Friday, December 14, 2007

வசூல்ராஜாக்களின் கிராம புறக்கணிப்பு

தற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அடித்து சொல்கிறார்கள் சிலர். அதையே நம்பும் அபாயம் அதிகம் இருப்பதால் சில மாற்றுக்கருத்துக்களை சிலப்பதிவில் சொன்னேன்,நான் சொன்னதில் அவற்றில் சிலது வெளியிடப்படவே இல்லை, காரணம் தெரியவில்லை. சரி நாமே சொல்ல நினைத்ததை மறந்து போறதுக்குள்ள சொல்லிடலாம்னு தனிப்பதிவா போட்டாச்சு!

மருத்துவ படிப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்ன என்று பார்ப்போம்.

4 1/2 வருடங்கள் படிப்பு, பின்னர் ஒரு ஆண்டு உள்ளுறை மருத்துவர்(internship) ஆக இருக்க வேண்டும். மொத்தம் 5 1/2 ஆண்டுகள், இதில் புதிதாக ஒரு ஆண்டு கிராமப்புற சேவை, இதில் நகரம், மாவட்டம், கிராமம் என்று தலா 4 மாதங்கள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் ஒரு ஆண்டிற்கும் மாதம் 8 ஆயிரங்கள் ஊதியம் அளிக்கப்படும்.

இப்போது மருத்துவ மாணவர்கள் எதிர்க்க காரணங்களாக சொல்வது,

*1 ஆண்டு அதிகரிப்பால் மேல் படிப்பு படிக்க முடியது
*திருமணம் செய்வது தள்ளிப்போகும்.
*இதனால் இனிமேல் மருத்துவம் படிக்கும் ஆர்வம் குறையும்.
*நிரந்தர வேலைக்கொடுத்தால் கிராமம் போவோம். நிறைய பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
*கணினித்துறையில் எல்லாம் அதிகம் சம்பாதிக்கிறாங்க அவங்களுக்கு இப்படிக்கட்டுப்பாடு இருக்கா , எங்களுக்கு மட்டும் ஏன்? அவங்களையும் கிராமத்துக்கு அனுப்புங்க என்கிறார்கள்.

இப்போ இதெல்லாம் சரியானு பார்ப்போம்,

1 ஆண்டு அதிகம் ஆவது பெரிய இழப்பு என்கிறார்கள்,

ஆனால் ரஷ்யா போன்ற நாடுகளில் மருத்துவம் சாதரணமாகவே 6 ஆண்டுகள், ஒரு ஆண்டு ரஷ்யன் மொழி படிப்பு படித்து அதிலும் பாஸ் ஆக வேண்டும்.

மேலும் அங்கே internship இரண்டு ஆண்டுகள். ஆக மொத்தம் அங்கே மருத்துவப்படிப்பு மொத்தம் 9 ஆண்டுகள் வருகிறது.

இந்தியாவப்பத்தி பேச சொன்னா ரஷ்யாவப்பத்தி எதுக்கு பேசனும், அங்கே போயா நம்ம பசங்க படிக்க போறாங்கனு கேட்கத்தோனுமே,

இந்தியாவில் இருந்து வருடம் தோறும் 12,000 பேர் மருத்துவம் படிக்க ரஷ்யா போறாங்களாம்.
இதில் தமிழ் நாட்டில் இருந்தும் கணிசமான அளவுக்கு போகிறார்கள்.

9 வருஷம் படிச்சது போறாதுனு, இந்தியாவில் வந்து தொழில் செய்ய மீண்டு ஒரு தேர்வை mci நடத்தும் அதிலும் தேர்வாக வேண்டும்.

இந்துவில் இது பற்றி வந்தசெய்தி:
// Medical education affordable in Russia

Staff Reporter

COIMBATORE: Indian students aspiring to pursue medical education can now look to Russia as an option. The county has about 48 medical universities and has over 12,000 Indian students studying in it.//



இப்படி இருந்தும் ஏன் அங்கே போய் படிக்கிறாங்க வருமானம் வரும்னு தானே. இங்கே நம்ம ஊரில் ஒரு வருடம் கூடுதல் ஆனா இத்தனை புலம்புறிங்க.அங்கே 9 வருஷம் ஆகும்னாலும் காசு கட்டிப்படிக்க ஓடுறிங்களே அது ஏன்.

இதே போன்று சீனாவிலும் போய் படிக்கிறார்கள் அங்கே ஆங்கிலத்தில் நடத்தினாலும் , internship செய்ய சீனம் தெரிந்து இருக்க வேண்டும் என்று விதி , இதற்காக சீன மாண்டரினில் ஒரு டிப்ளமோ படித்து தேற வேண்டும். எனவே கூடுதலாக ஒரு ஆண்டு அங்கேயும் ஆகும். தோராயமாக வருடத்திற்கு 1500 பேர் சீனாவுக்கு போகிறார்கள் மருத்துவம் படிக்க.

பின் குறிப்பு:
----------------------------------------------------------
சில பல்கலையைப்பொறுத்தவரை ஆங்கில வழியிலும் அங்கே மருத்துவம் உண்டு , அப்போது 6 வருடங்கள் தான்.ஒரு வருசம் தான் கம்மி ஆகும், எப்படிப்பார்த்தாலும் internship சேர்த்து 8 வருடம் ஆகி விடும்.
இரண்டு வருட internship என்பது அங்கே தனியான ஒரு டிப்ளமோவா தருவார்கள். அங்கே mbbs என்று இல்லாமல் மொத்தமாக MD என்று தருவார்கள், ஆனால் இந்தியாவில் அது mbbs க்கு இணையாக தான் கருதப்படும்.

hindu வில் வந்த ஒரு தகவல்,
//Russian medical universities offer M.D. degree equivalent to M.B.B.S in India of six years duration in English and seven years in Russian medium with one-year intense preparatory-cum-preliminary study in Russian.//

----------------------------------------------------------------------

இப்போ இவர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகாமல் போகிறதா , ஆர்வம் குறைந்தா போச்சு, இல்லை அவர்கள் மேல் படிப்பு படிக்காமலா இருக்காங்க.

மருத்துவம் படிக்க எத்தனையோ பேர் வாய்ப்பு கிடைக்காம இருக்காங்க. எந்த வருடமும் மருத்துவப்படிப்பில் காலி இடங்கள் இருந்ததே இல்லை.ஆனால் பொறியியலில் நிறைய காலி இடங்கள் கடைசி வரைக்கும் இருக்கும்.

மென்பொருள் வல்லுனர்கள் நிறைய சம்பாதிக்கிறாங்க என்று சொல்கிறார்கள், அப்படி இருக்க இப்படி 8000 கொடுத்து ஏமாற்றுகிறது என்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் தனியாரிடம் தான் அதிகம் சம்பாதிக்கிறாங்க. அரசு பொறியாளார்கள் சம்பளம் என்ன?

இல்லை சிறிய அளவு நிறுவனங்களில் குறைந்த அளவு சம்பளம் வாங்கும் பொறியாளர்கள் இல்லையா?

ஏன் எத்தனை மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சைக்கே லட்சக்கணக்கில் வாங்குகிறாங்க. சொந்த மருத்துவ மனை நடத்தி அதிகம் சம்பாதிக்க வில்லையா?

பொறியாளார்கள், மற்றவர்களை கிராமம் போக சொல்கிறார்கள். ஆனால் ஒரு ஆண்டில் உருவாகும் பொறியாளர்கள் எண்ணிக்கை 55,000 ஆனால் மருத்துவர்கள் 1535 பேர் தான். எனவே தேவை அதிகம் இருப்பது மருத்துவர்களுக்கு தான்.

நிரந்தர வேலைக்கொடுத்தால் போவோம்னு சொல்கிறார்கள். அப்படி செய்தால் இவர்கள் அங்கே வேலை செய்வார்களா, இப்போதே பல அரசு மருத்துவர்களும் சொந்த மருத்துவமனையில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். பேருக்கு என்றோ ஒரு நாள் அரசு மருத்துவமனைக்கு வருவார்.

அரசு மருத்துவர் வேலை கொடு என்பது கூட சேவை செய்யவா, அரசு மருத்துவர் எனில் உடல் தகுதி சான்றிதழ், மெடிக்கல் லீவில் போகிறவர்களுக்கு சான்றிதழ், சான்றொப்பம் அளிக்க என பல வகையிலும் சம்பாதிக்கலாம் என்பதால் தான்.மேலும் சொந்தமாக ஒரு எக்ஸ்ரே, ஸ்கேன் , பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு அங்கே நோயாளிகளை போய் சோதனை செய்துக்கொள்ள செய்யலாம். இங்கே விட என் மருத்துவமனைக்கு வாங்க மலிவா வைத்தியம் பார்க்கலாம் என அரசு மருத்துவராக இருந்துக்கொண்டே ஆள் பிடிக்கலாம்.

இப்படி அரசாங்க சம்பளமும் வாங்கிக்கொண்டு, தனியாகவும் கல்லாக்கட்டி, இரட்டை வருமானம் பார்க்கும் வசூல் ராஜாவாக ஆகத்தான் அரசு பணிக்கொடுத்தா கிராமம் போவோம்னு கோஷம் போடுவது!

முதல்வன் படத்தில் ஒரு அரசு மருத்துவ மனை காட்சி வரும், டாக்டர் எங்கேனு கேட்பார் அர்ஜூன், அவரோட மருத்துவமனைல தான் இருப்பார் இங்கே எப்பவாது தான் வருவார்னு சொல்வார் வார்டு பாய், உடனே பேர் என்னனு கேட்டு சஸ்பென்ஷன் ஆர்டர் பேக்ஸில் அனுப்புவார். இதெல்லாம் அரசு மருத்துவர்களின் கல்யாண குணங்களுக்கு ஒரு உதாரணம் தான்!

இப்பதிவை படிக்கும் உங்களில் யாராவது ஏதாவது அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள் அங்கு நியமனம் செய்யப்பட்ட பல மருத்துவர்கள் வந்திருக்கவே மாட்டார்கள்.நகரங்களிலே அப்படித்தான் இருக்கும். கிராமத்தில் எப்படி கேட்கவே வேண்டாம்!

மேலும் அனுபவம் இல்லாத மருத்துவர்களை அனுப்புவது தவறு என்கிறார்கள், அடடா மக்கள் மீது அக்கரைனு நினைக்கலாம்,

ஆனால் ஒரு வருட "internship" முடித்தவர்களுக்கு அனுபவம் வந்திருக்குமே, அப்புறம் என்ன,? இது வரைக்கும் ஹவுஸ் சர்ஜன் முடிச்சதும் நேரா யாருமே மருத்துவ தொழிலுக்கே போகலையா? மேலும் கிராப்புறத்தில் சாதாரண காய்ச்சல், தலை வலி, அறுவடையின் போது அருவா கையை வெட்டிச்சு, போன்ற சின்ன நோய்கள் தான் அதுக்கு இவர்களே போதும். கிராமத்தில போய் இதய அறுவை சிகிச்சையா செய்யப்போறாங்க.

மருத்துவர்களுக்கான காலி இடங்கள் இருக்கு, அதை நிரப்பலாமே என்று சொல்லலாம். காலி பணியிடங்கள் இல்லாத அரசு துறை எதாவது இருக்கா? எல்லாவற்றிலும் காலி இடங்கள் இருக்கு , அப்படி நிரப்பினா , சம்பளம் கொடுக்க பணம் அரசிடம் இருக்கணுமே?

எத்தனையோ கிராமப்புற பள்ளிகளில் ஒரே ஆசிரியர் தான் இருப்பார், 5 வகுப்பு இருக்கும். போதாக்குறைக்கு அவருக்கும் வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டு பட்டியல், மக்கள் தொகை சரி பார்ப்பு, என்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் புத்துணர்வு பயிற்சி என்றும் அழைப்புகள் வரும். அவர் இல்லாம பள்ளி என்ன ஆகும்? பெரும்பாலான நேரங்களில் சத்துணவு ஆயா தான் பசங்களை அங்கே மேய்ப்பாங்க.
இது போல பள்ளிகளுக்கு எல்லாம் ஆசிரியர் நியமிக்கலாமே, அதுவே அரசால் முடியலையே?

இதுக்கு மாற்றா , "சர்வ சிக்ஷா அபியான்" என்ற மத்திய அரசு திட்டத்தில் சொற்ப சம்பளத்தில் (வெறும் 2000- 3000த்துக்கு M.sc.M.ed, m.phil வேலைக்கு போறாங்க)ஆசிரியர்களை நியமித்து சமாளிக்கிறது அரசு. அவர்கள் எல்லாம் கொஞ்ச சம்பளம் என்று கிராமத்துக்கு போகாமலா இருக்காங்க.

உங்களுக்கு காசு வர வேற வழி இருக்கு அதான் தெனாவெட்டா 8000 கம்மி போக மாட்டோம் சொல்றிங்க. மக்கள் சேவைனு எண்ணம் இருந்தா சொல்விங்களா?

அதிக வேலை வாய்ப்பு இல்லாத படிப்பாக தற்போது இருப்பது வேளாண்மை கல்வி தான் , ஆனால் அவர்களும் ஆறு மாதம் படிக்கும் காலத்தில் கட்டாயம் கிராமத்தில் தங்கி இருந்து நேரடியாக விவசாயத்தை படிக்க வேண்டும். "village stay programme" என்று பெயர். அதற்கு எல்லாம் அரசு பணம் தராது, மாணவர்களே தங்க, உணவுக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டும்.

அக்காலத்தில் இரண்டு விவசாயிகளை ஒரு மாணவருக்கு என்று ஒதுக்கிவிடுவார்கள். அவர்களை கவனித்து நடைமுறை விவசாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.மண் மாதிரி எடுப்பது, பயிர் நோய்கள் என்று அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்துடன் சேர்ந்து பணிப்புரிய வேண்டும். எனவே கிராமப்புற சேவை என்பது மருத்துவ மாணவர்களின் மீது மட்டும் சுமத்தப்பட்ட சுமை அல்ல.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் தான் கல்விக்கட்டணம் குறைவு 4000 ரூபாய் தான,் விடுதிக்கட்டணம் தனி.

அதுவே தனியார்க்கல்லூ்ரிகளில் எவ்வளவு என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு மருத்துவரை உருவாக்க சுமார் பத்து லட்சத்துக்கும் குறையாமல் அரசு செலவிடுகிறது.அது எல்லாம் மக்கள் பணம் தானே , ஒரு வருடம் போனால் போகட்டும் என்று செய்யலாமே.

சென்னை அருகே எனாத்தூரில் இருக்கும் மீனாக்ஷி மருத்துவக்கல்லூரியில் அதிகப்படியாக கட்டணம் வசூலித்தது குறித்த இந்துவில் வந்தசெய்தி,

"They appealed to the Directorate of Medical Education (on September 1, 2003) and to the Chief Minister (on March 18, 2004) to look into the matter, but till date nothing had been done. They have also mentioned that for the second year, students have been asked to pay a total tuition fee (inclusive of room rent) of Rs. 6,22,500; for the third year the tentative tuition fee is Rs. 4.47 lakhs, plus Rs. 30,000 for room rent and the fees for the fourth year is Rs. 4,39,500 (plus Rs.30,000 room rent).

They have estimated that the total fee for the entire course is Rs.21,46,000, but fear that it "might be higher, as the college administration is not following any rational approach while fixing fee structures.""

அரசுக்கல்லூரியில் படிக்கவில்லை எனில் இவர்கள் அனைவருக்கும் சொத்தை விற்க வேண்டியது இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்க. மக்கள் பணத்தில் படித்தவர்கள் மக்களுக்காக இது கூட செய்யக்கூடாதா.

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை பட்ஜெட்டில் மருத்துவப்படிப்புக்கு என தனி நிதி ஒதுக்கப்படுகிறது, நோயாளிகளுக்கு என தனி நிதி. எனவே படிப்புக்கான செலவில் நோயாளிகளுக்கான செலவும் சேர்வதில்லை.

"dme" க்காக ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்விக்கான தொகை 714.20 கோடி. மொத்த சுகாதார துறை நிதி ஒதுக்கீடு 2285.88 கோடி. , எனவே மொத்த 6.5 கோடி மக்களுக்கான மருத்துவ நிதி ஒதுக்கீடு தொகை 1571.68 கோடி தான் ஆனால் சில ஆயிரங்கள் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு என்ன செலவு செய்தது மாணவர்களுக்கு என்று கூசாமல் கேட்கிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவனுக்கு தலைக்கு சுமார் 10 லட்சம் ஆவது செலவு ஆகும். ஆனால் இவர்கள் அந்த பணத்தை மாணவர்கள் கையில் கொடுக்கவில்லை என்கிறார்கள் போல :-))

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட விவரம்;
http://www.tnhealth.org/healthbudget0708.htm


The provision for Health and Family Welfare Department under Demand No.19 for 2007-2008 is Rs.2285.88 crores as detailed below:-

(Rs. in Crores)

Demand

Non Plan

Plan

State Plan

Centrally Spon sored

Shared between Centre and State

Total

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

19. Health & Family Welfare Department

1644.48

374.93

261.27

5.00

641.20

Demand

Total Plan and Non Plan

Add Recoveries

Total

(1)

(7)

(8)

(9)

19. Health & Family Welfare Department

2285.68

0.20

2285.88

This includes Rs.2231.20 crores on the Revenue Account and Rs.54.68 crores on the Capital Account. The provision on the Revenue Account, works out to 5% of the total provision of the Revenue Account of Rs.44633.66 crores in the Tamil Nadu State Budget for the year 2007-2008.

1.4. The directorate-wise provision for 2007-2008 made under Demand No.19 Health and Family Welfare Department is as follows:-

(Rs. in Lakhs)

1

Secretariat

466.45

2

Directorate of Medical and Rural Health Services

37405.81

3

Directorate of Medical Education

71420.11

4

Directorate of Public Health and Preventive Medicine

79226.38

5

Directorate of Family Welfare

8017.69

6

Directorate of Drugs Control

653.59

7

Commissionerate of Indian Medicine and Homeopathy

7904.80

8

Tamil Nadu State Health Transport Department

1243.38

9

Reproductive and Child Health Project

352.25

10

Tamil Nadu Health Systems Project

21897.27


Total

228587.73