(த்தோடா வவ்வாலு சொன்னது கூட நடந்துடுச்சு!!!)
கடந்த 31-12-2012 அன்று வெளியிட்ட "FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்" எனும் இடுகையில் இந்தியாவில் வழங்கப்படும் உர மானியத்தின் பயன் விவசாயிகளுக்கு பலனளிப்பதில்லை,மாறாக உர நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் அளிக்கவே என்பதை ,சர்வதேச விலை ,இந்திய சில்லரை விலை மற்றும் லாப விகிதங்களை ஆதாரத்துடன் விளக்கியிருந்தேன்,
சுட்டி:
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்.
குறிப்பிட்ட பகுதியை மீண்டும் இங்கு தந்துள்ளேன் ,முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்.
கீழே காண்க.
//பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட்டின் சர்வதேச விலை விவரங்கள் மற்றும் மானியம் ,சந்தை விலை நிலவரங்களை காண்போம்,
பொட்டாஷ் உரம்:
ஒரு டன் பொட்டாஷ் - 425 டாலர்/டன்.
இந்திய ரூபாயில் -425*50=21,250 ரூ மட்டுமே,
இந்திய விற்பனை விலையை விட சர்வதேச சந்தையில் விலை குறைவாகவே உள்ளது ,ஆனால் அதற்கு டன்னுக்கு மானியம் 14,777 ரூபாய்!
21,250 ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தினை இறக்குமதி செய்து ரூ 24,000 என விலை வைத்து விற்க அம்மானியத்தொகையை அரசு அளிக்கிறது.
இதன் மூல உர நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய்=
14,777+24,000-21,250=17,527 ரூ.
சதவீத அடிப்படையில் வருவாய்=17,527/21,250*100=82.48%
போக்குவரத்து செலவு, கையாளும் செலவுகள் இருக்கும் தான் ஆனால் இப்படி 82.48 சதவீதம் அளவுக்கா இருக்கும்.
பாஸ்பேட் உரம்:
பாஸ்பேட்-524.08 டாலர்/டன்.
இந்திய ரூபாயில்,
524.08*50=27,252.16 ரூபாய்கள்.
இந்திய விற்பனை விலை ரூ =24,000
மாநியம்=18,474ரூ
நிகர வருவாய்=24,000+18,474-27,252.16=15,221.84 ரூ.
சதவீத அடிப்படையில்,=15,221.84/27,252*100=55.85%
இந்தியா 100 சதவீதம் பொட்டாஷ் உரங்களையும், 90 சதவீதம் பாஸ்பேட் உரங்களையும் இறக்குமதி செய்கிறது.
இவ்விரண்டு உரங்களையும் பெருமளவில் இறக்குமதி செய்து அதிக மானியம் கொடுக்கப்பட்டும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவில்லை என்பதை மேற்கண்ட கணக்குகள் மூலம் எளிதாக புரிந்துக்கொண்டிருக்கலாம்.
அரசு அளிக்கும் மாநியம் அனைத்தும் உர நிறுவனங்களின் லாப விகிதத்தினை அதிகரிக்கவே பயன்ப்படுகிறது.//
தற்போது உரமானியத்தில் ஊழல் என புகார் வெளிப்படையாக கிளம்பியுள்ளது ,அது குறித்து அம்மையார் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது என்னவெனில்,
//இந்தச் சூழ்நிலையில், ஜூன் 2012-ல் உர உற்பத்தி நிறுவனங்கள் DAP உரத்தினை சில்லரை விலையில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 25,000 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்தன என்றும், அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 14,300 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது என்றும்; ஆனால், அதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட டி.ஏ.பி. உரத்தின் விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு 31,900 ரூபாய் தான் என்றும்; போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஒரு டன்னிற்கு 5,000 ரூபாய் வரை உரக் கம்பெனிகள் எதிர்பாராத வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்றும்; MOP உரத்தைப் பொறுத்தவரையில், 2011-2012 ஆம் ஆண்டில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு 16,054 ரூபாயை அரசிடமிருந்து மானியமாக பெற்றுக் கொண்டு உபரியாக 5,500 ரூபாயை உரக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டுவிட்டன என்றும்; மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரியின் கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், 3.8.2012 அன்று, உரத் தயாரிப்பு நிறுவனங்கள், DAP உரத்தில் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், காம்ப்ளெக்ஸ் உரத்தில் டன் ஒன்றுக்கு சுமார் 6,000 ரூபாயையும் கபளீகரம் செய்துவிட்டன என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்; உர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பாட்டுச் சான்றிதழை சமர்ப்பித்து, உரம் தயாரிப்பதற்கான விலையின் விவரங்களை மத்திய உரத் துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர்ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு குறிப்பு வைத்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.//
//ஆனால், வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்திய நாட்டில், ஊழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வண்ணம் உரக் கொள்கை வகுக்கப்பட்டு, இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் சுரண்டப்பட்டு வருகின்றனர்.//
தகவல் உதவி: இன்னேரம் இணைய தளம்,நன்றி!
http://www.inneram.com/news/tamilnadu-news/tamilnadu-cm-jayalalitha-asked-pm-to-sack-alakiri-from-cabinet-8416.html
மேற்கண்ட செய்தியின் மூலம் எனது பதிவில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாக முன்னரே சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தும் வண்ணம் ,அதே விவரங்களுடன் உரமானிய ஊழல் குறித்து புகார் எழுந்துள்ளது தெளிவாக தெரிகிறது.
இதே போல சமையல் எண்னை இறக்குமதிக்கு அளிக்கப்படும் மானியம் விரயமாகிறது என்பதையும் அப்பதிவில் விளக்கியிருக்கிறேன், அதிலும் ஊழல் என எப்பொழுது வெடிக்குமோ தெரியவில்லை :-))
நாம் தொடர்ந்து,விவசாயம் ,மாற்று எரிப்பொருள் ,சுற்று சூழல்,அறிவியல் என அலசி ஆய்வு செய்து எழுதினாலும் ,மக்கள் இதெல்லாம் இணையத்தில் இருப்பது தானே என்ன புதுசா எழுதிட்டான் என நினைத்துக்கொள்வது வழக்கம், இணையத்தில் இருந்தாலும் சரியான தகவலை தேடி எடுத்து, அதனைப்புரிந்துக்கொண்டு எழுதுவது எவ்வளவு கடினம் என சினிமா, அரசியல் என மொக்கை போடுபவர்களுக்கு எளிதில் புரியாது.
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்,காலம் பதில் சொல்லும் என நம்ம கடமையை செய்வோம்!!!
ஹி...ஹி நாமளும் பஞ்ச் டயாலாக்கு பேசுவதற்கு ஒரு காலம் வரும்னு காட்டத்தான் இந்த பதிவு :-))
வரலாறு முக்கியம் மக்களே!!
------------------------------------------