Friday, December 28, 2007

இசை ஞானி வேட்டிக்கட்டியது தவறா?

அரபு நாட்டில் இசைக்கச்சேரி நடத்திய இளையராஜாவின் நிகழ்ச்சியைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு டஜன் பேர்கள் , பலரும் பல விதமாக பதிவு போட்டு விட்டார்கள், ஆனால் இந்த வாரம் குமுதம் படித்தப்போது நம்ம பதிவர்கள் எப்படி ஒரே மாதிரி மாவு ஆட்டி இருக்காங்க என்பது தெரியவந்தது.

குமுதத்தில் வந்த செய்தி, இசை நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவை அரபு நாட்டில் உள்ள மிகப்பெரிய அய்ந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்க அழைத்து சென்றுள்ளார்கள், ஆனால் வேட்டி சட்டையுடன் வந்த ராஜாவை அங்கிருந்த ஊழியர்கள் , வேட்டி,சட்டையுடன் வருபவர்களை தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லி ,தங்க அனுமதிக்க வில்லை. அதைப்பார்த்த ராஜா பரவாயில்லை என்று வேறு விடுதிப்பார்க்க சொல்லி இருக்கிறார். இதற்குள் விடுதி நிர்வாகத்திற்கு ராஜாவின் பெருமைகள் சொல்லப்பட்டு , பின்னர் அவ்விடுதி நிர்வாகியே தலையிட்டு அனுமதி அளித்த பின்னரே அங்கே ராஜா தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இளையராஜா பெரிய இசைக்கலைஞர் என்பதாலேயே அவ்விடுதி நிர்வாகம் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளது, அவர்கள் வேட்டி சட்டையை ஏற்றுக்கொண்டல்ல என்பது தான் இங்கே குறிப்பிடதக்கது. இந்தியாவிலேயே வேட்டி சட்டையை மதிக்காத போது அங்கே என்ன நடந்தா என்ன என்று கேட்கலாம். ஆனால் கேள்வி கேட்டாகனுமே!

மேலும் வேட்டிக்கட்டிக்கொண்டு வரக்கூடாது என்று அவமானப்படுத்தியது படுத்தியது தானே , இதைக்கேட்டால் அங்கே எல்லாம் டிரஸ் கோட் அப்படித்தான் அதை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டாமா , இல்லைனா அங்கேலாம் எதுக்கு போகனும் என்பார்கள்! ஆனால் அமெரிக்காவிலோ ,கனடாவிலோ முக்காடு போடுவதை எடுக்க சொன்னால் எங்கள் உரிமையில் தலையிட கூடாது என்பார்கள்.

எங்கே போனாலும் உடைக்கட்டுப்பாடு என்று சொல்லி கொலைப்பண்றாங்கப்பா, பெண்ணிற்கு ஏற்பட்டா மட்டும் ஆள் ஆளுக்கு பதிவு போட்டு தாளிக்கிறாங்க, ராஜாவுக்கு என்றால் ..ஹா ...அக்காங்க் வேற வேலை இல்லை எங்களுக்கு என்று ஒதுங்கிடுறாங்கப்பா.

இதை விட , ராஜா இசை நிகழ்ச்சிக்கு வந்த போது அங்கே நடந்த திரை மறைவு வேலை எல்லாம் எனக்கு தெரியும், ஒரு சின்னப்ப்பையனை(பெண்?) டான்ஸ் ஆடக்கூடாது சொல்லிட்டார், வேற யாரு படமும் வைக்க கூடாதுனு சொல்லிட்டார்னு செய்திகளை முந்தி தருவது தினத்தந்தி போல எல்லாம் பதிவு போட்டாங்க ஆனா இதை மட்டும் சொல்லவே இல்லை!

இன்னும் சிலர் நிகழ்ச்சி சொதப்பல், ராஜா பேசினது சரி இல்லை, வேலி தாண்டி போனோம் , இத்தனை ரூபா டிக்கெட் எடுத்தோம் என்றெல்லாம் பதிவு போட்டு அவங்க பதிவு எண்ணிக்கையை கூட்டிக்கிட்டாங்க.