(ஹி..ஹி வருகைப்புரிந்தோர் அனைவருக்கும் வணக்குமுங்க)
முட்டை மந்திரம்!
//Information Technology Act, 2000
66. Hacking with Computer System. -
(1) Whoever with the intent of cause or knowing that is likely to cause wrongful loss or damage to the public or any person destroys or deletes or alters any information residing in a computer resource or diminishes its value or utility or affects it injuriously by any means, commits hacking.
(2) Whoever commits hacking shall be punished with imprisonment up to three years, or with fine which may extend up to two lakh rupees, or with both.//
மூலம்:http://www.vakilno1.com/bareacts/informationtechnologyact/s66.htm
செக்ஷன் 66 ஏ கணினியை ஹேக் செய்த குற்றத்திற்கான பிரிவு என இந்த இணைய தளம் சொல்கிறது.
ஹி...ஹி துவித்தரில் ஆபாசமாக கமெண்ட் போட்டதாக சொல்லப்பட்டு ராஜன் என்பவரும், கார்த்தி சிதம்பரம் அவர்கள் பற்றி கமெண்ட் போட்டதற்காக ,புதுவையை சேர்ந்த ரவிஶ்ரீனிவாசன் மீதும் பிரிவு 66ஏ வின் கீழ் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அப்போ துவித்தரில் கமெண்ட் போடுவது தான் ஹேக்கிங்கா அவ்வ்வ் :-))
என்ன கொடுமை சார் இது!
*****
update:
section 66A of information tectchnology act 2000 , செய்தியில் வந்ததை அப்படியே தேர்வு செய்து கூகிளில் தேடியப்போது கிடைத்த வக்கீல் நம்பர்-1 தளத்தில் இருப்பதை அப்படியே போட்டேன், சட்டம் 2008 இல் திருத்தப்பட்டு , புதிய பிரிவுகளும் 66ஏ வில் சேர்க்கப்பட்டுள்ளதை பதிவர் நந்தவனம் குறிப்பிட்டுள்ளா ,அது இங்கே,
"நந்தவனத்தான் said...
66 A Punishment for sending offensive messages through communication service, etc.( Introduced vide ITAA 2008)
Any person who sends, by means of a computer resource or a communication device,-
a) any information that is grossly offensive or has menacing character; or
b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by making use of such computer resource or a communication device,
c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages (Inserted vide ITAA 2008)
shall be punishable with imprisonment for a term which may extend to three years and with fine."
முழு ஐடி தண்டனை சட்டமும் இங்க இருக்கு
http://cybercrime.planetindia.net/ch11_2008.htm
சுட்டியில் சென்று முழு சட்டமும் அறிக.
நன்றி, திரு.நந்தவனம்.
சொல்லி அடிக்கும் சு.சுவாமிகள்!
ஜனதா கட்சியின் தலைவர் அதிரடி பட்டாசு சு.சுவாமி அவர்களின் துவித்தரில் இது போல நிறைய பட்டாசுகள் வெடிக்கிறார் ...
நன்றி:
//https://twitter.com/Swamy39/status/264183595843862528
வலைப்பதிவு:http://swamy39.blogspot.in/2011/11/news-makers-of-2011-dr-subramanian.html
ஹி...ஹி போட்டு தாக்குற பெருந்தலைகளை எல்லாம் விட்டுப்புட்டு புள்ளைப்பூச்சிகளை போட்டு தாளிக்குறாங்களே :-))
என்ன கொடுமை சார் இது!
-------------------------------
லோக நாயகர்- ரீல் அந்து போச்சு!
கி.பி.1987 இல் தமிழில் வெளிவந்த நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு கிரானைட் கல்(எத்தினி நாளுக்கு மைல் கல்லையே இழுப்பதாம்) என்றால் மிகை இல்லை, நாயகன் படம் வெளிவந்த காலத்தில் இருந்தே காட்பாதரின் தமிழ் பரிணாமம் என்றே கூறப்பட்டு வந்தாலும் Time magazine இல் சிறந்த 100 படங்களின் பட்டியலில் இடம் பெற்று ,தரத்தில் குறைவில்லாத தமிழ் படம் தான் நாயகன் என ISO சான்றும் பெற்றாச்சு, படம் வந்து 25 ஆண்டுகள் உருண்டோடி போயிற்று, ஆனால் இப்போ வந்து லோகநாயகன் அந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.முக்தா ஶ்ரீனிவாசன் மட்டும் கொஞ்சம் தாரளமாக நடந்துக்கொண்டிருந்தால் உலகப்படமாக நாயகன் வந்திருக்கும் என சாம்பிராணி போடுகிறார்.
மணிரத்னத்தின் திறமைக்கும், லோகநாயகரின் திறமைக்கும் உரிய மதிப்பு கொடுத்து கலைப்படமாக ,உலகப்படமாக எடுக்காமல் மிகப்பெரும் லாப நோக்கோடு 5 லட்சம் லாபம் சம்பாதிக்க மட்டுமே தயாரிப்பாளர் ஆசைப்பட்டார் என குண்டை போடுகிறார்.
1987 கால கட்டத்தில் ஒரு கோடி என்பது பெரிய தொகை, 60 லட்சம் பட்ஜெட் போட்டு ஒரு கோடி செலவழித்த படத்தில் இருந்து 5 லட்சம் லாபம் கிடைத்தால் போதும் என நினைப்பது எந்த வகையில் குற்றம் ஆகும்?
5 லட்சம் என்பது முதலீட்டில் மீது 5% லாபமே ஆகும், எந்த ஒரு தொழிலிலும் 12% ரிட்டர்ன் எடுப்பதே சரியான லாப விகிதம் ஆகும், 12% க்கு மேல் கிடைத்தால் உபரி லாபம். பொருளாதாரம் படித்தவர்களுக்கு தெரியும், படிக்காமலே வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் கூட 10% கம்மியா லாபம் வருவது போல வியாபாரம் செய்ய மாட்டார்கள்.
இந்த சமாச்சாரத்தில் அலச நிறைய விடயங்கள் இருக்கு, ஆனால் லோக நாயகர் சொன்னதில் ஃபில்ம் ரோல் குற்றச்சாட்டினை மட்டும் பிரதானமாக பார்க்கலாம்.
தேவையான ஃபில்ம் ரோல்கள் கூட கொடுக்காமல் தினசரி கோட்டா வைத்து கஞ்சத்தனமாக தயாரிப்பாளர் நடந்து கொண்டார் என சொல்லி இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் 1987 இலேயே 100 ரோல்கள் பில்ம் செலவழித்து எடுத்தப்படம் என உண்மையை சொல்லி இருக்கிறார்.
100 ரோல் ஃபில்ம் என்பது தேவைக்கு அதிகமான ரோல்களே.
திரைப்படங்களின் நீளத்தினை ரீல் கணக்கில் சொல்வார்கள்.
ஒரு ரீல் என்பது 1000 அடி, 300 மீட்டர் , சுமார் 11 நிமிடம் ஓடும் அளவுக்கான திரைச்சுருள்.
ஒரு ரோல் colour film negative என்பது 1000 அடி நீளம் இருக்கும், அதாவது ஒரு ரீல் நீளம் இருக்கும்.
பெரும்பாலும் 35 மி.மீ திரைப்பட நெகட்டிவ் ரோல்கள் , 1000 அடி, 400 அடி என இரண்டு வகையில் விற்கப்படும். பொதுவாக ஒரு ரோல் ஃபில்ம் என்றால் 1000- அடி நீளத்தையே குறிக்கும்.
ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் 12 ரீல் அதாவது 12,000 அடி நீளத்தில் பொதுவாக தயாரிப்பார்கள் , தமிழில் 14-15 ரீல்கள் பொதுவான திரைப்பட நீளம் ஆகும்.
திரைப்படம் எடுக்க திட்டமிடும் போது , film roll எவ்வளவு தேவைப்படும் என்பதையும் கணக்கிடுவார்கள். இதனை இறுதியாக எடிட் செய்து உருவாக்கும் திரைப்படத்தின் நீளத்துடன் ஒரு விகிதாச்சாரத்தில் ஒப்பிட்டு கணக்கிடுவார்கள்.
பொதுவாக 1:4 ,கொஞ்சம் தாராளமாக ஷூட் செய்யலாம் என நினைத்தால் 1:5 என்ற விகிதத்தில் கணக்கிடுவார்கள்.
12 ரீல் திரைப்படம் எடுக்க 1:4 என்ற விகிதம் எனில் 48 ரோல் ஃபில்மும், 1:5 எனில் 60 ரோல் ஃபில்ம் எனவும் கணக்கிட்டு வாங்குவார்கள்.
ஹாலிவுட் பாணி என சொல்லிக்கொள்ளும் லோக நாயகர் ,முக்தா ஶ்ரீனிவாசை "tight fisted" என கஞ்சத்தனம் என்கிறார். ஆனால் ஹாலிவுட்டில் ஒரு இயக்குனர் இப்படி கணக்கிட்ட அளவுக்கு மேல் ஃபில்ம் செலவழித்தால் படத்திலிருந்தே தூக்கிவிடுவார்கள்,பிறகு ஹாலிவுட்டில் எந்த ஸ்டுடியோவும் வாய்ப்பே கொடுக்காது.
ஹாலிவுட்டில் தயாரிப்பு தரப்பான ஸ்டுடியோ வைத்தது தான் சட்டம்.அதனால் தான் எவ்வளவு ஹிட் கொடுத்தாலும் ஒரு இயக்குனரோ, நடிகரோ 100 படம்ம் எல்லாம் அங்கு செய்ய முடியாது.
கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் , இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் விருப்பத்துக்கு படம் எடுக்க தனியாக தயாரிக்க கிளம்பிவிடுவது அதனால் தான். ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஒரு கதையை அவ்வளவு லேசில் அப்ரூவ் செய்யாது.
(ஹி..ஹி நம்ம வாசகி , நம்ம பதிவை தான் படிக்குறாங்க, என்ன கொடுமை சார் இது)
ஏன் திரைப்பட சுருளில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு பொருளாதார கணக்கீடு உள்ளது.
கலர் ஃபில்ம் நெகட்டிவ் விலை சர்வதேச விலை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும், முக்கியமாக வெள்ளியின் சந்தை விலையை வைத்து ,அவ்வப்போது விலை மாறும், ஏன் எனில் ஃபில்ம் ரோலில் உள்ள ரசாயன எமல்சன் silver halide ஆகும்.
வெள்ளியின் விலை 1 ரூபாய் ஏறினால் ஃபில்ம் நெகட்டிவின் விலை 10 ரூ ஏறும் என்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்..
திரைப்படம் எடுக்க ஒரு வகையான கலர் நெகட்டிவ் ஃபில்மும் ,அதனை திரையிடும் சுருளாக print எடுக்க ஒரு வகையான ஃபில்ம் ரோல்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.
கலர் ஃபில்ம் நெகட்டிவ்கள் பல வகையான வேகம், ஒளி அமைப்பில் படமெடுக்க என இருக்கிறது, அதற்கு ஏற்ப கொஞ்சம் விலை முன்ன பின்ன மாறுபடும்.
ஒரு ரோல், 1000 அடி கலர் ஃபில்ம் ரோலின் தற்போதைய சர்வதேச விலை 823 டாலர்கள். நம்ம ஊரில் சுமார் 50,000 Rs பக்கம் என கேள்வி.Kodak,Agfa ,Fuji film போன்றவை கலர் ஃபில்ம் நெகட்டிவ், பிரிண்ட் ஃபில்ம் என தயாரித்து வழங்குகின்றன.
see here: http://motion.kodak.com/motion/Products/Production/index.htm
இன்றைய நிலவரத்துக்கு 100 ரோல் ஃபில்ம் விலை மட்டும் ஐம்பது லட்சம் விலை வரும், டாலர் அடிப்படையில் என்பதால் 1987 இல் ஒரு டாலர் சுமார் 20-22 ரூபாய் அளவில் தான் இருந்தது. 20 ரூ என கணக்கிட்டாலும் அன்றைய விலைக்கே 100 ரோல் கலர் நெகட்டிவ் 20 லட்சம் வருகிறது.
அதாவது படத்தின் பட்ஜெட் ஒரு கோடியில் 20% , இது பொருளாதார ரீதியாக தவறான செலவீனம்.
இன்று 500 ரோல்கள் எல்லாம் வீணடிக்கும் உலகமகா இயக்குனர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் , ஆனால் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்பதை கணக்கில் கொண்டால் இது பெரிய தொகை இல்லை எனலாம்.500 ரோல் ஃபில்ம் விலை சுமார் 2.5 கோடி வரும். 100 கோடியில் 2.5% மட்டுமே.
ஆனாலும் தேவை இல்லாமல் ஃபில்ம் ரோல்களை வீணாக்குவதாலேயே படத்தின் பட்ஜெட் முதலில் கணக்கு போட்டதை விட தாண்டி போவது வழக்கம்.
மேலும் எடுத்த அனைத்து கலர் நெகட்டிவ்களையும் லேப்பில் கொடுத்து பிராசஸ் செய்து நெகட்டிவ் மற்றும் எடிட் செய்ய ஒரு பாசிட்டிவ் என தயாரிக்க வேண்டும். முதல் பிரதிஎன்பது பாசிட்டிவில் எடிட் செய்து திரையிடும் வகையில் ஒரு படம் என ஒன்றை உருவாக்குவது ,பின் முதல் பிரதியின் அடிப்படையில் நெகட்டிவில் எடிட்டிங் செய்து , பின்னர் அனைத்து திரையரங்குகளுக்கும் பிரிண்ட் போட்டு விநியோகம் செய்வார்கள்.
இப்பொழுது நான் லீனியர் எடிட்டிங்க் எல்லாம் வந்த பின் வேலை சுலபமாக நடக்கிறது. இதனை "Non_Destructive editing" எனவும் சொல்வார்கள் ஏன் எனில் உண்மையான ஃபிலிமில் கட் செய்வதே இல்லை,அனைத்தும் டிஜிட்டல் இண்டர் மீடியத்தில் மட்டுமே.
100 ரோல் ஷூட்டிங்க செய்தால் அதில் பல தேவையில்லாத ஓ.கே செய்யாத ஷாட்களும் இருக்கும், ஆனால் அனைத்தையும் பிராசஸ் செய்து பின்னரே எது தேவை ,தேவையில்லை என எடிட்டர் கண்டுப்பிடிப்பார்.எடிட்டரின் பணி குப்பை தொட்டியை கிண்டி புதையல் எடுப்பது போல :-))
நம்ம ஊரில் ஒரு அடி கலர் நெகட்டிவ் டெவெலப் செய்ய சுமார் 10 ரூ இன்றைய அளவில் பில்ம் லேப்கள் வசூலிக்கின்றன.ஹாலிவுட்டில் ஒரு அடிக்கு 0.16 முதல் .20 டாலர்கள்.
100 ரோல்கள் என்றால் ஒரு லட்சம் அடி அதனை 10 ரூபாயால் பெருக்கினால் சுமார் 10 லட்சம், பின்னர் நெகட்டிவ் பிரிண்ட், ஒரு மாஸ்டர் பாசிடிவ் பிரின்ட் என எல்லாம் சேர்த்து , 100 ரோல் வாங்க என்ன செலவாயிற்றோ அதே அளவுக்கு முதல் பிரதி எடுக்கவும் செலவாகும்.அதுக்கு அப்புறம் எடிட்டிங்க் இன்ன பிற போஸ்ட் புரொடக்ஷன் செலவுகள் இருக்கு.
பல படத்தயாரிப்பாளர்கள் பட்ஜெட் எகிறிவிட்டால், ஷூட்டிங்க் முடித்துவிட்டு போஸ்ட் புரடக்ஷன் செய்ய பணமில்லாமல் தவிப்பதுண்டு.
1987 இல் 20 லட்சம் ஃபில்ம் ரோல் வாங்க செலவாகியது என்றால் மேலும் 20 லட்சம் முதல் பிரதி தயாரிக்கவும் ஆகி இருக்கும்.ஒரு லட்சம் அடியில் 14 ஆயிரம் அடிக்கு தான் படம் மீதி எல்லாம் குப்பைக்கு தான் போயிருக்கும்.
இதனாலாயே ஹாலிவுட்டில் ஃபில்ம் ரோல்களை சிக்கனமாக்க தான் பயன்ப்படுத்த சொல்வார்கள். இப்போது 2013 க்கு அப்புறம் ஹாலிவுட்டில் செல்லுலாய்ட் 35 மி.மீ ஃபில்ம் என்பதே புழக்கத்தில் இருக்காது என சொல்கிறார்கள்.படம் எடுப்பதும் டிஜிட்டல், திரையிடுவதும் டிஜிட்டல் என மாற 2013 ஐ காலக்கெடுவாக வைத்துள்ளார்கள். எல்லாம் செலவீனத்தினை கட்டுப்படுத்தவே.இன்செப்ஷன் , பேட்மன் படங்களை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் , படம்பிடிக்க கண்டிப்பாக 35 மி.மி ஃபில்ம் ரோலை தான் பயன்படுத்த வேண்டும், எனவே ஹாலிவுட் இயக்கினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
காரணம் டிஜிட்டல் விலை மலிவு என்றாலும் அதன் தரம் செல்லூலாய்ட் எமல்ஷன் ஃபில்ம் அருகில் கூட இருக்காது என்பதை இயக்குனர்களும் ,ஒளிப்பதிவாளர்களும் அறிவார்கள். டிஜிட்டலில் படம் எடுப்பது ,புரொஜெக்ஷன் செய்வது எல்லாம் செலவை குறைக்கவே மற்றபடி டிஜிட்டல் தரம் இன்னும் ஃபில்ம் ரோல் அளவுக்கு முன்னேறவில்லை.
படத்தின் நீளத்தைப்பொறுத்து ஒரு படத்தின் திரைப்பிரதி தயாரிக்க சுமார் ரூ 70,000 இல் இருந்து ரூ 100,000 வரையில் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட் என்றால் ஒரு 300 ஜிபி ஹார்ட் டிஸ்க்கில் Digital cinema package(DCP) என்ற ஃபார்மேட்டில் ஒலி, ஒளி அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தியேட்டருக்கு அனுப்பப்படும், இதற்கு சுமார் ரூ 5000 போதும். ஆனால் நம்ம ஊரில் QUBE அல்லது UFO வில் அனுப்ப ரூ 20,000 ஆகிறதாம். Qube என்பது ஒரு digital film distribution server and player மட்டுமே அதனுடன் தனியாக , digital projector இணைக்க வேண்டும்.மேலும் கியூப் முறை E-cinema format மட்டுமே சப்போர்ட் செய்யும்,,dcp ஃபார்மேட் செய்வதில்லை. இப்போது கியிபிலும் dcp வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி, மேலும் இந்த விலை வித்தியாசம்,மற்றும் டிஜிட்டல் புரொஜெக்ஷன் போன்றவற்றை இன்னொரு தனிப்பதிவில் காணலாம்.
இப்போ உங்களுக்கே புரிந்திருக்கும் , 1987 இல் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்திற்கு 100 ரோல் பில்ம் சுமார் இருபது லட்சம் ரூபாய் செலவழித்தது பெரிய விடயம் அல்லவா. அக்காலத்தில் பெரும்பாலான படங்கள் சுமார் 50-60 ரோல்கள் செலவழித்தே எடுக்கப்பட்டது. உண்மையில் ஒரு காட்சியினை எப்படி எடுப்பது என சரியான திட்டமிடாமல் (shot composition) படம்பிடித்தால் மட்டுமே ஃபில்ம் ரோல் நிறைய செலவாகும்.
இயக்குனர்கள் பாலா ,செல்வராகவன் போன்றோர் இப்படி ஃபில்ம் ரோலை கண்டபடி செலவு செய்தே தயாரிப்பாளருக்கு நஷ்டம் உண்டாக்குவது வழக்கம் என திரையுலகில் ஒரு பேச்சுண்டு. அதே வேலையை தான் அக்காலத்தில் மணிரத்னமும் செய்திருப்பார் போல, அதனையே தயாரிப்பாளர் முக்தா ஶ்ரீனிவாசனும் சொல்ல வருகிறார்.
மேலும் லோகநாயகர் அவரே ஃபில்ம் ரோல் கொடுத்து படபிடிப்பை தொடர்ந்து நடத்த உதவியதாக சொன்னதையும் தயாரிப்பாளர் இல்லை என மறுத்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்காத ஃபில்ம் ரோல், ஓல்டு ஸ்டாக் போன்றவற்றை ஒளிப்பதிவாளர்கள் பயன்ப்படுத்த தயங்குவார்கள். ஏன் எனில் அவற்றில் சில சமயங்களில் சரியாக பதிவாகாமல் போகலாம், காரணம் controlled temperature இல் தான் ஃபில்ம் ரோல்கள் வைத்திருக்க வேண்டும், இல்லை எனில் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை "silver halide" கிரகித்து நீர்ப்படலம் (fog)உருவாகிவிடும், இதனால் படம் எடுப்பது பாதிக்கப்படும். உப்பினை திறந்து வைத்திருந்தால் நீர் பிடிப்பது போல, இதனை hygroscopic nature என்பார்கள்.
எனவே ஃபில்ம் ரோல் கொடுத்து உதவினேன் என சொன்ன கதையும் அடிப்பட்டு போச்சு. மேற்கண்ட உதாரணங்களே லோக நாயகர் விட்ட கதையை கந்தல் ஆக்கும் போது அவர் சொன்ன மற்ற கதைகளும் இப்படியானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு படம் அனைவராலும் பாராட்டப்பட்டு , 25 ஆண்டுகள் கடந்த பின் யாருக்கு உண்மை தெரியும், கேள்விக்கேட்க போறாங்க என அவதூறாக பேசுவதை தடுக்க எல்லாம் சட்டம் ஒன்றும் செய்யாது போல இருக்கே :-))
பிரபலம் அவதூறாக பேசினால் அதனை கேள்விக்கேட்க அவரை விட ஒரு பெரிய பிரபலத்தால் மட்டுமே நம்ம நாட்டில் முடியும் போல :-))
என்ன கொடுமை சார் இது!
------------------
பின்குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி,
கூகிள், விக்கி, கோடாக், ரெட் ஒன்,ஆசியன் ஏஜ்,தி இந்து, இணைய தளங்கள்,நன்றி!
-----------------------