Wednesday, March 21, 2012

சிட்டுக் குருவிகளும் கட்டுக்கதைகளும்- உலக குருவி தினம்! மார்ச்-20



சிட்டுக் குருவிகளும் கட்டுக்கதைகளும்- மார்ச்-20: உலக குருவி தினம்!



மயன் நாட்காட்டியின் படி உலகம் 2012 இல்  அழியப்போகிறது என்று புனையப்பட்ட இணையக்கதைகளுக்கு சற்றும் குறையாமல் சிட்டுக்குருவிகள் அழிய போகிறது என  யாரோ சிலர் இணையத்தில் கிளப்பிவிட்டு , உலக சிட்டுக்குருவி தினம் என ஒன்றை சிலர் திட்டமிட்டே உருவாக்கி  ஒரு இணைய தளத்தையும் ஏற்படுத்தி அக்கதையினை  மிக நன்றாக பராமரித்தும் வருகிறார்கள்.உண்மையில் சிட்டுக்குருவிகள் முன்பிருந்த எண்ணீக்கையை விட சற்றுக்குறைந்திருக்கிறது ஆனால் இன்றும் மிக அதிக எண்ணிக்கையிலெ இருக்கு என்பதை விளக்கமாக சொல்லவே இப்பதிவு.

 தெரு தெருவா சுற்றி பரபரப்பான செய்தி சேகரிக்க அல்லாடும் ஊடகக்காரங்களை விட மிக அதிக பரபரப்பில் பதிவு போட அல்லாடும் நம்ம மக்களுக்கு இந்த குருவி செய்தி அல்வா ஆக மாட்டவும் ஆளாளுக்கு குணா கமல் போல குருவி பாசம் மண்டைய கொத்த ஈகலப்பைய எடுத்து உழுது  தள்ளி அவர்களின் ஜீவகாருண்ய அபிமானத்தை சாரு பிழிந்து சக்கையாக கொட்டித்தள்ளுறாங்க பதிவுகளில் :-))

உண்மையில் சிட்டுக்குருவிகள் அழிய போகிறதா அல்லது அழிந்துக்கொண்டு வருதா எனப்பார்ப்போம். சிட்டுக்குருவியின் அறிவியல் பெயர் பேஸர் டொமெஸ்டிகஸ்  யூரோப்பியன் ஆகும். ஐரோப்பாவில் இருந்து நாடுப்பிடிக்க கிளம்பின வெள்ளைக்காரர்கள் கையோடு குருவிகளையும் கூண்டுகளில் எடுத்து சென்று ,சென்றமிடமெல்லாம் பறக்கவிட்டார்கள், அப்படித்தான் இந்தியாவுக்கும் வந்தது, இந்தியாவில் அதன் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இப்போது தாயக பறவை நிலை கொடுக்கப்பட்டாச்சு.

சிட்டுக்குருவியின் அறிவியல் வகைபாடு கீழே:

Scientific Name: Passer domesticus
Common Name/s: English House Sparrow
French Moineau domestique

Taxonomy
                           
 Kingdom -ANIMALIA 
 
Phylum- CHORDATA  

Class - AVES 


Order  -PASSERIFORMES 

Family-PASSERIDAE

Species Authority: (Linnaeus, 1758)

உலகத்தில் அதிகம்காணப்படும் பறவையினம் எதுவெனில் கொக்கரக்கோ அதாவது கோழி(gallus gallus domesticus) தான் ,ஏன் எனில் மனிதனுக்கு உணவாக பயன்படுகிறது, எதெல்லாம் மனிதனுக்கு தேவையோ அதை அழிய விட மாட்டான். கோழிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாக சொல்லப்படும் பறவையினம் எதுவென பார்த்தால் அழியப்போவதாக பூச்சாண்டிக்காட்டப்படும் சிட்டுக்குருவிகளே , வகைப்படுத்தப்பட்டே 25 இனங்கள் இருக்கு, மேலும் ஸ்பானிஷ் சிட்டுக்குருவி, வழக்கமான வீட்டு சிட்டுக்குருவி ஆகியவை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில்  உணவு தானியங்களை அழிக்கும் உயிரிகளாக (pest on cereals) பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி எனில் மிக அதிக எண்ணிக்கையில் பெருகி தானியங்களை உண்டு அழிப்பதாக பொருள்.

உலக அளவில் அழிந்து வரும் உயிரினங்களை பட்டியலிடும் சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையமும் (INTERNATIONAL UNION OF CONSERVATION AND NATURE=IUCN) சிட்டுக்குருவிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அழிந்துவிடும் கவலையில்லாத பாதுகாப்பான பறவையினம் என வகைப்படுத்தியுள்ளது. அவர்களே உலக அளவில் உயிரினங்களை கணக்கெடுத்து அழிந்த ,அழியப்போகிற என பலவகையில் பட்டியலிட்டு "ரெட் லிஸ்ட்"(red list on endangerd and threatended sps) ஒன்று தயாரித்து அதன் அடிப்படையில்  உயிரினங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்பவர்கள். அந்த ரெட் லிஸ்ட் அடிப்படையில் உலக நாடுகளும் செயல்படுகின்றன, இதற்கு யுனெஸ்கோவின் ஆதரவும் உண்டு.

கீழே அளிக்கப்பட்டுள்ளது சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையத்தின் சிட்டுக்குருவிப்பற்றிய அறிவிப்பு. அவர்கள் அழிந்திடும் என்று கவலைப்பட தேவையில்லாத இனம் என வகைப்படுத்தியுள்ளார்கள்.

கீழ்காணும் சுட்டியை அழுத்தினால் அவர்கள் தளத்துக்கு போகலாம் , அங்கே செர்ச் பாக்சில் "பேசர் டொமெஸ்டிகஸ் என ஆங்கிலத்தில்  தட்டினால் நீங்களே கீழ்காணும் அறிக்கையையும் காணலாம்!

IUCN link:

passer domesticus

sparrow distribution map

அறிக்கை:

 Assessment Information [top] Red List Category & Criteria: Least Concern     ver 3.1
Year Published: 2009
Assessor/s: BirdLife International
Reviewer/s: Bird, J., Butchart, S.

Justification:
 This species has an extremely large range, and hence does not approach the thresholds for Vulnerable under the range size criterion (Extent of Occurrence <20,000 km2 combined with a declining or fluctuating range size, habitat extent/quality, or population size and a small number of locations or severe fragmentation). Despite the fact that the population trend appears to be decreasing, the decline is not believed to be sufficiently rapid to approach the thresholds for Vulnerable under the population trend criterion (>30% decline over ten years or three generations). The population size is extremely large, and hence does not approach the thresholds for Vulnerable under the population size criterion (<10,000 mature individuals with a continuing decline estimated to be >10% in ten years or three generations, or with a specified population structure). For these reasons the species is evaluated as Least Concern.
History: 2008 Least Concern
2004 Least Concern


அப்படியானால் மார்ச் --20 உலக சிட்டுக்குருவிகள் தினம் என்றெல்லாம் யார் முடிவு செய்தது வழக்கம் போல இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலை தான். தனியா ஒரு தளமும் உலக சிட்டுக்குருவிகள் தினம்னு வைத்திருக்கிறார்கள்.

முன்னர் உலக அதிசயம் தேர்வு செய்யப்போகிறோம்  என சொல்லி சிலர் பரபரப்பை கூட்டியது போல தான், அப்போது மக்களும்  கைக்காச செலவு செய்து போட்டிப்ப்போட்டு ஓட்டு எல்லாம் போட்டார்கள். உலக அதிசய தளத்துக்கு  நல்ல விளம்பரம் வருமானம் கிடைத்தது தான் மிச்சம் மதுரை மீனாட்சியம்மன் உலக அதியசம் ஆகாமலே இன்னமும்  அதிசயம் ஆகவே இருக்கிறார் :-))

உண்மையில் மிக குறைந்த எண்ணிக்கையில் இப்போவோ அப்பவோ என அழியும் நிலையில் நம் நாட்டிலே சிலப்பறவைகள் இருக்கு அதுக்கு எல்லாம் இப்படி யாரும் முயற்சிக்க அல்லது மூச்சு விட்டதாக கூட எனக்கு  தெரியவில்லை. எல்லாம் எனக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை , முயற்சிகள் பல இணையத்தில் பகிரப்படாமலே நடந்துக்கொண்டிருக்கிறது. நான் குறிப்பிட்டது நம்ம பதிவுலக மக்களை மனதில் வைத்தே ஏன் எனில் இன்று மட்டும் சுமார் 10க்கு மேற்பட்ட குருவி புராணம் கண்ணில் பட்டது.


நிலகிரி பிப்பிட் அ பைப்பர்  (Nilgiri Pipit (Anthus nilghiriensis) எனப்ப்படும் தென்னிந்திய பறவை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது, விரைவில் அழியக்கூடிய அபாயமுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் நமது தேசிய பறவையான மயிலும் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.இன்றைய நிலையில் 1947ல் இருந்த எண்ணிக்கையில் 50% அளவிலேயே இருக்கிறது, விரைவில் கிரிட்டிக்கல்லி என்டேஞ்சர்டு வகையில் சேர சாத்தியமுள்ளது.

தமிழ் நாட்டில்  விராலி மலை, மதுரை ஒத்தக்கடை பக்கம் உள்ள விவசாயிகள் பயிர்களை காக்க விசம் வைத்தும் பொறி வைத்தும் மயில்களை கொல்வது வழக்கம், சில இடங்களில் இறைச்சிக்காகவும் , தோகைக்காகவும் வேட்டையாடப்படுகிறது. அப்படி செய்வது வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றம் ஆனால் பெரிதாக யாரையும் தண்டிப்பதில்லை , சென்னையில் திநகர் பாண்டிப்பசார் போன்றப்பகுதிகளில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் மயில் தோகைகளை விற்பவர்களை  காணலாம். ஏன் எனில் சட்டத்தில் உள்ள ஓட்டையே காரணம் , இயல்பாக உதிர்ந்த தோகை என சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனையும் கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மேனகா காந்தி முயன்று முடியாமல் போயிற்று, இப்போது என்ன நிலை எனத்தெரியவில்லை.

மயில்கள் வேட்டையாடப்படுவது குறித்த செய்தி

 http://www.tribuneindia.com/2004/20040502/spectrum/main1.htm">அழியும் மயில்கள்

மேலும் இப்படி அழியக்கூடிய பட்டியலில் வங்கப் புலி, இந்திய சிங்கம், காண்டா மிருகம், நீலகிரி தார் என நிறைய உயிரினங்கள் நம் நாட்டில் இருக்கு.. அழிவின் நிலையில் உள்ள இந்திய உயிரினங்களின் பட்டியல்

http://en.wikipedia.org/wiki/List_of_endangered_species_in_India">அழியும் இந்திய உயிரினங்கள்
நீலகிரி தார்

இணையத்தில் யாராவது புரளியக்கிளப்பிவிட்டால்  போதும் திடிர் என எல்லாரும் இயற்கைப்பாதுகாவலர்களாக உருமிக்கொண்டு கூட்டம் கூட்டமாக பதிவுப்போட  ஆராவாரத்தோட கிளம்பிடுவாங்க மக்கள் , சிலர் சின்ன வயசில என் மண்டையில தான் குருவி கூடுக்கட்டும் அதுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் போட்டு வளர்ப்பேன் இப்போ எல்லாம் குருவியப்பார்க்கவே முடியலை எல்லாம் பாழாப்போன செல் ஃபோனால் தான்னு கேட்கும் போதே கண்ணுல ஜலம் வந்துப்போச்சுன்னு புழிஞ்சு எடுக்கிறார்கள், ஆனால் உண்மையில் கவலைப்பட வேண்டியதை சுலபமாக மறந்து விடுவார்கள்,,  யாராவது விழிப்புணர்வு மெயில் அல்லது முகநூல், துவித்தர்னு தேவ செய்தி அனுப்பினால் குதித்தெழுவார்களாயிருக்கும்.

---------
பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி ,கூகிள்,விக்கிப்பீடியா, IUCN இணைய தளங்கள்.

Saturday, March 17, 2012

பட்ஜெட் பம்மாத்து!-1



பட்ஜெட் பம்மாத்து!-1

பட்ஜெட் என தாக்கல் செய்வது ஒரு ஜனநாயக கடமையாகவே ஆண்டு தோறும் நடக்கிறது.பட்ஜெட் வரைவுக்கும் வளர்ச்சிக்கும் உண்மையில் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? பட்ஜெட் ஒதுக்கீடுப்படி செலவு செய்யப்பட்டு அதன் பலன் கண்கூடாக காணப்பட்டுள்ளதா என்றெல்லாம் பார்த்தால் பெரிதாக ஒன்றுமே நடந்து இருக்காது. பின்னர் எதுக்கு இந்த காகித அறிக்கை அதற்கு  பெரிதாக மீடியா விளம்பரம் எல்லாம்? அரசியல்வாதிகளான நாங்களாம் பொறுப்பானவங்க, அரசு வருமானத்தை கணக்கு வழக்கில்லாம செலவு செய்யவில்லைனு மக்களை  நம்ப வைக்க தான் :-))

மக்களும் வருமான வரி சலுகை உயருமா, டிவி போட்டி ,ஐஸ்பொட்டி , ஐப்பாடு விலை குறையுமா ஏறுமானு கொஞ்ச நேரம் டீவில ஆர்வமாக பார்ப்பாங்க ,அவங்க எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப சில அறிவுப்புகள்  வரும் , அவ்வளவு தான் மக்களும் வழக்கமான எதிர்ப்பார்த்த பட்ஜெட் தான் னு வழக்கம் போல சொல்லிட்டு டீவி சீரியல் அல்லது மொக்கை டீமை இந்திய அணி வீழ்த்திய கிரிக்கெட் போட்டினு பார்த்து ரசிக்க கிளம்பிடுவாங்க.

பட்ஜெட் புள்ளிவிவரம் எல்லாம் சலிக்க சலிக்க பார்த்து ,படிச்சு இருப்பீங்க மீண்டும் நான் சலிக்க விரும்பவில்லை. எனவே  ஒரு சில பட்ஜெட் பம்மாத்துகளை மட்டும் அலசுகிறேன்.

திட்ட செலவு VS திட்டமில்லாத செலவு:

அரசாங்கத்தின் கணக்குபிள்ளையான நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் பல தலைப்புகளில் நிதி நிலைகளை சொல்லி இருப்பாங்க, அவை மொத்த நிதி, மூலதன வருவாய்,வரி வருவாய், செலவு, பற்றாக்குறை இத்தியாதி என போகும். அதில செலவு வகையறா எதுவென பார்த்தா திட்ட செலவு(plan expenditure), திட்டாத செலவு(non-plan expenditure) என்றெல்லாம் இருக்கும், 

இந்த இடத்தில தான் அரசியல்வாதிங்க வித்தைக்காட்டுவாங்க, திட்ட செலவு மீது தான்  பெருமளவு விவாதம், கணக்கு வழக்கு, மத்திய தணிக்கை என கிடுக்கிப்பிடிகள் உண்டாம் திட்டாத செலவுக்கு ஒன்றும் பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது , தோராயமாக இவ்வளவுனு சொல்லிட்டு ஒதுக்கி வைத்துக்கொள்வது.அப்போ சனநாயக நாட்டில மக்கள் பணத்தை செலவு செய்ய ஒரு கணக்கு இருக்கனும் தானே நிதி நிலை அறிக்கைனு கேட்கலாம் அதுக்கு அதான்யா இதுனு நிதி நிலை அறிக்கைய காட்டுவாங்க :-))

திட்ட செலவு நிதியே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஒதுக்கப்படுவது , திட்டமில்லா செலவு அரசின் செலவீனங்களுக்காகவும் ,கடன்,மான்யம், இன்ன பிற என ஒதுக்கப்படுவது.திட்டமில்லா செலவு நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பட்ஜெட் பொருளாதார பார்வையில் சரியான பட்ஜெட் ஆக கருதப்படுவதில்லை.

2012-13 நிதி நிலை அறிக்கையில்...

மொத்த செலவு =1490925.29
திட்ட செலவு= 521025.00
திட்டமில்லா செலவு= 969900.29
(கோடிகளில்)

இதில் பார்த்தால் திட்ட செலவை விட திட்டமில்லா செலவுகள் அதிகமாக இருப்பது தெரியும், அது மொத்த  செலவில் 65%  ஆகும்.அதாவது திட்டமிட்டு மக்களவை, தணிக்கை என ஒப்புதலுடன்  செய்யும் செலவுகள் குறைவாகவும் , முன் திட்டமிடப்படாமல் , தன்னிச்சையாக ஆள்வோர்  விருப்பப்படி செய்யப்படும்  செலவுகள் மிக அதிகம் என்பதும் தெளிவாகும்.திட்டமில்லா செலவுகளும் மத்திய தணிக்கைக்கு உட்பட்டது ஆனால் அதிகம் கேள்விகள் கேட்க முடியாது , மேலும் பல பாதுகாப்புகள் அரசுக்கு உண்டு, பாராளுமன்ற /அமைச்சரவை முன் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக செலவு செய்யலாம்.உ.ம் இந்த நிதியறிக்கையில் இலங்கைக்கு கடனாக 290 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் ,இப்படியான அயலுறவு செலவீனங்களாக 5148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதெல்லாம் வெளியில் பேசப்படவே செய்யாது, ஆண்டு தோறும் இப்படி நடக்கிறது.

மத்திய திட்டக்குழுவுக்கான நிதி , இன்ன  பிற நிதிகளை திட்டமில்லா நிதி என்றப்பெயரில் ஒதுக்கி கையில் வைத்துக்கொண்டால் மத்தியில் ஆள்வோர் விருப்பம் போல ஒதுக்கலாம், செலவு செய்யலாம். 65% நிதி இப்படி மாட்டிக்கொள்வதால் தான் மாநிலங்கள் அவ்வப்போது மத்திய அரசை கெஞ்சுகின்றன. இணக்கமாக இல்லை எனில் காசுகிடைக்காது.

மேலும் இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் ஒவ்வோரு நிதியறிக்கையிலும் துண்டு விழுகிறது  என்பார்கள்  அது கோ ஆப்டெக்ஸ் துண்டல்ல நிதி துண்டு அதனை எப்படி சமாளிப்பார்கள் எனில் கடன் வாங்கியோ இல்லை பொது துறை பங்குகளை விற்றோ தான். பெரும்பாலும் துண்டு பெருசாக இருக்கும் போது சமாளிக்க  முடியாமல் அறிவித்தபடி சிலவற்றுக்கு நிதி ஒதுக்க மாட்டாங்க அப்படி நிதி நிறுத்தப்படும் வகையறாவில் திட்டமில்லா செலவு வராது  , எது எக்கேடு கெட்டாலும் இருக்கிற நிதியில் மிக அதிகபட்சம் திட்டமில்லா செலவுக்கு ஒதுக்கப்பட்டுவிடும் , மிச்சம் மீதி  இருக்கும் நிதி , இனிமேல் வாங்கப்போற கடன் என காசு கிடைத்தால் திட்ட செலவுகளுக்கு நிதி கிடைக்கும் இதனாலேயெ பல திட்டங்கள் ஆண்டாண்டுகாலமாக அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் அவற்றின் இலக்கை அடைவதே இல்லை.இப்படி பாதியில் நிதி இல்லாமல் நின்று விடும் திட்டங்களுக்கு அடுத்த திட்டமில்லா செலவில் நிதி ஒதுக்கப்படும் என்று சொல்லப்படும் ஆனால் எந்த அளவுக்கு என்பது அப்போதைய நிலையைப்பொறுத்தே.திட்டமில்ல செலவு நிதி என்பது ஆள்வோரின் வசதிக்கு ஏற்ப பயன்ப்படுத்திக்கொள்ள சுதந்திரம் தரும் ஒரு கருவியாகும்.

திட்டமில்லா செலவு வகையில் பெரும்பகுதி போவது  ஆள்வோரின், அரசு அதிகாரிகளின் செலவுக்கே ,  அதுக்கு இல்லாத பணமா ? எடுத்துக்கோ என எடுத்துக்கொள்ள போடுவது தான் பட்ஜெட் :-))  அதனால் தான் பொறுப்பா எம்.பி,எம்.எல்.ஏ சம்பளத்தை அப்போ அப்போ ஏற்றிக்கொள்வது வீட்டுப்படி,பயணப்படி, இலவச தொலைப்பேசி, அப்போ அப்போ சுற்றுலா என எல்லாத்துக்கும் பணம் ஒதுக்கப்பட்டுவிடும்.

நம்ம பிரதமர் வாய தொறந்து உள்நாட்டிலேயே பேசுவதில்லை ஆனாலும் சும்மாச்சுக்கும்  ஒரு டைம் பாஸுக்கு வெளிநாட்டுக்கு போய் ஒரு டீக்குடிச்சுட்டு கை குலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே பல கோடிகள் செலவு ஆகும் .இப்படி பல்ல பயணங்கள் ,செலவுகள் ,பாதுகாப்பு என எல்லாம் திட்டமில்லா செலவு என்றப்பெயரில் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாலேயே சாத்தியமாகிறது!இதில் அமெரிக்க அதிபரை ஒப்பிடுகையில் நம்மாளுக்கு செலவு கொஞ்சம் தான் என்பது ஒரு ஆறுதலான சமாச்சாரம் :-))

மகளீர் நலன் , குழந்தைகள் நலன், கிராமப்புற மேம்பாடு என ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதி  ஒதுக்கப்படுவதாக வரும் அறிவிப்புகளை நாமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் , இந்த 50 ஆண்டுக்காலத்துக்கும் மேலான அறிவிப்புகளின் படி நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் இருக்க எல்லா பெண்களும், குழந்தைகளும், கிராமங்களும் பலன் அடைந்து எங்கோ போய் இருப்பாங்க ,கல்விக்கு என அறிவிக்கப்பட்ட நிதி அறிவித்தார் போல கொடுக்கப்பட்டிருந்தால் இந்தியா 100% கல்வி அறிவுப்பெற்று இருக்கும், எல்லாக்கிராமத்திலும் அதி நவீன பள்ளிகள் இருந்திருக்கும். ஆனால் அப்படியான அதிசயம் எதுவுமே நிகழவில்லையே ஏன்?


கடந்த பத்தாண்டுகளாக பார்த்தால் இந்திய நிதிநிலை அறிக்கையின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே வந்திருக்கும் ஆனால் அதே விகிதத்தில் வளர்ச்சி  உயர்ந்திருக்காது இந்த இடத்தில் ஜிடிபி மொத்த மதிப்பு உயர்ந்து தானே இருக்கு என கேட்கலாம் ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை ,உணவுப்பொருள் விலை வீக்கம்,பணவீக்கம்  ஆகியவை குறைந்தபாடில்லை, நாட்டின் வளர்ச்சி ஆமைவேகத்தில் மட்டுமே  என்பதையும் கவனிக்க வேண்டும். அம்பானி 2003 இல் இருந்ததை விட பெரிய பணக்காரர் ஆக 2012 இல் உயர்ந்தது போல தான் நாட்டின் வளர்ச்சி இருக்கு. பணக்காரன்மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் ஏழை ஆகிறான், காரணம்  நம்ம ஆட்சியாளர்கள் நிதியை சரியான முறையில் முதலீடு செய்யாமையே.

அரசின் வருவாய் 2003-12 காலத்தில்,

475146 ,506382 ,526626 ,578869 ,739842 ,839935 ,1025883 1190898 ,1343384, 1490713

2003 இல் அரசின் மொத்த வருவாய்=  475114 கோடிகள்,

2012 இல் அரசின் மொத்த வருவாய் =1490713 கோடிகள்

ஒப்பிட்டு பார்த்தால் முழுசாக பத்து லட்சம் கோடி ரூபாய் அரசின் வருவாய் அதிகரித்து இருப்பதைக்காணலாம்.

இப்போது ஒரு சாதாரண குடிமகனின் வருவாய்க்கேற்ற வாழ்கை தர முன்னேற்றம் எப்படி மாறும் என்பதை ஒப்பீட்டு பார்த்தால் அரசின் செயல்படா தன்மை நன்கு விளங்கும்,

2003 இல் 10000 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தால் வாழ்க்கை தரம் சுமாராகவே இருக்கும் , சென்னை புற நகரில்  தவணையில் கூட வீடு வாங்க முடியாது ஆனால் 2012 இல்  அவரது சம்பளம் 50000 என உயர்ந்திருக்குமானால் அவருக்கு கார், வீடு என மாத தவணையில் வாங்கும் திறன் கண்டிப்பாக வந்திருக்கும். அதாவது வாழ்கை தரத்தில் மேம்பாடு சம்பள உயர்வுடன் ஏற்படுவதைக்கண்கூடாக காணலாம்.

அதே மேம்பாடு நாட்டிற்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் எனில் வருவாய் உயர உயர  விரய செலவுகளை ஆள்வோர் அதிகரித்துக்கொண்டே போனது தான் காரணம்.

உதாரணமாக தினக்கூலி வேலை செய்பவன் 100 ரூ சம்பளம் வாங்கும் போது 50க்கு சரக்கு அடித்துவிட்டு 50ரூ வீட்டு செலவுக்கு கொடுக்கிறார்,அதை வைத்து குடும்பத்தை ஏதோ சமாளித்து ஓட்டுகிறார் அவர் மனைவி. அதே நபர்  200 சம்பளம் வாங்கும் போது 150க்கு சரக்கு அடித்துவிட்டு 50 ரூ வீட்டுக்கு கொடுத்தால் வீட்டில் சுபிட்சம் நிலவுமா? வறுமையும் பற்றாக்குறையுமே தாண்டவமாடும்.

மேற்சொன்ன கதை தான் அரசாங்கத்திலும் நடக்கிறது வருவாய் உயர உயர திட்டமில்லா செலவுகளில் அதிகம் செலவு செய்து வளர்ச்சியை பின் தள்ளுகிறார்கள். திட்டமில்லா செலவில் அமைச்சர்கள், எம்பிக்கள் , அரசு அதிகாரிகள் என அவர்களுக்கான செலவே அதிகம்.  வருவாயை திரட்டி மக்களுக்கு செலவு  செய்ய ஆகும் சர்வீஸ் சார்ஜ் ஆக ஆள்வோர் எடுத்துக்கொள்வது அதிகம் , அதாவது சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் கதை தான்!

இந்தியா பிறந்ததில் இருந்து பல நிதி நிலை அறிக்கைகளை மவுன சாட்சியாக பார்த்து வந்திருக்கிறது  ,இத்தனைக்கண்டபிறகும் ஏதும் பெரிதாக மாற்றம் வந்தப்பாடில்லை . அவற்றை எல்லாம் ஒரே பதிவில் அலசிவிட முடியாது , எனவே சில முக்கியமான துறைவாரியாக அடுத்தடுத்து பார்க்கலாம் ,அதற்கான  ஒரு முன்னுரையே இப்பதிவு.அடுத்த பதிவில் விவசாயத்திற்கான ஒதுக்கீடு அது யாருக்கு பலன் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Sunday, March 04, 2012

அரவான் மற்றும் காவல்கோட்டம் உண்மையான வரலாற்றினை பேசுகிறதா?





பண்டைய தமிழகத்தில் குடும்ப வழி,குல வழியாக மக்கள் பல தொழில்களை செய்து வந்தார்கள் பின்னர் தொழிலே ஜாதியாக திரிபுற்று ஜாதி ரீதியாக இனக்குழுக்கள் உருவானது தமிழ் சமூக வரலாறு என்பதை அனைவரும் அறிவோம்.

படைத்தொழில் சார்ந்தும் அப்படி சில ஜாதிய இனக்குழுக்கள் உருவானது. அப்படி உருவான இனக்குழுவை மறவர்கள் என்றார்கள், அதிலும் அவர்களின் சேவைக்கு ஏற்ப பிரிவுகள் உண்டு.

அமரம் சேவகம்:

இப்பிரிவினர் மன்னருக்கு மிகவும் விசுவாசமானவர்கள். இவர்கள் செய்யும் படை சேவைக்கு பணமாக அல்லாமல் அவர்களுக்கு என நிர்வகிக்கவும் வரி வசூலிக்கவும் நிலம் ஒதுக்கிவிடுவார்கள். அதில் கிடைக்கும் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கினை மன்னருக்கு கொடுத்துவிட்டு 2 பங்கினை வைத்துக்கொள்வார்கள்.

மேலும் ஒரு சிறு படையை உருவாக்கி பயிற்சி,பராமரிப்பு செலவுகள் எல்லாம் இவர்கள் பொறுப்பே நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.இவர்களுக்கு தளபதி அல்லது  குறுநில மன்னர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்பிரிவினரே பெரும்பாலும் தளபதிகளாகவும் ,முக்கியமான படைப்பொறுப்பிலும் இருப்பார்கள்.போர்க்காலங்களில் ஆயுதங்கள், படை என திரட்டிக்கொண்டு மன்னருக்கு உதவ செல்ல வேண்டும். இவர்களில் கோட்டை காவலை பெற்ற குடும்பம் அகமுடையார் எனப்படும். அகம் என்பது கோட்டை உள் இருப்பவர்கள் எனப்பொருள்.போர்க்காலத்தில் பெரும்படை களத்துக்கு சென்றாலும் கோட்டையை காவல் காக்க இவர்கள் கோட்டையை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும், அதனையே அகமுடையார்கள் என்று சொல்லப்பட்டு பின்னர் ஜாதிப்பெயராகவும் மாறியது.

கோட்டை முழுவதும்  இவர்கள் பாதுகாப்பில் இருக்கும் , கோட்டைக்குள்,வெளியே இவர்கள் அனுமதி இன்றி யாரும் செல்ல முடியாது. மன்னர்   திக்விஜயமாக தூர தேசங்களுக்கு படையுடன் சென்றிருக்கும் வேளையிலும் கவனமாக கோட்டையை பாதுகாப்பார்கள். மன்னர் இல்லாத நேரத்தில் எதிரிகள் படை எடுத்து வந்தாலும் கோட்டைக்கதவை மூடிவிட்டு உள் இருந்தே ,கோட்டைக்குள் புக முயலும்  முயற்சிகளை முறியடிப்பார்கள்.

இது  போன்ற பல முற்றுகைகளை முறியடித்த வரலாறு தமிழ் இலக்கியங்களிலும் இருக்கிறது.இப்பொழுது கோச்சடையான் என்ற பெயர் ரஜினி படம் புண்ணியத்தால் மிக பிரபலமாகிவிட்டது. அவர் காலத்தைய முற்றுகை ஒன்றைப்பார்ப்போம், பாண்டிய மன்னன் கோச்சடையான் 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்,வீரத்திற்கு பெயர் பெற்றவர். அப்போது சேர நாடும் கோச்சடையான் ஆளுகை கீழ் இருந்தது ,சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க படையுடன் கோச்சடையான் சென்றிருந்த வேளையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாத்தன் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்திருந்தார், வரும் வழியில் பல்லவர்களை ஒரு கை  பார்த்து விட்டு, அப்படியே மதுரைக்கும் வந்தார்.

மன்னரும், பெரும் படையும் சேர நாட்டில் எனவே மதுரைக்கோட்டை வாசலை அடைத்து விட்டு உள்ளிருந்து கோட்டையைப்பாதுகாக்க துவங்கினார்கள். அப்பொழுது பாண்டிய அரசி கோட்டையில் இருந்தார் அவரே களம் இறங்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்தி கோட்டையை காவல் காக்க செய்தார் எனவும் தகவல் உண்டு.

பெரும் படையுடன் வந்திருந்த விக்கிரமாதித்தன் பல நாட்கள் முற்றுகையிட்டு உள் நுழைய போராடியும் கோட்டைக்காவலர்கள் சுற்று சுவரில் அரணாக நின்று உள் நுழையும்  முயற்சிகளை எல்லாம் முறியடித்தார்கள். நாட்கள் செல்லவே விரக்தியடைந்த விக்கிரமாதித்தன் மதுரை வீழ்ந்தது என அவராகவே வெற்றியை அறிவித்துக்கொண்டு மதுரைக்கு அந்த பக்கம் இருக்கும் குறு நில மன்னர்களையும் அடக்கி மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற மேற்கொண்டு முன்னேறி திருநெல்வேலி வரை முன்னேறி சென்று முகாமிட்டார்.

இதற்கிடையே தகவல் கிடைத்த கோச்சடையான் கடுங்கோவத்துடன் பெரும்படையுடன்  பாண்டிய நாடு திரும்பி,நேராக நெல்லைக்கு சென்று அங்கே வைத்தே விக்கிரமாதித்தனுடன் மோதினார் கடும் போரில் கோச்சடையானுக்கே வெற்றி கிட்டியது. தப்பித்தால் போதும் என பின் வாங்கி ஓடி வந்த விக்கிரமாதித்தனை காவிரி கரை வரைக்கும் கோச்சடையான் விரட்டி வந்தார்.

விக்கிரமாதித்தன் போரில் கிடைக்கும் விழுப்புண்களை பெருமையாக நினைப்பவர் என்பதால் அவருக்கு ரணரசிகா என்று பட்டப்பெயர் உண்டு.எனவே விக்கிரமாதித்தனை வென்றதால் ரணதீரன் கோச்சடையான் என பாண்டிய மன்னன் பெயர்ப்பெற்றான்.

அகமுடையார்கள் கோட்டைக்காவல்ப்பணியில் பெரும் வல்லமைக்கொண்டவர்கள் என்பதை விளக்கவே இந்நிகழ்வை சொன்னேன்.

அமரம் சேவகம் என சொல்வது ஏன் எனில்  இது பரம்பரையாக கொடுக்கப்படும் வேலை.அப்பா கோட்டை தலைவராக /சமஸ்தான தலைவராக இருந்து இறந்தால் அப்பணி அவரது மகனுக்கு செல்லும்.

இதற்கு அடுத்த படை  சேவகம்,

கட்டுப்பிடி சேவகம்:

அதாவது கட்டுப்படியாக கூடிய ஒரு ஊதியத்துக்கு படை சேவகம் செய்வது, இப்பணி மறவர் பிரிவில் பெரும்பாலும் தேவர்கள் எனப்படும் இனக்குழுக்களுக்கு கொடுக்கப்படும். செலவினை சமாளிக்க நிலத்தில் கிடைக்கும் வருவாய் பயன்ப்படும், ஆனால் இந்த பணி பரம்பரையாக சேராது. ஒரு சிறு படைப்பிரிவுக்கு தலைவராக இருந்து ஒருவர் இறந்தால் அவரது வாரிசு தலைவராக முடியாது. அடுத்த திறமையானவருக்கு பொறுப்பினை மன்னரே பார்த்து வழங்குவார். வாரிசும் திறமையான வீரர் எனில் வாய்ப்பு கிடைக்கலாம் ஆனால் கட்டாயமில்லை. இவர்களுக்கும் உபதளபதி அல்லது சமஸ்தான தலைவர் அந்தஸ்தும் கொடுக்கப்படும். போர்க்காலங்களில் ஆயுதம் ,படை என திரட்டிக்கொண்டு சென்று மன்னருக்கு உதவ வேண்டும்.

மூன்றாவது படைச்சேவகம் ,

கூலிப்படை சேவகம்:

போர் நடக்கும் காலத்தில் உடல் வலிமையான, போர்திறன் உள்ளவர்களை தினக்கூலி அடிப்படையில் படையில் சேர்த்துக்கொள்வார்கள். இப்படை சேவகம் செய்பவர்கள் பெரும்பாளும் கள்ளர் இனக்குழு மக்களே. இவர்களின் நிரந்தர தொழில் களவாடுதல். ஒவ்வொரு சமஸ்தான படைத்தலைவர் அவர் ஆளுகைக்குட்பட்ட பகதிகளை  சேர்ந்த கள்ளர் இனக்குழு மக்களை திரட்டிக்கொண்டு வருவார்.போர்க்காலத்தில் சேவை செய்ய முன் வரும் மக்கள் என்பதால்  சமஸ்தான தலைவர் இவர்களுக்கு ஒரு சலுகை அளிப்பார், சொந்த சமஸ்தானத்தில் திருடக்கூடாது, அப்போதைய பொது வழிகள் என அறியப்பட்ட சாலைகளில் மட்டும் களவாடலாம் என்பதாகும்.

எனவே ஒரு குறு நில மன்னர்/சமஸ்தானத்தை சேர்ந்த கள்ளர்கள் அங்கே களவாட மாட்டார்கள், பக்கத்து சமஸ்தானங்களிலும், பொது வழிகளிலும் யாத்ரிகர்கள், வியாபாரிகளை தாக்கி கொள்ளையடிப்பார்கள்.போர்க்காலத்தில் உதவி செய்ததற்கு அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமை இது.

இம்மூன்று இனக்குழுக்களையும் பெரும்பிரிவாக கொண்டு முக்குலத்தோர் என பொதுவாக அழைக்கப்படுகிறது.

இப்படித்தான் பழம் தமிழகத்தில் படைச்சேவகம் செய்த இனக்குழுக்களைப்பற்றி வரலாற்று ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில இனக்குழுக்களும் படை சேவகம் செய்துள்ளார்கள் ஆனால் அவர்களும் இம்முறையின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் உப பிரிவாக செயல்ப்பட்டவர்களே.

வரலாற்றூ ரீதியாக ஆய்வுகள் செய்து காவல் கோட்டம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள் ஆனால் அதில் மேற்கண்டவாறு சொல்லப்பட்டிருப்பதாக இது வரைப்படித்த நூல் விமர்சனங்களில் யாரும் சொல்லவில்லை , கள்ளர்கள் தான் கோட்டை,ஊர்க்காவலும் செய்தார்கள், களவில் இருந்து காவல் என்று சொல்வதாகவே சொல்கிறார்கள் விமர்சகர்கள்.நான் இன்னும் காவல் கோட்டம் படிக்கவில்லை ,பக்கங்களின் எண்ணிக்கையையும், விலையையும் பார்க்கும் போது படிப்பேன் எனவும் நம்பிக்கை இல்லை.

அரவாண் திரைப்படம் காவல் கோட்டத்தின் பின்ப்புலத்தோடு எடுக்கப்பட்ட ஒன்று அதுவும் தமிழர் வரலாற்றை பேசுகிறது என சொல்கிறது.ஆனால் மூலத்திலேயே வரலாறு  சரியாக சொல்லப்பட்டிருக்கிறதா எனத்தெரியவில்லை.

மேலும் நாயக்கர்  ஆட்சிக்காலத்திலும் காவல் பொறுப்பு தேவர்கள் பிரிவிடம் இருந்ததாகவே வரலாறு சொல்கிறது. மதுரை நாயக்க மன்னர் முத்துக்கிருஷ்ண நாயக்கர் ,முதன் முதலில் சடைக்க தேவரை கள்ளர்களை அடக்க நியமித்தார் என்றும் அவருக்கு ராமேஷ்வரம் செல்லும் பாதையை காக்கும் பணிக்கொடுக்கப்பட்டு பின்னர் ராமநாதபுரத்தை தலைமையகமாக கொண்டு செயல்ப்பட்டு ஒரு சமஸ்தான மன்னராக இருந்தார் என சொல்கிறது ராமநாதபுரம் சேதுபதிகள் வரலாறு.

மேலும் ராமநாதபுரம் சமஸ்தான மன்னராக இருந்த ரகுநாத சேது பதி, திருமலை நாயக்கருக்கு மைசூர் மூக்கறுப்பு போர் உட்பட பலப்போரில்  நிறைய உதவிகள் செய்து வெற்றியடைய வைத்ததால் வரி விலக்கு கொடுக்கப்பட்டு திருமலை சேதுபதி எனப்பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் கிழவன் சேதுபதி காலத்தில் ராணி மங்கம்மாளூடன் போரிட்டு வென்று சுயாட்சி பெற்ற சமஸ்தானமாக ராமநாதபுரம் சமஸ்தானம் மாறியது என்பதும் வரலாறு.

பாண்டியர்கள்  காலத்தில் இருந்து கள்ளர்கள் என்பவர்கள் களவுத்தொழிலையே பிரதானமாக கொண்டிருந்தார்கள் , நாயக்கர்கள் காலத்திலும் அப்படியே தொடர்ந்திருக்கிறது.  கள்ளர்களை அடக்க மறவர்களின் மற்றப்பிரிவினரான அகமுடையார், தேவர்கள் பயன்ப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், காவல்ப்பணியை அவர்களே செய்துள்ளார்கள் என தெரிகிறது. ஆனால் காவல் கோட்டமோ வேறு ஒன்றை சொல்கிறது. எது  உண்மை ? பொதுவாக அறியப்படும் வரலாறா இல்லை காவல் கோட்டம் சொல்லும் வரலாறா? ஒரு வேளை காவல் கோட்டம் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வந்துள்ளதா?

பின்குறிப்பு:

#நான் நாவலைப்படிக்காததால் எதுவும் தீர்மானமாக சொல்லவியலவில்லை, விமர்சனங்களில் பேசப்பட்ட கருத்தினை வைத்து பொதுவான வரலாற்றுடன் ஒப்பிட்டு எனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளேன்.

# விமர்சனம் செய்த பெரும் அறிவுப்புலம் கொண்டவர்கள் யாரும் இதனைக்குறிப்பிடவில்லை, களவைக்கொண்டாட ஒரு நாவலா என்றே பெரும்பாலும் சொல்கிறார்கள். சமஸ்தான மன்னர்களாக விளங்கிய மறவர்கள் எல்லாம் கள்ளர்களில் இருந்து உருவான இனக்குழுக்களா? காவல் உரிமைக்கொண்டவர்கள் யார்?  உண்மையில் சரியான வரலாறு எது?இதெல்லாம் நாவலிலும் விரிவாக அலசப்பட்டுள்ளதா?

Saturday, March 03, 2012

கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?


கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?

தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கென தனியே ஒரு அடையாளம் மட்டுமல்ல பெரும் வணிக மதிப்பும் உண்டு ,மற்ற நடிகர்களின் படம் ஓடினால் அமோக வசூல் வீழ்ந்தால் அடியோடு நாசம் என இருக்கும் போது சூப்பர் ஸ்டாரின் சுமாரான அல்லது ஓடாத படங்களின் வசூல் கூட அதே சமயத்தில் வெற்றியடந்ததாக சொல்லப்படும் படங்களின் வசூலை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக  பாபா படம் சரியாக ஓடவில்லை ,தோல்வி என்றார்கள் ஆனால் அதே காலக்கட்டத்தில் வந்து வெற்றி என்று சொன்னப்படங்களின் வசூலை விட பாபா வசூல் மிக அதிகம் என்பதே உண்மை.

லோக நாயகன் என்று சொல்லிக்கொள்பவரின் படமெல்லாம் ஓடினால் போட்டக்காசு தான் கிடைக்கும் ஊத்திக்கொண்டால் தயாரிப்பாளரின் கோவணமும் உருவப்படும் என்பதான வியாபார வல்லமைக்கொண்ட படங்கள்.அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ஹிட் ஆனால் அதன் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என அனைவருக்கும் அமோக வசூல் மட்டுமல்லாமல் அடுத்து அவர்கள் யாருடைய படத்திலாவது நஷ்டமடைந்தாலும் தாங்க கூடிய அளவு செழிப்படைவார்கள்.அதே சமயத்தில் சுமாராகவோ, அல்லது தோல்வி(வெகு சிலவே) என சொல்லப்படும் படங்களின் வசூல் கூட மிகப்பெரியதாகவே இருக்கும், எனவே நஷ்டம் என்பது எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காமல் போனது அல்லது வட்டியின் விகிதத்தை பொறுத்தே நட்டம் ஆனதாக சொல்ல முடியுமே தவிர போட்ட முதலில் எல்லாம் போய்விடாது முழுதுமோ அல்லது  ஒரு ஆரோக்கியமான தொகையோ மீள கிடைத்துவிடும்.

இதனாலேயே தயாரிப்பாளார்,விநியோகஸ்தரின் ஆபத்பாந்தவனாக சூப்பர் ஸ்டார் இன்றும் திகழ்கிறார்.

இத்தனைக்காலமும் சூப்பர் ஸ்டாரின் வணிக பெருமதிப்பை அனைவரும் நன்றாகவே பயன்ப்படுத்திக்கொண்டார்கள், புதிதாக திரை துறைக்குள் நுழைந்துள்ள  அவரின் வாரிசும் இதை எல்லாம் அவதனித்து அவரின் ஸ்டார் வேல்யுவை பயன்ப்படுத்தி பலன் அடைந்தால்  என்ன என நினைக்க துவங்கிவிட்டார்கள் ,அதில் தவறில்லை ஆனால் பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லையே, அவரின் உடல் நிலை நன்றாக இருந்த போதே சிவாஜி படக்காலத்திலேயே  சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்ன புண்ணியம்  அப்படம்  டிரைலருக்கு மேல போகவில்லை. எதாவது தெரிஞ்சா தானே பயன்படுத்தி அனிமேஷன் படமாக எடுக்க :-))

சுல்தான் தி வாரியர்  எடுக்க முடியாமல் ஏன் வாரியது , அனிமேஷன் படங்களின் முதல் தலைமுறை காலமல்ல இப்போது இருப்பது, எல்லா வசதியும் இருக்கு எடுக்க தெரியாமல் சொதப்பியதால் நேரமும், பணம் மட்டுமே விரயம் ஆனதால்  மீண்டும் சூப்பர் ஸ்டார் வேல்யுவை பணமாக்க ராணாவுக்கு பூஜைப்போட்டார்கள் ஆனால் அவரவர் மனம் போல நடக்கும் என்பதாக எதிர்பாராத விதமாக சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்ல நேரிட்டது. இப்போது தான் மீண்டு வந்துள்ளார் ஆனால் உடனே மீண்டும் ஒரு படம் சூப்பர் ஸ்டாரை வைத்து என்று துவங்கிவிட்டார் வாரிசு , அவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அனிமேஷன் படமே எப்படி எனத்தெரியாமல் சொதப்பியவர்கள் இப்போது "பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்" என்ற புதிய நுட்பத்தை வைத்து படம் எடுக்க போகிறேன் என குதித்து இருக்கிறார்கள்,( அதனாலே இப்பதிவும் நான் போட வேண்டியதாகிவிட்டது)

இப்போது அனைவருக்கும் நியாயமாக சில கேள்விகள் எழுகின்றன,

# சிவாஜி -தி பாஸ் படக்காலத்தில் துவக்கப்பட்ட சுல்தான் தி வாரியர் -3டி அனிமேஷன் படம் ஏன் முடிக்கப்படவே இல்லை.

# சிவாஜிக்கு பிறகு சில காலம் சும்மா இருந்தார் , பின் எந்திரன் துவங்கி பின்னர் தடைப்பட்டு ஓய்வில் இருந்தார் அப்போது கூட சுல்தான் முடிக்கப்படவே இல்லை, ஏன்?

#பின்னர் அவசரமாக ராணா படம் துவக்கப்பட்டு பூஜை அன்றே உடல் நலன் பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு பின் இப்போது தான் , புணர்ஜென்மம் அடைந்து சூப்பர் ஸ்டார் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய படமாக கோச்சடையானை அறிவித்துள்ளார்கள் கூடவே வந்துள்ள இந்தியாவின் முதல் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர் படம் என்ற அறிவிப்பு தான் ஒரு சந்தேகத்தை தூவியுள்ளது.

அது என்னவெனில் உண்மையில் கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்பதே?

ஏன் எனில் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர்  தொழில் நுட்பம் அப்படியானது, அது ஒன்றும் மிக புதிதான நுட்பம் இல்லை ஏற்கனவே இருந்த மோஷன் கேப்சரிங் நுட்பத்தின் நுணுக்கமான அடுத்த கட்டமே ஆகும்.

மோஷன் கேப்சரிங்க்:

ஒரு நடிகரின் உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் சென்சார்கள் பொருத்தி அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக அகச்சிவப்பு கேமிராவில் பதிவு செய்து , அந்த அசைவுகளை கணினி வரைகலை உருவத்துக்கு கொடுத்து செயல்பட வைப்பது. இதற்கென தனி அகச்சிவப்பு கேமராக்கள் , கணினி , மென்பொருள் எல்லாம் பயன்ப்படுத்துவார்கள், ஆனால் இதில் பெறப்படும் சித்தரிப்பு அத்தனை தத்ரூபமாக இருப்பதில்லை. அசைவுகள் செயற்கையாக இருக்கும்,எனவே தனியாக அசைவுகளை மீண்டும் அனிமேஷனில் கட்டுப்படுத்துவார்கள்.

இந்த குறைப்பாட்டை நீக்க வந்தது தான் பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங்க், இது ஒன்றும் அச்சு அசலாக ஒருவரின் நடிப்பை பிரதிபலித்து படமாக்கவில்லை. மேம்பட்ட சென்சார்கள்  கூடுதலான எண்ணிக்கையில் , எளிதாக ,நேர்த்தியாக அசைவுகளை கணினிக்கு மாற்ற ஒரு உடையோடு கூடிய சென்சார் என ஒரு முன்னேற்றம் அவ்வளவே.இம்முறையில் முன்பை விட சிறப்பாக காட்சியமைப்பு வரக்காரணம் புதிய மென்பொருளும் ஹை டெபனிஷன் கேமிராவுமே.

பெர்பார்மென்ஸ் கேப்சர் செய்யப்பயன்படும் லைக்ரா உடை.


பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் வந்த முதல் படம் அவதார் என்று சொல்லிக்கொண்டாலும் அதுவல்ல முதல் முயற்சி மேட்ரிக்ஸ் படமே ,அதே சமயத்தில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் இல் முற்றிலும் கணினி வரைகலைப்பயன்ப்படுத்தி செய்தார்கள் கோலும் என்ற கதாபாத்திரத்தை. பின்னர் கிங்காங்க், போலார் எக்ஸ்பிரஸ், ஸ்பைடர் மேன் -2 வில் எல்லாம் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையான பெர்ஃபார்மென்ச் கேப்சரிங் செய்யும் கருவி எதுவெனில் வழக்கமான திரைப்பட கேமிரா தான், அது தானே நடிகர்களின் பெர்ஃபார்மன்சை நேரடியாக பதிவு செய்கிறது!

 அவதார் படத்தில் அசைவுகளை இணைக்கும் காட்சி:

இம்முறையில் முழுக்க கணினி வரைகலை உருவத்துக்கோ அல்லது நிஜமான ஒரு நடிகரை ஒத்த உருவத்தினை கணியில் உருவாக்கியோ உயிர்க்கொடுக்க முடியும்.மேலும் காட்சியில் இருக்கும் சூழலை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், வெளிப்புற படபிடிப்பு , இன்ன பிற அரங்க படப்பிடிப்பு எல்லாம் தனியாக பிடித்துக்கொண்டு அதில் கதாப்பாத்திரங்களை புகுத்திக்கொள்வார்கள்.எனவே ஸ்டூடியோவை விட்டு நடிகர்கள் போகாமலே மொத்த படமும் எடுக்க முடியும்.

உடல் அசைவுகளை தெளிவாக காட்ட உடலோடு ஒட்டிய லைக்ரா மோஷன் கேப்சர் உடைப்பயன்படுத்துவார்கள் ,அதில் சென்சார்கள் பதிக்கப்பட்டிருக்கும். முக அசைவுகளை படம் பிடிக்க ஒளிப்பிரதிப்பளிக்கும் வண்ணத்தினை கொண்டு முகத்தில் தேவையான இடங்களில் மார்க் செய்வார்கள். முன்னர் ஒளி உமிழும் எல் ஈ.டி பயன்ப்படுத்தியதால் அதிக மார்க்கர்களை உருவாக்க முடியவில்லை.

பின்னர் அகச்சிவப்பு கேமிராவில் படம் பிடித்து கணினிக்கு அனுப்பிவிட்டால் , தேவையான உருவத்துடன் இணைத்து ஒருங்கிணந்த அசைவுகளை கொடுத்துவிடும்.

ஸ்பைடர் மேன் -2 ல் முதுகில் எந்திரக்கரங்களுடன்ன் ஒரு விஞ்ஞானி பாத்திரம் டாக்டர் ஆக்டோபஸ் என வரும் ,சில குளோஸ் அப் காட்சிகள் தவிர மற்றதெல்லாம் பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்கில் எடுக்கப்பட்ட 3டி மாடல் தான் அப்பாத்திரம்.

முகத்தினை மறைக்காமல் நிஜ நடிகரின் முகத்தினை, பாவனைகளையும் 3டி மாடலுக்கு கொண்டு வந்திருப்பார்கள்.


தத்ரூபமாக முகத்தினைக்காட்ட அரைவட்ட வடிவில் விளக்குகள் பொருத்தி (லைட் ஸ்டேஜ்) அதன் நடுவே நடிகரை உட்கார வைப்பார்கள் பின்னர் அனைத்து கோணங்களிலும் சுழன்று ஹை டெபனிஷன் கேமிராவில் 8 நிமிடத்தில் 2000 படங்கள் எடுக்கப்படும் அதனை கணினியில் உருவாக்கிய 3டி மாடலின் உருவத்தில் முகம் இருக்கும் இடத்தில் பொருத்திவிடுவார்கள். இப்போது 3டி உருவத்தினை எந்தக்கோணத்தில் திருப்பினாலும் அதற்கேற்ப முகம் தெரியும். இதெல்லாம் மென்ப்பொருளே கவனித்துக்கொள்ளும்.ஸ்பைடர் மேன் படத்தில் முகமூடியுடன் வரும் ஸ்பைடர் மேன் எல்லாமே 3டி மாடலே.முகம் தெரியாத நிலை என்பதால் இன்னும் எளிதான வேலை.

முகத்தினை தத்ரூபமாக படம் பிடித்தார் போல முழு உடலையும் கூட செய்ய முடியும், ஆனால் அதை கணினி வரைகலையில் செய்துக்கொள்வார்கள் ஏன் எனில் உண்மையில் குள்ளமாக,ஒல்லியான உருவம் உள்ள நடிகரை உயரமாக ,சிக்ஸ் பேக்குடன் என எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளவே.



இந்த முறையிலே மேட்ரிக்ஸ் படத்தில் வரும் வில்லன் ஏஜன்ட் ஸ்மித் ஒரே நேரத்தில் 100 பிரதிகளாக வரும் காட்சியில் 100 வெவ்வேறு ஆட்கள் தான் நடித்திருந்தார்கள், பின்னர் முகத்தினை மட்டும் இப்படி பிடித்து பொறுத்திவிட்டார்கள்,அப்போது இதற்கு யுனிவர்சல் கேப்சர் என்று பெயர்.அப்போது 5 கேமிராவைக்கொண்டே அனைத்து கோணத்திலும் தெரிவது போன்று முகபாவங்களை படம்ப்பிடித்துக்கொண்டார்கள்.சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து சண்டைப்போட்டதெல்லாம் 3டி மாடல்களே.


ஆண்டி செர்கிஸ்

முழுக்க கணினியில் உருவாக்கிய உருவமான கோலும்( Gollum ), பின்னர் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் படத்தில் கொரில்லாவிற்கு எல்லாம் உடல்,முக அசைவுகளை பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் ஆண்டி செர்கிஸ் என்பவரே கொடுத்தார்.இதற்காக உடல் அசைவுகளை 52 கேமிராவிலும்,   முக அசைவுகளை 20 கேமிராவிலும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பதிவாக்கியுள்ளார்கள்,இதனாலே அந்த 3டி கணினி வரைகலை கொரில்லா தத்ரூபமாக காட்சியளித்தது.மேலும் நுணுக்கமாக முக அசைவுகளை படம் பிடிக்க தலையில் கேமராவுடன் இணைந்த கவசம் அணிந்துக்கொள்வார்கள்.




போலார் எக்ஸ்பிரஸ் படத்தில் டாம் ஹேங்ஸ் 4 கதாபாத்திரங்களை அவரே இத்தொழிட்பத்தின் மூலம் நடித்திருப்பார்.

டாம் ஹேங்ஸ் அசைவுகள் 3டி உருவத்திற்கு கொடுப்பதை விளக்கும் படம்

கியுரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் வயதாக ஆக குழந்தையாவது போன்ற பாத்திரத்தில் பிராட் பிட் இந்தொழில்நுட்பத்தின் படி பல உருவங்களுக்கு முக பாவனை மட்டுமே கொடுத்து நடித்திருப்பார்.ஹி..ஹி இந்த படத்தின் உல்டா தான் அமிதாப் நடித்த ஃபா!


அவதார்,டின்டின் போன்ற படங்களின் காலத்தில் கணினியின் திறனும், மென்பொருளும் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டதால் சிறப்பாக எடுக்க முடிந்தது.மேலும் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்த நடிப்பை உடனுக்குடன் சூழலுடன் பொருத்தியும் பார்க்கும் வசதியுள்ள வேகமான கணிப்பொறி,மென்பொருளும் பயன்ப்படுத்தப்பட்டது.

அவதார் படப்பிடிப்பில்.

இது போன்று உருவம் மட்டும் கிடைத்து விட்டால் அதற்கான நடிப்பை இயல்பாக அடுத்தவர்களை வைத்துக்கொடுக்க முடியும் என்பதால் இறந்த நடிகர்களையும் நடிக்க வைக்கலாம் , ஆனால் கொஞ்சம் கவனமாக ,செய்ய வேண்டும் ஏன் எனில் அனைத்துக்கோணங்களிலும் முகத்தின் படம் கிடைக்காது என்பதால் ஏதோ ஒரு கோணத்திலேயே காட்ட வேண்டியது இருக்கும்.

மேலும் இனிமேல் ஒரு நடிகர் கேமிரா முன் நிற்காமலே அவரது கணினி முப்பரிமாண உருவத்தை வைத்து ,இன்னொருவரை நடிக்க வைத்து படம் எடுக்கவும் முடியும்.

இப்போது பதிவின் தலைப்பின் பொருள் புரிந்திருக்குமே, கோச்சடையானில் சூப்பர் ஸ்டாரே அவரது உருவத்துக்கு நடிப்புக்கொடுக்க போகிறாரா அல்லது அவரைப்போலவே இமிடேட் செய்யக்கூடிய ஒரு சிறந்த மிமிக்ரி நடிகரை வைத்து பெர்ஃபார்மென்ஸ் கேப்சர் செய்வார்களா என்பதே எனது கேள்வி. குரலை மட்டும் டப்பிங்கில் கொடுத்து விட்டால் போதும் கண்டுப்பிடிக்க முடியாது.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் விரைவாக கோச்சடையானை துவக்கியதே இப்படியெல்லாம் கேள்விகளை உருவாக்குகிறது.ஏற்கனவே சுல்தான் அனிமேஷன் படமே இது போல ரஜினியின் முகம்,உருவத்தினை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மோஷன் கேப்சரிங்கை வேறு ஒருவர் மூலம் செய்து படமாக்க திட்டமிடப்பட்டது, இப்போது அதே வேலை பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் என்ற பெயரில் கோச்சடையானிலும் நடக்கலாம்,பழைய கள் புதிய மொந்தை :-))

சுல்தான் அனிமேஷன்  படத்திற்காக எடுக்கப்பட்ட முகம், உடல் ஆகியவற்றின் டிஜிட்டல் பிரதிகளை பயன்ப்படுத்திக்கொண்டாலே போதும் மீண்டும் புதிதாக 3டி உருவத்தினை உருவாக்க கூடத்தேவை இல்லை. இம்முறை சொதப்பாமல் படத்தினை முடிக்க வேண்டுமென்பதால் தான் இம்முறை அனுபவம் வாய்ந்த கே.எஸ்.ரவிகுமாரை ,ஸ்டூடியோவில் நன்றாக வேலை செய்யவும் , திரைக்கதையை கவனித்து வேலையை முடிக்கவும் கோச்சடையானில் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.


--------

பின்குறிப்பு:

படங்கள் உதவி: கூகிள் படங்கள்,IMDB,AWN தளங்கள், நன்றி!

Monday, February 27, 2012

என்ன கொடுமை சார் இது-3





சாருவின் பீற்றல்!

”மக்யா நாளே…”
 February 25th, 2012
/மக்யா நாளே //

சூப்பரான வார்த்தை பிரயோகம் சாரு.
இதனாலெல்லாம் தான் நான் எல்லோரிடமும் சொல்வது சாரு வின் எழுத்து நடைக்கு நிகர் இங்கு யாரும் இல்லை என்று.
இந்த ”மக்யா நாளே ” என்ற வார்த்தை கொங்கு பகுதியில் ,அதுவும் அதிகமாக கரூரின் கிராமப் பகுதியில் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுவும் குறிப்பாக கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் தான் அதிகம். நான் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியை சார்ந்தவன் தான் . நான் இங்கு என் ஜாதியை குறிப்பிட்டு சொன்னதற்காக என்னை தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு தகவலுக்காக சொன்னேன்.
இன்னும் எங்கள் கிராமத்து பெண்கள், என் அம்மா கூட இந்த வார்த்தையைப் பயன் படுத்துவார்கள். அவர்கள் இந்த வார்த்தையையே சற்று மாற்றி ” மக்யா நேத்தே ”என்று சொலவார்கள்.  ஆனால் உரை நடையில் அதுவும் கட்டுரையில் இந்த வார்த்தையை ”மக்யா நாளே ” என்று எழுதுவதே அந்த வார்த்தையின் உணர்ச்சியின்  தீவரத்தை கொடுக்க சரியாக இருக்கிறது.. . நன்றி சாரு.
—————-
கரூர்.
நண்பருக்கு,
என் அம்மா என்ன ஜாதி என்று சொன்னதே இல்லை.  எப்போது கேட்டாலும் ஏதாவது ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லுவார்கள்.  பர்மாவிலிருந்து வந்த என் அம்மாச்சி மேலே ரவிக்கை போட்டு நான் பார்த்ததில்லை.  காதில் மிகப் பெரிய ஒரு பாம்படம் தொங்கும்.  செட்டிநாட்டுப் பக்கத்தில் அவர்களுக்கு நிறைய உறவுக்காரர்கள் இருந்தார்கள்.  என்னால் அம்மாவின் ஜாதியை யூகிக்க முடியவில்லை.  அம்மாவின் அப்பா பர்மாக்காரர்.  அதனால் ஜாதி பற்றிய பேச்சே இல்லை.  என் அம்மாச்சி தான் மக்யா நாள் என்று சொல்லுவார்கள்…
சாரு

சாரு--மக்யா நாளே
****

மாமல்லனின் பழைய பதிவு:

அவதூறுகள் ஏன்? - ஜெயமோகன்
February 13th, 2011

//இணையத்தில் கூட ஜெயமோகனின் கொடி அவர் சொல்லும் அளவிற்கு எல்லாம் ஒன்றும் பட்டொளி வீசிப் பறக்கவில்லை, அலெக்ஸா ரேட்டிங்கில் சவுக்கு, சாரு நிவேதிதா, வினவு என பலர் முன்னிலையில் இருக்கின்றனர், அவர்களுக்கெல்லாம் மிகப்பின் தங்கியே (நான் கூறியது சில மாதங்களுக்கு முன். அந்த சமயத்தில் ஜெயமோகன் 14,000, சாரு 7,000, வினவு 8,000 என்றிருந்தனர்) என ராயப்பேட்டைப் பாலத்திற்கு அடியில் வசிக்கும் ஜெமோவிற்கும் எனக்குமானப் பொது நண்பரிடம் சாதாரணத் தகவலாக, கூறினேன். அதற்கு மக்யா நாளுக்கு மக்யா நாள் சிவராமன் என்பவர் இதைக் கேள்வியாய்க் கேட்கிறார் அவர் வலைபூவில். ஆதெள கீர்த்தனாரம்பத்திலே கேபிள் சங்கர் தான் நெம்பர் ஒன்......மஹாஸ்வாமிகள் விளக்கவுரை நல்கினார்.  இதற்குப் பெயர் பொச்சரிப்பா இல்லையா? இல்லையில்லை, ஓ! அரித்துக்கொண்டே இருக்கும் பொச்சா?//
mamallan

மாமல்லன் -மக்யா நாளே
*****

சாரு இந்த பிப்ரவரியில் "மக்யா நாளே" என்ற சொல்லாடலுக்காக அவரது அல்லக்கை மூலம் கடிதம்/லெட்டர் போட வைத்து(சுய புனைவா)  அவரது வட்டார மொழியாளுமைக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்துக்கொள்கிறார்.

ஆனாலும் விதி வலியது ஆச்சே ,அந்த மக்யா நாளு சொல்லாடலை போன பிப்ரவரியிலே மாமல்லன் ஒருப்பதிவில் பயன்ப்படுத்திய ஒன்று தான்.

மக்யா நாளுக்கு மாமல்லன் ஒன்றும் காப்புரிமையாளர் அல்ல ஆனால் அப்படி சொல்லாடல் கையாண்டேன் என பீற்றிக்கொள்ளவில்லை . ஆனால் சாருவோ ஒத்த சொல்லுக்கே என்னே என் மொழியாளுமைனு அல்லக்கை நொல்லக்கைனு கூட்டு சேர்ந்து கும்மியடிக்கிறார் :-))

வட்டார மொழி சொல்லாடலில் பின்னிப்பெடல் எடுக்கும்.கி.ராஜநாரயணன் எல்லாம் படித்திருப்பாரா அல்டிமேட் எனத்தெரியவில்லை.

சாருவை  விடாமல் நொங்கெடுப்பவர் மாமல்லன் அதனால் அவரை புரூஃப் ரீடர், விக்கி லீக்ஸ் விமல் என்றெல்லாம் வசைப்பாடிக்கொண்டிப்பார் கடைசியில் அவர் கிட்டேவே ஆட்டையப்போட்டு பீற்றிக்கொள்கிறார், இன்னும் மாமல்லன் கண்ணில் இந்த பீற்றல் படவில்லைப்போலும் ,பட்டதும் ஸ்கிரீன் ஷாட்டுடன் ஒரு ஆப்பு வரும் :-))

இன்னொரு முக்கியமான  டவுட், சாரு அஞ்சலகத்துறை ஊழியராக பணிப்புரிந்தவர்  , 70 களில் பணிக்கு சேர்ந்திருக்கலாம், ஆனால் இப்போ எனக்கு என்ன ஜாதினே தெரியாது சொல்லிக்கிறார், அப்போ 70 லவே ஜாதி இல்லைனு சொல்லி வேலைக்கு சேர்ந்தாரா இல்லை அதுக்கு முன்னரே பள்ளியில் ஜாதிப்போட்டுக்காம சேர்ந்து படிச்சாரா? அப்படி உண்மையில் செய்திருப்பாராயின் இம்மாம் பெரிய புரட்சிய செய்துவிட்டு அமைதியா இருக்கும் அந்த நல்ல உள்ளத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை :-))

ஆப்பை யாரும் நமக்கு வைப்பதில்லை நாமா தான் ஆப்பு மேல போய் குந்துகிறோம் :-))

என்ன கொடுமை சார்(ரு) இது!

--------------

சட்டம் என்ன செய்யும்?

2ஜி ஊழல் இந்தியாவின் சரித்திர சாதனைகளில் ஒன்று, ஊழல் உண்மை என்பதாக கருதி 122, 2ஜி உரிமங்களும் இரத்து செய்யப்பட்டு தலா 5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டது.

பொது புத்தியில் நீதி வென்றதாக தோன்றினாலும் உண்மையில் வென்றதா?

டிபி ரியாலிட்டி ,யுனிடெக், போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் ,உரிமையாளர்களும் உள்ளே போய் வெளியே வந்தார்கள்,


ஊழலுக்கு காரணமான ஆ.ராசா, அவரின் ஊக்க சக்தி கனிமொழி , இடைத்தரகர் நீரா ராடியா எல்லாம் உள்ளே போய் வந்தார்கள்(ராசா மட்டும் கோட்டையில்)

ஆனால் பாருங்க டாடா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஆதித்ய பிர்லா, ஏர்செல் , ஏர் டெல், வீடியோ கான் போன்றவற்றின் உரிமையாளர்கள் மட்டும் உள்ளே போகவேயில்லை, அங்கே மட்டும் அதிகாரிகளோடு வேலையை முடித்துக்கொண்டது நீதித்துறை, அப்படினா இவங்க எல்லாம் உத்தம சீலர்கள் , அதிகாரிகளா முடிவு செய்து தப்பு செய்து விட்டார்களா?

சரி அது போகட்டும் அது என்ன மை லார்ட் 5 கோடி தண்டத்தொகை அதெல்லாம் ஆ.ராசா பி.ஏ க்கே டிப்ஸ் ஆக கொடுத்திருப்பார்கள் நம்ம உத்தம வியாபாரிகள். அதை போய் தண்டமா கட்ட சொன்னா அவங்களுக்கு வலிக்கவா போகுது.

ஆல மரம்,அரச மரத்தடி நாட்டாமைகள் எல்லாம் மைனர் குஞ்சு ரேப் செய்தால் இப்படித்தான் குத்தத்த  ஒப்புக்கிறியா , னு கேட்டுட்டு ஒப்புக்குக்கிறேன் சொல்லீட்டா சர்..சர் மைனர் குஞ்சு  செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுக்கிட்டதால அவருக்கு 101 ரூவா அவராதம் விதிக்குது இந்த பஞ்சாயத்துனு  தீர்ப்பை சொல்லிட்டு  கெம்பீரமா துண்டை உதறி  தோளில் போட்டுக்கிட்டு போவார் நாட்டாமை அத விட காமெடியா இருக்கு இந்த 5 கோடி அபராதம் :-))

ஆயிரக்கணக்கான கோடி ஊழல் ஆனால் அபராதம் அஞ்சு கோடி தான் , இப்படி இருந்தா எல்லாம் ஊழல் செய்துவிட்டு மாட்டிப்போம்னு பயப்படாம அபராதம் கட்டிக்கலாம்னு துணிச்சலா களம் இறங்கிட மாட்டாங்க? மைனர் குஞ்சு வேற 101 ரூபாய இப்பவே பாக்கெட்ல வச்சுக்கிட்டு அடுத்த வேட்டைக்கு அலையறாராம் :-))

திறந்த சந்தையான அமெரிக்காவில் சில நிறுவனங்கள் ஒன்று கூடி கார்டெல் அமைத்து விலையைக்கட்டுக்குள் வைத்து சந்தையை வசப்படுத்தினாலே மில்லியன் கணக்கில் அபராதம் போடுகிறார்கள்.

டிராம் எனப்படும் மெமரி சிப் விலையை செயற்கையாக கட்டுப்படுத்திய குற்றத்திற்கு சாம் சங் 90 மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டியது.
சுட்டி:http://www.dailytech.com/Samsung+Fined+90+Million+for+DRAM+Price+Fixing/article6016.htm"> சாம்சங்க்

எல்சிடி டிவிக்களின் விலையை நிர்ணயிக்க முயன்றதால் சாம் சன்ங்க், எல்ஜி ,ஷார்ப் இன்னும் சிலர்  என மொத்தமாக 585 மி.டாலர் அபராதம் கட்ட ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுட்டி:http://www.theinquirer.net/inquirer/news/2130848/samsung-sharp-chimei-pay-millions-lcd-price-fixing"> எல்சிடி டீவி அபராதம்.

எல்லா நாட்டிலும் ஊழல் செய்யவோ விதி மீறவோ வழியை தேடவே செய்கிறார்கள் வியாபாரிகள்,ஆனால் மாட்டினால் ஊழலுக்கு ஏற்ற தண்டனை,அபராதம் அங்கெல்லாம் உண்டு. ஆனால் இந்தியாவில் தண்டனை/அபராதம் என்பது ஊக்க மருந்தாக இருக்கிறதே...

என்ன கொடுமை சார் இது!

---------

குற்றமும் பின்னணியும்.



#சென்னைப்புற நகரில் ஒரு பெண்ணை  அவரின் ஆண் நண்பரும் இன்னும் சில கல்லூரி மாணவர்களும் ஒன்று கூடி பாலியல் பலத்காரம் செய்ததாக ஒரு செய்தி,

#வங்கிக்கொள்ளையில் ஈடுப்பட்டு துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒருவர் சென்னை புற நகர நிகர் நிலை பல்கலை மாணவர் என்ற மற்றொரு செய்தி,

இவை எல்லாம் படிப்பாளிகளின் குற்றங்களாக கண்ணில்ப்பட்டவை, இதற்கு எல்லாம் என்னக்காரணம்.

பொதுவாக தனியார் பொறியியல் கல்லூரிகளை விட  நிகர் நிலைப்பல்கலையில் பயில்வோரே அதிக அளவில் அடாவடிகளில் இறங்குகிறார்கள் ,

தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 % அண்ணாப்பல்கலை கலந்தாய்வின் மூலம் சேர்கிறார்கள், பெரும்பாலும் மத்தியவர்க்க மாணவர்கள், படிக்க வேண்டிய கட்டாயம்,தேவை உள்ளவர்கள்.மீதி 50%  கட்டண சேர்க்கை, அவர்கள் கொஞ்சம் சுமாராண மாணவர்கள் அப்படி இப்படி இருப்பார்கள் ஆனால் எப்படி பார்த்தாலும் தமிழ் நாட்டு மாணவர்கள் தான் அதிகம்.

ஏன் எனில் அண்ணாப்பல்கலை விதிப்படி 15%  மேல் பிற மாநில மாணவர்களை சேர்க்க முடியாது.

ஆனால் இந்த நிகர் நிலைப்பல்கலைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை,யுஜிசி கட்டுப்பாடு எல்லாம் பெயரளவிலே. அவர்கள் விருப்பம் தான் வெளி மாநிலம், வெளிநாடு யார் வேண்டுமானாலும் சேரலாம் ஜஸ்ட் பாஸ் ஆனால் போதும்  காசு கொடுத்தால் சீட். எல்லாவற்றுக்குமே விலை அங்கே.

இப்படி 100 சதவீத வியாபாரமாக இருக்கும் நிகர் நிலைப்பல்கலையில் மாணவர்களை கண்டிப்பது என்பது பேச்சுக்கு கூட இருக்காது, ஏன் எனில்  எல்லாம் காசு கொடுத்து சேர்ந்த செல்லப்பிள்ளைகள் ஆச்சே.

ஒரு வெளி மாநில மாணவன் அவன் மாநிலத்து மாணவர்களை கொண்டு வந்து சேர்த்தால்  நிர்வாகமே கமிஷன் கொடுக்கிறது. இப்படிப்பட்ட புரோக்கர் வேலையில் மாணவர்களிடையே போட்டி வந்து அடி தடி எல்லாம் சகஜம்.

அங்கு நடக்கும் தேர்வுகள் செம கேலிக்கூத்து , ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பது போல தேர்வு நடத்தி ஃபெயில் ஆக்குவார்கள், அப்புறம் பார்க்க வேண்டியவர்களை பார்த்து வெட்ட வேண்டியதை வெட்டினால் பாஸ்.

பணம் கறக்கவே ஃபெயில் ஆக்குவார்கள்.எவ்வளவு மக்காக இருந்தாலும் 90% மதிப்பெண் உடன் ஆல் கிளியராக படிப்பு முடிக்க உத்திரவாதமான ஒரே இடம் நிகர் நிலைப்பல்கலைகளே, அதனாலேயே வெளிமாநில மாணவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு தமிழக நிகர்நிலைப்பல்கலையில் சேர்கிறார்கள்.

நண்பன் படம் போல  ஆள் மாறாட்டம் எல்லாம் அரதப்பழசு , கை நாட்டா இருந்தாலும் கைல காசு இருந்தா பொறியியல் பட்டம் கிடைக்கும் :-))

பணக்காரர்களை படுத்தாமல் பட்டதாரிகள் ஆக்க அரும்பாடு பட்டு சேவை செய்பவர்களே கல்வி தந்தைகள் :-))

இது போன்ற நிகரில்லா பல்கலையில் பயிலும் கண்மணிகள் பெரும்பாலும் அக்கம் பக்கத்தில் வீடு /ஃப்ளாட் வாடகைக்கு எடுத்தே படிக்கிறார்கள்,அதுவே குற்ற செயல்களில் ஈடுபட முதல் படியாகிறது.

பெரும்பாலும் இரவுகளில் உற்சாக பானத்துடன் , பாட்டை அலறவிட்டு அமளி துமளி செய்வார்கள், அவ்வப்போது பெண் நண்பர்களுடன் குருப் ஸ்டடி வேறு செய்கிறார்கள் :-))

இதில் பெரிய காமெடி என்னன்னா அந்த பொண்ணுங்க யாருனு கேட்டால் பிரண்டு இல்லைனா ரூம் மேட் சிஸ்டர்னு சொல்வாங்க :-))

புறநகர்ப்பகுதிகளில் பேச்சிலர் , அதுவும் மாணவர்களுக்கு என்றே சிலர் வீடு,ஃப்ளாட் வாங்கிப்போட்டுள்ளார்கள் , சாதாரணமாக 3000 வாடகை என்றால் இவர்களுக்கு தலைக்கு 2000 என்று எப்படியும் 8000 தீட்டி விடுவார்கள் வீட்டு உரிமையாளர்கள். இவர்களாலேயே புற நகரிலும் வீட்டு வாடகை ஏறிவிட்டது.

காசுக்கு ஆசைப்பட்டு உரிமையாளர்கள் மாணவச்செல்வங்கள் என்ன செய்தாலும் கண்டுக்கொள்வதில்லை அக்கம்பக்கத்தார் புகார் செய்தாலும் காதில் ஏறாது.

வீட்டு வாடகை,உணவு, பைக் பெட்ரோல்,செல்போன் பேச்சு, கேளிக்கை செலவு என அதிகம் செலவாகிறது,வீட்டில் இருந்து எவ்வளவு பணம் அனுப்பினாலும் ஒரு வாரம் தான் ஓடும் இவர்களுக்கு, அவர்களை  பொறுத்து பணம் இல்லை எனில் பிணம்  தான் சொகுசாக என்ஜாய்  செய்ய முடியாது என்பதாலே இது போன்ற மாணவர்கள் சின்ன சின்ன குற்றங்கள் செய்து பின்னர் பெரிய அளவிலும் செயல்படப்போய் குண்டடிப்படுகிறார்கள்.

புற நகர்ப்பகுதிகளில் மாணவர்கள் சிலர் செல் போன், லேப் டாப் போன்றவற்றை செல் போன் கடைகளில் விற்பது சகஜம் , கடைக்காரனும் மலிவு விலைக்கே வாங்குவான், காரணம் அவை எல்லாம் சக மாணவர்களிடமே ஆட்டைப்போட பட்டவை.

மேலே செய்தியில் அடிப்பட்ட இரண்டு குற்ற சம்பவங்களும் வெளியில் வீடு எடுத்து தங்கியிருந்த மாணவர்களாலேயே நடந்துள்ளது.

ஏன் கல்லூரியில் விடுதியில்லையா என்ன ? அத்தனைப்பேருக்கும் இருக்காது, இருந்தாலும்  பணக்கார மாணவர்களுக்கு பிடிக்காது. வசதியாக விருப்பம் போல இருக்க வெளியில் வந்து, ஆடம்பரமாக செலவு செய்ய பணம்  இல்லாமல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.பணத்தட்டுப்பாடு இல்லை எனில் பெண்ணை கூட்டாக பாலியல் பலத்காரம் செய்கிறார்கள்.

சென்னையை சுற்றியுள்ள சில நிகர் நிலைப்பல்கலைகளை இழுத்து  மூடினாலேயே போதும் இது போன்ற செய்திகள் நின்றுவிடும். அதுவும் பொத்தேரியில் ஒரு நிகர் நிலைப்பல்கலை இருக்கு அங்கு பயிலும்  சில மாணவிகள் இரயில்வே டிராக் கடக்கும் போது அடிப்பட்டு சாவுனு செய்தி வரும் ஆனால உண்மையில் அது தற்கொலையாக இருக்கும்.மாணவர்களைப்போன்றே  மாணவிகளும்  சீரழிந்து போனதே காரணம். போதை,மது,மாது எல்லாம் கைவரப்பெற்ற அதிஷ்டசாலி மாணவர்கள் அவர்கள். இப்போது என்கவுண்டர் ஆன நபரும் பொத்தேரி மாணவரே.

காசு ஒன்றே குறியாக செயல்ப்படும் அக்கல்வி நிலையத்தை நடத்துபவர் சேர்த்த பணத்தை பாதுகாக்கவே அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து போஸ்டர் ஒட்டிக்கொண்டு திரிகிறார்.

என்ன கொடுமை சார் இது!

---------

note:image courtsy google image.

Sunday, February 26, 2012

எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!





எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!


சாகித்ய அகதமியின் விருதுக்கு நூல்களை தேர்வு செய்யும் முறை:

# ஐந்து பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மொழி வாரி ஆலோசனைக்குழு ஒவ்வொரு மொழிக்கும் பரிந்துரைக்கும்.

# அந்த ஐந்தில் இருந்து இருவரை அகதமி தலைவர் தேர்ந்தெடுப்பார்.

#இரு நபர் குழு அம்மொழிக்கான அடிப்படை நூல்ப்பட்டியலை தேர்வு செய்து மாநில மொழி ஆலோசனைக்குழுக்கு அனுப்பும்.

# மாநில மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அவர்கள் சார்பாக தலா இரண்டு நூல்களை பரிந்துரைத்துக்க வேண்டும்  , நிபுணர்க்குழுவின் அடிப்படையில் இருக்கலாம் , அல்லது ஒன்று நிபுணர் குழு நூல் ஒன்று சுய தேர்வு அல்லது இரண்டுமே சுய தேர்வாகவும் இருக்கலாம்.மாநில மொழி ஆலோசனைக்குழு இலக்கிய அமைப்புகளின் பரிந்துரைகளையுன் பரிசீலிக்கும். பின்னர் இந்நூல்களின் பெயர்கள்  தொகுக்கப்பட்ட  பட்டியலாக சேர்த்து அகதமிக்கு அனுப்புவார்கள்.

# மாநில வாரியாக 10 நபர் கொண்ட ஒரு முன் தேர்வுக்குழு அமைக்கப்படும். அவர்களுக்கு இந்த பட்டியல் அனுப்பப்படும்.

#இந்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்  மொழி ஆலோசனைக்குழு  மற்றும் நிபுணர்க்குழுவால் தொகுக்கப்பட்ட பட்டியலில் இருந்து தலா இரண்டு நூல்களோ அல்லது அவர்கள் விருப்பப்படி இரண்டு நூல்களையோ குறிப்பிட்டு பரிந்துரைப்பார்கள்.

#இப்போது ஒரு இறுதிப்பட்டியல் உருவாகி இருக்கும், இது 3 பேர்க்கொண்ட தேர்வாளர்கள்(ஜூரி) வசம் ஒப்படைக்கப்படும்.இந்த தேர்வாளர்கள் மாநில ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ,அகதமி தலைவர் முடிவு செய்து தேர்வு செய்வார்.

#இப்போது 3 ஜூரிகளும் ஒருமித்த முடிவாக ஒரே நூலை தேர்வு செய்யலாம் அல்லது மூன்றில் இரண்டுப்பேர் ஓட்டுப்பெறும் நூலையும் தேர்வு செய்யலாம். இதுவே விருதுக்கான நூலாகும்.

ஜூரிகளுக்கும் ,அகதமிக்கும் இடையே  இணைப்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் இருப்பார். விருதுக்கான பரிந்துரை அகதமி செயல் குழு முன் வைக்கப்பட்டு ,ஒப்புதல் பெறப்பட்டு விருது அறிவிக்கப்படும்.

சாகித்ய அகதமி சுட்டிகள்:

விருதுக்கு தேர்வு செய்யும் முறை:


தேர்வு விதி முறைகள்

மாநில ஆலோசனைக்குழுப்பட்டியல்:


மாநில ஆலோசனைக்குழு

ஜூரிகள் மற்றும் விருதுப்பட்டியல்:

விருதுப்பட்டியல்

இப்போது தமிழக சாகித்ய அகதமி அமைப்பில் உள்ளவர்களைப்பார்ப்போம், இவர்கள் தான் தமிழகத்திற்கான விருது வழங்குவதில் முக்கிய பங்காற்றுபவர்கள்.

மாநில அகதமி பொறுப்பாளர்:

முனைவர்.ஆர்.குருநாதன்
சென்னை.

மாநில ஒருங்கிணைப்பாளர்:


முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்
பொள்ளாச்சி.
சிற்பி

தமிழ்நாடு மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:

#முனைவர்.ஆர்.குருநாதன் ,சென்னை.(மாநிலத்தலைவரும் இவரே)
#
மகரந்தன் (ஐ.கணபதி),புதுவை.
#பேரா.இரா.மோகன்,மதுரை.
#பேரா.இரா.மீனாக்‌ஷி,ஆரோவில்,தமிழ்நாடு.
#
சுப்ரபாரதிமணியன்,திருப்பூர்.
#இந்திரன்,சென்னை.
#இரா.நடராஜன்,சென்னை.(முன்னால் சென்னை வானொலி இயக்குநர்)
#என்.ஆவுடையப்பயன், நூலக இயக்குனரகம்,சென்னை.
#தங்கம் மூர்த்தி(காவியா மூர்த்தி),புதுக்கோட்டை.
#முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்,பொள்ளாச்சி.(ஒருங்கினைப்பாளரும் இவரே)

மூன்று நபர் விருது (ஜூரி)தேர்வுக்குழுவினர்.


#கவிஞர் தமிழ்நாடன்,


இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர், வானம்பாடி கவிஞர் குழுமத்தில் ஒருவர். தமிழ்நாடு வளர்கலை ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்தவர்.
ஏழு கார்ட்டூன்களும்  ஒரு வண்ண ஓவியமும் - என்ற நூலை ஒரியாவில் இருந்து தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்தமைக்கு 2000 ஆம் ஆண்டு சாகித்ய அகதமி மொழிமாற்ற விருது பெற்றுள்ளார்.


அவரைப்பற்றி அப்போது இந்து நாளேட்டில் வநத செய்தி ,
 THIS YEAR'S Sahitya Akademi Award winner for Tamil translation, Mr. A. Tamilnadan, is a ``non- conformist'' among writers, with Leftist leanings.



#குறிஞ்சி வேலன்



இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர். நிறைய மொழிமாற்ற நூல்கள் எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகதமி விருது -1994 -இல் விஷக்கன்னி(மலையாளம்) நாவலுக்கு பெற்றுள்ளார்.

இரண்டாம் இடம்   என்ற மொழிமாற்ற நூலுக்காக -2001 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கவிருது பெற்றுள்ளார். பின்னர் மீண்டும்
முழுமையைத்தேடும் முழுமையற்றப்புள்ளிகள் என்ற நூலுக்கும் பெற்றார்.
link:

book

இவர் ஆசிரியராக இருந்து திசைகள் எட்டும்  என்ற காலாண்டு மொழிமாற்ற இதழ் நடத்தி வருகிறார்.

திசைகள் எட்டும் குறித்த அறிமுகம் ஆரண்யநிவாஸ் என்பவரின் வலைப்பதிவில் இருக்கிறது பார்க்கலாம்.

திசைகள் எட்டும்

முன்னால் சென்னை வானொலி இயக்குநர், இரா.நடராசன், மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுடன் இணைந்து " நல்லி திசைகள் எட்டும் "என்றப்பெயரில் மொழி மாற்ற நூல்களுக்கான விருதினை ஆண்டு  தோறும் வழங்கி வருகிறார்.

தமிழக சாகித்ய அகதமி ஒருங்கிணைப்பாளர். சிற்பி.பொ.பால சுப்ரமணியனும் நல்லி திசைகள் எட்டும் விருதுப்பெற்றுள்ளார்.
http://www.hindu.com/2010/08/08/stories/2010080859780400.htm">திசைகள் எட்டும் விருது

# முனைவர்.பேரா.கே.செல்லப்பா


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராக திருச்சிப்பாரதிதாசன் பல்கலையில் பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர்.“Ilango and Shakespeare: A Comparative Study,”  என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இயக்குனராக கனடா கல்வி மையம், பாரதிதாசன் பல்கலையிலும் பணிப்புரிகிறார்.

இதெல்லாம் எதற்கு இப்பொழுது என்று ஒரு கேள்வி எழலாம்,  விஷயம் இருக்கு,

மூன்று ஜூரிகளில் இரண்டுப்பேர் இடது சாரி சிந்தனையாளர்கள், மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை கழகத்தில் ஈடுபாடுக்கொண்டவர்கள் என்பதும் தெரிய வருகிறது.

மாநில ஒருங்கிணைப்பாளரும் , மற்ற சில மாநில ஆலோசனைக்குழுவினரும் திசைகள் எட்டும் ஆசிரியர், ஜூரியான குறிஞ்சி வேலனுடன் நட்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

மாநில ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருக்கும் சுப்ரபாரதி மணியன் ( thiruppuur) ,மகரந்தன் (புதுவை)எனப்பலரும் த.மு.எ.க.க ஆர்வலர்களாகவே தெரிகிறது.

காவல் கோட்டம் ஆசிரியர் சு.வெங்கடேசன் , இடதுசாரி சிந்தனையாளர் சிபிஐ(எம்) சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலிலும் நின்றுள்ளார். மேலும் த.மு.எ.க.க மாநில செயலாளர் என்பதால் ஒத்த சிந்தனைக்கொண்டவர்களின் ஆதரவினைப்பெருவதில் வியப்பேதும் இல்லை.மூன்று ஜூரிகளில் இருவர் இடதுசாரி சிந்தனையாளராக இருக்கும் போது சாதகம் தானே.

இன்னும் கொஞ்சம் உள்ளேப்போய் பார்த்தால் போக்குவரத்து , சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின்  தலைவர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ(எம்)  கட்சியை சேர்ந்தவர்.  அந்த நிலைக்குழு தான் சாகித்ய அகதமி கொள்கைகளையும் விமர்சித்தது.விருதிற்கான தேர்வு முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும்http://www.pravasitoday.com/parliamentary-panel-recommends-transparency-in-sahitya-akademi-awards"> பாராளுமன்றத்தில் யெச்சூரி பேசியுள்ளார். அக்குழுவின் ஆய்வுக்கு உட்பட்டது தான் சாகித்ய அகதமி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சீத்தாரம் யெச்சூரி தலைமையில் தான் செம்மலர் ஆண்டு விழாவினை த.மு.எ.க.க வினர் மதுரையில் நடத்தினார்கள்.

இடது சாரி சிந்தனையாளருக்கு சாதகமான சிந்தனையாளர்களே அகதமியில் அதிகம் இருக்கும் நிலையில் காவல் கோட்டம்  நாவலுக்கு பரிசீலனைகளின் போது சாதகமாக இருந்திருக்க வேண்டும்.

ஏன் மற்ற இலக்கியவாதிகள் காவல் கோட்டத்தினை 1000 பக்க அபத்தம் என சொல்கிறார்கள் எனில் அவர்களின் நாவல்கலை அகதமி மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் யாரும் பரிந்துரைக்கவில்லை என்ற ரகசியம் அவர்களுக்கு தெரிந்து இருப்பதே ஆகும்.

மேலும் முதல் கட்ட பரிசீலனைக்கு ஏதேனும் ஒரு இலக்கிய அமைப்பு ,சங்கம் என பரிந்துரை செய்ய வேண்டும் அதுவே பின்னர் மாநில ஆலோசனைக்குழுவினர் மூலம் முன் தேர்வுக்குழுவின் அடிப்படை பட்டியலுக்கு போகிறது.

எஸ்.ரா ஆரம்பக்காலத்தில் இருந்தே த.முஎ.க..க .வில் ஈடுபட்டு வருபவர், ஆனால் அப்படி இருந்தும் எஸ்ரா போன்றவர்களின் நூலினை முந்திக்கொண்டு சு.வெங்கடேசனுக்கு த.மு.எ.எ.க பரிந்துரை கிடைத்து இருக்கலாம், அதுவே சீனியரான எஸ்.ராவிற்கு கடுப்பேற்றி இருக்கலாம் என தோன்றுகிறது.

இடது சாரி சிந்தனையாளர்களின் தாக்கம் கொண்ட குழுவில் ஜெ.மோ கதை எல்லாம் செல்லுபடி ஆகி இருக்காது என நினைக்கிறேன், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் பொங்கித்தள்ளுகிறார் போல தெரிகிறது.

ஓரளவுக்கு அனைவராலும் எழுத்தாளுமை உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெ.மோ, எஸ்.ரா போன்றவர்களுக்கே போதுமான ஆதரவு இல்லாத போது காமநெடி பீசான சாருவுக்கு யார் பரிந்துரை செய்திருக்க போகிறார்கள். அதான் காண்டாகி தனியாக அவர் கூட்டம் போட்டு அடுத்தவங்களை காச்சுகிறார் :-))

த.மு.எ.க.க வின் ஆர்வலராக இருந்தும் ஒரு புதுமுக எழுத்தாளருக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் புறக்கணிக்கப்பட்டதால் எஸ்.ராவிற்கு ஆதங்கம் இருப்பதில் வியப்பில்லை. அதை நேரடியாக வெளிக்காட்டவும் முடியவில்லை அதான் தனக்கு தானே திட்டமாக சூப்பர் ஸ்டாரை வைத்து கொடியை பறக்க விட்டுக்கொண்டார்.

ஆனால் சாரு ஏன் எஸ்.ரா வின் மீது பாய்கிறார்  எனத்தெரியவில்லை. வேண்டுமானால் அவரும் லோகநாயகனையோ இல்லை பொழுது போகாமல் சும்மா குந்தி இருக்கும் ஒரு நடிகரை/நடிகையை இழுத்து வந்து விழா நடத்திக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள். பல்லு இருக்கவன் பட்டாணி  தின்றான் இவருக்கு ஏன் வலிக்குது :-))

காவல்கோட்டம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று அப்போதெல்லாம் இல்லாத சர்ச்சைகள் விருதுக்கு பின்னர் வருகிறது என்றால் என்னக்காரணம் , ஒவ்வொருவரும் நம்ம பேர் லிஸ்ட்ல இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்து இலவு காத்து ஏமாந்து போயிருப்பார்கள் போல .அதான் இப்போது பூதக்கண்ணாடி வைத்து குற்றவியல் ஆய்வு செய்கிறார்கள்.

சாகித்ய அகதமி ஆங்கிலம் உட்பட 24 மொழிகளுக்கு ,மொழி வாரியாக நூல்களை தேர்வு செய்தே விருதளிக்கிறது.தேசிய அமைப்பால் கொடுக்கப்படும் ஒரு பிராந்திய விருதே அது,அகில இந்திய அளவில் சிறந்த நூலுக்கானதும் அல்ல.ஏன் எனில் போட்டியே ஒவ்வொரு மொழிக்குள் மட்டுமே. அப்படி இருக்கும் போது  ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். ஞானபீட விருதே உச்சமான அகில இந்திய இலக்கிய விருதாகும்.

சிறந்த தேசிய படமென விருதுப்பெருவதற்கும், சிறந்த மாநில மொழிப்பட விருதிற்கும் வித்தியாசம் இருப்பது போலவே அகதமி விருதுகளும்.

---------

பின்குறிப்பு-1:

காவல் கோட்டம் சு.வெங்கடேசன் மட்டுமில்லாமல் தமிழகத்தை  சேர்ந்த மேலும் இரண்டுப்பேர் சாகித்ய அகதமி விருதினை மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கு பெற்றுள்ளார்கள்.

#
இந்திரன் - எழுத்தாளர்.

சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்த இந்திரன் என்கிற பி.ஜி.இராஜேந்திரன் , பறவைகள் ஒரு வேளை தூங்கிப்போயிருக்கும் என்ற பெயரில் ஒடிய மொழி நூலை மொழிப்பெயர்த்தமைக்கு பெற்றுள்ளார்.

#முனைவர்.தமிழ்செல்வி(சென்னைப்பல்கலை) அவர்கள் லிவிங்க் ஸ்மைல் வித்யா (வலைப்பதிவரும் கூட) எழுதிய நான் சரவணன் இல்லை வித்யா என்ற தமிழ் நூலை  கனடத்தில் மொழிப்பெயர்த்தமைக்கு சாகித்ய அகதமி விருதினைப்பெற்றுள்ளார்.

பின்குறிப்பு-2:

இந்த எலக்கிய சண்டை , விருது வாங்கிற அக்கப்போரை எல்லாம் பார்த்த பிறகு நாமும் கொஞ்சம் தம் கட்டி ஒரு ஆயிரம் பக்கத்துக்கு எழுதிட்டு  மானே, தேனே ,பொன்மானே போல அதுக்கூட கொஞ்சம் மக்கள் தொகை புள்ளிவிவரம், டெலிபோன் டைரக்டரி, இராபர்ட் கிளைவ்னு வரலாறு ,கொல்லிமலைப்பாவை னு எல்லாம் தூவிட்டா மாபெரும் வரலாற்று இலக்கிய காவியம் உருவாகிடும்னு தோன்றுகிறது. எவ்வளோவோ செய்துட்டோம் இத செய்ய மாட்டோமா :-))

இந்த லட்சணத்துல இலவசமாக இணையம் இருக்குனு எழுதுறவங்க எல்லாம் எழுத்தாளர்கள் இல்லை மாட்டு மூத்திரத்தை காய்ச்சி குடிச்சுட்டு 35 வருஷமா எழுதறவங்க எழுதுவது தான் எலக்கியம்னு சொல்லிக்கிறார் ஒரு எலக்கியவாதி.
தூங்கிட்டு இருந்த ஒரு வவ்வாலை தட்டி எழுப்பிட்டாங்க எனவே இனிமே நானும் எழுதி விருது வாங்கிக்காட்டுறேன்டா !...டா..டா! எனவே மக்களே யாருக்குலாம் விருது  வாங்க ஆசை இருக்கோ எல்லாம்  வாங்க ஒரு எலக்கிய  புரட்சிய ஒன்று கூடி உருவாக்கலாம், இந்த எலக்கிய டம்மி பீசுகளுக்கு பாடம் கற்பிக்கலாம்.

பின்குறிப்பு-3:

இந்தப்பதிவில் இருப்பவை பத்திரிக்கை செய்திகள் மற்றும் இணையத்தில் கிடைத்த தகவல்களின்  அடிப்படையிலே எழுதப்பட்டுள்ளது, எந்த தனிநபரையோ , அமைப்பையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில்  உள்நோக்கத்துடனோ எழுதப்படவில்லை.அப்படி யாரேனும் தாங்களாகவே நினைத்துக்கொண்டால் அடியேன் பொறுப்பல்ல :-))


Thursday, February 23, 2012

விமான விபத்துகள் ஏற்படுவது ஏன்?



விமான விபத்துகள் ஏற்படுவது ஏன்?


  சிறுவயதில் வானில் தென்ப்படும் அலுமினியப்பறவையை ஆசையுடன் அண்ணார்ந்த்துப்பார்த்து ஆச்சர்யப்படும் சிறுவர்களாகவே நாம் அனைவரும் வளர்ந்த்து வந்திருப்போம். வளைந்து நெளிந்தோடும் தொடர் வண்டியினை பார்க்கும் போது உண்டாகும் பரவசத்திற்கு ஒப்பானதே இதுவும்.  அனைவருக்கும் ஒரு முறையாவது ஆகாய விமானத்தில் வானில் பறக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும் ஏன் எனில் விமானப்பயணங்கள் புதிய அனுபவத்தினையும்,மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது.

பரவசத்திற்கு இணையான பயத்தினையும் தரவல்லது விமானப்பயணம், ஏன் எனில் வானில் விபத்து ஏற்பட்டால் இரண்டாவது வாய்ப்பென்பதே இல்லை. எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டப்போதிலும் விபத்தினை தவிர்க்க இயலாததாகவே இருப்பது ஏன்?  விமானங்கள் விபத்துக்குள்ளாது எதனால் என அறியும் ஒரு முயற்சியே இப்பதிவு.
அதற்கு முன்னால் விமானம் பறப்பது எப்படி என்ற அடிப்படையினை  அறிய பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் என்ற எனது பதிவையும் ஒரு முறைப்படித்து விடுங்கள்.

இங்கே சுருக்கமாக , காற்றின் செயல்ப்பாடு பறக்க எவ்வாறு உதவும் என சொல்கிறேன், ஒரு குறிப்பிட்ட வேகத்தில் காற்று விமானத்தின் இறக்கையின் மீது மோத வேண்டும், இறக்கையின் மேல்,கீழ் என இரண்டாக காற்றுப்பிரியும், இறக்கை வடிவமைப்பின் காரணமாக மேல் செல்லும் காற்று வேகமாக செல்லும் எனவே அழுத்தம் குறையும்,கீழ் செல்லும் காற்று மெதுவாக செல்லும் எனவே அழுத்தம் அதிகம் இருக்கும் இது
  பெர்னோலி விதியின் அடிப்படையில் நடக்கிறது. இதுவே மேல் நோக்கி விமானத்தை கிளப்புகிறது. மிதப்பு விசை (lift)எனப்படும். மேலும் இரண்டாக பிரியும் காற்று இறக்கையின் பின்ப்புறம் மீண்டும் இணைய வேண்டும் அப்போது தான் மேல் நோக்கி மிதக்கும் விசையின் மையம் இறக்கையில் இருக்கும், விமானம் நிலையாக பறக்கும்.



பெரும்பாலும் விமானவிபத்துகள் கீழ்கண்டக்காரணங்களால் ஏற்படுகின்றன.

#விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறுகளால்

#விமான ஓட்டியின் கவனக்குறைவால்

# வானிலை மற்றும் வானியக்கவியல்(aerodynamics) காரணங்களால்.

மேலே சொன்னவற்றில் முதல் இரண்டுக்காரணிகளையும் கவனமான பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க முடியும், ஆனால் மூன்றாவது காரணியை தவிர்ப்பது கடினம்.

மூன்றாவது காரணியால் உண்டாகும் விபத்தினையும் குறைந்த பட்சமாக குறைக்கலாம்  ஆனால் விமான நிறுவனங்களின்  செலவைக்குறைக்கும் செயல்ப்பாடே விபத்தின் அளவுக்குறையாமல் வைத்திருக்கிறது அது எப்படி என்பதினைக்காணலாம்.

நமது வளிமண்டலம் அடுக்குகளால் ஆனது முதல் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்,அடுத்து ட்ராபோ ஸ்பியர், மீசோ ஸ்பியர், அயனோ ஸ்பியர் என உச்ச அடுக்காக கொண்டது.


மேகங்கள், மழை , இன்ன பிற வானிலை மாற்றங்கள்  துடிப்பாக நிகழும் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்.இங்கு தான் காற்றின் அடர்த்தி, வேகம் எல்லாம் அதிகம்.இந்த அடுக்கில் பறப்பது கரடு முரடான சாலையில் பயணிப்பது போன்றது.மேலும் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.

இதற்கு அடுத்த அடுக்கான டிராபோஸ்பியரில் மேகம், மழை எல்லாம் இருக்காது ஆனால் அவ்வப்போது மின்னல் வெட்டும், பனி பொழிவும் இருக்கும், மேலும் குறைவான அடர்த்தியில் காற்று இருக்கும். இதனால் விமானத்தின் எடைத்தூக்கும் திறன்ப்பாதிக்கப்படும். ஆனால்  அடர்த்தி குறைவானக்காற்றில் பறந்தால் குறைவாக எரிப்பொருள் செலவாகும். காரணம் காற்றினால் உருவாகும் எதிர்ப்பு தடைக்குறைவாக இருக்கும்.உ.ம் எதிர்க்காற்றில் சைக்கிள் ஓட்டுவது கடினமாக இருப்பது.

மேலும் இன்னொரு வானியக்கவியல் சிக்கலும் இருக்கு அதுவே விமான விபத்திற்கு பெரும்பாலும் வழிவகுப்பது. அப்படிப்பறப்பது கரணம் தப்பினால் மரணம் போன்றது ஆனாலும் சிக்கனமாக பறக்க வேண்டும் என்று திட்டமிடும் விமான நிறுவனங்கள் ஆபத்தினை தெரிந்தே டிராபோஸ்பியர் அடுக்கில் விமானங்களை இயக்குகின்றன.

அந்த அபாயம் என்ன என்றுக்காண்போம்,

டிராபோஸ்பியரில் 35000  அடி உயரத்திலேயே வணிக விமானங்கள் (commercial airlines)இயக்கப்ப்டுகின்றன. இங்கு என்ன மாதிரியான சூழல் நிலவும் என்பதினைப்பார்ப்போம்.

சிறியதும் பெரியதுமான ஏர்ப்பாக்கெட்ஸ் எனப்படும் திடீர் அழுத்தம் குறைவான வெற்றிடங்கள்(vacuum) இருக்கும், இதனுடாக பறக்கும் போது ஆட்டோ குலுங்குவது போல விமானங்கள் குலுங்கும். சில பெரிய உயர் வெற்றிட வெளியில் போதுமான காற்று இல்லாமல் எஞ்சின் அணைந்து போகவும் வாய்ப்புண்டு, அப்படி ஆகாமல் இருக்க பைலட் மிக திறமையாக செயல்ப்பட்டு எஞ்சின் வேகத்தினை தக்கவாறுக்கட்டுப்படுத்துவார். அப்படியே அணைந்தாலும் உடனே எஞ்சினை இயக்கிவிடுவார். இதற்காகவே விமான எஞ்சின்கள் பல முறை சோதிக்கப்படும். எவ்வளவு வேகமாக மீண்டும் எஞ்சின் இயக்கத்திற்கு வரும் என்றெல்லாம் தரச்சோதனைகள் செய்து நிருபித்தால் மட்டுமே அந்த மாடல் எஞ்சினுக்கு அனுமதியே கிடைக்கும்.

ஆழ் கடலில் நீரோட்டங்கள் காணப்படுவது போல வானிலும் காற்று  ஒடைகள் (jet streams)காணப்படும் , திசைப்பண்புகள் கொண்டவை, எனவே காற்று ஓடையின் திசையில் பறந்தால் வேகமாகவும், குறைவான எரிப்பொருளிலும் பறக்கலாம். இதற்காகவே டிராபோஸ்பியரில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளப்பகுதியில் ஸ்ட்ராடோஸ்பியர்  காற்று சென்று மோதும் போது அவை அப்படியே மேல் எழுந்து செங்குத்தாக டிராபோஸ் வரைக்கும் சென்று நிற்கும் , அப்படிப்பட்ட காற்று அலையை விமானம் கடக்கும் போது அதன் வானியக்கவியல் பாதிக்கப்படும், எப்படி எனில்,

விமானம் பயணிக்கும் திசைக்கு எதிரில் இருந்து வரும் காற்றானது இறக்கையின் மீது  இரண்டாக பிரியும் அப்படி பிரியும் காற்றானது மீண்டும் இறக்கையின் பின்ப்பகுதியில் இணைய  வேண்டும் ,அப்போது  தான் காற்றில் விமானம் மிதக்கும்.

இப்போதூ விமானத்தின் அடியில் இருந்து வேகமாக வரும் செங்குத்தான காற்றோட்டம் ஒரேயடியாக மேல்ப்புறக்காற்றையும் வழித்துக்கொண்டு மேலே சென்று விடும் இதனால் விமானத்தின் எடையை சம நிலையில் வைத்திருக்கும் இறக்கையின் தூக்கு விசை பாதிப்புக்குள்ளாகி விமானம் கீழே இறங்கும்.

விமானத்தின் எடை அதன் எஞ்சினின் மொத்த திறக்கும் சமமாக இருந்தால் சமாளிப்பது கடினம், எஞ்சின் திறன் அதிகமாக இருந்தால் எஞ்சினை வேகமாக இயக்கி அந்த காற்று அலையினைக்கடக்க வைக்க முடியும்

விமான எடை, எஞ்சின் திறன் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு 300 டன் விமானம் எனில் அதில் 150 டன் வெற்றுவிமான எடை மற்றும் எரிப்பொருளின் எடை ஆகும், மீதி 150 டன் என்பது பே லோட் (pay load)எனப்படும் , விமானத்தில் ஏற்றப்படும் சரக்கு/ பயணிகளின் எடை ஆகும்.

மேலே சொன்னது பே லோட் என்பதினை விளக்கவே ஆனால் நடைமுறையில் 50% பே லோட் எல்லாம் விமானங்கள் தூக்க முடியாது மொத்த எடைத்திறனில் மூன்றில் ஒரு பங்கு எடைத்திறனே இருக்கும்.அதாவது 300 டன் எஞ்சின் திறன் எனில் 100 டன் மட்டுமே பேலோட் திறன் ஆக இருக்கும்.

எனவே முழு எடைத்தூக்கும் திறனுக்கும் எடை சுமந்து விமானம் பறந்தால் மேற்சொன்னது போன அவசரக்காலங்களில் நிலையாக பறக்க வைக்க முடியாமல் விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.இதனாலேயே பயணிகள் கொண்டு செல்லும் எடைக்கு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஆபத்து இருக்கு என்று சொல்லிவிட்டு இன்னும் எதுவும் வரவில்லையே என நினைக்கலாம் , அது இனிமேல் தான் வருகிறது.

இப்போது இரண்டு விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்ளவும்,
வணிக விமானங்கள் எடைக்கு இணையான எஞ்சின் திறனை மட்டுமே கொண்டிருக்கும், மேலும் இறக்கையின் மேல், கீழ் பயணிக்கும் காற்று மீண்டும் பின் பகுதியில் ஒன்றாக இணைய  வேண்டும்.

ஒரு விமானம் 35000 அடி உயரத்தில் பயணிக்கிறது,

விமானம் முன்னோக்கி செல்லும் போது அதன் மையப்பகுதியான உடம்பு அதே பரப்பளவில் காற்றினை முன்னோக்கி தள்ளும் எனவே விமானத்துக்கு சற்று முன்னதாக ஒரு காற்று  முகப்பு (air front)உருவாகும் , அதே வேளையில் பக்க வாட்டில் காற்று தடையின்றி வேகமாக  இறக்கை வரை செல்ல  முடியும் ,அதுவே இறக்கை மீது மோதி மேலும், கீழும் இரண்டாக பிரிந்து சென்று அழுத்த மாறுப்பாட்டினை உருவாக்கி விமானம் பறக்க உதவுகிறது.



வளிமண்டலத்தில் காற்று ஓடைகள் உண்டு என்றுப்பார்த்தோம் ,இதனால் விமானம் இயங்கும் வேகத்தினை விட வேகமாக காற்றில் முன்னோக்கி செல்லும் இதனை உண்மையான  காற்று வேகம் (true air speed)என்பார்கள், விமான எஞ்சினால் கிடைக்கும் வேகத்தினை இயல்பான வேகம் (air speed)என்பார்கள்.

உண்மையான காற்றுவெளி வேகம் விமானியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்ப்பட்டது, காற்றோடையின் தன்மைக்கு ஏற்ப மாறும்.

பயணிகள் விமானம் ஆனது காற்றில் ஒலியின் வேகத்தை விட குறைவான வேகத்தில் பயணிக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது,பயணிகள் விமானத்தின் பாதுகாப்பான மேக் ஸ்பீட் மேக் 0.86 ஆகும். மேலும் எஞ்சின்களும் அப்படியே , இதனால் விமானத்தின் வேகம் எப்பொழுதும் ஒலியின் வேகத்தினை (mach speed)தாண்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். போர் விமானங்களால் மட்டுமே ஒலியை தாண்டிய வேகத்தில் பறக்க முடியும், அவற்றின் வடிவமைப்பு மற்றும் எஞ்சின் திறன் அத்தகையது.



குறைவான வேகத்தில் ஓட்டினால் போதுமே அப்புறம் என்னப்பயம் என்றுக்கேட்கலாம், ஆனால் காற்றோடை என்ற ஒன்று இருக்கே அது இழுத்து போய்விடும் வேகமாக. மேலும் அவ்வளவு உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாகவே இருக்கும் , அதனை சமாளிக்க கண்டிப்பாக ஒரு குறைந்த பட்ச வேகம் இருக்க வேண்டும்.அப்போது தான் காற்று இறக்கையின் மீது வேகமாக மோதி அழுத்த வித்தியாசம் உருவாக்கி விமானத்தினை காற்றில் மிதக்க வைக்கும்.

போதுமான மிதப்பு விசை கிடைக்க வேகமாக இயக்க வேண்டும், ஆனால் ஒலியின் வேகத்தை தொடக்கூடாது என்பதே வணிக விமானங்களுக்கான வானியக்கவியல் கட்டுப்பாடு.

ஏன் எனில் ஒலியின் வேகத்தினை வணிக விமானங்கல் தொடும் போது  இறக்கையின் மேல் பிரிந்து செல்லும் காற்று மீண்டும் பின்ப்பகுதியில் இணையாமல் பிரிந்தே சென்றுவிடும் இதனால் தூக்கு விசைக்குறையும்.

இது எதனால் ஏற்படுகிறதது எனில், முன்னர் சொன்னது போல விமானத்தின் மைய உடம்பு காற்றினை அதன் பரப்புக்கு முன் தள்ளி ஒரு காற்று முகப்பினை உருவாக்குவதால் பக்கவாட்டில் காற்று வேகமாக இறக்கையில் மோதும் ,இதுவே தேவையான மிதப்பு விசையினை தருகிறது. காரணம் காற்று முகப்புக்கும் , இறக்கைக்கும் இடையே காற்றின் வேகம் மாற்றம் அடைவதே.

இப்போது விமானம் ஒலியின் வேகத்தில் பறக்கிறது எனில் , காற்று முகப்பிற்கும், விமானத்தின் முகப்பு/மூக்கிற்கும் இடையில் இடைவெளி இருக்காது. விமானம் வேகமாக சென்று முகப்பின் மீதே மோதும் இதனால் ஒரு சீர்குலைவு காற்றில்( sonic boom and turbulance )ஏற்படும். இது இறக்கையின் மீது மோதும் காற்றின் வேகத்தினைக்குறைக்கும்.



இப்படிப்பட்ட நிலையில் விமானி என்ன செய்வார் எனில் இறக்கையில் மோதும் காற்றின் வேகத்தை அதிகரிக்க காற்று மோதும் கோணத்தினை (angle of attack)உயர்த்துவார் இதனால் இறக்கையின் மீதாக கடக்கும் காற்றின் வேகம் கூடும், இது தேவையான அழுத்த வேறுப்பாட்டினைத்தரும் பொதுவாக ஆனால் இதற்கும் ஒரு எல்லை இருக்கு, மோதும் கோணம் அதிகம் உயர்த்தப்பட்டால் பிரியும் காற்று மீண்டும் இணையாது இதனால் விமானம் கீழ் நோக்கி இறங்கும்,சிறிது நேரத்தில் சரி செய்யவில்லை எனில் விமானம் செங்குத்தாக தரை நோக்கி டைவ் அடித்து விடும். இதனை ஸ்டால் (stall)என்பார்கள்.

இப்படி திடீர் என உயரம் குறைந்து கீழ் செல்லும் போது விமானத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்னவெனில்,
தரை மட்டத்தில் விமானத்தின் உள்ளும், புறமும் ஒரே அழுத்தம் இருக்கும், அதுவே 35000 அடி உயரத்தில் வெளீப்புற காற்று அடர்த்திக்குறைவாக  இருப்பதால் உட்புறத்தை விட வெளியிள் அழுத்தம்  குறைவாக இருக்கும்.இந்த அழுத்த மாறுபாட்டால்  விமானம் சற்றே விரிவடையும். டேக் ஆப் ஆக்கும் போது காது அடைப்பதை போன்ற உணர்வு ஏறபடுவதும் இதனால் தான்.

 உயரம் குறைய ,குறைய சுருங்கிக்கொண்டும் வரும். திடீர் என உயரம் குறைந்தால் விரைவாக சுருங்கும் இதனை  அழுத்த அதிர்ச்சி என்பார்கள்.இதனால் விமானக்கட்டுமான இணைப்புகளில் விரிசல், மேலும் கட்டுப்பாட்டுக்கருவிகள் செயலிழப்பு ஏற்படலாம். மிக வேகமாம உயரம் குறையும் போது விமான இறக்கை, அல்லது உடலே உடைந்து விடும்.எனவே விமானம் மேல் எழும்புதல், இறங்குதல் என இரண்டும் சீராக நடைப்பெற வேண்டும்.

எனவே விமானம் ஒலியின் வேகத்தினை தொடும் எல்லையை சவப்பெட்டி முனை (coffin corner or q corner)என்பார்கள், காரணம் விமான வேகவரைப்படத்தில் ஒலி வேக எல்லை ஒரு முனையில் முடிவடையும்.

போதுமான அளவு காற்று வேகமாக மோத தேவையான விமான வேகத்தினை கிரிட்டிக்கல் ஸ்பீட் என்பார்கள். இந்த வேகம் ஒலியின் வேகத்திற்கு மிக அருகில் இருக்க கூடாது. இந்த கிரிட்டிக்கல் ஸ்பீட் ஒவ்வொரு உயர மட்டம், காற்றின் அடர்த்திக்கும் ஏற்ப மாறுபடும். மிதமான உயரத்தில் குறைவான கிரிட்டிக்கல் ஸ்பீட் போதும்.

உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அடர்த்தி குறையும், எனவே மிதப்ப்பு விசையை நிலையாக வைத்திருக்க காற்றின் வேகத்த்இனை அதிகரிக்க கிரிட்டிக்கல் ஸ்பீட் அதிகரிக்கப்படும். இதன் எல்லை ஒலியின் வேகம் ஆகும். எனவே எப்பொழுதும் ஒலியின் வேகத்திற்கும் ,கிரிட்டிக்கல் ஸ்பீடுக்கும் நல்ல வித்தியாசம் இருக்க வேண்டும்.  அப்போது தான் தேவைக்கு ஏற்ப வேகத்தை கூட்டியோ ,குறைத்தோ சீராக பறக்க முடியும். ஆனால் 35000 அடி உயரத்தில் கிரிட்டிக்கல் ஸ்பீடிற்கும், ஒலியின் வேகத்திற்கும் இடையே சுமார் 35 கி.மீ/மணி என்ற அளவே வேக இடைவெளி இருக்கிறது.

எதிர்ப்பாராதக்காரணங்களால் காற்றின் அடர்த்தி குறைந்தால் அதற்கு ஏற்ப விமானத்தின் வேகத்தினைக்கூட்டியோ, காற்று மோதும் கோணத்தை மாற்றவோ விமானியால் முடியாது அப்படி செய்தால் விமானம் மிதப்பு விசையை இழக்கும்.

மேலும் சில சமயங்களில் காற்று ஓடைகளை வேகமாக இழுத்து செல்லும் அப்போது சரியாக வேகத்தினைக்கட்டுப்படுத்த வேண்டும் இல்லை எனில் ஒலியின் வேகத்தினை தொடுவதால் விமானம் மிதப்புவிசையை இழக்க நேரிடும்.

35000 அடி உயரத்தில் விமானம் பறப்பதில் இத்தகைய அபாயம் இருப்பது தெரிந்தே ,விமான நிறுவனங்கள் விமானத்தை அந்த உயரத்தில் பறக்க வைக்கின்றன.ஒரே காரணம்  எரிப்பொருள் குறைவாக செலவாகும் , எனவே விமான இயக்க செலவு குறைவாகும், நல்ல லாபம் கிடைக்கும் என்பதே.

மேலும்  பெரும்பாலும் பனிப்பொழிவு, இடி மின்னல் போன்றவை  டிராபோஸ்பியரில் இருந்தே கீழ் நோக்கிப்பாயும்  அதிலும் சிக்க வாய்ப்புள்ளது.அது போன்ற சமயங்களில் கட்டுப்பாட்டுக்கருவிகள் செயலிழந்து போக நேரிடும். அதுவும் விபத்துக்கு வழி வகுக்கும். விமானங்களில் 50 கி.மீக்கு முன்னால் உள்ள வானிலையை காட்டும் ரேடார் உண்டு. அவை இடி ,மின்னல், பனிப்பொழிவினை சுட்டிக்காட்டும். சிறிது நேரம் அப்படிப்பட்ட சூழலில் ஊடாக பயணிப்பதில் பிரச்சினை இல்லை என்பதால் சமாளித்து விடலாம் என  விமானிகள் நேராக அதனுள் பயணிப்பது உண்டு.சில சமயங்களில் விபத்தாவதற்கு இதுவும் ஒருக்காரணம் ஆகும்.

இது போன்ற முன்னறிவிப்புகள்,காற்றின்,வேகம் , உயரம் எல்லாம் தானாகவே கருப்புப்பெட்டியில் பதிவாகிவிடும், விமானி எச்சரிக்கைகளை புறக்கணித்து செயல்ப்பட்டால் காட்டிக்கொடுத்து விடும், எனவே தான் விபத்துக்கான காரணம் கண்டறிய கருப்புப்பெட்டியை தேடுகிறார்கள்.

பின்குறிப்பு:

# இது கொஞ்சம் பழைய சரக்கு ,பதிவேறாமல் கிடந்துச்சு தூசு தட்டி  போட்டு இருக்கேன், ஏதேனும் பிழைகள் இருக்கலாம், மேலும் நானும் விமானப்பொறியாளன் அல்ல எல்லாம் கூகிளாண்டவரின் உபயம் :-))

#படங்கள் உதவி ,கூகிள் படம், மற்றும் ஃப்ரீ போட்டோ தளம். ஹி..ஹி அதுல கோடுப்போட்டு கிராபிக்ஸ் செய்தது மட்டும்  அடியேன்!

Friday, February 17, 2012

என்ன கொடுமை சார் இது!-2




என்ன கொடுமை சார் இது!-2

ஆரம்பக்காலத்தில் நான் பிளிறிய  சிலக்கொடுமைகளை இங்கே அழுத்திக்காணுங்கள்என்ன கொடுமை சார் இது!

மீண்டும் பிளிறல்  தொடர்கிறது....

ஒத்த சிந்தனை!

நம்ம தமிழ் சினிமா ஆளுங்க செம கில்லாடிங்க , உலக மகா சிந்தனையாளர்கள் ,புதுசு ..புதுசா  கற்பனை ஊற்றெடுக்கும் ஆனால் என்ன கொடுமைனா  இவங்க கஷ்டப்பட்டு கற்பனை செய்து உருவாக்கியதை உலகத்துல மத்தவங்க முன்னாடியே செய்து விடுகிறார்கள்!  தாமதமாக கற்பனை செய்தால் அதை எப்படி காப்பி அடிச்சாங்க என்று சொல்ல முடியும்... சொல்லக்கூடாது!ஒத்தசிந்தனை கொஞ்சம் லேட்டா  வந்திருக்குனு சொல்லுங்க! :-))





-----------------

பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்தல்:


ஒரு அஞ்சுப்பேருக்கு விருது கொடுத்தா அதுக்கு பேரு விருதா?
ஆமாம் விருது தான்!

அந்த அஞ்சுப்பேரு அஞ்சஞ்சு  பேருக்கு விருத கொடுத்தா அது?

அதுக்கூட விருதுனு சொல்லலாம்...

அந்த அஞ்சஞ்சு பேரு ஆளுக்கு அஞ்சு விருதுனு கொடுத்தா?

ம்ம்...ம்ம் விருது மாதிரி தெரியுது....

அஞ்சஞ்சு பேரா அஞ்சஞ்சு பேருக்கு என்று 5 லட்சத்து 55 ஆயிரத்து 5  நூற்று 55 பேருக்கு விருது கொடுத்தா?

ஹி..ஹி நான் இல்லை ரொம்ப பாவம் காலைல டிபன் கூட சாப்பிடல்லை ...எருமைக்கூட்டம் எங்கே இருக்கு சார்?  நானே போய் விழுந்துடுறேன்:-))

உங்கள் தளத்தை பைசா செலவில்லாமல் பிரபலம் ஆக்கணுமா , உடனே ஒரு விருது அறிவிச்சு பதிவர்களுக்கு பந்திப்போடுங்கள் போதும் :-))

விருதுக்கொடுத்தற்கு நன்றி என்று பதிவுப்போட்டே பிரபலம் ஆக்கிடுவாங்க உங்க தளத்தை!

-----------

மின்வெட்டைக்கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!

திமுக முன்னால் அமைச்சர்.வீராபாண்டி ஆறுமுகம் தலைமையில் , மொபைல் போன் விற்பனையாளர்கள்??!! ஒன்றுக்கூடி சேலத்தில் மின்வெட்டைக்கண்டித்து போராட்டம் நடத்தி இருக்காங்க. என்னா கோராமையிது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாமணன் போல அளக்காமலே நிலம் அபகரிப்பில் பிசியாக இருந்தவர்கள், ஒரே ஒரு மின் திட்டத்தை கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதற்கே தி.மு.க தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டுக்காரணமாக இருக்கும்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது சாட்சாத் மின்வெட்டு துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டாரே. 

கதை அப்படி இருக்க ,இவங்க இப்படி போராட்டம் நடத்துவாங்களாம் :-))

அதுவும் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம், தொழிலார்கள், விசைத்தறியாளர்கள் என்று கூப்பிடாமல்(கூப்பிட்டாலும் வர மாட்டாங்க) மொபைல் போன் விற்பனையாளர்களை வைத்து நடத்துறாங்க, ஏன் மின்சாரம் இல்லாம மொபைல் போன் சார்ஜ் செய்து பேச முடியலையாமா? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க :-))

அனேகமாக அடுத்த சட்ட சபைத்தேர்தலிலும் தற்போதைய மின்வெட்டே வெற்றியாளரை தீர்மானிக்கும் என நம்பலாம்.அட...டா திராவிட கட்சிகளுக்கு ஒத்த கொள்கை இருக்குனு சொல்றது இந்த மின்வெட்டுக்கொள்கைய தானா? :-))

என்ன கொடுமை ...சார் இது!
--------------

நேற்று உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார்ப்பள்ளியின் மாணவர் விடுதியில் +1 படிக்கும் /படித்த மாணவர் ஒருவர் ஆசிரியரின் அடக்கு முறை,தண்டனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வருத்தத்திற்கும் ,கண்டனத்திற்கும் உரிய சம்பவம்.

கடந்த வாரம் கண்டித்த ஆசிரியையை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றார். இப்போது மாணவர் ஒருவர் தற்கொலை. இரண்டுமே இந்தியக்கல்விக்கொள்கை, மற்றும் சூழலின் சீரழிவையேக்காட்டுகிறது.

கல்வி என்பது அறிவுக்கு என்பதை தாண்டி பிழைப்புக்கு என்று மாறி மதிப்பென் வேட்டையில் மாணவர்கள் இறங்க வேண்டியதாகிவிட்டது. சிலர் வேட்டையில் வெற்றியும் பலர் வேட்டையின் தீவிரத்துக்கும் பலியாகிறார்களோ என தோன்றுகிறது.

கல்வி வியாபாரமாக ஆனதோடு மாணவர்களை கிளாடியேட்டர்களாக  மாற்றி போராட வைக்கிறது. எனவே மாணவர்களும் மூர்க்கத்தனமாக கல்வியுடன் போரிடுகிறார்கள். அப்படியே வென்றாலும் வெற்றியின் இனிமையை சுவைக்கும் மனநிலை போய்விடுகிறது. தோல்வியை விட தோற்றுவிடுவோமோ என்ற பயம் உயிரெடுக்கிறது.


கல்வியாளர்களோ, அரசோ விழித்துக்கொள்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் விழிப்படைந்து இது போன்ற அழுத்தங்களை பிள்ளைகளுக்கு தராமல் இருக்கலாம். ஆனால் அவர்களோ வாழ்வில் உயர வசதியாக வாழ கல்வி ,வேலை என்ற இரண்டே அக்‌ஷய பாத்திரம் என்ற முடிவில்  தனக்கு கிடைக்காத ஒன்று பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் வருத்திக்கொண்டு பிள்ளைகளையும் வருத்திக்கொண்டு ,அவ்வப்போது இது போன்ற துர்பாக்கியமான செய்தியாகிவிடுகிறார்கள்.

----------------