பெரும்பாலோனோர் ஜனவரி -1 அன்று புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் ,ஏனில் பொதுவாக உத்தியோகப்பூர்வ நிமித்தமாக ஆங்கில நாட்காட்டியினை பின்ப்பற்றுவதால் ஏற்பட்ட பழக்கம் ஆகும். ஆனால் அது ஆங்கில காலண்டரும் அல்ல ஆங்கில ஆண்டுப்பிறப்பும் அல்ல போப் கிரிகோரி ரோமன் நாட்காட்டி அடிப்படையில் அமைத்ததுவே நாம் பொதுவாக பயன்ப்படுத்தும் நாட்காட்டி, எனவே ரோமன் ஆண்டுப்பிறப்பே ஜனவரி ஒன்றில் வருவது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ,பஞ்சாங்க நாட்காட்டி அடிப்படையில் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாக கொண்டு ,சித்திரை ஒன்றில் ஆண்டு பிறப்பு கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவில் சித்திரை ஒன்றில் புழங்கும்
வருடப்பிறப்புகள்;
காஷ்மீர் -நவரேக்
மஹாராஷ்டிரா- குடி பட்வா
கோவா- குடிபட்வா
பஞ்சாப்&ஹரியானா- பைசாஹி
பீஹார்- வைஷாகா
மேற்கு வங்கம்-போஹேலா பைசாஹி
இராஜஸ்தான் -தப்னா
மணிப்பூர்-சஜிபு நோங்மா பன்பா
பாலி ,இந்தோனேசியா,மொரிஷியஸ் ஹிந்துக்கள்-நியேபி
அஸ்ஸாம்-போஹாஹ் பிஹு
சிந்தி- சேத்தி சந்த்
ஆந்திரா -உகாதி
கர்நாடகா-உகாதி
கேரளா- விஷு
தமிழ்நாடு- சித்திரை புத்தாண்டு
இதில்
#ஆந்திரா,கர்நாடகாவில் சித்திரை ஒன்று மார்ச்-23 இல் வருவதாக கணக்கிட்டு அன்று உகாதி கொண்டாடுகிறார்கள்.
#மஹாராஷ்டிரா,கோவாவில் குடி பட்வா சித்திரை ஒன்று மார்ச் 23 இல் வருவதாக கொண்டாடப்படுகிறது.
மற்ற இடங்களில் சித்திரை ஒன்று ஏப்ரல்-13 இல் வருகிறது, இது சாலிவாகன சகாப்தம் அடிப்படையில் வரும் சாகா சகாப்த காலண்டர் முறையில்.
வட இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு அனைத்தும் அவர்களது அறுவடை திருநாளை ஒட்டி என்பதை கவனிக்கவும். ஆனால் தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றுடன் அறுவடை தொடர்புடையது அல்ல , தை முதல் தேதியே அறுவடைக்கு அருகில் வரும்,அன்று பொங்கல் என கொண்டாடுவதே புத்தாண்டு ஆகும். ஆனால் அப்படி நாம் இது நாளும் சொல்லிக்கொள்ளவில்லை அல்லது மறந்து விட்டோமோ அல்லது மறக்கடிக்கப்பட்டமோ. ஆதலால் சித்திரை ஒன்று என்று இந்திய(இந்துத்வ) வருடப்பிறப்பை கொண்டாடி வருவது வழக்கமாகி போய் இருக்கலாம்.
ஆகவே மக்களே சித்திரை ஒன்றில் கொண்டாடப்படுவது தமிழ் புத்தாண்டா அல்லது இந்திய-இந்துத்வ புத்தாண்டா நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்.
சித்திரை ஒன்றில் புத்தாண்டு கொண்டாடுவோரையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம் எனவே வாழ்த்துவோம்...ஏக் கவாலி கானா பாடுவோம்... பங்க்ரா ஆட்டம் ஆடுவோம் ஓஹ் பல்லே ..பல்லே ...
ஜாத்தா ஆயி பைசாஹி !!!
----
பின்குறிப்பு:
#தை ஒன்றில் புத்தாண்டு ஏன் என விளக்கும் எனது பதிவு,
தை-1 தமிழ் புத்தாண்டு
# படங்கள் தகவல்கள் உதவி ,கூகிள், விக்கிப்பீடியா,நன்றி!