Wednesday, May 16, 2012

2g scam-சூரியனுக்கே டார்ச் அடிச்ச ராசா வாராருங்கோ!





அலைக்கற்றை ஊழல் வழக்கு எப்படி போகுது யாருக்கு என்ன மாதிரி கோர்ட் ரியாக்ட் செய்கிறது என எல்லாம் பார்த்து விட்டு கடைசியில் ஜாமின் மனுப்போட்டு ஜம்மென வெளியில் வந்துவிட்டார் ஆண்டிமுத்து ராசா , இதற்கிடையில் அவரது உயிருக்கு சிறை தான் பாதுகாப்பான இடம் என வெளியில் வராமல் இருந்தார் என செய்திகள் கசிந்தன. இப்போது பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது போலும் வெளியில் வந்துவிட்டார், உண்மையில் ஊழலின் வீச்சு என்ன எனப்பார்ப்போம், அதற்கு முன்னர் தமிழகத்தில் நடைப்பெற்ற வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் நடைப்பெற்ற ஊழலைப்பார்ப்போம் ,அதே போன்ற செயல்ப்பாட்டில் தான் 2ஜீ ஒதுக்கீட்டிலும் ஊழல் நடைப்பெற்றது. தலைவன் காட்டிய வழியில் தொண்டன் செல்வது என்று சொல்வது இதைத்தானா?

அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டு மனையின் விலை சந்தை மதிப்பில் கோடியை தாண்டி இருந்தப்போதிலும் தமிழக அரசு வீட்டுவசதி வாரியம் அரசு நிறுவனம் என்பதால் மலிவு விலையில் சுமார் 50 லட்சத்துக்கு ஒரு அரசு ஊழியருக்கு அப்போதைய முதல்வர் கலிஞரின் விருப்ப ஒதுக்கீட்டின் படி ஒதுக்கிறது.

அந்த அரசு ஊழியரிடம் 50 லட்சம் பணம் இல்லை பாவம் அப்பழுக்கற்ற ஊழியர் ஆச்சே எனவே அந்த இடத்தினை ஒரு ரியல் எஸ்டேட் காரரிடம் ஒரு கோடிக்கும் மேல் ஒரு தொகைக்கு விற்று விடுகிறார் அதில் கிடைத்த பணத்தை வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்தி இடத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

இடமே வாங்கவில்லை ஆனால் முன் கூட்டியே விற்று விடுகிறார் இதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம், இப்போ வீட்டு வசதி வாரியம் யாருக்கு இடத்தை விற்றது என்பது ? அரசு ஊழியருக்கா அல்லது ரியல் எஸ்டேட் அதிபருக்கா?

ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்றிருந்தால் அரசுக்கு கூடுதல் பணம் கிடைத்து இருக்கும் ஆனால் அப்படி விற்க விதியில் இடமில்லை, மக்களுக்காக உருவான அமைப்பு வீட்டு வசதி வாரியம். ஆனால் ஒரு அரசு ஊழியர் பெயரில் வாங்கமாலே ஒதுக்கீடு பெற்று கைம்மாற்றப்பட்டு கூடுதல் பணம் அவருக்கு போகிறது.

ஒரு அரசு ஊழியர் வருமானத்திற்கு மீறி சொத்து வாங்க்கினாலே ஊழல் ஆகும், வாங்கியவரோ காவல் துறையில் ஆய்வாளர் பணி நிலை, எனவே 50 லட்ச வீட்டு மனையை வாங்க வழியே இல்லை ஆனால் வாங்கியதாக கணக்கும் காட்டி மேலும் உடனே விற்றும் பணம் பார்த்தாச்சு. இதுக்கு பெயர் தான் விஞ்ஞான ஊழல் என்று பெயர் போல :-))

இதில் கூத்து என்ன என்றால் 50 லட்சத்துக்கு வாங்கியதாக சொன்னால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றம், வாங்கவில்லை , அப்படியே ரியல் எஸ்டேட் அதிபருக்கு கை மாற்றிவிட்டேன் என்றால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகும் ,அதுவும் குற்றம், எப்படிப்பார்த்தாலும் விதி முறை மீறல்,ஆனால் தைரியமாக செய்துள்ளார்கள். இப்படி கண் மூடித்தனமாக தவறு செய்யும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது எனத்தெரியவில்லை.

இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் அரசின் ஒரு பொருளை,வளத்தை குறைந்த விலைக்கு விற்க வைத்து அதிக விலைக்கு வெளிசந்தையில் விற்க துணை செல்வது ஊழலுக்கே வழி வகுக்கும், யாரும் சும்மா விலையை குறைவாக நிர்ணயம் செய்யவோ அல்லது அப்படி குறைவாக விலை நிர்ணயம் செய்ய விதி வகுக்கப்பட்ட ஒன்றை பிரதிபலன் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மாட்டார்கள்.

சிறிய அளவில் தமிழ் நாட்டில் நடைப்பெற்ற இப்படி வாங்கி அப்படி விற்கும் வியாபார யுக்தியினை (mode of operation)பெரிய அளவில் தில்லியில் நடத்திக்காட்டி சாதனைப்புரிந்த ஒருவரை இப்போ பார்க்கலாம்...

2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டின் ஆதி அந்தம் எல்லாம் மக்களுக்கு தெரியும் அதில் ஊழல் நடைப்பெற்ற விதம், மற்றும் நான் நிரபராதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன் என சொல்லும் நேர்மையாளார் ,கொள்கை குணக்குன்று , கழகத்தின் கொபசெ, ஆகிய ஆ.ராசா சொல்வது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் படி இருக்கு எனப்பார்க்கலாம்,

2001 இல் முதலில் வருபவருக்கு முன்னுரிமைனு பி.ஜே.பி வகுத்த கொள்கை அருண் ஷோரி எல்லாம் அதன் படி செயல்ப்பட்டிருக்கிறார் நான் செயல் படக்கூடாதா என்கிறார்,

அப்படி எனில்,

#அப்போது பெட்ரோல் விலையை அரசே நிர்ணயம் செய்ய உரிமை வந்திருந்தது ஏன் ஆட்சி மாறியதும் சந்தை விலைக்கு நிர்ணயம் செய்யலாம் என எண்ணை நிறுவனங்களுக்கு உரிமை வழங்கினீர்கள் ,முன்னர் இருந்த கொள்கை முடிவின் படியே செய்திருக்கலாமே?
#அப்போது பெட்ரோல் விலை 35 ரூ இருந்தது அதே விலைக்கு இப்போதும் விற்கலாமே? பெட்ரோலை பழைய விலைக்கே விற்றால் நஷ்டம் வரும் எனில் அலைக்கற்றையை மட்டும் பழைய விலைக்கு விற்றால் நஷ்டம் வரும் என தெரியாத அப்பாவியா :-)), அட சின்ன தம்பி பிரபு விட ரொம்ப அப்பாவியா இருந்து இருக்காரே ராசா :-))

# ஒரு ஆட்சி சரி இல்லைனு தானே உங்க்களை தேர்வு செய்கிறார்கள் அப்புறம் என்ன அவங்க செய்ததையே செய்கிறோம்னு சொல்ல நீங்க எதுக்கு அதுக்கு அவங்களே ஆண்டு இருக்கலாமே?

விண்ணப்பம்ம் பெறுவதற்கான கடைசி தேதியை திடீர் என முன் கூட்டியே மாற்றி விட்டார் அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்,

1) முதலில் வருபவர்களே முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்படுவதால் , கடைசித்தேதியில் வரும் விண்ணப்பத்திற்கு பலன் இல்லை எனவே கடைசி தேதிக்கு முக்கியத்துவம் இல்லை என்கிறார்,

இது எவ்வாறு சரி இல்லை எனில் , முதலில் வந்த விண்ணப்பங்களில் பல தேவையான தகுதி விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனில் தகுதி இழக்கும் நிலையில் அடுத்துள்ள விண்ணப்பங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது, தேதியை முன் கூட்டி மாற்றியதால் பலருக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பே மறுக்கப்படுகிறது.வரையறுக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யாத 85 விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


இறுதியில் 160 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 122 க்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஆனால் 122 விண்ணப்பங்களையும் போட்டது 22 நிறுவனங்களே, உண்மையான எண்ணிக்கை 22 மட்டுமே மேலும் அந்த 22 என்ற எண்ணிக்கையும் உண்மையல்ல பலவும் பினாமி நிறுவனங்கள் அப்படி எனில் ,
2) குறைவான அலைக்கற்றை உள்ள நிலையில் அதிக விண்ணப்பங்கள் வந்து விட்டன ,எனவே பரிசீலிக்க கால தாமதம் ஆகும் எனவே தேதியை மாற்றினோம் என்கிறார்,ஆதுவே பொய் ஆகிறது.

அவர் சொன்னது சரியா எனப்பார்ப்போம்,

உரிமம் பெற்ற Adonis Projects, Nahan Properties, Aska Projects, Volga Properties, Azare Properties & Hudson Properties ஆகியனவற்றை வாங்கிவிடுகிறது Unitech. தொழில்நுட்ப ரீதியாக அப்படி சொல்லப்பட்டாலும் அனைத்து நிறுவனங்களும் யுனிடெக்கின் ஏற்பாட்டில் உருவானவையே.

ஐந்து விண்ணப்பத்தாரர்களின் உரிமையும் உடனடியாக யுனி டெக் வயர்லெஸுக்கு கை மாறுகிறது,அதாவது யுனிடெக்கின் பினாமி தான் அவர்கள், மொத்தமாக யுனிடெக் வசம் சென்றது 22 license,

Swan Telecom merged itself with Allianz Infratech (P) Ltd.

ஸ்வான் மற்றும் அலயன்ஸ் இரண்டும் ஒருவரே, மொத்தமாக கைப்பற்றியது 15 license,

அதே போல ஐடியா செல் , ஸ்பைஸ் உடன் இணைந்து விடுகிறது, கைப்பற்றியது 13 license,

இது போல 122 விண்ணப்பங்கள் என கணக்கு காட்டப்பட்டு 22 பேருக்கு தான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் அதிக விண்ணப்பங்கள் வந்துவிட்டன ,பரிசிலீக்க கால தாமதம் ஆகும் என கடைசி தேதியை மாற்றினோம் என்பது அடிப்பட்டுப்போகிறது.

இப்போது எப்படி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனப்பார்ப்போம்,

1)ஸ்வான் அலை கற்றை வாங்க செலவிட்டது 1537 crores தனனு பங்கில் 45% (approximate) Etisalat of UAE க்கு Rs.3,544 கோடிகளுக்கு விற்றுவிட்டது,

45% பங்கின் மதிப்பு= 3,544 கோடி எனில்
100% மதிப்பு = 3,544*100/45
=7,875.5 கோடிகள்

அதாவது அரசிடம் இருந்து 1,537 கோடிகளுக்கு வாங்கிய அலைக்கற்றையின் உண்மையான மதிப்பு 7,875.5 கோடிகள், இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு,

7,875.5-1,537=6338.5 கோடிகள்.

2) யுனி டெக் 1,651 கோடிகளுக்கு பெற்ற அலைக்கற்றை உரிமத்தில் 60% பங்கினை நார்வேயின் டெலிநாருக்கு 6,120 கோடிகளுக்கு விற்றுவிட்டது,

60% பங்கு= 6,120 கோடிகள் எனில்

100% மதிப்பு= 6120*100/60
=10200 கோடிகள்.

யுனிடெக் பெற்ற அலைக்கற்றையின் உண்மையான மதிப்பு 10200 கோடிகள்,
அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு=10,200-1,651=8549 கோடிகள்.

இவை ஒரு உதாரணம் தான் இது போல 22 நிறுவனங்களும் 122 ,2ஜீ உரிமங்கள் மூலம் ஏற்படுத்திய மொத்த இழப்பு என மத்திய தணிக்கை துறை கணக்கிட்டது த்ஆன் 1,75,000 கோடிகள் என்பது ,இந்த தொகை மிகையானது என சிலர் சொல்லக்கூடும் ,ஆனால் எப்படிக்கணக்கு போட்டாலும் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது என்பது மேற்கண்ட உதாரணங்கள் மூலம் தெளிவாக விளங்கும்.

உலகில் நடந்த அரசியல் ஊழல்களில் டாப்-10 இல் இந்திய தொலைத்தொடர்பு ஊழலுக்கு இரண்டாவது இடத்தினை டைம் பத்திரிக்கை கொடுத்துள்ளது.


ஆ.ராசா மட்டும் இன்னும் கொஞ்ச காலம் தொலைத்தொடர்பு துறையில் இருந்திருந்தால் முதலிடம் பிடித்து சாதனைப்புரிந்து இருப்பார். அந்த மாபெரும் சாதனையை செய்ய விடாமல் சதி செய்து கெடுத்து விட்டார்கள் என மஞ்சள் துண்டு தலைவருக்கு மிகவும் வருத்தம் ,வீராணம் போல பல சாதனை திட்டங்கள் தீட்டிய மனுநீதி சோழனின் மறுப்பிறப்பான கலிஞருக்கே டைம் பத்திரிக்கையில் இடம் கிடைக்கவில்லை ஆனால் அவரது அன்பு தம்பி ,கொள்கை குணக்குன்று ராசா டைம் பத்திரிக்கையில் இடம் பிடித்து சாதனை புரிந்து சூரியனுக்கே டார்ச் அடித்துவிட்டார், அவரது சாதனையைப்பாராட்ட மனமில்லாத சிலர் திட்டம் போட்டு அவதூறு பரப்புவதாக சில கழக அல்லக்கைகள் பதிவுப்போட்டு புலம்பக்கூடும்!

மேலும் 2ஜீ ஊழலில் அதிகம் பலன் அடைந்த நிறுவனங்கள், நீதி மன்ற விசாரணையிலும் சிக்காமல் தண்ணிக்காட்டியவர்கள் ,சுப்ரமணியம் சுவாமியின் குற்றச்சாட்டின் படி ஊழலுக்கு ஒரு வகையில் துணைப்போயும் எவ்வித விசாரணைக்கும் ஆளாகாத ப.சி போன்றவற்றை நேரம் இருப்பின் பின்னர் பார்க்கலாம்.

பின் குறிப்பு:

தகவல்கள் ,படங்கள் உதவி,
விக்கி, கூகிள், எக்கனாமிக் டைம்ஸ், டைம் இணைய தளங்கள், நன்றி!

Sunday, May 13, 2012

கெரில்லா மதவாதிகள்: சாந்தியும் சமாதானமும் உலாவுவதாக!




இந்த இஸ்லாமிய பதிவர்களோடு ஒரே நகைச்சுவையப்பா ...கொஞ்ச காலத்துக்கு முன்னர் சாந்தியும் சமாதானமும் என்பதை வைத்து தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவர் என அறியப்படும் பெயரிலி ஒரு கமெண்ட் சொல்லிட்டார்னு ஏகத்துக்கும் குதிச்சாங்க ...அப்போ சாந்தி, சமாதானம் இரண்டும் ஒரே பொருள் தர வார்த்தை ஆனால் இஸ்லாமிய முகமன்னில் ஒரு முறை தான் சாந்தி(peace) என்ற பதம் வருகிறது எனவே "நடு சென்டர் "போன்று ஏன் இரண்டு முறை தமிழில் சொல்ல வேண்டும் எனவே அப்படி தமிழ்ப்படுத்துவது சரியல்ல ,அப்படி சொல்வதை மாற்றி சொன்னால் தவறும் இல்லை அது இஸ்லாமிய முகமன்னை கிண்டல் செய்வதும் ஆகாது என நான் ஒரு பதிவே போட்டேன் ,பின்ன அரபிய மூலத்தில் இல்லாத வகையில் மொழிப்பெயர்த்துக்கொண்டு அதான் இது என சொல்லிக்கொண்டால் எப்படி? எனக்கு வேலை வெட்டியில்லைப்பாருங்க அதான் சொம்பை தூக்கிட்டு வந்து அப்படி சொன்னேன் :-))


அப்போ சில இஸ்லாமிய அறிவு சீவிக்கள் ஓடி வந்து சாந்தி வேற சமாதானம் வேற எனவே இரண்டு தடவை அழுத்தம் கொடுத்து அரபு மூலத்தினை மொழிப்பெயர்க்கிறோம் எனவே அதனை கிண்டல் எல்லாம் செய்யப்படாது தமிழ்மணம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி அரபு நாட்டில் தடை கூடப்போட்டாங்க.

அப்புறம் ஒரு வழியா பேசி தீர்த்து ,அப்படி சொன்னது தனி நபரின் கருத்து அதற்கு கம்பெனி பொறுப்பாகாது அப்படியே யாருக்கேனும் மனம் புண்ப்பட்டிருந்தால் வருத்தங்கள் என டிப்ளமாட்டிக்கா ஒரு அறிக்கை விட்டு தமிழ்மணம் தண்ணீர் விட்டு அனைத்தது.

இந்த கண்றாவி எல்லாம் ஏற்கனவே தெரியுமே இப்போ என்னாத்துக்கு நீ கூவுற என கேட்பதும் தெரியுது மாமே.... மேட்டரே இனிமே தான்...

அதன் பின்னரும் ஓயாத அலைகளாய் மத வாத பிரதிவாதங்கள் ஓடிக்கொண்டே இருந்தது , அது தமிழ்மண மகுடத்தினை அபகரிக்கும் அல்லது ஆக்ரமிக்கும் வகையில் போய் பல கள்ள ஓட்டு கதாநாயகர்கள் உருவானார்கள் , இது சல சலப்பை உருவாக்கி அமைதியின்மைக்கு அழைப்பு விடுத்தது.

மதவாதிகள் கள்ள/நல்ல ஓட்டுக்களை கூட்டமாக போட்டு மகுடத்தினை ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும் என அனைவரும் சொன்னதால் தமிழ்மணம் ஆழ்நிலை தியானத்தில் இருந்து வெளிவந்து மகுடம்னு இருந்தா தானே சண்டை அதையே தூக்கி விடுகிறோம் என "சாலமன் தீர்ப்பை " சொல்லி இனிமேல் மதம் அல்லது மதம் சார்ந்த இடுகைகள் இடப்பட்டால் நீக்கப்படும் என பிரகடணம் செய்தது. சரி சண்டை சச்சரவு நீங்க ஏதோ ஒன்று செய்தாக வேண்டிய சூழலில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் ஆல் இஸ் வெல் சொல்லி அமைதியானார்கள்.

இதில் நடுநிலையாக மத மூட நம்பிக்கைகளை அலசும் விமர்சிக்கும் பதிவாளார்களும் பாதிக்கப்பட்டு ,இடுகைகள் நீக்கப்பட்டது அவர்களும் இடுக்கண் வருங்கால் நகுக என்பது போல சிரித்துக்கொண்டே "ஆல் இஸ் வெல் "சொல்லிக்கொண்டார்கள் :-))

மதம்னு லேபிளிலோ அல்லது தலைப்பிலோ மத வாசனை அடித்தால் இடுகை நீக்கப்பட்டது ஆனால் இப்போ பாருங்க தமிழ்மண நட்சத்திரப்பதிவுகளிலேயே பொதுவா விளக்கம் சொல்கிறார்ப்போல "சாந்தியும் சமாதானமும்" என ஒருத்தர் பதிவு போட்டு இருக்காங்க. அதில் நேரடியாக எந்த தூண்டிவிடும் வார்த்தைப்பிரயோகமும் இல்லாவிட்டாலும் ஒரு நுண்ணரசியல் இருக்கு , எந்த கருத்தை வைத்து பிரச்சினை கிளம்பியதோ அதையே நட்சத்திர வாரத்திலும் எழுதுவோம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சவால் ஒளிந்திருக்கிறது மேலும் மதம் சார்ந்த இடுகைகள் நீக்கப்பட்டு வரும் வேளையில் இப்படி எழுதினால் என்ன செய்ய முடியும் என கேள்விக்குள்ளாக்குகிறது அப்பதிவு?

சொல்லலாம் இது இஸ்லாமிய முகமன்னை விளக்கும் பதிவுனு ஆனால் பல நாட்களுக்கு முன்னரே அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசி சாறு பிழிந்து சக்கையாகி போன சமாச்சாரம் அப்போதே அனைவரும் விளக்கம் கிளக்கம் எல்லாம் கொடுத்தாச்சு இப்போ மீண்டும் விளக்கம் தேவையா? தேவையே இல்லை ஆனால் மதவாதிகளுக்கு தேவையாய் இருக்கு :-))

மேலும் இரண்டு முறை ஒரே பொருளில் உள்ள சொல்ப்பயன்ப்படுத்தப்பட்டிருக்கு அது தவறான மொழிப்பெயர்ப்பு என சொன்னதற்கு இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள்,ஆனால் இப்போதைய பதிவில் ஒரே பொருள் வரும் இரண்டு சொற்கள் அவைனு ஒத்துக்கிட்டு இருக்காங்க,அப்போ தவறான மொழிப்பெயர்ப்பை பயன்ப்படுத்திக்கொண்டு அதற்கு ஒரு சண்டையிட்டது ஏன்? சண்டைப்போடனும் அதற்கு ஒரு காரணம் வேண்டும் என்றா ?

இனிமேல் இப்படியான என்கிரைப்டட் மதப்பதிவுகள் மெல்ல வரத்துவங்கும் மீண்டும் குடுமி புடி சண்டை தான் :-)) ஆனால் இதுல மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டது தேமேனு இருந்த நடு நிலையாளர்கள் தான் .சிலர் மதவாதிகளே சண்டைப்போடாதிங்கன்னு பதிவுப்போட்டதுக்கு எல்லாம் மத பதிவுனு நீக்கப்பட்டிருக்காங்க ... பாவம் சண்டைப்போட்டுக்கிறாங்களேனு சமாதானம் செய்யப்போறேன்னு போய் மூக்கு உடைப்பட்ட வடிவேலுகள் அவங்க :-))

பின் குறிப்பு:

#மதம் சார்ந்த பதிவுகள் நீக்கப்படும் என்ற நிலையில் பல நடுநிலையாளர்கள், மூட நம்பிக்கையை விமர்சிக்கும் பதிவர்கள் ஆகியோரின் இடுகைகள் கும்பலில் கோவிந்தாவாக நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று இந்நிலையில் ,மறைமுகமாக மதம் சார்ந்து பதிவுகள் இடுவதும் அதுவும் நட்சத்திரவாரத்திலும் என்ற நிலையில் இதற்கான அளவு கோள் என்ன என அறிந்துக்கொள்ளவே இப்பதிவு.

# அஹமது (அ) முகமது கூட ஆஷிக் என்பது முன்னாலோ ,பின்னாலோ ஒட்டி இருக்கும் அவர் தான் சாந்தி வேறு சொல் சமாதானம் வேறு சொல்னு சொல்லிக்கிட்டு இருந்தார் அந்த மானஸ்தர் இப்போ என்ன சொல்கிறார் என அறிய ஆவல்!

#இது மதப்பதிவு அல்ல ஆனாலும் பெயரிலி ஏதேனும் ஆங்கில கவிதை படிப்பாரா என தெரியவில்லை :-))

*****

Tuesday, May 08, 2012

கேட்கிறவன் கேணையா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கே.எஸ்.ரவி குமாரா?






கி.பி 1889 ஆண்டில் ஒரு வழக்கமான ஞாயிறாகத்தான் அமெரிக்கவின் லுடிங்டன் நகருக்கும் விடிந்ததிருக்க வேண்டும் ,ஆனால் அன்று அந்நகரம் உணரவில்லை ஒரு நூற்றாண்டு கழித்து இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தலைநகராம் வங்கக்கடல் தரங்கம்பாடும் சிங்கார சென்னையில் இருந்து வவ்வால் எனும் நாமகரணம் கொண்ட ஒருவன் இணையத்தில் லூடிங்க்டனை தேட வைக்கும் சரித்திர புகழ்பெற்ற ஞாயிறு ஆக அமைய போகிறதென்பதை அந்நகர் அறிந்திருக்கவில்லை .ஏன் அவன் தேடினான் ... தேடலின் வரலாறு ,புவியியல் என்ன?


...கேட்கிறவன் கேணையனா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கேரம் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவியா என
" மக்கள் மகிழ்விப்பான்" சந்தானம் யாரையோ பார்த்து வெள்ளித்திரையில் கேட்டாலும் என்னைப்பார்த்து கேட்டாப்போலவே இருக்கவே தான் இந்த தேடல் துவங்கியது மிஸ்டர் கூகிள் வழிக்காட்டலுடன், அப்படி என்ன தான் தேடிக்கிடைத்தது ... வாருங்கள் காண்போம்!


லூடிங்க்டன் நகருக்கு வழக்கமான ஒரு ஞாயிறாக விடிந்தாலும் பின்னாளில் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வரலாற்றின் பக்கங்களில் அழியாச்சுவட்டினை அந்நாள் பதித்தது என்றால் மிகையில்லை. விடுமுறை தினமான அந்த ஞாயிறும் வார இறுதிப்பள்ளி ஆசிரியரான ஹென்றி ஹேஸ்கலுக்கு வழக்கமாகவே போய் இருக்கும் ஆனால் அப்பள்ளியின் விளையாட்டுக்கூடத்தில் இருந்து பெரும் உற்சாக கூச்சலும் ,கும்மாளவும் வரவே மாணவர்கள் ஏன் இப்படி சத்தமிடுகிறார்கள் எனப்பார்க்க போனது ஒரு புதிய கண்டுப்பிடிப்பை உருவாக்கியது. ஹென்றி அங்கு கண்டது இது தான், ஒரு பில்லியர்ட்ஸ் டேபிளை மாணவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு உற்சாகமாக விளையாடிக்கொண்டு ஒருவரை இடிப்பது தள்ளுவதுமாக ,கூக்குரல் எழுப்பிகொண்டும் இருந்தார்கள்.

நம்ம ஊரு உபாத்தியாராக இருந்தால் ஏய் இங்கே என்ன சத்தம் ...வகுப்புக்கு போகாம இங்கே என்ன பண்றிங்க ..ஓடுங்க என தொறத்திவிட்டு கடமையை செய்து இருப்பார். ஆனால் அமெரிக்க உபாத்தியார் ஆச்சே ஹென்றி அப்படி எல்லாம் கட்டுப்பெட்டியாக இல்லாமல் கொஞ்ச நேரம் மாணவர்களை கூர்ந்து கவனித்தார் மாணவர்கள் முறை வைத்து வரிசையாக அடங்கா ஆர்வத்துடன் குதுகளமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். எத்தனையோ கேம்கள் இருக்க பில்லியர்ட்ஸ் மீது ஏன் இத்தனை ஆர்வம் என யோசிக்கலானார்.



காரணம் அறிந்தார்... என்னவெனில் பில்லியர்ட்ஸ் டேபிள் விலை அதிகமானது அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்து விளையாட முடியாது,மேலும் அதிக இடமும் அடைக்கும் , எனவே பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் இருக்கும் டேபிளை பெரிதும் விரும்பி பயன்ப்படுத்திக்கொண்டார்கள்,மேலும் அதிகம் ஓடி ஆடாமல் உள்ளரங்கிலேயே ஆடினாலும் விறு விறுப்பாக ஆடக்கூடிய குழு விளையாட்டாகவும் இருந்தது.


பில்லியர்ட்ஸ் போன்ற ஒரு விளையாட்டு ஆனால் கையடக்கமாக, மலிவாக அனைவருக்கும் வாங்கும் விலையில் வேறு விளையாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார், இல்லை என்றால் என்ன நாம் உருவாக்குவோம் என யோசித்து பில்லியர்ட்சையே கொஞ்சம் மாற்றம் செய்து சிறிய வடிவில் ஒரு விளையாட்டு பலகையை உருவாக்கினார் அதற்கு கேரம் எனவும் பெயரிட்டார் , ஆம் கேரம் போர்டை கண்டுப்பிடித்தவர் ஹென்றி ஹேஸ்கல்(Henry Haskell)என்ற பள்ளி ஆசிரியரே.

பல நாடுகளிலும் கேரம் போர்ட்டு போன்ற விளையாட்டுக்கள் இருந்திருக்கலாம் ஆனால் கேரம் போர்ட் எனப்பெயர் வைத்து அமெரிக்காவில் முதன் முதலில் காப்புரிமை பெற்றவர் இவர் ஒருவரே ,எனவே அதிகாரப்பூர்வமாக அதன் கண்டுப்பிடிப்பாளர் என அறியப்படுவது ஹென்றி ஹேஸ்கல் ஆகும்.

கேரம் போர்ட் உற்பத்தி செய்ய அவரது நண்பருடன் சேர்ந்து லூடிங்க்டன் நாவல்டி ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலையை கிபி 1890 இல் அமைத்தார்.பின்னர் 1900 இல் அர்ச்சரேனா என்ற நிறுவனத்துடன் இணைந்து கேரம் அர்ச்சரேனா கம்பெனி என மாற்றியமைத்தார்.

பின்னர் பல கூட்டணிகள், மாற்றங்கள் என கண்டு கி.பி 1939 இல் கேரம் இண்டஸ்ட்ரிஸ் என பெயரும் மாறியது. 1940 இல் நிறுவனரான ஹென்றி ஹேஸ்கல் காலமானார். அதன் பின்னர் சொப்பன சுந்தரியின் கார் போல பல கைகள் மாறி கி.பி 1980 இல் லைட்னிங் குருப் எனும் கம்பெனியின் வசம் சேர்ந்தது அது 1996 வரைக்கும் நடத்தியது,பின்னர் கம்பெனி நலிவடைந்ததால் செயல்ப்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இன்று வரையில் "Carrom" என்ற பெயரின் காப்புரிமை அவர்களிடமே உள்ளது மற்றவர்கள் அப்பெயரினை பயன்ப்படுத்த முடியாது. ஹி..ஹி ஆனால் நான் கேரம் போர்டை பயன்ப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது :-))

பிட்டுகள்:

# கேரம் என்ற சொல் கேனான்(பீரங்கி) இல் இருந்து உருவானது ,அதன் பொருள் ஷாட் -அடி என்பதாகும். ஸ்ட்ரைக்கர் வைத்து அடித்து தானே விளையாடுகிறோம்.

# கேரம் போன்ற விளையாட்டு உலகின் பல நாடுகளிலும் ,பல பெயர்களிலும் விளையாடப்பட்டே வருகிறது. பல நாடுகளில் கை விரல்களுக்கு பதில் கியுஸ் எனப்படும் ஒரு சிறு குச்சியினை பில்லியர்ட்ஸ் போலவே பயன்ப்படுத்துவதுண்டு.

சில நாடுகளில் புழங்கும் பெயர்கள்:

டென்மார்க்-கெரொமா

சீனா -கேரம்

ஃபிஜி- வின்டி வின்டி

கனடா -குரோக்கியோல்

இஸ்ரேல்- ஷே-ஷே

மெக்சிகோ- காயின்களுக்கு பதில் சோடா மூடியுடன் ஆடப்படுகிறது.

# 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அபிசினியாவில் (இன்றைய எத்தியோப்பியா)இதே போன்ற விளையாட்டு இருந்ததாக ஒரு கல்லரை ஓவியம் காட்டுகிறது.

#அக்காலத்தில் போர்த்து கீசியர்கள் கேரம் என்றே கேரளாவை அழைத்துள்ளார்கள்.எனவே இந்தியாவில் கேரளவில் இருந்து கூட தோன்றி இருக்கலாம்.பெரும்பாலோர் சொல்வது,இந்திய,இரான் பகுதிகளில் தோன்றி இருக்கக்கூடும் என்பதே.

#கேரம் விளையாட்டில் இந்தியா தான் முன்னணியில் உள்ளது பல உலக சாம்பியன்களை உருவாக்கியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல சேம்பியன்கள் உருவாகியுள்ளார்கள்.ஒலிம்பிக் போன்ற விளையாட்டு அமைப்புகளால் கேரம் இன்னும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு பொழுபோக்கு விளையாட்டு என்ற அளவிலே சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் விளையாடப்பட்டு வருகிறது.




#தமிழகத்தினை சேர்ந்த மரிய இருதயம் இரு முறை ஒற்றையர் உலக சேம்பியனாகவும் ,இரு முறை இரட்டையர் சேம்பியனாகவும் சாதனைப்புரிந்துள்ளார், ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அர்ஜுனா விருதுப்பெற்ற ஒரே கேரம் வீரர் ஆவார்.

#பி.ஆரோக்கிய ராஜ் ,தமிழ் நாடு , மரிய இருதயத்துடன் சேர்ந்து இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது போன்று ஆர்.நட்ராஜ்,ராதாகிருஷ்ணன் என பல கேரம் சாம்பியன்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

#பெண்களில் ஜீ.ரேவதி,பி.நிர்மலா போன்ற குறிப்பிட தகுந்த கேரம் வீராங்கனைகள் தமிழகத்தில் உள்ளனர்.

# மற்ற நாட்டில் கேரம் போல விளையாட்டு இருந்தாலும் அமெரிக்காகாரன் தான் பேரு வச்சு அதுக்கு காப்புரிமை வாங்கி வைப்பாங்க ,மஞ்சள், வேம்பு, பாஸ்மதி அரிசிக்கு எல்லாம் காப்புரிமை வாங்கியது போல,சும்மா சொல்லக்கூடாது மூளைக்காரன்ங்கய்யா :-))

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

http://www.bestqualitytoys.com

http://www.international-carrom-fed-media-commission.org/

மற்றும் கூகிள், விக்கி நன்றி!

Tuesday, May 01, 2012

INTERACTIVE LEARNING or DISCUSSION





ஒரு கருத்து பரிமாற்றத்தில் ஒருவர்  கருத்து வழங்குபவராகவும் மற்றவர்களும் பெறுபவர்களாக அதாவது கேட்பவர்களாகவும் இருப்பது மரபுவழி கருத்துரையாடல் அதே சமத்தில் கருத்துரைஞர் தானே பேசிக்கொண்டிராமல் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில் பெற்று அதன் மீது விரிவான விளக்கம் அளிப்பது மேலும்  பார்வையாளர்களை கேள்விக்கேட்க தூண்டி அதனடிப்படையில் விளக்கங்களை அளிப்பதும் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடல்  (INTERACTIVE LEARNING or DISCUSSION)எனப்படும் இது தான் தற்போதைய புதிய தலைமுறைக்கற்றல் ஆகும்.

பாரம்பரியமாக நமது கல்விக்கூடங்களில் ஆசிரியர் அவர்ப்பாட்டுக்கு பாடம் சொல்லிப்போவார் மாணவர்கள் கேட்பது ஒன்றே கடமையாக அமர்ந்திருப்பார்கள் ,கேள்விகளோ ,விளக்கங்களோ கேட்டால் அதிக பிரசங்கி ,போன மாதத்தேர்வில் என்ன மார்க் வாங்கின, என்ன ரேங்க் வாங்கின , பேச்சுக்கு மட்டும் குறையில்லை உட்காரு என்று மண்டையில் குட்டுவார்கள். அப்படித்தான் பதிவுகளும் இருக்கு யாரேனும் எழுதுவார் படிப்பவர்கள் நல்லப்பகிர்வு என்று தலையாட்டுவார்கள் ,அதற்கு கருத்துரையாடல் செய்ய முற்பட்டால் உனக்கு எல்லாம் தெரியுமா என ஏவுகணை விடுவார்கள்.

இது போன்ற ஒரு தலைப்பட்சமான கருத்து பரிமாற்றங்களை மாற்ற உத்தேசித்து புரட்சிகரமான ஒரு பதிவினை "INTERACTIVE LEARNING or DISCUSSION" ஆக ஒரு பதிவிட்டேன் அதற்கு பின்னூட்ட பதிவு எனவும் நாமகரணம் சூட்டினேன். ஆனால் மக்களுக்கு INTERACTIVE LEARNING or DISCUSSION என்பதில் இன்னும் சற்று குழப்பம் இருக்கிறது என நினைக்கிறேன் எனவே தெளிவாக விளக்க முனைவர் கவுண்டமணி .டாக்டர் ஆப் சிரிப்பாலஜி அவர்களை கவுரவ விரிவுரையாளராக அழைத்துள்ளேன் அவரது காணொளி மூலம் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடலின்  முழு பரிமாணத்தினையும் விளக்குவார் அதனைக் கண்டு களியுங்கள்!

பங்கேற்பு கற்றல்(அ) கலந்துரையாடல் விளக்கப்படம்:



தமிழ் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட எப்படி எல்லாம் பாடுபடுகிறான் இந்த வவ்வால் என இன்று யாரும் நினைத்துப்பார்க்காமல்  இருக்கலாம் ஆனால் நாளைய சரித்திரம் சொல்லும் "அன்றே வவ்வால் என்றொரு வல்லவன், நல்லவன்" சொன்னான் என"

ஹி...ஹி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை நீ எல்லாம் வல்லவன்,நல்லவானா இதெல்லாம் "கொளுத்துற வெயிலில்  கொரங்கு குல்லா போட்டுக்கிட்டு எவனாவது சூடான டீயா ஊதி ...ஊதிக்குடிச்சுக்கிட்டு இருப்பான்" அவன்க்கிட்டே போய் சொல்லு நம்புவான் ,இங்கே வேணாம் தம்பின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ...ச்சும்மா தமாசு :-))

பின்குறிப்பு: 

#நாம என்ன தான்  விஞ்ஞான ,தத்துவ கருத்து சொன்னாலும் எல்லாத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் வாழைப்பழ காமெடி ஆக்கிடுவாங்க மக்கள் :-))

#படங்கள்,காணொளி கூகிள்,யுடுயுப் ,நன்றி!

*************

may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு?




என்னமோ பெருசா சொல்லப்போரேன்னு யாராவது ஓடி வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல, என்ன இணைப்பு என்று அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என யாருக்காவது மனசுல அரிச்சா பின்னூட்டத்தில கேளுங்க பதிலா சொல்கிறேன், ஹி..ஹி... பதிவு போட்டுவிட்டு பின்னூட்டம் வருமா என எல்லாம் காத்திருப்பாங்க எத்தனை நாளுக்கு தான் அதே பாணில பதிவு போடுறது ,எனவே பின்னூட்டம் வந்தா பதிவு வரும் அதாவது பதிவுக்கு பின்னூட்டம் இல்லை இங்கே பின்னூட்டத்திற்கு பதிவு போடப்படும் :-))

யாருக்காவது கோவம் பொத்துக்கிட்டு வந்தா மேல போட்டு இருக்க படத்த ஒரு 5 நிமிடம் உத்து பாருங்க கூலாகிடுவிங்க :-))

Monday, April 30, 2012

காங் மக்களவை உறுப்பினரின் விஷம பேட்டி!



புலம் பெயர் தமிழர்கள்தான் பிரச்சினை தீர்வதை விரும்பவில்லை-காங் எம்.பி, மாணிக் தாகூர் பேட்டி!

இலங்கை சென்று வந்த குழுவில் இடம்ப்பெற்றிருந்த எம்.பிக்களில் ஒருவரான விருதுநகர் காங்கிரஸ் எம்.பி ,மாணிக் தாகூரிடம் குமுதம் ரிப்போர்ட்டர் (3-05-2012)எடுத்த பேட்டியில் தான் அப்படி சொல்லி இருக்கிறார், ஆஹா காங்கிரஸ் இப்படி ஒரு குழுவை அனுப்பியதே இது போல கதைகளை அவிழ்த்து விடத்தானா? இது தெரிஞ்சு தான் அம்மையாரும் பின் கடைசி நேரத்தில் அய்யாவும் கழண்டுக்கொண்டார்களா என நினைக்க தோன்றுகிறது.

ஏன் எனில் காங்கிரஸ் போதைக்கு தமிழக கட்சிகளும் ஊறுகாயாக தான் இத்தனை நாளும் இருந்து வருகிறார்கள் ஆனால் இம்முறை என்னமோ சூதனமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.

மேலும் அப்பேட்டியில் இலங்கை அரசுக்கு புனரமைப்பு செய்ய இது வரையில் 25 ஆயிரம் கோடிகள் வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார் அடப்பாவிகளா அவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை ரகசியமாக கொடுத்தார்களா? மேலும் இந்த மத்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு 580 கோடிகள் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி இதெல்லாம் ஏன் எம்.பிக்கள் விவாதிப்பதே இல்லை என எனது பட்ஜெட் பம்மாத்து என்ற பதிவில் சுட்டிக்கேட்டு இருந்தேன்.

அதாவது சிறிய தொகையாகத்தான் ஒவ்வொரு பட்ஜெட் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது ஆனால் இவரோ 25 ஆயிரம் கோடி என்கிறார் அப்படியானால் பட்ஜெட்டில் சொல்லாமல் இரகசியமாக பணம் கொடுத்து வருகிறார்கள் என்று ஆகிறது ,சிலர்  இப்படி சொல்லலாம் ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த தொகையாக இருக்கலாம் என்று ஆனால் 2009 இல் தான் போர் உக்கிரமாகி முடிந்தது புனரமைப்பு எல்லாம் பின்னர் துவங்கியது அப்படி எனில் இந்த மூன்று ஆண்டுகளில் கொடுத்த தொகை என்றல்லவா ஆகிறது.

பட்ஜெட் அறிக்கை உண்மை என்றால் காங்.எம்பி சொன்ன தொகை பொய்யானது அவர் காங்கிரஸ் அரசு புனரமைப்புக்கு நிதிக்கொடுத்தது என்பதை பெரிது படுத்த சொன்னதாகிறது. எம்.பி சொன்னது உண்மை எனில் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் பொய் சொல்லி நாடாளுமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றியதாக ஆகிறது. ஏன் எனில் ஆண்டுக்கு 500 கோடி என கொடுத்தால் 25 ஆயிரம் கோடி உதவி தொகை கொடுக்க 50 ஆண்டுகள் ஆகும். எது உண்மையோ தெரியாது இவர்களை நம்பிய மக்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வருவது மட்டுமே கலப்படமில்லாத அக்மார்க் உண்மை :-))

இந்திய மக்களின் வரி வருவாயை இஷ்டம் போல செலவு செய்துள்ளது தெரிகிறது, அட புனரமைப்புக்கு தானே கொடுத்து இருக்கு காங்கிரஸ் அதை போய் குறை சொல்லலாமா என்றெல்லாம் அல்லக்கைகள் கேட்கலாம் அடப்பதருகளா இலங்கையில் என்ன புனரமைப்பு செய்து இருக்காங்க அப்போ அதையாவது காட்டுங்க, அந்த எம்.பியே சொல்லி இருக்கிறார் இது வரைக்கும் அங்கே 500 வீடு தான் கட்டிக்கொடுத்து இருக்காங்க அதை ஏன் எனக்கேட்டு விட்டு வந்திருக்கிறோம்னு என்ன கொடுமை சார் இது 25 ஆயிரம் கோடி பணம் வாங்கி அதில் 500 வீடு தான் கட்டி இருக்கு இலங்கை அரசு அப்போ மீதிப்பணம் என்னாச்சு? அதை எல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறார்கள் யாரும்?

மேலும் சொல்லுகிறார் இனிமேல் கொடுக்கும் உதவிப்பணத்தை மக்களுக்கே நேரடியாக காங்கிரஸ் அரசு கொடுக்குமாம் அதான் எக்கச்சக்கமாக ராசபக்சேவுக்கு கொடுத்துட்டிங்களே அது என்னாச்சு என கேட்காமல் இனிமேல் கொடுப்போம் என்றால் இது வரைக்கும் கொடுத்தப்பணம் கோவிந்தா ஆச்சு அதைப்பற்றி ஒன்றும் கேட்கவோ செய்யவோ முடியாது என்று ஒப்புக்கொள்வது போல அல்லவா இருக்கு?

இந்தியா கொடுத்த 25 ஆயிரம் கோடி பணம் இலங்கை அரசுக்கு இராணுவ செலவுகளுக்கு தான் பயன்ப்பட்டிருக்க வேண்டும் , நம் நாட்டிடம் பணம் வாங்கி நமது உறவுகளை அழித்து இருக்கிறது இலங்கை அந்த உண்மையை போகிறப்போக்கில் மறைத்து விட்டு அரசியல் செய்கிறது மத்திய அரசு இவர்களை நம்பி ஆட்சியில் உட்கார வைத்தால் என்னவெல்லாம் செய்கிறார்கள் .

7.2 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ் நாட்டுக்கு பட்ஜெட் போடவே சுமார் ஒரு லட்சம் கோடி போதும் அப்படி இருக்கும் போது சுமார் 20 லட்சம் தமிழ் மக்களுக்கு புனரம்மைப்பு செய்ய இலங்கைக்கு 25 ஆயிரம் கோடி கொடுத்தால் என்னவெல்லாம் செய்திருக்கலாம் ஆனால் 500 வீடுகள் தான் கட்டி இருக்கிறார்கள் என அவர்கள் சொன்னதைக்கேட்டுவிட்டு அப்படியே வர எதற்கு ஒரு குழு ,ஏன் இந்தியா தான் கொடுத்த தொகைக்கு கணக்கு கேட்க கூடாது?

20 லட்சம் மக்களுக்கு தலா நபருக்கு 125000 என 25 ஆயிரம் கோடியை பிரித்துக்கொடுக்க முடியும் அப்படி கொடுத்திருந்தால் அவர்களே சொந்தமாக ஏதேனும் செய்திருப்பார்கள் .ஆனால் எதுவுமே உருப்படியாக நடக்காமல் ராச பக்சேவுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்  மொய் எழுதிவிட்டார்கள்! உலகிலேயே மிக பெரிய மொய் இதுவாக்க தான் இருக்கும் :-))

கேட்கலாம் ஆனால் காங்கிரஸ் அரசு கேட்காது ஏன் எனில் கொடுக்கும் போதே இராச பக்சே பணத்தை வாங்கி என்ன செய்வார் என தெரிந்தே தானே கொடுத்தது இன அழித்தொழிப்புக்கு ஒரு ஜனநாயக நாடே பண உதவி செய்திருக்கிறது ஆனால் அதற்கு பெயர் புனரமைப்பு நிதி. இதை எல்லாம் ஏன் தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வரவில்லை, இலங்கை பிரசினைக்காக ,தமிழர்களுக்காக கூட பேச வேண்டாம் ,இந்திய மக்களின் பணம் இப்படி அநியாயமாக செலவு ஆகி இருப்பதை கூடவா கேட்க கூடாது? எல்லா எம்.பிக்களுக்குமே கேள்விக்கேட்க உரிமை இருக்கிறது, ஏன் அது கடமையும் கூட அரசு ஒழுங்காக செயல் படுகிறதா எனக்கண்காணிக்க , கேள்விக்கேட்க தானே மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்புகிறார்கள்.

 தமிழகத்தினை சேர்ந்த காங்  எம்.பி ஒருவர்  காங்கிரஸ் அரசு செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் போல அறிந்தோ அறியாமலோ சொல்லி ஒப்புக்கொள்கிறார், மேலும் புலம் பெயர் தமிழர்கள் தான் இலங்கையில் அமைதி ஏற்படாமல் தடுக்கிறார்கள் என விஷமத்தனமாக பேட்டிக்கொடுக்கிறார் ,ஆனால் இதனை தமிழக ஈழ ஆதரவு அரசியல்கட்சிகளும் பெரிதாக கண்டுக்கொண்டார் போல தெரியவில்லை, பதிவுலக அறிவு ஜீவிகள் ,இனமான காவலர்கள் எது எதுக்கோ அறச்சீற்றம் காட்டி பொங்கி பொங்கி பதிவ போடுபவர்கள் இதற்கு  பெரிதாக ரியாக்ட் செய்தார் போல தெரியவில்லை. என்ன கொடுமை சார் இது!

Wednesday, April 25, 2012

மின்வெட்டு குறையும்!





கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தலில் கழகம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் மின்வெட்டாகவும் இருக்கலாம்" என அப்போது மின்வெட்டு அமைச்சர் என அறியப்பெற்ற ஆர்க்காட்டாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு 1000 மெ.வாட் மின் உற்பத்தி திட்டம் கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.பல திட்டங்கள் வெற்றறிவிப்பாகவும், சில பேரங்கள் படிந்த பின் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைப்பெற்றன. அதிகரித்து வரும் மின் வெட்டினை சமாளிக்க வெளிசந்தையில் வாங்கியும், மத்திய அரசுடன் இருந்த உறவைப்பயன்ப்படுத்தி அவ்வப்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் கூடுமானவரை மின்வெட்டை சமாளித்து ஐந்து ஆண்டுக்காலத்தினை தள்ளிவிட்டனர்.

ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டினை  நொடியில் தீர்ப்பேன் என வரம் கொடுக்கும் மகாசக்தியைபோல் அருள் வாக்கு கொடுத்தே பொது தேர்தலில் அம்மையாரும் அமோக வெற்றிப்பெற்றார், அனேகமாக உள்ளூக்குள் அப்போது ஐயா மந்திரப்புன்னகை புரிந்து இருப்பார், இந்தம்மா எப்படித்தான் மின் வெட்டினை தீர்க்கிறது பார்ப்போமே என்று.

ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிகாரிகளை கூட்டி கூட்டம் போடும் போது தான் உண்மையான நிலையே தெரிய வருகிறது ,மின்வாரியத்துக்கு சுமார் 50000 கோடி கடன்,அதில் 10000 கோடி ரூபாய் கடன் மின்சாரத்தினை வெளி சந்தையில் வாங்கிய வகையில் நிலுவை என.

புதிதாக மின்சாரம் வாங்க வேண்டும் எனில் பழைய கடன் தொகையை கேட்கிறார்கள், மத்திய  மின் தொகுப்பில்  கூடுதல் மின்சாரம் கேட்டால் கூடன்குளத்தில் தமிழகரசு எதிர் நிலைப்பாடு எடுத்திருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை.

அந்த சமயத்தில் காற்று வீசும் பருவமும் டிசம்பருடன் முடிய துவங்கியது எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்தது விளைவு மின்வெட்டின் கடுமை கூடத்தொடங்கியது.

என்ன செய்யலாம் என மெத்தப்படித்த அதிகாரிகளைக்கூட்டி வைத்துக்கேட்டால் வழக்கம் போல கஜானா காலி ,மின் கட்டணத்தினை உயர்த்தினால் மட்டுமே வருமானம் கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் வாங்கி சமாளிக்கலாம் என அபூர்வமான அறிவுரை தந்தனர்.

இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்,இடைத்தேர்தல் வேற ஒன்னு வருது இப்போ கட்டணத்தை பல மடங்கு கூட்டினால் மக்கள் கடுப்பாகிடுவார்கள், கடும் தோல்விக்கு பிறகு பொட்டு வச்சுக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்க எதிர்க்கட்சிகளூம் துள்ளிக்குதித்து போராட்டத்தை நடத்தி மீண்டும் இழந்த மக்கள் செல்வாக்கை அடையப்பார்ப்பாங்க, எனவே வேற எதாவது செய்யணும் என இராசதந்திரமாக யோசித்து , மின்வெட்டு 4 மணியோ 10 மணி நேரமோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறிவிச்சுக்கோங்க, மக்கள் ஏன் இந்த மின்வெட்டு எனக்கேட்டால் மின்வாரியக்கடன் கதையையும் கடந்த ஆட்சியின் அவலத்தையும் சொல்லி காசு இல்லை என சொல்லிவிடலாம் அப்படியே சைடுல மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் உயர்த்த  ஆலோசிப்பதாக ஒரு அறிக்கையும் விட்டு வச்சுட்டோம்னா நம்ம "ஆபரேஷனை" வெற்றிகரமாக நடத்தி முடிச்சுடலாம் என முடிவுக்கு வருகிறார்கள்.

"ஆப்பரேஷன்" என சொன்னார்களே என்ன என்று புரியவில்லையா, மின் கட்டணம் உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும், உயர்த்தாமல் அரசின் கையிருப்பு பணத்தினைக்கொண்டு மின்சாரம் வாங்கிக்கொடுத்தால் பின்னர் அதிகமாக மின் கட்டணம் உயர்த்தினால் ஏன் இந்த அளவு உயர்த்தணும் கேட்பார்கள்.அதே சமயம் கடுமையான மின்வெட்டினை செய்தோம் எனில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்களாகவே முன் வந்து நீங்க கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கோன்ங்க ஆனால் தடையில்லாமல் அல்லது குறைவான மின் வெட்டுடன் மின்சாரம் கொடுத்தா போதும் கோடி புண்ணியம் நீங்க ந்ல்ல்லாயிருப்பிங்கனு கதற ஆரம்பிச்சுடுவாங்க.அரசியல் நாடக மேடையில் ...அ நாடகமே அரசியல்தான் :-))

நாம அந்த நேரம் பார்த்து மானாவாரியா மின் கட்டணம் உயர்த்திக்கலாம்,மக்கள் எதிர்ப்பே காட்ட மாட்டாங்க, அதே நேரம் எதிர்க்கட்சிகள் உத்தம அவதாரம் எடுத்து இது வரலாறுக்காணாத மின் கட்டண உயர்வு இதற்கு தானா ஆசைப்பட்டாய் தமிழினமே சற்றே சிந்தித்துப்பார் கழக ஆட்சியின் மேண்மைகளைனு  அறிக்கை விட்டால் 50000 ஆயிரம் கோடிக்கடன் சுமை அதில் 10000 கோடி மின் சாரம் வாங்கியது என தேதி,கிழமை ,தொகை வாரியா 100 பக்க அறிக்கை விட்டு பிரஸ் மீட் வச்சு பேசினோம்னா சும்ம அல்லு சில்லு அலறும்ல ஏன்னா நாம பேசுறது ஃபேக்ட்டு ...ஃபேக்ட்டு ... ஃபேக்ட்டு என அம்மையார் அமர்க்களமாக இராசதந்திர ஆபரேஷனை விளக்கவே அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பக்தி பரவசமாகி அம்மானா சும்மா இல்லைடா என பாடி மெய்சிலிர்க்கிறார்கள்.

FACTU..FACTU...FACTU...

"Last year, we purchased 1,500MW of electricity from private players at high prices and somehow managed the situation. But this time, we are not able to buy as we still owe 10,000 crore to suppliers," said the power manager.

மேலும் இப்போது மீண்டும் காற்று வீசும் பருவம் துவங்கிவிட்டது எனவே மீண்டும் காற்றாலை மின்சாரம் கிடைக்க ஆரம்பித்துவிடும்  கூடவே அரசியல் காற்றும் அம்மையாருக்கு சாதகமாக வீச ஆரம்பித்து விட்டது, கூடங்குளத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் டில்லி அன்னையும் நட்பாக பார்க்க துவங்கிவிட்டார், இப்போது ஜனாதிபதி தேர்தல் அடுத்து மக்களவைத்தேர்தல் என வரிசைக்கட்டி வருகிறது செல்வாக்கு இழந்து விட்ட திமுகவை அதற்கெல்லாம் நம்பினால் மீண்டும் ஒரு முறை மூக்குடைப்பட நேரிடலாம் என பல அரசியல் கணக்குகள் போட்டு அவ்வப்போது அம்மையாருக்கு சமரச செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறார் டில்லி அன்னை, அது போல ஒரு சமரச செண்டு தான் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பாராட்டு மடல் அல்லது மெடல் கூடவே கேட்காமலே வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 100 கோடி கூடுதல் நிதி என பச்சை விளக்கு எரிய விட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டாலும் கிடைக்கும் சூழல், வெளி சந்தையில் மின்சாரம் வாங்கவும் நிதி கிடைத்து விட்டது, காற்றாலைகளும் உற்பத்திக்கு தயாராகிவிட்டது எனவே இன்னும் சில நாட்களில் படிப்படியாக மின்வெட்டு குறைய ஆரம்பித்து விடும், முற்றிலும் மின் வெட்டு நீங்கிவிடும் என சொல்ல முடியாது ஆனால் 10 மணி நேர மின் வெட்டு இருக்காது பெரும்பாலும் 2-3 மணி நேர மின்வெட்டாக குறைய வாய்ப்புள்ளது.

அரசியல் வானிலை அய்யாவுக்கு சாதகமில்லாமல் போவது பெரிய பின்னடைவு தான் , இப்படியே மின்வெட்டு தொடர்ந்தால் மக்களவை தேர்தலில் அதையே பெரிய பிரச்சாரம் ஆக்கி சட்ட சபை தேர்தலில் விட்டதைப்பிடிக்கலாம் என ஒரு கணக்குப்போட்டு காத்திருக்கையில் இப்படி வெகு சீக்கிரம் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்தால் ஏமாற்றமாக இல்லாமல் என்ன செய்யும்.

இப்பவும் அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கு மின்வெட்டினைக்கண்டித்து மாபெரும் உண்ணா நிலை போராட்டம் மே-1 இல் நடத்தப்போவதாக அறிவிச்சுடுங்க, வழக்கம் போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நிலை போரட்டம் இருந்துக்கலாம், எப்படியும் இன்னும் சில நாட்களில் மின்வெட்டு தானா குறையத்தான் போகுது அதுக்கு காரணம் நான் உண்ணா நிலை போராட்டம் நடத்தியதனால் தான் என சொல்லிக்கலாம் எப்பூடி :-))

பின்குறிப்பு:

நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))

Tuesday, April 24, 2012

ஓகே.ஓகே சர்ச்சை மற்றும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிச்சலுகை தேவையா?





தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரிச்சலுகை, என்பது பின்னர் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் படங்களுக்கு என்றெல்லாம் மாறி வரிச்சலுகை தொடர்கிறது.

இத்தகைய வரிச்சலுகை திரைப்படங்களுக்கு தேவையா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்,திரையுலகில் புழங்கும் பணம் பெரும்பாலும் கருப்பு பணமே, மேலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யாரும் உண்மையான வருமானத்துக்கு ஏற்ப வருமான வரியும் செலுத்துவதில்லை, அப்படி இருக்கையில் கேளிக்கை வரியும் கட்டாமல் முழுக்க அனுபவிக்க திரையுலகம் துடிப்பதும், அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செவி சாய்ப்பதும் ஜனநாயக கேளிக்கூத்தே.

சில திரைப்படங்களில் இது போல காட்சி வரும் ,ஹீரோ ஏதோ கோல்மால் செய்து பெரிய வியாபாரக்காந்தம் ஆகிடுவார் , போட்டியாளர் அல்லது வில்லன் குருப் வருமான வரித்துறைக்கு போட்டுக்கொடுத்துவிடும், அவர்களும் வந்து சோதனை செய்து விட்டு உங்க கணக்கு எல்லாம் சரியா இருக்கு ஆனால் தொழில் தொடங்க மூல தனம் எப்படி வந்தது, யார்க்கொடுத்தா , அதுக்கு வரிக்கட்டி இருக்கீங்களா என கிடுக்கி போடும். ஆனால் நிஜத்தில் அப்படிலாம் கிடுக்கிப்போடுவதேயில்லை , அப்படிப்போட்டா இந்த ஓ.கே.ஓகே தயாரிப்பாளர் என்ன சொல்லுவாராம் எல்லாம் எங்க நைனாக்கொடுத்த துட்டு என்றா :-))(ஏன்பா வருமான வரித்துறை ஆப்பீசர்ஸ் இதெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?)

திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி போன்றவற்றிற்கான ஒரு வரி வருவாய்.அற்ப தொகையாக இருந்தாலும் நிர்வாக செலவுகளுக்கு பயன்ப்படும் , அது மக்களுக்கு பயன்ப்படும் அதனைப்பறித்து செல்வந்தர்களான சினிமாக்காரர்களுக்கு கொடுக்க எதற்கு ஒரு மக்களாட்சி அமைப்பு?

 மக்களுக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ள சிறப்பான கருத்தாக்கம் கொண்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கலாம், அப்படி அளிக்கப்படும் விலக்குக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்பட்டே முன்னர் எல்லாம் டிக்கெட் விற்கப்படும் ,ஆனால் இப்போது அளிக்கப்படும் வரிசலுகைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதேயில்லை அப்படி இருக்கும் போது எதற்கு வரிச்சலுகை?டிராபிக் ராமசாமிகள் எது எதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, வரிச்சலுகைக்கு ஏற்ப அரங்க கட்டணம் குறைக்கப்படனும்னு ஒரு பொது நல வழக்குப்போட்டால் என்ன?

எனக்கு தெரிந்து வரிச்சலுகைக்கு ஏற்ப கட்டணம் குறைத்து வசூலிக்கப்பட்ட கடைசி தமிழ் திரைப்படம் பாரதி தான், அப்படத்திற்கு பள்ளிகள் எல்லாம் தாங்களே மாணவர்களை அழைத்து வந்த்துக்காட்டின.

இப்போது வரிச்சலுகை அளிக்கப்படும் படங்களுக்கு மாணவர்கள்,சிறார்களை அழைத்து செல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது அந்த அளவுக்கு ஆபாசம் காட்சியிலும் வசனத்திலும்.சந்திரனின் மேடுப்பள்ளங்களை உயர்சக்தி தொலை நோக்கியில் தெளிவாக காட்டுவது போல கதாநாயகியின் மேடு,பள்ளங்களை சூம் வைத்து அட்சரசுத்தமாக குளோஸ் அப்பில் காட்டுவதே கேமிரா மேன்களின் தலையாயப்பணியாக இன்றைய  திரைப்படங்களில் உள்ளது.அதுவும் நாபிக்கமலத்தின் மீது தீராக்காதல் கொண்டு கேமிரா அங்கேயே சுற்றி சுற்றி வரும் :-))
அதுக்கும்  கீழ காட்ட தணிக்கை அனுமதிப்பதில்லை, அனுமதித்தால் எல்லாமே வெட்ட வெளிச்சமா 70 எம் எம் ,சினிமாஸ்கோப்பில் காட்ட கலைவியாபாரிகள் தயாரே :-))

லிட்டர் கணக்கில் ரத்தம் தெரிக்க கொலை வெறியுடன் சண்டைக்காட்சிகளில் வன்முறை கொடிக்கட்டிப்பறக்கிறது.ஒரே அடியில் ஒன்பது பேர் பறந்து போவார்கள், யாரு அடிச்சா பூமி அதிர்ந்து , தலை சுத்துதோ அவன் தான் ஹீரோ என பஞ்சர் டயலாக் வேறு :-))

சரி ஓ.கே ஓகே சமாச்சாரத்துக்கு வருவோம், கொலை வெறிப்படத்துக்கு எல்லாம் வரி விலக்கு அளித்துவிட்டு எங்க படத்துக்கு தரவில்லை , விதி என்றால் எல்லாருக்கும் பொருந்தும், எங்களை புறக்கணித்தது அரசியல் பழி வாங்கல் என பேட்டி எல்லாம்  கொடுக்கிறார் ஜூனியர் தளபதி நடிகர்.

கேட்கும் போது அட பாவமே என தோன்றத்தான் செய்கிறது, கடந்த ஆட்சிக்காலத்தில் சிவாஜி எல்லாம் பெயர்ச்சொல் எனவே மொழியில்லை என்றும், தசாவதாரம் எல்லாம் தமிழ்ச்சொல் என்றும் கண்டுப்பிடித்து வரிச்சலுகை கொடுத்தார்கள் :-))

ஆனால் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட ஒச்சாயி என்றப்படத்திற்கு வரிச்சலுகை தராமல் அலையவிட்டார்கள் ,வழக்கு கூட தொடுத்தார்கள் என நினைவு , பல வகையிலும் போராடி ,பின்னர் திருமாவளவன், தா.பாண்டியன் சிபாரிசு எல்லாம் வாங்கி பின்னர் ஒரு வழியாக வரிச்சலுகையும்  பெற்றார்கள் ஆனால் அதற்குள் படமும் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது.

அப்போது வந்த செய்திக்கான சுட்டி:

ஒச்சாயி

புதுமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைக்கொண்டு சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் ஊடகங்களும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, இப்போது ஓ.கே.ஓகே படத்திற்காக ஆராய்ச்சி மணியை அடிக்கும் பிராபல்ய பதிவர்களும் ,அப்போது ஒச்சாயியை கண்டுக்கொண்டாற்போல் தெரியவில்லை.சின்ன பட்ஜெட் படங்களை கண்டாலே வெறுப்பவர்களுக்கு அதெல்லாம் எப்படி தோன்றும்.

இப்போதைய சூழலில் படங்களின் தரம் மற்றும் இன்றும் வரிச்சலுகை இருக்கும் போது அரசியல்ப்பார்க்காமல் ஓ.கே.ஒ.கே விற்கு வரிச்சலுகை கொடுத்திருக்கலாம். பின்னர் எதுக்கு இதெல்லாம் சொன்னேனா, நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கனு சீன் போடுகிறார்களே அப்போ ஆட்சியில் இருக்கும் போது இவர்களும் வரிச்சலுகையில் அரசியல் செய்து விளையாடினார்கள் என்பதை நினைவுப்படுத்த தான் :-))

ஹி..ஹி ஒச்சாயியோட சாபம் தான் ஓ.கே.ஓகேவுக்கு வரிச்சலுகை கிடைக்க விடாம செய்துவிட்டது என நினைக்கிறேன் :-))

புவி தினம் ஏப்ரல்-22 எனும் ஏகாதிபத்தியங்களின் ஏய்ப்பு!





அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், சுற்று சூழல் தினம், புவி  தினம் என டிசைன் டிசைனா நாட்களை அறிவித்து மெத்த படித்தவர்களின் மூலமாக அதனை நினைவு கூற ,மற்றும் கொண்டாட வைத்து அதெல்லாம் தெரியாமல் இருந்தால் அவனை  முட்டாள் என சித்தரிப்பதே  இன்றைய நவீனம், என்னைப்பொறுத்தவரையில் அதெல்லாம் கொண்டாடி மகிழ்பவர்களே கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பேன் .

ஏன் எதற்கு என்ற சிறிதும் கேள்வி இல்லாமல் எவனாவது எதையாவது சொன்னால் அதை செய்வதும், அதை  வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என பதிவு போட்டு பொழுது போக்கும் கணினி அறிவுள்ள முட்டாள்களின் உலகமாகவே தமிழ் பதிவுலகம் இருக்கிறது.

நாட்களை அறிவித்து கொள்கைகளை கடைப்பரப்புவதன் பின்னணியில் ஏகாதிபத்தியம் என்கிற முன்னேறிய நாடுகளின் வணிக சுயநலமே ஒழிந்து இருக்கின்றது என்பது பாமரனுக்கு தெரியாமல் அல்லது புரியாமல் இருக்கலாம் , கணினி ,இணையம் என தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வாய்ப்புள்ள பதிவுலகில் இருப்பவர்களோ ஈ அடிச்சான் காப்பியாக பொது புத்தியில் உலாவ விடும் செய்திகளையே பதிவாக ஆக்கி பொழுது போக்குவதற்கு இவர்கள் ஏன்?

அதான் திணிக்கப்பட்ட கருத்துக்களை பரப்புரை செய்ய ஏகப்பட்ட தொலைக்காட்சிகள்,அச்சு ஊடகங்கள் இருக்கே. அதையே பிரதி எடுத்து திரும்ப வாந்தி எடுக்கும் பதிவர்கள் எப்படி மாற்று ஊடகம் ஆவார்கள்? சொந்த கருத்து, சுய தேடல் இருக்காதா?

வலைப்பதிவுகள் என்பது புதிய , புரட்சிகர ,மாற்று சிந்தனைகளை கொண்டு வர ஒரு வாய்ப்பு ஆனால் வணிக ஊடகத்தில் சொல்லப்படுவதையே மறுபிரதி எடுக்க இந்த கொம்பன்கள் தேவையே இல்லை.

எவனாவது சிட்டுக்குருவி அழிகிறது சொன்னால் அப்படியே ஆமாம் சிட்டுக்குருவியே காணோம்னு கண்ணை மூடிக்கொண்டு பதிவ போடுவார்கள், புவி தினம் என்று சொன்னால் போதும் டெம்பிளேட்டாக புவி வெப்பமாதல் இன்ன பிற சேர்த்து உலகை காப்போம்னு அறிவுறைக்கூறி ஒரு  பதிவு, ஏன் ,எதற்கு எப்படி என்ற கேள்விகள் கிடையாது.

புவி தினம் என ஜல்லி அடிப்பதெல்லாம் வளர்ச்சி அடைந்த  நாடுகளின் சுய நல பிரச்சாரங்கள், மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு டைம் பாஸ் சமாச்சாரங்கள், என பல உள்ளடி சமாச்சாரங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளாமலே இன்று ஒரு பதிவு போட "சப்ஜெக்ட்" கிடைத்து விட்டது என எதையும் யோசிக்காமல் பதிவ போட்டு ஹிட்ஸ் வாங்க அலையும் கூட்டம் தான் வலைப்பதிவுலகில் அதிகம் பெருகிப்ப்போய் கிடக்கு, ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இதை எல்லாம் ஊருக்கு சொல்லும் உத்தமோத்தம நாடுகளின் லட்சணத்தை இணையத்தில் தேடி அறிய எவரும் முன் வருவதில்லை.

புவி தினம் ,உலகை அழிவில் இருந்து காப்போம் என உலகுக்கே அறிவுறை சொல்லுபவர்களின் உண்மை நிலவரத்தை அடுத்தப்பதிவில் காண்போம்.

தொடரும்.

Friday, April 20, 2012

என்ன கொடுமை சார் இது!-5





ஜோசியம் பார்க்கலையோ ..ஜோசியம்!

ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல வருவான்னு ஜோஸ்யம் சொல்வாங்க சில மரத்தடி கிளி ஜோதிடர்கள், கல்யாணம், காதுகுத்து, வியாபாரம் செய்ய எல்லாம் ஜோதிடம் பார்க்கிறாங்க. செவ்வாய் வக்கிரமா பார்க்கிறான் ,புதன் உக்கிரமா பார்க்கிறான் புண்ணாக்கு வியாபாரம் செய்தா பின்னிடலாம்னு துணிக்கடை வச்சிருக்கிறவர் பையனுக்கு தொழில் தொடங்க ஆலோசனை சொல்லும் ஜோதிட சிகாமணிகளும் நாட்டில நிறைய இருக்காங்க.

அதை எல்லாம் அலேக்கா தூக்கி சாப்பிடுவது போல என்ன ஜாதகர் என்ன ஷேர் வாங்கலாம், ஜோதிட முறையில் பங்கு வணிகத்தில் பணம் அல்ல பங்கு வணிக ஜோதிடம்னு சுவாமி ஓம்கார்னு ஒருத்தர் கிளம்பிட்டார் .அடப்பாவிங்களா வெள்ளைக்காரன் கஷ்டப்பட்டு கணினி ,மென்பொருள்னு கண்டுப்பிடிச்சா அதை வச்சு நோகாம ஜோசியம் பார்க்க கிளம்பிடுறிங்களே ...என்ன கொடுமை சார் இது!

*****
சென்னை - ஊட்டி வழி கும்பகோணம்!


சென்னையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டது தாங்க அது.

சென்னையில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக , சேலம் ,கோவை, ஊட்டினு தான் போவாங்க. இந்த பேருந்து வித்தியாசமாக சென்னை,திண்டிவனம், பாண்டி,கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சினு போய் ஊட்டிக்கு போகுதாம், நடத்துனரை விசாரித்தேன் ,அப்படி போக சொல்லி உத்தரவாம். யாருக்காவது ஒரே பஸ் டிக்கெட்டில் தமிழ் நாட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் அணுகவும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தினை.

ஊட்டிக்கு டிக்கெட் வாங்குறவன் முழுசா ஊட்டிப்போய் சேர்வாங்கிறிங்க :-))

என்ன கொடுமை சார் இது!

*****
ஓ.கே.ஓகே.(விமர்சனமல்ல)

கையில காசு மித மிஞ்சி இருந்தா எல்லாம் படம் எடுக்க கிளம்பிடுறாங்க, படத்துக்கு கதை சொல்ல வரவங்க கொஞ்சம் குஷிப்படுத்துவோம் அப்போ தான் தயாரிப்பாளார் மசிவார்னு , தயாரிப்பாளரப்பார்த்து "சார் உங்கள ஒரு சைடுக்கா பார்த்தா தல போல இருக்கிங்க இன்னொரு சைடுக்கா பார்த்த தளபதி போல இருக்கிங்கனு " சரவண பவன் சர்வர் போல இருக்கிற தயாரிப்பாளர உசுப்பேத்தி விட்டுட்டு போயிடுறாங்க.

பலப்பேரு இந்த காக்காப்பிடிக்கு எல்லாம் அசராம தயாரிப்ப மட்டும் பார்ப்போம்னு ஆசைக்கு அணைப்போட்டு விடுவார்கள்.சிலப்பேரு தூண்டிலில் சிக்கி எத்தனை நாளைக்கு தான் அடுத்தவன் டூயட் பாட நாம செலவு செய்றது, நாமளும் டூயட் பாடிப்பார்ப்போம்னு அரிதாரம் பூசி ஹீரோவாக அவதாரம் பூசிக்கொண்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்கிறார்கள், அவங்களுக்கு மட்டுமா சூனியம் பார்க்கிறவங்களும் சேர்த்துள்ள பயப்புள்ளைகள் சூன்யம் வைக்குதுங்க :-))

போலீஸ் டி.சி பொண்ணை தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கும் பையன் ஓ.கே செய்து ஓ.கே சொல்ல வைப்பது தான் ஓ.கே.ஒகே எனும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தோட ஒன் லைன் கதை , சுருக்கமா சொன்னாலும் அவ்வளவு தான் விரிவா சொன்னாலும் அவ்வளவு தான் கதை.

ஒரு கல்லும் ,கண்ணாடியும் உடையாம மோதிக்கொண்டால் காதலாம்,
 குண்டு துளைக்காத கண்ணாடியா இருந்தா கல்லாவது கடப்பாரையாவது.

படம் முழுக்க மயிலாப்பூர் சபா நாடகம் போல வாய் வலிக்க பேஷிண்டே இருக்கா ஷந்தானம் அண்ட் அவரோட அல்லக்கையா நடிக்கும் உதயநிதி.ஹீரோவ அல்லக்கைனு சொல்ல்லிட்டேன்னு மொறைக்காதேள் படம் பார்த்தா நோக்கும் அப்டிதாண்ணா தோனும் :-))

படம் முழுக்க ரெண்டுப்பேரும் மெட்ராஸ் ஐ வந்தவாள் போல கருப்புக்கண்ணாடியோடவே அலையுறாங்க ,டைட்டில்ல கண்ணாடினு வர்றதே அதுக்காகவோ?

படத்தில ஷந்தானம் மயிலாப்பூர் பார்த்தான்னு ஷொல்லிண்டு இப்படித்தான் ஏதோ பாஷைல படம் பூரா பேஷிண்டு இருக்கார்.இரண்டரை மணி நேர படத்தில ரெண்டே முக்கால் மணி நேரம் பேசுறார்ப்பா .அதெல்லாம் காமெடி வஜனம்னு சொல்றா அப்படி ஷொன்னா தான் தெரியுது காமெடினே.

லொள்ளு சபானு பழைய சினிமாவ எல்லாம் ஷந்தானம் தொலைக்காட்சில கலாய்ச்சுண்டு இருப்பார் முன்ன அப்போ மீந்து போன பழைய ஸ்கிரிப்ட் ஆ இயக்குனர்க்கிட்டே கொடுத்து இருப்பார் போல.

கிளைமாக்ஸில உதயநிதி விடுற பீட்டர ஷந்தானம் மொழிப்பெயர்ச்சி செய்வார் ,இதெல்லாம் பெண்ணின் மனதை தொட்டு படத்தில விவேக் டீம் செய்தது.கொஞ்ச காலமா கவுண்டரை இமிடேட் செய்தார் , இப்போ விவேக் எல்லாம் ஓய்ஞ்சுட்டதால அவரையும் இமிடேட் செய்ய ஆரம்பிச்சுட்டார்.இப்படியே போனால் ஷந்தானம் வந்த வேகத்தில காணாமல் போக வேண்டியது தான்.

ஒரே கதைய அடுத்தடுத்து படமெடுத்தாலும் படம் ஓடுதுனா இயக்குனர் மேல குற்றமா என்ன எடுத்தாலும் பார்ப்போம்னு போகிற மக்கள் மேல குற்றமானு சாலமன் பாப்பையா,திண்டுக்கல் லியோனி வச்சு பட்டி மன்றம் தான் போடனும்.

தாத்தா பிறந்த நாள் என்றால் உண்டியல் வச்சு நிதி திரட்டுவார், பேரன் ஹீரோவா நடிச்சு நிதிதிரட்டுறார், படம் ஓடும் எல்லா ஏரியாவிலும் கட்சிப்பிரமுகர்களே மொத்தமா டிக்கெட் வாங்கிடுறாங்க, எப்படியும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு தான் எல்லா தியேட்டர்லயும், படத்தின் உண்மை நிலவரம் இரண்டாவது வாரத்துக்கு பிறகே தெரியும்.

கலைக்குடும்பத்தின் கலையார்வத்துக்கு கலை தொண்டு செய்தே கழக உடன்பிறப்புகள்  கடன்காரர்கள் ஆகிடுவாங்க போல இருக்கே.

என்ன கொடுமை சார் இது!

*****
என்னமா சிந்திக்கிறாங்க!

இந்த சமாச்சாரம் ரொம்ப நாளுக்கு முன்னரே எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், எப்படிலாம் ஒத்த சிந்தனை வேலை செய்யுதுனு உதாரணம் காட்ட இதை விட நல்ல உதாரணம் கிடைக்காது என்பதால் பயன்ப்படுத்திக்கொண்டேன் , சும்மா பார்த்து எஞ்சாய் செய்யுங்க!

அந்தக்காலம்:



இது இந்தக்காலம்:



(ஹி..ஹி கவுண்டமணி,கார்த்திக் ஆபிஸ் காமெடி கிடைக்கலை ,படம் இது தான் ,கிடைச்சா சொல்லுங்க போடலாம்)
*****

இராசதந்திரம்:

தமிழ் தாத்தா தனது தொண்டரடிப்பொடிகளுடன் ஞானசன்னிதியில் அரசியல் மந்திராலோசனையில் இருக்கிறார்.

பேருந்துக்கட்டணத்தினை உயர்த்தியது மக்கள் விரோத போக்குனு அறிக்கை விட்டு போராட்டம் நடத்தலாமாய்யா?

ம்ம்க்கும் தலைவரே கடந்த பல ஆண்டுகளாக பேருந்துக்கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவே நஷ்டம் போக்குவரத்துக்கழகத்தினை மூட வேண்டிய நிலையில் கொண்டுவந்து விட்டதே நீங்க தான்னு அம்மையார் கவுண்டர் அறிக்கை விடுவாங்க...

யோவ் அந்தம்மா விடுதோ இல்லையோ நீயே போட்டுக்கொடுப்பய்யா.

ம்ம் பால் விலை ஏத்துனாங்களே அதை கண்டிச்சு அறிக்கை விடலாமே ...

அதுக்கும் அதே தான் நீங்க கடந்த காலங்களில் விலை ஏற்றவில்லை பால்வளத்துறை நட்டம், சரி செய்தேன் பதில் வரும் ...தலைவரே...

யோவ் என்னைய்யா எந்த பக்கம் போனாலும் கேட்டப்போடுறிங்க...இப்படியே போனால் நாம எதிர்க்கட்சியா அரசியல் கடமையே செய்ய முடியாது போல இருக்கே...

ஹி...ஹி தலைவரே நமக்கு  எதுக்கு அந்த கவலை ,எதிர்க்கட்சி இப்போ கறுப்பு எம்ஜிஆர் கட்சி தானே ...நமக்கு பிரச்சினை இல்லை... கவலைய விடுங்க...

யோவ் உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாய்யா எதிர்க்கட்சியா கூட உட்கார விடாமல் அடிச்சு துவைச்சுட்டாங்க மக்கள் அந்த கவலை கொஞ்சமாச்சும் இருக்காய்யா உனக்கு ..உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு நான் எப்படி அரசியல் நடத்தி ..என் லட்சியத்தியத்தை நிறைவேற்றுவேன்.

(மனசுக்குள்.. உங்க லட்சியம் உங்க மகன தலைவராக்கிப்பார்க்கிறது தானே நடத்துங்க யாரு வேணாம் சொன்னா) ஹி..ஹி இப்படி செய்தா என்ன தலைவரே...

எப்படிய்யா?

கடுமையான மின் வெட்டு, கூடவே வரலாறு காணாத மின் கட்டண உயர்வு என காரசாரமா அடுக்கு மொழில கண்டிச்சு ஒரு அறிக்கை விடுங்க தலைவரே ...அந்தம்மா ஆடிப்போயிரும்ல...

போய்யா நீயும் உன் ஆலோசனையும், கடந்த காலத்தில் மின் உற்பத்தியே செய்யவில்லை, மின்வாரியத்துக்கு 500000 கோடி கடன்னு ரிவிட்டா அடிக்கும்யா ....

என்ன தலைவரே நீங்களே இப்படி பேச ஆரம்பிச்சுட்டிங்க....

உங்களை எல்லாம் நம்பி பயனில்லை, நான் அண்ணாவுக்கு பின்னால் நின்றும் ,காமராஜருக்கு முன்னால் நின்றும் அரசியல் செய்தவன் ,எப்போது ,எப்படி அரசியல் செய்யனும்னு தெரியும்,

தனி ஈழம் அமைக்க பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உதவி செய்யணும் ஒரு அறிக்கை விடப்போறேன் , 1980 இல் இருந்து கழகம் விட்ட அறிக்கைகளின் தேதி,கிழமை எல்லாம் பட்டியல் போட்டு பத்து பக்கத்துக்கு அறிக்கையை விட்டா ச்சும்மா அதிரும்ல...

தலைவரே எனக்கு ஒரு சந்தேகம், இப்போ மட்டும் அம்மையார் பதிலுக்கு கவுண்டர் கொடுக்க மாட்டாங்களா?

எப்படிய்யா முடியும் .... நம்மை அரசியல் செய்ய விடாம முடக்க மட்டுமே ஈழப்பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்வாங்க ,தனி ஈழம்னு எந்த காலத்திலும் அம்மையார் பேச்சுக்கு கூட பேச மாட்டாங்க,அப்படியே சந்தர்ப்பவசமா அவங்களும் தனி ஈழம் பற்றி அறிக்கை விட்டா ,நாம தான் முன்னாடி அறிக்கை விட்டோம்னு சொல்லிக்கலாம்ல எப்பூடி!

ஆஹா தலைவரே பிரமாதம் அசத்திட்டிங்க, இதுவல்லவோ இராசதந்திரம்... என கோரஸ்சாக தொண்டரடிப்பொடிகள் கூவுகிறார்கள்!

என்ன கொடுமை சார் இது!

Friday, April 13, 2012

சித்திரை-1 இல் புத்தாண்டு கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்




பெரும்பாலோனோர் ஜனவரி -1 அன்று புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் ,ஏனில் பொதுவாக உத்தியோகப்பூர்வ நிமித்தமாக ஆங்கில நாட்காட்டியினை பின்ப்பற்றுவதால் ஏற்பட்ட பழக்கம் ஆகும். ஆனால் அது ஆங்கில காலண்டரும் அல்ல ஆங்கில ஆண்டுப்பிறப்பும் அல்ல போப் கிரிகோரி ரோமன் நாட்காட்டி அடிப்படையில் அமைத்ததுவே நாம் பொதுவாக பயன்ப்படுத்தும் நாட்காட்டி, எனவே ரோமன் ஆண்டுப்பிறப்பே ஜனவரி ஒன்றில் வருவது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில்  ,பஞ்சாங்க நாட்காட்டி அடிப்படையில் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாக கொண்டு ,சித்திரை ஒன்றில் ஆண்டு பிறப்பு கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் சித்திரை ஒன்றில் புழங்கும் 
வருடப்பிறப்புகள்;

காஷ்மீர் -நவரேக்

மஹாராஷ்டிரா- குடி பட்வா

கோவா- குடிபட்வா

பஞ்சாப்&ஹரியானா- பைசாஹி

பீஹார்- வைஷாகா

மேற்கு வங்கம்-போஹேலா பைசாஹி

இராஜஸ்தான் -தப்னா

மணிப்பூர்-சஜிபு நோங்மா பன்பா

பாலி ,இந்தோனேசியா,மொரிஷியஸ் ஹிந்துக்கள்-நியேபி

அஸ்ஸாம்-போஹாஹ் பிஹு

சிந்தி- சேத்தி சந்த்

ஆந்திரா -உகாதி

கர்நாடகா-உகாதி

கேரளா- விஷு

தமிழ்நாடு- சித்திரை புத்தாண்டு

இதில்

#ஆந்திரா,கர்நாடகாவில் சித்திரை ஒன்று மார்ச்-23 இல் வருவதாக கணக்கிட்டு அன்று உகாதி கொண்டாடுகிறார்கள்.

#மஹாராஷ்டிரா,கோவாவில் குடி பட்வா சித்திரை ஒன்று மார்ச் 23 இல் வருவதாக கொண்டாடப்படுகிறது.

மற்ற இடங்களில் சித்திரை ஒன்று ஏப்ரல்-13 இல் வருகிறது, இது சாலிவாகன சகாப்தம் அடிப்படையில் வரும் சாகா சகாப்த காலண்டர் முறையில்.

வட இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு அனைத்தும் அவர்களது அறுவடை திருநாளை ஒட்டி என்பதை கவனிக்கவும். ஆனால் தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றுடன் அறுவடை தொடர்புடையது அல்ல , தை முதல் தேதியே அறுவடைக்கு அருகில் வரும்,அன்று பொங்கல் என கொண்டாடுவதே புத்தாண்டு ஆகும். ஆனால் அப்படி நாம் இது நாளும் சொல்லிக்கொள்ளவில்லை அல்லது மறந்து விட்டோமோ அல்லது மறக்கடிக்கப்பட்டமோ. ஆதலால்  சித்திரை ஒன்று என்று இந்திய(இந்துத்வ) வருடப்பிறப்பை கொண்டாடி வருவது வழக்கமாகி போய் இருக்கலாம்.

ஆகவே மக்களே சித்திரை ஒன்றில் கொண்டாடப்படுவது தமிழ் புத்தாண்டா அல்லது இந்திய-இந்துத்வ புத்தாண்டா நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்.


சித்திரை ஒன்றில் புத்தாண்டு கொண்டாடுவோரையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம் எனவே வாழ்த்துவோம்...ஏக் கவாலி கானா பாடுவோம்... பங்க்ரா ஆட்டம் ஆடுவோம் ஓஹ் பல்லே ..பல்லே ...

ஜாத்தா ஆயி பைசாஹி !!!
----
பின்குறிப்பு:

#தை ஒன்றில் புத்தாண்டு ஏன் என விளக்கும் எனது பதிவு,

தை-1 தமிழ் புத்தாண்டு

# படங்கள் தகவல்கள் உதவி ,கூகிள், விக்கிப்பீடியா,நன்றி!

Tuesday, April 10, 2012

மின்வெட்டு எல்லாம் ரொம்ப சகஜமப்பா!





நம்ம நாட்டில் தான் மின் வெட்டு ,புழுக்கம், எரிச்சல் எல்லாம் வெளிநாட்டில் எல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் தடையே இல்லாமல் பாயும் என்று பொதுவாக நினைத்து நாம் ஏக்கப்பெரும்முச்சு விடுவதுண்டு, ஆனால் அங்கும் உண்டு , நம்மை ஆண்டுவிட்டு போன வெள்ளைக்கார துரைமார்களின் தேசமான இங்கிலாந்தில் கடுமையான மின் வெட்டு அதுவும் நான்காண்டுகளுக்கு தொடர்ந்து இருந்தது என்றால் நம்ப முடியாதில்லையா? ஆனால் அது உண்மையே ஆனால் இப்போ இல்லை அது 1970  களில் , ஹி..ஹி அதை எதுக்கு இப்போ சொல்றேன்னு  பார்க்கறிங்களா, எல்லாம் மின்வெட்டில் வெந்து நொந்த மக்கள் மனசை தேற்ற தான் :-))

மூன்று நாள் வாரம்:
(three day week)

கி.பி 1970 இல் இங்கிலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சங்கம் ஊதிய உயர்வு , பணிப்பாதுகாப்பு இன்ன பிற கோரிக்கைகளை வைத்து போராட்டத்தினை அறிவித்தது, வேலை நிறுத்தம் செய்யாமல் விதிப்படி வேலை என்று அறிவித்து போராடினார்கள்.

அது என்ன விதிப்படி வேலை போராட்டம்,  
(work by rule)

# எட்டு மணி நேர வேலை என்றால் எட்டு மணி நேரம் மட்டுமே, கூடுதல் பணம் கொடுத்தாலும் கூடுதல் நேரம் வேலை செய்ய மாட்டார்கள்.

# ஒருவருக்கு என்ன வேலையோ அவ்வேலையை மட்டும் செய்வார்கள்.அதாவது ,வாகன ஒட்டுநர் வாகனம் மட்டுமே ஓட்டுவார் டயர் பஞ்சர் ஆகிவிட்டால் மாற்ற மாட்டார்.அது அவர் வேலை இல்லை. இதான் விதிப்படி வேலை செய்வது.

#எட்டு  மணி நேரம் வேலை செய்வார் ஆனால் எவ்வளவு செய்வார் என்றெல்லாம் கேட்க முடியாது. உ.ம்: ஒரு அடிப்பள்ளத்தையே அளந்து அளந்து எட்டு மணி நேரமும் வெட்டிக்கொண்டு இருக்கலாம் :-))

நம்ம அரசு அலுவலகத்தில இப்பவும் இதான் செய்கிறார்கள் :-)) காலையில் இருந்து மாலைவரை ஒரே கோப்பை புரட்டிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பிவிடுவார்கள்!

சுரங்க தொழிலாளர்கள் விதிப்படி வேலை செய்ததால் நிலக்கரி உற்பத்திக்குறைந்து  ,மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கிடைக்கும் நிலக்கரி கொண்டு மூன்று நாட்களுக்கு தான் மின் உற்பத்தி முழுசாக செய்ய முடியும் என்பதால். வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மின் விடுமுறை அறிவித்து விட்டது ஆங்கில அரசு. மருத்துவமனை, சூப்பர் மார்க்கெட், பத்திரிக்கை அலுவலகங்கள் போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு.இதனை மூன்று நாள் வாரம் என்று சொன்னார்கள்.

மின்சாரம் கிடைக்கும் மூன்று நாட்களிலும் பல கட்டுப்பாடுகள், தொழிற்சாலைகள் முழுதும் இயங்க கூடாது, தொலைக்காட்சி ஒளிபரப்பு  இரவு 10.30 மணிக்கு நிறுத்தப்படும் என்பது போல பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலை 1970 முதல் 1975  வரை நீடித்தது, மின்வெட்டைக்காரணம் காட்டி , மெழுகு வர்த்தியை போஸ்டர் ஒட்டி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் நடந்தது. ஆட்சியும் மாறியது. பின்னரே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நின்று முழு அளவில் மின்சாரம் கிடைத்தது.

ஆனானப்பட்ட சூரிய அஸ்தமனமில்லா ஆங்கில தேசத்திலும் மின்வெட்டு இருந்திருக்கு, மக்கள் போராடி ஆட்சியை மாற்றி இருக்காங்க, ம்ம் இங்கேயும் தான் ஆட்சியை மாற்றிப்பார்த்தோம் மின்வெட்டு குறையாம கூடிப்போச்சு :-))

கூடுதலாக ஒரு தகவல் , இப்போ இங்கிலாந்தில் நிலக்கரி உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது, பல சுரங்கங்களிலும் கரி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது.இப்போதைய சுரங்களில் இருக்கும் நிலக்கரி கையிருப்பும் 2020 வரைக்கும் தான் வரும், அதன் பிறகு அங்கு ஒரு கிலோ நிலக்கரிக்கூட இருக்காது இறக்குமதி செய்தால் தான் உண்டு. அப்படி செய்தால் விலை அதிகம் ஆகிவிடும் என மரபு சார ஆற்றலைப்பயன்ப்படுத்த முடிவு செய்து அதற்காக பல திட்டங்கள் தீட்டிவருகிறார்கள்.

மிக அதிக அளவில் காற்றாலையிலும் , கடலலை மின்சாரத்திலும் முதலீடு செய்ய திட்டமிட்டு செயல்படுத்தியும் வருகிறார்கள்.

உலக அளவில் இன்னும் 144 ஆண்டுகளுக்கு தான் நிலக்கரி படிமம் பயன்ப்படுத்த கிடைக்கும் என கணக்கிட்டுள்ளார்கள்.சிலர் 114 ஆண்டுகள் என்கிறார்கள், ஆனால் ஆண்டுக்கு ஆண்டு பயன்ப்படுத்தும் வேகம் அதிகரிப்பதை பார்த்தால் அதற்கு முன்னரே  நிலக்கரி படிமங்கள் தீர்ந்துவிடலாம் என்றும் கணிக்கிறார்கள்.

சரி இந்தியாவின் நிலை என்ன , நம் நாட்டில் இன்னும் 140 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிமம் இருப்பதாக இந்திய நிலக்கரி கழக ஆய்வு சொல்கிறது. ஆனால் அது மிகைப்படுத்தப்பட்ட மற்றும் துல்லியம் இல்லாத ஒரு ஆய்வு , இன்னும் 40 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என பிசினஸ் ஸ்டேண்டர் பத்திரிக்கை ஒரு கணக்கை காட்டுகிறது.

நம் நாட்டில் மரபு சாரா எரிசக்தி ஆய்வுகளும், பயன்பாடும் ஆமை வேகத்தில் போகிறது. வருங்காலம் ஒளி வீசுமா ,இருண்டு போகுமா என்பது ஆட்சியாளார்களின் கொள்கை முடிவெடுப்பதிலும், விரைந்து செயல்ப்படுத்துவதிலும் தான் இருக்கிறது. நாளை  என்ன நடக்கும் யார் அறிவார்?

இங்கிலாந்தில் மின் தட்டுப்பாடு காலத்தில் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது போல இப்போது  சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்கலாம் என நினைக்கிறேன்.

# திரையரங்குகளில் தினசரி இரண்டுக்காட்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கலாம்.தமிழ் நாட்டில் சுமார் 1500 அரங்குகள் இருக்கலாம் எனவே நிறைய மின்சாரம் மிச்சம் ஆகும் , மக்களுக்கும் பணம் மிச்சம் ஆகும்.

# தொலைக்காட்சி ஒளிப்பரப்பை இரவு 10 மணியோடு நிறுத்த செய்யலாம்.

# ஐ.பி.எல் போன்ற பகலிரவு விளையாட்டுப்போட்டிகளுக்கு  தடை விதிக்கலாம்.

#வணிக வளாங்களில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு கொண்டுவரலாம்.துணிக்கடை ,நகைக்கடைகளில்  பகலிலும்  அதிக விளக்குகள் எரிவதை காணலாம்.அப்போது தான் அவர்கள் பொருள் பள பளக்குமாம்.

#இரவு 9 மணிக்கு மேல் கடைகள் ,வர்த்தக நிறுவனங்களை மூட செய்யலாம்.

# தமிழ் நாடு முழுக்க தெரு விளக்குகளாக பயன்ப்படுத்தப்படும் அதிகம் மின்சாரம் குடிக்கும் சோடியம் வேப்பர் விளக்குகளுக்கு தடை விதிக்கலாம். வழக்கமான குழல் விளக்குகளை தெருவிளக்குகளாக பயன்ப்படுத்த வேண்டும்.மக்களை மட்டும் குண்டு பல்ப் பயன்ப்படுத்த வேண்டாம்னு சொல்லிட்டு அரசாங்கம் செய்யுற வேலைய பாருங்க :-))

#அரசியல் கட்சி கூட்டம், மாநாடு எல்லாம் பகலில் மட்டும் நடத்த வேண்டும், சீரியல் லைட் , கிலோ மீட்டர் கணக்கில் விளக்கு புடிப்பதை எல்லாம் தடை செய்யலாம்.

இன்னும் நிறைய சிக்கன நடவடிக்கை  எடுக்கலாம், உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.

அடுத்தப்பதிவில் விரிவாக நிலக்கரி ,அனல் மின்சார உற்பத்தி , மற்றும் மரபு சாரா மின் உற்பத்தி சாத்தியங்களை முடிந்தவரை விளக்கலாம் என இருக்கிறேன்.

------
பின்குறிப்பு:

தகவல்கள், படம் ,கூகிள்,விக்கி,நன்றி!

Friday, April 06, 2012

வெடிக்கும் தொலைக்காட்சி பெட்டிகளும் துடிக்கும் சீரியல் பக்தைகளும்



(EXPLODING T.V BOX)


சென்னை ,ஏழுகிணறு பகுதியை சேர்ந்த நாக லிங்கம் என்ற குடை வியாபார நிறுவன பொறுப்பாளர் , தனது வீட்டில் மின் தடையின் போது "தலைகீழ் மின்மாற்றி சேமகலத்தின் (inverter)உதவியுடன் தொலைக்காட்சி பார்த்த பொழுது ,தொலைக்காட்சிப்பெட்டி வெடித்து இறந்து போனார்.
-இன்றைய தின மலர் செய்தி:
man died due to tv explosion

மேலும் த.சே மூலம் தொ.கா பார்த்ததால் தான் வெடித்திருக்க வேண்டும் என்றும் யூகம் சொல்கிறார்கள்.ஆனால் சம்பவத்தின் போது த.சே சிறிதும் சேதமில்லாமல் இருந்துள்ளது.

மின்சாரம்,மின் தடை, த.சே என பதிவெல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறோம் இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென ஓரளவுக்கு தெரிகிறது, மின் தடை தலை விரித்துப்போட்டு ஆடும் இக்காலத்தில் பலரும் த.சே வாங்கி இருப்பார்கள்,பலர் வாங்க திட்டமிட்டு இருப்பார்கள் அப்படி இருக்கும் போது பலருக்கும் ஒரு அச்சம் வரலாம் எனவே நம்ம அறிவுக்குதிரையை தட்டி இந்நிகழ்விற்கான காரணத்தை விளக்கி மக்களுக்கு பயம் நீக்கி /உருவாக்கி ஒரு சேவை செய்யலாம்னு இப்பதிவு :-))

மேலும் இன்வெர்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கி நான் முன்னர் போட்ட பதிவின் சுட்டி கீழே,

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி

#தொ.கா வெடிக்குமா?
(T.V explosion)


வெடிக்கும், குண்டு சி.ஆர்.டி (CRT)வகை தொ.கா மின் சுற்று (electric circuit)கோளாறுகளால் சில சமயங்களில் வெடிக்கும். ஒரு காலத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தொ.கா கள் பெருமளவு வெடித்து பீதியை கிளப்பின. அது குறித்து முன்னர் நான் எழுதிய கூடன்குளம் அணு உலைப்பதிவிலும் குறிப்பிட்டு தொ.கா வே வெடிக்கிறாப்போல தான்  தயாரிக்கிறாங்க,அவர்களால் எப்படி பாதுகாப்பான அணு உலை தயாரிக்க முடியும் என்று சொல்லியிருப்பேன்.(வழக்கம் போல நீங்களும் படிக்காமலே போய் இருப்பிங்க)

வெடிக்கும் ரஷ்ய தொ.கா பற்றிய செய்தி:
(exploding russian made tv sets)

Soviet television sets tended to explode, because of faulty manufacturing. The surprising and alarming propensity of Russian receivers to blow up, and by extension the apprehension it causes in Soviet viewers, was one of the stranger features of Soviet life. By one estimate, sixty percent of all apartment fires in Moscow are caused by mass-produced Soviet television sets, which hada tendency to explode. Of the 715 apartment fires in Moscow in November 1987, 90 were blamed on exploding television sets, a statistic the Soviet press viewed as an alarming commentary on Soviet technology. Police said three television models notorious for defective wiring are being removed from the market, and millions of warning leaflets have been mailed to television owners.

exploding tv sets

ஏன் தொ.கா கள் வெடிக்கிறது என்று பார்ப்போம், தொ.காவில் காட்சி திரையானது(display) ஒளிரும் பூச்சுக்கொண்ட முகப்புள்ள  வெற்றிட குழாயால்(vacuum crt) ஆனது அதனுள் எலக்ட்ரான் கற்றையை (electron beam)செலுத்தி காட்சி உருவாக்கப்படுகிறது.இதற்காக எலக்ட்ரான் துப்பாக்கி(electron gun) என்ற அமைப்பும் உள் இருக்கும். சாதாரணமாக வீட்டு மின் அழுத்தம் 220 ஓல்ட் தான் அதைக்கொண்டு எலக்ட்ரான் கதிரை உருவாக்க முடியாது என்பதால் தொ.காவில் ஒரு உயர் அழுத்த மின்மாற்றி (step up transformer,smps)சுற்று இருக்கும், அது சுமார் 12000 ஓல்ட் அளவுக்கு மின்னழுத்தத்தினை உயர்த்தும். அப்படி பாயும் கதிர் சி.ஆர்.டி (crt)யில் பட்டு பிம்பமாக உருவாகி உங்களுக்கு திருமதி செல்வமாக கண்ணீர் விடலாம், அல்லது ஐ.பி.எல் உற்சாக ஆட்ட பெண்டீராக (IPL cheers gals)மாறி இடுப்பைக்குலுக்கலாம் என்ன நிகழ்ச்சியோ அதுவாக காட்சிப்பெறும்.

இப்போ இப்படி பாயும் எலக்ட்ரான் கற்றையின் எல்லா எலக்ட்ரான்களும் பிம்பமாக மாறிவிடாது சில தறுதலை எலக்ட்ரான்கள் (scattered electrons)தெறித்து அங்கும் இங்கும் போய் குழாயில் ஒட்டிக்கொண்டு நிற்கும் ,மணிக்கணக்கில் தொ.கா பார்க்கும் போது போது நிறைய தறுதலை எலக்ட்ரான்கள் சேர்கையில், கள்ள ஓட்டுப்போட்டு தமிழ் மண மகுடம் பிடிக்கும் பதிவர்கள் போல பெரும் மின்சக்தியாக உருவாகிவிடும் (build up power), இப்படி கூறுக்கெட்டத்தனமாக குவியும் மின்சக்தியை வடிக்கட்டி வெளியேற்ற வேண்டும் இல்லையானால் தொ.கா வெடித்து விடும். வெடிப்பிலும் வித்தியாசமாக வெடிக்கும், வெற்றிட குழாய் என்பதால் உள்நோக்கி (implosion)நொறுங்கும். ஆனால் எப்படி வெளியில் சிதறுகிறது என்றால் அதுக்கு இன்னொரு வெடி உள்ள இருக்கு என்பதாலே.



இப்படி குவியும் எலக்ட்ரான் மின்சக்தியை வடிக்கட்டி வெளியேற்ற ஒரு மின்சுற்று(draining circuit) குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும், அது அவ்வப்போது மின்சக்தியை ஒரு மின் தேக்கிக்கு (capacitor)அனுப்பி பின்னர் அதனை தொ.காவின் உள்ளீடு மின்சாரத்துடன்(input power) சேர்த்து பயன்ப்படுத்திக்கொள்ளும்.அதாவது விரயம் ஆகும் மின்சாரத்தினை மறு சுழற்சி செய்துக்கொள்ளும் (feed back power)படி தொ.கா வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் பெரும்பாலும் வெடிப்பதில்லை.

குழாயில் இருந்து மின்னூட்டத்தினை வடிக்கட்டும் மின் சுற்று மற்றும் அதனைப்பெற்று பயன்படுத்தும் மின் தேக்கியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் ,மின்சாரம் வடிக்கட்டப்படாமல் குவிந்துக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் குழாய் (crt)வெடிக்கும் அப்படி குழாய் வெடிக்கும் போது , உடன் மின் தேக்கி(capacitor) உயர் அழுத்த மின் மாற்றியும் (smps)சமயங்களில் சேர்ந்து வெடிக்கும் அப்படி எல்லாம் சேர்ந்து வெடிக்கும் போது பெரும் விளைவாக இருக்கும் அப்படியான தருணங்களில் தீ விபத்து , உயிர் இழப்பும் ஏற்படலாம்.

இப்போதைய நவீன தொ.கா பெட்டிகளில் இது அரிதான ஒரு விபத்து ,வழக்கமாக நடக்காது, ஆனால் பல ஆயிரம் தொ.காவில் ஏதேனும் ஒன்றில் தயாரிப்பின் போதே பழுதுடன் வரலாம், அல்லது பயன்ப்பாட்டின் போது மின் சுற்று பழுதாகலாம். அது அவரவர் அதிஷ்டம் பொருத்து.

இதற்கு த.சே காரணமாகுமா என்றால் ஆக வாய்ப்பு வெகு குறைவு ஏன் எனில் குறைவான மின் அழுத்தமே அதனால் கொடுக்க முடியும் ஆனால் மட்டமான த.சேக்கள் சரியாக தூய முழு அலை மாறு மின்சாரம்(pure sine wave) வழங்காமல் போகும் பட்சத்தில் அது தொ.காவின் உள் மின்சுற்றுகளை பாதிக்க வைத்து பின்னர் மின்வடி சுற்றினை செயல்படாமல் போக வைக்க சாத்தியம் உண்டு. இப்படி தொ.காவில் மின் சுற்று பழுதானாலும் உடனே வெடித்து விடாது நீண்ட நேரம் இடைவிடாமல் தொ.கா பார்க்கும் போது தான் வேலையைக்காட்டும்.

மேலும் மின்சாரம் நின்று வரும் போது ஏற்படும் திடீர் உயர் மின்னூட்டமும் (surge current)தொகா.மின் சுற்றினை பழுதடைய செய்யலாம், உடனே விளைவுகள் தெரியாமல் போவாதால் நாம் தொடர்ந்து சீரியல் சிற்றின்பத்திலோ அல்லது கிரிக்கெட் கிளு கிளுப்பிலோ  கிறங்கி கிடக்கும் போது மின்னூட்டம் பெருகி வெடிப்பாக விளையலாம். அப்படி திடிர் மின் உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்க surge protector தொ.காவுக்கென வாங்கிப்பயன்படுத்தலாம்.

ஆயுட்காலம் முடிந்த  பின்னும் மறுசுழற்சி(waste recycling) செய்யாமல் தொ.கா வை பிளாஸ்டிக் கவர் போட்டு பொத்தி பொத்தி வைத்து பார்க்கும் போதும் எத்தனை நாளு தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது என்று தொ.கா பொங்கியும் வெடிக்கலாம்.

அப்போ என்ன தான் தீர்வு,

 #தொ.கா உள்ளே மின் சுற்று ஒழுங்கா இருக்கானு தெரியாத நிலையில் நீண்ட நேரம் தொ.கா பார்ப்பதை தவிர்க்கலாம் .

#ஐ.பி.எல் உற்சாக ஆட்டப்பெண்டீரின் இடுப்பு சரியா தெரியலைனு ரொம்ப கிட்டே போய் தொ.கா பார்க்காமல் ஒரு பத்தடி தள்ளி உட்கார்ந்து பார்க்கலாம்,


#பணம் நிறைய இருந்தாலோ அல்லது இப்போ தான் கல்யாணம் ஆன புது மாப்பிள்லை  எனில் மாமனாரை கறந்து ஒரு 42 இஞ்ச் லெட் (LED T.V)அல்லது எல்சிடி தொ.கா (LCD  T.V)வாங்கி சுவற்றில் மாட்டிக்கொள்ளலாம். (நானா தொ.கா பார்க்கிறேன் உங்க பொண்ணு தான்  பொழுதன்னிக்கும் தொ.காவே கதினு கிடக்கா அவ நல்லா இருக்க தானே கேட்கிறேன் என மாமாவிடம் பிட் போடலாம்)

#எல்லாவற்றையும் விட எளிய பாதுகாப்பான வழி அந்த முட்டாள் பொட்டியைப்(IDIOT BOX)பார்க்காமலே இருக்கலாம் :-))

--------
பின்குறிப்பு:

படங்கள், தகவல்கள் உதவி, கூகிள்,விக்கி,தி இந்து, தினமலர் தளங்கள்.நன்றி!

Thursday, April 05, 2012

என்ன கொடுமை சார் இது-4






என்ன கொடுமை சார் இது-4

மங்குனி உத்திரம்:

பங்குனி வெயில் பல்லைக்காட்டுது இதுல ஆறுமுகனுக்கு அரோகரானு ஒரு கோஷ்டி பால் காவடி ,பன்னீர் காவடினு தூக்கிக்கிட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடிக்கிட்டு போகுதுங்க ,கேட்டா பங்குனி உத்திரமாம், எனக்கு தெரிஞ்சு உத்திரம்னா ஓட்டு வீட்டுல நடுவில போடுற மர பீம் இவங்க எங்கே போய் பீம் போட போறாங்களோ :-))

என்னமோ செய்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு 2-3 நாளாவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி போட்டு லூர்து மேரி ராஜேஷ்வரி, தொளுகுவா மீனாட்சி சவுந்தர ராஜன் ஆகியோர் பாடிய பக்தி பழரச பாடல்களை உச்சஸ்தாயில அலரவிட்டு என் காது ஜவ்வுல கடப்பாரைய விட்டு ஆட்டிட்டாங்க மை லார்டு முருகா , இதெல்லாம் இல்லைனா நீ அருள் பாலிக்க மாட்டியா ? இதுக்கே மின் வெட்டினால் அவங்க பக்தி சேவை பாதிக்க கூடாதுனு ஜெனெரேட்டர் வேற வச்சு பாட்டுப்போடுறாங்க வேலைய்யா ,இது என்னய்யா நியாயம்.

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி ஒலி மாசு செய்வது என்று தடைசெய்தார்கள்னு சொல்றாங்க ,ஆனால் ஆன்மீக ,அரசியல் கூட்டங்களில் அதான் கிழியுது ,அதுக்கு காவல் துறை பாதுகாப்பு வேற, என்ன தடையோ ,சட்டமோ அது எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.

ஆறுமுகம்னு சொல்றாங்களே அந்த படம் எப்படி இருக்கும்னு தேடிப்பார்க்கலாம்னு தேடினா பாடாவதி சினிமாக்களான சின்ன தளபதி பரத்தின் ஆறுமுகம், குயிக் கன் முருகன், மூலக்கடை முருகன் போன்ற  படங்கள் தான் முதலில் வருது. மூலக்கூடை முருகன் படம் பவர் ஸ்டாரோடது ஸ்டில்லே செம டெர்ரரா இருக்குனா படம் எம்புட்டு டெர்ரரா இருக்கும் ,அத பார்க்கிறவன் உசுரோட வருவான்னு நினைக்கிறிங்க :-))



சரி சமாச்சாரத்துக்கு வருவோம், ஆறு தலையோட ஒரு படத்த பார்த்தேன், ஆனால் பாருங்க ஒரு கழுத்து தான் இருக்கு ,அதுக்கு இடப்பக்கம் ரெண்டு  தலை, வலப்பக்கம் மூன்று தலை. அடப்பக்தி பதருகளா நடுவில ஒரு தலைய வச்சு ஒரு பக்கம் 2, இன்னொரு பக்கம் 3 வச்ச எப்படியா பேலன்ஸ் ஆவும், ஒரு சைடுக்க இழுக்காதா? வச்சது தான் வச்சிங்க ஒரு 7 தலைய வைக்க என்ன கேடு? , ரெண்டுப்பக்கமும் தலா மூன்று தலைனு பேலன்ஸ் ஆகும்ல :-))

வாரத்துக்கு ஏழு நாள் , அதான் ஏழு தலை எனவே எங்க மதம் அறிவியல் மதம்னு இந்த மதவாதிகள் பதிவு போட உதவி இருக்குமே :-))

எனக்கு தெரிஞ்சது கூட கடவுளை கற்பனை செய்தவங்களுக்கு தெரியலையே என்ன கொடுமை சார் இது!

*****


பாக்தாத் கஃபே:

ஜெர்மனிய ஹாலிவுட் தயாரிப்பு படம் 1987 இல் வந்தது ,ஆஸ்கார் நாமினேஷேன் வரைக்கும் போன ஒரு ஃபீல் குட் படம்.


ஜெர்மானிய சுற்றுலா பயணியான ஒரு பேரிளம் பெண் ஆன் தி வேயில் கணவனுடன் சண்டைப்போட்டுக்கிட்டு , அமெரிக்க மொகாவோ பாலை , சாலை வழிப்பயண சிற்றுண்டி விடுதிக்கு வருகிறார். அந்த சாப்பாட்டுக்கடைப்பேரு தான் பாக்தாத் கஃபே :-))

பாக்தாத் கஃபே ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கு, சரியான பராமரிப்பு இல்லை, போனா போவுதுனு சில பேர் வந்து பீர் ,காபி குடிக்கிறாங்க அத வச்சு  கணவனை பிரிந்த ஒரு பெண்மணி ஒரு மகனோடு வாழ்க்கையை ஓட்டுகிறாள்.



இப்படியான சூழலில் அங்கு வரும் கதாநாயகி அங்கே வேலைக்கு சேர்ந்து சுத்தம் செய்து வாடிகையாளர்களை அன்பாக கவனித்து வியாபாரத்தினை பெருக்குகிறாள்.கொஞ்சம் மேஜிக் வித்தையும் தெரியும் என்பதால் அனைவரையும் கவர்கிறாள்.இதுக்கு நடுவே அங்கே வரும் சினிமா செட் ஆர்டிஸ்ட் கு லேசா ஒரு காதல் வருது.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா ஹீரோயின் வயசான பெண்மணி, அதே போல ஆர்டிஸ்டும் தான். அதாவது மெச்சூர்டான லவ்வாம், காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை வயசும் இல்லைனு இயக்குநர் சொல்ல வரார் :-))

பாலைவனத்துல அழுது வடிஞ்ச சாப்பாட்டுக்கடை திடிர்னு ஜெக ஜோதியா ஜொலிக்குதேனு அந்த ஊர் ஷெரிப் சந்தேகப்பட்டு வந்துப்பார்த்தா ஜெர்மனிய பெண்மணி தான் காரணம்னு தெரியுது. சுற்றுலா விசா தான் வச்சு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னும் 24 மணி நேரத்துல நாட்டை விட்டு போகணும், இல்லை நானே நாடு கடத்துவேன் போல ஒரு மிரட்டல் .

நாட்டுக்கு திரும்ப போறதா ,இங்கேயே எப்படி இருப்பதுனு ஒரு குழப்பம்,அப்போ ஆர்டிஸ்ட் ஒரு ஐடியா குடுக்கிறார் ,என்னை கண்ணாலம் கட்டிக்கோ குடியுரிமை கிடைச்சிடும்னு, அப்புறம் என்னாச்சா போங்கப்பா போய் யுடியுப்பில் படம் இருக்கு பாருங்க ,இலவசமா தான்..

இந்த படத்தோட கதைய கேட்டதும் மாதவர் நடிச்ச நள தமயந்திக் கதை நியாபகம் வந்தா அதற்கு அடியேன் பொறுப்பல்ல,எல்லாம் ஒரு ஒத்த சிந்தனையா இருக்கும்னு எடுத்துக்கணும் :-))

இந்த பாக்தாத் கஃபே  படம் மெட்ராஸ் கஃபே, மெரினா கஃபே னு இன்னும் பல வடிவம் தமிழில் எடுக்கும்னு தோன்றுகிறது.

டிவிடி, இணைய படங்கள் எல்லாம் தடை செய்துட்டா தமிழ்ல படம் எடுத்துட்டு ஒலகப்படம் எடுத்தேன்னு சொல்லிக்கிறவங்களாம் காணாமல் போய்டுவாங்க :-))

தமிழ் சினிமாவில மட்டும் தான் தமிழ்ல நடிச்சுட்டு "லோக நாயகன்" எனப்பட்டம் போட்டுக்க முடியும், என்ன கொடுமை சார் இது!

*****
மின் வெட்டு அரசியல்:

மின்சாரம் குறித்து பதிவுகள் சில போட்டிருந்தாலும் , இன்னும் சொல்ல நிறைய இருக்கு, மின் வெட்டு அரசியல் பற்றி இன்னொரு பதிவு வரும், அதுக்கு முன்ன ஒரு டீசர் டிரெய்லர் இது :-))


ஒரு பதிவரின் வலைப்பதிவில் மின்வெட்டு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது , இப்போதைய மின் வெட்டுக்கு பெரிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படலை, 2-3 ஆண்டுகளில் புதிய தலைமை செயலகம் கட்ட காட்டிய வேகத்தில் ஒரு 1500 மெ.வாட் மின் திட்டம் கட்ட காட்டியிருக்கலாம்னு சொன்னேன்.

பிரகாசமான அரசியல் எதிர்காலம் உள்ளவரும் ,பிரபல பதிவருமான அண்ணன் எம்.எம்.அப்துல்லா திடிரென பிரசன்னம் ஆகி ,  இல்லை நிர்வாகம் செய்ய தெரியலை அம்மையாருக்குனு சொன்னார்.

நான்: 2001 -2006 காலத்தில்  தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது, ஆனால் 2006-11 காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது அதன் உச்சம் இப்போது எனவே கடந்த 5 ஆண்டுகாலமாக புதிய மின் உற்பத்தி செய்யாததே காரணம் என்றேன்.புள்ளி விவரங்களும் அளித்தேன்.

அதற்கு அப்துல்லா அண்ணன் சொன்னார் பாருங்க ஒரு பதில் அது போல பிரபல அரசியல்வாதிகளால கூட சொல்ல முடியாதுனா பார்த்துக்கோங்க,

2000 க்கு முன்னர் அய்யா காலத்தில போட்ட மின் திட்டங்களால் தான் 2001 -2006 இல் மின் தட்டுப்பாடு இல்லாம இருந்துச்சாம், ஆகா ...ஆகஃக்கா :-))

அப்போ மின் தட்டுப்பாடு இல்லைனா அது அப்போவே அய்யா செய்த சாதனைனு சொல்லிக்கிறார் சரி ஓ.கே வச்சுப்போம், இப்போ மின் தட்டுப்பாடுக்கு காரணம் முந்தைய காலத்தில் எதுவும் செய்யலைனா அப்போ மட்டும் எங்க ஆட்சி காரணம் இல்லைனா எப்படி?

2000க்கு முன்ன 5 ஆண்டுகளில் செய்தார் எனில் ஏன் 2006-11 இல் எதுவும் செய்யலைனு சொன்னா அதையும் ஒத்துக்க வேண்டாமா அப்போ மட்டும் இல்லைனா எப்படி அண்ணே.

எந்தக்காலத்தில் நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் நாங்க தான்னு பெருமை தேடும் போது கெட்டது நடந்தா மட்டும் இவங்க தான் காரணம்னு சொல்வது தான் கழக அரசியலா என்ன கொடுமை சார் இது :-))

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து வாங்கிய மின்சாரத்துக்கு பணம் கொடுக்காமல் உள்ள நிலுவை தொகை மட்டும் சுமார் 10000 கோடி, எனவே இப்போது  தேவைக்கு மின்சாரம் வாங்க முடியாமல் 150 மெ.வாட் மட்டுமே வாங்குகிறது மின்வாரியம். மேலும் காற்றாலை மின்சாரம் குறைந்து விட்டதால் மின் தட்டுப்பாடு 4000 மெ.வாட் ஆகும் எனவே அதிக மின்வெட்டு.

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் மின்சாரம் வாங்கிவிட்டு காசுக்கொடுக்காமல் டபாய்த்தால்,இப்போ மின்சாரம் வாங்க முடியவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. சுட்டி


மின்சாரக் கடன்


இப்போவும் கையில காசு கொடுத்தா மின்சாரம் கிடைக்கும் ,அரசு என்னமோ அன்னக்காவடிப்போல செயல்ப்படுது,  மின்க்கட்டணம் உயர்த்திய பிறகாவது மின் தடை நீங்குதா என பார்ப்போம்.

எனக்கு என்னவோ , மின் கட்டணம் உயர்த்தினா மக்கள் அதிக எதிர்ப்பு காட்டாமல், கூட வேண்டும்னா காசு தரோம் மின்சாரத்தை கொடுங்கனு சொல்ல கூடிய மன நிலைக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகவே கடுமையான மின்வெட்டினை செயல்படுத்தினார்களோ என்று தோன்றுகிறது.

அரசு நினைத்தார் போல தான்  இப்போ நடந்திருக்கு, மக்களும் ரொம்ப பெருசா எதிர்ப்பு காட்டவில்லை.இதற்கு பெயர் தான் அரசியல் இராஜ தந்திரமா?

 என்ன கொடுமை சார் இது!

---------------
பின்குறிப்பு: படங்கள் ,செய்திகள் உதவி கூகிள்,விக்கி,IMDB,இணைய தளங்கள்,நன்றி!