கணிக்க நாம் பொருளாதார‌ம் அறிந்தவன் அல்ல!!

நாம் பொருளாதாரத்தில் பரவலான‌ உற்பத்தி,விநியோகம் சார் சுதேசி பொருளாதாரமே பலருக்கும் நன்மை பயக்கும் என்ற கருத்து உடையவன்.விவசாயம் இலாபம் தரும் தொழிலாக வேண்டும்.

இந்த மையப்படுத்தப்பட்ட உற்பத்தி விநியோகத்தில் நம் நாட்டு பணமுதலையோ அல்லது வெளிநாட்டுப் பணமுதலையோ இரண்டும் ஒன்றுதான்!!!

நன்றி

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

சில்லரை வர்த்தத்தில் அந்நிய முதலீடு வந்தால் என்னாகும்னு சொல்றாங்களோ அதெல்லாம் இந்தியா சுதந்திரம் ஆன காலத்தில் இருந்தே கொஞ்சம் ,கொஞ்சமாக நடந்தே வருகிறது, 1990க்கு பிறகு முழு வீச்சில் அந்நிய முதலீடு பாய்ந்து உள்நாட்டு உற்பத்தியே ஓய்ந்துவிட்டது எனலாம்.

இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களில் 75% வரையில் அந்நிய முதலீடு ,எனவே நாம் வாங்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 75 பைசா அந்நிய நாட்டுக்கு தான் போய்க்கொண்டிருக்கிறது.

நம் உள்நாட்டு உற்பத்தி என்றால் தரம் குறைவானவை என பல காலமாக பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் முத்திரைக்குத்தப்பட்டு விட்டன.

இந்திய உற்பத்தியாளர்களும், அவர்களுடன் போட்டிப்போடாமல் லோயர் பிரைஸ் செக்மெண்ட் கிடைச்சா போதும் என திருப்தி பட்டுக்கொள்கிறார்கள் எனலாம்.

இந்திய விவசாயம், உற்பத்தியை நினைச்சா பன்னாட்டு நிறுவனங்கள் இப்பவும் கட்டுப்படுத்த முடியும், ஏனெனில் அவற்றிற்கு தேவையான மூலப்பொருளை எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்பதே இன்றைய நிலை.

அவர்களுக்கு இறக்குமதி விலை அதிகம் ஆனால் தான் உள்நாட்டு மூலப்பொருளை வாங்குவார்கள். தெளிவாக அடுத்தப்பதிவில் வருகிறது.

எனவே வால்மார்ட், இன்ன பிற வந்து இங்கே அழிக்க எதுவும் இல்லை :-))

வியாபாரிக்கு போட்டி வரும்,அது கூடாது என்பதை மக்களை சாக்கு வச்சு சொல்கிறார்கள்.ஆனால் அவ்வியாபாரிகள் இந்திய நுகர்வோர் நலனை ஒரு போதும் கருத்தில் கொண்டதே கிடையாது :-))

நன்றி!

வெளங்காதவன்™ said...

சாரே! நானும் நுகர்பொருள் அரசியலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம்னு இருந்தேன். குறிப்பா, விளைபொருட்கள், பூக்கள் மற்றும் கனிகள்..

என்னபண்ணித் தொலையுறது...மாடு மேய்க்கிற வேலை ஜாஸ்தி.... அதேன் எழுத முடில... ரைட்டு, விடுங்க... பதிவைத் தொடருங்க...

வெளங்காதவன்™ said...

Follow up

suvanappiriyan said...

பல தகவல்கள். பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன். என்ன இருந்தாலும் அந்நிய முதலீட்டில் நம் ஊர் சில்லறை வியாபாரிகளின் வியாபாரத்தில் குறிப்பிட்ட சதவீதம் அடி விழும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ராஜ நடராஜன் said...

பட்டியல் பொருட்கள் கிட்டத்தட்ட அத்தனையும் பார்த்தோ,நுகர்ந்தோ,சுவாசித்தோ,அனுபவித்தோ இருக்குறதால தலை கிர்ருங்குது.முன்பே அங்காடிகளின் அறிமுகம் இந்தியாவில் இருந்தும்,ரிலையன்ஸ் போன்றவைகளும் சந்தையில் உலாவினாலும் கூட அன்னிய முதலீட்டுக்கான எதிர்ப்பு வால்மார்ட் என்ற நிறுவனத்தால் உருவாகிறது என நினைக்கிறேன்.இது கிட்டத்தட்ட மொரார்ஜி தேசாய் அரசின் கோகா கோலாவை இந்தியாவுக்குள் நுழைய விடமாட்டோம் கொள்கை மாதிரி.முன்பு அரசே அன்னிய உற்பத்தியை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூட கோலா கோலகலமாக குடி புகுந்து விட்டது.இப்பொழுது மன்மோகன் அரசே பரந்த,பறந்த,திறந்த மனப்பான்மை அன்னிய முதலீட்டு ஆதரவாளர் என்பதால் எதிர்ப்புக்குரல்,பாராளுமன்ற விவாதம்,தி.மு.க சஸ்பென்ஸ் போன்றவை இருந்தாலும் கூட வெளிநாட்டு வர்த்தகத்தை சிறுதொழில்களில் நுழைப்பது எளிது.

விவசாய துறையில் மூக்கை நுழைக்காத உற்பத்தி பொருட்கள் நம்மிடம் இருக்கின்றன.ஆனால் சந்தைப்படுத்தலில் தோல்வியுறவோ அல்லது பிராடும் செய்து விடுகிறோம்.

நீங்கதானே எந்த மசாலாவில் என்ன கலப்புன்னு முன்னாடி பதிவு போட்டவர்:)

வடமாநிலங்களிலிருந்து தமிழக சந்தை வித்தியாசப்படுகிறது என்ற நுணுக்கத்தை விலாவாரியாக சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

இங்கே ஒரு வட்டாரத்தில் வசிக்கும் கொஞ்சம் சல்லிகாசு,சமூக மற்றும் மத உணர்வாளர்கள்,அரசு உதவி போன்றவற்றுடன் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி என்ற பெயரில்தான் பெரும் அங்காடிகள் செயல்படுகின்றன.ஒரு பொருளின் உற்பத்தி விலை ஏற்றத்தால் வினியோகிக்கும் நிறுவனம் தனது செலவீனங்கள்,நிகர லாபம் கணக்கிட்டு பொருளை இந்த அங்காடிகளுக்கு விற்பனை செய்தாலும் இவர்களது நிரந்தர விலை வாங்கும் பொருளை விட 10% மட்டுமே.விலையேற்றத்துக்கும் முன்பும் பின்பும் கூட நிரந்தர கொள்கை 10% மட்டுமே.ஆனால் நுகர்வோருக்கு விலை மாற்றங்கள் வந்து விடும்.பெரும்பாலோனோர் மொத்தமாக இந்த மாதிரி அங்காடிகளில் மட்டுமே வாங்கினாலும் கூட நீங்க பதிவில் குறிப்பிட்டது போல் அவசரத்துக்கு எனவும்,சிகரெட்,குளிர்பானங்கள்,மோர்,தயிர்,குழந்தைகள் இனிப்பு என பக்காலா எனும் பொட்டிக்கடைகள் ஈரானியர்களால் எங்கும் காணப்படுகிறது.நம்மாட்கள் 10 பைசா,20 பைசா லாபத்துல என்ன சம்பாதித்து விட முடியும் என நினைப்பதை ஈரானியர்கள் கிட்டத்தட்ட 18 மணிநேரத்துக்கும் மேலான வியாபாரத்தில் சல்லி சேர்த்து விடுகிறார்கள்.இவர்கள் எப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என்றால் வினியோக நிறுவனம் பெரும் அங்காடிக்கு என்ன விலைக்கு விற்கிறதோ அதே விலைக்கே பொட்டிக்கடைக்கும் விற்கின்றன.ஆனால் அங்காடியின் ஒரு பெப்சி விலைக்கும் பொட்டிக்கடையின் விலைக்கும் சில பைசா வித்தியாசங்களே என்பதாலும் வண்டியில் உட்கார்ந்து கொண்டே ஹார்ன் அடிக்கும் அரபிய சோம்பேறித்தனத்தால் பொருள் உட்கார்ந்த இடத்துக்கே வந்து விடும் வசதியால் பொட்டிக்கடைகளும் வியாபாரம் செய்கின்றன.செலவீனங்கள்,ஊதியம் போக பெரும் நிகர லாபம் என்ற குறிக்கோளுடன் அங்காடிகள் செயல்படுகின்றன.பொட்டிக்கடைக்கு வாடகை,மின்சாரம் தவிர செலவீனங்கள் எதுவுமில்லை.கடைக்கே பொருள் விநியோகம்,விற்ற பின் காசு கொடுத்தால் போதும்,விற்கலைன்னா பொருள் சாவு தேதிக்கு முன்னாடி திருப்பி கொடுத்து விடுவது,சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய அவசியமில்லாத காரணங்களால் பொட்டிக்கடையும் சிறப்பாக செயல்படுகின்றன.

இவை தவிர தேடினாலும் கிடைக்காத நாட்டுக்கோழி,வாழைப்பழம்,நாட்டுக்கோழி முட்டை ,மீன் போன்றவைகளுக்கும் கூட தனியாக சந்தை இருக்கின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகாத பொருட்களுக்கான நுகர்வும்,விவசாயம் சார்ந்த உள்நாட்டு விற்பனை ஊக்குவித்தல் கொள்கையை வரவேற்கிறேன்.

ராஜ நடராஜன் said...

நிர்மா சலவை விளம்பரம் நீண்ட காலமாக இருக்குது என நினைக்கிறேன்.முன்பு சினிமாவுக்கு முன்னாடி விளம்பரம் போட்டு விட்டே டைட்டில் கார்டு ஆரம்பமாகிற காலத்திலிருந்தே பொருள் மக்களை எப்படி போய் சேரும் என்பதை உணர்ந்து விளம்பரப்படுத்தினார்கள்.நிர்மா அமோகமாக விற்கிறது என்பது நீங்க சொல்லித்தான் தெரியுது.சர்ப்தான் மார்க்கெட்டை ஆளுதுன்னு நினைச்சிகிட்டிருந்தேன்.

கோகா கோலா,பெப்சியை விட காளிமார்க் பானம் ருசியாக இருக்கிறது.வித்தியாசமான கலர்ல இருக்குதேன்னு வெயிலுக்கு ஒரு காளி மார்க் பானத்தை குடிச்சா தங்கச்சி பையன் என்னைப் பார்த்து சிரிக்கிறான்.

சந்தைப்படுத்தலில் தோல்வியடைந்த சில டூத்பேஸ்ட்டுகளில் விக்கோ வஜ்ரதந்தியும் ஒன்று என்பேன்.லிரில் சோப்பையும் காணோம்.லிருலுக்கு குளிச்ச பொண்ணையும் காணோம்.பாராசூட் தேங்காய் எண்ணை நல்லாவே வியாபாரம் ஆகுது.ஆச்சி,சக்தி மசாலாவையெல்லாம் அக்மார்க் சுத்தமா சந்தைப்படுத்தினா உலக மார்க்கெட் இருக்குது.

நாணயம் தேடி நாணயம் இழப்பதை நிறுத்தினா எல்லாம் சரியாகி விடும்.

ராஜ நடராஜன் said...

அன்னிய முதலீட்டு வர்த்தகத்தில் வேலை வாய்ப்புக்கள் உருவாகும் சாத்தியம் இருக்கின்றதே!

வவ்வால் said...

வெளங்காதவன்,

நன்றி!

பூ,காய்,கனி பற்றி எழுதுங்கய்யா, இது போன்ற வணிக சந்தை,அதன் அரசியல் எல்லாம் வெளிப்படுத்தப்படும், நாட்டில் நிறைய பேரு விவசாயி எல்லாம் ஆடி காரில அலுங்காக போயிட்டு இருக்கான், நமக்கும் அதான் பொருள் கிடைக்குதுன்னு இருக்காங்க.

மாடு மேய்க்கிறது ,ஆடு மேய்க்கிறதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க எல்லாம்ம் சும்மா இருக்கிறதால தான் டி.வி பொட்டியில பார்க்கிறதை வச்சே நமக்கு பொருளாதாரம் சொல்லித்தர கிளம்புறாங்க மக்கள் :-))
------------------
சு.பி.சுவாமிகள்,

நன்றி!

சில்லரை வியாபாரிகளின் இப்போதைய சந்தையில் கொஞ்சம் ஷேர் போகும் என்று தான் நானும் சொல்லியுள்ளேன், ஆனால் அழிந்து விட மாட்டார்கள், காரணம்ம் நம்ம நாட்டோட இயல்பு என சொல்லி இருக்கிறேன்.

நம்ம ஊரு வியாபாரிகள் முழுசா அவங்களுக்கே பங்கு வேண்டும்னு சொல்லுறாங்க, வியாபாரத்தில் போட்டி இருந்தா தானே வாங்கும் மக்களுக்கு தேர்வு செய்ய ஆப்ஷன் கிடைக்கும்.

இல்லைனா இவங்க விக்கிறது தான் பொருள் வைக்கிறது தான் விலைனு இல்ல போகும்.
----------------

ராச நட,

நன்றி!

சுத்தி வளைச்சாலும், சொன்ன பாயிண்ட்டை கச்சிதமாக கவ்விட்டீங்க , பாராட்டுக்கள் :-))

//பட்டியல் பொருட்கள் கிட்டத்தட்ட அத்தனையும் பார்த்தோ,நுகர்ந்தோ,சுவாசித்தோ,அனுபவித்தோ இருக்குறதால தலை கிர்ருங்குது.முன்பே //

இதுக்கே கிர்ரடிச்சா எப்படி இன்னும் பல இருக்கு. நாம பிராண்ட்களின் அடிமை, எனவே ஒரு பெரிய பிராண்ட் பேரில் குப்பையை கொடுத்தாலும் , நல்லா இருக்கே என்போம் :-))

இந்த லட்சணத்தில் வால்மார்ட் வந்து நாம என்ன வாங்கணும் என முடிவை திணிக்கும் என்கிறார்கள் :-))

மசாலா வில் கலப்பு என்றெல்லாம் வரக்காரணமே கமிஷன் அதிகம் கொடுத்துவிட்டால் , மூலப்பொருள் வாங்கும் செலவு அதிகம் ஆகும் பட்சத்தில் ,கலப்படம்ம் தான் :-))

நம்ம நாட்டு சந்தை அயல்நாட்டு சந்தைக்கு மாறுபட்டது, அடுத்து இந்திய மக்களின் வருவாய் நிலை பல தரப்பட்டது, மேல் நாட்டில் எல்லாம் ஒரு குறைந்த பட்ச வருவாய் நிலை ,அதுவும் ஆரோக்கியமான வருவாய்ய் சூழல் உண்டு.

எனவே அனைவரும் போட்டிப்போட்டு வாங்குவார்கள். நம்ம நாட்டு வருவாய் ஸ்பெக்ட்ரம் (விட முடியல்லை) பெருசு, அதில் வறுமையின் நிறம் சிகப்பின் அகலப்பட்டை அதிகம் :-((

எனவே நம்ம ஊரில் அயல்நாட்டு சந்தை நுட்பம் எல்லாம் சிக்கி சின்னாப்பின்னத்தான் படும் :-))

என்னோட தனிப்பட்ட கணிப்பு இந்தியாவில் வால்மார்ட் பிரேக் ஈவன் அடையவே திணரும் என்பதே.

//வடமாநிலங்களிலிருந்து தமிழக சந்தை வித்தியாசப்படுகிறது என்ற நுணுக்கத்தை விலாவாரியாக சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.//

ஆமாம் அந்த வித்தியாசம் பலரும் அறியவில்லை, நிர்மா, காரி போன்றவை பெரும்பாலும் நேரடியாக கடைகளுக்கு பொருட்களை அனுப்பிவிடுகின்றன.

நம்ம ஊரில் மாநிலம், மாவட்டம்,நகரம் -> கடைனு நான்கு கைகள் மாறுது.

மேலும் வட மாநில கடைகள் , மொத்தமாக ஒருவரிடம் வாங்கினாலும் , தனியாக ஒருவர் பொருள் கொடுத்தாலும் வாங்கிடுறாங்க.

வட இந்தியாவில் 18 பாரதி வால்மார்ட் "பெஸ்ட் பிரஸ்" மொத்த விற்பனை கூடங்கள் இயங்குது, அவற்றிடம்ம் இருந்தும் "கிரானா ஸ்டோர்" எனப்படும் சில்லறை கடைகள் வாங்கி விற்றுக்கொண்டு தான் உள்ளார்கள்.

இந்துஸ்தான் யுனிலீவர், பி&ஜீ முதலான பொருட்களும் வால் மார்ட் மூலம் கடைகளுக்கு போய்க்கொண்டு தான் இருக்கு.

//பொட்டிக்கடைக்கு வாடகை,மின்சாரம் தவிர செலவீனங்கள் எதுவுமில்லை.கடைக்கே பொருள் விநியோகம்,விற்ற பின் காசு கொடுத்தால் போதும்,விற்கலைன்னா பொருள் சாவு தேதிக்கு முன்னாடி திருப்பி கொடுத்து விடுவது,சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய அவசியமில்லாத காரணங்களால் பொட்டிக்கடையும் சிறப்பாக செயல்படுகின்றன.//

அதே ,அதே நம்ம நாட்டிலும் இதானே கதை, எனவே ஆளுக்கு பங்கு என மார்க்கெட்டில் இடம் கிடைக்கும். எனவே அழிய வாய்ப்பே இல்லை. ,முழு தோசையும் எனக்கே என இப்போ எதிர்ப்பு சொல்பவர்களின் கதை இருக்கு.
---------------

வவ்வால் said...

ராச நட,

வரிசையா தவணையில் பின்னூட்டம் வருதே,

நிர்மா ஆரம்பத்தில் தமிழ் நாட்டிலும் காலுன்ற அக்ரசிவா விளம்பரம் செய்தது , நம்ம மக்கள் "பாப்புலர் பிராண்ட்" அடிமைகள் மேலும், நமது விநியோக முறை அவர்களுக்கு ஒத்துவரவில்லை.

அவர்கள் பெரும்பாலும் நேரடி வியாபாரம், நம்ம ஊரு போல மாநில வியோகஸ்தரிம் மொத்தமாக விற்றுவிட்டு போவதில்லை. பல மட்டங்களுக்கும் கமிஷன் வர்ர மாதிரி மாநில விநியோகஸ்தருக்கு விலை வைக்கணும் மலிவு விலை சரக்கு, என்பதால் அப்படி விலை வைக்க முடியவில்லை.

சர்ப் எல்லாம் பிரிமியம் வகை மார்க்கெட்டில் இடம் பிடிப்பது மொத்த பிரிமியம் வகை சந்தை அளவே 15% என படம் போட்டு இருக்கேன் பாருங்க.

காளி மார்க், பவண்டோ எல்லாம் அடிவாங்க காரணம் நம்ம உள்ளூர் வியாபாரிகள் தான் , எங்க கடையில் கோக்,பெப்சி தவிர வேற விக்க மாட்டோம்னு சொன்னதே அவர்கள் தான், பெரிய நிறுவனம் பெப்சி,கோக் தரும் அதிக கமிஷனும், இலவச ஃப்ரிட்ஜிக்கும் ஆசைப்பட்டே அவ்வாறு செய்தார்கள். மக்கள் ஒன்றும் காளிமார்க், பவண்டோ குடிக்க மாட்டென் என சொல்லவில்லை.

இப்பவும் நான் பவண்டோ கிடைச்சா 2 லிட்டர் வாங்கிடுவேன், இத்தனைக்கும் கோக் விட பவண்டோ விலை அதிகம்.

விகோ வஜ்ரதந்தி,பபூல் எல்லாம் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் பிராண்டை முறியடிக்க முடியவில்லை, காரணம் அவற்றிற்கு விநியோகஸ்தர்களின் ஆதரவு.

# வேலை வாய்ப்பு உருவாவதை பற்றி எல்லாம் முன்னர் எழுதிய பதிவில் சொல்லி இருக்கேன், சுட்டிப்போட்டால் படிக்காதிங்க.

பொருளாதாரம் என்பது பெரிய கடல் ,எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பேசிவிட முடியாது, அவ்வப்போது தனித்தனி கூறுகளை மட்டுமே பேச முடியும்.

--------------------

நாய் நக்ஸ் said...

follow up.....

நாய் நக்ஸ் said...

அப்படியே இந்த ஆம்வே பத்தி எழ்தறது...

உங்க ஸ்டைல்-ல் .....

மதுரை அழகு said...

Very informative post!

bandhu said...

விநியோகஸ்தர்களுக்கு இவ்வளவு பெரிய இரும்புப்பிடி இருக்கும் என்று நினைக்கவில்லை. எதுவும் மாறும் என்ற கூற்றின் படி, அந்நிய முதலீட்டினால் இது மாறும் என நினைக்கிறேன்.

bandhu said...

உங்கள் பதிவை படித்தபின் தோன்றுவது.. முதல் ஐந்து வருடங்களுக்கு வட இந்தியாவில் வால்மார்ட் வருகை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தென் இந்தியாவில் விநியோகஸ்த்தர்களின் பிடி பெரிய அளவில் தளரும். அப்போது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி மார்க்கெட் ஆகிவிடும். அதன் பின் தான் பாதிப்புகள் தெரிய வரும்.

Unknown said...

எல்லார்க்கும் பொதுவான (கவனிக்கவும்) விஷயங்களை பதிவிட எடுத்துக்கொண்டவுடன் நன்றாக அலசி ஆராய்ந்து ஆதாரங்களுடன் வழங்கும் உங்கள் நல்ல மனதுக்கு என் வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

வாங்க,நன்றி!

ஆம்வே டைரக்ட் சேல்ஸ் வகையில் செயல்படுது, அதில் சில கோல் மால் எம்.எல்.எம் வகையில் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன், இன்னும் பெருசா பிரச்சினை வரவில்லை, கூடிய சீக்கிரம் தகவல் சேகரித்து பதிவு போட பார்க்கிறேன்.

---------------
மதுரை அழகு,

வாங்க,நன்றி!

இயற்கை ஆர்வலர் போல, தெங்குமரகடா எல்லாம் போய் பார்த்து இருக்கீங்க. அனுபவத்தை நல்லா எழுதி இருக்கிங்க.

வெளிமான்கள் எனப்படும் "பிளாக் பக்" கோடியக்கரை சரணாலயத்தில் நிறைய இருக்கு. சீசனுக்கு போனால் ஃபிளமிங்கோ போன்ற வெளிநாட்டு பறவைகளும் பார்க்கலாம். நான் ரெண்டு முறை அங்கே போயிருக்கேன்.
-------------

பந்து,

வாங்க,நன்றி!

விநியோகஸ்தர்கள்,பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டு தான் இந்திய சில்லரை வர்த்தகத்தின் எஜமானர்கள்.

நீங்க சொன்ன மாற்றம் கூட இந்திய பெரு நகரங்களில் ஒரு குறிப்பிட்ட வருவாய் பிரிவில் தான் மாற்றம் உருவாக்கும், மேலும் அதனால் பொதுவாக போட்டி உருவாகி நுகர்வோருக்கு விலை குறைவாக பொருள் கிடைக்க வாய்ப்பு இருக்கு.
--------------

மார்க்க பந்து,

நன்றி!

நான் வழக்கமாக மார்க்க பந்துக்கள் என சிலரை சொல்வேன் :-))

பாராட்டுக்கு நன்றி! நான் பொதுவாக மக்களுக்கு தேவையான செய்திகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவேன், மற்றது எல்லாம் சும்மா டைம் பாஸ் வகை.
----------------

ராஜ நடராஜன் said...

நேற்று புதிய தலைமுறை கல்லூரி மாணவர்களுடன் இதே கலந்துரையாடல் செய்தது.

வேலை வாய்ப்பை கடந்து போயிருக்க கூடும்.

யாரு!அசின் சொல்லிச்சா சுட்டி போட்டா படிக்கறதில்லைன்னு:)

Unknown said...

"மார்க்க பந்து,

நன்றி!

நான் வழக்கமாக மார்க்க பந்துக்கள் என சிலரை சொல்வேன்"

சகோதரா இது நீங்க வச்ச பேருதான்

வவ்வால் said...

ராச நடை,

தமிழ் டி.விப் பொட்டியெல்லாம் பார்க்கிறிங்க ,நல்ல முன்னேற்றம்.

நாம எப்பவுமே காலத்துக்கு முன் குட்டியே பேசிடுறது, போன ஆண்டு நவம்பரில் அந்த பதிவு போட்டேன், இந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் அதையே பேசிக்கிட்டு இருக்கோம் :-))

அந்தப்பதிவுக்கு தான் கினவு தோழர்கள் என் கையைப்புடிச்சு இழுத்தாங்க :-))

//மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்துவிட்டால் , முறைசாரா வணிகர்கள் ,அவர்களிடம் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.இது நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி ஆனால் அந்த பெரிய கடைகளுக்கு வேலைக்கு ஆட்களே தேவை இல்லையா, அங்கே வேலை கிடைக்காதா? கிடைக்கும் ஆனால் எல்லாருக்கும் கிடைக்கும் இப்போது உள்ளது போல ஒரு சில குறீப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் என்ற சிறப்பு போய்விடும்.

இப்போது உள்ள முறை சாரா சில்லரை வர்த்தக கடைகளை நடத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரே, அவர்கள் கடையில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் வேலை செய்வார்கள், மேலும் ஆட்கள் தேவை எனில் அவர்கள் ஊரை சேர்ந்த சொந்தம் அல்லது, அவர்கள் சார்ந்த வகுப்பினரை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.வேறு யாரும் வேலைக்கு சேர்ந்து வியாபார நுணுக்கம் கற்றுக்கொள்ள முடியாது.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எல்லாருக்கும் வேலை தருவார்களே!//

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_29.html

ஆரம்பத்திலேயே சுமார் நான்கு லட்சம் பேருக்கு நேரடியாகவும், இன்னும் பல லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் சாத்தியமுள்ளது.

மேலும் விளைப்பொருள் வீணாகாமல் விநியோகிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வவ்வால் said...

மார்க்க பந்து,

ஆகா பழம்பெருச்சாளியா(சும்மா தமாசு),புதுசா யாரோன்னு நினைத்துவிட்டேன், நல்லது சகோ, ஆரம்பமே அதிரி புதிரியா இருக்கு :-))

நடத்துங்க ..நடத்துங்க... பொறவு நம்மளையே கலாய்க்கப்படாது சொல்லிப்புட்டேன்!

Anonymous said...

# பல லட்சம் மக்கள் வசிக்கும் நகரிலும் , தெருவுக்கு தெரு வணிக நிலையங்கள், அங்காடிகள் இருக்காது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே அங்காடிகள் இருக்கும்.

ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு சமூக இடத்தில் ஒரு சிறு பெட்டிக்கடை கூட அங்கு காண இயலாது.

எனவே பெருவணிகருக்கும், சிறு வணிகருக்கும் போட்டியிடும் களம் ஒரே இடமாக போய்விடுகிறது.

வால் மார்ட் பக்கத்திலேயே, சிறுவணிகரின் கடை இருக்கும், நேரடியான போட்டியை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.


This is totally your assumption or false understanding; You should first understand how cities in western countries were built. Shopping zones exist mainly out of the city and only big branded stores and supermarkets can afford to run there cos of high operational costs. There are no individual small traders in these zones.

Anonymous said...

வாங்கும் திறன்:

வாங்கும் திறனை மதிப்பிட ஒருவரின் வருமானம் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையின் படி உலக மக்களின் வருவாய் திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு அதனை வருவாய் பிரமீட் என வகைப்படித்தியுள்ளார்கள். அதன் படம் கீழே.

படம்: வருவாய் பிரமீடு:





அப்படத்தில் பார்த்தால் நான்கு வகையான பிரிவுகள் இருப்பதைக்காணலாம்.

ஆண்டு வருவாய் 20,000 டாலர்கள் உடையவர்கள் உச்சத்தில், அவர்கள் எண்ணிக்கை சுமார் 7.5-10 கோடி மட்டுமே.

இவர்களுக்கு சந்தை விலை ஏற்றம், பொருட்கள் தட்டுப்பாடு என்பதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

எனக்கு பொருள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும், விலையைப்பற்றி கவலையில்லை என்பார்கள், ஒரு சுவையான காப்பி 100 கி.மீக்கு அப்பால் இருக்கு என்றால் , கார், ஹெலிகாப்டர் என போயாவது குடித்து இன்புறும் உயர் வர்க்கம்.

ஐந்து நட்சத்திர விடுதி மட்டம் ,இங்கே ஏழு நட்சத்திர விடுதி இல்லையா ,இதெல்லாம்,என்ன நாடு,ஊரு , இன்னும் வளரவே இல்லை *&#@ என குமுறும் கோமகன்கள்! "High Income Group"

இவர்களுக்கு வால்மார்ட், டெஸ்கோ எல்லாம் பொட்டிக்கடை போல :-))

#அடுத்து ,ஆண்டு வருவாய் 20,000 டாலர், ஆனால் 1,500 டாலருக்கு மேல்.இவர்களை "Upper Middle Class" எனலாம்.

#ஆண்டு வருவாய் 1,500 டாலருக்கு மேல் ,ஆனால் 20,000 டாலர் எல்லையை தொட முடியாதவர்கள். "Middle Class" எனலாம்.

பிரிவு 2& 3 இல் இருப்பவர்கள் அவ்வப்போது மேலும் கீழும் வருமானத்தில் சஞ்சரிக்க கூடியவர்கள், ஆனால் ஒரு போதும் உணவு, உடை, உறைவிட தட்டுப்பாட்டுக்குள் சிக்காதவர்கள்.

தேவையான போது ஐந்து நட்சத்தி விடுதியிலும் போஜனம் செய்வார்கள் , இல்லையென்றால் சரவண பவன் போன்றவற்றிலும் கையை நனைப்பார்கள்.

இவர்களின் எண்ணிக்கை சுமார் 150-175 கோடி ஆகும்.

# கடைசியில் ஆண்டு வருமானம் சுமார் 1,500 டாலருக்கு கீழ் உள்ளவர்கள், இவர்களை "Lower Income Group" எனலாம்.

உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால், மொத்தம் உள்ள 600 கோடியில் இவ்வெண்ணிக்கை.

200 கோடி அளவிலான மக்கலே வருவாய் ரீதியாக செழிப்பாக இருப்பதை காணலாம்.

கடைசி நிலையில் , சுமார் 400 கோடி மக்கள் உள்ளார்கள். அவர்களின் ஆண்டு வருவாய் 1,500 டாலருக்குள், ஆனால் இந்தியாவில் சராசரி ஆண்டு வருவாய் 962 டாலர்கள் என்பதால் நாம் எல்லாம் நான்காம் நிலையில் உட்பிரிவாக 5 ஆம் நிலையில் இருக்க வேண்டியவர்கள் :-))
அந்த 5 ஆம் பிரிவு நிலையில் சேர முடியாமல் வறுமைக்கோட்டுக்கீழ் என ஒரு மக்கள் கூட்டம்ம் இந்தியாவில் இருக்கிறது என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.

உலகளாவிய பெரு வணிகர்கள் தங்கள் முதலீட்டை பெரிய அளவிலான சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது ,விரைவாக அதிகம் வியாபாரம் ஆக வேண்டும் என்றே நினைப்பார்கள், அப்பொழுது தான் அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் வரும்.

அப்படி நிறைய பொருட்களும், அடிக்கடி வாங்கி நுகர்வோர் யார் என பார்த்தால் வருவாய் பிரமீட்டில் மேல் இரண்டு பிரிவுகளே , ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு. ஆனால் இவர்களை தான் "potential Buyers" என்பார்கள்.

அதே சமயத்தில் அதிக அளவு நுகர்வு செய்யாத மக்கள் யார் என பார்த்தால் நான்காம் பிரிவில் உள்ளவர்களே, இந்திய அளவில் பார்த்தால் நான்காம் பிரிவிலும் 5, 6 என இருக்கு, இவர்கள் எல்லாம் மலிவான பொருளாக இருந்தாலும் அடிக்கடி வாங்கி,அதிகம் நுகர மாட்டார்கள், காரணம் துட்டு லேது!

இவர்கள் எல்லாம் மார்ஜினல் பையர்ஸ். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் 99% இந்த வகையிலே.

எனவே வால்மார்ட் போன்றவைக்கு இவர்கள் இலக்கே அல்ல. இவர்களை நம்பி கடையை திறந்தால் கடைக்கு மின்சார பில் கட்ட கூட வருவாய் வராது :-))

Your interpretation of the stats is illogical and your examples are over exaggerating. It is nothing but blabbering. PLEASE STOP THINKING FOR EVERYONE. I don’t know where you got that pyramid stats but it is totally out of date. With $20k , you can’t even clean your tongue in US  . Low income group are not the target for Supermarkets, so in India small traders will be losing most of their middle class customers which will result in a considerable loss in their sales. Apart from the miscellaneous shopping every middle class family does a monthly shopping , if they see that they can save 500rs every month they will be the first ones to switch over to supermarkets.

Anonymous said...

For years even before Independence we have been consuming foreign brands with Indian names, it is no secret. Can you tell me if there are any foreign manufacturer which produces rice,milk, wheat, vegetables, fruits, meat, sea food or anything which is in their natural form in India. You are always taking this debate as though it is a fight between Walmart vs Annachi stores. You are forgetting the cobblers,fishmongers ,street vendors etc. They will lost their middle class customers. Then do you want wheat from US, Apples from Newzealand , grapes from Spain. Please relax and try to understand the next line clearly. Foreign manufacturers produce brands in India using Indian resources and raw materials. If supermarkets can source it cheaper from any other country our local farmers & other SSI’s will be screwed. Recently talked with my parents in India , fruits and vegetables are much cheaper in the UK than India. People don’t need scents ,powders and cosmetics but what is important to them is they should avail quality food at less prices. Apparently Supermarkets will end up controlling prices.

Anonymous said...

வவ்வால்ஜி...இவ்வளவு நாள் உங்களுடன் பயணித்ததில் உங்களுக்கும் எனக்கும் உள்ள மாற்றுக்கருத்து ஒன்று மட்டுமே...

விவசாயி நலன் பேண வால்மார்ட் வந்தா நல்லதுன்னு சொன்னது...சொல்லப்போறது...

அது ஒரு அசுரனை தூக்கிட்டு இன்னொரு அசுரனை சோறு போட்டு வளர்ப்பது போல்...

என் நிலை இன்னும் வால்மார்ட் போன்றோர் உள்ளே நுழையக்கூடாது என்பதே...


இப்படிக்கு

வால்மார்ட்டை எதிர்த்துவிட்டு வால்மார்ட்டிலே சாமான் வாங்கும் ஒரு நடுத்தரவர்க்க குடிமகன்.

Anonymous said...

BTW,உங்கள் தொடர் உழைப்புக்கு வேறு வழியில்லாமல் ஒரு சல்யூட்...-:)

வவ்வால் said...

ப்ரியா கார்த்திக்,

வாங்க,நன்றி!

நீங்க சொல்வது போல எனது கற்பனையாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்கட்டும்.

ஒவ்வொரு வசிப்பிடங்கள் அருகிலும் கடைகள் இருக்கிறதா?

நீங்க சொல்ற ஷாப்பிங் ஸோன் எக்ஸ்குளுசிவ் மால்ல் போன்ற பகுதி, நகரிலேயே கடைகள் உள்ள பகுதியும் இருக்கல்லவா?

எனக்கு தெரிந்த நண்பர் சொன்னது , பொருட்கள் வாங்க என்றால் ஒரு 1/2 மணி நேர டிரைவில் தான் போகணும், இங்கெல்லாம் தெருவுக்கு தெரு கடை இருக்காது என்பதே.

இந்தியாவில் தெருவுக்கு ஒரு கடை இருக்கும்.அது போல வால்மார்ட்டால் திறக்க முடியாது.

--------------
20,000 டாலருக்கு மேல் என ஆவரேஜ் தொகையை சொல்லியுள்ளேன், அதன் பொருள் சரியா ஆண்டுக்கு 20,000 டாலர் என நினைத்தால் எப்படி?

சராசரி எப்போதும் குறைவாக தான் வரும்.

இந்தியர்களின் பெர் கேப்பீட்டா இன்கம் என சொல்வது 960 டாலர்களே(2011)

இந்த ஆண்டு 1000 டாலர் என 2012 பிப்ரவரியில் ஒரு செய்தியும் வந்தது. எனவே இந்தியாவில் எல்லாம் 1000 டாலர் சுமார் 50,000 தான் ஆண்டு வருமானமா எனக்கேட்பீர்களா?

//NEW DELHI: The per capita income of Indians for the first time crossed the Rs 50,000-mark in 2010-11, although using current prices as the barometer. According to the revised GDP data for the last financial year, per capita income is estimated to have risen 16.9% to Rs 53,331 compared to Rs 46,117 in the previous year.

The $1,000-average income of Indians is seen to be illusionary in economic circles as economists prefer to use factor cost to weed out the impact of inflation. Based on 2004-05 prices, per capita income saw a modest 6.4% increase and reached Rs 35,993 in 2010-11, compared to Rs 33,843 in the previous year.//

http://timesofindia.indiatimes.com/business/india-business/Per-capita-income-crosses-Rs-50000/articleshow/11707030.cms

அதே செய்தியில் உலக வங்கி 720 டாலர் என கணக்கிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

//"Real GDP growth is outstripping population growth so per capita income has been on the rise. Nominal incomes are rising due to the high inflation," said D K Joshi, chief economist at Crisil. According to the World Bank classification, India is a lower middle-income country. At around Rs 36,000 a year - or $720 - this translates into average income of less than $2 a day.//

எனவே பதிவில் நான் சராசரியான அளவை வைத்து உத்தேசமாகவே சொல்லி இருக்கிறேன்.

மேலும் இந்தியரின் ஆண்டு வருவாய் சராசரி 1000 டாலர் என வைத்துக்கொள்வதில் பிழையில்லை.

எனவே நம்ம நாட்டு வருவாய் அடிப்படையில் பார்த்தல் லோயர் இன்கம் குருப் தான் அதிகம் இருக்கிறது, இதனை மறுக்க முடியுமா?

தொடரும்...
---------------

வவ்வால் said...

தொடர்ச்சி...

//so in India small traders will be losing most of their middle class customers which will result in a considerable loss in their sales. Apart from the miscellaneous shopping every middle class family does a monthly shopping , if they see that they can save 500rs every month they will be the first ones to switch over to supermarkets.//

அதைத்தானே நானும் சொல்லி இருக்கிறேன் , மாதம் ஒரு முறை தான் சூப்பர் மார்கெட் போகும் வாய்ப்பு இருக்கு என.

மேலும் இதற்கு முன்னர் மாதம் ஒரு முறை மொத்தமாக வாங்கியது ஒரு மொத்த விலை கடையிலோ அல்லது ஏற்கனவே இருந்த சூப்பர் மார்க்கெட்டிலோ ஆகும், அருகாமை கடையில் தினசரி தேவைக்கே வாங்குவார்கள்.

வால் மார்ட் போன்றவை பெரிய கடைகள் சூப்பார் மார்கெட்டுகளுக்கு தான் போட்டியாக வரலாம். அதுவும் எல்லா இடத்திலும் சாத்தியமில்லை.

இப்போவே சென்னையில் ஏரியாவுக்கு ஒரு மோர், ரிலையன்ஸ்,ஸ்பென்சர்ஸ்,விதான், கிரேஸ் , நீல்கிரீஸ் என பலப்பெயரில் பல சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளது, ஆனால் அங்கு அனைவரும் போய்விடுவதில்லை. காரணம் இந்தியாவில் அனைவரும் கார் வைத்தில்லை, ரொம்ப தூரமாக்க போய் வாங்க மாட்டார்கள். இரு சக்ர வாகனத்தில் பொருட்களை கொண்டு வரும் தொலைவு ,அல்லது இலவச டோர் டெலிவரி கொடுத்தால் உண்டு.

மெட்ரொ, பெரிய நகரங்கள் அங்குள்ள உயர் வருவாய் பிரிவினரை இலக்காக வைத்தே வால்மார்ட் செயல்படும், எனவே அனைத்து மிடில் கிளாஸிம் அங்கு போய்விட மாட்டார்கள்.

மார்கெட் ஷேர் பற்றி இன்னொரு படம் போட்டுள்ளேன் அதில் பார்த்தால் தெரியும். அதிக பட்சம் 15% சந்தையை தான் அவர்களால் கவனிக்க முடியும்.

------------
// Can you tell me if there are any foreign manufacturer which produces rice,milk, wheat, vegetables, fruits, meat, sea food or anything which is in their natural form in India.//

மீன் மற்றும் மாமிசங்களை சூப்பர் மார்கெட்டில் இந்தியாவில் பெரும்பாலும் வாங்கவே மாட்டார்கள். நீங்களே யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பால், காய்கறி,பழங்கள் எல்லாம் மொத்தமாக வாங்க போவதில்லை, இப்போதும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், நீல்கிரீஸ் என எல்லா சூப்பர் மார்க்கெட்டில் மேல் சொன்னவை விற்கிறார்கள் ,அரிசி உட்பட.

அனைவரும் அங்கு போவதில்லை, அதுவும் மாதத்திற்கு ஒரு முறை தான். நீங்கள் மென் பொருள் துறையில் இருப்பவர்களை மட்டும் கவனித்து விட்டு சொல்கிறீர்கள் என நினைக்கிறேன், அவர்கள் தான்ன் அடிக்கடி சூப்பர் மார்கெட் போவதுண்டு, அதனை தான் பொதுவாக உயர் வருவாய் பிரிவு தான் சூப்பர் மார்க்கெட்டினை அதிகம் நாடும் என சொல்லி இருக்கிறேன்.

மார்கெட் ஷேரில் சிறிது வால்மார்ட் போன்றவர்களுக்கும் போகும், அதே சமயம் இப்போது உள்ள சில்லறை வர்த்தகமும் நடக்கும். இரு தரப்பும் வியாபாரம் செய்ய கூடிய சூழல் நிலவும். இதனால் பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் நடக்கும்.

இப்போது மட்டும் ஆப்பிள், ஆரஞ்ச் என இறக்குமதி ஆகாமலா இருக்கு, சாதாரண தள்ளுவண்டியில் பழம் விற்பவரே அயல்நாட்டு இறக்குமதி பழங்கள் வைத்துள்ளார்.

இப்பொழுதும் உள்ளூர் வியாபாரிகளே இறக்குமதி செய்து கொள்ளலாம்.

எண்ணை ,பருப்பு, மசாலா பொருட்கள், தேயிலை,காபி, வெங்காயம், பழங்கள் என பலவும் வியாபாரிகளால் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு மூலப்பொருளை பயன்ப்படுத்துவது பெயரளவில் தான்.

ஜான்சன் நாப்கின், டிஷ்யு பேப்பரின் கவரில் பாருங்கள் மேட் இன் சைனா என்று தான் இருக்கும். பல பொருட்களும் அப்படித்தான்.

மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துக்கொள்கின்றன, தடையேதும் இல்லை.

மேலும் மற்றவற்றை விரிவாக அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

வவ்வால் said...

ரெவரி,

வாங்க,நன்றி!

ஹி...ஹி வால்மார்ட் வாடிக்கையாளரே இப்படி சொல்கிறாரே :-))

இப்பவும் நான் வால்மார்ட் தான் வேண்டும் என சொல்லவில்லை, ஆனால் விவசாயிகளின் விளைச்சல் சரியான முறையில் கொள்முதல் செய்யப்படுவதில்லை, மேலும் நுகர்வோருக்கும் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய பொருள் கிடைப்பதில்லை.

இந்நிலை மாற வேண்டும்.அரசு செய்யும் என்ற நம்பிக்கை இங்கு யாருக்குமே இல்லை, மின்வெட்டுக்கு ஒன்றும் தீர்வை காணோம். பருவ மழை பொய்த்த நிலையில் மின்வெட்டால் பல ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் கருகியுள்ளன. அடுத்தாண்டு கடும் விலைவாசி ஏற்றம் இருக்கும்.

உதாரணமாக பார்த்தால் இந்தாண்டு வெங்காயம் நிறைய விளைஞ்சது ஆனால் வாங்க ஆள் இல்லை, பல விவசாயிகள் ரோட்டில் கொட்டும் நிலை. ஆனால் கடையில் வெங்காயம் ஒன்றும் மலிவாக கிடைக்கவில்லை.

இந்தாண்ட்டு வெங்காயத்தால் நட்டமடைந்த விவசாயி அடுத்தாண்டு வேறு பயிர் செய்வான் , வெங்காயத்துக்கு டிமாண்ட் வரும் விலை ஏற்றுவார்கள்.

ஒரு முறை தட்டுப்பாடால் ஏறிய விலை மீண்டும் சகஜமாக பொருள் கிடைக்கும் நிலையில் , விலை ஏறிய அளவே இறங்குவதில்லை இந்தியாவில் , ஒரு புதிய விலையில் இறங்கி நிற்கும்.

இதெல்லாம் யார் செய்வது?

செய்தி காண்க:

http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=20094&cat=1

-----------

உங்க வெளிப்படையான பாராட்டுக்கு ,நன்றி!

அ. வேல்முருகன் said...

பொன் வண்டு, ஊர்வசி சோப்புகள் காலிமார்க், மாப்பிள்ளை வினாயகர் கலர், சோடா காணாமல் போனது தெரியாது போல் வாவ்வாலுக்கு

மற்றொரு அரிய கண்டுபிடிப்பு, ஒரு கிலோ, அரை கிலோ வாங்குபவன் அண்ணாச்சி கடையில்தான் வாங்குவான், வால் மார்ட் போக மாட்டான்.

அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளாகா இனிமே வால்மார்ட்டில் மட்டும்தான் கிடைக்கும், வாவ்வால் ஆசிர்வதித்து விட்டார்.

நாய் நக்ஸ் said...

பாபா கவுன்ட் டௌன் ஸ்டார்ஸ்......
ரெடி....
1......
2....
3.........
4........

இது வவ்வாலுக்கு........!!!!!!!!!

Anonymous said...

நீங்க சொல்வது போல எனது கற்பனையாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்கட்டும்.

ஒவ்வொரு வசிப்பிடங்கள் அருகிலும் கடைகள் இருக்கிறதா?

நீங்க சொல்ற ஷாப்பிங் ஸோன் எக்ஸ்குளுசிவ் மால்ல் போன்ற பகுதி, நகரிலேயே கடைகள் உள்ள பகுதியும் இருக்கல்லவா?

எனக்கு தெரிந்த நண்பர் சொன்னது , பொருட்கள் வாங்க என்றால் ஒரு 1/2 மணி நேர டிரைவில் தான் போகணும், இங்கெல்லாம் தெருவுக்கு தெரு கடை இருக்காது என்பதே.

இந்தியாவில் தெருவுக்கு ஒரு கடை இருக்கும்.அது போல வால்மார்ட்டால் திறக்க முடியாது.

Some states in US are very big with low population density. Not only shops but your nearest neighbour will be a mile away. This varies in Europe. Tesco is a 5 minute walk from my house; Famous pubs are closing down in an alarming rate in London every year. This is only a sample. I am again stressing the point that they will take any form ie any size of operation from small to big size stores.

Anonymous said...

20,000 டாலருக்கு மேல் என ஆவரேஜ் தொகையை சொல்லியுள்ளேன், அதன் பொருள் சரியா ஆண்டுக்கு 20,000 டாலர் என நினைத்தால் எப்படி?
You only told that these people with $20k income will fly 100 miles to get a cup of coffee. That’s why I mentioned you can hardly do anything with that income in Europe or US.

Anonymous said...

மேலும் இதற்கு முன்னர் மாதம் ஒரு முறை மொத்தமாக வாங்கியது ஒரு மொத்த விலை கடையிலோ அல்லது ஏற்கனவே இருந்த சூப்பர் மார்க்கெட்டிலோ ஆகும், அருகாமை கடையில் தினசரி தேவைக்கே வாங்குவார்கள்.

Are you refusing to accept this will result in loss of sales for the small traders , wont they lose the sales what the middle income group earners were spending every month? I don’t know whether you do shopping for your house but ask your wife or mother about their shopping pattern. People don’t go to shops every day to buy for daily needs as they know it is expensive to buy 100 gms of sugar compared to 500 gms of sugar.

நாய் நக்ஸ் said...

YOWWWW வவ்வாலு இது என்ன ஆங்கில தளமா????

அப்புறம் நானும்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
ஆமா சொல்லிப்புட்டேன்.....
என்னை பத்தி தெரியும்ல.........?????

Anonymous said...

மீன் மற்றும் மாமிசங்களை சூப்பர் மார்கெட்டில் இந்தியாவில் பெரும்பாலும் வாங்கவே மாட்டார்கள். நீங்களே யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Y not ? I think you have misunderstood again about how supermarkets sell fish ,meat. They are not frozen or processed but some stores got separate stalls selling fresh fish and meat. I do not understand why people wouldn’t want to buy from them

Anonymous said...


இப்போது மட்டும் ஆப்பிள், ஆரஞ்ச் என இறக்குமதி ஆகாமலா இருக்கு, சாதாரண தள்ளுவண்டியில் பழம் விற்பவரே அயல்நாட்டு இறக்குமதி பழங்கள் வைத்துள்ளார்.

இப்பொழுதும் உள்ளூர் வியாபாரிகளே இறக்குமதி செய்து கொள்ளலாம்.

Here how exactly are the local farmers going to benefit? If we are importing fruits which can be grown here , it is a sign we are digging our own grave.Like I told you earlier I am not supportive of the existing system and also of the FDI in retail.

வவ்வால் said...

பிரியா கார்த்திக்,

நன்றி!

நல்லா கூர்மையாக கவனித்து இருக்கிங்க, பாராட்டுக்கள்.

20,000 டாலர் மற்றும் அதற்கு மேல் என்ற பொருளில் தான் நான் எழுதினேன், அதற்கு மேல் என தெளிவாக குறிப்பிடவில்லை, படத்தில் >20,000 என தான் இருக்கு, அதனையே எழுத்தில் சொல்லும் போது தவறிவிட்டேன். மன்னிக்கவும்.

ஆனால் இந்திய வருவாய் சூழல் சற்றும் மாறவில்லை, சரியாகவே சொல்லி இருக்கிறேன், பிப்ரவரி-2012 காலம் வரையில் அதான் நிலை.

நமது வாங்கும் திறன் சராசரியாக குறைவு, மேலும் இந்தியாவில் பலரும் நிலையான வருவாய் இல்லாதவர்கள்.

வருமான வரித்துறையின் கணக்கின் படி 2011 ஆம் ஆண்டு காலத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை மொத்தமே 3.5 கோடி பேர் மட்டுமே(3% மக்கள்). அதாவது ஆண்டு வருவாய் 2 லட்சத்திற்கும் மேலானவர்கள். இவ்வெண்ணிக்கை மிக குறைவு ,எனவே வசதியான வருவாய் உள்ளவர்கள் சதவீதம் சுமார் 5% க்குள் தான்.

அச்சிறு கூட்டத்தினை மட்டுமே சூப்பர் மார்க்கெட்கள் கவர முடியும்.

-----------
//This is only a sample. I am again stressing the point that they will take any form ie any size of operation from small to big size stores. //

நீங்கள் சொல்வது உண்மையாக கூட இருக்கலாம், ரிலையன்ஸ், மோர் போன்றவற்றின் செயல்பாடுகளை வைத்து பார்க்கும் போது அவ்வளவு எளிதல்ல என்பது தெரிகிறது.

சுபிக்‌ஷா என்ற சூப்பர் மார்கெட் ஊரேங்கும் கிளைகள் திறந்து கடசியில் நஷடபட்டு மூடிய வரலாறும் உள்ளது.

வால்மார்ட். டெஸ்கோ எல்லாம் கண்டிப்பாக தடுமாறும் என்பதே எனது கணிப்பு.

சில்லரை வர்த்தகத்தில் போட்டி உருவானால் தானே நுகர்வோருக்கு நல்லது என ஏன் நினைக்க கூடாது?

----------------
//Are you refusing to accept this will result in loss of sales for the small traders , wont they lose the sales what the middle income group earners were spending every month?//

பதிவிலேயே இதனை சொல்லி இருக்கேன், வால்மார்ட் போன்றவர்களுக்கும் வியாபாரத்தில் ஒரு குறிப்பிட்ட ஷேர் போகும் என, in our Indian condition both type of Retail business can co- exsist with out any problem.

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

//People don’t go to shops every day to buy for daily needs as they know it is expensive to buy 100 gms of sugar compared to 500 gms of sugar. //

இங்கே தான் இந்தியாவின் மக்கள் நிலையை நீங்கள் புரிந்து கொள்ள தவறிட்டிங்க.

50% மக்கள் நிலையான வருவாய் இல்லாதவர்கள், இவர்கள் மாநகரங்களிலும் வசிக்கிறார்கள். மேலும் நடுத்தர வர்க்கமும் அவ்வப்போது தினசரி வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக 90% மக்கள் தேவைக்கு தான் வாங்குவார்கள் ,மிக அதிகமாக வாங்க்கி வைக்கும் பழக்கமே இல்லை.

ஓவ்வொரு புற நகர் ரயில் நிலையங்களின் வெளியேறும் வழியிலும் நிறைய தரைக்கடைகள் காணலாம், தினசரி வேலை விட்டு வரும் போது வாங்கும் மக்கள் இருக்கிறார்கள். இந்தியா ஒரு கலவையான நாடு மேலை நாடு போல சிலக்குறிப்பிட்ட வகைக்குள் மக்களை அடக்கிட முடியாது.

இன்னமும் தள்ளுவண்டியில் வரும் காய்கறி காரரிடம் தக்காளி,கீரை என வாங்கிக்கொண்டு உள்ளோம், 5 நிமிடத்தொலைவில் காய்கறி கடையும் இருக்கு அங்கு வாரத்தில் ஒரு நாள் தான் வாங்குகிறோம், ஆனால் அவ்வப்போது ஏதோ ஒன்று தீர்ந்துவிடும். எனவே வாசலில் வந்து அழைப்பவரிடம் வாங்குவதுண்டு.

//Y not ? I think you have misunderstood again about how supermarkets sell fish ,meat. They are not frozen or processed but some stores got separate stalls selling fresh fish and meat. I do not understand why people wouldn’t want to buy from them//

நீங்கள் சொன்னது போல பிரஷ் சிக்கன், மட்டன் ,மீன் விற்பதற்கு இங்கு சாத்தியக்கூறு குறைவு.

அப்படியே விற்றாலும் ஒவ்வொருவர் முன்னாலும் வெட்டி கொடுக்க மாட்டார்கள், இந்தியாவில் ஏற்கனவே வெட்டி வைத்த மீன்,சிக்கன் என வாங்க மாட்டார்கள், ஆடு கூட முழுசாக அறுத்து தொங்கிக்கொண்டு இருக்கணும்.இதெல்லாம் சூப்பர் மார்கெட் காரர்களுக்கு சாத்தியமில்லை.

அசைவ உணவு வாங்க அருகாமை கடையை நாடுவது தான் வழக்கம்,
------------
//Here how exactly are the local farmers going to benefit? If we are importing fruits which can be grown here , it is a sign we are digging our own grave.Like I told you earlier I am not supportive of the existing system and also of the FDI in retail. //

அதைத்தானே சொல்லிக்கொண்டுள்ளேன், இப்போது உள்ளவர்களே ,அனைத்து வகையிலும் உள்ளூர் உற்பத்திக்கு சாவு மணியை தான் அடித்துக்கொண்டுள்ளார்கள், இத்தனை நாளாக அதனைப்பற்றி கவலையே படவில்லை, இப்போ வால்மார்ட் போன்றோர் வருகிறார்கள் என்றதும் உள்ளூர் விவசாயிகள் அக்கறை உள்ளது போல பேசுகிறார்கள், அதனை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.

நானும் வால்மார்ட் தான் வர வேண்டும் என சொல்லவில்லை, உள்ளூர் வியாபாரிகள் தங்களது வியாபார போக்கினை மாற்றிக்கொள்ளவில்லை, எனவே ஏதோ ஒரு வகையில் மாற்றம் வேண்டும் என சொல்கிறேன்.

இந்தியாவில் உற்பத்தியாகும் காய்,கனி, தானியங்களில் 30-40% வீணாக போகிறது என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதனை மாற்ற வேண்டாமா?

வியாபாரிகளின் விற்பனை விலை குறைய கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு குறைவாக கொள்முதல் செய்கிறார்கள், விளைவித்த விவசாயி தான் வாங்க யாருமில்லாமல் நட்டப்படுகிறான்.

உங்களின் பொறுமையான உரையாடலுக்கு நன்றி! அடுத்த பதிவில் இன்னும் சில விவரங்களை அளிக்க இருக்கிறேன்.

மேலும் நீங்கள் இவ்வொரு பதிவை மட்டும் வைத்து பேசுவதாக படுகிறது, நான் தொடர்ச்சியாக சில விவசாயப்பதிவுகள், வணிகம் என எழுதியுள்ளேன், அதில் ஒரு பகுதி தான் இப்பதிவு, அனைத்தும் படித்துப்பாருங்கள் தெளிவான ஒரு பார்வை கிடைக்கும்.

நன்றி!
------------------

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

என்னா வெள்ளாட்டு இது, நம்ம கடைக்கு கூட்டமே வரதில்லை, இதுல வரவங்களையும் தொறத்திவுட பார்க்குறிங்களே.

பொருளாதார ரீதியா தெளிவா விவாதிக்க இங்கே பலரும் சோம்பல் படும் போது ஏதோ இவங்களாவது பொருளாதாரம் பத்தி பேசுறாங்கன்னு , ஆங்கிலத்தை கண்டுக்காம விடுங்க.

உங்க ஆங்கில பாஷையை அவுத்துவிட்டா நாடு தாங்குமா :-))
----------

வேல் முருகரே,

வாங்கோ, என்னாத்துக்கு டென்ஷன்?

பொன்வண்டு,அரசன் சோப்பை எல்லாம் வால்மார்ட்டா வந்து அழிச்சுது? எல்லாம் நம்ம ஆட்கள் தானே.

பெப்சி,கோக் வந்தாங்க, யாரு மாப்பிள்ளை விநாயகர், டொரினோ எல்லாம் தடை செய்தா? எல்லாம் உள்ளூர் கடை யாவாரிங்க தான்.

நான் இப்போவும் பவண்டோ, கோலி சோடா கிடைச்சா குடிப்பேன், கடைக்காரங்க தான் வாங்கி வைப்பதேயில்லை.

இவங்களா பெப்சி,கோக்கிற்கு அடிமையாக ஆகிட்டு , வால்மார்ட்டை மட்டும் அழிக்க வருதுன்னா எப்பூடி?

நீங்க உண்மையில உள்நாட்டு வியாபாரத்தை பெருக்கணும்னா நான் பட்டியல் போட்ட பொருளை எல்லாம் வாங்காம இருங்க பார்ப்போம்.

இன்னும் நிறைய அடுத்தப்பதிவில் வருது.

ஒருக்கா நெல்லு, மல்லாட்டைனு போட்டு விக்க நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் போய்ப்பாருங்க, நீங்களே நொந்து போவீங்க.

கடனை வாங்கி விவசாயம் செய்துவிட்டு ,விளைச்சலை விக்க முடியாம கஷ்டப்பட்ட விவசாய குடும்பத்துல இருந்து வந்தவன் தான் நான்.

மிக சொற்பமான வியாபாரிகளுக்காக பேசும் நீங்க எல்லாம் விவசாயிகள் கஷ்டப்படுவதை பற்றி என்னிக்காவது பேசி இருப்பிங்களா?

கேட்டால் யாரு கஷ்டப்பட்டு விவசாயம் செய்ய சொல்றாங்கன்னு சொல்வீங்க, அப்புறம் அரிசி,பருப்பு எல்லாம் ஆகயத்துல இருந்தா கொட்டும்?

குறும்பன் said...

அமெரிக்காவில் வால்மார்ட் தொலைவுல தான் இருக்கும். நகர மையத்தில் இருக்காது. வால்மார்ட் பக்கத்துல தான் இருக்கும் 1/2 மணி நேரத்தில் போயிடலாம் எப்போ? சாலையில் கூட்டம் குறைவா இருந்துதது என்றால். எல்லா இடத்தில் இருக்கும் வால்மார்ட்டும் சூப்பர் வால்மார்ட் இல்லை. சில இடங்களில் சூப்பர் வால்மார்ட்டுக்கு உள்ளூர் மக்கள் ஒத்தக்கனும், நகர்ப்புறங்களில் உள்ள கடைகளுக்கு தான் இச்சிக்கல் அதிகம் வரும். ஆனா cys, giant, wallgreen, metro எல்லாம் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தான் இருக்கும். தள்ளி இருந்தா ஒரு பய வரமாட்டான்.
வால்மார்ட் மீன் விக்கறதில்லை. ஆனா கோழி, மாடு, பன்னி கறி விக்குது. அது முன்னாடியே வெட்டப்பட்டு பாக்கட்டில் கிடைக்கும். சில கொரியன் சூப்பர் மார்க்கெட்டில் மீன் உயிரோடு இருக்கும் அதை நமக்கு முன்னாடியே நாம சொல்வது போல் வெட்டி சுத்தப்படுத்தி கொடுப்பார்கள். என்ன, காசு அதிகமா இருக்கும். அங்க கோழி, மாடு, பன்னி கறி கிடைக்கும். அது முன்னாடியே வெட்டப்பட்டு பாக்கட்டில் கிடைக்கும்.


என் நண்பர் ஒருவர் கோக்கா கோலாவின் சந்தைபடத்துதல் துறையில் வேலை செய்தார். பெட்டிக்கடைகளுக்கு இலவசமா மன்னிக்க விலையில்லாமல் கோக்கா கோலா குளிர்சாதன பெட்டி தரும் அதில் கோக்கா கோலா மட்டும் தான் வைக்க வேண்டும் எனவும் மற்றவர்களின் (பெப்சி)குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது எனவும் சொல்லிவிடுவார்கள் இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே குளிர்சாதன பெட்டி கிடைக்கும். பெப்சியும் இதே மாதிரி நிபந்தனை விதிக்கும். இது இந்திய சந்தையை பிடிக்க ஆரம்பத்தில் அவர்கள் போட்ட சண்டைகளில் ஒன்று. இந்த சண்டையில் தான் நம்ம காளிமார்க், பவண்டோ, மாப்பிளை விநாயகர் எல்லாம் அடிபட்டு காணாமல் போனார்கள்.

நான் சில்லரை வணிகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கற ஆளு. சில்லரை வணிகத்துக்கு வேண்டாம், கிடங்கு கட்டினா பொருள் சேதம் குறையுமே, உபரியா இருக்கறத சேமிக்கலாமே, வீணா போறத தடுக்கலாமே கிடங்கு கட்ட காசில்லைன்னு புலம்பறீங்களே அங்க அனுமதிங்கன்னு சொல்ற ஆளு.

நீங்க சொல்றத பார்க்கும் போது பரிசீலனை பண்ணனும் போல இருக்குது. நம்மூர் காரங்க பண்ற சிண்டிகேட் வேலை தெரியாம போச்சு. நிர்மா தமிழ்நாட்டில் நல்லா போச்சே. ஆனா இப்ப எங்குபார்த்தாலும் லீவர் பொருட்கள் தான்.

குறும்பன் said...

cys அல்ல CVS

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,நன்றி!

நீங்க சொல்றத பார்த்தால் கடைகள் தூரமா இருக்கும்னு தெரியுது, ஆனால் சில கடைகள் மக்கள் நெருக்கம் உள்ள இடத்திலும் இருக்கும்னு சொல்றிங்க.

ஆனால் யாருமே தெருவுக்கு ஒரு கடை இருக்கும்னு சொல்லலையே :-))

இந்தியாவில் கடைகள் இருப்பது போல் இருக்குமா?

அயல்நாட்டில் எல்லாருமே ஒரு நிலையான வருவாய் உள்ளவர்கள் தான் இது போன்ற கடைகளில் மொத்தமாக வாங்குறாங்க.

இந்தியாவில் இன்றும் அன்றாடம் அரிசி ,பருப்பு , புளி என வாங்கி பொங்கி சாப்பிடும் மக்கள் 50% இருக்காங்க.

நான் சிறிய அளவிளான கட்டுமானத்துறையில் மேற்பார்வையாளராக இருந்துள்ளேன், தினசரி சம்பளம் கொடுக்கணும் , அப்படி கொடுக்கும் போது சில நாட்களில் நாளைக்கு சேர்த்து வாங்கிக்கலாமே என சொன்னால் என்னமா சண்டை போடுவாங்க தெரியுமா? நாங்க இந்த காசை வச்சு தான் சமைச்சு சாப்பிடனும், என்ன இப்படி சொல்றிங்க என்று தான் மல்லுக்கட்டுவாங்க, பணம் வரலையே இன்னும் என சொன்னால் என்னை தான் திட்டுவார்கள், ஏன் முன்னாடியே வாங்கி வைக்கிறதுனு.

இதான் பல உழைக்கும் வர்க்க மக்களின் நிலை.

இந்தியாவில் தாராளமாக காசு புழங்கும் மக்கள் சில கோடிகள் தான்.

நம்ம ஊரில் எல்லாம் மெகா சூப்பர் மார்க்கெட் எல்லாம் எடுபடாது, ஏதோ நானும் வரேன்னு வால்மார்ட் வருது ,என்னாகுதுனு பார்ப்போம்.

// அங்க கோழி, மாடு, பன்னி கறி கிடைக்கும். அது முன்னாடியே வெட்டப்பட்டு பாக்கட்டில் கிடைக்கும்.//

நானும் இதைத்தான் சொன்னேன் ஒத்துக்கவே இல்லையே பிரியா கார்த்திக் அவர்கள் :-))

பிரஷ்ஷாக எல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் இறைச்சி விற்க வாய்ப்பே இல்லை, இருந்தா இன்னேரம் ரிலையன்ஸ், மோர் ,நீல்கிரீஸ் வித்து இருக்க மாட்டாங்களா?

நம்ம ஊரில் எல்லாம் சிக்கனை லைவ் ஆக எடைப்போட்டு கண்ணு முன்னாடி இறகு உறிச்சு வெட்டிக்கொடுக்கணும்.

//என் நண்பர் ஒருவர் கோக்கா கோலாவின் சந்தைபடத்துதல் துறையில் வேலை செய்தார். பெட்டிக்கடைகளுக்கு இலவசமா மன்னிக்க விலையில்லாமல் கோக்கா கோலா குளிர்சாதன பெட்டி தரும் அதில் கோக்கா கோலா மட்டும் தான் வைக்க வேண்டும் எனவும் மற்றவர்களின் (பெப்சி)குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது எனவும் சொல்லிவிடுவார்கள் இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே குளிர்சாதன பெட்டி கிடைக்கும். பெப்சியும் இதே மாதிரி நிபந்தனை விதிக்கும். இது இந்திய சந்தையை பிடிக்க ஆரம்பத்தில் அவர்கள் போட்ட சண்டைகளில் ஒன்று. இந்த சண்டையில் தான் நம்ம காளிமார்க், பவண்டோ, மாப்பிளை விநாயகர் எல்லாம் அடிபட்டு காணாமல் போனார்கள். //

இதை நான் முன்னாடியே சொல்லிட்டேங்க.

உள்ளூர் குளிர்பானங்கள் விற்பனையாகமல் போக காரணம் நம்ம ஊரு வியாபாரிகளே தான் காரணம்.

//நம்மூர் காரங்க பண்ற சிண்டிகேட் வேலை தெரியாம போச்சு. நிர்மா தமிழ்நாட்டில் நல்லா போச்சே. ஆனா இப்ப எங்குபார்த்தாலும் லீவர் பொருட்கள் தான். //

இப்போ எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் மலிவு விலை சலவைத்தூள் போட்டு அதை விற்க சொல்லி விட்டன ,நம்ம ஊரு யாவாரிகளும் வழக்கம் போல மண்டைய ஆட்டியாச்சு, இப்போ எல்லாம் நிர்மா இருக்கானு கேட்டா அப்படினா என்னனு கடையில கேட்பாங்க :-))

நம்ம ஊரு யாவரிகளுக்கு ஒரு பொருளை வித்தா என்ன நிக்கும் இதான் கணக்கே.

பெப்சி ,கோக் எல்லாம் வெளியில தான் சண்டை அதை விநியோகம் செய்வது எல்லாம் ஒரே ஆளாக தான் இருக்கும் :-))

ஒரு வியாபார குடும்பத்தில் அண்ணன் கோக் ,தம்பி பெப்சினு விநியோகம் எடுத்து சப்ளை செய்றாங்க :-))

தமிழ்நாடு முழுக்க இதான் நிலைமை.

Raj said...

வௌவால்.. நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.. உங்கள் விவசாயம் குறித்த பார்வை எனக்கு பிடிக்கும்...
இங்கு எல்லா வால்மார்ட் போறதுக்கும் அரை மணி நேரம் ஆகாது.. அமெரிக்க இந்தியாவை விட அய்ந்து மடங்கு பெரிய நாடு.. ஊரை பொருத்து தூரம் மாறும்.. நான் பல நகரங்களில் வாழ்ந்து இருக்கிறேன்.. வீதிக்கு வீதி கடைகள் கிடையாது.. நீங்கள் சொன்ன மாதிரி சின்ன சின்ன ஷாப்பிங் ஏரியா இருக்கும்.. அங்கு எல்லா விதமான கடைகளும் இருக்கும்.. மற்றபடி ஒவொவொரு பெட்ரோல் பங்கிலும் சில விதமான பொருள்கள் விற்பார்கள்.. (Cool Drinks, Cigarettes, Beer, Chocolates, Donuts etc..)
Its hard to digest.. but reality is.. நாம் அமெரிக்கர்கள் பற்றிய கற்பனை கொஞ்சம் ஓவர்.. ரியாலிட்டி என்னன்னா நெறைய பேர் ஓட சராசரி வருமானம் ரொம்ப கம்மி.. நம்ம IT மக்கள் நிறைய சம்பாதிப்பதால் எல்லாரையும் அப்படி நினைக்கிறார்கள். இங்கு வால்மார்ட் மற்றும் பெரிய அங்காடிகளில் coupons வைத்து பல சரக்கு வாங்குபவர்கள் ஏராளம்.. (to save money)
Otherwise.. It’s foolish to compare our meat industry/consumption with western meat industry/consumption... What you said is exactly right... Even here Indians look for Halal meat shops and farms which sells relatively fresh meat..
வால்மார்ட் பிரேக் எவென் பண்ண கஷ்டப்படும் என்ற உங்கள் கருத்து தான் என்னுடையதும்.. I am waiting to see what kind of strategy they are going to adapt... big stores with everything under one roof may not work out for our country.. In that case, they have to move outskirts, space constraints etc.. They may break out different departments into smaller stores and place it strategically... Like small grocery stores in multiple places.. Big expensive items as a store within a mall may be.. Let’s wait and see... Its going to happen whether we like it or not...

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

ராஜ் என்ற பெயரில் நிறைய பேர் நம்ம பதிவை படிக்கிறாங்களே!!!

அமெரிக்காவை பற்றி நான் கேள்விப்பட்டதை வைத்தே எழுதினே, நீங்களும் சரியென்றே சொல்கிறார்கள், சிலர் மட்டும் வித்தியாசமாக சொல்கிறார்கல், வாதத்திற்காக என நினைக்கிறேன்.

கடுகு கூட ஒரு கிலோ தான் வாங்கனும், ஏதேனும் ஒன்று தீர்ந்துவிட்டால் ஆத்திர அவசரத்துக்கு உடனே வாங்க முடியாது என்றெல்லாம் சொல்லியுள்ளார்கள்.

இறைச்சி வகைப்பற்றி நீங்கள் சொன்னது போல தான் சொன்னார்கள்.

பண்ணையில் இருந்து பால் என விற்பது விலைக்கூட இருக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். எனவே டெட்ரா பேக் பால் வாங்கி வைத்து சாப்பிட வேண்டிய நிலை இருக்கும் என சொன்னார்கள்.

நம்ம ஊரு மக்களின் மனோபாவத்திற்கு பெரிய மால் வகை சூப்பர் மார்க்கெட் எல்லாம் சரி வராது. மெட்ரோவில் வசிக்கும் எலைட் பிரிவு மக்கள் தான் போவார்கள்.

நானும் வால்மார்ட் போன்றவை இந்தியாவில் என்ன மாதிரி யுக்திகள் கையாள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளேன்.

இந்தியாவில் உணவுப்பொருள் விலைவீக்கம் நீண்ட நாட்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளது,ஆனால் போதுமான உற்பத்தியும் இருக்கு, அப்படியானால் இதற்கு காரணம் என்ன?

உற்பத்தி நுகர்வோருக்கு சரியான விலையில் சென்றடைய வில்லை என்பது தானே.

இன்னும் விரிவாக அடுத்தப்பதிவில் ,வருவாய், வாங்கும் திறன்,இன்பிளேஷன் எல்லாம் வைத்து ஒரு பார்வை பார்க்க இருக்கிறேன்.

Anonymous said...


// அங்க கோழி, மாடு, பன்னி கறி கிடைக்கும். அது முன்னாடியே வெட்டப்பட்டு பாக்கட்டில் கிடைக்கும்.//

நானும் இதைத்தான் சொன்னேன் ஒத்துக்கவே இல்லையே பிரியா கார்த்திக் அவர்கள் :-))

http://your.asda.com/news-and-blogs/fish-made-simple-thanks-to-asda

I am not cooking up stories for my argument but only based on facts & my experience in the UK.

ராஜ நடராஜன் said...

//Y not ? I think you have misunderstood again about how supermarkets sell fish ,meat. They are not frozen or processed but some stores got separate stalls selling fresh fish and meat. I do not understand why people wouldn’t want to buy from them//

ப்ரியா கார்த்திக்! வவ்வால் ஆட்டத்தை சரியாகத்தான் ஆடுகிறார் என நினைக்கின்றேன்.கடல்,ஆறுகள்,குளம்,குட்டை என்ற சூழலுக்கு ஏற்ப தமிழகம் இருப்பதால் பேரங்காடி மீன் வியாபாரமெல்லாம் தமிழகத்தில் பலிக்காது.மேலும் பேரங்காடி மீன்,ஆடு,கோழி வியாபார ரீசைக்கிளிங் முறைக்கு ஷாப்பிங்க் செய்துட்டு பிஷ் அன் சிப்ஸ்,பர்கர்,கிரில் சிக்கன்னு மெனு போடுற பக்கத்து ரெஸ்டாரண்டர்ல சாப்பிட்டேன்னு உதார் விட மட்டுமே சரியாக இருக்கும்.

நம்ம ஊர் மீன்காரம்மா மீன் நாற்றத்தோடு வித்தாலும் கூட மீன் பிரஷ்ஷோ பிரஷ்.

நாய் நக்ஸ் மட்டும்
//அப்புறம் நானும்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
ஆமா சொல்லிப்புட்டேன்.....
என்னை பத்தி தெரியும்ல.........?????// அபாயசங்கை ஊதாம இருந்தா நானும்ம்ம்ம்ம்ம்ம்!ஆமா சொல்லிப்புட்டேன்:)

ராஜ நடராஜன் said...

//எண்ணை ,பருப்பு, மசாலா பொருட்கள், தேயிலை,காபி, வெங்காயம், பழங்கள் என பலவும் வியாபாரிகளால் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.//

வவ்வால்!இது எப்பால இருந்து!வெங்காயம் பற்றாக்குறைக்கு அனுப்பி வைக்கிற பக்கத்து வீட்டுக்காரன் பாகிஸ்தானிதான்.நம்ம கிட்ட பலவகையான மாம்பழங்கள் இருக்கின்றன.ஆனால் பாகிஸ்தானிடம் இரண்டு மூன்று வகை மாம்பழத்தின் இனிப்பு ருசிக்கு பக்கத்துல இந்தியா போகவே முடியாது.அப்படியிருந்தாலும் கூட எங்கேயிருந்து மற்ற விவசாய பொருட்களை இறக்குமதி செய்தாலும் இந்தியாவை அடிச்சுக்கவே முடியாது.

அதே மாதிரிதான் இந்தியா ஆட்டுகறி மாட்டுக்கறி ருசியும் கூட.ஆனால் பேரங்காடி இறக்குமதி கறி ஈ ஒட்டாம நிறைய கொலாஸ்டரல் வர கொழுப்போட வரும் சாத்தியமிருக்குது.இந்தியாவுக்கு ஈ மொய்க்காத மீன் கறி சாத்தியமான்னும் கூட கேள்வியெழுகிறது.

ராஜ நடராஜன் said...

//பெட்டிக்கடைகளுக்கு இலவசமா மன்னிக்க விலையில்லாமல் கோக்கா கோலா குளிர்சாதன பெட்டி தரும் அதில் கோக்கா கோலா மட்டும் தான் வைக்க வேண்டும் எனவும் மற்றவர்களின் (பெப்சி)குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது எனவும் சொல்லிவிடுவார்கள் இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே குளிர்சாதன பெட்டி கிடைக்கும். பெப்சியும் இதே மாதிரி நிபந்தனை விதிக்கும். இது இந்திய சந்தையை பிடிக்க ஆரம்பத்தில் அவர்கள் போட்ட சண்டைகளில் ஒன்று. இந்த சண்டையில் தான் நம்ம காளிமார்க், பவண்டோ, மாப்பிளை விநாயகர் எல்லாம் அடிபட்டு காணாமல் போனார்கள். //

இது மட்டுமா அல்லது மொத்த உற்பத்தி,கடைகளுக்கு வினியோகம்,விலையென வேறு காரணங்களும் இருக்கிறதா?

இட்லிக்கே பெப்சி குடிச்சாத்தான் மரியாதைன்னு மோகம் புடிச்ச பசங்க ஊரு நம்ம ஊரு:)கண்ணால பார்த்த அனுபவங்ண்ணா!

ராஜ நடராஜன் said...

//கேட்டால் யாரு கஷ்டப்பட்டு விவசாயம் செய்ய சொல்றாங்கன்னு சொல்வீங்க, அப்புறம் அரிசி,பருப்பு எல்லாம் ஆகயத்துல இருந்தா கொட்டும்?//

முன்பு தோட்டக்கலைன்னு பாட வகுப்புக்கள் இருந்தன.மறுபடியும் பள்ளி துவங்கி கல்லூரி வரை கட்டாய பாடம்ன்னு வச்சுடலாம்ங்றேன்.

naren said...

வவ்வால்,

அதிக தகவல்களுடன் பயனுள்ள பதிவு. முந்தைய பதிவுகளையும் படித்தேன், அதற்கு ஏதாவது பரிசுண்டா??? அலவா தராமல் இருந்தால் சரி.))

வால்மார்ட் இந்தியா வந்தால் ஒன்றுமே ஆகாது என்பது சரிதான். ஹையர் மேட்டுக்குடி மக்களுக்கு ஒரு சில நாடகள் புல்லரிக்கும், அவ்வளவுதான். காசு கையை கடிக்கும் போது எல்லாம் தெளியும்.

இந்திய வாழ்க்கை முறை வேறு அங்கு வேறு என்று சரியாக சொன்னீர்கள். ஜெர்மனியில் வாலமார்ட் பளாப். வால்மார்ட்டால் நல்லது நடக்குமே தவிர கெட்டது நடக்காது என்ற நம்பிக்கை இருக்கு.

நம்முடைய கொள்கை. விவசாயிக்கு எப்போதெல்லாம் நன்றாக ஐ.டி க்கு இணையாக பணம் வருகிறதோ, அதை செய்யும் கொள்கைகள் நல்ல கொள்கைகள். காசும் நேரத்தையும் வீணடித்தவன் என்ற வகையில் சொல்கிறேன். அனைவரும் இளிச்சவாயன் விவசாயி என்ற நிலையில் உள்ளார்கள். கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

சிரிய பெரிய மளிகைகடைகள் டோர் டெலிவிரி செய்வதால் மக்களும் கடைசியில் அங்கேதான் செல்வார்கள். எங்கே அக்கவுண்ட் வைக்க முடியும்)))

வால்மார்ட் நம்மூர் அண்ணாச்சிகளை ஒழிக்க வந்த் அரக்கன், அதை ஆதரிக்கும் வவ்வாலும் அண்ணாச்சிகளின் எதிரி. ஏனோ, மஞ்சள் துண்டு தலைவரின் சின்னவீடு அண்ணாச்சியக்காவாக இருந்தும், வால்மார்ட்டே வருக நல்லாட்சி தருக என அழைக்கிறார். அவரும் அண்ணாச்சிகள் மேல் வெறுப்பில் உள்ளார் போலும்.

நன்றி.

Anonymous said...

வவ்வால் ஆட்டத்தை சரியாகத்தான் ஆடுகிறார் என நினைக்கின்றேன்.கடல்,ஆறுகள்,குளம்,குட்டை என்ற சூழலுக்கு ஏற்ப தமிழகம் இருப்பதால் பேரங்காடி மீன் வியாபாரமெல்லாம் தமிழகத்தில் பலிக்காது.மேலும் பேரங்காடி மீன்,ஆடு,கோழி வியாபார ரீசைக்கிளிங் முறைக்கு ஷாப்பிங்க் செய்துட்டு பிஷ் அன் சிப்ஸ்,பர்கர்,கிரில் சிக்கன்னு மெனு போடுற பக்கத்து ரெஸ்டாரண்டர்ல சாப்பிட்டேன்னு உதார் விட மட்டுமே சரியாக இருக்கும்.

நம்ம ஊர் மீன்காரம்மா மீன் நாற்றத்தோடு வித்தாலும் கூட மீன் பிரஷ்ஷோ பிரஷ்.
Verum soap, seepu , powder eduthukitu vanthu 400 varusham soranditu poitaan , even now they are doing the same indirectly. If they want to sell fresh fish they can, if you like buying fish infested with flies and foul smell that was the only modus of operandi available for a long time. If we get a better choice people might go for it. Many fishmongers have vanished in the UK now.

வவ்வால் said...

ப்ரியா கார்திக்,

வாங்க,நன்றி!

அசர மாடேங்கிறிங்களே :-))

ASDA supermarket, பற்றிய தகவலுக்கு நன்றி.

நீங்க கொடுத்த சுட்டி மூலம் போய் பார்த்தேன், இந்த ஆண்டு மட்டும் 180 கடைகள் புதிதாக திறந்து இருக்காங்களாம், அவை எல்லாம் சிறிய கடைகள் என நினைக்கிறேன், எனவே உங்கள் அருகாமையிலேயெ கிடைக்கும்னு சொல்லி இருக்கு.

மொத்தமாக இப்போ 500 கடைகள் இருக்கு என தகவல்.

யுனைட்டட் கிங்டம் மொத்த மக்கள் தொகையே 62.64 மில்லியன்கள்,அதாவது 6.26 கோடி. அவர்களுக்கு 500 கடைகள் தான் .

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை 7.2 கோடி., யு.கே விட அதிகம், எல்லாருக்கும் மீன் கொடுக்க ASDA supermarket தமிழ்நாட்டிலேயே 500க்கும் மேல் கடைகள் திறக்க வேண்டும் :-))

உத்திர பிரதேசத்தில் இன்று சுமார் 18 கோடி மக்கள் எனவே சுமார் 1500 ASDA supermarket கடைகள் திறக்க வேண்டும்!!!

அப்போ கூட பெரும்பாலான மக்களுக்கு வாங்கும் தூரத்தில் கடைகள் அமையாது. இங்கே அன்று அதிகாலை 4 மணிக்கு பிடிக்கப்பட்ட மீன் கரைவரும், அன்றே 8 மணிக்கெல்லாம் கடையில் கிடைக்கும்,சின்ன கிராமத்திற்கு கூட அன்றே போய் சேர்ந்துவிடும். ASDA supermarket போன்ற கடைகளில் அன்றைய காலையில் பிடித்து அன்றே மீன்களை கொடுக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை.

இந்தியா முழுக்க இன்றைய தேதியில் 1.2 (1.3எனவும் தகவல்)கோடி சிறு கடைகள் இருக்கு என சொல்லி இருக்கிறார்கள். 120 கோடி மக்கள் அதாவது 100 பேருக்கு ஒரு சிறு கடை என விகிதம் வருகிறது. இந்தியா ஒரு மைக்ரோ லெவல் ஷாப்பிங் எகனாமி , இங்கே வால்மார்ட், டெஸ்கோ,ASDA supermarket என யாராக இருந்தாலும் அனைவரையும் இழுக்கவே முடியாது.

சென்னையிலே அனைத்து மக்களையும் இழுக்க முடியாது எனும் பொழுது, சிறு நகரங்களில் வசிப்பவர்கள் எல்லாம் எப்படி சென்றடைவது?

U.K வில் ASDA supermarket,வால்மார்ட், டெஸ்கோ என பல சூப்பர் மார்க்கெட்டுகள் இருந்தாலும் எல்லாம் சில ஆயிரங்கள் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக 295,214 கடைகள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது

இங்கே பார்க்கலாம் நாடுகள் வாரியாக சில்லரை வர்த்தக கடைகளின் எண்ணிக்கையை.

http://www.just-style.com/store/samples/wrdas_samples.pdf

எனவே அனைவருக்கும் போதுமான வியாபார வாய்ப்பு இருக்கவே சாத்தியமுள்ளது, அதுவும் இந்தியாவில் உள்ளூர் கடைகளுக்கு மிக சிறிய வியாபார இழப்பே வரக்க்கூடும்.
--------------------

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

என்னாது மிரட்டல் விட்டுக்கிட்டு, நம்ம கடைக்கு விளம்பரம் இல்லாம தானா வர்ரவங்களே ரொம்ப கம்மி, அதையும் தடுத்தால் எப்படி?

நம்ம நாடு பை-லேட்டரல் டிரேட் அக்ரிமென்ட்னு பல நாட்டோட ஒப்பந்தம் போட்டு இருக்கு.

இந்தியாவில் ஏற்றுமதியாகும் அளவுக்கு தேயிலை உற்பத்தி ஆகுது, ஆனால் இலங்கையில் இருந்து பல லட்சம் டன் தேயிலை இறக்குமதியும் ஆகுது. இதன் மூலம் உள்நாட்டு தேயிலையின் கொள்முதல் விலை உயராமல் செய்துவிடுகிறார்கள் இந்திய முதலாளிகள்.

எல்லா பெரிய நிறுவனங்களும் தங்களுக்கான மூலப்பொருளை தேவையின் போது இறக்குமதி செய்து கொள்ளலாம் என உரிமை கொடுத்து பல காலம் ஆச்சு.

கோதுமை என்ன தான் நிறைய விளைஞ்சாலும் பிரிட்டானியா பிஸ்கெட்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்னும் மலிவாக கோதுமையை இறக்குமதி செய்கிற வேலையும் செய்யுது.

அதே போல சர்க்கரை, நம்ம நாட்டில் சுமார் 15-20 லட்சம் டன் சர்க்கரை உபரி, ஆனால் தேவையே இல்லாமல் 42 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதியும் செய்கிறோம் :-))

எல்லாம் கரும்பு விலையை ஏற்றாமல் இருக்க செய்யும் கூட்டு சதி. பெரிய சாக்கலேட், பிஸ்கெட், இன்ன பிற நிறுவனங்கள் சர்க்கரையை இறக்குமதி செய்து கொள்கின்றன இதானால் இந்த இறக்குமதி சர்க்கரை அளவு அதிகம் ஆகுது. அவ்வப்போது அரசாங்கமும் இறக்குமதி செய்து பொது விநியோகத்துக்கு பயன்ப்படுத்துகின்றது.

வர்த்தக அமைச்சக இணைய தளத்தில் எல்லா விவரமும் இருக்கு பார்க்கலாம்.

//இது மட்டுமா அல்லது மொத்த உற்பத்தி,கடைகளுக்கு வினியோகம்,விலையென வேறு காரணங்களும் இருக்கிறதா?//

மொத்த விநியோகஸ்தருக்கு நல்ல கமிஷன், ஆண்டுக்கு சிறப்பு பரிசு, கோவா டூர் என என்ன எல்லாமோ கொடுக்கிறாங்க.

# கட்டாய பாடமாக வைத்தாலும் இன்றுள்ள மக்கள் கையில் சேறு படியாமால் சோறு வேண்டும் என்கிறார்கள் :-))

எங்க ஊரில் நடந்த சம்பவம், 1996 இல் அறுவடைக்கு ஆள் உடனே வரவில்லை என அப்போது தான் புதிதாக வந்த ஹார்வெஸ்டர் பயன்ப்படுத்தியதை தடுத்து சண்டை போட்டார்கள் உள்ளூர் விவசாய தொழிலாளிகள், இப்போ எங்கப்பார்த்தாலும் ஹார்வெஸ்டர் மெஷின் தான், தடுக்க ஆள் இல்லை :-))
-----------------

நரேன்,

வாரும்,நன்றி!

புக்கர் பரிசு போல ரீடர் பரிசு என இருந்தால் அதனை உமக்கே அளிக்க சிபாரிசு செய்கிறேன்!!!
(அல்டிமேட் எழுத்தாளர் ,உடனே அது எனக்கும் வேணும் என வாசகர் வட்டத்தில் அழுதாலும் அழுவார்)

நம்ம பொருளாதாரம், சந்தை பெருசு ,ஆனால் எல்லாம் மைக்ரோ லெவலில் இயங்குபவை.

10*10 அளவில் இருக்கும் கடைகள் ஏராளம், 100 மீட்டர் தொலைவில் ஒரு கடை என மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிறைய இருக்கு. இப்போ சென்னையில் கட்டும் அபார்ட்மெண்ட்களில் எல்லாம் கடைகளுடன்ன் வேற வருது.

எங்க ஏரியாவில் அக்‌ஷய பில்டர்ஸ் பெரிய ஷாப்பிங் காம்ளக்சுடன் அபார்ட்மென்ட் கட்டுறான்.அக்‌ஷய மெட்ரோ போலிஸ் எல்லாம் அவங்களுது தான். எங்க சொந்தம் ஒருத்தருக்கு புக் செய்ய கேட்டாருன்னு போனேன் 980 ச.அடி ப்ளாட் 62 லட்சம், எட்டாவது மாடிதான் இருக்கு(டாப்) சொன்னான், அவருக்கு பிடிக்கலை. வெயில் காலத்தில் சுடும் என்கிரார். ஜி.எஸ்.டி ரோட் ஊராபக்கம் சாலையில் இதனைக்காணலாம்.

இப்படித்தான் இப்போ வரும் எல்லா பெரிய அபார்ட்மெண்ட்களில் கடைகள் உண்டு. நகரத்திலும் இப்படித்தான்.

வால்மார்க்கெட் , எல்லாம் துண்டை காணோம் துணியைக்காணோம் என ஓட நேரிட்டாலும் நேரிடலாம்.

//அனைவரும் இளிச்சவாயன் விவசாயி என்ற நிலையில் உள்ளார்கள். கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.//

உண்மை அதான், நாம கொள்முதல் விலையை அடிமட்டத்தில் வச்சு , பொருட்களை மலிவாக கொடுக்கணும் என விவசாயிகளை வதைக்கிறோம் .

யு.கே வில் ஒரு விவசாயியின் ஆண்டு சராசரி வருமானம் 20-35 ஆயிரம் பவுண்டுகளாம்,(மினிமம் 21,000 பவுண்ட் @2010) எல்லாம் 50-100 ha என வைத்திருப்பவர்கள்.

ஒரு விவசாயிக்கு வங்கியில் லோன் தரவில்லை என ராயல் பேங் ஆப் ஸ்காட்லாந்த் பிராஞ்சின் மீது ஒரு டிராக்டர் லோட் சாணி எடுத்து வந்து மெஷினால் அடிச்சதை டி.வியில் காட்டுனாங்க :-))

நம்ம ஊரில் விவசாயிகளுக்கு எல்லாம் கோவணம் கூட மிஞ்சாது.

#விட்டால் என்னையும் மஞ்ச துண்டு கூட ஜோடி சேர்த்துடுவீர் போல. அவரோட குடுமி டெல்லி அன்னை கையில மாட்டியாச்சு,ஒவ்வொரு ஆதரவுக்கும் மஞ்சத்துண்டுக்கு ஒரு சலுகை கொடுக்கிறாங்க :-))

2ஜீ ஊழலில் முன்னால் தணிக்கை அதிகாரி பல்டி அறிக்கையின் பின்னால் இவர்களின் பேரம் இருக்கிறது என நினைக்கிறேன்.

Raj said...

வவ்வால்..
--------------
கடுகு கூட ஒரு கிலோ தான் வாங்கனும், ஏதேனும் ஒன்று தீர்ந்துவிட்டால் ஆத்திர அவசரத்துக்கு உடனே வாங்க முடியாது என்றெல்லாம் சொல்லியுள்ளார்கள்.
----------------------
ஒரு கிலோ எல்லாம் வாங்க தேவை இல்லை.. நம்ம ஊரு மளிகை கடைல கிடைகிற எல்லா பொருளும் இங்கே இந்தியன் க்ரோசரி ஸ்டோர் போனால் கிடைக்கும்.. 100 கிராம் பாக்கெட்டில் விற்கிறார்கள்.. பேச்சி மசாலா.. பூச்சி மசாலா எல்லாம்..  பெரிய ஊரு என்றல் நாமஊர் மளிகை கடை கண்டிப்பாக இருக்கும்.. சின்ன ஊர் என்றால்.. கொஞ்சம் தூரம் போக வேண்டும்.. நான் இரண்டு மணி நேரம் எல்லாம் போயி வாங்கி இருக்கிறேன்..
தவிர.. வால்மார்ட் மாதிரி கடைகளில்.. பருப்பு அரிசி வகைகள்.. தனியாக free flowing containers இருக்கும்.. நாம் வேண்டிய அளவு எடுத்து கொள்ளலாம்.. முந்திரி எல்லாம் நான் அப்படி தான் வாங்குவேன்..
--------------
இறைச்சி வகைப்பற்றி நீங்கள் சொன்னது போல தான் சொன்னார்கள்.
---------------
இதை பற்றி மணி கணக்காக பேசலாம்..
-----------
பண்ணையில் இருந்து பால் என விற்பது விலைக்கூட இருக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். எனவே டெட்ரா பேக் பால் வாங்கி வைத்து சாப்பிட வேண்டிய நிலை இருக்கும் என சொன்னார்கள்
--------------
இந்த ஊரில் Organic or Farm உணவிற்கு பயங்கர வரவேற்பு இருக்கிறது.. காசு இருப்பவர்களிடம்..  எதை வேண்டுமானலும் Organic என்று சொல்லி.. நிறைய விலை வைத்து விற்கலாம்
-----------
நம்ம ஊரு மக்களின் மனோபாவத்திற்கு பெரிய மால் வகை சூப்பர் மார்க்கெட் எல்லாம் சரி வராது. மெட்ரோவில் வசிக்கும் எலைட் பிரிவு மக்கள் தான் போவார்கள்.
-----------------
மனோபாவம் ஒன்று.. எப்போ மக்கள் கிட்ட இருக்கிற பொருளாதார ஏற்ற தாழ்வு இடைவெளி குறைகிறதோ.. அப்போது தான் நிறய விஷயங்கள் சாத்தியமாகும்...
-------
சென்னை அண்ணா நகரில் ஒரு இறைச்சி கடை இருக்கிறது.. அவர்கள் கொஞ்சம் industrialized விற்கிறார்கள்.. எல்லாம் கண்ணாடி பின்னால் வைத்து.. நான் இரண்டு ஆண்டு முன்னால் வந்த போது ஒரு கிலோ கோழி, ஆடு வாங்க ஆயிரம் ருபாய் மேல் ஆனது.. அது ஒரு சூழல்.. வாங்க வேண்டியதாகி விட்டது.. 
--------------------
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது.. எனது பெரியப்பா.. மாமா எல்லாம் இரண்டு மூன்று நாள் பருத்தி, மிளகாய் எடுத்து.. மூடை மூடையாக போயி விற்று.. ஏமாற்றத்தோடு திரும்பி வருவார்கள்.. சரியான விலை இல்லாமல்.. அந்த நிலை மாற வேண்டும்..

Anonymous said...

ASDA supermarket, பற்றிய தகவலுக்கு நன்றி.

நீங்க கொடுத்த சுட்டி மூலம் போய் பார்த்தேன், இந்த ஆண்டு மட்டும் 180 கடைகள் புதிதாக திறந்து இருக்காங்களாம், அவை எல்லாம் சிறிய கடைகள் என நினைக்கிறேன், எனவே உங்கள் அருகாமையிலேயெ கிடைக்கும்னு சொல்லி இருக்கு.

மொத்தமாக இப்போ 500 கடைகள் இருக்கு என தகவல்.

யுனைட்டட் கிங்டம் மொத்த மக்கள் தொகையே 62.64 மில்லியன்கள்,அதாவது 6.26 கோடி. அவர்களுக்கு 500 கடைகள் தான் .

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை 7.2 கோடி., யு.கே விட அதிகம், எல்லாருக்கும் மீன் கொடுக்க ASDA supermarket தமிழ்நாட்டிலேயே 500க்கும் மேல் கடைகள் திறக்க வேண்டும் :-))

உத்திர பிரதேசத்தில் இன்று சுமார் 18 கோடி மக்கள் எனவே சுமார் 1500 ASDA supermarket கடைகள் திறக்க வேண்டும்!!!
@ Vavvaal: When I debate you with facts you raise another question unwarranted but you are not reasoning the facts presented by me .It may be because you don’t have a broader perspective or simply your mind refuses not to accept someone else statement. I can go line by line and just prove all your assumptions are wrong with my facts. Expand your thinking other than vegetables ,groceries & other stationeries.I can’t keep on teaching you or proving you wrong. Unfortunately I don’t have the time. Your arguments are sometimes very childish. My kind advice would be, Please don’t write articles with 50% stats and 50% of your weird assumptions. One can’t be an expert in all fields. 500 Asda (Walmart subsidiary) stores didn’t open in a single day but over a period of time. Do some basic research.
Finally one last link , let me see how you interpret it. There are 3000 + Tesco stores in the UK. http://www.tescoplc.com/index.asp?pageid=8. Can you imagine 3000 Saravana stores in Tamilnadu. Just do a study on the impact of 3000 Saravana stores on the small traders in Tamilnadu. Of course some small traders will continue but with reduced or very low sales & at some point will stop trading. Just think how much they are concentrated. In addition to it there are Morrisons, Sainsburys,LIDL,ALDI, Waitrose. If you think they can’t open in every street in India , I strongly believe they can cos they have proven & are successful. They are powerful enough even to break the syndicates , if needed laws will be changed accordingly so they can source directly from farmers.
Then I hold high standards about your blog as it is informative and educative compared to Jackie or Cable’s blog which is of Tea bench standards.

Anonymous said...
This comment has been removed by the author.
Dinesh Kumar said...

Thanks for the excellent article. I also closely watching the debate between you and Priya. Some of the points raised by Priya is Valid and acceptable.
It is not necassary that the super market should be big and should be located outskirts of the city, town. If you take Tesco case, there are different models of Tesco like Tesco extra, tesco express,tesco metro and so on. In UK, you can find the Tesco extra shops for every one km. This will be a small shop with basic FMCG foods.Even in the small shops you can find fruits and vegetables from different countries.

There are some challanges for this Super market regarding the price and customer comfort. Because even in the current scenarios,you can get the toothpaste,soaps,etc., below the MRP prices in some annachi shops and it was selling at MRP prices in Reliance, More. In UK, you can not find the MRP price of the product anywhere and nobody knows what is the real price of the particular product. For example, ASDA will sell colgate for £1.50 and in TESCO and it will be £1.75 and in the local small shop it will be £2.25.

With regards to customer comfort, any tom, dick and harry can walk into annachi or local shops with lungi and can buy whatever the goods they want. Even you can see ladies in the local shops with nighties.

sharfu said...

Mr vavval,

I guess other statements are true to an extend, but u proved u didn't have depth knowledge in contemporary retail strategy in TN, actually no retailer or traders have power to build or destroy any branded products other than grains and other groceries.
speaking abt poochi masala, poochi masala can directly go to a annachi shop and tell that we are having this range of masala at this price range, and the annachi shop owner will decide whether to entertain the new product or not, because his fear is whether this masala will sell or not, even though the manufacturer will convince the annachi by saying that he will give the masalas with out any payment and let him display the product first,so that whoever comes to that shop atleast have a look at the product and even sometimes margin also will play a major role,this is stage one,

next the product displayed at the shop, customer comes to buy pechi masala,annachi says that there is a new product in the market called poochi masala, convince the consumer to purchase that, stage two,
customer used the product the out come is binary satisfied/disatisfied, if satisfied he will proceed further with the same brand and even other range of the same brand. has poochi masala has won the appreciation of a consumer.
if not the product will not be purchased by the same consumer, if this process goes further then annachi has to relay on pechi masala not poochi masala even though he gets more margin.

Role of media : in indian scenario customers will buy anything which they watch in TV/newspaper and other medias(most of the common mass,some exceptions will be there)
I can give more example for this, as u r more knowledge than me u can easily accept the fact. if not i will explain.
so poochi masala promoting its product through ADVT's and expanding its reach, now it is difficult for poochi masala to go every shop and have direct interaction with the retailer/wholesaler, as cash transaction with all traders will be head ache for them and moreover they can concentrate on their brand, so they appoint(note this point)Distributor for state/district/taluk.since poochi masala is popular with the advt promos they can easily get a distributor/stockist and limit their dealing with them.

this is how the process goes.
and there is no point in blaming the retailer for the eradication of kalimark,bovonto,torino,goli soda and even other swadesi products as all MNC fmcg products are monsters and able to destroy their competition at any cost.

and my verdict to FDI = the consumer will benefit initially and later on we have to wait and see. more over the distribution system might have some/more impact due to this,

sharfu said...

Its not Ghari,

Its Ghadi

Ghadi is clock in hindi as u can see the picture itself

Anonymous said...

Voval,

I partially accept your points. I think Wal-Mart will cut the supply chain by flooding FMCG goods from china like countries or buy the major companies (as you said companies).


by-Maakkaan.

வவ்வால் said...

ராஜ்,

நன்றி!

நீங்க சொன்னது போல இந்தியன் கடைகள் என இலங்கை தமிழர்களால் பெரும்பாலும் நடத்தப்படும் கடைகளில் அனைத்தும் கிடைக்கிறது எனவும் சொன்னார். அதை எல்லாம் முன் கூட்டியே திட்டமிட்டு போனால் தான் உண்டு. நீங்க கூட 2 மணி நேரம் எடுத்துப்போனேன் என ஏன் சொல்கிறீர்கள், அங்கே அப்படி தான் பயணம் செய்து தேவையான கடையை அடைய வேண்டிய நிலை.

வால்மார்ட் இல் நீங்க சொன்ன முறை 2009 போன்ற காலத்தில் வந்திருக்காது என நினைக்கிறேன். அப்போ தான் பேசிக்கொண்டோம், ஆனால் மேலை நாடுகளில் பெரும்பாலும் பெரிய அளவுகளில் விற்க முயல்வார்கள்.

ஒரு சர்வே சொல்கிறது அமெரிக்காவில் உணவுப்பொருட்கள் 40% நுகர்வோரை அடைந்த பின் வீணாகிறது, இந்தியாவில் சுமார் 40% நுகர்வோரை வந்தடையாமல் இடையில் சேதமாகிறது என.

இது குறித்து இப்போ பாராளுமன்றத்திலும் விவாதம் ஓடியது.

விரிவாக ஒரு பதிவாக சொல்ல இருக்கிறேன் , கொஞ்சம் பொறுங்கள்.

------------
நீங்கள் சொல்வதை வைத்தே தெரிகிறது மக்கள் சூப்பர் மார்க்கெட் பொருட்களை "ஃபிரஷ் " அங்கும் ஏற்பதில்லை என.

இந்தியாவில் மீன்களை ஐஸ் வச்சது என சொல்லி வாங்கமாட்டார்கள், அவை எல்லாம் உணவகம், வேறு பயன்களுக்கு போகும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் மேலை நாடுகளில் மீன் பிடிக்கும் போது இந்த அளவு எடைக்கு கீழ் உள்ள மீன்களை பிடிக்க தடை உண்டு. அதனால் அங்கு எல்லாமே பெரிய அளவுள்ள மீன்களுக்கு தான் சந்தை, நம்ம ஊரில் சிறிய அளவுள்ள மீன்கள் தான் அதிகம் மக்கள் வாங்குவார்கள், மேலும் அவற்றை குளிர்ப்பதன நிலையத்தில் எல்லாம் இங்கு வைப்பதில்லை.

இந்தியாவுக்கும், மேலை நாடுகளுக்கும் நிறைய நுகர்வு கலாச்சார வேறுபாடுகள் இருக்கு. எனவே வால்மார், டெஸ்கோ எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் லாபம் ஈட்ட முடியாது.

#//எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது.. எனது பெரியப்பா.. மாமா எல்லாம் இரண்டு மூன்று நாள் பருத்தி, மிளகாய் எடுத்து.. மூடை மூடையாக போயி விற்று.. ஏமாற்றத்தோடு திரும்பி வருவார்கள்.. சரியான விலை இல்லாமல்.. அந்த நிலை மாற வேண்டும்..//

இதைத்தான் நான் மிகவும் வலியுறுத்துவது, இந்தியாவில் விவசாயி விளைச்சலை விற்கவே சிரமப்படுகிறான், அதன் பிறகே லாபம் பற்றி யோசிக்க.

ஒரு அடிமாட்டு விலை தான் கிடைக்கும். இல்லையா வாங்க மாட்டேன் என்கிறார்கள். வெங்காயம் அதிகம் விளைஞ்சாலும் வாங்க மாட்டேன் என்கிறார்கள், குறைவாக விளைஞ்சாலும் நல்ல விலை கொடுக்க மாட்டென் என்கிறார்கள், உடனே பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து எப்பவும் போல விவசாயிக்கு குறைவான விலையே கிடைக்க செய்கிறார்கள்.

என்னை விடாமல் கேள்விக்கேட்கும் பிரியாகார்த்திக் அவர்களும் இதுப்பற்றி சுட்டியுடன் கேட்டும் கண்டுக்கலை :-))

விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் போட்டி உருவாக இன்னொரு வியாபாரி நாட்டுக்கு தேவை, அது வால்மார்ட் அல்லது உள்ளூர் சூப்பர்மர்கெட் நிறுவனமாக கூட இருக்கலாம்.

இப்பொழுது நிலவும் கமிஷன் மண்டி முறை விவாசாயிகளை அழிக்கிறது, இப்படியே போனால் நாளை விவசாயம் செய்ய இங்கு யாரும் இருக்க மாட்டார்கள், ஆனால் நம்ம உள்ளுர் வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வழக்கம் போல வியாபாரம் செய்வார்கள்.

இதனை எல்லாம் என்னுடைய முந்தைய பதிவுகளில் சொல்லியாச்சு, அதனைப்படிக்காமல் அடம்பிடிக்கிறார்கள் :-))

-------------

வவ்வால் said...

பிரியாகார்த்திக்,

வாங்க நன்றி!

நீங்க எளிதாக குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் ,ஆனால் நான் சொன்ன பல விஷயங்களை அப்படியே கடந்துவிட்டு ,அங்கும், இங்கும், சில வரிகளை மட்டும் குறிப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

விவசாய விளைப்பொருள் சரியாக கொள்முதல் செய்யாமல் இப்பொழுது வீணாக்கப்படுகிறது என சுட்டியுடன் போட்டேன் , என்ன சொன்னீர்கள், ஒன்றும் சொல்லாமல் அடுத்த விடயம் தாவி விட்டீர்கள்.

#சரியான விலை இன்றைய வியாபாரிகள் கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள், அதே சமயம் கூடுதல் விலை வைத்து மக்களிடம் விற்கிறார்கள்.

#உள்நாட்டு உற்பத்தியாளர்களை புறக்கணிப்பது அல்லது வியாபார வாய்ப்புகளை தடுப்பது என பன்னாட்டு வியாபாரிகளுடன் சேர்ந்து செய்கிறார்கள்.

#பணியாளர்களுக்கு உரிய ஊதியம், மதிப்பு இல்லை.

#வருமான வரி செலுத்துபவர்கள் வெகு சிலரே, விற்பனை வரி, இன்ன பிறவும் சரியாக செய்வதில்லை.

# விற்றப்பொருளில் குறை இருந்தால் மாற்றுவது குதிரைக்கொம்பு.

#நுகர்வோருக்கு சரியான பில் கொடுக்கும் கடைகள் வெகு சொற்பமே.

இதை எல்லாம் மாற்ற வேண்டாமா?

இப்படியெல்லாம் செய்தாலும் மக்கள் அருகாமை, மற்றும் பழக்கம் என வாங்கவே செய்வார்கள்.

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம்ம் போட்டியாக வந்தால் தான் உள்ளூர் வியாபாரிகள் தங்களை தொழில் முறையில் மாற்றிக்கொண்டு தரமான சேவையை மக்களுக்கு வழங்க முன்வருவார்கள். இல்லை எனில் நான் விற்பதே பொருள், வைப்பதே விலை, வாங்குவது உன் தலை எழுத்து என்ற போக்கே தொடரும்.

-------------

யு.கே வில் சுமார் 3 லட்சம் கடைகள் உள்ளன என சுட்டிப்போட்டேன், அவற்றில் பெரு வணிக கடைகள் சுமார் 15,000க்குள் தான் டாப் 10 ரிடெயில் ஷாப்ஸ் இன் யு.கே என பட்டியல் இட்ட 10 நிறுவனங்களின் மொத்த கடை சுமார் 10,500 வருகிறது.

இங்கே காணவும்.

அப்படியானால் மற்ற கடைகள் எல்லாம் தனிப்பட்ட கடைகள் தானே.மேலும் யு.கே போன்ற நாட்டில் எல்லாம் குறைந்த பட்ச வருமானமே ஒரு நல்ல தொகை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.

இந்தியா அப்படியல்ல என்பதை இன்னும் உங்கள் கண்ணுக்கு ஏனோ புலப்படவில்லை.

வெளிநாட்டில் எல்லாம் கடைக்கு போகணும் என்றால் கார்ப்பார்க்கிங் இருக்கானு பார்த்து போகும் பழக்கம் உண்டு, இங்கே சைக்கிள் பார்க்கிங் செய்ய இடம் இல்லைனாலும் அக்கடைக்கு போவாங்க :-))

இந்தியா ஒரு மைக்ரோ லெவல் ஷாப்பிங் மக்கல் அதிகம் கொண்ட நாடு.

நீங்க ரொம்ப பெருமையாக நினைக்கும் டெஸ்கோ அமெரிக்காவில் தனது கடைகளை விற்றுவிட்டு வெளியேற உத்தேசித்துள்ளது என செய்திகல் சொல்கின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலேயே ஏன் முறைப்படுத்தப்பட்ட சூப்பரோ சூப்பர் டெஸ்கோ போனியாகவில்லை?

,,இதான் ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் வித்தியாசம் இருக்கும் என்பது, அதுவும் இந்தியா மேலை நாடுகளில் இருந்து 99% முற்றிலும் வேறுபட்டது.

டெஸ்கோ அமெரிக்காவில் அடிவாங்கியதை அறிவிக்கும் செய்தி காணுங்கள்:

http://www.guardian.co.uk/business/2012/dec/05/tesco-signals-retreat-us-chain

// The survey showed that only 29% of shoppers now choose to make most of their purchases at Tesco, compared with 35% last year. "Rather than seeing improvements, UK consumers perceive that Tesco's offer is becoming less competitive on price and quality," said Gulliver.//
யு.கேவில் கூட அதன் விற்பனை இறங்குமுகமாக தான் இருக்காம், கார்டியன் பேப்பர் எல்லாம் படிக்கிறது இல்லையா :-))

போட்டி இருந்தால் நல்ல பொருள்கள் ,நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்கும்!
---------------------

இந்தியாவில் ஒரு விவசாயியாக விளைப்பொருளை விற்க படும் கஷ்டத்தினையும் பார்த்துள்ளேன், ஒரு நுகர்வோராக அதிக விலைக்கு வாங்க கட்டாயப்படுத்துகிறோம் என்பதையும் பார்த்துள்ளேன்.

எனவே இரண்டுக்கும் இடையே வியாபாரிகள் செழிப்பதை ஏன் மாற்ற முடியவில்லை எனப்பார்த்தால் , அனைவருமே ஒரே வலையப்பில் உள்ள கண்ணிகள், எனவே எளிதாக ஒருங்கினைந்து, சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள்.

எனக்கு ஒரு மாற்றம் தேவை, அது எப்படியோ நடக்கட்டும் என வெறுத்து போய் தான் அன்னிய சில்லறை வர்த்தகமாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறேன்.

அதே சமயம் அவர்கள் ஒரு போட்டியை உருவாக்கி , சந்தையில் மாற்றம் உண்டாக்குவார்களே தவிர முழுசாக ஆக்ரமிக்க முடியாது என்பதும் நிதர்சனம்.
--------------

வவ்வால் said...

ப்ரியா கார்த்திக்,

//Then I hold high standards about your blog as it is informative and educative compared to Jackie or Cable’s blog which is of Tea bench standards. //

மும்முரமாக பேசியதில் கவனிக்கவில்லை, ஆஹா நீங்க இப்போ தான் படிக்கிறீங்க என நினைத்தேன் ,முன்னரே வாசிக்கும் பழக்கம் உண்டா.

உங்கள் கருத்துக்கு நன்றி!

சில்லறை வர்த்தகத்தில் இன்று நிலவும் அமைப்பு சரியல்ல, அதனை மாற்ற வேண்டும், ஆனால் 66 ஆண்டுகள் சுதந்திரம் பெற்று ஆயிற்றுறு இன்னும் மாற்றம் காணோம், எனவே இப்படியாவது மாறட்டுமே என நினைக்கிறேன்.

வெள்ளையர்களை வெளியேற்ற கொடுங்கோலன் ஹிட்லருடன் நேதாஜி கூட்டணி அமைக்கவில்லையா?

எனவே சுதேசம் பேசி , இந்திய விவசாயிகள் சுமார் 70 கோடி பேரை இன்னும் எத்தனைக்காலம் தான் வறுமையில் உழல செய்ய வேண்டும்?

வவ்வால் said...

தினேஷ் குமார்,

நன்றி!

நான் சூப்பர் மார்க்கெட் எல்லாம் வெளியில் இருக்கும் என சொல்லவில்லை, உள்ளூரிலும் இருக்கும் என்றே சொல்லி இருக்கேன்.

ஒரு சூப்பர் மார்கெட் பக்கத்தில் லோக்கல் கடையும் இருக்கும் என்றே சொன்னேன்.

நகரத்தில் வீட்டுக்கு பக்கத்திலே 5 நிமிஷத்தில கடை இருக்குன்னு சொல்றாங்க, அப்படி இருக்கலாம் ஆனால் அங்கே வசிப்பிட வாடகை, இட விலை கூட இருக்கும், அப்போ நிறம்ப வசதி படைத்தவர்கள் தானே?

எனக்கு தெரிந்து எல்லாரும் நகரை விட்டு 100 கி.மி அப்பால் வசிப்பதாகவே சொன்னார்கள். காரணம் வெளியில் தங்கினால் தான் வாங்கும் சம்பளம் கட்டுபடியாகும், ஆனால் 100 கி.மீ ஐ 1 மணியில் கடக்கலாம் என்றும் சொன்னார்கள்(90 மைல்ஸ் /மணி).

எனவே அயல்நாட்டு வாழ்க்கை முறை நம்ம ஊரில் செல்லுபடியாக வாய்ப்பே இல்லை.

மேலும் பலவற்றை முந்தைய பின்னூட்டங்களில் பேசியுள்ளேன், அதிலேயே உங்களுக்கான பதிலும் உள்ளது.

-------------------
ஷார்பு,

நன்றி!

நீங்க பதிவையும் ,அதில் உள்ள சுட்டிகலையும் கொஞ்சம் படிக்கவும், நான்ன் சில்லரை வர்த்தகர்கள் தனியாக ஒரு பிராண்டை முடக்குவார்கள் என சொல்லவில்லை, ஒரு வலையமைப்பாக ,மாநில விநியோகஸ்தர் என ஆரம்பித்து முடக்குகிறார்கள் என சொன்னேன்.

மற்றவை எல்லாம் முன்னரே நான் பலருக்கும் சொன்ன பதில் தான், அவற்றை பார்த்தாலே புரியும்.

மீடியா ,பிராண்ட் பவர் எல்லாம் நானே சொல்லியாச்சு ,அதையே திருப்பி சொன்னா எப்படி?

பதிவுகளையும், சுட்டியையும் கொஞ்சம் படிக்கவும்.

--------------------
மாக்கான்,

நன்றி!

நம்ம ஊரு சந்தை நிலவரம் மேலை நாட்டுக்கு முற்றிலும் வேறானது சுமார் 60 கோடி மக்கள் அன்றாடம் காய்ச்சிகள், அவர்கள் எல்லாம் சூப்பர் மார்கெட் போய் வாங்கி குவிக்க போவதில்லை,

இங்கே மெக சூப்ப்பர் மார்கெட், சூப்பர் மார்கெட் எல்லாம் பெரு நகரங்களில் தான் செல்லுபடியாகும்.

இதனை ஏற்க வெளிநாட்டில் வசிப்போருக்கு மனமில்லை :-))

அவர்கள் உண்மையான இந்தியாவை புரிந்து கொள்ளவில்லை என்பேன் :-))
----------------------------

வவ்வால் said...

ஷபுர்,

//Its not Ghari,

Its Ghadi

Ghadi is clock in hindi as u can see the picture itself//

கடிகாரம் படம் போட்டு இருக்கிறதை நான் பார்க்காமலா சொல்கிறேன், அவங்க இணையதளத்தில் என்ன போட்டு இருக்கோ அதை தானே சொல்ல முடியும்..

http://www.gharidetergent.com/about_fmcg.html

Ghari தான் பயன்படுத்துறாங்க, எல்லா இடத்திலும் அப்படித்தான் இருக்கு எனக்கு இந்தி தெரியாது, உண்மையான பேரை நீங்களே சொல்லுங்க,நான் ஆங்கிலத்தில் அவர்கள் தளத்தில் உள்ள பேரையே சொல்லி இருக்கேன்.

பட்டிகாட்டான் Jey said...

வவ்வால் நல்ல ஆரம்பம். நீங்கள் பட்டியலிட்ட நிறுவனங்கள் மற்றும் அதன் ப்ரோடக்டுகள் பற்றி அறிந்திருந்தாலும், இந்த சூழலில் அதை அனைவருக்கும் நினைவுபடுத்தியது அருமை.

ஏற்கனவே இங்கே மோனோபொலி ஏற்படுத்தி வச்சிகிட்டுதான் விவசாய விலைபொட்கள் விலையை இவங்க இஷ்டத்துக்கு தீர்மானம் பண்ணிகிட்டு இருக்காங்க. ஏதோ வால் மார்ட் வந்து மோனோபலி ஆக்கிடுவாங்கன்றது காமெடியான விசயம். இந்த பதிவின் தொடர்ச்சியை பதிவை படிக்க காத்திருக்கிறேன்.

நான் இது தொடர்பா ஒரு பதிவு போட்டேன், ரொம்ப ஆராய்ஞ்சி எழுதலை என் அனுபவத்தை வைத்து reference ஏதும் எடுக்காமல் எழுதிப் போட்டது. முடிஞ்சா படிங்க.

http://pattikattaan.blogspot.in/2012/11/blog-post_27.html

Anonymous said...

I can see even some MORE shops
also shut down.

and one more thing The picture clearly shows that It is Gadi(clock) brand but you said it is cave.. pls correct it..

வவ்வால் said...

பட்டிக்காட்டார்,

நன்றி!

நீங்கள் சொன்னது சரியே, இதனை எல்லாம் தான் விரிவாக எனது பலப்பதிவுகளிலும் சொல்லியுள்ளேன்.

இடைத்தரகர், கமிஷன் மண்டி , விநியோகஸ்தர், வியாபாரி என ஒரு வலையமைப்பு , குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலை வைத்து விற்கும் வலையமைப்பை மோனோ போலியாக செய்து வருவதை ,

விவசாயிப்படும் பாடு 1,2 இலும், வால்மார்ட் மற்றும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் மூலம் எப்படி போட்டி உருவாகி விலை குறையும் விவசாயிகளுக்கு கொள்முதல் சீராக நடக்கும் என மற்றப்பதிவுகளிலும் சொல்லியுள்ளேன்.

நேரம் இருப்பின் இப்பதிவில் உள்ள சுட்டிகளை படிக்கவும்.

அடுத்தப்பதிவு எழுத வேண்டிய பலதை பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன், இன்னும் சொல்ல வேன்டியதும் இருக்கு, சீக்கிரம் அதையும் சேர்த்து எழுதுகிறேன்.

பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பில் வெற்றிப்பெற்றுவிட்டது சில்லரை வர்த்தகம் :-))
--------

அனானி,

நன்றி!

காரி என்று அவர்களின் இணையத்தளத்தில் உள்ளதையே நான் எழுதியுள்லேன் ,பார்க்கவும்..

http://www.gharidetergent.com/about_fmcg.html


கடிகாரம் படம் போட்டு இருக்கிறார்கள், ஆனால் பெயரை ghariஎன்றே எழுதுகிறார்கள், அதனை ghadi என இந்தியில் உச்சரிக்க வேண்டுமா? எப்படி சொன்னால் நலம்.

---------------

Saravanan said...

People who are living around chennai(150Km), They are travelling to buy things in Saravana stores.Because price is very less. So same may happen when wall mart arrival.

aravi said...

Intha pathivaiyum ,coments yum padikkum pothu nejama voval kanna katuthey,
Ellorukum vantham
Vantha sanam konjam kunthanum,
Appo than kali kattum.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!தொடர்ந்து பின்னூட்டங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

நேற்று பாராளுமன்றத்தில் முலாயம் சிங்கும்,மாயாவதியும் பிஜேபிக்கு அல்வா கொடுத்து சிறு வர்த்தகத்தில் FDI வருவதற்கு சாதகமாக வெளிநடப்பு செய்து அன்னிய முதலீடு சிறு வர்த்தகத்தில் உள் நுழைய உதவி செய்துள்ளார்கள்.

வால்மார்ட் பற்றிய எதிர்ப்பு அமெரிக்காவிலேயே இருந்தாலும் கூட காத்ரீனா புயல் நிவாரணம் உதவி செய்தததில் வால் மார்ட்டுக்கு பங்குண்டு.

இந்திய வர்த்தகத்தில் மாற்றங்கள் வரட்டும்.நம்ம சூழலுக்கு சரிப்பட்டு வருமா? இல்லையா என்பதை எதிர்காலத்தில் அசை போட இந்த பதிவு உதவுமென நினைக்கின்றேன்.

சந்தை சார்ந்த கருத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என உணரமுடிகிறது.அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Anonymous said...

வவ்வால் said...
பிரியாகார்த்திக்,

வாங்க நன்றி!

நீங்க எளிதாக குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் ,ஆனால் நான் சொன்ன பல விஷயங்களை அப்படியே கடந்துவிட்டு ,அங்கும், இங்கும், சில வரிகளை மட்டும் குறிப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

விவசாய விளைப்பொருள் சரியாக கொள்முதல் செய்யாமல் இப்பொழுது வீணாக்கப்படுகிறது என சுட்டியுடன் போட்டேன் , என்ன சொன்னீர்கள், ஒன்றும் சொல்லாமல் அடுத்த விடயம் தாவி விட்டீர்கள்.
Sometimes I have to speak in your own method to make you understand things, I expected you to have a better understanding when I give you an example but you get stuck with that example. Like I already told I don’t have enough time to reply to all your statements. I wouldn’t deny that the government is watching the surplus being wasted in godowns when millions of people can’t have a meal a day. This is the same excuse the government is giving to its people that supermarkets will be investing in storages. This can only be a temporary relief but not a permanent one. Whatever the problem in a nation we shouldn’t bring outsiders to solve the crisis as they will be dictating things in the future. I don’t know if you are aware of the Mali situation.
- You mentioned supermarkets existed only in shopping zones; I had to prove you that it is not the case always. (Don’t start from the beginning with another excuse it just proves you are stuck with your opinion in your head)
- Your assumption was Supermarkets don’t sell fresh meat or sea food. Again I had to prove you wrong. Your reply was whether Supermarkets will be able to sell that day’s catch like the local traders. I can’t keep repeating things to you. When they sell fresh drumsticks in the UK they can sell anything fresh.

Anonymous said...

#சரியான விலை இன்றைய வியாபாரிகள் கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள், அதே சமயம் கூடுதல் விலை வைத்து மக்களிடம் விற்கிறார்கள்.
You don’t know the plight of European farmers; they are in the streets often protesting demanding better prices for their goods. Recently there was a protest held by the Belgium farmers. Again big farmers can somewhat manage but small famers will be totally out of business. You imagine what would be the case of Indian farmers. I am not saying all is rosy for the Indian farmers but again the government has to resolve the problem so they get better prices. I expect things to get even worse for the Indian small farmers.

#உள்நாட்டு உற்பத்தியாளர்களை புறக்கணிப்பது அல்லது வியாபார வாய்ப்புகளை தடுப்பது என பன்னாட்டு வியாபாரிகளுடன் சேர்ந்து செய்கிறார்கள்.
I agree but tommorow the Supermarkets will be producing their own brand of goods everything from A –Z you can think of. So things won’t change for local manufacturers.

#பணியாளர்களுக்கு உரிய ஊதியம், மதிப்பு இல்லை.
I agree to a certain extent. You probably know how Zamindar system worked in India , the labourers were paid a pittance from what they actually produce. Things won’t be that worse. But for example most of the supermarket employees will work and shop in the same place. Most supermarkets make their employees work for more hours unpaid. If you protest ,your working hours will be reduced. If this is the case with strong UK labour laws, you decide for yourself what will happen to Indian employees.
Another thing they are working on is self –servicing tills, their idea is to create stores with no employees. This is the true face of capitalists.

#வருமான வரி செலுத்துபவர்கள் வெகு சிலரே, விற்பனை வரி, இன்ன பிறவும் சரியாக செய்வதில்லை.
I agree to a certain extent. Infact there are millions of small traders who are not registered with TNGST. I know at one point 90% of the Silk saree shops in Kanchipuram were not registered with TNGST. But you know what they use that black money to buy something else in the same economy in the form of Jewels, land investment etc, it all goes around in rotation. In one way it is good for the economy. What are the governments doing with the already generated tax revenue? Develop new Scams? Do I need to explain what MNC’s & Supermarkets are doing to evade tax? The problem is they will use their profits to offset losses in their offshore business or to invest in their offshore businesses.

# விற்றப்பொருளில் குறை இருந்தால் மாற்றுவது குதிரைக்கொம்பு.
If this is the case , I am sure there are laws to protect customers in India but it looks like they have rusted . Here you got 28 days to return or exchange goods and all electronics come with standard 1 or 2 years manufacturer’s warranty.


#நுகர்வோருக்கு சரியான பில் கொடுக்கும் கடைகள் வெகு சொற்பமே.
It’s true, the problem lies within the society, if we have to question, we have to question everybody. Almost all private enginerring colleges are collecting crores in donations without giving any form of receipt.


இதை எல்லாம் மாற்ற வேண்டாமா?

இப்படியெல்லாம் செய்தாலும் மக்கள் அருகாமை, மற்றும் பழக்கம் என வாங்கவே செய்வார்கள்.

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம்ம் போட்டியாக வந்தால் தான் உள்ளூர் வியாபாரிகள் தங்களை தொழில் முறையில் மாற்றிக்கொண்டு தரமான சேவையை மக்களுக்கு வழங்க முன்வருவார்கள். இல்லை எனில் நான் விற்பதே பொருள், வைப்பதே விலை, வாங்குவது உன் தலை எழுத்து என்ற போக்கே தொடரும்.
Over a period of time these small traders will be out of business.

-------------

Anonymous said...


யு.கே வில் சுமார் 3 லட்சம் கடைகள் உள்ளன என சுட்டிப்போட்டேன், அவற்றில் பெரு வணிக கடைகள் சுமார் 15,000க்குள் தான் டாப் 10 ரிடெயில் ஷாப்ஸ் இன் யு.கே என பட்டியல் இட்ட 10 நிறுவனங்களின் மொத்த கடை சுமார் 10,500 வருகிறது.

இங்கே காணவும்.

அப்படியானால் மற்ற கடைகள் எல்லாம் தனிப்பட்ட கடைகள் தானே.மேலும் யு.கே போன்ற நாட்டில் எல்லாம் குறைந்த பட்ச வருமானமே ஒரு நல்ல தொகை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.

இந்தியா அப்படியல்ல என்பதை இன்னும் உங்கள் கண்ணுக்கு ஏனோ புலப்படவில்லை.
You are talking about retailers in existence, just google how many have closed in the last few years. Main reasons being cited are economic downturn and competition from supermarkets


வெளிநாட்டில் எல்லாம் கடைக்கு போகணும் என்றால் கார்ப்பார்க்கிங் இருக்கானு பார்த்து போகும் பழக்கம் உண்டு, இங்கே சைக்கிள் பார்க்கிங் செய்ய இடம் இல்லைனாலும் அக்கடைக்கு போவாங்க :-))
Here also people walk to stores .I don’t understand what you are trying to relate here.

Anonymous said...

இந்தியா ஒரு மைக்ரோ லெவல் ஷாப்பிங் மக்கல் அதிகம் கொண்ட நாடு.
I can buy one drumstick ,one onion , one tomato in a supermarket , they certain sell their items in lose. You just assumed for yourself they only sell items in bulk.



நீங்க ரொம்ப பெருமையாக நினைக்கும் டெஸ்கோ அமெரிக்காவில் தனது கடைகளை விற்றுவிட்டு வெளியேற உத்தேசித்துள்ளது என செய்திகல் சொல்கின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலேயே ஏன் முறைப்படுத்தப்பட்ட சூப்பரோ சூப்பர் டெஸ்கோ போனியாகவில்லை?
You have now started to think for myself, See this is your main problem, thinking for everyone. I have never been proud about Tesco , I have shunned shopping in Tesco years back. Walmart was way ahead in the US , Tesco tried to venture 5 years ago into an already saturated US market. But the Indian market is yet to be explored.
Tesco did achieve reasonable success in US but is not able to sustain competition now. There are several other factors , US customers possess very good market information . They will sit at home and scan prices in all stores and buy from the cheapest. Indian retail market is like a jackpot treasure for the supermarkets. In the UK also people are not favouring the supermarkets , you can see slogans hanging out in small shops “ This is England we do not want Tescoland”.


,,இதான் ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் வித்தியாசம் இருக்கும் என்பது, அதுவும் இந்தியா மேலை நாடுகளில் இருந்து 99% முற்றிலும் வேறுபட்டது.

டெஸ்கோ அமெரிக்காவில் அடிவாங்கியதை அறிவிக்கும் செய்தி காணுங்கள்:

http://www.guardian.co.uk/business/2012/dec/05/tesco-signals-retreat-us-chain

// The survey showed that only 29% of shoppers now choose to make most of their purchases at Tesco, compared with 35% last year. "Rather than seeing improvements, UK consumers perceive that Tesco's offer is becoming less competitive on price and quality," said Gulliver.//
யு.கேவில் கூட அதன் விற்பனை இறங்குமுகமாக தான் இருக்காம், கார்டியன் பேப்பர் எல்லாம் படிக்கிறது இல்லையா :-))

போட்டி இருந்தால் நல்ல பொருள்கள் ,நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்கும்!
No I don’t read Guardian newspaper, so you already assumed that I don’t know about Tesco’s situations. FYI (You think you have said something intelligent and you add this smiley as if it is sarcastic I only find it idiotic) In any business all the investors will want to see only thing ie the sales fig in the graph chart to be pointing upwards , Tesco was under huge pressure to increase its sales figures so increased it’s prices but the plan backfired.

---------------------

இந்தியாவில் ஒரு விவசாயியாக விளைப்பொருளை விற்க படும் கஷ்டத்தினையும் பார்த்துள்ளேன், ஒரு நுகர்வோராக அதிக விலைக்கு வாங்க கட்டாயப்படுத்துகிறோம் என்பதையும் பார்த்துள்ளேன்.
எனவே இரண்டுக்கும் இடையே வியாபாரிகள் செழிப்பதை ஏன் மாற்ற முடியவில்லை எனப்பார்த்தால் , அனைவருமே ஒரே வலையப்பில் உள்ள கண்ணிகள், எனவே எளிதாக ஒருங்கினைந்து, சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள்.எனக்கு ஒரு மாற்றம் தேவை, அது எப்படியோ நடக்கட்டும் என வெறுத்து போய் தான் அன்னிய சில்லறை வர்த்தகமாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறேன்.

If there is a problem in your house will you bring an outsider to solve the problem knowing they are evil? I am repeating again I am not supporting the existing system , I know the farmers plight , I just don’t want it to get worse.

அதே சமயம் அவர்கள் ஒரு போட்டியை உருவாக்கி , சந்தையில் மாற்றம் உண்டாக்குவார்களே தவிர முழுசாக ஆக்ரமிக்க முடியாது என்பதும் நிதர்சனம்.
Even if they don’t encroach fully significant damage will be done.

Anonymous said...

வவ்வால் said...
ப்ரியா கார்த்திக்,

//Then I hold high standards about your blog as it is informative and educative compared to Jackie or Cable’s blog which is of Tea bench standards. //

மும்முரமாக பேசியதில் கவனிக்கவில்லை, ஆஹா நீங்க இப்போ தான் படிக்கிறீங்க என நினைத்தேன் ,முன்னரே வாசிக்கும் பழக்கம் உண்டா.

உங்கள் கருத்துக்கு நன்றி!

சில்லறை வர்த்தகத்தில் இன்று நிலவும் அமைப்பு சரியல்ல, அதனை மாற்ற வேண்டும், ஆனால் 66 ஆண்டுகள் சுதந்திரம் பெற்று ஆயிற்றுறு இன்னும் மாற்றம் காணோம், எனவே இப்படியாவது மாறட்டுமே என நினைக்கிறேன்.

வெள்ளையர்களை வெளியேற்ற கொடுங்கோலன் ஹிட்லருடன் நேதாஜி கூட்டணி அமைக்கவில்லையா?

எனவே சுதேசம் பேசி , இந்திய விவசாயிகள் சுமார் 70 கோடி பேரை இன்னும் எத்தனைக்காலம் தான் வறுமையில் உழல செய்ய வேண்டும்?
I will be really happy if the farmers benefit but when it is evident how they are tormenting European farmers and doing things like fixing prices , I am scared to think what will happen to Indian farmers and consumers. FDI in retail is bound to happen it can’t be stopped. I know Walmart has already started its ground work couple of years ago and has used all loopholes and are ready to launch when given the green light. The laws will favour them. I just wish one thing , people in Europe have woken up and are aware of the consequences , they are patriotic and conservative. I wish Indians also wake up .

வவ்வால் said...

சரவணன்,

நன்றி!
consumer durable and consumer house hold items அப்படினா என்னன்னு கொஞ்சம்ம் கவனிக்கவும். சரவணா ஸ்டோரில் இதான் பெரும்பாலான வியாபாரம்.

மேலும் ஆண்டுக்கு ஒன்றே இரண்டு முறையோ தான் அப்படி வெளியூரில் இருந்து வாங்க வருவார்கள்.

அததை போல சென்னைக்கு வந்து மளிகை பொருளை யாரும் வாங்கப்போவதில்லை.

--------------
அரவிந்தன் ரங்கநாதன்,

வாங்க,நன்றி!

இது கொஞ்சம் தான் இன்னும் எவ்வளவோ இருக்கு அதை எல்லாம் சொன்னால் என்னாகும்?

சோடா குடிங்க ...மிக்ஸிங் உங்க விருப்பம் :-))

தேடி வரும் மக்கள் கண்டிப்பாக வருவாங்க, வந்தவங்களை குந்த வச்சிடலாம் :-))
---------------

ராச நட,

வாரும்,நன்றி!

அரசியலி நேரடி ஆதரவு,மறைமுக ஆதரவுன்னு இருக்கு,ரெண்டாவது வேலையைத்தான் முலாயம், மாயாவதி செய்து இருக்காங்க,, ஆனால் என்னமோ எதிர்த்து வெளியே போனாப்போல ஒரு தோற்ற மயக்கம் :-))

கண்டிப்பாக காலம் தான் பதில் சொல்லும் ,ஆனால் நிகழ்காலத்திலேயே உதாரணங்கள் இருக்கு.

பிர்லாவின் மோர் கடைகளுக்கு நட்டம் என கோவை போன்ற நகரங்களில் மூடுகின்றனர். மும்பையில் நட்டம் என ஸ்பென்சர்ஸ் மூடுகிறார்கள்.

இன்னும் பலர் ஆரம்பித்த கடைகளை எப்போ மூடலாம்னு யோசிக்கிறார்கள்.

வால்மார்ட், டெஸ்கோ எல்லாம் இந்திய சூழலில் , தண்ணீரில்லா மீனைப்போல தவிக்கணும் என்பதே எனது கருத்து.

உள்நாட்டு வியாபார வலையை மாற்றியமைக்க ,புதிய வரவுகள் தேவை என்பதே நமது நிலைப்பாடு.

நிறைய பேரு பொருளாதார பார்வைகளுடன் வருவதை அடியேன் வரவேற்கிறேன்.

நம்ம தமிழ்ப்பதிவுலகில் ஆடம்பர பதிவுகளே அதிகம் ஆகிவிட்டது, பின்னூட்டங்களும் ஒன்று இரண்டு வார்த்தைகலே என சிக்கனமாகிவிட்டது, நம்ம கடையில தான் அன் லிமிட்டட் அலப்பரைகள் :-))
-----------------

வவ்வால் said...

பிரியா கார்த்திக்,

வாங்க,நன்றி!

ஒரு சைக்கிளை சைக்கிளிக்கா ஓட்டுறிங்க :-))

//I will be really happy if the farmers benefit but when it is evident how they are tormenting European farmers and doing things like fixing prices , I am scared to think what will happen to Indian farmers and consumers. FDI in retail is bound to happen it can’t be stopped.//

இதே கதை இந்தியாவில் சுமார் 66 ஆண்டுகளாக உள்ளூர் வியாபாரிகள் செய்கிறார்கள் என இங்கே ஒருத்தன் தலைகீழாக தொங்கிட்டு சொல்லுவதையும் கவனிக்கலாமே :-))

// I know Walmart has already started its ground work couple of years ago and has used all loopholes and are ready to launch when given the green light. The laws will favour them. I just wish one thing , people in Europe have woken up and are aware of the consequences , they are patriotic and conservative. I wish Indians also wake up .//

இதையும் நான் ஏற்கனவே சொல்லிட்டேன். வால்மார்ட் 10 கேஷ்&கேரி மொத்த விற்பனைக்கூடங்களை வடமாநிலங்களில் நடத்துகிறார்கள்.

அவர்களின் பிராக்ஸி விற்பனை தமிழகத்திலும் இயங்குது. இப்போ சில்லறை வர்த்தகம் அவ்ளோ தான்.

#//- You mentioned supermarkets existed only in shopping zones; I had to prove you that it is not the case always. (Don’t start from the beginning with another excuse it just proves you are stuck with your opinion in your head)
- Your assumption was Supermarkets don’t sell fresh meat or sea food. Again I had to prove you wrong. Your reply was whether Supermarkets will be able to sell that day’s catch like the local traders. I can’t keep repeating things to you. When they sell fresh drumsticks in the UK they can sell anything fresh.//

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா?

அவ்வ் முடியல்லை, இந்திய சந்தை அமைப்பு, மற்றும் வாங்கும் திறன், மனோபாவம் அனைத்தும் மாறுப்பட்டது என உங்களுக்கு புரியாமல் போனதன் காரணம் , உண்மையான இந்தியாவை இன்னும் நீங்கள் காணவில்லை எனலாம்.

பல்லாவரத்தில் இன்றும் சந்தை நடக்குது. மக்கள் இன்றும் சாலையோர கடைகளில் வாங்க்குகிறார்கள்.

ரெங்கநாதன் தெருப்பக்கம் போனால் காணலாம், ரயில் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் அத்தெரு முழுக்க நடக்கிறது.

எத்தனை வால்மார்ட் வந்தாலும் இந்திய உள்ளூர் வியாபாரத்தினை அசைக்க முடியாது, மார்க்கெட் ஷேரில் கொஞ்சம் போகும், அதனால் எல்லாம் பெரிய நட்டம் வராது.

#//You don’t know the plight of European farmers; they are in the streets often protesting demanding better prices for their goods. Recently there was a protest held by the Belgium farmers. //

இந்திய நிலையை யோசிக்காமல் அதை எல்லாம் எதற்கு யோசிக்கணும் ?

இங்கே பல ஆண்டுகளாக விவசாயிகள் இதனை தானே செய்கிறார்கள், என்ன பலன் கிடைத்தது.

நம்ம ஊரு நிலமையை கவனியுங்க கொஞ்சம்.

#// But you know what they use that black money to buy something else in the same economy in the form of Jewels, land investment etc, it all goes around in rotation. //

வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பண புழக்கத்திற்கு இதை விட நல்ல நியாயம் கற்பிக்க யாராலும் முடியாது :-))

இதெல்லாம் சந்தையில் சாமனியனின் நுகர்வை பாதிக்கிறது என்ற உண்மையை உணரவில்லையே.

ஒரு இடம் ஒரு லட்சம் எனில் என்னிடம் அந்த தொகை தான் இருக்கு என வாங்கப்போனால், கறுப்பு பணம் வைத்திருப்பவன் 2 லட்சம் கொடுக்க தயார்ரக இருக்கும் போது எனது வாய்ப்பு அடிப்படுகிறது, இது போல சாமனியனின் வாழ்வில் கறுப்பு பணம் பல இடர்களை உண்டாக்கும், ஆனால் அதனை பணப்புழக்கம் என சொன்னால் என்ன செய்வது :-))

#//If this is the case , I am sure there are laws to protect customers in India but it looks like they have rusted//

ஒரு சமயம் இந்திய சட்டம் சரியில்லைனும் சொல்றிங்க, அப்புறம் சட்டம் இருக்குன்னு சொல்லி இப்போ சமாதானமும் படுத்துறிங்க. எல்லாரும் கன்ஸ்சுயுமர் கோர்ட்டுக்கு அலைய முடியாது,எனவே அச்சட்டத்தினால் நுகர்வோருக்கு பலனே இல்லை.

//Here you got 28 days to return or exchange goods and all electronics come with standard 1 or 2 years manufacturer’s warranty. //

இங்கே ஏன் நம்ம வியாபாரிகள் அது போல செய்யவில்லை?காரணம் அவர்கள் வைத்தது தான் சட்டம்.

தொடரும்....

வவ்வால் said...

தொடர்ச்சி...

//It’s true, the problem lies within the society, if we have to question, we have to question everybody. Almost all private enginerring colleges are collecting crores in donations without giving any form of receipt. //

ஏற்றுக்கொண்டதற்கு ,நன்றி!

கேள்விக்கேட்டால் முறைப்பு தான் பதிலாக கிடைக்கும் :-))

ஒன்றுக்கு இன்னொன்று என கேள்வியா?

கல்லூரிகள் பணம் பறிப்பதையும் பெற்றோர்கள் வேடிக்கை பார்ப்பதையும் பற்றி நான் ஒரு பதிவே போட்டாச்சு.
காண்க:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: DAYLIGHT ROBBERY-கல்வி வியாபாரம்.

பெற்றோர்களே விரும்பி காசு கொடுத்து அக்கல்லூரிக்கு போனால் என்ன செய்வது?

# //Over a period of time these small traders will be out of business.//

இன்னும் கொஞ்ச காலம் இப்படியே விட்டால் இந்திய விவசாயிகள் அனைவருமே விவசாயத்தினை விட்டு வெளியேறி இருப்பார்கள்.

அப்பவும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடக்கும், முழுக்க இறக்குமதிப்பொருட்களை வைத்து, அவர்கள் உள்நாட்டு உற்பத்தியை பற்றி எல்லாம் கவலையே படமாட்டார்கள்,. உற்பத்தி குறைந்து தேவை அதிகமானால் அதிக லாபம் என சுயநலத்தோடு தான் கணக்குப்போடுவார்கள்.

உள்நாட்டு உற்பத்தி அடியோடு நின்றால் அதிகம் மகிழ்வது வணிகர்களாக தான் இருக்கும், ஏன் எனில் இறக்குமதி என்றால் பொருட்களின் அளவை கட்டுப்படுத்தி ,விலையை எளிதில் நிர்ணயிக்கலாம் என்பதால்.

#//You are talking about retailers in existence, just google how many have closed in the last few years. Main reasons being cited are economic downturn and competition from supermarkets//

அதனால் என்ன இப்பொழுதும் கடை நடத்த முடிகிறது அல்லவா, அதிகப்படியான கடைகள் குறைந்து, நுகர்வோருக்கும், உற்பத்தியாளருக்கும் போதுமான லாபம் கொடுக்கும் சந்தை உருவானால் சரி தான்.

#//Here also people walk to stores .I don’t understand what you are trying to relate here. //

நடந்து போகமாட்டங்கன்னு சொல்லவில்லை,(எல்லாவற்ரையும் மாற்றி புரிந்துக்கொள்கிறீர்கள்)சிறிய கடைகள், அதிக கூடுதல் வசதியில்லாத கடைகளுக்கும் வியாபாரம்ம் நடக்கும் இங்கே என சொல்கிறேன்.

#//I can buy one drumstick ,one onion , one tomato in a supermarket , they certain sell their items in lose. You just assumed for yourself they only sell items in bulk.//

விதி விலக்குகள் விதிகள் ஆகாது. மெஜாரிட்டி ஷாப்பிங்க் செய்யும் பேட்டர்ன் ஐ சொல்கிறேன்.
#//usiness all the investors will want to see only thing ie the sales fig in the graph chart to be pointing upwards , Tesco was under huge pressure to increase its sales figures so increased it’s prices but the plan backfired. //

இந்த உண்மை எனக்கு தெரியாம போச்சே :-))

இந்தியாவில் சார்ட் போடாமலே விற்பனை மற்றும் லாபம் என்னனு கணக்கு போட்டு செயல்படுவாங்க. எல்லா இடத்திலும் லாப நோக்கு தான். நீங்க சொல்வதை பார்த்தால் இந்தியக்கடைகள் தர்மஸ்தாபனம் போலன்னு இல்ல ஆகுது!!!

#//If there is a problem in your house will you bring an outsider to solve the problem knowing they are evil? I am repeating again I am not supporting the existing system , I know the farmers plight , I just don’t want it to get worse.//

இந்தியாவில் வழக்கமாகவே பிரச்சினை தீரலைனா வெளியாள் வச்சு பஞ்சாயத்து செய்வது வழக்கம்.

நீங்க நாட்டாமை,சின்ன கவுண்டர் போன்ற பஞ்சாயத்து படங்களை பார்க்கவில்லை என நினைக்கிறேன்!!!

சரி அன்னிய ஆள் வர வேண்டாம், இவங்க தங்களை மாற்றிக்கொள்வார்களா? அதுவும் கிடையாது, அப்போ காலம் முழுக்க இந்திய வியாபாரி என்பதால் சுரண்டுவதை இன்பமாக நினைத்து விவசாயிகளும், மக்களும் வாழனுமா?

IIT இல் படித்தவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைக்காத நிலையா இருக்கு 99% அயல்நாட்டுக்கு போவதேன், ஊதியத்தினை ஒப்பீட்டு பார்த்து போகிறார்கள், சிலர் இந்திய வேலையே போதும் என இங்கும் இருக்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு போக கூடாது என தடை விதிக்க கூடாது போல, இந்தியாவிலும் மக்களுக்கு என்ன தேவைனு தேர்ந்தெடுக்க உரிமை வேண்டாமா?

இன்னும் விரிவாக அடுத்தப்பதிவில் சொல்கிறேன் ,அது வரையில் பொருத்தருள்க!!!

Anonymous said...

கடி(Gadi) காரி(Ghaari) இந்தி உச்சரிப்பு பிரச்சனை..(அந்த வெப்சைட்ல இருக்கிற விளம்பர வீடியோ பார்க்கவும்) அவங்க எப்பவுமே இப்டித்தான் ..விட்டுத்தள்ளுங்க. ஆனா அது கடிகாரம் பிராண்ட் தான். நீங்க ஏன் குகைன்னு சொன்னிங்கன்னுதான் புரியல.

// மத்தப்படி FDI விசயத்துல இப்போதைக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல..
ஆனா லாங் டெர்ம்ல என்ன நடக்கும்னு இப்போ சொல்ல முடியாது.

--same anony--

Anonymous said...

IMO,it is purely depends on which people wallmart targets.If they simply satiesfied with upper moddle class only then u can see very few supermarkets only but if the target is towards lower middle class too then u can see many number of outlets is even small towns as well, hence the annachi kadais will suffer more.

Raj said...

------------------
“நீங்க சொன்னது போல இந்தியன் கடைகள் என இலங்கை தமிழர்களால் பெரும்பாலும் நடத்தப்படும் கடைகளில் அனைத்தும் கிடைக்கிறது எனவும் சொன்னார். அதை எல்லாம் முன் கூட்டியே திட்டமிட்டு போனால் தான் உண்டு. நீங்க கூட 2 மணி நேரம் எடுத்துப்போனேன் என ஏன் சொல்கிறீர்கள், அங்கே அப்படி தான் பயணம் செய்து தேவையான கடையை அடைய வேண்டிய நிலை.”

ஐரோப்பாவில் பெரும்பாலான கடைகள் இலங்கை தோழர்களால் நடத்தபடுகிறது... இங்கு படேல் மக்கள் தான் பெரும்பாலான கடைகளை நடத்துகிறார்கள்.. நான் முன்பு சொன்ன மாதிரி.. சின்ன ஊரில் வசித்தால் அதிக தூரம் போக வேண்டியது இருக்கும்.. தூரம் அதிகமே தவிர.. நேரம் குறைவாக தான் ஆகும்..
---------------------------------
“இந்தியாவுக்கும், மேலை நாடுகளுக்கும் நிறைய நுகர்வு கலாச்சார வேறுபாடுகள் இருக்கு. எனவே வால்மார், டெஸ்கோ எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் லாபம் ஈட்ட முடியாது.”

இது மிக சரியான புரிதல்.. இது தான் என் வாதமும் கூட... நமது நுகர்வு கலாச்சாரம் என்ன தான் மேல் நாடுகளை நோக்கி போனாலும்.. சில அடிப்படை நுகர்வு கலாச்சாரம் மாறுவதற்கு சில பல ஆண்டுகள் ஆகும்..
----------------------------------------

“விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் போட்டி உருவாக இன்னொரு வியாபாரி நாட்டுக்கு தேவை, அது வால்மார்ட் அல்லது உள்ளூர் சூப்பர்மர்கெட் நிறுவனமாக கூட இருக்கலாம்.


இப்பொழுது நிலவும் கமிஷன் மண்டி முறை விவாசாயிகளை அழிக்கிறது, இப்படியே போனால் நாளை விவசாயம் செய்ய இங்கு யாரும் இருக்க மாட்டார்கள், ஆனால் நம்ம உள்ளுர் வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வழக்கம் போல வியாபாரம் செய்வார்கள்.”

இது மிக சரியான வாதம்.. சிறு வியாபாரிகளை பற்றி கவலைப்படும் இவ்வளவு பெரும் ஏன்.. உற்பத்தியாளர்களை பற்றி யோசிக்க மறுக்கிறார்கள்..
விவசாயம் செய்ய இருக்க மாட்டார்கள் என்ன.. இப்போவே இல்லை.. எந்த விவசாயி தனது மகன் விவசாயம் செய்ய வேண்டும் என நினைக்கிறான்.. இந்த தலைமுறை விவசாயிகள் காலத்திற்கு அப்புறம் தான் இதை அனைவரும் உணருவார்கள்.. வருடத்திற்கு எவ்வளவு நிலம் தரிசு நிலமாக போகிறது..
Economic Times dated Feb 27,2011
NEW DELHI: Agricultural land in India has shrunk by nearly two per cent in the last two decades, a fact which does not augur well for the predominate agrarian country.
Total agricultural land in India in 2008-09 was 182.385 million hectare against 185.142 million hectare in 1988-89, a fall by 2.76 million hectare, according to the data provided by Agriculture Minister Sharad Pawar in Parliament recently.
ஏன்.. நாம் இதை பற்றி கவலை படுவது இல்லை.. உற்பத்தி இருந்தாலும் இல்லை என்றாலும் இறக்குமதி ஒரு எளிய தீர்வு..
--------------------------

“நம்ம ஊரு சந்தை நிலவரம் மேலை நாட்டுக்கு முற்றிலும் வேறானது சுமார் 60 கோடி மக்கள் அன்றாடம் காய்ச்சிகள், அவர்கள் எல்லாம் சூப்பர் மார்கெட் போய் வாங்கி குவிக்க போவதில்லை,

இங்கே மெக சூப்ப்பர் மார்கெட், சூப்பர் மார்கெட் எல்லாம் பெரு நகரங்களில் தான் செல்லுபடியாகும்.

இதனை ஏற்க வெளிநாட்டில் வசிப்போருக்கு மனமில்லை :-))

அவர்கள் உண்மையான இந்தியாவை புரிந்து கொள்ளவில்லை என்பேன் :-)) “


இதற்கு விதிவிலக்கு உண்டு.. அனைவரும் அப்படி இல்லை..
இந்தியாவில் இருந்து கொண்டு உண்மை நிலைமை புரியாத இந்தியர்கள் தான் அதிகம்..
------------------------------------

mahi said...

பிரியா கார்த்திக் உங்கள கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க போலிருக்கு . அது எப்படிஇவளோ அடி வாங்கியும் மீசைல மண்ணு ஒட்டலைன்னு சமாளிகிறீங்க . வெரி குட் வொர்க் .

அ. வேல்முருகன் said...

நம்ம டென்ஷன் விட உம்ம டென்ஷன் பெரிசுதான்

//பொன்வண்டு,அரசன் சோப்பை எல்லாம் வால்மார்ட்டா வந்து அழிச்சுது? எல்லாம் நம்ம ஆட்கள் தானே//

வால் மார்ட் இல்லீங்கோ நீங்க பட்டியல் பேர்ட்ட யுனி லிவர் நிறுவனம். யுனி லிவர் வேற என்ன செஞ்சது. அரசாங்க மாடர்ன் பிரட் நிறுவனத்தை வாங்கி ரொட்டி விக்கிறாங்க.

//பெப்சி,கோக் வந்தாங்க, யாரு மாப்பிள்ளை விநாயகர், டொரினோ எல்லாம் தடை செய்தா? எல்லாம் உள்ளூர் கடை யாவாரிங்க தான்.//

ரூ.15000 கொடுத்து மற்றும் இலவசமா பிரிட்ஜ் கொடுத்து என்னுடைய புராடக் மட்டும்தான் விக்கனும் தாலி அறுத்தவன் உங்க பெப்சி, கோக் தானுங்கோ.

வரலாறு பொய்யால் மாறாதுங்கோ

//நான் இப்போவும் பவண்டோ, கோலி சோடா கிடைச்சா குடிப்பேன், கடைக்காரங்க தான் வாங்கி வைப்பதேயில்லை.//

உயிரோட இருந்தவனை கத்தியால குத்திப்புட்டு டேய், எழுந்திரு எழுந்திரு ஏன் நடிக்கனும் வாவ்வாலு

//இவங்களா பெப்சி,கோக்கிற்கு அடிமையாக ஆகிட்டு , வால்மார்ட்டை மட்டும் அழிக்க வருதுன்னா எப்பூடி?//

கழிசடைகள் விஜய், சச்சின் இன்னும் என்னென்ன ஜன்மங்கள் மீடியாவில பெரிசாகுதோ அவங்களை விட்டு கோடிக் கணக்கில் கொட்டி விளம்பரத்தை செஞ்சு கோக் குடி கம்பீரம் சொன்னா, காளி மார்க் குடிப்பது, கோலி சோடா குடிப்பது அவமானம். நாங்க (மக்கள்) மாடர்னு காண்பிக்க வேண்டாமா?



//நீங்க உண்மையில உள்நாட்டு வியாபாரத்தை பெருக்கணும்னா நான் பட்டியல் போட்ட பொருளை எல்லாம் வாங்காம இருங்க பார்ப்போம்//.

த்தோடா எல்லோரையும் கொன்னுபுட்டு என்னைய பார்த்து உயிரோடு இருக்கனுமான்னு மிரட்டுரதை பாருங்க

//இன்னும் நிறைய அடுத்தப்பதிவில் வருது.//

வாங்கோண்ணா

//ஒருக்கா நெல்லு, மல்லாட்டைனு போட்டு விக்க நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் போய்ப்பாருங்க, நீங்களே நொந்து போவீங்க//.

துணைக்கு நீங்களும் வாரியளா?

//கடனை வாங்கி விவசாயம் செய்துவிட்டு ,விளைச்சலை விக்க முடியாம கஷ்டப்பட்ட விவசாய குடும்பத்துல இருந்து வந்தவன் தான் நான்.//

அப்போ விவசாயிக்கு கிடைக்கும் விலையும் வாங்குறவன் கொடுக்கும் விலையும் தெரியும். சந்தோஷம்

//மிக சொற்பமான வியாபாரிகளுக்காக பேசும் நீங்க எல்லாம் விவசாயிகள் கஷ்டப்படுவதை பற்றி என்னிக்காவது பேசி இருப்பிங்களா?//

என்ன ஒரு இரக்கம் ஓணாய்க்கு, இடைத் தரகனை ஒழிக்கனும் அதற்கு பதில் வெள்ளைகார தரகனைதான் வைக்கனும். அதான் அழகு. அப்பதான் நான் வெள்ளையா தெரிவேன்.

கேட்டால் யாரு கஷ்டப்பட்டு விவசாயம் செய்ய சொல்றாங்கன்னு சொல்வீங்க, அப்புறம் அரிசி,பருப்பு எல்லாம் ஆகயத்துல இருந்தா கொட்டும்?

எதற்கு இந்த நீலிக் கண்ணீர், விவசாயின் கஷ்டம் உணந்துதான்
துரைமார கூப்பிடுறீங்களோ?

வவ்வால் said...

அதே அனானி,

நன்றி!

ஒன்று அந்த இணையத்தளத்தில் எழுத்து வடிவில் போட்டதை தான் நான் பயன்ப்படுத்தியுள்ளேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், அல்லது Ghari என்றால் குகைனு இந்தி டிக்‌ஷனரியில் போட்டிருப்பதையாவது பார்த்திருக்கணும்? எதையுமே செய்யாம கேள்வி மட்டுமே கேட்க தெரிந்த புலவரா?

ஆமாம் ,ஆமாம் போக போக தெரியும் வால்மார்ட் கதை ,நாறுமா ,தேறுமானு :-))
-----------------
அனானி,

//class only then u can see very few supermarkets only but if the target is towards lower middle class too then u can see many number of outlets is even small towns//

குத்துமதிப்பாகவே பேசுங்க :-))

மெட்ரோ மற்றும் பெரிய நகரங்களில் தான் அனுமதி,மேலும், சிறிய நகரங்களில் கடை நடத்தி பன்னாட்டு நிறுவனத்தால் லாபம் ஈட்ட முடியாது.
----------------------

ராஜ் ,

வான்ங்க ,நன்றி,

பல கருத்துகளும் ஒத்து போகின்றதை சொல்லி இருக்கீறீர்கள்.நன்றி!

#//இதற்கு விதிவிலக்கு உண்டு.. அனைவரும் அப்படி இல்லை..
இந்தியாவில் இருந்து கொண்டு உண்மை நிலைமை புரியாத இந்தியர்கள் தான் அதிகம்.. //

ஏன் எனில் அவர்கள் இந்திய கஷ்டத்தினை மட்டுமே அனுபவித்தவர்கள்.

வெளிநாட்டுக்கு போனவர்களுக்கு இரு நாட்டு சுக, கஷ்டங்கள் தெரியும் போது சிறப்பாக புரிந்து கொள்ளலாம்.

சரி ஏன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரவங்க எல்லாம் இங்கே ரோட் நல்லா இல்லைனு புலம்பனும், இதான் இந்தியானு இருக்கலாமே?

ஆனால் டோல் ரோட் போட்டு கிலோ மீட்டருக்கு காசு புடுங்கினா தப்பில்லை என்பார்கள், ஆனால் அதே டோல் ரோட் வருமுன்னர் இலவச சாலை தானே இருந்தது? அப்போ அது மக்களின் உரிமை பறிப்பு இல்லையா?

இந்திய முதலாளி, அமெரிக்க முதலாளி எல்லாருமே லாபத்திற்கு தான் குறி வைப்பார்கள், இதில் சிறப்பான சேவை,குறைவான சேதம் எங்கே எனப்பார்க்க வேண்டிய சூழல்.

இனிமே யாராவது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்து இந்தியாவில் ரோடு சரியாயில்லை, கக்கூஸ் சரி இல்லை, என பொலம்பட்டும் அன்னிக்கு இருக்கு கச்சேரி. :-))
-----------------------

மஹி,

ஹி...ஹி இதை சொல்ல என ஒரு ஐடி உருவாக்கிட்டு வந்தீரா?

கிழிஞ்சத வந்து தச்சு குடுய்யா :-))

பதிவும் புரியாமல் ,பின்னூட்டம்மும் புரியாமலே கூவுறாங்கலே :-))

-------------

வேல் முருகன்ணே,

வாங்க, நன்றி!

கதவிடுக்கில எதுனா மாட்டிக்கிச்சா வீல் ...வீல்னு கூவுறிங்க,
பதிவையும், பின்னூட்டத்தையும் ஒருக்கா படிங்க, என்ன சொல்லி இருக்குன்னே இன்னும் உங்களுக்கு புரியிலையே :-))

நான் சொல்லி இருப்பதையே மீண்டும் எனக்கு சொல்லி என்னை கேள்வி கேட்குறிங்களே உங்களுக்கு மூளையில் பவர் கட் ஆகிருச்சா :-))

--------------------------------

Anonymous said...

இந்தியச் சந்தையில் நுழைவதற்கு அமெரிக்க எம்.பி. மற்றும் இந்திய எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக பிரபல வால்மார்ட் நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ரூ.125 கோடியைச் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வரை 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.125 கோடி) இந்திய சில்லரை வணிகத்தில் கால் பதிக்கும் நோக்கத்தில் வால்மார்ட் நிறுவனம் வாரி இரைத்துள்ளது. இந்த தொகையில் இந்தியா தொடர்புடைய ‘லாபியிங்’ செலவுகளுக்காக மட்டும் ரூ.18 கோடி செலவாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும், இந்தியாவுக்குள் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக ரூ.10 கோடியை வால் மார்ட் செலவிட்டுள்ளது.


By--Maakkaan.

அ. வேல்முருகன் said...

வாவ்வால்

நீங்க சொன்னத்ற்கு கீழ் எனது பதில் இருக்கிறது. நானா இட்டுக்கட்டி ஏதும் சொல்லவில்லை.

ஒரே மாதிரி சிந்தித்தா பவர் கட் வருமா?

அட புதுசா இருக்கே!

Dravidian said...

Vanakkam Nalla PAthivu.
Aanal sila karuthukalai ingu pathivu seyya virumbiguren.Aangilathail seigiren mannikavum.
Retail giants like Walmart - What do they do??
They say that they will be able to give the products at the best prices.How?
1.By eliminating various levels of distribution.Directly deal with manfucaturers(No stockist/distributors etc)
2.They can buy huge volumes thereby negotiating strongly with the manufacturers(Buying power shifts from Manufacturer as they had smaller stockists/dealers to deal with.Now they have to deal with Retail Giant)
If you see initially it looks like a good choice for the second brand aspiring to push up their volumes and they give huge discount.The leading brand starts losing its market share and forced to come to the retail giant.Then both the brands start undercutting.After a while they have to start reducing their cost which definitely makes them cost efficient.But in the process both of them starts losing their margins.Then when these brands realise and starts putting their footdown the retail giant comes up with their own brand at a slightly lower cost but make good margins as they do not spend anything on branding/advertising(In the process many distributors/dealers lose volume and starts getting out of the job)
Also their shops are designed to operate with very few people and they are more like slaves.In a big bazaar you will see some 8 people on the counter.For the same business there will be atleast 20 small shops in India employing 40 people other than the owners.
We can say that in India it is difficult to change the mentality of customers but they will start buying in bulk for their monthly needs.They buy a lot of stuff in huge quantities just because it is 10% cheaper and tempted to buy them.In the process they waste a lot of stuff(one of the reason for inflation which results in eventually price going up.Because you are unneccesarily demanding more where as actual demand is not so).
We may argue that farmers might get benefitted as they do not deal with middlemen and start procuring directly.Cold storage and supply chain systems will develop.But the point is why these couple of good things has to happen only because of Walmart?It can happen if the govt decides to do so.
We have to understand that there is certainly going to be a lot of jobs lost.We can deny all we want.We may be happy looking at swanky walmarts with people in smart uniform but we have to see that in place of that one smart uniform we could have had 4 guys employed.
We need to see in the larger interests of job creation.The retail ginats are facing a lot of flak in their own country US on the wages.The workers have gone on strike.There are some studies which shows that walmart has been detrimental to many countries.
The government needs to take active interest to ensure that middle mens role is eliminated and the farmers get the best price for their produce by investing in cold storage/directly procuring and selling at a better price to other cos which make final products.
All said and done this is a recipe to create more rich people and corporation in the pretext of getting products at best price for end consumer what will happen is fleecing of labourers farmers and ensuring that they remain in the bottom rung forever.
Government should think about simplifying taxes for these smaller shops so that they come under tax net.Saying again and again that retail is good for India is not going to help in real development.The retail giants are only interested in entering the worlds largest market.Period.