(ஹி...ஹி மறந்து போய் டிரிக்கரை அமுக்கிடாதிங்க ,சிதறிடும் தலை)
மிக பழங்காலத்தில் ஒரு முறை சுடும் சிங்கிள் ரவுண்ட் துப்பாக்கிகள் தான் புழக்கத்தில் இருந்தது, ஒரு இரும்பு குண்டு ,வெடி மருந்து எல்லாம் போட்டு கிடித்து சுட வேண்டும் பின்னரே தோட்டா எனப்படும் வெடிமருந்தும், குண்டும் இணைந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ,இதனை கேட்ரிஜ் என்பார்கள். முனையில் இருக்கும் உலோக துண்டே புல்லட் எனப்படும்.
கேட்ரிஜ்= புல்லட் + ஷெல்(கேஸ்) ஆகும்.
தோட்டாவின் பாகங்கள்:
The case is the brass cylinder that all the other parts fit into.
The primer is the component that the hammer of the gun hits and ignites.
Powder is the chemical compound ignited by the primer that propels the bullet.
The bullet is a projectile, usually made of lead and other metals, that the powder fires out the barrel of the gun.
சிங்கிள் ரவுண்ட் துப்பாக்கியால் வேகமாக சுட முடியவில்லை, என ஒன்றுக்கு மேற்பட்ட தோட்டாக்களை நிரப்பும் வசதியுள்ள துப்பாக்கியை உருவாக்கினார்கள். இம்முறையில் 5-6 தோட்டாக்களை சிலிண்டரில் நிரப்பி , சுடும் பேரலுக்கு வருமாறு சுழல வைத்திருப்பார்கள், இதனை ரிவால்வர் என பெயரிட்டார்கள். தமிழில் கூட நிறைய வெஸ்டர்ன் டைப் படங்கள் தழுவி எடுக்கப்பட்டன , தமிழின் ஆஸ்தான கவ்பாய் ஹீரோ மறைந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் தான். அவரோட கையில ரிவால்வர் சும்மா விளையாடும் :-))
ஜெய்சங்கரின் கவ்பாய் படங்களில் குறிப்பிட தக்கவை கங்கா, எங்க பாட்டன் சொத்து, ஜக்கம்மா, கருந்தேள் கண்ணாயிரம் போன்றவை ஆகும். அக்கால ஒளி ஓவியர் கர்ணனின் கேமிராவும்,இயக்கமும் போட்டிப்போட்டுக்கொண்டு துப்பாக்கி சண்டை ,வாளைக்குமரிகளின் வெண்ணிர ஆடை ஜில் ஜிலீர் ஜலக்கிரிடை என திரை ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து படைத்தன என சொன்னால் மிகையல்ல.
எத்தனை நாட்களுக்கு தான் வறட்சியாக ஆண் கவ்பாய்களை பார்ப்பது என தெலுகு மணவாடுகள் வித்தியாசமாக பெண் கவ்பாய் படங்களை எடுத்தார்கள், ஜோதி லக்ஷ்மி, விஜயலலிதா ,விஜய கோகிலா ஆகிய இளமை துள்ளும் காந்தக்கண் காரிகைகளின் மலர்க்கரத்தில் மரண ஆயுதமாம் ரிவால்வர் ஏந்தி ரிவார்வர் ரீட்டா, கன் ஃபைட் காஞ்சனா ,புல்லட் ராணி என அவதாரம் எடுத்து தீய சக்திகளை சுட்டு தள்ளினார்கள், படம் பார்த்த வாலிப வயோதிக அன்பர்களும் தூக்கத்தினை தொலைத்த 70's கால கட்டம் அது. பின்னர் அப்படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு தமிழக ரசிகர்களையும் சித்திரவதைக்குள்ளாக்கியது வரலாறு :-))
ஆரம்ப காலத்தில் ரிவால்வர்களின் சிலிண்டர் தானாக சுழலாது , அதனை கையால் சுழற்ற வேண்டும், இப்படி கையால் சுழற்றிக்கொண்டே சுடுவதே ஒரு தனி கலை, பழைய ஹாலிவுட் வெஸ்டர்ன் படங்களில் இப்படி சிலிண்டரை சுழற்றவே இன்னொரு கையை துப்பாக்கியின் மீது வைத்திருப்பது போல காட்டுவார்கள்.
சில கில்லாடியான கவ்பாய்கள் மின்னல் வேகத்தில் சுட தோட்டாக்கள் நிரப்பிய சிலிண்டரை வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு சுழற்சி நிற்கும் முன் அனைத்து ரவுண்டுகளும் சுடுவதாக எல்லாம் ஹாலிவுட் கவ்பாய் படங்களில் காட்டியுள்ளார்கள். cow boy comics hero lucky luke நிழலை விட வேகமாக சுடுவார் என பட்டப்பெயர் கொண்டவர்.
பின்னர் சிலிண்டர் தானாக சுழன்று தோட்டா சுடுவதற்கு பேரலில் வருவது போல செய்யும் ரிவால்வரை சாமுவேல் கோல்ட் என்ற அமெரிக்கர் வடிவமைத்தார். பின்னாளில் அதுவே ரிவால்வர்களின் நிரந்தர வடிவம் ஆயிற்று. இன்றும் கோல்ட் நிறுவனம் துப்பாக்கி தயாரிப்பில் முன்னனியில் உள்ளது.
ஹாலிவுட் படங்களில் கதாபாத்திரங்கள் பயன்ப்படுத்தும் துப்பாக்கிகள் உண்மையானவை ஆகும், அவற்றில் டம்மி புல்லட் பயன்ப்படுத்தியோ அல்லது கிராபிக்ஸ் மூலமாகவோ சுடுவது போல காட்டுவார்கள்.
அதுவும் ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதாபாத்திரங்களுக்கு என ஒரு முத்திரைப்பதித்த புகழ்வாய்ந்த துப்பாக்கி மாடலையே கொடுப்பார்கள்.
இயான் ஃபிளெமிங் , தனது நாவலில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தினை வடிவமைத்தபோது என்ன வகையான ஆயுதம் கொடுக்கலாம் என யோசித்து ,பின்னர் அவர் கடற்படை உளவுத்துறையில் பணிப்புரிந்த போது கொடுத்த Beretta 418, .25 காலிபர் பிஸ்டலையே ஜேம்ஸ்பாண்டும் பயன்ப்படுத்துவதாக முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல் ஆன கேசினோ ராயலில் எழுதிவிட்டார்.
நாவலைப்படித்த ஒரு ஆயுத ஆய்வாளர் பெரட்டா 418 என்பது பெரும்பாலும் பெண்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறிய வகை தற்காப்பு ஆயுதம், ஷார்ட் ரேஞ்ச் கொண்டது ,மேலும் அதன் stopping power என்பது குறைவு என எழுதினார். ஜேம்ஸ்பாண்ட் போன்ற அதிசூர ரகசிய உளவாளி ,பல எதிரிகளை வேட்டையாட வேண்டியவருக்கு நல்ல சக்தி வாய்ந்த துப்பாக்கி கொடுக்கவும் என ஆலோசனை வழங்கினார்.
stopping power:
ஒரு முறை சுட்டவுடன் எதிராளி சுருண்டு விழ செய்வது, குண்டடி வாங்கிய பின்னும் திடகாத்திரமாக இருந்தால் துப்பாக்கியின் stopping power குறைவாக உள்ளது என பொருள். அதிக காலிபர் உள்ள துப்பாக்கிகளுக்கு அதிக stopping power இருக்கும்.
காலிபர்:
காலிபர் என்பது சுடும் குழல்- பேரலின் விட்டம் ஆகும் அதற்கு ஏற்ப தோட்டாவின் விட்டம் இருக்கும்.பெரிய தோட்டா ,அதிக வெடி மருந்து, அதிக வேகம், எனவே ஆழமாக ஊடுருவும், பெரிய காயம், நிறைய இரத்த இழப்பு , எனவே எதிராளி சுருண்டு விழுவான் .
(பல காலிபர் தோட்டாகள் ஒரு ஒப்பீடு)
ஆனாலும் ஒரு ராணுவ/ உளவு அதிகாரிக்கு என டிரேட்மார்க் ஆக ஒரு துப்பாக்கி இருக்க வேண்டும் என ஆய்வு செய்து Walther PPK 7.65 mm என்ற துப்பாக்கியை பாண்டிற்கு கொடுத்தனர்.
Walther PPK :
இதில் ஒரு முரண்நகை என்னவெனில் Walther PPK 7.65 mm துப்பாக்கி ஜெர்மானிய தயாரிப்பு , அவர்களின் காவல் துறை மற்றும் உளவு துறையின் அதிகாரப்பூர்வ ஆயுதம் ஆகும். அதனை பிரிட்டீஷ் உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் அதிகாரப்பூர்வமான ஆயுதமாக மாற்றிவிட்டார்கள். தற்போது வந்த ஸ்கைஃபால் வரையில் ஜேம்ஸ்பாண்டின் அதிகாரப்பூர்வ கைத்துப்பாக்கி Walther PPK 7.65 mm மற்றும் Walther PP99 மாடல்கள் ஆகும்.பாண்ட் அவ்வப்போது கையில் கிடைக்கும் ஆயுதங்கள் , Kalashnikov AKS-74U.Kalashnikov AK-74 போன்ற எந்திர துப்பாக்கிகள், பெரட்டா 92 FS என பல வகையான கைத்துப்பாக்கிகளும் பயன்ப்படுத்துவதுண்டு.
Walther PPK 7.65 mm :
Carl Walther என்ற ஜெர்மானியர் உருவாக்கிய மாடல் ஆகும், PPK = கிரைம் போலீஸ் பிஸ்டல் என்பதன் ஜெர்மானிய சுருக்கம் ஆகும்.
துப்பாக்கியின் விவரம்;
நீளம்= 155 மி.மீ
அகலம்:25 மி.மீ
பேரல் நீளம்:83 மி.மீ,
எடை:590 கிராம்.
மேகசீன்:
தோட்டாக்கள் அடங்கிய உறையின் பெயர் , 7,8,9 குண்டுகளுடன் ,சற்றே மாறுபட்ட காலிபர் வகைகளுக்கு கிடைக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் பயன்ப்படுத்தும் .32 ஏசிபி வகைக்கு 8 தோட்டா மேகசின் பயன்ப்படுத்தப்படுகிறது.
இத்துப்பாக்கியால் சுடும் போது தோட்டா செல்லும் வேகம் 220 மீ/வினாடி, எனவே வினாடிக்கு 221 மீட்டர் வேகத்தில் ஓடினால் தோட்டாவால் உங்களை தொலைக்க முடியாது :-))
கைத்துப்பாக்கியின் பேரல் நீளம் குறைவானது என்பதால் குறைவான தூரத்திற்கே கொல்லும் சக்தியுடன் தோட்டா பாயும், 30 மீட்டருக்குள் நல்ல தாக்குதல் இருக்கும், அதற்கு பிறகு அவ்வளவாக இம்பாக்ட் இருக்காது. எலும்புகளை துளைக்காது, அல்லது பெரிதாக காயம் ஏற்படுத்தாது.
தற்போது ஜேம்ஸ் பாண்டிற்கு வழங்கப்பட்டிருக்கும் வால்த்தர் கைத்துப்பாக்கியில் கைரேகை பாதுகாப்பு வசதியுள்ளது, பாண்டை தவிர வேறு யாராலும் அத்துப்பாக்கியால் சுட முடியாது.
Walther P99
இத்துப்பாக்கி அளவிலும், எடையிலும் பெரிய வகை, இத்துப்பாக்கியை பாண்ட் பெரிய அளவிலான சண்டையின் போது பயன்ப்படுத்துவார், பெரும்பாலும் இதனை காரில் வைத்திருப்பார், Walther PPK 7.65 mm காம்பேக்ட் ஆக இருக்கும் என்பதால் கோட்டின் உள் புறமாக விலாபக்கத்தில் ஸ்ட்ராப் போட்டு ஒரு பவுச்சில் வைத்துக்கொள்வார்.
Walther P99 இன் பேரல் விட்டம் 9 மி.மீ ,நீளம் 102 மி.மீ என்பதால் அதிக சக்தியுள்ளது.
துப்பாக்கியின் விவரம்:
நீளம்:180 -184 மி.மீ
அகலம்:29-32 மி.மீ
உயரம்:135 மி.மீ.
எடை; 630-655 கிராம்.
பேரல் நீளம்: 102 மி.மீ.
தோட்டா வேகம்:344 மீ/வினாடி, மற்றும் 408 மீ/வினாடி
விசையுடன் சுடும் தூரம்:60 மீட்டர்.
மேகசீன்:
12 மற்றும் 16 தோட்டாக்கள் கொண்டவை. சிலர் புத்திசாலித்தனமாக எப்படி 6 குண்டுகளுக்கு மேல் சுட முடியும் என விமர்சனம் எழுதும் போது கேட்பதுண்டு , அதெல்லாம் இப்படித்தான் , பல வகையான மேகசின் கெப்பாசிட்டிகள் , துப்பாக்கியின் மாடலுக்கு ஏற்ப இருக்கிறது. ஒரு சில மாடல்களில் 22 ரவுண்டுகள் வரை சுட முடியும்.
(33 ரவுண்டு மாகசீன் +Glock17 pistol)
Heckler&Koch USP pistols
ஹாலிவுட் படங்களில் துப்பாக்கிக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்தவர் ஏஞ்சலினா ஜூலி , அவர் நடித்த Tomb Raider, MR&mrs Smith, Salt, wanted, ஆகிய படங்களில் கன் ஃபைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டாவாக கலக்கியவர்.
டாம் ரைடரில் ,அவரது உடை,பிரத்யோகமாக இடையில் துப்பாக்கி வைக்கும் பெல்ட், அவரது பாவனைகள் எல்லாம் அந்த பாத்திரத்தின் வீச்சினை பல மடங்கு உயர்த்தியது, கணினி ஆக்ஷன் கேம்களில் டாம் ரைடருக்கு தனி மார்க்கெட்டும் பிடித்து கொடுத்தது.
அப்படத்தில் ஏஞ்சலினா ஜூலி கதாபாத்திரத்தின் பெயர் "லாரா கிராப்ட்" ஆகும் ,அவர் பயன்ப்படுத்திய துப்பாக்கி Heckler & Koch USP Match என்ற 9 மி.மீ பேரல் வகை .இத்துப்பாக்கியும் ஒரு ஜெர்மானிய தயாரிப்பாகும், பொதுவாகவே ஜெர்மானிய துப்பாக்கிகள் தரமானவை என உலக அளவில் பெயர் பெற்றவை.
USP என்பது Universal self-loading pistol என்பதன் சுருக்கமாகும்.
துப்பாக்கியின் பண்புகள் :
Type: Double Action or Double Action Only
Calibers: 9x19mm Luger, .40 S&W, .45 Auto, .357SIG (USP Compact only)
Dimensions (9 x 19 version)
Length: 194 mm
Height: 136 mm
Width: 32 mm
Weight: 720 g
Capacity: USP, USP Match - 15 rds (9mm), 13 rds (.40), 12 rds (.45); USP Compact - 13 rds (9mm), 12 rds (.357 and .40), 8 rds (.45)
இத்துப்பாகியிலும் 8 முதல் 15 ரவுண்டுகள் சுடக்கூடிய மேகசீன்களுடன் கிடைக்கிறது.
எல்லா மாடல் பிஸ்டல்களிலும் இடக்கை மற்றும் வலக்கை பயன்ப்பாட்டாளர்களுக்கு என தனி தனி வகை தயாரிப்பு உண்டு.
துப்பாக்கி தவறுதலாக வெடித்து விடாமல் இருக்க பாதுகாப்பு அம்சம் உள்ளது, சுடுவதற்கு முன்னர் பேரலை பின் பக்கமாக தள்ளிவிடுவதை திரைப்படங்களில் பார்த்திருப்போம், அப்படியும் சேப்டி லாக் விடுவிக்கலாம் அல்லது கட்டை விரல் அருகே ஒரு லீவர் இருக்கும் அதனை தள்ளியும் சுடுவதற்கு தயாராகலாம்.
அந்த லீவர் வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு துப்பாக்கியின் இடப்பக்கமும், இடக்கை பழக்கம் உள்ளவர்கள் பயன் படுத்தும் துப்பாக்கியில் வலப்பக்கமும் இருக்கும். அதன் அருகே ஒரு சிவப்பு வண்ண LED இருக்கும், தோட்டா தீர்ந்து விட்டதை அறிவிக்க பயன்ப்படும், LED எரியவில்லை எனில் துப்பாக்கி பயன்படுத்த தயாராகவில்லை அல்லது தோட்டா தீர்ந்துவிட்டது என அறியலாம்.
ஒவ்வொரு முறை சுடும் போதும் தோட்டா வெடித்து முன்னோக்கி செல்லும் போது வெடி மருந்தில் இருந்து உருவாகும் வாயு பின்னோக்கி சென்று ஒரு விசை உருவாகும் இதனை கொண்டே அடுத்த தோட்டாவை சுடும் அறைக்குள் லோட் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதனை "Blow back action pistol" என்பார்கள் பெரும்பாலானா Automatic pistol கள் இவ்வகையே.
டொக்டரின் துப்பாக்கி:
ஹி...ஹி இவ்வளவு தூரம் துப்பாக்கிய பற்றி பேசிவிட்டு டொக்டர் விசய் நடித்த அமர காவியம் "துப்பாக்கி"ஐ பற்றி ஒன்றும் சொல்லாமல் போனால் நல்லாவா இருக்கும், டொக்டர் ரசிகர்கள் வேற கோச்சுப்பாங்க ,
டொக்டர் விசயின் இந்த துப்பாக்கி படத்தை எத்தனை முறை உற்று பார்த்தும் அது என்ன மாடல்னே சரியா கண்டுப்பிடிக்க முடியலை, டொக்டரின் வெப்பன் சப்ளையர் பெரிய கில்லாடியாக இருக்கணும். ஒரு வேளை தீவாளி துப்பாக்கியா இருக்குமோ?
பெராட்டா 92 FS எனப்படும் மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியோட இருக்கு, கிட்டத்தட்ட அதை போலவே இருக்கு , ஆனால் படத்தில் லெஃப்ட் ஹேண்ட் மாடல் (சேப்டி லாக் வலப்புறம் இருக்கு) பிஸ்டலை ரைட் ஹேண்டில் பிடிச்சுக்கிட்டு போஸ் கொடுக்கிறார் :-))
ஹி...ஹி என்னா ஒரு கண்டுப்பிடிப்புன்னு தீபாவளியும் அன்னிக்கு நீங்க எல்லாம் என் மேல கொலை வெறியில பாயாதீங்க, அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
(இன்று அனைவருமே தீவாளி வாழ்த்துன்னு சொல்லி இருப்பாங்க அதான் வித்தியாமாக இருக்கட்டுமேன்னு ...ஹி...ஹி :-)) )
வர்ரட்டா!!!!
-------------------
தீவாளி போனஸ்:
பதிவு முழுக்க சூடா சுடுவதையே பேசிவிட்டதால் ஜில்லுனு ஒரு ஜில்பான்ஸ் படம் ,பார்த்து மகிழுங்கள்!
ஹி...ஹி சுட்டும் விழியால் சுடும் காரிகை!
------------------------------------------------------------------பின் குறிப்பு:
படங்கள் மற்றும் தகவல் உதவி,
http://world.guns.ru/handguns/hg/de/hk-usp-e.html
http://www.leelofland.com/wordpress/lori-l-lake-part-2-guns-guns-guns-outfitting-your-sleuths/
http://guns4u.info/?cat=12
http://www.imfdb.org/wiki/Lara_Croft:_Tomb_Raider
மற்றும் விக்கி, கூகிள் இணைய தளங்கள், நன்றி!
-----------------