ரொம்ப லைட் ஆக எதாவது எழுதனும்னு ஆசை பட்டேன் ஆனால் கடந்த முறை கொஞ்சம் தீவிரமா போய்டுச்சுங்கண்ணா........அத சரி கட்ட இந்த தடவை ஒரு கவிதை எழுதிடலாம்...னு பார்க்கிரேன்(இது அத விட "தீ"விரம்னு சொல்றிங்களாண்ணா)
நீங்க வேணாம்னு சொன்னாலும் .... விடுவதாக நான் இல்லை ...அப்ரம் எப்போதான் நானும் "கவி பேரரசு "ஆவுரதுங்கண்ணா (தோடா ...பிலாக் போடுரவன் எல்லாம் இப்படியே கிளம்புராங்கப்பா....சாமி இத்தோட 1118 ஆவது ஆளு இவனு சொல்ரது கேட்குதுங்கண்ணா)........
படிச்சு பாருங்கண்ணா... நல்லா இருந்தா வெளில நாலு பேருக்கு சொல்லுங்க நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்கண்ணா பொய்மையும் வாய்மை இடத்துனு சொல்லுவாங்கண்ணா!........சரி இதோ கவித...... புடிங்க படிங்க ......இது 100 சதவிகிதம் எனது சொந்த படைப்பே...யாரையும் தழுவி எழுதியதல்ல (பெண் கவிதாயினிகள் நன்றாக எழுதும் பட்சத்தில் தழுவும் உத்தேசம் உண்டு கவித எழுத தான் சொன்னென் வேர எதுக்கும் இல்லங்கண்ணா)
பிரிவும்...சந்திப்பும்
அவர் அவர் உணர்வுகள் அவர் அவர் இதயத்தில் அவர் அவர் பயணம் ஆளுக்கொரு திசையில்ஏதோ ஒரு புள்ளில் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனம் காண கூடுமோ அல்லது நீ யாரோ நான் யாரோ என்றுவேறு திசை நோக்கி பயணிப்போமா?
பிரிவது தெரிந்தே பிரிந்தோமா...
மீண்டும் சந்திக்க நேராமல் கூட போகலாம்..
காற்றில் அலைந்தாடும் பட்டம் வெகு தொலைவு பறப்பதில்லை
கையில் நூல் உள்ள வரை கட்டுண்டே பறக்கிறது காற்றில்
உணர்வுகள் தொடரும் வரை விலகி சென்றாலும்
பின் தொடர்ந்தே செல்கிறது மனம்!