(சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் ...ஹி...ஹி...!)
அப்படியா படத்தோட பேரு என்ன?
வல்லவனுக்கு "ஃபுல்லும்" ஆயுதம்!
(சரக்கடிக்கிறதுக்கு பதிலா பாட்டிலை எடுத்து மண்டையில அடிச்சிருப்பாங்களோஅவ்வ்)
-----------
(திருஷ்டி "சுத்தி" போடும் போது இந்த சுத்தியால தான் போடுவாய்ங்களோ?)
# கதைப்படி நம்ம படத்துல ஹீரோ "ஒரு கார்ப்பெண்டர்" ஆ நடிக்கிறார்...
ஓ அப்படியா , படத்துக்கு பேரு என்ன?
சுத்தி!
--------------
# இயக்குனர்: சார் படத்துல உங்களுக்கு டபுள் ஆக்ட் ஒருத்தர் ஆறடி ,இன்னொருத்தர் மூனடி தான் உயரம் ,குள்ளமான கேரக்டருக்கு தான் படத்துல "வெயிட் ரோல்"
உலகநடிகர்: ஆஹ் ஆஹ் ...இப்படியான உலகத்தரமான படத்துக்காக தான் காத்திருக்கேன் அப்படியே அசத்திடலாம் , படத்துக்கு என்ன பேரு வச்சிருக்கிங்க?
இயக்குனர்: உத்தம"குள்ளன்"!
--------------
(ஹி..ஹி பூச்சடையாள்!)
சின்னக்கா: இந்தக்காலத்துள்ள பொம்பளைங்களுக்கே இப்படி நீளமா முடி வளர்ரது இல்லையே ,உங்க வீட்டுக்காரருக்கு எப்படி ஆறடி நீளத்துக்கு முடி வளந்தது?
பெரியக்கா: அட நீ வேறக்கா, கோச்சடையான் படம் வர்ர வரைக்கும் முடியே வெட்டிக்க மாட்டேன்னு ஆரம்பிச்சார் ,அது பாட்டுக்கு ஆறடிக்கு சடைப்பின்னி போடுற அளவுக்கு வளந்துடுச்சு,படம் தான் இன்னும் வரக்காணோம் அவ்வ்!
---------------
(கண்ண மூடிப்பார்க்கணுமா அவ்வ்)
# நம்ம படத்துல ஹீரோ, ஹீரோயின் முதல் நடிக்கிற எல்லாருமே கண்ணு தெரியாத கதாபாத்திரங்கள் சார்..
படத்துக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?
கண்ணை மூடிப்பார்க்கவும்!!!
--------------
# வேட்பாளர்: ஒரு காலத்தில சமூக இணையதளங்களில் எல்லாம் "49-O" போடுங்கனு புரட்சிகரமா கருத்து சொன்னது தப்பா போச்சி!
தொண்டர்: ஏன்?
வேட்பாளர்: இப்போ நானே மறந்து போயிட்ட அந்த "ஓ" போடுங்கள ,மக்கள் இன்னும் மறக்கலை போல, நான் ஓட்டுக்கேட்டு போனால் ,கவலைப்படாதிங்க சார் ,நாங்க "ஓ" போட்டுறோம்னு சொல்லி கடுப்பேத்துறாங்கப்பா அவ்வ்!
-----------------
(ஈ...ஈ ...நெஜமா சிரிப்பே வரலே சும்மா சிரிச்சு வச்சேன்)
இல்லத்தரசன்: அப்படி என்ன ஓவரா போயிட்டாங்க?
இல்லத்தரசி: காலையில வாசப்பெருக்கலாம்னு ,"தொடைப்பத்த" எடுத்துக்கிட்டு வாசலுக்கு போறேன் , பிரச்சார நேரம் முடிஞ்சு போச்சு ,இனிமே அரசியல் சின்னத்த எல்லாம் பயன்ப்படுத்தக்கூடாதுனு ஒருத்தர் தடுக்கிறார் அவ்வ்!
-----------
# அவரு ஏன் இந்த தேர்தல் செல்லாது மீண்டும் தேர்தல் வைக்கணும்னு வழக்கு போட்டிருக்கார்?
# வாக்குப்பதிவு நடக்கும் இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் எந்த கட்சி சின்னமும் பயன்ப்படுத்த தடை இருக்கும் போது , பூத்துல இருக்க தேர்தல் அலுவலர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சி சின்னம்"கையோட" பூத்துக்குள்ள எப்படி இருக்கலாம், அது தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி தவறு எனவே "கை" இல்லாதவங்கள வச்சு மறு தேர்தல் நடத்தணும்னு தான் அவ்வ்!
(இப்படி கைய காட்டினாக்கூட கேஸ் போடுவாய்ங்களோ அவ்வ்)
-------# என்னடி சாம்பார்ல என்னமோ நார் நாரா கிடக்கு?
நீங்க தானே சாப்பாட்டுல நார் சத்து இருக்கணும் அப்போ தான் ஆரோக்கியம்னு சொன்னீங்க, அதான் நல்லா ஆரோக்கியமா இருக்கட்டுமேனு ,தேங்கா நாரு கொஞ்சம் போட்டேன் !!!
--------------
# சமையல் பதிவர்:என்னடி இது காலிஃபிளவர் குருமா? வாயில வைக்கவே முடியல ,ஒரே கசப்பா இருக்கே? வெளெக்கெண்ணைய மறந்து போய் ஊத்திட்டியா?
மனைவி: இப்ப வாய மூடிக்கிட்டு சாப்பிடுறிங்களா, இல்லை நான் சமைச்சத எல்லாம் நீங்க சமைச்சாப்போல "படம் எடுத்து" முகநூலில் போட்டு பேர் வாங்குற ரகசியத்தை உங்க முகநூல் பக்கத்தில் கமெண்ட் போட்டு அம்பலமாக்கட்டுமா?
சமையல் பதிவர்: ஹி...ஹி காலிஃபிளவர் குருமா சூப்பரா இருக்கு அவ்வ்!
------------
# அவள்: உங்க மாமியார் மேல இம்புட்டு பாசமா, அவங்கள மலேசியாவுக்கு விமானத்துல டிக்கெட் போட்டு டூருக்கு அனுப்புற?
இவள்: ஹி...ஹி அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை, மலேசியா விமானம் தான் காணாமல் போனா கண்டே புடிக்க முடியாதாம் ,அதான் எப்படியாச்சும் காணாம போகட்டும்னு மலேசியாவுக்கு மலேசியா விமானத்துல அனுப்பி வைக்குறேன்!!!
(ஹையோ ...ஹையோ வவ்வாலோட ஒரே நகைச்சுவையப்பா )
--------------------------பின்குறிப்பு:
# ஆக்கங்கள் அனைத்தும் அடியேனது சுயநினைவின் படி சுய கற்பனையே , முன்னரே கேள்விப்பட்டது போல இருந்தாலோ அல்லது இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ நினைவூட்டினாலோ அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல அது தங்களின் மனப்பிராந்தியாக இருக்கலாம்!
#எனது முந்தைய நகைச்சுவை மாதிரியான சிலப்பதிவுகள், படித்து விட்டு பேதியானால் அடியேன் பொறுப்பல்ல!!!
# சிரிப்பொலி-1
#மொக்கை சிரிப்பொலி-2
#மொக்கை சிரிப்பொலி-3
#காமெடி டைம்
#காமெடி டைம்-2
#அறிவியல் காமெடி
#அரசியல் காமெடி
----------------------------
# படங்கள் உதவி "google images" இணையதளம்,நன்றி!
***************************