Thursday, February 07, 2013

கற்றது தமிழ்-5

(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்)

தமிழென நினைத்து  பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,பிறமொழிச் சொற்களைப் நாம் பயன்படுத்தி வருகின்றோம்,அவற்றில் பல தமிழாகவே மாறிவிட்ட சூழலில் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது மிகவும் கடினமாகும்,அதே வேளையில் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களும் உள்ளன,அவற்றை  அடையாளங்காணும் சிறு முயற்சியே இத்தொடர்.

இப்பதிவில் நாம் அதிகம் பயன்ப்படுத்தும் மேலும் சில வடமொழி ,பிறமொழி சொற்களையும்,அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் காணலாம்.

#அகதி:

ஒரு சொல்லின் முன் "அ" சேர்ப்பதால் எதிர் மறை பொருளை உருவாக்கலாம், இம்முறை வடமொழி,தமிழ் என இரண்டிலும் நடைமுறையில் உள்ளது.

கதி(gati) என்ற வடமொழிச் சொல்லுக்கு ,

நிலை,
இடம்,
இலக்கு,
நுழைவு,
சரணடைதல்,
புகலிடம்,
நேரம்,
வேகம்,
இயக்கம்,
நகர்தல்.

என்றெல்லாம் பொருள் உண்டு.

சொல்லுக்கு முன் "அ"  சேர்த்தால் இவற்றிற்கு எதிரான பொருள் கொண்ட சொற்களை உருவாக்கலாம்.

அகதி என்ற சொல்லினை கொண்டு ,
யாருமற்றவன்,வறியவன்,நாடோடி,பற்றில்லாமல்,புகலிடம் இல்லாமல் இருப்பவர்களையும் குறிக்கலாம்.

மேலும் அகதி என்பதற்கு  திரும்புதல் என்று ஒரு பொருளும் இருப்பதால்,புலம் திரும்பியவர் என்றும் சொல்லலாம்.

அகதி என்பதற்கு தமிழ் இணைச்சொற்கள்: நாடோடி ,நாடற்றவர் ,புலம் திரும்பியோர் என்பதை கொள்ளலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் என்பது பொதுவாக 'migrated" என்பதையே குறிக்கும்.

#அகாலம்- 

காலம் என்ற வடமொழிச்சொல்லுக்கு நேரம் என்று பொருள், எதிர்மறையாக "அகாலம்" என்கிறார்கள்  இதற்கு இணையான தமிழ்ச்சொல் "நேரமற்ற நேரம்",வேளையற்ற வேளையில் எனலாம்.

அகாலநேரம் என்பது ,நடு சென்டர் என்பது போல இருமுறை நேரத்தினை சொல்வது.

#அங்குலம் : 

வட மொழிச்சொல், அங்குஷ்டம் என்றால் வட மொழியில் கட்டைவிரல் , ,எனவே ஒரு கட்டைவிரல் தடிமன் உள்ள அளவை அங்குலம் என்பார்கள்.
இணையான தமிழ்ச்சொல்: விரற்கடை அளவு.

#அஜாக்கிரதை

ஜாக்கிரதை என்ற வட மொழிச்சொல்லின் எதிர்ச்சொல்,

இணையான தமிழ்ச்சொல் : கவனமின்மை,விழிப்பின்மை.

# அசுத்தம்-

சுத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்,

இணையான தமிழ்ச்சொல்: அழுக்கு,தூய்மையின்மை.

#அநியாயம்:

நியாயம் என்ற வடச்சொல்லின் எதிர்ப்பதம்.

இணையான தமிழ்ச்சொல்:முறையின்மை,நடுவின்மை.

#அபத்தம்:

பத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்.

பத்தம் என்றால் நேர்மை, உண்மை, எனப்பொருள். சுத்தபத்தமாக கடவுளை வணங்க வேண்டும் என்றால் ,தூய்மையாக ,நேர்மையாக ஒன்றி வணங்குதலை குறிக்கும்.

இணையான தமிழ்ச்சொல்: பொய்,தவறு.

#இலவசம்:

labhasa என்ற வட மொழி சொல்லுக்கு , பிச்சையாக, தானமாக கேட்டுப்பெறுதல் என்ற பொருள் ஆகும்.  தமிழில் அனைத்து மெய்யெழுத்துக்களையும் சொல்லின் முதல் எழுத்தாக பயன்ப்படுத்தக்கூடாது என்பதால், உயிர் எழுத்து "இ" சேர்த்து இலவசம் என முழுமையாக தமிழில் எழுதப்படுகிறது.

உ.ம்: லட்சுமணன் = இலட்சுமணன், ராமன் = இராமன்.

தமிழில் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ,பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களும் வரலாம், அதுவல்லாமல், மெய் எழுத்துக்களில் ,க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங ஆகிய பத்து மெய்யெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரலாம்.

இலவசம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்:விலையின்மை,விலையில்லா என்பதாகும்.

ஹி...ஹி முந்தைய முத்தமிழ் வித்தவர் ஆட்சியில் கொடுத்த இலவசப்பொருட்களை இப்பொழுது விலையில்லா பொருட்கள் என சொல்கிறார்கள். சரியாத்தான் மாற்று சொல் கண்டுப்பிடித்து இருக்காங்க :-))

# கோயில் அல்லது கோவில்:

பலரும் ஆலயத்தினை கோயில் அல்லது கோவில் என எழுதி,பேசி வருவதுண்டு, இரண்டில் எது சரியான தமிழ்ச்சொல் என குழப்பம் வருவது இயல்பே.

தமிழ் இலக்கண புணர்ச்சி விதிகளின் படி, நிலை மொழி இறுதியிலும்,வரு மொழி முதலிலும் உயிர் எழுத்து இருக்குமானால் , இரு சொற்கள் இணையும் போது ஒற்றெழுத்து மிகும், என்கிறது, இதனை உடம்படுமெய் - உடன் படுத்தும் - இணைக்கும் மெய் எழுத்து என்கிறார்கள்.

மேலும் நன்னூல் இலக்கணப்படி,

இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் இருப்பின் யகர ஒற்று "ய்"மிகும்.

ஏனைய உயிர் எழுத்துக்கள் இருப்பின் "வகர" மெய் "வ்" மிகும்

ஏ எனும் உயிர் எழுத்து இருப்பின் இவ்விரு மெய்யும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

கோவில் = கோ +வ்+இல்

கோ என்ற சொல்லில் "ஓ"எனும் உயிர் எழுத்து ஒலிக்கிறது அதற்கு வகர மெய்"வ்" உடம்படுமெய் ஆக மிகலாம்.

எனவே கோவில் என்பதே சரியானது.

கோயில் =கோ+ய்+இல்

எனப்பிரித்தால் யகர ஒற்று "ய்" மிகுவதை காணலாம், இது உடம்படுமெய் என்ற விதிப்படி சரி,ஆனால் நன்னூல் விதிப்படி தவறு என்கிறார்கள்.

அதே சமயத்தில் இலக்கியங்களில் கோயில் என்ற சொல்லும் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது,எனவே நடைமுறையில் கோயில் என்று சொல்வதும் பிழையில்லை.


மேலும் சில ஒலி ஓசையில் ஒத்து குழப்பும் சொற்கள்.

முருக்கு- முறுக்கு:

முருக்கு என்றால் அழித்தல்.

முறுக்கு என்றால் திரித்தல் , வீட்டில் சுடுவது முறுக்கு,  ஒரு வேளை வீட்டில் சுட்ட முறுக்கு உங்கள் பல்லை அழிக்குமானால் அதனை "முருக்கு" எனலாம் :-))

ஆனால் முருங்கை மரம் என்பதற்கு "ரு" தான் பயன்ப்படுத்த வேண்டும்.

#ஒரு-ஒறு:

ஒரு என்பது எண்ணிக்கை ஒன்றை குறிக்கும்.

ஒரு ரூபாய், ஒருவன்,ஒருவள்.

ஒறு என்பது தண்டனையை குறிக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்ற குறளில் வரும் ஒறுத்தல் "தண்டிப்பதையே" குறிப்பதை காணலாம்.

#முன்னாள்-முன்னால்-முந்நாள்

இன்றைய நாள் - இன்னாள், அதற்கு முன்னர் வந்த நாள் முன்னாள்,அல்லது முந்தைய காலம்.

ex.minister என சொல்ல முன்னாள் ,முன்னால் என எதனை பயன்ப்படுத்துவது எனக் குழப்பம் வரும்.

முன்னால் அமைச்சர்  என்றால் இந்த ஆட்சிக்காலத்துக்கு முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அல்லது இப்போதைய அமைச்சருக்கு முன்னர் அமைச்சராக இருந்தவரை மட்டுமே குறிக்கும்.
முன்னால் என்றால் in front of, previous என்ற பதம் இங்கு நாள் கணக்கில் வராது.ஒரு வரிசைக்கிரமத்தில் சொல்வதாகும்.

உ.ம்.
#முன்னால் நிற்கும் பேருந்தில் ஏறவும்.

#முன்னால் நிற்கிறேன்.

அதையே முன்னாள் நிற்கிறேன் என்றால் முதல் நாள் நிக்கிறேன் ஒரு வேளை முதல் நாளில் இருந்து நின்றால் அப்படி சொல்லலாமோ :-))

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்து இப்போ பதவியில் இல்லை என்றால் என்ன செய்வது, எனவே முன்னாள் அமைச்சர் என எழுதுவதே சரியானது.

முந்நாள் என சொல்வது மூன்று +நாள் என சொல்வதாகும்,

மூன்று நாள் =முந்நாள்.

# அல்லு-அள்ளு:

அல் - துன்பம்,தீமை,இரவு,இருள்.

அல்ல- இல்லை

அல்லல் ,அல்லவை,

சிலர் அல்லும் பகலும் வெறும்* தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்பார்.

இங்கு அல் என்பது இரவை குறிக்கிறது.

*வெரும்- வெருப்பு- அச்சம்,பயம்,மிரட்சி.கோவம்,சினம் எனவும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம்.

வெறும் - வெற்று-வெற்றிடம்- ஒன்றுமில்லாமல்.

வெறுப்பு- dislike -hate,பகைமை, விருப்பமின்மை.

அள்ளு- அள்ளுதல், ஒன்றை அப்படியே வாரி எடுப்பது. மண் அள்ளுதல், தானியம் அள்ளுதல்.

ஹி...ஹி தெலுகுல அல்லுனா மாப்பிள்ளை என்கிறார்கள்(தெலுகு தெரிந்தவர்கள் சரியானு சொல்லுங்க), "அல்லுடு மஜாக்கானு"சிரஞ்சீவி ஒரு படம் கூட நடித்துள்ளார், ஒரு வேளை மாப்பிள்ளைகள் மாமனாரை வரதட்சணை,சீர் எனக்கேட்டு துன்புறுத்துவதால் மாப்பிள்ளையை "அல்லு"னு சொல்லுறாங்களா?

உதித்நாரயணன் போன்று மூக்கால் பாடுபவர்களுக்கு  எல்லாமே அல்லு அல்லு ...தல்லு ...தல்லு தான் :-))

#ஆனி-ஆணி:

ஆனி என்பது தமிழ்நாட்காட்டியில் உள்ள தமிழ் மாதமாகும்.

ஆணி என்பது வடிவேலு சொல்லும் "ஆணியே புடுங்க வேண்டாம்' இரும்பு ஆணி :-))

ஆணி என்ற சொல்லுக்கு இரும்பு ஆணி, வலிமை, இன்றியமையாத(முக்கியமான) என்ற பொருள்கள் உண்டு.

மரத்தின் ஆணி வேர்.

ஆணித்தரமாக கருத்தினை *கூறுதல்.

ஆணி என்பதற்கு இங்கு அழுத்தமாக ,வலிமையாக கருத்தினை சொன்னதாக பொருள்.

கூரு- கூர்- sharpness,கூரு கெட்டவன் என்றால் மொக்கையான மூளைத்திறன் உள்ளவர்னு சொல்றாங்க போல.

*கூறு,கூறல் - சொல்,சொல்லுதல்.

 ஒலிக்குறிப்பில் குழப்பும் மற்ற சொற்களை பிறகு பார்க்கலாம்.



மேலும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.

#அதிகம், வடமொழி , தமிழ் -மிகுதி,கூடுதல்.

#அதிசயம், வடமொழி, தமிழ் -புதுமை,வியப்பு.

#அஸ்திபாரம்:கடைக்கால்

#அலுவா- கோதுமை தேம்பாகு.

#அவகாசம்-ஒழிவு,ஓய்வு.

#அவசரம்-விரைவு, பரபரப்பு,பதைப்பு.

#அவசியம்- முதன்மை,கட்டாயம்,இன்றியமையாத

#ஆதிக்கம்-உரிமை,முதன்மை,மேன்மை,தலைமை.

#இதம்,ஹிதம்- இனிமை,நன்மை,அன்பு,அறம்.

#இருதயம்,ஹிருதயம்-நெஞ்சம்,அன்பு,உள்ளம்.

#கட்சி-பக்கம்,சார்பு.

#எதார்த்தம்-உண்மை,உறுதி

# கஷ்டம்- வருத்தம்,துன்பம்

#நிசி -இரவு

#தாமசம்,தாமதம்-தாழ்த்துதல்,அட்டி,மயல்.

#துரிதம்-விரைவு

#நிர்ப்பந்தம்-தொல்லை,நெருக்கடி,வலுக்கட்டாயம்,இடர்.

#நிரூபித்தல்- மெய்ப்பித்தல்,நிலைப்பெறுத்தல்.

# வாந்தி பேதி,- கக்கல்,கழிசல்
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,தமிழ் ஆட்சி சொல்லகராதி, தமிழ் அகரமுதலி,http://spokensanskrit.de/,கூகிள்,விக்கி, இணைய தளங்கள்,நன்றி!


Saturday, February 02, 2013

வில்லங்க ரூபம்!

(ஹி...ஹி இந்த வவ்வால் அடங்கவே மாட்டான் போல இருக்கே..அவ்வ்வ்)

லோகநாயகரின் வில்லங்க ரூபம் திரைப்படத்தினை பார்க்கும் வரையில் படம் பற்றி பதிவெழுத வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் லோகநாயகர் மும்பையில் உட்கார்ந்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சோதனை வந்தால் மதச்சார்பற்ற ஒரு மாநிலம், அல்லது ஒரு நாட்டினை தேடிப்போவேன் என ஒரு டகால்ட்டி பேட்டிக்கொடுத்து சும்மா கிடந்த என்னை உசுப்பிவிட்டார் எனவே தான் இப்பதிவு.

பதிவினுள் செல்லும்முன் கவனிக்கவும்,

நான் இப்பதிவில் லோகநாயகரின் செயல்பாட்டினை நடு நிலையுடனே அலசவுள்ளேன் ,அப்படியும் முன் ஜென்ம விரோதம்,வாய்க்கா வரப்பு தகராறு என கற்பிதம் செய்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் ,மனமகிழ்வு தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட செல்லலாம், நன்றி!

திறந்த மனதுடன் விமர்சனங்களை எதிர்க்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.

# லோகநாயகரின் திரைப்படத்திற்கு தடை விதித்திருக்க  கூடாது என்பதே  எனது கருத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தி விடுகிறேன், இல்லை எனில் அரைகுறையாக படித்துவிட்டு சிலர் பொங்கல் வைக்க கிளம்பிவிடுவார்கள் :-))

உட்ப்பிரிவு-1:

இந்தளவுக்கு படம் வெளியிடுவதில் சிக்கலாக முதல் காரணமும் லோகநாயகரே ஆவார் என்பதையும் பதிவு செய்கிறேன்.

இனி மேற்கொண்டுப்பார்ப்போம்.

# திரைப்படம் தயாரித்து முடிந்ததும் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை  முதலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியிடம் லோகநாயகரே விற்றுள்ளார்.

//Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

அது ஏன்?

ஏன் எனில் படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் வந்தால் ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பதாலேயே,எனவே முன்னரே படத்திற்கு எதிர்ப்பு வரும் என கணித்தே லோகநாயகர் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது.

இப்பொழுது தமிழ்நாட்டினை மதச்சார்பு மாநிலம் என பேசும் லோகநாயகர் ,சேட்டிலைட்ஸ் உரிமம் விற்க தேடிப்போனப்போது மதச்சார்பு தன்மை எல்லாம் தெரியாமல் இருந்தாரா?

இல்லை இவர் நாத்திகம் பேசுகிறேன் என சொல்லிக்கொண்டாலும் மதச்சார்ப்பற்று உண்மையில் இருந்துள்ளாரா?

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், தசாவாதாரம் போன்ற படங்களை மதச்சார்ப்பற்றவர் ஏன் எடுத்திருக்க வேண்டும், தனது வணிக நோக்கத்திற்காக மதம் சார்ந்தே படங்களை எடுத்து லாபம் பார்த்தவர் , எதிர்ப்பு என்றதும் ,மதச்சார்பற்ற மாநிலம் தேடுகிறேன் என்பது முரண்நகையாகும்.

ஹே ராம் , இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தியது என சிலர் மேம்போக்காக சொல்லலாம், ஆனால் அதன் அடிப்படை கதை , தனக்கு கெடுதல் செய்த இஸ்லாமிய சமூகத்தினை மன்னித்து நன்மை செய்யும் சகிப்பு தன்மையுள்ள இந்து என்பதே ஆகும்.

அதாவது பெரும்பான்மை இந்துக்கள் சகிப்பு தன்மையுடன் இஸ்லாமியர்கள் செய்யும் தவறை பொறுத்துப்போகிறார்கள் என சொல்லியிருப்பார்.

உன்னைப்போல் ஒருவனில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக போய் , பெரும்பான்மை உள்ள சமூகத்தில் சிறும்பான்மையினர் அடங்கியிருக்க வேண்டும், ஏதேனும் வன்முறை செய்தால் பெரும்பான்மை பதிலடி கொடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்ற செய்தியினை திரைப்படமாக்கியிருப்பார்.

தசாவதாரம் படத்தில் பயோவார் என்ற கதைக்கு வைணவ பின்னணியே தேவையில்லை, ஆரம்பத்தில் வரும் சிலை மூழ்கடிப்பு எல்லாம் இல்லாமலே அக்கதையை சொல்ல முடியும், ஆரம்பக்காட்சிகளை கட் செய்துவிட்டு படம் பார்த்தாலும் பயோ வார் கதை தெளிவாக புரியும்.

ஆனால் தேவையில்லாமல் சைவ-வைணவ பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பார், அறிவியல் ரீதியான பயோ வார் படத்திற்கு எதற்கு வைணவ முலாம்?

இப்படி மதம் சார்ந்து படைப்புகளை உருவாக்கி ,பணம் சம்பாதித்தவர், பணம்  பண்ண துடிப்பவர், இவர் எப்படி மதச்சார்புள்ள மாநிலம் என தமிழகத்தினை குற்றம் சொல்ல முடியும்?

மதம் மட்டுமல்ல ஜாதியத்தினையும் வணிக நோக்கிற்காக அவ்வப்போது பயன்ப்படுத்திக்கொள்பவரே லோகநாயகர், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் எல்லாம் தேவரின புகழ்ப்பாடி வியாபாரமாக்கியிருப்பார்.

லோகநாயகருக்கு தமிழகத்தில் நிலவும் ஜாதிய பிரச்சினைகள்,சண்டைகள் தெரியாதா? அப்படி தெரிந்தும் இது போல படமெடுக்க காரணம் ,சர்ச்சைகளை பயன்ப்படுத்தி படத்தினை ஓட வைக்கவே என சின்ன குழந்தையும் சொல்லும், அப்படிப்பட்டவர் என்னமோ நாத்திகன்,நடுநிலையானவன் ,ஆனால் தமிழ்நாடு மத வெறியுடன் உள்ள மதச்சார்பு மாநிலமாகிவிட்டது என சொல்வதெல்லாம் உலக மகா காமெடி.

இவர் நாத்திகம் பேசுவதெல்லாம் சுயலாபத்திற்காக தான், தன் மீதுள்ள பிராமண சாயம் போகவும், தன்னை சாம்பார் நடிகர் என சொல்லிவிடாமல் இருக்கவுமே புரட்சிகர நாத்திக வேடம் போட்டுள்ளார். ஆனால் அடிப்படையில் உண்மையான நாத்திக உணர்வில்லாமையால் அவ்வப்போது அவரது மதவாத சுய ரூபம் திரைப்படங்களில் வெளியாகிவிடுவது வழக்கம்.

(அமீர்கான் தான் முன்மாதிரி போல)

# சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் வரையில் டிடிஎச் இல் வெளியிடும் எண்ணமே இல்லை , ஆனால் பின்னர் விநியோக முறையில் சரியான விலைக்கு விற்க முடியவில்லை என்றதும் , டிடிஎச் இல் வெளியிடும் திட்டம் தீட்டியுள்ளார், ஆனால் அதனை சேட்டிலைட்ஸ் உரிமம் விற்ற தொலைக்காட்சி நிறுவனத்திடம் உரியமுறையில் தெரிவிக்கவில்லை,

ஏன் சேட்டிலைட்ஸ் உரிமம் பெற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?

ஏன் எனில் சேட்டிலைட்ஸ் உரிமம் என விற்றால் அதிலேயே டிடிஎச் , வீடியோ ஆன் டிமாண்ட்  முறையில் வெளியிடும் அனைத்து உரிமங்களும் அடங்கிவிடும், எனவே சேட்டிலைட்ஸ் உரிம ஒப்பந்தம் போடும் போடுதே "Basic satellites rights"  எனக்குறிப்பிட்டு விட வேண்டும் ,பின்னர் sub-clause ஒன்றில் டிடிஎச், வீடியோ ஆன் டிமாண்ட் இன்ன பிற உரிமங்கள் அளிக்கப்படவில்லை என ஒப்பந்தம் தயாரிக்கப்பட வேண்டும் , அப்படி ஒப்பந்தம் செய்யாமல் விற்கப்படும் சேட்டிலைட்ஸ் உரிமத்துடன் அனைத்து வகையான தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமங்களும் வாங்குபவருக்கு சேர்ந்து விடும்.

T.V. Rights என ஒப்பந்தம் போட்டுவிட்டால் , டிவிடி உரிமமும் சேர்ந்துவிடும், எனவே ஒப்பந்தங்களில் பயன்ப்படுத்தும் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்.

நெகட்டிவ் ரைட்ஸ் என எழுதி கொடுத்துவிட்டால் படத்தின் அனைத்து உரிமங்களும் போய்விடும், பைனான்சியரிடம் நிதி உதவிப்பெரும் போது இப்படி நெகட்டிவ் ரைட்ஸை எழுதி வாங்கிக்கொண்டு தான் பணமே கொடுப்பது வழக்கம்.

நாயகன் படம் அக்காலக்கட்டத்தில் சுமார் 1.25 கோடிக்கு தயாரிக்கப்பட்டு சரியாக விலைப்போகாத சூழலில் ஜீவி நெகட்டிவ் ரைட்ஸ் என அனைத்து உரிமையும் வாங்கியதோடு அல்லாமல், விருது கிடைத்தாலும் எனக்கே தான் என நிபந்தனை விதித்து முக்தா சீனிவாசனிடம் இருந்து நாயகனை வாங்கினார்.

படம் விலையாகாத சூழலில் தயாரிப்பாளர் எப்படியெல்லாம் அடங்கிப்போக வேண்டியுள்ளது என்பதற்கு இது உதாரணம், ஆனால் அந்த தயாரிப்பாளரை தான் கஞ்சன் என 25 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சியேயில்லாமல் குதறினார் லோகநாயகர்.

சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் போது சரியாக முன் திட்டமிடவில்லை, உரிம விவகாரத்தில் ஒரு புரொபெஷனல் அப்ரோச் இல்லாமலே செயல்பட்டுள்ளது தெரிகிறது.ஆனாலும் முதலில் டிடிஎச் இல் வெளியிட டாடா ஸ்கையுடன் பேச்சு வார்த்தை போதே அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனைக்கண்டுக்கொள்ளாமல் லோகநாயகர் தொடர்ந்துள்ளார்.

பின்னர் எதிர் தரப்பு தொலைக்காட்சியையும் டிடிஎச் ஒளிப்பரப்பு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவே , தங்கள் அதிருப்தியை சொல்லி டிடிஎச் இல் முன்னரே வெளியிடப்படும் என ஏன் சொல்லவில்லை, டிடிஎச் இல் வெளியாகும் படத்திற்கு சேட்டிலைட்ஸ் உரிமமாக பெரும் தொகை எதற்கு என கேட்டுள்ளார்கள், இதை விட அதிக தொகைக்கு என்னால் விற்க முடியும் என முன்னர் செய்த ஒப்பந்தத்தினை நீக்கிவிட்டு ,பின்னர் விஜய் தொலைக்காட்சியிடம் விற்றுள்ளார்.

சேட்டிலைட்ஸ் உரிம இழுப்பறிப்பற்றி  ஜீவியிலும் செய்தி வந்துள்ளது.

சிலர் நினைக்கலாம் சேட்டிலைட்ஸ் உரிமம் தனி, டிடிஎச் உரிமம் தனி என்பது புரியாமலா ஆளும் தரப்பு சேனல் இருக்கும் என, ஆனால் டிராய் வழிக்காட்டுதலிலேயே சேட்டிலைட்ஸ் சேனலின் ஒரு அங்கமாக தான் டிடிஎச் வருகிறது. எனவே ஒப்பந்தம் செய்யும் போது சப்-கிளாஸ் போட்டு தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

மேலும் சேட்டிலைட்ஸ் சேனலின் விதி முறைகள் தான் டிடிஎச் ஒளிப்பரப்புக்கும் பொருந்தும், சேட்டிலைட்ஸ் ஒளிபரப்பு என்றால் அது டிடிஎச் ஒளிபரப்பும் தான் என சொல்லி  டிடிஎச் ஒளிபரப்பிற்கு கேளிக்கை வரியாக 30 சதவீதம் தமிழக அரசு விதித்தற்கு எதிராக ஒரு வழக்கினை போட்டு தடையாணை வாங்கியிருக்கிறார்கள், அந்த வழக்கின் பின்னணியில் உள்ளது கேடி பிரதர்ஸ் ஆகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் டிடிஎச் ஒளிபரப்பிற்கு அதிக வரி விதித்தால் பாதிக்கப்பட போவது அவர்களே, தமிழ்நாட்டில் சுமார் 80% டிடிஎச் மார்க்கெட்டினை வைத்துள்ளார்கள்.

செய்தி:1

The Jayalalitha government’s imposition of 30 per cent entertainment tax surpasses that of the state of Uttar Pradesh (25%), and is aimed at directly hurting the Kalanithi Maran-promoted Sun Group. Other DTH operators do not have a wide presence in Tamil Nadu, which accounts for approximately seven per cent of the subscriber universe.

http://www.indiantelevision.com/headlines/y2k11/sep/sep164.php


செய்தி-2:

//Allowing a batch of petitions filed by DTH service providers Bharti, Dish TV India Ltd, Reliance, Sun Direct and Tata Sky Network, a Division Bench of the Madras High court has held that the 30 per cent entertainment tax imposed on DTH (Direct-to-Home) services in Tamilnadu is unconstitutional.//

//” The Hon.Court further held that the tax on DTH was violative of Article 14 of the Constitution of India since there was no difference in the nature of DTH Services and Cable Network.//

http://spectralhues.com/television/2012/10/9252/


மேலும் அரசு கேபிள் டீவி வருவதற்கு எதிரான வேலைகளை தில்லியில் கேடி பிரதர்ஸ் செய்வதாகவும் ஒரு கடுப்புண்டு,எனவே இந்நிலையில் அவர்களுடன் டிடிஎச் ஒளிபரப்பில் கூட்டு சேர்ந்தது எரிகிற கொள்ளியில் எண்ணை வார்க்கும் செயலாக போய்விட்டது.

சேட்டிலைட்ஸ் உரிம விற்பனையில் செய்த குழப்படிகளே பின்னர் பிரச்சினை வளரக்காரணமாக அமைந்து விட்டது,இதனை கணிக்க தவறிவிட்டார்  என்றே சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி தரப்பிற்கு சேட்டிலைட்ஸ் உரிமத்தினை தானாக தேடிப்போய் விற்றதே எதிர்ப்பினை சமாளிக்க தான், அப்படி இருக்கும் போது அந்த டீலை அவர் கடைசி வரையில் தொடர்ந்திருக்க வேண்டும்,ஆனால் டிடிஎச் மூலம்ம் கூடுதல் வருமானம் வரும் என்றதும் திசை மாறிவிட்டார், அப்படியே டிடிஎச் இல் வெளியிட விரும்பினாலும் அதனை உரிய முறையில் எடுத்து சொல்லி இருக்கலாம், அல்லது எதிர் தரப்பு சேனலுடன் கூட்டு சேராமல் இருந்திருக்கலாம் ஆனால் இரண்டையும் செய்ய தவறிவிட்டார்.

இதற்கு காரணம் நாம் என்ன செய்தாலும் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டார்கள் என ஓவர் காண்பிடென்ஸ் எனலாம். பாலுக்கும் காவல் ,பூனைக்கும் நண்பன் என இரண்டு தரப்பிலும் வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார் ஆனால் அதுவே எதிராக திரும்பிவிட்டது.

 வழக்கமாக ஆடியோ வெளியீட்டினை ஒளிப்பரப்புவதால் பெரிதாக விளம்பர வருவாய் வருவதுதில்லை எனவே பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீட்டினை சேனலின் அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவதுண்டு.
ஆனால் நல்ல விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதால்  படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டிலேயே மூன்று இடத்தில் நடத்தி நேரடி ஒளிபரப்பும் செய்துக்கொண்டார், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வாங்கிய படம் என்பதால் நேரடி ஒளிப்பரப்பினை அதிக செலவு செய்து ஆளுங்கட்சி தரப்பு சேனல் செய்துள்ளது,இந்நிலையில் டிடிஎச் ஒளிப்பரப்பினைப்பற்றி முன்னரே தெரிவிக்காமல் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வாங்கியதால் இழப்பு என்ற மனக்கசப்பும் வெளியாக , உரிமம் கைமாறியது , இது படத்தினை விளம்பரப்படுத்த தங்களைப்பயன்ப்படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றிவிடப்பட்டதாக நினைக்க வைத்தது.

நம்மோடு வியாபாரம் செய்ய வந்ததே எதிர்ப்பை சமாளிக்க தானே, படம் வெளியிடும் வரையில் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கடைசியில் நழுவியதை சந்தர்ப்பவாதமாக ஆளும்தரப்பு கருதிய வேளையில், மார்க்கப்பந்துக்களுக்கு படத்தினை போட்டுக்காட்டி இன்னொரு தவறினை செய்து விட்டார் லோகநாயகர்.

அரேபிய சித்தாந்தப்படி புதிதாக முளைத்துள்ள இயக்கங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதேனும் பிரச்சினை சிக்குமா என ஆர்வத்துடன் அலையும் வேளையில் ,படம் போட்டுக்காட்டியது "பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தார் "போன்ற வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படிப்போட்டுக்காட்டவில்லை எனில் மார்க்கப்பந்துக்கள் கடைசி வரையில் எங்களுக்கு படத்தினைப்போட்டுக்காட்டு என்ற கோஷத்துடன் தான் போராடியிருப்பார்கள், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கோஷமே எழுந்திருக்காது,அதனை அரசும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்காது, அந்நிலையில் தடை விதிக்க வலுவான காரணங்களும் சொல்ல இயலாது.

படத்தை போட்டுக்காட்டு என பிரச்சினை நடைப்பெற்று கொண்டே இருக்கும் வேளையில் படத்தினை வெளியிட்டு இருக்கலாம், படம் வந்த பின்னர் எதிர்ப்பு காட்டினாலும், ஒரு பேச்சுவார்த்தை நடத்தி சில காட்சிகள் நீக்குகிறேன் என சொல்லி சமாளித்திருக்கலாம், படமே வெளியாகிடுச்சு,நாமளும் எதிர்ப்பை காட்டினோம்,நாம சொன்னதால் சிலக்காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கு எனவே நாமே வெற்றிப்பெற்றோம் என மார்க்கப்பந்துக்களும் மனத்திருப்தி அடைந்து இருப்பார்கள்.

இதற்கு வாய்ப்பிருக்கா என நினைக்கலாம், துப்பாக்கி படத்திற்கு எப்படி எதிர்ப்பு கிளம்பியது எப்படி முடிவுற்றது என்பதே நல்ல முன்னுதாரணம் ஆகும்.

ஆனால் அப்படி எல்லாம் ஏன் செய்யவில்லை? மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டினால் புரிந்துக்கொண்டு சமாதானமாக போய்விடுவார்கள் என எப்படி நினைத்தார்?  அவர்கள் போராடுவதே தங்களின் இருப்பை ஊடகத்திலும், மக்களிடமும் நிலை நிறுத்தத்தானே, எனவே என்ன தான் விளக்கினாலும் ஏற்றுக்கொள்ளப்போவதேயில்லை என்பது நன்கு தெரிந்த ஒன்று.

இந்நிலையில் சென்சார் பெற்ற படத்தினை மதவாத இயக்கங்களுக்கு போட்டுக்காட்டி அபிப்பிராயம் பெருவது அவசியமேயில்லை,ஆனால் அப்படி செய்து தவறான முன்னுதாரணத்தினை உருவாக்கிவிட்டார்.

குஸ்கா பிரியாணி சாப்பிட போனவங்களுக்கு லெக் பீஸ் அதுவும் ஆட்டு லெக் பீஸுடன்  பிரியாணி போட்டா சும்மா இருப்பாங்களா, இன்னும் அதிக வீரியத்துடன் படத்தினை தடை செய் என கிளம்பிவிட்டார்கள் ,ஏற்கனவே தங்களை சுயலாபத்திற்காக பயன்ப்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டதாக கடுப்பில் இருக்கும் ஆளும் தரப்பு,சேட்டிலைட்ஸ் உரிமம் எங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது எனவே டிடிஎச் இல் வெளியிட கூடாது என நேரடியாக தடை விதிக்க கூட வாய்ப்பிருந்தும் செய்யவில்லை ஏனெனில்  அப்படி செய்தால் நேரடியான மோதலாக போய்விடும் என்பதால் ஆளும் தரப்பு காத்திருந்தது இவ்வேளையில் மார்க்கப்பந்துக்களின் புகார் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது எனலாம் எனவே கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிவிட்டார்கள்.

# தனது இத்தனை ஆண்டுகால உழைப்பையும் முதலீடாக இப்படத்தில் போட்டுள்ளேன், படம் வரவில்லை எனில் எனது சொத்துக்கள் அனைத்தும் போய்விடும் எனவும் சொல்கிறார் ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே விவரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

(பிவிபி சினிமா தயாரிப்பில் பங்குபெற்றதை காணலாம்)

படத்தின் தயாரிப்பாளராக முதலில் இருந்தது பிவிபி சினிமாஸ் என்ற நிறுவனமே, அவர்களிடம் சுமார் 50 கோடி பணம் பெற்று படத்தயாரிப்பு நடந்து வரும் போது பட்ஜெட் அதிகமாகிவிட்டது 100 கோடி ஆகும் என சொன்னதால் , இப்படத்துக்கு 100 கோடி செலவிடுவது வியாபார ரீதியாக ரிஸ்க் என மேற்கொண்டு பணம் தரவில்லை, எனவே லோகநாயகரே தயாரிப்பாளராக பொறுப்பில் எடுத்து முடித்தார் என சொல்கிறார்.

ஆனால் மேற்கொண்டு பெரிதாக பணமே முதலீடு செய்யாமல் 50 கோடியில் தான் படம் எடுத்துள்ளார் , 95 கோடி என சொல்வது எப்படி எனில் லோகநாயகரின் நடிப்பு,கதை,வசனம்,திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றிற்கு சம்பளம் என ஒரு பெருந்தொகையை சேர்த்து சொல்வதாகும்,இதற்கெல்லாம் சுமார் 40 கோடியை கணக்கில் சேர்க்கிறார். எனவே படத்தின் உண்மையான தயாரிப்பு செலவென்பது சுமார் 50-60 கோடிக்குள் மட்டுமே, 50 கோடி ரூபாய் பிவிபி மூலம் வந்துவிட்டது ,மேற்கொண்டு சில கோடிகள் செலவு செய்துவிட்டு மொத்த உழைப்பும் கொட்டியுள்ளேன்,கடன் வாங்கியுள்ளேன் என சொல்வதெல்லாம் கிடைத்த வாய்ப்பினை பயன்ப்படுத்தி அனுதாப அலையை உருவாக்கவே எனலாம்.

தற்போது தமிழகத்தில் வெளியாகாத சூழலில் கூட படத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 90% சதவீதத்துக்கு குறையாமல் திரும்ப எடுத்துவிட்டார் (அதிகமாக எடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது படத்தின் உண்மையான பட்ஜெட் தெரியாத நிலையில் குறைவாக 90% எனக்கொள்வோம்)

எப்படி எனப்பார்க்கலாம்.

இந்தி விநியோக உரிமையை ஏக்தா கபூரின் Balaji Motion Pictures வாங்கியாகிவிட்டது , மிக குறைவான தொகை என சொன்னாலும் ஒரு பத்து கோடிக்கு கூடவா வியாபாரம் ஆகி இருக்காது?

அதே போல தெலுகு விநியோக உரிமையை தாசரி நாரயண ராவ் வாங்கியுள்ளார், அதன் மூலமும் ஒரு 10 கோடி கிடைக்கும் என வைக்கலாம்.

கேரளா,கர்நாடகா விநியோகத்தின் மூலம் 10 கோடி எனலாம்.

அமெரிக்க விநியோக விற்பனை -10 கோடி

யு.கே மற்றும் ஐரோப்பிய உரிமை- 10 கோடி

மலேசியா,சிங்கப்பூர்,அரபு தேசம்- 10 கோடி

சேட்டிலைட்ஸ் உரிமை- 12 கோடி

ஆடியோ உரிமை குறைந்த பட்சம் என்றாலும் -1 கோடி

மொத்தமாக சுமார் 73 கோடிக்கு தமிழகம் தவிர்த்து விற்பனை ஆகிவிட்டது.

மிகக்குறைவான தொகையையே கணக்கில் வைத்து சொன்னது இது, இதை விட குறைவான விலைக்கு தான் மேற்சொன்ன ஏரியாக்கள் விலை போகும் என்றால், உலகநாயகன் ,அயல்நாடுகளில் பெரிய மார்க்கெட் இருக்கு என இத்தனை காலமாக சொன்னதெல்லாமே பொய் என்றாகிவிடும்.

தமிழகத்தில் வெளியாகாத சூழலிலும் இவ்வளவு வருமானம் வர வாய்ப்புள்ள நிலையில் எனது சொத்துக்கள் அனைத்தும் இழந்துவிடுவேன் , நான் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்பதெல்லாம் மிகையான நடிப்பே என்பேன்.

தமிழக வெளியீட்டுக்கு பின்னர் கிடைக்கும் வருவாய் முழுக்க லாபமாகவே கருதப்படும்.

எனவே இத்தனை வருட சம்பாத்தியம் அத்தனையும் பணயம் வைத்துள்ளேன், இழந்துவிடுவேன் என சொல்வதில் உண்மையில்லை.

பின்னர் இப்படி எல்லாம் ஏன் பேசுகிறார் என்றால் ,வருங்காலத்தில் உதவும் என்பதும் மேலும் படம் சுமாராக இருப்பதாக பேச்சு நிலவுவதால் படம் சரியாக வசூலாகவில்லை என்றால் யாரும் திரும்பப்பணம் கேட்காமல் இருக்கவுமே, அப்படிக்கேட்டால் எதிர்ப்பால் சரியாக ஓடவில்லை, எனக்கு நஷ்டம் நான் எப்படி திரும்ப பணம் கொடுப்பேன் என சொல்லிவிடலாம் :-))

டிடிஎச் ,எதிர்ப்பு ,தடை என அமோகமாக விளம்பரம் கிடைத்தும் ,அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 44 திரையரங்குகளில் இருந்து சுமார் 3.4 கோடி அளவுக்கு தான் வசூலாகியுள்ளது, வார நாட்களில் வசூல் இன்னும் குறையும், மேலும் நாட்கள் செல்ல செல்ல குறையவே செய்யும், ஒரு வாரம் தாண்டி ஓடுவதே அமெரிக்கா போன்ற நாடுகளில் அபூர்வம் ,எனவே 10 நாட்கள் ஓடுவதாக வைத்துக்கொண்டாலும் , சுமார் 10 கோடி வசூலாவது கூட கடினமே, இது விநியோக செலவினை தான் ஈடுகட்டும், மேற்கொண்டு தியேட்டர் வாடகை, விளம்பர செலவு ஆகியவை எடுக்க இயலாது, விநியோகஸ்தரை பொறுத்த வரையில் நட்டம் என்ற நிலையினை தான் உருவாக்கும் சூழல் உள்ளது.

வெளிநாட்டு உரிமம் வாங்கியவர்களுக்கு பெரும்பாலும் திரையிடல் மூலம் போட்ட பணத்தினை எடுத்தால் போதும் என்ற நிலையே நிலவும், அவர்கள் லாபத்தினை டிவிடி வெளியிட்டு சரிக்கட்டிக்கொள்வார்கள்,அதனால் தான் வெளிநாட்டிலிருந்து வரும் டிவிடிக்குறித்து நம்ம தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதேயில்லை, அதனைக்கேள்விக்கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது!

உண்மையில் எதிர்ப்பு நிலவியதால் தான் வெளியான இடங்களில் இந்த அளவுக்கு ஆவது படம் ஓடுகிறது, எதிர்ப்பு, தடை ஆகியவை மிக நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது,அதற்கு தானே ஆசைப்பட்டார் லோகநாயகர் !

# அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும், கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு மதச்சார்புள்ள மாநிலமாக ,அரசியல் பழிவாங்கும் மாநிலமாக மாறிவிட்டதாக இப்பொழுது கூப்பாடு போடும் லோகநாயகர், இதற்கு முன்னர் எப்பொழுதாவது சக கலைஞர்களுக்கு இதே போன்ற பாதிப்பு வந்தப்போது குரலெழுப்பியுள்ளாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லோகநாயகரைப்பொறுத்த வரையில் மதம்,ஜாதியம் ஆகியவை படைப்புக்கு மூலப்பொருள்,சர்ச்சைகள் ,தடை எனில் விளம்பரம் என ஜெகஜோதியாக கல்லா கட்டும் வணிகர்.

தனிப்பட்ட முறையில் மூத்த திரைக்கலைஞன் இவ்வாறு பாதிக்கப்படக்கூடாது என்றே அவருக்கு ஆதரவாக நினைக்கிறேன்,ஆனால் லோகநாயகர் மற்றவர்களுக்காக இவ்வாறு நினைப்பதில்லை என்பது மனதில் உறுத்தலாக நிழலாடுகிறது.

#உதாரணமாக வைகைப்புயல் வடிவேலின் நிலையை பார்ப்போம், அவர் என்ன சினிமா மார்க்கெட் இழந்தா வீட்டில் இருக்கிறார், தேர்தல் பிரச்சாரம் செய்தார், அது அவரது உரிமை, அவர் பாதிக்கப்பட்டப்போது தனக்கு அரசியல்ரீதியாக ஒரு ஆதரவு வேண்டும் என அப்போதைய ஆளுங்கட்சியிடம் உதவிக்கு சென்றார் ,அவரை பயன்ப்ப்படுத்திக்கொண்டார்கள், தேர்தல் முடிந்ததும் அவரும் தனது வேலையைப்பார்ப்பேன் என்றார்,ஆனால் ஏன் திரையுலகில் ஒருவரும் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லை, சில நாட்களுக்கு முன்னர் வடிவேலின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள், கதை விவாதத்தின் போதே வடிவேலுவை மனதில் வைத்தே சீன் பிடித்த இயக்குனர்கள் எல்லாம் திடீர் என  அவரை மறந்து போனது ஏன்?

ஆட்சியாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்தவரை பயன்ப்படுத்தி ஆளும்தரப்பை கோபப்படுத்தி விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை தானே, ஏன் லோகநாயகரே அவரது படத்தில் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லையே ,அப்போ எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தது எப்படி?

வடிவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனிப்பட்ட விரோதமாக கருதி அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கியது கேப்டனின் ஆட்கள் தானே, அதனால் தானே அரசியல் அடைக்கலம் தேடி போய், இப்போது பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அதே கேப்டன் இப்பொழுது கருத்து சுதந்திரம் ,அரசியல் பழிவாங்கல் என சொல்லி லோகநாயகருக்கு ஆதரவாக பேசுவது எந்த வகையில் சேர்த்தி?

#நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இடைஞ்சல்கள் வந்தப்போது லோகநாயகர் குரல் எழுப்பினாரா? இல்லையே ஆனால் அதனை கிண்டல் செய்து உன்னைப்போல் ஒருவனில் ஒரு காட்சி மட்டும் வைத்துக்கொண்டார்?

ஒரு நடிகர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகுவது அப்பொழுது காமெடியாக பட்டது ஆனால் இப்பொழுது அதே வேலையைத்தானே லோகநாயகர் செய்கிறார் :-))

காவலன் படம் வெளியிட பல சிக்கல்கள் உருவான போதும் முனை ஒடிந்த மன்மதன் அம்பாக கழக அரசியல் சக்தியிடம்  அல்லவா முடங்கி கிடந்தார் :-))

அவ்வளவு ஏன் வெகு சமீபத்தில் டொக்டர் விஜயின் துப்பாக்கிக்கு மார்க்கப்பந்துக்கள் பிரச்சினை கொடுத்தார்கள் ,அப்போதாவது வாயை தொறந்தாரா என்றால் இல்லை, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை, தலைவர் படத்துக்கு எதிர்ப்புன்னா தான் மதவாதம் கண்ணுக்கே தெரியும் :-))

அப்பொழுதெல்லாம் அரசியல் பழிவாங்கல் ,படைப்பாளியின் சுதந்திரம் பாதிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாமல் போன மாயம் என்னவோ?

# நான் கடவுள் படத்திற்கு முதலில் அஜித்தினை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆறுமாதமாகியும் படத்தயாரிப்பு துவங்கவேயில்லை, பின்னர் இந்த பாத்திரத்துக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு சொல்லிவிட்டு கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கினார்கள், இதெல்லாம் அனைவருக்குமே நன்கு தெரியும், ஆனால் இதே போல பிரமிட் சாய்மீரா "மர்மயோகி" என்ற படம் தயாரிக்க லோகநாயகரிடம் 14 கோடி அட்வான்ஸ் கொடுத்தது ,படம் எடுக்க இயலவில்லை என்றப்போது அட்வான்ஸ் கொடுத்தால் படம் எடுக்கணும் ,இல்லைனா திரும்ப கொடுக்க முடியாது என சட்டம் பேசினார்.

அப்படி எனில் அஜித்திடம் கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கியதை பற்றி ஏன் லோகநாயகர் கவலையே படவில்லை ஏதேனும் குரல் கொடுத்தாரா அப்போது இல்லையே? ஏன் எனில் நான் கடவுள் படத்தினை ஆரம்பத்தில் தயாரித்தது தேனப்பன், லோகநாயகரின் முன்னால் நிர்வாகி,நண்பர் எனவே மிரட்டியதை அறிந்தும் கண்டுக்காமல் இருந்தார்,அதுவே தனக்கு என்றால் சட்டப்படி பேசுவார் :-))

தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சூசு :-))

அப்படியிருப்பினும் இச்சூழலில் அஜித் ,லோகநாயகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அதே போலவே லோகநாயகரின் சந்தர்ப்பவாதங்களை புறந்தள்ளிவிட்டு அவருக்கு ஆதரவாக தான் நடுநிலையான தமிழக மக்களும் பேசிவருகிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் சற்றும் கணக்கில் கொள்ளாமல் தமிழகமே மதவெறிக்கொண்டுள்ளது, வசிக்க தகுதியற்று போய்விட்டது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் லோகநாயகர் பேட்டிக்கொடுத்துள்ளது, அவரது சுயநலத்தினையே காட்டுகிறது.

ஹி...ஹி எவ்வளவு தான் எங்களை கேவலப்படுத்தினாலும் நாங்க எல்லாம் உயிருக்கு உயிரான ரசிகர்கள் , எப்படியும் படம் பார்த்தே தீருவோம் எனவே தமிழ்நாட்டில் படம் ஓடவில்லை என்றாலும் பக்கத்து மாநிலத்துக்கு போயாவது பார்ப்போம் ஏன்னா நாங்க தமிழர்கள் ,தீவிர சினிமா அடிமைகள் :-))

ஹி...ஹி இம்புட்டு பேசினாலும் நானும் படம் பார்ப்பேனில்ல,ஏன்னா நானும் தமிழனாச்சே :-))

கொசுறு:

புதுவையில் படம் பார்க்கலாம்னு திட்டம் போட்டு சென்றேன்,அங்கு ரத்னா தியேட்டரில் பெரிய பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க, ஆனால் படம் தான் ஓடவில்லை அவ்வ் :-((

ரத்னா தியேட்டர்:


பேனர்.


அறிவிப்பு:


இப்படி ஒரு அறிவிப்பை வைத்துவிட்டு போஸ்டரே ஒட்டாமல் சமர் படத்தை வெற்றிகரமாக 20 ஆவது நாளாக ஓட்டிக்கிட்டு இருக்காங்க,அவ்வ்.

சமர் படத்தை பார்க்கலாம்னு நினைச்சா சப்பை திரிஷா கண்ணு முன்னால வரவே ,ரிஸ்க் எடுக்க மனமில்லாமல் நீராகாரம் சாப்பிட அருகில் இருந்த "நீராகார அங்காடி"யில் அடைக்கலமானேன் ,

(ஹி...ஹி டுபோர்க்ரூபம்!)

எறும்பு கடிச்சாப்போலவே இருக்கவே அடுத்த ஆட்டம் இது!

-----------------

பின் குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

இந்து ,தினமலர், விக்கி,கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------

Tuesday, January 29, 2013

கருத்து சுதந்திரமும் ,அறமும்.


(ஹி...ஹி இவ்வளோ கருத்து சுதந்திரம் கொடுக்கணும்னு சொல்றாங்களோ?)

ஒரு திரைப்படம் என்பது கலையாக்கமாகவோ அல்லது வணிக படைப்பாகவோ இருக்கலாம், ஆனால் அது பொது மக்களின் பார்வைக்கு உரியதா , பொது ஊடக வெளியில் அனைவரும் பார்க்கும் தகுதி ஒரு படைப்புக்கு இருக்கிறதா என தகுதி நிர்ணயம் செய்ய என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு ஒன்று உள்ளது ,அதன் பெயர் தான் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.

ஒரு திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு தகுதியானது என சான்றளிக்கப்பட்ட பின்னர் ,அதனை தடை செய்யவோ அல்லது மற்றவர்களின் கருத்துக்கேட்போ அவசியமில்லை. இது தொடருமானால் வருங்காலத்தில் எல்லாப்படத்துக்கும் ஏதேனும் ஒரு லெட்டர் பேடு இயக்கம் ,எதிர்ப்பு காட்டிக்கொண்டேயிருக்கும், அனைவருக்கும் படத்தினை போட்டுக்காட்டி அனுமதி வாங்கிக்கொண்டிருக்க முடியுமா?

அப்படியே ஆட்சேபம் இருப்பின் நீதி மன்றம் மூலமாக மட்டுமே முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் லெட்டர் பேடு வைத்திருப்பவர்கள் எல்லாம் நாங்க ஒரு இயக்கம் ,எங்கள் பின்னால் ஒரு கூட்டம் இருக்கு ,எனவே எங்களுக்கு திரையிட்டு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கிளம்புவது , மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் இறையாண்மையை கேள்விக்குள்ளாகுவதாகும்.

லோகநாயகரின் விஷ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய இயங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து , படம் வெளியிட தடை கோரியதும்,அவர்களுக்கு படத்தினை திரையிட்டு காட்டியது தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது , இப்பொழுது பல லெட்டர் பேடு இயக்கங்கள் ,இதே பாணியில் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இந்நிலையில் இயக்குனர் அமீர் இத்தனை நாளாக ஏதோ அம்னீசியாவில் இருந்தது போல திடீர் என துயில் களைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அமீர் வெறும் இயக்குனராக இருந்திருந்தால் அவர் எப்போ அறிக்கை விட்டால் என்ன என சொல்லலாம், ஆனால் அவர் தான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர், மேலும் ஃபெப்சி அமைப்பின் தலைவர், இவ்விரண்டு பொறுப்புகளும் தமிழ் திரைப்படத்துறையின் மிக முக்கியமான பதவிகளாகும்.

இப்படியாப்பட்ட பொறுப்புகளை வகிக்கும் இயக்குனர் அமீர், 25 ஆம் தேதி தடை என கேள்விப்பட்டதும் தான் இப்பிரச்சினை குறித்தே அறிந்தது போல , இப்படம் குறித்து மொன்னையாக ஒரு அறிக்கை விட்டுள்ளார் அதில் , சட்டம் ஒழுங்கு கெடலாம் என தமிழக அரசு தடை விதித்துள்ளது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை தாக்குகிறதா என தீர்மானிக்க வழக்கு நிலுவையில் உள்ளது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை எனவே பார்க்காமல் கருத்து சொன்னால் வேறுவிதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்று சொல்லியிருக்கிறார்.

என்ன கொடுமை சார் இது ? அவரே முழுமையாக தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றளிக்கப்பட்ட படம் எனவும் சொல்லியுள்ளார்,அப்போ சென்சார் போர்டு சான்று எல்லாம் படத்தின் தகுதியை நிர்ணயிக்க போதுமானது என இயக்குநர் சங்க செயலாளராக இருப்பவருக்கு தெரியாதா? ஒரு இயக்குநராக தனிப்பட்ட முறையில்  எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லியிருக்கலாம்,ஆனால் ஒரு திரைப்பட அமைப்பின் பொறுப்பில் உள்ளவராக , அதன் அங்கத்தினராக உள்ள லோகநாயகரின் திரைப்படத்திற்கு  சென்சார் சான்றுக்கு பின்னும் ஏற்படுத்தப்பட்ட தடைகள்  செயற்கையானது என தெரிய வேண்டாமா?

சட்டப்படி ஒரு படைப்பு பொது மக்கள் பார்வைக்கு தகுதியானது என தீர்மானிக்கப்பட்டாயிற்று எனவே அதனை மட்டுமே கொண்டு ஆதரிக்க இயக்குனர் சங்க செயலாளருக்கு தார்மீக உரிமை உள்ளது, எனவே அவர் இத்தடையை கண்டித்து தான் அறிக்கை விட்டிருக்க வேண்டும், மேலும் லோகநாயகருக்கு இயக்குனர் சங்கம் அனைத்து வகையிலும் தார்மீக ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் அமீரோ பட்டதும் படாதுமாக , விளக்கெண்ணையில் ஊறிய வெண்டைக்காய் போல வழ வழ கொழ கொழ என அறிக்கை வெளியிட்டு தனது இருத்தலை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளார்.

இஸ்லாமிய இயக்கங்களை அடியொற்றி இப்பொழுது ஒரு லெட்டர் பேடு இந்துத்வா இயக்கமும் இயக்குனர் அமீரின் ஆதிபகவன் திரைப்படத்துக்கு எதிராக கிளம்பியுள்ளது , இப்பொழுது அமீர் இதனை தனியாக ,தனது சொந்தப்பிரச்சினையாக எதிர்க்கொள்வார இல்லை  திரையுலகின் ஆதரவை நாடுவாரா?

இஸ்லாமிய இயக்கங்களின் புகாரின் பேரில் விஷ்வரூபத்திற்கு தடை என ஒரு முன்னுதாரணம் உருவாகிவிட்டதால் , அதனடிப்படையில் அரசு அமீரின் படத்திற்கும் தடை விதித்தால் அமீர் நீதிமன்றத்தினை நாடி , தன்ப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வார அல்லது அறச்சீற்றம் காட்டுவாரா?

தடை என்னும் சூழல் வந்தால் இது மதச்சார்பற்ற நாடா, கருத்து சுதந்திரம் இல்லையா? சென்சார் போர்டு சான்று எதற்கு என கிடைக்கும் மேடையில் எல்லாம் மைக் புடிச்சு சாமியாடிற மாட்டாரு :-))

இஸ்லாமிய அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை,இந்துத்வா அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை என கணக்கை நேர் செய்யும் நோக்கில் அரசு செயல்படாலாம் ஆனால் இதன் பின்னால் ஒரு நுண்ணரசியலும் உள்ளது ,அது என்னவெனில் அப்படத்தினை தயாரித்து இருப்பது ஒரு கழக பிரபலம், எனவே ஆதிபகவான் திரைப்படம் வெளியாவதில் கண்டிப்பாக பிரச்சினை வெடிக்கும், அப்பொழுது திரையுலகினர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், இயக்குனர் அமீர் எப்படி பொங்குகிறார் எனப்பார்ப்போம் :-))

கொசுறு:


படத்தின் விளம்பரத்தில் இது " ஒரு மாஃபியுசோ ஆக்‌ஷன்காதல் கதை" என "tag line" போட்டுள்ளார், ஆகா இப்பவெல்லாம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உலகத்தரத்தில் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களே என புல்லரிக்குது.

ஹி...ஹி நாம ஏற்கனவே மாஃபியுசோ வரலாற்றை எல்லாம் ஆய்வு செய்து பதிவிட்டிருக்கிறோம், இன்னும் சில பாகங்கள் எழுதும் அளவுக்கு சரக்கு இருக்கிறது விரைவில் தொடர்வோம். எனவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் கூடுகிறது,ஆனால் எனக்கென்னமோ ஆதிபகவன் நவீன தேவர் மகனாக "காட்ஃபாதர்" கட்டமைப்பில் இருக்குமோனு உள்ளுக்குள் ஒரு பக்‌ஷி கூவுது!

மாஃபியுசோ டான்கள் பற்றிய பதிவுகள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- A guide to understand gangster films.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- 2:A guide to understand gangster films

-----------------------
பின் குறிப்பு:

படம் மற்றும் தகவல் உதவி, கூகிள் மற்றும் தினமலர் ,இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

Thursday, January 24, 2013

உரமானிய ஊழல்.


(த்தோடா வவ்வாலு சொன்னது கூட நடந்துடுச்சு!!!)

கடந்த 31-12-2012 அன்று வெளியிட்ட "FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்" எனும் இடுகையில் இந்தியாவில் வழங்கப்படும் உர மானியத்தின் பயன் விவசாயிகளுக்கு பலனளிப்பதில்லை,மாறாக உர நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் அளிக்கவே என்பதை ,சர்வதேச விலை ,இந்திய சில்லரை விலை மற்றும் லாப விகிதங்களை ஆதாரத்துடன் விளக்கியிருந்தேன்,

சுட்டி:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்.

குறிப்பிட்ட பகுதியை மீண்டும் இங்கு தந்துள்ளேன் ,முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்.

கீழே காண்க.

//பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட்டின்  சர்வதேச விலை விவரங்கள் மற்றும் மானியம் ,சந்தை விலை நிலவரங்களை காண்போம்,


பொட்டாஷ் உரம்:

ஒரு டன் பொட்டாஷ் - 425 டாலர்/டன்.

இந்திய ரூபாயில் -425*50=21,250 ரூ மட்டுமே,

இந்திய விற்பனை விலையை விட சர்வதேச சந்தையில் விலை குறைவாகவே உள்ளது ,ஆனால் அதற்கு டன்னுக்கு மானியம் 14,777 ரூபாய்!

21,250 ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தினை இறக்குமதி செய்து ரூ 24,000 என விலை வைத்து விற்க அம்மானியத்தொகையை அரசு அளிக்கிறது.

இதன்  மூல உர நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய்=

14,777+24,000-21,250=17,527 ரூ.

சதவீத அடிப்படையில் வருவாய்=17,527/21,250*100=82.48%

போக்குவரத்து செலவு, கையாளும் செலவுகள் இருக்கும் தான் ஆனால் இப்படி 82.48 சதவீதம் அளவுக்கா இருக்கும்.


பாஸ்பேட் உரம்:

பாஸ்பேட்-524.08 டாலர்/டன்.

இந்திய ரூபாயில்,

524.08*50=27,252.16 ரூபாய்கள்.

இந்திய விற்பனை விலை ரூ =24,000

மாநியம்=18,474ரூ

நிகர வருவாய்=24,000+18,474-27,252.16=15,221.84 ரூ.

சதவீத அடிப்படையில்,=15,221.84/27,252*100=55.85%

இந்தியா 100 சதவீதம் பொட்டாஷ் உரங்களையும், 90 சதவீதம் பாஸ்பேட் உரங்களையும் இறக்குமதி செய்கிறது.

இவ்விரண்டு உரங்களையும் பெருமளவில் இறக்குமதி செய்து அதிக மானியம் கொடுக்கப்பட்டும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவில்லை என்பதை மேற்கண்ட கணக்குகள் மூலம் எளிதாக புரிந்துக்கொண்டிருக்கலாம்.

அரசு அளிக்கும் மாநியம் அனைத்தும் உர நிறுவனங்களின் லாப விகிதத்தினை அதிகரிக்கவே பயன்ப்படுகிறது.//

தற்போது உரமானியத்தில் ஊழல் என புகார் வெளிப்படையாக கிளம்பியுள்ளது ,அது குறித்து அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது என்னவெனில்,

//இந்தச் சூழ்நிலையில், ஜூன்  2012-ல் உர உற்பத்தி நிறுவனங்கள்  DAP உரத்தினை சில்லரை விலையில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு  25,000 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்தன என்றும், அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 14,300 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது என்றும்; ஆனால், அதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட டி.ஏ.பி. உரத்தின்  விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு  31,900 ரூபாய் தான் என்றும்;  போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஒரு டன்னிற்கு  5,000 ரூபாய் வரை உரக் கம்பெனிகள் எதிர்பாராத வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்றும்;  MOP  உரத்தைப் பொறுத்தவரையில், 2011-2012 ஆம் ஆண்டில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு  16,054 ரூபாயை அரசிடமிருந்து மானியமாக பெற்றுக் கொண்டு உபரியாக 5,500 ரூபாயை உரக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டுவிட்டன என்றும்; மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா  மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரியின் கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்,  3.8.2012 அன்று, உரத் தயாரிப்பு நிறுவனங்கள்,  DAP  உரத்தில் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், காம்ப்ளெக்ஸ் உரத்தில் டன்  ஒன்றுக்கு சுமார் 6,000 ரூபாயையும் கபளீகரம் செய்துவிட்டன என்று  தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்; உர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பாட்டுச் சான்றிதழை சமர்ப்பித்து,  உரம் தயாரிப்பதற்கான விலையின் விவரங்களை மத்திய உரத் துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர்ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர்  மு.க. அழகிரிக்கு குறிப்பு வைத்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.//

//ஆனால், வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்திய நாட்டில், ஊழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வண்ணம் உரக் கொள்கை  வகுக்கப்பட்டு, இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் சுரண்டப்பட்டு வருகின்றனர்.//

தகவல் உதவி: இன்னேரம் இணைய தளம்,நன்றி!

http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-cm-jayalalitha-asked-pm-to-sack-alakiri-from-cabinet-8416.html

மேற்கண்ட செய்தியின் மூலம் எனது பதிவில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாக முன்னரே சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தும் வண்ணம் ,அதே விவரங்களுடன் உரமானிய ஊழல் குறித்து புகார் எழுந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இதே போல சமையல் எண்னை இறக்குமதிக்கு அளிக்கப்படும் மானியம் விரயமாகிறது என்பதையும் அப்பதிவில் விளக்கியிருக்கிறேன், அதிலும் ஊழல் என எப்பொழுது வெடிக்குமோ தெரியவில்லை :-))

நாம் தொடர்ந்து,விவசாயம் ,மாற்று எரிப்பொருள் ,சுற்று சூழல்,அறிவியல் என அலசி ஆய்வு செய்து எழுதினாலும் ,மக்கள் இதெல்லாம் இணையத்தில் இருப்பது தானே என்ன புதுசா எழுதிட்டான் என நினைத்துக்கொள்வது வழக்கம், இணையத்தில் இருந்தாலும் சரியான தகவலை தேடி எடுத்து, அதனைப்புரிந்துக்கொண்டு எழுதுவது எவ்வளவு கடினம் என சினிமா, அரசியல் என மொக்கை போடுபவர்களுக்கு எளிதில் புரியாது.

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்,காலம் பதில் சொல்லும் என நம்ம கடமையை செய்வோம்!!!

ஹி...ஹி நாமளும் பஞ்ச் டயாலாக்கு பேசுவதற்கு ஒரு காலம் வரும்னு காட்டத்தான் இந்த பதிவு :-))

வரலாறு முக்கியம் மக்களே!!
------------------------------------------

Wednesday, January 23, 2013

என்ன கொடுமை சார் இது-10

(ஹி...ஹி...WISHINGரூபம் இது)

#சட்டி சுட்டதடா!

டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் விஷ்வரூபம் வெளியாகும் என லோகநாயகர் சொன்னப்போது பல விசிலடிச்சான் குஞ்சுகளும் யதார்த்தம் புரியாமல் மானாவாரியாக பினாத்தி வந்த போது ,உண்மையான நிலையை ஆதாரப்பூர்வ அலசி வெளியிட்டது , புள்ளி விவர ஆய்வுகளுக்கு புகழ்ப்பெற்ற ஒரு கில்லாடிப்பதிவர் மட்டுமே(ஹி...ஹி), ஆனால் உண்மையான நிலவரம் புரியாமல் பலர் ,லோகநாயகருக்கும் , அந்த கில்லாடிப்பதிவருக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு போல புனைவுகளை சொல்லி திரிந்தது செம காமெடி.

டிடிஎச் இல் வெளியீடு பின்வாங்கப்பட்டு திரையரங்கத்தில் வெளியிடுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தப்போதும் "மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல என்ப்படம் நான் தான் தேதி சொல்வேன் என தத்துப்பித்துவென பேசினார் லோக நாயகர்,ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் சொன்ன தேதி தான் இப்போ படம் வெளியாகும் தேதி என்பது சொல்ல மறந்த கதை. :-))

500  தியேட்டர்கள் தமிழ் நாட்டில் தர முன்வந்துள்ளார்கள் ,அதனால் தான் டிடிஎச் இல் முதலில் வெளியிடவில்லை என தானாகவே வேற சொல்லிக்கிறார், கார்த்தி படமே சுமார் 700 தியேட்டர்களில் தமிழ் நாட்டில் வெளியாகும் காலமிது.

படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து டிடிஎச் இல் வெளியாகும் என்ற நிலை வந்த பின்னும், என் வழி பின்னால் பொது வழியாகும்னு புதுமை படைச்சாப்போல இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பது அதை விட பெரிய காமெடி.

படம் வெளியான பின்னர் டிடிஎச் இல் நான்காவது நாளிலேயே இந்திப்படங்கள் வருகிறது( இதனையும் முன்னரே சொல்லியாச்சு), அப்படி இருக்கும் போது ஏற்கனவே இருக்கும் வழியில் போய்விட்டு தானே புது வழியினை முதன் முதலில்  உருவாக்கியது போல ஒரு மாயத்தோற்றம் உருவாக்கி சிற்றின்பம் அடைவதேன் :-))


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்து, யூ டீவி தயாரித்த "கிராண்ட் மாஸ்டர் " என்ற மலையாளப்ப்படம் மே -3,2012 அன்று திரையரங்கில் வெளியான அன்றே அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸிலும் 'ராச நடைப்போட்டு' வெளியானது.

அப்போதெல்லாம் மலையாள திரையுலகில் பெரிதாக கரைச்சல் இல்லை ஏன் எனில் , படத்தின் பட்ஜெட் மற்றும் தியேட்டரில் அதிகம் வெளியாகாத இடங்களில் மட்டும் மாற்று முறையான நெட்ஃப்ளிக்ஸ், டிடிஎச் என வெளியானால் யாருக்கும் இழப்பு இருக்காது என்பதால் ஆகும்.

பெருவாரியாக திரையரங்கில் வெளியாகும் இடத்திலும் ஒரு நாள் முன்னதாக டிடிஎச் இல் வெளியிடுவது கண்டிப்பாக திரையரங்க வசூலை பாதிக்கும் என்பதால் தான் தமிழகத்தில் எதிர்ப்பு, ஆரம்பத்தில் டிடிஎச் இல் பணம் கூறையைப்பிய்த்துக்கொண்டு கொட்டும் என மனக்கணக்குப்போட்டு செயல்ப்பட்டதன் ,பலன்  பொங்கல் அன்று வெளியிட முடியாமல் போனதே, பொங்கலை ஒட்டி சுலையாக ஐந்து விடுமுறை நாட்கள் கிடைத்தது ,படம் வெளியாகி இருக்குமானால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கும், அதனை இழந்தது தான் மிச்சம். படு மொக்கையான அலெக்ஸ் பாண்டியன் கூட பொங்கல் விடுமுறையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கல்லாக்கட்டியது. எனவே படம் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் சேதாரம் இல்லை.

மேலும் டிடிஎச் புக்கிங்கில் பெரிய அளவு வருமானம் வரவில்லை, ரசிகர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், லோகநாயகருக்கு பெரிய ரசிகர்கள் பின்ப்புலம் இருக்கு என்ற மாயையும் உடைந்துப்போனது தான் மிச்சம்!

இதில் அல்வா வாங்கியது , லோகநாயகர் சொன்னதை நம்பி 1000 ரூவா பணங்கட்டிய சில,பல ஆர்வக்கோளாறு அப்பாவிகள் தான், படம் தியேட்டரில் வெளியான பின் டிடிஎச்சில் பார்க்க ஆயிரம் என்பது டைரக்ட் டு ஹோம் கொள்லை :-))

பெரிய பட்ஜெட்டில் லோகநாயகர் நடித்தால் விலைப்போகாத நிலை உள்ளது என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது, எனவே இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளரும் லோகநாயகரை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.

எந்த ஒரு நடிகருக்கும் படம் எளிதாக கேட்ட விலைக்கு போகும் நிலையை வைத்தே "மார்க்கெட்" உள்ளது என்பார்கள், எப்பொழுது ஒரு நடிகரின் படத்தினை சொன்ன விலைக்கு வாங்க ஆள் இல்லையோ அவர்களுக்கு மார்க்கெட் போய்விட்டது என்பார்கள் சுருக்கமாக "ஃபீல்ட் அவுட்" என்பார்கள்.

கிட்டத்தட்ட "ஃபீல்ட் அவுட்" நிலைக்கு லோகநாயகரே தன்னைக்கொண்டு போய் நிறுத்திக்கொண்டார் எனலாம், இனி தயாரிக்கவும், வாங்கவும் திரையுலகில் அனைவரும் தயங்குவார்கள், சொந்தமாக தயாரித்து, வெளியிட்டுக்கொண்டால் மட்டுமே களத்தில் நிற்க முடியும் என்ற நிலைக்கு தானே உள்ளாக்கி கொண்டு விட்டார்.

இத்தனை நாளும் லோகநாயகரின் படங்கள் எம்ஜியில் விலையானது , டிடிஎச் இல் பெரிதாக பணம்  வரும் என்ற நப்பாசையில் சதவீதத்தில் வெளியிடுகிறேன் என ஒப்புதல் வாக்கு மூலம் வேறு கொடுத்துவிட்டார், எனவே டிடிஎச் இல் வெளியாகாத நிலையிலும் இப்பொழுதும் சதவீதத்தில் தான் வெளியாகிறது, எனவே இனி வருங்காலத்தில் லோகநாயகர் படம் வெளியானாலும் சதவீதத்தில் வெளியிட சொல்வார்கள், இவ்வாறு வெளியிடுவது தயாரிப்பு தரப்புக்கு பெரிய " ரிஸ்க்" எனவே இனிமேல் வெளித்தயாரிப்பாளர்கள் யாரும் முன் வந்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.

எனவே விஷ்வரூபம் என்ற ஒரே படத்தின் மூலம் லோகநாயகரின் தமிழ் சினிமா பயணம் ஒரு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது  எனலாம், படம் வெளியாகி வெற்றிகரமாக தயாரிப்பு செலவினை மீட்டெடுத்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி மூச்சு விடமுடியும்.

ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல இஸ்லாமிய அமைப்புகள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டன  இந்த இடத்திலும் லோகநாயகரின் தப்புக்கணக்கே காரணம்.

படம் தயாரிக்கப்பட்டு ரொம்ப நாட்களாகிறது , ஜனவரி 11 இல் வெளியாகும் என்ற நிலை இருந்தப்போது கூட படத்தினை போட்டுக்காட்ட எண்ணவில்லை,இத்தனை நாளாக போட்டுக்காட்டாதவர் திடீர் என ஏன் போட்டுக்காட்ட வேண்டும்? இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என நினைத்து போட்டுக்காட்டினார், ஆனால் அவர் எதிர்ப்பார்த்ததைவிட எதிர்ப்பு அதிகமாகி , வளைகுடா நாடுகளில் தடை என பிரச்சினை விஷ்வரூபம் எடுத்துள்ளதால் இப்பொழுது பின்னால் பற்றிக்கொண்டது :-))

மேலும் சமீபத்திய செய்தியாக , தமிழக அரசும் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஜெயா டீவிக்கு சேட்டலைட் உரிமம் கொடுத்துவிட்டதால் எதிர்ப்புகள் வராது என பலரும் சொன்ன நிலையில் , இச்செய்தி ஒரு திருப்பு முனை எனலாம், அனேகமாக டிடிஎச் ஒளிப்பரப்பில் சன் டிடிஎச் ஐயும் சேர்த்துக்கொண்டதன் பின் விளைவாக இருக்கலாம் என நினைக்கிறேன்.


தணிக்கை அறிக்கை:



http://cbfcindia.gov.in/html/uniquepage.aspx?lang=TAMIL&va=vishwaroopam&Type=search

படத்தில் ass, bitch, bastard, matherchood , போன்ற வசைச்சொற்கள் ஒலிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, வெடித்து சிதறுவது, கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் உட்பட 10 வெட்டுக்களுடன் U/A  கொடுத்துள்ளார்கள்.

அரசியலமைப்புள்ள ஒரு நாட்டில், சட்டப்பூர்வமாக இயங்கும் தணிக்கை அமைப்பால்  பொது மக்கள் பார்க்கலாம் என சான்றளிக்கப்பட்ட பின் , அதில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையது அல்ல ,வெளியிட கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது யதேச்சதிகாரம் ஆகும்.

இப்படி படத்தினை போட்டுக்காட்டாமல்,துப்பாக்கி பட பாணியில்  வெளியிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு காட்டினால் ,கொஞ்சம் கட் செய்து விட்டோம்னு சொல்லி ஒரு அறிவிப்பு விட்டு இருக்கலாம் , கூடுதலாக அடுத்த படத்தில் ஒரு இஸ்லாமியராக நடிப்பேன், ஒரு இஸ்லாமிய பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைப்பேன்னு சொல்லி சமாதானக்கொடியை ஆட்டியிருந்தால் துப்பாக்கி போல ஹிட் ஆகிடும்:-))



துப்பாக்கி படம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காரைக்காலில் ஷமினா என்ற தியேட்டரில் 25 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது, தியேட்டரும் இஸ்லாம்மியருக்கு சொந்தமானது ஆகும்.

எப்படி எனில் படத்தில அப்படி என்ன நம்மளைப்பத்தி தப்பா சொல்லி இருக்காங்கன்னு பார்க்க ஒரு தடவை படம் பார்ப்பாங்க, அப்புறம் சொன்னாப்போல காட்சிகள் நீக்கி இருக்கானு உறுதி செஞ்சுக்க இன்னொரு தடவை படம் பார்ப்பாங்க ,எனவே படம் கண்டிப்பா ஹிட் ஆகிடும் :-))

லோகநாயகர் இனியும் நிம்மதியா நல்ல முறையில் படம் எடுக்கணும் என்றால் அவரை சுற்றி இருந்துக்கொண்டு  தப்பா ஆலோசனை வழங்கும் விசிலடிச்சான் குஞ்சுங்க கூட்டத்தினை விரட்டிவிட்டாலே  போதும் அவரு பொழச்சுப்பார்.

ஹி...ஹி அப்படியே ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை வேண்டுமெனில் என்னைப்போன்றவர்களை அனுகலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
***********

# திருட்டு கரும்பு இனிக்கும்!

இந்த கொடுமையும் லோகநாயகரை முன் வைத்தே, டிடிஎச் இல் வெளியிடுவது திருட்டு டிவிடியை ஒழிக்கும் என ஆருடம் சொன்னார், ஆனால் மக்கள் திருட்டு டிவிடி தியேட்டரை விட விலை மலிவாக இருப்பதால் தான் பார்க்கிறார்கள் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டார்.

டிடிஎச் இல் பார்க்கும் கட்டணம், நியாயமானதாகவும், படம் நன்றாக இருந்தால் மட்டுமே டிடிஎச் இல் பார்ப்பார்கள், ஒரு படம் டிடிஎச் இல் வருகிறது என்பதற்காகவே அனைவரும் பார்க்க மாட்டார்கள்.

திருட்டு டிவிடியை ஒழிப்பது என்பது தயாரிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. சிங்கப்பூர் ,மலேஷியா, அமெரிக்காவிற்கு விற்கப்படும் திரைப்படங்களில் இருந்து தான் திருட்டு டிவிடி தயாராகிறது, அதனை திருட்டு டிவிடி என சொல்வதே தவறு , அய்ங்கரன், லோட்டஸ் ஆகிய நிறுவனங்கள் 5.1 இல் தரமான டிடிவிடிக்களை விற்கிறார்கள், அதுவும் பெயர், ,முகவரி தொலைப்பேசி எண் , இமெயில் எல்லாம் விலாவாரியாகப்போட்டு :-))



டிவிடியில் முகவரி...


அமெரிக்கா, சிங்கப்பூர் ,மலேஷியாவில் டிவிடி விற்கும் உரிமையா கொடுத்தார்கள், விநியோக உரிமைத்தானே கொடுத்தோம் என இந்த தயாரிப்பாளர்கள் ஏன் கேட்பதில்லை?

அப்படிக்கேட்டால் வெளிநாட்டு விநியோக உரிமையை ஒருத்தரும் வாங்க மாட்டாங்க ,எனவே வந்த வரை லாபம் என  கேள்வியே கேட்காமல் வெளிநாட்டுக்கு விற்கிறார்கள் ,அவர்களும் டிவிடி தயாரிச்சு உலகமெங்கும் விற்கிறார்கள், தமிழ்நாட்டில் ஒரு வாரத்திலேயே தரமாக 5.1 இல் டிவிடி கிடைப்பது இப்படித்தான்,இதில் படம் வந்ததும் ஹீரோவும், தயாரிப்பாளரும் திருட்டு டிவிடிஐ ஒழிக்க வேண்டும் என கமிஷ்னர் அலுவலம் போய் பேட்டிக்கொடுப்பதை பார்த்தால் உலகமகா நடிப்புடா சாமினு சொல்ல தோன்றும் :-))

இந்த கொடுமையில இன்னொரு கொடுமையும் சேர்த்தே சொல்லுறேன், டிடிஎச் இல் வெளியாகிறது என செய்தி வந்ததுமே  ,ஒரு கத்துக்குட்டி,300 கோடிக்கு புக்கிங் ஆகி சரித்திர சாதனைனு முகநூல் ,வலைப்பதிவு  போஸ்டர் ஒட்டியது , அப்படி புரளியக்கிளப்பிவிட்டவர் இதே போல பல புரளிகளை கிளப்பிவதில் வல்லவர், ஒரு காலத்தில் நடிகை சினேகவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் செய்யப்போவதாக ஒரு புரளியைக்கிளப்பியவர்.

மேற்படி நபர் ,மச்சக்காரன் படத்திற்கு சிங்கப்பூர் ,மலேஷிய விநியோகம் வாங்கிவிட்டு திருட்டு டிவிடி தயாரிக்க முயன்றப்போது கையும் களவுமாக மாட்டி உதைக்கூட பட்டார்னு செய்தியுண்டு, திரையுலகில் இருப்பவர்களுக்கு எப்படி திருட்டு டிவிடி உருவாகிறது ,யார் செய்கிறார்கள் என தெரியும், ஆனாலும் எந்த முயற்சியும் செய்யாமல் ,புதுசு புதுசா ஒரு காரணம் சொல்வதே வாடிக்கையாகப்போய்விட்டது.

செய்தி:

Nag Ravi Corporate Chief or Thief
Posted by Editor on November 9th, 2007
Nag Ravi Corporate Chief or Thief

Insight Media has offices in Singapore, Canada, New Zealand, Malaysia, UAE, USA and Mauritius with Head Quarters in Chennai.. Insight’s local and overseas distributions include Sivaji, Kireedam, Veerappu and the forthcoming, Bommalattam, Machchakkaran and Vambusandai. Besides Tamil film audio, the company has also brought out a VCD titled Padmini .

The Legend on the legendary actor and educational CDs at rock bottom prices to contain piracy. The ostentatious Nag Ravi, also known as Sneha’s former lover was caught in the act of taking a camera print of Machakaran at Devi Sridevi preview theatre. Ravi was beaten up by the producer Nanthagopal but he managed to escape and is now absconding, while the manager of the preview theatre Eknath and the operator was also beaten up. Ravi and his Insight Media were the overseas distributors of Machakaran. They had taken seven prints of the film from the Lab, but only dispatched six of them on Tuesday evening mainly to Malaysia and Singapore.

http://www.kollywoodtoday.net/news/nag-ravi-corporate-chief-or-thief/

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!

என்ன கொடுமை சார் இது!

*******************

# அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

அஞ்சா நெஞ்ச அண்ணனும், காமாண்டர் தம்பியும் அக்னி நட்சத்திரமாய் அவ்வப்போது உரசிக்கொள்வது வழக்கம், அடுத்த தலிவரு தம்பித்தான்னு சொன்னதும் சங்கரமடமா இதுனு அண்ணன் சாமியாடினார்.

அதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னர் , எனது எதிரிகளை இயற்கை பார்த்துக்கொள்ளும்னு சாபம் எல்லாம் விட்டது நினைவிருக்கும். இதனை வைத்து சில அரசியல் வதந்திகளும் அப்போது உலவியது, ஆனால் அதில் உண்மை இருக்குனு  நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒரு தகவலும் உலாவுது(எந்த அளவுக்கு நம்பகம்னு தெரியாது கேள்விப்பட்டதை சொல்கிறேன்),  இளையவர் இப்பொதெல்லாம் அடிக்கடி லண்டன் பயணமாவதே மருத்துவ சோதனைக்கு தான் எனவும் ,அவருக்கு ஆரம்ப நிலை இரத்தப்புற்று நோய் எனக்கண்டுப்பிடித்திருப்பதாகவும், அதற்கு ரகசிய சிகிச்சை எடுக்கவே ஏதேனும் ஒரு காரணத்தினை முன்னிட்டு லண்டன் செல்வதாக சொல்கிறார்கள், ஒராண்டுக்கு முன்னர் இருந்தே சிகிச்சை நடக்கிறதாம்.இப்பொழுது அரசல் புரசலாக பலருக்கும் தகவல் கசிந்து , கட்சியின் மேல்மட்டத்திலேயே சூடாகப்பேசப்படும் வதந்தி இது தான்.

இதனை நம்புவதா வேண்டாமா என தெரியவில்லை!

என்ன கொடுமை சார் இது!
-------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

CBFC.gov.in,kollywoodtoday.net, wiki, google,இணைய தளங்கள் நன்றி!
---------------------

Sunday, January 20, 2013

மொக்கைத்தோரணம்-2

(அய்யோடா மொக்கையை ஆரம்பிச்சுட்டானே ...இனிமே எப்ப இத நிறுத்துவானோ?...)

# செல் மொழி.

செல்லெடுத்து செல்வான் சினங்கொள்வான் அவ்விடத்து
சிக்னல் இல்லை எனில்.
------------------
மண் மணத்துடன் சமையல்!

# பிராபல்யப்பதிவர்;என்ன சாம்பாரில் மண்ணு நொர நொரங்குது?

பி.பவின் மனைவி:நீங்க தானே மண் மணத்தோட சமையல் செய்ய சொன்னிங்க,அதான் கொஞ்சம் மண்ணள்ளி சாம்பாரில் போட்டேன்!!!
-----------------
அடியேன் பிழையா?

#பதிவர்-1: எதுக்கு அந்த பிராபல்யப்பதிவரை புத்தக சந்தையில் வச்சு அடிச்சீங்க, அவர் எழுதுவது புடிக்கலைனா படிக்காமல் இருக்கலாமே?

பதிவர்-2: நீங்க வேற, நான் அவர் பதிவுகளின் தீவிர வாசகன், அவர் தான் புத்தகக் காட்சியில் அடியேன்! அப்படினு பதிவு போட்டிருந்தார், ஆசையா அடிக்க சொல்லுறாரே அடிக்கல்லைனா தப்பா நினைச்சுப்பாருன்னு அடிச்சேன், அது தப்பா?

---------------------------

சிறப்புக்கழிவு உண்டு!

# பிராபல்ய பதிவரின் மனைவி: ஏங்க நேத்து புத்தகக் சந்தைக்கு போனத நம்ம வீட்டு பால்காரரிடம் சொன்னிங்களா?

பிராபல்ய பதிவர்:  ஆமாம் அதுக்கென்ன?

பி.ப.மனைவி: சொன்னதோட இருக்கக்கூடாது, புத்தக சந்தையில 10% சிறப்புக்கழிவு கொடுக்கிறாங்க, இவ்வளவு நாளா பால் வாங்குறேன் , நீ ஒன்னும் சிறப்பு கழிவு தறக்கூடாதுன்னு கேட்டிங்களாம், அதான் ஒரு கூடை சாணிய எடுத்து வந்து அய்யா கேட்ட சிறப்பு கழிவுனு கொடுக்கிறான் , தேவையா இது?

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி ..ஹி, அது வந்து ...
----------------------------

கிடைத்தால் கேட்பேன்!

# அப்ரண்டீஸ் பதிவர்; அண்ணே  அவரை எதுக்குன்னே கெட்ட வார்த்தையில் திட்டி அடிக்க போனிங்க?

புத்தக சந்தையில் அப்பளம் விற்பவர்: பின்ன என்ன தம்பி, நானே பொண்டாட்டி நகைய அடக்கு வச்சு ,கடை வாடகைக்கு எடுத்து ,அப்பளம் சுட்டு விக்குறேன், அவரு ஏதோ பிராபல்ய பதிவராம் ,எங்கிட்டே வந்து ஒரு அப்பளம் வாங்கிட்டு , குடிக்க மினரல் வாட்டர் வேணும், நான் கிடைத்தால் கேட்பேன்னு முகநூல் சங்க தலைவர்னு சொல்லுறான், அதான் கடுப்பாயி , மருவாதியா போயிடு இல்லைனா கொதிக்கிற எண்ணைய எடுத்து மூஞ்சில ஊத்திருவேன்னு சொல்லி விரட்டிவிட்டேன் , ஆமாம் உனக்கு என்ன தம்பி வேணும் அப்பளம் மட்டும் போதுமா இல்ல....

அப்ரண்டீஸ் பதிவர்: ஹி...ஹி எனக்கு அப்பளம் மட்டும் போதும், நீங்க தூக்கிப்போட்டாக்கூடா கேட்ச் புடிச்சுப்பேன்( அய்யோடா நல்ல வேளை நானும் ஒரு பதிவர்னு சொல்லிக்கலை ,மூஞ்சு தப்பிச்சுது)
------------------------

எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும்!

#அப்ரண்டீஸ் பதிவர்: அண்ணே வணக்கம்னே, புத்தக சந்தைக்கு வந்தீங்களா?

பிராபல்யப்பதிவர்: ஆங்க் ...உழவர் சந்தைக்கு வந்தேன் கேள்வியப்பாரு?

அப்ரண்டீஸ்: ஹீ...ஹி சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டால் ஏன்னே கோச்சுக்கிறிங்க, அது சரி கையில சுருட்டி என்னமோ வச்சு இருக்கீங்களே ,என்னதுண்ணே,காலண்டரா?

பிராபல்யம்: நான் எதை செய்தாலும் பிளாண் பண்ணி செய்வேன், அதான் புத்தக சந்தைக்கும் பிளாணோட வந்திருக்கேன்.(பிளாணை காட்டுகிறார்)

அப்ரண்டீஸ்: என்னணே ஏதோ வீட்டு புளுப்பிரிண்ட் பிளாண் போல இருக்கு?

பிராபல்யம்: ஹி...ஹி பிளாணோட வந்திருக்கேன்னு தானே சொன்னேன், எந்த பிளாணா இருந்தா என்ன , எப்பவும் கையில ஒரு பிளாண் இருக்கணும் :-))

அப்ரண்டீஸ்:ஙே...
------------------------------

பார்க்கிங் கலாட்டா:

# பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்: சார் டூ விலர் நிறுத்தினா 10 ரூபா பார்க்கிங் கட்டணம்.

பிராபல்யப்பதிவர்: இது என்ன அநியாயக்கொள்ளையா இருக்கு, நான் யார் தெரியும்ல , கிடைத்தால் கேட்பேன் முகநூல் சங்கத்தலைவர், பிராபல்யப்பதிவர் எங்கிட்டேயேவா...

பா.க.வசூலிப்பவர்: நீங்க யாரா வேணா இருக்கட்டும் டூ வீலர் நிறுத்தினா 10 ரூபா கட்டணம் கொடுக்கணும்.

பிரால்யப்பதிவர்:  இன்னொருக்கா நல்லா சொல்லுங்க, 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணுமா?

பா.க.வசூலிப்பவர்: ஆமாய்யா...ஆமாம்.... 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணும்!

பிராபல்யப்பதிவர்: பேச்சு மாறக்கூடாது,வண்டிய நிறுத்தினா தானே காசு கொடுக்கணும், நான் வண்டிய நிறுத்தாமல் படுக்க வச்சிடுறேன் , இப்போ காசுக்கொடுக்க மாட்டேன் , நான் யாரு கிடைத்தால் கேட்பேன் தலைவரு என்கிட்டேவா ...எப்பூடி?

பா.க.வசூலிப்பவர்: நீ போ மோனே தினேஷா ...(மனதுக்குள் ,எஞ்சினை கழட்டி வித்துற வேண்டியது தான்)
------------------------------

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

#பிராபல்யப்பதிவர்; சார் ...சார்.. ஒரு பரதேசி எனக்கு போன் செய்தான் ,அதை அட்டண்ட் செய்றதுக்குள்ள என் பையன் காணாம போயிட்டான், செவப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், சோட்டா பீம்னு முதுகில் எழுதி இருக்கும்,

புத்தக சந்தை உதவி மைய அறிவிப்பாளர்; சார் கொஞ்சம் பொறுமையாக உட்காருங்க, நீலக்கலர் கட்டம் போட்ட சட்டை, கார்கோ பேண்ட் , பாக்கெட் புல்லா வாட்டர் பாட்டில்,சிப்ஸ்னு வச்சிருப்பார்னு சொன்னது எல்லாம் சரியா இருக்கு, இப்போ தான் உங்க மகர் வந்து நீங்க காணாமல் போயிட்டதாகவும் கண்டுப்பிடிச்சு வச்சிருக்க சொல்லிட்டு  புத்தக சந்தைய சுத்திப்பார்க்க போயிருக்கார், அவர் திரும்பி வர்ர வரைக்கும் இப்படி ஓராம உட்கார்ந்து வெயிட் பண்ணுங்க .

பிராபல்யப்பதிவர்: ஙே....
------------------------

புத்தக பட்டியல் போடுவதன் அவசியம்!

அப்ரண்டீஸ் பதிவர்: தல , எல்லாப்பதிவர்கள் கிட்டேயும் என்ன புத்தகம் வாங்கினீங்கண்ணு கேட்டு ,கேட்டு பட்டியல் போடுறிங்களே , அதை எல்லாம் வச்சு பதிவு போடத்தானே? இவ்வளவு கூட்டத்திலும் உங்க கடமை உணர்ச்சிய நினைச்சா கண்ணு கலங்குது தல....

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி யார், யார் என்ன புத்தகம் வாங்கி இருக்காங்க, அதில் நல்ல புத்தகம் ,நான் படிக்காத புத்தகம் எதுனு தெரிஞ்சுக்கத்தான், அப்போ தானே பின்னாடி ஓசிக்கேட்க வசதியா இருக்கும் எப்பூடி?

அப்ரண்டீஸ்: தெய்வமே நீங்க எங்கேயே போயிட்டிங்க ...அவ்வ்வ்!!!
-----------------------

(எவ்ளோ புத்தகம் ... இதெல்லாம் வவ்வாலு தான் படிப்பான் ,நமக்கு ஆகாது)

# புத்தக சந்தையில் இப்படியும் ஒரு அறிவிப்பு(வைக்கப்படலாம்):

" புத்தகமே வாங்காமல் ,புத்தகங்களை மட்டும் வளைச்சு வளைச்சு படம் எடுக்கும் பதிவர்களின்  கேமரா, மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்படும்"!!!
----------------------

பின்குறிப்பு:

#இந்த மொக்கைகள் யாவும் அடியேனின் சுயக்கற்பனையே, இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுவன அல்ல, அப்படியும் மீறி யாரேனும்  நினைத்தால் அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல.

# படங்கள் உதவி கூகிள்,நன்றி!
------------------------------

Tuesday, January 15, 2013

கால்நடைச் செல்வம்.


(ஹி...ஹி..கண்ணா கரும்பு தின்ன ஆசையா?)

அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!

பாரத நாடு பழம் பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நிலை மறவாதீர் , இப்பாடல் நமக்கு மட்டும் அல்ல நம்ம ஊரு மாடுகளுக்கும் பொருந்தும், நம்ம நாடு உலகிலே மிக அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை கொண்ட நாடு, இச்சாதனை இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் சாதனையாகும்.

விவசாயமே பிரதான பொருளீட்டும் தொழிலாக கொண்டு உலகம் இயங்கிய காலத்தில் விவசாயத்தொழிலின் உச்சத்தில் நின்ற நாடு இந்தியா, எனவே உலக அளவில் செல்வ செழிப்பான நாடுகளில் முதலிடத்தில் இருந்தது.

விவசாயம் செய்ய நிலத்துக்கு அடுத்து இன்றியமையாத மூலதனம் கால்நடைகள் ஆகும், கால்நடைகளில் உழவு மாடு, கறவை மாடு, இரண்டுக்கும் பயன்ப்படும் வகை என உண்டு. அனைத்து வகை கால்நடைகளிலும் மிக அதிக எண்ணிக்கையில் உற்பத்தி திறனுடன் இந்தியா விளங்கியதாலேயே விவசாயத்தின் உச்சத்தினை தொட முடிந்தது.


உழவு மாட்டினை உயிருள்ள டிராக்டர் எனலாம், டிராக்டருக்கு எரிபொருள் செலவு செய்தால் உழலாம் ஆனால் உரம் கொடுக்காது, அதே சமயம் உழவு மாட்டுக்கு உணவு கொடுத்தால் உழும், வண்டி இழுக்கும், கறவை மாடுகளின் இனவிருத்திக்கு பயன்ப்படும், மேலும் சாணமானது உரமாகவும் பயன்ப்படும்.

மாட்டுக்கு  என தனியாக உணவு  உற்பத்தி செய்யத்தேவையில்லை, மனிதர்கள் பயன்ப்படுத்தாத தாவர கழிவுகள், வைக்கோல், பிண்ணாக்கு என எஞ்சியவையே உணவாக பயன்ப்படும், எனவே விவசாய உற்பத்தியில் எந்த பொருளும் விரயமாகாமல் சிக்கனமாக விவசாயம் செய்யலாம்.

(காங்கேயம் காளை,காங்கேயன்=கங்கையின் மைந்தன்,முருகன்)

எந்திர மயமாக்கல் விவசாய உற்பத்திக்கு தேவை எனினும், இந்தியா போன்ற கால்நடை மிகுந்த நாட்டில் எந்திர மயமாக்கல் விவசாய செலவீனங்களை அதிகரிக்கவே செய்கிறது, பாரம்பரிய எளிய விவசாயத்தில் உற்பத்தி செலவினை விவசாயி தீர்மானிக்க முடியும், எந்திர மயமாக்கப்பட்ட விவசாய உற்பத்தியில் எரி பொருள், இரசாயன உரம், பூச்சி மருந்து விலை என அனைத்தும் புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன, எனவே உற்பத்தி செலவு இன்னதென விவசாயியால் திட்டவட்டமாக முடிவு செய்ய இயலாது, அதே சமயம் விளைப்பொருளின் கொள்முதல் விலையும் விவசாயி கையில் இல்லாத சூழலில் , உற்பத்திக்கும் வியாபாரத்துக்கும் இடையில் விவசாயி வெறும் பொம்மையாக உழைப்பை சிந்திவிட்டு பலனை யார் கொடுப்பார்கள் என தெரியாத சூழலில் வாழ்கிறான்.

(சிவப்பு சிந்தி மாடு)

அதிக அளவில் கால்நடைகள் இந்தியாவில் இருந்த போதிலும் பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருக்கிறோம், இதற்கு காரணம் இந்திய மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது என நம்ம நாட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், இதனை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகளின் உயர் உற்பத்தி ரக மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு பல திட்டங்களைப்போட்டு செயல்படுத்தி வருகிறது, கேட்பதற்கு மிகவும் நல்ல திட்டம் போல தெரிந்தாலும் உண்மை வேறாக உள்ளதாக பல வேளாண் அறிஞர்களும், உயிர் தொழில்நுட்ப வல்லுனர்களும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

அது எப்படி எனப்பார்ப்போம்.

அமெரிக்காவில் மாட்டிறைச்சி மற்றும் பால் பண்ணை தொழில் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு தொழிலாகும்.

அவர்கள் கூடுதல் இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பெருக்கத்திற்கு நம்பி இருப்பது இந்திய வகை மாடுகளை தான் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும்.

(பிரம்மன் வகை காளை- Bos indicus)

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரம்மன் வகை எனப்படும் Bos indicus மாடுகள் பெரிதாக,வலுவாக வளரக்கூடியவை, இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு பயன்படுபவை.மிக அதிக இழுவைத்திறன் கொண்டவை.

ஐரோப்பிய வகை மாடுகளை Bos taurus என்பார்கள், மறபணு ரீதிய இந்திய மாடுகளை விட தரம் குன்றியவை,இந்திய வகை மாடுகளின் சிறப்பம்சம் என்னவெனில்,

குறைந்த வெப்பமும் தாங்கும், அதிக வெப்பமும் தாங்கும்.இந்திய மாடுகளின் வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருப்பதே இதற்கு காரணம்.

மேலும் வெகு அடர்த்தியான உரோமங்கள் உள்ளவை, உரோமங்களுக்கு அடியில் கருமை நிறத்தோல் இருப்பதால் வெப்பத்தினை சீராக பராமரிக்க வல்லவை.

மேலும் பிரம்மன் வகை மாடுகள் தளர்வான மேல் தோலினை கொண்டவை எனவே தேவைக்கு ஏற்ப உடல் மேற்பரப்பினை அதிகரித்து வெப்ப வெளியீடும் அளவை அதிகரிக்க ,குறைக்க வல்லவை.

இவ்வகை மாடுகளின் உடலில் இயற்கையாக ஒருவகை திரவம் சுரக்கும் ,இது பூச்சிகளை இயல்பாக விரட்ட வல்லது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.

(சாஹி வால் மாடு)

இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டப்பொழுது ,இந்திய பிரம்மன் வகை மாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றை போஸ் ஈரோப்பியன் வகையுடன் கலப்பினம் செய்தார்கள்,மேலும் நெல்லூர், கிர், கிருஷ்ணாவாலி வகை மாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் கலப்பினம் செய்யப்பட்டது.

ஆதாரப்ப்பூர்வமாக  Dr. Hilton Briggs, author of Modern Breeds of Livestock என்ற நூலில் இத்தகவல்கள் உள்ளது. இவரது நூலில் உள்ள தகவல் என்னவெனில்,

1849 இல் Dr. James Bolton Davis of Fairfield County, South Carolina, என்பவர் இரண்டு ஜோடி போஸ் இன்டிகஸ் காளைகளை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்து ,கலப்பின முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், இவர் அப்போது துருக்கி சுல்தானுக்கு கால்நடை ஆலோசகராகவும் செயல்ப்பட்டு வந்துள்ளார், இதனால் அங்கும் இந்திய மாடுகள் பரவியது.

பின்னர் 1854 இல் St. Francisville, LA வை சேர்ந்த Richard Barrow என்ற வேளாண் அறிஞரின் சேவையைப்பாராட்டி பிரிட்டீஷ் அரசே ஒரு ஜோடி போஸ் இன்டிகஸ் மாடுகளை அன்பளிப்பாக அளித்துள்ளது,அவர் உருவாக்கிய கலப்பினத்துக்கு பாரோவ் பிரீட் என்றப்பெயர் வைக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக கலப்பினங்கள் செய்யப்பட்டு இன்றைய அமெரிக்க பிரம்மன் வகை மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய மாடுகளே இன்றைய அமெரிக்காவின் மாட்டிறைச்சி மற்றும் பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் மிக அதிக அளவில் இந்திய மாடுகளை கொண்டு உருவாக்கிய கலப்பினங்களே உள்ளன. அவர்கள் சுய உற்பத்திக்கு மட்டுமில்லாமல் இப்பொழுது இம்மாடுகளை இனவிருத்தி செய்ய என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள், மலேசியாவில் உள்ள மாடுகள் அனைத்தும் இந்திய கலப்பின மாடுகளே ஆனால் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்வதை ஜெனிட்டிக்கல் பைரசி என்கிறார்கள், இப்போது நாமே நினைத்தாலும் இந்திய மாடுகளை ஏற்றுமதி செய்ய இயலாது, ஏன் எனில் போஸ் இன்டிகஸ் வகை மாடுகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் போன்றவை தங்கள் நாட்டு மாடு என பதிவு செய்துக்கொண்டுள்ளார்கள்.

(இந்திய கிர் வகை பசு-பிரேசிலில் அதிகம் பால் கொடுத்து சாதனை)

பிரேசிலில் கடந்தாண்டு மிக அதிக பால் கொடுத்த மாடு என சாதனை செய்திருப்பது குஜராத்தினை சேர்ந்த கிர் வகை மாடு ஆகும், ஷேரா எனப்பெயரிடப்பட்டுள்ள இம்மாடு ஒரு நாளில் 62 லிட்டர் கறந்துள்ளது.வெப்பமான நாடுகளில் வெப்பத்தினையும் தாங்கி கொண்டு பால் உற்பத்தியும் அதிகம் கொடுக்கும் வகை என்பதால் இவ்வகை மாடுகளை பல நாடுகளும் விரும்புகின்றன.

எனவே பிரேசிலில் உற்பத்தி செய்யப்படும் மாடுகளுக்கு உலக அளவில் நல்ல சந்தை ஏற்பட்டுள்ளது, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளை ஏற்றுமதி செய்வதில் பிரேசில் முன்னணி வகிக்கிறது ஆனால் அவை யாவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாட்டினங்கள். இந்தியாவிற்கு தான் அதன் மறபியல் உரிமை உண்டு ,நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டதால் அவர்கள் திருடி தங்கள் பொருளாக அறிவித்துவிட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு குளிர்நாடுகளான டென்மார்க்,ஹாலந்து, ஆகிய நாடுகளில் இருந்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்து கலப்பினம் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

மேலும் இந்திய மாடுகளில் ஜீன்களில் சர்க்கரை நோயை குறைக்கும் ஏ2 ஜீன் அல்லிகள் உள்ளதாகவும்,ஐரோப்பிய மாடுகளில் ஏ 1 அல்லில்கள் தான் உள்ளது எனவும் இது சர்க்கரை நோய்,உடல் பருமன், மற்றும் இதயநோய்களை அதிகரிக்கும் எனவும் கர்நாலில் உள்ள தேசிய கால்நடை  மறபணு ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

செய்தி:

 A recent study by Karnal-based National Bureau of Animal Genetic Resources (NBAGR) showed Indian cows have a rich A2 allele gene which helps them produce healthier milk. The frequency of this A2 allele in Indian breeds is 100 per cent whereas in exotic cattle breeds it is less than 60 per cent. Imported breeds posses A1 allele, which is considered to be associated with diabetes, obesity and cardiovascular

http://news.outlookindia.com/items.aspx?artid=725938

இவற்றை எல்லாம் பார்க்கும் போது அன்றே மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய(நடித்த) பாடல் தான் நினைவுக்கு வருகிறது,

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

ஒழுங்காய் பாடு படு வயல்காட்டில்

உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் ...

விவசாயி ...விவசாயி!


(என்னா ஆக்டிங்க் ....என்னா ரன்னிங்க் ...தலிவரு ஆல்வேய்ஸ் ராக்ஸ்)

பிற்சேர்க்கை:

 கலப்பினமாக்கலால் அழிந்து வரும் இந்திய நாட்டு மாடுகள் குறித்து முன்னர் இட்ட இடுகைகள்.


1)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2


--------------------
பின்குறிப்பு:

தகவல்கள் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி,

http://www.ansi.okstate.edu/breeds/cattle/brahman/

http://www.ilri.org/InfoServ/Webpub/fulldocs/SmHDairy/chap5.html

http://devinder-sharma.blogspot.in/2012/07/brazil-is-biggest-exporter-of-indian.html

http://agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_cattle%20_breed.html
இணைய தளங்கள் ,நன்றி!
-----------------------

அஃதே,இஃதே-6.


(ஹி...ஹி மனதை பொங்க வைக்கும் பொங்கல்!)

தை-1 :தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 தைப்பொங்கலின் இன்சுவையை மென்மேலும் கூட்டும் வகையில் தை முதல் நாளே தமிழ்ப்பொங்கும் தமிழ்ப்புத்தாண்டும் பிறப்பது சர்க்கரை பொங்கலில் தமிழ்த்தேனும் கலந்துண்பதற்கு ஒப்பாகும்.

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தை முதல் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என விரிவாக விளக்கும்  சில கட்டுரைகள்:

# http://tamilvalluvam.org/KuralArticalPage.asp?Id=13

# http://valavu.blogspot.in/2007/01/blog-post.html

கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.

தமிழ் மாதங்கள்:

சுறவம்- தை

கும்பம் - மாசி

மீனம் - பங்குனி.

மேஷம் -சித்திரை

விடை- வைகாசி

இரட்டை- ஆனி

கடகம் - ஆடி

மடங்கல்- ஆவணி

கன்னி -புரட்டாசி

துலை - அய்ப்பசி

நலி- கார்த்திகை

சிலை- மார்கழி.

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என முன்னர் நான் இட்ட இடுகை:

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

*****

பண்டிகைகளும் பயணங்களும்:

உலகம் முழுவதும் நவீன வளர்ச்சியின் தாக்கத்தால் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு,மனிதர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் இந்தியாவில் அதன் தாக்கம் என்னமோ அனைவரையும் சென்றடையவில்லை என்றே நினைக்க வைக்கிறது ,ஒவ்வொரு முறை மேற்கொள்ளும் விழாக்கால பயணங்கள்!

சில முன் யோசனை முத்தண்ணாக்கள் வெகுஜாக்கிரதையாக பொங்கலுக்கு ஒரு மாதமுன்னரே இருக்கைகளை முன்ப்பதிவு செய்திருந்தார்கள் அவர்கள் பாடு கொண்டாட்டம் தான், ஆனால் தங்கள் புறப்பாடு எப்போது என தீர்மானிக்க இயலாத நடுத்தட்டு மக்கள் ,எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்து பொங்கலுக்கு முதல் நாள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து , அரசையும் ,போக்குவரத்து கழகத்தையும் சுத்த மோசம் என வசைப்பாடிக்கொண்டிருந்தார்கள் :-))

சென்னையில் பேருந்து, தொடர்வண்டி என அனைத்திலும் கால் வைக்க இடமில்லாத அளவுக்கு பிதுங்கி வழிந்தாலும் மக்கள் கொஞ்சமும் அசராமல் எப்படியோ தொற்றிக்கொண்டு ஊர் போய் சேர்ந்தால் போதுமென கிடைத்த கேப்பில் எல்லாம் தங்களை சொறுகிக்கொண்டு , பொங்கல் கொண்டாட ஊர் நோக்கிப்பயணப்படலானார்கள்.

சொந்தமாக கார் வைத்திருந்தவர்கள் வளர்ப்பு நாய் சகிதம் மூட்டைக்கட்டிக்கொண்டு கிளம்பி விட, கார் இல்லாத மக்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ரெண்டு பசங்களையும் , பின்னாடி மனைவி, இன்னொரு பையன் என ஏற்றிக்கொண்டு வீரப்பயணம் கிளம்பிவிட்டார்கள். ஒருவர் தனது ஸ்கூட்டரில்  மொத்த குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு சென்றதையும் பார்த்தேன் , தேசிய நெடுஞ்சாலை 45 இல் இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது,இதனால் எல்லா டோல் கேட்டிலும் பெரும் வரிசை உருவாகி , டோல் கேட்டை கடக்கவே அரைமணி நேரத்திற்கு மேலானது.

டோல் கேட்:



இவ்வளவு அரும்பாடுப்பட்டு ஊருக்கு வந்தாலும் வழக்கம் போல தொலைக்காட்சிகளில் காட்டப்படும் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என கூவிப்போடப்படும் பாடாவதி தமிழ்ப்படங்களையும், தொலைக்காட்சிப்பெட்டிக்கண்டுப்பிடித்த நாள் முதலாக அரங்கேறி வரும் சாலமன் பாப்பையா வகையறாக்களின் என்ன மக்களே நான் சொல்லுறது சரி தானய்யா பட்டிமன்ற பேச்சுக்களையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இதுக்காய்யா படிக்கட்டில தொங்கிட்டு 200-300 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டீர்கள் :-))

இதுக்கு பேசாமா ஊருல ஊட்டோட இருந்து இருக்கலாமே!

*******
புத்தக சந்தை- 2013: A TEASER.

பொங்கலுடன் சேர்ந்தாற்ப்போல புத்தக திருவிழாவும் வருவது சென்னையின் சிறப்பு எனலாம், ஆனால் அச்சிறப்பே பல நேரங்களில் மண்டையை குடைய வைக்கிறது, என்னிக்கு ஊரு கிளம்புவது என்றே தீர்மானிக்க இயலாத ஆசாமி நான் இதில் என்னிக்கு புத்தக சந்தைக்கு போவது என தீர்மானம் எடுக்க வேண்டிய கூடுதல் சுமை வேறு வந்து மண்டையை குடைந்தால் என்ன தான் செய்வதாம் , வழக்கம் போல இன்று போய் நாளைவானு ஒத்தி வைப்பு தீர்மானம் தேன் :-))

பொங்கல் முடிந்தவுடன் போய் ஒரு ரவுண்டு அடிக்கலாம்னு எழுதப்படாத தீர்மானம் இயற்றியாச்சு , ஒரு வாரத்திற்குள் எல்லா நூல்களையும் கபளீகரம் செய்துவிட மாட்டார்கள்  சென்னை வாழ் பெருமக்கள் என்ற  ஒரு அபார நம்பிக்கை தான் :-))

சில பழங்கால பதிவர்கள் வழக்கம் போல சுஜாதா தாத்தாவின் கத புத்தகங்களையே காணததை கண்டது போல இன்னும் தொடர்ந்து அள்ளிக்கொண்டிருப்பார்கள் என்பதால் ,மற்ற நூல்கள் எல்லாம் புத்தக சந்தை துவக்க நாளன்று வச்சது வச்ச மாதிரியே இருக்கும் ,இனிமேல் நான் போய் தான் எல்லாத்தையும் கலைச்சு போடணும் :-))

என்ன ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம், நம்ம பதிவர்கள் எழுதும் புத்தக சந்தைப்பதிவுகளை தொடர்ந்து படிச்சாலே தெரியும் ,எல்லா ஆண்டும் ஒரே மாதிரியே எழுதியிருப்பார்கள் , ஒரு வேளை முன்னர் எழுதிய புத்தக சந்தை பற்றிய பதிவையே காபி&பேஸ்ட் செய்வார்களோ என்னமோ?

வலைப்பதிவுகளின் மூலம் பலப்பதிவர்களும் எழுத்தாளராக அவதாரமெடுக்கும் வேகம்  ஆண்டு தோறும் மர்மக்காய்ச்சலை விட வேகமாக பரவுவது ஏற்கனவே அவதாரமெடுத்து எழுத்து சிம்மாசனத்தை ஆக்ரமித்துக்கொண்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது :-))

பல ஒலக எலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை விட அதிகமாக நம்ம பதிவர்களின் நூல்கள் விற்பது , தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் பதிவர்களின் சாதனை எனலாம்.

பதிவர்களின் சில படைப்புகளும் இவ்வாண்டு அச்சுவடிவில் வெளியாகின்றன ,அவைப்பற்றி,

 பிரபலப்பதிவர் திருப்பூர் ஜோதிஜி  லோகநாயகரை விட பெரிய ஆளா இருப்பார் போல ,அவரோட டாலர் நகரம் எனும்  நூலை பொங்கல் ரிலீஸ் இல்லைனு  சனவரி 27 அன்று திருப்பூரில் வெளியிடுகிறார் :-)),

வாழ்த்துக்கள் ஜோதிஜி!



மேலதிக தகவல்களுக்கு ஜோதிஜியின் வலைப்பதிவினை காண்க,

http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html

#பலப்பதிவர்களின் வலைப்பதிவுகளை தொகுத்து எதிர்க்குரல் என்ற பெயரிலும் ஒரு நூல் வெளியாகிறது. கொஞ்சம் "மார்க்க"மான நூலாக அச்சிலும் கொண்டு வந்திருப்பார்கள் போல , "Tag line" உம் இஸ்லாமோ போஃபியா VS இஸ்லாமியப்பதிவர்கள் என ஒரு மார்க்கமாக இருக்கு :-))

எதிர்க்குரல் நூல் வெளியீட்டு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!



மேலதிக தகவல்களுக்கு பதிவர் சிராஜின் வலைப்பதிவினை காண்க,

http://vadaibajji.blogspot.in/2013/01/vs.html

# மேலும் சிலப்பதிவர்களின் நூல்களும்  வெளி வருகின்றன என தகவல்கள் உலா வருகின்றன,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
---------------------